16 June, 2022

Sacrament of healing and strength நலமளிக்கும் நல் மருந்து

 
Fighting the coronavirus with Christ’s benediction

Feast of the Body and Blood of Christ

The Feast of the Most Holy Body and Blood of Our Lord Christ gives us an opportunity to reflect on the profound significance of the treasures bequeathed to us by Jesus – the Eucharistic celebration, and His ever-abiding presence in the Blessed Sacrament. The various liturgical and devotional practices developed by the Church around this sublime mystery – namely, the Holy Mass, Adoration of the Blessed Sacrament and the Corpus Christi procession – have been an enormous source of courage and strength to the people of God, especially during difficult times. 
The Holy Mass celebrated by the early Christians huddled together underground in the catacombs had sustained them against the persecution. Down the centuries, when Christians faced persecutions by various kings and governments, the Holy Mass has been a source of strength and courage.

Right now, we hear of the Church in Ukraine celebrating the Holy Mass in bunkers. In February 2022, soon after Russia began the bombardment of Ukraine, the head of the Greek Catholic Church in Ukraine, Major Archbishop Shevchuk sent a video message in which he said: “The residents of Kyiv (capital city of Ukraine) will not be able to go to church because of the government-mandated curfew that orders everyone to stay at home because of the threat to their lives. In this case, the Church will come to the people. Our priests, will descend to the underground, they will descend to the bomb shelters, and there they will celebrate the Divine Liturgy. The Church is with its people!”

Down the centuries, the adoration of the Blessed Sacrament and the Corpus Christi procession have been a source of strength especially in times of troubles. In our recent memory, we can surely recall to mind the special ‘Urbi et Orbi’ prayer service conducted by Pope Francis on March 27, 2020, in front of a vacant St Peter’s Square. We can vividly remember the Pope holding up the monstrance with the Sacred Host, blessing the world suffering from the pandemic. All the over the world, when the lockdown had denied people access to the church, hundreds of priests had taken the Blessed Sacrament to the residential areas with special blessings for total healing, strength and courage.  

The Blessed Sacrament has been taken in procession not only during this Feast but more often in the midst of challenging situations like a war, a riot, an epidemic or a pandemic. Hence, we are invited to reflect on the main theme of this Feast, namely: Whenever and wherever humanity is wounded and broken, our wounded God, Jesus Christ, is present then and there and breaks himself for the human family.

When we reflect on the broken, wounded God present among the wounded humanity, we are reminded of a special Mass, under very painful circumstances, celebrated by Fr Pedro Arrupe, the 28th General of the Society of Jesus and now a Servant of God. While Fr Arrupe was the Novice Master in Hiroshima, Japan, the first atom bomb was dropped on August 6, 1945, destroying most of the city. The Jesuit novitiate, built in a suburb of Hiroshima, was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain.
In the midst of this broken humanity, the novice master, Fr Pedro Arrupe celebrated Mass the very next day of the disaster. He said: “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!”

Since Fr Pedro Arrupe had studied medicine, he went around helping not only the patients admitted in the Novitiate, but also in the surrounding area. On one such visits, he went to the house of a young lady, Nakamura San. She had suffered deep burns from the atomic explosion. When Fr Arrupe knelt down to dress up her wounds, the young lady asked him, “Father, have you brought the Holy Communion for me?” With tears in his eyes, Fr Arrupe reached into his bag and from the pyx, gave Nakamura the Communion. Ten minutes after receiving the Body of Christ, Nakamura San breathed her last.

Fr Pedro Arrupe, celebrating the Holy Mass amidst the wounded and dying people, and the young lady Nakamura San, departing from this cruel world with the satisfaction of having received the Holy Body of Christ, are powerful instances that give us a glimpse of the great gifts given by Jesus – the Most Holy Body and Blood.

The Readings for today’s Feast (Genesis 14:18-20; 1 Corinthians 11:23-26; and Luke 9:11b-17) are a treasure for our reflection and meditation. We shall turn our attention to the second reading from the First Letter of St Paul to the Corinthians – 11:23-26, which talks of the Last Supper. Celebrating the memory of the Last Supper was a great source of strength to the early Christians, who were constantly hunted. Although Paul was not present at the scene of the Last Supper, he claims that he is handing over to the people what he ‘received from the Lord’.

It is interesting to note that this same passage is also read on Maundy Thursday. The words that Paul uses to describe the night of the Last Supper, draw our attention. The night of the Maundy Thursday could have been described as ‘the night of the institution of the Eucharist’, ‘the night of the Holy Orders’ or ‘the night when Jesus taught humility, by washing the feet of the Apostles’. When such lofty ideas are available, Paul uses a sad phrase to describe this night -  “on the night when Jesus was betrayed”. (1 Cor. 11:23)
Was Paul so narrow minded as to identify this night as the night of betrayal? I don’t think so. The four evangelists also give importance to the fact of betrayal as an essential element of the Last Supper. The event of the washing of the feet is recorded only in the Gospel of John and not in the three Synoptic Gospels. The institutional words of the Eucharist uttered by Jesus, are recorded in the three Synoptic Gospels, and not in the Gospel of John. But, all the four Gospels talk about Jesus telling the Apostles that one of them would betray Him.
More than anything else, the notion of betrayal was uppermost in the scene of the Last Supper.  This notion was passed on to the first Christian community. Some scripture scholars are of the opinion that this passage from the Letter of St Paul to the Corinthians was, probably, the very first written document of the Last Supper. So, right from the moment the Last Supper was celebrated, the idea that this was a ‘night of betrayal’ was passed on from generation to generation.

We are aware of many instances of betrayal in human history or in literature. The back-stabbing Brutus in the murder of Caesar, the betrayal of Kattabomman (Tamil king) to the British authorities, by his cousin Ettappan, the killing of Mrs Indira Gandhi, the former Prime Minister of India, by her own bodyguards… are a few examples of betrayal and back-stabbing!
While most of these betrayals resulted in more bitterness and revenge, Jesus responded to his betrayal with love and self-gift! The Lord Jesus on the night when he was betrayed took bread, and when he had given thanks, he broke it, and said, “This is my body which is for you. Do this in remembrance of me.” (1 Cor. 11:23-24) We repeat these words at the consecration during our daily Mass. For Jesus, it was very clear that betrayal is to be met with blessing! Responding to betrayal and hatred with love and self-gift is the core of the Feast of the Most Holy Body and Blood of Christ.

His name shall be called Emmanu-el - which means, God with us. (Mt. 1:23) was the way an angel introduced Jesus to Joseph. Jesus made sure that this ‘Emmanuel’ definition was realized not only during his earthly life, but also after his ascension, by gifting His Most Holy Body and Blood. This self-gift and continuous presence of Christ have inspired countless courageous saints to offer themselves as a holocaust. We shall conclude our reflection with thoughts on one such courageous person - St Isaac Jogues.
St. Isaac Jogues was a Jesuit priest, missionary and martyr who worked among the native populations in North America. During his missionary work in North America, he had a chance to escape from the cruel clutches of the native people and return to France. While there, he wanted to celebrate Mass. Under Church law of the time, the Blessed Sacrament could not be touched with any other finger except the thumb and the forefinger. Jogues was unable to follow this law after the loss of both these fingers due to the tortures he endured in Iroquois captivity. In order to celebrate Mass, he required a special dispensation from the Pope. He was granted a dispensation to say Mass by Pope Urban VIII. Pope Urban's judgement that "it would be shameful for a martyr of Christ not to drink the blood of Christ" renewed the zeal of Isaac to work among the Indians. On a peace mission to the Iroquois in 1646, Isaac was again captured by a renegade Mohawk war party, this time with his assistant Jean de la Lande. On 18 October 1646, the Mohawks killed Jogues with a tomahawk; they killed La Lande the next day.
The story holds a curious double martyrdom of Jogues. Aboriginal allies of the French captured Jogues' killer in 1647 and condemned him to death. While awaiting his execution, this man requested for Baptism and he chose the Christian name as Isaac in memory of Fr Isaac Jogues.

May the Feast of the Most Holy Body and Blood of Christ help us personalise the deep experiences of great persons like St Isaac Jogues, Nakamura San, and Fr Pedro Arrupe. Let us celebrate the Loving, Abiding Presence of Christ in our lives!

Before we close our reflection on the Feast of God’s abiding presence with us, let us turn our attention to June 19, this Sunday, and June 20, Monday. Every year on June 20 we observe World Refugee Day. This Sunday, which happens to be the third Sunday of June, we celebrate Father’s Day. The second Sunday of May and the third Sunday of June are celebrated as Mother’s Day and Father’s Day.
World Refugee Day, Mother’s Day and Father’s Day seem to have something in common, in as much as elderly Mothers and Fathers are made to live like refugees, cut off from their roots – either within the four walls of their own houses or in the home for the aged!

Isn’t it an irony that Mothers and Fathers are remembered just on two days in a year when they should be celebrated all through the year? Similarly, when millions of our brothers and sisters are tossed about in the stormy sea of violence as refugees day after day, what is the purpose of remembering them on just one day? Questions that pierce our hearts!

May we celebrate the loving presence of the Eucharistic Lord, by making our presence and the presence of our near and dear ones, especially our aged parents, more meaningful in our families. 

 
Corpus Christi Procession

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா

தன் தூய்மைமிகு உடலும், இரத்தமும் என்ற மறையுண்மையின் வழியே கிறிஸ்து நமக்கு இரு பெரும் ஒப்பற்ற செல்வங்களை வழங்கியுள்ளார். திருப்பலி கொண்டாட்டம், மற்றும் திரு நற்கருணையில் இருக்கும் அவரது தொடர் பிரசன்னம் ஆகிய இவ்விரு ஒப்பற்ற செல்வங்களை சிந்திப்பதற்கு இன்றைய திருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த மறையுண்மையை மையப்படுத்தி கத்தோலிக்கத் திருஅவை துவக்கத்திலிருந்து கொண்டாடிவரும் திருவழிபாடுகள், மற்றும் பக்தி முயற்சிகள் வழியே, இறை மக்கள், மிகக் கடினமானச் சூழல்களில் சக்தியும், துணிவும் பெற்று வருகின்றனர்.
திருஅவையின் ஆரம்ப காலத்தில், உரோமைய அரசின் கொடுமைகளுக்கு அஞ்சி, நிலத்தடி அறைகளில் கூடிவந்த கிறிஸ்தவர்கள், அங்கு கொண்டாடிய இயேசுவின் இறுதி இரவுணவு நிகழ்வினால் வன்முறைகளைச் சந்திக்கும் உறுதியையும், துணிவையும் பெற்றனர். தொடர்ந்து வந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும், பல்வேறு மன்னர்களும், அரசுகளும் கிறிஸ்தவர்களை வேட்டையாடிய வேளையில், அவர்கள் கொண்டாடிய திருப்பலிகளும், திருநற்கருணை ஆராதனைகளும், பவனிகளும் அவர்களுக்கு சக்தியும், துணிவும் தந்தன.

நாம் வாழும் இன்றையச் சூழலில், உக்ரைன் நாட்டில் நிலத்தடி அறைகளில் திருப்பலிகளும், திருநற்கருணை ஆராதனைகளும் நிகழ்ந்து வருவதை அறிவோம். இவ்வாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் நாட்டின் மீது இரஷ்ய படையின் தாக்குதல்கள் துவங்கிய வேளையில், கிரேக்க கத்தோலிக்கப் பேராயர் Shevchuk அவர்கள் அனுப்பியிருந்த ஒரு காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியிருந்தார்: "உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மக்கள் பாதுகாப்பு கருதி, பூமிக்கடியில் தங்கியுள்ளனர். அவர்கள் கோவில்களுக்குச் செல்வது ஆபத்து என்பதால், அருள்பணியாளர்கள், நிலத்தடி அரங்குகளுக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகின்றனர். இவ்வாறு மக்கள் இருக்குமிடத்திற்கு கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் கொண்டு செல்கிறோம்".

பல்வேறு நூற்றாண்டுகளில், மக்கள் கடினமானச் சூழல்களை எதிர்கொண்ட வேளைகளில், திருப்பலி, திருநற்கருணை வழிபாடு, மற்றும் திருநற்கருணை பவனிகள் வழியே தங்களுக்குத் தேவையான உடல் நலனையும், மன உறுதியையும் பெற்றுள்ளனர் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று உலகின் பல நாடுகளை வதைத்துவந்த வேளையில், 2020ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி, வத்திக்கானில், மக்கள் நடமாட்டம் ஏதுமற்ற புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஊர்பி எத் ஓர்பி' என்ற சிறப்பு வழிபாட்டை நிகழ்த்தினார். அவ்வழிபாட்டின் இறுதியில், திருநற்கருணை அடங்கிய கதிர் பேழையைக் கொண்டு இவ்வுலகிற்கு அவர் வழங்கிய ஆசீர் இன்னும் நம் நினைவுகளில் பதிந்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக நம்மை வதைத்து வரும் இந்த பெருந்தொற்று காலத்தில், உலகின் அனைத்து நாடுகளிலும், சிறப்பு திருநற்கருணை ஆராதனைகளும், திருநற்கருணை பவனிகளும் நடைபெற்றவண்ணம் உள்ளன. கோவிட் பெருந்தொற்றினால் மக்கள் முடங்கிக் கிடந்த இல்லங்களுக்கும், குறிப்பாக, பெருந்தொற்றினால் நோயுற்று மக்கள் தங்கியிருந்த மருத்துவமனைகளுக்கும் அருள் பணியாளர்களும், துறவியரும் திருநற்கருணை வழியே கிறிஸ்துவின் பிரசன்னத்தை கொண்டுசென்றதை நாம் அறிவோம்.

எங்கெல்லாம், எப்போதெல்லாம் மனிதர்கள் காயப்பட்டு உடைந்து கிடந்தனரோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் காயப்பட்ட இறைமகன், தன்னையே உடைத்து வழங்க விரைந்துள்ளார். அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று இதோ...
இயேசு சபையின் முன்னாள் உலகத்தலைவரான இறையடியார் பேத்ரோ அருப்பே அவர்கள் இயேசு சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் நவதுறவிகளின் பொறுப்பாளராக பணிபுரிந்தார். 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட அந்தக் கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அவ்வில்லமும், அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது.
அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அக்கோவிலில், திருப்பலி நிறைவேற்றிய அருள்பணி அருப்பே அவர்கள், தான் அடைந்த வேதனையை இவ்விதம் கூறியுள்ளார்: "நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கரங்களை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, என்னை உறைந்துபோகச் செய்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த மனிதர்களை, அவர்களை அந்நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் வெறி நிறைந்த சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கரங்கள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று, அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

அருள்பணி அருப்பே அவர்கள், மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று, தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை, அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாக்கமுறா சான் (Nakamura San) என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில், அப்பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட அருள்பணி அருப்பே அவர்கள், தன் கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர் அருகில் முழந்தாள்படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அப்பெண், அருள்பணி அருப்பேயிடம், "சாமி, எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். ஆம் என்று தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அப்பெண்ணுக்குத் தந்தார், அருப்பே. மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட நாக்கமுறா சான் அவர்கள், சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

காயப்பட்டுக் கிடந்த மக்கள் நடுவே, திருப்பலியாற்றிய இறையடியார் அருப்பே, மரணத்தின் வாயிலில் நின்றபடி, இயேசுவின் திருஉடலைப் பெற்ற நிறைவோடு, இவ்வுலகிலிருந்து விடைபெற்ற இளம்பெண் நாக்கமுறா சான் ஆகிய இவ்விருவரும், திருப்பலி, திருநற்கருணை என்ற ஒப்பற்ற கொடைகளின் ஆழத்தை, நாம் ஓரளவாகிலும் புரிந்துகொள்ள உதவுகின்றனர். காயப்பட்ட மனுக்குலம், காயப்பட்டக் கடவுளைக் கொண்டாடும் ஒரு திருவிழா, இன்று நாம் சிறப்பிக்கும் கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும், இரத்தமும் பெருவிழா.

இவ்விழாவுக்கென நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் அனைத்தும் பொருள் செறிந்தவை. அவற்றில், புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (1கொரி. 11:23-26), நம்முடைய கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. கடுமையான துன்பங்களை அனுபவித்து வந்த முதல் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நம்பிக்கை வழங்கியது, இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் கொண்டாட்டம். அந்த இறுதி இரவுணவைப் பற்றி, எழுத்துவடிவில் தோன்றிய முதல் பதிவு இது என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

இறுதி இரவுணவில் பங்கேற்காத புனித பவுல், பின்னர், இந்த முக்கிய நிகழ்வைக் குறித்து தான் ஆண்டவரிடமிருந்து நேரில் பெற்றுக்கொண்டதை, சொற்களாக இங்கு பதிவு செய்துள்ளார். இதே வாசகம், புனித வியாழன் திருவழிபாட்டிலும் வாசிக்கப்படுகிறது. அந்த இறுதி இரவை குறிப்பிட்டுக் காட்ட புனித பவுல் பயன்படுத்தியுள்ள சொற்கள், இன்றைய விழாவைக் குறித்த ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித் தருகின்றன.
அந்த இறுதி இரவை, புனித வியாழன் இரவை, பல்வேறு உன்னத எண்ணங்களால் நம்மால் விவரிக்கமுடியும். இயேசு, சீடர்களின் காலடிகளைக் கழுவி, பணிவைச் சொல்லித்தந்த இரவு, நற்கருணையை நிறுவிய இரவு, சீடர்களை அருள்பணியாளராக அருள்பொழிவு செய்த இரவு என்று, பல்வேறு மேன்மையான வழிகளில் அந்த இரவை குறிப்பிட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் குறிப்பிடாமல், புனித பவுல், அந்த இரவைக் குறிப்பிட, "ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்" (1 கொரி. 11:23). என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். அதுவும், இந்த உண்மையை தான் ஆண்டவரிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். காட்டிக்கொடுக்கப்படும் நிகழ்வுக்கு புனித பவுல் தரும் முக்கியத்துவம், நமக்குள் சங்கடங்களை உருவாக்குகிறது. ஆனால், புனித பவுல் மட்டும் அல்ல, இதே முக்கியத்துவம், நான்கு நற்செய்திகளிலும் தரப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம்.

இந்த இறுதி இரவுணவைப்பற்றி, நான்கு நற்செய்தியாளர்களின் பதிவுகளை நாம் வாசிக்கும்போது, இயேசு, சீடர்களின் காலடிகளைக் கழுவும் நிகழ்வு, யோவான் நற்செய்தியில் மட்டும் இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம். இயேசு, அப்பத்தையும் இரசத்தையும் பகிரும் நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் உள்ளன; யோவான் நற்செய்தியில் கூறப்படவில்லை. ஆனால், தான் காட்டிக்கொடுக்கப்படுவதை இயேசு கூறும் நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த இரவு, மற்ற அனைத்தையும்விட, 'காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக' சீடர்களாலும், முதல் கிறிஸ்தவர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது என்பதை நாம் உணரலாம்.

இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நாமும், திருப்பலியில், அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் அந்தப் புனித நிகழ்வின்போது, "அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்" என்று கூறுகிறோம். அந்த இரவில் நிகழ்ந்த அத்தனை கொடுமைகளிலும், 'காட்டிக்கொடுத்தல்' மிகக் கொடுமையானதாக, வேதனை நிறைந்ததாக இருந்திருக்கவேண்டும். எனவேதான், முதல் கிறிஸ்தவக் குழுக்களின் காலம் துவங்கி, இன்று வரை, அந்த இரவை, "காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக" நினைவுகூர்ந்து வருகிறோம்.

வரலாற்றிலும், காவியங்களிலும் காட்டிக்கொடுத்த பல நிகழ்வுகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ப்ரூட்டஸ், சீசரைக் கொலை செய்தது, கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக்கொடுத்தது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை, அவரது இரு மெய்க்காப்பாளர்கள் சுட்டுக்கொன்றது... என்று, பல நிகழ்வுகள் உண்டு. இவை அனைத்திலும், நெருங்கிய ஒருவரால் காட்டிக்கொடுக்கப்படுவது, வெறுப்பையும், வேதனையையும் வளர்த்துள்ளது. இங்கோ, இயேசு, தான் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவை, அன்பால், புனிதத்தால் நிறைத்தார். அந்த இரவில், அவர், தன் உடலையும், இரத்தத்தையும் பகிர்ந்தளித்தார். நெருங்கிய நண்பர் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்படும் வேதனையிலும், தன்னையே முழுவதுமாக வழங்குவது ஒன்றே, மீட்பைக் கொணரும் என்பதை, கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும், இரத்தமும் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.
நம்முடன் இறைமகன் என்றும் வாழ்கிறார் என்ற ஓர் உணர்வால் உந்தப்பட்டு, எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை, அவருக்காக, அவரைப்போல், தன் பகைவருக்கும் அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தைப் பற்றிய எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அந்த மக்களால் அடைந்த சித்ரவதைகள் காரணமாக, அவர் தன் கை விரல்கள் சிலவற்றை இழந்திருந்தார். இந்நிலையில், அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு, திருப்பலி நிகழ்த்த விரும்பினார். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட திருஅவை விதிமுறையின்படி, அருள்பணியாளர், தன் கட்டைவிரல், மற்றும், ஆள்காட்டி விரல்களால் மட்டுமே அப்பத்தைத் தொடவேண்டும். அருள்பணி ஐசக் அவர்களுக்கு அவ்விரு விரல்களும் இல்லாததால், அவர் வேறு விரல்களைக் கொண்டு அப்பத்தைத் தொடுவதற்கு, திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பான் அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். முக்கியமான விரல்கள் இல்லாத நிலையிலும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் விரல்களற்ற தன் கரங்களில் புனித ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு, இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலும், இரத்தமும் பெருவிழா நமக்கு உதவுவதாக.

இறுதியாக, இரு எண்ணங்கள், வேண்டுதல்கள்... ஜூன் 19, இஞ்ஞாயிறன்று, தந்தை தினத்தைக் கொண்டாடுகிறோம். மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம். மேலும், ஜூன் 20, இத்திங்களன்று, புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைபிடிக்கிறோம்.
புலம் பெயர்ந்தோர் நாளையும், அன்னைதினம், அல்லது, தந்தை தினம் இவற்றையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நமது அன்னையரும் தந்தையரும் நம் குடும்பங்களிலேயே புலம்பெயர்ந்தோராய் மாறிவரும் துயரத்தையும் சிந்திக்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் தங்கள் நாட்டைவிட்டு, அல்லது, உள்நாட்டுக்குள்ளேயே ஆதரவு ஏதுமின்றி அலைகழிக்கப்படுகின்றனர். அன்னையரும், தந்தையரும் வீட்டுக்குள்ளேயே உறவுகள் அறுக்கப்பட்டு, அல்லது, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு, புலம்பெயர்ந்தோராய் வாழ்கின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம் என்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் இரு நாள்களோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம், தந்தை தினம் இரண்டும், மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன வியாபாரத் திருநாள்களாக மாறிவிட்டன. வயது முதிர்ந்த காலத்தில், தாயையும், தந்தையையும் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்துவிடுகின்றனவா?
ஆண்டின் இரு நாள்களில் மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்காக, அதிலும் குறிப்பாக, தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகளுக்காக இன்று இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.
 

No comments:

Post a Comment