02 June, 2022

Taken over by the Spirit… ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு...

  
Tongues of fire on Our Lady and the Apostles

Pentecost Sunday

Once, a mother took her five-year-old son with her to a concert by Ignacy Jan Paderewski, the great Polish pianist. The mother and her son got their seats close to the stage. Then the mother met her old friend and got involved talking with her. She failed to notice that her son had slipped away to do some exploring. At the right time the lights dimmed and the spotlight came on. Only then did the mother see her five-year-old son on the stage, sitting on the piano bench, innocently picking out “Twinkle, Twinkle, Little star.” Before she could retrieve her son, Paderewski walked on to the stage. Walking over to the piano, he whispered to the boy, “Don’t stop, keep playing.” Then, leaning over the boy, Paderewski reached out his left hand and began to fill in the bass. Later, he reached around the other side of the boy and added a running obbligato. Together, the great maestro and the tiny five-year-old mesmerized the audience with their playing. (John Pichappilly in The Table of the Word; quoted by Fr. Botelho)

The nursery rhyme, played hesitantly by the tiny fingers of the five-year old and, later, accompanied by the piano master, turning it into a ‘concert material’, is an apt symbol for what the Holy Spirit did with the Apostles. We can well imagine the Apostles, gathered in the upper room with fear, to be the five-year-old child, capable of playing only the nursery rhyme. But, when the Holy Spirit descended on them, they began to play the concert called ‘the Gospel’ with creativity and courage. We celebrate this great concert that took place in Jerusalem as the Feast of the Pentecost.

Pentecost. Although this word has assumed very many shades of meaning, it simply means the fiftieth (day). In the last 50 days we have had quite a few celebrations starting from the Easter Sunday. We celebrated Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. There are a few more celebrations lined up… The Feasts of the Holy Trinity, and the Body and Blood of Christ. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

What if the first Easter had been given to an ‘events manager’? I leave it to your imagination! According to the ‘logic’ of events managers, the first Easter should have taken place in full splendour… with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event, in every sense of the word – very quiet and very, very imperceptible!
The first Ascension, once again, was a very subdued affair with Jesus spending quiet moments with the disciples on a hillock outside the city, before being taken up into heaven. The first Pentecost alone had some external manifestations like the ‘rush of wind’ and ‘tongues of fire’ (Acts 2: 1-4). The real core experience of the Pentecost, namely, the outpouring of the Holy Spirit on Mother Mary and the Disciples, was still a private encounter. The people of Jerusalem saw only the effect of this outpouring. So, from the commercial perspective, these events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world. Commercial celebrations are more about the ‘how’ of the celebration than the ‘why’ and the ‘what’ of it. For us Christians, every celebration needs to take us back to the ‘source’ – the ‘why’ and ‘what’ of these celebrations.

Jesus and his disciples defined ‘celebration’ in a totally different way. They were more interested in the ‘why’ and the ‘what’ of the event than the ‘how’ of it. Once the disciples realized the ‘what’ of the event, it left a lasting, life-long impression on them. It would do us a world of good to reflect on the ‘what’ of the Feast of the Pentecost.

This Feast is the fulfilment of what Christ promised his disciples – namely the Holy Spirit. Jesus said that the Holy Spirit would take over! The Spirit really took over the lives of the Apostles. They were not the same after the Pentecost. This Feast gives us an assurance that the Holy Spirit is here to stay in each of us. Although ‘in him we live and move and have our being’ (Acts 17: 28), we don’t recognise the invaluable treasure called the Holy Spirit within us. Here is a small anecdote that tells us how we, although surrounded and sustained by the Holy Spirit, still fail to recognise the great gift.

Many years ago, a great sailing ship was stranded off the coast of South America. Week after week, the ship lay there in the still waters with not a hint of a breeze. The captain was desperate; the crew was dying of thirst. And then, on the far horizon, a steamship appeared, heading directly toward them. As it drew near, the captain called out, "We need water!  Give us water!" The people from the steamship replied, "Lower your buckets where you are." The captain was furious at this cavalier response but called out again, "Please, give us water."  But he received the same reply - "Lower your buckets where you are!" And with that they sailed away! The captain was beside himself with anger at the suggestion of lowering the bucket to drink the sea water, and he left the deck in a rage. But a little later, when no one was looking, one of the sailors standing on the deck, lowered a bucket into the sea and then tasted the water. It was perfectly sweet, and fresh! For, the ship was just out of sight of the mouth of the great river Amazon flowing into the ocean. And for all those weeks they had been sitting right on top of all the fresh water they needed!

What we are really seeking is already inside us, waiting to be discovered, waiting to be embraced: the Holy Spirit of God who has been living within us from the moment of our Baptism. This is ‘what’ this Feast is all about – to recognise the treasure buried within us! Sometimes we underestimate the good things we have, chasing after the mirages of false treasures.

All we need to do is to look around and appreciate what we have: our home, our loved ones, friends on whom we can really count, the knowledge we have gained, our good heath… and all the beautiful things of life that are truly our most precious treasure… What we are really seeking is already inside us, waiting to be discovered, waiting to be embraced: the Holy Spirit of God who has been living within us from the moment of our Baptism. This is ‘what’ this Feast is all about – to recognise the treasure within us!

The Feast of the Pentecost is also the Birthday of the Church. Any child coming into the world raises lots of expectations in others. The expectations of the new-born Church were revealed in what happened on that day in Jerusalem. (Acts 2: 1-11)
What did the new-born child, the Church, do on her Birthday? She unified people coming from many countries and regions. This is typical of what happens in families. A new-born child tends to bring people together and this, in turn, creates the ambience of reconciliation in most families.

Let me stretch the metaphor of the new-born infant a bit more. We don’t need too much of a brain to understand the ‘language’ of a child. In fact, we understand the language of an infant more with our hearts than with our brains. Something similar happened with the new born Church. When She ‘spoke’ through the disciples everyone understood! The Acts of the Apostles in today’s first reading gives a list of those people who understood the disciples:
They were astounded, and in amazement they asked, "Are not all these people who are speaking Galileans? Then how does each of us hear them in his native language? We are Parthians, Medes, and Elamites, inhabitants of Mesopotamia, Judea and Cappadocia, Pontus and Asia, Phrygia and Pamphylia, Egypt and the districts of Libya near Cyrene, as well as travelers from Rome, both Jews and converts to Judaism, Cretans and Arabs, yet we hear them speaking in our own tongues of the mighty acts of God." (Acts 2: 7-11)

A bunch of Galileans spoke and people from many other nations and regions understood them. The last line of this passage gives us another clue as to how all these ‘different’ people understood what the Galileans spoke… The Galileans spoke about ‘the mighty acts of God’. The last line also stresses the ‘hearing’ part of the message more than the speaking part. ‘We hear them telling in our own tongues the mighty acts of God.’
To speak of and to hear about the mighty works of God, one does not require intelligent brains but an intuitive heart. The disciples spoke from their hearts which were on fire and those who heard them were on fire too since they listened with their hearts. For this heart-to-heart contact, language – a tool invented by human beings – cannot be a block.

We began our reflection with the episode of a nursery rhyme turning into a classic concert. That is a parable for what the Holy Spirit can achieve in us when we allow the Spirit to work. We conclude our reflection with another event that took place on the Olympic track. Here we see how the Holy Spirit comes to our help to complete our life’s race:
Derek Redmond, the well-known sprinter from the Great Britain, was running in the 400 meters semi-final of the 1992 Barcelona Olympics. Halfway round the track this British athlete collapsed with a torn hamstring. For some strange reason, he wanted to finish the race, and he began half running and half limping. Derek’s Dad – Jim Redmond – broke his way through security. He picked up Derek, and together they ran with the thunderous applause from the stadium. Derek’s Dad stopped a few meters from the end line and allowed the son to finish the race all by himself.

The video clipping of Derek and his Dad running the race together became very popular especially with the famous song “You Raise Me Up” written by Brendan Graham and set to music by Rolf Lovland. This song can easily be addressed to the role played by the Holy Spirit in our lives. Let us close our reflections with this lovely song:
When I am down, and, oh, my soul, so weary
When troubles come, and my heart burdened be
Then, I am still and wait here in the silence
Until you come and sit awhile with me

You raise me up, so I can stand on mountains
You raise me up to walk on stormy seas
I am strong when I am on your shoulders
You raise me up to more than I can be

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

பியானோ வாசிப்பதில் அற்புதத் திறமை கொண்ட Ignacy Jan Paderewski அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு, ஒரு தாய், தன் ஐந்து வயது மகனை அழைத்துச்சென்றார். மேடைக்கு அருகிலேயே தாய்க்கும், மகனுக்கும் இடம் கிடைத்தது. தன்னருகே அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் அந்தத் தாய் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுவன் அங்கிருந்து நழுவி, மேடைக்குப் பின்புறமாகச் சென்றான். சற்று நேரத்தில், அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போதுதான், அந்தத் தாய், தன் மகன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தார்.
அந்நேரம், திரை விலக, அங்கு, மேடையில், பியானோவுக்கு முன் தன் மகன் அமர்ந்திருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். அச்சிறுவனோ, தன் சிறு விரல்களைக் கொண்டு, "Twinkle, twinkle little star" என்ற மழலையர் பாடலை, பியானோவில் வாசிக்கத் துவங்கினான். அவனை, அங்கிருந்து கீழே அழைத்துவர தாய் எழுந்தபோது, பியானோ மேதை Paderewski அவர்கள் மேடையில் தோன்றினார். அவர், அச்சிறுவனிடம் சென்று, "நீ நிறுத்தாமல், தொடர்ந்து வாசி" என்று கூறினார். சிறுவன், தொடர்ந்து "Twinkle, twinkle" பாடலை வாசித்தபோது, Paderewski அவர்கள், சிறுவனுக்குப் பின்புறமாய் நின்றபடி, அச்சிறுவனுக்கு இருபுறமும் தன் கரங்களை நீட்டி, அச்சிறுவன் வாசித்த பாடலுக்கு இன்னும் அழகூட்டும் வண்ணம், பின்னணி இசையை இணைத்தார். அச்சிறுவனும், Paderewski அவர்களும் இணைந்து, அடுத்த சில நிமிடங்கள், அரங்கத்தில் இருந்தவர்களுக்கு "Twinkle, twinkle little star" பாடலை, அழகியதோர் இசை விருந்தாகப் படைத்தனர்.

5 வயது சிறுவன், தட்டுத் தடுமாறி, வாசித்த மழலையர் பாடலை, தொடர்ந்து வாசிக்கும்படி தூண்டியதோடு, அவனுடன் சேர்ந்து, அப்பாடலை, அழகியதோர் இசை விருந்தாக, பியானோ மேதை Paderewski அவர்கள் மாற்றினார். இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு, இந்நிகழ்வு, அழகியதோர் உவமையாக உதவுகின்றது. உலகைச் சந்திக்கப் பயந்து, தங்களையே ஒரு வீட்டில் அடைத்துக்கொண்ட சீடர்கள் நடுவே இறங்கிவந்த தூய ஆவியார், "தொடர்ந்து வாசியுங்கள்" என்று சீடர்களைத் தூண்டினார். அத்துடன், அவர்கள், அவ்வீட்டைவிட்டு துணிவுடன் வெளியேறவும், நற்செய்தியைப் பறைசாற்றவும் உதவினார். நற்செய்தியின் முதல் அரங்கேற்றம், எருசலேமில் நடைபெற்றது. அந்நிகழ்வை, நாம் 'பெந்தக்கோஸ்து' என்ற திருநாளாக, இன்று கொண்டாடுகிறோம்.

பெந்தக்கோஸ்து என்ற சொல்லுக்கு, ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில், தொடர்ந்து பல விழாக்களை நாம் கொண்டாடியுள்ளோம். உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று, நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும், மூவொரு இறைவன் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தம் திருவிழா, என்று விழாக்களும், கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

உலக விழாக்களில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே, விழாக்களின் முக்கியத்துவம் பறைசாற்றப்படும். பகட்டும், பிரம்மாண்டமும் இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் விளங்கும்.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ மறையின் அடித்தள உண்மைகள். இம்மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா கொண்டாடுவது எப்படி என்று, இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.
கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தருகின்றனர், இயேசுவும், அவரது சீடர்களும். பிறரது கவனத்தை ஈர்க்குமளவு கொண்டாட்டங்கள் அமையவேண்டும் என்பதற்குப் பதிலாக, நாம் கொண்டாடும் விழாவின் உள்பொருள் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள், ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும். உலகின் கவனத்தை ஈர்க்காமல், சீடர்களின் உள்ளங்களிலும், அவர்கள் வழியே, நம் உள்ளங்களிலும், நிறைவையும், மகிழ்வையும் கொணரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல; மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியார் என்ற செல்வத்தை சரிவர புரிந்துகொள்ளாமல், வேறு பல செல்வங்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நம் நிலையை உணர்த்த இரு சிறு கதைகள் உதவும்.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், அவர்களால் சமாளிக்க முடிந்தது. ஆயினும் அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்கு கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் ஆத்திரத்துடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர், தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், உலகின் மிகப்பெரும் நதிகளில் ஒன்றான அமேசான் நதி கடலில் கலக்கும் இடம். சுவையான குடிநீர் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நாம் தாகத்தால் தவிக்கமுடியும் என்பதற்கு, கப்பலில் பயணம் செய்தவர்கள் நல்ல எடுத்துக்காட்டு.

இதோ, மற்றொரு சிறு கதை... ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். அதே இடத்தில் உறங்குவார். பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்டுவந்த இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... வாழ்வுப் பயணத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல் தாகத்தில், தேவையில் துடிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.

நமக்குள் இருக்கும் நல்லவற்றை நமக்குத் தெளிவுபடுத்தும் அணையாத ஒளியாக, நமக்குள் நல்லவற்றை ஒவ்வொருநாளும் பிறப்பிக்கும் வற்றாத ஊற்றாக எப்போதும் உறைந்திருக்கும் இறைவன், தூய ஆவியார். இவரது பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இவர் நம்முள் உறையும் இறைவன் என்பதை முழுமையாக நம்பும் வரத்தை ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். குழந்தை ஒன்று நம் குடும்பத்தில் பிறந்ததும், அக்குழந்தை யாருடைய சாயலில் உள்ளது என்பதையும், குழந்தையின் தனிப்பட்ட குணங்களையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகும். திருஅவை என்ற குழந்தை பிறந்தவிதம், பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் ஆகியவை, இன்றைய உலகிற்குத் தேவையானப் பாடங்களை, நமக்குச் சொல்லித் தருகின்றன.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியாரின் வருகை என்ற பேருண்மை, தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போது, ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பது, திருஅவை என்ற குழந்தை நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

திருஅவை என்ற குழந்தை, பிறந்த நாளன்றே பேசத்துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில் பேசத்துவங்கியது என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். (திருத்தூதர் பணிகள் 2: 4) மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை என்ற பாடம் இங்கு உணர்த்தப்படுகிறது.

பேசியவர்கள் கலிலேயர்கள்; ஆனால், அவர்கள் சொன்னதை செவி மடுத்தவர்கள் -  பார்த்தர், மேதியர், எலாமியர் (தி.ப. 2:9-10) என்று பல குலத்தவர். இது எவ்விதம் சாத்தியமானது என்ற கேள்விக்கு, திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் இறுதி வரிகள் விடை பகர்கின்றன: "யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!" என்றனர். (தி.ப. 2:11) நாம் இணைந்து வரும் வேளையில், கடவுளின் மாபெரும் செயல்களைப் பேசினால், அங்கு மொழியே தேவையில்லை என்பதை, தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.

மனிதர்கள் உருவாக்கிவைத்துள்ள, மொழி, இனம் என்ற பிரிவுகளை இணைக்கும் வகையில், தூய ஆவியாரின் வருகை அன்று அமைந்தது. இன்றோ, அதே தூய ஆவியாரின் பெயரைச் சொல்லி, பல்வேறு செபக்குழுக்களாக, சபைகளாக,  பிரிவுகளை உருவாக்கும் போக்கு கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே இருப்பது, வேதனையான உண்மை.

மழலையரின் பாடலான 'Twinkle twinkle' பாடல், அழகியதோர் இசை விருந்தாக உருவான கதையை, தூய ஆவியார் நமக்கு வழங்கும் உந்துசக்திக்கு ஓர் உவமையாக, நம் சிந்தனைகளின் துவக்கத்தில் கூறினோம். வாழ்வில் நாம் சக்தியிழந்து தடுமாறும் வேளையில், தூய ஆவியாரின் துணை நமக்கு உண்டு என்பதை உணர்த்த, இச்சிந்தனைகளின் இறுதியில், மற்றுமொரு நிகழ்வை, ஓர் உவமையாகச் சிந்திப்போம்.

1992ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில், 400 மீட்டர் ஓட்டம் துவங்கியது. உலக அளவில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த பிரித்தானிய வீரர், டெரெக் ரெட்மண்ட் (Derek Redmond) அவர்கள், பதக்கம் வெல்லும் கனவுடன், தன் ஓட்டத்தைத் துவக்கினார். 150 மீட்டர் தூரம் ஓடியபோது, அவரது வலதுகால் தசைநாரில் உருவான பிரச்சனையால், அவர் தடக்களத்தில் விழுந்தார். ஒரு சில நொடிகளில், மீண்டும் எழுந்து, வலது காலை நொண்டியபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தார்.

அவ்வேளையில், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து, டெரெக்கின் தந்தை, ஜிம் ரெட்மண்ட் அவர்கள், பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி ஓடிவந்து, மகனைத் தாங்கியபடியே உடன் ஓடினார். "டெரெக், இதை நீ ஓடவேண்டும் என்று கட்டாயமில்லை" என்று தந்தை கூறினார். மகனோ, கண்களில் கண்ணீர் மல்க, "நான் இதை எப்படியாவது ஓடி முடிக்க விரும்புகிறேன்" என்று சொன்னதும், "சரி வா, நாம் சேர்ந்து ஓடுவோம்" என்று கூறி, மகனை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு ஓடினார். இறுதி ஒரு சில மீட்டர் தூரத்தை இளையவர் டெரெக் தனியே ஓடி முடிக்கும்படி தந்தை அனுப்பிவைத்தார்.

தந்தையும் மகனும் இணைந்து ஓடிய அக்காட்சி, உலக ஊடகங்களின் கவனத்தை பல நாள்கள் தொடர்ந்து கவர்ந்தது. 20 ஆண்டுகள் சென்று, 2012ம் ஆண்டு, இலண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கியபோது, அந்த ஒலிம்பிக் விளக்கை ஏந்தி ஓடியவர்களில், டெரெக்கின் தந்தை ஜிம் ரெட்மண்ட் அவர்களும் ஒருவர்.
வாழ்வெனும் ஓட்டத்தில், பிரச்சனைகளால் நாம் வீழும்போது, நம்மைத் தூக்கி நிறுத்தி, நமக்குத் தோள்கொடுத்து, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் தூய ஆவியார் உதவுகிறார் என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், குறிப்பாக, பிரச்சனைகளால் நாம் வீழும் வேளைகளில் உணரும் அருளை, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, தூய ஆவியாரிடம் இறைஞ்சுவோம்.


No comments:

Post a Comment