26 October, 2023

Love God, love Neighbour கடவுளிடம், அயலவரிடம் அன்பு செலுத்து

The Greatest Commandment
 
30th Sunday in Ordinary Time

Ever since October 7, we have been seeing and hearing of the Israel – Hamas war, in which innocent people, including children, are being killed. Pope Francis and many other religious leaders have been making special appeals to the Hamas group members to release the hostages they had taken and to the Israel army to stop their ruthless bombardment of the Gaza strip. On October 27, Friday, the Pope had invited the Catholics and Christians all over the world to observe a day of fasting and prayer for the restoration of peace in the Holy Land.

In such a situation, the liturgical readings today invite all of us to focus our attention on the greatest commandments given in the Bible, namely, love of God and love of neighbour. The opening lines of today’s first reading – Exodus 22:21-27 – invite us to show special concern for the disadvantaged sections of society – foreigners, widows, orphans, poor people… When talking about how to treat ‘foreigners’, God says: “Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt.” (Ex. 22:21)
The warning against mistreating the foreigner is given in quite a few places in the Old Testament: Exodus 22:21; 23:9; Leviticus 19:33-34; Deuteronomy 10:19; 23:7… This warning is repeated by the Prophets as well. We know that many of the Old Testament books are also part of the scripture used by the Jews. We can assume that the Jews who are running the Israel government at present would have read these passages in their synagogue and at home. Still, they have unleashed their artillery powers against the people of Palestine in whose country the Jews had taken refuge after the II World War.

Similarly, we can assume that our Moslem brothers who are part of the Hamas group must be aware of the statements of Prophet Muhammad on love of God and love of neighbour. During this Sunday’s liturgy let us pray that both the Israel government and the Hamas group become humble enough to listen to their scriptures and stop this massacre of innocent lives in Gaza strip. On the other hand, if they, in their arrogance, think that they have all the answers to the problems, the world will continue be a battle field where innocent lives will be sacrificed endlessly.  

We meet an arrogant expert of the law trying to corner Jesus in today’s Gospel – Matthew 22:34-40. The very opening lines of today’s gospel tell us that the political game of the Pharisees, which was evident last Sunday too, was not finished yet: Hearing that Jesus had silenced the Sadducees, the Pharisees got together. One of them, an expert in the law, tested him with this question: “Teacher, which is the greatest commandment in the Law?” (Matthew 22: 34-36)
The lawyer wasn’t interested in learning the truth, he was looking for a way to trap Jesus and corner him with his own words.  He said, “Teacher, which is the greatest commandment in the law?” – This question was a land mine, waiting to explode.

The Jewish law contained 613 commandments.  248 were positive commandments: “You shall…”  365 were negative commandments: “You shall not…” The Jews made many distinctions about the commandments of God, calling some "light," others "weighty," others "little," others "great." To the question of ‘the greatest commandment’, some contended that the law of the Sabbath was the greatest commandment, some, the law of sacrifice, some, that of circumcision. They now referred the resolution of this vexed question to Jesus, who astonished them with a bombshell!

Jesus knew the ploy. Still, it was a profound question and Jesus did not wish to let go of an excellent opportunity. Hence, Jesus gave him a reply. What a reply it was! This reply of Jesus has served as the heartbeat of Christian tradition all these centuries. Jesus combined two famous passages from the Old Testament – namely, Deuteronomy 6:5 and Leviticus 19:18. The passage from Deuteronomy not only gives the famous commandment, but also adds how this great commandment has to be practised:
“Now this is the commandment… Hear, O Israel: The Lord our God is one Lord; and you shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your might. And these words which I command you this day shall be upon your heart; and you shall teach them diligently to your children, and shall talk of them when you sit in your house, and when you walk by the way, and when you lie down, and when you rise. And you shall bind them as a sign upon your hand, and they shall be as frontlets between your eyes. And you shall write them on the doorposts of your house and on your gates.” (Deuteronomy 6:1,4-9)
In all probability, the expert of the law, when he came to meet Jesus, had bound this commandment ‘as a sign upon his hand, and as frontlets between his eyes’. Still, he wanted to know which was the greatest commandment. Sometimes, we miss the most obvious things in life when they are too close to us, or when we are too familiar with them.

Unfortunately, the religious leaders had replaced this ‘greatest commandment’ with other commandments of the Sabbath, sacrifices and circumcision. Jesus drew the attention of the expert to what was most obviously ‘the greatest commandment’. He did not stop there. He introduced the love of the neighbour in the same breath as he spoke of the love of God. Here is the reply of Jesus as recorded by Matthew:
Matthew 22: 37-40
Jesus replied: “‘Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind.’ This is the first and greatest commandment. And the second is like it: ‘Love your neighbour as yourself.’ All the Law and the Prophets hang on these two commandments.”

Jesus seems to propose two measuring rods - one for the love of God and another for the love of neighbour. Loving God has to be total… with all your heart and with all your soul and with all your mind. No half measures here!
The measuring rod of the love of neighbour is the love of self. Loving oneself is the basic requirement to love another. Jesus seems to imply that those who have no love and respect for themselves, will find it hard to love another person.

This encounter of Jesus with the expert in the law is recorded in all the three synoptic gospels (Mt. 22:34-40; Mk. 12:28-34; Lk. 10:25-37), with a few variations. It is interesting and instructive to pay attention to these different versions. While Matthew closes the event with the reply of Jesus, Mark goes on to say: “Well said, teacher,” the man replied. “You are right in saying that God is one and there is no other but him. To love him with all your heart, with all your understanding and with all your strength, and to love your neighbour as yourself is more important than all burnt offerings and sacrifices.” When Jesus saw that he had answered wisely, he said to him, “You are not far from the kingdom of God.” And from then on no one dared ask him any more questions. (Mark 12: 32-34)
Jesus and the teacher of the law admired each other in this question-and-answer session, and parted company as friends! True admiration for another comes as a result of having a true admiration of oneself, first. I can surely say that Jesus did have an honest appraisal of himself and hence he could admire others when they were truly admirable, even if they were in the ‘opposite camp’.

In the gospel of Luke, (Lk. 10:25-37) we get a very different picture of this incident. Here, Jesus, instead of saying these famous words himself, made the expert in the law say the famous line about the love of God and love of neighbour. Here again, Jesus admired the expert and told him: “You have answered correctly. Do this and you will live.” (Lk. 10:28) But, the expert wanted to ‘justify himself’… justify his years in the law school, justify his position in front of the people and asked the famous question: “And who is my neighbour?” (Lk. 10:29)
Jesus could have easily brushed aside the impertinence of the expert with a condescending smile and gone his way… But, no, Jesus answered this question. And, once again, what an answer! He came out with the world-famous parable of the ‘Good Samaritan’. We are thankful to this expert in the law for being the catalyst in bringing to light one of the best parables from Jesus.

What Jesus said at the beginning and at the end of this parable is very relevant for us. At the beginning of this parable, Jesus told the expert: “You have answered correctly. Do this and you will live.” (Lk. 10:28) The closing conversation after the parable goes like this: “Which of these three do you think was a neighbour to the man who fell into the hands of robbers?” The expert in the law replied, “The one who had mercy on him.” Jesus told him, “Go and do likewise.” (Lk. 10:36-37)

The emphasis is on ‘doing’. Actions more than thoughts and words… Do this, do likewise! We are sent into the world to live the Gospel… to live the love of God and love of neighbour. The world today has become more and more eloquent in defining what love is. We are offered hundreds of ‘love-machines’ that create an illusion that the whole world is a family. This ‘family’ created by the business world is a virtual world. The real world, on the other hand, is getting more and more torn and fragmented, leaving millions orphaned, widowed and estranged.

Against the background of this real world, today’s first reading comes as a wake-up call. The words given in this passage are very practical and they emphasise concrete, practical, day to day actions. Moreover, these words are given to us as coming from God.
Thus says the Lord: “Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt. Do not take advantage of the widow or the fatherless. …
“If you lend money to one of my people among you who is needy, do not treat it like a business deal; charge no interest. If you take your neighbour’s cloak as a pledge, return it by sunset, because that cloak is the only covering your neighbour has. What else can they sleep in? When they cry out to me, I will hear, for I am compassionate.” (Exodus 22: 21-22, 25-27)

Setting aside all eloquence, God seems to talk to us directly today. Christ, on his part, encourages us to love God and neighbour in action. If all of us can translate all our thoughts and words into actions – actions of sincere love and support, then we shall live. “Do this and you will live.”

Greatest Commandments

பொதுக்காலம் 30ம் ஞாயிறு

அக்டோபர் 7ம் தேதி முதல், இஸ்ரேல் அரசுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் போரைக் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தை வேதனைப்படுத்துகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, உலகின் பல மதத் தலைவர்கள், அப்பாவி பாலஸ்தீன மக்களை, குறிப்பாக, குழந்தைகளை பலியாக்கிவரும் இந்த போரை முடிவுக்குக் கொணர, வேண்டுகோள்களை வெளியிட்டு வருகின்றனர். அக்டோபர் 27, வெள்ளியன்று, புனித பூமியில் அமைதி திரும்புவதற்கு, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் உண்ணா நோன்பு மேற்கொண்டு செபிக்கும்படி திருத்தந்தை அழைப்பு விடுத்திருந்தார்.

இத்தகையைச் சூழலில், இன்றைய ஞாயிறு வழிபாட்டு வாசகங்கள், கடவுள் அன்பையும், அயலவர் அன்பையும் வலியுறுத்தும் எண்ணங்களை வழங்கியுள்ளன. இன்றைய முதல் வாசகம் - விடுதலைப் பயணம் 22:21-27 - அன்னியர், கைம்பெண்கள், அனாதைகள் ஆகியோருக்கு காட்டவேண்டிய தனிப்பட்ட அக்கறையைப் பற்றி கூறுகிறது. "அன்னியரைத் துன்புறுத்தாதீர்கள், ஏனெனில் நீங்களும் எகிப்து நாட்டில் அன்னியராக இருந்தீர்கள்" என்று இறைவன் வழங்கும் எச்சரிக்கை, விடுதலைப் பயணம், லேவியர், மற்றும் இணைச்சட்டம் ஆகிய நூல்களில் மீண்டும், மீண்டும் பதிவாகியுள்ளது. இதே நூல்களையும், இறைவன் வழங்கும் இந்த எச்சரிக்கையையும், இஸ்ரேல் நாட்டில் தற்போது வாழ்ந்துவரும் யூதர்கள், தங்கள் இல்லங்களிலும், தொழுகைக் கூடங்களிலும் கட்டாயம் வாசித்திருக்கவேண்டும். இருப்பினும், அவர்கள், தாங்கள் குடியேறிய பாலஸ்தீன நாட்டில், அங்கு வாழ்ந்துவந்த பாலஸ்தீனியருக்கு செய்துவரும் கொடுமைகளையும், தற்போது, காசாப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல்களையும் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம்.

இதேபோல், இஸ்லாமிய இறைவாக்கினர் முகம்மது அவர்கள், இறைவன் அன்பையும், அயலவர் அன்பையும் குறித்து வழங்கியுள்ள கருத்துக்களை இஸ்லாமியர்களும் நன்கு அறிந்துள்ளனர். யூதர்களும், இஸ்லாமியரும், ஆணவம் நிறைந்த தங்கள் அரசியல் வெறியைக் கைவிட்டு, தங்கள் மறைநூல்கள் வழங்கியுள்ள அன்பை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க இறைவன் அவர்களது உள்ளங்களைத் திறக்கும்படியாக இன்றையத் திருப்பலியில் உருக்கமாக வேண்டிக்கொள்வோம்.

ஆணவம் கொண்ட பரிசேயர், சதுசேயர் மற்றும் ஏரோதியர், இயேசுவை, ஏதாவது ஒரு வழியில், சிக்கவைப்பதற்கு மேற்கொண்ட கேள்வி-பதில் முயற்சிகள், சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும் வழங்கப்பட்டுள்ளன.
"சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" (மத்தேயு 22:17) என்ற கேள்வி, சென்ற ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்பட்டது. "திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34) என்ற கேள்வி, இந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்படுகிறது. இன்றைய நற்செய்தியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். (மத்தேயு 22:36) என்ற அறிமுக சொற்கள், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

திருச்சட்ட அறிஞர், இயேசுவை, 'போதகரே' என்றழைத்ததில், ஏளனம், ஏராளமாய் ஒலித்தது. திருச்சட்டங்களையும், திருமறை நூல்களையும் கற்றுத்தெளிந்து, மக்களுக்கு அவற்றைப்பற்றி தெளிவாக விளக்கிக்கூறுபவரே, 'போதகர்' என்று அழைக்கப்படவேண்டும். இவை எதையும் படிக்காத, தச்சுத்தொழிலாளியான இயேசுவை, 'போதகரே' என்றழைத்ததன் வழியே, அவர் ஒரு 'போலிப்போதகர்' என்று, திருச்சட்ட அறிஞர்,  குத்திக்காட்ட விழைகிறார். அதைத் தொடர்ந்து அவர், 'தலைசிறந்த கட்டளை எது?' என்று கேட்டது, உண்மையிலேயே, இயேசுவை வீழ்த்த அவர் பதித்துவைத்த நிலத்தடி கண்ணிவெடி என்றே சொல்லவேண்டும்.

யூதப் பாரம்பரியத்தில், 613 கட்டளைகள் உண்டு. அவற்றில், 'நீங்கள் செய்யவேண்டியது' என்பதைக் கூறும், கட்டளைகள், 248 ஆகவும், 'நீங்கள் செய்யக்கூடாதது' என்பதைக் கூறும் கட்டளைகள், 365 ஆகவும் இருந்தன. இந்த 613 கட்டளைகளில், ஓய்வுநாள், கோவிலில் அளிக்கப்படும் பலிகள், காணிக்கைகள், விருத்தசேதனம் ஆகியவை குறித்து சொல்லப்பட்டுள்ள கட்டளைகள், மதத்தலைவர்களுக்கு, மிக, மிக முக்கியமானவை. இவற்றில், தலைசிறந்தது எது என்பதை இயேசு கூறுவார்; அதைக் கொண்டு, அவரைச் சிக்கவைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், திருச்சட்ட அறிஞர் இந்தக் கேள்வியைத் தொடுத்திருக்கவேண்டும். ஆனால், இயேசு அவருக்கு வழங்கிய மறுமொழியோ, காலத்தால் அழியாத ஒரு கவிதை.

தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி, மிக அழகான, ஆழமான கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் தருகிறார். மனிதவாழ்வின் அடித்தளமாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய், இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.
மத்தேயு நற்செய்தி 22: 37-40
“‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாகஎன்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன.

இயேசு கூறிய இந்த பதிலில், இணைச்சட்டம், லேவியர், என்ற இரு நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இணைச்சட்ட நூலில், கூறப்பட்டுள்ள பகுதியில்,   "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!" (இணைச்சட்டம் 6:5) என்ற இச்சொற்கள், இஸ்ரயேல் மக்களின் மனங்களில் பதியவேண்டும்; அவர்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் பதியவேண்டும்; அவர்கள் வீட்டில் இருக்கும்போது, பயணம் செய்யும்போது, படுக்கும்போது, எழும்போது இக்கட்டளையைப்பற்றி பேசவேண்டும்; இஸ்ரயேல் மக்களின், கைகளிலும், கண்களுக்கிடையிலும் இச்சொற்கள் கட்டப்படவேண்டும்; வீட்டின் கதவு நிலைகளிலும், நுழை வாயில்களிலும் இந்தச் சட்டம் எழுதப்படவேண்டும் (காண்க. இணைச்சட்டம் 6:6-9) என்ற தெளிவான வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.

இயேசுவை சோதிக்கும் நோக்கத்துடன் வந்திருந்த திருச்சட்ட அறிஞர், ஒருவேளை, இந்தக் கட்டளையை தன் கைகளிலும், கண்களுக்கிடையிலும், கட்டிவைத்தபடி, இயேசுவிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம். ஒரு சில வேளைகளில், நமக்கு மிக அருகே இருப்பவை, அல்லது, நமக்கு மிகப் பழக்கமானவை நம் கவனத்தை ஈர்க்காமல், நம்மிடம் மாற்றங்களை உருவாக்காமல் போவதை நாம் உணர்ந்திருக்கிறோம். அத்தகையதொரு நிலை, திருச்சட்ட அறிஞருக்கும் உருவானது. எனவே, இயேசு, அவரது கவனத்தை அந்த முக்கிய கட்டளை பக்கம் திருப்பினார்.

இவ்வளவு முக்கியமான இந்தக் கட்டளையின் முதன்மையை, பரிசேயரும், திருச்சட்ட அறிஞர்களும் படிப்படியாகக் குறைத்து, அதற்குப்பதிலாக, ஒய்வுநாள், பலிகள், விருத்தசேதனம் குறித்த கட்டளைகளை மக்கள் மனதில் பீடமேற்றி வந்தனர். அவர்கள் பீடமேற்றியிருந்த அந்த பொய் தெய்வங்களை இறக்கிவைத்துவிட்டு, இறைவன் தந்த தலைசிறந்த கட்டளையை, இயேசு, அந்த திருச்சட்ட அறிஞர் மனதிலும், சூழ இருந்த மக்கள் மனதிலும் பீடமேற்றி வைத்தார்.

இறைவனை அன்புகூரவேண்டும் என்று கூறிய அதே மூச்சில், இயேசு, பிறரன்பு என்ற கட்டளையையும் இணைத்தார். "உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!" (லேவியர் 19:18) என்ற அந்தக் கட்டளையும், இறைவன் வழங்கிய கட்டளையே என்பதை, இயேசு, சூழ இருந்த அனைவருக்கும் நினைவுறுத்தினார்.

அனைத்து மதங்களும், இறையன்பையும், பிறரன்பையும் வலியுறுத்துகின்றன. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்கிறோம். இயேசு கூறிய இந்த பதில் மொழியில், இறையன்பிற்கும், பிறரன்பிற்கும் இயேசு வழங்கும் அளவுகோல்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இறைவன் மீது காட்டப்படும் அன்புக்கு, இயேசு கூறும் அளவுகோல், முழுமை. முழுமையான இதயம், உள்ளம், மனம் ஆகியவற்றால் இறைவன் மீது அன்புகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல..." என்ற சொற்றொடர், அயலவர் மீது காட்டப்படும் அன்புக்கு, அளவுகோல். தன் மீது அன்புகொள்ள இயலாத ஒருவரால், அடுத்தவர் மீதும் அன்புகாட்ட முடியாது என்பது, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்.

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி எழுப்பும் இந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்த மூன்று நற்செய்திகளும், இந்நிகழ்வை வெவ்வேறு வகையில் கூறியுள்ளன. இந்த வேறுபாடுகளைச் சிந்திப்பது நமக்குப் பயனளிக்கும். குறிப்பாக, மாறுபட்ட கருத்து கொண்டவர்கள், எவ்வாறு, நேர்மையான விவாதங்கள் வழியே உண்மையைக் கண்டுகொள்ளமுடியும் என்பதையும், மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டவர்களும், எவ்விதம், ஒருவரையொருவர் மதிப்புடன் நடத்தமுடியும் என்பதையும், இந்த நற்செய்திப் பதிவுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன.

மத்தேயு நற்செய்தியில், இயேசு கூறிய இந்த பதிலோடு, இந்நிகழ்வு நிறைவடைகிறது. மாற்கு நற்செய்தியில், இயேசு கூறிய பதிலால் மகிழ்வடைந்த மறைநூல் அறிஞர், இயேசுவைப் புகழ்கிறார். இயேசுவும் அந்த அறிஞரின் அறிவுத்திறனைக் கண்டு, "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" (மாற்கு 12:34) என்று அவரைப் புகழ்வதாக இந்நிகழ்வு நிறைவடைகிறது.
இயேசுவும், மறைநூல் அறிஞரும் எதிர் அணிகளைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒருவரையொருவர் புகழ்வது, நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லித்தருகிறது. ஒருவர் தன்னைப்பற்றி உண்மையான மதிப்பு கொண்டிருந்தால், அடுத்தவரை, அவர், தன் எதிரியே ஆனாலும், அவரையும் மதிக்கும் பண்பு கொண்டிருப்பார் என்பது, மாற்கு நற்செய்தியில் (மாற்கு 12:28-34) கூறப்பட்டுள்ள இந்நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பாடம்.

லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மாறுபட்ட ஒரு சூழலை நாம் காண்கிறோம். திருச்சட்ட அறிஞரின் குதர்க்கமான கேள்விகள் தொடர்வதை நாம் காண்கிறோம். இறைவனையும், அடுத்தவரையும், அன்பு செய்வதே, அனைத்து சட்டங்களின் அடிப்படை என்ற இந்த அழகான பதிலை, தானே கூறாமல், கேள்வி கேட்ட திருச்சட்ட அறிஞரின் வாயிலிருந்தே இயேசு வரவழைக்கிறார் என்று லூக்கா நற்செய்தி சொல்கிறது. அவர் தந்த நல்ல பதிலைப் புகழ்ந்த இயேசு, அவரிடம், சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் (லூக்கா 10: 28) என்று சொல்லி, அவரை வழியனுப்புகிறார். ஆனால், திருச்சட்ட அறிஞர் விடுவதாக இல்லை. தனது திறமையை, இயேசுவிடமும், சூழ இருந்தவர்களிடமும் காட்டும் நோக்கத்துடன், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற மற்றொரு குதர்க்கமான கேள்வியைத் தொடுக்கிறார். அந்தக் கேள்விக்கும், இயேசு, பொறுமையாய் பதில்தருகிறார். இயேசு கூறிய இந்தப் பதில், காலத்தால் அழியாத புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையாகத் தரப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இவ்வுவமையின் துவக்கத்திலும், முடிவிலும், இயேசு, அந்த அறிஞரிடம் கூறிய ஓர் அறிவுரை, நமக்கு ஒரு வாழ்வுப்பாடமாக அமைகிறது. நல்ல சமாரியர் உவமைக்கு முன்னர், சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் (லூக்கா 10: 28) என்றும், உவமைக்குப் பின், நீரும் போய் அப்படியே செய்யும் (லூக்கா 10: 37) என்றும் இயேசு சொல்கிறார்.
திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப்பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்துகொள்வது முக்கியமல்ல; அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு, ஆகியவற்றிற்கு, செயல்வடிவம் தருவதே முக்கியம் என்பதை, இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இறை அன்பும், அயலவர் அன்பும் செயல்வடிவம் பெறவேண்டும், வாழ்வாக மாறவேண்டும் என்பது இயேசு சொல்லித்தந்த பாடம். இந்த எளிய பாடங்களுக்குப் பதில், இன்றைய விளம்பர, வியாபார உலகம், அன்பை பல்வேறு வழிகளில் விற்பனை செய்து வருகின்றன. பல்வேறு கருவிகள் வழியே நாம் அன்பை வெளிப்படுத்தலாம் என்ற மாய, மெய் நிகர் உலகை உருவாக்கியுள்ளன. உண்மையான, நேருக்கு நேரான உறவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. தொடர்புசாதனக் கருவிகள் புடைசூழ, சுயநலச் சிறைகளுக்குள் நாளுக்கு நாள் இன்னும் வலுவாக நம்மை நாமே பூட்டிக் கொள்வதால், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் அனைவருமே அன்னியராகத் தெரிகின்றனர்.

அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின், கைம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கிறது.
விடுதலைப் பயணம் 22:21-22, 25-27
ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். ... உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

அயலவருக்கு நாம் ஆற்றவேண்டிய அடிப்படை பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். தேவையான அருளை வேண்டுவோம்.


19 October, 2023

Caesar and God… Not to mix? சீசரும் கடவுளும்... கலப்பது சரியல்ல?




29th Sunday in Ordinary Time

“Give back to Caesar what is Caesar’s, and to God what is God’s” is the wise counsel given by Jesus in today’s Gospel. Jesus seems to invite us to reflect on Caesar and God, which brings to focus our thoughts on politics and religion. Unfortunately, in many countries around the globe, religion has mingled with politics in a dangerous and devastating manner – as in the case of the Palestine (Hamas)–Israel, ISIS, Boko Haram, RSS, VHP etc.

Our reflections today, revolve around politics and politicians. I have very minimal respect for politicians. This may be due to the fact that I am yet to meet an honest, noble politician in person. I have heard about a few of them from the media; but they must be a rare breed, in danger of extinction. My idea of politics does not allow honest persons to survive there for long. My definition of politics has ‘connivance’ and ‘compromise’ written all over it.

When we reflect on the word ‘politics’, our focus need not be limited to only the ‘party politics’ that dominates government circles in all the countries. We need to enlarge our view to reflect on politics that is present in all the other human spheres of activities, including religion. “Those who believe that politics and religion do not mix, understand neither” is one of the quotes attributed to Albert Einstein. A similar quote is also attributed to Mahatma Gandhi which goes like this: “Those who believe religion and politics aren't connected, don't understand either.”

Politics and religion have been almost like inseparable twins in human history. They have co-existed as friends and foes. When convictions came to the fore, they were foes; but when compromises were struck, they were friends. Whenever compromises were struck between politics and religion, it was always politics that thrived, while religion – true religion – died.

Was Jesus involved in politics? We can very well assume so. To the extent He had to deal with various powers that were operative in His times, He had to deal with politics. We are given one such incident in the life of Jesus as our gospel today. Here is the gospel passage:
Matthew 22:15-21
Then the Pharisees went out and laid plans to trap Jesus in his words. They sent their disciples to him along with the Herodians. “Teacher,” they said, “we know that you are a man of integrity and that you teach the way of God in accordance with the truth. You aren’t swayed by others, because you pay no attention to who they are. Tell us then, what is your opinion? Is it right to pay the imperial tax to Caesar or not?”
But Jesus, knowing their evil intent, said, “You hypocrites, why are you trying to trap me? Show me the coin used for paying the tax.” They brought him a denarius, and he asked them, “Whose image is this? And whose inscription?” “Caesar’s,” they replied.
Then he said to them, “So give back to Caesar what is Caesar’s, and to God what is God’s.”

We can see the traits of two types of politics in this passage: the more commonly followed ‘dirty politics’ of the Pharisees and the Herodians, and the rarely found ‘good politics’ as practised by Jesus.
First, the ‘dirty politics’: The opening lines of today’s gospel reveal some of the traits of the ‘dirty politics’… The first one: planning to trap someone in his/her words. As far as my idea of politics goes, this is probably the ONLY work done by most politicians. The very next sentence gives us a clue to another trait of politicians – striking a compromise to defeat a common enemy. It is also clear from these lines how political leaders act… namely, how they would depute emissaries in critical situations. In today’s gospel we see how the Pharisees sent their disciples along with the Herodians. Both Herod and the Pharisees themselves would not burn their fingers. They had had enough encounters with Jesus to have learnt how smart He was. Then, why risk one more time?

The Pharisees and the Herodians were usually sworn enemies. They held very opposing views of the Roman domination and Caesar. For the Pharisees, God was the supreme ruler and anyone who claimed divinity was an abomination. Caesar claimed divinity and hence, for the Pharisees he was an abomination. For the Herodians, Caesar was a saviour of sorts. Following their leader Herod, they were willing to serve Caesar. They were willing to call Caesar a divine being as long as that was advantageous to them. These two groups belonging to two different enemy camps were willing to compromise their positions to thwart a common enemy – Jesus. For the Herodians, compromises were their ‘daily bread’ since they were proper politicians. But for the Pharisees? Well, for them too… since they were politicians in clerical garb and with clerical titles.

The way they talk to Jesus brings to light another aspect of politicians, namely, how they approach their enemy carrying a garland within which are hidden daggers. We can see both the Pharisees and the Herodians heaping exaggerated praises on Jesus. They lay their snares with sugar-coated words: “Teacher,” they said, “we know that you are a man of integrity and that you teach the way of God in accordance with the truth. You aren’t swayed by others, because you pay no attention to who they are.” etc… A great sample of ‘lip service’. Thus, the opening lines of today’s gospel give us quite a few thoughts on ‘dirty politics’.

Now, to the ‘good politics’: The second part of today’s gospel gives us hope that politics can still be saved. Here we see the ingredients of good politics as practised by Jesus. Good politics begins by calling a spade a spade. As against the sweet talk of the Pharisees and the Herodians, Jesus confronts them with their insincerity. Such courage has been found in the history of politics, but very rarely.

Coming to the core of today’s gospel, we are given one of the most famous lines spoken by Jesus. These words of Jesus are probably one the most oft-quoted words of the Bible: “Render unto Caesar what is Caesar’s and to God what is God’s.” If only these words of Jesus are followed in all spheres of life, namely, give each one what is due to him or her, this world would automatically become a lot better.

The whole reflection may have sounded as venting my anger over politicians. But, as one of my fingers is pointed towards them, I need to be aware that three more are pointing towards me. Thus, I need to examine myself thrice over to see how many of the traits of ‘dirty-politics’ are present in my life and also to see how much of the ‘good politics’ I can put into practice.
When Jesus told us to give back to Caesar his coins, since they bore his image, in the same breath, He reminded us that we, who are created in the image of God (Genesis 1: 26), need to give ourselves back to God. Let us “Render unto Caesar what is Caesar’s” but, let us “Sur-render to God totally.”

A final thought… The Church celebrates Mission Sunday today. Pope Francis, in his message for World Mission Sunday 2023, reflects on the theme “Hearts on fire, feet on the move," based on the story of the disciples who encounter Jesus on their way to Emmaus (cf. Lk 24:13-35). It is also significant that the Mission Sunday this year occurs during the ‘Synod on Synodality’ that is taking place in Vatican.

Here are a few lines from the message of Pope Francis for this year’s Mission Sunday: The urgency of the Church’s missionary activity naturally calls for an ever closer missionary cooperation on the part of all her members and at every level. This is an essential goal of the synodal journey that the Church has undertaken, guided by the key words: communion, participation, mission.  This journey is certainly not a turning of the Church in upon herself; nor is it a referendum about what we ought to believe and practice, nor a matter of human preferences. Rather, it is a process of setting out on the way and, like the disciples of Emmaus, listening to the risen Lord. For he always comes among us to explain the meaning of the Scriptures and to break bread for us, so that we can, by the power of the Holy Spirit, carry out his mission in the world…
So let us set out once more, illumined by our encounter with the risen Lord and prompted by his Spirit. Let us set out again with burning hearts, with our eyes open and our feet in motion. Let us set out to make other hearts burn with the word of God, to open the eyes of others to Jesus in the Eucharist, and to invite everyone to walk together on the path of peace and salvation that God, in Christ, has bestowed upon all humanity.

Render to Caesar – and to God

பொதுக்காலம் 29ம் ஞாயிறு

அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கொடுக்கப்பட்டால், இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான், உலகம், சிறிது சிறிதாக, நரகமாக மாறி வருகிறதோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்ற புகழ்பெற்ற வரிகளை, இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியம், கிறிஸ்தவம் என்ற எல்லைகளைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய இப்புகழ் மிக்கக் கூற்றையும், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதையும், இந்த ஞாயிறு சிந்தித்து, பயன் பெறுவோம்.

சீசருக்கும், கடவுளுக்கும், பொதுவாக யாருக்குமே அவரவருக்கு உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து, மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக் கொடுக்க மறுத்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு அவர்களிடம் பல உவமைகளைக் கூறினார். இந்த  உவமைகள் வழியே, இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை, பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம், இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.

மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், எளிய ஒரு நிகழ்ச்சியைப் போல் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும் அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால், பல உண்மைகளை, பல பாடங்களை, நாம் பயிலமுடியும். முயல்வோம் வாருங்கள்.

கடந்த மூன்று வாரங்களாய் இயேசு தன் உவமைகள் வழியே கசப்பான உண்மைகளை பரிசேயர்களுக்கு உணர்த்த முயன்றார். அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள், இயேசுவை எப்படியாவது சிக்கவைத்துவிடும் குறிக்கோளுடன், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தாம் ஏரோதியர்கள்.

பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில், கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால்விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் பரிசேயர்கள்.
ஏரோதியர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப்  பணிகள் செய்தனர். கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்துவிட்டனர். காரணம்? இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை, நாம், இந்தியாவிலும், இன்னும் பிற நாடுகளிலும், பார்த்து வருகிறோம். பாம்பும், கீரியும் போல, ஒருவரையொருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, நாம் பல முறை வெட்கி, வேதனையடைந்திருக்கிறோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.

அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம். ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக நம் மனசாட்சியை அடமானம் வைத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? இக்கேள்விகளுக்கு உண்மையான விடைகள் தேடினால், நம் வாழ்விலும் அரசியல் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகும்.

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல், நமக்கு அடுத்த பாடம். இயேசுவை வீழ்த்தும் எண்ணத்துடன் கூட்டணி சேர்ந்துவரும் இவ்விரு குழுவினரும் இயேசுவைப் புகழ்ந்து பேசுவது, நம்மை மீண்டும் வெட்கி தலைகுனிய வைக்கிறது. உதட்டளவில் புகழ்மாலைகளையும், உள்ளத்தில் நஞ்சையும் சுமந்து வந்த இவர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள் பலரை நம் நினைவுக்குக் கொணர்கின்றனர்.

இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்:
மத்தேயு நற்செய்தி 22: 18-21
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவைஎன்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்என்று அவர்களிடம் கூறினார்.

வரி செலுத்த பயன்படுத்தப்பட்ட 'தெனாரியம்' என்ற நாணயம், அந்த நாணயத்தைப் பார்த்தபின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள் ஆகியவை, நமக்கு மூன்றாவது பாடமாக அமைகின்றன. 'தெனாரியம்' என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம், உரோமையப் பேரரசன் சீசரின் உருவமும், "தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் 'Pontifex Maximus' அதாவது குருக்களுக்கெல்லாம் பெருங்குரு என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர், தன்னை, வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல், மதத்தலைவனாகவும், கடவுளாகவும் காட்டுவதற்கு, அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தார்.

சீசருக்கு வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம், ‘சீசரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள் என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்றார். சீசரையும், கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.

மனித வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு, மதச்சாயங்கள் பூசப்படுவதையும், நாம், அதிக அளவில் கண்டு வருகிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களை மேடைகளில் பறைசாற்றும் அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மதத் தலைவர்களைச் சந்திப்பது, மத வழிபாடுகளில் ஈடுபடுவது என்று தங்கள் நிறத்தை மாற்றுவதைக் காண்கிறோம்.

அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இறைவனின் துணையை, ஆசீரை நாடிச் செல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இறைவனையும், இறைவனின் அடையாளங்கள், திருத்தலங்கள் ஆகியவற்றையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள், ஆண்டவனின் சன்னதியில் பணிவோடு நுழைகின்றனர். பிறகு, அந்த ஆண்டவனைப் பீடங்களில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, தங்களையே பீடங்களில் ஏற்றிக் கொள்கின்றனர். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை.

இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது ஒருபக்கம் என்றால், மதங்களில், மதநிறுவனங்களில் அரசியல் கலந்திருப்பது மறுபக்கம். மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், எங்கிருந்தோ வந்த இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்துவிட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், அரசியல்வாதிகளின் நாடகங்களையும் விஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.

மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. மதமும், அரசியலும் கலக்கும்போது, அரசியலுக்கே உரிய அதிகார வேட்கை, வெறுப்பு, பழிதீர்க்கும் வெறி ஆகியவை மதத்தின் பெயரால் வெளிப்படுகின்றன. அரசியல் வாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, யாரையும், எதையும் பயன்படுத்த தயங்குவதில்லை. எனவே, மதமும் அவர்களுக்கு ஒரு பகடைக்காய்தான். அரசியலாக்கப்பட்ட மதத்தின் அவலங்கள், இந்தியாவில், அண்மைய ஆண்டுகளில், அதிகமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தற்போது புனித பூமியில் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல்களும், அதற்கு பதில் அளிக்கும் வண்ணம், அப்பாவி பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் வெறித்தனமான தாக்குதல்களும், மதத்தின் அடிப்படையில் உருவான அரசியல் வெறியின் அடையாளங்கள்.

இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல், கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?