An eye for
an eye…
7th Sunday in Ordinary Time
Let us
begin our reflection with a news item on Pope Francis which flashed on quite a
few media channels on the New Year Day, 2020. It was a bolt (or a jolt) from
the blue, saying that Pope Francis slapped a lady. Here are some of the
headlines of this news item:
Worshipper gets slap from Pope Francis after
yanking his hand - Metro.co.uk
Pope Francis Two Quick Slaps ... To Lady Who
Clutched His Arm - TMZ (Thirty Mile Zone).com
Pope Francis smacks woman's hand to free
himself from her grip - CNN
Pope
Francis slaps at woman’s hand after she latches onto him – NYPost
Let us
trace back our steps to the eve of December 31, 2019. After conducting the ‘Te
Deum’ thanksgiving service in St Peter’s Basilica, Pope Francis went to visit
the crib decorated in St Peter’s Square. As he went along, he greeted people
standing in the square. One lady grabbed his hand and pulled him towards her.
Pope Francis, taken aback by shock and pain freed himself from the lady’s
grasp, by slapping on her hand. This video went viral on the last day of the
year with headlines that almost suggested that ‘Pope Francis slapped a woman’.
The very
next day, January 1, while giving his Angelus message in St. Peter’s Square,
Pope Francis, going away from the written script, and speaking from his heart,
said: "We often lose our
patience; me, too, and I apologize for my bad example last night."
Two days
later, (Jan.4) an article appeared in the Guardian, written by Gwendolyn Smith
about this incident and, more especially focusing on Pope Francis asking pardon
for his ‘bad example’. The title of this article grabbed my attention first. It
read: “The pope’s apology could teach other public figures about being
contrite”
Smith,
gives two reasons why this apology was praise-worthy: Why was it so
laudable? First, it came swiftly. Less than 24 hours after the incident. There
was no whiff of hoping the fuss (inevitably, the slap had sparked criticism on
social media) would blow over, nor of waiting for advisers to conjure a glib,
legally watertight statement. Second, it was unequivocal… They contained no
attempt to excuse or diminish the wrongdoing. He merely acknowledged his human
fallibility…
The author
of this article then goes on to make a critical observation of our education
system, failing to teach us true human values and practices: A proper
apology from an adult human shouldn’t be remarkable. It’s something you’re
expected to have mastered around the time you graduate from reception. In an
alarming indictment of our education system, however, it seems hordes of people
get through school without a basic grasp of how apologies work. While we’re
discussing the best and worst trends of the last decade, I’ll venture that the
2010s were the exasperating era of the non-apology. The age in which the “I’m
sorry if…” format rose to prominence, letting the wrongdoer off the hook by
implying the victim had mistakenly detected offence in what was clearly an
innocent act. You know, kitten slaughter, or something like that: “I’m sorry if
you were offended that I murdered little Ginger. That was not my intention.”
Smith goes
on to cite examples of some political leaders who were dishing out to people
fake apologies in the recent past. Gwendolyn Smith concludes her article with
these words:
In the
face of such evasion, it’s tempting to think public figures aren’t truly sorry
for what they’ve done, but just feign regret to wriggle out of trouble. But
seeing as we’re at the start of a new year, a more optimistic stance seems
necessary. If the 2010s were a string of crap sorries, here’s hoping the pope
has set the precedent for a new decade where public apologies are heartfelt,
not laughably hollow.
We have
dwelt on the incident of Pope Francis at length, since it spoke of a ‘slap’, as
well as a sincere apology, a sure way to bring peace in a conflict. Today’s
Gospel talks of how best to respond to a wrong done to us. Today’s Gospel uses
the term ‘slap’, which brought this episode to my mind.
‘Eye for an
eye’, ‘tooth for a tooth’, ‘tit for tat’ etc. are not Christian ways, says
Jesus in today’s Gospel. Some commentators say that the passage we have for
this Sunday’s liturgy (Matthew 5: 38-48) is the core of the Sermon on the Mount.
Let us try to understand the depth of the challenge proposed by Jesus in this
passage. Jesus, not only challenges us, but challenges the Law of Moses.
Moses,
taking a cue from the Hammurabi codes, instructed the Israelites to follow
tit-for-tat retaliation, rather than to wreak total destruction upon their
enemies. That is, instead of mutilating or murdering all the members of the
offender’s family or tribe, they should discover the offender and only punish
him/her with an equal mutilation or harm. This was the origin of the ‘an eye
for an eye’ and ‘a tooth for a tooth’ law. Jesus challenged this law. “You
have heard that it was said, ‘Eye for eye, and tooth for tooth.’ But I tell
you, do not resist an evil person. If anyone slaps you on the right cheek, turn
to them the other cheek also. And if anyone wants to sue you and take your
shirt, hand over your coat as well. If anyone forces you to go one mile, go
with them two miles. Give to the one who asks you, and do not turn away from
the one who wants to borrow from you.” (Matthew 5: 38-42)
In this
passage, Jesus makes a specific mention of getting slapped ‘on the right
cheek’. Here, Jesus is not speaking only about the physical abuse of
slapping, but also the insult one suffers by getting slapped on the right
cheek. This is a clear case of adding insult to injury! Most of us are
right-handed. So, when a person slaps another with the right hand, the slap
lands on the left cheek. Only when the person who slaps, uses the back hand, he
or she could slap another on the right cheek. This was usually the treatment
given to the Jews by the Romans.
Paul Penley,
a Bible scholar, has written an article titled: “Turning the Other Cheek”:
Jesus’ Peaceful Plan to Challenge Injustice. Here he reflects on the words
of Jesus in the cultural context of the Roman occupied Israel . Here is an extended
excerpt:
In
Jesus’ day Roman soldiers strutted arrogantly around Israel . The Jewish land was Roman
occupied territory. There was no love lost between the occupying soldiers and
the Israelite population. When a soldier decided that he needed a Jew’s goods
or services, resistance was futile... If the subject could not perform the
request to the soldier’s liking, then a quick backhand to the face was not far
behind. This was the situation Jesus addressed in the Sermon on the Mount.
“If
someone slaps you on the right cheek, turn the other cheek toward him.” … Why
would Jesus indicate that the first blow will come to the right cheek? Why
would he instruct someone to offer the left cheek to an attacking Roman
soldier?
The
answer is simple. Roman soldiers tended to be right-handed. When they struck an
equal with a fist, it came from the right and made contact with the left side
of the face. When they struck an inferior person, they swung with the back of
their right hand, making contact with the right cheek. In a Mediterranean
culture that made clear distinctions between classes, Roman soldiers backhanded
their subjects to make a point. Jews were second-class.
When
Jesus tells fellow Jews to expose the left cheek, he is calling for “peaceful
subversion.” He does not want them to retaliate in anger nor to shrink in some
false sense of meekness. He wants to force the Roman soldiers to treat them
like equals. He wants the Jews to stand up and demand respect. He wants to make
each attacker stop and think about how they are mistreating another human
being. It is the same motivation behind his command to “go an extra mile” after
a soldier forced you to carry water for the first mile (Matt 5:41). It is
intended to activate the soldier’s conscience.
Jesus’
command to “turn the other cheek” is ultimately a call to peaceful resistance.
It is the mantra of great men inspired by Jesus like Gandhi and Martin Luther
King Jr… “Turning the other cheek” is not blanket acceptance of brutality. It
is a strategy for motivating others to change. If you meet evil with evil and
blow for blow, the cycle of vengeance will never end.
“Peaceful
subversion” is one among many of Jesus’ plans for changing the world.
Turning a
‘stone-deaf-ear’ to the peace plans of Jesus, the ‘trigger-happy’ world leaders
in human history, have gone on a war-spree mode for so many years. The painful
plight of young men and women who have been sacrificed on the altar of greed
built by the manufacturers of arms continue today. The two world wars do not
seem to have taught any lesson to us and we fight ‘the third world war in bits
and pieces’.
Let us
close our reflection on a scene from the book “All Quiet on the Western Front”, written by Erich
Maria Remarque which describes the horrors of World War I. Erich not only helps us smell the blood and
smoke of the battlefield, he delves into the hearts of the young soldiers
grappling with fear while trying to stay alive. Dr Philip McLarty, in his
sermon “The Antitheses: Part Two”, describes a scene from this book:
In one
particular scene, a German soldier named Paul is hunkered down in a trench
when, suddenly, a French soldier jumps into the trench on top of him. Instinctively, Paul lashes out with his knife
and mortally wounds him. No longer a
threat, Paul watches the man as he slowly dies.
In time, Paul takes pity on him and tries to make him more comfortable.
Finally,
the French soldier takes his final breath and dies. Paul gently closes his eyes and gazes at this
young man who, hours before, was his worst enemy. He goes through his wallet and looks at the
picture of a young woman and child – obviously, the man’s wife and daughter. He finds brief letters and what appear to be
the names of loved ones.
He feels
sick to his stomach, as he thinks of what this man’s death will mean to them
and how, had things gone differently, it would be his family who would
grieve. He finds himself trying to
explain to the dead soldier why he killed him.
He says to the man,
“… for
the first time, I see you are a man like me.
I
thought of your hand-grenades, of your bayonet, of your rifle;
now I
see your wife and your face and our fellowship.
Forgive
me, comrade. We always see it too late.
Why do
they never tell us that you are poor devils like us,
that
your mothers are just as anxious as ours,
and that
we have the same fear of death,
and the
same dying and the same agony—
Forgive
me, comrade; how could you be my enemy?”
(All Quiet
on the Western Front, p. 223)
We are
aware of the famous quote: “An eye for an eye will make the whole world
blind,” attributed to Gandhi. There is also a Chinese Proverb which says: “Whoever
pursues revenge should dig two graves; one for the avenged and one for
himself.”
An-eye-for-an-eye
formula has made our world more of a graveyard than a nursery where love can be
grown. Against such a formula, there are millions of us, ordinary humans, who
still sow seeds of love. Here is one of us – Gladys Staines! Gladys Staines is
the wife of Graham Staines who was burnt alive along with his two sons Philip
and Timothy in Odissa , India (22nd January,
1999). When Dara Singh, who was convicted of these murders, was sentenced to
death, Gladys made a plea to the court and to the government to commute the
death sentence. She also made a public statement that she had forgiven those
who had committed this crime. She believed that only in forgiveness can hope
survive. Let us grow in courage and hope to turn the other cheek and go the
extra mile to win over persons suffering from hatred!
Peacemakers
– Turning the other cheek
பொதுக்காலம் 7ம் ஞாயிறு
2020ம்
ஆண்டு, சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று, பல நாளிதழ்களில், "திருத்தந்தை பிரான்சிஸ், ஒரு பெண்மணியை அறைந்துவிட்டார்" என்ற
தலைப்பில் செய்தியொன்று வெளியானது. இதோ, அச்செய்தியைக் கூற பயன்படுத்தப்பட்ட சில தலைப்புக்கள்:
Worshipper gets slap from Pope Francis after yanking his hand -
Metro.co.uk
Pope Francis Two Quick Slaps ... To Lady Who Clutched His Arm - TMZ
(Thirty Mile Zone).com
Pope Francis smacks woman's hand to free himself from her grip - CNN
Pope Francis slaps at woman’s hand after she latches onto him - NYPost
நடந்தது
இதுதான்... 2019ம் ஆண்டின் இறுதிநாள், டிசம்பர் 31ம் தேதி மாலையில், 'தெ தேயும்' என்ற நன்றி வழிபாட்டினை புனித பேதுரு
பெருங்கோவிலில் வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வழிபாட்டிற்குப்பின்,
புனித பேதுரு வளாகத்தில்
வைக்கப்பட்டிருந்த குடிலைக் காண்பதற்குச் சென்றார். அவர் சென்ற வழியில், மக்கள், இருபுறமும்
நின்று, அவரை வாழ்த்தினர். கூட்டத்தில் இருந்த ஒரு பெண், திருத்தந்தையின் கரங்களை இறுகப்பற்றி, அவரை தன் பக்கம் இழுத்தார். அதனால், நிலைத்தடுமாறிய திருத்தந்தை, அப்பெண்ணின்
கரங்களைத் தட்டிவிட்டார். திருத்தந்தை, அப்பெண்ணின் கரங்களைத் தட்டிவிட்டதை, 'அறைதல்' என்று பொதுவாக பொருள்கொள்ளப்படும்
'slap' அல்லது 'smack' என்ற
சொற்களால் ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஆண்டின்
இறுதி நாளன்று நிகழ்ந்த இந்நிகழ்வைக் குறித்து, அடுத்த நாள், புத்தாண்டு நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூவேளை செப உரையில் மன்னிப்பு
கேட்டார். சனவரி 1ம் தேதி, மரியா, இறைவனின் தாய் என்ற பெருவிழாவின் திருப்பலியை
நிறைவேற்றியபின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான
விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, "நாம் பல வேளைகளில் பொறுமை இழக்கிறோம், என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
நேற்று நான் இந்த வளாகத்தில் அளித்த தவறான எடுத்துக்காட்டுக்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறினார்.
"திருத்தந்தை
மன்னிப்பு கேட்டது, மற்ற தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையக்கூடும்" (The pope’s apology could teach other public figures
about being contrite) என்ற தலைப்பில், இரண்டு நாள்கள் சென்று, சனவரி 4ம் தேதி, The Guardian என்ற ஆங்கில நாளிதழில் Gwendolyn Smith என்ற எழுத்தாளர், ஒரு கருத்துக்
கட்டுரையை வெளியிட்டிருந்தார். செய்த தவறுகளுக்காக மனம் வருந்துவது, மற்றும்,
மன்னிப்பு கேட்பது ஆகிய நற்செயல்களுக்கு, ஓர் அழகிய பாடமாக, திருத்தந்தை, மக்கள் முன், பொதுவில் மன்னிப்பு
கேட்டது,
அமைந்துள்ளது என்று,
இக்கட்டுரை ஆசிரியர் கூறியுள்ளார். இந்த மன்னிப்பை தான் உயர்த்திப் பேசுவதற்கு காரணங்கள்
என்ன என்பதையும் ஸ்மித் அவர்கள், விளக்கிக் கூறியுள்ளார்.
"இந்த
மன்னிப்பு, உடனடியாக, அதாவது, 24 மணி நேரங்களுக்குள் கேட்கப்பட்டது என்பது, முதல் காரணம். நாம் தவறு செய்யும்போது, குறிப்பாக, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம்,
தலைவர்கள் தவறு செய்யும்போது, உடனடியான மனவருத்தமும், மன்னிப்பும் வெளிப்படவில்லையெனில், ஊடகங்கள், அச்செயலுக்கு, பல்வேறு
காரணங்களை வழங்கி, மன்னிப்பு கேட்கமுடியாத அளவு, அதை அரசியலாக்கிவிடும். இதனால், தலைவர்களில் பலர், தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்தவும், பொய்யான காரணங்களை வெளியிடவும்
வேண்டிவரும்" என்று ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.
"இரண்டாவது
காரணம், திருத்தந்தை,
தன் தவறை மறைக்காமல், பூசி மெழுகாமல், உள்ளதை உள்ளபடியே கூறி, தான் தவறான எடுத்துக்காட்டாக இருந்ததற்காக
மன்னிப்பு கேட்டார். திருத்தந்தை என்ற உயர் பொறுப்பை ஏற்றதால், சாதாரண மனித நிலையிலிருந்து வெகு
உயரத்திற்குச் சென்றுவிட்டதைப் போன்ற கற்பனையை உருவாக்காமல், தானும் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவாக்கியதால், இந்த மன்னிப்பு, உள்ளார்ந்த, உண்மையான மனவருத்தத்துடன் ஒலித்தது" என்று, இக்கட்டுரையின்
ஆசிரியர் தொடர்ந்து கூறியுள்ளார்.
அவர் இக்கட்டுரையில் வெளியிடும் மற்றொரு முக்கிய கருத்து
இது: “வயதில் முதிர்ச்சி பெற்ற ஒருவர்
தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது, பெரும் சாதனை அல்ல, அது மனித வளர்ச்சியின் ஒரு முக்கிய
அம்சம். குறிப்பாக, ஒருவர், தன் இளமையின் முக்கியமான ஆண்டுகளை, கல்விக்கூடத்தில் செலவிட்டபின், அதைவிட்டு வெளியேறும்போது கற்றுக்கொள்ளவேண்டிய
பல முக்கிய பாடங்களில், மன்னிப்பு கேட்பதும் ஒன்று. ஆனால், நம் கல்விக்கூடங்கள், போட்டியிடுவது, வெற்றியடைவது, சாதனை புரிவது என்ற பாடங்களையே
அதிகம் வலியுறுத்தும்போது, மனித உணர்வுகளால் நிகழும் தவறுகளை எவ்விதம் எதிர்கொள்வது என்ற பாடத்தைச்
சொல்லித்தருவது மிக அரிதாக உள்ளது” என்று கூறும் இக்கட்டுரையின் ஆசிரியர்
ஸ்மித் அவர்கள், தொடர்ந்து, இக்கட்டுரையில், இன்றைய தலைவர்கள் பலர் தங்கள் தவறுகளை மூடிமறைக்க மேற்கொண்டுவரும்
ஒரு சில பரிதாபமான முயற்சிகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
இந்நிகழ்வை
இன்று எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறன்று
நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியே முக்கியக் காரணம். நம் கல்விக்கூடங்கள் சொல்லித்தராத
பல வாழ்க்கைப் பாடங்களைப் பயில நற்செய்தி ஒரு நல்ல கல்விக்கூடம் என்பதை அறிவோம். தவறுகள்
செய்வது,
மனித இயல்பு. அத்தவறுகளை, நாம் செய்யும்போது, அல்லது, அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படும்போது,
நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை, இன்றைய நற்செய்தியின் வழியே, இயேசு விடுக்கும் ஒரு சில சவால்களுடன்
இணைத்து சிந்திக்க முயல்வோம்.
உணர்வுகள், மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உன்னதமான கொடை என்பதை மறுக்க இயலாது.
ஆனால், மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய கொடைகளான
அறிவுத்திறன், மனச்சான்று ஆகியவற்றை ஆக்கிரமிக்கும் வகையில், உணர்வுகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கும் வேளையில், தவறுகள் நேர வாய்ப்புண்டு. குறிப்பாக, 'கோபம்' என்ற உணர்வு நம்மை முற்றிலும் ஆட்டிப்படைக்கும்
வேளையில், பல அழிவுகள் உருவாகின்றன. கோபத்தில் நிகழ்ந்துவிடும்
ஒரு தவறுக்கு, நாம் அளிக்கும் பதில், மற்றொரு தவறாக இருக்கவேண்டுமா
என்பது, இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் ஒரு
முக்கியக் கேள்வி.
'பழிக்குப் பழி', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய நற்செய்தி
வழியே இயேசு, ஆழமாய் சொல்லித்தருகிறார். 'பழிக்குப் பழி' என்பது, இஸ்ரயேல் மக்களிடமும், அவர்களைச் சுற்றி வாழ்ந்த பல இனத்தவரிடமும்
பழக்கத்தில் இருந்த வழிமுறை. பாபிலோனிய மன்னன் ஹம்முராபி உருவாக்கியச் சட்டங்கள், ஒருவர் எந்த அளவுக்கு பழிக்குப் பழி வாங்கலாம் என்பதை, நிர்ணயித்தன. மோசே வழங்கிய சட்டங்கள், மன்னன் ஹம்முராபியின் சட்டங்களை ஓரளவு எதிரொலித்தன. பழிக்குப் பழி
என்ற வெறி, கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க, ஒருவருக்கு மற்றொருவர் இழைத்த தீங்கிற்கு ஈடான தண்டனைகள் வழங்கப்படலாம்
என்பதை, மோசேயின் சட்டம் நிலைநாட்டியது. அதுவே,
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற மந்திரமாக இஸ்ரயேல் மக்கள் நடுவே நிலவிவந்தது
(விடுதலைப் பயணம் 21:23-25).
இந்த மந்திரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முன்வந்தார் இயேசு.
தீமையின் அளவு, அதற்கு இணையான ஈடு என்ற எண்ணங்களை முன்னிறுத்தாமல், அளவற்ற அன்பையும், மன்னிப்பையும் முதன்மைப்படுத்தும் புதிய சட்டங்களை, இயேசு, தன் மலைப்பொழிவில் வழங்கியுள்ளார்:
மத்தேயு
நற்செய்தி 5: 38-39
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்;
தீமை
செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” என்பது, இன்றைய நற்செய்தியின் அறிமுகச் சவால்.
"நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்"
(மத். 5:22,28,32,34,39,44) என்று, இயேசு, தன் மலைப்பொழிவில், ஆறுமுறை
கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும், மோசே வழங்கிய சட்டங்களைக் காட்டிலும், உயர்ந்ததொரு வாழ்க்கை வாழ்வதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இயேசுவின் இக்கூற்றில், அவர், 'வலக்கன்னம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது, நம் சிந்தனையைத் தூண்டுகிறது. "உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் காட்டுங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. உங்களை
வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்பதே, இயேசு வழங்கும்
சவால்.
நம்மில் பலர், வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதை
அறிவோம். இதை மனதில் வைத்து சிந்திக்கும்போது,
நமக்கு முன்
நிற்கும் ஒருவரை, நாம் வலது கையால் அறைந்தால்,
அந்த அறை, அவரது இடது
கன்னத்தில் விழும். ஆனால், நமக்கு முன்னிருப்பவரை, புறங்கையால் அறையும்போது, அவரது வலது கன்னத்தில் அறை விழும். புறங்கையால் அறைவது என்பது, வெறும் உடல் வேதனையை மட்டுமல்ல, அத்துடன், அவமானத்தையும் கலந்து வழங்கும் ஓர் அறை.
Paul
Penley என்ற விவிலிய ஆய்வாளர், “Turning the
Other Cheek”: Jesus’ Peaceful Plan to Challenge Injustice - அதாவது, "'மறுகன்னத்தை திருப்பிக் காட்டுதல்': அநீதிக்கு சவால் விடும் இயேசுவின் அமைதி நிறைந்த திட்டம்" என்ற தலைப்பில் எழுதியள்ள
கட்டுரையில், மறுகன்னத்தைக் காட்டுவதுபற்றி, ஆழமாக ஆய்வு
செய்துள்ளார்.
யூதேயாவை ஆக்கிரமித்திருந்த உரோமைய அரசின் படைவீரர்கள், இஸ்ரயேல் மக்களை ஒவ்வொரு நாளும் சீண்டிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தனர்.
யூதர்கள் உடுத்தியிருந்த உடைகளையும், உடைமைகளையும், பறித்துச்செல்வது, ஏதாவது ஒரு பொருளை வீரர்கள் சுமக்கவேண்டியச்
சூழலில், எதிரே ஒரு யூதர் வந்துவிட்டால், அவர் அந்த சுமையைச் சுமந்து, தன்னுடன்
வருவதற்கு கட்டாயப்படுத்துவது என்று, பல அநீதிகள் அரங்கேறின. அந்நேரங்களில், யூதர்கள், உரோமைய வீரர்களை எதிர்த்தால், அவர்களிடையே கைகலப்பும் உருவானது.
பொதுவாக, ஒரு கைகலப்பு நிகழும்போது, உரோமைய வீரர்கள், தங்களுக்குச் சமமான மற்றொரு உரோமையரை அறைய வேண்டியிருந்தால், வலது கரத்தின் உள்ளங்கையால் அறையக்கூடும், எனவே, தாக்கப்பட்ட உரோமையரின் இடது கன்னத்தில் அறை விழும். ஆனால், ஒரு யூதருடன் கைகலப்பு நிகழும்போது, அந்த யூதர், தனக்குச் சமமானவர் அல்ல என்பதை நிலைநாட்டும்வண்ணம், உரோமைய வீரர், வலது கரத்தின் புறங்கையால் அவரைத்
தாக்குவார், எனவே, அவரது வலக்கன்னத்தில்
அறை விழும்.
இந்த அநீதிகள் அனைத்தையும் உணர்ந்திருந்த இயேசு, அநீதிகளை ஒழிப்பதற்குத் தேவையான வழிகளை இன்றைய நற்செய்தியில்
சொல்லித்தருகிறார். உரோமையர்களுக்கு மட்டுமல்ல,
தங்களை, தாழ்ந்தவர்கள் என்று கருதி,
புறங்கையால் அறைபவர்கள்
அனைவருக்கும், யூதர்கள், தங்கள் மறுகன்னத்தைக் காட்டுவதால், சொல்லித்தரக்கூடிய பாடத்தை, வார்த்தைகளில் வடித்தால், இவ்விதம் இருக்கும் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்: "என்னை
இரண்டாம் தர மனிதராக எண்ணி, புறங்கையால் அறைந்துவிட்டீர். இதோ, என் மறுகன்னம். முடிந்தால், இங்கு அறையும். அப்படி அறைவதால், என்னை
உமக்குச் சமம் என்று நீர் ஏற்கவேண்டியிருக்கும். உம்மால் முடியுமா?" என்று, சவால் விடுக்கும் செயல் இது.
அதேபோல், தன் அங்கியைப் பறிப்பவருக்கு, மேலாடையையும்
சேர்த்து வழங்குவது; ஒரு கல் தொலை, சுமை சுமக்க வற்புறுத்துபவருடன், இரு கல்
தொலை நடப்பது என்ற வழிகளைப் பின்பற்றினால், அநீதமாக நடந்துகொள்பவர்கள், நீதியை உணர்வதற்கு
அது வழி வகுக்கும் என்பதை, "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்கள் வழியே, இயேசு, உயர்ந்த
சவால்களாக நம்முன் வைக்கிறார்.
மறுகன்னத்தைக் காட்டுவது, மேலாடையையும்
சேர்த்துத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள்,
புண்ணியத்தில் நாம் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல.
மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத்
தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக்
காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும்.
அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியிலோ, ஒரு நாளிலோ வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு
தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.
இயேசுவின் சவாலை ஏற்பதற்குப் பதில், பழிக்குப் பழி என்ற உணர்வை வளர்ப்பது மிக எளிது என்பதை இவ்வுலக
வரலாறு பல முறை உணர்த்தியுள்ளது. அவற்றில் மிக அதிகமாகப் பேசப்படுவது, ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள்.
இந்த உலகப்போர்கள் நிகழ்ந்த வேளையிலும், அவற்றை எதிர்த்து, பலர், தங்கள்
மாற்றுக்கருத்துக்களை, ஓவியங்களாக, நெடுங்கதைகளாக, திரைப்படங்களாக உருவாக்கினர்.
1918ம்
ஆண்டு முடிவுற்ற முதல் உலகப்போரின் கோரங்களை விளக்கும் நெடுங்கதையொன்று "All Quiet on
the Western Front" என்ற பெயரில் 1929ம் ஆண்டு வெளியானது.
இதன் ஆசிரியர், Erich Maria Remarque அவர்கள், இளம் ஜெர்மன் வீரர்கள் போர்க்களத்தில் கண்ட கொடுமைகளையும், அவற்றின் விளைவாக, எஞ்சிய நாளெல்லாம் அவர்கள் அனுபவித்த
வேதனைகளையும், இந்த நெடுங்கதையில் விவரித்துள்ளார்.
இக்கதையில்
வரும் ஒரு காட்சியில், பதுங்குக் குழியில் இருக்கும் ஜெர்மன்
வீரர் ஒருவரை, ஒரு பிரெஞ்சு வீரர் திடீரென பாய்ந்து தாக்குகிறார்.
ஜெர்மன் வீரர், தன் கையிலிருந்த கத்தியால், பிரெஞ்சு வீரரைக் குத்திவிடுகிறார்.
அந்தத் தாக்குதலில் ஆழமாகக் காயமுற்ற பிரெஞ்சு வீரர், இறக்கும் நிலையில் இருக்கிறார். இறந்துகொண்டிருக்கும் அவரைக் காணும்
ஜெர்மன் வீரர் மனதில் ஒருவகை பாசம் பிறக்கிறது. அந்த பிரெஞ்சு வீரர் அமைதியான முறையில்
மரணமடைய, ஜெர்மன் வீரர், அந்த பதுங்குக் குழியில்,
முடிந்த அளவு வசதிகள் செய்து கொடுக்கிறார். பிரெஞ்சு வீரர் அமைதியாக மரணமடைகிறார்.
சில நிமிடங்களுக்கு
முன், தன்னுடைய எதிரி என்று மட்டுமே அவரைக் கண்ட
ஜெர்மன் வீரர், இப்போது, அவரும் தன்னைப்போன்ற
ஓர் இளைஞர்தான் என்பதை உணர்ந்து, வேதனையடைகிறார். இறந்த வீரரின் சட்டைப்பையிலிருந்து, அவரது 'பர்ஸ்'ஸை எடுத்துப் பார்க்கிறார்,
ஜெர்மன் வீரர். அதில், ஓர் இளம்பெண்ணும், குழந்தையும் உள்ள ஒரு 'போட்டோ' இருக்கிறது. கண்களில் கண்ணீர் மல்க, ஜெர்மன் வீரர், அந்த பிரெஞ்சு வீரரிடம் மன்னிப்பு
கேட்கிறார்:
"முதல்
முறையாக நீயும் என்னைப்போல் ஒரு மனிதன் என்பதைக் காண்கிறேன். நீ வைத்திருந்த துப்பாக்கி, அதில் பொருத்தப்பட்டிருந்த கத்தி, உன் கையிலிருந்த வெடிகுண்டு, இவற்றை மட்டுமே நான் எண்ணியிருந்தேன். இப்போதோ, உன் மனைவியை, குழந்தையைப் பார்க்கிறேன்.
உறவுகளை பொருத்தவரை நீயும் நானும் ஒன்று என்பதைப் பார்க்கிறேன்.
என்னை
மன்னித்துவிடு தோழா! நாம் மிகத் தாமதமாகவே பார்க்கிறோம். நீங்கள் எல்லாருமே, உங்களைப்போன்ற பரிதாபமான மனிதர்கள் தாம் என்பதை, நம் அதிகாரிகள் ஏன் நம்மிடம் சொல்வதில்லை? உங்களுடைய அம்மாக்கள், எங்கள்
அம்மாக்களைப்போலவே கவலையுடன் இருப்பர்; நீங்களும், எங்களைப்போலவே சாவைக்கண்டு பயப்படுவீர்கள் என்பதையெல்லாம் அதிகாரிகள்
நமக்குச் சொல்வதில்லை.
என்னை
மன்னித்துவிடு தோழா! நீ எப்படி எனக்கு எதிரியாக இருக்க முடியும்?"
இரண்டு உலகப்போர்கள் போதாதென்று, இன்று, நம்மிடையே, மூன்றாம் உலகப்போர், சிறு சிறு
துண்டுகளாக நிகழ்ந்தவண்ணம் உள்ளன. நமது ஊடகங்கள், ஒவ்வொருநாளும் தரும் பெரும்பாலான
செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற,
பழிவாங்கும் செய்திகளே. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி,
ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு
சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற
உலக மந்திரத்திற்கு எதிராக, இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு, அனைவர் மனதிலும் அழியாமல்
பதிந்திருக்கும் என்பது, என் நம்பிக்கை. ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip,
Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு
சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். “மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும்” என்று கிளாடிஸ்
அவர்கள்
சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.
மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால், இவ்வுலகம்
நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம்.
மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின்
மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும்
என்றும் மன்றாடுவோம்.
No comments:
Post a Comment