26 August, 2012

Decision… Dedication முடிவுகள்... விடிவுகள்


Subhashini selling vegetables – Photo by Mahesh Bhat in UNSUNG
http://www.maheshbhat.com/heroes/mistry/index1.html


Subhashini and the Humanity Hospital

On August 23, Thursday, the Forbes magazine released its annual list of the most powerful women of 2012. 100 women were ranked there on the basis of their achievements in the fields of politics, economics, technology, entertainment… and humanitarian works. The next day, August 24, there was an inspiring article on one Subhashini Mistry of West Bengal in the Weekend Leader. Subhashini is the founder of the Humanity Hospital in West Bengal – a hospital totally dedicated to the poor. I was introduced to this lady through a mail sent by one of my friends with the title: ‘A hospital story’. While searching more on this lady, I came across the other article in the Weekend Leader written by Anita Pratap – ‘Humanity Hospital was built by a woman whose husband died for want of medical help’ (24 Aug 2012)
I was wondering whether Subhashini would ever figure in the Forbes list of the most powerful women… Well, that would be THE day…! In my opinion, she is more powerful than the powerful women listed in the Forbes magazine. The decisions made by the Forbes are based on very different criteria. Decisions are an integral part of every human life as well as of every institution. Decisions… big and small.
Subhashini herself made a decision about forty years back when she lost her husband due to medical negligence. Through her tears and fears, Subhashini made an oath that fateful day. No one should suffer her fate. Basic medical attention could easily have saved her husband who had nothing more than a bout of gastro enteritis. But poverty and callous hospital staff had killed her husband. She vowed she would do what it takes to spare people of this nightmare. She would build a hospital for the poor. (Anita Pratap)
When people heard of her decision, they laughed at her. But she was determined. She made her son Ajoy pursue medicine. In 1993, the foundation stone for the Humanity Hospital was laid… The rest is history! How did she achieve all this? She says: “Inner Strength.” She adds with rustic wisdom: “God in his infinite grace gave me a vision at the darkest moment in my life. From then on, my life had a purpose. I used whatever strength God gave me to make sure other poor people did not lose their loved ones for lack of medical attention.” (Anita Pratap)
Kindly read the full article on Subhashini in

Subhashini is our inspiration for this Sunday’s reflection. She made a decision in the midst of the most painful, challenging day of her life. Today’s readings talk about Joshua and Simon Peter making decisions under difficult circumstances. “As for me and my house, we will serve the LORD” (Joshua 24: 15) was the decision of Joshua. When he speaks of his house, it can be taken as not only his close family but also his kith and kin… and even his domestic employees! In the Gospel of John, Simon Peter makes a similar decision for the twelve disciples when Jesus asks the poignant question: “Do you also wish to go away?” Simon Peter answered him in one of the oft-quoted Bible verses: “Lord, to whom shall we go? You have the words of eternal life; and we have believed, and have come to know, that you are the Holy One of God.” (John 6: 68-69) Peter spoke on behalf of his friends!

Two aspects of these decisions struck me. The first aspect is the ‘plurality’ of the decision. Both Joshua and Peter make use of the ‘we’ word! They were speaking on behalf of the whole group. The word ‘we’ seems to be receding from our vocabulary in subtle ways. I wish we become aware of this trend and take the necessary precautions. When crucial decisions have to be made in families, collective responsibility seems to take the backseat.
When an individual speaks for the group, we can assume that that person has a good knowledge of the group and has gained the confidence of the group as well. Such healthy knowledge and trust will be a great help in families, especially when they are going through tough times.

The second aspect of these decisions is the tough situation in which they were made. When life moves smoothly, there is hardly any need for decisions. Even if there are a few tiny decisions to be made, they can be made easily. It is during times of crisis that we need to make major decisions – as in the case of Joshua, Peter and … Subhashini.

Let me close these reflections with another mail I got a few days back. It contained photographs with the title: Pictures to Help You Restore Your Faith In Humanity.
All the photographs were packed with positive energy. These pictures depicted small or big acts of kindness done by individuals for those in need. There was the picture of a person who removes his sandals and gives it to a poor girl who is bare-footed, and this takes place on the pavement on a hot, sunny day (presumably).
Another picture showed a young girl holding an umbrella over an older man unable to walk and crawling on a wooden board to cross the road in drenching rain… There were quite a few people on the road witnessing this, which meant that only the young girl took the decision to help the older person.

Two pictures in this collection touched me deeply. They depicted how decision and dedication go hand in hand as in the case of Subhashini. The first picture showed a 97 years old woman, who is bent almost double by hunchback, feeding a man lying on a cot. When I read the caption for this picture, I choked… A mother (97 years old) in China, feeding and taking care of her paralysed son (60 years old) everyday for more than 19 years. A reminder of the amazing spirit of human compassion and, more importantly, motherly love. The mother could have decided to send her son to the care centre, especially when she herself requires assistance. But, she had taken a decision and followed it with dedication for more than 19 years!

Another picture in this collection that tugged at my heart was taken in a hospital. It showed a young father and a mother kissing goodbye to their dying child, while the hospital staff stand around the bed and pay their respects. The caption written under the picture, once again, moistened my eyes…
A father and mother kissing their dying little girl goodbye. If you are wondering why all the medic people are bowing: in less than an hour, two small children in the next room are (will be) able to live thanks to the little girl's kidney and liver.

All of us keep taking decisions in life – big, small, crucial, casual, tough, easy… At this moment, we pray especially for those who are at crossroads in their lives – in terms of making proper decisions on Job, Life-partner, Way of life etc. Let Subhashini Mistry, the 97 years old Mom, the young parents of the dying child, as well as Joshua and Simon Peter help us make the right decisions! God-centred decisions!




Picuture – to restore faith in humanity!
Received through email…



நேற்று என் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு விதையிட்டது. "நன்மை இவ்வுலகில் இன்னும் நடமாடுகிறது" என்ற கருத்துடன் தொகுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் அந்த மின்னஞ்சலில் வந்திருந்தன. தகிக்கும் கடற்மணலில் செருப்பில்லாத ஓர் ஏழைப் பெண்ணுக்குத் தான் அணிந்திருக்கும் காலணிகளைக் கழற்றித் தரும் ஒரு மனிதர்.... கால்களை இழந்த்தால் ஒரு பலகையில் அமர்ந்தபடியே நகர்ந்து செல்லும் வயதான ஓருவர், கொட்டும் மழையில் சாலையைக் கடக்க தன் குடையை விரித்து அவரை அழைத்துச்செல்லும் இளம்பெண்... இப்படி பல படங்கள்...
இத்தொகுப்பில் இருந்த அனைத்துப் படங்களில் இரண்டு என் கவனத்தை அதிகம் ஈர்த்தன. முதுகுத் தண்டுவடம் வளைந்து, கூனல் விழுந்திருக்கும் 97 வயதான ஒரு பெண்மணி, உடல் முழுவதும் செயல் இழந்து படுத்திருக்கும் தன் 60 வயது மகனுக்கு உணவு ஊட்டுகிறார். இவர் இதை கடந்த 19 ஆண்டுகளாகச் செய்கிறார் என்ற குறிப்பும் உள்ளது.
அடுத்த படம் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டது... இறந்து கிடக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்குக் கண்ணீருடன் முத்தமிட்டு விடை பகரும் ஓர் இளம் தாய்... அக்குழந்தையின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்தியபடி நிற்கிறார்கள். அக்குழந்தைக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்ற கேள்வியும் விளக்கமும் படத்திற்குக்கீழ் கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழந்தையின் சிறுநீரகங்கள், ஈரல் இவற்றால் வேறு இரு குழந்தைகள் அடுத்த அறையில் உயிருடன் வாழ்கிறார்கள்...
மனதைத் தொடும் இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அடிப்படையாக ஓர் அம்சம் உள்ளது... இத்தருணங்கள் அனைத்திலும் சிறிதான அல்லது பெரிதான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. மழைக்குக் குடைபிடிப்பதும், காலணிகளைத் தருவதும் சிறிய செயல்களாக இருக்கலாம்... இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வருவது பெரும் செயலாக இருக்கலாம்... மனித வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம் முடிவெடுப்பது. இந்த அடிப்படை அனுபவத்தை ஆழமாகச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
"நானும் என்  வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வில், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார் சீமோன் பேதுரு.

யோசுவாவும், சீமான் பேதுருவும் கூறிய வார்த்தைகளில் உள்ள ஒரு பொதுவான அம்சம் என் கவனத்தை ஈர்த்தது. இருவருமே தங்கள் முடிவுகளை ஒருமையில் எடுப்பதாகக் கூறவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24: 15) என்று உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை அவரது குடும்பத்தினர் என்றுமட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.
தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும் நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்.

'தாமரை இலை மேல் நீர்' போன்ற உறவுகள் மேற்கத்திய நாடுகளில் உள்ள குடும்பங்களில் வளர்ந்துள்ளதைத் தெளிவாகப் பார்க்கலாம். அத்தகைய ஒரு போக்கு தற்போது ஆசிய நாடுகளிலும் பரவிவருவதை நாம் காணலாம். இந்தப் போக்கு தவறான முடிவுகள் எடுக்க வழிவகுக்கிறது. குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அனைவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும் சூழல் நம்மிடையே வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும் இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. சிறு, சிறு முடிவுகள் அந்நேரங்களில் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?
97 வயது நிறைந்த தாய் உடல் முழுவதும் செயல் இழந்து கிடக்கும் தன் மகனை ஒரு காப்பகத்தில் சேர்த்திருக்க முடியும், ஆனால், அவரைத் தானே கவனித்துக்கொள்வதாக அந்தத் தாய் முடிவெடுத்தது எந்த அடிப்படையில்?...
இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களை மற்றக் குழந்தைகளுக்குத் தானம் செய்யத் துணிந்த பெற்றோர்கள் எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தனர்?...
முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 6: 68-69
ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்
"வேறு யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்தப் புதுவாழ்வு... உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

Subhasini Mistry என்ற வங்காளப் பெண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
ஒரு மருத்துவமனையின் கதை என்ற தலைப்பில் இவரைப் பற்றிய விவரங்களை என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இக்கதையை முழுமையாகக் கூற இங்கே நேரம் இல்லை. சுபாசினிக்குத் தற்போது 60க்கும் மேல் வயதாகிறது. இவரது கணவர் சாலைகளில் காய்கறி விற்கும் வேலை செய்தார். சுபாசினிக்கு 23 வயதாக இருந்தபோது, இவர் கணவர் ஒருநாள் வயிற்றுவலியால் துடித்தபோது, சுபாசினி அவரை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார். அது ஓர் அரசு மருத்துவமனை என்றாலும், அங்கிருந்தவர்கள் இவரிடம் பணம் எதிர்பார்த்தனர். சுபாசினியிடம் பணம் இல்லாததால், அவரது கணவரை யாரும் கவனிக்கவில்லை. அவர் வலியில் துடிதுடித்து இறந்தார். அந்த நேரத்தில் சுபாசினியின் மனதில் ஒரு முடிவு உருவானது. நான் எப்படியும் ஒரு மருத்துவமனையை எழுப்பி அங்கு ஏழைகளுக்கு உடனடியான, இலவசமான உதவிகள் செய்வேன். என்ற முடிவு அது. இதை ஒரு சபதம் என்றே சொல்லவேண்டும். அவரது சபதத்தைக் கேட்ட மற்றவர்கள் அவரை எள்ளி  நகையாடினர். சுபாசினியின் சபதம் எட்டமுடியாத ஒரு கனவு என்றே திரும்பத் திரும்பச் சொல்லிவந்தனர். தன் கணவரின் மரணத்தைப் போல மற்ற ஏழைகள் இறக்கக்கூடாது என்று சுபாசினி எடுத்த முடிவுக்குப் பின் இருபது ஆண்டுகள் அயராது உழைத்தார். தன் மகன் Ajoy Mistry மருத்துவம் படிக்கவைத்தார். இவ்விருவரின் தளராத முயற்சியால், Humanity Hospital - மனிதாபிமான மருத்துவமனை - இன்று வங்காளத்தின் Hanspukurல் உயர்ந்து நிற்கிறது.
கட்டிடம் என்ற அளவிலோ, மருத்துவ வசதிகள் என்ற அளவிலோ இம்மருத்துவமனை பிரம்மாண்டமாக உயரவில்லை, ஆனால் வறியோரின் மனதில் Humanity Hospital ஒரு கோவிலாக உயர்ந்து நிற்கிறது. சுபாசினி என்ற ஓர் ஏழைப் பெண் தான் அனுபவித்த மிகக் கொடிய துன்பத்தின் நடுவில் எடுத்த ஒரு முடிவு இன்று பல நூறு ஏழைகளைக் காப்பாற்றும் ஒரு கோவிலாக நிற்கிறது.
இவரைப் பற்றிய கட்டுரையொன்று The Weekend Leader என்ற இதழில் ஆகஸ்ட் 24 வெளியாகியுள்ளது. தயவுசெய்து நேரம் ஒதுக்கி இதைப் படியுங்கள். இந்தக் கட்டுரையின் ஆசிரியர் Anita Pratap, Subhasini Mistry இடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார்: "எப்படி உங்களால் இவ்வளவு சாதிக்க முடிந்தது?" என்று அவர் கேட்டதற்கு, . சுபாசினி சொன்ன பதில் நமக்கு இன்று பாடமாக அமைகிறது.
"என் வாழ்வின் மிகவும் இருளான நாளன்று கடவுள் எனக்கு ஒளி தந்தார். அன்றிலிருந்து என் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருந்ததாக நான் உணர்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எடுத்த ஒரே ஒரு முடிவுக்காகப் பயன்படுத்தினேன். ஏழை என்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் தனது அன்பு உறவின் மரணத்தைக் காணக் கூடாது என்பதே அம்முடிவு." என்று Subhasini அக்கட்டுரையின் ஆசிரியருக்குச் சொன்னார்.
How did she achieve all this? She says: “Inner Strength.” She adds with rustic wisdom: “God in his infinite grace gave me a vision at the darkest moment in my life. From then on, my life had a purpose. I used whatever strength God gave me to make sure other poor people did not lose their loved ones for lack of medical attention.”

97 வயதான போதிலும் தன் மகனைத் தொடர்ந்து காப்பாற்றும் அந்த முதுமைத் தாய், இறக்கும் நிலையில் உள்ள தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்த இளம் பெற்றோர், தன் கணவனின் இறப்பால் கசந்துபோகாமல், ஏழைகளுக்கென மருத்துவமனையை எழுப்பிய சுபாசினி, போன் உறுதியான உள்ளங்களின் வாழ்வால் நாம் தூண்டப்பெற இறைவனை இறைஞ்சுவோம்.
வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். முக்கியமான முடிவுகளில் குடும்பங்கள் இணைந்துவந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.


19 August, 2012

Justice begins at home… வீட்டுக்குள் துவங்கி, வீதிக்கு வரட்டும்... நீதி


Justice Sunday


“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” When I read that line, I was literally jolted… Have I ever given a thought to my legs when I got up from bed? Very, very rarely… How much have I taken life for granted! I bumped into this line by chance when I was following Oscar Pistorius through different sites. Oscar has become a household name now, especially after he qualified himself up to the semifinals of the 400 meters race in the London Olympics with his special legs!
Oscar Leonard Carl Pistorius is known as the "Blade Runner" and "the fastest man on no legs". Oscar’s entry into London Summer Olympics was not a red-carpet welcome. He had to struggle every inch towards his participation in the 400 meters race. He had to fight not only physically but also legally.
Why would Oscar go to such great extents? I felt he had a mission to accomplish, namely, to serve as the bridge between the Summer Olympics which ended recently and the Paralympics which will commence in ten days – August 29th in London… I feel that his mission is to tell the world that the lines we have artificially drawn between concepts like ‘abled’ ‘disabled’ and ‘differently-abled’ need to be erased.
As I said earlier, when I was browsing through the internet on Oscar, I came across the sentence I had quoted at the beginning… namely, “Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” Although I am sure there must have been days when Oscar Pistorius would have felt this way, the author of this sentence is not Oscar but, Giles Duley. Giles is the focus of this Sunday’s reflection.

In India, the Sunday following the Independence Day (August 15) is observed as Justice Sunday. Hence today, August 19th we shall focus our thoughts on Justice. When I listened to Giles on Ted.com, I felt as if I was listening to a homily shared for this specific Sunday. Before going to his talk, let’s get introduced to Giles.
Giles was a fashion photographer who, some years ago, got tired of celebrity photoshoots and the attendant egos and tantrums that often accompanied them. He flung his camera on the photoshoot bed and it bounced out the window into the streets of SoHo, London. At that point he decided to change course and dedicated himself to using his camera to "tell unheard stories of those caught in conflict and economic hardship around the world." His work took him to Sudan, Angola, Ukraine and Bangladesh, among other places. Early in 2011, on assignment in Afghanistan, Duley stepped on a landmine. Despite the fact that the horrific accident left Duley a triple amputee, he continues to dedicate his life to telling stories through photography.

Two turning points in Duley’s life… one, when his camera leapt out of the window and two, when he stepped on the landmine in Afghanistan. The first one – losing his camera –  changed him from seeing the artificial world of glamour through the eyes of the camera, to seeing the real world with his own eyes. The second one – losing his limbs – transformed him into a living witness of the ravages of war. Let me try and share some of the lines he had spoken at TEDxObserver. The title of the programme is… Giles Duley: When a reporter becomes the story:

He begins his talk by saying, “I spent the last forty years hiding behind a camera, so I didn’t have to speak…” He then goes on to speak about three stories that have inspired him and his assignment in Afghanistan in Februray, 2011. “In Afghanistan I became part of the story… I never set out to Congo, to Angola, to Bangladesh to take photographs; I went to those places because I wanted to make some changes and photography was my tool. Then I became aware that my body was in many ways a living example of what war does to somebody. I could use my own experience, my own body to tell that story… The stories I had documented have given me the courage to get back on my new legs and come here to tell you their stories and my own story.”

Then Giles shows a slide where his broken body in depicted in typical fashion photography style and then he goes on to say: “It’s a self-portrait, because I wanted to tell what a bomb does to somebody, but also to show… that losing your limbs doesn’t end your life; that you can have what people say disability, but not be disabled; that you can be able to do anything if you put your mind to it and a belief in it. It is strange that when I look back the past one year, I realise that I have a lot of things now, I didn’t have then.”
The closing thoughts of his talk gripped me… “Ten years ago when I sat down to work out what I could do to make a difference in this world, I realised that my photography was a tool and a way to do it. That’s what is really the key – that we all be part of that wheel… to be cogs in the wheel of change. We can all make a difference. Everybody has an ability to use something to make a difference to the world. We can all sit in front of TV and go… ‘I don’t know what to do about it’ and forget about it. The reality is that we can all do something. It might be just writing a letter. It might be standing on a soap box and talking… but every single one of us here, if we want to make a difference, we can and there is nothing to stop us…”

Change and transformation are key to social justice. All of us would agree that the human family requires lots of changes, very fundamental, radical changes if Justice is to be established. But, we disagree on where this change should begin… Should it begin within or without? Many would hold that a change in the government, a change in the mindset of the rich, a change in the caste or class structure would bring about Justice. But, we forget that unjust tendencies that are nurtured within each of us is THE cause of our unjust society.
Let me close my reflection with a short passage from my favourite writer – Fr Ron Rolheiser: When the chaos that lies within the recesses of our private lives remains untouched and untamed, it will remain untouched and untamable in the world at large. As long as the demons and chaos within our hearts lie untouched and untamed, our social action is not worthy to be called spirituality. It is merely political action, nothing more. It is power doing battle with power. Ultimately it will be successful or unsuccessful on the basis of the Machiavellian principle of “might is right.”  The kingdom of God does not work by this kind of power. It works by conversion. Conversion, in the final analysis, is an eminently personal act.
P.S. For those who wish to watch Giles Duley’s talk, kindly go to:
http://www.ted.com/talks/giles_duley_when_a_reporter_becomes_the_story.html

Giles Duley – Self-portrait


"நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா?" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” – Giles Duley)
இந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர் Giles Duley என்ற 40 வயது மனிதர். இவர் கடந்த ஆண்டு முதல் இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஆகஸ்ட் 19, இந்த ஞாயிறை இந்தியத் திருஅவை நீதியின் ஞாயிறெனக் கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. நீதியின் ஞாயிறன்று Giles Duley பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் பேசியதைக் கேட்டபோது, நீதி ஞாயிறுக்குரிய மறையுரையைக் கேட்டதுபோல உணர்ந்தேன்.

Giles Duley ஒரு புகைப்படக் கலைஞர். பத்தாண்டுகளுக்கும் மேலாக 'பேஷன்' (fashion) உலகில் புகைப்படங்கள் எடுத்துவந்தவர். உடைகள், காலணிகள், நகைகள், என்று மிக விலைஉயர்ந்த பொருட்களை விளம்பரம் செய்யும் அழகான, ஆடம்பரமான மனிதர்களுடன் வாழ்ந்தவர். அந்தப் பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த செயற்கையான, பளபளப்பான உலகம் இவருக்குச் சலிப்பைத் தரத் துவங்கியது. அந்த உலகிற்கே உரிய ஆணவம், கர்வம் கொண்டவர்களுடன் பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு கசப்பாக மாறிவந்தது.
ஒரு நாள் இரவு இப்படி ஒரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த காமிராவை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ஸ்ப்ரிங் கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, படுக்கையில் விழுந்து, துள்ளி, சன்னல் வழியே வெளியே விழுந்தது. இவருக்கு இதுவரை வாழ்க்கை தந்த காமிரா இவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே இவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அந்த நேரத்தில் தன் வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று Giles கூறுகிறார்.

அந்த இரவுவரை செயற்கையான விளம்பர உலகை தன் காமிராக் கண்களால் கண்டுவந்த Giles, அடுத்தநாள் முதல் இயற்கையான உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளைப் புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கண்களில் விழும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களைப் படம் எடுக்க ஆரம்பித்தார்.
இந்த் முயற்சி அவரை ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, இவர் வாழ்வில் மீண்டும் ஒரு மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது.  பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்த அந்த நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் Giles. அப்போது ஒரு நாள், நிலத்தடியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியை இவர் மிதித்தால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார். இவர் Ted இணையதளம் வழியாகப் பேசியதில் ஒரு பகுதியைத்தான் நான் நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரை என்று சொன்னேன். அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இதோ:
புகைப்படக் கலைஞனாய் நான் இருந்தவரை மற்றவர்களையே படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட என் உடல் ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது.
என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை என் கதையில் சொல்கிறேன்.
Giles கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?
  • உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.
  • அங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.
  • எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால் செய்யமுடியும்.
இந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை நான் பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை எனக்குப் புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவைகளை இப்போது நான் அடைந்துள்ளேன்.

இவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் Giles, மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராட்டங்களை மேற்கொள்ளும் அவருக்கு சிலநாட்களில் காலை விடியும்போது, கால்களை எடுத்து மாட்டிக்கொண்டு படுக்கையைவிட்டு தான் இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இதைத்தான் இந்தச் சிந்தனையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்டேன். 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.

இத்தனை போராட்டங்கள் மத்தியிலும் Giles தான் செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: "நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவைகளைப் பார்த்து அப்படியே உறைந்துபோகாமல், அந்த அவலங்களைப்பற்றி பேசுவோம், கருத்துக்களைப் பரிமாறுவோம், மாற்றங்கள் பிறக்க வழிகள் தெளிவாகும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்." என்பதே அவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம். இந்தப் பாடத்தையே நீதி ஞாயிறின் மையப் பொருளாக நான் எண்ணிப்பார்க்க விழைகிறேன்.

நீதி ஞாயிறு என்றதும், கொடி பிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இந்த வெளிப்படையான முயற்சிகளுடன் நமது நீதித் தேடல் முடிந்துவிட்டால், பயனில்லை.
இவ்வாண்டு நீதி ஞாயிறுக்கென இந்தியத் திருஅவை விடுத்துள்ள முக்கிய கருத்து, அழைப்பு என்ன? “Called to Witness to Justice through our Word and Work” சொல்லாலும், செயலாலும் நீதிக்குச் சாட்சியாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது செயல்களில் நீதி வெளிப்படவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப் பற்றி, வறியோரைப் பற்றி வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே!

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், தற்போது நாம் காணும் சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்து ஆரம்பமாக வேண்டுமா? வெளியிலிருந்து ஆரம்பமாக வேண்டுமா? என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும், அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும், அவர் மாறவேண்டும், இவர் மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள் அதிகம். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.

வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்களே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், குண்டுகள் வீசுவதையும், கட்சிகள் சேர்ப்பதையும் நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு மேலோட்டமாக ஒரு கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு இவ்விதம் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் இந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு நற்செய்தியில் சொல்கிறார்.

அப்பங்களையும், மீன்களையும் இயேசு பலுகச்செய்தபோது, வயிறார உண்டவர்கள் இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன்? அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம் அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அந்தச் சமதர்ம சமுதாயத்தை இயேசு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில் அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். எளிதான, சுகமான சமுதாய மாற்றத்தை உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் கூட்டி வரவில்லை என்ற எச்சரிக்கையை மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார்.
அவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார். சதை, இரத்தம் என்ற இந்த வார்த்தைகளே அந்த மக்களை  நிலைகுலையச் செய்கிறது. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இவரைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறாரே... என்று அவர்கள் தடுமாறுகின்றனர். இருந்தாலும் இயேசு அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்: "என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்."

வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும், ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக, மீதமும் இருக்கும்." என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் சொல்ல முயல்கிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இயேசு இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன?

Giles Duleyன் உரையைக் கேட்க விரும்புவோர்...
என்ற இணையத்தள முகவரிக்குச் செல்லவும்.