Forgive 70 times 7
24th Sunday in Ordinary Time
“As We Forgive” is a documentary film made by Laura Waters
Hinson in 2008. It is based on the massacre that took place in Rwanda. The
trailer of this movie begins with a voice-over: “If they tell you that a
murderer has been released in the neighbourhood, how would you feel? And this
time we weren’t releasing one. We were releasing forty thousand.”
Could you forgive a
person who murdered your family? This is the question faced by the subjects of ‘As
We Forgive’, a documentary about Rosaria and Chantal - two Rwandan women coming
face-to-face with the men who slaughtered their families during the 1994
genocide. Overwhelmed by an enormous backlog of court cases, the government sent
back over 50,000 genocide perpetrators back to the very communities they had
massacred. Without the hope of full justice, Rwanda has turned to a new
solution: Reconciliation.
In February 2009,
inspired by this movie, Catherine Claire Larson wrote a book: As We Forgive:
Stories of Reconciliation from Rwanda. Here is a write-up on this book
published by Catholic Education Resource Centre:
"Can a country
known for radical brutality become a country known for an even more radical
forgiveness?" That's the question BreakPoint's own Catherine Claire Larson
asks in her new book, As We Forgive.
Larson, whose book
was inspired by the award-winning documentary film of the same name, paints a
gripping picture of the Tutsi survivors of genocide, who in 1994 endured 100
days of unimaginable violence at the hands of their Hutu neighbors. In just
three months, nearly a million people were shot, macheted, raped, and tortured.
But that was only
their first trial. Seven years after the storm, the Rwandan government started
releasing from prison more than 70,000 perpetrators of genocide.
Larson vividly
describes the dreadful decision the survivors had to make. The people who had
destroyed their lives were returning. Would they choose fear and hate? Or
forgiveness and reconciliation? As Larson writes so beautifully, many are
choosing forgiveness.
The title of the
documentary as well as the book is taken from the prayer – “Our Father”. In
that prayer one of the petitions is: “Forgive us our trespasses as we
forgive those who trespass against us.” When Jesus taught this lovely
prayer to his disciples, he may have recollected the words from the Book of
Sirach: “Forgive your neighbour the wrong he has done, and then your sins
will be pardoned when you pray.” (Sirach 28:2). We hear these words as
the first reading in today’s liturgy – Sirach 27:30 – 28:7.
Today’s Gospel invites
us to reflect on one of the magical ability human beings possess – the ability
to forgive and be forgiven. Both these are two sides of the same coin, as
expressed by St Francis of Assisi
in his famous prayer for peace: “In pardoning, we are pardoned.” We are
called to reflect on this basic gift given to every human being.
It would be hard for
us to deal with all that Jesus did and said about forgiveness. In fact, he had
preached and practised forgiveness even when he was nailed to the cross. We
shall focus on just two aspects of forgiveness taught by Jesus in today’s
Gospel (Matthew 18:21-35). The first aspect comes in the form of a numerical
answer given by Jesus to the question posed by Peter - How many times do we
forgive someone who errs? All of us must have faced this question in our lives.
Peter had this doubt too. Here are the opening lines from today’s Gospel:
Then Peter came
up and said to him, “Lord, how often will my brother sin against me, and I forgive
him? As many as seven times?” Jesus said to him, “I do not say to you seven
times, but seventy times seven.” (Matthew 18: 21-22)
It is interesting to
note that the opening lines of the gospel passages of last Sunday and this
Sunday sound similar. Last Sunday, Jesus began saying, “If your brother
sins against you, go and tell him his fault, between you and him alone” (Mt.
18:15), implying that even if your brother is the one who sins, it is our
duty to begin the process of reconciliation. Peter must have accepted this
challenging proposition; but, there is the next question. Hence this week’s
gospel begins with Peter’s question: How often will my brother sin
against me, and I forgive him? (Mt. 18:21)
This conversation
between Jesus and Peter is not a lesson in mathematics. Forgiveness goes beyond
numbers and calculations. When Peter asked Jesus whether forgiving seven times
would be sufficient enough, Peter would have imagined that Jesus would
appreciate him. Forgiving someone seven times was quite a generous gesture for
a Jew, since the number 7 meant fullness. But, Jesus tells him to go beyond. I
imagine the conversation between Jesus and Peter in this fashion:
Peter: Lord, how
often will my brother sin against me, and I forgive him? As many as seven
times?
Jesus: Peter, your
question is pretty surprising to me. ‘How often should I forgive my brother?’
It is like asking me, ‘How often should I breathe?’ If you don’t breathe, you
die. If you don’t forgive, you die too. The simple formula… Forgiving =
breathing.
Instead of saying
forgive always as you would breathe always, Jesus said “not seven times, but
seventy times seven.” This is the first lesson that Jesus gives in today’s
gospel. Very challenging indeed!
The second lesson is
equally challenging. Jesus teaches that we are called to forgive irrespective
of how great or small is the sin. To illustrate this point, Jesus proposes the
Parable of the Unforgiving Servant, where one owes a debt of ‘ten thousand
talents’ and another, ‘a hundred denarii’. Some of the Bible scholars have converted
these amounts in terms of daily wages. Ten thousand talents are equivalent to
wages paid for 6,000,000 days, whereas, a hundred denarii are equivalent to
wages paid for 100 days.
We read in the parable
that as the servant who owed ten thousand talents “could not pay, his
lord ordered him to be sold, with his wife and children and all that he had,
and payment to be made.” (Mt 18:25). This decision of the king brings
to mind our present-day problems where, those who are unable to pay back the
debt, face the problem of being sold, or the problem of bonded labour system.
Not only individuals,
but nations as a whole suffer due to debts. It is interesting to note that most
of the poor, third world countries which are in deep debt, were once the
colonies of rich countries. During the years of colonial aggression, the rich countries
had swindled the poor countries and left them dry. Even today, the cheap labour
available in these poor countries are exploited to the fullest possible
measure.
Some of the world
leaders have appealed to the rich countries to cancel the debt of many poor
countries. Pope Francis, in his ‘Urbi et
Orbi’ message given on Easter Sunday (April 12), called for the
forgiveness of debts: “In light of the present circumstances, may
international sanctions be relaxed, since these make it difficult for countries
on which they have been imposed to provide adequate support to their citizens,
and may all nations be put in a position to meet the greatest needs of the
moment through the reduction, if not the forgiveness, of the debt burdening the
balance sheets of the poorest nations.”
United Nations
secretary-general António Guterres, on April 23, called for a moratorium on
debt servicing and a possible debt relief program for countries struggling to
service their external debt due to the economic fallout of the COVID-19
pandemic.
As we listen to the
parable, we come across the scene where, “out of pity for him the lord of
that servant released him and forgave him the debt” (Mt. 18:27). We
pray that the rich countries of the world write off the debts of the poor
countries.
What follows this
forgiveness shocks us. But that same servant, as he went out, came upon
one of his fellow servants who owed him a hundred denarii; and seizing him by
the throat he said, ‘Pay what you owe.’ So his fellow servant fell down and
besought him, ‘Have patience with me, and I will pay you.’ He refused and went
and put him in prison till he should pay the debt. (Mt. 18:28-30)
If we wish to speak in
figurative terms, we can imagine that ‘ten thousand talents’ was an ocean,
while ‘hundred denarii’ was only a cup of water. The one who owed the king ten
thousand talents was drowning in the ocean fighting for every breath. At that
moment, the saving hands of the king pulled him out. When this servant met his
fellow servant, forgetting the fresh lease of life he and his family had
received, he tried to choke the life out of his fellow servant, who owed him
just a ‘cup of water’.
Getting forgiven and
forgiving are like the breath we inhale and exhale. If one of them stops, or,
becomes weak, we end up sick. By not practising forgiveness, the first servant made
a mockery of the forgiveness he had received. Hence, in the third part of the
parable, we see that the king punishes the unforgiving servant severely. Jesus
closes this parable as well as today’s gospel with a warning: “So also my
heavenly Father will do to every one of you, if you do not forgive your brother
from your heart.” (Mt. 18:35)
These words of Jesus
can be interpreted to mean that when we do not forgive our brother from our
heart, we resist or reject God’s forgiveness to us. When we do not forgive
others, we tend to inflict pain on ourselves and the wound begins to fester.
Thoughts of revenge and bottled up anger are harmful to us. “Anger is an
acid that can do more harm to the vessel in which it is stored than to anything
on which it is poured” said, Mark Twain. In stark contrast to this, he had
defined forgiveness in these beautiful words: “Forgiveness
is the fragrance that the violet sheds on the heel that has crushed it.”
There are two more
statements that talk of what forgiveness, or unforgiveness can do to us.
"Forgive
others not because they deserve forgiveness; but because you deserve
peace"
“Refusing to
forgive someone is like drinking poison, and waiting for the other person to
die”
Let us pray that as we
overcome COVID-19 virus, we may also overcome the viruses of hatred, revenge
and unforgiveness! Let us pray with St Francis of Assisi:
Lord, make me an
instrument of your peace
Where there is hatred,
let me sow love
Where there is injury,
pardon…
O Divine Master, grant
that I may
Not so much seek to be
consoled as to console
To be understood, as
to understand
To be loved, as to
love.
For it is in giving
that we receive
And it's in pardoning
that we are pardoned
And it's in dying that
we are born to Eternal Life
Amen
Unlocking the door
பொதுக்காலம் 24ம் ஞாயிறு
அமெரிக்க
ஐக்கிய நாட்டைச் சேர்ந்த Laura
Walters Hinson என்ற பெண்மணி, ஆப்ரிக்காவின்
ருவாண்டா நாட்டை மையப்படுத்தி உருவாக்கிய ஓர் ஆவணப்படம், நம் ஞாயிறு சிந்தனைகளைத்
துவக்க உதவியாக உள்ளது. 2008ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பதுபோல்.
இந்த
ஆவணப்படத்தின் ஆரம்பத்தில், திரையில் திரையில்
ஒலிக்கும் குரல் இவ்வாறு கூறுகிறது.: "உங்கள் குடும்பத்தாரைக் கொலை
செய்து, சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை, நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள்
என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை, இந்த அரசு, ஒருவரை அல்ல, 40,000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள்.
இவர்கள் நம் மத்தியில் வாழப்போகிறார்கள்." மனதை அச்சுறுத்தும்
இக்கூற்றுடன் இந்த ஆவணப்படம் ஆரம்பமாகிறது.
1990களில்,
ருவாண்டா நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் ஒன்றில், ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில், 10 இலட்சம்
பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இவர்களில், 3 லட்சத்திற்கும் அதிகமானோர், குழந்தைகள்.
அந்நாட்டில் உள்ள மற்றோர் இனத்தைச் சேர்ந்த 70,000க்கும் அதிகமானோர், அந்தக்
கொடூரக் கொலைகளைச் செய்ததாக ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு
இவர்களை ருவாண்டா அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள்
மத்தியில் இவர்கள் மீண்டும் வாழவந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும்
இடையே ஏற்பட்ட ஒப்புரவை, ‘நாங்கள் மன்னிப்பது போல்’ என்ற இந்த ஆவணப்படம் காட்டுகிறது.
மனதைத்
தொடும் காட்சிகள், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது
என்று, இந்தப் படத்தின் ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில், அவர்களை மன்னிக்கும் காட்சிகள்
மனதைத் தொடுகின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும், உண்மையிலேயே மனம்
வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதில் ஆழமாய் பதியும் காட்சிகள். இவர்கள் யாரும் நடிகர்கள்
அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள்.
நாங்கள்
மன்னிப்பதுபோல்
என்ற ஆவணப்படத்தின் தலைப்பு, நாம் ஒவ்வொருநாளும், சொல்லும் "விண்ணுலகில் இருக்கிற எங்கள்
தந்தையே" என்ற செபத்திலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள். "எங்களுக்குத் எதிராகக்
குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல், எங்கள்
குற்றங்களை மன்னியும்" என்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தியுள்ளோம். இதே எண்ணம், இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது
உன் பாவங்கள் மன்னிக்கப்படும். (சீராக் 28:2)
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும்,
மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புதப் பண்பான மன்னிப்பைப்பற்றி சிந்திக்க, இன்றைய
வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு
என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம்
எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன்
வரும் ஆழ்ந்த அமைதியை,
நிறைவைப்
பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ், அமைதிக்கென உருவாக்கிய அந்த
அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று
சொல்லியிருக்கிறார்.
மன்னிப்பை,
தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இயேசு, இன்றைய நற்செய்தியில், மன்னிப்பைப்பற்றி
கூறியுள்ள இரு கருத்துக்களை, சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.
முதல்
கருத்து,
ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? என்ற கேள்வியின் பதிலாகக்
கூறப்பட்டுள்ளது. நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்வி, பேதுருவுக்கும் எழுந்தது.
அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
மத்தேயு
நற்செய்தி 18: 21-22
அக்காலத்தில்
பேதுரு இயேசுவை அணுகி,
“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள்
ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு
இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”
சென்ற
ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியின் துவக்கமும், இந்த வார நற்செய்தியின் துவக்கமும், ஏறத்தாழ,
ஒரேவிதமான சொற்களுடன் துவங்குகிறது. "உங்கள் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப்
பாவம் செய்தால்" என்று சென்றவாரம் இயேசு ஆரம்பித்தார். "என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம்
செய்துவந்தால்" என்ற சொற்களுடன், இந்தவார நற்செய்தியை, பேதுரு துவக்குகிறார்.
தவறுகளை பிறர் செய்தாலும், ஒப்புரவு முயற்சிகளை நாம்
துவக்கவேண்டும் என்பதை, இயேசு, சென்றவாரம், தெளிவாகக்
கூறினார். கடினமான அச்சவாலை ஏற்றுக்கொண்ட பேதுருவுக்கு, அடுத்து ஒரு கேள்வி எழுகிறது.
என் சகோதரர், அல்லது சகோதரி எனக்கெதிராக
பாவம் செய்தால், அவர்களை, எத்தனை முறை நான் மன்னிக்கவேண்டும் என்ற
கேள்வியைத் தொடுக்கிறார்.
ஏழு
முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி.
ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை...
இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டல், பெருக்கல், கணக்குகளை ஆரம்பிக்கவேண்டாம்.
இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. கணக்கைக் கடந்த கருத்துக்களை உணர்த்தும் பாடம்.
யூதர்களுக்கு
ஏழு என்ற எண், நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை
ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக்
கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப்பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப்பற்றி தான் பேசிவிட்டதாக,
அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி, எப்போதும் மன்னிக்கவேண்டும்
என்ற எண்ணத்தைச் சொன்னார்.
இயேசு
சொன்னதை, நாம், வேறு சொற்களில், இவ்வாறு கற்பனைசெய்து பார்க்கலாம். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
‘எத்தனை முறை மன்னிக்க
வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க
வேண்டும்’ என்று கேட்பதுபோல் உள்ளது. சுவாசிப்பதற்கு
ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு
பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால், உள்ளம்
இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.
எத்தனை
முறை மன்னிப்பது என்ற கேள்விக்கு, அளவற்ற முறை மன்னிப்பு வழங்கவேண்டும் என்பது,
இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தரும் முதல் பாடம். அடுத்து, எத்தனை பெரிய
தவறை மன்னிப்பது? என்ற கேள்விக்குப் பதில் சொல்வதுபோல், அவர்,
ஓர் உவமையைக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இந்த உவமை,
எல்லைகள் ஏதுமின்றி, மன்னிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இந்த
உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான
மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு
பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க
மறுத்தது, இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை, அரசர், மீண்டும் தண்டித்தது, மூன்றாவது பகுதியாகவும்
அமைந்துள்ளன.
எத்தனை
பெரிய தவறாக இருப்பினும் மன்னிக்கவேண்டும் என்ற கருத்தைப் புரிந்துகொள்ள, இந்த
உவமையில் இயேசு பயன்படுத்தியுள்ள கடன் தொகைகள் உதவியாக உள்ளன. அரசரிடம் பணியாளர் பட்ட
கடனை, ஒரு மலையாக உருவகித்தால், மன்னிக்கப்பட்டப் பணியாளரிடம் உடன்பணியாளர்
பட்டக் கடன் ஒரு சிறு தூசி என்றுதான் சொல்லவேண்டும். அரசரிடம் பணியாளர் பட்ட கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும் உடன் பணியாளர் பட்டக் கடன் 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார்.
ஒருநாள் கூலி என்ற அளவுகோல் கொண்டு பார்த்தால், 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,000,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித்தொகை.
இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன்
100 நாள் கூலிக்கு இணையானது.
கடன்
தொகையைச் செலுத்த வழியில்லாத பணியாளர்,
ஒரு
வர்த்தகப் பொருளாக மாற்றப்படுகிறார். அவர் மட்டுமல்ல, அவரது மனைவி, மக்கள், அனைவருமே வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு, அவரது உடைமைகளுடன் சேர்த்து விற்கப்பட வேண்டும்
என்று அரசர் ஆணையிடுகிறார். அரசர் விடுத்த ஆணை, இன்றைய உலகின் அவலங்களை நம்
நினைவுக்குக் கொணர்கிறது. நாம் வாழும் காலத்தில், ஒரு வீட்டுத்தலைவர் பட்டக் கடனை அடைக்கமுடியாத
நிலையில், குடும்பம் முழுவதும் விற்கப்பட்டு, கொத்தடிமைகளாக வாழவேண்டிய துயரங்கள், நம் உள்ளத்தை கீறுகின்றன.
கடன்
தொல்லையால், வர்த்தகப் பொருளாக விற்கப்படுவது, தனி மனிதர்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமல்ல. நாடுகளும்,
கடன்தொல்லையில் சிக்கித்திணறுவதைக் காணலாம். 'மூன்றாம் உலகம்' என்ற முத்திரை குத்தப்பட்ட நாடுகள், தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய, வளர்ச்சியடைந்த, செல்வம் மிகுந்த நாடுகளிடமிருந்து கடன் பெறுகின்றன.
இவ்வாறு, கடன் கேட்டுக் கையேந்தும்
நாடுகள், பெரும்பாலும், ஐரோப்பியக் காலனிய ஆதிக்கத்தில் சிக்கித்தவித்த
ஆசிய, ஆப்ரிக்க நாடுகளே!
காலனிய
ஆதிக்கத்தில் இந்நாடுகள் தவித்த வேளையில், இந்நாடுகளின்
செல்வங்களை, 'ஏற்றுமதி' என்ற பெயரில், ஐரோப்பியர்கள், தங்கள் நாடுகளுக்குக் கடத்தி,
இந்நாடுகளை வறுமைப்படுத்தியதும் வரலாற்று உண்மை. இன்றைய உலகில், மூன்றாம் உலக
நாட்டு மக்களின் தொழிலை மிகக்குறைந்த ஊதியத்திற்கு உறுஞ்சி வாழ்வதும், செல்வம்
மிகுந்த நாடுகளே!
கோவிட்
19 கொள்ளைநோய்க்குப் பின் நாம் வாழப்போகும் உலகில், வறிய நாடுகள் பட்ட கடன்களை, செல்வம் மிகுந்த நாடுகள் மன்னிக்கவேண்டும்
என்று, ஐ.நா. நிறுவனத்தின்
தலைமைச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இன்னும் சில தலைவர்களும் அழைப்பு விடுத்து
வருவதை, இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம். இத்தலைவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தை,
செல்வம் மிகுந்த நாடுகள் ஏற்று, செயல்படுத்தவேண்டும் என்று,
இறைவனிடம் வேண்டுவோம்.
'பத்தாயிரம் தாலந்து', 'நூறு தெனாரியம்' என்ற இவ்விரு கடன் தொகைகளையும் ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, 'பத்தாயிரம் தாலந்து', கடலளவு நீர் என்றால், 'நூறு தெனாரியம்' கையளவு நீர்! கடலளவு கடனில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக்கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, வெளியில் கொணர்ந்து, அப்பணியாளரும்,
அவரது குடும்பத்தாரும் வாழும்வண்ணம், மன்னிப்பு என்ற உயிர் மூச்சை வழங்கினார். அந்தப்
பணியாளரோ, தனக்கு அரசர் வழங்கிய உயிர் மூச்சை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்தும் முயற்சியாக, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது,
அதிர்ச்சி அடைகிறோம்.
நாம்
ஒவ்வொருவரும் சிறுவயது முதல் பல்வேறு சூழல்களில் மன்னிப்பை பெற்று வளர்ந்துள்ளோம்.
மன்னிப்பினால் பக்குவம் அடையும் நம் உள்ளம், அடுத்தவரையும் மன்னிக்கப் பழகுகிறது. இதற்கு
மாறாக, நாம் பெற்றுள்ள மன்னிப்புக்களை
மறந்துவிட்டு, அல்லது, மறுத்து, ஒதுக்கிவிட்டு, பகைமையிலும், பழி உணர்விலும், நம் மனம் நிறையும்போது, அது, ஓர் அமிலத்தைப் போல, நம் மனதை
அரித்துவிடுகிறது.
இன்றைய
சிந்தனையின் துவக்கத்தில் நாம் எண்ணிப்பார்த்த நாங்கள் மன்னிப்பதுபோல் என்ற
ஆவணப்படத்தில் மன்னிப்பைப்பற்றி ஒருவர் சொல்லும் வார்த்தைகள், நம் வாழ்வுக்கு
மிகவும் அவசியமான ஒரு பாடத்தைச் சொல்லித்தருகின்றன: "ருவாண்டா மக்கள் தங்களது
வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்துவந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும்.
ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது, எப்படி, அந்தக் கிண்ணத்தை, கொஞ்சம்
கொஞ்சமாக அரித்து, இறுதியில், அந்தப் பாத்திரம்
முழுவதையும் அழித்துவிடுமோ, அதேபோல், இவர்கள்,
தங்கள் உள்ளத்திலிருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளியேற்றாமல் இருந்தால், அவை, இவர்களை
முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்றமுடியும்."
மன்னிப்பு
பெறுவதும், தருவதும் நாம், உள்ளிழுத்து, வெளிவிடும் மூச்சுக்காற்றைப் போல, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த செயல்பாடுகள்.
ஒன்று குறைந்தாலும், நோயுறுவோம். பத்தாயிரம்
தாலந்து கடனிலிருந்து மன்னிப்பு பெற்ற பணியாளர், தான் பெற்ற மன்னிப்பை, அடுத்தவருக்குத் தர
மறுத்தபோது, அவர் பெற்ற மன்னிப்பும், நோயுற்று, விலை மதிப்பற்று போனது. இதையே, இவ்வுவமையின் இறுதியில் இயேசு இவ்விதம் கூறுகிறார்:
மத்தேயு
நற்செய்தி 18: 35
உங்களுள்
ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும்
என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
இறைவன்
நம்மை மன்னிக்கமாட்டார் என்று சொல்வதைவிட, நாம்
மற்றவர்களை மன்னிக்க முடியாதபோது, அந்த உணர்வு, நம்மை நாமே மன்னிக்க முடியாதவாறு சிறைப்படுத்தும்
என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
மன்னிப்பு
நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில்
என் மனதில் ஆழமாய்ப் பதிந்தவை, Mark Twain அவர்கள் சொன்ன அற்புதமான
வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the
heel that has crushed it” அதாவது, “தன்னை மிதித்து, சின்னாபின்னமாக்கிய கால்களில், நீலமலர் தன்
நறுமணத்தைப் பதிக்கிறதே, அதுதான் மன்னிப்பு.”
நாம்
வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது:
"Forgive
others not because they deserve forgiveness; but because you deserve
peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு
வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு
தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."
மன்னிக்க
மறுப்பதைக் குறித்து சொல்லப்பட்டுள்ள மற்றொரு கூற்றும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது:
“Refusing to forgive someone is
like drinking poison, and waiting for the other person to die” அதாவது, "ஒருவரை மன்னிக்க மறுப்பது, நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதற்குச்
சமம்".
மன்னிக்க
மறுத்து, நாம் வளர்த்துக்கொள்ளும் பழிவாங்கும் எண்ணங்கள், நமக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைக்
கூறும் ஒரு கதை இது. பிரெஞ்சு எழுத்தாளர், பிரெஞ்சு புரட்சி முடிவுற்று 80 ஆண்டுகள் கழித்து, அந்தப் புரட்சிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளை
விவரிக்கும் வண்ணம், விக்டர் ஹியூகோ (Victor
Hugo) அவர்கள் எழுதிய நெடுங்கதை
தொண்ணூற்று மூன்று (Ninety Three). இந்த நெடுங்கதையில் இடம்பெறும் நிகழ்ச்சி
இது:
நடுக்கடலில்
சென்ற கப்பலொன்று புயலில் சிக்கியது. காற்றின் வேகத்தால் பல திசைகளிலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்ட
வேளையில், திடீரென கப்பலின் அடித்தளத்திலிருந்து
பெரும் ஓசை ஒன்று எழுந்தது. அடித்தளத்தில், சங்கியால் பிணைத்து வைக்கப்பப்பட்டிருந்த
பீரங்கி வண்டி, கட்டவிழ்த்து, கப்பலின் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தது
என்பதை, கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர்.
அவர்களில் இருவர், தங்கள் உயிரைப் பணயம்
வைத்து, கீழ்த்தளத்திற்குச் சென்று, பீரங்கி வண்டியை மீண்டும் சங்கிலியால் பிணைத்தனர்.
வெளியில்
வீசும் புயலைவிட, கப்பலுக்குள் கட்டவிழ்க்கப்பட்ட
பீரங்கி வண்டி, கப்பலுக்கு விளைவிக்கக்கூடிய அழிவு பெரும் ஆபத்தானது என்பதை பணியாளர்கள்
உணர்ந்ததால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த முயற்சியை மேற்கொண்டனர். அதைப்போலவே, நம் மனங்களில் கட்டுப்பாடின்றி அலைபாயும்
வெறுப்பு உணர்வுகள், வெளி உலகில் நாம் சந்திக்கும்
பிரச்சனைகளைவிட அதிக ஆபத்தானவை.
கோவிட்
19 கொள்ளைநோய் உட்பட, மனித குடும்பத்தை துன்புறுத்திவரும் பல நோய்களுக்குத் தேவையான
ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும்
ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம்.
மன்னிப்பு என்ற மருந்தால், இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும் என்று மன்றாடுவோம்.
No comments:
Post a Comment