12 May, 2022

New heaven, New earth, New commandment புதிய விண்ணகம், புதிய மண்ணகம், புதிய கட்டளை

 
A New Heaven and a New Earth

5th Sunday of Easter

A few years back, I received a newsletter from one of the universities in Los Angeles, U.S.A. It carried a story of a student who had joined the university to pursue his studies, after spending 20 years in prison for a crime he did not commit. In 1992, at the age of 16, Franky Carrillo Jr. was sentenced to 30 years of life in prison, plus a second life sentence, for a murder he didn’t commit. In 2011, Franky was released, after witnesses who testified in his murder trial admitted they had lied. 20 long years imprisoned for nothing. Nothing? Well, Franky Carrillo does not think so.
When I read his interview in the newsletter, I was very impressed by his comments and those comments served as the starting point for this Sunday’s reflections. Here is an excerpt from that interview:
When you told other prisoners you were innocent, did they believe you?
Surprisingly, they did. I realized at some point that I needed to tell someone. That was healthy, and it helped me stay true to my battle. Whether it was my roommate, someone in the yard, a cop or a teacher, I was always glad that the response was that they knew I didn’t belong there even before they heard my story. Their feedback encouraged me to not give up.

These words of Franky gave me a clue as to what keeps our hopes alive. More than all the external helps that Franky would have received from outside the prison, it is the affirmation from fellow prisoners that must have been more helpful to Franky.

Here is another prison-story that gives us the same idea – namely, that hope and change in prison happen from within.
In 1921, Lewis Lawes became the warden at Sing Sing Prison. No prison was tougher than Sing Sing during that time. But when Warden Lawes retired some 20 years later, that prison had become a humanitarian institution. Those who studied the system said credit for the change belonged to Lawes. But when he was asked about the transformation, here's what he said: "I owe it all to my wonderful wife, Catherine, who is buried outside the prison walls." Catherine Lawes was a young mother with three small children when her husband became the warden. Everybody warned her from the beginning that she should never set foot inside the prison walls, but that didn't stop Catherine! When the first prison basketball game was held, she went ... walking into the gym with her three beautiful kids, and she sat in the stands with the inmates. Her attitude was: "My husband and I are going to take care of these men and I believe they will take care of me! I don't have to worry."
She insisted on getting acquainted with them and their records. She discovered one convicted murderer was blind so she paid him a visit. Holding his hand in hers she said, "Do you read Braille?" "What's Braille?" he asked. Then she taught him how to read. Years later he would weep in love for her. Later, Catherine found a deaf-mute in prison. She went to school to learn how to use sign language. Many said that Catherine Lawes was the body of Jesus that came alive again in Sing Sing from 1921 to 1937. Then, she was killed in a car accident.
The next morning Lewis Lawes didn't come to work, so the acting warden took his place. It seemed almost instantly that the prison knew something was wrong. The following day, her body was resting in a casket in her home, three-quarters of a mile from the prison. As the acting warden took his early morning walk, he was shocked to see a large crowd of the toughest, hardest-looking criminals gathered like a herd of animals at the main gate. He came closer and noted tears of grief and sadness. He knew how much they loved Catherine. He turned and faced the men, "All right, men, you can go. Just be sure and check in tonight!" Then he opened the gate and a parade of criminals walked, without a guard, the three-quarters of a mile to stand in line to pay their final respects to Catherine Lawes. And every one of them checked back in. Every one! They learned the commandment of love as practiced by Catherine. [Stories for the Heart compiled by Alice Gray (Portland: Multnomah Press, 1996), pp. 54-55.]

Today’s readings tell us about love, hope and transformation that took place among the first Christians who were forced to live like prisoners due to the tough situations around them. Both the passages from the Acts of the Apostles as well as the Book of Revelation talk of hope. This hope was born amidst the most trying period of Christian history. The Book of Revelation was written by St John when he was exiled by Roman emperor Domitian to the island of Patmos. One can imagine Christians huddled together in some hidden cave, or underground place reading these words of St John:
Revelation 21: 1-5
Then I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth had passed away, and the sea was no more. And I saw the holy city, new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride adorned for her husband. And I heard a loud voice from the throne saying, “Behold, the dwelling place of God is with man. He will dwell with them, and they will be his people, and God himself will be with them as their God. He will wipe away every tear from their eyes, and death shall be no more, neither shall there be mourning, nor crying, nor pain anymore, for the former things have passed away.” And he who was seated on the throne said, “Behold, I am making all things new.”
The hope these words created in the persecuted Christians; the hope born of love had kept them alive amidst all those tough years. The great Roman Empire, which relied on power, is no more, whereas Christianity, which relied only on love and hope, has flourished for the past 20 centuries.

Early Christians were identified by the sharing of their wealth, as suggested in the Acts. (Acts 2: 44-45; 4: 32-35) This sharing was prompted by their sharing of the Bread which was a lovely commemoration of what Jesus did during the Last Supper. It was during this farewell meal, Jesus gave them the new commandment of love. We recall this in today’s Gospel:
John 13: 34-35
Jesus said to his disciples: “A new commandment I give to you, that you love one another: just as I have loved you, you also are to love one another. By this all people will know that you are my disciples, if you have love for one another.”

What was ‘new’ about the ‘new commandment’? “Love one another just as I have loved you.” It is not a love that expects to be loved back… It is not “Love me just as I have loved you.” It is simply a love that is ready to give and give… not give and take. Unfortunately, in some of our relationships, this give-and-take, becomes take-and-take! Jesus, on the other hand was proposing the ‘new’ commandment to ‘give-and-give’. Jesus also made it clear that this ‘give-and-give’ love will be a sign by which everyone can recognise the true disciple.

The renowned French artist Paul Gustave Dore once lost his passport while traveling in another country in Europe. When he came to a border crossing, he explained his predicament to one of the guards. Giving his name to the official, Dore hoped he would be recognized and allowed to pass. The guard, however, said that many people attempted to cross the border by claiming to be persons they were not. Dore insisted that he was the man he claimed to be. “All right,” said the official, “we’ll give you a test, and if you pass it, we’ll allow you to go through.” Handing him a pencil and a sheet of paper, he told the artist to sketch several peasants standing nearby. Dore did it so quickly and skilfully that the guard was convinced he was indeed who he claimed to be. Dore’s action, rather than his words, confirmed his identity. In today’s Gospel, Jesus gives us the mark of Christian identity: “By this all people will know that you are my disciples, if you have love for one another.” (John 13:35).

I am sure all of us have heard stories centred on the theme of love. Here is a story that caught my attention recently. In the lovely book, Chicken Soup for the Soul, there's a story about a man who came out of his office one Christmas morning and found a little boy from a nearby project looking with great admiration at the man’s new car. The little boy asked, "Does this car belong to you?" And the man said, "Yes. In fact, my brother gave it to me for Christmas. I've just gotten it."  With that, the little boy's eyes widened. He said, "You mean to say that somebody gave it to you? And you didn't have to pay anything for it?"  And the man said, "That's right.  My brother gave it to me as a gift." With that the little boy let out a long sigh and said, "Boy, I would really like..."  And the man fully expected the boy to say, "I would like to have a brother like that, who would give me such a beautiful car," but instead, the man was amazed when the little boy said, "Boy, I would really like to be that kind of brother. I wish I could give that kind of car to my little brother."

The little boy really understood what Jesus said to his disciples – “Love one another just as I have loved you.” This little boy is a good example of the ‘newness’ of the Love proposed by Jesus, namely, to give and give and not count the cost! (St Ignatius of Loyola) Such love will keep our hopes alive even in the most trying circumstances of our lives – as happened to Franky Carrillo and as happened in Sing Sing Prison.

Our closing thoughts are on the Canonization ceremony that takes place in St Peter’s Square, Vatican, on May 15, Sunday, where Pope Francis will canonize ten Blesseds. One of them is Bl.Devasahayam Pillai from India. This is the first lay person to be canonized in India. We thank God for the life of witness led by Bl.Devasahayam. Through his intercession we pray that we become witnesses to the great and NEW commandment of Christian love.

A New Commandment - Love Revolution

உயிர்ப்புக் காலம் 5ம் ஞாயிறு

அமெரிக்காவின் Los Angeles நகரில், இருபது ஆண்டுகளுக்குமுன், Franky Carrillo என்ற 16 வயது இளைஞர், கொலைகுற்றம் சுமத்தப்பட்டு, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபின், அண்மையில் விடுதலைபெற்று, இயேசு சபையினர் நடத்தும் ஒரு கல்லூரியில் தற்போது அவர் சட்டப்படிப்பை ஆரம்பித்துள்ளார். 1992ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலையில் Frankyக்கு எதிராகச் சான்று பகர்ந்தவர்கள், 2011ம் ஆண்டு தாங்கள் கூறியது பொய் என்று ஒத்துக்கொண்டதால், Franky விடுதலை செய்யப்பட்டார். தான் செய்யாத ஒரு கொலைக்காக, 20 ஆண்டுகள் சிறையில் இருந்த Franky, விடுதலை அடைந்தபின் வழங்கிய ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றன.
அவரிடம் பேட்டி எடுத்த நிருபர், "தவறாகத் தீர்ப்பிடப்பட்டு, 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது உங்களால் எப்படி நம்பிக்கை இழக்காமல் வாழ முடிந்தது?" என்று கேட்டார். அதற்கு, Franky: "சிறையில் இருந்த கைதிகள், அங்கு காவல் செய்த அதிகாரிகள் அனைவரும் நான் குற்றமற்றவன் என்பதை நம்பினர். அடிக்கடி அதை என்னிடம் கூறிவந்தனர். அதுதான் என்னை நம்பிக்கையுடன் வாழவைத்தது" என்று பதில் சொன்னார்.

சிறையிலிருந்த Frankyக்கு வெளியிலிருந்து உதவிகளும், ஆதரவும் வந்திருக்கும். சிறையில் அவரைச் சந்திக்கச் சென்ற பெற்றோரும், நண்பர்களும் அவருக்குக் கட்டாயம் நம்பிக்கை அளித்திருப்பர். ஆனால், அதைக் காட்டிலும், சிறைக்குள்ளிருந்து Franky பெற்ற நம்பிக்கையே அவருக்கு இன்னும் அதிக உதவியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறை என்ற நம்பிக்கையற்ற சூழலில் உருவான நம்பிக்கைக்கும், மாற்றங்களுக்கும் இதோ மற்றுமோர் எடுத்துக்காட்டு... கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோரை கடுமையான காவலில் வைத்திருக்கும் Sing Sing சிறை நியூயார்க் நகரில் உள்ளது. (தற்போது இது, Ossining சிறை என்று அழைக்கப்படுகிறது.) 1921ம் ஆண்டு Lewis Lowes என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்கு சென்றார். 20 ஆண்டுகள் கழித்து, அவர் பணிஒய்வு பெற்றபோது, அச்சிறையில் அற்புதமான பல மாற்றங்கள் உருவாகியிருந்தன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் தன் அன்பு மனைவி Catherine என்று கூறினார் Lewis.
Lewis இச்சிறைக்கு பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி Catherineஇடம் அனைவரும் தந்த ஒரே அறிவுரை... எக்காரணம் கொண்டும் அவர் அந்தச் சிறைக்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்பதே. ஆனால், அவரோ, அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள், தன் அழகான மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். அவரைத் தடுக்க முயன்ற அனைவரிடமும் அவர் சொன்னது இதுதான்: “என் கணவரும், நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம். பதிலுக்கு, அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
விரைவில், Catherine கைதிகளிடம் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் ஒருவர் பார்வைத்திறன் அற்றவர் என்பதை அறிந்த Catherine, அவருக்காக Braille மொழியைக் கற்று, அதை அவருக்கும் சொல்லித்தந்து, Braille மொழியில் இருந்த பல புத்தகங்களை அவர் வாசிக்க உதவினார். மற்றொரு கைதி பேசவும், கேட்கவும் முடியாதவர் என்பதை அறிந்து, தான் சைகை மொழியைக் (Sign language) கற்றுக்கொண்டு, அவருடன் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
Lewisம் Catherineம் Sing Sing சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937ம் ஆண்டு, Catherine ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே, ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் Catherine உடல் வைக்கப்பட்டிருந்தது. Catherine மரணத்தைப் பற்றி அறிந்த கைதிகள் அனைவரும், சிறையின் நுழைவாயிலுக்கருகே திரண்டு, மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி நின்றனர். வன்முறையில் இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் அனைவரும் Catherineக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பலாம் என்று கூறினார். அனைவரும் அமைதியாக Catherine வீட்டுக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். மாலையில் ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர். ஒருவரும் தப்பித்துச் செல்லவில்லை. Catherine உடல், அந்தச் சிறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

மாற்ற முடியாதவர்கள் என்று சமுதாயம் அடைத்து வைத்திருந்த அந்தக் கைதிகள் மத்தியில் தங்களையே முற்றிலும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்குள் மாற்றத்தை உருவாக்கிய Lewisம் Catherineம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? குற்றம் ஏதும் செய்யாமல், 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட Frankyயின் மனதில் நம்பிக்கையை அணையாமல் காத்த மற்ற கைதிகள் நமக்கு என்ன சொல்லித்தர விழைகின்றனர்? நம்பிக்கையற்றதாகத் தெரியும் ஒரு சூழலில், அச்சூழலுக்கு உள்ளிருந்து பிறக்கும் நம்பிக்கையே, சக்தி வாய்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணரும். இத்தகைய மாற்றங்களைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையும், மரணமும் மட்டுமே. உரோமைய அரசு, கிறிஸ்தவர்களை வேட்டையாடியது. கிறிஸ்தவர்களை விலங்குகள் கிழித்து உண்பதைக் காண ஆயிரக்கணக்கான உரோமையர்கள் கூடிவந்து இரசித்தனர். இத்தகையக் கொடுமைகள் மத்தியில், கிறிஸ்தவர்களை வாழவைத்தது, அவர்கள் மத்தியில் உருவாகியிருந்த நம்பிக்கை… அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை.
அதிகாரத்தை நம்பி வாழ்ந்த உரோமைய அரசு இன்று இல்லை; ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறிஸ்தவ சமுதாயம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இந்த நம்பிக்கைச் செய்தியை கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொண்டது, இன்று நம்மிடையே புதிய ஏற்பாட்டு நூல்களாக உருவாகியுள்ளன.

புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும், திருவெளிப்பாடு நூலிலிருந்தும் நாம் இன்று கேட்கும் சொற்கள், நம்பிக்கையை வளர்க்கும் சொற்கள். இன்றைய இரண்டாம் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஓர் அழகிய பகுதி. நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி.

உரோமைய அரசர் தொமிசியன் (Domitian) காலத்தில், எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டனர். புனித யோவானை பத்மோஸ் (Patmos) தீவுக்கு நாடுகடத்தினார் தொமிசியன். அங்கு தங்கியிருந்த வேளையில், உரோமையர்களால் வேட்டையாடப்பட்டுவந்த கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில், புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறிஸ்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் நம்பிக்கைச் சொற்கள் இதோ:
திருவெளிப்பாடு 21: 1-5
பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன... அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்... பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை” என எழுது என்றார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. வேறு எதுவும் முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம் பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின் அடையாளம் அமைந்திருந்தது என்பதை திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது. அப்பம் பகிரும் அந்த அற்புத நிகழ்வை முதன் முதலாக கிறிஸ்து ஆற்றியபோது, சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற ஒரு முக்கிய கட்டளையை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:
யோவான் நற்செய்தி : 13: 34-35
இயேசு தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.

அன்பை மையப்படுத்தி சொல்லப்படும் ஆயிரமாயிரம் கதைகளில், அண்மையில் என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...
உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சிறுவன் சொன்னான்.

அன்பைப் பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அன்பளிப்பால் அடுத்தவரை நிறைப்பது, எவ்வளவோ மேல். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தலைசிறந்த வார்த்தைகளால் சொல்லிச் சென்றார்: “நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல, நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்வதற்குப் பதில், உன்னதமான ஒரு சவாலை நமக்கு விட்டுச் சென்றார். “நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.” இத்தகைய அன்பு வளரும் இடங்களில் நம்பிக்கையும் தானே செழித்து வளரும்.

இறுதியாக, நம் எண்ணங்கள் இன்று – மே 15, இஞ்ஞாயிறன்று – வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெறும் புனிதர் பட்ட விழாவைச் சுற்றி வலம் வருகின்றன. இதுவரை இந்தியாவில் துறவிகளாக, அருள்பணியாளர்களாக பணியாற்றியவர்களே புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். அருளாளர் தேவசகாயம் பிள்ளை அவர்கள், இந்தியாவின் முதல் பொதுநிலைப் புனிதராக இஞ்ஞாயிறன்று உயர்த்தப்படுகிறார். அவருடன் இன்னும் 9 அருளாளர்கள் புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.

கிறிஸ்தவ அன்பிற்கு சாட்சியாக வாழ்ந்து, தன் உயிரை வழங்கிய புனித தேவசகாயம் அவர்களின் பரிந்துரையால் நாம் அனைவரும், கிறிஸ்தவ அன்பிற்கு, அன்பின் உயர்ந்ததோரு பரிமாணத்தை வரையறுக்க இயேசு வழங்கிய புதிய கட்டளைக்கு, சாட்சிகளாக வாழும் வரத்தை வேண்டுவோம்.


05 May, 2022

The ‘motherly’ Good Shepherd தாய்மை கொண்ட நல்லாயன்

  
The Good Shepherd Sunday

4th Sunday of Easter – Mother’s Day

Today’s liturgy gives us an opportunity to celebrate a ‘Double Feast’: May 8, the IV Sunday of Easter, is celebrated as the Good Shepherd Sunday as well as the World Day to pray for Vocations. This being the second Sunday of May, many countries around the world celebrate “Mother’s Day”. We begin our reflection on this ‘Double Feast’ with two news items.

Generally, news shared by the media snap the threads of hope in our hearts. Occasionally, we come across some news items that enkindle the fire of hope in us. Here are two such news to help our reflection:
On April 21, 2019, Easter Sunday, Ramesh Raju was standing with his family near the entrance to Zion church in Batticaloa on Sri Lanka’s east coast, waiting for the Easter service to start, when he spotted the man who had come to attack their community. “My husband sensed something was wrong,” Raju’s wife Chrishanthini told the BBC, as she described how her husband stopped the suicide attacker from entering the church, sealing his own fate but almost certainly saving many other lives. Barred from entering the church, the bomber had blown himself up outside, where there were fewer people. But in saving others, Raju sacrificed his own life.

On Sunday, August 16, 1987, Northwest Airlines Flight 255, crashed shortly after takeoff from Detroit Metropolitan Airport, killing all six crew members and 148 of its 149 passengers, along with two people on the ground. The sole survivor of the air crash was a 4-year-old girl, Cecelia Cichan, who sustained serious injuries. It was the second-deadliest aviation accident at the time in the United States. News accounts say that when rescuers found Cecelia they did not believe she had been on the plane. Investigators first assumed Cecelia had been a passenger in one of the cars on the highway onto which the airliner crashed. But when the passenger register for the flight was checked, there was Cecelia's name. Reports said: "Cecelia survived because, as the plane was falling, Cecelia's mother, Paula Chichan, unbuckled her own seat belt, got down on her knees in front of her daughter, wrapped her arms and body around Cecelia, and then would not let her go."

Ramesh Raju, and Paula Cichan, in dying to save others, became living examples of the motherly love of the Good Shepherd. The IV Sunday of Easter is called the ‘Good Shepherd Sunday’. In all the three liturgical years (A,B,C), for this Good Shepherd Sunday, we have the Gospel passages taken from the Gospel of John, describing the different qualities of the Good Shepherd – especially his personal care (knowing each sheep personally), and commitment (unlike the hireling). 

In the year 1963, Pope St Paul VI instituted the World Day of Prayer for Vocations on the Good Shepherd Sunday. This Sunday – May 8 – as we celebrate the 59th Vocation Sunday, we are invited to reflect on leadership in the Church, and pray for the present and future leaders of the Church.

When we think of the great qualities required for a worldly leader, efficiency, talent for governance and decision making are spoken of first. Sensitivity, tenderness and identifying oneself with the people are not usually considered the most important aspects. Unfortunately, these aspects are not considered the most important even for religious leaders in the 21st century. The model of leadership set by the worldly leaders has, unfortunately, become a yardstick by which Church leadership is also measured. We talk of how ‘efficient’ our Church and Religious leaders are. We are also sadly aware that quite many of our leaders – like Bishops and Religious Superiors – are given training in ‘managerial skills’ by management schools.

In our effort to project ‘efficient leadership’, the original ‘servant leadership’ of the Gospel, has become a distant memory. This Sunday gives us an opportunity to refresh our memory on ‘servant leadership’ given to us by Christ – the Good Shepherd.

The image of the Good Shepherd evokes very tender feelings and thoughts in us. Church history points out, that the Good Shepherd was one the first images used in the Christian tradition, to represent Jesus. Painting of Jesus, the Good Shepherd, is found in the catacombs of Rome. Most of the paintings of the Good Shepherd depict Jesus carrying a lamb on his shoulders with tender love. But the life of a shepherd is not all smooth and shiny. The shepherd needs to lead his flock through many dangerous circumstances and be ready to lay down his life for the sheep.

Our thoughts now turn to the second reason for today’s celebration – namely, Mother’s Day. Reading through quite a few vignettes on the evolution of this day, I was very impressed with the "Mother's Day Proclamation" by Julia Ward Howe. This proclamation was one of the early calls to celebrate Mother’s Day in the United States. Written in 1870, Howe’s Mother’s Day Proclamation was a pacifist reaction to the carnage of the American Civil War and the Franco-Prussian War. The Proclamation was tied to Howe’s feminist belief that women had a responsibility to shape their societies at the political level. Here are the famous lines of this proclamation:

Mother's Day Proclamation

Arise, then, women of this day!
Arise, all women who have hearts,
Whether our baptism be of water or of tears!
Say firmly:
"We will not have great questions decided by irrelevant agencies,
Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
Our sons shall not be taken from us to unlearn
All that we have been able to teach them of charity, mercy and patience.
We, the women of one country, will be too tender of those of another country
To allow our sons to be trained to injure theirs."
From the bosom of the devastated Earth a voice goes up with our own.
It says: "Disarm! Disarm! The sword of murder is not the balance of justice."
Blood does not wipe out dishonor, nor violence indicate possession.
As men have often forsaken the plough and the anvil at the summons of war,
Let women now leave all that may be left of home for a great and earnest day of counsel.
Let them meet first, as women, to bewail and commemorate the dead.
Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.

This poem, as we see, was written in the context of a war. One of the lines in this poem talks of the smell of carnage: Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
The latest carnage is being witnessed in Ukraine. This carnage has been created by the madness of one man – Vladimir Putin – who is reeking with the blood of innocent people. There have been terrorist attacks like the Easter Sunday attack in Sri Lanka (2019) even during the COVID-19 pandemic. Most of the times, the responses to the carnage created by terrorism, is state approved military strikes, resulting in more carnage. Only mercy and pardon can break this cycle of violence and a mother is an inexhaustible source of mercy and pardon. Unless all of us deal with the human family with the qualities of a mother, wars will continue. The closing line of "Mother's Day Proclamation" caught my special attention:
“Let them (Mothers) solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.”

Imprinting the image of Caesar or God on this world… on each individual? A challenge worth considering. The image of Caesar symbolising power has made the world a battlefield all the time. As against this, Julia’s poem talks of imprinting the image of God which symbolises peace and love. Mary, the Mother of Christ, constantly imprinted God’s image on this world not only during her life time, but also after her return to heaven. Through her apparitions in different places, in different decades, her only aim was to imprint the image of God more and more on the world. Especially, during her apparitions in Fatima (the Feast to be celebrated coming Friday, May 13), Mary had revealed about the devastations of war and the need to pray for peace.

On this special day – Good Shepherd Sunday + Mother’s Day + Feast of Our Lady of Fatima – we shall celebrate God the Mother and the Good Shepherd. We also celebrate maternal instincts given to each of us. Only with motherly care can we imprint the image of God on the world. Only with motherly care can we sustain this world in peace!

Julia Ward Howe

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு அன்னை தினம்

மே 12, இஞ்ஞாயிறு - உயிர்ப்புக்காலத்தின் 4ம் ஞாயிறு. இஞ்ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்றும், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலகநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இதே ஞாயிறு, மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு என்பதால், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. நல்லாயன் ஞாயிறு, அன்னை தினம், என்ற இரு கருத்துக்களையும் இணைத்து, இன்றைய ஞாயிறு சிந்தனைகளை மேற்கொள்வோம். ஊடகங்களில் வெளியான இரு செய்திகள், நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்க உதவியாக உள்ளன.
ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் பெரும்பாலானவை, நம் உள்ளங்களில் ஓடும் நம்பிக்கை நரம்புகளை அறுத்துவிடுகின்றன. இருப்பினும், அவ்வப்போது, அவற்றில் வெளியாகும் ஒரு சில செய்திகள், நமக்குள் நம்பிக்கை தீபங்களையும் ஏற்றிவைக்கின்றன. அத்தகைய இரு செய்திகள் மீது நம் கவனத்தைத் திருப்புவோம்.

2019ம் ஆண்டு, ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கை ஆலயங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின்போது, வெடிகுண்டுகள் நிறைந்த தோள்பையுடன், மட்டக்கிளப்பு சீயோன் ஆலயத்தில் நுழையவிருந்த தீவிரவாதியை, வெளியிலேயே தடுத்து நிறுத்திய ரமேஷ் ராஜு அவர்கள், குண்டுவெடிப்பில் இறந்தார். தீவிரவாதி, கோவிலுக்குள் சென்றிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும். ரமேஷ் ராஜு அவர்கள், தன் உயிரைத் தந்து, கோவிலில், வழிபாட்டில் இருந்த அவரது மனைவி, மகள், மகன் உட்பட, பலரைக் காப்பாற்றியுள்ளார்.

1987ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டிட்ராய்ட் (Detroit) நகர் விமான நிலையத்திற்கருகிலேயே நடைபெற்ற ஒரு விபத்தில், விமானத்தில் இருந்த 155 பேரில், 154 பேர் கொல்லப்பட்டனர். Cecelia Cichan என்ற 4 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்தார். முற்றிலும் எரிந்துபோயிருந்த அந்த விமானத்தில், அச்சிறுமி மட்டும் உயிர் பிழைத்தது, ஓர் அதிசயம் என்று கருதப்படுகிறது. விமானம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிந்த Ceceliaவின் அன்னை, Paula Cichan அவர்கள், தன் இருக்கையைவிட்டு எழுந்து, Ceceliaவின் இருக்கைக்கு முன் முழந்தாள்படியிட்டு, தன் மகளை இறுக அணைத்துக்கொண்டார் என்றும், அவரது அணைப்பினால், சிறுமி Cecelia உயிர் பிழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்தில், Ceceliaவின் அம்மா, அப்பா, மற்றும், 6 வயதான அண்ணன் மூவரும் உயிரிழந்தனர்.

மற்றவர்களின் உயிரைக் காக்க தங்கள் உயிரை இழந்த இந்த இருவரைப்போல், வரலாற்றில் பல்லாயிரம் பேர் உயிர் துறந்துள்ளனர். இவர்கள் அடைந்தது, வீரமரணம் என்று பொதுவாகக் கூறப்படும். ஆனால், இவர்கள் அடைந்த மரணம், வீரத்திற்கும் மேலாக, அன்பை, பரிவை, கனிவை வெளிப்படுத்தியுள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்த அன்பு, பரிவு கனிவு, ஆகியவற்றைக் கொண்டாட, இந்த நல்லாயன் ஞாயிறும், அன்னை தினமும், நம்மை அழைக்கின்றன.

1963ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், நல்லாயன் ஞாயிறை, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்று உருவாக்கினார். இவ்வாண்டு, மே 8, இஞ்ஞாயிறன்று, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 59வது உலக நாள் சிறப்பிக்கப்படும் வேளையில், திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு நமக்கு வழங்கியுள்ளது.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிர்வாகத் திறமை, அறிவுக்கூர்மை, செயலாற்றல், வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப்பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் குணம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே பார்ப்போம்.

உலகத் தலைவர்களிடம், பரிவு, கனிவு, மென்மை ஆகியப் பண்புகளை எதிர்பார்ப்பது வீணானது என்று எண்ணுகிறோம். அரசியல் தலைவர்களைப்போலவே, ஆன்மீகத் தலைவர்களிடமும், நாம், கனிவு, பரிவு ஆகிய குணங்களுக்கு மேலாக, நிர்வாகத் திறமைகளை எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்பது, கவலை தரும் ஒரு போக்கு. தலைவர்களுக்குரிய பண்புகள் என்று, மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை, ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற போக்கு, மறைமாவட்டங்கள், துறவு சபைகள் ஆகியவற்றில் வலுவடைந்து வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, நல்லாயன், அன்னை என்ற இரு உருவங்களை இணைத்துவரும் இஞ்ஞாயிறு, நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நல்லாயன் என்றதும், இயேசு, ஓர் ஆட்டுக்குட்டியை, தன் தோள்மீது, அல்லது, மார்போடு அணைத்து, சுமந்துசெல்லும் அழகான உருவம், நம் உள்ளங்களில், முதலில் பதிகின்றது. ஆனால், உண்மையான ஆயன், தன் ஆடுகளை அழைத்துச்செல்லும் வழியில் சந்திக்கும் ஆபத்துக்களை, அவ்வேளையில் ஆயனிடம் வெளிப்படும் உறுதியை, தியாகத்தை, இந்த ஓவியங்கள் நினைவுறுத்துவதில்லை.
அதேபோல், அன்னை என்றதும், குழந்தையை அணைத்தல், உணவூட்டுதல், தூளியில் தாலாட்டுதல் போன்ற உருவங்களே நம் உள்ளங்களில் முதலில் தோன்றும். அன்னையாக வாழ்வதற்கு, ஒரு பெண் மேற்கொள்ளவேண்டிய போராட்டங்களையும், அந்தப் போராட்டங்களில் பெண்கள் காட்டும் வலிமையையும் நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.

இத்தகைய வீரத்துவ, உறுதிமிக்க உணர்வுகளே, அன்னை தினம் உருவாக காரணமாக அமைந்தன என்பதை, இன்று நாம் கொண்டாடும் அன்னை தினத்தின் வரலாறு நமக்குச் சொல்லித் தருகின்றது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை, 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர், சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர் 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். Mother's Day Proclamation, அதாவது, "அன்னைதின அறிக்கை" என்ற பெயரில் அவர் வெளியிட்ட கவிதை, அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதையில் கூறப்பட்டுள்ள தாய்மைப் பண்புகள், இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன. அன்னை, அல்லது, அம்மா என்றதும், வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக்கிடக்கும் பெண்ணாக, அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில், நல்ல முடிவுகளை எடுக்க, குறிப்பாக, உலக அமைதியை முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்க, பெண்கள், வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று, அக்கவிதை முழங்குகிறது. இதோ, அக்கவிதை:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்: வாழ்வின் மிக முக்கியமானக் கேள்விகளுக்கு, விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை, குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில், உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு, நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.
ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

அன்னையரின் ஒருமித்த தீர்மானங்களை, இவ்வாறு, தெளிவுடன் வெளியிடும் இவ்வறிக்கை, தொடர்ந்து, அமைதிக்காக ஏங்கி, ஒவ்வொரு நாளும் அலறும் பூமித்தாயுடன், அன்னையரின் குரல்களை இணைக்கிறது.
நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள், ஒருநாளும், நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே, பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச்சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும், தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும்.
போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம், அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை, பெண்கள் கலந்து பேசட்டும்.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை, பெண்கள், இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் என்று, இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சி, நமக்கு வேதனை தருகிறது. கண்மூடித்தனமான வெறியுடன், இரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டின் மீதும், இன்னும் சில தீவிரவாதக் குழுக்கள், உலகின் ஒரு சில பகுதிகளிலும் பரப்பிவரும் கொலை நாற்றத்தை நாம் அறிந்துள்ளோம். தீவிரவாதக் குழுக்கள் பரப்பிவரும் கொலை நாற்றத்தைப் போக்க, பல்வேறு நாடுகளில், அரசுகள் மேற்கொள்ளும் இராணுவ முயற்சிகள், தகுந்த பதில்தானா என்பது தெரியவில்லை. பழிக்குப் பழி என்ற தீயை, மன்னிப்பு என்ற மழையே தணிக்கமுடியும். அப்போதுதான், இந்தக் கொலை நாற்றம் இவ்வுலகிலிருந்து முற்றிலும் நீங்கும். மன்னிப்பு மழையைச் சுமந்துவரும் கருணை மேகங்களாக இவ்வுலகில் வலம்வருவது, அன்னையரே என்பதை, யாரும் மறுக்கமுடியாது.

Julia Ward அவர்கள் எழுதிய கவிதையின் இறுதி வரிகள், மே 8, இஞ்ஞாயிறு நாம் கொண்டாடும் அன்னை தினத்தையும், மே 13, வருகிற வெள்ளியன்று, நாம் கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை, பெண்கள், இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

அதிகாரமும், ஆணவமும் நிறைந்த விளாடிமீர் புடின் போன்ற மதியற்ற தலைவர்களின் அடையாளமாக இருக்கும் சீசரின் உருவம், உலகின் மேல் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை, அன்னை மரியா, தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்னரும், பல இடங்களில் தோன்றி, இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக, பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்பவேண்டும் என்பது குறித்தும், சிறப்பான செய்திகளைக் கூறினார். மூன்றாம் உலகப்போரை சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வரும் இன்றைய உலகில், அன்னை மரியா, பாத்திமா நகரில் கூறிய அச்செய்தி, மீண்டும் ஓர் அழைப்பாக நமக்கு ஒலிக்கிறது.

போர்களாலும், வன்முறைகளாலும், தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்கு, தாய்மை, பெண்மை, கனிவு, பரிவு, பொறுமை, ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. தாயின் பரிவோடு தன் ஆடுகளை வழிநடத்தும் நல்லாயனின் திருநாள், அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் ஆகிய மூன்று கொண்டாட்டங்களும், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிக்கொணரும் ஒரு நாளாக, அதன் வழியாக, உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.