29 September, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – நீர்க்கோவை நோய் நீங்கியது 2

 
Open Bible with reading glasses
 
விதையாகும் கதைகள் : அவரவர் பார்வையில் விவிலிய விளக்கம்
 
கார் ஓட்டுவதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த இளையமகன், முதல்முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று, வீட்டுக்கு வந்தார். அவருடைய அப்பா, இறைபக்தியுள்ள விவிலியப்போதகர். மகன், அப்பாவிடம் சென்று, வீட்டிலுள்ள காரை தான் ஓட்ட விழைவதாகக் கூறியபோது, அப்பா அவரிடம், "சரி மகனே, நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நீ உன் பாடங்களில் இன்னும் அதிக மதிப்பெண்கள் வாங்கு; தினமும் விவிலியத்தை வாசி; உன் தலைமுடியை வெட்டிவிடு. அதன்பின், கார் ஓட்ட உன்னை அனுமதிக்கிறேன்" என்று கூறினார்.

ஒரு மாதம் சென்று, மகன் திரும்பிவந்தபோது, அப்பா அவரிடம், "மகனே, நீ அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாய்; தினமும் விவிலியம் வாசிக்கிறாய்; மிக்க மகிழ்ச்சி. ஆனால், உன் தலைமுடியை நீ இன்னும் வெட்டவில்லையே" என்று கூறினார்.
உடனே, மகன் அப்பாவிடம், "அப்பா, நான் விவிலியத்தை வாசித்தபோது, ஒன்றை கண்டுபிடித்தேன். விவிலியத்தில், சிம்சோன் நீளமான முடி வைத்திருந்தார். நோவா, மோசே, ஏன்... இயேசுவும் நீளமான முடி வைத்திருந்தனரே!" என்று பெருமையாகக் கூறினார். அப்பா மகனிடம், "நீ சொல்வது சரிதான், மகனே. ஆனால், நீ சொன்ன இவர்கள் அனைவரும், போகும் இடத்திற்கெல்லாம் நடந்தே சென்றனர்!" என்று பதிலளித்தார்.

விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெரும் ஆசீர், அதே நேரம்... மிகப்பெரிய சவாலும் கூட!

Wall poster – Jesus Christ is the guest

லூக்கா நற்செய்தி நீர்க்கோவை நோய் நீங்கியது 2
 
பெரும்பாலான கிறிஸ்தவ இல்லங்களில், விவிலிய வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட படங்கள், சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும். இவற்றில், ஒரு சில படங்கள், விவிலியத்தில் காணப்படாத, ஆனால், அதே நேரம், நம் உள்ளத்தின் விருப்பங்களை வெளிப்படுத்தும் வாக்கியங்களாகவும் இருக்கும். அத்தகைய வாக்கியங்களில், ஒன்று இது: "இயேசு கிறிஸ்து இந்த இல்லத்தின் தலைவர், ஒவ்வொரு உணவு வேளையிலும், கண்களுக்குத் தெரியாமல் பங்கேற்கும் விருந்தினர், இங்கு பேசப்படும் உரையாடல்களுக்கு கவனமாகச் செவிமடுப்பவர்" (“Jesus Christ is the head of this house, the silent listener to every conversation, the unseen guest of every meal”)
இயேசுவை தங்கள் வீட்டின் தலைவனாக, விருந்தினராக அறிக்கையிடும் இச்சொற்களை ஏற்று, உண்மையிலேயே இயேசு அந்த இல்லத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். இயேசு ஒரு விருந்தினராக வருவது, பரபரப்பை உருவாக்கலாம், ஆனால், அதேவேளையில், அவரது வருகை, அந்த இல்லத்தில், மாற்றங்களையும் கொணரும் என்றும், அவர் கொணரவிழையும் பல மாற்றங்கள் சவால்களாக இருக்கும் என்பதையும் உணர்வது நல்லது.

பரிசேயர் தலைவர் ஒருவர், இயேசுவை, தன் இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தபோது, அங்கு நிகழ்ந்த ஒரு புதுமையில், நம் தேடலை, சென்றவாரம் ஆரம்பித்தோம். பரிசேயர்களின் இல்லங்களில் இயேசு உணவருந்தியதை, நற்செய்தியாளர் லூக்கா மும்முறை குறிப்பிட்டுள்ளார். 'சீமோன்' என்றழைக்கப்பட்ட பரிசேயரின் இல்லத்தில் இயேசு விருந்துண்ணச் சென்றார் என்பதை லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் காண்கிறோம். அங்கு, பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக வந்து, இயேசுவின் காலடிகளைக் கழுவியது, பிரச்னையை உருவாக்கியது (லூக்கா 7:36-50). லூக்கா நற்செய்தி, 11ம் பிரிவில், வேறொரு பரிசேயர் இல்லத்திற்கு இயேசு உணவருந்தச் சென்ற நிகழ்வு கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்விலும், இயேசு, உணவருந்துவதற்குமுன், கை கழுவாதது, பிரச்சனையானது (லூக்கா 11:37-41). மூன்றாம் முறையாக, இயேசு பரிசேயர் ஒருவரது வீட்டில் விருந்துண்ணச் சென்றதை நாம் தற்போது சிந்தித்துவருகிறோம். இங்கும், இயேசு பிரச்சனைகளைச் சந்திக்கிறார். ஏனைய இரு நிகழ்வுகள், எந்த நாளில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடப்படவில்லை. 14ம் பிரிவில் இடம்பெறும் விருந்து, ஓய்வுநாளில் நிகழ்ந்ததென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒய்வுநாள் ஒன்றில், இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்... (லூக்கா 14:1) என்ற சொற்கள், இப்புதுமை நிகழ்ந்த சூழலை அறிமுகம் செய்கின்றன. இது சாதாரண விருந்து அல்ல; இயேசுவைச் சோதிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு விருந்து. தொடர்ந்துவரும் அடுத்த வரி, அந்த விருந்தின் உள் நோக்கத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்." (லூக்கா 14:1)

யூத விருந்து முறைகளில் பல சடங்குகள் உண்டு. வீட்டிற்குள் நுழைவதற்குமுன் தங்களையே சுத்தமாக்கும் சடங்கு. உள்ளே சென்றதும் ஒருவர் ஒருவரை வாழ்த்தும் சடங்கு. விருந்துக்கு முன், விருந்து நேரத்தில், விருந்து முடிந்ததும்... என்று, ஒவ்வொரு நேரத்திற்கும் குறிக்கப்பட்டச் சடங்குகள் பல இருந்தன. இந்த விருந்து நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதால், சடங்குகள் கூடுதலாக இருந்திருக்கவேண்டும்.
இயேசு இச்சடங்குகளையெல்லாம் அறிந்திருந்தாரா என்று சரிவரத் தெரியவில்லை. இயேசு பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில், ஓர் எளிய குடும்பத்தில். முறையான கல்வி பெற்றாரா? அதுவும் தெரியாது. படித்தவர்களுடன் பழகினாரா? அதுவும் சந்தேகம்தான். படிக்காதவர்கள், பாமரர்கள், பாவிகள் என்று மேட்டுக்குடியினரால் ஒதுக்கப்பட்டவர்களே, இயேசுவுடன் நெருங்கிப்பழகியவர்கள். அத்துடன், மேட்டுக்குடியினர், குறிப்பாக, பரிசேயர்கள் பின்பற்றிய அர்த்தமற்ற சாத்திர சம்பிரதாயங்கள், இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்ததே. இப்படி சுதந்திரமாக வளர்ந்தவரை, மற்றவர்களை வளர்க்க நினைத்தவரை,  பரிசேயர் தலைவர், ஒரு பரிசோதனை விருந்துக்கு அழைத்து, அவரும், அவரது நண்பர்களும் இயேசுவை, கூர்ந்து கவனித்தனர்.

சூழ்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது இயேசுவுக்குப் புதிய அனுபவம் இல்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இது நடந்தது. சாதாரண, எளிய மக்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்தனர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க, அவரது ஒவ்வொரு செயலையும் கண்டு பிரமிக்க, பின்பற்ற, மக்கள் எப்போதும் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
அந்த எளிய மக்கள் கூர்ந்து கவனித்ததற்கும், இப்போது இந்த பரிசேயர் வீட்டில் இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடு, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு. எளியோர் கவனித்தது, இயேசுவுக்கு இதமாக, மகிழ்வாக இருந்திருக்கும். பரிசேயர் கும்பல் அவரைக் கவனித்தது இயேசுவுக்குச் சங்கடமாக இருந்திருக்கும்.

இத்தகைய ஒரு சூழலில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சிந்திக்கலாம். அம்புகளாய் நம்மைத் துளைக்கும் பார்வைகள் சுற்றிலும் இருந்தால், அந்த இடத்தில் ஓடி ஒளிய இடம் தேடுவோம். முடிந்தவரை அச்சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதிலேயே நம் கவனம் இருக்கும். எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவோம். எவ்வளவு விரைவில் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவில் வெளியேறுவோம்.
இயேசு நம்மைப்போன்றவர் இல்லை. அசைக்கமுடியாதத் துணிவு அவரிடம் இருந்தது. இறைதந்தை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, உண்மை மீது அவருக்கிருந்த பற்று ஆகியவற்றின் வெளிப்பாடாக வந்த துணிவு அது.
எனவேதான், அந்தப் பரிசேயர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், முகமூடிகள் எதையும் அணியாமல், தன் இயல்பு நிலையுடன் இயேசு செயல்பட்டார். தன் மனதில் எழுந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறினார்.

அந்த இறுக்கமானச் சூழலில், "அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்" (லூக்கா 14:2) என்ற சொற்கள் வழியே, நற்செய்தியாளர் லூக்கா, கூடுதல் பிரச்சனையொன்றை அறிமுகப்படுத்துகிறார். இயேசுவின்முன் நோயுற்றவர் ஒருவர் இருந்தார் என்று கூறியிருப்பது, நமக்கு மற்றொரு புதுமையை நினைவுபடுத்துகிறது.

கை சூம்பிய ஒருவருக்கு இயேசு குணமளிக்கும் அப்புதுமை, ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் கூறப்பட்டுள்ளது (மத். 12:9-14; மாற். 3:1-6; லூக். 6:6-11). ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடத்தில் அப்புதுமை நிகழ்ந்ததென்பதை நாம் அறிவோம். கை சூம்பியவர் ஏன் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்தார் என்ற கேள்விக்கு, பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒருசில விரிவுரையாளர்கள், அந்நோயாளியை, மறைநூல் அறிஞரும், பரிசேயரும், தொழுகைக்கூடத்திற்கு அழைத்து வந்திருந்தனர் என்று கூறியுள்ளனர்.
இந்தக் கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது, மாற்கு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள சொற்கள்: சிலர் அதாவது, மறைநூல் அறிஞரும் பரிசேயரும் - இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். என்று, நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும், (மாற்கு 3:2; லூக்கா 6:7) கூறியுள்ளனர். மத்தேயு, இன்னும் ஒருபடி மேலேச்சென்று, அவர்கள் இயேசுவிடம் நேரடியாகக் கேள்வியை எழுப்பினர் என்பதை, சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர் (மத்தேயு 12:10) என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் தற்போது சந்தித்துவரும் புதுமையும், ஓய்வுநாளில், பரிசேயர் தலைவர் வீட்டில் நிகழ்ந்ததால், நீர்க்கோவை நோயுற்ற மனிதர், தானாக அங்கு வந்தார் என்று எண்ணிப்பார்ப்பதைவிட, அவரை, ஒரு சில பரிசேயர்கள் அங்கு அழைத்து வந்திருக்கலாம் என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
அவர் தானாக வந்திருந்தாலும் சரி, பரிசேயர்களால் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் சரி, இயேசு தன் குணமளிக்கும் பணியிலிருந்து பின்வாங்கவில்லை. அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு விவரித்துள்ளார்:
லூக்கா 14:2-4
அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்தில் கைசூம்பிய ஒருவரை நலமாக்கிய புதுமையில், நோயுற்ற அம்மனிதரை தொழுகைக்கூடத்தின் நடுவே நிறுத்தி, உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார் (லூக்கா 6:9). என்றும், அவர்களிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில், அவர் கைசூம்பியவரை குணமாக்கினார் என்றும் லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதுமையிலும், இயேசுவின் கேள்விக்கு மௌனமே பதிலாக இருந்தது. இம்முறை, அவர் நோயுற்ற மனிதருக்கு நலமளித்து, அவரை அனுப்பிவிட்டு, பின்னர் ஏனையோருக்கு தன் அறிவுரைகளை வழங்குவதைக் காண்கிறோம். நோயுற்ற மனிதர் மீது இயேசு கொண்டிருந்த பரிவை அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார் என்ற சொற்கள் உணர்த்துகின்றன.

ஒரு சில மருத்துவமனைகளில், குறிப்பாக, அந்த மருத்துவமனை ஒரு மருத்துவக்கல்லூரியுடன் இணைந்திருக்கும் சூழலில், அந்த மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள், மாணவர்களுக்கு காட்சிப்பொருளாக மாறுவதைக் காணலாம். நோயுற்ற மனிதருக்கு மருத்துவச் சிகிச்சைகள் செய்யும் மருத்துவர், தன்னுடன் மாணவர்களை அழைத்துவந்து, அந்த நோயாளியை அவர்களிடம் காட்டி, தனக்குத் தெரிந்த பாடங்களையெல்லாம் அவர்களிடம் கூறுவார். பொதுவாக, காட்சிப்பொருளாகப் பயன்படுத்தப்படும் நோயாளிகள், வறியோராகவே இருப்பர். தான் காட்சிப்பொருளாக மாறுகிறோம் என்ற உணர்வு, அந்த நோயாளியை எவ்வளவுதூரம் பாதிக்கும் என்பதையெல்லாம் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இந்த வகுப்புக்கள் நடைபெறும்.

நீர்க்கோவை நோயுள்ள மனிதரைக் கண்டதும், இயேசு, அவரை, அந்த விருந்து நிகழ்வில் காட்சிப்பொருளாகப் பயன்படுத்தி, தன் ஓய்வுநாள் கேள்வியைத் தொடுக்காமல், பொதுப்படையாக, "ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?" என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, இயேசு அவரைத் தொட்டு குணமாக்கி, அனுப்பிவைத்தார். ஓய்வுநாளை மீறுதல், நோயுற்றோரை தொடுதல் என்ற இரு செயல்பாடுகளின் வழியே, சட்டங்களைவிட, மனிதர்கள் முக்கியம் என்பதை இயேசு மீண்டும் ஒருமுறை இந்தப் புதுமை வழியே நிலைநாட்டினார்.

25 September, 2020

Making – breaking promises வாக்கு அளிப்பதும், அழிப்பதும்

26th Sunday in Ordinary Time
 
A rich young man was taken to the hospital, critically ill. His condition worsened, and his doctor even told him that he wasn’t sure if he’d recover, but that they would do all they could. The man was obviously scared to death, and said to the doctor, “Please, doctor, I don’t want to die, I have so much to do yet in life. If you can help me get better, I’ll donate $100,000 to the hospital building fund.”
Fortunately, the young man began to improve and recovered, and a few weeks later was released and went home. Several months later, the doctor happened to see the man at a social function, and after seeing that he was doing very well with no sign of his former illness, the doctor reminded him of his promise. “You remember you said if you got well, you’d like to donate $100,000, and we could really use that now.” The young man replied, “Wow, if I said that, I must have been really sick!”
This Sunday’s liturgy gives us the Parable of the Two Sons, which helps us think of promises made but not fulfilled. This parable is found only in the Gospel of Matthew (Mt 21: 28-32). William Barclay, a great theologian and scripture exponent, has given a more appropriate title to this parable, namely, “The Better of Two Bad Sons.”
Jesus presents two sons in this parable as he does in the parable of the Prodigal Son. Here, the first son is asked to go into the vineyard, but he says “No.” He later changes his mind and goes. The second says “Yes, sir,” but does not go. Of these two, the second one grabs our attention more, since we come across such persons in our life more often – namely, people who make promises easily not keep them.
Thinking of people who make promises, but not keep them, naturally brings to mind our politicians. In the present-day world, politicians in many countries, fail to keep their promises. We have seen world leaders who have no hesitation to dish out lies, white lies in the full glare of the media. The COVID-19 pandemic seems to have given unassailable power to many world leaders.
Two recent headlines from the New York Times talk about the disturbing trend of our leaders for more and more power bordering on dictatorship: “Trump Wants You to Think You Can’t Get Rid of Him” was the headline on Sep. 24, 2020. “Vladimir Putin Thinks He Can Get Away With Anything” was the headline on Sep. 22, 2020.

We are aware of how Alexander Lukashenko, the President of Belarus for the past 26 years has handled the elections in August. We are also aware of how the President of China, Xi Jinping has become China's President for lifetime. These are clear signs of dictatorship. Indian Parliament enacting laws on citizenship, education and agriculture – all in the crisis of the pandemic is, once again, a clear sign of dictatorship.

Here is another prayer written to wake up the conscience of the politicians. While we read this prayer, we can also make an attempt to look into ourselves and see where we stand. When Pastor Joe Wright was asked to open the new session of the Kansas Senate (in January 1996), everyone was expecting the usual politically correct generalities. But, what they heard instead, was a stirring prayer, passionately calling our country to repentance and righteousness. Here is the prayer:

“Heavenly Father, we come before you today to ask your forgiveness and seek Your direction and guidance. We know your Word says, ‘Woe on those who call evil good,’ but that’s exactly what we have done. We have lost our spiritual equilibrium and inverted our values.

We confess that:

We ridiculed the absolute truth of your Word and called it pluralism.
We have worshipped other gods and called it multiculturalism.
We have endorsed perversion and called it an alternative lifestyle.
We have exploited the poor and called it the lottery.
We have neglected the needy and called it self-preservation.
We have rewarded laziness and called it welfare.
We have killed our unborn and called it choice.
We have shot abortionists and called it justifiable.
We have neglected to discipline our children and called it building self-esteem.
We have abused power and called it political savvy.
We have coveted our neighbor’s possessions and called it ambition.
We have polluted the air with profanity and pornography and called it freedom of expression.
We have ridiculed the time-honored values of our forefathers and called it enlightenment.

Search us, O God, and know our hearts today; cleanse us from every sin and set us free. Guide and bless these men and women who have been sent here by the people of Kansas, and who have been ordained by you to govern this great state. Grant them the wisdom to rule, and may their decisions direct us to the center of your will. I ask it in the name of your Son, the Living Savior, Jesus Christ, Amen.”

The response was immediate. A number of legislators walked out during the prayer in protest. It is easy to blame the politicians who walked away. What about us? Are we able to use this prayer as an examination of our conscience and see where we stand.

While the second son of the parable stands as a representative of the present-day politicians, he is also our representative. This parable is also an invitation to us to look into our lives and see how often we follow this pattern of breaking promises. How often our good intentions do not translate into actions! The second son had good intentions, but he never made it to the vineyard.

Here is an incident that happened in a poor village parish. A young, dynamic priest is appointed as an assistant parish priest in that village. He is very sad to see that the parish church and its surrounding area are in a very bad shape. After the Sunday Mass, the assistant parish priest talks to the people about some of the plans he has for the parish. “If all of us can work together just for one hour, we can clear the bushes around the church”, he says. The people are quite excited about the idea. Almost every one in the church makes a proposal as to how the church and its surrounding can be revamped. The meeting lasts for more than an hour.

The young priest speaks to the parish priest excitedly about the meeting and all the suggestions that came up. The parish priest, having been there for quite a few years, smiles and says, “Father, next Sunday you make some practical proposals and see what happens!”

The next Sunday, after the Mass, the assistant parish priest tells the people, “Friends, last Sunday I spoke about how we can work together to clear all the bushes around the church. I have brought some instruments. We begin work soon after the Mass. How many are willing to join me?” There is dead silence in the church. Only three young men put up their hands.

All of us are aware of the famous saying that the way to hell is paved with good intentions. An alternative form is "Hell is full of good intentions, but heaven is full of good works". Jesus makes this clear at the end of today’s parable in the following words:

Jesus said to them, “Truly, I say to you, the tax collectors and the harlots go into the kingdom of God before you. For John came to you in the way of righteousness, and you did not believe him, but the tax collectors and the harlots believed him; and even when you saw it, you did not afterward repent and believe him. (Mt 21: 31-32)

An English professor long ago said that "character was the ability to carry out a resolution long after the mood in which it was made has left you." Dale Carnegie said that one of the most tragic characteristics of human nature is that all of us tend to put off living. We are all dreaming of some magical rose garden over the horizon - instead of cultivating the roses that are blooming outside our windows today.

The Parable of the two sons

பொதுக்காலம் 26ம் ஞாயிறு

செல்வம் மிகுந்த இளையவர் ஒருவர், அதிக நோயுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் முடிவுகளை எடுத்துக்கொண்டு, இளையவரின் அறைக்குச் சென்ற தலைமை மருத்துவர்,  அவரிடம், "உண்மையைச் சொல்லவேண்டுமெனில், நீங்கள் குணமடையும் வாய்ப்புக்கள் மிக, மிகக் குறைவாகவே உள்ளன" என்று வெளிப்படையாகக் கூறினார்.

இளையவர், கண்ணீர்பொங்க, மருத்துவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "டாக்டர், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். நான் குணமாகி வீடுதிரும்பியதும், உங்கள் மருத்துவமனையின் கட்டட நிதிக்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன்" என்று கூறினார். அடுத்த ஒரு வாரத்தில், இளையவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இரு வாரங்கள் சென்று, அவர், தன் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார்.

சில மாதங்கள் கடந்தன. ஒரு நாள், அந்த மருத்துவர், இளையவரை ஒரு விருந்தில் சந்தித்தார். அவர், அந்த இளையவரிடம், "நீங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, எங்கள் கட்டட நிதிக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா? இப்போது, எங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்" என்று கூறினார். இளையவர் மருத்துவரிடம், "நான் அப்படியா சொன்னேன்? டாக்டர், உங்களுக்கே தெரியும். நான் மருத்துவமனையில் இருந்தபோது, நோயின் உச்சத்தில் எதையாவது உளறியிருப்பேன்" என்று கூறியபின், அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நாமும், அவ்வாறு செயல்பட்டிருக்கிறோம். முரண்பாடான இந்த மனித நிலையைச் சிந்தித்துப்பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று, என வாழும் இரு மகன்களைப்பற்றிய ஓர் உவமையை, இன்றைய நற்செய்தியில், இயேசு நமக்கு வழங்குகிறார்.

இந்த உவமையில் இயேசு கூறும், இரு மகன்களுமே, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. ஒருவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் நிறைவேற்றுகிறார். மற்றொருவர், உடனே செய்வதாகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல் போகிறார். இவ்விருவரில், இரண்டாவது மகன், கொடுத்த வாக்கை காக்கத்தவறிய அரசியல் தலைவர்களை, நம் நினைவுக்குக் கொணர்கிறார்.

இன்றைய உலகத் தலைவர்களில் பலர், கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனது மட்டுமல்லாமல், இந்தக் கொள்ளைநோய் காலத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, தங்கள் அதிகாரத்தை இன்னும் உறுதிப்படுத்தி வருகின்றனர் என்ற செய்திகள் நமக்கு கவலை தருகின்றன.

அண்மைய நாள்களில், ‘நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான இரு செய்திகளின் தலைப்பு நம் கவலைகளை உறுதிப்படுத்துகின்றன. "அவரை நீக்க இயலாது என்ற எண்ணத்தை, உங்கள் மீது சுமத்த டிரம்ப் விரும்புகிறார்" (Trump Wants You to Think You Can’t Get Rid of Him), என்பது, செப்டம்பர் 24ம் தேதி வெளியான ஒரு செய்தி. "தான் என்ன செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று விளாடிமிர் புடின் நினைக்கிறார்" (Vladimir Putin Thinks He Can Get Away With Anything) என்பது, செப்டம்பர் 22ம் தேதி வெளியான செய்தி.

பெலாருஸ் நாட்டில் கடந்த 26 ஆண்டுகளாக அரசுத்தலைவராக இருந்த அலெக்சாண்டர் லுக்கஷென்கோ (Alexander Lukashenko) அவர்கள், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் தான் மீண்டும் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்துக்கொண்டதும், அந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எழுந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதும், இன்றையத் தலைவர்கள் நடுவே நிலவிவரும் சர்வாதிகாரப் போக்கின் ஓர் அடையாளம்.

கொள்ளைநோயினால் உருவான நெருக்கடியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்திய நடுவண் அரசு, மக்கள்மீது பல்வேறு சட்டங்களைத் திணித்துவருவதும், சர்வாதிகாரப் போக்கின் அடையாளமே. வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தங்கள் அதிகாரத்தை காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கும் அரசியல் தலைவர்களை எண்ணிப்பார்க்க, இந்த உவமையில் வரும் இரண்டாவது மகன் உதவி செய்கிறார்.

சொல்வித்தையில் தேர்ந்த பலர், செயல்கள் என்றதும், காணாமல்போவதை நாம் பார்த்திருக்கிறோம், இல்லையா? வறுமைப்பட்ட ஓர் ஊரில், பங்குக் கோவிலில் நடந்த ஒரு நிகழ்வு, நம் சிந்தனைகளுக்கு உதவியாக உள்ளது.

ஊரே வறுமைப்பட்டிருந்ததால், பங்குக்கோவிலும் பராமரிப்பின்றி கிடந்தது. கோவிலைச்சுற்றி புதரும், குப்பையுமாய் இருந்தது. அந்தப் பங்கிற்கு புதிதாக ஓர் உதவிப்பங்குத்தந்தை வந்துசேர்ந்தார். அவர், இளையவர் என்பதால், மிகுந்த ஆர்வத்துடன் தன் பணிகளைத் துவக்கினார். கோவிலும், சுற்றுப்புறமும் பரிதாபமான நிலையில் இருந்தது, அவர் மனதை உறுத்தியது.

ஒரு ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில், உதவிப்பங்குத்தந்தை, மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரு ஞாயிறு மட்டும் சேர்ந்து வேலைசெய்தால், நமது கோவிலையும், சுற்றுப்பகுதியையும் சுத்தப்படுத்திவிடலாம்" என்று சொன்னார். இதைக்கேட்ட எல்லாரும் ஆரவாரமாய் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து, அந்தப் பங்கில் செய்யவேண்டிய பல பணிகளைப்பற்றி, பலரும் பலவிதமான ஆலோசனைகள் தந்தனர். அனைவரும் சொன்ன ஆலோசனைகளை, உதவிப்பங்குத்தந்தை குறித்துக்கொண்டார். ஆர்வம் அதிகமாகி, அந்தக் கூட்டம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.

உதவிப்பங்குத்தந்தை, மகிழ்ச்சியோடு, பங்குத்தந்தையிடம், கோவிலில் நடந்ததைச் சொன்னார். பங்குத்தந்தை, அந்தப் பங்கில், பல ஆண்டுகள் இருந்து அனுபவப்பட்டவர். அவர் இலேசான புன்னகையோடு, "சாமி, அடுத்த ஞாயிறு, சுத்தம் செய்வதற்கு எத்தனைபேர் வருகிறார்கள் என்று பாருங்கள்" என்று, நம்பிக்கையற்ற குரலில் சொன்னார்.

உதவிப்பங்குத்தந்தை அடுத்த ஞாயிறுத் திருப்பலியில், "நண்பர்களே, நாம் போனவாரம் பேசியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருப்பலி முடிந்ததும், நாம் நமது வேலையை ஆரம்பிப்போம். மண்வெட்டிகள், கடப்பாரைகள் எல்லாம் தயாராக உள்ளன. என்னுடன் வேலைசெய்ய, எத்தனை பேர் வருகிறீர்கள்?" என்று கேட்டார். போன வாரம் கைதட்டி, ஆர்ப்பரித்த கூட்டம், அமைதியாக அமர்ந்திருந்தது. மூன்று பேர் மட்டும் கைதூக்கினார்கள். சென்றவாரம் ஒர் எண்ணமாக, பேச்சாக இருந்தது, இப்போது செயல்வடிவம் பெறும் வேளையில், ஆர்வம், ஆரவாரம் எல்லாம் அடங்கி, ஒடுங்கிப் போனது. சொல்வது யாருக்கும் எளிது. சொல்வதைச் செயலாக்குவது கடினம்.

இந்த உவமையில், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விருப்பமில்லை என்று முதலில் சொன்ன மூத்தவர், இறுதியில் அவர் விருப்பத்தை நிறைவேற்றினார். இவரை, 'செயல் வீரர்' என்று நாம் அழைக்கலாம். "நான் போகிறேன் ஐயா" என்று தேனொழுகச் சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாத மற்றொரு மகனை, 'வாய்ச்சொல் வீரர்' என்று அழைக்கலாம். எவ்வித ஆர்ப்பாட்டமோ, விளம்பரமோ இல்லாமல், செயல்களில் ஈடுபடும் 'செயல் வீரர்'களையும், இதற்கு மாறாக, நிறையப் பேசி, எதையும் செய்யாமல்போகும் 'வாய்ச்சொல் வீரர்'களையும் நாம் வாழ்வில் சந்தித்திருக்கிறோம்.

'வாய்ச்சொல் வீரர்' என்ற அடைமொழியைக் கேட்டதும், நம் மனக்கண்களில் பலர் ஊர்வலமாகச் சென்றிருப்பர். குறிப்பாக, அரசியல் தலைவர்களை, 'வாய்ச்சொல் வீரர்கள்' என்று எளிதில் முத்திரை குத்தியிருப்போம். அது உண்மைதான். ஆனால், பிறரை முத்திரை குத்துவதோடு நம் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை. அடுத்தவரை முத்திரை குத்தும் பொழுதுபோக்கிலிருந்து விடுபட்டு, ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொண்டால், நமக்குள்ளேயே, செயல்வீரரும், வாய்ச்சொல் வீரரும் மோதிக்கொள்வதை உணரலாம்.

நம் ஆன்ம ஆய்வினை, இறைவனிடம் ஒரு வேண்டுதலாக எழுப்புவோம். இந்த வேண்டுதல், அமெரிக்காவில், கான்சாஸ் மாநில மக்களின் பிரதிநிதிகள் அவையைத் துவக்கிவைக்க சொல்லப்பட்ட ஒரு செபம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட போதகர், Joe Wright அவர்கள் சொன்ன செபம், அங்கிருந்தோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாத சிலர், செனட் அவையைவிட்டு வெளியேறினர்.

அரசியல் தலைவர்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்த இந்த செபம், நமக்கும் சவால்கள் விடுக்கின்றது. அரசியல்வாதிகளில் பலர், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற இரட்டை வேடமிட்டு வாழ்கின்றனர் என்று குறைகூறுகிறோம். அத்தகைய இரட்டைவேடம் நம் வாழ்க்கையிலும் இடம்பெற்றுள்ளதா என்ற உண்மையான ஆழ்மனத் தேடலில் ஈடுபட, இந்த செபம் உதவியாக இருக்கும் இதோ, போதகர், Joe Wright அவர்கள் சொன்ன செபம்:

வானகத் தந்தையே, உம்மிடம் மன்னிப்பு வேண்டி, உமது ஒளியையும், வழிகாட்டுதலையும் தேடி இங்கு கூடிவந்துள்ளோம். 'தீயனவற்றை நல்லவை என்று சொல்வோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு' என்று நீர் கூறும் வார்த்தைகளை நாங்கள் அறிவோம். அவ்விதமே நாங்கள் செய்துள்ளோம் என்பதையும் உணர்கிறோம்.

எங்கள் ஆன்மீகச் சமநிலையைத் தொலைத்துவிட்டதால், எங்கள் மதிப்பீடுகளை மாற்றி அமைத்துள்ளோம்.
ஏழைகளை அநியாயமாய் வஞ்சித்துவிட்டு, அதை முன்னேற்றம் என்று சொன்னோம்.
கருவிலுள்ள குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்று சொன்னோம்.
குழந்தைகளைக் கண்டிக்கத் தவறிவிட்டு, அவர்களது சுயமரியாதையை வளர்ப்பதாகக் கூறினோம்.
அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டுவிட்டு, அதை அரசியல் என்றோம்.
அடுத்தவர் உடைமைகள் மேல் பேராசையை வளர்த்துவிட்டு, அதை வாழ்வின் இலட்சியம் என்று கூறினோம்.
ஆபாசங்களால் சமுதாயச் சிந்தனையைக் களங்கப்படுத்திவிட்டு, அதை, பேச்சுரிமை என்று சொன்னோம்.
எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து, எங்களைப் பாவங்களினின்று கழவி, விடுதலை தாரும். ஆமென்.

யூத மதக் குருக்களோடு நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதியாக, இயேசு இந்த உவமையைக் கூறினார். இந்த உவமையைக் கூறியபின், அங்கு நிகழ்ந்த உரையாடலை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்வாறு கூறியுள்ளார்:

மத்தேயு 21: 31-32
“இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று இயேசு கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். “வரிதண்டுவோரும், விலைமகளிரும், உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவரைச் சுற்றியிருந்த பலரது உள்ளங்களில், சாட்டையடிபோல விழுந்திருக்கும். இறையாட்சியில் தங்களுக்கு மட்டுமே முன்னுரிமை உண்டு, வரிதண்டுவோரும், விலைமகளிரும் புற இருளுக்கே உரியவர்கள் என்று நினைத்திருந்த மதத்தலைவர்களின் செவிகளில், இயேசு கூறிய இச்சொற்கள், பழுக்கக் காய்ச்சிய ஈட்டிபோல் பாய்ந்திருக்க வேண்டும்.

யூதர்களுக்கும், யூத மதக்குருக்களுக்கும் இறையரசில் இடமில்லை என்று மட்டும் இயேசு சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, “யாரை நீங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு முன்னதாகவே இறையரசில் இடம் பெறுவர்” என்று இயேசு சொன்னார். இந்தச் சாட்டையடிகளுக்குப் பிறகாகிலும் அவர்கள் விழித்தெழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

நம்மை உயர்வானவர்களாகவும், இறைவனுக்கு நெருங்கியவர்களாகவும், மற்றவரை சமுதாயத்தின் குப்பைகளாகவும் நாம் அவ்வப்போது எண்ணியிருந்தால், தீர்ப்பிட்டிருந்தால், இயேசுவின் இந்த சாட்டையடிகளை நாமும் பணிவோடு ஏற்றுக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

மீண்டும், இயேசு சொன்ன அந்த உவமைக்குத் திரும்புவோம். ‘நான் போகிறேன் ஐயா!’ என்று பணிவோடு, ஆனால் உள்ளத்தில் வேறு எண்ணங்களோடு பேசிய அந்த இளைய மகனை நினைத்துப் பார்க்கும்போது, “உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவோரை நினைக்கத் தூண்டுகிறது. அவர்களால், நம் வாழ்வில் உருவான வேதனைகளை நினைக்கத் தோன்றுகிறது. இந்த வேதனைகள் இன்னும் ஆறாமல் இருந்தால், நம்மை இறைவன் குணமாக்கவேண்டும் என்று மன்றாடுவோம். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசியதால், நாம் மற்றவர்களை ஏமாற்றியிருந்தால், இறைவனிடமும், நம்மால் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்பது, இன்று பொருத்தமாக இருக்கும்.

உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல், நேர்மையாய், உண்மையாய், அன்பாய் நடந்துகொள்ளும் வரத்தை வள்ளலார் அன்று இறைவனிடம் வேண்டினார். அவரது வார்த்தைகளின் துணையோடு, நாமும், நம் இறைவனை வேண்டுவோம்:

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்…. 
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்...”

------------------------------------------------------------------------------------------------------

அன்பு இதயங்களே, இறைவன் தந்த ஓர் அற்புத கொடையான குரல்வளத்தால், கோடான கோடி உள்ளங்களைத் தொட்ட பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள், செப்டம்பர் 25, இவ்வெள்ளியன்று, தன் 75வது வயதில் தன் உலக வாழ்வை நிறைவுசெய்தார். அவர் பாடியுள்ள பல்லாயிரம் பாடல்களில், கிறிஸ்தவப் பாடல்களும் அடங்கும்.

இறைவன் அவருக்கு நிறையமைதியை அருளவேண்டும் என்றும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் வழங்கவேண்டும் என்றும், வத்திக்கான் வானொலி குடும்பத்தின் சார்பில் இறை வேண்டல்செய்து, இயேசுவைப் போற்றி S.P.பாலசுப்ரமணியம் அவர்கள், பாடியுள்ள ஒரு பாடலை, ஒலிபரப்பு செய்கிறோம்.