28 July, 2010

Shepherd = Security… ஆயன் = காவல் தெய்வம்…

The Lord Is My Shepherd
ca. 1863
Eastman Johnson


My search in the internet for information on Psalm 23 took me to a painting done by Eastman Johnson. The title of the painting? The Lord Is My Shepherd. When I saw this painting, I was about to pass it. At first glance, the painting had nothing to say about the Lord and Shepherd. Thank God, something prompted me to look at the painting more closely. Then began a stream of thoughts. The painting was quite bleak. Nothing about the painting gave me an uplifting feeling.
It is said that Johnson painted this soon after the Proclamation of Emancipation. How could one think of this as alluding to emancipation? Alluding to the Lord as Shepherd? Nothing spectacular, nothing worth noting… That is exactly what we have been reflecting on Psalm 23. Nothing dramatic would happen. The world would remain the same. The world of the black person would be the same before and after January 1st, 1863. But, the person sitting in semi-darkness and reading… yes, a black man reading, in itself, was the first sign of change, the first sign of revolution. The more I looked at the painting, the better I realised that the label or the title given to this painting – The Lord Is My Shepherd – was very apt.
Eastman Johnson painted The Lord Is My Shepherd only months after the Emancipation Proclamation of New Year's Day, 1863. The image of a humble black man reading from his Bible was reassuring to white Americans uncertain of what to expect from the freed slaves. But the simple act of reading was itself a political issue. Emancipation meant that blacks must educate themselves in order to be productive, responsible citizens. In the slaveholding South, teaching a black person to read had been a crime; in the North, the issue was not "May they read?" but "They must read."
(Exhibition Label, Smithsonian American Art Museum, 2006) http://americanart.si.edu/collections

Security is a basic human drive like hunger and thirst. The Israelites who were more of a nomadic race and, later, a slave race would have craved for this basic security. Whenever they felt insecure the image of the shepherd must have ‘protected’ them from going insane. Their great ancestors, starting from Abel, Abraham, Isaac, Jacob… Moses… all of them were shepherds. These great men were not only leading their sheep to green pastures and lovely brooks, but also led the people of Israel to greater safety to the Promised Land. Hence, their later leader David, who himself was a shepherd could speak of the Lord as the Shepherd.
Safety and security are deep rooted in every human person. Psychologists tell us that young children have a “morality of security”. “Good” is anything that makes them feel safe; “bad” is anything that makes them feel anxious. God and parents are important in children’s lives because they help children feel secure in an insecure world…. There is a part of us that never entirely outgrows that kind of thinking. (Harold S.Kushner, The Lord Is My Shepherd)
Our craving for security is best expressed in our bed-time exercises. Once the light is switched off, most of us mumble a prayer. We tell God that while we sleep, it is God’s duty to be awake in order to take care of us. How many of us have slept holding on to our parents? When a child outgrows this stage, teddy bears seem to replace parents. Most of us use the night lamp… just to be sure. What does the night lamp do? Its dim light does not disturb our sleep, but, in case we get up in the middle of the night (mostly due to nightmares or some nature calls), this soft light assures us that we are still in our familiar surroundings.

I am reminded of a funny story I read long back. Pundit Bholabhal suffered strange nightmares. Night after night the space under his bed would turn into a veritable forest in his head, thickly infested with ferocious man-eaters and poisonous snakes. Fearing they would attack him at any moment, he had to keep awake and alert, sleepless all through the night. He consulted the best psychiatrists to no avail.
One morning, as he stepped out on his way to work, the neighbours noticed a remarkable change in his appearance. He seemed rested and happy. What could have happened? They were curious to know.
“An old friend visited me last night,” explained Bholabhal, “and cured me of my nightmares.”
“Is he an experienced psychiatrist?” they inquired.
“Oh no. He’s a good carpenter. He sawed the legs off my bed. And that did it! He left no space for the forest. So, I slept peacefully last night!”

(Hedwig Lewis, S.J., At Home With God)
We surely laugh at Bholabhal. But, we can surely learn a lesson or two from him. The Lord coming in various forms like our parents, the teddy bear, the night lamp or the carpenter who can solve our problems… all these assuring images of God are placed in one simple phrase: “The Lord is my Shepherd.” We shall continue our journey with this Shepherd.


Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


1863ம் ஆண்டு, புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் ‘அடிமைகள் விடுதலை’ என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த சில மாதங்களில் Eastman Johnson என்பவர் அந்த கருத்தை மையமாகக் கொண்டு அழகானதொரு ஓவியத்தைத் தீட்டினார்.
வறுமைச் சூழல் அப்பட்டமாகத் தெரியும் ஓர் இருண்ட அறையில், கருப்பினத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், மங்கலான ஒளியில் அமர்ந்து, மடியில் ஒரு விவிலியத்தை வைத்து வாசித்துக் கொண்டிருப்பது போல் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது. அமெரிக்காவின் Smithsonian கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்திற்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு "ஆண்டவர் என் ஆயன்".
மேலோட்டமாகப் பார்த்தால், அந்த ஓவியத்திற்கும், கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லாததைப் போல் தெரியலாம். ஆனால், அந்த ஓவியத்தை உற்று நோக்கினால், பல நுணுக்கமான எண்ணங்கள் வெளிச்சத்திற்கு வரும். (இந்த ஓவியத்தை http://americanart.si.edu/collections என்ற இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.)
கறுப்பினத்தவர் விடுதலை அடைந்ததும், அதுவரைத் தங்களை வதைத்து வந்த வெள்ளையரைப் பழி தீர்க்கும் புரட்சிகள், வன்முறைகள் வெடிக்கக்கூடும் என்று பயந்திருந்தனர் வெள்ளையர்கள். அந்த பயத்தை இந்த ஓவியம் ஓரளவு தீர்த்ததாகத் தெரிகிறது. தன்னைச்சுற்றிலும் அடிமைத்தனத்தை நினைவுறுத்தும் எல்லாம் அப்படியே இருந்த போதும், அமைதியாய் அமர்ந்து விவிலியத்தை வாசிப்பது போல் தீட்டப்பட்டிருந்த அந்தக் கறுப்பின மனிதர், வெள்ளையர் மனதில் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் ஓர் அடையாளமாக இருந்தார் என்று கூறப்பட்டது.
ஆனால், அதே நேரம், அந்த ஓவியத்தை வரைந்த Eastman Johnson மனதில் வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தமட்டில், வெள்ளையருக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால்தான் கறுப்பினத்தவர் புரட்சி செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை; மாறாக, ஒரு கறுப்பின இளைஞன் வாசித்துக் கொண்டிருப்பதே ஒரு புரட்சிதான் என்று அவர் நினைத்தார். கறுப்பினத்தவருக்கு எழுத, படிக்கச் சொல்லித் தருவதே குற்றம் என்று கூறப்பட்டு வந்த அந்த அடக்கு முறையிலிருந்து தன்னைத் தானே அந்த கறுப்பின இளைஞன் விடுவித்துக் கொண்டார் என்பதை மறைமுகமாக இந்த ஓவியத்தின் வழியாகச் சொன்னார் Eastman Johnson. இந்த ஓவியத்தைக் கண்டவர்களில் பலர் இந்த அமைதியான புரட்சியைப் புரிந்து கொண்டனர்.
தன்னைச் சுற்றிலும் எந்த வித மாற்றங்களும் இல்லாத போது, அமர்ந்து விவிலியம் படிக்கும் அந்த இளைஞன் ஒரு புரட்சியை ஆரம்பித்துள்ளான். நம்பிக்கையை வளர்க்கும் அந்தப் புரட்சியை அவன் தனக்குள்ளேயே ஆரம்பித்துள்ளான். இந்த உலக வாழ்வில், திடீரென, கணப்பொழுதில் மாற்றங்கள் வரப்போவதில்லை. இருளும், துன்பமும் நிறைந்த வாழ்வை எதிர்கொள்ள, மனதில் மாற்றங்களை உருவாக்குவதே பிற மாற்றங்கள் உலகில் ஏற்பட முதல் படி.
"ஆண்டவர் என் ஆயன்" என்ற திருப்பாடலின் மையப் பொருளும் இதுதான். இப்படி ஒரு புரட்சியை மறைமுகமாகச் சொல்லும் அந்த ஓவியத்திற்கு "ஆண்டவர் என் ஆயன்" என்ற தலைப்பு தரப்பட்டது மிகவும் பொருத்தம்தானே! வெளியில் எந்தவித மாற்றங்களும் இல்லாத போதும், உள்ளூர ஏற்படும் மாற்றங்களைப் பற்றிச் சொல்வதாலேயே திருப்பாடல் 23 ஓர் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது. அந்தச் சக்தியைப் பிறருக்குத் தந்துள்ளது.

நாம் வாழும் இந்த உலகில், நமது வாழ்வில் மாற்றங்கள் இருக்காது என்று சொல்வது ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது சரியெனப் படலாம். ஆனால், மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, மாற்றங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்ப்பது கடினம். மனித வரலாற்றைப் புரட்டும் போது, எத்தனை மாற்றங்களை நாம் கேள்விப்படுகிறோம். இப்படி மாற்றங்கள் மனித வரலாற்றை ஆக்கிரமித்த போதிலும், மனிதப் பிறவிகள் எல்லாருக்கும், எல்லாக் காலங்களிலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாற்றம் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. மாற்றங்கள் நடுவே, மாறாத அந்த உண்மை என்ன?
நாம் எல்லாருமே நாடோடிகள் என்பது தான் அந்த உண்மை. ஒரு நாள், ஓரிடத்தில் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தோம். ஒரு நாள், ஓரிடத்தில் அந்தப் பயணத்தை முடிப்போம். எனவே, இந்த உலகத்தில் நாம் எல்லாருமே பயணிகள், நாடோடிகள்.
மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எல்லா சமுதாயங்களும், எல்லா இனங்களும், குலங்களும் ஆரம்பத்தில் வாழ்ந்தது நாடோடி வாழ்க்கை மட்டுமே என்பது தெரிய வரும். உணவு கிடைக்கும் இடங்களைத் தேடிச் செல்லும் மிருகங்கள், பறவைகள் போல மனிதர்களும் துவக்கத்தில் உணவைத் தேடி, இடம் விட்டு இடம் பயணம் செய்தவர்கள்தான்.
யூதர்களும் இப்படி நாடோடிகளாய் வாழ்ந்தவர்கள். இந்த நாடோடிகளுக்கு இருந்த பெரும் சொத்து அவர்களிடம் இருந்த ஆடுகள். அந்த ஆடுகளுக்காக அவர்கள் எப்போதும் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்றனர். எந்த ஓர் இடமும் அவர்களுக்கு நிரந்தரம் இல்லாமல் போயிற்று. ஒவ்வொரு முறையும் புது இடம், புதுச் சூழல்... என்று வாழ வேண்டிய அந்த கட்டாயத்தில், தங்களையும், தங்கள் ஆடுகளையும் பாதுகாப்பது அவர்களுக்கு இரவும், பகலும் வாழ்வாயிற்று.
பாதுகாப்பு அதிகம் இல்லாத நாடோடிகளாய், இடையர்களாய் வாழ்ந்து வந்த இஸ்ராயலர்கள் வரலாற்றின் அடுத்தக் கட்டம் அவர்கள் அடிமைகளாய் வாழ்ந்த காலம். அடிமைகளாய் பல நாடுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், வாழ்க்கை இன்னும் அதிகம் பாதுகாப்பற்றதாய் மாறியது. உலகம் முழுவதும் புதை மணலாய்த் தெரிந்தது. வைக்கும் ஒவ்வோர் அடியும் உறுதியானத் தரையில் ஊன்றப்படாமல், ஓடுகின்ற நீரிலோ, புதை மணலிலோ ஊன்றப்பட்டதைப் போலவே உணர்ந்தனர் இஸ்ராயலர்கள்.
இப்படி பல நூறு ஆண்டுகள் அடிமைகளாய் பல தலைமுறையினர் வாழ்ந்த அந்தப் பாதுகாப்பற்ற வாழ்வில், அவர்களுக்கு மனதில் நம்பிக்கையை வளர்த்த ஓர் உருவகம்... ஆயன் என்ற உருவகம். இதற்கு முக்கிய காரணம்... ஆபேல் முதல், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே என்று அவர்களது பெரும் தலைவர்கள் யாவரும் ஆயர்களாய் இருந்ததுதான். தாவீதும் ஓர் ஆயனாய் இருந்து பின் அரசரானவர்.
நல்லதோர் ஆயன் எப்படிப்பட்டவன்? பசி என்று சொல்வதற்கு முன்பே, ஆடுகளைப் பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்பவன், புல்வெளிகள் காய்ந்து விட்டால், தன் கழி, கோல் கொண்டு மரக்கிளைகளை வளைத்து அல்லது உடைத்து உணவு கொடுப்பவன், தாகம் என்பதைச் சொல்லும் முன்பே நீர்நிலைகளுக்கு ஆடுகளைக் கூட்டிச் செல்பவன், ஓநாய்கள் தூரத்தில் வரும்போதே அவைகளிலிருந்து ஆடுகளைக் காப்பவன்...
இப்படி ஆடுகளின் தேவைகளை எல்லாம் குறிப்பறிந்து நிறைவு செய்யும் ஆயனாய் இஸ்ராயலர்கள் வாழ்ந்து பழகியவர்கள். ஆடுகளைக் காத்த ஆயர்களாய் இருந்த அவர்கள் வாழ்வே பாதுகாப்பற்றதாய் மாறிய போது, அவர்களே திசையும், இலக்கும் இன்றி அலையும் ஆடுகளைப் போல் வாழ்வதாய் உணர்ந்த போது, ஆயர்களாய் இருந்த தங்கள் தலைவர்களை நினைத்துப் பார்த்தனர். அந்தத் தலைவர்களை வழிநடத்திய பெரும் ஆயரான கடவுளை எண்ணிப் பார்த்தனர். அவர்கள் தேடிய அந்தப் பாதுகாப்பைத் தரக்கூடியவர் ஆயனாக வரும் ஆண்டவரே என்று நம்பினர்.

பாதுகாப்பாய் வாழ்வது எந்த ஒரு மனித மனமும் ஆழமாய்த் தேடும் ஓர் உணர்வு. இரவில் படுக்கப் போகும்போது, நம்மில் பலர் கண்களை மூடி வேண்டுகிறோம். நாம் கண் அயர்ந்தாலும், கடவுள் கண் விழித்து நம்மைக் காக்க வேண்டும் என்ற வேண்டுதல் தான் இரவில், இருளில் நாம் சொல்லும் அந்தச் செபம்.
இரவு, இருள் என்றாலே பயம் கலந்த பல உணர்வுகள் மனதில் எழத்தானே செய்யும். இரவைப் பற்றிய பயத்தைக் கூறும் ஒரு கதை. மாடசாமி என்பவர் தினமும் இரவில் தூக்கம் வராமல் பயந்து வாழ்ந்தார். அவர் படுத்திருந்த கட்டிலுக்குக் கீழ் ஒவ்வொரு இரவும் ஒரு பெரிய காடு வளர்ந்தது போலக் கனவு கண்டார். அந்தக் காட்டிலிருந்து மிருகங்கள் வந்து அவர் படுக்கையைச் சுற்றி நின்று அவரை விழுங்குவதைப் போல் ஒவ்வோர் இரவும் நினைத்து பயந்தார். இப்படி இரவெல்லாம் தூக்கத்தைத் தொலைத்ததால், அடுத்த நாள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். பல மன நல மருத்துவர்களையெல்லாம் சந்தித்தார். ஒரு பயனும் இல்லை.
ஒரு நாள் காலையில் மாடசாமி படுக்கை அறையை விட்டு வெளியே வரும் போது, மிக உற்சாகமாக இருந்தார். அவர் நண்பர் காரணம் கேட்டபோது, "நேற்றிரவு என் நண்பர் ஒருவர் வந்தார். ஒவ்வொரு இரவும் நான் உறங்காமல் தவித்ததை அவரிடம் சொன்னேன். அவர் என் பயத்தை நீக்கிவிட்டதால் நான் நன்கு உறங்கினேன்." என்றார் மாடசாமி. "உங்கள் நண்பர் பெரிய மன நல மருத்துவரா?" என்று நண்பர் கேட்டார். "இல்லை, இல்லை, அவர் தச்சுவேலைச் செய்பவர்." என்று மாடசாமி கூறியதும், நண்பர் குழம்பிப் போனார். "என் நண்பரிடம் கட்டிலுக்கடியில் வளரும் காடு பற்றி சொன்னேன். அவர் என் கட்டில் கால்களையெல்லாம் அறுத்து விட்டார். காடு வளர இடமில்லாமல் போனது. எனவே, என்னால் அமைதியாகத் தூங்க முடிந்தது." என்று விளக்கினார் மாடசாமி. மாடசாமியின் கதை சிரிப்பைத் தரலாம். ஆனால், அது பாடங்களையும் தருகின்றது. மறுக்க முடியுமா?

இரவுகள், இருள் இவைகளைக் கண்டு பயப்படாதக் குழந்தைகளைப் பார்ப்பது அபூர்வம். அந்தக் குழந்தைகளின் பயம் போக்கும் ஒரு அற்புத வழி அருகில் தாயோ, தந்தையோ இருப்பது. தாயின் மீது, தந்தையின் மீது கைகளை, கால்களைப் போட்டபடி படுத்துறங்கும் எத்தனைக் குழந்தைகள் உண்டு. தனியே படுக்க வேண்டிய வயது வந்ததும், பல குழந்தைகள் கரடி பொம்மை (Teddybear) ஒன்றை வைத்துக் கொண்டு தூங்கப் பழகிக்கொள்கின்றனர்.
இருள் பற்றிய நம் குழந்தைக் கால பயங்கள் வளர்ந்த பிறகும் நம்முடன் தங்குவதைப் பார்க்கலாம். நாம் உறங்கும் எத்தனை அறைகளில் இரவு விளக்குகள் எரிகின்றன. கண்களை உறுத்தாமல் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருக்கும் இந்த விளக்கு என்ன செய்கிறது? தூக்கத்தைக் கெடுக்காமல் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம், இரவில் தப்பித் தவறி நாம் கண் விழித்தால், நாம் படுத்திருக்கும் அறையின் பழக்கமான அடையாளங்களை மீண்டும் நமக்குக் காட்டி, நம்மை அமைதிப்படுத்துகிறது அந்த விளக்கு. அல்லது இரவில் தாகம் தீர்க்கவோ, மற்ற தேவைகளுக்கோ நாம் நடக்க வேண்டியிருந்தால், நமக்குப் பாதை காட்டுகிறது அந்த விளக்கு.இரவோ, இருளோ நீங்குவதில்லை. இரவைப் பற்றிய பயங்களைச் சமாளிக்க நாம் கற்றுக் கொள்கிறோம் பல வழிகளில். இப்படி இரவை, இருளை நீக்காமல், அந்த இருள் பற்றிய நம் பயங்களை நீக்கி, நம்மை நிம்மதியாகத் தூங்க வைக்கும் பெற்றோராய், ஒரு கரடி பொம்மையாய், இரவு விளக்காய், இன்னும் பல வழிகளில் இறைவன் நம் பின்னணியில் இருப்பதைத்தான் "ஆண்டவன் என் ஆயன்." என்ற வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆயனாகிய நம் ஆண்டவரோடு தொடர்வோம் நம் பயணத்தை.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

25 July, 2010

FATHER KNOWS BEST… தந்தைக்குத் தெரியாதா என்ன...

http://www.pbase.com/spdavis/lead_me_lord

Why to pray? When to pray? Where to pray? What to pray for? How to pray? Questions and more questions about prayer always remain with us. The disciples of Jesus too had their questions about prayer. They were waiting for an opportune moment to clarify them with the Master. Such a moment was not hard to find, since Jesus was often engaged in prayer… any time of the day or night, any place. One day Jesus was praying in a certain place. When he finished, one of his disciples said to him, "Lord, teach us to pray, just as John taught his disciples." (Luke 11: 1)
It looks as if Jesus was just waiting for a request like this. He began straightaway. He did not give them a treatise on prayer. He gave them, rather, a lovely prayer, a story and a gentle warning.
(Luke 11: 1-13)
“When you pray, say: 'Father, hallowed be your name…”. These were the opening lines of Jesus’ lesson on prayer. He went on to give them one of the most popular prayers known universally. If the present population of the world is around 7 billion, one can easily guess that at least 3 billion would be able to recite this prayer by heart. I am not only thinking of Christians, but also others who have had the ‘Christian’ influence, say, for instance, those non Christian children who have been educated in Christian schools... Such is the popularity of this prayer. After teaching them this universal prayer, Jesus tells them a parable to illustrate that there is no when-and-where for prayer. Even midnights and closed doors need not deter us from praying… a lovely story! I am sure most of us have heard quite many stories about prayer. I would like to share two stories which are my favourites. I have taken them from http://www.inspirationalstories.com/

Last week I took my children to a restaurant. My six-year-old son asked if he could say grace. As we bowed our heads he said, "God is great and God is Good. Let us thank Him for the food, and I would even thank you more if mom gets us ice cream for dessert. And Liberty and justice for all! Amen!"
Along with the laughter from the other customers nearby, I heard a woman remark, "That's what's wrong with this country. Kids today don't even know how to pray. Asking God for ice-cream! Why, I never!"
Hearing this, my son burst into tears and asked me, "Did I do it wrong? Is God mad at me?" As I held him and assured him that he had done a terrific job and God was certainly not mad at him, an elderly gentleman approached the table. He winked at my son and said, "I happen to know that God thought that was a great prayer." "Really?" my son asked. "Cross my heart."
Then in theatrical whisper he added (indicating the woman whose remark had started this whole thing), "Too bad she never asks God for ice cream. A little ice cream is good for the soul sometimes."
Naturally, I bought my kids ice cream at the end of the meal. My son stared at his for a moment and then did something I will remember the rest of my life. He picked up his sundae and without a word walked over and placed it in front of the woman. With a big smile he told her, "Here, this is for you. Ice cream is good for the soul sometimes and my soul is good already."
(Author Unknown, Rainbow Garden)

What to ask for in prayer can be a tricky question. Can a person ask God for ice cream? Such doubts would be cleared if one looks at the Lord’s Prayer. There is a petition asking for the Kingdom of God and another petition asking for daily bread. Most of the petitions in this prayer are simple and down-to-earth... Give us food. Give us a heart that forgives. Lead us not into temptations. Deliver us from harm... Unless we become like children, it is hard to pray this way.

The First Reading from Genesis (18: 20-32) deals with another question: how to pray. Abraham holds a tête-à-tête with God. It sounds more like a bargain in a market place… 50, 45, 40… down to 10. Since Abraham was sincere and serious in saving people, God was willing to go the distance with him. I look at this whole episode as one prolonged prayer. It looks as if God was also struggling with Abraham in this ‘prayer’.
Any struggle to establish goodness in human family, whether it takes the obvious form of prayer or not, can be considered a prayer since cries of anguish and sincere desires that rise from the soul are heard by God.

Here is another story (abridged) about prayer-intentions. This, once again, is from the same web source: http://www.inspirationalstories.com/

… Then the big night came. With his blue pinewood derby in his hand and pride in his heart, Gilbert and I headed to the big race. Once there, my little one's pride turned to humility. Gilbert's car was obviously the only car made entirely on his own. All the other cars were a father-son partnership, with cool paint jobs and sleek body styles made for speed. A few of the boys giggled as they looked at Gilbert's, lopsided, wobbly, unattractive vehicle…
As the race began it was done in elimination fashion… One by one the cars raced down the finely sanded ramp. Finally it was between Gilbert and the sleekest, fastest looking car there. As the last race was about to begin, my wide eyed, shy eight year old asked if they could stop the race for a minute, because he wanted to pray. The race stopped. Gilbert hit his knees clutching his funny looking block of wood between his hands. With a wrinkled brow he set to converse with his Father. He prayed in earnest for a very long minute and a half. Then he stood, smile on his face and announced, "Okay, I am ready."
As the crowd cheered, a boy named Tommy stood with his father as their car sped down the ramp. Gilbert stood with his Father within his heart and watched his block of wood wobble down the ramp with surprisingly great speed and rushed over the finish line a fraction of a second before Tommy's car. Gilbert leaped into the air with a loud "Thank you" as the crowd roared in approval.
The Scout Master came up to Gilbert with microphone in hand and asked the obvious question, "So you prayed to win, huh, Gilbert?" To which my young son answered, "Oh, no sir. That wouldn't be fair to ask God to help you beat someone else. I just asked Him to make it so I don't cry when I lose."
Children seem to have a wisdom far beyond us. Gilbert didn't ask God to win the race, he didn't ask God to fix the outcome, Gilbert asked God to give him strength in the outcome.
(Author Unknown, Source Unknown)

Gilbert, the eight year old, knew what to expect from his Father in heaven. Probably, many of us do not have this clarity. Hence, Jesus gives us the final words of today’s Gospel:
"So I say to you: Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you. For everyone who asks receives; he who seeks finds; and to him who knocks, the door will be opened. Which of you fathers, if your son asks for a fish, will give him a snake instead? Or if he asks for an egg, will give him a scorpion? If you then, though you are evil, know how to give good gifts to your children, how much more will your Father in heaven give the Holy Spirit to those who ask him!" (Luke 11: 9-13)



Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.



எப்போது செபிப்பது? எப்படி செபிப்பது? எங்கே எதற்காக ஏன் செபிப்பது?... இப்படி செபம் குறித்த பல கேள்விகள் நம்மில் அடிக்கடி எழுகின்றன. சீடர்களுக்கும் இந்த கேள்விகள் எழுந்தன. இயேசுவிடம் கேட்க அவர்களுக்கு ஆவல். நல்ல தருணத்திற்காகக் காத்திருந்தனர். அன்று இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். (லூக்கா நற்செய்தி 11: 1) இன்றைய நற்செய்தி இப்படி ஆரம்பமாகிறது.
இப்படிப்பட்ட ஒரு விண்ணப்பத்திற்குக் காத்துக் கொண்டிருந்தவரைப் போல் இயேசு செபிப்பது பற்றிய அழகான பாடத்தை உடனேச் சொல்லித் தந்தார். செபத்தைப் பற்றிய நீண்ட, அறிவுப்பூர்வமான விளக்கங்களை இயேசு சொல்லவில்லை. அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று, ஓர் எச்சரிக்கை.
"பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே" என்று இயேசு சொல்லித் தந்த அந்த செபம் உலகப் புகழ்பெற்றதொரு செபம். ‘உலகச் செபங்கள்’ (Universal Prayers) என்று தகவல்களைத் தேடினால், இந்தச் செபம் கட்டாயம் முதன்மை இடம் பிடிக்கும். கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த இந்த செபம், கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பயிலும் மற்றவர்கள் மனதிலும் ஆழமாய் பதிந்திருக்கும். உலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவர்களில் கட்டாயம் 300 கோடி மக்களுக்காகிலும் இந்த செபம் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

அழகிய இந்த செபத்தைச் சொல்லித்தந்த இயேசு, அதைத் தொடர்ந்து கதை ஒன்று சொன்னார். அவர் சொன்னக் கதையில், செபிப்பதற்கு நேரம், காலம், வழி முறைகள் இவைகளெல்லாம் கிடையாது என்பதை மறைமுகமாக வலியுறுத்தினார். மூடிய கதவுகள், நள்ளிரவு... எதுவும் செபத்திற்குத் தடையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
செபத்தின் தேவை, வலிமை இவைகளைக் கூறும் அறுபுதமான கதைகள் பல உண்டு. அவைகளில் எனக்கு அதிகம் பிடித்த இரு கதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இரண்டிலும் குழந்தைகள் செபிக்கிறார்கள். நமக்குச் செபிக்கக் கற்றுத் தருகிறார்கள்.

ஒரு தாய் தன் குழந்தைகளுடன் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிடும் முன் அவர்களது ஆறு வயது சிறுவன், தான் செபிக்க விரும்புவதாகச் சொன்னான். பின் கண்களை மூடி, செபத்தை ஆரம்பித்தான். "இறைவா, நீர் நல்லவர், எல்லாம் வல்லவர். நீர் எங்களுக்குத் தரப்போகும் உணவுக்காக நன்றி. உணவுக்குப் பின் அம்மா வாங்கித் தரப்போகும் ஐஸ் க்ரீமுக்கு இன்னும் அதிக நன்றி... ஆமென்." என்று செபித்து முடித்தான். ஐஸ் க்ரீம் கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவன் சொன்ன செபம் கொஞ்சம் சப்தமாய் ஒலித்ததால், அந்த உணவு விடுதியில் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களும் இந்த செபத்தைக் கேட்டனர். ரசித்தனர். அடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு வயதான பெண், "ஹும்... இந்த காலத்துப் பிள்ளைங்களுக்குச் செபம் சொல்லக் கூடத் தெரியவில்லை. கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு ஒரு செபமா?" என்று சலித்துக் கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் குழந்தையின் முகம் வாடியது. "அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா? கடவுள் என் மேல கோபப்படுவாரா?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டான். அம்மா அவனை அணைத்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, கண்ணா." என்று தேற்ற முயன்றார். மற்றொரு மேசையிலிருந்து இன்னொரு வயதானப் பெண்மணி அந்தக் குழந்தையிடம் வந்து, கண்களைச் சிமிட்டி, "நான் கேட்ட செபங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல செபம்." என்றார். பின்னர், தன் குரலைத் தாழ்த்தி, அந்தக் குழந்தையிடம், "பாவம், அந்தப் பாட்டி. அவர் கடவுளிடம் இதுவரை ஐஸ் க்ரீமே கேட்டதில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவது ரொம்ப நல்லது." என்று சொல்லிச் சென்றார்.
சிறுவன் முகம் மலர்ந்தான். தன் உணவை முடித்தான். அவன் வேண்டிக் கொண்டதைப் போலவே, உணவு முடிந்ததும், அம்மா ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார்கள். சிறுவன் அந்த ஐஸ் க்ரீம் கிண்ணத்தை வாங்கியதும், தன் செபத்தைக் குறை கூறிய அந்தப் பாட்டி இருந்த மேசைக்கு எடுத்துச் சென்றான். பெரிய புன்முறுவலுடன், "பாட்டி, இது உங்களுக்கு. இதைச் சாப்பிட்டால், மனசு நல்லா ஆயிடும்." என்று சொல்லி பாட்டிக்கு முன் ஐஸ் க்ரீமை வைத்து விட்டுத் திரும்பி வந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

எதைப் பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம் என்று சொல்லித் தருவதற்குக் குழந்தைகளை விட சிறந்த ஆசிரியர்கள் இருக்க முடியாது. ஐஸ் க்ரீம் வேண்டும் என்ற சில்லறைத் தனமான வேண்டுதல்களையும் கேட்கலாம். உலகில் நீதியும், அமைதியும் நிலவ வேண்டும் என்ற பெரும் வேண்டுதல்களையும் கேட்கலாம்.
இயேசு சொல்லித் தந்த செபத்தைக் கொஞ்சம் ஆராய்ந்தால், இந்த உண்மை தெரியும். கடவுளின் அரசு வர வேண்டும் என்ற பெரியதொரு கனவையும், எங்கள் அனுதின உணவைத் தாரும் என்ற மிகச் சாதாரணமான விண்ணப்பத்தையும் இந்த செபம் கூறுகிறது. எங்களுக்கு உணவைத் தாரும், எங்கள் குற்றங்களை மன்னித்தருளும், மன்னிப்பது எப்படி என்று சொல்லித் தாரும், சோதனைகள், தீமைகள் இவைகளிலிருந்து காத்தருளும் ... இப்படி, இயேசுவின் செபத்தில் கூறப்பட்டுள்ள பல விண்ணப்பங்கள் மிக, மிக எளிமையான, ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் அடிப்படையில் தேவையான விண்ணப்பங்கள். குழந்தை மனம் கொண்டு செபிக்கும் போது, அது இறைமகன் இயேசு சொல்லித்தந்த செபத்தைப் போல் இருக்கும்.

இன்றைய முதல் வாசகம் (தொடக்க நூல் 18: 20-32) செபத்தின் மற்றொரு அம்சத்தை உணர்த்துகிறது. செபம் என்பது கடவுளுடன் கொள்ளும் உரையாடல். சில சமயங்களில் இந்த உரையாடல் உரசலாகி, உஷ்ணமாகி, கடவுளுடன் எழும் வாக்குவாதமாகவும் மாறும். ஒரு நகரத்தைக் காப்பாற்ற ஆபிரகாம் இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி ஒரு செபம். கடவுள் மட்டில் ஆபிரகாமுக்குப் பாசமும் உண்டு, பயமும் உண்டு. எனவே, 50 பேர் இருந்தால் இந்த நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45, 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்குக் கடவுளை இழுத்து வருகிறார் ஆபிரகாம். சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு நகரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆபிரகாமின் ஆதங்கம் இதை ஒரு செபமாக மாற்றுகிறது. நல்லது ஒன்று நடக்க வேண்டுமென ஆபிரகாமுடன் சேர்ந்து கடவுளும் போராடுவது இந்த வாசகத்தில் அழகாக வெளிப்படுகிறது. அன்பர்களே, தொடக்க நூல் 18: 20-32ல் கூறப்பட்டுள்ள இந்த சம்பவத்தை இன்று ஒருமுறை வாசித்துப் பாருங்கள். பயன் பெறுவீர்கள்.

செபத்தையும் குழந்தையையும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ள மற்றொரு கதை இதோ. பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் போட்டி ஒன்று நடைபெற்றது. அவரவர் வீட்டில் செய்த கார் பொம்மைகளில் எந்தக் கார் அதிக வேகமாகச் செல்லக்கூடியது என்பதைத் தீர்மானிக்கும் போட்டி. மற்ற சிறுவர்களின் வீடுகளில் அந்தந்த சிறுவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதால், அவர்கள் கொண்டு வந்திருந்த கார் பொம்மைகள் மிக அழகாக இருந்தன. கில்பர்ட் என்ற சிறுவனின் தந்தைக்கு இது போன்ற விளையாட்டுகளில், கில்பர்ட்டின் மகிழ்வில் அக்கறை இல்லை. எனவே, கில்பர்ட் அவனாகவே தனித்து அந்தக் காரை வடிவமைத்தான்.
போட்டிக்கு வைக்கப்பட்டிருந்த எல்லாக் கார் பொம்மைகளிலும் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது கில்பர்ட்டின் கார் தான். அவன் காரைப் பார்த்த மற்ற குழந்தைகள் கேலி செய்தனர். போட்டி ஆரம்பமாகுமுன், திடீரென கில்பர்ட் முழந்தாள் படியிட்டான். தன் காரைக் கையில் எடுத்துக் கொண்டு, கண்களை மூடி செபித்தான். பின்னர் அந்தக் காரை பந்தயத்தில் வைத்தான். பந்தயத்தில் கில்பர்ட் கார் வென்றது. இதைக் கண்டு எல்லாருக்கும் ஆச்சரியம்.
ஆசிரியர் உடனே, கில்பர்டிடம் வந்தார்... "நீ வெற்றி பெற வேண்டுமென செபித்ததற்கு நல்ல பலன் கிடைத்தது." என்று புகழ்ந்தார். "நான் வெற்றி பெறுவதற்கு வேண்டவில்லை சார்." என்று அவன் சொன்னதும், அனைவரும் இன்னும் ஆச்சரியத்துடன், அமைதியாய் அவனைப் பார்த்தனர். "மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுவது சரியான செபம் அல்ல." என்றான் கில்பர்ட் அழுத்தந்திருத்தமாய். "பின் எதற்காக வேண்டினாய்?" என்று ஆசிரியர் கேட்டதும், கில்பர்ட், "'இந்தப் போட்டியின் முடிவில் நான் தோற்றுவிட்டால், என்னை அழாமல் காப்பாற்றும் இறைவா' என்று தான் வேண்டிக் கொண்டேன்." என்று சொன்னான்.

வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கடவுளை நிர்ப்பந்திக்கும் செபங்களை விட, வெற்றி, தோல்விகளைச் சந்திக்கும் மனப்பக்குவம் வேண்டி செபிப்பது மிகவும் சிறந்தது. கடவுளுக்குத் தெரியாதா நமக்கு எது நல்லது என்று? கில்பர்ட் சொல்லித் தரும் இந்தப் பாடம் அற்புதமான பாடம். "என் தோள்களிலிருந்து சுமைகளை எடுத்துவிடும் என்று நான் இறைவனை வேண்டவில்லை, ஆனால், அந்தச் சுமைகளைத் தாங்கும் வண்ணம் என் தோள்களுக்கு வலிமையைத் தாரும் என்று வேண்டினேன்." இப்படி ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி என் நினைவுக்கு இப்போது வருகிறது.

குழந்தை மனதை வளர்த்துக் கொண்டால், செபம் எளிதாகும். குழந்தைகளைப் போல் நம்மை இயேசு மாறச் சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம். இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் குழந்தை, தந்தை உறவைப் பற்றியும், விண்ணகத் தந்தையைப் பற்றியும் ஒரு தெளிவை எடுத்துச் சொல்லி, வேண்டுவது எப்படி என்ற தன் பாடங்களை நிறைவு செய்கிறார். நாமும் இந்தப் பாடங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

லூக்கா 11: 9-13
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

21 July, 2010

PACKING AN ATOM WITH SEVEN SEAS… அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி...

The Lord is My Shepherd: Religious framed art by Christian artist Simon Dewey.
http://www.lds-art.com/the-lord-is-my-shepherd-by-simon-dewey.html
Drill an atom and pack it up with seven seas! Possible? Impossible? I don’t know. I am not a scientist. What science may think impossible may be, and, has been possible for art. Yes. This idea is found in a couplet written by… hold your breath… our grand old Poet Avvaiyaar. Yes, dear friends, I have tried a literal translation of what this great poet said about the power and beauty of Thirukkural. We know that Thirukkural is a couplet which has seven words. Each ‘Kural’, is an atom that contains seven seas, says Avvaiyaar.
Drilling an atom, inserting seven seas… poetic license, you may say. Such poetic imageries have sustained us in our dreams. I can see the Psalms, especially Psalm 23, having the same power as that of Thirukkural. Yes, the more one reads this Psalm, one can see a sea (seven seas?) of meaning inherent there.
One of the attributes of God that is very close to my heart is: The God of Surprises. This God who surprises us in every turn of our lives, also surprises us through Psalm 23. This Psalm, the most popular of all the psalms, is attributed to King David and is thought to be written towards the end of his life. A masterpiece at the end of David’s life, probably when he was 70 years old! (II Sam. 5: 4)
Old age is a vantage point from which life can be reviewed. I can well imagine David seated on his throne and singing / writing / dictating this psalm with a sense of fulfilment. “This psalm is neither intermingled with prayers, nor does it complain of miseries for the purpose of obtaining relief; but it contains simply a thanksgiving, from which it appears that it was composed when David had obtained peaceable possession of the kingdom, and lived in prosperity, and in the enjoyment of all he could desire.” (Commentary on the Psalms by John Calvin)
I am reminded of the vote of thanks that usually comes at the end of every celebration. David must have seen his whole life as a celebration and therefore he comes out with this vote of thanks. When the vote of thanks begins, it is time to go… David felt that it was time to go and wrote this vote of thanks – a note of thanks to God.

A person craves for God or thinks of God when he / she is getting drowned in pain and misery. Even if a person professes to be an atheist, he / she looks for someone beyond the human sphere to lend a helping hand. But, when a person is sailing ‘happily-ever-after’ in the sea of life, God-thoughts do not usually cross one’s mind, unless one is trained to see the hand of God in every moment of life. David was surely trained this way all his life.
While writing or dictating this psalm, occasionally a feeling of shudder must have passed through David’s veins or a wry smile escaped his lips. Shudder, because of the tortures he went through in his life… Wry smile, again, because of the tortures he went through in his life… Yes, this is the advantage of old age which puts things in perspective. One can shudder and smile at the same event.
All the tortures of his life have been expressed in just two concepts in this psalm – ‘the valley of the shadow of death’ and ‘enemies’, whereas, the rest of the psalm is literally packed with positive imageries: green pastures, quiet waters, your rod and your staff, banquet table, oil of gladness, overflowing cup… Truly an honest vote of thanks and not a lip-service.

Why did David bring in the idea of the Shepherd? Because he himself was one. David seems to be reliving his childhood dreams once again. Isn’t this some type of fixation? David, probably was not willing to outgrow his childhood? Revisiting, reliving childhood memories have been a great source of help for so many people.
A few years back, I visited a lady in the post-operative care unit of a hospital. She suffered a heart-attack and had to undergo a bypass surgery. She began sharing her life story. Her husband came home drunk, almost daily. Her son had fallen into bad company and had discontinued studies. Work pressure was way too much for her to cope… All these added to her problems. She said that she even contemplated suicide. What she said at the end of our conversation struck me very deeply. She said, “Father, I have lost almost everything in my life, except my childhood memories. These memories have made me survive so many tough situations in life.”
She was born in a place known for its tea estates. Hilly area, fresh air, slight drizzle now and then, tea gardens stretching before one’s eyes like a green carpet… When she described her childhood days, I could see that she was getting cured of her heart ailment. Such was the power of revisiting childhood memories.Living with childhood memories is… regression, fixation…? It is so easy to label people who find consolation in childhood memories. But, it is surely a help. David’s childhood memories and his grateful heart have helped him survive so many tough situations in his life and… this Psalm, which is the result of such grateful memories, is a source of great help to so many millions down these centuries.



Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.



"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி, குறுகத்தரித்த குறள்..." அணுவைத் துளைப்பது, கடலைப் புகட்டுவது, அதுவும் ஏழு கடல்களைப் புகட்டுவது... அற்புதமான கற்பனை. இந்த அற்புத கற்பனை வழியாகத் திருக்குறளின் பெருமையை ஔவையார் சொல்லிச் சென்றார்.
திருக்குறளுக்குள்ள இந்தப் பெருமை விவிலியத்தின் பல பகுதிகளுக்கும் உண்டு. திருப்பாடல் 23க்கு இந்தப் பெருமை நிச்சயம் உண்டு. எனவேதான், இந்தத் திருப்பாடலின் ஒவ்வொரு வரியையும் திரும்பத் திரும்ப வாசிக்கும் போது, ஏழு கடல்கள் அளவிற்கு எண்ணங்கள் கொட்டுவதை உணரலாம்.
இந்தத் திருப்பாடலைப் பற்றி விவிலியத் தேடலில் மூன்று வாரங்களுக்கு முன் நான் ஆரம்பித்த போது, நமது தேடல், நமது பகிர்வுகள் நிச்சயம் ஒரு சில வாரங்களாவது தொடரும் என்று சொல்லியிருந்தேன். அப்போது ஏழு அல்லது எட்டு வாரங்கள் ஆகும் என்று நானாக மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன்.
இது நாலாவது வாரம். இந்தத் திருப்பாடலைப் பற்றிய ஆரம்ப சிந்தனைகளே இன்னும் தொடர்கின்றன. இது எனக்கேக் கொஞ்சம் ஆச்சரியம்தான். இந்த 23ம் திருப்பாடலின் விளக்கங்கள் முடிவதற்குள் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கலாம். இறைவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல அடைமொழிகளில் எனக்குப் பிடித்த அடைமொழி The God of Surprises... அதாவது, ஆச்சரியங்களின் பிறப்பிடம் இறைவன் என்ற அடைமொழி. தொடர்வோம் நம் தேடலை, பெறுவோம் ஆச்சரியங்களை.
23ம் திருப்பாடலைத் தாவீது எழுதினார் என்பது பரவலான ஒரு கருத்து. இந்தப் பாடலை அவர் தன் வாழ்வின் இறுதியில் எழுதியிருக்கலாம் என்பதும் மற்றொரு பரவலானக் கருத்து.
வாழ்வின் இறுதியில், முதிர்ந்த வயதில், வாழ்வைப் பற்றியப் பல தெளிவுகள் ஏற்படும். நடந்து வந்த பாதையை மீண்டும் பார்க்கும் போது, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மீண்டும் அசைபோடும் நாம், அந்தப் பாடங்களை அடுத்த சந்ததியினருக்கு வழங்க முயற்சி செய்வோம். "அந்த காலத்துல...", அல்லது, "பிரிட்டிஷ் காரன் காலத்துல..." என்று நீட்டி முழங்கி ஆரம்பமாகும் இந்தக் கதைகளைக் கேட்க ஒருவேளை அடுத்த சந்ததியினருக்கு நேரம் இல்லாமல் போகலாம். ஆனால், அதற்காக, இந்த வாழ்வுப் பாடங்களைப் பெரியவர்கள் பகிராமல் சென்றுவிட்டால், மனித அனுபவங்கள் எனும் கடல் வறண்டு போகும். நல்ல வேளை, தாவீது தன் வாழ்வுப் பாடங்களைத் திருப்பாடல்கள் வழியே தாராளமாக வழங்கிச் சென்றுள்ளார். அதுவும், திருப்பாடல் 23 என்ற ‘அணுவைத் துளைத்து, ஏழு கடலைப் புகட்டிச்’ சென்றுள்ளார்.

23ம் திருப்பாடல் ஒரு செபமா? அப்படித் தெரியவில்லை. ஓ இறைவா... என் இறைவா... என்று பல திருப்பாடல்களில் பாடலாசிரியர் இறைவனை அழைத்துப் பேசியிருப்பது போல் இந்தத் திருப்பாடலில் இறைவனைக் கூப்பிடவில்லை. ஆண்டவர் என் ஆயர் என்ற ஒரு கூற்றுடன் ஆரம்பமாகிறது இந்தப் பாடல். ஆனாலும், நாம் இந்தத் திருப்பாடலை அழகானதொரு செபமாகத்தான் பயன்படுத்துகிறோம்.
இந்தத் திருப்பாடல் புகார்களின் பட்டியலும் அல்ல. வேறு பலத் திருப்பாடல்களில் புகார்களின் பட்டியல்கள் நீளமாக உள்ளன. ஆனால், இந்தத் திருப்பாடலில் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வரிகளே அதிகம். எனவே, இதை ஒரு நன்றி நவிலல் எனக் கருதலாம்.
வழக்கமாக, விழாவொன்று நடந்தால், இறுதி நிகழ்வாக நன்றிகள் சொல்லப்படும். தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த தாவீது, தன் வாழ்வை ஒரு விழாவாகப் பார்த்ததால், இந்த நன்றிப் பாடலைப் பாடினாரோ? அவர் வாழ்வு அப்படி ஒன்றும் விழாக்கோலமாய் இருந்ததைப் போல் தெரியவில்லையே. அவர் வாழ்விலும் எத்தனையோ இழப்புகள், துயரங்கள் இருந்தன. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயனாய் பசும் புல்வெளிகளில், காடு மலைகளில் அவர் வாழ்வு முழுவதையும் அனுபவித்திருந்தால், முழு வாழ்வும் விழக்கோலமாய் இருந்திருக்கலாம்.
அந்த மகிழ்விலிருந்து கடவுள் அவரைப் பறித்து வந்து ஓர் அரண்மனையில் சிறைப்படுத்தி வைத்ததைப் போல் அல்லவா தாவீதின் வாழ்க்கை மாறிவிட்டது!... திரும்பிய இடமெல்லாம் துன்பம் அவரைத் துரத்தித் துரத்தி வந்ததே.
தாவீது தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகள், துயரங்களை மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அவைகளைப் பட்டும் படாமல் "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்குகள், எதிரிகள்.." என்று இரு இடங்களில் மட்டும் குறிப்பிட்டு விட்டு, மீதிப் பாடல் முழுவதையும் பசும்புல் வெளி, அமைதியான நீர்நிலை, புத்துயிர், நீதி வழி, உமது கோல், நெடுங்கழி, விருந்து, நறுமணத்தைலம், நிரம்பி வழியும் பாத்திரம்... என்று நன்றி உணர்வால், மகிழ்வால் நிரப்பியுள்ளார். வாழ்வின் இறுதியில், தெளிவுகள் கிடைக்கும் என்று சொன்னோமே, அதுதான் இது. தாவீதுக்குக் கிடைத்தத் தெளிவு அவரை நன்றி உணர்வால் நிறைத்தது.

துயரக் கடலில் மூழ்கும் போது, யாரும் "கடவுளே" என்று அலறுவது வழக்கம். கடவுள் பக்தி இருந்தாலும், இல்லையெனினும், எப்பக்கமும் துயரங்கள் சூழ்ந்து பயமுறுத்தும் போது, மனித சக்திகளுக்கு மீறிய ஒரு சக்தியை எந்த மனித மனமும் தேடத்தான் செய்யும்.
ஆனால், மகிழ்வுக் கடலில் மிதந்து, மயங்கிக் கிடக்கும் மனதில் கடவுளைப் பற்றிய எண்ணங்கள் எழுவது அவ்வளவு இயல்பாக வராது. அந்த இயல்பு குழந்தைப் பருவம் முதல் வளர்க்கப்பட வேண்டும். எந்த ஒரு சின்ன உதவிக்கும் மற்றவருக்கு நன்றி சொல்லும் பழக்கத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள், கடவுளுக்கும் நன்றி சொல்லப் பழகலாம். தாவீது அப்படி பழக்கப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் இந்தத் திருப்பாடல் ஒரு நன்றிப் பாடலாக மலர்ந்துள்ளது.

நன்றி உணர்வுகளோடு, தாவீது தன் இளமைக் கால வாழ்வைக் குறித்த ஓர் ஏக்கத்தையும் இந்தத் திருப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். ஆயனாய் அவர் அனுபவித்த வாழ்வு அவ்வளவு இனித்ததால், கடவுளையும் ஓர் ஆயனாகக் கற்பனை செய்து பாடுகிறார். குழந்தைப் பருவத்தில் தன் மனதில் பதிந்த பசும்புல் வெளி, அமைதியான நீர்நிலை... என்ற தன் கனவுகளை மீண்டும் வாழ்கிறார் தாவீது.
ஒரு கோணத்தில் பார்க்கும் போது, தாவீது தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளர மறுக்கும் குழந்தையோ என நினைக்கத் தோன்றும். ஆனால், குழந்தைப் பருவத்தில் மகிழ்வையும், நிறைவையும் கண்டவர்கள் மீண்டும் அந்த நினைவுகளில் வாழ விரும்புவதில் தவறில்லையே.
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்று நாம் மனதில் அசைபோடும் நினைவுகளில் பல நம் வாழ்வை இதமாக்கும், வாழ்வுக்கு உரமூட்டும் நினைவுகள் தாமே.
வாழ்க்கையை நாம் ஒரு பயணம் என்று அடிக்கடி சொல்கிறோம். இந்தப் பயணம் செல்லும் வாகனம் தொடர்ந்து ஓட தேவையான எரிபொருளைத் தருவது மகிழ்வான நினைவுகள், குழந்தைப் பருவ நினைவுகள்.
ஏதோ ஓர் அதிர்ச்சியில் சுய நினைவை இழந்த எத்தனையோ பேர் குழந்தைப் பருவ நினைவுகளால் மீண்டும் குணம் பெற்ற செய்திகள் நமக்குத் தெரிந்தவைதாம். மேலோட்டமாகச் சிந்திக்கும் போது, குழந்தைப் பருவ நினைவுகள் குழந்தைத்தனமாகத் தெரிந்தாலும், இந்த நினைவுகள் பலரையும் குணப்படுத்தியுள்ளன. பலருக்கும் பல வழிகளில் வாழ்வைத் தந்துள்ளன.

குழந்தைப் பருவ நினைவுகளால் தன்னைப் பாதுக்காத்து வரும் ஒரு வீட்டுத் தலைவியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மருத்துவ மனையில் சந்தித்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது. குடிப் பழக்கத்தால் குடும்ப அமைதியைக் குலைக்கும் கணவன், சரியாகப் படிக்காமல், தவறான நண்பர்களுடன் வாழ்வைத் தொலைத்து வரும் தன் மகன்... இப்படி ஒரு சூழலில், அந்தப் பெண்ணுக்கு Heart Attack வந்து அறுவைச் சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் இருந்தபோது சந்திக்கச் சென்றேன். ஒவ்வொரு நாளும் தன் வீட்டில் வெடித்து வரும் பூகம்பங்கள், எரிமலைகள் பற்றி என்னிடம் கூறிய அவர், எத்தனையோ நாள் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியதாகவும் கூறினார். ஆனால், அந்த நேரங்களில் எல்லாம் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கண்டுபிடித்த ஒரு வழி... தன் குழந்தைப் பருவ நினைவுகளில் மூழ்கி விடுவது என்றார்.
அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஒரு தேயிலைத் தோட்டத்தில். மலைப் பகுதி, கண்ணுக்கெட்டிய தூரம் வரைப் பச்சைக் கம்பளம் விரித்தது போல் தேயிலைத் தோட்டம், அடிக்கடி மழைத் தூறல், அந்தத் தூறலில் நனைந்தது, அந்தத் தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடியது.. என்று குழந்தைப் பருவ நினைவுகள் பலவற்றை அவரது உள்ளம் தாங்கியிருந்தது எனக்குத் தெரிந்தது. அவைகளைப் பற்றி பேசும்போதே அவர் குணமாகி வருவதைப் போல் நான் உணர்ந்தேன். அவ்வளவு ஆனந்தத்துடன் அவைகள் பற்றி பேசினார்.
இறுதியில் அவர் சொன்ன வரிகள் என்னை மிகவும் ஆழமாகத் தொட்டன. "சாமி, வாழ்க்கையில் பல முறை நான் எல்லாத்தையும் இழந்தது போல் உணர்ந்திருக்கிறேன். என் கணவனின் அன்பு, மகனின் பாசம், குடும்ப அமைதி... இதோ, என் உடல் நலம்... இவை எல்லாவற்றையும் நான் இழந்தாலும், ஒன்றை மட்டும் நான் இழக்கவில்லை. என் குழந்தைப் பருவ நினைவுகள்... துன்ப வெள்ளத்தில் நான் மூழ்கும் போதெல்லாம், இந்த நினைவுகள்தாம் என்னைக் காப்பாற்றி கரை சேர்த்த தோணிகள்." என்றார்.
நம்மில் பலருக்கு இது போல நம் குழந்தைப் பருவ அனுபவங்கள் கை கொடுத்துத் தூக்கியிருக்கும். தாவீதும் இதுபோல் உணர்ந்ததனால், தன் குழந்தைப்பருவ ஆனந்தத்தை, கனவுகளை எல்லாம் காத்து வந்த அந்தக் கடவுளையேத் தன்னைப் போன்ற ஓர் ஆயனாக உருவகித்து, "ஆண்டவர் என் ஆயர்" என்று ஆரம்பித்தார் தன் நன்றிப் பாடலை.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

18 July, 2010

Entertaining Angels… நல்விருந்து வானத்தவர்க்கு…

Entertaining Angels by G. Rubottom


Two days back I met a Jesuit priest from the U.S. When I told him that I was from India and from the south, his face lighted up. He recollected the welcome he experienced in Tamil Nadu last year. For many Europeans and Americans a visit to India leaves them with pleasant memories of our hospitality. As Indians, we feel truly proud about our hospitality.

‘Atithi Devo Bhava’ in Sanskrit means "Guest is God". Although the ‘Incredible India’ campaign of the Ministry of Tourism, Government of India, has used this phrase for commercial purposes, the original idea of this famous phrase remains intact in most parts of India. Hospitality is the theme our Sunday Readings. (Gen. 18: 1-10 and Luke 10: 38-42.) The idea of God coming in the form of a guest is the core of today’s reading from Genesis.

GENESIS 18: 1-8
The LORD appeared to Abraham near the great trees of Mamre while he was sitting at the entrance to his tent in the heat of the day. Abraham looked up and saw three men standing nearby. When he saw them, he hurried from the entrance of his tent to meet them and bowed low to the ground. He said, "If I have found favor in your eyes, my lord, do not pass your servant by. Let a little water be brought, and then you may all wash your feet and rest under this tree. Let me get you something to eat, so you can be refreshed and then go on your way—now that you have come to your servant." "Very well," they answered, "do as you say."
So Abraham hurried into the tent to Sarah. "Quick," he said, "get three seahs of fine flour and knead it and bake some bread." Then he ran to the herd and selected a choice, tender calf and gave it to a servant, who hurried to prepare it. He then brought some curds and milk and the calf that had been prepared, and set these before them. While they ate, he stood near them under a tree.


Comparisons are odious, especially when you compare a story like that of Abraham, entertaining total strangers, with something that happens to us today. Not practical. I understand this. Still, I would like to compare, rather contrast, this story with one of my personal experiences. About fifteen years back when I was in a famous city in the U.S., I went to meet a family known to me. When I reached their apartment, I rang the calling bell. (Mobiles were not popular, those days…) There was the usual “who’s this?” voice. When I confirmed my presence, the door clicked open. They lived on the eighth floor. When I reached their door, once again there was an enquiry from behind closed doors and then my host had to open (believe me) around three doors to let me in. I just wondered whether a life like this was worth all the efforts taken by the couple to reach the US. I told them that they were living in a glorified prison. Well, such glorified prisons are in vogue in India today. With home security devices multiplying year after year, the idea of letting a stranger into one’s house is becoming more of a stranger-than-fiction episode.

The episode of Abraham is really very strange, but it is also the ideal proposed in the Indian tradition. Abraham goes out of the way to entertain guests as if it was his main purpose in life. Abraham invites the guests in and then begins preparing the dinner. Strange again. I am reminded of many houses where after the arrival of the unannounced guest, the host rises to the occasion and plays the perfect host. I have known middle class or poor families where the guest is provided the best while those at home do not even have decent meals. I have experienced this so often as a priest. What do they gain treating me this way? This is a ‘commercial’ question. The answer to this question would be the beaming smiles on their faces. No commerce, no strings… simply a demonstration of deep love for the guest.

In contrast to this show of affection, I am also thinking of instances where someone holds a party just to show off. A wedding that took place six years back is, probably, still the costliest wedding on earth. It is rumoured that anywhere between 60 to 70 million dollars were spent on this wedding. This works out to be 270 to 300 crores of rupees – enough to feed 30 crores of poor people for a day. Probably the food that was wasted that day could have easily fed around 10 crores. (For those who may not understand the term crore, 1 crore = 10 millions) The number of guests invited for the wedding did not exceed 1000. Scandalous, indeed. But the greatest scandal is that this person is an Indian!

Let us get back to Abraham. The reason for him to provide food for his guests was quite simple: “Let me get you something to eat, so you can be refreshed and then go on your way—now that you have come to your servant." (Gen. 18: 5) Nothing in return. Of course, Abraham was blessed with a child. But, that was a later surprise. His primary purpose was simple – eat something, get refreshed so that you may be able to travel better.

Can life be so simple, without expectations, without calculations? Don’t ask me. I don’t have answers to this question. But, I know of people who have treated me like this… without expecting anything from me. So, I guess it is possible.

The ideal of India – ‘Atithi Devo Bhava’ – as practised by Abraham, is expressed in different ways by Thiruvalluvar and the author of the Letter to the Hebrews.
He who treats guests well, and awaits more guests will become an honoured guest among angels. (Thirukkural 86)
Keep on loving each other as brothers. Do not forget to entertain strangers, for by so doing some people have entertained angels without knowing it.
(Hebrews 13: 1-2)



P.S. I did not realise that the title given in this blog is already a film produced in the year 1996 -“Entertaining Angels - The Dorothy Day Story”. It is said that Dorothy Day was working among the poor in New York and she is also called the "American Mother Teresa". I shall surely see this movie when I get the chance.



Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.




இரு நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து இங்கு உரோம் வந்திருந்த ஒரு குருவைச் சந்தித்தேன். நான் தமிழ் நாட்டிலிருந்து வந்தவன் என்பதை அவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில் பளீரென ஒரு புன்னகை. அவர் சென்ற ஆண்டு இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்குச் சென்று வந்ததாகவும், அங்கு சென்ற இடத்திலெல்லாம் மக்களும், இயேசு சபையாரும் அவரை வரவேற்ற விதம் அவரால் மறக்க முடியாத அனுபவம் என்றும் சொன்னார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப் பற்றி அடிக்கடி நாம் தலையை நிமிர்த்தி, நெஞ்சுயர்த்தி பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியாவுக்கு, சிறப்பாக, தமிழகத்திற்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும் ஓர் அனுபவம், நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு. அதுவும் ஐரோப்பியர், அமெரிக்கர் இவர்களுக்கு இது முற்றிலும் புதிதான ஏன்?... புதிரான அனுபவமாக இருக்கும். அக்கரைக்கும், இக்கரைக்கும் அப்படி ஒரு வித்தியாசம்.
இந்த ஞாயிறன்று, தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள சம்பவமும், நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள சம்பவமும் விருந்தோம்பலைப் பற்றி சிந்திக்க நமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. (தொடக்க நூல் 18: 1-10); (லூக்கா 10: 38-42) தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள சம்பவத்தைப் பற்றி மட்டும் இன்று சிந்திப்போம்.

கோடை வெயில் சுட்டெரித்துச் சென்றிருக்கலாம். அல்லது இன்னும் சுட்டெரித்துக் கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில் இன்றைய முதல் வாசகம் வந்திருப்பது பொருத்தமாய்த் தெரிகிறது. "பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில்"... என்று இந்த வாசகத்தின் முதல் வரிகள் சொல்கின்றன. வெப்பம் மிகுதியாகும் போது, மனமும், உடலும் சோர்ந்துவிடும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் மூன்று பேர், அவர் முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத மூவர். வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம். இப்படி நேரம் காலம் தெரியாமல் வருபவர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதே அபூர்வம். “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று சீக்கிரம் அவர்களை அனுப்பி வைப்பதுதான் வழக்கம். அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு நடந்ததைத் தொடக்க நூலிலிருந்து கேட்போம்:

தொடக்க நூல் 18 : 1-5
பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே... நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்...” என்றார்.

ஆபிரகாம் காலத்துக் கதை இது. நம் காலத்து கதை வேறு. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் மிகப் புகழ்பெற்ற ஒருவர் நடித்த ஒரு காட்சி இது. அவர் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவார். அவரது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி, யாரோ ஒருவர் அவரது பால்ய நண்பர் என்று தன்னையே அறிமுகம் செய்துகொண்டு, அவரை அழைத்துச் சென்று, ஒரு அறையில் தங்க வைத்து, அவர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும், வலுக்கட்டாயமாக, மது, உணவு என்று கொடுத்து அவரைத் தூங்க வைப்பார். மறுநாள் காலையில் அவர் கண் விழிக்கும் போது, நடுத்தெருவில் படுத்திருப்பார். அவரது உடைமைகள், அவர் படுத்திருந்த கட்டில்... ஏன் அந்த அறை கூட காணாமல் போயிருக்கும். இப்படி அந்தக் காட்சி அமைந்திருந்தது. முன் பின் தெரியாதவர்களை நம்பினால் இப்படித்தான் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும் என்பது இன்று சொல்லப்படும் கதை.
ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், அன்று, அங்கு நடந்தது இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில பாடங்களையாவது சொல்லித் தரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. மறுக்கக் கூடாது. முதலில்... முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதே பெரும் ஆபத்து. அதற்கு மேல் அவர்களுக்கு விருந்தா? பெரு நகரங்களில் வாழ்பவர்களுக்கு வீட்டின் அழைப்பு மணி அடித்தாலே, முதலில் மனதில் ஐயமும், பயமும் கலந்த எண்ணங்களே அதிகம் எழும். கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில் இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல், அல்லது, பார்க்கக் கொஞ்சம் அப்பாவி போல் தெரிந்தால், சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவை, அந்த சங்கிலி அனுமதிக்கும் அளவுக்குத் திறப்போம். வெளியில் இருப்பவர் வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை அந்தச் சிறு இடைவெளியில் எடுப்போம். இப்படி ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம் சூழ்நிலையில், விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறி வருவது உண்மையிலேயே பெரும் இழப்புதான்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு விருந்து படைத்த ஆபிரகாம் கதைக்கு மீண்டும் வருவோம். வழியோடு சென்றவர்களை, வலியச் சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாமல் இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர் எளிய, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் கண் முன் விரிகிறது.
தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர் என்று வரும்போது, பிரமாதமாக விருந்து கொடுப்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். தாங்கள் வசதி படைத்தவர்கள் என்பதைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதே இந்த முயற்சி. நம் வீடுகளில் அடிக்கடி இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து விடும் விருந்தினருக்குத் தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழ ரசமோ, காப்பியோ வாங்கி வந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது, எத்தனை முறை இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்?

நான் குருவான பிறகு, எத்தனையோ இல்லங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். நடுத்தர வசதி படைத்தவர்கள், அல்லது ஏழ்மையானவர்கள் வீடுகளில் சாப்பிடும் போது, அந்த உணவுக்குப் பின்னணியில் இருக்கும் அவர்களது தியாகத்தை நினைத்து கண் கலங்கியது உண்டு. விருந்தோம்பலுக்கு இலக்கணம் இந்தக் குடும்பங்கள். என்னிடம் இருந்து ஒன்றும் எதிர்பார்க்காமல், நான் ஒரு குரு என்ற அந்த தகுதிக்காக வழங்கப்படும் மரியாதை அது.

இப்படி அன்பின் அடிப்படையில், அன்பைப் பறைசாற்றும் விருந்துகளைப் பற்றிப் பேசும் போது, தன்னிடம் உள்ள செல்வத்தைப் பறை சாற்ற, அதை ஏறக்குறைய ஓர் உலக அதிசயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பல செல்வந்தர்களின் விருந்துகளையும் இங்கு சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உலகத்திலேயே இதுவரை நடந்த திருமணங்களில் மிக அதிகச் செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை இணையதளத்தில் தேடித் பாருங்கள். வேதனையான ஒரு ஆச்சரியம் அங்கு உங்களுக்குக் காத்திருக்கும்.
2004ம் ஆண்டு உலகின் மிகப் பெரும்... மிக, மிக, மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தன் மகளுக்கு நடத்திய திருமண விருந்து உலகச் சாதனை என்று பேசக்கூடிய அளவுக்கு செலவு செய்யப்பட்ட ஒரு விருந்து. அந்த விருந்துக்கு ஆன செலவு 60 முதல் 70 மில்லியன் டாலர், அதாவது ஏறத்தாழ 270 முதல் 300 கோடி ரூபாய். 1000 விருந்தினருக்கு ஆன அந்தச் செலவில் 30 கோடி ஏழை இந்தியர்கள் ஒரு நாள் முழவதும் வயிறார சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை மட்டும் கொண்டு கட்டாயம் 10 கோடி ஏழைகள் வயிற்றைக் கழுவியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும் முடிச்சு போடுகிறேன் என்று குழப்பமா? இந்த விருந்தைக் கொடுத்த செல்வந்தர் ஓர் இந்தியர். இதற்கு மேல் சொல்ல வேண்டுமா?
பொறாமையில் பொருமுகிறேன். உண்மைதான். ஆனால், இப்படியும் விருந்துகள் இந்தியர்களால் நடத்தப்படுவது வேதனை என்பதையாவதுச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

விருந்தோம்பல் என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம் திருவள்ளுவரும், திருக்குறளும் நினைவுக்கு வந்திருக்கும். பத்துக் குறள்களில் திருவள்ளுவர் விருந்தோம்பலின் மிக உயர்ந்த பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார். ஆபிரகாம் கதை எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனையாய், கனவாய்த் தெரிகிறதோ, அதேபோல், திருவள்ளுவரின் கூற்றுகளும் எட்ட முடியாத உயரத்தில் உள்ள உபதேசங்களாய்த் தெரியலாம். எட்ட முடியாத தூரத்தில் இருப்பதால் இவைகளை புளிப்பு என்று ஒதுக்காமல், வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடித்தால்,... இந்த உலகம் விண்ணகமாவது உறுதி.



வள்ளுவர் கூறிய அந்த மேலான எண்ணங்களில் மூன்றை மட்டும் நம் சிந்தனைகளின் நிறைவாய், இன்று, இங்கு நினைவுக்குக் கொண்டு வருவோம்.
உலகத்தில் வாழ்வதன் முக்கிய நோக்கமே, விருந்தோம்பல் என்கிறார் வள்ளுவர்:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
சாவைத் தடுக்கும் மருந்தான அமிர்தமே நமக்குக் கிடைத்தாலும், அவைகளையும் விருந்தினரோடு பகிர்வதே அழகு என்கிறார் வள்ளுவர்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்
வேண்டற்பாற் றன்று.
நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர் விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு.

வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து விவிலியத்தின் மற்றொரு பகுதியில் காணப்படும் வரிகள் இவை.

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.
வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழ் பண்பை, நம் இந்தியப் பண்பின் ஆணி வேர்களில் ஒன்றான விருந்தோம்பலை மீண்டும் உயிர் பெறச் செய்வோம். அறியாமலேயே நாம் விருந்து படைப்போர் மத்தியில் வான தூதர்களும் இருக்கலாம். வான தூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பு பெறுவோம்.





இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

14 July, 2010

Calm before, after and in the middle of the storm… புயலுக்கு முன்னும் பின்னும்… புயலுக்குள்ளும் அமைதி

Morgan Weistling - The Lord is My Shepherd
http://www.world-wide-art.com/Morgan_Weistling/The_Lord_is_My_Shepherd/vaid14349.html

For my reflections today, I rely heavily on Harold S. Kushner’s famous book on Psalm 23 - “The Lord Is My Shepherd: Healing Wisdom of the Twenty-Third Psalm”. Almost all the thoughts shared here have been written in a far better way by Kushner in the first chapter of this book titled ‘A Psalm of David’.

In my reflections last week, I had quoted Kushner’s thoughts, which he shared in an interview with Beliefnet. The key theme of Psalm 23, according to Kushner, is: that life in this world won’t be fair; but God will accompany us through the thick and thin of life. After hearing my reflections over the Vatican Radio, or after reading them on the internet, three persons called me over the phone. Although each one’s problem was different, all the three found the key theme of Psalm 23 very acceptable. That is the beauty of this Psalm. It offers soothing, reassuring thoughts in the ‘eye of a storm’.

Calm before and after a storm is understandable. Surprisingly, there is calm even in the middle of a storm – the eye of a storm. For more information on the eye of a storm / cyclone, please read: http://en.wikipedia.org/wiki/Eye_(cyclone). We are talking here about the storms that rage in our personal lives… Most of us would surely remember Jesus asleep in the boat while a storm was raging around him. Not much can be done to control the storms that rage in our life; but surely how we face these storms is totally under our control. Totally? I believe so.

Let me quote excerpts from the first chapter of Kushner’s book:
The world may be a frightening place, but it becomes less frightening when we know that God is here with us. As one writer has put it, sometimes God calms the storm, but sometimes God lets the storm rage and calms the frightened child…The psalm can teach us another valuable lesson as well: Much of the time, we cannot control what happens to us. But we can always control how we respond to what happens to us. (Kushner)

I am reminded of a story I heard or read from Anthony de Mello long back in which he talks about how one can choose to control one’s life. A village had two petty shops. The owner of one of these shops was always foul-tempered and used abusive language to his customers. The owner of the other shop was courtesy personified for whom the customer was always king. A wise man of the village chose to go to the shop of the foul-tempered man all the time. When his friend asked him why he chose to get insulted instead of getting treated royally, the wise man said: “His being angry all the time cannot decide where I wish to buy things.” Perhaps an exaggerated way of saying that we are in control! We may not be able to control what happens to us; but we can always control what happens within us.

In a mere fifty-seven words of Hebrew and just about twice that number in English translation, the author of the Twenty-third Psalm gives us an entire theology, a more practical theology than we can find in many books. He teaches us to look at the world and see it as God would have us see it. (Kushner)

In the final section of this chapter, Kushner goes on to summarise what the Psalm is all about.

Although we can never know the name of the man who wrote this masterpiece of faith and comfort… we learn a lot about him by reading his words. We can see the psalm as the story of a journey, one that began with his living a pleasant, comfortable life, symbolized by lush, soft grass and cool water. Then something happened to shatter that comfortable life. It may have been a life-threatening illness. It may have been betrayal or rejection by people around him. But most likely it was the death of someone about whom he cared deeply. He found himself in despair, his world grown dark. Images of gloom, of darkness, dominated his thoughts. It seemed that there was no point to his going on with his life. In his despair, he cried out to God, and a miracle happened. The miracle was not that the dead came back to life, or that the man’s health and wealth were restored. The miracle was that he found life worth living. God answered his prayer not by replacing what he had lost, but by taking him by the hand and guiding him through the “valley of the shadow of death.” (Emphasis, mine) To his amazement, he who no longer believed that the sun was shining anywhere, found himself standing in the sunshine again. The past had not changed, but the future suddenly seemed more inviting. …
… there is no explaining why we love a certain piece of literature any more than we can explain why we love a certain person. But perhaps we will come to understand this most beloved of all the psalms, and in the process understand ourselves and our world a little better, and learn to live in that world with faith and courage. It is a psalm that has the power to change a person’s life.
(Kushner)
Dear friends, let us see what changes come about as we allow our Shepherd to lead us…



Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.



துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியை விட, அந்தத் துன்பங்களில் இறைவனின் துணை உண்டு, வழி நடத்துதல் உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 தருகிறது; எனவேதான், இந்தத் திருப்பாடல் விவிலியத்தின் வேறு பல பகுதிகளை விட நம் மனங்களில் ஆழமாய் இடம் பிடித்துள்ளது என சென்ற வாரம் சிந்தித்தோம்.
இந்தச் சிந்தனையை வானொலியில் கேட்டு, அல்லது, இணையதளத்தில் வாசித்து மூன்று பேர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஒருவர் குரு. மற்ற இருவரும் குடும்பத் தலைவிகள்.
தன் நாட்டில் நடக்கும் தீராத பிரச்சனைகளால் வேறொரு நாட்டில் குடியேறி பணிபுரிந்து வரும் குரு, இந்தத் திருப்பாடலின் மையக் கருத்தால் தன் நாட்டுப் பிரச்சனைகள் குறித்து ஒரளவு தெளிவு பெற்றதாகக் கூறினார். குடும்பத் தலைவியர் இருவரும் பல பிரச்சனைகளால், அதிலும் முக்கியமாக, அண்மைக் காலங்களில் அவர்களை வதைக்கும் உடல்நலக் குறைவால் மனம் தளர்ந்திருந்ததாகவும், அந்த வேளையில் அவர்களை வந்து சேர்ந்த இந்தத் திருப்பாடலின் மையக் கருத்து, பிரச்சனைகளைச் சந்திக்க அவர்களுக்குப் புதிய சக்தியைத் தந்துள்ளதாகவும் சொன்னார்கள்.
அன்புள்ளங்களே, திருப்பாடல் 23ன் கருத்துக்கள் இவ்வாறு பலரையும் ஆழ் மனதில் தொட வேண்டும், நலன்களைத் தர வேண்டும் என்பதே இந்தத் தேடலின் முக்கிய நோக்கம். தொடரட்டும் நமது தேடல்.

புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். புயலுக்குள் அமைதி இருக்குமா? இருக்கும். புயலின் கண் - "the eye of a storm" என்று சொல்லப்படும் இந்தப் பகுதி புயலின் மையத்தில் இருக்கும் அமைதியான பகுதி.
தனிப்பட்ட வாழ்வில் நம்மைச் சுழற்றி அடிக்கும் பல புயல்களின் நடுவிலும் இப்படி ஓர் அமைதியை நாம் காண வாய்ப்புண்டு. கடல் நடுவே, அலைகளும் புயலும் சீடர்கள் வாழ்வை பயமுறுத்திய போது, அதே படகில் நிம்மதியாய் உறங்கிய இயேசுவை நமக்கு நினைவிருக்கும். வாழ்வில் ஏற்படும் துன்பம், போராட்டம் என்ற புயல்கள், சூறாவளிகள் நடுவில் கடவுள் இருக்கத்தான் செய்கிறார். பயத்தில் நாம் எழுப்பும் அலறல்களுக்கு அவர் இருவிதங்களில் பதில் சொல்லக்கூடும். ஒன்று வீசுகின்ற புயலை அமைதிப்படுத்துவார். அல்லது, அந்தப் புயலைக் கண்டு மிரண்டு அலறும் நம் மனதை அமைதிப் படுத்துவார். புயலுக்கு நடுவிலும் அமைதியைத் தர வல்லவர் இறைவன்.

இயற்கையில் வீசும் புயலைக் கட்டுப்படுத்துவதோ, புயலை நிறுத்துவதோ நம் கையில் இல்லை. புயல் வீசத்தான் செய்யும். ஆனால், அந்தப் புயல் நேரத்தில் நம் மனதை, எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது நம் கையில் உள்ளது.
பல நேரங்களில் வாழ்வில் வீசும் புயல்ககளைத் தடுப்பதோ, மாற்றுவதோ நமது சக்திக்கு மீறியதாகத் தெரியலாம். ஆனால், இந்தப் புயல்களால் நம் மனதில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதோ, மாற்றுவதோ கட்டாயம் நம் சக்திக்கு உட்பட்டது.

முன்பு ஒரு முறை கேட்ட கதை இது: ஒரு ஊரில் இரு பெட்டிக் கடைகள் இருந்தன. முதல் பெட்டிக் கடைக்காரர் சரியான 'சிடுமூஞ்சி'. வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுவது, அவர்களை வசைபாடுவது இவருக்கு வழக்கம். மற்றொரு பெட்டிக் கடைக்காரர் அனைவரையும் புன்முறுவலுடன் வரவேற்று, வியாபாரம் செய்வார்.
ஊரில் இருந்த ஒரு பெரியவர் தினமும் அந்த 'சிடுமூஞ்சி'க்காரரிடமே பொருட்களை வாங்கச் சென்றார். அதைக் கண்ட அவரது நண்பர், "ஏன் இந்தக் கடைக்காரரின் எரிச்சலையும், வசைகளையும் தினமும் பெறுகிறீர்? சிரித்து வரவேற்கும் அந்தக் கடைக்காரரிடம் செல்லலாமே." என்றார். அதற்கு அந்தப் பெரியவர், "எப்போதும் கோபமாய் இருப்பது அவரது பிரச்சனை. அவர் எடுத்த முடிவு. அவர் கோபப்படுகிறார் என்பதற்காக, இந்தக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற என் முடிவை நான் ஏன் மாற்ற வேண்டும்?" என்று கேட்டார். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்துதான். ஆனால், ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.
வாழ்க்கையின் பல பிரச்சனைகளில், எல்லாக் கணக்கையும் கூட்டி, கழித்து, வகுத்து, பெருக்கிப் பார்த்தால், இறுதியில் அந்தப் பிரச்சனைகளால் நாம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்பது நம் கையில் உள்ளது. பிரச்சனைகளால் நாம் நொறுங்கிப் போவதோ, உறுதிப் படுவதோ நம் மனதில், நம் எண்ணங்களில்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
முன்பு ஒரு முறை வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியில் நான் சொன்ன ஓர் உவமையை மீண்டும் நினைவு படுத்துகிறேன். விழுகின்ற அடி ஒன்று தான். ஆனால், அந்த அடியால் கண்ணாடி நொறுங்கி விடும், அதே அடியால் பஞ்சு மிருதுவாகும், தோல் பதப்படும். அடி ஒன்று தான். விளைவுகள் வேறு.
வாழ்க்கையில் விழும் அடிகளில் கடவுளும் நம்மோடு அந்த அடிகளைத் தாங்கிக் கொள்கிறார், சில சமயங்களில் நமக்குப் பதில் அடிகளைத் தாங்கிக் கொள்கிறார் அல்லது, அடிகளைத் தாங்க உறுதி தருகிறார், என்பதுதான் திருப்பாடல் 23ல் கூறப்பட்டுள்ள உண்மை. இதே உண்மையைத் தான் எசாயாவும் வேறொரு விதமாகக் கூறியுள்ளார்.

எசா. 53: 4-5
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.

ஏறத்தாழ உலகின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தத் திருப்பாடல், அதன் மூல மொழியான எபிரேயத்தில், 57 வார்த்தைகளில், வாழ்க்கையின் நடைமுறைக்கு ஏற்ற ஓர் இறையியலைப் போதிக்கிறது. நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையை விட, கடவுள் இந்த உலகைப் பார்க்கும் பார்வை பெரிதும் வேறுபட்டிருக்கும். ஆனாலும், முடிந்த வரை கடவுளின் அந்தப் பார்வையை நாம் பெற முடியும் என்பதை நமக்கு இந்தத் திருப்பாடல் உணர்த்துகிறது.

இந்தப் பாடலை எழுதியவர் தாவீது என்பது நாம் பரவலாகக் கூறும் ஒரு கருத்து. இதை எழுதிய பாடலாசிரியர் தன் வாழ்வை ஒரு பயணமாய்ச் சித்தரித்திருப்பதைப் பார்க்கலாம்.
அழகாக, அமைதியாக, பசும்புல் வெளிக்கு நடுவே சலசலவென்று ஓடிக் கொண்டிருக்கும் சிற்றோடையைப் போல் பாடலாசிரியரின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது. இந்தப் பயணத்தில் ஒரு திடீர் திருப்பம். வாழ்க்கைப் பயணம் தடம் புரண்டு, தாறுமாறாய் ஓடியது. என்ன காரணம்? உடல் நோயா, எதிரிகளின் சூழ்ச்சியா, நெருங்கிய ஒருவரின் மரணமா? காரணம் சரிவரத் தெரியவில்லை. ஆனால், பாடலாசிரியரின் வாழ்க்கை நிலை குலைந்தது. துன்பங்கள் மலைபோல் எழுந்து அவரை அமுக்கி, இருளில் தள்ளி விட்டது. அந்த இருளுக்குள் புதைக்கப்பட்ட பாடலாசிரியர் சன்னமாய்க் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கேட்டு, அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. என்ன அதிசயம் அது?

இறந்து போன அவரது உயிர் நண்பர் மீண்டும் உயிர் பெற்று வந்தாரா? அவர் இழந்த செல்வங்கள் எல்லாம் மீண்டும் கிடைத்துவிட்டனவா? அவரது உடல் முற்றிலும் குணமாகி விட்டதா? அதிசயம் இவையல்ல.
இழந்தவைகளை, குறைந்தவைகளை மீண்டும் பெறுவதைக் காட்டிலும், அந்த இழப்புகள் நிறைந்த வாழ்க்கையும் வாழ்வதற்கு உகந்ததுதான் என்ற நம்பிக்கை, உறுதி, மனநிலை உருவானதுதான் அந்த அதிசயம்.
ஏதோ ஒரு திரையைச் சட்டென விலக்கி, திடீரெனத் தன்னை ஒளி வெள்ளத்தில் கடவுள் மூழ்க வைத்தார் என்று சொல்லவில்லை பாடலாசிரியர். மாறாக, தன்னை இருள் சூழ்ந்தபோது, தான் தடுமாறியபோது, அந்த இருளில் தனது கரம் பிடித்து வழி நடத்தினார் என்று சொல்கிறார் திருப்பாடல் 23ன் ஆசிரியர்.
கடவுளின் கரம் பிடித்து அவர் அந்த இருள் வழி நடந்த போது, திரும்பிப் பார்த்தார். அவரது இறந்த காலம் எந்த வகையிலும் மாறவில்லை. அதே இருள், அதே இழப்பு, அதே துயரம்... ஆனால், நிகழ் காலத்தில், அல்லது எதிர் காலத்தை நோக்கி இறைவனோடு எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தந்தது. என்ன பாடம் அது? வாழ்க்கைப் பாதை கரடு முரடானது தான். ஆனாலும், கடவுளோடு நடந்து செல்வதால், பயணம் நன்றாகவே இருக்கும் என்பதுதான் அந்தப் பாடம். இந்த முக்கிய பாடத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவே இந்தத் திருப்பாடலை எழுதினார் ஆசிரியர்.
இந்தத் திருப்பாடலை மீண்டும், மீண்டும் படிக்கும்போது, நம்மைப் பற்றி, நம் வாழ்வைப் பற்றி, இந்த உலகைப் பற்றி, கடவுளைப் பற்றி நம் எண்ணங்கள் இன்னும் தெளிவடைய, ஆழப்பட வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். அந்த நம்பிக்கையோடு நம் தேடலைத் தொடர்வோம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

11 July, 2010

What’s so good about the GOOD SAMARITAN? நல்ல சமாரியர்... அவ்வளவு நல்லவரா?

by Chuck Asay
http://www.liberty-news.com

We have heard of great thinkers (like Diogenes of Sinope) carrying a lamp in the daytime, claiming to be looking for an honest man. Today I feel as if I am doing something similar to that. I feel as if I am carrying a lamp in broad daylight searching for… the sun. Why do I feel this way?
The Gospel passage today is the famous parable of the Good Samaritan. This is such a universally famous parable with such lucid lessons that I feel… this way. Obviously, there is nothing much one can say about a parable like Good Samaritan (or, for that matter, most of the parables of Jesus). However, from another point of view, the parables of Jesus, or, for that matter, the whole Bible is an ocean where one can come across treasures, every time one takes a dive.

Let’s take one such dive today. I don’t want to talk about the parable, but rather about three ‘extraneous’ aspects of this parable: the title of the parable, the question which prompted Jesus to narrate this parable and the conclusion drawn by Jesus.

The Title:
Where does the title ‘Good Samaritan’ come from? Not surely from the Gospel. Jesus did not say this. (“…a Samaritan, as he journeyed came to where he was…” Luke 10:33) The Christian tradition has christened this parable as the parable of the Good Samaritan. Later, the world has adopted this term to mean all those who extend a helping hand. The term ‘good’ was not given only to this Samaritan. Christian tradition has also christened one of the criminals nailed along with Jesus as the Good Thief. Good thief! Good grief, how can one put these two words together? They sound internally contradictory, don’t they? For a Jew, the Good Samaritan would sound the same way. For a Jew, a Samaritan was contaminated, polluted… bad. How can there be a ‘good’ Samaritan? Unthinkable. Impossible. If we look closely at the Gospels, Jesus has raised so many ‘impossible’ persons to the altar. Apart from the thief and the Samaritan, there are the Good Tax Collector (Zachchaeus), the Good Pharisee (Nicodemus), the Good Roman soldier, the Good Shepherd (Jesus Himself), the Good Leprosy patient.... Tax collector, Pharisee, Roman soldier, shepherd, leprosy paitent… For a Jew, none of them deserved to be called good.
Good and Bad depend on one’s perspective. In Jesus’ perspective everyone was good. Jesus highlighted the goodness of these persons not only to rewrite the wrong definitions of the Jews, but to inspire all of us down these centuries.
Good Samaritan – this term has gained popularity beyond the Gospel of Luke. (By the way, Luke is the only Gospel to record this famous parable, as is the case with another famous parable – the Prodigal Son!) The title ‘Good Samaritan’ is used universally whenever, wherever a helping hand is extended. Just to give you an idea… Go to Google and type ‘Good Samaritan’ and see what happens. Good Samaritan Hospital alone will give you 1,260,000 results in less than a second. Then there are Good Samaritan Institutes, Good Samaritan Awards… The search would be endless. Such is the popularity of this term.
Jesus could have easily made a Jew, a Roman or simply, a man as the hero of this piece. Why did He specifically use a Samaritan as the hero of this parable and make this person a legend for all humanity for all times? That’s Jesus for us! Let me remind you… Jesus did not even call him good! He simply said: “a Samaritan came that way” and humanity has drawn inspiration from the Good Samaritan all these years!

The Question:
Here is the circumstance in which this parable was given by Jesus:
Luke 10: 25-30
On one occasion an expert in the law stood up to test Jesus. "Teacher," he asked, "what must I do to inherit eternal life?" "What is written in the Law?" he replied. "How do you read it?" He answered: " 'Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength and with all your mind'; and, 'Love your neighbour as yourself.' " "You have answered correctly," Jesus replied. "Do this and you will live."
But he wanted to justify himself, so he asked Jesus, "And who is my neighbour?" In reply Jesus said: "A man was going down from Jerusalem to Jericho, when he fell into the hands of robbers. They stripped him of his clothes, beat him and went away, leaving him half dead…”

We should be thankful to the Pharisees, the Saducees and the Teachers of the law who confronted Jesus. They have brought out some of the most memorable statements and parables from Jesus. The very first line of this Gospel passage tells us that this was more of an enquiry than an honest search. When an enquiry begins, there are already a few set opinions. Not much openness. The expert could have left the scene after the initial question. He could have gone away after impressing Jesus and the people around. But, he wanted more…
When the expert in the law came up with the second question: “And who is my neighbour?” all those around Jesus must have been startled. Perhaps Jesus too. Was he trying to be innocent, ignorant or impertinent? An expert in the law should have known who his neighbour was? Aren’t there obvious answers in the law?
Sometimes the most obvious truths about life lie hidden right in front of us. We fail to see them. Jesus could have easily smiled at him, patted on his back patronisingly and could have walked off. He had more important works to do than answer such… impertinent questions.
Jesus had other ideas. He wanted to answer the ‘obvious’ question in his own way. For the expert of the law as well as other Jews the neighbour was ‘obviously’ another Jew. Hence, Jesus had to come up with this ‘not-so-obvious’ explanation… the famous Good Samaritan. For those standing around Jesus, including his disciples, the answer of Jesus must have been more startling than the question.
“And who is my neighbour?” If you look at this question more closely, it sounds like an aside. This question can be written this way… “Oh, by the way Master, who is my neighbour?” Jesus takes up this question more seriously than even the earlier one about ‘inheriting eternal life’. Jesus makes that first more serious question almost a non-issue; but spends a lot more time answering the casual question about the neighbour.
It would be good for us to reflect whether the question: “And who is my neighbour?” has ‘obvious’ answers for us. Call it a coincidence or a moment of grace… This Gospel is given to us on July 11. July 11 is called the World Population Day, since in 1985 on July 11 the population of the world crossed the 5 billion mark. Population, for most of us, is mainly numbers. In 2009, the world population was 6.8 billion. Asia accounts for over 60% of the world population with almost 3.8 billion people. China and India together have about 40 percent of the world's population. It would cross 7 billion in 2011. Well, for those of us who are interested in statistics, please visit: http://en.wikipedia.org/wiki/World_population

Are people mere numbers? Persons? How many of them will be or will become our neighbours? I am reminded of a passage I came across a few years back in my email. The title of this passage was:
The Paradox of our Time - George Carlin. Here is an extract from this passage:
The paradox of our time in history is that we have taller buildings but shorter tempers, wider freeways, but narrower viewpoints.
We spend more, but have less. We buy more, but enjoy less…
We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbor. We conquered outer space but not inner space.

The expert of the law may have faked ignorance when asking Jesus the obvious question: “And who is my neighbour?” What about us? Do we know who our neighbour is?

The Solution: (Luke 10: 36-37)
Jesus does not treat this question merely as an intellectual discussion. The neighbour is not a concept to be stored in one’s mind, but a flesh and blood person who is to be acted upon. Jesus says, “Go and do likewise.” What do we do? Not perhaps great things. Just be a neighbour.
Once again, I am reminded of another incident as given by the famous Leo Buscaglia, the Love Doctor. He once talked about a contest he was asked to judge. The purpose of the contest was to find the most caring child. The winner was a four year old child whose next door neighbour was an elderly gentleman who had recently lost his wife. Upon seeing the man cry, the little boy went into the gentleman's yard, climbed onto his lap, and just sat there. When his Mother asked him what he had said to the neighbour, the little boy said, "Nothing, I just helped him cry."
To be a neighbour is very tough. But, it is also very simple!

Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.



ஜூலை 11, நாளுமொரு நல்லெண்ணம்
1987ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 11 உலகின் மக்கள் தொகை 5 Billion ஐ, அதாவது, 500 கோடியைத் தாண்டியதாம். அந்த ஆண்டு முதல் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை நாள் என அழைக்கப்படுகிறது. நாட்களைக் குறித்து பேசும்போது, அந்த நாள் கொண்டாடப்படுகிறது என்றுதான் அதிகமாய் சொல்வோம். ஜூலை 11 உலக மக்கள் தொகை நாள் எனக் கொண்டாடப்படுகிறது என்று சொன்னால், நம்மில் பலருக்கு உடனே ஒரு கேள்வி எழும். உலக மக்கள் தொகை பற்றி கொண்டாட என்ன இருக்கிறது என்ற கேள்வி. மக்கள் தொகை என்றதும் முதலில் மனதில் தோன்றுவது எண்கள், அவைகளைத் தொடரும் எண்ணங்கள். கவலை தரும் எண்ணங்கள்.
2009ம் ஆண்டு உலக மக்கள் தொகை 680 கோடி என்று சொல்லப்பட்டது. உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் வாழ்வது ஆசியாவில். அதிலும், சீனா, இந்தியா என்ற இரு நாடுகளில் மட்டும் 40 விழுக்காட்டினர். 2011ம் ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும், 2025ல் 800 கோடியையும், 2045ல் 900 கோடியையும் தாண்டும் என்பது இப்போதையக் கணிப்பு.
மக்கள் தொகை என்பது வெறும் கணிப்பா? கணக்கா?
மக்கள் என்றதும் வெறும் எண்கள் மட்டுமே மனதை நிறைக்கின்றனவா? அல்லது வேறு உயர்வான எண்ணங்கள் மனதில் எழுகின்றனவா?

ஞாயிறு சிந்தனை
பட்டப் பகலில் விளக்கைப் பிடித்துக் கொண்டு மனிதர்களைத் தேடிய டயோஜீனஸ் போன்ற அறிஞர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருப்பதைப் போல் இன்று உணர்கிறேன். நானும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு, நடுப் பகலில் சூரியனைத் தேடுவதைப் போன்ற ஓர் உணர்வு எனக்கு. ஏன் இந்த உணர்வு?
இன்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள புகழ்பெற்ற ஓர் உவமை இப்படி ஓர் உணர்வை என்னில் எழுப்பியுள்ளது. ‘நல்ல சமாரியர்’ என்ற இந்த உவமையைப் பற்றி பேசுவது கையில் விளக்கை எடுத்துக் கொண்டு சூரியனைத் தேடுவது போல் இருக்காதா? கட்டாயம் இருக்கும். இயேசுவின் எல்லா உவமைகளுக்கும் விளக்கம் தர முயலும் போது, இந்த உணர்வுதானே எழும்!
ஆனால், மற்றொரு கண்ணோட்டத்தோடு இதைப் பார்க்க விழைகிறேன். இயேசுவின் உவமைகள், அவரது கூற்றுகள்... ஏன்? விவிலியம் முழவதுமே ஒரு கடல். அந்தக் கடலில் ஒவ்வொரு முறை மூழ்கும்போதும், ஏதாவது ஒரு முத்தை கையில் ஏந்தி கரை சேர முடியுமே. இந்தக் கண்ணோட்டத்தோடு, உணர்வோடு நல்ல சமாரியர் என்ற இந்த உவமைக்குள் மூழ்குவோம். இன்றைய ஞாயிறு சிந்தனையில் இந்த உவமையைப் பற்றி பேசாமல், இந்த உவமையைச் சார்ந்த மூன்று அம்சங்களைப் பற்றி மட்டும் பேசுவோம்.
முதலில்... இந்த உவமைக்குத் தரப்பட்டுள்ள "நல்ல சமாரியர்" என்ற பெயர். இரண்டாவது... இந்த உவமையை இயேசு சொல்வதற்குத் தூண்டுதலாய் இருந்த கேள்வி. மூன்றாவது... இந்த உவமையின் இறுதியில் இயேசு தரும் ஆலோசனை.

தலைப்பு:
'நல்ல சமாரியர்' என்ற இந்தத் தலைப்பு எங்கிருந்து வந்தது? இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவதாக, லூக்கா 10: 33ல் நாம் வாசிப்பது இதுதான்: "அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது..."
சமாரியர் என்ற வார்த்தைதான் நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நல்ல சமாரியர் என்ற வார்த்தைகள் கிறிஸ்துவ பாரம்பரியத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள். இதேபோல், கல்வாரியில் இயேசுவுடன் அறையப்பட்டிருந்த இரு குற்றவாளிகளில் ஒருவரை நாம் 'நல்ல கள்வர்' என்று தலை முறை, தலை முறையாய் அழைத்து வருகிறோம். இதுவும் நற்செய்தியில் சொல்லப்படாத ஓர் அடைமொழி. கள்வர்களில் நல்லவர், கெட்டவரா? கேட்கச் சிரிப்பாய் இருக்கிறது.
யூதர்களிடம் யாராவது நல்ல சமாரியர் என்று சொன்னால், அவர்களும் இப்படி சிரித்திருப்பார்கள். சமாரியர்களில் நல்லவர்களா? இருக்க முடியாது என்பது அவர்களது தீர்மானம். இப்படி யூதர்கள் தாங்களாகவே தீர்மானம் செய்துகொண்ட, தாங்களாகவே இலக்கணம் வகுத்துக் கொண்ட பலர் உள்ளனர். வரி வசூலிப்பவர், ஆயக்காரர், தொழுநோயாளிகள், என்று பலருக்கும் யூதர்கள் வகுத்திருந்த இலக்கணம்... அவர்கள் நல்லவர்கள் இல்லை, கடவுளின் சாபம் பெற்றவர்கள். இந்த இலக்கணத்தை மாற்றி, இயேசு அவர்களில் பலரை நல்லவர்களாக்கி அரியணை ஏற்றியுள்ள நிகழ்ச்சிகளை நற்செய்தியில் வாசிக்கிறோம். இதுதான் இயேசுவின் அழகு.
நல்ல சமாரியர் என்ற இந்த இரு சொற்கள் லூக்காவின் இந்த உவமையைத் தாண்டி, நமது மனித குலத்தில் அன்று முதல் இன்று வரை பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு மனிதர் பிறருக்கு உதவி செய்கிறாரோ, அவருக்கு மதம், குலம், சமூக நிலை என்று எல்லாவற்றையும் கடந்து தரப்படுவது "அவர் ஒரு நல்ல சமாரியர்" என்ற அற்புதமான பட்டம். அந்த அளவுக்கு இவ்விரு சொற்களும் மனித குலத்தின் ஆழ் மனதில் இடம் பிடித்துள்ளன.

நல்ல சமாரியர், Good Samaritan என்ற வார்த்தைகள் இவ்வளவு புகழ் பெற்றவையா? இவ்விரு வார்த்தைகளையும் Google வழியாக இணைய தளத்தில் தேடிப்பாருங்கள், இந்த இரு வார்த்தைகளின் பெருமையை ஓரளவாகிலும் உணர்ந்து கொள்வீர்கள். Good Samaritan Hospital என்ற சொற்றொடருக்கு மட்டும் ஒரு நொடியில் Googleல் 12 லட்சத்து 60 ஆயிரம் தகவல்கள் கிடைத்தன. இன்னும் Good Samaritan Institute, Good Samaritan Award என்று ஒவ்வொன்றாகத் தேடினால், ஒரு நாள் முழுவதும் இந்தத் தேடலில் நாம் மூழ்கி, மூச்சடைத்துப் போவோம். நல்ல சமாரியர் என்பது அவ்வளவு சாதாரண வார்த்தைகள் அல்ல.

கேள்வி:
இரண்டாவது, இயேசு இந்த உவமையைச் சொல்லத் தூண்டுதலாய் இருந்த அந்தக் கேள்வியைப் பற்றி சிந்திக்கலாம். இயேசுவைத் தங்கள் அறிவுத்திறனால், கேள்விகளால் மடக்கி விட நினைத்த பரிசேயர், மறை நூல் அறிஞர், சட்ட அறிஞர்.. இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்களது கேள்விகளுக்கு இயேசு சொன்ன பதில்கள், அற்புதமான, காலத்தால் அழியாத கதைகளாய் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பரிசுகள். இப்படி சொல்லப்பட்ட கதைகளில், உவமைகளில் ஒன்று தான் நல்ல சமாரியர் உவமையும்.
இயேசுவை அணுகிய சட்ட அறிஞரின் முதல் கேள்வி மிகவும் ஆழமானது. நிலை வாழ்வை, நிறை வாழ்வை அடைய வழி என்ன என்ற கேள்வி ஒரு மனிதரின் உண்மையானத் தேடலைப் போல் ஒலிக்கிறது. ஆனால், இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் வித்தியாசமாகச் சொல்கின்றன. இந்த உவமை கூறப்பட்ட பின்னணி இதோ:

லூக்கா 10: 25-30

விடைகளைத் தெரிந்து கொண்டு கேள்விகள் கேட்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்முடைய நேரத்தையும் அவர்களது நேரத்தையும் வீணாக்கும் இவர்களைப் பார்த்து நான் எரிச்சல் அடைந்திருக்கிறேன். பல நேரம் பரிதாபப்பட்டிருக்கிறேன். நிலை வாழ்வைக் குறித்து, சட்ட அறிஞர் கேட்ட கேள்விக்கு அவரிடமே விடையை வரவழைக்கிறார் இயேசு.
அறிவுப் பூர்வமாய் சட்ட அறிஞர் சொன்ன அந்த பதிலோடு அவர் விடை பெற்றிருக்கலாம். அவரது அறிவுத் திறனைக் கண்டு மக்களும் வியந்திருப்பார்கள். ஆனால், அவர் விடுவதாயில்லை. அடுத்ததாய்க் கேட்டாரே ஒரு கேள்வி! எப்படிப்பட்ட கேள்வி அது!
"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று அவர் கேட்டதும், சூழ இருந்த மக்கள், சீடர்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை இயேசுவே இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்படி அவர் கேள்வி கேட்டதை குழந்தைத் தனம் என்று ஒதுக்குவதா? இல்லை, குதர்க்கமாய்க் கேட்கிறார் என்று குற்றம் சாட்டுவதா?
இயேசு இந்தக் கேள்விக்கு விரிவாகப் பதில் சொல்கிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால், நிலை வாழ்வைப் பற்றி சட்ட அறிஞர் கேட்ட முதல் கேள்வி மிக முக்கியமான கேள்வி. அதற்கு இயேசு பெரிய விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். என் அயலவர், அடுத்திருப்பவர் யார் என்ற இந்தக் குதர்க்கமான கேள்விக்கு ஒரு இலேசான புன்னகையை உதிர்த்து விட்டு, இயேசு புறப்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதை விட, முக்கியமான பணிகள் இயேசுவுக்குக் காத்துக் கொண்டிருந்தன.
ஆனால், இயேசு இந்தக் கேள்விக்கு விரிவான பதில் சொல்கிறார். சட்ட அறிஞர் கேட்ட அந்தக் கேள்வியால் அதிர்ச்சியடைந்திருந்த யூதர்களுக்கு, இயேசுவின் இந்த பதில் இன்னும் அதிக அதிர்ச்சியைத் தந்திருக்கும். அயலவர், அடுத்திருப்பவர் தங்கள் குலத்தைச் சேர்ந்த இஸ்ராயலர் என்பது எல்லாருக்கும் தெரிந்த தெளிவான பதில். ஆனால், இயேசு சொன்ன பதில், சட்ட அறிஞர் கேட்ட கேள்வியை விட அதிக குதர்க்கமாய் ஒலித்திருக்க வேண்டும் யூதர்களுக்கு.

என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். ஜூலை 11 உலக மக்கள் தொகை நாள் என்று நாம் சிறப்பிக்கிறோம். இன்றைய கணக்குப்படி உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருப்பது உண்மை. இத்தனை பேர் இருந்தும், நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம்.
"இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி George Carlin என்பவர் கூறியுள்ளார்.
"என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

பதில் (ஆலோசனை):
அயலவர் யார் என்ற கேள்விக்குப் பதில் தேட உண்மையிலேயே ஆவலாய் இருக்கிறோமா? பதில் தேடி கிடைத்து விட்டால், அது நம்மைப் பிரச்சனைகளில் சிக்க வைத்து விடும்.
அடுத்தவர் யார் என்று கேள்வி கேட்ட சட்ட அறிஞர் தன் அறிவுத் திறனை மக்கள் முன் பறைசாற்ற கேள்விகள் கேட்டார். பதிலுக்கு இயேசுவும் தனக்கு கதை சொல்லும் திறமை உண்டு என்பதை மக்கள் முன் பறைசாற்ற இந்த உவமையைச் சொல்லவில்லை. இயேசு தந்த பதில் வெறும் தத்துவ உண்மை அல்ல. நம் அறிவுப் பசிக்குத் தீனி போடும் வார்த்தை விளையாட்டல்ல. அடுத்தவர் யார் என்பதை இயேசு தெளிவுபடுத்தியதும், செயல்படச் சொன்னார்.
இதைத்தான் பிரச்சனை என்று நான் சொன்னேன். அடுத்தவர் யார் என்று நாம் கண்டுபிடித்து விட்டால், உடனே செயலில் இறங்க வேண்டும். இந்தச் செயல்கள் பல நேரங்களில் நம்மைப் பிரச்சனைகளில் சிக்க வைக்கும். இயேசு இந்த உவமையின் இறுதியில் சொன்ன வரிகள் நமது தோளை உலுக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து... தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் வரிகள்… இன்றைய நற்செய்தியின் இறுதி வரிகள்:

லூக்கா 10: 36-37

அடுத்தவர் யார் என்ற கேள்விக்குப் பதில் செயல் வடிவில் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், நமது பயணங்களை நிறுத்த வேண்டும்.
தேவையில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விகளை எழுப்பாமல், அவர்களது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
முடிந்தால், அவர்களையும் நமது பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, சுமந்து செல்ல வேண்டும்.
தேவைகள் நிறைவேறும் வரை மீண்டும், மீண்டும் உதவிகள் செய்ய வேண்டும்.

"நீரும் போய் அப்படியே செய்யும்."

நாமும் போய் அப்படியே செய்வோமா?


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

07 July, 2010

GOD WILL GRAPPLE ALONG WITH US… நம்முடன் சேர்ந்து போராடும் கடவுள்


Recently I came across the information about a book written by George Lucius Salton, a Polish Jew now settled in the U.S. He was 11 years old when Poland was taken over by the Germans. He was separated from his parents and elder brother. He survived the horrors of ten concentration camps. Of the 500 prisoners of the Nazis who marched through the streets of Colmar in the spring of 1944, just fifty were alive one year later when the 82nd Airborne Division of the U.S. Army liberated the Wobbelin concentration camp on the afternoon of May 2, 1945. "I felt something stir deep within my soul. It was my true self, the one who had stayed deep within and had not forgotten how to love and how to cry, the one who had chosen life and was still standing when the last roll call ended" writes Salton in his book. This book was published in 2002. The title of this book: The 23rd Psalm: A Holocaust Memoir.
I was really curious as to why the author gave this title to his book. I tried getting the information from the web, but was not successful. Salton must have survived the horrors of his youth with the help of Psalm 23. Not only George Salton. Down the centuries millions must have surely been inspired by Psalm 23 in various ways. Last week I mentioned the book (The Lord is my Shepherd - Healing Wisdom of the Twenty-Third Psalm) written by Harold Kushner, the Jewish Rabbi, who had helped so many of his congregation as well as himself with the help of this Psalm. Why has this Psalm appealed to so many millions? Because, it speaks of a simple truth – namely, that this world, filled with so many problems, is filled much more with God’s presence. Kushner talks of this presence in a far better way. Here are some thoughts that Kushner shared in an interview with Beliefnet on this Psalm.

God's promise was never that life would be fair. God's promise was that when we have to confront the unfairness of life, we will be able to handle it because we won't do it alone--He'll be with us…I realized that's the 23rd Psalm. "I will fear no evil for thou art with me."

For the thirty years I was a congregational rabbi, I always used it at funerals, at memorial services, at unveilings. It has this magical power to comfort people. I don't know how many people turned to it personally privately, but I suspect it was used at a lot of funerals and memorial services in the wake of 9/11, Christian and Jewish alike.

Often tragedies like September 11th or the death of a family member make people lose faith in God. How can this psalm help them? (Question from Beliefnet)

Sometimes people lose faith. But sometimes people lose faith in a certain childish conception of God and acquire a more mature conception of God. Paul Tillich once said, "When I was 17 I believed in God. Now that I'm 70 I still believe in God, but not the same God." A naïve conception of God is a God who is always there to protect us. We replace it with a more realistic understanding of a God who is there to help us through the difficult times in our lives.
Notice the psalmist doesn't say, "I will fear no evil because nothing bad ever happens in the world." He says, "I will fear no evil because it doesn't scare me because God is with me."


http://www.beliefnet.com/Faiths/2003/09/What-The-Psalmist-Meant.aspx

I was fortunate to come across another information about a DVD released in 2006. The title of this DVD caught my attention: You Don’t Have to be Afraid Anymore: Reflections on Psalm 23 For People with Cancer Prepared by Dr. Ken Curtis.
Here is a passage from the Companion Guide to this DVD.

Why Psalm 23?
Words matter! Think of the affirming power of the words “I love you.” Or the paralyzing effect on a child who is told repeatedly “you are stupid.”
As we think of the power of words to affect us we stand back in amazement at the words of the 23rd psalm. What is it about this brief and simple affirmation that has maintained its potency in such a unique way some 3,000 years after it was first uttered? How many other words can you think of that have a similar longevity? Why have these words so easily crossed centuries and cultures? Why have these words so often been made a centrepiece for some of life’s most critical moments—at the personal, community and national levels?
There is no simple answer to such questions. It is something we intuitively grasp more than something we can analyze. But minimally we can say this: The 23rd psalm reminds us that life inevitably has its uncertainties, reversals and fears. There are times when our resources, wisdom and strength are simply inadequate. In such times we need not despair but can move forward in confidence that we are not alone in this universe. There is One with us, who not only knows us, but cares for us and guides us. There is a way through our difficulties that will bring us past the trauma of the moment. That being so, we can pause, take a deep breath, remind ourselves of the bigger picture and face our situation with confidence, courage, trust and hope.

http://www.chitorch.org/wp-content/themes/cms/pdfguides/Psalm23.pdf
The central theme that God accompanies all of us through the unfair situations of life is the main reason why this Psalm has been such an inspiration to millions over all these centuries. We shall continue to draw inspiration from this great Psalm.


Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


1942ல் போலந்து நாட்டில், 14 வயது சிறுவனான George Lucius Saltonம் அவனது அண்ணனும் சித்ரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களது பெற்றோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வெவ்வேறு முகாம்களில் அடைபட்டிருந்தனர். ஜார்ஜும் அவனது அண்ணனும் பிரிக்கப்பட்டனர். ஜார்ஜ் தன் அண்ணனையும், பெற்றோரையும் அதற்குப் பின் பார்க்கவில்லை. ஜார்ஜ் பத்து நாசி வதை முகாம்களில் சித்ரவதைகளை அனுபவித்தார். இறுதியில் 1945 மே மாதம் 2ம் நாள் விடுதலை அடைந்தார்.
1944ல் இறுதி வதை முகாமுக்கு 500 பேர் அளவில் எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் 50 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர் என்று குறிப்பிடுகிறார் ஜார்ஜ். விடுதலை நாளன்று, குற்றுயிரும், குலையுயிருமாய் இருந்த அந்த இளைஞர்களை அமெரிக்க வீரர்கள் பெயர் சொல்லி அழைத்து, கணக்கெடுக்க ஆரம்பித்தனர். அப்போது, ஜார்ஜ் தன் மனதில் எழுந்தவைகளை இப்படி எழுதுகிறார்:
"ஜார்ஜ் என்று என் பெயரைச் சொல்லி அவர்கள் அழைத்தபோது, என் ஆழ்மனதில் ஏதோ ஒன்று சிலிர்த்தெழுந்தது. அது ‘நான்’ என்ற என் உண்மை வடிவம். இந்த 'நான்' கடந்த மூன்று ஆண்டுகளாய், 36 மாதங்களாய் எனக்குள் புதைந்திருந்தது, மறக்கப்படவில்லை. இந்த 'நான்' அன்பு செய்யவும், அழவும் தெரிந்த ஓர் உண்மை. இந்த 'நான்' வாழ்வதற்கு தீர்மானித்த ஓர் உண்மை. எனவேதான் இத்தனை மாதங்கள் கழித்து பெயர் சொல்லி அழைத்ததும் எழுந்து நிற்கிறேன்."
இப்படி இவர் எழுதியிருப்பது ஓர் அழகான புத்தகத்தில். 2002ம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகத்தின் தலைப்பு என்ன தெரியுமா? "23ம் திருப்பாடல்: ஒரு தகனப் பலியின் நினைவுகள்" (The 23rd Psalm: A Holocaust Memoir). ஏறத்தாழ நாசி வதை முகாம்கள் முடிந்து 60 ஆண்டுகள் சென்று வெளியாகி உள்ள இந்தப் புத்தகத்தை எழுதிய ஜார்ஜைப் போல இன்னும் ஆயிரமாயிரம் பேர் உடலளவில் உயிரோடு வெளிவந்தது மட்டுமல்ல, அதற்கும் மேலாக, நம்பிக்கை நிறைந்த மனிதப் பிறவிகளாக வதை முகாம்களிலிருந்து வெளிவந்ததற்குத் திருப்பாடல் 23ம் ஒரு முக்கிய காரணம் என்று உலகம் முழுவதும் அறிவித்து வருகின்றனர்.
நம்பிக்கை எனும் அமுதை கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் அமுத சுரபி "ஆண்டவர் என் ஆயர்" என்ற திருப்பாடல் 23 என்று சொன்னால், முற்றிலும் அது உண்மை. சென்ற வாரம் இந்தத் திருப்பாடலைக் குறித்த நம் விவிலியத் தேடலை ஆரம்பித்தோம். திருப்பாடல் 23 எனக்குப் பிடித்த பாடல் என்று சென்ற வாரம் நான் ஆரம்பித்த சிந்தனைகளைக் கேட்டு ஒரு நேயர் "எனக்கும் இந்தத் திருப்பாடல் மிகவும் பிடிக்கும். ஏன்? இன்னும் சொல்லப்போனால், விவிலியத்தில் நான் அடிக்கடி படிக்கும், அல்லது மனப்பாடமாய்ச் சொல்லும் பகுதி திருப்பாடல் 23 தான்." என்று மின்னஞ்சலில் எழுதியிருந்தார்.
கவலைகள், மனவலிகள் என்று நம்மை இருள் சூழும் நேரங்களிலும், நிறைவு, நன்றி என்று நம் மனதில் ஒளி எழும் நேரங்களிலும் இந்தத் திருப்பாடலை நாம் பயன்படுத்துகிறோம். மற்ற 149 திருப்பாடல்களை விட, விவிலியத்தின் பிற பகுதிகளை விட திருப்பாடல் 23ஐ பலரும் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?
இந்தத் திருப்பாடல் நாம் எல்லாரும் எளிதில் ஏற்கக்கூடிய ஒர் உண்மையைத் தன் ஆறு திருவசனங்களில் சொல்கிறது. அதனால்தான் இது இவ்வளவு பயன்படுகிறது. என்ன உண்மை இது?
உலகில் நடக்கும் அநீதிகள், அவலங்கள் எல்லாவற்றையும் நாம் காணும் போது, அல்லது அந்தக் கொடுமைகள் நம் வாழ்வைத் தாக்கும்போது, "இறைவா நீ எங்கிருக்கிறாய்? ஏன் என்னை இந்த இருளில் தள்ளிவிட்டாய்?" என்று நம் மனதில் கேள்விகள் எழும் போது, கடவுளின் பதில் இப்படி கேட்கலாம்:
“இந்த உலகம் நீதியாக, அமைதியாக, பிரச்சனைகள் இன்றி இருக்கும் என்று நான் வாக்குறுதி தரவில்லை. மாறாக, பிரச்சனைகளை நீ சந்திக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றுதான் நான் உறுதி கூறியுள்ளேன்.” இந்த எண்ணத்தை ஆழமாகச் சொல்கிறது இந்தத் திருப்பாடல்.
"நான் ஏழு வயதில், கடவுளை நம்பினேன். இப்போது எழுபது வயதிலும் கடவுளை நம்புகிறேன். ஆனால், அந்தக் கடவுளுக்கும் இந்தக் கடவுளுக்கும் வேறுபாடு உள்ளது." இப்படிச் சொன்னவர் Paul Tillich என்ற இறையியல் வல்லுநர். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கின்றது, உண்மைதானே? ஏழு வயதுக்கும் எழுபது வயதுக்கும் இடையே, கடவுள் மாறவில்லை. கடவுளைப் பற்றிய நம் எண்ணங்கள் வளர்ந்துள்ளன. அப்படி வளராமல் இருந்தால் சில சமயம் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
காக்கும் கடவுள் என்பது கடவுளின் குணங்களில் ஒன்று. இந்த ஒரே ஒரு குணத்தை மட்டுமே கடவுளின் இலக்கணமாக வாழ்க்கை முழுவதும் நினைத்து வாழ்வது ஒரு வகையில் குழந்தைத் தனம். காக்கும் கடவுள் என்ற அந்த எண்ணத்திலிருந்து நாம் வளர மறுத்தால், துன்பங்கள் வரும் போது, காக்கும் கடவுள் எங்கே என்று தேடுவோம். நாம் தேடும் அந்தக் கடவுள் வராவிட்டால், காக்கும் கடவுள் மீது நம் நம்பிக்கை காணாமல் போய்விடும்.
துன்பங்கள் வரும் போது, நம்முடன் துணைவந்து, நம்முடன் போராடி, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவும் கடவுள் எதார்த்தமான உண்மையான கடவுள். இந்தக் கடவுளைப் புரிந்துக் கொள்வதற்கு, ஏற்றுக் கொள்வதற்குத் திருப்பாடல் 23 உதவியாக இருக்கும்.
“நீர் என்னோடு இருப்பதால், உலகில் எத்தீங்கும் நிகழாது” என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறவில்லை. அவர் சொல்வதெல்லாம் இதுவே: “நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திருப்பாடல் 23: 4)
தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட அந்தத் துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குவதாலேயே இது இவ்வளவு தூரம் பயன் படுத்தப் படுகிறது. புகழும் பெற்றுள்ளது. நாடு விட்டு நாடு அடிமைகளாக விரட்டப்பட்டு வாழ்ந்து வந்த இஸ்ராயல் மக்கள் மத்தியில் தலைமுறை, தலைமுறையாய்ச் சொல்லித் தரப்பட்ட பல வாழ்க்கைப் பாடங்களின் சாராம்சம் இந்தத் திருப்பாடல். திருப்பாடல் 23 சொல்லித்தரும் இந்த வாழ்க்கைப் பாடங்களின் உதவியோடு இந்த உலகைப் பார்க்கும் போது, உலகைப் பற்றிய பல பயங்கள் குறையும். ஏனெனில் இறைவன் நம்மோடு நடந்து வருகிறார்.

Albert Einstein நமக்கெல்லாம் தெரிந்த ஓர் அறிவியல் மேதை. அவர் இந்த உலகைப் பற்றிய பல விளக்கங்களைத் தந்தவர். ஆனால், இந்த உலகைப் பற்றிய ஒரு சில கேள்விகளுக்கு விளக்கங்களைத் தன்னால் தர முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். "உலகின் வயது, அதன் சுற்றளவு, பரப்பளவு, எடை, எந்தெந்த சக்திகள் உலகை இயக்குகின்றன என்று இந்த உலகைப் பற்றிய பல அறிவியல் உண்மைகளைத் துல்லியமாக அளந்து சொல்லிவிடலாம். ஆனால், உலகைப் பற்றிய ஒரு முக்கியமான கேள்விக்கு அறிவியல் பதில் சொல்ல முடியாது... மனித குலத்தின் நம்பிக்கைகளை, கனவுகளை வளர்க்கும் வண்ணம் இந்த உலகம் அன்பாய், நட்பாய் இருக்குமா? என்ற இந்தக் கேள்விக்கு அறிவியல் பதில் சொல்ல முடியாது." என்று சொன்னார் Albert Einstein.
அறிவியலால் சொல்ல முடியாத இந்தக் கேள்விக்குத் திருப்பாடல் 23 பெருமளவு பதில் சொல்கிறது. இந்த உலகைத் தாண்டி அடுத்த உலகில் எல்லாம் நன்றாக இருக்கும் என்ற வாக்குறுதியைத் தரவில்லை 23ம் திருப்பாடல். மாறாக, இந்த உலகத்திலேயே வாழ்வு நன்றாக அமையும் என்பதைச் சொல்கிறது. அனைத்தும் நல்லதாய், தலை சிறந்ததாய் இயங்கும் உலகமல்ல நாம் வாழும் உலகம். ஆனால், இது இறைவன் நம்மோடு வாழும் உலகம்; அதனால், இது நல்ல உலகம் என்பதை ஆழமாய் நாம் உணர வைக்கிறது திருப்பாடல் 23.

"நீங்கள் இனி பயப்படவேத் தேவையில்லை... புற்று நோயில் இருப்பவர்களுக்கு திருப்பாடல் 23ன் சிந்தனைகள்" (“You Don’t Have to be Afraid Anymore: Reflections on Psalm 23 For People with Cancer” Prepared by Dr. Ken Curtis) என்று தலைப்பிடப்பட்ட DVD, 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புற்று நோயில் உள்ளவர்கள் இந்தத் திருப்பாடல் மூலம் அடைந்த பயன்களை சாட்சியமாகக் கூறும் ஒரு ஆவணப் படம் இது. 104 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ஆவணப் படம் ஒரு சில விருதுகளைப் பெற்றுள்ளது. விருதுகளுக்கு மேலாக, பல புற்று நோய் உள்ளவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்த ஆவணப் படத்தின் இறுதியில் வரும் மன்றாட்டின் ஒரு பகுதியை நமது இன்றையத் தேடலின் இறுதி செபமாக்குவோம்:
“இறைவா, உமது அழகான உலகில் மதிப்பிற்குரிய விருந்தாளியாக எனக்கு இன்னும் ஒரு நாளை அளித்திருக்கிறீர். அதற்கு உமக்கு நன்றி. நல்லதொரு ஆயனாக என்னைத் தொடர்ந்து வழிநடத்தும் உமது அன்புக்கு நன்றி. என் தேவைகளை எல்லாம் எனக்கு முன்னே நீர் அறிந்திருக்கிறீர். அதற்கும் நன்றி, இறைவா.”
Thank you, O God, that I have been given another day as an honored guest on your good earth. I also give thanks for a Lord who leads me and loves me.
Thank you for the security of knowing the shepherd provides, and this day and in the future I will always have what I really need…

நம் உணர்வுகளை ஆழப்படுத்த, நம் நம்பிக்கையை வளர்க்க, திருப்பாடல் 23 எனும் அமுத சுரபியை அடுத்த விவிலியத் தேடலில் நாடி வருவோம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org