30 March, 2014

Letting Go … Letting God பகைமையை விரட்டி, பரமனை வரவேற்று...

Healing of the man born blind

“This coming Friday and Saturday will be a special penitential moment, called “24 hours for the Lord”. It will begin with a Celebration in the Basilica of St Peter on Friday afternoon, then that evening and night several churches in the centre of Rome will be open for prayer and Confession. It will be — we could call it — a feast of forgiveness, which will take place simultaneously in many dioceses and parishes around the world. The forgiveness that the Lord grants us must be celebrated, as the father did in the parable of the prodigal son, when the son returned home he ordered a feast, forgetting all his sins. It will be a feast of forgiveness.” This was the invitation for the ‘Feast of Forgiveness’ extended to the whole world by Pope Francis, on March 23, last Sunday.

On Friday, when this ‘Feast’ was inaugurated by the Holy Father in St Peter’s Basilica, he began his homily with a pertinent question. He went on to say that all of us need forgiveness and God is never tired of forgiving us. Here are some excerpts from what he spoke on Friday evening:
Who among us can be assumed not to be a sinner? No one… We all know that our Father never tires of loving and his eyes did not grow weary in looking at the way home, to see if his son who left and was lost will return. And this Father does not tire of loving even His other son, who, though he remains ever in the house with Him, nevertheless does not take part in His mercy, His compassion…Dear brothers and sisters, after this celebration, many of you will make yourselves missionaries to the experience of reconciliation with God. “24 hours for the Lord” is an initiative in which many dioceses all over the world are participating. To everyone you meet, you will communicate the joy of receiving the Father’s forgiveness and regaining full friendship with Him.

Close on the heels of this meaningful Feast of Forgiveness we get a Gospel passage this Sunday, from John (9: 1-41), talking of Jesus healing a person who was visually handicapped from birth. I consider it as a worthwhile exercise to combine ‘forgiveness’ and ‘receiving sight’ (enlightenment) in our Sunday reflection.

In 2012, a French Canadian film Rebelle (in English War Witch) received many awards in different film festivals. Rachel Mwanza, a young lady of 17, the protagonist of this movie, also received quite a few awards. Rachel is the protagonist for our reflections today.
Last week in our Sunday reflection, I had mentioned an article that spoke of the disturbing trend of caste affiliations found among high school students. This news article from ‘The Hindu’ was published on March 18. On the very same day, the French journal ‘La Croix’ published another article on Rachel Mwanza. Thanks to Fr Arul Varaprasadam, S.J., who works in La Reunion, who brought this article to my notice. While the article on school students left me disturbed, the article on Rachel revived my hope in the youth. I wish to share this hope and also hold Rachel as an example of having the lovely blend of forgiveness and enlightenment.

With the help of the Google Translator, I read this article from La Croix. Let me share some of the salient features from the life of Rachel:
Rachel, third in a family of six children, spent the first part of her childhood in a region of the Kasai province, a thousand kilometers from Kinshasa. In 2004, everything changed. Her father sent the mother and the three younger children to Kinshasa, promising to join them. But, he never did.
In the capital of the Democratic Republic of Congo (Kinshasa), the situation deteriorates. Manipulated by a "false prophet", her mother suspected Rachel of being responsible for their misfortune. The little girl is accused of witchcraft and must undergo expensive exorcism sessions of unprecedented violence. Her grandmother is particularly hostile to her, up to rubbing her eyes with chilly to "punish". She was barely 10 years. For four years, rejected by her family and neighbors, who see her as a witch, Rachel lived outdoors. At night, she ran and hid herself to escape predators.

The article goes on to explain all the horrors this 10 year old girl faced in the next 7 years. Rachel is very clear that she shared her miseries in various groups not to gain sympathy for herself; she wants to use her fame to fight for street children. After she won the award for the film ‘Rebelle’, she was invited to speak at a meeting in Kinshasa. When she spoke of her life, many cried. She says to the reporter of this article: “People cried listening to my testimony, but I do not want them to cry for me. I want them to cry for street children. Do you find it normal that girls are sleeping outside and run at night to avoid being raped? Do you find it normal that girls are forced into prostitution? This is not fair. That's what needs to be changed.”

She also says that she considered wearing the school uniform a greater honour than the red-carpet she walked during film festivals. She wants to create a foundation for street children along with UNESCO.
All her thoughts clearly show that she is an enlightened soul. Fr Varaprasadam drew my attention to the closing lines of this article and I consider that sentence to be main focus of our reflection. Here are the closing lines of this article: When asked if she was angry against her grandmother, she replied simply: "Why would I want it? What's the point?" Faced with this immense wisdom, one suddenly feels very small.
All true religions teach that enlightenment is achieved by a free spirit. In order to free the spirit, one needs to learn the art of forgiveness. This is clearly seen in Rachel’s statement about her grandmother. 

While searching the internet with the combination of words - ‘forgiveness’ and ‘receiving sight’ (enlightenment), I was struck by the thought that most of the results of this search revolved around the Biblical events. When I reversed the search with the ante-thesis of these words, namely, ‘revenge’ and ‘going blind’, I could find many news items and world events. One of these news items caught my special attention. It was from Iran.

In 2004, Rachel’s grandmother rubbed chilly in the eyes of the child. That same year, a young man in Iran threw acid on the face of a young lady, who refused to marry him. Seven years later, when the judgement of this case came out, it shocked the world. Here is a report from ‘The Guardian’ dated 13, May 2011:
In a literal application of the sharia law of an eye for an eye, Iran is ready for the first time to blind a man with acid, after he was found guilty of doing the same to a woman who refused to marry him.
Majid Movahedi, 30, is scheduled to be rendered unconscious in Tehran's judiciary hospital at noon on Saturday while Ameneh Bahrami, his victim, drops acid in both his eyes, her lawyer said.
Bahrami who had asked for an eye for an eye retribution in the court, was disfigured and blinded by Movahedi in 2004 when he threw a jar of acid in her face while she was returning home from work. 

This shock of this court verdict turned into solace on the day when the ‘punishment’ was supposed to be carried out. Here is a report from CNN, dated 1, August 2011:
Tehran, Iran (CNN) -- A woman blinded in an acid attack seven years ago said Sunday she stopped the "eye for an eye" punishment for her attacker because "such revenge is not worth it." A physician was to drop acid -- under legal supervision -- into the eyes of Majid Movahedi on Sunday, according to Fars News Agency, to punish him for throwing acid in Bahrami's face. The act disfigured her face and blinded her. "I never intended to allow Majid to be blinded," Ameneh Bahrami told CNN. "... Each of us, individually, must try and treat others with respect and kindness in order to have a better society."
Bahrami stopped the punishment minutes before it was carried out, she said, adding that Movahedi already had been given anesthetic. She said two men were instrumental in bringing about her change of heart: a doctor at a clinic in Spain and Amir Sabouri, an Iranian who helped her get medical attention. Sabouri told her to forgive Movahedi and prove to the world that Iranians are kind and forgiving, she said.

There are millions of angels like Rachel and Ameneh who walk this planet. They teach us that enlightenment can be achieved by letting go (of past hurts) and letting God. This was done by the person who was cured by Jesus of his blindness (John 9). As a beggar, this person must have accumulated lots of hurts in his life. When he was ready to let go of these hurts, he received not only his physical sight, but also spiritual enlightenment to such an extent that he was able to ‘teach’ the Pharisees.

Letting go of hurts (forgiveness) is a sure way to Letting God into our lives. That is true enlightenment!
Rachel Mwanza at a press conference

Ameneh Bahrami holds a photo showing herself before she was blinded with acid by Majid Movahedi. Photograph: Lluis Gene/AFP/Getty Images

"வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'ஆண்டவருக்கென 24 மணி நேரத்'தை ஒதுக்கி, நாம் மனமாற்றத்திற்கான சிறப்பு நேரமாக அதைச் செலவிடுவோம். இதை நாம் 'மன்னிப்பின் விழா' என்று கொண்டாடுவோம். காணாமற்போன மகன் திரும்பிவந்தபோது, அதை ஒரு விழாவாகக் கொண்டாடியத் தந்தையைப்போல, ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ள மன்னிப்பை நாம் கொண்டாடவேண்டும்"
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, கடந்த ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் 'மன்னிப்பு விழா'வைப் பற்றி இவ்விதம் அறிவித்தார். அவரது அழைப்பை ஏற்று, உலகெங்கும் உள்ள பல கத்தோலிக்க ஆலயங்கள், வெள்ளி மாலை முதல் திறந்து வைக்கப்பட்டன. மன்னிப்பு வேண்டி வருவோரை அணைத்து, ஆறுதல் சொல்ல இரவு திருவிழிப்பு வழிபாடுகளும், ஒப்புரவு அருள்சாதனமும் கோவில்களில் நிகழ்ந்தன.
இந்த மன்னிப்பு விழாவைத் துவக்கிவைக்க, வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மன்னிப்பு வழிபாடு நிகழ்ந்தது. இந்த வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்த எண்ணங்களில் ஒரு சில இதோ:
"நம் தந்தை அன்புகூர்வதில் களைப்படைவதே இல்லை. காணாமற்போன மகன் மீண்டும் இல்லம் வந்து சேரும் அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் கண்கள் களைப்படையவேயில்லை. தன்னுடன் வீட்டிலேயே தங்கிய மகன் தன் மகிழ்வில் பங்கு கொள்ள மறுத்தாலும், அவர் மீது தந்தையின் அன்பு குறையவேயில்லை.... இந்த வழிபாடு முடிந்ததும், உங்களில் பலர் கடவுளுடன் நீங்கள் கொண்ட ஒப்புரவை பிறருக்கு எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்களாக மாறப்போகிறீர்கள்"
நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் இஞ்ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நற்செய்தி (யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. 'மன்னிப்பையும்' ‘பார்வை பெறுவதை'யும் இணைத்துச் சிந்திக்க தவக்காலம் நம்மை அழைக்கிறது.

2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படத்தில் நடித்த Rachel Mwanza என்ற 17 வயது இளம்பெண், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார். விருது பெற்ற இளம் பெண் இரேச்சல் நமது ஞாயிறு சிந்தனையின் மையமாகிறார். இவ்விளம் பெண்ணின் வாழ்வில், 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' இணைந்திருப்பதால், இப்பெண் நம் சிந்தனைகளின் மையமாகிறார்.

கடந்த வாரம், ஞாயிறு சிந்தனையில், மார்ச் 18ம் தேதி வெளியான "பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்" என்ற கட்டுரை நம்மை ஓரளவு பாதித்திருக்கவேண்டும். இளையோர் மனதில் சாதி என்ற விஷ விதைகளை பெரியவர்கள் விதைத்துள்ளனரே என்று வருத்தப்பட்டோம். அதே நாள் -மார்ச் 18ம் தேதி- La Croix என்ற பிரெஞ்ச் இதழில் இளம்பெண் இரேச்சலைக் குறித்து வெளியாகியிருந்த ஒரு கட்டுரையை என் கவனத்திற்குக் கொணர்ந்தார், வெளிநாட்டில் பணியாற்றும் அருள் பணியாளர் ஒருவர். அவலமான நிலைகள் தங்களைச் சூழ்ந்தாலும், அந்தச் சகதியிலும் இளையோர், தாமரை மலர்களாகத் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர் என்பதை இந்தக் கட்டுரைமூலம் என்னால் உணர முடிந்தது. இளையோரைக் குறித்து எனக்குள் வளர்ந்துள்ள இந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்துடன் இளம்பெண் இரேச்சலை நம் சிந்தனையின் மையமாக்குகிறேன்.

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஓர் எளியக் குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் இரேச்சல். அக்குடும்பம் சந்தித்த அடுக்கடுக்காதுன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்று அந்நகரில் இருந்த ஒரு 'போலிச்சாமியார்' கூறினார். அக்குழந்தை ஒரு சூனியக்காரி என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார். இரேச்சலின் பாட்டி, குழந்தைப் பருவத்திலிருந்தே இரேச்சலை வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதைத் தொடர்ந்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுகள், இரேச்சல், வெளி உலகில் சந்தித்த துன்பங்களை இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளை எண்ணி, அவர்கள் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே தன் வாழ்வின் துயரங்களைத் தான் உலகின் பல அரங்குகளில் பேசி வருவதாக இரேச்சல் குறிப்பிட்டுள்ளார்.
இரேச்சல் அடைந்த துன்பங்களைப் பட்டியிலிட்டு, பரிதாப உணர்வை வளர்ப்பது என் நோக்கமுமல்ல. இக்கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகளே, இரேச்சலை நம் சிந்தனைகளின் மையமாக்கியுள்ளது. அந்த இறுதி வரிகள் இதோ:
"இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

இரேச்சலின் வாழ்வை முற்றிலும் புரட்டிப்போட்டு, அவரை வீதிக்குக் கொணர்ந்தது - பாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரம். அந்நிகழ்வால் அக்குழந்தை தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. கண்பார்வையை இழக்காமல் அவரைக் காத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அதைவிட மேலாக, அந்நிகழ்வோ அதைத் தொடர்ந்த துன்பங்களோ அந்த இளம்பெண்ணின் மனக் கண்களைக் குருடாக்கி, அவர் வெறுப்பில் புதைந்துபோகாமல் காத்ததற்காக இறைவனுக்குச் சிறப்பான நன்றியைக் கூறுவோம். 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' ஒன்றோடொன்று பிணைந்தது என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

'மன்னிப்பு' 'பார்வை பெறுதல்' என்ற இவ்விரு வார்த்தைகளையும் இணைத்து, நான் இணையத்தளத்தில் தேடியபோது, நான் கண்ட முதல் தகவல்கள் அனைத்தும் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டத் தகவல்களாகவே இருந்தன. மன்னிப்பதால், அகக்கண்கள் திறந்து ஆண்டவனைக் காணமுடியும் என்று அனைத்து உண்மையான மதங்களும் சொல்லித் தருகின்றன. 'கண்ணுக்குக் கண்' என்ற பழிவாங்கும் பாடங்களைச் சொல்லித்தரும் இவ்வுலகப் போக்கு, நம் அனைவரையும் பார்வை இழக்கச் செய்கிறது. 'பழிக்குப் பழி' 'பார்வை இழத்தல்' என்ற வார்த்தைகளை இணைத்து நான் தேடியபோது கிடைத்த பல உலக நிகழ்வுகளில் ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

இரேச்சலின் கண்களில் அவரது பாட்டி மிளகாய்ப் பொடியைத் தேய்த்த ஆண்டு 2004. அதே ஆண்டு, ஈரானில், தன் காதலை நிராகரித்த அமேனே (Ameneh Bahrami) என்ற இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசினார் மஜீத் (Majid Movahedi) என்ற இளைஞர். இதனால், இளம்பெண் அமேனேயின் முகமெல்லாம் எரிந்துபோய், அவரது இடது கண்ணில் பார்வை இழந்தார். 2011ம் ஆண்டு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, உலகை அதிர்ச்சியடையச் செய்தது. அமில வீச்சினால் தன் இடது கண் பார்வையை இழந்த இளம்பெண் அமேனே போலவே, மஜீத்தின் இடது கண்ணிலும் அமிலம் ஊற்றப்பட்டு, அவரும் பார்வை இழக்கவேண்டும் என்பதே அத்தீர்ப்பு. நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இளம்பெண் அமேனே முதலில் துணைபோனார் என்பது உண்மை.
இத்தீர்ப்பை செயல்படுத்தக்க்கூடாது என்று உலகின் பல மனிதாபிமான அமைப்புக்கள் விண்ணப்பித்தாலும், ஈரான் சிறை அதிகாரிகள், 2011ம் ஆண்டு மேமாதம் ஒரு நாள், இத்தீர்ப்பை நிறைவேற்ற மஜீத்துக்கு மயக்க மருந்தை முதலில் கொடுத்தனர். அவர் மயக்கத்தில் இருந்த நேரம், அமில வீச்சில் கண்ணிழந்த இளம்பெண் அமேனே அவர்கள், அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று விண்ணப்பித்ததால், மஜீத்தின் கண்களில் அமிலம் ஊற்றப்படவில்லை. இளம்பெண் அமேனே அவர்களின் அகக் கண்கள் திறந்ததால், மஜீத்தின் கண்கள் காப்பாற்றப்பட்டன. 'கண்ணுக்கு கண்' என்று வாழும் இவ்வுலகப் போக்கிற்கு மாற்றுச் சாட்சியங்களாக இரேச்சல், அமேனே போன்ற இளம்பெண்கள் 'மன்னிப்பு' பாடங்களைச் சொல்லித் தருவதால், இவ்வுலகம் இன்னும் முழுமையாகக் குருடாகாமல் வாழ்கிறது.

உடலில் உள்ள கண்களில் வேதனையை அனுபவித்தாலும், ஊனக் கண்களின் பார்வையை இழந்தாலும், அகக் கண்களால் அற்புதமான உண்மைகளைக் காணமுடியும் என்பதைச் இரேச்சல், அமேனே என்ற இவ்விரு இளம்பெண்களும் நமக்குச் சொல்லித்தருகின்றனர். இதேபோல், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பார்வை இழந்த மனிதரும், உடலில் மட்டும் பார்வை பெறாமல், உள்ளத்திலும் பார்வை பெறுவதைக் காண்கிறோம். இயேசு பார்வை இழந்தவரை குணமாக்கியப் புதுமை, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவார்த்தைகளில் முடிவடைகிறது. ஆனால், இப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைவார்த்தைகள் வழியாக யோவான் ஒரு இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள்.
பார்வை இழந்த மனிதர் உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டு கொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் தெளிவான பார்வை கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. அக ஒளி பெற்ற அவர் இறுதியில் இயேசுவைச் சந்தித்தபோது, "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமையாய் சரணடைகிறார்.

உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளால் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஒரு எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத் தான் அடிக்கடி கூறுகிறோம். 'கண்மூடித்தனமான காதல்' என்றும், "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுதல் என்றும் எத்தனை விதமான எண்ணங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன!

உள்ளத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகளால், குறிப்பாக, வெறுப்பால், மன்னிக்க முடியாத ஆத்திரத்தால் நமது அறிவுக் கண்கள் குருடாகிப் போகாமல் வாழ இறைவனின் அருளை நாடுவோம். இரேச்சல், அமேனே போன்ற எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமக்குச் சொல்லித்தரும் இந்த அற்புதப் பாடத்தை வாழ்வாகக முயல்வோம். மன்னிப்பு பெறுவதாலும் தருவதாலும் நாம் பெறும் பார்வை பழுதற்றதாய், பாசமுள்ளதாய் அமையட்டும்!

24 March, 2014

Water and God with a price tag… தண்ணீரும் கடவுளும் விற்பனைக்கு...


Water Wars

An article I read recently in a Tamil daily disturbed me a lot. Its title drew my attention first, namely: “School students with caste-bands on their wrists”. It was about the caste-identification marks used by school students. This article was written by a high school teacher who reflects on how innocent students of his school were poisoned by senior students with caste affiliations. These senior students were, in turn, influenced by some college students. The author describes three shocking trends among the students. The first one is – that students write their names on the books and notebooks along with the name of their castes. The second one is – students wear wrist bands of various colours to identify their castes. The third trend – a bit crude, indeed – is how they write their names on their hands not with pens, but with the sharp edges of the compass and are happy to see their names etched on their skins as a scar. Scary, to say the least. 
Caste system – the traditional curse of India – is engraved on human minds and bodies in very many ways. India is not the only country to suffer from divisions. Divisions in various forms are everywhere around the globe. They have been the cause of human misery down the centuries.

What drew my attention to the above mentioned article is not only the article but also the response of the readers. Many readers have identified many persons and groups who have perpetrated these divisions. They have blamed the government, the school system, religion, traditional minded people, politicians, TV serials etc. It is so easy to point fingers at others for a collective failure of human society. The better option, according to me, is to acknowledge that each of us has contributed to this collective failure and begin searching for remedies. This is the lesson we learn from today’s Gospel (John 4: 5-42), where Jesus meets a Samaritan woman near a well.

The conversation between Jesus and the Samaritan woman is one of the longest (if not the longest) conversation recorded in the four gospels. This conversation is a good example of the inward journey taken by a person (Samaritan woman) who, ultimately, makes this journey towards Jesus and God. Quite often we tend to feel that we know enough about self, Jesus and God and thus lose out on newer insights. We forget that we are all pilgrims on this world, constantly called to journey. We tend to stay put and stagnate! Only when we venture out, we shall encounter surprises about ourselves and about God. ‘The God of Surprises’ is one of the basic, beautiful attributes of God!

Today’s gospel gives us a picture of Jesus who surprises us, even shocks us. He voluntarily initiates a conversation with a Samaritan woman who comes to the well at mid day. The woman’s late visit to the well (women, usually, gathered at the well early in the morning) may suggest that she was an outcast in the village, even among the Samaritans, because of her questionable living situation! Jesus begins this discourse expressing his need for water. When a Samaritan woman came to draw water, Jesus said to her, “Will you give me a drink?” (John 4: 7) A simple request for water opens up quite many issues and ultimately ends on sublime themes related to God and worship. Here is the first lesson from today’s gospel: that no place is alien to talk about God. We know that in villages, the well, the tea shop and the tree in the village square are good spots for gossips, political opinions and even philosophical thoughts. Jesus shows us that a conversation near a well can also be profoundly divine!

The initial reaction of the Samaritan woman is a grim reminder of how the human family has not progressed in certain areas even after centuries. The Samaritan woman said to him, “You are a Jew and I am a Samaritan woman. How can you ask me for a drink?” (John 4: 9) You-and-I distinction even in the case of a basic need. Thirst knows no caste and religion. Hence, it would be highly impossible for any one to refuse water to the one who is thirsty. But, with water becoming more and more a private property and hence scarce and costly, it is becoming more and more delicate to request water and to share water even in dire situations. Due to its rich business proposition, water has come to be called ‘blue gold’ in our days!

The great Indian environmentalist Sunderlal Bahuguna, once said: “Nations all across the world are facing a water crisis that is deepening with the passing of each day… This situation demands immediate notice and remedial measures from our governments and policymakers. Otherwise, mankind has to face the wrath of an inevitable third world war on the issue of water.”

The thirst of Jesus and the hesitation of the Samaritan woman still echo in different parts of the world. The great natural gift of God – water – has, unfortunately, been used as a political and caste weapon dividing people. The conversation between Jesus and the Samaritan woman also highlights another division among people. Not only the gifts of God, but God himself / herself is divided under various pretexts. Jesus is rather emphatic in saying that true God and true worship do not divide the people: “Woman,” Jesus replied, “believe me, a time is coming when you will worship the Father neither on this mountain nor in Jerusalem… Yet a time is coming and has now come when the true worshipers will worship the Father in the Spirit and in truth, for they are the kind of worshipers the Father seeks. God is spirit, and his worshipers must worship in the Spirit and in truth.”  (John 4: 21-24)

I don’t think that any one could make this clearer and easier than Jesus. Curiously, Jesus begins this statement with a request… almost a plea: “Woman, believe me…” It is hard for us to believe that God can be worshipped in such simplicity. But, that is the true worship that ‘the Father seeks’.

Lenten season is a call to conversion. Let us be converted to using God’s gifts properly without avarice and monopoly. Let us be converted not to divide God into various human slots, but allow God to be God and try to worship God in Spirit and in Truth.

My closing thoughts go back to India gearing up for the general elections. Dirty politicians, whose main strategy is divide-and-rule-policy, are making desperate attempts to strengthen their vote bank. In their desperation, they are making use of god, religion, and caste as pawns to whip up emotions. We need to pray that the simple folks be guided by God to see through the insincere games of politicians and choose trust-worthy leaders!


Caste Band in the hand of a school student - The Hindu

ஐந்து நாட்களுக்கு முன், (மார்ச் 18, 2014) 'தி இந்து' என்ற நாளிதழில், சிந்தனைக்களம் - வலைஞர் பக்கம் பகுதியில் வெளியான ஒரு கட்டுரை என்னை அதிகம் பாதித்தது. "பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்" என்ற தலைப்பில், ரா.தாமோதரன் என்ற ஆசிரியர் எழுதியிருந்த அக்கட்டுரை உள்ளத்தில் பல கேள்விகளை எழுப்பியது.
"சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில் பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும்.  இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்திருந்தார். பள்ளி மாணவர்களிடையில் அவர் கண்டதாகக் கூறும் மூன்று காட்சிகளை அவர் விவரித்துள்ளார்:
"முதல்காட்சி. பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர்களின் பாடநூல்களில், எழுதும் குறிப்பேடில் அவருடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருவது. இதை முதன்முதலில் பார்த்த எனக்குத் திக்கென்று வாரிபோட்டது. இந்த உலகம் என்ன என்று புரியாத பிஞ்சு மனதில் ஏதோ ஒரு விஷ விதை, அந்த மாணவனின் ஜாதிய அபிமானிகளால் விதைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இதைப்பற்றிக் கேட்டால், பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன்தான் எழுதச் சொன்னான் என்கிறான். அவனிடம் கேட்டால், எங்கள் ஊர் ஜாதி அமைப்பைச் சேர்ந்த கல்லூரி அண்ணன்கள் எழுதச் சொன்னார்கள் என்கிறான்... இப்படி எழுதாலாமா? என்கிற கனிவான கேள்விக்கு, அந்த மாணவனின் பதில், வெறும் அழுகை மட்டும்தான். அவனது அழுகை, இன்னதென்று புரியாமல் தவறு செய்துகொண்டிருக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்த அழுகையாகத்தான் பார்க்கிறேன்" என்று அவர் தன் முதல் காட்சியை விவரிக்கிறார்.
"இரண்டாவது காட்சி. மாணவனின் வலது கையில், கைப்பட்டை அணிவது. அதுவும் சாதாரணக் கைப்பட்டை அல்ல. ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை. இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா என்றால் இல்லை. அந்தந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில மாணவர்கள், தம் ஜாதிக் கட்சியின் பட்டையை அணிகிறார்கள்... கைகளில் சாமிக்கயிறு போய், தற்போது கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை,... நீலம்-சிவப்பு கலந்த ஜாதிக்கயிறுகள் அணிந்திருக்கிறார்கள், நாளைய சமுதாயத்தை முன்னேற்றப்போகிற மாணவர்கள்" என்று குறிப்பிடுகிறார்.

மூன்றாவது காட்சியில் அவர் விவரிப்பது சிறிது குரூரமாகத் தெரிகிறது. பள்ளி மாணவர்கள், கைகளில் தங்கள் பெயரைக் காம்பஸ்’ (Compass) கொண்டு கீறி, அந்தக் காயம் ஆறியபின், அப்பெயர் தழும்பாக மாறுவதை மூன்றாம் காட்சியாகக் கூறுகிறார். உடலில் பச்சைக் குத்திக் கொள்வதன் மற்றொரு வடிவம் இதுவோ? தங்கள் பெயர்களை, தங்களுக்கு நெருக்கமானவர்கள், தலைவர்கள்தலைவிகள் பெயர்களைப் பச்சைக் குத்திக்கொள்ளும் பலரைப் பார்த்திருக்கிறோம். தங்கள் சாதிகளையும் பச்சைக் குத்திக்கொள்ளும் மனிதர்களைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களும் தங்கள் பெயருக்குப்பின் சாதிகளை, உடலிலும் மனதிலும் அழியாத தழும்புகளாக மாற்றுகின்றனரோ என்ற பயம் எழுகிறது.

இம்மூன்று காட்சிகளை விவரிக்கும் ஆசிரியர் தாமோதரன் அவர்கள், இக்காட்சிகளைக் கண்டு, பெற்றோரும் ஆசிரியரும் தலைகுனிய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். பெற்றோரும், ஆசிரியர்களும் மட்டும் தலைகுனியக் கூடாது. எதிர்காலத் தூண்களை துரும்புகளாக மாற்றிவரும் தமிழ் சமுதாயமே தலைகுனிந்து நிற்கவேண்டும். இவ்விதம் நான் சொன்னதும், தமிழகத்தைத் தவிர இந்தியாவின் பிறபகுதிகளில் வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்று அர்த்தம் அல்ல. தமிழர்களைத் தலைகுனியச் செய்வதும் என் நோக்கம் அல்ல.
இந்த விமர்சனப் பார்வையை இன்னும் விரிவாக்கினால், உலக மக்கள் அனைவருமே தலைகுனிந்து நிற்க வேண்டியவர்கள் என்பது எளிதில் விளங்கும். பிரிவுகளும், பிளவுகளும் இல்லாத எதிர்காலத்தை, அடுத்தத் தலைமுறைக்கு உருவாக்கத் தவறியுள்ள நம் தலைமுறையினர் அனைவருமே குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டும்.

"பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்" என்ற இக்கட்டுரையுடன் ஞாயிறு சிந்தனையைத் துவக்குவதற்குக் காரணம் உண்டு. இக்கட்டுரை என் உள்ளத்தைச் சங்கடப்படுத்தியது போலவே, இதற்கு வாசகர்கள் எழுதியுள்ள பதில் கருத்துக்களும் மனதைச் சங்கடப்படுத்தின.
சாதியம் என்ற விஷ விதை, இளையோர் மனங்களில் விதைக்கபப்ட்டுள்ளது என்ற உண்மையைச் சொன்னதும், பெரும்பான்மையான வாசகர்கள் இந்த விஷத்தை விதைப்பது யார் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். பள்ளிகள், மதங்கள், அரசியல் தலைவர்கள், ஊர்ப் பெரியவர்கள், பழமையில் ஊறிய நம் தாத்தா, பாட்டிகள், நாம் காணும் திரைப்படங்கள், நண்பர்கள், சாதியச் சங்கங்கள்... என்று நீஈஈஈஈளமான பட்டியல் ஒன்றை தயாரித்து, பலரைச் சுட்டிக்காட்டியுள்ளனர் வாசகர்கள்.
சுட்டும்விரல் ஒன்று முன்னோக்கி நீளும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கி நீள்வதை நாம் அறிவோம். நம்மை நோக்கி நீளும் விரல்கள் நம்மிடம் கூறுவது இதுதான்: பிரிவுகளை, பிளவுகளை உலகில் வளர்க்க நீ எவ்வகையில் உதவி செய்துள்ளாய்? அல்லது, பிரிவுகளைக் களைய நீ எவ்வகையில் முயற்சிகள் செய்துள்ளாய்? என்ற கேள்விகளை இவ்விரல்கள் நம்மிடம் எழுப்புகின்றன.

நம்மிடம் வேரூன்றியுள்ள பிரிவுகளை வேரறுக்க நாம் எவ்வகையில் முயற்சிகளைத் துவக்கலாம் என்பதை இயேசு இன்று நமக்குச் சொல்லித் தருகிறார். இந்த உண்மையை சொல்லித்தர அவர் தேர்ந்துள்ள பள்ளிக்கூடம்... ஒரு கிணற்றடி. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றடி. ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் (யோவான் 4 : 5-42) இன்று நாம் சந்திக்கும் இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதன் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்தார். பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப் போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக இயேசுவும் ஒரு சமாரியப் பெண்ணும் கிணற்றடியில் சந்திக்கின்றனர்.
இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்." (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல் வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. இந்த உரையாடலின் முடிவில், சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்ந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப் பற்றிப் பேச யாருக்குச் சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை விவிலியமும், திருஅவை வரலாறும் கூறியுள்ளன.

இந்த நற்செய்திப் பகுதி இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் கிளறிவிடுகிறது. பல பாடங்களையும் சொல்லித் தருகிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை பெஞ்ச், ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில் சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்த மிகச் சாதாரணமான இடங்களில் இறைவனைப் பற்றிய பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம் என்பதை இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் சமுதாயப் பிளவுகள் குறுக்கிடுவதை இந்த உரையாடல் தெளிவாக்குகிறது. இந்தப் பிளவுகளைக் கடந்து செல்லும்போதுதான் உயிருள்ள ஊற்று நீரை நாம் பருக முடியும் என்பதை இயேசு தெளிவாக்குகிறார்.

தண்ணீரைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, என்னைப் பொறுத்தவரை, நமது பெரும் குற்றம். பல ஆண்டுகளுக்கு முன், சாதிக்கொரு கிணறு, குளம் என்று பிரிவுகள் செய்தோம். இந்த அவலம் இன்றும் பல இடங்களில் தொடர்வதை அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர் ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைகிறது. மறைகிறது. தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த வியாபாரத்தால் தண்ணீர் 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.
இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப் பாதுகாக்கப் பல வழிகளிலும் போராடி வரும் பசுமைப் புரட்சி வீரருமான, 87 வயதான சுந்தர்லால் பகுகுணா கூறியது இது: "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசை பசியால் உருவானவை. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." இதே அச்சத்தை உலகத் தலைவர்கள் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். தண்ணீரை ஒரு சாதிய ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும் சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.

இறைவனின் கொடையான தண்ணீரை சாதி, இனம், பொருளாதாரம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும் பல காரணங்களுக்காகப் பிரித்து கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளதையும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு மலைகளையும், எருசலேம் புனித நகரையும் தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்:
யோவான் நற்செய்தி 4 : 21, 23-24
இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்என்றார்.

கடவுளையும், இயேசுவையும் சிறைப்படுத்தும் பல இலக்கணங்கள், எல்லைக்கோடுகள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள் மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
மனிதர்கள் வகுத்த வரம்புகளை, வேலிகளைத் தாண்டிய உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு அவரை வாழ்வெல்லாம் வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும். அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.
பிரித்தாள்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் தலைவர்கள், ஒட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இத்தலைவர்கள், இறைவனையும், மதத்தையும், சாதியையும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, மக்களைப் பிரிக்கும் மாயவித்தைகளை, இந்திய மக்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.


17 March, 2014

‘Pope Francis Wave’ "திருத்தந்தை பிரான்சிஸ் அலை"


The Holy Transfiguration

A man took his new hunting dog on a trial hunt. After a while, he managed to shoot a duck and it fell into the lake. The dog walked on the water, picked up the duck and brought it to his master. The man was stunned. He didn’t know what to think. He shot another duck and again it fell into the lake and, again, the dog walked on the water and brought it back to him. What a fantastic dog – he can walk on water and get nothing but his paws wet. The next day he asked his neighbour to go hunting with him so that he could show off his hunting dog, but he didn’t tell his neighbour anything about the dog’s ability to walk on water. As on the previous day, he shot a duck and it fell into the lake. The dog walked on the water and got it. His neighbour didn’t say a word. Several more ducks were shot that day and each time the dog walked over the water to retrieve them and each time the neighbour said nothing and neither did the owner of the dog. Finally, unable to contain himself any longer, the owner asked his neighbour, "Have you noticed anything strange, anything different about my dog?" "Yes," replied the neighbour, "come to think of it, I do. Your dog doesn’t know how to swim." (Fr. Antony Kadavil - http://cbci.in/Sunday-Reflections.aspx)

The neighbour could not see the wonder of a dog that could walk on water, since he was so accustomed to seeing hunting dogs swim. ‘Getting accustomed to’ can be a dangerous. It can narrow down our vision and lock our perspective to a great extent. Fresh perspectives, insights are required to clear our minds of the cobwebs of ‘the usual’. Sometimes the ‘usual’ can become too sacred as to guide our life. Lent is a good time to open our hearts and minds to fresh beginnings. Lent is the proper time to change!

This Sunday we have two reasons to reflect on ‘Change’. The Liturgical Readings present us with the theme of ‘Change’. That is the first reason. Today’s Gospel (Matthew 17: 1-9) talks of the change in Jesus – his Transfiguration. The First Reading (Genesis 12: 1-4) talks of Abraham being invited to change from the known to the unknown. In simple terms, he was asked to leave his hometown and move to a strange place. When Abraham was invited to make this change, he was 75 years old! (Gn. 12:4)
Last year, in March, a Bishop who was 77 years old, was invited to make a similar change. This is the second reason for us to reflect on ‘Change’. Yes, when Cardinal Jorge Mario Bergoglio was invited to leave Buenos Aires, and take up the leadership ministry of the Holy Catholic Church, he was 77 years old – old enough to retire from active ministry!

On Thursday, March 13, 2014, Pope Francis has completed his first year as the Bishop of Rome. Ever since Pope Francis took up this role, expectations ran high as to how he would CHANGE EVERYTHING in VATICAN and THE ROMAN CATHOLIC CHURCH as a whole. On quite a few occasions, he has made it more than clear that changes in the Church will have to begin with changes from the individuals. As a person, he has lived up to what he was saying… namely, change at the personal level.
Ever since he appeared on the balcony of St Peter’s Basilica around 8 p.m. on March 13, 2013, he had changed our perspective on who the Pope is. Pope Francis, appeared on the balcony, wearing a simple white cassock with a simple crucifix – no red mozzetta (red upper piece covering the shoulders up to the waist), and no golden, ornamented crucifix. Talk of first impressions!
What followed in the next 20 to 30 minutes confirmed that the Pope was one of us. The first words he spoke to the world at large were: “Fratelli e Sorelle, buona sera” – Brothers and Sisters, Good evening! It was like listening to a Parish Priest chatting with his parishioners. The distance between the Pope and the people dissolved that instant!

What followed was a defining moment of CHANGE which is etched deep in my mind and heart. I am sure millions would share these sentiments of mine. Pope Francis requested the people to pray for him. He said:
And now I would like to give the blessing, but first I want to ask you a favour. Before the bishop blesses the people I ask that you would pray to the Lord to bless me – the prayer of the people for their Bishop. Let us say this prayer – your prayer for me – in silence.
Pope Francis, the Supreme Pontiff of 1.2 billion Catholics around the world, bowed down before the people and asked for their prayers. That gesture was a supreme testimony of the type of person we have as our Holy Father. The silence that prevailed in Peter’s Square would have left lasting impression on millions around the world. If the Pope can bow down in prayer before the world in the full glare of all the media, then we can be assured of many blessings!
I am sure many of us have prayed for Popes and their intentions many times in our life. None of them, as far as I know, have made this request to me personally. Here was a Pope who was doing it personally. That one gesture erased all the distance between the Pope and the people. All through this year he has repeatedly asked people to pray for him. Even on the First Anniversary while he was making his Annual Retreat, he had tweeted saying: “Please pray for me.” This was a refreshing CHANGE, indeed!

In the first year of his leadership ministry, Pope Francis has brought in many changes on the personal level:
  • Usually, after the election of the Pope, the chosen Cardinal would sit on a special chair reserved for the Pope and all the other Cardinals in the Conclave would pay their respectful obedience to him. When Cardinal Bergoglio was chosen, he did not sit on that chair; instead he greeted all the Cardinals, standing. In the past one year, Pope Francis has kept up this practice of meeting others, standing.
  • In the House of St Martha where he continues to stay, he serves his own meals and sits down in any available chair, with other members of the community.
  • He brought sandwiches to the Swiss Guard standing near his room.
  • He sent money to a senior lady who had lost her money while travelling in a bus.
  • He keeps calling people directly over the phone and gives them pleasant surprises. For the First Anniversary, the Vatican Publishing House has published a book titled: “Pronto? Sono Francesco. Il Papa e la rivoluzione comunicativa un anno dopo” (Hello? This is Pope Francis. The Pope and the Communication Revolution one year later) written by Massimo Enrico Milone.

Looking back on the first year of Pope Francis in Vatican, one can easily think of the many ‘revolutions’ he has made. Many of them have been highlighted by the media worldwide. To me these are not important. There are so many other ‘revolutions’ initiated by Pope Francis that have not grabbed the attention of the media, but have made significant changes in the lives of people.
  • Persons who have left the Church for many years have returned to the Church after seeing Pope Francis.
  • The simplicity of Pope Francis has set in motion changes in other ‘leaders’ of the Church, who have begun to see themselves not as leaders but ministers (meaning, servants).
  • People’s idea has become more focussed and clear as to how their pastors and bishops should be – in terms of their residence, their dress, and the vehicles and gadgets they use. Bishops in Germany and the U.S. have been ‘pulled up’!

Even if Pope Francis does not achieve anything significant as the Bishop of Rome, the very fact that he had made the Pope an accessible, ordinary human being is a very big achievement, indeed. I call this a very BIG achievement since I believe that this ‘accessibility’ will set in motion many other changes in Vatican and in the entire Church, perhaps extending its influence even to the rest of the world. If the Pope is an ordinary human person, then, naturally, the others – namely, the Cardinals, the Bishops and the Priests are human beings as well. They cannot hoist themselves on pedestals and build protective walls around them. When walls and pedestals break down, fresh breeze can come in! The Church seems to be undergoing a ‘transfiguration’ with the help of a wave that is sweeping over Vatican.

Waves always move forward. They are not stagnant nor go back! Waves are a good sign of life and change! Let ‘Pope Francis Wave’ which was set in motion on March 13, 2013, continue to create ripples.


Pope Francis during general audience - Reuters

புதிதாக வாங்கிய வேட்டைநாயுடன் ஒருவர் ஏரிக்கருகே வேட்டையாடச் சென்றார். அவர் சுட்ட பறவை ஏரியில் விழுந்ததும், வேட்டைநாய், ஏரி நீர்பரப்பின்மீது நடந்து சென்று பறவையைக் கொணர்ந்தது. இதைக் கண்ட வேட்டைக்காரருக்குப் பெரும் வியப்பு. அவர் மீண்டும் ஒரு பறவையைச் சுட்டு, அது நீரில் விழுந்ததும், மீண்டும் அந்த வேட்டைநாய் நீரின்மீது நடந்துசென்று பறவையைக் கவ்வி வந்தது.
அடுத்தநாள், அவர் தன் நண்பர் ஒருவரை வேட்டைக்கு அழைத்துச் சென்றார். தன் வேட்டைநாயின் அற்புதத் திறமையை நண்பர் காணவேண்டும் என்பதற்காகவே அவரை அழைத்துச் சென்றிருந்தார். தன் நாயைப்பற்றி அவர் நண்பரிடம் எதுவும் சொல்லவில்லை. அவராகவே அதைக்கண்டு வியக்கட்டும் என்று எண்ணியிருந்தார்.
அவர் ஒரு பறவையைச் சுடவே, அது நீரில் வீழ்ந்தது. அவரது வேட்டைநாய் நீரின்மீது நடந்துசென்று பறவையை எடுத்துவந்தது. இதைக்கண்ட தன் நண்பர் வியப்பில் கூச்சலிடுவார் என்று எதிர்பார்த்த வேட்டைக்காரருக்குப் பெரும் ஏமாற்றம். நண்பர் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை அவர் ஒரு பறவையைச் சுடவே, மீண்டும் அந்த நாய் நீரின்மீது நடக்கும் சாகசத்தைச் செய்தது. நண்பரிடம் எந்த மாற்றமும் இல்லை.
பொறுமை இழந்த வேட்டைக்காரர், நண்பரிடம், "என் வேட்டைநாயிடம் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?" என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிய அந்த நண்பர், "ஆம்... உன் வேட்டைநாய்க்கு நீச்சல் அடிக்கத் தெரியவில்லை" என்று கூறினார்.
கண்மூடித்தனமாக அந்த நண்பர் சொன்னதைக் கேட்டு, சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. வேட்டைநாய்கள் என்றால் நீச்சல் அடிக்கவேண்டும் என்ற கருத்திலேயே ஊறிப்போன அந்த நண்பருக்கு, அந்த நாய் நீரின்மீது நடந்தது வியப்பாகத் தெரியவில்லை. அதற்கு நீச்சல் அடிக்கத் தெரியவில்லை என்புது மட்டுமே குறையாகத் தெரிந்தது.

இவை, இவை இப்படித்தான் இருக்கும், இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் ஊறிப்போகும் நம் சிந்தனைச் சங்கிலிகளை, பழக்கவழக்கங்களை உடைத்தெறிவதற்கும், மாற்றங்களை மனதார வரவேற்பதற்கும் இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனித வாழ்வை மேம்படுத்த, மாற்றங்கள் தேவை என்பதை நமக்கு நினைவுறுத்தும் காலம், தவக்காலம்.

தவக்காலத்தின் 2ம் ஞாயிறன்று, இயேசுவின் தோற்றமாற்றம் நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடக்க நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகமும் மாற்றத்தைப் பற்றி கூறுகிறது. தனக்குப் பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, மற்றொரு இடத்திற்குச் செல்லவேண்டிய மாற்றம் ஆபிரகாமுக்கு ஏற்பட்டது. மாற்றங்களை சந்திக்க, இளவயது பொருத்தமானது, வயது முதிர்ந்த காலத்தில் மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்குப் பெரும் தயக்கம் நமக்குள் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த ஊரைவிட்டு வேறொரு ஊருக்குச்செல்ல ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது, அவரது வயது 75. (தொ.நூ. 12:4)

ஆபிரகாமைவிட இன்னும் இரண்டு வயது கூடுதலாக, அதாவது, தன் 77வது வயதில், ஆயர் ஒருவர், தான் பிறந்து வளர்ந்த நாட்டிலிருந்து, பணிசெய்த மறைமாவட்டத்திலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்ல அழைக்கப்பட்டார். ஆம், அன்புள்ளங்களே, அர்ஜென்டினா நாட்டின் புவனோஸ் அயிரெஸ்ஸில் (Buenos Aires) பிறந்து அங்கேயேப் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) அவர்கள், தன் 77வது வயதில், பணிஒய்வைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், பெரியதொரு மாற்றத்திற்கு அழைக்கப்பட்டார். கத்தோலிக்கத் திருஅவையில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் உருவாக்கிய ஒரு வரலாற்று மாற்றத்தின் எதிரொலியாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வத்திக்கானில் கூடிய கர்தினால்கள், 76வயது நிரம்பிய கர்தினால் பெர்கோலியோ அவர்களை, திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்தனர். அர்ஜென்டினாவிலிருந்து அகில உலகத்திற்கு மாறச்சொல்லி கர்தினால் பெர்கோலியோ அவர்கள் பெற்ற இந்த அழைப்பு, மாற்றங்களை வலியுறுத்தும் தவக்காலத்தின்போது நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 13, கடந்த வியாழனன்று, திருஅவையின் தலைமைப் பணியில் தன் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றங்களைப்பற்றி சில பாடங்களைச் சொல்லித் தந்துள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்றதும், திருஅவையில் மாற்றங்களைக் கொணர்வார் என்ற எதிர்பார்ப்பிற்கு அவர் அவ்வப்போது அளித்துவரும் பதில் இதுதான்: "திருஅவையில் மாற்றங்கள் உருவாக, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் மாற்றங்கள் நிகழவேண்டும்" என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வருகிறார். தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் அவர் இதுவரை கொணர்ந்துள்ள மாற்றங்கள், நம் அனைவருக்கும் ஓர் உந்துசக்தியாய் அமைந்துள்ளன.

கடந்த ஆண்டு, மார்ச் 13ம் தேதி, இரவு எட்டு மணியளவில், கர்தினால் பெர்கோலியோ அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல் மாடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் என்று அறிமுகம் ஆனபோது அவர் அணிந்திருந்த எளிய உடையே மாற்றத்தை உணர்த்தியது. அவர் மக்கள் முன், உலக ஊடகங்களின் முன் கூறிய முதல் வார்த்தைகள், மாற்றத்தை உணர்த்தின: "சகோதரர்களே, சகோதரிகளே, மாலை வணக்கம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகள், அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கும், இன்னும் ஊடகங்களின் வழியே பார்த்துக்கொண்டிருந்த பலகோடி மக்களுக்கும், திருத்தந்தைக்கும், இடையே இருந்த தூரத்தை வெகுவாகக் குறைத்தன. உலகில் வாழும் 100 கோடிக்கும் மேற்பட்ட கத்தோலிக்க மக்களின் தலைவர் என்ற முறையில் பேசும் திருத்தந்தை, உயர்வான எண்ணங்கள் பொதிந்த வார்த்தைகளையே முதலில் பேசுவார் என்று நிலவிவந்த கருத்தை மாற்றி, நானும் உங்களில் ஒருவன்தான் என்பதை, அவர் சொன்ன 'மாலை வணக்கம்' என்ற வார்த்தைகள் பறைசாற்றின.
அதுமட்டுமல்ல, அடுத்த 30 நிமிடங்கள் அவர் சொன்னவை, செய்தவை அனைத்தும், அவரை மக்களில் ஒருவராக மீண்டும் மீண்டும் காட்டின. உரோமையின் ஆயராகிய தான் மக்களை அசீர்வதிப்பதற்கு முன், மக்கள் தனக்காகச் செபிக்கவேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் முன் தலைவணங்கி நின்றார். அந்த சில மணித்துளிகள், பலகோடி மக்களின் மனங்களில் இனம்புரியாத மாற்றங்களை உருவாக்கின.

மறக்கமுடியாத இந்த அறிமுகத்திற்குப் பிறகு, கடந்த ஓராண்டளவாக திருத்தந்தை சொன்னவை, செய்தவை பலவும் அவரை ஒரு மனிதப் பிறவி என்று மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதித்தன.
  • அவர் வாழ்ந்துவரும் புனித மார்த்தா இல்லத்தில் தன் உணவை தானே பரிமாறிக்கொண்டு, மற்றவருடன் உண்பது...
  • தன் அறைக்கு வெளியே காவலுக்கு நின்ற வீரருக்கு உணவு கொணர்ந்தது...
  • எதிர்பாராத வகையில் தொலைபேசியில் பலரை அழைத்து, ஆனந்த அதிர்ச்சி அளித்துவருவது...
  • 'பஸ்'ஸில் தன் பணத்தைப் பறிகொடுத்த பெண்ணுக்கு பணம் அனுப்பிவைத்தது...
  • பங்குத்தளங்களிலும் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும் மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைகளையும், நோயுற்றோரையும் பரிவோடு அணைத்து முத்தமிடுவது...
  • பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்களைச் சென்று சந்திப்பது...
என்று நீண்டுசெல்லும் பட்டியலில் நாம் மீண்டும் மீண்டும் காண்பது ஒரே ஒரு மாற்றம்தான்... திருத்தந்தை என்பவர், வெகு, வெகு எளிதாக தொட்டுவிடக்கூடிய ஒரு சாதாரண மனிதர் என்ற அர்த்தமுள்ள ஒரு மாற்றம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பணியில் நீடிக்கும் ஆண்டுகளில் பெரும் சாதனைகள் எதையும் ஆற்றாமல் போனாலும் கவலையில்லை. திருஅவையின் தலைவர், ஏனைய மனிதர்களைப் போல் ஒரு சாதாரண மனிதர் என்ற ஒரு மாற்றத்தை அவர் உருவாக்கிச் சென்றால், அதுவே ஒரு பெரும் சாதனைதான்.
திருத்தந்தையே ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை இவ்வுலக மக்கள், குறிப்பாக, கத்தோலிக்க மக்கள் புரிந்துகொண்டால், திருஅவையில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். அருள் பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால், திருத்தந்தை என்று பணி நிலைகள் உயர, உயர, அந்நிலைகளைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டு, அந்நிலைகளில் உள்ளோரை எட்டாத உயரத்தில் பீடமேற்றும் பழக்கங்கள் மாறும்போது, திருஅவை இன்னும் நலமுள்ள ஓர் இயக்கமாக மாறும்.

உலகக் கவனத்தை ஈர்க்க, இயேசு தன் தோற்றத்தை மாற்றவேண்டும் என்று அலகை தூண்டியதை சென்றவாரம் சிந்தித்தோம். அலகையின் யோசனையைப் பின்பற்றி, இயேசு எருசலேம் கோவிலிலிருந்து குதித்திருந்தால், யூதர்கள் மத்தியில், உரோமையர்கள் மத்தியில் பரபரப்பான மாற்றங்களை உருவாக்கியிருப்பார். அத்தகைய மாற்றங்களை விரும்பாத இயேசு, தன் மூன்று சீடர்களுக்கு முன் தோற்றமாற்றம் பெறுகிறார் என்று இந்த வார நற்செய்தி சொல்கிறது. இந்த மாற்றம், சீடர்களின் உள்ளங்களில் நலமிக்க மாற்றங்களைக் கொணரும் என்ற நம்பிக்கையில் இயேசு தன் தோற்றமாற்றம் என்ற அருளை சீடர்களுக்கு வழங்குகிறார்.

என்னைப் பொருத்தவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது பணிவாழ்வின் முதலாம் ஆண்டில், ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்த மாற்றங்கள், வெளிப்படையாக உருவாகியுள்ளன. அதேநேரம், விளம்பரங்கள் ஏதுமில்லாத மாற்றங்கள் பலவற்றிற்கும் அவர் காரணமாக இருந்தார். இவற்றை முக்கியமான மாற்றங்களாக நான் கருதுகிறேன்.
  • பல ஆண்டுகளாகக் கோவில் பக்கமே செல்லாத கிறிஸ்தவர்கள், இவர் தலைமைப் பணியை ஏற்ற ஒரு சில நாட்களில், கோவிலுக்குச் சென்றுள்ளனர் என்பது விளம்பரம் ஆகாத உண்மை.
  • திருத்தந்தை அவர்களின் எளிமையான பணிவாழ்வால், திருஅவை தலைவர்களைப் பற்றி மக்களின் பார்வை தெளிவும், கூர்மையும் பெற்றுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்.
  • தலைவர்கள் என்று தங்களையே எண்ணிவந்தவர்கள், இன்று தங்களை, திருஅவையின் பணியாளர்கள் என்று எண்ண முயற்சி செய்து வருகின்றனர்.
  • திருஅவைப் பணியாளர்களின் உறைவிடங்கள், உடைகள், பயன்படுத்தும் வாகனங்கள், சாதனங்கள்... மாற்றம் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகின்றன. ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் இரு ஆயர்கள் தங்கள் இல்லங்களை அழகுபடுத்த செய்த செலவைப்பற்றி மக்கள் கேள்விகள் கேட்டனர்.
இவையாவும், வரவேற்கத்தக்க மாற்றங்கள். மக்கள் மத்தியில் உருவாகிவரும் இந்த மாற்றங்கள் தொடரும் என்று நம்பிக்கை கொள்வோம்.
வத்திக்கான் என்ற நீர்நிலையில் திருத்தந்தை பிரான்சிஸ் வடிவத்தில் விழுந்த ஒரு கல், அலைகளை உருவாக்கி வருகின்றது என்பது ஆனந்தம் தரும் நற்செய்தி. "திருத்தந்தை பிரான்சிஸ் அலை" இன்னும் பல ஆண்டுகள், நலமிக்க மாற்றங்களை திருஅவையிலும் இவ்வுலகிலும் உருவாக்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

தன் தோற்றமாற்றத்திற்குப் பிறகு, இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த அழைப்பு: "எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்." தாங்கள் கண்ட அதிசயக் காட்சியிலிருந்து அவர்கள் எழுந்து, மலையைவிட்டு இறங்கினர். அடுத்தநாள் பிரச்சனைகளைச் சந்திக்கத் துணிந்தனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, நம் தனிப்பட்ட வாழ்விலும், கத்தோலிக்கத் திருஅவையிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், மனித சமுதாயத்திலும் மாற்றங்களை உருவாக்க முதலில் நம்மிடம் மாற்றங்களை உருவாக்குவோம். இதற்கு, நாம் ஏறி நிற்கும் மமதை மலையிலிருந்து நாம் இறங்குவோம். நம்முன் மலைபோல் குவிந்திருக்கும் பிரச்சனைகளைக் கண்டு மலைத்துவிடாமல், நலமிக்க மாற்றங்களை உருவாக்குவோம்.
பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இந்தியாவில், வறியோருக்கு வளமான, நலமான மாற்றங்களைக் கொணரும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மன உறுதியை இந்திய மக்களுக்கு இறைவன் வழங்கவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.


09 March, 2014

God, no more Temptations, please… சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி


Duccio – the Temptation on the Mount

Every year, the First Sunday of Lent invites us to think about temptations. Today’s first reading talks of the temptation faced by our first parents. (Genesis 2: 7-9; 3: 1-7) The Gospel talks of temptations faced by Jesus. (Matthew 4: 1-11) EVERY human being was, is, and will be tempted. No exceptions. Not even Jesus.

Some years back, I was discussing this topic with a friend of mine with a view to prepare the homily. The moment he saw the theme ‘temptation’, he began singing an old Tamil film song that talked of the hero being beset with trials - Sothanai mel sothanai podhumadaa saami. (In Tamil we generally use the word ‘sothanai’ for trails and temptations.) He is pleading with God not to send him more temptations.

Does God send temptations? Every now and then we feel that way. When we are deep in trouble, we raise our eyes to heaven and blurt out something like this: Oh, God, why do you send me such trials and temptations? The opening verse of today’s Gospel gives us some sort of a ‘solution’ as to who sends us temptations. Then Jesus was led up by the Spirit into the wilderness to be tempted by the devil. (Mt. 4:1)
The devil tempted Jesus and the Holy Spirit led Jesus into this situation, probably prompting him with words of encouragement and support. This seems to explain what we experience! The devil is ever ready to tempt us. In such a situation, it is God who stays close and seems to ‘permit’ the evil one to tempt us. This is the theme of the Book of Job. This is what we see in the Garden of Eden.

If we go through Chapters 2 and 3 of Genesis (Our first reading is taken from these chapters), God created a lovely garden; planted all sorts of trees; placed Adam (and later Eve) in that garden. Till then the story is a fairy tale. Then came the commandment that they should not touch a particular tree in the garden. It also looks odd that he created the serpent (we assume that this was the devil) more cunning than other creatures (Gn. 3:1) and allowed the serpent to interact with Eve. Why plant a tree in the first place and then forbid the First Parents from even touching it?
If only God had not planted that particular tree…
If only God had not created the serpent more cunning…
If only God had not allowed the serpent to interact with Eve…
If only… Well, we are generous in our counsels to God.
Sometimes we feel that we have better ideas than God as to how things should have been done.

This is exactly the beauty of God’s love. While he gave all the other living beings the simple command – “Be fruitful and multiply…”, he gave the human beings the special command of ‘making proper choices’. If only God had not given this capacity to human beings, we would all be ‘programmed’ to follow God’s will to the minutest detail. No choices, no problems, no evil… No Original Sin… Wow! If the whole world functioned as a well-oiled machine, there would be no factions, no frictions, no failures… But that would be the world of the ‘robots’. God created human beings and not pre-programmed robots. God placed human beings, including His beloved Son, in the midst of trials and temptations. This is how I understand that ‘the Spirit led Jesus to be tempted by the devil’!

All the three synoptic gospels talk of this experience of Jesus. The temptation-event in the life of Jesus is different from the other events. While there were quite a few witnesses to the other events, Jesus was the only eyewitness to this event. Why did Jesus, who shunned all publicity, tell His disciples about this experience he had alone in the desert? Perhaps He wanted us to learn quite a few lessons from this most common of all human experiences.

The first lesson is that temptations are very attractive. I am sure many of us have seen the Life of Christ enacted on stage. In almost all these stage plays, the scene of the devil tempting Jesus is a must. It would be a dramatic scene with the devil usually clothed in black, with the face painted also in black, with protruding teeth, with two horns and with a loud, scary voice entering the stage. If Satan comes in this fashion, then all of us would flee the scene of drive away this horrible creature from our sight. All of us know that Satan comes clothed in light… And no wonder, for Satan himself masquerades as an angel of light. (II Cor. 11:14)

All the three temptations that Jesus faced were ‘good’ temptations, very logical. This is the second lesson we need to learn about temptations – that they are very logical. Jesus was hungry; therefore He was asked to turn the stones into bread. Jesus wanted to begin his public ministry; therefore He was asked to begin his ministry with a bang… by jumping off the pinnacle of the Temple. Jesus wanted to gain the whole world for His Father; therefore He was asked to make compromises with the devil. All the three ‘therefore’s sound very logical.

Satan also uses an opening salvo to ‘hook’ Jesus into doing his bidding. “If you are the Son of God, tell these stones to become bread.” “If you are the Son of God, throw yourself down.” On the one hand, this looks like a childish challenge. Kids throw such challenges at one another “Hey, Tom, if you are so brave, why don’t you climb this tree? Why don’t you do this… and why don’t you do that? etc. But, a closer analysis of these ‘childish challenges’ also gives us a clue that the Satan was trying to define what the Son of God must be like. If Jesus was the Son of God, He must use His powers to gratify himself, to make a spectacular entry into human history, to make compromises with evil forces even to the point of total surrender to them… In short, this is a short cut… a path of least resistance… an unholy compromise.  

Jesus tries to respond to these challenges in his own style. He rewrites the definition of the Son of God. If someone uses his / her special powers to satiate one’s own needs or to seek popularity, he or she is a magician and not the Son of God. Jesus, who refused to use his power to satiate his own hunger in the desert, used his special powers to feed thousands in another ‘deserted’ place. Jesus, who refused to surrender to the Satan with a strong rebuttal: “Away from me, Satan!”, was willing to surrender to the Father while He was in his most vulnerable moment on the Cross. These are some of the lessons Jesus tries to teach us about temptations. Are we listening? Lenten season is a good time to learn from the desert-school of Jesus.

Here is a conversation between Calvin and Hobbes that serves as a wake-up call:
"Do you believe in the devil? You know, a supreme evil being dedicated to the temptation, corruption, and destruction of man?"
"I'm not sure that man needs the help."

தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரையைப்பற்றி அருள்பணியாளர் ஒருவரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று நமக்குத் தரப்படும் மையக்கருத்து 'சோதனை' என்று நான் சொன்னதுதான் தாமதம், அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற ஒரு பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 'சாமி, இனி எனக்குச் சோதனைகளை அனுப்பாதே' என்று கெஞ்சும் பாணியில் அமைந்துள்ள ந்த வரியில், சோதனைகளை அனுப்புவது கடவுள் என்ற கருத்து மறைந்துள்ளது.
சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? அப்படித்தான் நம்மில் பலர் எண்ணுகிறோம். பேசுகிறோம். பிரச்சனைகள் பல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று கடவுளிடம் முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம் குறை சொல்கிறோம்.
சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா?... என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் ஓரளவு பதில் தருவதாக நான் உணர்கிறேன். "இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்" (மத். 4:1) என்ற வார்த்தைகளை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் என் மனதில் எழுகின்றன:
1. சோதனைகளைத் தருவது, அலகை.
2. சோதனைகளைச் சந்திப்பதற்கு நம்மை அழைத்துச் செல்வது, கடவுள்.
சோதனைகளைச் சந்திக்க, கடவுள் நம்மை 'இழுத்துச் செல்வதில்லை', 'அழைத்துச் செல்கிறார்'.

இத்தகைய அழைப்பை, இறைவன், நம் முதல் பெற்றோருக்கும் தந்தார். ஏதேனில் ஒரு தோட்டத்தை உருவாக்கிய, ஆண்டவராகிய கடவுள், கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.(தொ.நூ. 2:9) பின்னர், முதல் பெற்றோரிடம், 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது.' (தொ.நூ. 3:3) என்றும் கட்டளையிட்டார். இதை நாம் வாசிக்கும்போது, மனதில் ஒரு நெருடல்... ஒரு மரத்தை உருவாக்கி, பின்னர், அதைத் தொடக்கூடாது என்று சொல்வதற்குப் பதில், அந்த மரத்தை அவர் படைக்காமலேயே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் எழுகிறது. கடவுள் இதைச் செய்திருக்கலாம், அதைச் செய்திருக்கலாம் என்ற பாணியில் அவ்வப்போது சிந்திக்கும் நம் எண்ணங்களின்படி...
கவர்ச்சிகள், சோதனைகள், பிரச்சனைகள் என்று எதுவுமே இல்லாத ஓர் உலகை இறைவன் படைத்திருக்கலாமே!...
ஏக்கங்கள் ஏதுமற்ற, தீமை என்றால் என்னவென்றே அறியாதவண்ணம் மனிதர்களை உருவாக்கியிருக்கலாமே!... என்று நம் எண்ணங்கள் தொடர்கின்றன.

அத்தகைய ஓர் உலகம், அத்தகைய ஒரு படைப்பு, செயற்கையாக இருந்திருக்கும். தீமையே அறியாத, குறைகளே இல்லாத படைப்பாக நாம் உலவி வந்தால், ஒவ்வொரு அசைவும் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு, இயந்திரகதியில் இயங்கும் 'ரோபோக்களை'ப்போல் (Robot) நாமும் உலவி வந்திருப்போம்.
நன்மையையும், தீமையையும், நம் முன் வைத்து, அவற்றில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சக்தியையும் இறைவன் நமக்கு வழங்குகிறார். இதுதான் அவர் தரும் அழைப்பு. சோதனைகளுக்கு நம்மை அழைத்துச் செல்வது இறைவன் என்பதை நான் இவ்வாறு புரிந்துகொள்ள முயல்கிறேன்.

சோதனை என்பது மனிதராய்ப் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு யாரும்... அது, இறைமகன் இயேசுவே ஆனாலும் சரி, விதிவிலக்கு அல்ல. தன் பணி வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனைத் தனியே சந்திக்கச் சென்றிருந்த இயேசுவை, அலகையும் சந்தித்தது. அலகை வழி இயேசுவுக்கு வந்த சோதனைகளும், அவற்றை இயேசு சந்தித்த விதமும் நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் வரும் சோதனைக் காட்சிகளில், சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, நீண்ட இரு பற்களோடு பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். சிறு வயதில் பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், நம்மைக் கவர்ந்திழுக்கின்றன என்பதுதானே நம் அனுபவம். அலகை தரும் சோதனைகள் அவ்வளவு அழகானவை.
மேலோட்டமாகப் பார்த்தால், இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி அலகை இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனேயே தீர்த்துவிடத் துடிக்கும்போது, குறுக்கு வழிகளில் செல்லும் சோதனைகள் அதிகமாகின்றன.
நாம் இன்றைய உலகில் சந்திக்கும் பெரும் சோதனை என்ன? பார்க்கும் அனைத்தையும் பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் சோதனை. தேவைக்கும் அதிகமாக பல்வேறு பசிகளைத் தூண்டும் 'நுகர்வுக் கலாச்சாரம்', நம் சமுதாயம் என்ற உடலில், புரையோடிப்போன புண்ணாக மாறிவருகிறது. காணும் அனைத்தையும், நம் கைபடும் அனைத்தையும் சுயநலக் கணக்கில் சேர்த்துக்கொள்ளும் வெறியை இந்த 'நுகர்வுக் கலாச்சாரம்' சொல்லித்தருகிறது. சுயநலப் பசியைவிட இன்னும் உன்னதமான உண்மைகள், உணர்வுகள் இவ்வுலகில் உள்ளன என்ற பாடத்தை முதல் சோதனை வழியே நமக்குச் சொல்லித்தருகிறார் இயேசு.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க வேண்டும். அப்படி குதித்தால், உடனே வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையைத் தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரும் காட்சிக்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும் இதைக்கண்டு, இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.

30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் கடும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும்... உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும்! சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான வெற்றி. இந்தியாவில் தேர்தல் நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், சுருக்குவழிச் சோதனைகள் பல, சுறுசுறுப்பாக இந்தியாவைச் சுற்றிச் சுற்றி வருவதை நாம் எண்ணிப்பார்க்கலாம். குறுக்குவழிகளை விடுத்து, நேரிய வழி செல்லும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்.

இவ்விரு சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள்: "நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்." "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்."
"நீர் இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதைக் கேட்கும்போது, மற்றொரு ஆழமான எண்ணமும் எழுகிறது. இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன் புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள புதுமை செய்ய வேண்டும்.
தன் சக்தியைப் பறைசாற்ற, புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாக இருக்கமுடியாது. தன் சுய தேவைகளுக்கு, சுய விளம்பரத்திற்குப் புதுமைகள் செய்தால், புதுமைகள் செய்யும் சக்தி, அழுக்காகும், அர்த்தமில்லாமல் போகும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலில் பாடங்கள் பல உண்டு. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் இறைவார்த்தை என்ற உணவைப் பற்றி பேசினார். கல்லை அப்பமாக மாற்றும் சக்தியைப் பயன்படுத்தி, தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்யவா? சிந்திக்கலாம்... இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவது சோதனையில் உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அப்படி இயேசு உலகை  தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு சமரசம் செய்யவேண்டும்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானை விரட்டி அடித்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது,  "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவை முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக்கொள்வதும், தீமைகள் நடக்கும்போது கண்களை மூடிக்கொள்வதும்... இவ்விதம் நடப்பது, ஊரோடு ஒத்து வாழ்வதற்காக என்று சமாதானம் சொல்லிக்கொள்வதும், நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.
கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மை கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.