24 November, 2022

Time for ‘Swords into Ploughshares’ வாள்கள் கலப்பைக் கொழுக்களாக...

  
The First Sunday in Advent - Hope

The First Sunday of Advent

There are some messages that do repeated rounds in Whatsapp. One of them is – a strange picture with a stranger message. The picture showed a cobra displaying its seven-headed hood on a roadside. The message below the picture said that that snake was found in Honduras and a seven-headed cobra was a sign that the end of the world was imminent. A closer look at the picture can easily tell us that the picture was not taken in Honduras, but in India. Further ‘investigation’ into this picture revealed that this picture was a ‘cut-and-paste’ work done by a person who knew a bit of ‘photo-shop’, but done rather clumsily. What was more disturbing is the fact that this picture has been doing quite a few rounds in the web for the past eight years with many threatening messages about ‘the imminent end’.

With our high-tech communication gadgets and social media apps at our fingertips, we are flooded with pictures, videos and texts every day. This flood, I am afraid, sweeps us off our feet and we add to this flood without a second thought. When we receive a message, we are keen on sharing it with others immediately without taking time to verify its veracity, source etc. Thus, we seem to spread enough unfounded rumours and cause confusions.

When we witness ‘unusual’ events, our curiosity gets tickled more than our reason. We tend to give facile ‘interpretations’ to those events, especially labelling them as signs of the ‘end-times’ or ‘doomsday’ and pass them on to others.

What is our understanding of the ‘end-times’? This Sunday’s liturgy gives us an opportunity to face this important question with calmness. This Sunday we begin another liturgical year with the First Sunday of Advent. The beginning of a liturgical year, paradoxically, talks about the end.

At the turn of this century, the new millennium, 2000-2001, the frenzy and paranoia of end-times and doomsday reached a peak. During the COVID-19 pandemic, once again, this paranoia re-surfaced. When COVID-19 pandemic was raging over the world, CNN published an article in March 2020 with a title - Coronavirus is bringing a plague of dangerous doomsday predictions. Here are the opening lines of this article:
In the summer of 2008, an elderly psychic who claimed she started receiving premonitions at age 5 published a book that contained an ominous prediction. “In around 2020, a severe pneumonia-like illness will spread throughout the globe, attacking the lungs and the bronchial tubes and resisting all known treatments,” it said. “Almost more baffling than the illness itself will be the fact that it will suddenly vanish as quickly as it arrived, attack again ten years later, and then disappear completely.”
The prediction faded from public memory and the book’s author, Sylvia Browne, died in 2013. But the coronavirus pandemic has brought new attention to Browne’s book, “End of Days: Predictions and Prophecies About the End of the World.” It’s shot up to No. 2 on Amazon’s nonfiction chart, and physical copies are now selling for hundreds of dollars.
Government and public health officials have issued all sorts of guidelines to help people protect themselves against the spread of Covid-19. But there’s another contagion that experts seem helpless to stop: The plague of prophets warning that the coronavirus is a sign we’re at the “end of days.” There is something about pandemics that cause panicked people to empty their minds along with supermarket shelves.

None of us is sure when the world would come to an end. It can be tomorrow or after a million years or it may not end at all. But, we are sure that our life and all life on earth will come to an end. How do we look upon this end? Are we just going to vanish into thin air? Or, are we going to meet our Creator? If it is seen as a meeting, then again, we need to ask another question - whether this meeting is a joyous expectation or a dreaded encounter. Great saints and sages have shown us the way as to how to face one’s death and the afterlife. 

Once John Wesley, the co-founder of the Methodists, was asked what he would do if he knew that that was his last day on earth. He replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs. Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service. At 10 I would go to bed and would wake up in glory."
Here is an anecdote from the life of St. Philip Neri. (One of my friends told me that he had heard the same story attributed to another saint. I guess all saints are of the same mould.): While Philip was playing cards with his friends, one of them asked him what he would do if he knew that he would die in a few minutes. Without any hesitation, Philip told him that he would continue playing cards.
We can well imagine that if Philip had died playing cards, he would simply continue playing cards on the other side of the grave as well. Only his companions would have changed to… God and angels!

Let us beg of God to give us this enlightenment!

Does the ‘day of the Lord’ bring in only doom and destruction? Today’s liturgical readings give us two varied opinions. While the ‘day of the Lord’ is painted as a warning in the Letter of Paul (Romans 13:11-14), and in the Gospel (Luke 24:37-44), it is painted as a celebration by Prophet Isaiah - Isaiah 2: 2-5. The scene imagined by the Prophet is very comforting and soothing, especially the final verses where Isaiah thinks of a world without war. They will beat their swords into ploughshares and their spears into pruning hooks. Nation will not take up sword against nation, nor will they train for war anymore. (Isaiah 2:4)

Isn’t this what all of us long for – a world without war? The situation in many parts of the world is very volatile. Even a small spark is enough to set off a series of wars. Pope Francis, on quite a few occasions, has spoken about the ‘third world war’ being fought in ‘bits and pieces’ all over the world – the last one being the war waged in Ukraine for the past ten months. War clouds are ominously gathering over Taiwan, the Korean peninsula and elsewhere. Ever since the end of the Second World War, Japan had decided against building up its military power and military expenditure. But, now, due to the unjust aggression of Russia on Ukraine, the threats posed by China on neighbouring countries and the foolish exhibition of the military power by North Korea, Japan, which had beat its ‘swords into ploughshares’, is rethinking its decision about military build-up and expenditure.

‘Let Us Beat Swords Into Ploughshares’ is a bronze sculpture by artist Evgeniy Vuchetich, a sculptor from the former USSR. The sculpture depicts the figure of a man, holding a hammer aloft in one hand and a sword in the other hand, hammering the sword into a ploughshare, a tool to till land for crops. This action symbolizes man’s desire to put an end to war and transform tools of destruction into tools to benefit humankind. The sculpture was gifted to the United Nations by the USSR on December 4th, 1959. What was sculpted by an artist of the former USSR and gifted to the U.N., has been forgotten by the present president of Russia.

Isaiah’s words are very inspiring as well as challenging. He talks of how destructive efforts (war) can be turned into productive efforts (agriculture). Swords into ploughshares… spears into pruning hooks (sickles). If we can convert all the war gadgets into agricultural gadgets…? If there is no more war training that kills, but only training for nourishing life? This is the desire, the challenge expressed by the Prophet.
At the same time, swords and spears becoming agricultural tools is not a guarantee that war would stop. We have known that even ploughshares and sickles – the agricultural tools – have been used in caste wars in India for the ‘violent harvest’ of innocent lives. Hence, ultimately, it is our will power which will pave way for peace and prosperity for all. Unfortunately, the present-day leaders seem to be lacking in will power to make this world, environmentally and socially safe. 

Many international meetings take place to talk about peace as well as the protection of our environment, COP 27 being the last one held in Egypt (November 6-20, 2022). But the will power of our leaders is still very weak to implement the decisions taken in every international conference. Fortunately, in the recent past, we are reading of quite a few instances where today’s youth has begun to raise serious questions to the governments, especially on environment and about defence budgets.
The budget for education and healthcare in every country seems to be reduced to a trickle, while the defence budget seems to be doubling and tripling. We don’t need to spend time on statistics… It is enough to say that if only the amount of money spent for our defence, or, at least one tenth or one hundredth of this money is diverted to true developmental activities for the poor, and for the environment, this world would breathe easy without the threat of war and climate catastrophe!

The vision that Isaiah has portrayed in the first reading for this Sunday is a good beginning for our Advent… the Season in which we look forward to the Coming of Christ. “He comes, comes ever comes.” (Tagore) He comes in various forms and it is up to us to recognise his coming, his presence in our daily life. This Season is a season to spread hope… to look forward to positive signs in this world.

My suggestion to you, dear friends, is this: let us try to think, speak and act positively in our little spheres of life. Let us try and convert swords into ploughshares! Let us create ripples of peace in our little worlds and lead people to meet the Lord who is constantly coming to us in various events and forms! May the Advent season we have begun envelop the world in peace and security! 

Swords into Ploughshares – UN statue

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

சில ஆண்டுகளுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும். இதில், மற்றொரு வருத்தமான அம்சம் என்னெவெனில், இந்தப் படம், கடந்த பல ஆண்டுகள், நம் சமூக வலைத்தளங்களில், பல்வேறு காரணங்களுக்காக, மீண்டும், மீண்டும் தோன்றி, பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையை, அதனால் விளையும் நன்மை, அல்லது, தீமையைக் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற வேகமே, நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகையத் துரிதப் பரிமாற்றங்களால், வதந்திகளும், குழப்பங்களுமே அதிகம் உருவாகின்றன என்பதையும் மறுக்கமுடியாது.

"உலகம் முடியப் போகிறது" என்ற வதந்தி, இதுவரை பலமுறை தோன்றி மறைந்துள்ளது. 20ம் நூற்றாண்டு முடிந்து, 21ம் நூற்றாண்டு துவங்கிய 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில், உலக முடிவைப் பற்றிய வதந்திகள் பல வலம்வந்தன. அதேபோல், கடந்த ஈராண்டுகள் நம்மை வதைத்து வந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், இந்நோய், உலக முடிவின் ஓர் அறிகுறி என்ற வதந்தி மீண்டும், மீண்டும் பேசப்பட்டது.

CNN என்ற செய்தி வலைத்தளம், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் "கொரோனா தொற்று உலக முடிவைப் பற்றிய வதந்திகள் என்ற கொள்ளை நோயைக் கொண்டுவந்துள்ளது" என்ற தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில கருத்துக்கள் இதோ:
பின்வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி பெற்ற சில்வியா பிரவுன் என்ற பெண்மணி, 2008ம் ஆண்டு "இறுதி நாள்கள்: உலக முடிவைக் குறித்த முன்னறிவிப்புகள்" என்ற நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூலில், "2020ம் ஆண்டையொட்டி குளிர் காய்ச்சல் போன்ற ஒரு நோய் உலகெங்கும் பரவும். அந்நோய் ஒருவரது நுரையீரலை பெரிதும் பாதிக்கும்" என்று பிரவுன் அவர்கள் கூறியிருந்தார். 2008ம் ஆண்டு இந்நூல் வெளியானபோது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், 2013ம் ஆண்டு, இந்நூலை உருவாக்கிய பிரவுன் அவர்கள் உயிர் நீத்ததைத் தொடர்ந்து, இந்நூலைப் பற்றிய பரபரப்பு குறைந்தது. கொரோனா தோற்று காலத்தில் மீண்டும் இந்நூல் பிரபலமாகி, விற்பனையில் உச்சத்தை எட்டியது.
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த ஒவ்வோர் அரசும் கடினமான முயற்சிகளை மேற்கொண்டது. இந்நோயைக் கட்டுப்படுத்துவதைக் குறித்து வழிமுறைகளையும் சொல்லித்தந்தது. ஆனால், இந்நோயை வைத்து அச்சங்களை உண்டாக்கிய சோதிடர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறிவிட்டன. ஒவ்வொரு முறையும் தொற்று நோய் உருவாகும்போது ஏற்படும் அச்சத்தால், மக்கள், பெரும் அங்காடிகளில் உள்ள பொருள்களைக் காலி செய்வதுபோல், தங்கள் சிந்திக்கும் திறனையும் காலி செய்துவிடுகின்றனர். என்று CNN செய்தி வலைத்தளம் வெளியிட்ட இக்கருத்துக்கள் சிந்திக்கத்தக்கவை.

நம்மைச்சுற்றி, இயற்கையில், அல்லது, சமுதாயத்தில் உண்டாகும் பல எதிர்பாராத நிகழ்வுகளை, உலக முடிவின் அடையாளங்கள் என்று, எளிதில் முடிவு கட்டிவிடுகிறோம். இறுதி காலத்தைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள், பொதுவாக, பரபரப்பையும், அச்சத்தையும் உருவாக்கும் கருத்துக்களாகவே உள்ளன. உலக முடிவு, இறுதிக்காலம், மானிட மகனின் இரண்டாம் வருகை ஆகியவை நமக்குள் எவ்வகை உணர்வுகளை எழுப்புகின்றன? எவ்வகை உண்மைகளைச் சொல்லித்தருகின்றன? என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க, இந்த ஞாயிறு, தகுந்ததொரு தருணமாக அமைந்துள்ளது.

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. அது நாளையே வரலாம், இன்னும் பல கோடி ஆண்டுகள் சென்று வரலாம், அல்லது, வராமலேயேப் போகலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது, திண்ணமான உண்மை. இந்த முடிவும், எப்போது வரும் என்பது, நிச்சயமற்ற ஒன்று. உலகின் முடிவு, அல்லது, நமது வாழ்வின் முடிவு என்பதைக் குறித்த நம் கண்ணோட்டம் என்ன?

எல்லாம் முடிந்துவிடும், எல்லாம் அழிந்துவிடும் என்ற கோணத்தில் சிந்தித்தால், மனதில் வெறுமை உணர்வுகள் மேலோங்கும், வாழ்வதில் பொருளே இல்லை என்ற சலிப்பு உருவாகும். உலக முடிவில் அல்லது வாழ்வின் முடிவில் நாம் இறைவனைச் சந்திக்கச் செல்கிறோம் என்ற எண்ணம், எதிர்பார்ப்பை உருவாக்கலாம். நாம் சந்திக்கச் செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.

நமக்குத் தெரியாத ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், நாம் மற்ற நேரங்களில் நடந்துகொள்ளும் விதத்தைவிட வித்தியாசமாக இருக்கும். அதுவும், நாம் சந்திக்கச் செல்வது, மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நடந்துகொள்வோம். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் அதிகம் வளர்ந்தவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்நேரத்திலும் உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல், தன்னைச் சூழ்ந்திருப்போருக்குத் தகுந்ததுபோல், வாழ்வை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, நமக்குப் பாடமாக அமையவேண்டும்.

நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்கள், ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர் தன் நண்பரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.

மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்லவிதமாக வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு, சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு. சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது அல்லது தான் சென்றடையப்போவது இறைவன்தான் என்பதை ஆழமாக உணர்ந்தபின், பயம், பரபரப்பு எல்லாம் ஏன்? தேவையில்லையே. புனித பிலிப் நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனை செய்துபார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சாவு நேரிட்டால், மறுவாழ்வில், அந்த இறைவனோடும் வான தூதர்களுடனும், தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.

ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

புனித பிலிப் நேரியைப் போல், ஜான் வெஸ்லியைப் போல், மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம், ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை அது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். அமைதியை, தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், நாம் இன்று ஏங்கித் தவிக்கும் அமைதி, உலகெங்கும் நிறையும்.

அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர், இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று, நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன. இறைவாக்கினர் எசாயா கண்ட கனவு, நம் உள்ளத்திலும் நம்பிக்கையை உருவாக்கட்டும்.
எசாயா 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் கனவில், போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகின்றன. நாம் வாழும் சூழலில், விவசாயக் கருவிகள், போர் கருவிகளாக மாறிவருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள், இந்தியாவில் நடைபெறும் சாதிய சண்டைகளில், உயிர்களை அறுவடை செய்யும் கருவியாக மாறியுள்ளதை நாம் அறிவோம்.

மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும்போது, கலிகாலம், முடிவுகாலம் ஆரம்பித்துவிட்டதோ என்றும் புலம்புகிறோம்.

முடிவு, இறுதி என்பனவற்றை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். அது நம் கண்ணோட்டத்தைப் பொருத்தது. தகுந்த கண்ணோட்டம், நமது எண்ணங்களை மட்டுமல்ல, நமது வாழ்வையே மாற்றும் சக்திபெற்றது.

இறைவாக்கினர் எசாயா காணும் போரற்ற பூமி என்ற கனவுதானே நம்மில் பலர் காணும் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்கவேண்டிய நம் தலைவர்கள், அமைதியை நிலைநாட்டுவதற்குப் பதில், தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயலும்போது, போர்களும், வன்முறைகளும் பரவுகின்றன. உக்ரைன் நாட்டில் இரஷ்ய அரசுத்தலைவன் தொடுத்திருக்கும் போர், தைவான் உட்பட பல ஆசிய நாடுகளை அச்சுறுத்திவரும் சீன அரசுத்தலைவனின் முயற்சிகள், உலக அமைதிக்கு பெரும் தடையாக உள்ளன.

உலக அமைதியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மையப்படுத்தி பல்வேறு கருத்தரங்குகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன. அண்மையில் எகிப்தில் நடைபெற்ற COP 27 காலநிலை உச்சி மாநாட்டிலும் பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநாட்டிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு செயல்வடிவம் தருவதற்குத் தேவையான மனஉறுதி நம் தலைவர்களிடம் இல்லாததால், இவ்வுலகில் குழப்பங்களும், மோதல்களும் உருவாகின்றன. மோதல்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக நம் அரசுகள் இராணுவச் செலவினை ஒவ்வோர் ஆண்டும் கூட்டிவருகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இராணுவத்தை கட்டியெழுப்புவதற்குப் பதில், நாட்டைக் கட்டியெழுப்புவதில் தன் முயற்சிகளை ஈடுபடுத்தியது ஜப்பான் நாடு. கடந்த 75 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்தில் ஈடுபட்டிருந்த அந்நாடு, தற்போது தன் இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சிகளைத் துவக்க தீர்மானித்துள்ளது. இரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளை தற்போது ஆண்டுவரும் மதியற்ற அரசுத்தலைவர்கள் எடுத்துவரும் ஆபத்தான முடிவுகளும், வட கொரியாவின் மதியற்ற இராணுவ முயற்சிகளும், ஜப்பான் அரசின் முடிவுகளில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

தலைவர்களும், அரசுகளும் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு ஒரு மாற்றாக, அண்மைய ஆண்டுகளில் இளையோர் தங்கள் எதிர்கால உலகத்தை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. நம்பிக்கையை வளர்க்க தாய் திருஅவை உருவாக்கியுள்ள சிறப்பான காலம், திருவருகைக் காலம். போரற்ற பூமியை உருவாக்குதல், அழிவுக்கருவிகளை, உருவாக்கும் கருவிகளாக மாற்றுதல், போர் பயிற்சிக்குப் பதில், வாழ்வை வளர்க்கும் பயிற்சிகளில் ஈடுபடுதல், உலகின் அனைத்து உயிரினங்களையும் பேணி வளர்த்தல் ஆகிய நம்பிக்கை நிறைந்த செயல்பாடுகளில் நம் இளைய தலைமுறையினர் தங்கள் கருத்தை செலுத்தவேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த திருவருகைக் காலத்தை நாம் துவங்குவோம். இறைவன் நம் நம்பிக்கையை, நம் வருங்கால சந்ததியினரின் நம்பிக்கையை வளர்ப்பாராக!

17 November, 2022

Our Crucified King அறையுண்ட நம் அரசர்

 
The Crucified King

The Feast of Christ the Universal King

Today, the last Sunday of the liturgical year, the Church invites us to celebrate the Feast of Christ, the Universal King. Right from the beginning of Christianity, Jesus has been honoured with various titles: Christ – the Shepherd, the Saviour, the Son of God, the Son of David, the Lamb of God, as well as Christ – the Way, the Truth, the Light, the Vine etc. None of these titles creates problems for us. In fact, they help us to understand Jesus better. But, the title - ‘Christ, the Universal King’ - seems to create uneasy feelings in us. Why do we feel so uncomfortable with the title ‘Christ, the King’?
The reason for our discomfort comes from the term ‘king’, rather than ‘Christ’. The moment we think of a king, thoughts of pomp and power, glory and glamour, arrogance and avarice crowd our mind. Would Christ be a pompous, powerful, arrogant, avaricious king? No way… He would be a King on his own terms, in his own style.

In the Gospels Jesus does talk about a kingdom. A Kingdom not defined by a territory! No territory? Well, once this is true, then, most of the problems of kingship are over. A king who does not have a territory, need not be at war with other kings.

History tells us that when kings became greedy to grab more and more land and establish more and more power, wars broke out. Some of the present-day leaders, although they have not been crowned kings, act like them. We have sad specimens of ‘self-proclaimed kings’ in the form of Vladimir Putin of Russia waging war in Ukraine and Xi Jinping of China trying to grab more and more land in the Himalayan region, in Taiwan, as well as in the South China Sea.

The madness of establishing one’s power through military aggression landed Europe in the First World War. This war was one of the main reasons for establishing the Feast of Christ, the King. Within a few weeks after the start of World War I, (July 28, 1914), Pope St Pius X passed away (August 20, 1914). His successor, Pope Benedict XV, who assumed the leadership of the Church on September 3, 1914, bore the full brunt of the First World War. He called that war a “senseless massacre” and the “suicide of the civilized Europe”. Pope Pius XI, who succeeded Pope Benedict XV in 1922, realized that the main reason for the First World War was the insatiable thirst for power. Hence, in 1925, he proposed an alternate model of kingship in Christ. He created the Feast of Christ, the King! This King is sans power and sans territory. This King lays claims on the territory of human hearts. Is such a king possible? Not only possible, but made factual in the person of Jesus Christ, the true King!

The Gospel passages prescribed for the Feast of Christ the King in all the three cycles - A, B, and C - give us a clear picture of what type of kingship we are celebrating. Today’s gospel, prescribed for Cycle C, is a scene taken from Calvary – Luke 23: 35-43. Last year’s Gospel (Cycle B) was the trial scene of Jesus in front of Pilate (John 18: 33-37) and next year’s Gospel (Cycle A) talks of the Last Judgement (Matthew 25: 31-46). In all the three Gospels, there is hardly a hint of pomp and glory. That is the core of this Feast.

All through his life, Jesus avoided, like a plague, the idea of being made a king. Right now, five instances flash across my mind:
The first one is from Matthew. Soon after Jesus was born, the wise men from the East came looking for the ‘King’. Although the star was leading them, their own pre-conceived notions of a king must have taken them to Jerusalem and to Herod’s palace – the capital city and the palace of the king. When the wisemen were acting on their pre-conceived notions of a king, the star which was guiding them till then, vanished from their sight. The wisemen sought the guidance of Herod: “Where is the one who has been born king of the Jews? We saw his star when it rose and have come to worship him.” (Matthew 2: 2) It is interesting to note that once the wisemen stopped looking for the king in the palace, the star re-appeared.

The second instance of Christ facing the danger of becoming a king is reported by John. Jesus had fed thousands of people through a miracle. After the people saw the sign Jesus performed, they began to say, “Surely this is the Prophet who is to come into the world.” Jesus, knowing that they intended to come and make him king by force, withdrew again to a mountain by himself. (John 6: 14-15)
The third occasion was on the streets of Jerusalem as recorded in all the four Gospels. The next day the great crowd that had come for the festival, heard that Jesus was on his way to Jerusalem. They took palm branches and went out to meet him, shouting, “Hosanna! Blessed is he who comes in the name of the Lord! Blessed is the king of Israel!” (John 12: 12-13)

Both in the second as well as the third instances Jesus knew full well that his people were looking for quick solutions to their problems and hence were swayed by the momentary frenzy of the crowd. We are sadly aware of the many leaders who exploit the enthusiasm of the crowd to their own personal advantage. But, Jesus knew better. He knew that such ‘loyalty’ would vanish at the first sign of a problem. It came within days of the glorious entry of Jesus into Jerusalem. The very same streets which resounded with ‘Hosanna’, were filled with the chant of ‘crucify him’, prompted by the Pharisees and the religious leaders. Talk of crowd psychology, where ‘loyalty’ is wafer thin!

The fourth instance of Jesus facing the idea of kingship was in front of Pilate. “You are a king, then!” said Pilate. Jesus answered, “You say that I am a king. In fact, the reason I was born and came into the world is to testify to the truth. Everyone on the side of truth listens to me.” (John 18: 37) Jesus was trying to tell Pilate that he was mistaken in calling him a king, and should know the truth about his kingship.

What Jesus told him was way beyond his comprehension, since Pilate could not and, probably, did not want to think of any other way a king or kingdom could exist except the Roman way. Jesus tried to tell him that truth would set him free. For Pilate, truth was a distant memory. When was the last time he had been truthful? He could not remember! This is the typical image of most of the present-day politicians – the uncrowned kings – dishing out lies, day after day, to keep themselves nailed to their powerful thrones!

The fifth instance is given in today’s Gospel (Luke 23: 35-43). Jesus was hanging on the cross. The inscription over his head read: Jesus of Nazareth, the King of the Jews! Ironically, the title – ‘Christ the King’ was coined by Pilate as an accusation. The four letters INRI fixed at the top of the crucifix is the acronym for “Iesus Nazarenus, Rex Iudaeorum,” “Jesus of Nazareth, the King of the Jews.” (John 19:19) What Jesus was running away from, all his life, is now nailed along with him on the cross.

According to Pilate, Jesus’ claim to be a King, equal to Caesar, was the greatest crime he had committed. Hence, perhaps Pilate wanted to teach a lesson to the Jews as to what would happen to anyone making the criminal claim of being a king like Caesar. Providentially, Pilate has taught all of us a great lesson as to how we need to look at the kingship of Christ – a king totally powerless and nailed to a cross.

On Calvary, that day, the kingship of Jesus was ridiculed by Pilate and the Roman soldiers. These soldiers had a clear idea of a king or an emperor. They had served quite a few of them. This man on the cross? A king? Tell me a better joke!… They must have laughed their heart out, if they had one.
In the midst of such noisy ridicules and taunts, came the feeble voice of one of the crucified persons with a petition to the King: “Jesus, remember me when you come into your kingdom.” (Luke 23: 42) When those around Jesus could not even recognise a human being in the form of the crucified one, how come this man saw a King?

We have heard from history that some of the kings and leaders, by the dignity they showed in times of great trials, even as they walked to their gallows, have earned the respect of their worst enemies. Such was their nobility! They were truly kings! The magnanimity shown by Jesus on the cross must have influenced the ‘good thief’ to submit such a beautiful petition to the KingIn all these five instances of the Gospels, we hardly see Jesus responding to any of them (except in the case of Pilate… and since Pilate was scared of facing the ‘truth’, Jesus could not make any honest impression on him!). In the last instance, on Calvary, Jesus responded to the ‘good thief’… and, what a response! Jesus answered him, “Truly I tell you, today you will be with me in paradise.” (Luke 23: 43) Jesus exercised his regal power to assure the criminal of eternal redemption. When death beckons people, quite many of them become enlightened! Here is a lovely anecdote on how a dying person gets enlightened by a movie:

The King of Kings is a silent film directed by Cecil B. DeMille in 1927.  It is a religious movie about the last weeks of Jesus on earth. It was a production acclaimed by world-famed scholars, the press and the public in the U. S. and abroad, as the most ambitious presentation of the final years of the life of Jesus ever pictured on the screen. It was seen by over a billion people all over the world. DeMille claimed that the most important tribute to the movie he had ever received came from a woman who had only a few days to live. Her nurse wheeled her to a hall in the hospital to see the movie. After viewing the whole movie, she wrote to the producer DeMille: “Thank you sir, thank you for your King of Kings. It has changed my expected death from a terror to a glorious anticipation.”

This dying woman shared the feelings of the good thief who heard the promise of Jesus: “Today you will be with me in paradise.” Both of them were suffering, both expected death and both received new hope from the dying King of kings. The criminal gives us a lesson in how to look for Christ the King and his Kingdom in the most ‘un-kingly’ circumstances. We pray that God, the Eternal King, helps us become humble enough to learn the lessons given by the criminal.
This Sunday, along with the Feast of Christ, the Universal King, we celebrate the World Day of the Youth. Pope St John Paul II instituted the World Day of the Youth, and from 1986, this Day was celebrated every year on the Palm Sunday. Pope Francis, in 2020, shifted the World Youth Day from Palm Sunday to the Feast of Christ the King. Hence, last year and this year we celebrate the World Youth Day on this Feast. Celebrating the Feast of Christ, the King and the World Day of the Youth together, gives us an opportunity to reflect on what type of ‘kings’ – world leaders – are presented to our youth these days.

May Christ the King, who chose the way of the Cross to the way of glory, help our youth to become enlightened enough to see through the false façade of our leaders and follow true, humble and noble leaders. May they learn from Christ, the true leader, how to become self-effacing leaders to serve our people.

The Crucified King

அனைத்துலகின் அரசரான கிறிஸ்து - பெருவிழா

ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று அனைத்துலகின் அரசரான கிறிஸ்துவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். ஆயன், மீட்பர், போதகர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில் சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது.

சங்கடம், ‘கிறிஸ்து’ என்ற வார்த்தையில் அல்ல, ‘அரசர்’ என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும், நம் மனத்திரையில் தோன்றும் கற்பனைகள், இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்து, பெருத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்! அரசர் என்றதும், குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு நிச்சயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர்.

அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதிப் பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.

வரலாற்றில் பதிவாகியுள்ள பல போர்களுக்கு அடிப்படை காரணம், தனிப்பட்ட அரசர்களின் அளவற்ற அதிகார வெறி. இந்த வெறியை நிலைநாட்ட அவர்கள் அடுத்த நாடுகளின்மீது மேற்கொண்ட படையெடுப்புகள், போர்களாக உருவாயின. அரசப் பரம்பரைகள் ஆண்ட வரலாறு முடிந்துவிட்டபோதிலும், இந்த அதிகார வெறியும், அடுத்த நாட்டின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் வெறியும் இன்றும் ஒருசில தலைவர்களை ஆட்டிப்படைப்பதை நாம் காண்கிறோம். மதியிழந்த இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் நாட்டின் மீது தொடுத்துவரும் போரும், அதிகார வெறியால் ஆணவம் கொண்ட சீன அரசுத்தலைவன் ஷி சின்பிங் (Xi Jinping) இமயமலைப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகள், தைவான் நாட்டின் மீது படையெடுக்க செய்துவரும் முயற்சிகள் ஆகியவை, நிலப்பரப்பின் மீது பேராசை கொள்ளும் தலைவர்களின் கேவலமான எடுத்துக்காட்டுகள்.

அத்துமீறிய தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட அரசர்கள் மேற்கொண்ட இராணுவ முயற்சிகள், முதல் உலகப் போராக உருவானதென்று நாம் அறிவோம். இந்த உலகப்போர், கிறிஸ்து அரசர் திருநாளை உருவாக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, "மதியற்றப் படுகொலை" (senseless massacre) என்றும், "கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை" (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.

முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்கள் கொண்டிருந்த அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்திருந்தார். இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலகின் அரசரென அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள், குறிப்பாக, அரசுத்தலைவர்கள், பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கென திருஅவை தெரிவு செய்துள்ள நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளையும், ‘கிறிஸ்து அரசர் என்ற பட்டத்தின் பொருளையும் கற்றுக்கொள்ள முடியும். கல்வாரியில் நிகழ்ந்த ஒரு காட்சி, இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது,. சென்ற ஆண்டு, இவ்விழாவுக்குத் தரப்பட்ட நற்செய்தி, பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி, இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும்போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர். நற்செய்தியில், இயேசுவை, அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள், கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஞானிகள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர், உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே, ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்என்றார்கள். (மத்தேயு 2: 2) அந்த ஞானிகள், பிறந்திருக்கும் புதிய அரசரை, ஏரோது மன்னனின் அரண்மனையில் தேடிச்சென்றதும், அதுவரை அவர்களை வழிநடத்திய விண்மீன் மறைந்துபோனது. அவர்கள் தேடிய இடம் தவறானது என்பதை உணர்ந்த ஞானிகள், அரண்மனையைவிட்டு வெளியேறி, மீண்டும் அரசரைத் தேடி பயணம் மேற்கொண்டதும், அவர்களை அதுவரை வழிநடத்திய விண்மீன் மீண்டும் தோன்றி, அவர்களை வழிநடத்தியது (காண்க. மத்தேயு 2:9-10)

இரண்டாவது நிகழ்வு, யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)

மூன்றாவது நிகழ்வு, எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)
வயிறார உண்டதால் மக்கள் நடுவே எழுந்த ஆர்வம், இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களை மீட்க ஒருவர் வரமாட்டாரா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில், ஆரவாரமாய், ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப மக்கள் கூட்டத்தில் தோன்றி மறையும் ஆர்வமோ, ஆரவாரமோ நிலைத்திருக்காது என்பது, தொடர்ந்த சில நாட்களிலேயே நிரூபணமானது. இயேசுவுக்கு அரச மரியாதை கொடுத்து வாழ்த்தியக் கூட்டம், அதே வீதிகளில், அவர் சிலுவை சுமந்து சென்றபோது, பயந்து ஒதுங்கியது, அல்லது, இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

இயேசுவை அரசர் என்று கூறும் நான்காவது நிகழ்வு, பிலாத்துவின் அரண்மனையில் நடந்தது. இயேசுவை அரசர் என்று, பிறர் சொல்லக்கேட்டு பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே, நீர் அரசரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்த நிகழ்வை, சென்ற ஆண்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

அரசர் என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு, கல்வாரியில் நடந்தது. இது, இன்றைய நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள், பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில், குற்றவாளிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ஒரு பரிதாபமான, போலி அரசனாகத் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில், பிலாத்து, "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்ற சொற்களை எழுதி வைத்தார். பிலாத்து இதை ஒரு குற்ற அறிக்கையாக எழுதி வைத்தார் என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம் (காண்க. யோவான் 19:19). இயேசுவிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை என்று கூறிய பிலாத்து, இயேசு தன்னையே அரசராக்கிக்கொள்ள முயற்சி செய்தார் என்று யூதமதத் தலைவர்கள் கூறியதும், அதை, இயேசு செய்த பெரும் குற்றமாக கருதினார். இதுபோல் தங்களையே அரசாக்கிக்கொள்ள முயற்சி செய்யும் ஏனைய யூதர்களுக்கு இயேசுவின் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் என்ற எண்ணத்துடன் பிலாத்து, "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்ற சொற்களை ஒரு குற்ற அறிக்கையாக இயேசுவின் சிலுவையில் அறையச் செய்தார். யூதர்களுக்கு பாடம் புகட்ட விரும்பி பிலாத்து செய்த இச்செயல், நம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இயேசுவின் அரசத்தன்மையை, சிலுவையில் காணவேண்டும் என்ற பாடம் நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்தை முதன் முதலில் பயின்றது, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த ஒரு குற்றவாளி. கல்வாரி மலைமீது ஒலித்த ஏளனக் குரல்களுக்கு நேர்மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல், இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும். (லூக்கா 23: 42) என்று, அந்தக் குற்றவாளியிடமிருந்து விண்ணப்பம் ஒன்று எழுகிறது. மனிதன் என்று கணிக்கமுடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி. அவர் இயேசுவிடம் கண்ட அரசத்தன்மைதான் என்ன?

உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி, ஆகியவை, எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்டவைத்தது என்று, வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை, இயேசுவிடம் கண்டார், இந்தக் குற்றவாளி. அவர் கண்களில், இயேசு அறையுண்டிருந்த சிலுவை, ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம், தன் விண்ணப்பத்தை வைத்தார், அந்தக் குற்றவாளி.

நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில், இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத்தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்(லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார், இயேசு.

1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The King of Kings". இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B. DeMille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.
ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் DeMille அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். "The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார். அந்தப் பெண் உணர்ந்த எதிர்பார்ப்பு, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் மனதிலும் எழுந்தது.

சிலுவை மரணங்கள் கொடூரமானவை. உரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக விளங்கியது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருந்ததால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, ஆணிகளால் அறையப்பட்ட கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அவர்கள் மரண வேதனை அனுபவித்தார்கள்.

இந்த வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, வாழ்வில் பிரச்சனைகளையும், துயரங்களையும் சந்தித்துவரும் கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. அந்த நம்பிக்கையை, நாம், கிறிஸ்து அரசர் திருவிழாவில் கொண்டாடுகிறோம்.

இறுதியாக ஓர் எண்ணம். ---- விழா, கத்தோலிக்கத் திருஅவையில் இளையோர் உலக நாளாகக் கொண்டாடப்படுகிறது. சிலுவை என்ற சிம்மாசனத்தில் அறையப்பட்டுள்ள உண்மையான அரசரும், தலைவருமான இயேசு, உண்மையான தலைமைத்துவம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை இளையோருக்கு நன்கு உணர்த்தவேண்டுமென மன்றாடுவோம். அத்தகைய தலைமைப் பொறுப்புக்களை ஏற்பதற்கு இளையோர் வாய்ப்பு பெறும்போது, தன் இறுதித் துளி இரத்தம் வரை சிந்திய இயேசுவைப்போல, தங்களையே மக்களுக்காக தியாகம் செய்யும் தெளிவையும், உறுதியையும் அவர்கள் பெறவேண்டும் என்றும் மன்றாடுவோம்.