29 November, 2010

Swords into Ploughshares… கலப்பைக் கொழுக்களாக மாறும் வாள்கள்

http://doctorno.wazzup.nl/files/2009/11/Beat-Thy-Project-Swords-Into-PLOWSHARES-World-Peace-Now-.JPG

We are beginning yet another liturgical year with the First Sunday of Advent. Any new year brings in the notion of renewal. May this new liturgical year help us renew our resolve to save our lives by saving our planet. The United Nations Climate Change Conference begins on November 29th in Cancun, Mexico. Climate change used to be a natural phenomenon as long as we, human beings, did not tamper with it. Now, with all the carbon emission, our concern for climate change is reaching high levels of panic. There was a time when we were at the beck and call of time and tide, which, we said would not wait for any one. Now, time and tide (climate) seem to be at our mercy. When we look at changes that occur in our climate and the subsequent natural disasters, we tend to think of the world rushing towards doomsday with uncontrolled speed.

Doomsday… the very word floods our minds with doom and destruction. Do the final days of the world bring in only doom and destruction? Prophet Isaiah does not think so. Here is the first reading for this Sunday.
Isaiah 2: 2-5
In the last days the mountain of the LORD’s temple will be established as the highest of the mountains; it will be exalted above the hills, and all nations will stream to it.
Many peoples will come and say, “Come, let us go up to the mountain of the LORD, to the temple of the God of Jacob. He will teach us his ways, so that we may walk in his paths.”
The law will go out from Zion, the word of the LORD from Jerusalem.
He will judge between the nations and will settle disputes for many peoples. They will beat their swords into ploughshares and their spears into pruning hooks. Nation will not take up sword against nation, nor will they train for war anymore.
Come, descendants of Jacob, let us walk in the light of the LORD.

The last days can be seen as doom and destruction or as fulfilment. The scene imagined by the prophet is so comforting and soothing, especially the final verses where he thinks of a world without war. Isn’t this what all of us long for? Right now, a serious situation has arisen between North Korea and South Korea. The situation in most parts of the world is very volatile. Even a small spark is enough to set off a series of wars.
Isaiah’s words are very inspiring as well as challenging. He talks of how destructive efforts (war) can be turned into productive efforts (agriculture). Swords into ploughshares… spears into pruning hooks (sickles). If we can convert all the war gadgets into agricultural gadgets…? If there is no more war training but only training for building up humanity…? This is the desire, the challenge expressed by the prophet. Swords and spears becoming agricultural tools is not a guarantee that war would stop. We have known that even ploughshares and sickles have been used in caste wars in India. Hence, ultimately it is our will power which will pave way for peace and prosperity for all.

The recent visit of the US President to India was a memorable event in many ways. But, underneath all the hype that surrounded this visit, we were constantly reminded that this visit was more for business deals between the US and India, especially ‘war business’. India has signed various deals for 15, 20 or 30 billion dollars worth of war equipments to be imported from the US. My cynical mind thought of the timing of this visit of Barrack Obama. Wasn’t it ironic that Obama’s visit occurred during the festival of Deepavali? During the festival of Deepavali we burn our money in crackers and we ridicule this practice as childish. How do we understand the mindset of the Indian government which has agreed to burn billions of tax dollars in armaments? Childish? Blind chivalry?
The visit of Barack Obama was an occasion to think of our youth with some pride. The meeting between Obama and Mumbai students at St Xavier’s College grabbed the attention of the nation, especially the questions raised by those youngsters. In the recent past I have read of quite a few instances where today’s youth has begun to raise serious questions to the governments, especially about their defence budgets. The budget for education and healthcare in every country seems to be on the dwindling side while the defence budget seems to be doubling and tripling. We don’t need to spend time on statistics… It is enough to say that if only the amount of money spent for our defence, or, at least one tenth or one hundredth of this money is diverted into true developmental activities for the poor, this world would breathe easy without the threat of war. For those who are interested in reading further on military expenditures… Please see the article: Global Military Expenditures - The Rise of the War Machines http://www.thedailystar.net/magazine/2010/01/03/reflections1.htm
The vision that Isaiah has portrayed in the first reading for this Sunday is a good beginning for our Advent… the Season in which we look forward to the Coming of Christ. “He comes, comes ever comes.” (Tagore) He comes in various forms and it is up to us to recognise his coming, his presence in our daily life. This Season is a season to spread hope… to look forward to positive signs in this world. My suggestion to you, dear friends, is this: let us try to think, speak and act positively in our little spheres of life. Let us try and convert swords into ploughshares!



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.



ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். புத்தாண்டு என்றாலே, புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத் திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, பதியதொரு திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிப்போம்.

சென்ற ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு நவம்பர் 29ம் தேதி வந்தது. இவ்வாண்டு அது நவம்பர் 28ம் தேதி வந்துள்ளது. நாள் காட்டியில் வரும் விழாக்கள் பொதுவாக பின்னோக்கி நகரும். ஆனால், காலம் பின்னோக்கி நகருமா? நகராது.
குளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. குளிர் காலத்தில் பகல் நேரம் மிகவும் குறுகி விடும். எனவே, பல நாடுகளில் பகல் ஒளியைக் காப்பாற்றும் நேரம் (Daylight Saving Time) என்ற காரணம் காட்டி, கடிகாரத்தின் முள்ளை ஒரு மணி நேரம் பின்னோக்கித் தள்ளி வைத்துக் கொள்வார்கள். குளிர்காலம் முடிந்து வசந்தம் வந்ததும், கடிகார முள்ளை மீண்டும் பழையபடி திருப்பி வைத்துக் கொள்வார்கள்.
நமது நாள் காட்டியில் திருநாட்கள் முன், பின்னாக வர முடியும்; நமது வசதிக்காக கடிகார முள்ளைத் திருப்பி வைக்க முடியும். ஆனால், காலத்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ தள்ள முடியுமா? முடியாது.
காலம் பின்னோக்கிப் போனால் நன்றாக இருக்குமே என்று நம்மில் பலர் பல நேரங்களில் ஏங்குகிறோம். இல்லையா? நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் இவைகளை மீண்டும் வாழ ஆசைப்படுகிறோம். அவ்வப்போது கற்பனையில், கனவில் அல்லது நாம் பேசிக் கொள்ளும் கதைகளில் இந்தப் பருவத்தை எட்டிப் பார்த்து வருகிறோம். ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.
நம் தனிப்பட்ட வாழ்வில் பின்னோக்கிப் போவதற்கு ஏங்குவது போல், உலக வரலாறும் பின்னோக்கிப் போவதற்கு ஆசைப் படுகிறோம். நம் மூதாதையர் வாழ்ந்த நிம்மதியான வாழ்வை எண்ணிப் பார்க்கிறோம். 'பிரிட்டிஷ்காரன்' ஆண்ட காலம் பிரமாதம் என்றெல்லாம் பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.
நாம் என்னதான் ஏங்கினாலும் காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. அது நிச்சயம். ஆனால், நாம் வாழும் வாழ்க்கை முறையை பின்னோக்கித் தள்ளலாம். நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதென்று உணர்ந்தால், அந்தக்காலத்து வாழ்க்கை முறைக்கு நாம் திரும்பிச் செல்ல முடியும். அது நம் சக்திக்கு உட்பட்டது. இப்படி வாழும் பல குழுக்கள் உலகில் 2010ம் ஆண்டு இருக்கத்தான் செய்கின்றன.
மனித குலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இன்று, இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவைக்கும் அதிகமாகப் பாழடித்து, இயற்கையைச் சீரழித்து வருகிறோம். நமது அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் இயற்கையைத் தேவைக்கும் அதிகமாகச் சுரண்டி வருகிறோம். இந்த அநீதிகளைச் சரி செய்யும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் சிறு சிறு குழுக்கள் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன. குறைவான அளவு எரிபொருளின் பயன்பாடு, சூரிய ஒளி சக்தியின் பயன்பாடு, மறுசுழற்சி என்று பல வழிகளில் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன இக்குழுக்கள். ஒவ்வொரு நாட்டு அரசும் இயற்கையின் மீது இன்னும் சிறிது அக்கறையுடன் செயல்பட்டால் நமது இயற்கையும், உலகமும் காப்பற்றப்படுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன.
பருவ நிலை மாற்றங்கள் குறித்து நவம்பர் 29, Mexico நாட்டில் Cancun நகரில் ஐ.நா. அமைப்பின் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று ஆரம்பமாகிறது. திருவருகைக் காலத்தின் ஆரம்பத்தில் இப்படி ஒரு கருத்தரங்கு நடைபெறுவதை நம் திருவழிபாட்டு கண்ணோட்டத்துடனும் நாம் பார்க்கலாம். உலகம் காப்பற்றப்படுவதைப் பற்றி இன்று நாம் பேச வேண்டும். திருவருகைக் காலத்தின் இந்த முதல் ஞாயிறன்று நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள் இப்படி நம்மை எண்ண வைக்கின்றன பேச வைக்கின்றன.

உலகைக் காப்பாற்றும் முயற்சியில் பல நாடுகளில் இளையோர் விழித்தெழுந்திருப்பது நல்லதொரு அறிகுறியாகத் தெரிகிறது. இந்த முயற்சிகளில் ஒன்றாக, ஒவ்வோர் அரசும் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையைக் குறைப்பது பற்றி இளையோர் குரலெழுப்பி வருகின்றனர். இராணுவத்திற்கு ஆகும் செலவைக் குறைத்து, அத்தொகையைக் கொண்டு மக்களின் வாழ்வுத்தரத்தை, முக்கியமாக, ஏழை மக்களின் வாழ்வுத்தரத்தை உயர்த்த திட்டங்கள் தீட்டுங்கள் என்று இளையோர் பல வழிகளில் குரலெழுப்பி வருகின்றனர். கேட்பதற்கு அற்புதமான நற்செய்தி இது!
அன்புள்ளங்களே, இராணுவச் செலவு பற்றி பல புள்ளி விவரங்களைத் தரலாம். ஒரே ஒரு புள்ளி விவரத்தைத் தர நான் விழைகிறேன்: 2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339 trillion Dollars) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 billion dollars) இராணுவச் செலவுகளுக்கான தொகையில் ஒரு தூசு கூட இல்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் கறுப்புப் பணத்தைப் பற்றி ஒரு ஞாயிறு சிந்தனையில் நாம் சிந்தித்தபோது, ட்ரில்லியன் டாலர்களைப் பற்றி பேசினோம். உலகில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வறியோருக்குப் பகிர்ந்தளித்தால், உலகில் வறுமை என்பதை முற்றிலும் அகற்றலாம், விண்ணக வாழ்வை இவ்வுலகிலேயே ஆரம்பித்து வைக்கலாம் என்று சொன்னோம். அதையே இன்றும் சொல்வோம். உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.

இராணுவத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பெரிய விளக்கம், ஆராய்ச்சி என்று கேள்வி எழலாம். இரு காரணங்கள் உண்டு. முதல் காரணம்: அண்மையில் இந்தியாவிலும் இன்னும் பிற ஆசிய நாடுகளிலும் அமெரிக்க அரசுத்தலைவர் மேற்கொண்ட பயணம் ஒரு காரணம். தீபாவளியை ஓட்டி ஒபாமா இந்தியா வந்ததால், வாண வேடிக்கைகளுடன் அவர் வரவைக் கொண்டாடினோம். இப்பயணத்தை ஒரு பெரும் விழாவைப் போல் நமது ஊடகங்கள் அலங்கரித்தாலும், இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிக்க ஒபாமா முயன்றார். வெற்றியும் கண்டார். அவரது பயணத்தால், அமெரிக்கா இந்தியாவுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களை விற்க உள்ளது. தீபாவளி நேரத்தில் ஒபாமா வந்தது பொருத்தமாகத்தான் தெரிகிறது. தீபாவளி நேரத்தில் வெடிகள், மத்தாப்புக்கள் என்று நாம் கோடிக்கணக்கான மதிப்புடைய காசைக் கரியாக்குகிறோம். அதைக் குழந்தைத் தனம் என்று கடிந்து கொள்கிறோம். ஆனால், பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் இந்திய அரசைப் பார்த்து என்ன சொல்வது?

இராணுவத்தைப் பற்றி நான் பேச இரண்டாவது காரணம் நமது முதல் வாசகம். இந்த வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு இது:
எசா. 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும்.
ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும்.
உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள்.
போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பயிற்சிகள் நடைபெறும்.
அடுக்கு மொழியில் சொல்லப்பட்டுள்ள இந்த அற்புதமான, அழகான கற்பனை, நாம் நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு அல்லது ‘அந்த காலத்திற்குச்’ செல்லும் கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நம் சாதியப் போர்களில் நடந்து வருகிறது.
மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும் போது, கலிகாலம், முடிவு காலம் ஆரம்பித்து விட்டதோ என்று மனம் குமுறுகிறோம். முடிவு என்றாலே, அழிவுதானா? இல்லை. அது நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

முடிவு, இறுதி என்பவைகளை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்றும் பார்க்கலாம். நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் முடிவு காலத்தைப் பற்றி சொல்கின்றன. அழிவும் இருளும் இருக்கும் என்று சொன்னாலும், நம்பிக்கையுடன், விழிப்புடன் இதை எதிர்நோக்கும்படி மூன்று வாசகங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு வாசகத்தின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வரிகள்:
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
எசாயா 2 : 5
இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.
உரோமையர் 13 : 14
ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். மத்தேயு 24 : 44

சென்ற ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் நான் சொன்ன இறுதி வரிகளை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்: அன்பர்களே, இந்த திருவருகைக் காலம் முழுவதும் நம்பிக்கைத் தரும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். நீங்களும் உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்த நல்ல பல சம்பவங்களை, மேற்கோள்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப் பரப்ப முயல்வோம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

25 November, 2010

Walk through the valley; don’t stay there… பள்ளத்தாக்கில் தங்காமல், நடப்போம்...

photo taken from masterprophetblog.com
www.paranormalknowledge.com/.../03/darkness.jpg
All of us have been children and all of us have tackled darkness in different, surely interesting, ways. For instance, when it is dark, the child tends to hold on to the hands of parents or bury her/his face in the bosom of the parent. The child believes that the presence of the parents would drive away darkness.
A few years later, when the little boy or the little girl has to pass through a dark passage, he would whistle away or sing aloud or she would drive her Ferrari down the dark lane… Whether the child holds on to its parent or drives the Ferrari, it does not become less dark. The fear of darkness becomes manageable. I guess the Psalmist is trying to teach us some similar technique to tackle our fear of walking through the valley of darkness and death.
In his chapter on the verse: “Though I walk through the valley of the shadow of death”, Harold Kushner talks of the variation between the original Hebrew and its translation in English. Most Bible scholars agree that the Hebrew text does not speak of “the shadow of death”. In all likelihood, the original Hebrew word was ‘tzalamut’, deep darkness. The Psalmist is saying that, even when he walks in a dark valley, despite the uneasy feeling he and most of us have in the dark, he is not afraid. But the editors of the King James Bible read it as two words, ‘tzal mavet’, the shadow of death, and in a sense they may have understood what the author was trying to say better than the author himself did. It is not the fact of death, but the knowledge that we will one day die, that casts a shadow over our lives.

‘Darkness’ and ‘Shadow’ are rich images and can give us quite many thoughts. Light and darkness are two poles very much apart like Day and Night. They cannot co-exist. But, Light and Shadow can co-exist. Actually, there can be shadow only when there is light. Trying to understand Shadow vis-à-vis Light can give us clarity about ‘the shadow of death’.
It is light which casts shadows. Similarly it is life which brings in the notion of death. Every living being is marked with death. No exceptions. Another aspect of shadow is its size. The closer we go towards the source of light, the bigger our shadow. The farther we go away from the source of light, our shadow shrinks. As we approach light, our shadow falls behind us. As long as we look at the light, we are not bothered about how big or small our shadow is. But, the moment we turn away from the light, the shadow which is huge fills our sight, perhaps frighteningly. Most of us are familiar with the famous quote from the Argus poster series: ‘Look toward the light, and the shadow of your burden will fall behind you.’ – Anonymous.
The more we realise how close we are to death, the more we begin to appreciate life. We spoke of Randy Pausch, and Gitanjali Ghei who have walked through this valley of death with a deep love for life and have left us a trail to follow. They focussed on life, not death. Greg Anderson is still alive teaching us how to live with cancer and not simply die of cancer.

Kushner makes another great observation about the ‘valley of the shadow of death’ citing his own personal example. All of us know that Kushner wrote ‘The Lord Is My Shepherd: Healing Wisdom of the Twenty Third Psalm’ as a response to the great tragedy that shook the U.S. and the world on September 11, 2001 – the WTC attack in New York. But, we are also aware that in quite a few books that he wrote, Kushner has imparted his wisdom in tackling pain. His experience of pain was from his own personal life – the death of Aaron, his fourteen year old son. He talks of how he and his wife walked through the valley of the shadow of death.
“After our son’s death, my wife and I joined a support group for bereaved parents, The Compassionate Friends. It was a lifeline for us when we needed it, and we remain grateful for its help… We discovered how important it was to be with people who understood our emotional need to tell the story over and over again… My wife and I attended for some three to four months and then ‘graduated’, feeling we had gotten what we needed from the group.”
Kushner talks of this group process in the context of explaining one key word in this verse of the Psalm, namely, walk through the valley…” The Psalmist talks of walking through the valley and not staying in the valley. Kushner recalls how he had met some parents in the support group – The Compassionate Friends – who were attending the monthly meetings for ten years. It bothered Kushner that these parents remained in the valley of the shadow instead of finding their way through it.
Kushner then goes on to share a lovely piece of counsel he had given to people who were stuck in the valley of the shadow of death. He says: Like many therapists, I have had occasion to ask a grieving spouse or parent, “Had you been the one to die first, what advice would you have left for your loved one? How would you have wanted him to spend the rest of his life?” The answer has almost always been, “I would have wanted him to miss me, but I would have told him to live as fully as possible, as tribute to the life we shared.” I follow that up with the obvious suggestion that they follow that advice themselves.

Friends, the valley of the shadow of death is there. We cannot wish it away. We can choose to stay there or walk through it. While walking through this, we can be sure that the Shepherd is walking along with us. Let me close with the thoughts and words attributed to Henry Van Dyke on death. This was a fresh perspective on death for me. I do hope it also gives you a new perspective on death:
Gone From My Sight
by Henry Van Dyke

I am standing upon the seashore. A ship, at my side,
spreads her white sails to the moving breeze and starts
for the blue ocean. She is an object of beauty and strength.
I stand and watch her until, at length, she hangs like a speck
of white cloud just where the sea and sky come to mingle with each other.
Then, someone at my side says, "There, she is gone"
Gone where?
Gone from my sight. That is all. She is just as large in mast,
hull and spar as she was when she left my side.
And, she is just as able to bear her load of living freight to her destined port.
Her diminished size is in me -- not in her.
And, just at the moment when someone says, "There, she is gone,"
there are other eyes watching her coming, and other voices
ready to take up the glad shout, "Here she comes!"

And that is dying...

Death comes in its own time, in its own way.
Death is as unique as the individual experiencing it.
http://www.theribbon.com/poetry/gonefrommysight.asp
http://www.poemhunter.com/



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.



குழந்தைகளிடம் இருந்து பல பாடங்கள் கற்றுக் கொள்ளலாம் என்பது நமக்குத் தெரியும். அப்பாடங்களில் ஒன்று இருளை எப்படி சமாளிப்பது என்பது. இருள் சூழும் போது, பெற்றோரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டால், அல்லது அவர்கள் மார்பில் முகம் புதைத்துக் கொண்டால் அந்த இருள் போய்விடும் என்பது குழந்தைகளின் எண்ணம். குழந்தைகள் சிறிது வளர்ந்து சிறுவர்களான பின், இருளைக் கடந்து செல்லும் போது, சப்தமாகப் பாடிக் கொண்டோ அல்லது ஒரு கற்பனைக் காரை ஒட்டிக் கொண்டோ செல்வார்கள். பெற்றோரின் கரங்களைப் பற்றினாலோ, கற்பனைக் காரை ஓட்டினாலோ, இருள் போகாது. ஆனால், இருளின் பயம் போய்விடும். திருப்பாடல் 23ன் ஆசிரியர் வலியுறுத்துவதும் இதுதான்.
இருள், தீய சக்திகள் இவ்வுலகை விட்டுப் போகாது. ஆனால், ஆயனின் துணையிருந்தால், அந்த இருள் தரும் பயம், தீய சக்திகளின் ஆதிக்கம் குறையும். இருள் சூழும் வேளையில் உள் மனதில் ஒளி இருந்தால், இருளைக் கடக்க முடியும் என்று சொல்கிறார் திருப்பாடல் 23ன் ஆசிரியர். "சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும் நான் அஞ்ச மாட்டேன்." என்று கூறும் திருப்பாடல் ஆசிரியருடன் நம் தேடலைத் தொடர்வோம்.

'சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கு' என்ற சொற்றொடரை 'சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கு' என்றும் ஒரு சில விவிலியப் பதிப்புக்களில் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர். இருள், நிழல் என்ற இரு சொற்களும் பல சிந்தனைகளை நம்மில் உருவாக்குகின்றன.
ஒளி மறையும் போது, இருள் தோன்றும் - பகல் முடிந்து இரவு வரும். ஒளியும் இருளும் சேர்ந்திருக்க முடியாது. ஆனால், ஒளியும் நிழலும் சேர்ந்திருக்க முடியும். பார்க்கப்போனால், ஒளி இருந்தால் தான் நிழல் இருக்க முடியும். ஒளியின் ஒரு பகுதிதான் நிழல்.
நிழலின் ஒரு சில அம்சங்களை ஆழமாக ஆராய்ந்தால், "சாவின் நிழல்" என்ற வார்த்தைகளின் ஆழத்தையும் நாம் உணர முடியும். ஒளியில் நாம் நிற்கும் போது, நம் உடலோடு ஒட்டியபடியே இருப்பது நமது நிழல். அதேபோல், உலகில் எந்த ஓர் உயிரும் வாழ்வை ஆரம்பித்ததும், சாவு என்ற உண்மையும் அந்த உயிருடன் ஒட்டிக் கொள்கிறது. எப்படி ஒளியும் நிழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாய் உள்ளனவோ, அதேபோல், வாழ்வு, சாவு இரண்டும் ஒரே உண்மையின் இரு கண்கள்.
நிழலைக் குறித்த மற்றொரு அம்சம் அதன் அளவு. நாம் எவ்வளவுக்கெவ்வளவு ஒளியின் அருகில் நிற்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது நிழலின் அளவு பெரிதாகும். ஒளியை விட்டு நாம் தள்ளி நின்றால், நமது நிழலின் அளவும் சுருங்கிவிடும். ஒளியை நெருங்கும் நாம், ஒளியில் மட்டுமே நமது கண்களைப் பதித்தால், நமக்குப் பின் புறமாய் உருவாகும் நிழல் பூதமாகப் பெருத்தாலும், நம்மை அது பயமுறுத்தாது. ஆனால், ஒளிக்கு மிக அருகில் நின்று கொண்டு, ஒளியைப் பார்க்காமல் திரும்பி நின்றால், பெருமளவு உயர்ந்து, பெருத்துக் காணப்படும் நமது நிழலே நம்மைப் பயமுறுத்தும்.
வாழ்வெனும் ஒளியை அதிகம் நெருங்கி, நேசித்து வாழ்பவர்களுக்கு, சாவெனும் நிழல் எவ்வளவு பெரிதாகத் தெரிந்தாலும், பயத்தை உருவாக்காது. ஒரு சில வாரங்களுக்கு முன் சாவின் நிழல் தங்களைச் சூழ்ந்துள்ளதென்பதைத் தெளிவாகத் தெரிந்து வாழ்ந்த Randy Pausch என்ற பேராசிரியர், Gitanjali Ghei என்ற இளம்பெண் இவர்களைப் பற்றி சிந்தித்தோம். இவர்கள் சாவின் இருள், நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்து அக்கரைக்குச் சென்று விட்டவர்கள். ஆனால், அவர்களைச் சூழ்ந்து நெருக்கிய சாவின் நிழல் அவர்களை பயமுறுத்தாமல் மன நிறைவோடு இந்தப் பள்ளத்தாக்கில் நடந்தவர்கள். எப்படி இந்தப் பள்ளத்தாக்கில் நடப்பது என்று நமக்குச் சொல்லிச் சென்றவர்கள்.
நாம் நெருங்கிச் செல்லும் ஒளி ஆயனாம் இறைவன் தான் என்ற எண்ணம் உள்ளத்தை நிறைத்தால், வேறு எந்த இருளோ நிழலோ நம்மைப் பாதிக்க அதிகம் வாய்ப்பில்லை. Look toward the light, and the shadow of your burden will fall behind you. - Anonymous "ஒளியைப் பார்த்து நில். உன் பாரங்களின் நிழல் உன் பின் விழும்." என்பது நான் அடிக்கடி வாசித்த ஒரு மேற்கோள்.
இதே எண்ணத்தை Khalil Gibran தான் எழுதிய 'The Prophet' என்ற புத்தகத்தில் வேறு விதமாகக் கூறியுள்ளார்:
"சூரியனுக்குத் தங்கள் முதுகைக் காட்டி நிற்கும் மனிதர்களுக்குச் சூரியனால் என்ன பயன்? அவர்களைப் பொறுத்தவரை, அவர்களது நிழலை பூமியில் வரையும் ஒரு கருவிதானே சூரியன்?"

சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கைப் பற்றி Harold Kushner தன் புத்தகத்தில் விளக்கம் தரும் போது, ஒரு முக்கிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். திருப்பாடலின் ஆசிரியர் இந்த வரிகளில் சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்... என்று சொல்லியிருக்கிறாரே தவிர, சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் வாழ்ந்தாலும்... என்று சொல்லவில்லை. பள்ளத்தாக்கில் நடப்பது வேறு, அங்கேயே தங்கிவிடுவது வேறு.
இந்த வேறுபாட்டை விளக்க, Harold Kushner தன் வாழ்வின் ஒரு சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். Harold Kushner "ஆண்டவர் என் ஆயன்" என்ற புத்தகத்தை எழுதுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று 2001ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு இடிந்து, 3000 பேரின் உயிர்கள் பலியான அந்த சம்பவம். இது தவிர, Harold Kushner "ஆண்டவர் என் ஆயன்" என்ற இந்தப் புத்தகத்தையும், துன்பத்தின் விளக்கம் குறித்து இன்னும் ஒரு சில புத்தகங்களையும் எழுத வேறொரு முக்கியமான காரணம் அவரும் அவரது மனைவியும் தங்கள் அருமை மகன் Aaronஐ இழந்ததுதான்.
அரியதொரு வியாதியால் தங்கள் 12 வயது மகனை இழந்த Kushnerஐயும் அவரது மனைவியையும் சாவின் நிழல் சூழ்ந்தபோது, அவர்களுக்கு ஆறுதல் கூற "The Compassionate Friends" என்ற குழு பெரிதும் உதவியது.
இந்தக் குழுவில் இருந்த அனைவரும் தங்கள் குழந்தைகளை, பிள்ளைகளைச் சிறு வயதில் பறி கொடுத்தவர்கள். இவர்கள் மாதத்திற்கு ஒரு முறை கூடி வந்து, தங்கள் வேதனைகளையும் அந்த வேதனைகளைச் சமாளிக்கும் வழிகளையும் பகிர்ந்து வந்ததால், குழுவில் இருந்த அனைவரும் பல வழிகளில் ஆறுதல் அடைந்தனர். புத்திர சோகம்தான் உலகில் ஆழமான சோகம் என்பது நாம் சொல்லும் ஒரு கூற்று. பெற்றோர் உயிரோடு இருக்கும் போது, தங்கள் குழந்தைகளைப் பறி கொடுப்பது பெரும் கொடுமை. அந்தத் தனிப்பட்டக் கொடுமையை உணர்ந்தவர்கள் கூடி வந்து பகிர்ந்தது பெரும்பாலும் வேதனைகள் தாம் என்றாலும், அந்தக் குழுவின் மூலம் தானும் தனது மனைவியும் சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடப்பதற்கு அக்குழுவினர் பெரிதும் உதவினர் என்று Kushner சொல்கிறார்.
அந்தக் குழுவின் கூட்டங்களில் நான்கு, ஐந்து மாதங்கள் கலந்து கொண்ட பின்னர் இருவரும் தங்கள் வேதனையைச் சமாளிக்க பக்குவப்பட்டு விட்டதாகக் கூறுகிறார் Kushner. ஆனால், ஒரு சில பெற்றோர் இக்கூட்டங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் கவலையோடு குறிப்பிடுகிறார் Kushner. இத்தனை ஆண்டுகள் கழித்தும், இவர்கள் சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியுள்ளனரே என்ற தன் ஆதங்கத்தை வெளியிடுகிறார்.

ஒவ்வொருவரின் வேதனையும் வேறுபட்டது... உண்மைதான். அதிலும் நம் வாழ்வின் வேர்களாக இருக்கும், குழந்தைகளை, வாழ்க்கைத் துணையை, பெற்றோரை, உடன் பிறந்தோரை, மிக நெருங்கிய நண்பர்களை இழக்கும் போது, நமது வேதனையின் அளவோ, அந்த வேதனை நீடிக்கும் காலமோ பெரிதும் வேறுபடும். நம் உடலோடு ஒட்டிக் கொள்ளும் நிழலைப் போல், இந்த அன்பு உள்ளங்களின் பிரிவு தரும் வேதனை பிரித்தெடுக்க முடியாதபடி நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றது.
இந்த வலியும், வேதனையும் எவ்வளவு தான் ஆழமானதென்றாலும், நாம் இந்தச் சாவின் பள்ளத்தாக்கில் தங்கிவிட முடியாது, தங்கிவிடவும் கூடாது. அப்படி நாம் தங்குவது இறந்த அந்த உறவுக்கு நாம் காட்டும் சரியான அன்பாக இருக்காது என்று தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் Kushner. தன் அனுபவத்தின் மூலம் இதை விளக்குகிறார் அவர்.
துன்பத்தின் ஆழத்தைக் குறித்து அவர் எழுதியுள்ள புத்தகங்களைப் பலரும் படித்துள்ளதால், தங்கள் துன்பத்தை விட்டு, சாவின் இருள் சூழ்ந்த அந்தப் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறும் வழிகளை மக்கள் Kushnerஇடம் கேட்பார்கள். அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, அவர் அவர்களிடம் வேறொரு கேள்வியைக் கேட்பார்: "இறந்துபோன உங்கள் அன்புள்ளத்திற்குப் பதிலாக, ஒருவேளை, நீங்கள் இறந்திருந்தால், உங்கள் இறப்பிற்குப் பின் அந்த அன்புள்ளம் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?" என்று Kushner கேட்பார். அவர்களில் பலர் சொல்லும் பதிலையும் தன் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் நமக்கும் தெரிந்த பதில் தான்... அதாவது: "என்னுடைய சாவு உனக்குப் பெரும் வேதனையாக இருக்கும். ஆனால், அந்த வேதனையிலேயே நீ தங்கிவிடக் கூடாது. நாம் வாழ்ந்த அன்பான, முழுமையான வாழ்வை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் நான் உயிரோடு இருந்தபோது நாம் வாழ்ந்த வாழ்வை நீ தொடர வேண்டும். அதுதான் நீ என் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாக இருக்கும்." இதுதான் அவர்களில் பெரும்பாலனவர்கள் சொல்லும் பதில். இப்படி அவர்கள் சொல்லும் அந்த அழகானப் பதிலை அவர்களே வாழும்படி Harold Kushner அறிவுரை சொல்வாராம்.

சாவின் நிழலும், இருளும் சூழ்ந்த பள்ளத்தாக்கு வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான். இந்தப் பள்ளத்தாக்கினை பிறக்கும் ஒவ்வொருவரும் கடந்தே ஆக வேண்டும். ஆனால், இந்தப் பள்ளத்தாக்கின் வழி நாம் நடக்க வேண்டும், இங்கேயேத் தங்கிவிட கூடாது, தங்கிவிட முடியாது. இந்தப் பள்ளத்தாக்கின் பயணத்தில் அஞ்சாமல் நாம் நடக்க ஆயன் நம்முடன் வழி நடக்கிறார். மறந்து விட வேண்டாம்.
மரணத்தைக் குறித்து மறை போதகரும், கவிஞருமான Henry Van Dyke சொல்லியிருக்கும் அழகான எண்ணங்கள் இவை:
கடற்கரையில் நான் நிற்கிறேன். என் கண் முன் கப்பல் ஒன்று பாய்மரம் விரித்து, தன் கடல் பயணத்தைத் துவங்குகிறது. நேரம் செல்லச் செல்ல, அது உருவத்தில் சிறுத்து, ஒரு சிறு புள்ளியாக மாறி, தொடுவானத்தில் மறைகிறது. "அதோ, அவள் போய்விட்டாள்." என்று அருகிலிருந்தவர் சொல்கிறார்.
"எங்கே போய்விட்டாள்?" இது எனக்குள் எழுந்த கேள்வி. என் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள். அவ்வளவு தான். அவள் குறைந்துவிட்டாளா? அழிந்துவிட்டாளா? இல்லை.
அவளைப் பொறுத்தவரை அவள் இக்கரையிலிருந்து கிளம்பிய போது, எவ்வளவு பெரிதாக இருந்தாளோ, அதே அளவு தான் இன்னும் இருக்கிறாள். அவள் குறைந்ததுபோல், ஒரு புள்ளியாய் மாறி, மறைந்தது போல் தெரிந்ததெல்லாம் என் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களே தவிர, அவளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல.
பார்வையிலிருந்து கப்பல் மறைந்ததும், "அதோ, அவள் போய்விட்டாள்." என்று அருகிலிருந்தவர் சோகத்துடன் சொன்ன அதே நேரம், வேறொரு கரையில் நிற்கும் இன்னொருவர் அவள் வருவதைக் கண்டு ஆனந்தத்தில் "இதோ அவள் வருகிறாள்." என்று சொல்லியிருப்பார். இதுதான் மரணம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

21 November, 2010

Lessons from a criminal… குற்றவாளி கற்றுத்தரும் பாடங்கள்

Jesus Crowned

Loyola College, Chennai, where I served for the past fifteen years, can be proud of so many assets. The Church of Christ the King, at the centre of the campus, is surely one of the best, if not THE best, among those assets. The larger-than-life-size figure of Christ, standing above the main altar with his majestic robe is very impressive. A few years back a life-size statue of the crucified Christ was placed on the left of the altar at ground level. I have seen many students and others standing at the foot of the cross, touching the feet of the crucified Christ and praying.
The Feast of Christ the King brings to mind these two statues in Loyola Church. While Christ the Crucified is so accessible, Christ the King stands beyond easy reach. There is, perhaps, a lesson to be learnt in how these two statues are placed. I have a peculiar fantasy: Suppose I take Jesus to Loyola Church and show him both these statues and ask him which one of these two statues would be his favourite… or which one of them would truly represent the Kingship of Christ… he would simply smile at me and ask, “Have you read today’s Gospel?”
Yes, dear friends, not only the Gospel for this year, but the Gospel passages prescribed for the Feast of Christ the King in all the three cycles A, B, and C give us a clear picture of what this feast is all about. Today’s gospel is a scene taken from Calvary (Luke 23: 35-43). Last year’s Gospel was the trial scene of Jesus with Pilate taken from John (18: 33-37) and next year’s Gospel talks of the Last Judgement from the Gospel of Matthew (25: 31-46). In all the three Gospels, there is hardly a hint of pomp and glory. That is the core of this Feast.

All through the life of Christ he avoided, like plague, the idea of being made a king. Right now five instances flash across my mind. The first one is from Matthew. Soon after Jesus was born, the wise men from the East came looking for the ‘King’. Although the star was leading them, their own pre-conceived notions of a king must have taken them to Jerusalem and to Herod’s palace. The capital city and the palace of the king… where else can one look for a king? They asked Herod: “Where is the one who has been born king of the Jews? We saw his star when it rose and have come to worship him.” (Matthew 2: 2) Their innocent question set in motion the massacre of the Holy Innocents.
The second instance of Christ facing the danger of becoming a king is reported by John. Jesus had fed thousands of people through a miracle. After the people saw the sign Jesus performed, they began to say, “Surely this is the Prophet who is to come into the world.” Jesus, knowing that they intended to come and make him king by force, withdrew again to a mountain by himself. (John 6: 14-15)
The third occasion was on the streets of Jerusalem as recorded in all the four Gospels. The next day the great crowd that had come for the festival, heard that Jesus was on his way to Jerusalem. They took palm branches and went out to meet him, shouting, “Hosanna! Blessed is he who comes in the name of the Lord! Blessed is the king of Israel!” (John 12: 12-13)
Both in the second as well as the third instances Jesus knew full well that his people were looking for quick solutions to their problems and hence were swayed by the frenzy of the moment. Such ‘loyalty’, Jesus knew, would vanish at the first sign of a hurdle. It came within days of the glorious entry of Jesus into Jerusalem. The very same streets which resounded with ‘Hosanna’ either fell silent or turned hostile when Jesus was carrying his cross… Talk of the ‘loyal’ brigade which would fight for this King!
The fourth instance of Jesus facing the idea of kingship was in front of Pilate. We reflected on this passage last year. “You are a king, then!” said Pilate. Jesus answered, “You say that I am a king. In fact, the reason I was born and came into the world is to testify to the truth. Everyone on the side of truth listens to me.” (John 18: 37) Jesus was trying to tell Pilate how he was mistaken in calling him a king. But Pilate was too pre-occupied with how he should please his emperor, Caesar.

The fifth instance is given in today’s Gospel (Luke 23: 35-43). Jesus was hanging on the cross. The inscription over his head read: Jesus of Nazareth, King of the Jews! What an irony! What Jesus was running away from all his life is now nailed along with him on the cross. On Calvary that day his kingship was ridiculed by the Roman soldiers. These soldiers had a clear idea of a king or an emperor. They had served quite a few of them. This man on the cross? A king? Humour me… They must have laughed their heart out, if they had one.
In the midst of such noisy ridicules and taunts, came the feeble voice of one of the crucified persons with a petition to the King: “Jesus, remember me when you come into your kingdom.” (Luke 23: 42) When those around Jesus could not even recognise a human being in the form of the crucified one, how come this man saw a King?
We have heard from history that some of the kings and leaders, by the dignity they showed in times of great trials, even as they walked to their gallows, have earned the respect of their worst enemies. Such was their nobility! They were truly kings! The magnanimity shown by Jesus on the cross must have influenced the ‘good thief’ to submit such a beautiful petition to the King.

In all these five instances of the Gospels, we hardly see Jesus responding to any of them (except in the case of Pilate… and since Pilate was scared of facing the ‘truth’, Jesus could not make any honest impression on him!). In this instance Jesus responded to the ‘good thief’… and what a response! Jesus answered him, “Truly I tell you, today you will be with me in paradise.” (Luke 23: 43) Jesus exercised his regal power to assure the criminal of eternal redemption. The criminal gives us a lesson in how to look for Christ the King and his Kingdom. We pray that God, the Eternal King, helps us become humble enough to learn the lessons given by the criminal.

Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் பணி புரிந்த சென்னை லொயோலா கல்லூரியின் மையத்தில் அமைந்துள்ள ஓர் அழகான கோவில் கிறிஸ்து அரசர் ஆலயம். அந்த ஆலயத்தில் பீடத்திற்கு மேல் நிறுவப்பட்டுள்ள கிறிஸ்து அரசரின் திருஉருவம் பிரம்மாண்டமாக இருக்கும். அரசருக்குரிய ஓர் ஆடம்பரமான உடையுடன், தன் இரு கைகளையும் விரித்தபடியே கிறிஸ்து நிற்கும் உருவம் அது. அதே கோவிலில் பீடத்தின் இடது பக்கம் சிலுவையில் இரு கைகளையும் விரித்தபடி தொங்கும் இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம் தரைமட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பலர் அந்த உருவத்தின் கால்களைத் தொட்டபடி, கண்களை மூடி நின்று செபிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பீடத்தின் மேல், உயரத்தில் உள்ள பிரம்மாண்டமான கிறிஸ்து அரசரின் திருஉருவத்தை அவ்வளவு எளிதில் யாரும் தொட்டு விட முடியாது. அத்திருஉருவத்தைத் துடைத்து சுத்தம் செய்ய, ஏணி போட்டு ஏறி முயற்சிகள் செய்ய வேண்டும்.
நான் அந்தக் கல்லூரியில் பணி செய்தபோது மனதில் தோன்றாத ஓர் எண்ணம் இப்போது எழுகிறது. கிறிஸ்து அரசரின் உருவம் எட்டாத தூரத்தில் இருப்பதும், சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவம் மக்களின் கரங்கள் பட்டுத் தேய்ந்திருப்பதும் நமக்கு ஏதாவது பாடங்களைச் சொல்கிறதோ என்று நினைத்துப் பார்க்கிறேன்.
இயேசுவை இந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்று, கிறிஸ்து அரசர் உருவம், சிலுவையில் தொங்கும் உருவம் இரண்டையும் காட்டி, இவ்விரு உருவங்களில் அவருக்கு மிகவும் பிடித்த உருவம், அல்லது அவரது அரசத் தன்மையைக் காட்டும் உருவம் எது என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார் என்றறிய எனக்கு சிறிது ஆர்வம். இதற்குரிய பதிலை இயேசு நேரடியாகக் கூறாமல், இன்றைய நற்செய்தியை வாசித்துப் பாருங்கள் என்று அவர் கூறலாம்.
இன்றைய நற்செய்தி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கான நற்செய்தியை வாசிக்கும் போது, இவ்விழாவின் மையப் பொருளை, ‘கிறிஸ்து அரசர்’ என்ற பட்டத்தின் பொருளை அறிந்து கொள்ள முடியும். இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது கல்வாரி காட்சி. சென்ற ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்ட வாசகம் பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள வாசகம் இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும் போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர்... அந்த நிகழ்வுகள் இப்போது மனதில் நிழலாடுகின்றன. நற்செய்தியில் இயேசுவை அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள் கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்தனர். அவர்கள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர் உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே அரசர்கள் தங்கும் நகரான எருசலேமுக்குச் சென்றனர். ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். (மத்தேயு 2: 2) கள்ளம் கபடில்லாமல் அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி பல நூறு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்கி விட்டது.
இரண்டாவது சம்பவம் யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச் செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)
மூன்றாவது சம்பவம் - எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)
வயிறார உண்டதால் வந்த ஆர்வம் இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில் ஆரவாரமாய் ‘ஓசன்னா’ அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வம், ஆரவாரம் நிலைத்திருக்காது என்பது சில நாட்களிலேயே நிரூபணமானது. எந்த வீதிகளில் இயேசுவுக்கு அரச மரியாதை கொடுக்கப்பட்டதோ, அதே வீதிகளில் அவர் சிலுவை சுமந்து சென்ற போது, அந்தக் கூட்டம் பயந்து ஒதுங்கியது, அல்லது இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்து விட்டது.
நான்காவது சம்பவம் இயேசுவின் விசாரணைகளின் போது நடந்தது. இயேசுவை அரசர் என்று பிறர் கூறிய வதந்திகளால் பயம் கொண்ட பிலாத்து, இயேசுவிடமே “நீர் அரசரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டு பிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்தச் சம்பவத்தை சென்ற ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

‘அரசர்’ என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு கல்வாரியில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக் கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.
உரோமைய வீரர்கள் இதுவரை பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்கு பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில் குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு ஒரு பரிதாபமான, போலி அரசனாய் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில் அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்." என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஏளனக் குரல்களுக்கு நேர் மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல் இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்”. (லூக்கா 23: 42)
சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை மனிதன் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சூழ்நிலையில், இந்தக் குற்றவாளி இயேசுவை ஓர் அரசனாக எப்படி காண முடிந்தது? அவர் இயேசுவிடம் கண்ட அரசத் தன்மை என்ன?
உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்ட போது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்ட வைத்தது என்று வரலாறு சொல்கிறது.
முடி சூடா மன்னர்களான காந்தி, மார்டின் லூத்தர் கிங், ஓமர் முக்தார், Joan of Arc போன்ற தலைவர்களும் தங்கள் எதிரிகளின் ஆழ்ந்த மரியாதையைப் பெற்றவர்கள் என்பது நமக்குத் தெரியும்.
அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை இயேசுவிடம் கண்டார் இந்தக் குற்றவாளி. அவர் கண்களில் இயேசு அறையுண்டிருந்த சிலுவை ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தார் அந்தக் குற்றவாளி.

இதுவரை நாம் சிந்தித்த மற்ற ஐந்து நிகழ்வுகளிலும் இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். இவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டு கொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததனால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார் இயேசு.
இயேசு நமக்கும் இந்த உறுதியைத் தருகிறார். தன் பேரின்ப வீட்டில் நமக்கும் இடம் தர நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பை ஏற்பதற்கு நாம் சிலுவையில் தொங்கிய குற்றவாளியிடமிருந்து பாடங்கள் பயில வேண்டும். கிறிஸ்து அரசரைப் பற்றிய, அவரது அரசைப் பற்றிய பாடங்கள் இவை: இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். இந்த அரசில் அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த மன்னர்கள் மத்தியில் இயேசு ஒரு மாமன்னராய் அமர்ந்திருப்பார் என்று தேடினால், நமக்கு ஏமாற்றமே காத்திருக்கும். ஏனெனில், இயேசு அரியணையில் அமர்ந்திருக்க மாட்டார். அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, அதன் விளைவாக தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நம் கவிஞன் ஒருவனின் கனவு நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட கனவு நனவாகும் ஒரு திருநாள் கிறிஸ்து அரசர் பெருவிழா.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

18 November, 2010

Walking through the valley of death… சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்…

From Suprada Urval Photoblog

We are venturing into the 4th verse of Psalm 23… Venturing? Sounds a bit hyped and pompous? I have a reason to use this term. The Psalmist is talking about walking through a valley, a valley of darkness, a valley of the shadow of death… Here is the 4th verse from Psalm 23:
Even though I walk through the valley of the shadow of death,
I will fear no evil, for you are with me;
your rod and your staff, they comfort me.
If you look back on the last four reflections of mine during the month of November, I have been dwelling on life, death and afterlife. Once again, I am going to talk about death. Is this a spell cast by November? To some extent, yes. Most of us feel comfortable speaking about life in its various aspects. But the moment the word ‘death’ is mentioned, many of us recoil, change topic. We consider ‘death’ as an inauspicious term, an unpleasant idea.

When I was reading through Harold Kushner’s explanation of Psalm 23:4 in his book “The Lord Is My Shepherd”, I came across the reference to another book “Will the Circle be Unbroken? Reflections on Death, Rebirth and Hunger for a Faith” written by Studs Terkel. Here is what Terkel says about his book: “My works had all been concerned with life and its uncertainties rather than death and its indubitable certainty. But what about the one experience none of us had, yet all of us will have: death? We, as a matter of course, only reflect on death, voice hope and fear, when a dear one is near death, or out of it. Why not speak of it while we’re in the flower of good health? How can we envision our life, the one we now experience, unless we recognize that it is finite?”

This book was published in 2001. All of us know that 2001 was a special year. Both 2000 and 2001 were looked upon with mixed feelings… feelings of impending disaster as well as hopeful future. On 11th September 2001 the twin towers of the WTC, New York were destroyed by two planes in the full glare of the horrified world. The impact this event had on the collective consciousness of the world, especially of the U.S., resulted in quite a few books. The book ‘The Lord Is My Shepherd’ written by Harold Kushner was one of those books that came as a response to this tragedy. ‘Will the Circle be Unbroken?’ was also, possibly, a response to 9/11.
The few pages of this book I could peek into through the internet were quite deep. Here is how Terkel begins his introduction to this book: “I’VE COURTED DEATH ever since I was six. I was an asthmatic child. With each labored breath, each wheeze, came a toy whistle obbligato. At my bedside, my eldest brother, to comfort me, would whistle back “I’m Forever Blowing Bubbles,” in cadence with my breathing. It was funny, and pleasing, but not much help.”
In this book Terkel has recorded the thoughts of 63 people from various walks of life. The first chapter talks of the memoirs of a retired fireman, Tom Gates and his brother Bob Gates, a New York police officer. Here are the opening lines of Tom Gates: “I’M SIXTY YEARS OLD! I just made a will out, and I feel much better… Life and death? I never felt so alive as when you’re a firefighter. To go into a fire with the heat and the fear of people’s lives on the line…” I guess the whole book is a great recollection on how those 63 persons walked through ‘the valley of the shadow of death’. I am dying to read it!

One of those persons interviewed by Studs Terkel is Father Leonard Dubi. He tells Terkel, “I don’t fear death, I fear dying. I fear the kinds of dying I’ve seen people experience, terribly painful moments, moments when they’re alone.” Yes… one of the deepest fears of death is dying alone. Although the death bed may be surrounded by many, the dying person will have to go it alone.
A person can respond to the inevitability of death in one of several ways. “He can choose the path of self-indulgence, saying to himself, Eat, drink and make merry for tomorrow I may die. He can respond with despair, thinking, What is the point of doing anything since nothing lasts?, like the author of the biblical book Ecclesiastes, or like Woody Allen’s recollection of himself in one of his films as a child who proclaims ‘What’s the point of doing homework?’ after learning that the sun is going to disappear and all life will end in six billion years. Or he can choose to say to himself, Since my days are limited, let me make the most of them…” (Harold Kushner)

The fact of having to leave this world alone is the greatest obstacle in facing death peacefully. Loneliness is not a strange feeling for a modern person. We are immersed in loneliness in its myriad forms. We have hundreds of songs that talk of, sometimes even glorify, loneliness. We are also sadly aware that some of these songs have suggested escape routes to loneliness in the form of drugs. Studs Terkel quotes the song as sung by Richard Dyer-Bennett in the opening pages of his book:
You’ve got to cross the lonesome valley,
You’ve got to cross it by yourself,
There ain’t no one can cross it for you,
You’ve got to cross it by yourself.
What Bennett has sung sounds very different from, if not, the exact anti-thesis of what the Psalmist says.
Even though I walk through the valley of the shadow of death,
I will fear no evil, for you are with me;
your rod and your staff, they comfort me.


The Psalmist gives us the hope that we are not in this alone. The Shepherd is with us.



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.



திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். நவம்பர் மாதத்தில் நாம் இதுவரை பகிர்ந்து வந்துள்ள விவிலியத் தேடல் மற்றும் ஞாயிறு சிந்தனை பகுதிகளில் நமது வாழ்வு ஒரு பயணம், இப்பயணத்தின் இறுதியில் வருவது மரணம். மரணம் மறுவாழ்வைத் திறக்கும் கதவு... என்று சிந்தித்து வந்துள்ளோம். இன்று மீண்டும் வாழ்வின் முடிவைப் பற்றி சிந்திக்க திருப்பாடல் 23ன் வரிகள் வழியாக ஒரு வாய்ப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது.
“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.”

சாவு, மரணம் என்று யாராவது பேச ஆரம்பித்தால், "வேறு ஏதாவது நல்லவைகளைப் பற்றி பேசுவோமே" என்பது தான் நமது முதல் எண்ணம், முதல் பதில். சாவு, மரணம் என்பவை ஏதோ நல்லவைகள் இல்லாத, அமங்கலமான சொற்கள், எண்ணங்கள் என்பது நம் கணிப்பு. ஆனால், சாவு, மரணம் இவைகளையும் நல்லதொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தப் பார்வை நமது வாழ்வைக் குறித்து பல தெளிவுகளை உண்டாக்கும்.
"நாமோ, அல்லது நமக்கு நெருங்கிய ஒருவரோ ஒர் இறுதி நிலைக்கு வந்துவிடும் நேரங்களில் தாம் நாம் பெரும்பாலும் மரணத்தைப் பற்றி நினைக்கிறோம். அந்த நேரங்களில் மனதில் பயம், கலக்கம் போன்ற உணர்வுகளே அதிகம் உண்டாகும். நல்ல உடல் நிலையுடன் இருக்கும் போது, எந்த வித படபடப்பும் இல்லாமல் மரணத்தைப் பற்றி ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை? மரணம் என்ற ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணராமல், வாழ்வைப் பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை எப்படி பெற முடியும்?" இந்த எண்ணங்களைக் கூறுவது Studs Terkel என்ற அமெரிக்க எழுத்தாளர்.

Studs Terkel 2001ம் ஆண்டு எழுதிய ஒரு நூலின் தலைப்பு: “Will the Circle be Unbroken? Reflections on Death, Rebirth and Hunger for a Faith”. இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? - மரணம், மறுவாழ்வு, மறு ஜென்மம், விசுவாசம் பற்றிய சிந்தனைகள். 2001ம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு. பலர் இந்த உலகம் அழியப் போகிறதென்று எதிர்பார்த்த ஓர் ஆண்டு. வேறு பலர் இந்த உலகம் புதியதொரு யுகத்தை ஆரம்பித்துள்ளதென்று கூறிவந்த ஆண்டு. அந்த ஆண்டு செப்டம்பர் 11 நடந்த நிகழ்வு உலகில், சிறப்பாக அமெரிக்காவில், பலருக்கும் வாழ்வின் ஒரு முக்கியமான உண்மையைச் சிந்திக்க வைத்தது. நியூயார்க்கில் இருந்த இரு வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டு, ஏறக்குறைய 3000 பேர் கொல்லப்பட்டனர். இந்த அழிவு பட்டப் பகலில் நடந்ததால், பல வீடியோ காமிராக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எனவே, மிக ஆழமான தாக்கங்களை மக்கள் மனதில் உண்டாக்கிச் சென்றது. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத மரணத்தைப் பற்றி பல சிந்தனைகளை உருவாக்கிச் சென்றது. இப்படி எழுந்த பல சிந்தனைகள் புத்தக வடிவில் வெளிவந்தன. திருப்பாடல் 23ன் விவிலியத் தேடல்களில் நாம் அடிக்கடி குறிப்பிட்டு வரும் Harold Kushnerன் “ஆண்டவர் என் ஆயன்” என்ற புத்தகமும் இந்த நிகழ்வின் பின்னணியில் எழுந்ததென அதன் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இப்படி வெளிவந்த புத்தகங்களில் ஒன்றுதான் Studs Terkel எழுதிய இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற இந்தப் புத்தகம். 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகத்தில் 63 பேரின் எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன. மரணம், மறுவாழ்வு, மறுஜென்மம், விசுவாசம் என்ற பல எண்ணங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"எனக்கு அறுபது வயதாகிறது. அண்மையில்தான் நான் என் உயிலை எழுதி, பதிவு செய்தேன். நிம்மதியாக இருக்கிறது. நான் தீயணைப்புத் துறையில் பணி செய்ததனால், வாழ்வு, சாவு என்ற எண்ணங்கள் அடிக்கடி எனக்கு எழுந்ததுண்டு. இத்துறையில் பணி செய்த காலத்தில் வாழ்வின் மீது அதிகப் பிடிப்புடன் வாழ்ந்திருக்கிறேன். நெருப்புக்குள் நுழைந்து... அங்கு மரண பயத்துடன் காத்திருந்த மக்களைக் கண்டபோது, அவர்களைக் காப்பாற்றிய போது, நான் அதிகம் வாழ்ந்ததாய் உணர்ந்திருக்கிறேன்."
தீயணைப்புத் துறையில் பணி புரிந்த Tom Gates என்பவரின் இந்தக் கூற்றுடன் ஆரம்பமாகிறது இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற இந்த நூல். மருத்துவர்கள், மதகுருக்கள், மரண தண்டனை பெற்று விடுதலை பெற்ற ஒருவர், Hiroshima அணுகுண்டு அழிவிலிருந்து தப்பித்த ஒருவர், துப்புரவுத் தொழிலாளி என்று வாழ்வின் பல நிலைகளில் உள்ள 63 பேர் மரணத்தை, மறு வாழ்வைப் பற்றி சொல்லியுள்ள எண்ணங்கள் இப்புத்தகத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இந்நூலில் Father Leonard Dubi என்ற கத்தோலிக்கக் குருவின் உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணம் குறித்து அவர் பேசுகையில், “மரணம் என்ற எண்ணம் எனக்குப் பயமளிக்கவில்லை. ஆனால் மரணிப்பது என்பது, சாவது என்பது பயத்தை உண்டாக்குகிறது. மற்றவர்கள் இறப்பதைப் பார்த்திருக்கிறேன். அத்தனை பேர் சூழ்ந்து நின்றாலும், அந்த இறுதிப் போராட்டம் ஒவ்வொருவரும் தனியே மேற்கொள்ளும் போராட்டம் என்பதை எண்ணும்போது பயம் ஏற்படுகிறது” என்று கூறுகிறார்.
“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்…” என்று திருப்பாடலின் ஆசரியர் கூறியுள்ளது இதுதானோ? அந்த இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இறுதியில் நாம் ஒவ்வொருவரும் தனியேதான் நடந்து செல்ல வேண்டும். இந்த இருளை, தனிமையை நாம் எப்படி சந்திக்கப் போகிறோம் என்பது மரணத்தைப் பற்றிய பல பயங்களை, தயக்கங்களை நமக்குத் தெளிவுபடுத்தும்.

மரணத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மூவகை உணர்வுகளை வளர்க்கலாம். ஒரு நாள் சாகத்தான் போகிறோம். அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம்... என்று சுயநலத்தைத் தூண்டி விடும் உணர்வு ஒரு வகை. விளம்பர, வியாபார உலகம் இந்த உணர்வுகளைத் தூண்டி விட்டு இலாபம் சம்பாதிக்கின்றன.
என்னதான் நல்லவைகளைச் செய்தாலும், எல்லாமே ஒரு நாள் அழியத்தான் போகிறது... பின் ஏன் நல்லவைகளைச் செய்ய வேண்டும் என்ற விரக்தி உணர்வு இரண்டாவது வகை. சிறுவன் ஒருவன் தன் வீட்டுப்பாடங்களைச் செய்ய மறுக்கிறான். அப்பா ஏன் என்று காரணம் கேட்கிறார். “ஓ, இன்னும் அறுபது கோடி ஆண்டுகளில் உலகம் அழியத் தான் போகிறது... பின் எதற்கு நான் வீட்டுப்பாடங்கள் செய்யவேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்கிறான் சிறுவன். எல்லாமே அழியும் என்பதால், நல்லவைகள் செய்வதை மறுப்பது இரண்டாம் வகை உணர்வு.
இதற்கு நேர் மாறாக, எல்லாமே அழியத் தான் போகிறது... அதற்கு முன் உள்ள நேரத்தில் என்னால் முடிந்த வரை நல்லது செய்வேன் என்பது நம்பிக்கையை வளர்க்கும் மூன்றாம் வகை உணர்வு. இந்த நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் திருப்பாடலின் ஆசிரியர் இவ்வரிகளைக் கூறுகிறார்.

Father Leonard Dubi சொன்னது போல், மரணத்தைச் சந்திக்க நமக்குள்ள பெரும் தடை, தனிமை என்ற பயம். விரைவாக, இயந்தர கதியில் செல்லும் இன்றைய உலகில் தனிமை பலரையும் பாதிப்பது உண்மை. இன்றைய உலகில் நிலவும் தனிமையை மிகைப்படுத்தி, பெரிது படுத்தி, பல நேரங்களில் பெருமைப்படுத்தி பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. சிறப்பாக, இளையோர் விரும்பும் வகையில் Jazz அல்லது Rock இசையில் வெளிவந்துள்ள இந்தப் பாடல்கள், தனிமையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்ற ஆழமான உணர்வை ஏற்படுத்தும் பாடல்கள். இந்தப் பாடல்களில் ஒரு சில, இந்தத் தனிமையை நீக்க சொல்லித் தரும் தீர்வு... போதைப் பொருட்கள். பல இளையோர் இந்தப் பாடல்களால் உந்தப்பட்டு, போதை வழியில் தங்கள் வாழ்வைத் தொலைத்திருப்பதும், பல இளையோர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதும் கசப்பான ஓர் உண்மை.

தனிமை உணர்வை மிகைப்படுத்தும் நெருடலான வரிகளை இந்த வட்டம் உடையாமல் இருக்குமா? என்ற புத்தகத்தின் துவக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் Studs Terkel. அப்பாடலின் வரிகள் இவைதாம்:
You’ve got to cross that lonesome valley,
You’ve got to cross it by yourself,
There ain’t no one can cross it for you,
You’ve got to cross it by yourself.

-as sung by Richard Dyer-Bennett

தனிமை நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கினை நீ தனியேதான் கடக்க வேண்டும்.
உனக்காக இந்தப் பள்ளத்தாக்கினை வேறு யாரும் கடக்க முடியாது.
நீ மட்டுமே அதைத் தனியே கடந்தே ஆக வேண்டும்.

ஆனால், திருப்பாடல் 23ன் 4ம் திருவசனம் சொல்வது இதற்கு நேர்மாறான, நம்பிக்கை தரும் எண்ணங்கள்... “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.” இறைவனின் துணை எப்போதும் இருக்கும், முக்கியமாக, சாவின் இருள் சூழும் போது இறைவனின் துணை என்னுடன் இருக்கும். இந்த நம்பிக்கை சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல. வாழ்வின் பாதையிலும் நம்மை வழி நடத்த ஆயனாம் இறைவனை வேண்டுவோம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

15 November, 2010

In the Final Analysis… வாழ்வு போகின்ற திசை

Apocalypse

On November 14th, India celebrates Children’s Day as a tribute to Jawaharlal Nehru, the first Prime Minister of India, who was born on Novemebr 14th, 1889. We can surely spend the whole day talking of children. I shall confine myself to a few thoughts shared by Antoine de Saint-Exupéry in his great parable ‘The Little Prince’ (translated by Richard Howard):
All grown-ups were children first. (But few remember it).
Grown-ups never understand anything by themselves, and it is exhausting for children to have to provide explanations over and over again.
Grown-ups like numbers. When you tell them about a new friend, they never ask questions about what really matters. They never ask: "What does his voice sound like?" "What games does he like best?" "Does he collect butterflies?" They ask: "How old is he?" "How many brothers does he have?" "How much does he weigh?" "How much money does his father make?" Only then do they think they know him.

http://generationterrorists.com/quotes/the_little_prince.html



We have come to the end of another liturgical year. Next Sunday we shall celebrate the Feast of Christ the King and the week after, we begin a new liturgical year with Advent. When we began this liturgical year last November, we were given a passage from Luke 21 (verses 25-28; 34-36). As we close the liturgical year, we are given a passage, again, from Luke 21 (verses 5-19). Both talk of end of the world… Is this the best way to begin and end a liturgical year? Talk of the frightening end? I am not a great fan of the frightening part of the end, as most Hollywood films revel in. But, I do believe that the thought of our end, whether imminent or far off, can surely put things in perspective. As I had mentioned in my last reflection on Psalm 23, if only all of us know that we are all pilgrims on earth, so many problems would be solved.

Today’s Gospel begins with Jesus standing in Jerusalem temple and predicting how that magnificent structure would be destroyed. It requires lots of courage for anyone to do this – stand right in the middle of the holiest spot for the Israelites and tell them that it would be totally destroyed. One can easily assign this courage (call it bravado?) of Jesus to his divine quality of knowing past-present-and-future. But, we can also see it as part of our way of ‘seeing the future’. Most of us do have premonitions of our own or some one else’s life from the way that life is led. The same premonition can be had for an institution too, by the way it is run. Jesus, from the age of twelve, must have been intrigued by the commercialism that surrounded the temple of Jerusalem. At the age of 33, he felt he had enough of that and he tried his best to cleanse the temple (Luke 19: 45-46). He probably saw that the temple was returning to its commercial ways just a few days later.
Here are the opening lines of today’s Gospel: Some of his disciples were remarking about how the temple was adorned with beautiful stones and with gifts dedicated to God. But Jesus said, “As for what you see here, the time will come when not one stone will be left on another; every one of them will be thrown down.” (Luke 21:5-6)
This is how I would like to rephrase the thoughts / words of Jesus: “You seem to admire these beautiful stones and the ‘gifts’ adorning this temple. These very same things are going to draw the envious eyes of other nations. The wealth that surrounds this temple is going to be its undoing. It would be destroyed.” It does not require a great prophetic quality to predict what would happen to an individual or an institution if only we can observe closely. Simple logic would be sufficient!

Jesus does not stop with his prediction of the temple alone. He goes on to predict what would happen to the world and, more especially, what would become of those who follow him. He begins with those who would mislead people with ‘divine revelations’, those who would exploit the anxiety of people about the end of the world. Didn’t we hear enough of these ‘revelations’ at the turn of this millennium? The list of things Jesus had predicted almost read like our headlines today… “Nation will rise against nation, and kingdom against kingdom. There will be great earthquakes, famines and pestilences in various places, and fearful events and great signs from heaven.” (Lk 21: 10-11)
In the following lines (12-19) Jesus turns his attention to his disciples. Jesus calls a spade, a spade. If his aim was to retain a crowd around him all the time, he would not have revealed such bitter truths… the price to be paid for following him. Betrayal from one's own family, murdering courageous witnesses in order to silence them... Once again, what Jesus lists out here seems to be happening today. I am thinking of the massacre that took place in the Sunday liturgy in Baghdad on October 31.

Out of all these 15 verses given in today’s Gospel, only three verses give hopeful, soothing words. “For I will give you words and wisdom that none of your adversaries will be able to resist or contradict… not a hair of your head will perish. Stand firm, and you will win life.” (15, 18-19). The ‘life’ Jesus is talking of, is the afterlife we mentioned in our last Sunday’s reflection.
In my last week’s reflection I spoke about Randy Pausch, the professor who passed away in his forties. I had also mentioned about ‘The Last Lecture’ he had given to his university staff and students. I was fortunate also to listen to the talk he gave his students on their graduation day. Here is the gist of what he said: Pursue your dreams with passion. Before you begin pursuing, make sure what type of dreams you are chasing. Let them not be dreams to acquire more money. Those dreams will not give you satisfaction, since there would always be someone who would have more money than you. Rather follow dreams of building up human relationships.
Relationships will save us, not money or possessions. This is exactly what Jesus is saying in today’s Gospel. This is the assurance that Jesus himself experienced in his personal life. But for his personal relationship with his Father he would have been crushed in his life. As we go through life, especially the toughest phases of our life, we can be assured that God will be with us, Christ will be with us.



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.

Antoine de Saint -Exupery என்பவர் எழுதிய The Little Prince என்பது ஓர் அற்புதமான கற்பனைக் கதை. குழந்தை மனம், குழந்தைகளின் வாழ்வு கண்ணோட்டம் இவைகளைப் பற்றிய பல ஆழமான கருத்துக்கள் பொதிந்ததொரு புத்தகம். இந்தக் கதையின் நாயகன் The Little Prince குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டவர்களைப் பற்றி சொல்லும் ஒரு சில கருத்துக்கள் இவை:
வளர்ந்துவிட்டவர்கள் எல்லாருமே முன்பு குழந்தைகளாய் இருந்தனர். ஒரு சிலரே இதை நினைவில் வைத்திருக்கின்றனர்.
வளர்ந்துவிட்டவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. ஒவ்வொன்றையும் அவர்களுக்கு விளக்குவதிலேயே குழந்தைகள் களைப்படைந்து விடுகின்றனர்.
வளர்ந்துவிட்டவர்களுக்கு எண்ணிக்கை மிகவும் பிடிக்கும். அவர்களிடம் ஒரு புது நண்பனைப் பற்றிச் சொன்னால், அவனைப் பற்றிய முக்கியமான கேள்விகளை அவர்கள் கேட்க மாட்டார்கள். "அவனுடைய குரல் எப்படி இருக்கும்?", "அவனுக்குப் பிடித்த விளையாட்டு என்ன?", "அவன் வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிக்கிறானா?" என்ற முக்கியக் கேள்விகளை அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கேட்பதெல்லாம், "அவனுக்கு என்ன வயது?", "அவனுக்கு எத்தனை தம்பிகள் உண்டு?", "அவன் எவ்வளவு கனமாய் இருப்பான்?", "அவனுடைய அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்?" என்ற எண்ணிக்கை நிறைந்த கேள்விகள். இக்கேள்விகள் வழியாக, அவர்கள் அவனைப் புரிந்துகொள்வதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே புரிந்துகொள்வதில்லை.

1889ம் ஆண்டு நவம்பர் 14 - இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தார். இதையொட்டி, நவம்பர் 14 - இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றது.

ஞாயிறு சிந்தனை
திருவழிபாட்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு (நவம்பர் 28ம் தேதி) திருவருகைக் காலத்துடன் திருவழிபாட்டின் அடுத்த ஆண்டைத் ஆரம்பிக்கிறோம். சென்ற ஆண்டு நவம்பர் 29ம் தேதி இந்த திருவழிபாட்டு ஆண்டை நாம் ஆரம்பித்த போது, நமக்குத் தரப்பட்ட விவிலிய வாசகம் லூக்கா நற்செய்தி 21ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது. இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று மீண்டும் லூக்கா நற்செய்தி 21ம் பிரிவிலிருந்து வாசகம் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் பெரும்பாலான ஞாயிறு திருப்பலிகளில் லூக்கா நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

லூக்கா நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் நற்செய்திகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி சில சமயங்களில் மனதில் பயத்தை, கலக்கத்தை உண்டாக்கும்... நல்லவை நடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும் நல்ல செய்தி தானே. இந்தக் கோணத்திலிருந்து இன்றைய நற்செய்தியை நாம் பார்க்க வேண்டும். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தில் 15 திருவசனங்கள் உள்ளன. அவற்றில் 13 திருவசனங்கள் அழிவைக் கூறுகின்றன. இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்கம்...
லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.


இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இயேசுவுக்கு ஆனாலும் இவ்வளவு வீரம் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். இஸ்ரயேல் மக்கள் மிகப் பெரிய திருத்தலமாகக் கொண்டாடி வந்த எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்று கொண்டு, அந்தப் பேராலயம் கல்மேல் கல் இராதபடி இடிந்து தரை மட்டமாகும் என்று கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு வீரம் வேண்டும். பின் வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச முடிந்ததென்று இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம்.
ஆனால், அதே நேரம், தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை, அவர் நடந்து கொள்ளும் முறை இவைகளை வைத்து அவர் வாழ்வு அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று சொல்லலாம், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம். எருசலேம் கோவில், உலகம் இவை செல்லும் போக்கை இயேசு ஆழமாய் உணர்ந்து இன்றைய நற்செய்தியில் சொல்லியிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இயேசுவைப் பொறுத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே எருசலேம் ஆலயம் நடத்தப்படும் முறையைப் பார்த்து கவலைப்பட்டிருப்பார். அவரது கவலை, ஆதங்கம் இவைகளை ஒரு சாட்டையாகப் பின்னி, ஒரு சில நாட்களுக்கு முன் அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம் மீண்டும் மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு வியாபார ரீதியில் செல்லும் இந்தக் கோவில் கட்டாயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். இந்தக் கோவில் சேர்த்துள்ள செல்வமே இதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணம் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம்.

முதல் இரு திருவசனங்களில் கோவிலின் அழிவு பற்றி பேசும் இயேசு, அதன் பின் உலகில் நிகழப்போகும் அழிவுகளைப் பற்றி 13 திருவசனங்களில் கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், இயேசு ஏதோ நாம் வாழும் இக்காலத்தில் வாழ்வது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள் இவை:
கடவுளின் பெயரால்... உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால்... மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
போர் முழக்கங்கள், குழப்பங்கள், நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து எழுதல்;
பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்…
இவை அனைத்தும் நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில் கலங்காமல் இருங்கள் என்றும் இயேசு உறுதி சொல்கிறார்.
இயற்கையில், பொது வாழ்வில், நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயேசு. அங்கும் அவர் சொல்பவை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.
நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
உங்களுக்கு எதிராக சான்று பகர்வார்கள்;
உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்…
இயேசு கூறிய இந்த அழிவுகள் ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் சந்தித்து வரும் வன்முறைகளை, அண்மையில் பாக்தாத்தில் அக்டோபர் 31 ஞாயிறுத் திருப்பலி நேரத்தில் நடந்த தாக்குதலை நினைவுப்படுத்துகிறது. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க அவர்களுக்காகச் சிறப்பாக இன்று செபிப்போம்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும் போது, இது என்ன நற்செய்தியா என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவுபடுத்துகிறேன். நற்செய்தி என்றால், இனிப்பான செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை நமக்குச் சுட்டிக் காட்டும் மருத்துவரை எதிரி என்றா நாம் கூறுகிறோம்? நாவுக்கு கசப்பான மருந்துகளைத் தரும் அவர் நமது நன்மைக்காகச் செய்வதாக நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும் இந்த உலகத்தைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!
தொண்டர்களைத் தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும் போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திசைத் திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளைத் தான் காட்டுவார்கள், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி மாறுபட்ட வழி...

இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியின் 15 திருவசனங்களில் 14,15 என்ற இரண்டு திருவசனங்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார் இயேசு. விசாரணைகளின் போது, “என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.” (லூக்கா 21: 14-15) என்று கூறுகிறார் இயேசு.
நற்செய்தியின் இறுதியிலும் இயேசு அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.” (லூக்கா 21: 19)இயேசு கூறும் ‘உஙகள் வாழ்வு’ இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு. சென்ற ஞாயிறு சிந்தனையின் போது, மறுவாழ்வைப் பற்றிப் பேசினோம். அப்போது சாவுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியரைப் பற்றிக் கூறினேன். அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலை கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்: “உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்த வேண்டாம். நீங்கள் எவ்வளவு தான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். மனித உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். மனித உறவு ஒவ்வொன்றும் ஏக்கம் தராது. நிறைவைத் தரும்." என்றார்.

வாழ்வைச் சந்திக்க, அதிலும் முக்கியமாக, வாழ்வின் பிரச்சனைகளைச் சந்திக்க, துயரங்களை, கவலைகளை, அழிவுகளைச் சந்திக்க நமக்குத் தேவையானவை பொருள், செல்வம், பதவிகள் அல்ல. மாறாக, நமது உறவுகள்.
இயேசு இந்த உலகில் வாழ்ந்த வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை. அந்த வாழ்வில் அவருக்கு உறுதியைத் தந்தது, தந்தையாம் இறைவனுடன் அவருக்கிருந்த உறவு. அந்த உறவில் இயேசு நம்பிக்கை இழந்திருந்தால், அவர் சந்தித்தப் பிரச்சனைகளில் நொறுங்கிப் போயிருப்பார். தன் வாழ்வில் அவர் கண்ட அந்த உறவு அனுபவத்தைத் தன்னைப் பின் பற்றுபவர்களுக்கும் அவர் கொடுக்கிறார். "நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் பேச வேண்டியவைகளை நான் சொல்லித் தருவேன்." என்று அவர் வாக்குறுதி தருகிறார். பணம், புகழ் என்று அழியும் சக்திகளுக்கு, உலகை அழிக்கும் சக்திகளுக்கு மத்தியில் மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதெனும் நம்பிக்கையோடு உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

11 November, 2010

“I and Thou” or “I and It”? “நானும் தாங்களும்” அல்லது “நானும் அதுவும்”?

Journey

“He guides me in straight paths for His name’s sake.” (Psalm 23:3) We have seen that the path of life is not an easy straight line, nor a short cut. We also saw how God leads us along this path, respecting our full freedom and not drag us along with him by force. If we talk of paths, we also talk of journey. Yes, dear friends, we are all on a journey, and this is the focus of our reflections today.
For the Israelites, it was easy to think of life as a journey and they were simply sojourners on earth. They were constantly reminded of this. (Cf.Ex.12: 37-38; Num.33: 1-2) They also believed that their God was with them in their journey. (Cf. Deut. 1: 31-33; Joshua 24:17)
The month of November serves as a reminder that all of us are pilgrims here on earth. If only we can understand this concept and believe this fact, we can solve so many problems in our personal life as well as in the international arena. Unfortunately, most of us tend to believe that our life here is permanent. The cost we pay to secure this permanency brings along most of the problems we face in life. When I say ‘cost’ I am not talking of the money factor, really. The extreme example of establishing this permanency would be the lifestyle of some of the richest persons on earth. I am thinking specially about the billion dollar ‘island’ built in Mumbai by one of these richest persons. If only those who own this palace, truly and sincerely believed that they were all pilgrims on earth…
If only those who have stacked up money in Swiss banks, truly and sincerely believed that they were all pilgrims on earth…
If only those who have ravaged nature for their own personal benefits, truly and sincerely believed that they were all pilgrims on earth…
If only our leaders who play a double game, misleading people all the time, truly and sincerely believed that they were all pilgrims on earth…
All of us know that this litany could go on. We should include ourselves in this litany. If only all of us truly and sincerely believe that we are all pilgrims on earth… many problems can be and will be solved.

Being a pilgrim also makes us realise that there are fellow pilgrims. One of the most beautiful aspects of train travels in India is the relationships that are built during the journey, especially when the journey is longer than over-night. Every enclosed section of the train compartment has around 6 to 8 passengers. They may begin their journey as total strangers. As the train begins to move, one of them breaks the ice with a simple, apparently silly, question: “Where are you going, saar?” If the other person responds, then begins a chat which takes the route of weather, sports (mostly cricket), politics…. Then the conversation may go on to one’s profession, family etc.
When the time comes for taking meals, something beautiful happens. Each one opens his or her pack and then they begin to share. The shared food has more variety than the food brought by each one. Even those who have not brought anything, are asked to join this ‘agape’. By the time the journey reaches its destination these 6 or 8 passengers would have exchanged their phone numbers and other information for future collaboration. We enter the train as single individuals, but alight as members of a larger human family. Unfortunately, in recent times, sharing of food is looked upon with suspicion due to drugged food being used by some culprits to relieve us of our possessions. These culprits have turned a beautiful, lovely custom of rail passengers for their own advantage.

This serves as a parable for us. We begin our life as a pilgrim with co-pilgrims. In such a journey, some persons put their personal, selfish agenda over and above the general purpose of the journey. Their selfishness does not rob us of only material things, but the very trust we have on the human family. For these selfish persons other persons are objects to be used.

I am reminded of what Harold Kushner writes in this context: “In 1923, the theologian-philosopher Martin Buber wrote an immensely influential little book entitled I and Thou. Buber’s main point in the book is that there are two ways of relating to other people in our lives: as objects (“How can I use that person?”), or as subjects (“I know what I’m feeling; what is the other person feeling?”). In Buber’s terms, there are “I-It” and “I-Thou” relationships. In an I-Thou relationship, we see the other person as a subject, someone who comes to the encounter with needs and feelings of his or her own. In I-It relationships, we see the other person as a means to an end. We are concerned only with our own feelings, not with the feelings of the other person.
“In a memoir, Buber tells the story of how he came to his theory of I-Thou and I-It. Shortly after he had established himself as a professor of philosophy in Germany, a young student came to see him with a personal problem. The student had received his draft notice to serve in the German army in World War One. He was a pacifist by nature and was afraid of being killed in battle, but at the same time he was a loyal and fiercely patriotic German. He asked Buber what he should do, serve his country and risk being killed or claim conscientious objector status and perhaps leave another man to be killed in his place. Buber was in the midst of thinking through a difficult theological-philosophical problem and was annoyed by the young man’s claim on his time and attention. He said something along the lines of, That’s a serious dilemma; do what you think is right. The young man, in despair for lack of guidance, committed suicide, and Buber, for the rest of his life, felt a measure of guilt for not being more present to that young man, for seeing him only as an interruption and not as a human soul in torment. He felt he had sinned against the image of God in that young student by treating him as an object, not as a subject with needs and feelings. For Buber, the ultimate sin is to use another person as a means to an end, without regard for the person’s feelings.”

Even in the most intimate relationships the danger of ‘I-It’ relationship creeping in is great. We have heard of so many instances where parents have used kids and vice-versa. There are lot more instances where a boy and girl falling in love go through phases when they have used each other as objects. The ‘I-It’ relationship is very evident in work situations. It is very sad and scary to think that such relationships exist even in the most ‘sacred’ situations like religion.
As we think of the Shepherd guiding us in straight paths, we pray for the wisdom to understand that we are only pilgrims on earth. This wisdom will surely enlighten us along the following lines: We need to travel light and not hoard up things to such an extent that we are not able to put our next step forward. We are only stewards of this earth and hence we are not entitled to exploit nature. We need to enjoy this pilgrimage with fellow pilgrims and not use them as objects for our own selfish interests… Wisdom is available only when we begin our pilgrimage towards it!





Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.





"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் இந்த வரியில் நம் தேடலை இன்று தொடர்கிறோம். நீதி வழி, நேரிய வழி என்ற நம் வாழ்வுப் பாதை பல சமயங்களில் சிக்கலான பாதை என்று சிந்தித்தோம். இந்த வாழ்வுப் பாதையில் நம்மை வழி நடத்தும் இறைவன், நம்மை அழைத்துச் செல்வாரே தவிர, நம் விருப்பத்திற்கு எதிராக இழுத்துச் செல்ல மாட்டார் என்றும் சிந்தித்தோம். பாதை என்றதும் மனதில் எழும் மற்றொரு சொல், மற்றொரு எண்ணம்... பயணம். இன்றைய விவிலியத் தேடலில் பயணம் என்ற எண்ணத்தை ஆழப்படுத்த முயல்வோம்.

நாடு விட்டு நாடு நாடோடிகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர்களுக்கு உலக வாழ்க்கை ஒரு பயணம் என்பதில் சிறிதும் தயக்கம் இருந்ததில்லை. அவர்களது பயணங்களை, சிறப்பாக அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்தப் பயணத்தை, அடிக்கடி நினைவு படுத்தும் பகுதிகள் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் காணக்கிடக்கின்றன.
விடுதலைப்பயணம் 12: 37-38
இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர். மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.

எண்ணிக்கை 33: 1-2
மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே: அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்.

அவர்கள் பயணிகள் என்பதை அடிக்கடி அவர்களுக்கு உணர்த்தி வந்த இறைவன், தானும் அவர்களுடன் பயணம் செய்தார். இதையும் இஸ்ரயேலர்கள் உணர்ந்திருந்தனர்.
இணைச்சட்டம் 1: 31-33
பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே! ஆயினும் இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை. பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!

இவ்வுலகப் பயணத்தை முடித்துச் சென்றுள்ள பலரை எண்ணிப்பார்க்கும் இந்த நவம்பர் மாதத்தில், உலக வாழ்வு ஒரு பயணம் என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒரு பயணி என்ற உண்மையை உள்ளூர உணர்ந்தால், முழு மனதோடு இதை நம்பினால், நம் சொந்த வாழ்விலும், இந்த உலகத்திலும் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இது என் ஆழமான நம்பிக்கை. ஆனால், உலகில் பலர் இந்த உண்மையை அறிவுப் பூர்வமாய் உணர்வதோ, மனத்தால் நம்புவதோ இல்லை. ஏதோ இந்த உலக வாழ்க்கைதான் நிலையானது, நிரந்தரமானது என்பது போல் நாம் வாழ்க்கையை நடத்துகிறோம்.
உலகமே நிரந்தரம் என்ற எண்ணத்தின் பயங்கரமான ஒரு வெளிப்பாடு, ஓர் எடுத்துக்காட்டு... உலகப் பெரும் செல்வந்தர்கள் வாழும் வாழ்க்கை. அதிலும் முக்கியமாக அச்செல்வந்தர்களில் ஒருவர் மும்பையில் கட்டியுள்ள அவரது வீடு.
இந்த செல்வந்தரும் அவரது குடும்பத்தினரும், தாங்கள் இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்...
கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் கொட்டிக் கொண்டிருக்கும் பணம் படைத்தவர்கள், தாங்கள் இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்...
சொந்த இலாபங்களுக்காகச் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் உரிமையாளர்கள், தாங்கள் இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்...
போது நலனுக்காக உழைக்க வந்துவிட்டு, சுய நலனை மட்டுமே காத்து வரும் அரசியல் தலைவர்கள், தாங்கள் இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்...
உங்களுக்கும் எனக்கும் தெரியும்... இந்த பட்டியலில் பல ஆயிரம் அங்கத்தினர்களை நாம் சேர்க்க முடியும். நம்மையும் இதில் சேர்த்துக் கொள்வோம். நாம் அனைவருமே இந்த உலகில் வெறும் பயணிகள்தாம் என்பதை உணர்ந்தால்... எத்தனையோ பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

பயணம் என்று எண்ணும் போது, நம்முடன் பயணம் செய்யும் மற்றவர்களையும் நினைக்கத் தூண்டுகிறது திருப்பாடல் 23ன் வரிகள். ஆயன் நடத்திச் செல்வது நான் என்ற தனி ஆடு அல்ல. என்னுடன் இன்னும் பல கோடி ஆடுகளை ஆயன் வழி நடத்துகிறார்.
பயணம், உடன் பயணிகள் என்றதும் என் மனதில் விரியும் காட்சி இரயில் பயணம். முன் பதிவு செய்து போகும் இந்தப் பயணத்தில் நம்மைச் சுற்றி ஆறு அல்லது ஏழு பேர் இருப்பார்கள். பயணத்தின் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் அறியாததால், ஒரு இறுக்கமானச் சூழல் அங்கிருக்கும். வண்டி நகர ஆரம்பித்ததும், ஒருவர், "நீங்க எங்க போறீங்க?" என்று ஆரம்பிப்பார். அதன்பின் வானிலை, விளையாட்டு, அரசியல் என்று பொதுவில் ஆரம்பமாகும் நமது உரையாடல், செய்யும் தொழில், குடும்பம் என்று இன்னும் கொஞ்சம் நெருக்கமான கருத்துப் பரிமாற்றங்களாய் மாறும்.
உணவு நேரம் வந்ததும், அவரவர் தனியே கொண்டு வந்த உணவுப் பொட்டலங்கள் பிரிக்கப்படும், அவை அனைத்தும் கலந்து ஒரு அறுசுவை விருந்து நடைபெறும். உணவு கொண்டு வராதவர்களும் இதில் இணைத்துக் கொள்ளப்படுவர். பயண முடிவில், தொலைபேசி எண்கள், வீட்டு முகவரி என்று பல அம்சங்கள் பரிமாறப்படும். தனி ஒருவராய் பயணத்தை ஆரம்பிக்கும் நாம், ஒரு குடும்பமாய் இறங்கிப் போகும் அழகே தனி.
நான் இப்போது விவரித்த இந்தக் காட்சி அண்மைக் காலங்களில் தடைபட்டு விட்டது. முக்கியமாக, உணவுப் பரிமாற்றம் பெரிதும் தடைபட்டு விட்டது. காரணம் சந்தேகம். உணவுப் பரிமாற்றத்தின் வழியாக மயக்க மருந்தைக் கொடுத்து பொருட்களைத் திருடிச் செல்லும் ஆபத்து அதிகமாகி விட்டதால், இந்த சந்தேகம்.
இரயில் பயணம் நம் உலகப் பயணத்திற்கான ஓர் ஆழமான உவமை. நம்மில் பலவகைப் பறிமாற்றங்களை, பகிர்தலை உருவாக்கி வந்த இரயில் பயணங்கள் ஒரு சில சுயநல சுறாமீன்களால் தடம் புரண்டு விட்டன. இந்தச் சுயநலம் தான் உலகப் பயணத்தையும் தலை கீழாக மாற்றுகிறது. பார்க்கும் எதையும் விழுங்கும் வெறி கொண்டவை சுறாமீன்கள். அதேபோல், இச்சுயநல சுறாமீன்களைப் பொறுத்த வரை மற்ற மனிதர்கள் அவர்கள் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்கள்.

மற்ற மனிதர்களைப் பொருட்களாகப் பயன்படுத்துவதுதான் உலகத்திலேயே பெரிய பாவம் என்று சொல்கிறார் Martin Buber என்ற யூத மெய்யியலாளர். இவர் 1923ம் ஆண்டு "I and Thou" அதாவது, "நானும் தாங்களும்" என்ற சிறந்ததொரு நூலை எழுதினார். மனித உறவுகளை இரு வகையாகப் பிரிக்கிறார் Martin. "நான்-தாங்கள்" (“I and Thou") என்ற உறவு, "நான்-அது" (“I and It") என்ற உறவு.
பிற மனிதர்களை மதிப்பிற்குரிய மனிதர்களாக நடத்தும்போது, ‘நான்-தாங்கள்’ என்ற உறவு நம்மிடம் உள்ளது. பிறரைப் பொருட்களாகப் பயன்படுத்தும்போது, ‘நான்-அது’ என்ற உறவு வெளிப்படுகிறது என்று அவர் விளக்குகிறார். தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் இந்த உறவுக்கு விளக்கம் தருகிறார்.
Martin ஜெர்மனியில் மெய்யியல் பேராசிரியராகப் பணி செய்தார். முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. Martin ஒரு முக்கியமான மெய்யியல் கேள்விக்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஓர் இளைஞன் பதட்டத்துடன் அவரைக் காண வந்தார். அந்த இளைஞன் இராணவத்தில் சேர வேண்டுமென்று கட்டளை வந்திருந்தது. உலகப் போரை முற்றிலும் விரும்பாதவர் அந்த இளைஞன். அதே நேரம் நாட்டுப் பற்றும் உடையவர். இராணுவத்தில் சேர்ந்து போரில் உயிர்களை அழிப்பதா? அல்லது, இராணுவத்தில் சேராமல் இருக்க காரணங்களை எடுத்துச் சொல்லி விலகுவதா? அப்படி விலகினால், தனக்குப் பதிலாக மற்றொரு இளைஞன் அனுப்பப்பட்டு அவன் உயிருக்கு ஆபத்து வருமே? இப்படி அவர் தன் மனதில் எழுந்த கேள்விகளை எல்லாம் பேராசிரியரிடம் எழுப்பி, ஒரு தீர்வு கேட்டார். Martin தன் மெய்யியல் கேள்விக்கு விடை தேடுவதில் மும்முரமாய் இருந்ததால், அந்த இளைஞன் சொன்னதை ஓரளவே கேட்டார். விரைவில் அவரை அனுப்பி விட்டுத் தன் ஆராய்ச்சியைத் தொடர விரும்பினார். எனவே அவர் அந்த இளைஞனிடம், "நீ இப்போது சந்தித்திருப்பது ஒரு தீவிரப் போராட்டம்தான். இதில் உனக்கு எது சரியென்று படுகிறதோ, அதைச் செய்." என்று சொல்லி அந்த இளைஞனை அனுப்பிவிட்டார்.
அந்த இளைஞன் இந்தப் போராட்டத்தில் சரியான தீர்வு கிடைக்காமல் அன்றிரவு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட Martin Buber நிலை குலைந்து போனார். தனது சுயநலன் காரணமாக அந்த இளைஞனை ஒரு மனிதனாகக் கருதாமல், போராடும் அவரது உணர்வுகளை மதிக்காமல், அவரைத் தன் மெய்யியல் ஆராய்ச்சிக்கு வந்த தடை என்று மட்டுமே பார்த்ததால், அவரை விரைவில் அனுப்பிவிட்டது, அவரை இந்த உலகை விட்டே அனுப்பிவிட்டதே என்று மனம் வருந்தினார்.

நமது வாழ்வுப் பயணத்தில் உடன் வரும் பயணிகளை நாம் எப்படி பார்க்கிறோம்? நம் குடும்பங்களில் உள்ளவர்களை எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம்? நமது அலுவல் இடங்களில், போது இடங்களில்... மற்றவரோடு நாம் கொள்ளும் உறவு நான்-தாங்கள் என்ற உறவா? நான்-அது என்ற உறவா?நாம் அனைவரும் உலகில் பயணம் செய்பவர்கள் என்பதை உணரவும் நம்பவும் இறைவன் துணை புரியட்டும். இந்தப் பயணத்தில் நம்மோடு பயணம் செய்யும் பிறரை மதித்து நான்-அவர் என்ற உறவை வளர்க்க இறைவனின் அருள் வேண்டுவோம். மிக முக்கியமாக, இஸ்ரயேல் மக்களைப் போல், நமது பயணத்தில் இறைவன் எப்போதும் உடன் வருகிறார் என்ற உணர்வுடன் நமது வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம்.






இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org