Saturday, January 3, 2015

Stars leading us to God விண்வாழ்வுக்கு வழிகாட்டும் விண்மீன்கள்

Three Wise Men

Feast of the Epiphany

A boy asked his father, “Dad, if three frogs were sitting on the banks of a stream, and one frog decided to jump into the stream, how many frogs would be left on the banks?” The dad thought it was too silly a question and replied nonchalantly, “Two.” “No,” the son replied. “Here is the question again: There are three frogs and one decides to jump, how many are left?” The dad took up the question more seriously. His face brightened up since he thought he got the clue. He said, “Oh, I get the point! If one decided to jump, the others would too. So there are none left.” The boy said, “No dad, wrong again. The answer is three. The frog only DECIDED to jump.”
A nice little parable on New Year Resolutions! What do we do with our resolutions? Do we DECIDE to follow them or do we decide to FOLLOW them? (I hope you got the point from the emphasis!) Do we put our resolutions into ACTIONS?
Today the Church gives us an opportunity to honour three persons as patrons of resolutions. Yes, we are talking of the Magi – also known as three Kings or three Wise Men. It is so appropriate to think of these wise men, as we begin a brand new year with some serious resolutions – big or small. Actually it is easier to follow the big ones. The small ones tend to vanish from our vision rather easily. These wise men journeyed, perhaps, hundreds of miles following a tiny star.

Following a star is possible only at night. Stars are not visible during the day. This means that these wise men must have done most of their journey at night – not an easy option given their mode of transport etc. It must have been very difficult to gaze upon one little star among the hundreds, on a clear sky. What if the sky was not clear? Then they would have to wait until clouds and mist clear. So, their journey must have taken nights, many nights. Still, they persisted. What a resolve! This alone is reason enough to honour them as patrons of resolutions!

Nowadays, the phrase ‘following a star’ is, unfortunately, misinterpreted as following a star-personality. In India, more unfortunately, we have too many of these stars, especially in the cine field and in cricket. The amount of time wasted on these stars is staggering as far as an Indian fan is concerned. By the time these fans learn that ‘following these stars’ lead them nowhere, it is rather too late. If only the typical Indian fan can take a new year resolution to treat cinema and cricket as only entertainments!

The Gospel of Matthew (2: 1-12) says that these wise men were from the East. They were probably experts in astrology – namely, the study of stars. Hence, when they saw this new star, they were able to predict the birth of a King. Their study led them further. They decided to follow the star and meet the King.
Unfortunately, there are some experts who are king-makers by studying the star in which one is born. We are aware of one of the Presidents in an Asian country who has changed the constitution of the country, so that he could run for the post of President for the third term. Although his second term ends in 2016, this President, it is said, has anticipated the election, taking the advice of the astrologers – the king-makers! In general, most of the political leaders in Asia seem to trust their stars rather than trust their people. Naturally, people also don’t seem to trust them!

Why blame political leaders, who have only one aim in their life – to stay in power? Most of us abdicate our power to the stars attached to our birth. What these stars predict each week, tends to influence our decisions to a large extent. Should we allow stars and planets to influence our lives so much? We set aside time to read ‘stars foretell’ columns in the papers. But, how many of us have the time to look up at the sky and contemplate the beauty of the stars? Unfortunately, those who live in cities hardly see the skies. The skyscrapers and artificial lights have narrowed down our view of the unlimited skies.
How many of us have looked at stars, the real ones in the sky, in the recent past? We don’t seem to have the time to look up at the sky. We are too busy with our survival on earth. The only time we look up at the sky is when dark clouds gather. This look is tinged with the doubt whether it would rain. Similarly, when dark clouds gather in our hearts, we tend to look up with doubt, to see whether God is there. If we look up only when dark clouds gather outside or inside, then we can see only dark clouds and not beyond. Beyond those dark clouds, stars twinkle and beckon us to follow them.

The story of the three wise men has inspired quite many other stories. One of them is “THE STORY OF THE OTHER WISE MAN” written by Henry van Dyke. The name of this ‘fourth’ wise man is Artaban. He wishes to join the three wise men. He sells all his properties and buys a sapphire, a ruby and a pearl as gifts to the King. As he begins his journey, he meets with a Jew who is very sick. He stays with him and ministers to his needs. In order to make up for the delay, he sells his sapphire to buy camels to cross the desert. When he reaches Bethlehem, he learns that his friends – the three wise men – had already left back to their countries. He also learns that the Child Jesus has been taken to Egypt. On his way to Egypt, he comes across the army of Herod who are slaughtering children. In order to save one of those children, he gives away the ruby.
Artaban’s search for the King takes 33 years. At last when he reaches Jerusalem, he hears of Jesus being led away to Calvary to be crucified. He wants to give away the pearl to the soldiers and rescue Jesus from their hands. On his way to Calvary, he comes across a slave girl being led away to be sold. He parts with the pearl as a ransom for the girl. At that moment there is an earth quake!

Here are the closing lines of this lovely story:
One more lingering pulsation of the earthquake quivered through the ground. A heavy tile, shaken from the roof, fell and struck the old man on the temple. He lay breathless and pale, with his gray head resting on the young girl's shoulder, and the blood trickling from the wound. As she bent over him, fearing that he was dead, there came a voice through the twilight, very small and still, like music sounding from a distance, in which the notes are clear but the words are lost. The girl turned to see if some one had spoken from the window above them, but she saw no one.
Then the old man's lips began to move, as if in answer, and she heard him say in the Parthian tongue:
"Not so, my Lord! For when saw I thee a hungered, and fed thee? Or thirsty, and gave thee drink? When saw I thee a stranger, and took thee in? Or naked, and clothed thee? When saw I thee sick or in prison, and came unto thee? Three-and-thirty years have I looked for thee; but I have never seen thy face, nor ministered to thee, my King."
He ceased, and the sweet voice came again. And again the maid heard it, very faintly and far away. But now it seemed as though she understood the words:
"Verily I say unto thee, inasmuch as thou hast done it unto one of the least of these my brethren, thou hast done it unto me."
A calm radiance of wonder and joy lighted the pale face of Artaban like the first ray of dawn on a snowy mountain-peak. One long, last breath of relief exhaled gently from his lips.
His journey was ended. His treasures were accepted. The other Wise Man had found the King.

The FOUR wise men – our heroes of today’s liturgy – looked beyond dark clouds and followed the star. May the good Lord plant a star in our life’s firmament, a star that would lead us to the Lord’s presence day after day in this New Year!Three wise men in the desert

மகன் தந்தையிடம் புதிர் ஒன்றைத் தொடுத்தான். "ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான். "இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்" என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
"அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோப் புரிந்துகொண்டவர்போல், ", புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்ற தவளைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல், புன்னகை பூத்தார்.
மகன் தலையில் அடித்துக்கொண்டு, சலிப்புடன் விளக்கினான்: "அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவற்றில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

அண்மையில் நாம் புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் கடைபிடிக்க வேண்டிய, செய்து முடிக்க வேண்டிய பல தீர்மானங்களை, திட்டங்களை மனதில் நினைக்கிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல் வடிவம் பெறவேண்டும்.
நமக்கு இந்தப் பாடத்தைச் சொல்லித்தர, புத்தாண்டின் முதல் ஞாயிறன்று நாம் கொண்டாடும் திருக்காட்சிப் பெருவிழா பெரிதும் உதவியாக, உந்துதலாக உள்ளது. மூன்று இராசாக்கள், மூன்று செல்வந்தர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் நமது விழா நாயகர்கள், தடைகளைத் தாண்டி, எடுத்தத் தீர்மானங்களை செயலாக்குவதற்கு வழிகாட்டிகள்.
இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் நடந்தனர் என்றும், இறைவனைச் சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்று முதலில் சிந்திக்கலாம். விண்மீன்களின் துணையோடு, இறைவனைச் சந்தித்தபின் நம்மில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்களைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகளைப்பற்றி இன்றைய நற்செய்தி சொல்லும் மற்றுமொரு விவரம்: "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்." இந்த ஞானிகள் ஆசியாவிலிருந்து, ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்றும், கோள்களை, நட்சத்திரங்களை ஆய்வு செய்த அறிஞர்கள் என்றும் ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்வர்.
இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை, எண்களை வைத்து, வாழ்வில் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப் பார்க்கலாம். ஆசியாவில், தற்போது ஒரு நாட்டின் அரசுத் தலைவராக இருமுறை பதவியேற்றவர், மூன்றாம் முறையும் அப்பதவியில் தொடர்வதற்காக, அந்நாட்டின் சட்டங்களை முதலில் மாற்றியமைத்தார். அடுத்து, அவரது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில், ஜோதிடர்களின் துணையோடு, எண்களை, நட்சத்திரங்களை கணக்கிட்டு, தேர்தல் ஆண்டையும், தேதியையும் நடப்பு ஆண்டுக்கு மாற்றி வைத்துள்ளார் என்பதை நாம் அறிவோம். தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரே வெறியுடன் வாழும் இவர்கள், நட்சத்திரங்களையும், எண்களையும் நம்பும் அளவுக்கு, மக்களை நம்பாமல், அவர்கள் நம்பிக்கையை வளர்க்காமல் போவது, வேதனைதரும் உண்மை!
தலைவர்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக நம்மில் பலர் நம்புகிறோம். இப்படி கோள்களையும், நட்சத்திரங்களையும் நம் வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று நம்பி, பல நேரங்களில் நம்மையும், நம் குடும்பங்களையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோமா என்பதைச் சிந்திக்கலாம். கோள்களை, நட்சத்திரங்களை நம்பி வாழ்வதற்குப் பதில், கொள்கைகளை, நம்பிக்கையின் ஊற்றான இறைவனை நாடிவருவது எவ்வளவோ மேல் என்பதையும் இந்தத் திருவிழா நமக்குச் சொல்லித் தருகிறது.

விண்மீன்களை ஆய்வு செய்வதில் தங்கள் வாழ்வைக் கழித்த இந்த மூன்று ஞானிகள், இறைவனைச் சுட்டிக்காட்டும் விண்மீன் தோன்றியதைக் கண்டனர். இறைவனைத் தேடி, பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும், தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனைப் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும் வரைக் காத்திருந்து மீண்டும் விண்மீனைப் பார்த்து எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் இரவின் துணையில் பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது அரிது. மிகவும் அரிது. நம்மில் பலர் வாழ்வது நகரங்கள் என்பதால், அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின் ஒளியில் நாம் வானத்தையே மறந்து வாழ்கிறோம். வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
கருமேகம் சூழும்போது, சந்தேகத்தோடு நிமிர்ந்து வானத்தைப் பார்க்கும் நாம், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம். சந்தேகம் என்பது கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும். சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் நமக்குப் புரியாது.

மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் மூன்று ஞானிகளின் கதை, வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவற்றில் ஒன்று Henry Van Dyke அவர்கள் எழுதிய “The Other Wise Man”, “மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.
அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டு, தன் பயணத்தைத் தொடர அவர் நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது.
அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தை, படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.
பின்னர், 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி பல இடங்களில் அலைந்தார் Artaban. சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையில் எஞ்சியிருந்த விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார்.
அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அப்போது, அவருக்கு மட்டும் கேட்கும் வகையில், "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்" என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு Artaban கண்களை மூடினார்.

மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களில் பலர் மற்றவர்களை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை Artabanன் கதை நமக்குப் புரிய வைக்கிறது.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.