25th Sunday in Ordinary Time
Long queues are more
of a norm than an exception in India .
I have experienced these queues at the railway reservation counters. (I am talking of an era when online booking was not in vogue.) Once when
I went to book a train ticket, the queue was rather long and only one counter
was open. I had mentally resigned myself to the fact that it would take at
least half an hour for me to reach the counter. Thank God, I had taken a book
with me. So, I tried to immerse myself in the book. After half an hour, I was
closer to the counter. I was, in fact, the next person to be attended to. At
that time, another counter was opened and those who stood behind me rushed to
the new counter and were attended to immediately. I could sense a wave of
irritation sweep over me.
Fr Ron Rolheiser, one
of my favourite homilists and columnists, recounts a similar incident that
happened to him at an airport. He draws a parallel between his experience and
the parable of the Labourers in the Vineyard (Matthew 20:1-16) given as
our gospel today. Here is Fr Rolheiser’s account of what happened to him at the
airport and his subsequent reflection:
I was alright with
the long wait and moved patiently in the line - until, just as my turn came,
another security crew arrived, opened a second scanning machine, and a whole
line-up of people, behind me, who hadn't waited the forty minutes, got their
turns almost immediately. I still got my turn as I would have before, but
something inside of me felt slighted and angry: "This wasn't fair! I'd
been waiting for forty minutes and they got their turns at the same time as I
did!" I'd been content waiting, until those who arrived later didn't have
to wait at all. I hadn't been treated unfairly, but some others had been
luckier than I'd been.
That experience
taught me something, beyond the fact that my heart isn't always huge and
generous. It helped me understand something about Jesus' parable concerning the
workers who came at the 11th hour and received the same wages as those who'd
worked all day and what is meant by the challenge that is given to those who
grumbled about the unfairness of this: "Are you envious because I'm
generous?”
Are we jealous
because God is generous? Does it bother us when others are given unmerited
gifts and forgiveness? You bet! And ultimately that sense of injustice, of envy
that someone else got a break is a huge stumbling block to our happiness. Why?
Because something in us reacts negatively when it seems that life is not making
others pay the same dues as we're paying. (From the homily of Fr Rolheiser: On Being Jealous of God’s Generosity)
Jesus is the
‘story-teller par excellence’! He packs his parables with many surprising
punches and unexpected reversals. The parable of the labourers in the vineyard
is no exception. The owner of the vineyard employs labourers at various hours
of the day, including the eleventh hour. Here is an extract from the homily of
Fr Joseph Pellegrino talking of these labourers:
The hired laborers
of the parable were the lowest class of Jewish workingmen. They and their
families lived on the poverty level. If they were unemployed for even a day,
the family would go hungry. Their situation was known to be so bad that when
they were hired for a day's work, Old Testament law commanded they be given
salaries before sundown. Thus, they were able to shop and put bread and milk on
the table…
The Law of Moses that
imposes that daily wages be paid ‘before sunset’ (Deuteronomy 24:14-15) brings
to mind the injustices committed against daily-wage labourers today. Most of
them and their families go to bed hungry. Although the workers slog the whole
day, they are cheated of their due wages. The pandemic and the subsequent
economic melt-down have made life almost impossible for the unorganized
labourers.
The Law of Moses often
reminds the people of Israel
that they should not forget the fact that they had been strangers in a foreign
land. If only all of us learn the one unchangeable lesson that all of us are
pilgrims on this earth, many social ills that beset us – including cheating the
poor – can be healed.
Although this parable
seems to highlight labour and wages, Jesus begins this parable with the
introduction – “For the kingdom of heaven is like…” (Mt. 20:1) This parable is concluded with the words: “So the last
will be first, and the first last.” (Mt. 20:16). The final lines
of today’s Gospel seem to be the echo or the mirror-image of the closing lines
of the previous chapter, namely: “But many that are first will be last,
and the last first.” (Mt. 19:30)
Chapter 19 seems to
address the question of who gains entry into the Kingdom of Heaven. Jesus is
very clear that children get easy access to the Kingdom. (Mt. 19:14). Following
this, we see the episode of a rich young man who wishes to gain eternal life,
namely, the Kingdom, and Jesus gives him the challenge of selling everything he
has, give to the poor and follow him. When the young man withdraws from this
challenging invitation, Jesus says the famous statement that it would be hard
for the rich to enter the Kingdom of Heaven: “Truly I tell you, it will
be hard for a rich person to enter the kingdom of heaven. Again, I tell you, it
is easier for a camel to go through the eye of a needle than for someone who is
rich to enter the kingdom of God” (Mt. 19:23-24). This statement of
Jesus was diametrically opposed to what the Jews believed, namely, the rich
were blessed by God and hence it would be far easier for them to enter the
Kingdom.
In the final lines of
this chapter, the disciples question Jesus whether they stood any chance of
entering the Kingdom and Jesus promises them eternal life. At the end of this
chapter on who stands a fair chance of entry into the Kingdom, Jesus declares
emphatically: “But many that are first will be last, and the last first.” (Mt. 19:30) In the very next chapter Jesus, once again,
reiterates the reversal of the first and the last with the Parable of the
Labourers in the Vineyard. (Matthew 20:1-16)
The focus of the
parable is not the labourers but the owner of the vineyard. This man seems to
go against all that we think as logical. For instance, we would expect him to
pay the labourers, starting from the ones who had worked the whole day. But, he
begins with the last ones. Jesus seems to make a point here. The owner of the
vineyard could have easily sent away the full day labourers giving them their
due wages – namely, one denarius and then he could have called in the eleventh-hour
labourers and given them whatever he wanted. That way, things would have gone
on smoothly. But, parables are not meant to smooth things out. They are
supposed to drive home a point. By seeing the eleventh-hour labourers get paid
one denarius, the expectation of the full-day labourers must have soared. Hence,
their disappointment became all the more poignant when they too were paid only
one denarius. Many of us would feel that the owner was unfair.
Objectively speaking,
it was not unfair, since the owner had agreed to give them one denarius when he
hired them. This ‘just, and agreed-upon wage’ became ‘unjust’, when it was
compared with the wages given to others. It is by comparison, many of our
discontentment surfaces.
A survey of IT
professionals done a few years back revealed that most of them were happy with
the salary they were drawing at their age. Most of them said that their dads
did not have it that easy when they were working. In the same survey, one of
the last questions was about how they felt when compared to other IT
professionals who were drawing better salaries than they were making. Many of
them felt that that disparity was not fair.
As long as I was standing
in the line to make my reservation, I was feeling okay. But, when another
counter opened, my mood changed. As long as the IT professionals thought about
their own salaries, they were contented. But, when the question of comparison
came up, they became discontented. It is by comparison, our discontentment
surfaces.
Let us get back to the
Parable… From the point of view of the owner, he had not done any injustice to
those who had worked all day. They were not deprived of their just wages – the
wages agreed upon. When it came to the eleventh-hour workers, the owner wanted
to go beyond calculations and be generous.
Generosity and Justice
are two facets of God that often seem to clash. We can understand a ‘generous
God’ who lavishes gifts on us. We can also understand a ‘just God’ who pays
what is due to each of us. But, a ‘generous-just God’ or a ‘just-generous God’
seems to give us headaches. This is because our definition of generosity and
justice are very different from that of God. Unfortunately, we tend to make God
think like us. God, on the other hand clearly tells us that there is a great
chasm between how we think and how God thinks. This message comes to us in the
First Reading: For my thoughts are not your thoughts, neither are your
ways my ways, says the Lord. For as the heavens are higher than the earth, so
are my ways higher than your ways and my thoughts than your thoughts. (Isaiah
55:8-9)
God is telling us
through this strange parable: "Don't cut me down to your size. I will not
squeeze into your stereotypes. You wish your enemies revenge, but I want mercy.
You fashion God made to your own image, but I will not play your game. I have
my own. And it will surprise you every time. I am a complete original. There is
no one like me." (Fr Joseph Pellegrino)
Instead of shaping or
creating God in our image, let us allow God to be God… the illogical, generous,
prodigal Father who can blend Justice and Love in a unique style, very
different from ours. If we allow God to be God, then probably some traces of
this divine generosity may rub off on us!
பொதுக்காலம் 25ம் ஞாயிறு
இரயில்
நிலையம் ஒன்றில், பயண முன்பதிவு செய்வதற்காக, வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை
மிக நீளமாக இருந்தது. அவ்வளவு பேர் காத்திருந்தபோதிலும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்துகொண்டிருந்தார்.
நான், அந்த முன்பதிவு சன்னல் அருகே செல்ல, குறைந்தது, அரை மணி நேரமாவது ஆகும் என்று
தெரிந்தது. வேறு வழியின்றி, நான் பையில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து
வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. பதிவு செய்யும் சன்னலை நெருங்கிவிட்டேன்.
நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றோர்
அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப்பின், வரிசையில் நின்றுகொண்டிருந்த பலர்,
அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன்
தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப்பார்த்து சிரித்ததைப்போல் எனக்குத்
தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம்.
நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்களோ, அவ்வளவு நேரம்
வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.
வீட்டுக்குத்
திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும்
கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி
நேரம் ஆகும் என்பது புரிந்தது. அதேபோல், அரைமணி
நேரம் சென்றதும், என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என்
வாய்ப்பை, வேறு யாரும் பறித்துச்செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப்பின் வந்து வரிசையில் நின்ற சிலர்,
எனக்கு இணையாக, அல்லது, எனக்கு முன்னதாக
வாய்ப்பு பெற்றனர்.
நியாயமாகப்
பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள்
ஒவ்வொருவரும், அரைமணி நேரமாவது, அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். இல்லையா? ‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் பயன்படுத்தும் பேச்சுவழக்கு,
நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் எரிச்சலை,
கோபத்தை நியாயப்படுத்த, நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்கு.
இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கும் உவமை, இதேபோன்றதொரு
கோபத்தை நமக்குள் உருவாக்கக்கூடும். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள்
இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு
முதலாளியைப் பற்றிய உவமை இது.
திராட்சைத்
தோட்டத்தில் பணியாற்றச் செல்லும் வேலையாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் கூலியையும் மையப்படுத்தி
இவ்வுவமை சொல்லப்பட்டுள்ளதால், இயேசு உழைப்பைப்பற்றியும்,
உழைப்பிற்கேற்ற நியாயமான கூலியைப்பற்றியும் பேசுவதாக எண்ணிப்பார்க்க வாய்ப்பு
உண்டு. ஆனால், இயேசு, இவ்வுவமையின் ஆரம்பத்தில், "விண்ணரசைப் பின்வரும்
நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்" (மத்தேயு. 20:1) என்று கூறுவதால், விண்ணரசின் பண்புகளை விளக்கும் மற்றுமோர்
உவமையாக இதைச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். அந்த அரசில் யார் நுழையமுடியும், அல்லது முடியாது என்பதைத் தெளிவுபடுத்தும்
ஒரு பாடமாக, இவ்வுவமையை நாம் எண்ணிப்பார்க்கலாம். இந்த எண்ணத்தை வலியுறுத்தும் வண்ணம், இவ்வுவமையின் இறுதி வரிகள் அமைந்துள்ளன:
"இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று
இயேசு கூறினார். (மத். 20:16)
முதன்மையானோர், கடைசியானோர் என்ற இரு சொற்களைக் கொண்டு,
இயேசு வார்த்தை விளையாட்டு நடத்துவதைப்போலத் தோன்றலாம். ஆனால், யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்று உலகம் வைத்திருக்கும்
அளவுகோல்களுக்கு முற்றிலும் மாறுபட்டதோர் அளவுகோலை, இயேசு, இவ்வுவமையில்
பயன்படுத்தியுள்ளார்.
பொதுவாகவே, இயேசு கூறிய பல உவமைகள், உலகச் சிந்தனைகளை, அதுவும், இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவிவந்த பல
சிந்தனைகளை தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை அறிவோம். பாவிகள், தீண்டத்தகாதவர்கள் என்று, இஸ்ரயேல் மக்களால்
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமாரியர்களில் ஒருவரை, 'நல்ல சமாரியர்' உவமையின் நாயகனாக இயேசு காட்டினார். பரிசேயரும், வரிதண்டுபவரும் கோவிலுக்கு செபிக்கச் சென்ற
உவமையில், புண்ணியங்களின் பிறப்பிடமென்று
கருதப்பட்ட பரிசேயர் அல்ல, பாவி என்று ஒதுக்கப்பட்ட
வரிதண்டுபவரே, இறைவனின் ஆசீர் பெற்று, வீடுதிரும்பினார் என்று இயேசு கூறினார். இந்த
உவமைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் மனதில் நிலநடுக்கம் உருவாகியிருக்கும். இதைக்கேட்ட
மதத்தலைவர்கள் மனதிலோ, எரிமலை வெடித்திருக்கும்.
இறையரசைப்பற்றி
இயேசு கூறிய உவமைகளில், ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும்,
அடுக்கடுக்காய் வெளியாகியுள்ளன. எனவே,
முதன்மையானோர், கடைசியானோர் என்ற இரு குழுவினரைப்பற்றி அவர்
சொன்ன வார்த்தைகள், இயேசு வழக்கமாக வழங்கிவந்த
அதிர்ச்சி மருத்துவத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
'திராட்சைத் தோட்ட வேலையாள்கள்’ உவமையைச் சொல்வதற்கு முன்னதாக, மத்தேயு நற்செய்தி, 19ம் பிரிவில், யார் யார் இறையரசில் நுழையமுடியும், அல்லது, முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.
அப்பிரிவில், சிறு குழந்தைகளைப் பார்த்து, "விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" (19:14) என்று இயேசு ஆசி வழங்குவதைக்
காண்கிறோம். நிறைவாழ்வடைய தான் செய்யவேண்டியதென்ன என்ற கேள்வியுடன், செல்வம் மிகுந்த
இளையவர் ஒருவர், இயேசுவை அணுகிவந்தபோது, "நிறைவுள்ளவராக விரும்பினால்
நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக்
கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"
(19:21) என்று, இயேசு, அழைப்புவிடுக்கிறார்.
அந்த அழைப்பை ஏற்கமுடியாமல், இளைஞர் மனமுடைந்து அகன்றதும், இயேசு "செல்வர் விண்ணரசில் புகுவது
கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்:
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" (19:23-24)
என்று கூறுகிறார். செல்வர்களுக்கு விண்ணகத்தில் ஆரவார வரவேற்பு இருக்கும் என்று இஸ்ரயேல்
மக்கள் மத்தியில் நிலவிவந்த நம்பிக்கையை, இயேசு கூறிய இந்த வார்த்தைகள் தலைகீழாகப்
புரட்டிப்போட்டன.
செல்வர்கள்
நுழைவதற்குக் கடினமாக இருக்கும் விண்ணரசில், செல்வங்களைத்
துறந்து, இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும், குழந்தைகளும், நுழைவது எளிது என்று இயேசு தெளிவுபடுத்தினார்.
இந்தத் தலைகீழ் மந்திரத்தின் உச்சகட்டமாக, "முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர்
பலர் முதன்மையாவர்" (19:30) என்று இயேசு கூறும்
வார்த்தைகளோடு, மத்தேயு நற்செய்தியின்
19ம் பிரிவு முடிவடைகிறது. இந்தத் தலைகீழ் மந்திரத்தை, தன் சீடர்கள் மனதில் இன்னும்
ஆழமாகப் பதிக்கும் வண்ணம், இயேசு,
"திராட்சைத்
தோட்ட வேலையாள்கள் உவமை"யைக் கூறினார்.
தன்
திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்ய தொழிலாளிகளைத் தேடிச்செல்லும் ஒரு முதலாளியின் கதை
இது. காலை 6 மணி முதல் அவர் ஆள்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆள்கள்
வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கப்படவேண்டும். அவர்களுக்கு மாலை 6 மணிக்கு
கூலி கிடைத்தால்தான், அவர்களால், இரவு உணவை, தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்லமுடியும் என்ற
எண்ணத்தில், இச்சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனவே, உவமையில் வரும் முதலாளி, மாலை ஆறுமணி ஆனதும்,
தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார்.
இயேசுவின்
எல்லா உவமைகளிலும் புரட்சிகரமான ‘புரட்டிப்போடுதல்’ நிகழ்கின்றது. இந்த உவமையிலும் ‘புரட்டிப்போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க
வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு
முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி
கொடுக்கச் சொல்கிறார். இந்த உவமையின் ‘புரட்சி’ இங்கு ஆரம்பமாகிறது.
ஒரே
ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு, ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத்
தலைகால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை
6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும், இதைக் கண்டு, மகிழ்ச்சி
உருவாகியிருக்கும். காரணம்... ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு
தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர
உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம்
என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே, அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்புடன் நின்று
கொண்டிருந்தனர்.
ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான
ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர்களது கண்ணோட்டத்தில், இது, அநியாயம், அக்கிரமம், அநீதி. தீர ஆய்வுசெய்தால், அவர்களுக்கு அநீதி
ஏதும் இழைக்கப்படவில்லை என்பது புரியும். ஆனால், இறுதி ஒருமணி நேரம் உழைத்தவர்களுக்கு ஒரு
தெனாரியம் கிடைத்தது என்ற அந்த ஒப்புமை அளவுகோலின் அடிப்படையில் பார்க்கும்போது, காலையிலிருந்து உழைத்தவர்களுக்குக் கிடைத்த
நீதியான ஒருநாள் கூலி, அநீதமானக் கூலியாகத்
தெரிந்தது. அவர்கள் அடைந்த ஏமாற்றமும்,
எரிச்சலும்,
நமக்கும் நியாயமாகத் தெரிகின்றன.
அடுத்தவருக்கு
என்ன கிடைக்கிறது என்பதில் நம் கவனம் திரும்பும்போது, ஒப்புமைகள் தோன்றுகின்றன. நமது உழைப்பு, நமது திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நமக்கு
வழங்கப்படும் ஊதியத்தைக் கொண்டு மனநிறைவு அடையும் நாம், அடுத்தவர் பெறுவது எவ்வளவு
என்ற ஒப்புமைக்கணக்கு பார்க்கும்போது,
மனநிறைவை
இழந்து, குறைகூற
ஆரம்பிக்கிறோம்.
கணணித்துறையில்
பணிசெய்பவர்கள் மத்தியில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன், கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அவர்கள் வாங்கும் ஊதியம்பற்றிய கருத்துக்கணிப்பு அது. பல இளைஞர்கள், தாங்கள் வாங்கும்
ஊதியம் குறித்து மகிழ்ச்சி என்று சொன்னார்கள். அதிலும், தாங்கள் அந்த வயதில் வாங்கும்
ஊதியம், தங்கள் தந்தை, முப்பது ஆண்டுகள் உழைத்த பின்னும் கிடைக்காத ஓர் ஊதியம் என்று,
தங்கள் நிலையைக் குறித்து மகிழ்வடைந்தனர். ஆனால், அந்தக் கருத்துக் கணிப்பின் இறுதியில் ஒரு
கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, அவர்களைப் போலவே பட்டம்பெற்ற
ஒரு சிலர், அவர்களைவிட இன்னும் அதிகமாய் ஊதியம் பெறுகிறார்கள் என்ற செய்தியை அவர்களிடம்
சொன்னபின், மீண்டும், அவர்களது கருத்துக்களைப்
பதிந்தபோது, அவர்களிடம், முன்னர் இருந்த
மகிழ்ச்சி எல்லாம் மறைந்தாகவும், அவர்கள் வருத்தம் அடைந்ததாகவும்,
அந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
நாம்
செய்கின்ற தொழிலுக்கு ஏற்ற ஊதியம் நமக்குக் கிடைக்கிறது, அல்லது, நமது தந்தையின் காலத்தைக்
காட்டிலும் நமக்கு அதிகம் கிடைக்கிறது என்று எண்ணி மகிழ்வும், மனநிறைவும் அடையும் நாம், நம்மைப்போலவே உழைக்கும் மற்றொருவர், இன்னும்
அதிகம் பெறுகிறார் என்று தெரிந்ததும், நம் மகிழ்வையும், மனநிறைவையும் தொலைத்துவிடுகிறோம். எரிச்சலும், கோபமும் அடைகிறோம். இதைவிடக் கொடுமை என்னவென்றால், நம்மைவிடக் குறைவாக வேலைசெய்யும் ஒருவர்,
நமக்கு ஈடாக, அல்லது நம்மைவிட அதிகம்
ஊதியம் பெறுகிறார் என்று தெரிந்தால், நமது கோபம் அதிகமாகிறது. நம் மகிழ்வும், மனநிறைவும் எந்த கண்ணோட்டத்தின்
அடிப்படையில் உருவாகின்றன என்பதை ஆய்வுசெய்வது நல்லது.
பயண
முன்பதிவு அலுவலகத்தில், எனக்குப் பின் வரிசையில் வந்தவர், அடுத்த சன்னல்
திறந்ததால், எனக்கு இணையாக, அல்லது எனக்கு முன்னதாக பதிவு செய்தது, எனக்குள் கோபத்தை
உருவாக்குகிறது. என்னைப்போல் உழைப்பவர், அல்லது
என்னைவிட குறைவாக உழைப்பவர், என்னைவிட அதிக ஊதியம் பெறுவது, எனக்குள் கோபத்தை
உருவாக்குகிறது. அடுத்தவர் பெற்ற நல்ல வாய்ப்புக்கள், நமக்கு இழைக்கப்பட்ட அநீதி
என்று நினைக்கிறோம். இது நமது குறுகிய கண்ணோட்டம்.
திராட்சைத்தோட்ட
உரிமையாளர் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளிக்கும் அவர் அநீதி
இழைக்கவில்லை. அனைவருக்கும், நியாயமான,
பேசப்பட்ட
கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு, நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, இரக்கத்துடன் செயல்பட்டார். நீதியோடு மட்டுமல்லாமல், இரக்கத்தோடும் நடப்பவர் இறைவன் என்பதை, இன்றைய
பதிலுரைப்பாடல் இவ்வாறு கூறுகிறது: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்
இரக்கச் செயல்களே. (தி.பா.145:17)
நீதி
என்ற நிலையைத் தாண்டி, முதலாளி காட்டிய தாராளகுணத்தை, சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்த
பணியாளர்களைப்போல், இறைவனின் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளமுடியாமல் நாமும் தடுமாறுகிறோம்!
அளவுகடந்த
அன்பும், தரமறியாது வழங்கும் தாராளகுணமும்
கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு,
நடுநிலையோடு
செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணநலன்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது,
பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைக்கும்போது, பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.
நம் எண்ணங்களும், இறைவனின் எண்ணங்களும் வேறுபட்டவை என்பதை, இன்றைய முதல் வாசகம்,
இவ்வரிகளில் நினைவுறுத்துகிறது:
எசாயா
55:8-9
என்
எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என்
வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என்
எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
தன்
உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும், நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும்,
மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில், அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு
முறை, கவனமாகக் கேட்போம்: ‘தோழரே, நான் உமக்கு அநியாயம்
செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.
எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய்
இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ (மத். 20:13-15)
"நான்
கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?"
என்று
கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்கவிடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, பல விதங்களில்
வளைத்து, நெளித்துவிடுவதால்,
அமைதியின்றி தவிக்கிறோம்.
கடவுளின்
அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்கமுடியாமல்
தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள், தன் நீதியிருக்கையில் அமர்ந்து தீர்ப்பு
வழங்குவதற்கு முன், நாம், கடவுளின் நீதியிருக்கையில்
அமர்ந்து, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு
தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார்
என்றும் முடிவு செய்துவிடுகிறோம்.
அந்நேரத்தில்,
கடவுள், தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளகுணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது,
அவரைப் புரிந்துகொள்ளமுடியாமல், தடுமாறுகிறோம். இறுதியில் வந்தவர்களுக்கு, நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளை இறைவன் செய்யும்போது, நாம் ஏமாற்றம் அடைகிறோம்.
முணுமுணுக்கிறோம். கோபம் கொள்கிறோம். அவ்வேளையில், கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால்
உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?
கடவுளை
கடவுளாகவே இருக்கவிடுவோம். அப்போது, நமக்கும், அந்தத் தெய்வீக இயல்பில், ஒரு சிறு பங்காவது
கிடைக்கும்.
No comments:
Post a Comment