07 February, 2020

Every Disciple IS Salt and Light உப்பாக, ஒளியாக இருக்கும் சீடர்


Salt and Light

5th Sunday in Ordinary Time

Stories and imageries used in a public address or a church homily tend to remain in our memory longer than the ideas shared in those discourses. Jesus, as we know, was a master story-teller who used rich imageries in his preaching. These stories and imageries were embedded in the minds of the disciples so deeply that they were recollected while the Gospels were created years after the death and Resurrection of Jesus.

In the Gospel of Matthew most of the teachings of Jesus are collated in a special section (Chapters 5, 6 and 7) as the ‘Sermon on the Mount’. The first part of this Sermon was the Gospel assigned to the 4th Sunday of Ordinary Time. Since last Sunday was celebrated as the Feast of the Presentation of Our Lord, the Gospel for the 4th Sunday – namely, the Beatitudes – was not read in our liturgy. Today, the 5th Sunday, as well as the next two Sundays we shall be hearing sections from the Sermon on the Mount. They are an apt preparation for the Lenten Season, which we begin on February 26.

In today’s gospel passage - Matthew 5: 13-16 - Jesus uses the famous imageries of Salt and Light – the most common of every day articles used by all of us. A deeper analysis of just two of the sentences from this Sunday’s Gospel would be enough for this Sunday’s reflections. “You are the salt of the earth… You are the light of the world…” Jesus did not say that we must be or need to be the salt or the light of the earth. Nor did he say we shall be the salt or the light. He simply said: “YOU ARE the salt and the light”. This is not a condition or a future prediction. This is simply the present reality. You and I, dear friends, are already the salt of the earth and the light of the world. To be salt and light is the defining quality of every disciple of Christ… of every Christian. Hence, it would be helpful to understand what is meant by ‘being salt’ and ‘being light’.

The very first quality of salt that comes to mind is its ‘purity’, because it is white and it comes from the combination of two great gifts of nature, namely, the sun and the sea.  Salt was the most primitive of all offerings to the gods.  Jewish sacrifices were offered with salt.  The Orientals made their oaths with salt to ratify them.

Salt is an essential ingredient of food; but, it cannot become the main course of food. It needs to be added in small quantities to food to provide the necessary taste. Just because salt is an essential part of food, it cannot be added more than necessary. An overdose of salt makes the food unpalatable and it is thrown away. Salt also preserves food and has some healing qualities, as in the case of sore throat.

Similarly, a true disciple is an essential part of this world. She or he cannot stand aloof from the world but needs to mingle with this world in a proportionate way. When this proportion is lost, then the world becomes fit for the garbage along with the disciple. When the disciple is present in the world in the proper way, the world can be preserved and, when needed, healed.

The moment Jesus talks of us as salt of the earth, he adds an immediate warning. What if we lose our saltiness?... Salt diluted beyond limit, over exposed to elements of nature or exposed to other forces like electricity… can be some of the reasons by which salt can lose its taste. Once again, the parallel between salt and a disciple is clear. The salt that has lost its taste, ‘is no longer good for anything, except to be thrown out and trampled underfoot.’

The image of salt getting trampled underfoot, brings to mind some sections of humanity who, like salt, serve as the essential part of the world and still get trampled by society all the time. I am thinking of those labourers involved in cleaning our roads, toilets etc. I am thinking of the agricultural labourers who toil hard to put food on our tables. If these labourers stop working just for a day, it would almost choke life out of the world. These very same labourers who are the life-line of the world, are denied their life-line and the necessary respect they deserve! They are trampled underfoot!

The light of the world… is another imagery replete with meaning. Once again, we need to look at the main traits of light. The moment we think of the word ‘light’, the word ‘darkness’ comes to mind. Even if the darkness is overpowering, a tiny lamp is enough to drive away the darkness. A lamp does not draw attention to itself, but brings to light all things and persons around it. A lamp – whether it is a candle, an oil lamp, or an electric lamp – is able to spread light only when it burns its energy. All these and other characteristics of ‘light’ can be applied to a true disciple.

How to become a light to the world is eloquently answered in today’s first reading from Isaiah -  Isaiah 58:7-10. It is interesting to note that the first reading is a remote preparation for Lent, since it talks of ‘fasting’. God raises questions on the way a ‘fast’ is observed: Is such the fast that I choose, a day for a man to humble himself? Is it to bow down his head like a rush, and to spread sackcloth and ashes under him? Will you call this a fast, and a day acceptable to the LORD? (Is. 58:5)

God, then, goes on to define what true fast means…  "Is not this the fast that I choose: to loose the bonds of wickedness, to undo the thongs of the yoke, to let the oppressed go free, and to break every yoke? Is it not to share your bread with the hungry, and bring the homeless poor into your house; when you see the naked, to cover him, and not to hide yourself from your own flesh? (Is. 58:6-7)

If such a fast is taken up, then we can become the light of the world, assures the Lord:
Then shall your light break forth like the dawn, and your healing shall spring up speedily; your righteousness shall go before you, the glory of the LORD shall be your rear guard. 9 Then you shall call, and the LORD will answer; you shall cry, and he will say, Here I am. "If you take away from the midst of you the yoke, the pointing of the finger, and speaking wickedness, 10 if you pour yourself out for the hungry and satisfy the desire of the afflicted, then shall your light rise in the darkness and your gloom be as the noonday. (Is. 58:8-10)

Both the metaphors of salt and light have something very important in common. If it stays locked up in a shaker, salt doesn't do anything. Only when it comes out of the sterile security of the shaker and dissolves in the food can it give flavour to what we eat.  The same is true of light.  If it stays closed up and hidden away, it can't illumine anything. Only when it is in the middle of the dark can it illuminate and guide. A Church isolated from the world can be neither salt nor light.

Pope Francis has been sending out warnings about the Church that lives closed in on herself, paralyzed by fear, and all too distant from problems and sufferings, thus keeping it from giving flavour to modern life and from offering the true light of the Gospel.  The Pope's response to the ‘closed-up’ Church is: "We need to go out to the fringes".

In his Apostolic Exhortation, ‘Evangelii Gaudium’, he has, as if, given a mission statement of the Church: "I prefer a Church that is bruised, hurting, and dirty because it has been out on the streets, rather than a Church which is unhealthy from being confined and from clinging to its own security. I do not want a Church concerned with being at the centre and then ends by being caught up in a web of obsessions and procedures."

Pope Francis, in one of his first interviews given to La Civiltà Cattolica – the journal run by Jesuits in Rome – gives us an idea of how the Church can serve as salt and light in today’s context. During the interview, the editor in chief, Fr Antonio Spadaro S.J., asked Pope Francis: “What does the church need most at this historic moment?... What kind of church do you dream of?”
The Pope answered: “I see clearly, that the thing the church needs most today is the ability to heal wounds and to warm the hearts of the faithful; it needs nearness, proximity. I see the church as a field hospital after battle. It is useless to ask a seriously injured person if he has high cholesterol and about the level of his blood sugars! You have to heal his wounds. Then we can talk about everything else. Heal the wounds, heal the wounds.... And you have to start from the ground up.”

While some world leaders are busy building walls and excluding people based on their race and religion, Pope Francis insists on building bridges and creating a culture of encounter that can build up an inclusive community.

Let us be the Church that is able to heal the wounds (Salt) and to warm the hearts (Light) in the world, which is a battle field, waging ‘the third world war’ in bits and pieces!

We are Salt and Light

பொதுக்காலம் 5ம் ஞாயிறு

மேடைப் பேச்சுக்களிலும், ஆலயங்களில் வழங்கப்படும் மறையுரைகளிலும், எத்தனையோ கருத்துக்கள் கூறப்பட்டாலும், அக்கருத்துக்களைவிட, அவ்வுரைகளில் சொல்லப்பட்ட கதைகளும், உருவகங்களும் மக்களின் உள்ளங்களில் இன்னும் ஆழமாகப் பதிவது உறுதி. கதை வடிவில் இயேசு கூறிய உவமைகளும், அவர் பயன்படுத்திய உருவகங்களும் சீடர்களின் உள்ளங்களில் ஆழமாக இடம்பெற்றன. சீடர்களின் நினைவுகளிலிருந்து உருவான நான்கு நற்செய்திகளின் வழியே, இவ்வுவமைகளும், உருவகங்களும் தலைமுறை, தலைமுறையாக மனித சமுதாயத்தில் தனியொரு இடம்பெற்றுள்ளன. இயேசு பயன்படுத்திய பல உருவகங்கள், தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதால், அவற்றின் உதவியுடன் அவர் சொன்ன உண்மைகள், நம் மனங்களில் ஆழமாய், பாடமாய் பதிந்துள்ளன.

உருவகங்களின் உதவியுடன் இயேசு கூறிய உண்மைகளை, புனித மத்தேயு, தனது நற்செய்தியின் 5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில் தொகுத்து வழங்கியுள்ளார். இப்பகுதியை, நாம், மலைப்பொழிவு என்றழைக்கிறோம். மலைப்பொழிவின் அறிமுகப் பகுதியாக விளங்கும் பேறுபெற்றோர் கூற்றுகள், வழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் 4ம் ஞாயிறின் நற்செய்தியாக தரப்பட்டுள்ளது. பிப்ரவரி 2, சென்ற ஞாயிறன்று, பொதுக்காலம் 4ம் ஞாயிறுக்குப் பதில், இயேசு கோவிலில் காணிக்கையாக்கப்பட்ட திருநாளை நாம் கொண்டாடியதால், மலைப்பொழிவின் ஆரம்பப்பகுதிக்குச் செவிமடுக்க இயலாமல் போனது. இன்றும், இனிவரும் இரு ஞாயிறன்றும், இம்மலைப்பொழிவின் ஒருசிலப் பகுதிகளை, நாம் நற்செய்தியாக செவிமடுக்கவிருக்கிறோம். இம்மூன்று வாரங்களைத் தொடர்ந்து நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு, இயேசுவின் மலைப்பொழிவு, ஏற்றதொரு தயாரிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில், இயேசு, இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) என்ற உருவகங்கள் வழியே, ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை இயேசு நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். உப்பும், விளக்கும் இல்லாத இல்லங்கள் இல்லை. மதம், இனம், ஏழை, பணக்காரன், என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா இல்லங்களிலும் பயன்படுவது, உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள முயற்சி.

உப்பும், ஒளியும் எவ்விதம் உருவாகின்றன என்பதைச் சிந்திக்கும்போது, அவற்றை, தூய்மைக்கு அடையாளங்களாகப் புரிந்துகொள்ளலாம். இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள இருபெரும் கொடைகளான சூரிய ஒளி, கடல் நீர் இரண்டும் இணைந்து, உப்பு உருவாகிறது. அதேபோல், நாம் ஏற்றிவைக்கும் ஒளி, மெழுகிலிருந்து உருவானாலும், எண்ணெயிலிருந்து உருவானாலும், எரிகின்ற சுடர், எவ்வித வேறுபாடுமின்றி, தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. நாம் ஏற்றிவைக்கும் மெழுகு, கறுப்பானாலும், வெள்ளையானாலும் சரி, நாம் ஊற்றிவைக்கும் எண்ணெய், சுத்தமானதாகவோ, மாசடைந்ததாகவோ இருந்தாலும் சரி, ஏற்றப்பட்ட சுடர், எப்போதும் தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. உப்பும், ஒளியும், தூய்மையின் அடையாளங்கள் என்பதால், இயேசு, இவற்றை, நம்முடன் ஒப்புமைப்படுத்தி, அந்தத் தூய்மை, நம் வாழ்வில் வெளிப்படவேண்டும் என விழைகிறார்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பின் பண்புகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முயல்வோம்.
உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், பின்னணியில் இருந்து செயலாற்றுவது. உப்பு இல்லையேல், உணவுக்குச் சுவையில்லை. ஆனால், உப்பு மட்டுமே உணவாக முடியாது.
உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பு, ஓரு குறிப்பட்ட அளவுடன் பயன்படுத்தப்பட வேண்டும். உப்பில்லா உணவு குப்பையிலே என்பதை அறிவோம். அதேபோல், உப்பு அதிகமான உணவும், குப்பையிலே.
உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு, அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர், மண்ணுலலகிற்கு உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?
அவர்கள், உலகிற்குத் தேவையானவர்கள் என்றாலும், பின்னணியில் இருந்து செயலாற்றுகிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை.
உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும், உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை.
உலகிற்கு மருந்தாகவும், உலகை அழிவிலிருந்து காக்கவும், இவர்கள் கருவிகளாகச் செயலாற்றுகின்றனர்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. (மத்தேயு 5:13) உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பு, தன் சுவையை இழந்தால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப் பொருட்கள் கலந்தால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, உலகச் சக்திகளுடன் கலந்துவிட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு, வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.

மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, நம் மனதில் மற்றுமோர் எண்ணமும் எழுகிறது. உணவுக்கு அவசியமாகத் தேவைப்படும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து, உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில், எத்தனையோ மனிதர்கள், இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். அவர்கள் இல்லையேல், உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், அவர்கள், ஒருபோதும் உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள், மனித சமுதாயத்தால் மிதிக்கப்படுகிறார்கள்.
உலகெங்கும், துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள, பலகோடி மக்களை, இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாமல், ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள், ஒரே ஒரு நாள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை என்னவாகும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! அதேபோல், உலகெங்கும் உழைக்கும் உழவர்கள், சேற்றில் கைவைக்கவில்லையெனில் நாம் சோற்றில் கைவைக்க முடியாது என்பதை அறிவோம். உழவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்ன என்பதையும் நாம் வேதனையுடன் உணர்கிறோம். மனிதர்களால் அடிக்கடி மறக்கப்படும் உழவர்கள், மனிதர்களை மறந்துவிட்டால், இவ்வுலகம் என்னாகும்?  

உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடிக்கும் உழவர்கள் போன்ற, பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கும் மனம் நமக்கு வேண்டும்; உலகம் இவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கவேண்டும், என்று செபிப்போம்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது, இயேசு வழங்கும் அடுத்த உருவகம். ஒளி என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள் என்ற சொல், தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். இருள் சூழும்போதுதானே ஒளியைப்பற்றி, விளக்கைப்பற்றி நாம் எண்ணிப்பார்ப்போம். நடுப்பகலில் விளக்கைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை.
உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, இருளில் ஏற்றப்படும் விளக்கு, தன்னையே விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தன்னை வெளிச்சமிட்டு காட்டாமல்சுற்றியுள்ளவற்றை வெளிச்சத்திற்கு கொணர்வதே, விளக்கின் முக்கியப் பணி.
மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான், வெளிச்சம் தரமுடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு, சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்கவோ, இழக்கவோ மறுக்கும் விளக்கு, ஒளி தரமுடியாது.
உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே, வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும், நம்மைச் சுற்றியுள்ள இருள் எவ்வளவுதான் கருமையாக இருந்தாலும், அதை நீக்க முன்வரவேண்டும். இருளில் வாழும் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

இயேசுவின் இவ்விரு கூற்றுக்களில் புதைந்துள்ள மற்றொரு நுணுக்கமான உண்மையும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உன்னத பண்புகள் பலவற்றைக் கொண்ட உப்பாக, ஒளியாக நீங்கள்... இருக்கிறீர்கள் என்று, இயேசு நம்மைப்பற்றி நம்பிக்கையுடன் மலைமீது நின்று அறிக்கையிடுகிறார். அவர் நம்மீது கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்கு ஏற்ப, உப்பாக, ஒளியாக வாழ முயல்வோம்.

உலகின் ஒளியாக நாம் எவ்வாறு வாழமுடியும் என்பதை, இறைவன், இன்றைய முதல் வாசகத்தில், நமக்கு ஆலோசனைகளாக தருகின்றார். அவர் தரும் ஆலோசனைகளுக்குப் பின்னணியாக, உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அவர், இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். விரைவில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்தில், நோன்பு பற்றிய சிந்தனைகள் நமக்குள் எழும் இத்தருணத்தில், "ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது?" (எசாயா 58:5) என்ற கேள்வியை, இறைவன், நமக்கு முன் வைக்கிறார். இதைத் தொடர்ந்து, உண்மையான நோன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் இறைவன் வரையறுப்பது, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:
எசாயா 58:7
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!
இத்தகைய நோன்பு, நம்மை, இவ்வுலகில், ஒளியாக வாழச்செய்யும் என்ற உண்மையை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்:
எசாயா 58: 8-10
அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்... உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

உப்பாக, ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலேயே தங்கிவிடும் வாழ்வு அல்ல. குப்பியிலோ, கிண்ணத்திலோ வைக்கப்பட்டிருக்கும் உப்பு, அங்கேயே இருக்கும்வரை, பயன்தராது. அது எப்போது, குப்பியிலிருந்து வெளியேறி, உணவுடன் கலக்கிறதோ, அப்போதுதான், உப்பு, தான் உருவானதன் பயனை அடைகிறது. அதேபோல், மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே, "வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.

சுயநல வட்டத்தைவிட்டு வெளியேறினால் மட்டுமே திருஅவை பயன்தர முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகளில் அவ்வப்போது கூறி வருகிறார். கோவில்களில் அடைபட்டு, மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் பாதுகாப்பு உள்ளதென்று உணரும் திருஅவை பயனற்றது என்று, திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார். உணவு தன்னைத் தேடி வரவேண்டும் என்று உப்பு காத்திருந்தால், பயன்தராது என்பதுபோல, மக்கள் தன்னைத் தேடிவரவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், 'சாமியார் பங்களா'க்களில் காத்திருப்பது பயனற்றது என்பதை, திருத்தந்தை, பலமுறை தன் உரைகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இன்றைய உலகில், தடுப்புச் சுவர்களை எழுப்பி, தங்கள் சமுதாயத்தைப் பாதுகாக்க, ஒரு சில தலைவர்கள் முற்படும் வேளையில், பாலங்கள் கட்டுவது ஒன்றே, திருஅவையின் தலையாயப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறி வருகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பேற்ற 2013ம் ஆண்டு, Civiltà Cattolica என்ற இதழுக்கு வழங்கிய நேர்காணலில், "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "போர்க்களத்தில் செயல்படும் ஒரு மருத்துவமனையைப் போல திருஅவையை நான் காண்கிறேன். அதிகமாக அடிபட்டு கிடக்கும் ஒருவரிடம், அவரது இரத்தக் கொழுப்பு (Cholesterol), இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்ற கேள்விகள் கேட்பது வீண். அவரது காயங்களை முதலில் குணமாக்கவேண்டும். பின்னர், ஏனையவை குறித்து நாம் பேசலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து திருஅவை தன் பணிகளைத் துவக்கவேண்டும்" என்று தெளிவாகக் கூறினார்.

போர்க்களமாக மாறியிருக்கும் இன்றைய உலகில், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும் திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.


No comments:

Post a Comment