30 June, 2010

The Lord is my Shepherd… ஆண்டவரே என் ஆயர்


Hidden agenda… is a term that has loads of negative connotations. But, I guess it need not be so. When I took up the Psalms for my Bible Reflection programme, there was a hidden agenda there. I wanted to speak of Psalm 23 at length. That time has come. I wish to share all the nice things I have learnt about this Psalm.
I am sure many of you may have come across the famous book “The Lord Is My Shepherd” by the famous Rabbi – Harold S. Kushner. I have already spoken earlier in one of my reflections about his best seller “When Bad Things Happen to Good People”. This book was published in 2003, two years after the famous twin tower attack in New York. The book on Psalm 23 is given the subtitle: The healing wisdom of the twenty third psalm. When I read this book, I was seriously thinking of translating it into Tamil. These reflections will be a good chance to begin this process. Talk about hidden agenda!
This psalm has six verses that can be split into 14 ideas. Even if we take two ideas per week, I guess these reflections will continue for at least six to seven weeks. I can assure you that the time spent on this psalm is worth it.
In chapter one of his book, Kushner talks of how this psalm is the only chapter of the Bible that most people in the English-speaking world know by heart. I think that assumption is true in all languages. I can surely vouch for the Tamil-speaking world. Most of us can sing this psalm along with the congregation without the help of a hymn book. In my introduction to the Book of Psalms I mentioned that psalms are used by the believing community on various occasions. This particular psalm has been used at the bedside of a person who is sick or at the time of losing someone… This psalm brings home lot of peace and comfort. Here are the lovely verses from this famous psalm:

Psalm 23
A psalm of David.
1 The LORD is my shepherd, I shall not be in want.
2 He makes me lie down in green pastures, he leads me beside quiet waters,
3 he restores my soul. He guides me in paths of righteousness for his name's sake.
4 Even though I walk through the valley of the shadow of death, I will fear no evil,
for you are with me; your rod and your staff, they comfort me.
5 You prepare a table before me in the presence of my enemies.
You anoint my head with oil; my cup overflows.
6 Surely goodness and love will follow me all the days of my life,
and I will dwell in the house of the LORD forever.

There are so many anecdotes and interpretations related to this psalm. One of those anecdotes goes like this:

There was once a Shakespearean actor who was known everywhere for his one-man shows of readings and recitations from the classics. He would always end his performance with a dramatic reading of Psalm 23.
Each night, without exception, as the actor began his recitation – “The Lord is my Shepherd, I shall not want”, the crowd would listen attentively. And then, at the conclusion of the Psalm, they world rise in thunderous applause in appreciation of the actor’s incredible ability to bring the verse to life.
But one night, just before the actor was to offer his customary recital of Psalm 23, a young man from the audience spoke up. “Sir, do you mind if tonight I recite Psalm 23?” The actor was quite taken back by this unusual request, but he allowed the young man to come forward and stand front and centre on the stage to recite the Psalm, knowing that the ability of this unskilled youth would be no match for his own talent.
With a soft voice, the young man began to recite the words of the Psalm. When he was finished, there was no applause. There was no standing ovation as on other nights. All that could be heard was the sound of weeping. The audience had been so moved by the young man’s recitation that every eye was full of tears. Amazed by what he had heard, the actor said to the youth, “I don’t understand. I have been performing Psalm 23 for years. I have a lifetime of experience and training – but I have never been able to move an audience as you have tonight. Tell me, what is your secret?”

The young man quietly replied, “Well sir, you know the Psalm… I know the Shepherd.”
(http://jmm.aaa.net.au/articles/4474.htm)

There is also another version of this story where, instead of the young man, there is an older person who recites the psalm from his heart. Whatever is the story, the message is clear. Knowing the Shepherd is, anyday, better than knowing the psalm. This will be our endeavour… to know the Shepherd!

Let me close with another story not directly connected with Psalm 23, but can throw light on how one can deal with obstacles in life. I have shared this story as the thought for the day in the Tamil section.

The Rock / P.U.S.H. (http://www.skywriting.net/inspirational/stories/the_rock-PUSH.html)

One night a man was sleeping in his cabin when suddenly his room filled with light and the Saviour appeared. The Lord told the man he had work for him to do, and showed him a large rock in front of his cabin. The Lord explained that the man was to push against the rock with all his might. This the man did, day after day. For many years he toiled from sun up to sun down, his shoulders set squarely against the cold, massive surface of the unmoving rock, pushing with all his might. Each night the man returned to his cabin sore, and worn out, feeling that his whole day had been spent in vain.
… One day he decided to make it a matter of prayer and take his troubled thoughts to the Lord.
"Lord" he said, "I have laboured long and hard in your service, putting all my strength to do that which you have asked. Yet, after all this time, I have not even budged that rock by half a millimetre. What is wrong? Why am I failing?"
The Lord responded compassionately, "My friend, when I asked you to serve me and you accepted, I told you that your task was to push against the rock with all your strength, which you have done. Never once did I mention to you that I expected you to move it. Your task was to push. And now you come to me, with your strength spent, thinking that you have failed. But, is that really so? Look at yourself. Your arms are strong and muscled, your back sinewy and brown, your hands are callused from constant pressure, and your legs have become massive and hard. Through opposition you have grown much and your abilities now surpass that which you used to have. Yet you haven't moved the rock. But your calling was to be obedient and to push and to exercise your faith and trust in My wisdom. This you have done. I, my friend, will now move the rock."

At times, when we hear a word from God, we tend to use our own intellect to decipher what He wants, when actually what God wants is just simple obedience and faith in Him.... By all means, exercise the faith that moves mountains, but know that it is still God who moves the mountains. You just P.U.S.H.!

When everything seems to go wrong,... P.U.S.H.!
When the job gets you down,... P.U.S.H.!
When people don't react the way you think they should,... P.U.S.H.!
When your money is short and the bills are due,... P.U.S.H.!
When you want to curse them out for whatever the reason,... P.U.S.H.!
When people just don't understand you,... P.U.S.H.!

P.U.S.H. = Pray Until Something Happens!

[ Author Unknown -- from Pastor Harold Brown ]

Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


நாளுமொரு நல்லெண்ணம்
உறங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் அறை ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவன் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு ஒரு தனிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ள வேண்டும்." கடவுள் இதைச் சொல்லிவிட்டு மறைந்தார்.
அடுத்த நாள் காலை அந்த இளைஞன் பாறையைத் தன் முழு வல்லமையோடு தள்ளினான். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டு விட்டான்.
அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று ஓராண்டு இந்த முயற்சியைத் தொடர்ந்தான் அந்த இளைஞன். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.
"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?" என்று இளைஞன் முறையிட்டான்.
"மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள்... உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்." என்றார் கடவுள்.
இளைஞன் தன்னையே ஒரு முறை பார்த்தான். அவன் உடல் முழுவதும், ஒவ்வொரு அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.
"பாறையைத் தள்ளுவது தான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ மாற வேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்." என்றார் கடவுள்.
தள்ளுதல் என்று பொருள்படும் PUSH என்ற ஆங்கில வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள். ஒவ்வொன்றும் ஒரு வார்த்தையின் முதல் எழுத்து என பார்க்கும் போது, PUSH என்ற வார்த்தையை Pray Until Something Happens என்று விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய்.


விவிலியத் தேடல்:

விவிலியத் தேடலில் திருப்பாடல்கள் பற்றி நான் என் பகிர்வுகளை ஆரம்பித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களில் மிக, மிக முக்கியமான காரணம்... திருப்பாடல் 23. "ஆண்டவர் என் ஆயன்" என்று ஆரம்பமாகும் இந்தத் திருப்பாடலை நான் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடி மகிழ்ந்திருக்கிறேன். பல முறை தியானித்துப் பலனடைந்திருக்கிறேன். உடல் நோய் கண்டவர்கள், குடும்பத்தில் ஒருவரை இழந்து தவித்தவர்கள் பலர் இந்தப் பாடல் வழியாக ஓரளவு மன சாந்தி அடைந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இந்தத் திருப்பாடலைப் பற்றி கட்டுரைகள் படித்திருக்கிறேன், இணையதளத்தில் விவரங்கள் சேகரித்திருக்கிறேன். இவைகளை விவிலியத் தேடல்கள் வழியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆவல்.
இந்தத் திருப்பாடலைக் குறித்து நான் கற்றவைகளில் என்னை அதிகம் கவர்ந்த, பாதித்த ஒரு நூல் Harold Kushner என்ற யூத குரு எழுதிய "The Lord is my Shepherd" என்ற நூல். 2003ம் ஆண்டு வெளியான இந்த நூல், திருப்பாடல் 23ஐப் பற்றிய மிக அழகான, ஆழமான விளக்கங்களைக் கூறும் ஒரு புத்தகம். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க மக்கள், உலக மக்கள் எழுப்பி வந்த முக்கிய கேள்விகளுக்கு, உலகத்தில் நடக்கும் பல துன்பங்களையும், கடவுளையும் இணைத்து எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது என் கனவு. அந்தக் கனவுக்கு இந்தத் தேடல் ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.

இதோ திருப்பாடல் 23
ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்: அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்: மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

திருப்பாடல் 23ல் 6 திருவசனங்கள் உள்ளன. அவைகளில் 14 கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தும் ஒரு வைரச் சுரங்கம். எனவே இந்தத் திருப்பாடல் பற்றிய நமது தேடல், நமது பகிர்வுகள் நிச்சயம் ஒரு சில வாரங்களாவது தொடரும்.

விவிலியத்தின் எத்தனை பகுதிகளை உங்களால் மனப்பாடமாகச் சொல்ல முடியும்? உங்களில் ஒரு சிலர், ஒருவேளை பலர், விவிலியத்தின் பல பகுதிகளை வரிக்கு வரி சொல்லக் கூடிய திறமை பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களது ஆர்வத்திற்கு முன் நான் தலை வணங்குகிறேன். எனக்கு அவ்வளவு பகுதிகள் மனப்பாடமாய்த் தெரியாது. போலி தாழ்ச்சியல்ல, நண்பர்களே... உண்மை. இறைவன் தந்த பத்து கட்டளைகள், இயேசுவின் மழைப் பொழிவில் கூறிய 'பேறுபெற்றோர்' என்ற கூற்றுகள், இயேசு கற்பித்த செபம் அன்னை மரியாவின் புகழ் பாடல்... என்று ஒரு சில பகுதிகளையே என்னால் மனப்பாடமாய்ச் சொல்ல முடியும். அப்படி மனதில் பதிந்த விவிலியப் பகுதிகளில் திருப்பாடல் 23ம் ஒன்று. "ஆண்டவர் என் ஆயன்" என்று முதல் வரிகளில் ஆரம்பித்து, "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" என்ற இறுதி வரிகள் வரை அதிக தடுமாற்றம் இல்லாமல் என்னால் சொல்ல முடியும். அதுவும் இதைப் பாடலாகப் பாடச் சொன்னால், இன்னும் எளிது. எனக்குத் தெரிந்து, ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்தத் திருப்பாடல் பல கவிதை வரிகளில், இசையோடு வெளியாகி இருக்கிறது. எனக்குத் தெரிந்த பழைய பாடல்கள் இவை:

ஆண்டவர் எனது நல்லாயன், ஆகவே எனக்கொரு குறையுமிராது...
ஆண்டவர் என் ஆயன், ஏது குறை எனக்கு?...
The Lord is my Shepherd, there is nothing I shall want…
My Shepherd is the Lord, nothing indeed shall I want…
The Lord’s my Shepherd, I’ll not want…

எபிரேய மொழியில் திருப்பாடல் நூலை Tehilim அதாவது, புகழ் பாக்கள் என்றும் ஒவ்வொரு திருப்பாடலையும் Mizmorim என்றும் அழைக்கின்றனர். திருப்பாடல் 23 Mizmor Kaf Gimmel என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திருப்பாடல் Adonai Roi lo echsar என்ற வார்த்தைகளுடன் ஆரம்பமாகிறது.

இப்படி ஏறக்குறைய உலகின் எல்லா மொழிகளிலும் திருப்பாடல் 23 கவிதையாக, இசையாக வெளி வந்த வண்ணம் உள்ளது. திருப்பாடல் 23ஐ மையமாக்கி வெளிவந்துள்ள கதைகள், சம்பவங்கள், விளக்கங்கள் பல நூறு உள்ளன. அவைகளில் இந்தக் கதையும் ஒன்று. Shakespeare எழுதிய நாடகங்களின் பல பகுதிகளை மனப்பாடம் செய்து, அவற்றை மக்களுக்கு முன் உணர்வுப் பூர்வமாய் சொல்லி புகழ் பெற்ற கலைஞர் ஒருவர் தன் நிகழ்ச்சியின் முடிவில் எப்போதும் திருப்பாடல் 23ஐ மிக அழகாகச் சொல்லி முடிப்பார். அவர் அப்படி சொல்லி முடித்ததும், கரவொலியில் அந்த அரங்கமே அதிரும். பல சமயங்களில் அந்தத் திருப்பாடலை மட்டும் மீண்டும், மீண்டும் சொல்லச் சொல்லி கூட்டத்தினர் கேட்பர். ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும், மக்கள் மெய் மறந்து அதைக் கேட்டு, கரவொலி எழுப்புவர். ஒரு நாள் அவர் இப்படி அந்தத் திருப்பாடலைச் சொல்லி முடித்தார். வழக்கம் போல் மக்களும் மிகவும் ரசித்து, பரவசமடைந்து, கரவொலி எழுப்பினர்.
அப்போது, அங்கிருந்த வயதான ஒருவர் தானும் அந்தத் திருப்பாடலை மேடையேறிச் சொல்ல அனுமதி கேட்டார். மக்களும், கலைஞரும் தயங்கினர். இருந்தாலும், அவரது வயதுக்கு மதிப்பு கொடுத்து அவருக்கு அனுமதி அளித்தனர். வயதான அவர் மேடையேறி, "ஆண்டவர் என் ஆயன்" என்று ஆரம்பித்து, திருப்பாடலைச் சொல்லி முடித்தார்.
அவர் முடித்ததும், அரங்கில் ஒருவரும் கை தட்டவில்லை. ஆழ்ந்த அமைதி அங்கு நிலவியது. பலரது கண்களில் கண்ணீர் வழிந்தது. மேடையேறி சொன்னவர் கண்களிலும் கண்ணீர். அரங்கமே, அமைதியில் தியானத்தில் ஆழ்ந்திருந்தது.
இதுவரை பல முறை, பல இடங்களில் இந்தத் திருப்பாடலைச் சொல்லி மக்களிடம் பாராட்டுக்களையும், கரவோலியையும் பெற்ற அந்தக் கலைஞர் முன் வந்தார். அவர் கண்களிலும் கண்ணீர். தொண்டையைச் சரி செய்து கொண்டு, "நான் பல முறை இந்தத் திருப்பாடலைச் சொல்லி உங்களைப் பரவசப்படுத்தி பாராட்டைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் நீங்கள் என்னையே நினைக்கும் படி செய்திருக்கிறேன். ஆனால், இவர் இன்று உங்களை எல்லாம் செபிக்க வைத்திருக்கிறார். அவரை விட அவர் சொன்ன அந்த ஆண்டவரை நினைக்க வைத்தார். எனக்கும் அவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு... எனக்கு இந்தத் ஆயனைப் பற்றிய திருப்பாடல் தெரியும், இவருக்கு ஆயனான ஆண்டவரைத் தெரியும்."
நமது தேடலில் இந்தத் திருப்பாடலின் ஆயனைத் தெரிந்து கொள்ள முயல்வோம். தினமும் இந்தத் திருப்பாடலை ஒரு முறை வாசித்தால், மனப்பாடமாய்ச் சொன்னால், மனதார செபித்தால்... அறுபுதமான உணர்வுகள் மனதை நிறைக்கும், அற்புதங்கள் வாழ்வில் நிகழும். தொடர்வோம் நம் தேடலை.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

27 June, 2010

TODAY = ‘PRESENT நன்றே செய்க… இன்றே செய்க




Last month when I was travelling in India, one of my friends told me this sad event. A new Tamil movie was released the previous week featuring a popular actor. Usually films are released on Fridays, right? On Thursday night one of the youngsters who was a die-hard fan of this actor spent the whole night displaying posters for the movie throughout his town. This ‘service’ took the whole night. Early next morning this young man was standing in line for the first-day-first-show ticket, almost for three to four hours, unmindful of the scorching heat of May. No sleep, no food… He got his ticket and then reality set in. He felt hungry and drowsy. He did not want to miss the first show. So, he decided to get some tea just across the road. As he was crossing the road, he fainted and a speeding lorry ran over him. He died on the spot. Sad… really sad…
Did this really happen? Not very sure. But, dear friends, all of us know that this CAN HAPPEN and HAS HAPPENED quite many times in India. Only in India? Again, not so sure. We in India have a way of displaying our hero worship in a way unparalleled in the rest of the world. We know the amount of frenzy that can set in when a movie star or a cricket star appears in public. Sometimes, such frenzy turns into madness and violence can result. How many lives have been lost due to this madness / violence! More so in the area of politics. There have been immolations and murders committed for political leaders.
Why are we talking of all these now? The Gospel today can probably throw some light on this question. This passage talks about the leader and his followers.

Luke 9: 51-62
As the time approached for him to be taken up to heaven, Jesus resolutely set out for Jerusalem. And he sent messengers on ahead, who went into a Samaritan village to get things ready for him; but the people there did not welcome him, because he was heading for Jerusalem. When the disciples James and John saw this, they asked, "Lord, do you want us to call fire down from heaven to destroy them?" But Jesus turned and rebuked them, and they went to another village.

As they were walking along the road, a man said to him, "I will follow you wherever you go."
Jesus replied, "Foxes have holes and birds of the air have nests, but the Son of Man has no place to lay his head."

He said to another man, "Follow me." But the man replied, "Lord, first let me go and bury my father." Jesus said to him, "Let the dead bury their own dead, but you go and proclaim the kingdom of God."

Still another said, "I will follow you, Lord; but first let me go back and say good-by to my family." Jesus replied, "No one who puts his hand to the plow and looks back is fit for service in the kingdom of God."


This passage talks of four incidents. All the four can teach us lessons for life. The first one is about the disciples – James and John. Jesus, on his way to Jerusalem, was not received well in a town. James and John were seething with rage. They wished to bring down fire from heaven to destroy the town. A fitting lesson to those………. people who should have known better. James and John were the sons of thunder. They were the ones who wanted to be seated at the right and left of the Lord. (Mt. 20: 20-21)
I am just wondering what our political leaders would have done in a situation like this. Here are two very energetic, enthusiastic followers who are willing to go the full distance – destroying a town for not giving due respect to their leader. Our leaders would have been thrilled to have such sycophants and, in all probability, given them some important portfolios in the ministerial cabinet. Thank God. Jesus is not like them. He turned to his disciples and rebuked them. He was probably very indignant at them since they wanted to use heavenly powers for destruction. These guys really need help, Jesus thought.

The second incident is about a person who wanted to follow Jesus wherever he went. As was his wont, Jesus must have turned around and looked at this person with deep love and concern. The word ‘wherever’ must have grabbed the attention of Jesus. Where was Jesus going? To Jerusalem. As the opening lines of today’s Gospel says, he was determined to go to Jerusalem, probably knowing what was awaiting him there. He was going for a head-on collision with political and religious authorities. At that moment, should he take another disciple along? That was his concern.
Inadvertently, my mind goes to the present day political leaders who would be more concerned in taking along more followers especially during a clash. In the ego clashes that occur between big leaders the followers get hurt and killed. As an Indian, I feel ashamed of having such power mongers. I am more ashamed of the followers who have such blind loyalty to these leaders.
Jesus tries to tell this person what would be awaiting him if he were to follow him ‘wherever he goes’. There is really nowhere… Even foxes and birds which do not have any plan for their daily shelter, do have some place to rest at night. This statement from Jesus is more of an invitation to share his vagabond or itinerant life. How many of us really believe that all of us are PILGRIMS on earth?

The third and fourth incidents are similar. Two persons want to fulfil their family duties BEFORE following Jesus. At first glance, the response of Jesus seems rather rude. “Don’t bother about burying your parents or saying goodbye to the family members… Just plunge into action. Follow me HERE and NOW. No delays.
The reference of Jesus to the man with a plough, reminds me of the first reading today – taken from the First Book of the Kings 19: 19-21. The incident narrated in this passage is quite dramatic:

Elijah went from there and found Elisha son of Shaphat. He was ploughing with twelve yoke of oxen, and he himself was driving the twelfth pair. Elijah went up to him and threw his cloak around him. Elisha then left his oxen and ran after Elijah. "Let me kiss my father and mother good-by," he said, "and then I will come with you." "Go back," Elijah replied. "What have I done to you?"
So Elisha left him and went back. He took his yoke of oxen and slaughtered them. He burned the ploughing equipment to cook the meat and gave it to the people, and they ate. Then he set out to follow Elijah and became his attendant.


From this passage it is not clear whether he was allowed to say goodbye to his parents. But, it is quire clear that he said a definitive goodbye to his earlier life. He slaughtered his oxen, burnt his ploughing equipment… In 1519, Capitan Hernando Cortez and his followers left Cuba and landed in Mexico. In order to motivate his followers to face all the hardships of Mexico and not think of Cuba again, Captain Cortez burnt the ship in which they reached Mexico. The English expression “burning the boats” may have stemmed from this incident. Elisha burning the ploughshare was a spontaneous, courageous act of a follower. Cortez burning the ship was more of a compulsion imposed on the followers.

Following Jesus, the real leader requires HERE and NOW decision. We know of the famous saying ‘Justice delayed, is justice denied.’ Similarly, I feel that delaying to act on an inspiration is denying it. There is a story that does daily rounds in big firms about deadlines… “Boss, when is this work due?” “Yesterday!”

Today is a gift and that is why we call it the ‘present’. Let us make use of this gift properly. “If today you hear his voice, harden not your hearts…” (Ps.95: 7-8)

Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


மே மாதம் என் நண்பர் ஒருவர் சொன்ன வேதனையான நிகழ்ச்சி இது. தமிழில் ஒரு புதுத் திரைப்படம் வெளியாவதற்கு முந்திய நாள், அந்தப் படத்திற்கான சுவரொட்டிகளை இரவு முழுவதும் ஒட்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அடுத்த நாள், அந்த ஹீரோவின் படத்தை முதல் காட்சியில் பார்க்கும் ஆர்வத்தில் (வெறியில்????) அந்த மே மாத வெயிலில், பல மணி நேரம் வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி விட்டார். அப்போதுதான் அவருக்குத் தன் உடல் பசி தெரிந்தது. அதுவரைத்தான், அவர் அவராகவே இல்லையே! காட்சி ஆரம்பமாவதற்குள், ஒரு டீயும், பன்னும் சாப்பிடலாம் என்று அவர் அந்தத் திரை அரங்கத்தின் முன் இருந்த சாலையைக் கடக்கும் போது, மயக்கத்தில் தடுமாறி, அந்தப் பக்கம் வேகமாக வந்த ஒரு லாரியில் அடிபட்டு... அந்த இடத்திலேயே இறந்தார். நண்பர் ஒருவர் சொன்னது. இப்படி நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் இது போல நடக்கக் கூடியதுதான் என்பது நமக்குத் தெரியும்.
நம் நாட்டில் சினிமா நடிகர்களுக்காக, அல்லது விளையாட்டு (கிரிக்கெட்) வீரர்களுக்காக கூடும் கூட்டத்தைப் பார்த்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் காணப்படும் ஆர்வம், சில சமயம் வெறியாக மாறும் போது, அங்கு வெடிக்கும் வன்முறைகளில் ஒரு சில உயிர்கள் பறி போயுள்ளன.

சினிமா, விளையாட்டு இவைகளால் ஏற்படும் உயிர் பலிகளை விட இன்னும் அதிகமாக அரசியல் விளையாட்டில் பல உயிர்கள் பலியாவதையும் நம் நாட்டில் பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்காகத் தீ குளிப்பது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வது, வெட்டிக் கொல்வது... என்று நடக்கும் உயிர் பலிகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன. இதேபோல், கொள்கைகளுக்காக உயிரைப் பணயம் வைப்பவர்களை, உயிரைத் தியாகம் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன், குழம்பியும் போயிருக்கிறேன்.
விடுதலைப் புலிகள், நாக்சலைட் போன்ற தீவிரக் கொள்கைக் குழுக்களில், மத அடிப்படையில் எழும் தீவிரக் கொள்கைக் குழுக்களில் தற்கொலைப் படையினர் என்றே ஓர் அங்கம் இருப்பது நமக்குத் தெரிந்த ஒரு விவரம். இந்தத் தற்கொலைப் படைகள் தன்னையும், பிறரையும் அழிக்கும் செய்திகளைக் கேட்கும் போது.. வியப்பு, குழப்பம் இரண்டும் எனக்கு ஏற்படும். வியப்பை விட, குழப்பம் தான் அதிகம் எழும்.
தலைவன், தொண்டன், உயிர்பலி இவைகளைப் பற்றி ஏன் இந்த விவாதம்? இன்றைய நற்செய்தியைக் கேளுங்கள். ஓரளவு தெளிவு கிடைக்கும்.

லூக்கா நற்செய்தி 9: 51-62
அக்காலத்தில், இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள். அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றிவாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார். வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

இயேசுவைத் தலைவனாக ஏற்று அவரைப் பின் தொடர்ந்த சீடர்களை, அல்லது, பின் தொடர விழைபவர்களைப் பற்றி நான்கு சம்பவங்களை இப்போது வாசித்தோம். ஒவ்வொரு சம்பவத்திலும் நமக்குத் தேவையான பாடங்கள் பல உள்ளன.

முதல் சம்பவம்:
இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசுவுக்கு ஓர் ஊரில் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, "தலைவா, நீங்க ‘சரி’ன்னு சொல்லுங்க... இந்த ஊரை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்." என்றார்கள். யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். நினைவிருக்கிறதா? இந்த இருவரும்தான் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பினார்கள். விண்ணப்பித்தார்கள். (மத். 20: 20-21)
நம்ம ஊர் அரசியல் தலைவன் என்றால், தொண்டர்களின் இது போன்ற ஆவேசத்தைக் கண்டு, அதுவும், தலைவனுக்காக ஊரையே அழிக்கத் துடிக்கும் அவர்களது ஆவேசத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்து, அவர்கள் கேட்ட அந்தப் பதவிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பார். இயேசு நம்ம ஊர் அரசியல் தலைவன் இல்லையே... அவர் உலகின் மற்ற எல்லாத் தலைவர்களையும் விட மிகவும் வித்தியாசமானவர் ஆயிற்றே!
ஆவேசப்பட்ட சீடர்களுக்கு இயேசு தந்த பதில் என்ன? "அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்." (லூக்கா 9: 55) அவர் கடிந்து கொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர் அந்தச் சீடர்கள். கடவுளின் சக்திகளைத் தவறான நோக்கங்களுக்கு, அதுவும் அழிவான நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அவர்களது சுயநலத்தை அதிகம் கடிந்து கொண்டார்.
தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தன்னிடம் உள்ள அதிகாரம்... இவைகளை அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். இந்தத் தன்னலத் தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி வெட்கப்படுகிறோம். வேதனைப் படுகிறோம்.

இரண்டாவது சம்பவம்:
இயேசுவைத் தொடர நினைக்கும் ஓர் இளைஞன், "தலைவா, நீர் எங்கே சென்றாலும்,நானும் உம்மைப் பின்பற்றுவேன்." என்று சொல்கிறார். இயேசு அவரை ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்" என்று அந்த இளைஞன் சொன்னதுதான் அந்தப் ஆதங்கத்திற்குக் காரணம்... இயேசுவுக்கு, தான் எங்கே போகிறோம் என்பது ஓரளவு தெளிவாக இருந்தது. இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசித்ததுபோல், அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்து விட்டார். எருசலேம் நோக்கிச் செல்வது அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு நேர இருப்பதையும் ஓரளவு இயேசு உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில், இந்த மோதலில் இன்னும் ஒரு தொண்டரை ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் அவரது ஆதங்கம்.
மீண்டும் நம்ம ஊர்த் தலைவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், அதுவும் அந்த நேரத்தில் தன்னோடு தொண்டர்கள் இருந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்தி விட்டு, ஒதுங்கி இருப்பது நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு இப்படி ஓரு தலைவன் இல்லையே...

தன் போராட்டத்தைப் பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்கு பெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: " நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை." (லூக். 9: 58) நரிகள், பறவைகள் இவைகளை எடுத்துக் காட்டாகக் கூறுகிறார் இயேசு. பொதுவாக மிருகங்கள், பறவைகள் புறப்படும் இடம், சேரும் இடம் இவைகளைத் தீர்மானிப்பது இல்லை. பறவைகள் ஒரு மரத்துக் கிளையிலிருந்து காலை பறக்க ஆரம்பிக்கும், பல திசைகளில் பரந்து திரிந்து பல மரக்கிளைகளில் அவ்வப்போது அமர்ந்து நாளைக் கழிக்கும். பொழுது சாயும் வேளை, அருகிலுள்ள ஏதாவது ஒரு மரக் கிளையில் இரவைக் கழிக்கும். இதே கதைதான் நரிகளுக்கும். இப்படி எந்த வித குறிக்கோளும் இல்லாமல் அலையும் மிருகங்கள், பறவைகள் இவைகளுக்குக் கூட பாதுகாப்பான இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்று தன் நிலையைத் தெளிவாக்குகிறார் இயேசு.

மூன்றாவது, நான்காவது சம்பவங்கள்:
இந்த சம்பவங்களில் இருவர் தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, கணக்குகளை முடித்துவிட்டு, இயேசுவைப் பின் பற்ற தீர்மானிக்கின்றனர். இயேசு அவர்களிடம் சொல்லும் பதில்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது, கடுமையானவைகளாகத் தெரிகின்றன.
தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்." என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடை பெற்று வர விழைந்த மற்றோவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே." என்று சொல்கிறார்.

இந்த ஞாயிறுத் திருப்பலியில் முதல் அரசர் நூலில் நாம் வாசிக்கும் ஒரு சம்பவம் இது. எலிசா என்ற இளைஞன் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தார். எலியா என்ற இறைவாக்கினர் வந்து அவரை இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்து கொண்டார். "நான் என் தாய் தந்தையிடம் விடை பெற்று வர அனுமதி தாரும்." என்று கேட்கும் எலிசாவுக்கு, அந்த அனுமதியை எலியா கொடுத்தாரா என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல் வியப்பைத் தருகிறது.

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
(1 அர. 19: 21)

1519ம் ஆண்டு Hernando Cortes என்ற படைத் தளபதி க்யூபாவை விட்டுத் தன் தொண்டர்களுடன் மெக்சிகோ வந்து சேர்ந்தார். தன்னைப் பின் தொடர்ந்தவர்கள் மெக்சிகோவில் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்காகப் பயந்து, மீண்டும் க்யூபாவிற்குத் திரும்பக் கூடாதென, அவர்கள் வந்தக் கப்பலை எரித்து விட்டார். துணிந்த பின் மனம் திரும்பிப் பார்க்கக் கூடாதென்ற கருத்தை வலியுறுத்த, இந்த நிகழ்வைச் சுட்டிக் காட்டி, ஆங்கிலத்தில் வழக்கமாக, "படகுகளை எரித்தல்" (Burning the boats) என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர்.
தளபதி Cortesன் செயல், தன்னைப் பின் பற்றுகிறவர்களைக் கட்டாயப் படுத்தும் ஒரு செயல். எலிசா செய்ததோ தானாகவே மனமுவந்து செய்தது. எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக். 9: 58) என்ற இந்த வரிகளைச் சொல்லியிருக்கலாம்.

நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப் போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம் இந்த நல்லெண்ணத்தை ஆற்றோடு கொண்டு செல்ல வாய்ப்புண்டு.
இயேசுவைப் பின் பற்றுவது, அவரைப் போல வாழ முற்படுவது மிக, மிக நல்லதொரு எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், முக்கியமாக, இளையோரே, உங்கள் உள்ளத்தில் இவ்வகை எண்ணங்கள் தோன்றும் போது, தாமதிக்க வேண்டாம். உங்கள் இறந்த காலத்தைப் புதைத்து விட்டு, பின் வந்து இயேசுவைப் பின் தொடரலாம் என்று தாமதிக்க வேண்டாம். இறந்தவைகள் புதைக்கப்படும். இயேசுவின் மீது உங்கள் கண்கள் பதிந்து விட்டால், பின்னே பார்க்க வேண்டாம். முன்னே செல்லுங்கள்.

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி:
www.vaticanradio.org

25 June, 2010

Dawn behind the darkest night… இலக்கியமாகும் புழுக்கள்














“No one loves me. I am going out to the garden and eat worms.” This is the gist of a song that has many versions. No one loves me. Everybody hates me… Therefore? I am going to eat worms. Disturbing, disgusting, you may say. But, this is supposed to be the statement of a child. We know that a child would go to any length to get the attention of others. Do we really grow beyond this stage? Yes and no. 50-50. When someone feels very low, he or she can seek the company of worms. Sometimes we feel we are no better than a worm. This is exactly what the author of Psalm 22 said: “I am a worm and no man.” (Ps.22:6)

There are quite a few passages in the Bible that talk of pain, suffering etc. All of us know that the whole Book of Job is a marvellous treatise on the mystery of suffering. One of the key themes of suffering is ‘Suffering Servant of Yahweh’. Isaiah 53, Psalm 22 and 69 are part of this package. We shall reflect on Psalm 22 today.

When one is driven to the brink of sadness and suffering, one feels like eating worms. Sadness and pain may also make some of us feel that we are worms, being eaten alive. One of the recent messages I received over the email was: “When a snake is alive, the snake eats ants; when the snake is dead, ants eat the snake.” All of us, human beings, are accustomed to eating plants and animals after they are dead. But, eating something alive? Not an easily digestible idea! Being eaten alive? This is how David must have felt while addressing his suffering to God. Kindly sit down quietly and read Psalm 22.

The first 21 verses are eloquent description of someone going through hell. Obviously, there are so many references to what happened to Jesus on Calvary, on the cross – esp. verses: 7, 8, 16, and 18. We know that Jesus was in the habit of praying the Psalms. The opening verse of this psalm is one of the famous statements made by Jesus on the cross. “My God, my God, why have you forsaken me?” Jesus, in all probability, began to recite this psalm. This must have given him enough courage and strength to face the torture.

There are tortures and tortures. Some physical and some mental. Among the physical tortures some are bearable, others unbearable. Bear with me for reminding you of some of the most painful tortures that are employed to extort truth… plucking out fingernails… drilling the tooth without any sedatives… Enough, enough. Even these physical tortures can be endured in comparison to some of the mental tortures. One of the worst mental agonies a human being can face is being rejected, betrayed or, simply, forsaken by those whom we love dearly… those on whom we have built all our life dreams.

David and, perhaps, Jesus went through this agony of being forsaken by God. The opening line of this Psalm is that heart-wrenching cry. Then David goes on to describe himself as a nobody… no better than a worm. Two of these lines are worth spending some more time on.
Verse 6: But I am a worm and not a man, scorned by men and despised by the people.
Verse 15: …you lay me in the dust of death.

Worm, dust… both have very strong negative connotations… loads of them. We have already seen how someone in pain can feel like a worm and/or seek the company of worms. We also know that when death, decomposition and decay set in, they are usually accompanied by worms. Job describes his sickness in these words: “My body is clothed with worms and scabs, my skin is broken and festering.” (Job 7: 5)

In India we have seen people curse others by throwing a handful of soil in the air and cursing people in words like: may worms fill you. There are similar thoughts in Job: “Side by side they lie in the dust, and worms cover them both.” (Job 21: 26) Worms and dust… symbols of death and decay.

But, there is always another side to any coin. Worms and dust can also be symbols of life and renewal. We have surely seen earthworms which are an enormous source of life to the soil. We have also seen the caterpillar turn into a butterfly. Cocoon+Struggle = Butterfly was one of my earlier (October 2009) posts in my blog: moreshareandcare.blogspot.com.

I do believe that David was not all negative when he compared himself to the worm… Probably, he was also thinking of the life-giving, transforming aspects of a worm. That is why the second half of this psalm is a song of praise. (Ps.22: 22-31) Jesus too began to recite the desperate cry of this psalm: “My God, my God why have you forsaken me?” But, when he breathed his last, he used Psalm 31: 5… “Into your hands I commit my spirit.”

Let us draw inspiration from David and Jesus. Even when we feel like a worm, crawling in the dust, we can surely hold our heads high. Psalm 22: 27-29 can help us.
27 All the ends of the earth will remember and turn to the LORD, and all the families of the nations will bow down before him,
28 for dominion belongs to the LORD and he rules over the nations.
29 All the rich of the earth will feast and worship; all who go down to the dust will kneel before him - those who cannot keep themselves alive.

Worms and dust, dear friends, surely teach us that there is a dawn behind the darkest night.





Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.

அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சலில் நான் வாசித்த இரு வரிகள் இவை: "பாம்பு உயிரோடிருக்கும் போது, எறும்புகளைச் சாப்பிடும். ஆனால், பாம்பு இறந்ததும், எறும்புகள் பாம்பைச் சாப்பிடும்." இறந்த தாவரம், உயிரினம் இவைகளை உண்பது மனிதர்களாகிய நமக்கும், பிற உயிரினங்களுக்கும் பழக்கமான ஒன்று. ஆனால், உயிரோடிருப்பதை உண்பதென்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம்.... ஒரு சில உயிரினங்கள் இப்படி உண்பதாக நாம் அறிவோம். மனிதர்கள் மத்தியிலும் இது போல் நடந்ததாக, இன்றும் நடப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்களை அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம்.

உயிரோடு உள்ள ஒன்றை உண்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போது, குளவிக் கூடுகள் என் நினைவுக்கு வருகின்றன. குளவிகளின் கூடுகளைப் பார்த்திருப்பீர்கள் தானே. பல முறை அந்தக் கூடுகளில் புழுக்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அந்தப் புழுக்கள் குளவியின் சந்ததிக்கான உணவாம். அதுவும் எப்படி? அந்தப் புழு உயிரோடு இருக்கும்போதே உணவாகுமாம். அந்தப் புழுக்களைக் குளவி கொட்டும்போது, அந்தப் புழுக்கள் இறப்பதில்லை, உணர்வுகளை மட்டும் இழந்து உடல் முழுவதும் மரத்துப் போகின்றன. உடல் மரத்துப் போன நிலையில், அந்தப் புழுக்கள் உயிரோடு அந்தக் குளவியின் சந்ததிக்கு உணவாகி ன்றன.
உயிரியல் பற்றிய பாடம் அல்ல, அன்பர்களே... உயிரோடிருக்கும் போதே உணவாக மாறும் அந்தப் புழு நமது இன்றைய விவிலியத் தேடலுக்கு உதவியாக இருக்கும் ஓர் உருவகம். நாம் இன்று சிந்திக்க இருக்கும் திருப்பாடலில் வரும் ஒருவரி – அதாவது, "நானோ ஒரு புழு; மனிதனில்லை." என்ற வரி இந்தச் சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தது.இன்றைய நமது விவிலியத் தேடலில் திருப்பாடல் 22ஐப் பற்றி சிந்திப்போம்.

துன்பத்தைப் பற்றிக் கூறும் விவிலியப் பகுதிகள் பல உள்ளன. யோபு என்ற முழு நூலும் துன்பத்தை மையமாகக் கொண்ட ஒரு தேடல் தானே.
துன்பத்தைப் பற்றிய விவிலியப் பகுதிகளில் "யாவேயின் துன்புறும் ஊழியன்" என்ற எண்ணத்தைத் தாங்கிய பகுதிகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலில் 53ம் அதிகாரம், திருப்பாடல்கள் 22, 69 ஆகியவை துன்புறும் ஊழியன், மேசியாவைப் பற்றிப் பேசுவதாக விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.
உயிரோடு இருக்கும் போதே அணு அணுவாக இறக்கும், மனதளவில் மற்றவருக்கு இரையாகும் ஒரு மனிதன் தன் நிலையை விவரிப்பதாக உள்ளது இந்தப் பாடல். இந்த வேதனையைக் கூறும் வரிகளில் ஒரு சிலவற்றைக் கேட்போம்.

திருப்பாடல் 22 1, 6-8, 12, 13-15, 17-18

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
நானோ ஒரு புழு, மனிதனில்லை: மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்: மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்″ என்கின்றனர்.
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன. அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

இப்போது நாம் கேட்ட இந்த வரிகள் துயரத்தின் சிகரத்தில், வேதனையின் கொடுமுடியில் இருக்கும் ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள். இந்த வரிகள் எல்லாமே இயேசுவின் கல்வாரி அனுபவத்தைக் கூறும் வரிகள் என விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தத் திருப்பாடலை இயேசு சிலுவையில் தொங்கியபோது பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று ஆரம்பமாகும் இந்தத் திருப்பாடலின் வரிகள் இயேசு சிலுவையில் சொன்ன அந்த அற்புதமான ஏழு வசனங்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம். அதேபோல், "தந்தையே, உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்." என்ற இயேசுவின் இறுதி வார்த்தைகளும் திருப்பாடல் 31ன் எதிரொலி... எனவே, இயேசு கல்வாரியில் அந்தச் சிலுவைச் சித்ரவதையின் கொடுமுடியில் திருப்பாடல்களைக் கூறி, தனக்கு ஆறுதல் தேடிக் கொண்டார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உடல் வேதனைகளை விட, உள்ள வேதனைகள்தாம் ஒருவரை மிக அதிகமாய்ப் பாதிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. உடல் வேதனைகளிலும், ஒரு சில மிகக் கொடியது. உதாரணமாக, நகக் கணுக்களில் ஊசியை வைத்து குத்தும் போது, அல்லது, மரத்துப் போக வைக்கும் எந்த வித மருந்தும் இல்லாமல், பல்லைத் துளைத்து, நரம்பு வேர்களைத் தொடும் போது... நாம் அனுபவிக்கும் வேதனைகள், மிகக் கொடியது. எனவேதான், சித்திரவதைகளில் இந்த வேதனைகள் வழியே உண்மைகளை வரவழைக்கின்றனர்.
உடல் வேதனைகளில் இப்படி பல நிலைகள் இருப்பது போல், உள்ள வேதனைகளிலும் ஒரு சில சாதாரண வேதனைகள்... வேறு சில உள்ள வேதனைகளின் சிகரங்கள். அந்தச் சிகரங்களில் ஒன்று... நமக்கு மிக நெருங்கியவர்கள், வாழ் நாள் முழுவதும் நம்முடன் இருப்பவர்கள், நம்மை வெறுத்து ஒதுக்குதல், மறுதலித்தல், காட்டிக் கொடுத்தல், கைவிடல்...
திருப்பாடல் 22ன் ஆசிரியர் கூறும் வேதனையின் உச்சி என்ன? இறைவன் அவரைக் கைவிட்டது தான். அதுவும், ஊரார் முன்னிலையில் இறைவன் இவரைக் கை விட்டதால், ஊராரின் பழிச் சொல்லுக்கும் ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம்.

அனலில் இட்ட மெழுகு, தணலில் விழுந்த புழு... என வேதனையில் துடிக்கும் உள்ளத்தை நாம் வர்ணிக்கிறோம். திருப்பாடலின் ஆசிரியரும் இவைகளை ஒத்த வர்ணனைகளைத் தருகிறார். தான் எலும்புகள் கழன்று போன, அல்லது எலும்புகளே இல்லாதஒரு புழு. மனிதனில்லை. தன்னைச் சாவின் புழுதியில் இறைவன் போட்டு விட்டார் என்று கூறுகிறார் தாவீது.

திருப்பாடல் 22: 14-15
நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.

புழு, புழுதி... இவைகள் ஆழமான உருவகங்கள். மனித உள்ளம் மிக, மிகத் தாழ்ந்துப் போனதாய் உணரும் போது புழுவாகிப் போனதாக, புழுதியில் மிதிபடுவதாகப் பேசுகிறோம். வாழ்வு முடிந்து, அழுகல், அழிவு இவை ஆரம்பமாவதை உணர்த்தும் ஒரு முக்கிய அடையாளம்... புழுக்கள். யோபு தன் உடல் அழுக ஆரம்பித்து விட்டதைக் கூறும் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

யோபு 7: 5-6
புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ். என் நாள்கள்... நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.

கோபத்தில் சாபமிடுகிறவர்களை நாம் பார்த்திருக்கிறோம். புழுதியை வாரி இறைத்து, சாபத்திற்கு ஆளாகும் மனிதர்களின் உடலில், செல்வத்தில் புழுக்கள் நிறைய வேண்டும் என்று சாபமிடுவார்கள். யோபுவின் நூலில் இதே போன்ற வரிகள் உள்ளன. தீயவர்களின் முடிவைக் கூறுகையில், யோபு பயன்படுத்தும் வார்த்தைகள் இவை:
யோபு 21: 26
புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்: புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.

இப்படி அழிவுக்கும், சாபத்திற்கும் அடையாளமாகும் புழுக்கள், புழுதி இவைகளின் மறுபக்கம் நம்மை வியக்க வைக்கும். மாற்றங்களுக்கும், மறு வாழ்வுக்கும் இவை அடையாளங்களாகின்றன. மண்ணோடு, புழுதியோடு தன்னை ஐக்கியமாக்கும் மண்புழு, அந்த மண்ணை, புழுதியை உயிரூட்டும் உரம்போல மாற்றும் அற்புதம் நமக்குத் தெரிந்த ஒன்று. அதே போல், கூட்டுக்குள் போராட்டமே நிகழ்த்தும் கூட்டுப் புழுவின் மாற்றங்கள் வண்ணத்துப் பூச்சியாக வடிவெடுப்பதும் நாம் கண்டு வரும் அதிசயம் தானே.

தன்னைப் புழுவாக, புழுதியில் கிடப்பவராக உருவகிக்கும் தாவீது, புழுவின் அடையாளங்களான அழுகல், அழிவு இவைகளை மட்டும் நினைத்து இந்தத் திருப்பாடலைப் பாடியதாகத் தெரியவில்லை. மாறாக, அதேப் புழு மாற்றங்களையும், மறு வாழ்வையும் கொணரும் அந்தக் குணத்தையும் மனதில் வைத்தே, தன்னை ஒரு புழுவாக நினைத்திருக்க வேண்டும். எனவேதான், இந்தத் திருப்பாடல் அவநம்பிக்கையில் முடியாமல், நம்பிக்கையில் முடிகின்றது.

"இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று இந்தத் திருப்பாடலின் வரிகளைச் சிலுவையில் தன் கதறலாக்கிய இயேசு, எப்படி இறுதியில் "உமது கரங்களில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று வேறொரு திருப்பாடலின் நம்பிக்கை வரிகளோடு தன் வாழ்வை முடித்தாரோ, அதே போல், தாவீதும், இறைவனால் கைவிடப் பட்டதாக உணர்ந்த அந்த வேதனையில் இந்தத் திருப்பாடலின் முதல் பாதியில் புலம்பினாலும், பாதி பாடலுக்குப் பின் நம்பிக்கை தரும் வரிகளால் தன் நெஞ்சையும், நம் நெஞ்சங்களையும் நிறைக்கிறார். நம்பிக்கை தரும் அந்தப் பகுதியின் இறுதி வரிகள் இதோ:

திருப்பாடல் 22: 29-31
ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்: புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.





புழுவும், புழுதியும் அழிவுக்கும், அழுகிப்போவதற்கும் இலக்கணமாகலாம். ஆனால், அதே புழுவும், புழுதியும் மாற்றங்களின், மறு வாழ்வின் இலக்கியங்களாவதும் உண்மை.








இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

21 June, 2010

Who do YOU say that Jesus is?... கேள்வி அல்ல. ஓர் அழைப்பு.

secure.mcc.org/mccstore/index.php?main_page=p...


‘Who am I?’ sounds like a philosophical question. Behind this question lurks diffidence, sometimes; desire at other times. Diffidence of not being sure who we really are and, more especially, who we seem to be to others. Desire for truth has made sages spend their entire life on the question: Who am I? The end of such a life-time search was Enlightenment!
This ‘Who am I?’ question is closely linked to ‘Who am I to others – my family, my friends, my colleagues…?’ In other words this question is similar to what we hear from the Gospel today… ‘Who do people say that I am?’ (Luke 9: 18-24)

I have heard that in government circles an exercise is taken up every day. What appears on the TV as evening news and what appear in the morning papers are collected, categorised, prioritized and given to the Prime Minister and the Chief Minister. A special officer is appointed to do this. This is only a hearsay information and you are welcome to take it with more than a pinch of salt. But, I guess such an exercise is in place in any organisation. We are aware of service agencies which provide ‘special information’ to the higher-ups!

This exercise is undertaken to feel the pulse of the people. More often, this exercise is undertaken with some trepidation. I guess the first question that confronts most of the political leaders in the morning will be: what do the people think of me and my government? In other words, who do people say that I am?

Why did Jesus ask these questions? Was he worried about his popularity? Nope! There were other reasons. This is how I interpret this Gospel event. Jesus was interested in helping his disciples share some of the popular trust people had in Him. He also wanted to prepare them for the passion message he was going to share with them. Jesus was probably giving his disciples the bitter pill (predicting his passion) coated with sugar (a profession of faith, a faith shared by common people)!

These questions of Jesus are not addressed to His disciples alone. Down the centuries they have been addressed to all of us. They have perennial value, in season and out of season.

Who do people say that Jesus is?

On quite many occasions, surveys have been undertaken to discover who has influenced the history of humankind. Almost in all of them, Jesus Christ has figured either in the first place or within the first three positions. Such has been his influence.

Who do people say that Jesus is?

People have said and, still, are saying so many things… good and bad, true and false, profession of faith and downright blasphemy! Ocean of opinions… Jesus is an inexhaustible source of inspiration. I am reminded of the final verse of John’s Gospel: Jesus did many other things as well. If every one of them were written down, I suppose that even the whole world would not have room for the books that would be written. (John 21:25) I am also reminded of the famous passage “One Solitary Life”

One Solitary Life
He was born in an obscure village, a child of a peasant woman.
He worked in a carpenter shop until He was thirty,
Then became an itinerant preacher.
He never wrote a book.
He never held an office.
He never did one thing that usually accompanies greatness.
He had no credentials but Himself.
While still a young man, public opinion turned against Him.
His friends ran away.
One denied Him.
He went through the mockery of a trial.
He was nailed to a cross between two thieves.
His executioners gambled for His only piece of property - His coat.
He was laid in a borrowed grave.
Nineteen wide centuries have come and gone.
Today He is the centerpiece of the human race.
All the armies that ever marched,
All the navies that ever sailed,
All the parliaments that ever sat,
And all the kings that ever reigned put together,
have not affected the life of man upon this earth as powerfully as that
One Solitary Life.

Author Unknown / Public Domain
http://www.associatedcontent.com/article/660641/one_solitary_life.html

‘One Solitary Life’ is one of the best-loved poems by Christians and non-Christians alike. This poem is often listed as author unknown, or public domain. Some attribute it to Rev. James Allan Francis who allegedly wrote it as an essay, not a poem. Those of you who wish to see this ‘original’ piece, please visit:
http://www.anointedlinks.com/one_solitary_life_original.html

Even though so much has been said about Jesus, He would still go beyond. An iconoclast himself, He would break any mould in which people place Him. Such is His beauty.

Who do you say that I am?

Hey, wake up… this question is personally addressed to you and me. Who do I say that Jesus is? All the answers I have been memorising since childhood may not be helpful. Neither is Jesus interested in my memorised answers. I am now asked to face this question seriously, personally.
More than a question, it is an invitation – an invitation to be convinced of the person of Jesus so that I can follow Him more closely. Most of us become speechless and, perhaps, embarrassed by such a direct question… such a confrontation… rather, ‘care-frontation’!

Here is a story of a world famous trapeze artist who was performing death defying stunts over a canyon exceedingly deep. In one such stunt, he was taking a wheelbarrow filled with rocks over the rope. He was blindfolded too! When he had completed this particular stunt, one of his ardent fans rushed to him, grabbed his hands and told him that he was surely the best in the world. The artist felt happy about these compliments. Then he asked his fan whether he believed in his capacity to do all these dare-devil stunts. “I believe you are the best, ever!” was his firm, affirmative answer. Then the trapeze artist told him, “Okay then, now I would like to perform the final adventure. I shall take this wheelbarrow once again over the rope. This time you sit in it.” (Story taken from “At Home With God” by Hedwig Lewis, S.J.)

It is so easy to answer the question: “Who do people say that I am?” But when Jesus turns around and says, “Who do YOU say that I am?” I feel like running away from this ‘care-frontation’. Am I ready to sit in the wheelbarrow and be transported by Jesus over the canyon? Hm… yes, perhaps… well, you see… it’s actually like this… No clear answer seems to be forthcoming. Well, dear friends, there is no easy answer to this question. I wish it were easier.

Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


"நான் யார்?" “Who am I?” என்பது ஒரு தத்துவக் கேள்விபோலத் தேரிந்தாலும், உலகில் இந்தக் கேள்வியைச் சந்திக்காதவர்கள், சிந்திக்காதவர்கள் கிடையாது. நம்மில் பலருக்கு இது அவ்வப்போது எழும் ஒரு கேள்வியாக இருக்கலாம். ஆனால், எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் "நான் யார்?" என்றத் தேடலில் வாழ்க்கை முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.
நான் யார் என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள்... என் குடும்பத்தினருக்கு நான் யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில், நான் வாழும் சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில், மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது.

இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது.
இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. லூக்கா 9: 18-24

இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் அந்த இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும்.
"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"
"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

நான் கல்லூரியில் பணி புரிந்த போது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப் படுத்தி, பட்டியலிட்டு, பிரதம மந்திரி அல்லது முதல் அமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஒரு அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தகவல்களைப் பட்டியலிடுவதன் முக்கிய நோக்கம்... நாட்டு நடப்பு பற்றி தெரிந்து கொள்வது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப் பற்றிய, தங்கள் ஆட்சி பற்றிய எண்ணங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்த கேள்வி: "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இந்தக் கேள்வியின் பின்னணியில் பயம், சந்தேகம் இவைகள் தாம் இந்தக் கேள்வியை இவர்களிடம் எழுப்புகின்றன. மக்களை முன் நிறுத்தி, மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும், சிந்திக்கும், அதன்படி செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை...

இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு இந்த பயம், சந்தேகம் காரணம் இல்லை. அவர் இந்தக் கேள்வியைத் தன் சீடர்களிடம் ஏன் கேட்டார் என்ற காரணத்தை நான் இப்படி நினைத்துப் பார்க்கிறேன். தன்னை இன்னும் சரிவர புரிந்து கொள்ளாத சீடர்கள், தன்னைப் பற்றி மக்கள் சொல்வதைக் கேட்டாகிலும் இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுக்கு இருந்திருக்கலாம். அல்லது, இந்த கேள்வி பதில் பரிமாற்றத்திற்குப் பின், நாம் இன்றைய நற்செய்தியில் வாசித்தது போல், தன் பாடுகளைப் பற்றி சீடர்களுக்குச் சொல்லப் போவதற்கு ஒரு முன்னேற்பாடாக மக்கள் தன்னைப் பற்றிக் கூறும் ஒரு சில விசுவாச அறிக்கைகள் அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இந்தக் கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார்.

மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
இருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம், அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றை இத்தனை நீண்ட காலம்... ஈராயிரம் ஆண்டுகள்... இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே...

மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள்... நல்லதும், பொல்லாததும்... உண்மையும், பொய்யும்... விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும்... அளவுக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். சொல்லி வருகிறார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப் பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான், இப்படித்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு. யோவான் தன் நற்செய்தியின் இறுதியில் எழுதியுள்ள வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:

யோவான் 21: 25
இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"


ஹலோ, உங்களைத் தான்... என்னையும் தான்... இந்தக் கேள்வி நமக்குத் தான்...

சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், குருக்கள், அருட் சகோதரிகளிடம், ஆசிரியர்களிடம் நான் பயின்றவைகளை எல்லாம், நான் மனப்பாடம் செய்தவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப் பதில் ஒப்பித்து விடலாம்.

ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.
நான் படித்தவைகளை விட, பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நான் மனப்பாடம் செய்தவைகளை விட, மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.

இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்கலாம். "என்ன இது... திடீர்னு இயேசு முகத்துல அறைஞ்சா மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டார்... எனக்கு அப்படியே, வெலவெலத்துப் போச்சு... என்ன சொல்றதுன்னே தெரியல..." இப்படி நீங்களும் நானும் உணர்ந்தால், அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. “என்னைப் பற்றிப் புரிந்து கொள்… என்னைப் பற்றிக் கொள்” என்று இயேசு விடுக்கும் அழைப்பு.

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். இவர்களில் ஒரு சிலர் கயிற்றின் மேல் நடந்து மட்டும் சாகசங்கள் செய்வதில்லை. கயிற்றின் மேல் படுத்தல், சாப்பிடுதல், இன்னும் சிலரை ஏற்றிக் கொண்டு, சைக்கிள் சவாரி செய்தல்... இப்படி அவர்களது சாகசங்கள் பல விதம்...
உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர் இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக் கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது. அதையும் அற்புதமாக அவர் முடித்த போது, ரசிகர் ஒருவர் ஓடி வந்து அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்." என்று அடுக்கிக் கொண்டே போனார்.
"என் திறமையில் அவ்வளவு ஈடுபாடு, நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.
"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப் பற்றி நான் கேள்வி பட்ட போது, நான் அவைகளை நம்பவில்லை. இப்போது நானே நேரில் அவைகளைக் கண்டு விட்டேன். இனி உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை." என்று பரவசப்பட்டுச் சொன்னார்.
"மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி." என்று கேட்டார் அந்தக் கலைஞர்.
"உம்.. சொல்லுங்கள்." என்று அவர் ஆர்வமாய் சொன்னார்.
"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளு வண்டியோடு நடக்கப் போகிறேன். இந்த முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் ரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்தக் கழைக்கூத்துக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வதற்கு ஆர்வமாய் இருந்த அந்த ரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.
அந்தக் கழைக்கூத்துக் கலைஞருக்கும் ரசிகருக்கும் இருந்த உறவு கேள்வி ஞானத்தில் ஆரம்பித்து, நேரடியான பார்வையாளராக மாறியது வரை நன்றாகவே இருந்தது. சாகசங்களைப் பார்த்து பரவசமடைந்த ரசிகர், அந்த சாகசங்களில் பங்கு பெற அழைக்கப்பட்டதும், காற்றோடு மறைந்து விட்டார்.

இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை ரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும் போது, இயேசு நம்மிடம் "மக்கள் நான் யார் என்று சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, ரசிப்பு இவைகளோடு நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

13 June, 2010

Precious Damaged goods… விலையுயர்ந்த பழுதடைந்த பொருட்கள்

Artist: Jean Beraud
Date: 1891


Karl Menninger, the famous psychiatrist, who has authored quite a few interesting books including “Whatever Became of Sin?” (1973), once said that if he could convince the patients in psychiatric hospitals that their sins were forgiven, 75 percent of them could walk out the next day!
How true! If only all of us could be convinced of the forgiveness we receive from others and from God, so many of our burdens could be lessened, so much health can be experienced by all of us. Today’s Gospel gives us an opportunity to reflect on forgiveness. Here is the Gospel passage for this Sunday:

Luke 7: 36-50
Now one of the Pharisees invited Jesus to have dinner with him, so he went to the Pharisee's house and reclined at the table. When a woman who had lived a sinful life in that town learned that Jesus was eating at the Pharisee's house, she brought an alabaster jar of perfume, and as she stood behind him at his feet weeping, she began to wet his feet with her tears. Then she wiped them with her hair, kissed them and poured perfume on them. When the Pharisee who had invited him saw this, he said to himself, "If this man were a prophet, he would know who is touching him and what kind of woman she is—that she is a sinner."

Jesus answered him, "Simon, I have something to tell you." "Tell me, teacher," he said. "Two men owed money to a certain moneylender. One owed him five hundred denarii, and the other fifty. Neither of them had the money to pay him back, so he cancelled the debts of both. Now which of them will love him more?" Simon replied, "I suppose the one who had the bigger debt cancelled." "You have judged correctly," Jesus said.

Then he turned toward the woman and said to Simon, "Do you see this woman? I came into your house. You did not give me any water for my feet, but she wet my feet with her tears and wiped them with her hair. You did not give me a kiss, but this woman, from the time I entered, has not stopped kissing my feet. You did not put oil on my head, but she has poured perfume on my feet. Therefore, I tell you, her many sins have been forgiven—for she loved much. But he who has been forgiven little loves little." Then Jesus said to her, "Your sins are forgiven." The other guests began to say among themselves, "Who is this who even forgives sins?" Jesus said to the woman, "Your faith has saved you; go in peace."


This story of the woman anointing Jesus appears in all the four Gospels, (Mt.26:6-13; Mk.14:3-9; Lk.7:36-50; Jn.12:1-8) with a variety of differences, but the same root story. We can assume that this incident must have made a deep impression on the disciples of Jesus. Hence, all the four evangelists have recounted the incident. Of all these versions, the Lukan version is more popular. It has brought the woman to the centre of the event.
A Pharisee, by name Simon, invited Jesus for a meal. This itself must have been quite a remarkable event and must have been the talk of the town. The evangelists could have easily elaborated on this remarkable event at length. But, what happened was very different. The dinner, the Pharisee, the invitees… even Jesus receded into the background. Only the lady who barged into the scene, uninvited, stole the limelight. Paradoxically, this lady had only a tag, a label – sinner – and no name. This non-entity became the centre of the event not only on that day, but for generations to come. This is the promise given by Jesus himself in Matthew’s Gospel: “I tell you the truth, wherever this gospel is preached throughout the world, what she has done will also be told, in memory of her.” (Matt. 26:13)

Simon, the Pharisee, was shocked by what he saw. “If this man were a prophet, …”, Simon mused, trying to fit Jesus into his definition of a prophet. Jesus loved being an iconoclast – breaking definitions, traditions… all that fettered the human being. Jesus was least interested in ‘playing the prophet’. He was more interested in being the Saviour of the woman who was at His feet. Here was the woman who, according to many around Jesus, was way too much damaged to be saved!

“Damaged goods. Half price…” is the tag that is found in many grocery stores or departmental stores on goods that have lost their labels, have dents, are crushed a little… etc. Most customers would ignore such sign boards. But there was this one man who was a regular customer. He would always go to the damaged goods section and buy several items there. When asked why he did what most other people didn't, he said, "Nothing's really wrong with these," holding up a can that had part of the label gone and several dents. "It's just bent up a little. On the inside, it's as good as the ones on the shelves and it's what's on the inside that counts, isn't it?"

There is nothing wrong with ‘damaged goods’ on the inside! But this needs a special perspective. Jesus had this perspective. He went looking for ‘damaged’ people and they came looking for Him. The ‘sinner’ in today’s Gospel is one such person. Jesus chose this woman in order to teach some lessons to the Pharisees and to us… lessons of love and forgiveness!

Here are some thoughts on forgiveness:
Forgiveness is unconditional or it is not forgiveness at all. Forgiveness has the character of "in spite of," but the righteous ones give it the character of "because." – Tillich
Forgiveness means relinquishment. It's that simple. To relinquish something is to release whatever power it holds over us.
‘Pardon’ contains the word donum or gift.
‘Forgive’ contains the word, ‘give’.
We have just enough religion to hate, but not enough to make us love one another. – Jonathan Swift
Forgiveness is standing up and facing the future without the weight of the past.
When we sin, we cut the string – the string that ties each of us to God. Then God ties it up again, making a knot...thereby bringing us a little closer to God.

That is a good imagery.

Here are two more imageries of forgiveness that are close to my heart:
When you look towards the Light or walk towards the Light, the burden of your shadows will fall behind you. But the moment you turn away from the Light or walk away from the Light, shadows will fill your way.
Imagine a tiny waterfalls gently falling on the rocks. If you place a vessel, a dirty vessel at that, under the falls, the dirt will be washed away and the vessel will be filled. If, on the other hand, you feel ashamed to expose the dirt inside the vessel and keep the vessel turned upside down, the vessel cannot be cleaned or filled up. Water cannot force itself in. God’s grace and love are like the gentle waterfalls that keeps pouring down. If we can place ourselves open to this outpouring of love not bothered about how clean we are, we will be cleansed. We will be filled!


Dear Friends,
Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit
www.vaticanradio.org and keep in touch with us. Thank you.



Karl Menninger புகழ் பெற்ற ஒரு மன நல மருத்துவர். நலம் பெற வேண்டி பல நூறு பேர் Karl Menningerன் மருத்துவமனையில் காத்திருப்பர். அவர் ஒரு நாள் தன் நண்பரிடம், "என் மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளிகளிடம் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற உண்மையை மட்டும் அவர்களை நான் நம்ப வைத்து விட்டால்... இவர்களில் 75 விழுக்காடு பேருக்கு நோய் நீங்கி இன்றே வீடு திரும்புவர்." என்றார். ஆம் அன்பர்களே, Menninger சொன்னது ஆழமான ஓர் உண்மை.

நாம் ஒவ்வொருவரும் மன்னிக்கப்பட்டு விட்டோம் என்பதை மனதார நம்பினால் உலகில் எத்தனை பாரங்கள் குறையும். அள்ள அள்ளக் குறையாமல் சுரக்கும் மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும் பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும் மன, உடல் நோய்கள் நீங்கும். நலம் பெருகும்.
இந்த ஒரு நல்ல செய்தியை முதலில் நாம் மனதார நம்பவும், அதன்பின் பிறரை அந்த நம்பிக்கைக்கு அழைத்து வரவும் இன்றைய ஞாயிறு சிந்தனை நமக்கு உதவி செய்யட்டும். இந்த ஞாயிறு சிந்தனைக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி இதோ:

(லூக்கா 7: 36-50)

இந்த சம்பவம் நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் இயேசுவின் சீடர்கள் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நம் மனங்களிலும் இந்த சம்பவம் நல்ல பல பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவலோடு நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இயேசுவுக்குப் பரிசேயர் ஒருவரது வீட்டில் விருந்து. இதுவே ஒரு பெரிய அதிசயம். இயேசுவுக்கு எதிரணியில் பரிசேயர்களும், மறை நூல் வல்லுனர்களும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த போது, சீமோன் என்ற இந்தப் பரிசேயர் இயேசுவை விருந்துண்ண அழைத்தது வினோதம் தான்.
இந்த அதிசயத்தை ஊரே, உலகே பேசியிருக்க வேண்டும். நற்செய்தியாளர்கள் அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியிருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? அங்கு நடந்த விருந்தை விட, அங்கு அழைக்கப்பட்டிருந்த பல பெரியவர்களை விட, அழையாத விருந்தாளியாக அந்த வீட்டில் நுழைந்த ஒரு பெண் நற்செய்தியின் மையமானார். இயேசுவை அழைத்த அந்த பரிசேயருக்கு "சீமோன்" என்று பெயர் தரப்பட்டிருந்தது. அழையாமல் நுழைந்த பெண்ணுக்கோ பெயர் கூட இல்லை. அவர் ஒரு "பாவி" என்ற அடைமொழி மட்டும் அவர் மேல் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பாவி இந்த நற்செய்தி நிகழ்வின் மையமானார்.
அந்தப் பெண்ணைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் எல்லாருக்கும் அதிர்ச்சி, கோபம், எரிச்சல்... மனதை உறுத்தும் அத்தனை உணர்வுகளையும் பட்டியலிடுங்கள்... அனைத்தும் அங்கே மலையென... இல்லை, இல்லை, குப்பையெனக் குவிந்திருந்தன.
அவள் ஒரு விலைமகள். தன் உடலை விலைக்கு விற்பவர். பரிசேயர் ஒருவரது பரிசுத்தமான வீட்டையும், அங்கு வந்திருந்த அனைவரையும் தீட்டுப் படுத்திவிட்டார் அந்தப் பெண்.
இயேசு மட்டும் அங்கில்லையெனில், அந்தப் பெண்ணைப் பலவந்தமாய் அந்த வீட்டை விட்டு வெளியேற்றி, கல்லெறிந்து அவரைக் கொன்றிருப்பர் அங்கிருந்தோர்...
இயேசு மட்டும் அங்கில்லையெனில்...
இயேசு அங்கில்லையெனில், அந்தப் பெண்ணும் அங்கு வந்திருக்க மாட்டாரே. இயேசு இருந்த செய்தி கேட்டதால்தானே அவர் அங்கு வந்தார். அதுவும், அனுமதியின்றி, அழைப்பின்றி அங்கு வந்தார். இயேசுவிடம் வர, இயேசுவின் பாதங்களைச் சேர, அனுமதி எதற்கு?

இயேசுவின் பாதங்களைச் சேர்ந்த பெண், அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமண தைலத்தைப் பூசினார். அந்த விலையுயர்ந்த தைலத்தின் நறுமணம் அந்த வீட்டை நிரப்பிய போது, அதுவரை அதிர்ச்சியில், கோபத்தில் உறைந்திருந்த அந்தக் கூட்டம் விழித்தெழுந்தது.
உண்மையிலேயே, விழித்து எழுந்ததா? இல்லை. விழித்தெழுவதற்கு இறைவன் கொடுத்த அழைப்பைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் அந்தக் கூட்டம் தனது பழைய குருட்டுத் தனத்தில் கண் மூடிவிட்டது.

அவர்களது குருட்டுப் பார்வையில் குற்றங்கள் மட்டுமே தெரிந்தன. அந்தப் பாவி மேல், இயேசு மேல் குற்றம் கண்டனர். "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்..." என இயேசுவை அழைத்த அந்த பரிசேயர் ஓர் இலக்கணத்தைத் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். இயேசுவுக்குத் தான் இலக்கணங்கள் பிடிக்காதே.

இறைவாக்கினர் என்றால்...
பரிசேயர் என்றால்... சதுசேயர் என்றால்...
சட்ட திட்டங்கள் என்றால்...
ஒய்வு நாள் என்றால்...
கடவுள் என்றால்...
இப்படி வாழ்நாள் முழுவதும் இலக்கணங்களை, வரையறைகளைச் சொல்லிச் சொல்லியே வாழ்ந்து வந்த அந்த பரிசேயர்களின் இலக்கணங்களை இல்லாமல் செய்வதே இயேசுவின் முக்கியப் பணியாகிவிட்டது.
இயேசுவைப் பொறுத்தவரை, அந்த பரிசேயர்களோ, அவர்களின் இலக்கணங்களோ, அவர்கள் தன் மீது போட்டுக் கொண்டிருந்த தப்புக் கணக்குகளோ... எதுவுமே முக்கியமல்ல. அவரைப் பொறுத்த வரை அவரது காலடியில் இருந்த அந்தப் பெண் தான் முக்கியம்.

இந்த சம்பவத்தின் இருட்டுப் பகுதியைப் பார்த்தது போதும். அங்கு நடந்த அழகானவைகளைக் கொஞ்சம் அசைபோடுவோம்.

பல பெரியக் கடைகளில் "பழுதடைந்த பொருட்கள்" (Damaged Goods) என்று பலகையில் எழுதி, கடையின் ஓரத்தில் அந்தப் பொருட்களை வைப்பார்கள்.
அந்தப் பொருட்களின் வழக்கமான விலையில் பாதி கொடுத்து, அந்த பழுதடைந்தப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இருந்தாலும், கடையின் அந்தப் பகுதிக்குப் பெரும்பாலானவர்கள் போகக்கூட மாட்டார்கள். பழுதடைந்ததை விலை கொடுத்து வாங்குவதா?
இப்படி ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் தேடிச் சென்ற ஒருவரிடம், அவர் நண்பர் "அதுதான் பழுதடைந்திருக்கிறதே. அதை ஏன் எடுக்கிறீர்?" என்று கேட்டார். "வெளியில்தான் இது பழுதடைந்துள்ளது. உள்ளிருக்கும் பொருள் நன்றாகவே இருக்கிறது." என்று பதில் சொன்னார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் இப்படி ஊருக்கும், உலகுக்கும் உடலால், மனத்தால் பழுதடைந்தவர்களாய்த் தெரிந்தவர்களை அவர் தேடித் போனார். இப்படி பழுதடைந்தவர்கள் பலர் அவரைத் தேடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் இன்றைய நற்செய்தியின் மையமாய் நாம் சிந்திக்கும் இந்தப் பெண்.
உலகமெல்லாம் "இவள் ஒரு பாவிப் பெண்" என்று சொன்ன போது... இயேசு அவரை "பாவம் அந்தப் பெண்" என்று சொன்னார். "பாவம்" ஒரே வார்த்தைதான். ஆனால், அதை பயன்படுத்தும் வழியில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்!

உலகம் இவரைப் "பாவி" என்று முத்திரை குத்தி குத்தி... இந்தப் பெண் தலை நிமிர முடியாமல், தாழ்த்தப் பட்டிருந்தார். இப்படி தன்னைத் தாழ்த்திய இந்த உலகத்தை அவர் வெறுத்தார். இருந்தாலும் வேறு வழியின்றி, தாழ்நிலையில் இருந்ததைப் போல் நடித்தார். ஆனால், இன்று முதன் முறையாக, மற்றொரு மனிதன் முன் மனதாரத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.
இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, கூந்தலால் துடைத்து, காலடிகளை முத்தமிட்டு... ஒரு மனிதப் பிறவி இதைவிட அதிகமாய்த் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது.
தன்னையே மனமுவந்து தாழ்த்திக் கொண்ட அந்தப் பெண்ணை இயேசு தூக்கி நிறுத்தினார். அதுவும் தங்களையே உயர்ந்தோர் என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த பரிசேயர் கூட்டத்திற்கு முன் அந்தப் பெண்ணை உயர்த்தினார்.
பலருக்கும் பாடங்களைச் சொல்லித் தந்து பழகிப் போன பரிசேயருக்கே அந்தப் பெண் வழியாக பாடம் ஒன்றைச் சொல்லித்தந்தார் இயேசு.
இயேசு சொல்லித் தந்த பாடம் என்ன? அவரது வாழ்வின் உயிர்மூச்சான, தாரக மந்திரமான அன்பு, மன்னிப்பு என்ற பாடங்கள்.

மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்... பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை வாழ்வோம்.
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:
கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு, எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
நாம் பாவங்கள், தவறுகள் புரியும் போது என்ன செய்கிறோம்? கடவுளுக்கும், நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிறோம். துண்டிக்கப்பட்டதைச் சரி செய்ய, கடவுள் அந்த உறவுக் கயிற்றில் முடிச்சொன்று போடுகிறார். அறுந்த கயிற்றில் முடிச்சு விழும் போது, அதன் நீளம் குறையும். நாமும், இறைவனும் நெருங்கி வருகிறோம்.

இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.

இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால் குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும். அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு விலகி நடந்தால் அந்த நிழல்கள்தாம் நம் கண்களை நிறைக்கும்.

சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும் அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம். அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால், பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும் நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து, வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து வைக்காமல், கவிழ்த்து வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது. நிறையாது.
இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச் சுற்றி எப்போதும் கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

Justice delayed is justice denied! தாமதமாக்கப்படும் (=தடுக்கப்படும்) நீதி

http://www.beachdecor.net/beach_decors/
I am back in Rome doing what I like doing… Sharing of good news! The break I took in May was good. I took a trip to India and it was quite fruitful and also relaxing. Thanks for your good wishes and prayers. I am very much refreshed to carry on the work at Vatican Radio for another few months. Today I wish to take up Psalm 17 for our sharing.
This Psalm is titled “A Prayer of David”. Some translations call this Psalm as “A prayer of the innocent man” or “A prayer of the perfect man”. Some even go so far as to say that this ‘perfect man’ is Jesus. All of us are aware that Jesus had used the Psalms all his life, even on the cross. I am sure He must have felt quite at home praying in the words of Psalm 17.

Last week did not start well for me, perhaps for many of you too! Why? It was the news of Bhopal. On Monday, June 7th, the Bhopal court had convicted 8 persons guilty of one of the greatest industrial tragedies of our times. The Bhopal gas tragedy of December 3, 1984 had claimed around 20,000 lives and has left at least 600,000 persons affected in various ways. Even after so many years of this tragedy, hundreds of children around Bhopal are born with physical infirmities. After 26 years of “searching”, our Indian government and our legal system have found 8 persons guilty. The court verdict given to each of them? 2 years of imprisonment! Such news is surely upsetting, to say the least. Justice delayed is justice denied!
The news of Bhopal drew my attention from another angle. The day before this verdict, on Sunday, June 6th, Fr Jerzy Popielusko was beatified in Poland. Fr Popielusko, born in 1947, took on the communist regime of Poland during his priestly ministry. He was quite articulate in his criticism of the government even on the altar. He was killed in 1984.
The murder of Fr Popielusko and the murder of thousands of slum dwellers in Bhopal… both took place in 1984. After 26 years, on consecutive days both these tragedies seem to have reached some definitive moment. Were those who murdered Fr Popielusko brought to books? Not sure. But, the murder of the Priest has surely brought thousands of Polish people to God. Was Fr Popielusko’s murder been vindicated by human court? Not clear. But, he has been raised to the altar by the Church. What was more touching in this event was the presence of Jerzy’s mother at the Beatification ceremony.
I am of the opinion that Fr Popielusko’s case has been settled well in God’s court. Similarly, Bhopal case too must have reached the courts of heaven and must have been ‘settled’ in ever so many graceful ways – not evident to human eyes and human understanding. Human courts can drag a case for years. At such moments simple people, especially those who cannot afford to ‘buy’ justice in human courts turn to the heavenly court. This is where Psalm 17 comes into the picture. David seems to have come to God’s court seeking justice. What was his problem? Saul. Saul was thirsting for the blood of David. David felt that he was hunted day and night. Here are the opening lines of Psalm 17:

Hear, O LORD, my righteous plea; listen to my cry.
Give ear to my prayer— it does not rise from deceitful lips.
May my vindication come from you; may your eyes see what is right. (Psalm 17:1-2)

This Psalm is a good example of how a case is to be presented. Any case has two sides… my side and the other side. David seems to present a clear picture of both the sides and then go on to plead with God to act in his defence.
We are constantly dealing with cases, arguing for and against, passing judgements… Cases need not be processed only in legal courts. Most of the days we take up ‘court proceedings’ at home, in our work place, in the place of worship, on the road… We tend to take the judgement seat so easily.
The fundamental truth of any case is to see both sides. In most cases we deal with, it is so hard to see both sides. Our side fills our view so much that there seems to be no chance to even have a glimpse of the other side.
For instance, if you see the way I have presented the Bhopal case in this article, you can see that there is lot of anger in me which comes out in such a cynical tone. I can’t help it. But, I am sure there is another side… their side… the side of Warren Anderson (The CEO of Union Carbide) and his colleagues in this case. I wish I could walk in their shoes for some time! I can only pray for that grace. May the words of Psalm 17 help us to have proper perspective in all the intricate problems that beset us.

May some of the verses of this Psalm inspire us:
Keep me as the apple of your eye; hide me in the shadow of your wings.
In righteousness I will see your face; when I awake, I will be satisfied with seeing your likeness.
(Ps.17: 8,15)
Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch with us. Thank you.
ஏறத்தாழ இரு மாதங்களாய் நான் விடுமுறையில் இருந்ததால், என் எண்ணங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இப்போது மீண்டும் உரோமையில் வத்திக்கான் வானொலியில் என் பணிகளைத் தொடர்ந்துள்ளேன். என் எண்ணங்கள் மீண்டும்... இன்று நம் பகிர்வுக்குத் திருப்பாடல் 17ஐ எடுத்துக் கொள்வோம்.
இந்த வார துவக்கத்தில், ஜூன் 7 திங்கள் காலை என் கவனத்தை ஈர்த்தத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? 26 ஆண்டுகளுக்கு முன்னால், போபாலில் ஏற்பட்ட நச்சு வாயு விபத்து தொடர்பான வழக்கில் எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று போபால் நீதிமன்றம் முடிவு செய்தள்ளது... என்பது தான் அந்தச் செய்தி.
1984 டிசம்பர் 3 அதிகாலையில் நடந்த இந்த அகோர விபத்தில் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்த ஒரு சில ஆண்டுகளில் 20,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். குறைந்தது ஆறு லட்சம் பேர் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளில் நூற்றுக்கணக்கானோர் இன்றும் உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர்.
இவ்வளவு பகிரங்கமாக நடைபெற்ற மனிதப் பலிகளுக்கு யார் காரணம் என்று 26 ஆண்டுகளாக இந்திய அரசும், நீதித் துறையும் தேடித் தேடி 8 பேரைக் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துள்ளன.
அவர்களுக்கு நீதி மன்றம் விதித்திருக்கும் தண்டனை என்ன? இரண்டு ஆண்டுகள் சிறை. இந்தத் தீர்ப்பை குற்றவாளிகள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா என்ன? வழக்கம் போல் இவர்களும் மேல் முறையீடு என்ற பேரில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கை இன்னும் பல ஆண்டுகள் நடத்த வாய்ப்புக்கள் உண்டு.
வழக்குகள் எங்கும், எப்போதும் ஒரு தொடர்கதை.
"Justice delayed is justice denied" என்பது ஒரு ஆங்கிலக் கூற்று. நீதி எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தடுக்கப்படுகிறது. மறுக்கப்படுகிறது. நீதி, நியாயம் தாமதமாக்கப்படும் தொடர்கதைகள் உலகின் எல்லா நீதி மன்றங்களிலும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

போபால் குறித்த இந்த செய்தி என் கவனத்தை ஈர்த்ததற்கு மற்றொரு காரணம் போலந்து நாட்டில் ஜூன் 6 இஞ்ஞாயிறன்று ஜெர்ஷி போப்பியவுஷ்கோ (Jerzy Popielusko) என்ற ஒரு கத்தோலிக்க குரு முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி.
1947ல் பிறந்த ஜெர்ஷி குருவாகப் பணி செய்த காலத்தில் போலந்தில் அப்போது இருந்த கம்யூனிச ஆட்சியை எதிர்த்து கோவில்களில், திருப்பலிகளில் குரல் கொடுத்தார். அவரது கருத்துக்களை Radio Free Europe என்ற வானொலி அடிக்கடி ஒலி பரப்பியது. இவர் தனது 37வது வயதில் கம்யூனிச அதிரடிப் படையினர் மூவரால் கொல்லப்பட்டார். இவ்விரு நிகழ்வுகளும் என் கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் உண்டு.
ஜெர்ஷி கொலை செய்யப்பட்ட ஆண்டு 1984.
போபால் விபத்து நிகழ்ந்த ஆண்டு 1984.
ஜூன் 6 ஞாயிறு ஜெர்ஷி முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார்.
ஜூன் 7 திங்கள் போபால் விபத்தில் 8 குற்றவாளிகளை நீதி மன்றம் அடையாளம் கண்டது.

இவ்விரு துயர சம்பவங்களும் நடந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டிலும் உலக அளவில், மனிதர்கள் நடுவில் நீதி, நியாயம் கிடைத்துள்ளதா என்பதில் தெளிவில்லை. ஆனால், இந்த இரு துயர சம்பவங்களின் போது, ஒரு சில நல்லவைகளும் நடந்திருக்கின்றன என்பது நமது நம்பிக்கை.
போலந்து நாட்டில் குரு ஜெர்ஷி கொலையுண்ட நிகழ்ச்சி பலரை இறைவன் பக்கம் அழைத்து வந்துள்ளதென்பது தெளிவாகிறது. இவரது சாவுக்கு சட்டப்படி நீதி கிடைத்ததா? தெரியவில்லை. ஆனால், இவரது சாவினால் பல ஆயிரம் பேருக்கு நிறை வாழ்வு, இறை வாழ்வு கிடைத்தது என்பதை அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு முத்திபேறு பெற்ற நிலையைத் திருச்சபை வழங்கியுள்ளது. அதேபோல், போபாலிலும் கட்டாயம் இந்தக் கொடூர விபத்து பலரை இறைவன் பக்கம் அழைத்து வந்திருக்க வேண்டும்.
உலகில், நீதி மன்றங்களில் சரியான தீர்ப்பு கிடைக்காமல் மனிதர்கள், அதிலும் முக்கியமாக நீதியை விலை கொடுத்து வாங்க முடியாத ஏழைகள், அணுகும் நீதி மன்றம்... கடவுளின் சந்நிதி.
நீதி தேடி கடவுளின் சந்நிதியை நாம் எப்போது, எவ்வாறு நாடுகிறோம்? அவநம்பிக்கையின், தோல்வியின் உச்சத்தில் இறைவனை நாடுகிறோமா அல்லது நடக்கும் அனைத்திற்கும் அந்த ஆண்டவனே நாயகன் என்ற நம்பிக்கையோடு நாடுகிறோமா? தாவீதின் திருப்பாடல்கள் நமக்குப் பாடங்கள் சொல்லித் தரட்டும்.

இன்று நம் சிந்தனைக்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள 17ம் திருப்பாடல் தமிழில் “மாசற்றவனின் மன்றாட்டு” என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதை Prayer of the innocent man என்றும், ஒரு சிலர் இதை Prayer of the perfect man என்றும் கூறுகின்றனர். அதாவது, இந்தத் திருப்பாடல் “மாசற்றவனின் மன்றாட்டு” அல்லது “உன்னதமான, சீரிய மனிதன் ஒருவனது மன்றாட்டு” என்று கூறப்படுகிறது. இதனால், ஒரு சில விவிலிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உன்னதமான மனிதன் இயேசு என்றும், இயேசுவின் வாழ்வை, மனநிலையை முன்னறிவிக்கும் விதமாக தாவீது இந்தத் திருப்பாடலைப் பாடியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இயேசு திருப்பாடல்களைத் தன் வாழ்வில் எல்லா நாட்களிலும்... ஏன்? சிலுவையில் தொங்கிய அந்த நேரத்திலும் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். அந்தக் கோணத்திலிருந்து பார்க்கையில், இயேசு கட்டாயம் திருப்பாடல் 17ஐ உளமாரப் பாடியிருப்பார்.

திருப்பாடல் 17ன் முதல் வரிகள் இவ்வாறு ஆரம்பமாகின்றன:
ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்: உம் கண்கள் நேரியன காணட்டும்.

இந்த வரிகளுடன் இறைவன் சந்நிதியில் தன் வழக்கை ஆரம்பிக்கிறார் திருப்பாடலின் ஆசிரியர். தாவீது இறைவனின் சந்நிதியை, இறைவனின் நீதி மன்றத்தைத் தேடி வரக் காரணம் என்ன? சவுல் அவரைக் கொல்ல வெறியாய் அலைகிறார் என்ற செய்தி. பார்க்கும் இடத்திலெல்லாம் பகை சூழ்ந்துள்ள நிலையில் தாவீது தன் வழக்கை இறைவனிடம் கொண்டு வருகிறார். 17ம் திருப்பாடலில் 15 திருவசனங்கள் உள்ளன. அவற்றை ஐந்து தெளிவான பகுதிகளாகக் காணலாம்.

இந்த ஐந்தில், தாவீது தன்னைப் பற்றிக் கூறும் ஒரு பகுதியும், தனக்குத் தீங்கிழைக்கக் காத்திருப்பவர்களைக் குறித்துப் பேசும் ஒரு பகுதியும் மற்ற மூன்று பகுதிகளில் இறைவனை நோக்கி எழுப்பப்படும் விண்ணப்பங்களும் உள்ளன.
தாவீது தன்னைப் பற்றிக் கூறும் வரிகள் இவை:
4 பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.
5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது: என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.

தனக்குத் தீங்கிழைக்கக் காத்திருப்பவரைப் பற்றி கூறும் வரிகள் இவை:
10 அவர்கள் ஈவு இரக்கம் அற்ற கல் நெஞ்சர்கள்: தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.
11 அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்: இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்: அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.
12 பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கும் அவர்கள் ஒப்பாவர்: மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.

தாவீது தனக்குள்ளேயே ஒரு நீதிமன்றத்தை அமைத்து, தன் நிலையையும், தன் எதிரிகள் நிலையையும் விளக்கி இறுதியில் "மாண்பு மிகு நீதிபதி அவர்களே... என்று இறைவனிடம் தன் விண்ணப்பங்களைக் கூறுகிறார் இந்தத் திருப்பாடல் வழியாக.
நாமும் வாழ்க்கையில் பல முறை நம் மனங்களில், நம் குடும்பங்களில் நீதி மன்றங்களை அமைக்கிறோம். வாதிடுகிறோம் தீர்ப்பும் சொல்கிறோம். அந்த நேரங்களில் தாவீதிடமிருந்து, இந்தத் திருப்பாடல் வழியாக ஒரு சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முயல்வோம். நாம் வாழ்க்கையில் வழக்குகளை உருவாக்கும் போது, அல்லது சந்திக்கும் போது, நம்மைப் பற்றிய தெளிவும், நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும். இந்தத் தெளிவு நம் வழக்குகளை, பிரச்சனைகளை பாதி தீர்த்து விடும். தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள் சூழும் போது, இறைவன் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால், மீதிப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்... இதைத் தான் திருப்பாடலின் ஆசிரியர் இன்று நமக்குச் சொல்லித் தருகிறார்.
தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள், வழக்குகள் மத்தியில் இறைவன் மீது நம் நம்பிக்கை இன்னும் ஆழப்படும் வண்ணம் இந்தத் திருப்பாடலின் ஒருசில வரிகள் நம் மனங்களில் இன்றும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
ஆண்டவரே, எழுந்து வாரும்: அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்: பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்: விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org