The war, raging endlessly in Syria from 2011, is the tip of the iceberg called ‘violence’ embedded in our hearts and the world at large. The war in Syria is only a sample of the myriad forms of violence we face everyday in the world.
Violence almost always borders on madness. But there have also been many instances where one can see a method to this madness. Of late, especially when we are reeling under the onslaught of terrorist attacks, we can see this method to madness carried out in full details. We hear of the masterminds who plan these attacks. Most of these masterminds are intelligent and well-qualified persons, we hear. When these masterminds put their minds to maximum use, simultaneously, they must be putting their conscience to sleep.
There are three reasons why we are dwelling on thoughts of violence today. The first reason – Every year, October 2 is observed as the International Day of Non-violence. As many of us know, October 2 is celebrated as Gandhi Jayanthi (the Birthday of Gandhi) in India. We can presume that when Gandhi was born on October 2, 1869, non-violence was also born with him as his twin. In the year 2007, this day was declared by the U.N. as the International Day of Non-violence as a mark of respect to Gandhi, the great apostle of non-violence. We hear that the Indian government too enormous efforts to establish this International Day in the U.N. Unfortunately, non-violence seems like a distant memory in India. (The 19-year-old woman who was assaulted and gang-raped in Hathras, Uttar Pradesh, India, is too painful to speak about. Let us pause for a moment and pray for the victim and her family.) October 2 is the first reason to talk of violence, or, non-violence today.
The second reason is the Feast of St Francis of Assisi celebrated on October 4. For St Francis, all human beings as well as all the creatures of the world were his kith and kin. We know that in 1219, St Francis took a lot of risk in meeting with the sultan, Malek al-Kamil, when the Fifth Crusade was in full swing. The famous prayer of St Francis ‘Make me a channel of your peace’ is his testimony of how to win over violence with love. October 4, is the second reason to talk of violence, or, non-violence today.
The third reason to reflect on violence comes from today’s liturgical readings. In the gospel reading of Matthew 21: 33-43 we come across one of the parables of Jesus where he portrays the planned violence on the part of the tenants in a vineyard.
Reading this parable gives us a creepy feeling as if we were reading our daily newspaper. We come across such events of planned violence almost on a daily basis. The tenants wanted to become owners. Such a reversal could be achieved only through violence, they thought. We could so easily point out fingers at those – especially our political mafia – who claim unjust ownership where there is none.
Every time
we point one finger at others, we are keenly aware that there are three more
fingers pointing at us. We are tenants, pilgrims here on earth. But, so often
we fancy that we own this world. The present generation stands accused in front
of God for claiming ownership of this globe and treating this globe violently.
When God, the prime designer of the whole universe has taken so much effort to fashion
this world, we seem to thwart God’s plans to our own ends. This ‘violence’ is
expressed in the first reading from Prophet Isaiah:
The Prophet
then goes on to talk about how the disappointed owner would destroy this
vineyard. Here are those ominous lines:
Isaiah 5:3-6
The last few lines remind us about what is happening around us these days. Wasteland, no crops, no rains… I am not sure whether we have woken up to these realities still.
On October 4, this Sunday, on the Feast of St Francis of Assisi, we complete our month-long prayer efforts called ‘the Season of Creation’. We pray that, through the intercession of St Francis, all of us learn our role as stewards and not owners of the created world.
Since our
reflection seems like an overload of violence and destruction, we shall end
this reflection on a good note that we receive from the second reading of
today’s liturgy.
பொதுக்காலம் 27ம் ஞாயிறு
2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து, கிருமி, தோற்று, கொள்ளைநோய், மரணம் என்ற சொற்களையே, நாம் செய்திகளாகக் கேட்டுவருகிறோம். மனதை வதைக்கும் இச்செய்திகளின் நடுவே, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளியான ஒரு செய்தி, நம் உள்ளத்தை கூடுதலாகக் காயப்படுத்தியது. சிரியாவில் வாழ்ந்து, தற்போது வெளியேறியிருக்கும் ஓர் இளம் தந்தை, தன் மூன்று வயது மகளுக்கு, குண்டுகள் விழும் நேரங்களில் சிரிக்கக் கற்றுத்தந்ததை, ஒரு காணொளியாகப் பதிவுசெய்து, சமுதாய ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இது, நாளிதழ்களில் வெளியான வேளையில், "குண்டுகள் விழும் சப்தம்கேட்டு சிரிப்பதற்கு, தன் மகளுக்கு சொல்லித்தரும் சிரியா தந்தை" என்ற தலைப்பு வழங்கப்பட்டது. இச்செய்தி, நம் ஞாயிறு சிந்தனைகளைத் துவக்கி வைக்கிறது.
சிரியா நாட்டின் இத்லிப் (Idlib) நகரில் வாழ்ந்து, பின்னர் அங்கிருந்து குடும்பத்துடன் தப்பித்த அப்துல்லா முகம்மது என்பவரைப்பற்றிய செய்தி அது. அப்துல்லாவின் மகள் சால்வாவுக்கு வயது மூன்று. அக்குழந்தை, பிறந்ததுமுதல், குண்டுகள் விழுந்து வெடிக்கும் சப்தத்தைக் கேட்டு வந்தவள். துவக்கத்தில், குண்டுகளின் சப்தம் தன் குழந்தையை அதிகம் பாதிக்கவில்லை என்றும், ஒரு வயதானபோது, அச்சப்தத்தைக் கேட்டு, தன் மகள் பயந்து நடுங்கியது, தன்னை மிகவும் பாதித்தது என்றும், அப்துல்லா அவர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளார். தன் மகள், அத்தகைய அச்சத்தில் வளரக்கூடாது என்று தீர்மானித்த அப்துல்லா அவர்கள், குண்டுவிழும் சப்தம் கேட்டதும், தான் பலமாகச் சிரித்து, தன் மகளையும் சிரிப்பதற்குப் பழக்கினார். குண்டு விழும் சப்தத்தில், அவ்விருவரும் சிரிப்பதை, அப்துல்லா அவர்கள், ஒரு காணொளியாக, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.
2011ம்
ஆண்டு முதல், சிரியாவில் நடைபெற்றுவரும்
போரினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் உறைவிடங்களை
இழந்து, புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து
வருகின்றனர். போரினால் உருவாகும் வன்முறைகளின் கோரப்பிடியிலிருந்து தங்கள் குழந்தைகளைக்
காப்பாற்ற, அப்துல்லாவைப்போல், ஆயிரமாயிரம்
பெற்றோர், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது நமக்குத் தெரியும்.
கடந்த பத்து ஆண்டுகளாக, சிரியாவில் நிகழ்ந்துவரும் கொடுமைகளைப் போலவே, உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு வடிவங்களில் வன்முறைகள் ஒவ்வொருநாளும் தொடர்ந்துவருகின்றன. கடந்த பத்து மாதங்களாக, இவ்வுலகை வதைத்துவரும் கோவிட்-19 கொள்ளைநோய், மனித சமுதாயத்தை, பல்வேறு வழிகளில் செயலிழக்கச் செய்திருந்தாலும், மனிதர்களிடையே, பல நூற்றாண்டுகளாக, வேரூன்றியிருக்கும் வேறுபல கொள்ளைநோய்கள், வழக்கம்போல் நம்மைத் தாக்கிவருகின்றன. பாலியல் வன்கொடுமை, மனித வர்த்தகம், இனவெறி, அடிப்படைவாதம் என்ற வன்முறைகள், இன்னும் வீரியமாகப் பரவியுள்ளன.
தமிழில் நாம் பயன்படுத்தும் ‘வன்முறை’ என்ற சொல், புதிரான சொல். இச்சொல்லை பதம்பிரித்து பொருள் காணும்போது, பல சிந்தனைகள் எழுகின்றன. வன்முறை என்ற சொல், வன்மை, முறை என்ற இரு சொற்களின் இணைப்பாகத் தெரிகின்றது. வன்மை என்பது மென்மையின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவற்றை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், இந்த வார்த்தையுடன் 'முறை' என்ற வார்த்தையை இணைத்திருப்பது, புதிராக இருந்தாலும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில், வன்மையானச் செயல்கள், முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை ‘வன்-முறை’ என்று சொல்வது, பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப்படைகள், கொலைப்படைகள், ஏதோ ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிவதுபோல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை, 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப்போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று, வன்முறை, விற்பனை செய்யப்படுகிறது.
முறைப்படி, திட்டமிட்டு நடத்தப்படும் வன்மைகளின் உச்சக்கட்டமாக விளங்குவது, தீவிரவாதம். ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும், தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள் எல்லாருமே உயர்கல்விபெற்ற பட்டதாரிகள் என்றும் அறியும்போது, மனம் அதிகமாக வேதனைப்படுகிறது. தாங்கள் செய்யப்போவது, கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்கள், தங்கள் மனசாட்சியைக் கொன்று புதைத்துவிட்டு, பின்னர் மக்களைக் கொல்கின்றனர்.
வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம் - ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 2ம் தேதி, நாம் கொண்டாடிவரும் காந்தி ஜெயந்தி. இந்த நல்ல நாளில், மகாத்மா காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில், மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவர், லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ் அவர்கள் இறந்த நாள். இந்த மூன்று தலைவர்களை நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில் பிறந்தத அனைவரும் பெருமைப்படுகிறோம். அரசியல் என்ற சொல்லுக்கு, புனிதமான இலக்கணம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று, வன்முறைகள் அனைத்தின் ஒட்டுமொத்த இலக்கணமாக, அரசியல் மாறியிருப்பது, வேதனையைத் தருகிறது.
1869ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி, காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும், உலகம் முழுவதும், அகிம்சையும், அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு, ஐ.நா. பொதுஅவை அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலகநாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க, இந்தியத் தலைவர்கள் அரும்பாடுபட்டனர் என்று அறிகிறோம். வன்முறையற்ற உலகநாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்கமுடியாமல் தவிக்கிறோம். வன்முறையைப்பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க, வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம்.
இரண்டாவது காரணம் - அக்டோபர் 4, இஞ்ஞாயிறன்று நாம் கொண்டாடும் ஒரு புனிதரின் திருநாள். அசிசி நகர் புனித பிரான்சிஸ், மனிதர்களோடு மட்டுமல்லாமல், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களோடும் பாசமான உறவுகளை வளர்த்துக்கொண்டவர். கதிரவனை, நிலவை, காற்றை, பூமியை, பறவைகளை, விலங்குகளை தன் குடும்பத்து உறவுகளாக ஏற்று வாழ்ந்த அப்புனிதர், பகைமையையும், வன்முறைகளையும் களைந்து, அமைதியின் கருவிகளாக நாம் வாழ்வதற்குத் தேவையான அழகிய செபத்தை உருவாக்கியவர். வன்முறைகளின் எதிர் துருவமாக வாழ்ந்த புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று, வன்முறைகளைப்பற்றி சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது.
வன்முறையைப்பற்றி இன்று எண்ணிப்பார்க்க மூன்றாவது காரணம் - நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் எசாயா மற்றும் மத்தேயு நற்செய்தி இரண்டிலும் திராட்சைத்தோட்டத்தை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்கமுடியும்.
ஒரு திராட்சைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள், அத்தோட்டத்தின் உரிமையாளருக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளை, நற்செய்தியில், இயேசு கூறியுள்ளார். கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்கு வன்முறையே பதிலாகக் கிடைத்தது. திராட்சைத்தோட்ட தொழிலாளிகள், உரிமையாளர் அனுப்பிவைத்த பணியாளர்களை அடித்துக் கொன்றனர், இறுதியாக, உரிமையாளர் அனுப்பிய அவரது மகனையும் அடித்துக் கொன்றனர் என்ற விவரங்கள், இன்றைய நற்செய்தியில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. மத்தேயு நற்செய்தி 21: 35-36
இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வன்முறைகளைத் திட்டமிடும் பல தலைவர்களையும் நினைத்துப்பார்க்க வைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்கும் அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள்தான் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்கவேண்டியவர்கள் என்பதையும், சிறிதும் எண்ணிப்பார்க்காமல், ஏதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தங்கள் உரிமைச்சொத்து என்ற மமதையில் அவர்கள் செயல்படும் போக்கு, பல நாடுகளில் வளர்ந்துவருவதை, இந்த உவமை நமக்கு நினைவுறுத்துகிறது. பொறுப்புக்களை மறந்து செயல்படும் தலைவர்களுக்கு அப்பொறுப்புக்களைப்பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுகிறார்கள். தன்னை மிஞ்சியவர் யாரும் இல்லை என்ற இறுமாப்பில், அரசியல் தலைவர்கள் பின்பற்றும் வன்முறை, இன்றைய வாசகங்கள் தரும் ஒரு கோணம்.
மற்றொரு
கோணம், நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே, இந்த உலகில் குத்தகைக்காரர்கள்.
இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை
மறந்து, அல்லது வேண்டுமென்றே மறுத்து, நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும்
சிந்திக்க, இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத்தோட்டமாக
இந்த உலகை, இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத்
திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை, இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.
இறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்துவருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில்சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை, அவ்வப்போது நிகழும் இயற்கைப் பேரழிவுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன. இருந்தாலும், அப்பாடங்களை, நாம் கற்றுக்கொண்டதைப்போல் தெரியவில்லை.
சுற்றுச்சூழலின்
பாதுகாவலர் என்றழைக்கப்படும் புனித பிரான்சிஸ் திருநாளை சிறப்பிக்கும் இஞ்ஞாயிறன்று, கடந்த ஒரு மாத காலமாக நாம் கடைபிடித்துவரும்
"படைப்பின் காலம்" என்ற இறைவேண்டல் முயற்சியை நிறைவு செய்கிறோம். இவ்வேளையில், அப்புனிதரின் பரிந்துரையால், நாம், மனிதர்கள் அனைவரையும், படைப்பு அனைத்தையும் அரவணைக்கவும், படைப்பிற்கும், நம் சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் நாம் பொறுப்பானவர்கள்
என்பதை உணரவும், இந்த ஞாயிறு வழிபாட்டில்
உருக்கமாகச் செபிப்போம்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், திருத்தூதரான புனித பவுல்
அடியார் நமக்கு விடுக்கும் அழைப்பை,
ஒரு
சவாலாக ஏற்று, அவர் கூறும் அந்த உன்னத
வாழ்வை நாமும், இவ்வுலகத் தலைவர்களும்
வாழ இறைவனிடம் வேண்டி, புனித பவுல் அடியார் பிலிப்பியருக்கு
எழுதிய வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.
No comments:
Post a Comment