27 July, 2023

‘Valuable’ Treasure and Pearl ‘மதிப்புள்ள’ புதையலும் முத்தும்

 
The Hidden Treasures

17th Sunday in Ordinary Time

Making a wish list at the beginning of a New Year is a popular annual exercise among us. At the beginning of this year, 2023, National Public Radio (NPR) network of the United States, asked some people, to share their dreams for 2023. Here are two wishes (dreams) expressed by two persons:
My wish is for the Russian-Ukrainian war to cease rapidly and diplomatically. Loss of lives, obliteration of dwellings, civic and cultural structures and the possibility of nuclear weapon usage has placed the world in peril. The billions of dollars spent should have gone to address climate change and global food insecurity. -Sarah Wright, retired pediatrician from Oregon.
My wish for 2023 is that leaders of all countries could fly into orbit to view our planet from space. I am of the opinion that this experience would have a profound impact on each leader and provide perspective on priorities. - Carter Alexander, from Georgia

Our world leaders getting a broader and proper perspective on priorities is a wish that is deep down in our minds and hearts. In the first reading (I Kings 3:5, 7-12) we meet Solomon who seems to have his priorities well defined and articulated. God asks Solomon to make a wish. At Gibeon the Lord appeared to Solomon in a dream by night; and God said, “Ask what I shall give you.” And Solomon said, “O Lord my God, give thy servant therefore an understanding mind to govern thy people, that I may discern between good and evil; for who is able to govern this thy great people?” (I Kings 3: 5,7,9)

Let us try to add a fantasy to this dream sequence. Let us imagine a Church where this Sunday’s Liturgy is celebrated. Many Presidents and Prime Ministers of the world are attending this Mass. When the First Reading is being read, let us imagine that we have access to the mind voice of these political bigwigs. If so, we can hear many of them saying something like this: “When God is offering a blank cheque, ‘Ask what I shall give you’, Solomon should have grabbed the opportunity to ask for a longer reign, great wealth, a long, healthy life and the utter defeat of all the enemies… But, Solomon asked for the inconsequential gift – wisdom! What a pathetic specimen of a king!” The world leaders in the Church would not have appreciated Solomon for making this choice. What about us? Do we appreciate Solomon for asking God for wisdom?

God appreciated Solomon in the following words: “Because you have asked this, and have not asked for yourself long life or riches or the life of your enemies, but have asked for yourself understanding to discern what is right, behold, I now do according to your word. Behold, I give you a wise and discerning mind, so that none like you has been before you and none like you shall arise after you. I give you also what you have not asked, both riches and honor, so that no other king shall compare with you, all your days.” (I Kgs. 3: 11-13)

A discerning mind not only differentiates between good and bad, but also chooses the best among the many good things on offer. This is the gift prayed for by Solomon. It is similar to the discernment process spoken of by St Ignatius of Loyola (whose Feast is celebrated on Monday, July 31). Ignatius is known for his very enlightening Rules for Discernment of Spirits, constantly sifting and choosing everything for the ‘greater glory of God’!

Of all the riches and treasures one can desire in this world, a discerning mind is a gift of the highest order. Today’s Gospel gives us an opportunity to think of the treasures that we bump into in our life’s journey. The parables of the hidden treasure in the field and the pearl of great value give us an opportunity to reflect on the treasures we receive from God.

Let us begin our reflection on the terms - ‘treasure’ and ‘pearl’. Treasure usually refers to a valuable object we discover from the earth. Very often, this treasure is a precious stone like a diamond. When Jesus compares the treasure and the pearl to the kingdom of heaven, my mind was thinking of the ‘diamond’ and the ‘pearl’ as symbols of the Kingdom.

The way a ‘diamond’ and a ‘pearl’ are formed, gives us some clues about the characteristics of the Kingdom. Carbon molecules, under great pressure and temperature, become a diamond. I guess the higher the pressure and greater the temperature, the diamond formed, will be of greater value. Similarly, in our lives, the values of the kingdom tend to shine forth when great pressure and temperature affect us. The way a carbon molecule responds to pressure and temperature imposed on it, serves as a lesson for us! Pressure and heat need to help us shine better!
Turning our attention to the ‘pearl’, we find that when a foreign element – like a rain drop, a grain of sand or an insect – enters the oyster, it creates a protective shell around the ‘intruder’ and this turns out to be a pearl. This again shows how, when unwanted, uninvited elements creep into our lives, we need to make them into ‘pearls’. Thus, the first lesson taught by a diamond and a pearl is that struggles bring out the best in us. Similarly, the Kingdom values are formed not in a cozy milieu, but more often amidst opposition.

In today’s Gospel Jesus tells us clearly that it is not enough to discover the ‘treasures’, but pay the price for them. The persons in today’s Gospel ‘sold all that they had’ in order to get the treasure and the pearl. This is possible only when we see the great value of the discovery we have made. The world today seems to define ‘value’ in terms of a price-tag. In the different translations of the parable of the pearl, two different phrases are used, namely, “a pearl of great value” and “a pearl of great price”. All values do not and should not be associated with a ‘price-tag’. Unfortunately, this trend seems to dominate our social discourse.

Our media seems to attach a price tag to everything, be it a natural calamity, a terrorist attack, an epidemic or the victory or defeat of a political leader. Due to this great emphasis on looking at all events of the world as market shares, we are driven to think in terms of what is ‘useful’ and ‘profitable’. This ‘commercial’ yardstick tends to measure even our relationships in these terms. From this perspective, senior persons, sick persons are ‘measured’ as of less or no value at all… Hence, they can be disposed, thrown away. Hopefully, the celebration of the the World Day for Grandparents and the Elderly last Sunday (usually celebrated closer to the Feast of Saints Anne and Joachim, the parents of Mary and the grandparents of Jesus on July 26) gave us a better understanding of the true value of elders.

Another day that unites us with today’s First Reading, is July 28. On July 28, 1914, the European War (or, as it was popularly known, World War I) began. More than 9 million lives were lost during this senseless tragedy. When the war ended four years later, the human family resolved never again to wage war. But this was not to be! Two decades later, (1939 to 1945) World War II erupted, resulting in the massacre of 50 to 85 million lives. No one is even sure about the number of deaths… hence, this large variation in the estimation! The chief architect of this massacre was identified as Hitler, with his deranged mind.

Blood-thirsty leaders with deranged minds still walk among us. Hence, as Pope Francis often says, we are ‘waging World War III in bits and pieces’. Even in the face of a pandemic that was sweeping across human race, pockets of clashes were happening in Syria, Yemen, Israel, Palestine, China, India etc. Right now, we are witnessing the orchestrated violence unleashed in Manipur, with the help of the government machinery – as it happened a few years back in Gujarat. If peace is to reign among nations and within the nation, it must first of all find a place in the hearts and minds of world leaders. As we reflect on Solomon who had not asked for himself long life or riches or the life of his enemies, but had asked for himself understanding to discern what is right” we pray that our world leaders be filled with this discerning mind.

Yet another international day observed on July 30, this Sunday, tells us how human lives are sold with a price tag. July 30, this Sunday, is observed as the ‘World Day against Trafficking in Persons’ by the U.N. This is the modern form of slavery.
The International Labour Organization (ILO) estimates that 21 million people are victims of forced labour globally. This estimate also includes victims of human trafficking for labour and sexual exploitation. Women and girls comprise 71 per cent of human trafficking victims, the U.N. report states. Children make up almost a third of all human trafficking victims worldwide. We are painfully reminded of the children from Ukraine forcefully taken away by the Russian army.

As we reflect on the parables of the treasure and the pearl, we pray that we may have the eyes and heart to discover the innumerable treasures God has stacked up inside and around us. May we become courageous enough to sacrifice everything we have in order to possess the values of the Kingdom! May we also see and ‘value’ other human beings as treasures and pearls – not as ‘commodities’ with a ‘price-tag’, but as persons with the sense of ‘preciousness’, since they are made in the image of God!

Treasure and Pearl

பொதுக்காலம் 17ம் ஞாயிறு

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவு காட்சி, நம் சிந்தனைகளைத் துவக்கி வைக்கிறது:
அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், "என் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான, ஞானம் நிறைந்த உள்ளத்தை, அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்டார். (1 அரசர்கள் 3:5,7,9)

இந்தக் கனவுக் காட்சியுடன் சிறிது கற்பனையைக் கலந்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம். இன்றைய ஞாயிறு வழிபாடு நடைபெறும் ஆலயம் ஒன்றில், பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்கள் கலந்துகொள்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வழிபாட்டில், இன்றைய முதல் வாசகம் வாசிக்கப்படும்போது, அங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் உள்ளங்களில், எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கேட்கும் இறைவனிடம், தன் பதவிக்கால நீட்டிப்பு, அளவற்ற செல்வம், உடல்நலம், எதிர்கட்சிகளின் தோல்வி என்ற முக்கியமான வரங்களைக் கேட்பதற்குப் பதில், எதற்கும் உதவாத, தேவையற்ற வரமான ஞானத்தை வேண்டிக்கேட்ட மன்னன் சாலமோனை, ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், பிழைக்கத்தெரியாத மனிதர் என்று, எண்ணி, தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்திருப்பர். ஒருவேளை, நாமும், அத்தலைவர்களுடன் இணைந்து, சாலமோனைப்பற்றி ஏளனமான எண்ணங்கள் கொண்டிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கலாம்.

நமது ஏளனத்திற்கு கொடுக்கப்படும் ஒரு சாட்டையடிபோல, சாலமோனின் இந்த வேண்டுதல், இறைவனை மகிழ்வுறச் செய்தது என்பதை, இன்றைய வாசகம், தெளிவாகக் கூறியுள்ளது: சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது, நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்" என்றார். (1 அரசர்கள் 3: 10-13)

பகுத்தறிவு என்பது, மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த ஒரு கொடை. நன்மை, தீமை இவற்றை பகுத்து, பிரித்து அறிவது மட்டும் பகுத்தறிவு அல்ல, அதற்கும் மேலாக, நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிவதே, உண்மையான பகுத்தறிவு, உண்மையான ஞானம். இத்தகைய ஓர் அறிவுத்திறனையே, சாலமோன், விரும்பி, வேண்டி, கேட்டுக்கொண்டார்.

நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிய, தனிப்பட்ட மனநிலை தேவை. ஜூலை 31, இத்திங்களன்று, புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். இப்புனிதர் வழங்கிய ஆன்மீக பயிற்சிகளில், 'தேர்ந்து தெளிதல்' என்பது மிக முக்கியமான ஒரு பயிற்சி. மேலும், "இறைவனின் அதிமிக மகிமைக்கே" என்பது, இப்புனிதர் வழங்கிய விருதுவாக்கு. இறைவனின் மகிமையை நிலைநாட்டுவது என்பதோடு நின்றுவிடாமல், இறைவனின் மகிமையை இன்னும் கூடுதலாக நிலைநாட்ட தேவையான மனநிலையைத் தருமாறு வேண்டினார், அப்புனிதர்.

MAGIS என்றழைக்கப்படும் இன்னும் கூடுதலாக என்ற மனநிலையை உருவாக்க, இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. வாழ்வில் நம்மை வந்தடையும் நல்லவற்றிலும், மிகச் சிறந்தவற்றை கண்டுபிடித்து, அவற்றை உரிமையாக்கிக் கொள்ள, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் மன உறுதி வேண்டும் என்பதையே, இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது.

இறையரசைத் தேடிக் கண்டுபிடித்தல், அதைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்தல் என்ற கருத்துக்களை, மூன்று உவமைகள் வழியே இயேசு இன்று சொல்லித் தருகிறார். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளில், நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.

'புதையல்' என்ற சொல், பொதுவாக, பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசை நம் உள்ளங்களில் நிறுவத் தேவையான பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிக வெப்பநிலை ஆகியவற்றை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அங்கு உருவாகும் வைரமும், உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல்வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளைக் கொண்டு வாழும் வைரங்களாக நாமும் மாறமுடியும் என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

அடுத்து, நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதம், இறையரசின் மற்றொரு பண்பை நமக்குச் சொல்லித் தருகிறது. வெளியிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே, விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது. அதேபோல், நமது உள்ளங்களில், உத்தரவின்றி நுழையும் அன்னிய எண்ணங்களையும், கருத்துக்களையும், அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் நாம் என்பதை, முத்து உவமையிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். புதையலும், முத்தும், மதிப்பு மிக்கவை என்று சிந்திக்கும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. நம்மில் பலர் 'மதிப்பு' என்ற சொல்லுக்கு, 'விலைமதிப்பு' என்ற பொருளைத் தந்திருப்போம். ஒரு பொருள், ஒரு செயல், ஒரு கருத்து இவற்றின் மதிப்பை இவ்வுலகம் 'விலை' என்ற அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

இன்றைய உலகில் எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனையான போக்கு. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை, புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைப் பேரிடர்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகளுக்கு, ‘இவ்வளவு மில்லியன் டாலர்கள்’ என்ற விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்துமே, பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.

பணத்தின் அடிப்படையில் அனைத்தும் மதிப்பிடப்படும்போது, அங்கு, இலாபம், நட்டம் என்ற கணக்கு எழுகின்றது. பயனுள்ளவை, பயனற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப்பாடு, மனிதர்களில், பயனுள்ளவர்கள், பயனற்றவர்கள் என்ற பாகுபாடு. இந்த பாகுபாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், வயதில் முதிர்ந்தோர்.

கடந்த வாரம், ஜூலை 26ம் தேதி, மரியாவின் பெற்றோரும், இயேசுவின் தாத்தா, பாட்டியுமான, புனிதர்கள் அன்னா, சுவக்கீன் ஆகியோரின் திருநாளைச் சிறப்பிப்பதற்கு முன், ஜூலை 23, சென்ற ஞாயிறன்று, வயது முதிர்ந்தோர் மற்றும் முதிய பெற்றோர் (Grandparents) உலக நாளைச் சிறப்பிக்க நமக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நாள், முதியோரின் மாண்பினை உணரவும், அவர்களுக்குரிய மதிப்பை வழங்கவும் நமக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். பயன்படுத்திவிட்டு, தூக்கியெறியும் (Use and throw) கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட நாம், வயதில் முதிர்ந்தோரை, அவர்கள் வாழ்நாளெல்லாம் பயன்படுத்திவிட்டு, பின்னர், முதியோர் இல்லங்களில் தூக்கியெறியும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டுள்ளோம். வயதில் முதிர்ந்த நம் உறவுகள் என்ற புதையலை, முத்தை, போற்றி பாதுகாக்க இறைவன் நமக்கு நல்மனம் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, இரு எண்ணங்கள்... ஜூலை 28, கடந்த வெள்ளியன்று, உலக வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்பதால், நமது சிந்தனைகளை இந்நாளை நோக்கித் திருப்புவோம். 1914ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி, முதல் உலகப் போர் துவங்கியது. 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த அந்தப் போரின் எதிரொலிகள் இன்னும் இவ்வுலகில் ஓயவில்லை. கோவிட் 19 கொள்ளைநோயால் உயிர்பலிகள் நிகழும் கடினமானச் சூழலிலும், சிரியா, ஏமன், இஸ்ரேல், பாலஸ்தீனா, இந்தியா, சீனா, போன்று, உலகின் ஒரு சில பகுதிகளில், அரசுகளும், அடிப்படைவாதக் குழுக்களும், கொலைவெறி கொண்டு திரிகின்றன.
இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெறவேண்டும்; அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறனையும் பெறவேண்டும். இன்றைய முதல் வாசகத்தில், மன்னன் சாலமோன், நீடிய ஆயுள், செல்வம், எதிரிகளின் சாவு என்ற வரங்களை இறைவனிடம் கேட்காமல், "உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" (1 அரசர்கள் 3:9) என்று வேண்டியதைப்போல், உலகத் தலைவர்கள், குறிப்பாக, மோதல்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகளின் தலைவர்கள், உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவனிடம் மன்றாடுவோம்.

அதேவண்ணம், ஜூலை 30, இஞ்ஞாயிறன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. உலகிலுள்ள அனைத்திற்கும் விலையை நிர்ணயிக்கும் இவ்வுலகப் போக்கின் மிகக் கொடுமையான ஒரு வெளிப்பாடு, மனித வர்த்தகம்.
உலகெங்கும் இன்று 4 கோடிக்கும் அதிகமானோர், வியாபாரப் பொருள்களைப்போல் விற்கப்படுகின்றனர். இவர்களில் 76 விழுக்காட்டினர், பெண்கள், மற்றும் சிறுவர், சிறுமியர். இக்கொடுமையை செய்துவரும் குற்றவாளிகள், எவ்விதத் தண்டனையும் பெறாமல் போவது, அவர்கள், இந்த வர்த்தகத்தை, உலகெங்கும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள், விலை மதிப்பு ஒட்டப்பட்ட பொருள்கள் அல்ல என்பதை, மனித சமுதாயம் உணரவேண்டும். மனசாட்சியற்ற, மனித வர்த்தகக் குற்றவாளிகளை, இறைவன் நல்வழி கொணரவேண்டும் என்று உருக்கமாகச் செபிப்போம்.

இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள கருவூலங்களை, புதையலாக, முத்தாக அடையாளம் கண்டுகொள்ளும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம்.
நாம் அடையாளம் கண்டுகொள்ளும் கருவூலங்களை அடைவதற்கு, அல்லது, அவற்றை போற்றி பாதுகாப்பதற்கு, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
நம்மைச் சுற்றி வாழ்வோரை, வர்த்தகப் பொருள்களாகக் காணாமல், அவர்களை, விலைமதிப்புக்களையெல்லாம் கடந்த இறைவனின் சாயல்களாகக் காணும் கண்ணோட்டத்தை இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.


20 July, 2023

Parables of Patience பொறுமையை விளக்கும் உவமைகள்

 
Weeds Among the Wheat

16th Sunday in Ordinary Time

Last Sunday when we reflected on the Parable of the Sower, we made a special mention that it was an appropriate parable to reflect on at the beginning of the academic year (June – July). We compared the young minds who have gathered in schools and colleges to be the fertile soil and prayed that they receive the seeds of wisdom from responsible sowers – namely, teachers.
This Sunday, we continue where we left off last week. In today’s Gospel (Matthew 13: 24-43), Jesus presents us with three parables - the Parable of the Wheat and the Weed, the Parable of the Mustard Seed, and the Parable of the Leaven.
The Parable of the Wheat and the Weed, once again, gives us an opportunity to pray for our youth, whose hearts and minds are constantly sown, not only with seeds, but much more with weeds sown through the mainstream media and the social media. 

In the three parables which Jesus presents in today’s Gospel, he drives home one of the main virtues required to build up the Kingdom of God, namely, PATIENCE. For the present generation, running at break-neck speed, Jesus presents these three parables as ‘speed-breakers’ or speed bumps! Let us try to slow down and listen!

Last Sunday Jesus presented to us a sower who was reckless in sowing, rather, in scattering the seeds all over the place. This Sunday Jesus presents to us two sowers - one who sows good seeds in broad daylight and ‘the enemy’ who sows weeds ‘while men were sleeping’, namely, at night. This parable has the protagonist and the villain!

When we read the opening lines of this parable, our attention turns to the ‘villain’, rather than to the one who had done all the hard work of sowing good seeds. We are intrigued with someone taking such a lot of effort to sow weeds. We know that in any field, weeds come up on their own, in spite of all the care taken. But, here we see weeds being intentionally sown, to jeopardize the growth of the good seeds. Most of the media time and space are devoted to these ‘villains’ sowing weeds.

All of us are aware of the cyber attack that takes place now and then. This is a good example of how some persons use such a lot of brain power to paralyze the normal functioning of the world. We have heard of persons, who were sacked from some of the computer firms, planting ‘viruses’ in computers. This is a good example of ‘sowing weeds instead of seeds’. In the last few years, we have sadly witnessed how some brilliant but deranged minds have helped in planting viruses like COVID–19!

When faced with such an abundance of weeds, our first instinct is to weed them out. The workers in today’s parable were ready to begin weeding as soon as they spotted the weeds. Here is the scene as described by Jesus: So when the plants came up and bore grain, then the weeds appeared also. The servants said to the house-holder, ‘Then do you want us to go and gather them?’ But he said, ‘No; lest in gathering the weeds you root up the wheat along with them. Let both grow together until the harvest’ (Matthew 13: 26, 28-30)

The enthusiasm shown by the servants to gather the weeds, is similar to the rash efforts taken by the police and the judiciary in ‘weeding out’ criminals from society. Unfortunately, in their hurry, they pick the wheat instead of the real weed. Here is the real-life incident of a young man named Richard Anthony Jones who was freed from prison after being wrongfully confined there for 17 years. Here are some excerpts about this case as reported in BBC in 2017:

A US prisoner who spent 17 years in jail for a robbery he did not commit has spoken of his relief that researchers found his lookalike. Richard Anthony Jones from Kansas was released from jail after witnesses said they could not tell the two men apart. A judge ruled there was no evidence to keep him in jail.
Mr Jones said finding a photo of the other man - who as well as looking like him, shares the same first name - was a "needle in a haystack moment". 'I don't believe in luck, I believe I was blessed,' Mr Jones told the Kansas City Star. So far no criminal case has been filed against his double - known only as Ricky - who gave evidence at Mr Jones's robbery retrial and denied committing the crime. While not saying Ricky was responsible, the judge found that based on the new evidence, no reasonable juror would have convicted Mr Jones.
Mr Jones said that he began to despair that he would ever be released from jail after repeated efforts to appeal against his 19-year conviction for a 1999 robbery. "All my appeals had been denied. It has been a rough ride," he said. But in 2015 he told researchers from the Midwest Innocence Project - a group that aids wrongly convicted prisoners - about a man called Ricky he had heard about. Mr Jones had been told by fellow inmates that he looked identical to Ricky. "When I saw the picture of my double it all made sense to me," he said. Mr Jones had been convicted based mostly on eyewitness evidence.
There was no physical, DNA or fingerprint evidence that linked him to the crime. Richard Anthony Jones celebrated with his family last week after being released from jail. Lawyers for Mr Jones also said he was with his girlfriend and her family at the time members of the public were robbed in a park. They argued that police identity procedures 17 years ago were deeply flawed.

Police and court procedures are still deeply flawed, especially when the ‘so-called-criminal’ happens to be a common man with no money and power. In many cases, innocent people are framed as ‘weeds’ in order to protect some bigwigs who really need to be ‘weeded out’. What impresses us in the case of Mr Jones is his statement to the Kansas City Star: 'I don't believe in luck, I believe I was blessed.' In my opinion, if a person could make such a statement after the bitterness of 17 years in prison for no fault of his, then he - Mr Jones - has grown up to be ‘a true wheat’, ripe enough to be gathered into the Kingdom. We pray that the police and the judiciary develop more patience and sharpen their sense of justice while dealing with innocent, simple people.

Patience is the key factor emphasized in the parables of the mustard seed and the leaven. When talking of patience, I am reminded of the guy whose weakness was impatience. He prayed earnestly to God to cure him of his weakness, saying: “God, give me patience – and I want it now, immediately!

Patience is becoming a precious virtue in the present ‘instant era’. We are looking for instant results, starting from instant noodles! This is in complete anti-thesis to the growth of a mustard seed and the leavening of the flour. They don’t happen in an instant.

We are reminded of the ‘instant era’ man, who planted some seeds at the backyard of his house. Every morning he would go to the garden, dig up the seeds he planted and see whether any growth had taken place. In his anxiety to see ‘instant growth’ he had denied the possibility of any growth at all. The same is true for the flour to be leavened. Once the flour is leavened, it needs to ‘sit’ overnight. If, in our anxiety, we keep checking the flour, it will not be leavened properly.

Our ‘instant era’ has robbed us not only of our patience, but also of our capacity for clear, independent thinking, forming proper judgment, our sense of sifting the grain from the chaff etc. With our advanced technology, we are flooded with information. We don’t have time to sift them through, trying to weed out things that don’t help us.

Instead of patient nurturing of worthwhile information, we are being chocked by carefully planted weeds called ‘dis-information’ that serves no one. Unfortunately, we, in our turn, sow these weeds in our neighbour’s smart phones.
May this Sunday’s parables help us to learn the art of patience. The present ‘fast-paced’ generation can surely learn the virtue of patience from our grandparents and the elderly.

Our final thoughts are on July 23, this Sunday, when we celebrate the Third World Day for Grandparents and the Elderly. For this occasion, Pope Francis has issued a message with the title: ‘His Mercy is from age to age’ (Luke 1:50). In his message, the pope draws our attention to the fact that the World Day of Grandparents is closely followed by the World Youth Day (August 1 to 6, in Lisbon, Portugal).
Here is an extract from the pope’s message: This year, the World Day for Grandparents and the Elderly takes place close to World Youth Day. Both celebrations… invite us to reflect on the bond that unites young and old. The Lord trusts that young people, through their relationships with the elderly, will realize that they are called to cultivate memory and recognize the beauty of being part of a much larger history. Friendship with an older person can help the young to see life not only in terms of the present and realize that not everything depends on them and their abilities. For the elderly, the presence of a young person in their lives can give them hope that their experience will not be lost and that their dreams can find fulfilment.

Growing together: Wheat and Weeds

பொதுக்காலம் 16ம் ஞாயிறு

சென்ற ஞாயிறு, 'விதைப்பவர் உவமை'யை வழங்கிய இயேசு, இந்த ஞாயிறு, மூன்று உவமைகளை வழங்குகிறார். ஜூன், ஜூலை மாதங்களில் ஆரம்பமான கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விதைப்பவர் உவமை, இளம் உள்ளங்கள் என்ற வயலில் விதைக்கப்படும் நல்லெண்ணங்கள் என்ற விதைகளைப்பற்றி சிந்திக்க நல்லதொரு தருணம் என்று சென்ற ஞாயிறு சிந்தித்தோம். இந்த ஞாயிறு இயேசு வழங்கும் முதல் உவமையில் நிலத்தில் விதைக்கப்படும் விதைகளையும் களைகளையும் சிந்திக்க அழைக்கிறார். இன்றைய உலகில், இளையோர் உள்ளங்களில், விதைகளைவிட களைகளே அதிகம் விதைக்கப்படுகின்றன என்பதை நாம் மறுக்க இயலாது. விதைகளையும், களைகளையும் தரம் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை நம் இளையோர் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன் இன்றைய சிந்தனைகளைத் துவக்குவோம்.

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 13 24-43) இயேசு, வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு என்ற மூன்று உவமைகளைக் கூறுகிறார். விண்ணரசின் முக்கியப் பண்பான வளர்ச்சி பற்றி, இவ்வுவமைகள் வழியே, இயேசு சொல்லித்தருகிறார். எந்த ஒரு வளர்ச்சியும், மின்னலைப்போல் தோன்றி மறைவது இல்லை; உண்மையான வளர்ச்சி, பல தடைகளைத் தாண்டி, மெதுவாக, ஆனால், உறுதியாக, இறுதியாக வெளிப்படும்; அதைக் காண்பதற்கு, பொறுமை தேவை என்ற பாடங்களை இன்றைய மூன்று உவமைகளும் நம் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. அனைத்திற்கும், உடனுக்குடன் தீர்வுகள் காணவேண்டும் என்ற அவசரம் கொண்டிருக்கும் நமக்கு, இந்த அவசரத்தால், பயிரையும், களையையும், நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்துப்பார்க்கப் பொறுமையின்றித் தவிக்கும் நமக்கு, இன்றைய உவமைகள், 'வேகத் தடையை'ப் (Speed breaker) போல வந்து உதவுகின்றன.

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் (மத்தேயு 13: 3) என்று சென்ற வார உவமையை அறிமுகம் செய்த இயேசு, இந்த வாரம், இருவர் விதைப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்: இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் (மத்தேயு 13: 24-25) என்று இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார்.

இந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, விதை விதைத்தவரைக் காட்டிலும், இரவோடிரவாக, களைகளை விதைத்துச் சென்றவர், நம் கவனத்தை ஈர்க்கின்றார், நமக்குள் நெருடல்களை உருவாக்குகின்றார். எந்த ஒரு நிலத்திலும், பயிர்களுடன் ஒரு சில களைகளும் வளர்வது இயற்கைதான். ஆனால், களைகள், பயிர்களைவிட அதிகம் பெருகவேண்டும் என்ற எண்ணத்துடன், களைகளை விதைப்பவர், இன்றைய உலகில், திட்டமிட்டு தீமைகளை வளர்ப்போரை நினைவுபடுத்துகிறார். தானாகவே மலிந்துவரும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் அவலத்தை நாம் அறிவோம்.

எடுத்துக்காட்டாக, ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், குற்றங்களில் சிக்கி, அந்நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்நிறுவனங்கள் உருவாக்கிய கணணி மென்பொருள்களில் 'virus' எனப்படும் களைகளை நுழைத்துச் சென்றனர் என்பதை நாம் அறிவோம். கணணிகள் வழியே, தகவல் தொழிநுட்ப உலகில் அவ்வப்போது விதைக்கப்படும் களைகளான 'virus'கள் இவ்வுலகிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், கணணி உலகில் நிகழ்ந்த ஒரு 'சைபர் தாக்குதலால்' (Cyber attack) 99 நாடுகளில், கோடிக்கணக்கான கணணிகள் செயலிழந்தன. குறிப்பாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் மருத்துவமனைகள் முடங்கிப்போயின. கணணிகளில் களைகளை விதைத்தது போதாது என்று, தற்போது, மனித உடல்களிலும் களைகளை விதைக்கும் அளவு மதியிழந்துள்ள மனிதர்களை நாம் அறிவோம். உலகை அச்சுறுத்திய கோவிட் 19 கிருமி, ஒரு சில ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டு, மனித குடும்பத்தில் விதைக்கப்பட்ட அவலத்தை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இறையரசின் வளர்ச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுபோல், இறையரசிற்கு தடையாக வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதிலும் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் முதல் உவமையில் தெளிவாக்குகிறார். களைகளைக் கண்டதும், அவற்றை அகற்றிவிட விரும்பிய பணியாளர்களிடம், வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்என்று நில உரிமையாளர் அறிவுரை வழங்குகிறார்.

களைகளை அகற்றிவிட பணியாளர்கள் காட்டிய அவசரத்தை, பல்வேறு நாடுகளில், காவல்துறையும், நீதித்துறையும் காட்டிவருகின்றன. களைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில், இத்துறைகள் காட்டியுள்ள வேகமும், அவசரமும், பல அப்பாவியான பயிர்களைப் பலிவாங்கியுள்ளன என்பது, நாம் அடிக்கடி கேட்கும் செய்திதானே!

சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான ஒரு செய்தி, பயிரா, களையா என்பதை அறியும் பொறுமையின்றி செயலாற்றிய காவல் மற்றும் நீதித்துறைகளைப் பற்றியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கான்சாஸ் நகரில், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஓர் இளைஞர், 17 ஆண்டுகள் சென்று, குற்றமற்றவர் என்று, 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்டார்.

ரிச்சர்ட் அந்தனி ஜோன்ஸ் என்ற இவ்விளைஞர், 1999ம் ஆண்டு, பூங்கா ஒன்றில் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டதால், 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்தக் கொள்ளை நடந்ததைக் கண்ட சிலர், அதைச் செய்தது ரிச்சர்ட்தான் என்று அடையாளப்படுத்தியதை வைத்து, நீதிபதியும், 'ஜூரி' என்றழைக்கப்படும் நடுவர் குழுவும் இணைந்து, ரிச்சர்டுக்குச் சிறைதண்டனை வழங்கினர். தான் இக்குற்றத்தைச் செய்யவில்லை என்றும், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில், தான் மற்றோர் இடத்தில் இருந்ததாகவும், இளையவர் ரிச்சர்ட், பலமுறை எடுத்துச் சொல்லியும், பயனின்றி போனது.
அவர் சிறையில் 15 ஆண்டுகள் கழித்தபின், அச்சிறைக்கு வந்த வேறு சில கைதிகள், ரிச்சர்ட், தங்களுக்குத் தெரிந்த மற்றொரு நண்பரைப்போலவே இருக்கிறார் என்று கூறினர். அந்த நண்பரின் பெயரும் 'ரிச்சர்ட்' என்பதை அவர்கள் கூறியதும், ரிச்சர்ட், தன் வழக்கறிஞர்கள் வழியே, இந்த மற்றொரு ரிச்சர்ட்டைக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இரண்டாவது ரிச்சர்டின் புகைப்படங்கள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இருவரும், ஒரே தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருந்ததால், பூங்காவில் கொள்ளையடித்தவர் யார் என்பதை அடையாளப்படுத்தியவர்கள் தவறு செய்திருக்கலாம் என்று நீதிமன்றம் உணர்ந்து, சிறையில் இருந்த ரிச்சர்ட் அவர்களுக்கு விடுதலை வழங்கியது. குற்றம் செய்த ஒருவரைப்போல இருந்த ஒரே காரணத்திற்காக, இளையவர் ரிச்சர்ட், தனக்கு விதிக்கப்பட்ட 19 ஆண்டுகள் தண்டனையில், 17 ஆண்டுகளை சிறையில் கழிக்க நேரிட்டது.

தன் விடுதலையைத் தொடர்ந்து, இளையவர் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன: "ஒரே வகையான தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருப்பது, மிக, மிக அரிதான ஓர் ஒற்றுமை. இதைக் கொண்டு, முதலில், எனக்கு தண்டனையும், இப்போது, விடுதலையும் கிடைத்திருப்பது, அரியவகை அதிசயம் என்றே சொல்லவேண்டும். இதை நான், அதிர்ஷ்டம் என்று நம்பமாட்டேன். இது எனக்குக் கிடைத்த ஆசீர் என்றே நம்புகிறேன்" என்று ரிச்சர்ட் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக, 17 ஆண்டுகள் சிறையில் துன்புற்றபின்னரும், தனக்குக் கிடைத்த விடுதலை, வெறும் அதிர்ஷ்டம் அல்ல, அது ஓர் 'ஆசீர்வாதம்' என்று கூறுமளவு பக்குவப்பட்டிருந்த இளையவர் ரிச்சர்ட் அவர்கள், சிறையில் இருந்த பல்வேறு களைகள் நடுவே ஒரு பயிராகவே வளர்ந்தார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. பயிரையும், களையையும் பிரித்துப்பார்க்கும் பொறுமையின்றி, காவல்துறை, பணபலம் இல்லாத அப்பாவி மக்களை களைகள் என்று முத்திரை குத்தி சிறைகளில் வதைப்பதை நாம் அறிவோம். சமுதாயத்திலிருந்து அகற்றப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டிய பெரும் புள்ளிகள் என்ற களைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அப்பாவி மக்களை பழிவாங்கும் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும், இறைவன், பொறுமையையும், நேரிய சிந்தனையையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

பயிரையும், களைகளையும் பகுத்துப் பார்க்க நமக்குப் பொறுமை தேவை என்பதே, இவ்வுவமையில் இயேசு சொல்லித்தரும் முக்கியமானப் பாடம். 'அகழ்ந்தாரைத் தாங்கும் நிலம்' என்று, நிலத்தை, நாம், பொறுமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறோம். தன்னில் விதைக்கப்பட்ட பயிர்களையும், களைகளையும் எவ்விதப் பாகுபாடுமின்றி, வளரவிடுகிறது, நிலம். அந்த நிலத்தைப் பின்புலமாகக் கொண்டு தன் உவமையைக் கூறியுள்ள இயேசு, பொறுமையுடன் காத்திருந்து, பயிர்களும், களைகளும் முற்றிலும் வளர்ந்தபின் அவற்றை பிரிப்பதே இறையரசின் அழகு என்று, இவ்வுவமையில் சொல்லித்தருகிறார்.

அதேவண்ணம், கடுகுவிதை உவமையும், புளிப்பு மாவு உவமையும் பொறுமையைச் சொல்லித்தருகின்றன. விதைகளை விதைத்த மறுநாளே செடிகளை எதிர்பார்ப்பது மதியீனம் என்பதை அறிவோம். ஒருவர் தன் வீட்டின் பின்புறம் இருந்த சிறு தோட்டத்தில் சில விதைகளை ஊன்றி வைத்தார். ஒவ்வொருநாளும் காலையில், தோட்டத்திற்குச் சென்று, மண்ணைத் தோண்டி, தான் ஊன்றிய விதைகள் வளர்ந்துவிட்டனவா என்று அவர் பார்த்து வந்தாராம். அந்த விதைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல், மாவில் புளிப்புமாவைக் கலந்தபின், அதை மூடி வைக்கவேண்டும். மாவு முழுவதிலும் புளிப்பு ஏறுவதற்குக் காத்திருக்கவேண்டும். புளிப்பு ஏறிவிட்டதா என்று பார்க்க, அந்த மாவு உள்ள பாத்திரத்தை அடிக்கடி திறந்தால், உள்ளிருக்கும் மாவில் புளிப்பெற வாய்ப்பில்லை. பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றிய கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை!

நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும், துரிதமாக, உடனடியாக கிடைக்கவேண்டும் என்று அவசரப்படுவது நாம் வாழும் 'உடனடி யுகத்தின்' (Instant Era) இலக்கணமாகிவிட்டது. அதேபோல், டிஜிட்டல் வழி தகவல் பரிமாற்றத்தால், நம் விரல் நுனியில் அனைத்துச் செய்திகளையும் ஒரே நேரத்தில் பெற விழைகிறோம். நம்மீது திணிக்கப்படும் செய்திகள், நூற்றுக்கணக்கில் நம்மை வந்தடைவதால், எந்த ஒரு செய்தியையும், ஆர, அமர, முழுமையாகப் பார்த்து, படித்து, சிந்தித்து, செயல்படும் பொறுமை நம்மிடம் இல்லை. நம்மை வந்தடையும் செய்திகளில், எவை தேவையானவை, தேவையற்றவை, எவை பயனுள்ளவை என்று தரம்பிரித்துப் பார்த்து, பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்துவிட்டோம்.

இதனால், நம் மத்தியில், உண்மையானச் செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகிய பயிர்கள் வளர்வதற்குப் பதில், நம் அவசர சிந்தனை எனும் நிலத்தில், வதந்திகள், புறணிகள், அவதூறுகள் என்ற களைகளே மண்டிக்கிடக்கின்றன. நாமும், நம் பங்கிற்கு, அடுத்தவருக்கு இச்செய்திகளை அனுப்புவதன் வழியே, அவரது தொடர்புக் கருவிகள் என்ற நிலத்தில், இந்தக் களைகளை அவசரமாக விதைத்துவிடுகிறோம்.

நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கதிர்கள், களைகள் இரண்டும் வளர்கின்றன. கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம் என்பதை பின்வரும் கதை நமக்குச் சொல்லித் தருகிறது.
செரோக்கி(Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே அவற்றின் பண்புகள் வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ அந்த ஓநாயே வெற்றிபெறும்.

நாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப் போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா? கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.

வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய தலைமுறை, விவேகத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதையும், அந்த விவேகத்தை வளர்க்க, நமக்குள் பொறுமையை வளர்க்கவேண்டும் என்பதையும், நமது முந்தைய தலைமுறையினரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 23, இஞ்ஞாயிறன்று, வயது முதிர்ந்தோர் மற்றும் முதிய பெற்றோர் (Grandparents) உலக நாளைச் சிறப்பிக்க தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். இதைத் தொடர்ந்து இன்னும் சில நாள்களில் (ஆகஸ்ட் 1 முதல் 6 முடிய) போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் உலக இளையோர் நாளையும் நாம் சிறப்பிக்கவிருக்கிறோம். இத்தருணத்தில், பொறுமை மற்றும் நிதானம் ஆகிய வாழ்க்கைப் பாடங்களை இளையோர் முதியோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடுவோம். அதேபோல், இறையரசைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்ளும் ஆர்வத்தை, முதியோர் இளையோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மன்றாடுவோம்.