31 March, 2022

Forgetting the former things… கடந்ததை மறந்து எதிர்காலம் நோக்கி...

 
The Story of the Woman Caught in Adultery

5th Sunday of Lent

We are approaching the peak of the Lenten journey. Next Sunday will be the Palm Sunday, followed by the Holy Week, culminating in the Feast of the Resurrection. To help us journey through these summit experiences, today’s Gospel gives us the famous episode of Jesus meeting the woman caught in adultery.
Last Sunday – Laetare Sunday – we heard the famous parable of the Lost Son, which depicted one of the peak experiences any human being can attain, namely, the joy of forgiving and being forgiven. Jesus, in a way, ‘scandalized’ us by telling us how the ‘prodigal Father in heaven’ will deal with us. This Sunday we read an episode where Jesus practised what he had preached.

We should thank the Scribes, Pharisees and the Teachers of the Law who were contemporaries of Jesus. They brought the best out of Jesus. Last Sunday, we saw them murmuring against Jesus, saying, that he was associating himself with sinners. Though it was a murmur, they made sure that Jesus heard it. The response of Jesus came in the form of the great parables: the Lost Sheep, the Lost Coin and the Lost Son. This Sunday, we see them again challenging Jesus by bringing a woman caught in adultery. This time Jesus preferred not to preach through words but through action. One can easily see that Jesus meeting the woman caught in adultery as a ‘parable-of-mercy-in-action’. If we take up a ‘contemplative reading’ of this episode from John, (John 8: 1-11) we shall be more enlightened by quite a few deep lessons for our life. 

The opening lines of this passage give us something to reflect on. Jesus went to the Mount of Olives. At dawn he appeared again in the temple where all the people gathered around him, and he sat down to teach them. (John 8: 1-2)
How do we begin our day? Early mornings are usually spent in quiet, personal works… going to the Church, taking a walk, practising yoga or simply reading the newspaper with a cup of coffee… Usually we do not begin the day with something that would upset us, right? Jesus did what was most pleasing to him. After having spent the night in prayer, he came to the temple at dawn to share his ‘Abba experience’ with the people.

This peaceful setup was disrupted by the Pharisees and the teachers of the law. We can easily imagine the contrast between how Jesus was spending his night and how these Pharisees were spending their night. As Jesus was spending his night in prayer, those religious leaders were spending their night in… plotting against Jesus. Jesus must have felt pity for them as well as felt angry at them for using a woman as a pawn, in their plot.

Using another human person for one’s own profit is, probably, the most grievous of all sins. The ‘use-and-throw-culture’ we have brought on ourselves, unfortunately, not stopped with things alone. With ecological sensitivity gaining momentum in our era, we now speak of how we have “raped” nature. We begin to speak with respect about how to use things and how to treat animals etc. Unfortunately, we are becoming less sensitive towards how we ‘use’ another human being. On many occasions Pope Francis has talked about ‘the throw-away-culture’, ‘the globalisation of indifference’ and ‘the exploitation of nature’.

The present aggression that Vladimir Putin has launched against Ukraine, is one more example to show how our present world gives more importance to ‘things’ over ‘human lives’. Many countries around the world, after the Ukrainian aggression, have planned to increase their annual budget for armaments. Our leaders are more interested in spending money on weapons rather than in spending money on the people, thinking that only weapons can safeguard their power.

Let us come back to the Gospel passage… The Pharisees who were more concerned about maintaining their power over the people, were not concerned about the people themselves. For them, Jesus had become the principal or the ONLY ‘thorn’ that had to be weeded out! They tried to use anything and anyone to trap Jesus. When they brought the woman before Jesus, they claimed that they had caught her in the very act of committing adultery.

I remember a play on the life of Jesus that I saw many years back. The playwright (Cyril Desbruslais, a Jesuit) had portrayed Jesus more as a revolutionary leader. This scene of the religious leaders bringing the woman to Jesus was enacted in that play with a slight twist. When the Pharisees made the claim of catching the lady red-handed, Jesus asked them: “You claim to have caught this woman red handed. That means that the man was with her at that time. Where is the man?” The Pharisees and others were silenced by this question.

We do not have such a question recorded in the Gospel of John. But, I am sure such a thought would have surely crossed the mind of Jesus. Especially, when the teachers of the law were trying to remind Jesus about the law of Moses, Jesus would have surely thought about the twist they were giving to this law.
The law of Moses clearly states: If a man commits adultery with another man's wife—with the wife of his neighbor—both the adulterer and the adulteress must be put to death. (Lev. 20:10) Both must be put to death, not the woman alone. It was very obvious that the leaders who had come with the woman were concerned with only one objective – to trap Jesus. Nothing else. Anything (even the sacred law of Moses) can be bent, anyone can be bent, broken, used, abused… just to trap Jesus. Their pathetic paranoid silenced Jesus. So, he began to scribble something on the ground – a strange occurrence! But, they were bent on getting a statement from him. Then he said: "If any one of you is without sin, let him be the first to throw a stone at her." (John 8:7)
They did not expect this. They had come for a serious argument on the law and a possible condemnation of the woman. They did not expect this booby trap. They had no other option but leave. Apart from this statement, Jesus kept writing on the ground. One interpretation says that Jesus was writing out the sins of those present there. This may be a far-fetched explanation. No such thing was required. The Pharisees and the teachers of the law knew Jesus too well to challenge him further and they simply disappeared, starting from the elders.

Here comes the most beautiful moment in this parable-of-mercy-in-action. Jesus was left alone with the woman standing before him. Jesus looked up and said to her, “Woman, where are they? Has no one condemned you?” She said, “No one, Lord.” And Jesus said, “Neither do I condemn you; go, and do not sin again.” (John 8:9b-11)
St. Augustine, writing a commentary on this episode, captures this moment with a graphic remark: “Relicti sunt duo: misera et Misericordia” - “There are but two left: misery and mercy”.

Another highlight of this moment is the way Jesus speaks to the woman. He calls her ‘Woman’. Jesus is making this lady feel special by giving her the due respect which she may have lost. In any event of forgiveness, the one who forgives seems to have a higher position than the one who is forgiven. Some people make it a point to sit on ‘thrones of mercy’ and ‘dole out’ forgiveness, making the other person cringe before them in shame. None of this pomp took place here. Jesus simply made the woman feel special and restored her self-worth. The woman who was literally dragged on dirt when the crowd entered the temple, now left the temple, walking with her head held high, as a dignified lady.

This brings us back to the parable of the Lost Son. When the son returned to the father’s house, he would have been more than happy to have been ‘treated as one of the hired servants’ (Lk. 15:19). But, the father had other plans. He restored him to his full dignity with ‘the best robe, a ring on his hand, and shoes on his feet’ (Lk. 15:22). This is the definition of ‘unconditional love’!

It is said that the early Church could not handle this passage of Jesus forgiving the woman caught in adultery, and hence, it was removed from John’s Gospel for a few centuries. Why? It showed Jesus as a person too lenient with sin. Thank God, such a stance was corrected soon. Jesus did not condone sin; he was concerned about sinners. This passage is a beautiful example of mercy triumphing over justice.

Jesus became incarnate to prove only one truth – God was unconditional and infinite in loving. Such unconditional love does not become a license to sin. When understood properly, such a love is a great challenge and not a license. It is much easier to live with a ‘just God’ who punishes us for our mistakes. We would be careful not to get punished. But, such a life would be devoid of true freedom. When we are confronted by ‘an all loving, caring God’, our life is dictated by love and not fear. Imagine the prodigal son! After his royal return to the father’s house, would he offend his father again? He could; but would not.

In today’s Gospel the parting words of Jesus to the woman were: “Go, and do not sin again.” (John 8:11). This is a clear invitation of Jesus to leave the dead past and walk into a fresh new future. As we approach the Holy Week, we become more and more aware of God’s infinite and unconditional love. Let the words of the first reading (Isaiah 43:16-21) and the second reading (Philippians 3:8-14) continuously ring in our ears: “Forget the former things; do not dwell on the past. See, I am doing a new thing!” (Is. 43:18-19)
Forgetting what is behind and straining toward what is ahead, I press on toward the goal to win the prize for which God has called me heavenward in Christ Jesus. (Phil. 3:13-14)

தவக்காலம் 5ம் ஞாயிறு

தவக்காலத்தின் சிகரத்தை நெருங்கிவந்துள்ளோம். அடுத்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அதைத் தொடர்வது, புனித வாரம். அதற்கு அடுத்த ஞாயிறு, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இந்தச் சிகர நிகழ்வுகளுக்கு ஓர் அழகிய அறிமுகமாக, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.
சென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடினோம். உண்மையான மகிழ்வு, மன்னிப்பிலும், ஏற்றுக்கொள்வதிலும் அடங்கியுள்ளது என்பதைக் கூற, 'காணாமல் போன மகன்' உவமை நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டது. திரும்பி வந்த மகனை, எந்தக் கேள்வியுமின்றி, நிபந்தனையுமின்றி, தடையுமின்றி ஏற்று, அரவணைத்தத் தந்தையை, இயேசு, அவ்வுவமையில் அறிமுகம் செய்துவைத்தார்.

நிபந்தனையற்ற அன்பாக, விண்ணகத் தந்தை விளங்குகிறார் என்பதை, உவமை வழியே விளக்கிக் கூறிய இயேசு, அத்தகையதோர் அன்பை தன் வாழ்வில் பலமுறை வெளிப்படுத்தினார். அந்நிகழ்வுகளில் ஒன்றை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் (யோவான் 8:1-11). தண்டனைத் தீர்ப்பு வழங்குவதற்காக தன்னிடம் இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தீர்ப்புக்குப் பதில், மன்னிப்பு வழங்கி அனுப்பிவைத்த இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். இந்நிகழ்வை, ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களை, குறிப்பாக, உறவுகள் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். ஏன்? இயேசுவை எப்படியும் மடக்கி, அடக்கிவிடலாம் என்ற கற்பனையில், அவர்கள், இயேசுவுக்கு விடுத்த சவால்கள் அனைத்தும், அவரிடமிருந்து அற்புதமான சொற்களையும், செயல்களையும் வெளிக் கொணர்ந்தன. 
சென்ற ஞாயிறு நாம் சிந்தித்த காணாமற்போன மகன் உவமை, இப்படிப்பட்ட ஒரு சவாலுக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட உவமை. பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே (லூக்கா 15:2) என்று முணுமுணுத்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் பதில்சொல்ல, காணமற்போன ஆடு, காணமற்போன காசு, காணமற்போன மகன் என்ற அழகான மூன்று உவமைகளை இயேசு கூறினார்.
இந்த ஞாயிறு கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தியிலும், இயேசுவுக்குச் சவால்விடும் வண்ணம், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் செயல்பட்டனர். இம்முறை, இயேசு எதையும் போதிக்காமல், தன் செயல் வடிவில், ஓர் அற்புதமான பாடத்தைச் சொல்லித்தந்தார்.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் நம் அன்றாட வாழ்வு எவ்விதம் ஆரம்பமாகவேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறது. நம்மில் பலர், பொழுது விடிந்ததும், கோவிலுக்குப் போவது, யோகாசனம் செய்வது, உடற்பயிற்சிக்காக நடப்பது, ஒரு கப் காப்பியை வைத்துக்கொண்டு செய்தித்தாளைப் படிப்பது என, அமைதியான செயல்களிலேயே காலைப்பொழுதைச் செலவழிப்போம். அவ்வேளையில், நிம்மதியைக் குலைக்கும், எரிச்சலூட்டும் செயல்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை.

இன்றைய நற்செய்திப் பகுதியில், அமைதியாக தன் நாளை இயேசு துவக்குவதையும், அந்த அமைதியைக் குலைக்க மதத் தலைவர்கள் திரண்டு வருவதையும் நற்செய்தியாளர் யோவான் சித்திரித்துள்ளார். "இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்." (யோவான் 8:1-2) இரவெல்லாம் ஒலிவ மலையில் கழித்த இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது, அந்த கும்பல். பொழுது விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.

உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இழுத்து வந்தனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.

மற்றொரு மனிதரை, சுயநலனுக்காகப் பயன்படுத்துவதைவிட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும்... பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும், குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும், அதன் விளைவாக, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதும், அண்மைக் காலங்களில், பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

பொருட்களையும், இயற்கையையும் பயன்படுத்துவதிலேயே இவ்வளவு கவனம் தேவை என்று சொல்லும்போது, மனிதர்களைப் பயன்படுத்துவதில் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது?... ‘மனிதரைப் பயன்படுத்துதல் என்ற சொற்றொடரே, தவறான கருத்து. மனிதர்களோடு பழகுவது, வாழ்வது என்பன, சரியான சொற்கள். ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில், பொருட்களும், விலங்குகளும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். செல்லப் விலங்குகளுடன் எவ்வாறு வாழ்வது என்பதைச் சொல்லித்தரும் பாடங்களும், பயிற்சிகளும் மலிந்துவிட்டன. இவ்வளவு முன்னேறியுள்ள நாம், மற்ற மனிதர்களை, பொருட்களைவிட, விலங்குகளைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இந்தப்பாவம் அன்று இயேசுவுக்கு முன் அரங்கேறியது.

கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருசிலத் தலைவர்களைக் காப்பதற்கு, பொதுமக்களின் வரிப்பணம் கோடி கோடியாக செலவழிக்கப்பட்ட அதே வேளையில், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட வறியோர் கோடிக் கணக்கில் உயிரிழந்ததையும் நாம் அறிவோம். ஒரு சில தலைவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்  என்றும், பல்லாயிரம் வறியோர், குப்பையென தூக்கியெறியப்பட வேண்டியவர்கள் என்றும் இந்த பெருந்தொற்று நமக்கு உணர்த்திவருகிறது.

இந்தத் தலைவர்களில் ஒருவனான இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமீர் புடின், தன் அதிகாரத்தை நிலைநாட்ட அண்மை நாடான உக்ரைன் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏவிவிட்டிருப்பது, அப்பாவி, எளிய மனிதர்களை, குறிப்பாக, குழந்தைகளை எவ்வளவு தூரம் நாம் பொருள்களாகப் பயன்படுத்துகிறோம் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.

உக்ரைன் நாட்டின்மீது நடைபெறும் படையெடுப்பிற்கு பல்வேறு நாடுகள் அளித்திருக்கும் பதில், நம்மை மீண்டும் வேதனையடையச் செய்கிறது. இந்த அத்துமீறிய வன்முறையைத் தடுப்பதற்குப் பதில், பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில், இன்னும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இராணுவத் தளவாடங்களுக்குச் செலவிடும் தொகையை மக்களின் மேம்பாட்டிற்கு செலவழித்தால், உலகில் பாதுகாப்பு வளரும். போர்ச் சூழல் குறையும். ஆனால், இன்றையத் தலைவர்கள் தங்கள் அதிகார வெறியை வளர்த்துக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது வேதனையைத் தருகிறது.

இன்றைய நற்செய்தி நிகழ்வுக்குத் திரும்புவோம். விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதுமட்டுமே அவர்களின் எண்ணம். அந்த எண்ணத்திற்கு துணையாக, அந்தப் பெண்ணையும், சட்டங்களையும் அவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தினர்.

நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே?" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவார்கள்.

இயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் குறிப்பாக, அந்தப் பெண்ணை கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை, பரிசேயர்கள், இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது (காண்க. லேவியர் 20:10). அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்துவந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்துவிட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்களோ அவரை விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.”  (யோவான் 8:7)
ஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக, பெண்களை, போகப்பொருளாக, அடிமைகளாக, பகடைக்காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போகவேண்டியதாயிற்று.

இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்னும் பின்னும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசு அங்கு என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சிலர் கொடுக்கும் விளக்கம் இது. அந்தப் பெண்ணை நோக்கி கல்லெறிய நினைத்த ஒவ்வொருவரின் பாவங்களையும் அவர் மண்ணில் எழுதினார் என்பது அந்த விளக்கம். இந்த விளக்கமே தேவையில்லை. இயேசுவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், அந்த பரிசேயர்கள். எனவே அவரது நேர்மையான, தீர்மானமான அந்தக் கூற்றுக்குப் பதில்சொல்ல அவர்களால் இயலவில்லை. அந்த இடத்தைவிட்டு தப்பித்துச் சென்றனர்.

இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். (யோவான் 8:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தக் காட்சியைப்பற்றி கூறும் புனித அகுஸ்தீன், "இறுதியில் அங்கு இரண்டு மட்டுமே இருந்தன. இரக்கப்படவேண்டிய ஒன்றும், இரக்கமும்" என்று கூறியுள்ளார். இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில், "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" (யோவான் 8:10) என்று இயேசு கேட்கிறார். இச்சொற்களில், கனிவும், மரியாதையும் வெளிப்படுகின்றன.

அப்பெண்ணை இயேசுவிடம் கொணர்ந்த மதத் தலைவர்கள், 'இப்பெண், அவள், இவள்...' என்று மரியாதைக் குறைவான மொழியைப் பயன்படுத்தினர். ஆனால், இயேசு இறுதியாக, அப்பெண்ணிடம் பேசும்போது, "அம்மா" என்று அவரை அழைக்கிறார். மரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.

பொதுவாக, ஒருவர் மற்றொருவருக்கு மன்னிப்பு வழங்கும் வேளையில், மன்னிப்பளிப்பவர் உயர்ந்த நிலையிலும், மன்னிப்பு பெறுபவர், தாழ்வான நிலையிலும் இருப்பதைப்போல் உணர வாய்ப்புண்டு. ஒரு சிலர் மன்னிப்பு வழங்கும்போது, தங்களை அரியணையில் அமர்த்திக்கொண்டு, மன்னிப்பு பெறுபவரை கால்மணை போல நடத்துவதும், அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பு தான் போடும் பிச்சை என்று உணரவைப்பதும், நாம் அவ்வப்போது காணும் காட்சிகள்.

இன்றைய நற்செய்தி நிகழ்வில், இயேசு அப்பெண்ணை 'அம்மா' என்றழைத்தபோது, அச்சொல்லில் கனிவு மட்டும் வெளிப்படவில்லை, அதைவிடக் கூடுதலாக, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அப்பெண்ணை மீண்டும் ஒரு பெண்மணியாக உயர்த்தி, அவர், அக்கோவிலிலிருந்து தலை நிமிர்ந்து வெளியேச் செல்லுமாறு இயேசு உதவிசெய்தார்.

சென்ற வாரம் நாம் சிந்தித்த 'காணாமல்போன மகன்' உவமையில், தந்தையின் இல்லத்தில் ஒரு பணியாளனாக இருந்தால் போதும் என்ற தாழ்வான மனநிலையில் திரும்பி வந்த மகனுக்கு, 'முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி...' (லூக்கா 15:22) என்று மரியாதைகள் பல வழங்கப்பட்டன. மகனுக்கு உரிய மதிப்பு வழங்கிய அந்தத் தந்தையைப் பற்றி பெருமையுடன் பேசிய இயேசு, இன்று, அந்த தந்தையாக தானே மாறி, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அனைத்தையும் மீண்டும் தந்தார்.
இரக்கத்தின் இலக்கணத்தை வரையறுக்கும் இந்நிகழ்வு, திருஅவையின் ஆரம்ப காலத்தில், பல சங்கடங்களை விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இப்பகுதி, யோவான் நற்செய்தியிலிருந்து, சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருஅவையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சங்கடம் தான் என்ன?
'விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட' (யோவான் 8:4) ஒரு பெண்ணை, இயேசு மன்னித்து அனுப்பும் இந்நிகழ்வு, மக்களை, பாவம் செய்வதற்கு அனுமதி வழங்கும் ஒரு கதையாக மாறிவிடும் என்ற அச்சமே, இப்பகுதியை நற்செய்தியிலிருந்து அகற்றிவிடத் தூண்டியது என்று விவிலிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இயேசு வழங்கிய இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்ற அச்சம் தோன்றலாம்.
இது தேவையற்ற, காரணமற்ற அச்சம். கடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத்தானே இயேசு உலகிற்கு வந்தார். அதைச் சொல்லத்தானே காணமற்போன மகன் உவமையைச் சொன்னார். அதே நிபந்தனையற்ற அன்புக்கு, இந்த மன்னிப்பின் வழியே, செயல் வடிவம் கொடுத்தார் இயேசு. நீதியை விட, இரக்கத்தை விரும்பும் கடவுளைத்தான் விவிலியம், அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.

குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்நேரமும், எந்நிலையிலும், அன்பு ஒன்றையே வாரி, வாரி, வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது, பெரியதொரு சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வதுதான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.

இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு அந்தப் பெண்ணிடம் "நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்" (யோவான் 8:11) என்று கூறும் சொற்களை, நாம் நம் உள்ளத்தில் ஆழப் பதிப்போம். பழைய வாழ்வை விட்டுவிட்டு, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி நடக்க, இயேசு, அந்தப் பெண்ணுக்கும், நமக்கும் வழங்கும் அழைப்பு இது. இதையொத்த எண்ணங்களுடன் நம்மை இன்று வந்தடையும் முதல் (எசாயா 43:16-21) மற்றும் இரண்டாம் (பிலிப்பியர் 3:8-14) வாசகங்களின் சொற்கள் நம் இதயங்களில் இன்றும், இனி வரும் நாள்களிலும் தொடர்ந்து ஒலிக்கட்டும்:
முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன். (எசா. 43:18-19)
ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும். (பிலிப். 3:13-14)

நிபந்தனையேதுமின்றி நம்மீது அன்பு கொண்டுள்ள கடவுளோடு வாழும் அருளைப் பெற, தவக்காலத்தின் சிகர நிகழ்வுகள் நமக்கு உதவி செய்யட்டும்.

24 March, 2022

The Parable of the Prodigal Father ஊதாரித் தந்தையின் உவமை

The return of the Prodigal Son

4th Sunday of Lent

Today, the Fourth Sunday of Lent, is called Laetare Sunday – Rejoicing Sunday. There could be hundreds of reasons why we rejoice in our life. Today’s first reading from Joshua as well as the Gospel of Luke give us two reasons for rejoicing. We rejoice, when we receive something which we have never imagined or dreamt of. We also rejoice, perhaps, more so, when we receive back something we had lost. We have experienced both these types of happiness in our lives. The reading from Joshua (Joshua 5:9a,10-12) talks of the first type of happiness, while Luke’s gospel - the famous parable of the ‘Prodigal Son’ (Luke 15:11-32) - talks of the second type of happiness. Here is the passage from Joshua:
Joshua 5: 9-12
And the LORD said to Joshua, "This day I have rolled away the reproach of Egypt from you."… While the people of Israel were encamped in Gilgal they kept the passover on the fourteenth day of the month at evening in the plains of Jericho. And on the morrow after the passover, on that very day, they ate of the produce of the land, unleavened cakes and parched grain. And the people of Israel … ate of the fruit of the land of Canaan that year.

The Israelites who entered Canaan, belonged to a generation born in slavery in Egypt. Hence, they would have never had the experience of cultivating their own food. Every aspect of their food, namely, what they would eat, how much and when etc. depended on the Egyptians. They were denied these basic decisions about their food. Hence, cooking and sharing their own Passover meal must have been a great experience of regaining their self respect.

A passage like this sadly reminds us of millions of people who are denied their self-respect and are treated like animals due to the conflicts that rage in different parts of the world. Right now, the atrocious war waged by Vladimir Putin – the Russian President – on the people of Ukraine is creating pain in our hearts. We also remember millions of poor people who have been denied their livelihood and self-respect due to the COVID-19 virus. We bring all these helpless victims to the Lord on this Sunday.
For this Fourth Sunday of Lent, we are invited to reflect on one of the most famous parables of Jesus, which speaks of the ‘lost-and-found’ happiness, of a ‘broken-and-mended relationship’ between a father and a son – the parable of the Prodigal (or Lost) Son.

Fr Robert Ombres O.P., talks about two types of dangers attached to ‘famous parables’ and ‘familiar passages’ from the Bible. The Parable of the Prodigal Son is both famous and familiar.
Fr Ombres says, “Because the parable is so well-known, in listening to it we probably knew what was coming next and could even race ahead while it was being read out. So let’s take step back, and then perhaps the parable will speak to us in a fresh way.”
Fr Ombres also warns us about remaining a spectator and not a participant, when we hear familiar Bible passages. “When we read the Bible, with its histories and its stories, do we basically think we are spectators looking out of a window at something that this happening out there to others? Or do we think of reading the Bible as more like looking into a mirror, when we too are very much in the picture?”
If we can treat the parable of the Prodigal Son as a mirror, we can learn a lot of lessons. Can we give it a try today?

Fr William Grimm, a Maryknoll priest from Tokyo, shares Sunday reflections via the Union of Catholic Asian News Website - UCAN. He begins his reflections on the title of this parable. According to him, this is not a story of a prodigal son, but a prodigal father. The parable says: “He divided his living between them (meaning, the elder and the younger sons.)(Luke 15:12). This leaves nothing to the father. The ‘prodigality’ of the father begins right there! Right from the start of the story, then, the one who is ‘extremely generous, perhaps to the point of wastefulness’ – the definition of ‘prodigal’ – is not the son, but the father, says Fr Grimm.
Fr Grimm goes on to show how the father was ‘prodigal’ (recklessly generous) especially in his forgiveness. He explains it in the following words: 
It is time to ask when the forgiving happens in this story. Can it be when the son faces facts? No, it cannot be then, because, no one at home can hear him coming to his senses.
Can it be when he turns and begins his journey home? No, it cannot be then, he is too far off for the father to know.
Can it be when he falls at his father’s feet? No, it is not then, because, the father does not let him finish his confession.
So, when is the son forgiven?
The Gospel tells us that the father saw his son while he was still far off. The reason is clear. The father was standing outside, looking into the distance for his son’s return. In other words, when the son walked out the door, his father went out too. He stood there, waiting for his son to come to his senses and return. The father forgave the son’s sin as soon as it was committed. All that remained was for the son to come home and accept forgiveness….
That’s the point of Jesus’ parable.
The father, of course, is God, God whose love is so prodigal that no matter what foolishness I commit, forgiveness is there from the start. Jesus is saying that all I need to do is come to my senses, turn around and accept the gift God always offers.

In God there is no ‘before-after’ effect of sin. He ALWAYS forgives… Ever loving and forgiving, never tiring! Similar sentiments have been expressed by Pope Francis on quite a few occasions. In the very first Angelus message he gave in St Peter’s Square three days after being elected, Pope Francis said: “Never forget this: The Lord never tires of forgiving, but at times we get tired of asking for forgiveness!”

The Parable of the Prodigal Son (or Father) is a painful reminder to us of the estranged relationships that exist in millions of our families. While reflecting on this famous parable, I was reminded of the short story "The Capital of the World", written by Ernest Hemingway. 
In it, he presented the story of a father and his teenage son who were estranged from one another.  The son’s name was Paco.  He had wronged his father. As a result, in his shame, he had run away from home. In the story, the father searched all over Spain for Paco, but still, he could not find the boy.  Finally, in the city of Madrid, in a last desperate attempt to find his son, the father placed an ad in the daily newspaper.  The ad read: “PACO, MEET ME AT THE HOTEL MONTANA.  NOON TUESDAY.  ALL IS FORGIVEN.  PAPA”
The father in Hemingway's story prayed that the boy would see the ad; and then maybe, just maybe, he would come to the Hotel Montana. On Tuesday, at noon, the father arrived at the hotel. When he did, he could not believe his eyes. An entire squadron of police officers had been called out in an attempt to keep order among eight hundred young boys. It turned out that each one of them was named Paco. And each one of them had come to meet his respective father and find forgiveness in front of the Hotel Montana. Eight hundred boys named Paco had read the ad in the newspaper and had hoped it was for them. Eight hundred Pacos had come to receive the forgiveness they so desperately desired.

Hemingway’s story does not sound unique, since thousands… no, millions… of young men and women go through strained relationships with their parents. Like the younger son in the Parable, many of those who leave home, reach various cities, with dreams of getting some security and future there. Unfortunately, for most of them, cities turn out to be more of a nightmare than a dream, a jungle rather than a home. We are painfully aware of the break in relationship among the different members of the family. Either they step out of the house and get lost in the crowds or, more painfully, they stay at home and decide to get lost from their loved ones.
Let us close our reflections with the words of Fr Grimm: Lent is a time for me to come to my senses and return to my Father. I do not need fancy words. I do not need to buy forgiveness with good deeds or intentions. All I need to say, “Father, I have flunked.” Then we go out to share the Good News that God is waiting for the whole world to come to its senses, waiting to embrace it with the love that is always there for it.

Our closing thoughts take us to Ukraine, where, Vladimir Putin is conducting a senseless massacre of innocent civilians, especially children, in order to establish his power. Being a member of the Russian Orthodox Church, we can presume that Putin must have listened to the ‘Parable of the Lost Son’ in the liturgical celebrations. We pray that like the ‘lost son’ who came to his senses, Putin too may come to his senses and return to God the ‘prodigal Father’, who is waiting to flood his heart with forgiveness!

The return of the Lost Son

தவக்காலம் 4ம் ஞாயிறு

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடுகிறோம். நாம் வாழ்வில் மகிழ்வடைய பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில் இரு காரணங்களை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது, மகிழ்வடைகிறோம். அதேவண்ணம், அல்லது, அதைவிடக் கூடுதலாக, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது, பேருவகை கொள்கிறோம். நாம் அனுபவித்துள்ள இவ்விரு சூழல்களையும் நினைவுறுத்துகின்றன, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும். யோசுவா நூலில் நாம் காணும் வரிகள், விடுதலையும், தன்னிறைவும் அடைந்த எந்த ஒரு சமுதாயமும் பெருமையுடன் சொல்லக்கூடிய வரிகள்:
யோசுவா 5: 9-12
அந்நாள்களில், ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன் என்றார். இஸ்ரயேலர்... எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்... கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

எகிப்தில் அடிமைகளாக பல தலைமுறைகள் துன்புற்ற இஸ்ரயேல் மக்கள், உண்ணும் உணவு, உண்ணும் நேரம், உண்ணும் அளவு ஆகிய அனைத்திற்கும், எகிப்தியர்களிடம், கைகட்டி, வாய் பொத்தி, நின்றவர்கள். இப்போது, அவர்கள், தங்கள் உரிமையாகப் பெற்றுக்கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் தங்கள் விருப்பப்படி உண்டனர் என்பதை இவ்வாசகம் கூறுகிறது.
கானான் நாட்டை அடைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே, எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எனவே, அவர்களில் யாரும் அதுவரை சுதந்திரமாக தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் துளியும் இல்லாதவர்கள். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெற்றதால் உண்டான மகிழ்வை இந்த வாசகம் தெளிவுபடுத்துகிறது.

தங்கள் நிலத்தில் விளைந்ததை உண்ணும் ஒவ்வொருவரும், தங்கள் வயிற்றுப்பசியை மட்டும் தீர்த்துக் கொள்வதில்லை, மாறாக, மன நிறைவையும், மாண்பையும் அடைகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக நம்மை வதைத்துவரும் கோவிட் பெருந்தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்புவதை உணர்கிறோம். ஆனால், இந்த பெருந்தொற்றினால் பல கோடி வறியோர் இழந்த வாழ்வாதாரங்கள், மனித மாண்பு ஆகியவை இன்னும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பதையும் வேதனையுடன் உணர்கிறோம். இஸ்ரயேல் மக்களை தங்கள் அடிமைகளாக நடத்திய எகிப்தியர்களைப் போல, உக்ரைன் நாட்டிலும், இன்னும் மியான்மார், சிரியா போன்ற நாடுகளிலும் மக்களை அடிமைகளாக நடத்தும் அரசியல் தலைவர்களின் ஆணவத்தால், கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் பெற்றிருந்தவற்றை இழந்து தவிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் இந்த ஞாயிறன்று நினைவில் கொணர்வோம்.

இழந்த ஒன்றை மீண்டும் பெறும்போது உண்டாகும் மகிழ்வை நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உவமை விளக்குகிறது. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும், மிக அதிகப் புகழ்பெற்ற உவமை, 'ஊதாரிப் பிள்ளை' என்று வழங்கப்படும் 'காணாமற்போன மகன்' உவமை.

மிகவும் புகழ்பெற்ற உவமைகளுக்கே உரிய ஓர் ஆபத்து, 'காணாமற்போன மகன்' உவமைக்கும் உள்ளது. அதாவது, இந்த உவமை நம் அனைவருக்கும் ஏறத்தாழ மனப்பாடமாகத் தெரிந்த உவமையாக மாறிவிட்டது. எவ்வளவு தூரம் நமக்குத் தெரியும் என்றால், இந்தக் கதையை யாராவது வாசிக்கவோ, சொல்லவோ துவங்கியதும், இக்கதையின் முடிவை நாம் மனதுக்குள் சொல்லி முடித்துவிடுவோம். எனவே, இவ்வுவமை, ஞாயிறு வழிபாட்டில் வாசிக்கப்படும் வேளையில், நாம் பொறுமை இழந்து, தவிப்போம்; அல்லது, தெரிந்த முடிவு என்பதால், வேறு விடயங்களில் நம் மனதை அலைபாய விடுவோம்.
இந்த உவமையோ, அல்லது, வேறு விவிலியப் பகுதிகளோ நம் வழிபாடுகளில் வாசிக்கப்படும் வேளையில் மற்றுமோர் ஆபத்தும் உருவாகிறது. அதாவது, இந்த உவமையில் கூறப்படும் நிகழ்வுகள், வேறு யாருக்கோ, எங்கோ நடந்த நிகழ்வுகளாக எண்ணி, நாம் பார்வையாளர்களாக மாறும் ஆபத்து உருவாகிறது.

இந்த நம் மனநிலையை, ஓர் உருவகமாகக் கூறவேண்டுமெனில், நம் வீட்டின் சன்னலருகே அமர்ந்து, அந்த சன்னல் கண்ணாடி வழியே, வெளியில் நடப்பனவற்றைப் பார்க்கும் பார்வையாளருடைய மனநிலையில் நாம் இந்த உவமையைக் கேட்கும் ஆபத்து உள்ளது. இன்று, இவ்வுவமையை, ஒரு சன்னல் கண்ணாடியாகப் பயன்படுத்தி, மற்றவர்கள் வாழ்வைப் பார்க்க முயல்வதற்குப் பதில், இதை முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தி, நம் வாழ்வைக் காண முயல்வோம்.
'காணாமற்போன மகன்' உவமை என்ற இந்தக் கண்ணாடியின் வழியே, நம்மையேக் காணும்போது, இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள கதாப்பாத்திரங்களாக நாம் வெவ்வேறு நேரங்களில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.

தன்னிலை இழந்து, தந்தையைவிட்டு விலகிச்சென்ற இளைய மகனாக நாம் இருந்த வேளைகள் பல உண்டு. அதேவண்ணம், தன்னை மட்டுமே நல்லவனாக, உயர்ந்தவனாக எண்ணி, தன் உடன்பிறந்த சகோதரனையும் ஏற்க மறுத்த மூத்த மகனாக நாம் வாழ்ந்த நேரங்களும் உண்டு. தவக்காலத்தில், இவ்விரு நிலைகளையும் களைந்து வாழும் வரத்தை, நமக்காகக் காத்திருக்கும் தந்தையிடம் இறைஞ்சுவோம்.

இந்த உவமை என்ற கண்ணாடிவழியே நமக்குக் காட்டப்படும் தந்தையை இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம். 'காணாமற்போன மகன்' உவமை, பொதுவாக, 'ஊதாரி மகன்' உவமை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உவமையை, 'ஊதாரி மகன்' உவமை என்று சொல்வதற்குப் பதில், 'ஊதாரித் தந்தை' உவமை என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது. பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல், வருங்காலத்திற்குச் சேமித்து வைப்பதைப்பற்றி யோசிக்காமல், வீண் செலவு செய்யும் ஒருவரைத்தான் ஊதாரி என்று கூறுகிறோம்.
தனக்கு கிடைத்த சொத்தை, தாறுமாறாய் செலவு செய்த இளையமகன், ஊதாரிதான். அதேபோல், வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், 'தன் சொத்தைப் பகிர்ந்தளித்த' (லூக்கா 15:12) தந்தையும் ஊதாரிதானே! திரும்பி வந்த மகனை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்தலைகால் புரியாமல் அவன் மீது அன்பு காட்டும் தந்தை ஒரு ஊதாரி தானே! மனம் திருந்தி வந்த மகன், மன்னிப்புக் கேட்பதற்கு முயற்சி செய்தபோது, அதற்கு சிறிதும் இடமளிக்காமல், ஒரு விழாவைத் துவக்கிவைத்த தந்தையை, 'ஊதாரி தந்தை' என்று அழைக்காமல், வேறு எவ்விதம் அழைப்பது?

ஜப்பான் நாட்டில் பணியாற்றிவரும் அருள்பணி வில்லியம் கிரிம் (William Grimm) அவர்கள், ஞாயிறு மறையுரைகளை வலைத்தளத்தில் வழங்கி வருபவர். இந்த ஞாயிறுக்கென அவர் வழங்கியுள்ள மறையுரையில், 'ஊதாரித் தந்தை' உவமையை, புதியக் கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறார்.
தந்தையின் ஊதாரித்தனம் அவர் காட்டிய மன்னிப்பில் வெளிப்படுகிறது என்று, அருள்பணி கிரிம் அவர்கள் கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய இளைய மகனை, தந்தை எப்போது மன்னித்தார்? என்ற கேள்வியை, எழுப்பி, அதற்கு, பின்வருமாறு அவர் விடையளிக்கிறார்:
இளையமகன் வேறொரு நாட்டில் பசியால் துடித்தபோது, தந்தை அவரை மன்னித்தாரா? இல்லை. தன் மகனுக்கு என்ன நேரந்ததென்று தெரியாமல் அவர் தவித்தாரே தவிர, அந்நேரத்தில் அவர் மன்னிக்கவில்லை.
பசியால் துடித்த மகன், மறுபடியும் தன் தந்தையின் இல்லத்திற்குச் செல்வேன் என்று தீர்மானித்தபோது, அவருக்கு மன்னிப்பு கிடைத்ததா? இல்லை.
தந்தையிடம் திரும்பிவந்து, தன் குற்றங்களைக் கூறியபோது, மகன் மன்னிக்கப்பட்டாரா? இல்லை. மகன் சொல்லவந்ததை, தந்தை, செவிமடுத்தாகவே தெரியவில்லையே. விருந்துக்கு ஏற்பாடு செய்வதிலேயே அவரது முழு கவனமும் இருந்ததே தவிர, மன்னிப்பு வேண்டி மகன் கூறிய சொற்களைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை.
அவ்வாறெனில், எப்போது மன்னிப்பு வழங்கப்பட்டது?
இளைய மகன் வீட்டைவிட்டு வெளியேறியபோதே, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. அவரோடு சேர்ந்து, தந்தையும் வீட்டைவிட்டு வெளியேறி, வாசலிலேயே காத்துக் கிடந்தாரே! தன் சொத்தை மட்டுமல்லாமல், மன்னிப்பையும் வாரி வழங்கிய ஊதாரித் தந்தையின் உச்சநிலை பாசம் அதுதான்!

காணாமற்போன மகன் உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, நெருடலான பலப் பிரச்சனைகள் நெஞ்சைச் சுடுகின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்று, குடும்ப உறவுகளில் உருவாகும் முறிவுகள். இப்பிரச்சனையை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை நமக்கு உதவியாக இருக்கும். இலக்கியத்தில் நொபெல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அவர்கள் எழுதிய The Capital of the World’ என்ற சிறுகதையில், இடம்பெறும் ஒரு நிகழ்வு இது:

ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும், பாக்கோ (Paco) என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய  பாக்கோவைத்  தேடி அலைந்தார், தந்தை. இறுதியில், அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடினார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்: “Paco, meet me at the Hotel Montana. Noon Tuesday. All is forgiven. Papa” "பாக்கோ, மொன்டானா ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா" என்ற வார்த்தைகள், அவ்விளம்பரத்தில் காணப்பட்டன. செவ்வாய் மதியம் மொன்டானா ஹோட்டலுக்குச் சென்ற அப்பாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை வரவழைக்கப்பட்டது.
பாக்கோ (Paco) என்பது, ஸ்பெயின் நாட்டில் பலரும் பயன்படுத்தும் ஒரு செல்லப்பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே பாக்கோஎன்ற பெயர் கொண்டவர்கள். அதைவிட அதிகமாக மனதை நெருடும் உண்மை, அவர்கள் அனைவருமே பெற்றோருடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து, அங்கு காத்திருந்தனர் என்று, Hemingway அவர்கள் தன் சிறுகதையை முடித்துள்ளார்.

இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது குடும்பங்களில் நிகழும் உறவுப் பிரச்சனைகளால் நகரங்களில் தொலைந்துபோகும் எத்தனையோ இளையோரைக் குறித்து நாம் நன்கு அறிவோம். குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால், வீட்டில் இருந்தவண்ணம், பெற்றோரிடமிருந்து அதிகம் விலகி, அல்லது, வீட்டைவிட்டு வெளியேறி, காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி, வயதான தாத்தா, பாட்டி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம், ஒப்புரவின் காலம். இந்த உறவு முறிவுகளைக் குணமாக்க தகுந்ததொரு காலம்.

'காணாமற்போன மகன்' உவமை வழியே இயேசு நம் மனத்திரையில் தீட்டும் தந்தையைப் புரிந்துகொள்வது, நம் அனைவருக்குமே பெரியதொரு சவால். தான் உழைத்து சேர்த்த சொத்தின் ஒரு பகுதியை முற்றிலும் அழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் மகனிடம் ஒரு கேள்வியும் எழுப்பாமல், அவன் திரும்பி வந்தது போதும் என்று விழா கொண்டாடும் தந்தையின் உருவம் நம் மனதில் பதிந்தால் போதும்; அந்தத் தந்தையின் வடிவத்தில் இறைவனின் பாசத்தை நாம் ஓரளவு புரிந்துகொண்டால் போதும்; என்ற நம்பிக்கையில் இயேசு தன் கதையை முடித்துள்ளார். இதுதான், இந்த உவமையின் அழகை இன்னும் கூட்டியுள்ளது. நிபந்தனை ஏதுமின்றி ஊதாரித்தனமாக அன்பு செய்யும் தந்தையைப் புரிந்துகொள்ளவும், அவரது அணைப்பில் சரணடையவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக!

இறுதியாக, நம் எண்ணங்கள் மீண்டும் உக்ரைன் நாட்டைச் சுற்றி வருகின்றன. அந்நாட்டில் தன் அதிகாரத்தை நிலைநாட்டும் ஆணவ வெறியுடன் அந்நாட்டின் அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் வேட்டையாடி வரும் இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமீர் புடின், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் என்ற உண்மை, நம் வேதனைகளைக் கூட்டுகிறது. 'காணாமல் போன மகன் உவமை'யை, கோவில் வழிபாடுகளில் புடின் கட்டாயம் கேட்டிருக்கவேண்டும். அந்த இளைய மகன் தன் தவறை உணர்ந்து, மீண்டும் தந்தையை நாடி வந்ததுபோல், புடின் தன் தவறை உணர்ந்து மனம் திருந்தி வரவேண்டும் என்று மன்றாடுவோம்.