Feast of St Thomas, the Apostle of India
Ever since
an unknown virus emerged in China ,
the predominant feelings that have ravaged the world are FEAR and DOUBT. For
the past two and half years, the mainstream media as well as the social media
are feeding us with numbers, theories and stories about this virus. The cloud
of fear and doubt hangs heavily over most of the world. At this moment, the
Church presents to us the Feast of St Thomas, a disciple who dealt with his
fear and doubt through his encounter with the Risen Saviour.
Any Tom,
Dick and Harry, the moment he/she begins to doubt, becomes only a Tom -
Doubting Tom! Unfortunately, Tom seems to hold a monopoly over one of the most
common human experiences called doubting. Kindly spare a thought for Tom, I
mean St Thomas ,
the Apostle. He was not the only one to doubt the Resurrection of Jesus. All
the disciples were struggling with doubt and fear. This is repeatedly mentioned
in the synoptic Gospels (Matthew 28:17; Mark 16:13-14; and Luke 24:37-39). Only
Thomas verbalised their collective doubt. “Unless I see…” was his demand! Jesus
acceded to this demand. And, my God, did Thomas ‘see’!
Some of us
may have already taken the judgement seat, trying to pass judgement on Thomas:
“What a pity! After having lived with Jesus so closely for three years, this
guy still doubted Jesus!” Well, after having listened to hundreds of treatises
on Resurrection, I still have my moments of hesitation. How can I judge Thomas,
who came from the Jewish background, where, the idea of Resurrection was not
that strong? Also, who am I to throw a stone at Thomas, when, my own cupboard
is filled with skeletons of doubts and uncertainties? If I were present in Jerusalem on the last few days of Jesus’ life, I would
have had more doubts than Thomas, especially after having seen those last few
hours on Calvary . So, I dare not take the
judgement seat. Let me see whether I can stand along with the ‘accused’ Thomas
and the other disciples and try to understand their doubts.
The
disciples left their trade, their parents, their everything... to follow Jesus.
In those three years, Jesus became everything to them. He was their world. This
world was brutally uprooted and nailed to the cross. The vacuum created by the
absence of Jesus, was filled by doubts and fears. Their doubts were very real.
One of them betrayed the Master and another denied ever knowing Him. They could
no longer believe one another, nor could they believe in themselves. The way
most of them ran away from the scene of the arrest of Jesus was still very raw.
Probably most of them did not even attend the funeral of Jesus, since they had
buried Him the moment He was captured (meaning, they gave no chance for Him
against the Romans and the religious leaders). Instead of burying their Master,
the disciples were buried in their own fears and worries. They decided to lock
themselves up and wait for the inevitable… the certainty of their own execution
by the Romans. They had built their tomb with bricks of despair in the upper
room. On the First Easter, when their Master was breaking open the grave, his
Disciples were building their graves with doubts and fears. This is the power
doubts have over our spirits, leading us to despair quickly.
When we are
in doubt, what do we do? We usually dig our own graves; we bury ourselves in
self-pity. Love and mercy are required to lift us out of this grave. Jesus
tried to clear the doubts of Thomas not only by words but also by a solid
physical proof. If only we could learn to talk when clouds of doubt gather over
our relationships! If only we could step out of our graves in a gesture of
self-gift, there would be lot more graves - open and empty!
Jesus did
not want his loved ones see decay. He wanted to open their graves and bring
them alive. Hence, He entered their ‘tomb’ – the upper room – and stood among
them. “Put your finger here, and see my hands; and put out your hand, and
place it in my side; do not be faithless, but believing… Have you believed
because you have seen me? Blessed are those who have not seen and yet believe.”
(John 20: 27,29) – This is the gentle invitation given by Jesus to his
disciple Thomas. This invitation is extended to all of us during the Holy Mass
on this Feast Day.
Although
this invitation rings out on this Feast as well as on the 2nd Sunday
of Easter – the Divine Mercy Sunday – every year, for the past three years, it
takes on a special significance. Since the arrival of the ‘virus’, most of the
churches were closed and we were confined to our homes ‘participating’ in the Holy
Mass via the media. Through that ‘remote’ experience, Jesus wanted us to touch
him more deeply through spiritual communion. He had also added his last
beatitude, as it were, before his departure. This was a beatitude addressed to
all of us: Blessed are those who have not seen and yet believe.” (John
20: 29) Blessed are all of us who have not had a direct sacramental
experience of Jesus during the past two and half years, and yet continue to
nourish our faith!
It is not
clear whether Thomas accepted the invitation of Jesus and really ‘touched’ Him,
although many paintings depict the scene as such. It does not matter, whether
Thomas ‘touched’ his Master physically. But, it is certain that he was
‘touched’ by the Master deep down in his heart. Hence, he made the most
profound declaration of faith: “My Lord and my God!” (John 20:28).
Thomas was the first human person to acknowledge Jesus as ‘God’! Obviously, he
had ‘seen’ more than he had bargained for. The mercy of Jesus worked this
miracle. This faith energized Thomas to take up the perilous journey to India
and sow the seeds of faith in our country.
As Jesus
had invited Thomas to touch his wounded body, God is inviting us to touch the
wounded humanity – wounded by COVID-19. May the Risen Christ who defeated death
and restored the faith of Thomas, help us defeat this virus and restore our
faith in the human family. May Christ help us lead a better life in the future,
respecting human beings as well as the planet earth!
Doubting Thomas
இந்தியாவின்
திருத்தூதரான புனித தோமா – திருநாள்
2019ம்
ஆண்டின் இறுதியில் சீனாவில், தோன்றிய கிருமியொன்று, கடந்த 30 மாதங்களாக, உலகின்
பல நாடுகளில், மக்களை, அவ்வப்போது, அவரவர் வீடுகளில் சிறைப்படுத்தியுள்ளது.
இந்தக் கிருமியைப்பற்றிய, உறுதியான, முழுமையான, அறிவியல் விவரங்கள் இல்லாத நிலையில், இக்கிருமியைக் குறித்த
பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன. இந்தக் கிருமியின் தாக்குதல்களைக் குறித்து, செய்திகள் என்ற பெயரில், ஊடகங்கள், ஒவ்வொருநாளும் வெளியிட்டு
வரும் தகவல்கள், நமக்குள்
அச்சத்தையும், சந்தேகத்தையும்
வளர்த்து வருகின்றன.
அச்சம், கலக்கம், சந்தேகம் ஆகிய உணர்வுகளுடன்
நாம் போராடிவரும் இச்சூழலில், இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா,
சந்தேகத்தின் பிடியில் சிக்கித்தவித்த நிகழ்வை, தாய் திருஅவை, நமக்கு நற்செய்தியாக
(யோவான் 20:24-29) வழங்கி,
நம்மை சிந்திக்க அழைக்கிறார். புனித தோமாவின் திருநாளாகிய இன்று, நாம் நற்செய்தியில்
காண்பது, சந்தேகம் கொண்டிருந்த
தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.
நம்
வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஒரு
தனி உணர்வு அல்ல, மாறாக, அதை ஒரு கூட்டு உணர்வு
என்று நாம் எண்ணிப்பார்க்கலாம். சந்தேகம், பல உணர்வுகளின் பிறப்பிடம். சந்தேகம் குடிகொள்ளும்
மனதில், கூடவே, பயம், கோபம், வருத்தம், விரக்தி என்ற பல உணர்வுகள்,
கூட்டுக்குடித்தனம் செய்யும்.
உண்மை
பேசும் எவரையும், "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரைப்
"பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேபோல், சந்தேகப்படும்
யாரையும்,
“சந்தேகத்
தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம், தோமா,
சந்தேகத்தின் மறுபிறவியாக, அடையாளமாக மாறிவிட்டார்.
தோமா,
இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், (என்னையும் சேர்த்துதான்
சொல்கிறேன்)
உடனே, ஒரு நீதியிருக்கை மீது
அமர்ந்துகொள்கிறோம். "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி
நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் எழுதிவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி
அமர்வதும், அடுத்தவர் மீது தீர்ப்பை எழுதுவதும் எளிது. ஒரு விரலை நீட்டி, தோமாவை,
குற்றவாளி என்று சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கித்
திரும்பியுள்ளதை எண்ணி, கொஞ்சம் நிதானிப்போம்.
இயேசுவின்
உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய், ஆயிரமாயிரம்
விளக்கங்களை வழங்கிவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்துள்ள நமக்கே,
அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பைப்பற்றி தெளிவற்ற எண்ணங்கள்
கொண்டிருந்த யூத சமுதாயத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில்
ஒருவர், இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக, அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு.
கல்வாரியில்,
இயேசு இறந்ததை, நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒருவேளை, தோமாவை விட இன்னும் அதிகமாய் மனமுடைந்து
போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும்
வந்திருப்போம். எனவே, தீர்ப்பு வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி
இருக்கைகளிலிருந்து முதலில் எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின்
நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச்
சிந்திப்போம்.
உயிர்த்த
இயேசுவைக் கண்டதும், ஏனையச் சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன (காண்க. மத்தேயு 28:17; மாற்கு 16:13-14; லூக்கா 24:37-39). இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த
சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி
என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில்,
பயத்தில் வாழ்ந்துவந்தனர் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சீடர்களின் பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது.
அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
தங்கள்
குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு, இயேசுவை நம்பி, மூன்றாண்டுகள்
வாழ்ந்தவர்கள், இச்சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் தங்களது உலகம் என்று,
நம்பிவந்தனர். அவர்கள், கண்ணும், கருத்துமாய் வளர்த்துவந்த நம்பிக்கை மரம், ஆணி வேரோடு
பிடுங்கப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது.
இயேசுவை அடித்தளமாய் வைத்து, அவர்கள் கட்டியிருந்த கனவுக் கோட்டைகளெல்லாம், தரை மட்டமாக்கப்பட்டன.
எருசலேமில், கல்வாரியில், அவர்கள்
கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசுவின்
கொடுமையான மரணம், அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். உரோமைய அரசும், மதத் தலைவர்களும் தங்களைத் தாக்கக்கூடும்
என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
இன்று,
நமது நிலை என்ன? இவ்வுலகையே முற்றிலும்
ஆள்வதாக எண்ணிக்கொண்டிருந்த நாம், இன்று, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியினால், எப்போது, எவ்வகையில் தாக்கப்படுவோம் என்பதை அறியாமல்,
அவ்வப்போது, அச்சத்திலும், சந்தேகத்திலும் சிறைப்பட்டு கிடக்கிறோமே!
தங்களில்
ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், தங்களில் ஒருவர் இயேசுவை மறுதலித்ததால், இயேசுவின்
சீடர்கள் நடுவே, அதுவரை, ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.
சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, அவரால் இனி நடக்கப்போவது ஒன்றுமில்லை
என்று, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள்.
நம்
வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும், சிந்தனையையும், இறுகப் பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில்
ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு
செய்துகாட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க, வாய் வார்த்தைகள் மட்டும்
போதாது. ஆங்கிலத்தில் சொல்வதுபோல்,
சில வேளைகளில், 'physical proof', அதாவது, உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம்.
உயிர்த்தபின் இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது.
வாய்
வார்த்தைகளாலும், தன் உடலையே நிரூபணமாக
அளித்ததாலும், தோமாவையும், ஏனையச் சீடர்களையும், அவர்கள் எழுப்பியிருந்த விரக்தி
என்ற கல்லறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தார், இயேசு. சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு, இயேசு விடுத்த
அழைப்பு: "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில்
இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்... நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே
நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவான் 20:27,29).
இயேசு
மலைமீது வழங்கிய பல பேறுகளை நாம் அறிவோம். ஒருவேளை, தன் பணிவாழ்வின்போது, இன்னும்
பல பேறுகளை ஆசிமொழிகளாக அவர் வழங்கியிருக்கக் கூடும். உயிர்த்தெழுந்தபின்,
இறுதியாக, அவர் வழங்கிய மற்றுமொரு பேறு, "காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர்" (யோவான் 20:29) என்ற அந்த இறுதி பேறு.
காயங்களும், தழும்புகளும் இயேசுவின் வாழ்வில் வகித்த
முக்கியமான இடத்தை, இயேசுவுக்கும், தோமாவுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு நமக்கு
உணர்த்துகிறது. சிலுவையில் அவர் பெற்ற ஆழமான காயங்களின் தழும்புகளை, அவர், தன் உயிர்த்த உடலிலும் பதித்திருந்தார்.
இயேசுவின் உயிர்ப்பு, அவரது வாழ்வு, பாடுகள், மற்றும் மரணம் ஆகியவற்றுடன் பிரிக்க இயலாதவண்ணம்
பிணைக்கப்பட்டுள்ளது என்பதை, அவர், தன் உயிர்த்த
உடலில், தொடர்ந்து தாங்கி நின்ற தழும்புகள் உணர்த்துகின்றன. கிறிஸ்துவின் உடலான திருஅவை,
வரலாற்றில் தொடர்ந்து காயங்கள் அடையும் என்பதையும், இயேசுவின் உடலில் இருந்த தழும்புகள் நமக்கு
உணர்த்துகின்றன.
தன்
காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில்
தெளிவில்லை. உடலால், தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு,
மிக ஆழமாகத் தொட்டார். எனவே மிக ஆழமானதொரு மறையுண்மையை தோமா கூறினார் - "நீரே
என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 20: 28). இயேசுவை, கடவுள் என்று
கூறிய முதல் மனிதப்பிறவி தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் உணர்ந்த அற்புத உண்மையை, உலகெங்கும், சிறப்பாக, இந்திய மண்ணிலும் பறைசாற்றினார், புனித
தோமா.
இறைவனின்
பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை
ஆற்றவல்லது. அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள்
தானாகவே அடங்கும்; சந்தேக சுவர்களால்
நாம் உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். மரணமும், கல்லறையும் நிரந்தர முடிவுகள் அல்ல என்பதைப்
பறைசாற்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெற்றியை, நாம் மீண்டும் ஒருமுறை, இத்திருநாளில், கொண்டாடி
மகிழ்கிறோம். கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள மரணங்களையும், கல்லறைகளையும் முடிவுக்குக் கொணரும் புதுமையை, உயிர்த்த ஆண்டவரிடமிருந்து எதிர்பார்த்து
காத்திருக்கிறோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில்
உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.
No comments:
Post a Comment