29 March, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 15

Hands behind prison bars

Zhang Agostino Jianqing, at the release function of the book ‘The Name of God is Mercy’ – Seated: Cardinal Pietro Parolin and Italian Actor-Director Roberto Benigni

"இறைவன், தன் இரக்கத்தால் என் வாழ்வை எவ்விதம் மாற்றினார் என்பதற்குச் சாட்சியம் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்" என்று, ஒரு சிறைக் கைதி, வத்திக்கானில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறினார். சீனாவில் பிறந்து, இத்தாலியில் குடியேறி, தற்போது, பதுவை நகரில், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஜாங் அகோஸ்தீனோ ஜியான்கிங் (Zhang Agostino Jianqing) என்ற 30 வயது இளையவர், இவ்வாண்டு சனவரி மாதம் வத்திக்கானுக்கு வருகை தந்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆந்த்ரெயா தோர்னியெல்லி (Andrea Tornielli) என்ற பத்திரிக்கையாளருடன் மேற்கொண்ட உரையாடலின் தொகுப்பு, சனவரி 12ம் தேதி, ஒரு நூலாக வெளியானது. "இறைவனின் பெயர் இரக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவுக்கென, பதுவைச் சிறையிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இளையவர் ஜியான்கிங் அவர்கள், இறைவன் எவ்விதம் தன்னை சிறையில் சந்தித்தார் என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இளையவர் ஜியான்கிங் அவர்கள், 12 வயது சிறுவனாய் இருந்தபோது, தன் பெற்றோருடன் இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். வளர் இளம் பருவத்தின் வாசலில் நின்ற ஜியான்கிங், நாடு, மொழி, கலாச்சாரம் என்று, பல வழிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வாழவேண்டியதாயிற்று. இந்தக் குழப்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 16 வயதில், அவரது வாழ்வு தடம்புரண்டது. அவருக்கு 19 வயதானபோது, ஒரு பெரும் குற்றத்தில் பிடிபட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் இருந்த ஒரே சீன இனத்தவர் என்பதால், இளையவர் ஜியான்கிங் அவர்கள், கொடும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று.
சிறையில் அவருக்கு ஆறுதலாக இருந்த ஒரு சிலர் வழியே, கிறிஸ்து தனக்கு அறிமுகமானார் என்பதை, இளையவர் ஜியான்கிங் அவர்கள், இந்த நூல் வெளியீட்டு விழாவில் கூறினார். 2014ம் ஆண்டு, அவர் திருமுழுக்கு பெற்றபோது, அகஸ்டின் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். தாயான புனித மோனிகாவின் கண்ணீராலும், செபங்களாலும் மனம் மாறிய புனித அகஸ்டினைப் போல, தானும், தன் அன்னையின் கண்ணீராலும், கிறிஸ்துவின் அறிமுகத்தாலும் மனம் மாறியதாகக் கூறினார், இளையவர் ஜியான்கிங். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இறைவனின் இரக்கம், சிறையில் தன்னை பாதுகாத்து வந்துள்ளது என்பதை, இளையவர் ஜியான்கிங் அவர்கள், தன் பகிர்வில் வலியுறுத்திக் கூறினார்.
"இறைவனின் பெயர் இரக்கம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய இளையவர் ஜியான்கிங் அவர்கள், தன் உரையின் இறுதியில், "அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, உங்கள் பாசத்திற்கும், மென்மையான குணத்திற்கும் மிக்க நன்றி. இரக்கம் நிறைந்த ஓர் இடையரின் உள்ளத்தை வெளிப்படுத்தும் இந்நூலுக்காக உமக்கு நன்றி. உங்களை எங்கள் செபங்களில் எப்போதும் நினைவில் கொள்வோம்" என்று பேசி முடித்தார்.
இறைவனின் இரக்கம், இந்த இளையவரைத் தேடி, அவர் வாழ்ந்த சிறைக்குச் சென்றதால், சிறையிலேயே அவர் பரிபூரணப்பலனைப் பெற்றார் என கூறமுடியும். இத்தகையப் புதுமைகள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நடைபெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பரிபூரணப்பலனைக் குறித்து எழுதிய மடலில், சிறைக்கைதிகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளார்.

வயது முதிர்ந்தோரும், நோயுற்றோரும், தாங்கள் வாழும் இடத்திலேயே பரிபூரணப் பலனைப் பெறுவதற்குரிய வழிகளை, திருத்தந்தை ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை, சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். இதைத் தொடர்ந்து, இதே மடலில், "தங்கள் சுதந்திரம் மறுக்கப்பட்டு, சிறையில் இருப்போர் மீது என் சிந்தனைகள் திரும்புகின்றன" என்ற வார்த்தைகளுடன், சிறைப்பட்டோர் மீது தன் கவனத்தைத் திருப்புகிறார், திருத்தந்தை. 'சிறைப்பட்டோருக்கு விடுதலை' என்பது, யூபிலி ஆண்டின் ஒரு நோக்கம் என விவிலியம் கூறுகிறது. இந்த எண்ணத்தை, திருத்தந்தை தன் மடலில் பின்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்:
"பொது மன்னிப்பு வழங்குவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கும் ஒரு தருணம், யூபிலி ஆண்டுகள். தங்கள் தவறுகளை உணர்ந்து, வாழ்வைச் சீரமைத்து, மீண்டும் சமுதாயத்தில் இணைய விழைவோரை மனதில் வைத்து, யூபிலி மன்னிப்பு உருவாக்கப்பட்டது" என்று, யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறையில் இருந்தவண்ணம், யூபிலி ஆண்டின் பரிபூரணப்பலனை எவ்விதம் அடைய முடியும் என்பதை, பின்வரும் வரிகளில் கூறுகிறார்:
"இறைவனின் இரக்கம், சிறையில் இருக்கும் அனைவரையும் தொடவேண்டும். மன்னிப்பு மிக அதிகமாகத் தேவைப்படும் இவர்கள் அருகே இறைவன் தங்கியிருக்கிறார். சிறையில் இருக்கும் சிற்றாலயங்கள் வழியே இவர்கள் பரிபூரணப் பலனை அடையமுடியும். தங்கள் எண்ணங்களையும், செபங்களையும் தந்தையாம் இறைவன் பக்கம் திருப்பி, இவர்கள், தங்கள் சிறைக்கதவைக் கடந்துச்செல்லும் ஒவ்வொரு வேளையிலும், புனிதக்கதவைக் கடந்துச்செல்வதை அது அடையாளப்படுத்தும். ஏனெனில், இறைவனின் இரக்கம், இவர்கள் உள்ளங்களை மாற்றுவதுபோல், இவர்கள் அடைபட்டிருக்கும் சிறைக் கதவுகளையும் விடுதலை அனுபவமாக மாற்றும் வல்லமை பெற்றது" என்று திருத்தந்தை இம்மடலில் விளக்கம் அளித்துள்ளார்.

சிறைக்கதவையும், புனிதக்கதவையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பது, அவரது கற்பனையில் உதித்த ஓர் எண்ணம் அல்ல. திருஅவை பாரம்பரியத்தில் இத்தகைய எண்ணம் பல நூற்றாண்டுகளாக பதிவு  செய்யப்பட்டுள்ளது. யூபிலி ஆண்டுகளில், புனிதக்கதவைத் திறப்பதற்கு, அக்கதவின் மீது, (வெள்ளிச் சுத்தியல் கொண்டு), திருத்தந்தையர் மூன்று முறை தட்டுவது, ஒரு பாரம்பரிய வழக்கம். விவிலியத்தில் காணப்படும் மூன்று நிகழ்வுகளின் அடையாளமாக மும்முறைத் தட்டும் பாரம்பரியம் வந்திருப்பதாக, திருஅவை வரலாறு, நமக்குச் சொல்லித்தருகிறது. விவிலியத்தில் நாம் காணும் மூன்று நிகழ்வுகள், இவையே:
பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் தாகத்தால் தவித்தபோது, தலைவர் மோசே, தன் கோலால் பாறையைத் தட்டி, அதிலிருந்து தண்ணீரைப் பெருகச் செய்தது, முதல் நிகழ்வு (எண்ணிக்கை 20:11). புனிதக்கதவின் வழியே, இறைவனின் இரக்கம் தண்ணீராய்ப் பெருகி, மக்களின் தாகம் தணிக்கவேண்டும் என்ற பொருளில், திருத்தந்தை, அதை, முதல் முறை தட்டுகிறார்.
சிலுவையில் இயேசு இறந்ததும், அவரது விலாவை ஈட்டியால் குத்தவே, அங்கிருந்து இரத்தமும், தண்ணீரும் வடிந்தன என்பது, இரண்டாவது நிகழ்வு (யோவான் நற்செய்தி 19: 33-35). இயேசுவின் விலாவிலிருந்து வடிந்த இரத்தம், திருநற்கருணை என்ற அருளடையாளத்தையும், தண்ணீர், திருமுழுக்கு என்ற அருளடையாளத்தையும் குறிப்பதுபோல், புனிதக்கதவின் வழியே நுழைவோர், அருளடையாளங்கள் வழியே நிறையருள் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை அதை இரண்டாவது முறை தட்டுகிறார்.

புனிதக்கதவு, மூன்றாவது முறை தட்டப்படுவதற்கும், சிறைப்பட்டோர் விடுதலை பெறுவதற்கும், நெருங்கியத் தொடர்பு இருப்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வு, திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளது. இதோ, அப்பகுதி:
திருத்தூதர் பணிகள் 16: 25-34
நள்ளிரவில், பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார்.
பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். இறைவனின் வல்லமையால் உருவான நிலநடுக்கம், சிறைப்பட்டிருந்த பவுலையும், சீலாவையும் விடுவித்தது. அத்துடன், சிறையில் இருந்தோர் அனைவரையும் விடுவித்தது. இந்த நிகழ்வை நினைவுப்படுத்தவே, புனிதக்கதவை, திருத்தந்தை மூன்றாம் முறை தட்டுகிறார்.

இந்நிகழ்வில், ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறும் விளக்கம், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. விலங்குகளால் பிணைக்கப்பட்டு, சிறைக்கம்பிகளுக்குப் பின் வாழ்ந்த பவுலும், சீலாவும் கைதிகளா, அல்லது, சிறைக்கு வெளியே வாழ்ந்த சிறைக் காவலர் உண்மையிலேயே கைதியா என்ற கேள்வியை இவர்கள் எழுப்பியுள்ளனர். இறைவன் தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில், பவுலும் சீலாவும் சிறைக்குள் மகிழ்வுடன் பாடிக்கொண்டிருக்க, சிறைக்கு வெளியே இருந்த காவலர், எந்நேரமும் தன் பதவிக்கும், உயிருக்கும் ஆபத்துவரும் என்ற பயத்தில் வாழ்ந்து வந்ததால், நில நடுக்கம் ஏற்பட்டு, சிறைக்கதவுகள் திறந்திருப்பதைக் கண்டதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பதைச் சுட்டிக்காட்டி, அந்தச் சிறைக்கூடத்தில், யார் உண்மையிலேயே கைதியாக இருந்தது என்ற கேள்வியை, விவிலிய விரிவுரையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யார் கைதி என்ற கேள்விக்கு, வேறொரு வகையில் விளக்கம் அளித்துள்ளார். பொலிவியா நாட்டின் பல்மசோலா (Palmasola) எனுமிடத்தில் சிறைக்கைதிகளைச் சந்தித்த நிகழ்வை நினைவுகூர்ந்து, திருத்தந்தை தன் உரையாடலில் இவ்வாறு கூறியுள்ளார்:
"பல்மசோலா சிறைக்கைதிகள், என்னை அன்போடு வரவேற்றபோது, அவர்களிடம் நான் ஓர் உண்மையை, மனப்பூர்வமாகக் கூறினேன். திருத்தந்தைக்கும் இறைவனின் இரக்கம் தேவைப்படுகிறது என்பதே, நான் அவர்களிடம் கூறிய உண்மை. புனித பேதுருவும், பவுலும் சிறைக்கைதிகளாக இருந்தனர் என்பதை அக்கைதிகளுக்கு நினைவுறுத்தினேன். தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு, சிறையில் இருப்போருடன் எனக்கு, தனிப்பட்ட நெருக்கம் உள்ளது. நான் ஒரு பாவி என்ற உள்ளுணர்வே, இந்த நெருக்கத்தை உருவாக்குகிறது.
ஒவ்வொரு முறையும், நான், திருப்பலி ஆற்றவோ, அல்லது, கைதிகளைச் சந்திக்கவோ சிறைக்கூடத்திற்குள் நுழையும் வேளையில், 'ஏன் அவர்களுக்கு இந்நிலை? அது ஏன் நானாக இருந்திருக்கக் கூடாது?' என்ற ஓர் எண்ணம் எனக்குள் எழும். அவர்களுக்கு நிகழ்ந்த தவறு, எனக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும். நானும் அங்கிருக்கத் தகுதியுடையவன்தான். எனக்கு முன் நிற்கும் இவர்களைவிட, நான் எவ்வகையிலும் உயர்ந்தவன் அல்ல."

சூழ்நிலை காரணமாக விலங்கிடப்பட்டு, சிறைக்குள் கைதிகளாக வாழ்வோருக்கும், சிறைக்கு வெளியில் இருந்தாலும், சூழ்நிலைக் கைதிகளாக வாழும் நமக்கும் இறைவனின் இரக்கம், பரிபூரணப் பலனைத் தரும் என்பதை திருத்தந்தையின் மடல் உணர்த்துகிறது. சிறைப்பட்டோரையும், யூபிலி ஆண்டையும் இணைத்து, நம் தேடல் தொடரும்.



26 March, 2016

O Cross of Christ! ஓ, கிறிஸ்துவின் சிலுவையே!

Pope Francis leads Good Friday rite at Colosseum in Rome

The Prayer recited by the Holy Father at the end of the Way of the Cross, conducted in the Colosseum, Rome, on Good Friday – March 25, 2016

O Cross of Christ, symbol of divine love and of human injustice, icon of the supreme sacrifice for love and of boundless selfishness even unto madness, instrument of death and the way of resurrection, sign of obedience and emblem of betrayal, the gallows of persecution and the banner of victory.

O Cross of Christ, today too we see you raised up in our sisters and brothers killed, burned alive, throats slit and decapitated by barbarous blades amid cowardly silence.

O Cross of Christ, today too we see you in the faces of children, of women and people, worn out and fearful, who flee from war and violence and who often only find death and many Pilates who wash their hands.

O Cross of Christ, today too we see you in those filled with knowledge and not with the spirit, scholars of death and not of life, who instead of teaching mercy and life, threaten with punishment and death, and who condemn the just.

O Cross of Christ, today too we see you in unfaithful ministers who, instead of stripping themselves of their own vain ambitions, divest even the innocent of their dignity.

O Cross of Christ, today too we see you in the hardened hearts of those who easily judge others, with hearts ready to condemn even to the point of stoning, without ever recognizing their own sins and faults.

O Cross of Christ, today too we see you in expressions of fundamentalism and in terrorist acts committed by followers of some religions which profane the name of God and which use the holy name to justify their unprecedented violence.
           
O Cross of Christ, today too we see you in those who wish to remove you from public places and exclude you from public life, in the name of a pagan laicism or that equality you yourself taught us.

O Cross of Christ, today too we see you in the powerful and in arms dealers who feed the cauldron of war with the innocent blood of our brothers and sisters.

O Cross of Christ, today too we see you in traitors who, for thirty pieces of silver, would consign anyone to death.

O Cross of Christ, today too we see you in thieves and corrupt officials who, instead of safeguarding the common good and morals, sell themselves in the despicable market-place of immorality.

O Cross of Christ, today too we see you in the foolish who build warehouses to store up treasures that perish, leaving Lazarus to die of hunger at their doorsteps.

O Cross of Christ, today too we see you in the destroyers of our “common home”, who by their selfishness ruin the future of coming generations.

O Cross of Christ, today too we see you in the elderly who have been abandoned by their families, in the disabled and in children starving and cast-off by our egotistical and hypocritical society.

O Cross of Christ, today too we see you in the Mediterranean and Aegean Seas which have become insatiable cemeteries, reflections of our indifferent and anesthetized conscience.

O Cross of Christ, image of love without end and way of the Resurrection, today too we see you in noble and upright persons who do good without seeking praise or admiration from others.

O Cross of Christ, today too we see you in ministers who are faithful and humble, who illuminate the darkness of our lives like candles that burn freely in order to brighten the lives of the least among us.

O Cross of Christ, today too we see you in the faces of consecrated women and men – good Samaritans – who have left everything to bind up, in evangelical silence, the wounds of poverty and injustice.

O Cross of Christ, today too we see you in the merciful who have found in mercy the greatest expression of justice and faith.

O Cross of Christ, today too we see you in simple men and women who live their faith joyfully day in and day out, in filial observance of your commandments.

O Cross of Christ, today too we see you in the contrite, who in the depths of the misery of their sins, are able to cry out: Lord, remember me in your kingdom!

O Cross of Christ, today too we see you in the blessed and the saints who know how to cross the dark night of faith without ever losing trust in you and without claiming to understand your mysterious silence.

O Cross of Christ, today too we see you in families that live their vocation of married life in fidelity and fruitfulness.

O Cross of Christ, today too we see you in volunteers who generously assist those in need and the downtrodden.

O Cross of Christ, today too we see you in those persecuted for their faith who, amid their suffering, continue to offer an authentic witness to Jesus and the Gospel.

O Cross of Christ, today too we see you in those who dream, those with the heart of a child, who work to make the world a better place, ever more human and just.

In you, Holy Cross, we see God who loves even to the end, and we see the hatred of those who want to dominate, that hatred which blinds the minds and hearts of those who prefer darkness to light.

O Cross of Christ, Arc of Noah that saved humanity from the flood of sin, save us from evil and from the Evil One.  O Throne of David and seal of the divine and eternal Covenant, awaken us from the seduction of vanity!  O cry of love, inspire in us a desire for God, for goodness and for light.

O Cross of Christ, teach us that the rising of the sun is more powerful than the darkness of night.  O Cross of Christ, teach us that the apparent victory of evil vanishes before the empty tomb and before the certainty of the Resurrection and the love of God which nothing can defeat, obscure or weaken.  Amen!

 Pope Francis praying at the end of the Way of the Cross

உரோம் நகரின் கொலோசேயம் திடலில் மார்ச் 25, புனித வெள்ளியன்று நிகழ்ந்த சிலுவைப்பாதையின் இறுதியில், திருத்தந்தை கூறிய செபத்தின் (பெரும் பகுதி) தமிழாக்கம்:

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இறையன்பிற்கும், மனித அநீதிக்கும் அடையாளமே, உன்னதத் தியாகத்திற்கும், கட்டுக்கடங்காத சுயநலத்திற்கும் குறியீடே, மரணத்திற்கும், உயிர்ப்பிற்கும் கருவியே, கீழ்ப்படிதலுக்கும், காட்டிக்கொடுத்தலுக்கும் அடையாளமே,

இன்று எங்கள் சகோதர, சகோதரிகள் கொல்லப்படுவதிலும், உயிரோடு எரிக்கப்படுவதிலும், அரக்கத்தனமான கத்திகளால் தலையும், கழுத்தும் வெட்டப்படுதலிலும், இவையனைத்தையும் கண்டு அச்சம் கொண்டு மௌனம் காப்பதிலும், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, நீ உயர்த்தப்படுவதைக் காண்கிறோம்.

போர், வன்முறை, இவற்றிலிருந்து தப்பியோடும் குழந்தைகள், பெண்கள், மக்கள், மீண்டும் தங்கள் மரணத்தைச் சந்திப்பதிலும், பல பிலாத்துகள் கரங்களைக் கழுவுவதிலும், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

இரக்கத்தையும், வாழ்வையும் கற்றுத்தருவதற்குப் பதில், தண்டனை, மரணம் ஆகிய அச்சங்களை ஊட்டும் மரணத்தின் அறிஞர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

தங்கள் தற்பெருமைக் கனவுகளைக் களைவதற்குப் பதில், மாசற்றவர்களின் மாண்பைக் களைந்துவிடும் நம்பிக்கைத் துரோகம் செய்யும் பணியாளர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
.............
மாசற்ற சகோதர, சகோதரிகளின் இரத்தத்தைக் கொண்டு, போர் என்ற சூளையின் தீயை, தொடர்ந்து வளர்த்துவரும் சக்தி வாய்ந்தவர்கள், போர்க்கருவி வர்த்தகர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

வாசலில் பசியுடன் கிடக்கும் லாசர்களை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் செல்வங்களைக் குவிப்பதற்கு, களஞ்சியங்களை இடித்துக் கட்டும் மதியிழந்தவர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் வகையில், தங்கள் சுயநலத்தால் எங்கள் பொதுவான இல்லத்தை அழித்து வருவோரின் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

எங்கள் அக்கறையற்ற, உணர்வு மழுங்கடிக்கப்பட்ட ஆன்மாக்களின் பிரதிபலிப்பாக, தீராதப் பசிகொண்ட சமாதிக்ளாக மாறிவரும் மத்தியதரைக் கடல், மற்றும் ஐரோப்பியக் கடல்களின் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

மற்றவர்களின் புகழையும், அங்கீகாரத்தையும் பெறுவதைப்பற்றி கவலைப்படாமல், நல்லவற்றை செய்து, உயிர்ப்பிற்கு வழியாய் அமைவோரின் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

பிறரது இருள்போக்கும் மெழுகுதிரிகளாய் தங்களை எரித்துக்கொண்டு, பணிவுடன் செயலாற்றும் பணியாளர்கள் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

நீதி, நம்பிக்கை இவற்றின் வெளிப்பாடாக, இரக்கத்தைக் கண்டுகொண்ட இரக்கம் நிறைந்தோர் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.
..........
திருமண வாழ்வு என்ற அழைப்பில், பிரமாணிக்கமாய் வாழ்வோரின் குடும்பங்களில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புற்றாலும், தொடர்ந்து கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் சாட்சிகளாய் வாழ்வோர் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

கனவு காண்போர், குழந்தை மனம் கொண்டோர், இவ்வுலகை அதிகம் மனிதமுள்ளதாக, நீதியுள்ளதாக மாற்றுவதற்கு உழைப்போர் வடிவில், ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இன்று உன்னைக் காண்கிறோம்.

கிறிஸ்துவின் சிலுவையே, பாவம் என்ற கடலின் வெள்ளப்பெருக்கிலிருந்து எம்மைக் காக்கும் நோவாவின் பெட்டகமே, எங்களை, தீயோனிடமிருந்தும், தீமைகள் அனைத்திலுமிருந்தும் காத்தருளும்.

கிறிஸ்துவின் சிலுவையே, இரவின் இருளைவிட, உதிக்கும் ஞாயிறு சக்தி வாய்ந்ததெனச் சொல்லித் தா!

காலியான கல்லறை முன்பு, உயிர்ப்பு நிச்சயம் என்ற உண்மைக்கு முன்பு, இறைவனின் அன்பிற்கு முன்பு, வெற்றி பெறுவதுபோல் தோன்றும் தீமை நிற்கமுடியாது என்பதை எங்களுக்குச் சொல்லித் தா!

ஆமென்.



22 March, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 14

Pope Emeritus Benedict XVI enters the Holy Door at St Peter’s with a walking stick
Pope Francis greets an elderly lady during his general audience - OSS_ROM

மார்ச் 20, இஞ்ஞாயிறன்று, வசந்த காலம் துவங்கிவிட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. பருவக்காலங்கள், ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்வதில்லை என்று நாம் அறிவோம். இருப்பினும், நமக்கு நாமே வகுத்துக்கொண்ட காலச் சுழற்சியை வைத்து, இந்த நாளை வசந்தத்தின் முதல் நாள் என்று அழைக்கிறோம். பூமி நடுக்கோட்டிற்கு (பூமத்திய ரேகை) வடக்கே உள்ள பாதிக்கோளத்தில், மார்ச் 20ம் தேதி, இரவும், பகலும் சம அளவில் இருக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில், இந்நாளை, 'equinox' அதாவது, 'சமஇரவு' நாள் என்று குறிப்பிடுகிறோம். இந்த 'சமஇரவு' நாள் முதல், பகல் பொழுதின் அளவு அதிகரித்தும், இரவுப் பொழுதின் அளவு குறைந்தும் வரும். கூடுதலானப் பகல் பொழுதைத் துவக்கிவைக்கும் இந்நாளை, வசந்தத்தின் முதல்நாள் என்று கூறுகிறோம்.
வசந்தகாலத்தில் தாவர உலகம் அடையும் மாற்றங்கள், அழகானவை, அற்புதமானவை. குளிர்காலத்தில் தங்கள் இலைகளையும், மலர்களையும் இழந்த செடிகளும், மரங்களும், மீண்டும் புத்தாடை அணிந்து, வண்ணமயமாக மாறுகின்றன. வண்ணங்கள் நிறைந்த வசந்தத்தின் வருகையை அறிவிக்கும் ஓர் அழகியத் திருநாள், இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசி, வீதியெங்கும் வண்ணங்களைத் தெளிக்கும் 'ஹோலி' பண்டிகை, இவ்வாண்டு, மார்ச் 22,23,24 ஆகிய தேதிகளில்  கொண்டாடப்படுகிறது. தாவரங்களைப்போல, மனிதரின் வாழ்வும், வளமும், வண்ணமும், நிறைந்ததாய் மாறவேண்டும் என்ற செபம் நம் உள்ளங்களை நிறைக்கட்டும்.

வசந்த காலத்தின் முதல் நாளான இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு, புனித வாரத்தைத் துவக்கி வைத்தது. அன்று, வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தியத் திருப்பலியில், போலந்து நாட்டு இளையோர், ஓர் அழகிய முயற்சியை மேற்கொண்டனர். போலந்து நாட்டில் இவ்வாண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையக் கருத்தாக, "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்ற நற்செய்தி வாக்கியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இரக்கத்தை வலியுறுத்தும் ஓர் அடையாளச் செயலாக, போலந்து இளையோர், ஒலிவக்கிளைகளை வத்திக்கான் வளாகத்திற்குக் கொணர்ந்திருந்தனர். இந்த கிளைகள் சேகரிக்கப்பட்ட இடங்கள், பொருளும், புனிதமும் நிறைந்த இடங்கள். இயேசு, புனித பூமியில் தன் பாடுகளைத் துவக்கிய ஒலிவமலை, அமைதியின் தூதரென உலகெங்கும் கொண்டாடப்படும் புனித பிரான்சிஸ் பிறந்த ஊரான அசிசி, ஆகிய இடங்களிலிருந்து, போலந்து இளையோர் சேகரித்துக் கொணர்ந்த ஒலிவக்கிளைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சித்து, அவற்றை மீண்டும் இளையோரிடம் கொடுத்தார்.
ஒலிவக்கிளை, சமாதானம், ஒப்புரவு, மன்னிப்பு என்ற பல கருத்துக்களுக்கு அடையாளமாக விளங்குகின்றது. உலகில் இன்று, சமாதானம், ஒப்புரவு, மன்னிப்பு ஆகியவை அதிக அளவில் தேவை என்பதன் அடையாளமாக, இந்த ஒலிவக் கிளைகளை, போலந்து இளையோர், தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று, இளையோர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் அரசு அதிகாரிகள், மற்றும் தலத்திருஅவை அதிகாரிகள் அனைவருக்கும், இறை இரக்கத்தின் ஞாயிறன்று வழங்கவிருக்கின்றனர். பொருள்நிறைந்த இந்த முயற்சி, முற்றிலும் இளையோரிடமிருந்து உருவான ஒரு முயற்சி என்பதை அறியும்போது, மனம் குளிர்கிறது.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நாம் கொண்டாடும் உயிர்ப்புப் பெருவிழாவும், வசந்த விழாவும், இரக்கத்திலும், நம்பிக்கையிலும் இவ்வுலகை நிறைக்கவேண்டுமென்று மன்றாடுவோம். குறிப்பாக, இவ்வுலகின் வசந்தமாக வலம்வரும் இளையோர், இரக்கம், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய பண்புகளில் வளரவேண்டும் என்றும் வேண்டுவோம்.

வசந்தகாலம் வந்துவிட்டதென்பதை, உரோம் நகருக்கு வருகை தரும் பயணிகளின் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. அதிலும் சிறப்பாக, இது இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக இருப்பதால், உரோம் நகரின் பசிலிக்கா பேராலயங்களையும், அவற்றில் உள்ள புனிதக் கதவுகளையும் நாடி வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை கூடிவருவதை உணரமுடிகிறது. உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாலும், உரோம் நகரில் அமைந்துள்ள புனிதக் கதவுகள் தங்கள் ஈர்ப்புச் சக்தியை இழந்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

புனிதக் கதவு வழி செல்வோர் பெறக்கூடிய பரிபூரணப் பலனைக் குறித்து, சென்ற விவிலியத் தேடலில் நம் சிந்தனைகளைத் துவக்கினோம். இதுவரை நிகழ்ந்துள்ள யூபிலி ஆண்டுகளில், பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு, 5 வழிகள் கூறப்பட்டுள்ளன. புனிதக் கதவு வழியே நுழைவது, ஒப்புரவு அருளடையாளம் பெறுவது, திருப்பலியில் பங்கேற்பது, விசுவாசப் பிரமாணம் சொல்வது, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்பது என்ற 5 கடமைகளை நிறைவேற்றுவோர், பரிபூரணப் பலனைப் பெறுவர் என்பது, இதுவரை நிலவிவந்த மரபு.
உரோம் நகரின் பசிலிக்காப் பேராலயங்களில் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள பல ஆலயங்களிலும், பிறரன்பு இல்லங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று கூறியதன் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவுகள் குறித்து ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தைத் தந்துள்ளார் என்று சிந்தித்தோம். அதேபோல், பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு இதுவரை நிலவிவந்த வழிமுறைகளிலும், திருத்தந்தை, மாற்றங்களைக் கொணர்ந்துள்ளார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், பரிபூரணப் பலனைப் பெறுவது எவ்விதம் என்பதை விளக்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர் சால்வாத்தோரே ­ஃபிசிக்கெல்லா (Salvatore Fisichella) அவர்களுக்கு அனுப்பிய ஒரு மடலில், திருஅவையின் யூபிலி வரலாற்றில் இதுவரை நிலவிவந்த 5 கடமைகளையும் மீண்டும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இம்மடலில் திருத்தந்தை அவர்கள் கூறியுள்ள சில கருத்துக்கள், அவரது மென்மையான குணத்தை வெளிப்படுத்தும் சொற்களாகவும், இதுவரை சொல்லப்படாத எண்ணங்களாகவும், விளங்குகின்றன: "பல்வேறு காரணங்களால், புனிதக் கதவு வழியே நுழைய முடியாதவர்களைப்பற்றி நான் எண்ணிப் பார்க்கிறேன். குறிப்பாக, நோயாலும், முதிர்ந்த வயதாலும், தனிமையாலும் தங்கள் இல்லங்களுக்குள்ளேயே அடைபட்டிருப்போரை எண்ணிப் பார்க்கிறேன்" என்று இப்பகுதியின் ஆரம்பத்தில் திருத்தந்தை கூறியுள்ளார்.

தங்கள் நோயாலும், துன்பங்களாலும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளில் இணையும் இவர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே பரிபூரணப் பலனை அடைவர் என்று திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வாழும் இடங்களில் நிகழும் திருப்பலிகளில் கலந்துகொள்வது, அல்லது, திருநற்கருணையை மட்டும் பெறுவது, அல்லது, இவ்வில்லங்களில் நிகழும் செப வழிபாடுகள் பங்கேற்பது, அல்லது, இன்றைய தொடர்பு சாதனங்களின் உதவியோடு இந்த ஆன்மீக நிகழ்வுகளைக் காண்பது என பல்வேறு வழிகளைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவற்றில் ஏதாவது ஒரு வழியில், அவர்கள் பரிபூரணப் பலனைப் பெறுவர் என்று இம்மடல் வழியே தெளிவுபடுத்தியுள்ளார். வயது முதிர்ந்தோரையும், நோயுற்றோரையும், இறைவன், தானே தேடிச்சென்று, பரிபூரணப் பலனை அளிப்பார் என்பதை, திருத்தந்தையின் சொற்கள் சொல்லாமல் சொல்கின்றன. இச்சொற்களை வாசிக்கும்போது, வயது முதிர்ந்தோரையும், நோயுற்றோரையும், இயேசு தேடிச் சென்ற பல நிகழ்வுகள் நம் நினைவுகளில் அலைமோதுகின்றன.

இயேசு பிறந்த இடத்தை, புனிதக் கதவு உள்ள ஓர் ஆலயம் என்று நாம் ஒப்புமைப்படுத்தினால், அந்தப் புனிதக் கதவை நாடி, இடையரும், கீழ்த்திசை அறிஞரும் சென்று, இயேசுவைக் கண்டனர், பரிபூரணப் பலனைப் பெற்றனர் என்று கற்பனை செய்து  பார்க்கலாம். இவை, திருஅவையின் யூபிலி வரலாற்றில் இதுவரை நிகழ்ந்துவந்த பாரம்பரியத்தைக் குறிக்கும் நிகழ்வுகள்.
ஆனால், இரு முதியவர்களைத் தேடி, குழந்தை இயேசு அவர்கள் இருந்த இடத்திற்கே சென்றார் என்பதை, நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். குழந்தை இயேசுவை, அவரது பெற்றோர், எருசலேம் கோவிலுக்கு தூக்கிச் சென்ற நிகழ்வில், (லூக்கா 2: 22-38) வயது முதிர்ந்த சிமியோன், அன்னா, இருவரையும் சந்திக்க, அவர்கள் இருந்த இடத்திற்கே இயேசு சென்றார் என்பதைக் காண்கிறோம்.

மீட்பரைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் வாழ்ந்துவந்த முதியவர் சிமியோன் (லூக்கா 2: 29-30), இயேசு  பிறந்த இடத்தை, அதாவது, புனிதக் கதவைத் தேடிச் செல்லமுடியாத நிலையில் இருந்தார். அதேபோல், இளவயதிலேயே கைம்பெண்ணாகி, அதன்பின், பல ஆண்டுகள், எருசலேம் கோவிலையே தன் வாழ்வாக மாற்றிவிட்ட 84 வயது நிறைந்த அன்னா (லூக்கா 2:36-38) அவர்களும், இயேசுவைத் தேடிச்செல்ல வாய்ப்பின்றி வாழ்ந்துவந்தார். இவ்விரு முதியோரையும், குழந்தை இயேசு தேடிச் சென்றார், பரிபூரணப் பலனை அளித்தார்.
அதேவண்ணம், நோயுற்ற பலர் இயேசுவைத் தேடிச் சென்று நலமடைந்ததை நற்செய்தியில் காணும் நாம், நோயுற்ற பலரை இயேசு தேடிச் சென்றார் என்பதையும் காண்கிறோம். காய்ச்சலால் முடங்கிக் கிடந்த பேதுருவின் மாமியார் (மாற்கு 1: 29-31), குணமளிக்கும் பெத்சதா குளத்தருகே, 38 ஆண்டுகளாக நோயுற்றுக் கிடந்தவர் (யோவான் 5: 1-8), நயீன் கைம்பெண்ணின் இறந்த மகன் (லூக்கா 7: 11-15) ஆகியோரை, இயேசு தேடிச் சென்று நலம் வழங்கினார்.

தங்கள் முதுமையாலும், நோயாலும் புனிதக் கதவையும், ஆலயத்தையும் நாடிச் செல்ல முடியாத முதியோர், நோயுற்றோர் ஆகியோரைத் தேடி, இறைவனின் இரக்கம் அவர்கள் வாழும் இடங்களுக்கே இந்த யூபிலி ஆண்டில் செல்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
நோயுற்றோர், முதியோர், தனிமையில் இருப்போர், தாங்கள் இருக்கும் இடத்திலேயே எவ்விதம் பரிபூரணப் பலனைப் பெறமுடியும் என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அடுத்ததாக, இம்மடலில், சிறையிலிருப்போரை எண்ணிப் பார்க்கிறார். தங்கள் சுதந்திரத்தை இழந்து தவிக்கும் இவர்கள், பரிபூரணப் பலனைப் பெறுவது குறித்து திருத்தந்தை கூறியுள்ள எண்ணங்களை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


20 March, 2016

Tornado of Mercy… இரக்கச் சூறாவளி...

Theme of World Youth Day, Krakow
Palm Sunday

This Sunday brings to mind three ideas – Palm Sunday, the Holy Week and the World Youth Day. Let us begin with Palm Sunday. “Palm Sunday Tornado 1920” – We could not have asked for a better starting point for our reflections today. Tornados, we are told, are a common feature in the US especially in the months of March, April going up to June or even July. Here is an excerpt from Wikipedia, on the special tornado that occurred in 1920:
The Palm Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left over 380 dead, and at least 1,215 injured. Many communities and farmers alike were caught off-guard.

Tornados must have occurred on Palm Sunday on different occasions. There is also a mention of a tornado in 1965 on April 11, which was a Palm Sunday. Palm Sunday and Tornado – a combination that can give us food for thought. I want to reflect on the tornado that swept through Jerusalem on the first Palm Sunday. Most of the people in Jerusalem, especially those in power, were caught off-guard by this ‘tornado’ called Jesus.

Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Temple – and began to put things in order. Put things in order? Well, depends on which perspective one takes. For those in power, things were thrown completely out of order; but for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is possibly a call to begin again with fresh energy!

With the Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine God – a God who was willing to suffer. He had already defined love as “Greater love has no one than this, that someone lay down his life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for friends, then God’s love can go further… to lay down His life for all, including the ones who were crucifying Him. Such a God would normally be unthinkable, unless otherwise one is willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and made it very clear that in spite of all the events that took place during that week, one could call it Holy since those events resulted in the Supreme Sacrifice.
Death by crucifixion was the most painful torture the Romans had invented. Death on the cross was the most despicable form of punishment reserved for the worst criminals. Jesus on the Cross has made this most vicious symbol of punishment and death into a symbol of veneration. The crucified Jesus has turned the lives of millions upside down. Here is one example…

William J. Bausch in his book Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections talks of a Bishop who was a great evangelizer.  Here is the rest of the story: He tried to reach out to unbelievers, scoffers, and cynics.  He liked to tell the story of a young man who would stand outside the cathedral and shout derogatory slogans at the people entering to worship.  He would call them fools and other insulting names.  The people tried to ignore him but it was difficult. One day the parish priest went outside to confront the young man, much to the distress of the parishioners.  The young man ranted and raved against everything the priest told him.  Finally, he addressed the young scoffer by saying, “Look, let’s get this over with once and for all.  I’m going to dare you to do something and I bet you can’t do it.”  And of course the young man shot back, “I can do anything you propose, you white-robed wimp!” “Fine,” said the priest.  “All I ask you to do is to come into the sanctuary with me.  I want you to stare at the figure of Christ, and I want you to scream at the very top of your lungs, as loudly as you can. ‘Christ died on the cross for me and I don’t care one bit.’” So the young man went into the sanctuary, and looking at the figure, screamed as loud as he could, “Christ died on the cross for me and I don’t care one bit.”  The priest said, “Very good.  Now, do it again.”  And again the young man screamed, with a little hesitancy, “Christ died on the cross for me and I don’t care one bit.”  “You’re almost done now,” said the priest.  “One more time.” The young man raised his fist, kept looking at the statue, but the words wouldn’t come.  He just could not look at the face of Christ and say it anymore. The real punch line came when, after he told the story, the bishop said, “I was that young man.  That young man, that defiant young man was me.  I thought I didn’t need God but found out that I did.”
The Crucified Christ may work remarkable changes in us during this Holy Week. Are we ready?

Palm Sunday is also celebrated as the World Youth Day. Pope St John Paul II established this day in 1985, the International Year of the Youth. Prior to this, in the year 1983, Pope John Paul II had declared the Holy Year of Redemption. For this special year, a huge cross was erected in St Peter’s Basilica for the veneration of thousands of pilgrims pouring into Vatican for the Holy Year. At the end of this Holy Year of Redemption, Pope John Paul II invited the youth to come to Rome for the Feast of the Palm Sunday. The Vatican officials were expecting that around 60,000 youth would respond to the invitation of the Holy Father. But, on April 15, 1984, for the Feast of the Palm Sunday, a tornado entered Rome. Yes… More than 300,000 young men and women poured into St Peter’s Square. Looking out to the crowds who answered his invitation, Pope St John Paul II said, “What a fantastic spectacle is presented on this stage by your gathering here today! Who claimed that today’s youth has lost their sense of values? Is it really true that they cannot be counted on?”
It was obvious that the youth broke the prejudice which stamps youth as disinterested in spiritual affairs.
Pope St John Paul II also made a special gesture to the youth at the end of the Palm Sunday celebrations. The Holy Father entrusted to the youth, the Cross that was kept in St Peter’s Basilica for the Holy Year of Redemption. This Cross is now known as the World Youth Day Cross, to be carried throughout the world as a symbol of the love of Christ for humanity.
Here again, we can see that another prejudice about the youth is broken, namely, that the youth are not willing to bear the cross and that they go after fleeting pleasures of life. Ever since 1985, for the past 30 plus years, this special Cross has been carried by the youth for all the World Youth Day celebrations. In July this year, this cross will be the centre of the World Youth Day celebrations to be held in Krakow, Poland.

The theme chosen for this World Youth Day is from the Beatitudes: “Blessed are the merciful, for they shall obtain mercy.” (Matthew 5:7) We pray that the World Youth Day celebrated in this Jubilee of Mercy, generate among the youth, a ‘tornado of mercy’, which will uproot all the deep-rooted hatred in the world and in its place, plant peace and forgiveness.

World Youth Day Cross
குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு, புனித வாரம், இளையோர் உலக நாள் என்ற மூன்று கருத்துக்களைச் சுற்றி நம் சிந்தனைகள் இன்று வலம் வருகின்றன. குருத்தோலை ஞாயிறு என்றதும், ஒரு வரலாற்றுப் பதிவு என் நினைவுக்கு வருகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920. அவ்வாண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜியார்ஜியா, ஒஹாயோ, இந்தியானா மாநிலங்களில், குருத்தோலை ஞாயிறன்று வீசிய 38 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. குருத்தோலை ஞாயிறு, சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமில் பல விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம். இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, யாருடைய தூண்டுதலுமின்றி, மக்கள், தாங்களாகவே கூடிவந்து அவரை வரவேற்றனர். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் மக்கள் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச் சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

இரண்டாவது, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை புனிதவாரம் என்றழைக்கிறோம்.
அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே! ஒரு நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள், ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னார். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை, நாம், தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

கல்வாரி என்றதும், நம் சிந்தனைகளில் செதுக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, இன்று, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப்போட்டுள்ளது; மீட்பைக் கொணர்ந்துள்ளது. புனிதத்திற்குப் புது இலக்கணம் வகுத்துள்ளது.

சிலுவையில் அறையுண்ட இயேசு, ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசி வந்தார், இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் மாநகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.
ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்" என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவையும், இளையோரையும் இணைத்துச் சிந்திக்கும்போது, இன்றைய மூன்றாவது கருத்து மனதில் எழுகிறது. அதுதான், உலக இளையோர் நாள். ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. இளையோரைக் குறித்து உலகம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்கள், இளையோர் உலக நாள் முதல்முறை வத்திக்கானில் கொண்டாடப்பட்டபோதே உடைத்து எறியப்பட்டன.
1984ம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, இளையோரை உரோம் நகருக்கு வரும்படி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று வருகைதரும் இளையோரின் எண்ணிக்கை, 60,000 இருக்கும் என்று திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அன்று, ஒரு சூறாவளி, உரோம் நகரில் நுழைந்து, தலைவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஆம், அன்று, உரோம் நகரில் 60,000 அல்ல, 300,000 இளையோர் கூடி வந்திருந்தனர். அங்கு, கூடியிருந்த இளையோரைக் கண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய அற்புதமான வார்த்தைகள், "உலக இளையோர் நாள்" என்ற எண்ணத்திற்கு வித்திட்டன:
"ஆயிரமாயிரம் இளையோர், இவ்வளவு ஆர்வமாகக் கூடிவந்து, அர்த்தமுள்ள முறையில் இந்நாளைச் சிறப்பித்தது, உண்மையிலேயே வியப்பிற்குரியது. ஆன்மீக உணர்வுகளையும், உயர்ந்த கொள்கைகளையும் இளையோர் இழந்துவிட்டனர் என்று, இப்போது, யாரால் சொல்லமுடியும்? அவர்களை நம்புவது வீண் என்று, இனி யாராலும் சொல்லமுடியுமா?" என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோருக்கு நற்சான்றிதழ் வழங்கியதை, இளையோர் ஆரவாரமாக வரவேற்றனர்.
அன்று கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குப் பின், திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்கள், ஓர் அற்புத அடையாளச் செயலைச் செய்தார். 1983ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மீட்பின் புனித ஆண்டுக்கென புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை, இளையோர் கரங்களில் திருத்தந்தை ஒப்படைத்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை. துன்பங்களைக் கண்டால், பயந்து, விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச் செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து சென்றுள்ள சிலுவை, இவ்வாண்டு, போலந்து நாட்டின் கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக மீண்டும் அமையும்.
இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக, வரும் ஜூலைமாதம், போலந்து நாட்டில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளின் மையக் கருத்து: இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு 5:7) இளையோர் உள்ளங்களில் உருவாகும் இரக்கம், ஒரு சூறாவளியாய் இவ்வுலகில் நுழைந்து, இங்கு வளர்ந்துள்ள வெறுப்பு மரங்களை வேரோடு சாய்த்து, நட்பு மரங்களை நட்டு வைக்கவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுவோம்.