29 September, 2020
விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – நீர்க்கோவை நோய் நீங்கியது 2
25 September, 2020
Making – breaking promises வாக்கு அளிப்பதும், அழிப்பதும்
“Heavenly Father, we
come before you today to ask your forgiveness and seek Your direction and
guidance. We know your Word says, ‘Woe on those who call evil good,’ but that’s
exactly what we have done. We have lost our spiritual equilibrium and inverted
our values.
We confess that:
The response was
immediate. A number of legislators walked out during the prayer in protest. It
is easy to blame the politicians who walked away. What about us? Are we able to
use this prayer as an examination of our conscience and see where we stand.
While the
second son of the parable stands as a representative of the present-day politicians,
he is also our representative. This parable is also an invitation to us to look
into our lives and see how often we follow this pattern of breaking promises.
How often our good intentions do not translate into actions! The second son had
good intentions, but he never made it to the vineyard.
Here is an
incident that happened in a poor village parish. A young, dynamic priest is
appointed as an assistant parish priest in that village. He is very sad to see
that the parish church and its surrounding area are in a very bad shape. After
the Sunday Mass, the assistant parish priest talks to the people about some of
the plans he has for the parish. “If all of us can work together just for one
hour, we can clear the bushes around the church”, he says. The people are quite
excited about the idea. Almost every one in the church makes a proposal as to
how the church and its surrounding can be revamped. The meeting lasts for more
than an hour.
The young
priest speaks to the parish priest excitedly about the meeting and all the
suggestions that came up. The parish priest, having been there for quite a few
years, smiles and says, “Father, next Sunday you make some practical proposals
and see what happens!”
The next
Sunday, after the Mass, the assistant parish priest tells the people, “Friends,
last Sunday I spoke about how we can work together to clear all the bushes
around the church. I have brought some instruments. We begin work soon after
the Mass. How many are willing to join me?” There is dead silence in the
church. Only three young men put up their hands.
All of us
are aware of the famous saying that the way to hell is paved with good
intentions. An alternative form is "Hell is full of good intentions,
but heaven is full of good works". Jesus makes this clear at the end of
today’s parable in the following words:
Jesus
said to them, “Truly, I say to you, the tax collectors and the harlots go into
the
An English professor long ago said that "character was the ability to carry out a resolution long after the mood in which it was made has left you." Dale Carnegie said that one of the most tragic characteristics of human nature is that all of us tend to put off living. We are all dreaming of some magical rose garden over the horizon - instead of cultivating the roses that are blooming outside our windows today.
பொதுக்காலம் 26ம் ஞாயிறு
செல்வம்
மிகுந்த இளையவர் ஒருவர், அதிக நோயுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு
சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் முடிவுகளை எடுத்துக்கொண்டு, இளையவரின் அறைக்குச் சென்ற தலைமை மருத்துவர்,
அவரிடம், "உண்மையைச் சொல்லவேண்டுமெனில், நீங்கள் குணமடையும் வாய்ப்புக்கள் மிக, மிகக் குறைவாகவே உள்ளன" என்று வெளிப்படையாகக்
கூறினார்.
இளையவர், கண்ணீர்பொங்க, மருத்துவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "டாக்டர், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். நான்
குணமாகி வீடுதிரும்பியதும், உங்கள் மருத்துவமனையின்
கட்டட நிதிக்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன்" என்று கூறினார். அடுத்த ஒரு வாரத்தில், இளையவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்
தெரிந்தது. இரு வாரங்கள் சென்று, அவர், தன் வீட்டுக்குத்
திரும்பிச்சென்றார்.
சில
மாதங்கள் கடந்தன. ஒரு நாள், அந்த மருத்துவர், இளையவரை ஒரு விருந்தில் சந்தித்தார். அவர்,
அந்த இளையவரிடம், "நீங்கள் மருத்துவமனையில்
இருந்தபோது, எங்கள் கட்டட நிதிக்காக
ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா? இப்போது, எங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்"
என்று கூறினார். இளையவர் மருத்துவரிடம், "நான்
அப்படியா சொன்னேன்? டாக்டர், உங்களுக்கே தெரியும்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது, நோயின் உச்சத்தில் எதையாவது
உளறியிருப்பேன்" என்று கூறியபின்,
அவ்விடத்தைவிட்டு
அகன்றார்.
சொல்வது
ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருப்பவர்களைப்
பார்த்திருக்கிறோம். நாமும், அவ்வாறு செயல்பட்டிருக்கிறோம்.
முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப்பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத்
தருகிறது. சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று, என வாழும் இரு மகன்களைப்பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நமக்கு வழங்குகிறார்.
இந்த
உவமையில் இயேசு கூறும், இரு மகன்களுமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை.
ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார்.
மற்றொருவர், உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும்
செய்யாமல் போகிறார். இவ்விருவரில், இரண்டாவது மகன்,
கொடுத்த வாக்கை காக்கத்தவறிய அரசியல் தலைவர்களை, நம் நினைவுக்குக் கொணர்கிறார்.
இன்றைய
உலகத் தலைவர்களில் பலர், கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனது மட்டுமல்லாமல், இந்தக் கொள்ளைநோய் காலத்தை தங்களுக்குச்
சாதகமாக்கிக்கொண்டு, தங்கள் அதிகாரத்தை இன்னும் உறுதிப்படுத்தி வருகின்றனர் என்ற செய்திகள்
நமக்கு கவலை தருகின்றன.
அண்மைய
நாள்களில், ‘நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான இரு
செய்திகளின் தலைப்பு நம் கவலைகளை உறுதிப்படுத்துகின்றன. "அவரை நீக்க இயலாது என்ற
எண்ணத்தை, உங்கள் மீது சுமத்த டிரம்ப்
விரும்புகிறார்" (Trump Wants You to Think You Can’t Get Rid of Him), என்பது, செப்டம்பர் 24ம் தேதி வெளியான ஒரு
செய்தி. "தான் என்ன செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று விளாடிமிர் புடின்
நினைக்கிறார்" (Vladimir Putin Thinks He Can Get Away With Anything) என்பது, செப்டம்பர் 22ம் தேதி வெளியான செய்தி.
பெலாருஸ்
நாட்டில் கடந்த 26 ஆண்டுகளாக அரசுத்தலைவராக இருந்த அலெக்சாண்டர் லுக்கஷென்கோ (Alexander Lukashenko) அவர்கள், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் தான் மீண்டும்
வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்துக்கொண்டதும்,
அந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எழுந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு
அடக்கியதும், இன்றையத் தலைவர்கள்
நடுவே நிலவிவரும் சர்வாதிகாரப் போக்கின் ஓர் அடையாளம்.
கொள்ளைநோயினால்
உருவான நெருக்கடியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்திய நடுவண் அரசு, மக்கள்மீது பல்வேறு
சட்டங்களைத் திணித்துவருவதும், சர்வாதிகாரப் போக்கின் அடையாளமே. வழங்கிய வாக்குறுதிகளை
காப்பாற்றாமல், தங்கள் அதிகாரத்தை
காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கும் அரசியல் தலைவர்களை எண்ணிப்பார்க்க, இந்த
உவமையில் வரும் இரண்டாவது மகன் உதவி செய்கிறார்.
சொல்வித்தையில்
தேர்ந்த பலர், செயல்கள் என்றதும், காணாமல்போவதை
நாம் பார்த்திருக்கிறோம், இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு நிகழ்வு, நம்
சிந்தனைகளுக்கு உதவியாக உள்ளது.
ஊரே
வறுமைப்பட்டிருந்ததால், பங்குக்கோவிலும் பராமரிப்பின்றி
கிடந்தது. கோவிலைச்சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது.
அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப்பங்குத்தந்தை வந்துசேர்ந்தார். அவர், இளையவர் என்பதால், மிகுந்த ஆர்வத்துடன் தன் பணிகளைத்
துவக்கினார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான
நிலையில் இருந்தது, அவர் மனதை உறுத்தியது.
ஒரு
ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில், உதவிப்பங்குத்தந்தை, மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து
வேலைசெய்தால், நமது கோவிலையும், சுற்றுப்பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்"
என்று சொன்னார். இதைக்கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப்பற்றி, பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும்
சொன்ன ஆலோசனைகளை, உதவிப்பங்குத்தந்தை குறித்துக்கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
உதவிப்பங்குத்தந்தை, மகிழ்ச்சியோடு, பங்குத்தந்தையிடம், கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை, அந்தப் பங்கில், பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர்
இலேசான புன்னகையோடு, "சாமி, அடுத்த ஞாயிறு,
சுத்தம் செய்வதற்கு எத்தனைபேர் வருகிறார்கள் என்று பாருங்கள்" என்று,
நம்பிக்கையற்ற குரலில் சொன்னார்.
உதவிப்பங்குத்தந்தை
அடுத்த ஞாயிறுத் திருப்பலியில்,
"நண்பர்களே, நாம் போனவாரம் பேசியது நினைவிருக்கும் என்று
நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம்
நமது வேலையை ஆரம்பிப்போம். மண்வெட்டிகள், கடப்பாரைகள்
எல்லாம் தயாராக உள்ளன. என்னுடன் வேலைசெய்ய, எத்தனை
பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம்
கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும்
கைதூக்கினார்கள். சென்றவாரம் ஒர் எண்ணமாக, பேச்சாக
இருந்தது, இப்போது செயல்வடிவம்
பெறும் வேளையில், ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி, ஒடுங்கிப் போனது. சொல்வது யாருக்கும் எளிது.
சொல்வதைச் செயலாக்குவது கடினம்.
இந்த
உவமையில், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விருப்பமில்லை என்று முதலில் சொன்ன மூத்தவர், இறுதியில் அவர் விருப்பத்தை நிறைவேற்றினார்.
இவரை, 'செயல் வீரர்' என்று
நாம் அழைக்கலாம். "நான் போகிறேன் ஐயா" என்று தேனொழுகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாத மற்றொரு மகனை, 'வாய்ச்சொல் வீரர்' என்று
அழைக்கலாம். எவ்வித ஆர்ப்பாட்டமோ, விளம்பரமோ இல்லாமல், செயல்களில் ஈடுபடும் 'செயல் வீரர்'களையும், இதற்கு மாறாக, நிறையப் பேசி, எதையும் செய்யாமல்போகும் 'வாய்ச்சொல் வீரர்'களையும் நாம் வாழ்வில் சந்தித்திருக்கிறோம்.
'வாய்ச்சொல் வீரர்' என்ற அடைமொழியைக் கேட்டதும், நம் மனக்கண்களில் பலர் ஊர்வலமாகச் சென்றிருப்பர்.
குறிப்பாக, அரசியல் தலைவர்களை, 'வாய்ச்சொல் வீரர்கள்' என்று எளிதில் முத்திரை குத்தியிருப்போம்.
அது உண்மைதான். ஆனால், பிறரை முத்திரை குத்துவதோடு நம் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை.
அடுத்தவரை முத்திரை குத்தும் பொழுதுபோக்கிலிருந்து விடுபட்டு, ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொண்டால், நமக்குள்ளேயே, செயல்வீரரும், வாய்ச்சொல் வீரரும் மோதிக்கொள்வதை உணரலாம்.
நம்
ஆன்ம ஆய்வினை, இறைவனிடம் ஒரு வேண்டுதலாக
எழுப்புவோம். இந்த வேண்டுதல், அமெரிக்காவில்,
கான்சாஸ் மாநில மக்களின் பிரதிநிதிகள் அவையைத் துவக்கிவைக்க சொல்லப்பட்ட ஒரு செபம்.
நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட
போதகர், Joe Wright அவர்கள் சொன்ன செபம், அங்கிருந்தோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாத சிலர், செனட்
அவையைவிட்டு வெளியேறினர்.
அரசியல்
தலைவர்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்த இந்த செபம், நமக்கும் சவால்கள் விடுக்கின்றது. அரசியல்வாதிகளில்
பலர், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற இரட்டை வேடமிட்டு வாழ்கின்றனர்
என்று குறைகூறுகிறோம். அத்தகைய இரட்டைவேடம் நம் வாழ்க்கையிலும் இடம்பெற்றுள்ளதா என்ற
உண்மையான ஆழ்மனத் தேடலில் ஈடுபட, இந்த செபம் உதவியாக இருக்கும் இதோ, போதகர், Joe
Wright அவர்கள்
சொன்ன செபம்:
வானகத்
தந்தையே, உம்மிடம் மன்னிப்பு வேண்டி, உமது ஒளியையும், வழிகாட்டுதலையும் தேடி இங்கு கூடிவந்துள்ளோம்.
'தீயனவற்றை நல்லவை என்று
சொல்வோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு' என்று நீர் கூறும் வார்த்தைகளை நாங்கள் அறிவோம்.
அவ்விதமே நாங்கள் செய்துள்ளோம் என்பதையும் உணர்கிறோம்.
யூத
மதக் குருக்களோடு நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதியாக, இயேசு இந்த உவமையைக் கூறினார்.
இந்த உவமையைக் கூறியபின், அங்கு நிகழ்ந்த உரையாடலை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்வாறு கூறியுள்ளார்:
இயேசு
சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இறையாட்சியில் தங்களுக்கு மட்டுமே முன்னுரிமை
உண்டு, வரிதண்டுவோரும், விலைமகளிரும் புற இருளுக்கே உரியவர்கள் என்று
நினைத்திருந்த மதத்தலைவர்களின் செவிகளில், இயேசு கூறிய இச்சொற்கள், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க
வேண்டும்.
யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை
என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று
நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே
இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும்
அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
நம்மை
உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம்
அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு
ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள
முயல்வோம்.
மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம்.
‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு,
ஆனால்
உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த இளைய மகனை நினைத்துப் பார்க்கும்போது, “உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவோரை” நினைக்கத் தூண்டுகிறது.
அவர்களால், நம் வாழ்வில் உருவான வேதனைகளை நினைக்கத் தோன்றுகிறது. இந்த வேதனைகள் இன்னும்
ஆறாமல் இருந்தால், நம்மை இறைவன் குணமாக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசியதால், நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு
கேட்பது, இன்று பொருத்தமாக இருக்கும்.
உள்ளொன்று
வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார்
அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு, நாமும், நம் இறைவனை வேண்டுவோம்:
------------------------------------------------------------------------------------------------------
அன்பு இதயங்களே, இறைவன்
தந்த ஓர் அற்புத கொடையான குரல்வளத்தால், கோடான
கோடி உள்ளங்களைத் தொட்ட பாடகர் S.P.பாலசுப்ரமணியம்
அவர்கள், செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று, தன் 75வது
வயதில் தன் உலக வாழ்வை நிறைவுசெய்தார். அவர் பாடியுள்ள பல்லாயிரம் பாடல்களில், கிறிஸ்தவப்
பாடல்களும் அடங்கும்.