25 June, 2012

What’s in a name?... Plenty! பெயரில் என்ன பெரிதாக உள்ளது?

Birth of St John the Baptist
GENTILESCHI, Artemisia
Museo del Prado, Madrid

As a rule, the church celebrates the feast of different Saints on the anniversary of their death. In the case of John the Baptist we celebrate his death as well as his birth. John is the only saint after Christ whose birth we celebrate with a solemn feast. Our Lady’s Birthday (September 8), although a more popular feast, is not as old or, as solemn as the Nativity of John the Baptist. This is the church’s way of saying with Jesus that “among those born of women no one is greater than John.” (Luke 7:28) On this great feast, our attention is drawn to the name ‘John’ as well as the concept of ‘being called by name’.

If we search for famous quotes on the theme of ‘name’, one of the first quotes that come to our mind is the quotation from Romeo and Juliet. “What’s in a name? That which we call a rose, by any other name would smell as sweet…” When one looks at this quote in isolation, it gives an impression that names do not matter. But, if this quote is seen in the context, then these words take on a very different meaning… It raises a question: Should names be so important as to tear away loved ones from one another? These words are spoken by Juliet who wishes that Romeo were not born with a family name that was detested by her own family. When Juliet says, “What’s in a name?”, it is not a question born of nonchalance, but a question born of agony. Here is the full passage spoken by Juliet:
Juliet:  ’Tis but thy name that is my enemy;  
Thou art thyself though, not a Montague.  
What’s Montague? it is nor hand, nor foot,  
Nor arm, nor face, nor any other part  
Belonging to a man. O! be some other name:  
What’s in a name? that which we call a rose  
By any other name would smell as sweet;   
So Romeo would, were he not Romeo call’d,  
Retain that dear perfection which he owes  
Without that title. Romeo, doff thy name;  
And for that name, which is no part of thee,  
Take all myself.
(Romeo and Juliet, Act II Scene II,
As we know, due to the family names of Capulet and Montague, Romeo and Juliet are driven to kill themselves… Names can infuse pride, security and life. They can as well take away lives!

Among the Israelites, names were extremely important. If you called someone by name you had a certain power over that person. This is why the Jews dared not call God by name. They would rather indicate the divine in indirect terms. Calling God by name would seem to make the speaker more powerful than the one who was above all. Compare these feelings of awe and respect with our SMS messages that often says: OMG!
Although the Israelites were hesitant to call God by name, they would consider it a great privilege if God were to give them a name… Beginning from Abraham (from Abram), Isaac, Jacob, Joseph, Moses… John, Jesus… the list is long! And each of these names was special and had a significance. John, the name given to the hero of today’s Feast, means “Graced by God”. The child was, indeed, a great gift given to Zechariah and Elisabeth who were quite advanced in age.
Today’s Gospel talks of the naming ceremony held for the new born son. This event gives us some thoughts for our reflection. When the neighbours wanted to name the son Zechariah as per the tradition, both the parents insist on a different name… John! Not only was the name, but the person of John was different in every way possible. His very birth was beyond nature’s possibilities. His name was different from the expected tradition. His whole life was very different from the rest of those around him. No wonder… the people began talking: "What then will this child be?" (Lk. 1:66)

Today’s feast gives us an opportunity to reflect on the theme of calling by name or being called by name…. We know that the name given to us at birth is an identity we carry life-long. This identity is precious provided our names are cherished by people around us. But for many of us, this identity gets twisted, mangled, tarnished, broken, shattered… The fact of being called by name can make a person feel respected or rejected!
In the medical profession, the person who becomes a doctor, is often called by the title ‘doctor’ than by the name. The same goes for teacher, professor, police inspector etc… These professional titles almost replace the names of the individual. For a judge in the court, a more respectable title ‘my lord’ is added. Such practices are followed in religious circles too. The titles: Father, Brother, Sister, My Lord, Your Grace… All of these titles can make one forget one’s name. I guess the identity of the profession is so respectful that these persons do not mind being called by their professional title than by their own names.
On the other side… How do we call those who do menial services like sweeping the streets, mending shoes, cleaning vessels and clothes in our houses? Are they called by their ‘profession’? Do we consider these works as ‘profession’ at all? Do we call these individuals by their names? Do we take the effort to know the names of these persons? Hardly… For most of us those who are involved in these hard labours simply belong to the group of “Hei, you”.
In every institution that I served or visited, I made it a point to learn the names of those who were doing services like the receptionist, the sweepers, the peons… and called them by their personal names. I have enjoyed the smile my effort brought to their faces. In the midst of an avalanche of ‘hei, you’s, my attempt to call them by name, surely made a difference. There is a special power behind calling someone by name, especially those who serve us in different ways… Try it. You won’t regret this effort!

The Feast of the Nativity of John the Baptist gives us an opportunity to reflect on the idea of how by calling someone by name, that person who is usually looked upon as a thing, a furniture… blossoms into a PERSON! John bore witness to him, and cried, "This was he of whom I said, 'He who comes after me ranks before me, for he was before me.'" And from his fullness have we all received, grace upon grace. (John 1: 15-16)
May John the Baptist obtain for each of us grace upon grace as his Birthday gift!

திருஅவையின் பாரம்பரியத்தில் ஆயிரக்கணக்கான புனிதர்களின் திருநாட்களை நாம் கொண்டாடுகிறோம். இப்புனிதர்களின் திருநாட்களெல்லாம் அவர்கள் விண்ணுலகில் பிறந்தநாளன்றே கொண்டாடப்படுகின்றன. திருஅவையில் மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இயேசுவின் பிறந்தநாள், அன்னை மரியாவின் பிறந்தநாள், திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.
இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஒரு வைரம்... பாலை நிலத்தில் தவத்திலும், துன்பத்திலும் தன்னைத்தானே பட்டைத் தீட்டிக்கொண்ட ஒரு வைரம். இயேசு என்ற ஒளியில் இந்த வைரம் பல கோணங்களில், பல வண்ணங்களில் மின்னியது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. (லூக்கா 7:28) என்று இயேசுவால் புகழப்பட்ட வைரம் இவர். இந்த வைரத்திலிருந்து சிதறும் பல வண்ண ஒளிக்கீற்றுகளில் ஒன்றை மட்டும் இன்று சிந்திப்போம்.
திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் பெயர் சூட்டுதல், பெயர் சொல்லி அழைத்தல் ஆகிய எண்ணங்கள் மேலோங்கியுள்ளன. இவ்வெண்ணங்களை மையப்படுத்தி, நமது ஞாயிறு சிந்தனைகளைத் தொடர்வோம்.

“What’s in a name? that which we call a rose  
By any other name would smell as sweet;”
"பெயரில் என்ன பெரிதாக உள்ளது? ரோசா என்று நாம் அழைக்கும் அந்த மலருக்கு வேறு எந்தப் பெயர் இருந்தாலும், அந்த மலரின் மணம் மாறப்போவதில்லை."

'ரோமியோ அண்ட் ஜூலியட்' என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை மேலோட்டமாக, ஒரு மேற்கோளாகப் பார்க்கும்போது, ஒருவருக்கு வழங்கப்படும் பெயர் ஒன்றும் முக்கியமல்ல என்ற எண்ணம் உருவாகும். ஆனால், நாடகத்தில் இந்த வரிகள் சொல்லப்படும் சூழலைச் சிந்தித்தால், வேறுபட்ட எண்ணங்கள் தோன்றும். இந்த எண்ணங்கள் இன்றும் நம் உலகை ஆட்டிப் படைக்கின்றன என்ற துயரமும் விளங்கும்.
நாடகத்தில் இந்த வரிகளை ஜூலியட் பேசுகிறார். ரோமியோவும் ஜூலியட்டும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இணைந்து வாழ்வதற்குத் தடையாக உள்ளவை இவ்விருவரும் பிறந்த குடும்பங்கள். பகைமையில், வெறுப்பில் நீண்டகாலமாய் வாழ்ந்துவரும் குடும்பங்கள் இவை. தாங்கள் இணைந்து வாழ்வதற்கு Capulet, Montague என்ற குடும்பப் பெயர்களே தடையாக உள்ளன என்று எண்ணும் ஜூலியட், "ரோமியோ, உன் குடும்பப் பெயர்தான் என்னுடைய எதிரி. நம் குடும்பப் பெயர்களை நீக்கிவிட்டால், பகையும், வெறுப்பும் இல்லாமல் நாம் இணைந்து வாழ முடியும்... பெயரில் என்ன பெரிதாக உள்ளது?" என்ற பாணியில் பேசுகிறார். பகையுள்ள இரு குடும்பப் பெயர்களைத் தாங்கியதால், ரோமியோவும் ஜூலியட்டும் இவ்வுலகில் இணையமுடியாமல் மரணத்தில் இணைந்தனர் என்று ஷேக்ஸ்பியரின் இந்த நாடகம் துயரத்தில் முடிகிறது. பெயர்கள் வாழவும் வைக்கும், வன்முறைகளையும் தூண்டும் என்பதை நாம் வாழும் காலத்திலும் சந்தித்து வருகிறோம்.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெயர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது. ஒருவருக்கு மற்றொருவர் பெயர் சூட்டினால், அந்தப் பெயரைத் தாங்கியவர்மீது பெயர் சூட்டியவருக்கு அதிகாரம் உண்டு என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது. எனவேதான், இறைவனைப் பெயர் சொல்லி அழைக்க அவர்கள் தயங்கினார்கள். இறைவனுக்கு மக்கள் பெயர் சூட்டினால், அவர் தங்கள் சக்திக்கு உட்பட்டவராகிவிடுவார் என்ற தயக்கம் அது.
அதேவேளையில், இறைவன் அவர்களுக்குப் பெயர் சூட்டியதைப் பெருமையாக அவர்கள் எண்ணிவந்தனர். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து முக்கியமான பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள்தாம். ஆபிரகாமில் துவங்கி, ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே என்று தொடர்ந்து, யோவான், இயேசு என்று அனைத்து பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஓர் அர்த்தமும் உண்டு. வயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின் கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்கு தந்த 'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' "Graced by Yahweh" என்று பொருள்.

குழந்தைக்குப் பெயர்சூட்டுவது இஸ்ரயேல் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நிகழ்வு. திருமுழுக்கு யோவான் வாழ்வில் நடந்த அந்த முக்கியமான நிகழ்வு இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வும் நமக்குள் சிந்தனைகளை எழுப்புகின்றது. பெயர்சூட்டும் விழாவுக்கு வந்திருந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைக்குத் செக்கரியா என்ற தந்தையின் பெயரையேச் சூட்டவேண்டும் என்று கூறினர். அதுவே அங்கு நிலவிய பாரம்பரியம். பாரம்பரியத்திற்கு மாறாக, கடவுள் தந்த 'யோவான்' என்ற பெயர் குழந்தைக்குச் சூட்டப்பட்டது. யோவான் பிறந்ததே இயற்கையின் நியதிகளைத் தாண்டிய ஒரு செயல்... அவருக்குத் தரப்பட்ட பெயர் பாரம்பரியத்திற்குப் புறம்பான ஒரு பெயர். 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ' என்று ஊர் மக்கள் அனைவரும் வியந்ததற்கு ஏற்ப, யோவான் வாழ்ந்த வாழ்க்கையும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. இப்படி பாரம்பரியங்களையும், பழக்க வழக்கங்களையும் தாண்டி, யோவானின் வாழ்க்கை இறைவனின் அருளால் முற்றிலும் வழிநடத்தப்பட்ட வாழ்க்கையாக அமைந்தது.

உலகில் பிறக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பிறப்பில் தரப்படும் ஒரு முக்கிய அடையாளம்... நமது பெயர். நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்செல்லும் அடையாளம் இது. பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயர் சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப்போகும் வண்ணம், பெயர் சொல்லி அழைக்கும் இருள்சூழ்ந்த பக்கம்.
பிறக்கும்போது, வளரும்போது, படிக்கும்போது, பலவிதமானப் பெயர்கள் நமது அடையாளங்களாகச் சூட்டப்படும். நம்மில் பலருக்கு நாம் செய்யும் தொழிலே நமது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வானதாகக் கருதப்பட்டால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். உதாரணமாக,  மருத்துவர், ஆசிரியர், பேராசிரியர், அருள்பணியாளர் ஆகியோரைப் பெயர் சொல்லி அழைப்பதைவிட, doctor, teacher, professor, father,  சாமி என்றெல்லாம் அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். இன்று நாம் கொண்டாடும் யோவான் என்ற குழந்தை, இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கியதால், திருமுழுக்கு யோவான் என்று திருஅவையால் தனிப்பட்ட மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

இதுவரை நாம் சிந்தித்தது, பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிமயமான பக்கம். இனி சிந்திக்க இருப்பது... இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருக்களைச் சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டுவேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? இவர்களை நாம் அழைக்கும் தொனியில் மரியாதை ஒலிக்காது. பல ஆண்டுகள் இவர்களை நமக்குத் தெரிந்திருந்தாலும்,  இவர்களின் பெயர்களை நாம் கற்றுக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களே அவர்கள் பெயர்களாக மாறும் அவலம் நம்மிடையே உள்ளது. மனித சமுதாயத்தில் மட்டுமே காணக்கிடக்கும் மற்றொரு சாபம்... நமது இன வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள். இவற்றின் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்... நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.

நான் பணி செய்து வந்த ஒரு அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஓர் இளைஞர் என் நினைவுக்கு வருகிறார். மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு, "சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை ஒளிரும். என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக்கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. "சங்கர்" என்று அவரை அழைக்கும்போது, அவர் தோள்களை உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது. அதேபோல், நான் தங்கியிருந்த குருக்கள் இல்லங்களில் எளிய பணிசெய்யும் எல்லாருடைய பெயரையும் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை இரசித்துப் பார்த்திருக்கிறேன்.

திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று, அவருக்குப் பெயர் சூட்டும் நிகழ்வைச் சிந்திப்பதன் பயனாக, தனி மனிதர்களுக்கு தரப்படும் தனித்துவமான அடையாளமான பெயர்களின் உண்மைப் பொருளைக் கற்றுக்கொள்ள முயல்வோம். நாம் மற்றவர்களை ஏகவசனத்தில், அல்லது தரம் குறைந்த அடைமொழிகளால் அழைப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உரிய மரியாதைத் தரும் பெயர்களால் அழைப்பதற்கு முயற்சிகள் எடுப்போம். ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர்மீது நாம் வழக்கமாகச் சுமத்தும் ஏகவசனங்களையும், அடைமொழிகளையும் கிழித்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.
'யாவே அருள் வழங்கினார்' என்ற பொருள்படும் 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும் அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம் (யோவான் 1:16). இறையருளை மக்களுக்கு அள்ளித்தந்த திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப் பெற்றுத்தர மன்றாடுவோம்.

 

17 June, 2012

The Earth Produces of Itself… we know not how! விதை சொல்லித்தரும் பாடங்கள்

Bolivia – Madre Tierra

Jesus had a deep fascination with nature. This is evident from most of his parables. Seed, flowers, vine, branches, trees, lilies, birds… all of them were his favourite subjects. Having been a carpenter himself, his contact with and respect for nature must have been quite strong. I could even imagine him asking pardon from a tree before chopping off a branch for his needs. Having been a contemplative all his life, his vibrations with nature must have been quire powerful. Today’s gospel passage is, once more, an evidence of his fascination with nature. Mark’s Gospel gives us two parables of Jesus – the less-known Parable of the Growing Seed (4:26-29) and the more famous Parable of the Mustard Seed (4:30-32). Not only that… Today’s first reading from the book of Prophet Ezekiel (17: 22-24) also talks of God planting saplings of cedar. I consider these readings as a special grace given to us this Sunday, June 17 – the World Day to Combat Desertification and Drought. We are also on the verge of beginning the Rio+20 Earth Summit in Rio de Janeiro – June 20-22.

When I read the parable of the Growing Seed (found only in the Gospel of Mark), there was a condescending smile from me. Jesus’ words sounded so naïve to me. Although Jesus was not giving a class on plant biology, and was more interested in talking about the Kingdom, still, his words sounded too simplistic about the process of agriculture. Here are the words of Jesus:
Mark 4: 26-29
And he said, "The kingdom of God is as if a man should scatter seed upon the ground, and should sleep and rise night and day, and the seed should sprout and grow, he knows not how. The earth produces of itself, first the blade, then the ear, then the full grain in the ear. But when the grain is ripe, at once he puts in the sickle, because the harvest has come."
Jesus seems to make agriculture a very simple process… All that we need to do is sow the seed and wait for the harvest. Between our sowing and reaping, nature will work… Too simple. Too naïve, too! On a deeper analysis, what Jesus seems to say in this parable is what the Earth Summit will also be saying in very different but sophisticated way… Allow nature to work! Jesus is trying to teach us lessons in patience and hope, traits that have long disappeared from our world. Our greed and impatience have created more havoc with nature. Now, we need to tell ourselves in an Earth Summit that we need to slow down!

The present Earth Summit is labelled Rio+20 in order to remind us of the first Earth Summit which took place in Rio in 1992. I do remember that Summit well for only one reason – Severn Cullis Suzuki! 
The Earth Summit 1992 held in Rio, Brazil, was swept away by Severn Cullis-Suzuki, a 13 year old girl from Canada. The six minutes talk that she gave in the summit is still doing enough rounds on the internet. Here is the full text of Severn Suzuki’s talk.  
Hello, I'm Severn Suzuki speaking for E.C.O. - The Environmental Children's Organisation. We are a group of twelve and thirteen-year-olds from Canada trying to make a difference: Vanessa Suttie, Morgan Geisler, Michelle Quigg and me. We raised all the money ourselves to come five thousand miles to tell you adults you must change your ways. Coming here today, I have no hidden agenda. I am fighting for my future.
Losing my future is not like losing an election or a few points on the stock market. I am here to speak for all generations to come. I am here to speak on behalf of the starving children around the world whose cries go unheard. I am here to speak for the countless animals dying across this planet because they have nowhere left to go. We cannot afford to be not heard.
I am afraid to go out in the sun now because of the holes in the ozone. I am afraid to breathe the air because I don't know what chemicals are in it.  I used to go fishing in Vancouver with my dad until just a few years ago we found the fish full of cancers. And now we hear about animals and plants going extinct every day -- vanishing forever. In my life, I have dreamt of seeing the great herds of wild animals, jungles and rainforests full of birds and butterflies, but now I wonder if they will even exist for my children to see.
Did you have to worry about these little things when you were my age?
All this is happening before our eyes and yet we act as if we have all the time we want and all the solutions. I'm only a child and I don't have all the solutions, but I want you to realise, neither do you!
          You don't know how to fix the holes in our ozone layer.
          You don't know how to bring salmon back up a dead stream.
          You don't know how to bring back an animal now extinct.
          And you can't bring back forests that once grew where there is now desert.
If you don't know how to fix it, please stop breaking it!

Here, you may be delegates of your governments, business people, organisers, reporters or politicians - but really you are mothers and fathers, brothers and sister, aunts and uncles - and all of you are somebody's child.
I'm only a child yet I know we are all part of a family, five billion strong, in fact, 30 million species strong and we all share the same air, water and soil -- borders and governments will never change that. I'm only a child yet I know we are all in this together and should act as one single world towards one single goal. In my anger, I am not blind, and in my fear, I am not afraid to tell the world how I feel.
In my country, we make so much waste, we buy and throw away, buy and throw away, and yet northern countries will not share with the needy. Even when we have more than enough, we are afraid to lose some of our wealth, afraid to share. In Canada, we live the privileged life, with plenty of food, water and shelter -- we have watches, bicycles, computers and television sets.
Two days ago here in Brazil, we were shocked when we spent some time with some children living on the streets. And this is what one child told us: "I wish I was rich and if I were, I would give all the street children food, clothes, medicine, shelter and love and affection." If a child on the street who has nothing, is willing to share, why are we who have everything still so greedy? I can't stop thinking that these children are my age, that it makes a tremendous difference where you are born, that I could be one of those children living in the Favellas of Rio; I could be a child starving in Somalia; a victim of war in the Middle East or a beggar in India.
I'm only a child yet I know if all the money spent on war was spent on ending poverty and finding environmental answers, what a wonderful place this earth would be!

At school, even in kindergarten, you teach us to behave in the world. You teach us:
          not to fight with others,
          to work things out,
          to respect others,
          to clean up our mess,
          not to hurt other creatures
          to share - not be greedy.
Then why do you go out and do the things you tell us not to do?
Do not forget why you're attending these conferences, who you're doing this for -- we are your own children. You are deciding what kind of world we will grow up in.
Parents should be able to comfort their children by saying "everything's going to be alright", "we're doing the best we can" and "it's not the end of the world".
But I don't think you can say that to us anymore. Are we even on your list of priorities? My father always says "You are what you do, not what you say."
Well, what you do makes me cry at night. You grown ups say you love us. I challenge you, please make your actions reflect your words. Thank you for listening.
(The full text is available on: http://ssjothiratnam.com/?p=747)

One of the most powerful lines from this speech was: “If you don't know how to fix it, please stop breaking it!”  If only we could listen to our future generations and stop breaking the universe, the environment and the human family… If only we could listen to what Jesus is telling us in today’s parable – Allow nature to work…
If we cannot leave a wholesome universe for our next generation, let us at least leave a broken world instead of a completely devastated one for them! Warning bells do ring now and then about this impending devastation… the last one being from Fukushima, Japan. When shall we learn the very simple, fundamental truth… to let Nature be!


Severn Cullis-Suzuki

மண், விதை, செடி, கோடி, மரம் என்று இயேசு தாவர உலகைப்பற்றி, விவசாயத்தைப்பற்றி பல நேரங்களில் பேசியிருக்கிறார். தன் குடும்பத் தொழிலாக, தச்சு வேலை செய்து வந்த இயேசுவுக்குத் தாவர உலகின் மீது எப்படி இவ்வளவு ஈடுபாடு வந்திருக்க முடியும் என்று எண்ணி வியப்படைகிறேன். தன்னைச்சுற்றி இயங்கும் உலகில் இறைவனைத் தொடர்ந்து சந்தித்துவந்த இயேசுவுக்கு, இயற்கையின் அதிசயங்கள் மனதில் பதிந்தது ஒன்றும் அதிசயம் இல்லையே!
சாதிக்கவேண்டும், சேகரிக்கவேண்டும் என்ற வெறியில் இயற்கைக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே பாடங்கள் சொல்லித் தருகின்றார் இறைவன்.
ஜூன் 17 இந்த ஞாயிறன்று இந்த வாசகங்கள் நம்மை வந்தடைந்துள்ளதை நான் ஒரு வரமாக எண்ணிப் பார்க்கிறேன். பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனீரோ நகரில் வருகிற புதன், ஜூன் 20ம் தேதி Rio+20 என்ற அனைத்துலக பூமிக்கோள உச்சி மாநாடு துவங்க உள்ளது. நமது இயற்கையை எவ்விதம் காப்பாற்றுவது என்று உலக நாடுகள் இணைந்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளன.
இயற்கை என்ற பள்ளியில் இறைவன் நமக்குச் சொல்லித்தர விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையை சின்னாபின்னமாக்கிவிட்டு, இறந்து கொண்டிருக்கும் இயற்கையை எப்படி காப்பாற்றுவது என்று உச்சி மாநாடு நடத்த உள்ளோம்.
Rio+20 உச்சி மாநாடு நமக்குச் சொல்லித்தரப்போகும் பாடங்களைக் கேட்பதற்குமுன்னர், இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்குச் சொல்லித்தரும் பாடங்களுக்கு செவிமடுப்போம்.

மாற்கு நற்செய்தி 4ம் பிரிவில் இன்று நாம் வாசிக்கும் முதல் உவமை, "தானாக வளரும் விதை" என்ற உவமை. மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமை இதோ:
மாற்கு நற்செய்தி 4 : 26-29
அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டதுஎன்று கூறினார்.

கேட்பதற்கு மிக இனிமையான உவமை இது... வேளாண்மை, விவசாயம் என்பது மிகவும் எளிதான ஒரு விடயம் என்ற கற்பனையை இயேசுவின் வார்த்தைகள் உருவாக்குகின்றன. விதைப்பவர் செய்யவேண்டியதெல்லாம் எளிதான காரியங்கள்... விதைக்க வேண்டும், அறுவடை காலம் வந்ததும் அறுவடை செய்ய வேண்டும்... அவ்வளவுதான். இவ்விரு செயல்களுக்கும் இடைப்பட்டக் காலத்தில், இயற்கை தானாகச் செயல்படும் என்ற கருத்தில் இயேசு பேசியிருக்கிறார். "அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது... நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது." என்பவை இயேசுவின் வார்த்தைகள்.
இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, எனக்குள் கேலியும், கேள்வியும் எழுந்தன. இயேசுவுக்கு விவசாயம்பற்றி சரிவரத் தெரியவில்லை என்ற மமதையில் எழுந்த கேலி அது. ஆனால், இந்த உவமையை Rio+20 உச்சி மாநாட்டின் பின்னணியில் சிந்திக்கும்போது, இயேசு கூறும் வார்த்தைகளின் ஆழம் புரிகிறது. என் கேலியும், கேள்வியும் மறைந்து போகின்றன. வேறு கேள்விகள் மனதை உறுத்துகின்றன. இந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டுவது எளிதான இயற்கை வழிகள்... இந்த இயற்கை வழியில் நாம் சென்றிருந்தால்... நம் பேராசைகளுக்கு, அவசரங்களுக்கு ஏற்றபடி இயற்கையை மாற்றாமல், அது செயல்படும் போக்கில் நாம் சென்றிருந்தால்... இயற்கையை இவ்வளவு சீரழித்திருப்போமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள் நாம் வாழும் உலகில் பெருமளவு காணாமற் போய்விட்டன. இன்றைய அவசர உலகின் கணக்குப்படி, இன்று விதைக்க வேண்டும், நாளை அறுவடை செய்யவேண்டும். இன்று விதைப்பதை நேற்றே அறுவடை செய்ய முடியுமா என்று ஆய்வுகள் தற்போது நடைபெற்று வந்தாலும் ஆச்சரியமில்லை.
நமது அவசரத்துக்கு ஈடுகொடுக்கும் வண்ணம், தொழில் நுட்பங்கள், வேதியல் உரங்கள், விதைகளில் மரபணு மாற்றங்கள், திடீர் விதைகள், திடீர் பயிர்கள் என்று எத்தனை, எத்தனை விபரீதப் பரிட்சைகள்... இந்தப் பரிட்சைகளில் தவறியதால், ஆயிரக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலைகள்... முன்னேற்றம் என்ற பெயரில் ஆபத்தான வழிகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டோம். இப்போது, மாற்றுவழிகளைச் சிந்திக்க உச்சி மாநாடுகள் கூட்டிப் பேசுகிறோம்... "நாம் செல்லும் வழிகள் ஆபத்தானவை. இவ்வளவு அவசரம் நமக்குத் தேவையில்லை. நமது சுயநலனுக்காக இயற்கையை இவ்வளவு தூரம் நாம் அழித்திருக்கக் கூடாது." என்றெல்லாம் பேசிவருகிறோம்.

சுயநலம், பேராசை, குறுக்குவழி, உடனடித்தீர்வுகள், அவசரம், என்ற களைகளை ஆரம்பத்திலிருந்தே நாம் நமது தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் வேரோடு களைந்திருந்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப்பற்றி இவ்வளவு தூரம் நாம் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. 1992ம் ஆண்டு, முதல் பூமிக்கோள உச்சி மாநாட்டை நடத்தியிருக்கத் தேவையில்லை. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் சரிவர நடக்காமல் போனதற்கு அடிப்படைக் காரணம்... மீண்டும், அதே சுயநலம்... இப்போது, Rio+20 உச்சி மாநாட்டில் மீண்டும் விவாதங்கள் நடைபெறும், தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், அடிப்படையில் நமது மனித சமுதாயத்தில் ஆழமாய் வேரூன்றியிருக்கும் சுயநலமும் அதன் கிளைகளாய் வளர்ந்திருக்கும் பேராசை, குறுக்குவழிகள் என்ற களைகளை நீக்காவிட்டால், மீண்டும், மீண்டும் உச்சி மாநாடுகள் மட்டும் நடைபெறுமே தவிர, நாம் முழு மனித வளர்ச்சியில் உச்சிகளை அடைவது கடினமாகி விடும்.  

முதல் பூமிக்கோள உச்சி மாநாடு 1992ம் ஆண்டு ரியோவில் நடைபெற்றபோது, Severn Cullis Suzuki என்ற 12 வயது சிறுமி உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் அச்சிறுமி சொன்ன கசப்பான உண்மைகள் இன்னும் இவ்வுலகில் நம்மை வாட்டி எடுக்கும் கேள்விகளாக ஒலிக்கின்றன. Rio+20 நடக்கவிருக்கும் நேரத்தில்... விதைகள் வழியே இறைமகன் இயேசு நமக்கு இன்று நற்செய்தியில் பாடங்கள் சொல்லித்தரும் நேரத்தில்... சிறுமி Severn சொன்ன ஒரு சில உண்மைகளுக்கு மீண்டும் செவி மடுப்போம்:
Severn அந்த உச்சி மாநாட்டில் சொன்னவை உலகில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. The Little Girl Who Shocked World Leaders Into Silence 'உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி' என்ற தலைப்பில் YouTubeல் இந்தச் சிறுமியின் உரை இன்றும் காணக் கிடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் நேரம் ஒதுக்கி, இவ்வுரையைக் கேளுங்கள். இதோ Severn Suzukiயின் உரையில் இருந்து ஒரு சிலப் பகுதிகள்:
நானும் என் நண்பர்கள் மூவரும் எங்கள் சொந்த முயற்சியில் 6000 மைல்கள் கடந்து வந்திருக்கிறோம் உங்களைச் சந்திப்பதற்கு. நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.
வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. இவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாளும் நான் கேட்டு வருகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது.

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.
இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.
காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.
உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.

Severn Suzuki பேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர் குற்ற உணர்வோடு அந்தச் சிறுமியை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உண்மைகளைப் பேசினாள் அச்சிறுமி.
நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம். பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர். தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.
நான் சிறுமிதான். ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க முடியும், நமது இயற்கையை காக்க முடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே; ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?

குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:
மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;
மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;
நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;
மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;
எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது...
என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு, நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”

இறுதியாக, அச்சிறுமி அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தாள்.

நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளாகிய எங்களுக்கு,  நல்லவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எவ்வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.
பயந்து கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும் என்று சொல்லி குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும் என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள்.  இது நான் உங்கள் முன் வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவி மடுத்ததற்கு நன்றி.

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள் அந்தச் சிறுமி. இது நடந்து இப்போது 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. Severn Suzuki அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள் இன்றும் நமக்கு எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது. மனிதச்சமுதாயம் இன்னும் இயற்கைக்கு இழைத்து வரும் அழிவுகளை நிறுத்தாததால், சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நமக்கு மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. கேட்கச் செவி உள்ளவர்கள்தாமே நாம்... இந்த எச்சரிக்கையைச் சரியாகக் கேட்டிருக்கிறோமா?

10 June, 2012

Love Feast அன்புத் திருநாள்


Jesus Breaking Bread


The Feast of the Body and Blood of Christ. Most of us would have received our First Holy Communion while in elementary school. At that time, either our Parish Priests or some kind-hearted Nuns would have helped us prepare for this great moment. Part of this preparation is the catechism class, usually filled with stories. If we have not out-grown these stories, we are blessed indeed! I do remember quite a few of these stories. I do also have very many lovely memories of the way Corpus Christi processions were held in my parish and, later, in other places during my Jesuit life. All these stories and all these memories come flooding to my mind while I reflect on this Feast.
This Feast is probably THE MOST SIGNIFICANT FEAST to tell us what God’s love is all about. In any love experience, the best response a person can give is to enjoy the experience and not experiment with it or analyse it. If one were to raise questions about love… the how and why of love, then we would almost lose love.

All through human history, many theologians and dogmatic experts have raised questions about the ‘transubstantiation’. How is Christ present in the two species – bread and wine? Many treatises have been written as an answer to this question. I feel more at home to raise a different type of question. Instead of raising the question about the ‘how’ of this Mystery, I feel comfortable to raise the question ‘why’. Why is Christ present in bread and wine? Here is my simple answer to this question: First, bread and wine are the simple, staple food of the Israelites. Jesus wanted to leave his presence with us in the most ordinary, essentials of our daily life. Second, once food is taken, it gets integrated as our own body and blood. As food is integrated with one’s body, Jesus would like to become integrated with human beings. This answer may not measure up to be considered a ‘theological treatise’; but it makes some sense to me.

Instead of filling our minds with questions and answers about Christ’s real presence, we shall fill our hearts with some of the inspiring incidents related to Christ’s Real Presence in the lives of great souls.

Fr Pedro Arrupe S.J., who was Superior General of the Society of Jesus for fifteen years, narrates how he had personally met Jesus and decided to follow him.
Pedro was a brilliant student of medicine, winning first prizes in his studies at the University of Madrid… In October 1926, nineteen year old Pedro went to Lourdes as a volunteer. One day he accompanied the procession in front of the Grotto, walking beside a mother who was pushing a wheel-chair in which sat her 26 year old son, a polio victim, his body crippled and completely deformed…. Then the Bishop came with the Blessed Sacrament, and made the sign of the Cross with it over the boy. At that instant, the boy leapt from his chair completely cured.
Pedro said: “I returned to Madrid; the books kept falling from my hands. My fellow students asked me: ‘What’s happening to you? You seem dazed!’ Yes, I was dazed by the memory which upset me more each day; only the image of the Sacred Host raised in blessing and the paralyzed boy jumping up from his chair remained fixed in my heart”
Three months later Pedro gave up his medicine studies and entered the Novitiate of the Society of Jesus at Loyola, to a life of ‘distinguished service as a Jesuit’.

The first atom bomb on August 6, 1945, destroyed Hiroshima. The Jesuit novitiate in a suburb of that city was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain.
In the midst of this broken humanity, the novice master Fr Pedro Arrupe celebrated Mass the very next day of the disaster. “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!”
(Hedwig Lewis S.J., - At Home with God)

The former archbishop of San Francisco, John Quinn, loves to tell the story of the arrival of Mother Teresa and her Missionaries of Charity to open their house in the city. Poor Archbishop Quinn had gone to great lengths to make sure that their convent was, while hardly opulent, quite comfortable. He recalls how Mother Teresa arrived and immediately ordered the carpets removed, the telephones, except for one, pulled out of the wall, the beds, except for the mattresses taken away, and on and on. Explained Mother Teresa to the baffled archbishop, “All we really need in our convent is the tabernacle” (Msgr. Timothy M Dolan - Priests of the Third Millennium, 2000).

Walter Ciszek was the son of Polish immigrants, born in a coal-mining town in Pennsylvania in 1904. He had a rough child hood – and was even a member in a gang. So his family was shocked when he announced that he wanted to become a priest. Young Walter ended up joining the Jesuits, and went to the Soviet Union to serve as a missionary. For a while, he worked as a logger, ministering to people privately, trying to avoid arrest.
But in 1941, he was arrested and charged, falsely, with working as a spy for the Vatican. He spent the next 23 years in prison – sometimes in solitary confinement, sometimes in a gulag, at times doing hard labor. Despite that, he found ways to celebrate mass – often at tremendous risk. Years later, Fr. Ciszek wrote about it.
He described in painstaking detail how the prisoners would observe the Eucharistic fast, often going without breakfast, working all morning on an empty stomach, so they could receive communion. A priest would gather them in an assigned spot – everybody, even the priest, wearing rumpled work clothes. And there he would take a small piece of bread and a few drops of wine and transform them into the body and blood of Christ.
As he wrote: “In these primitive conditions, the Mass brought you closer to God than anyone might conceivably imagine. The realization of what was happening on the board, box, or stone used in the place of an altar penetrated deep into the soul.”
And he explained: “Many a time, as I folded up the handkerchief on which the body of our Lord had lain, and dried the glass or tin cup used as a chalice, the feeling of having performed something tremendously valuable for the people of this Godless country was overpowering. I was occasionally overcome with emotion for a moment as I thought of how God had found a way to follow and to feed these lost and straying sheep in this most desolate land…I would go to any length, suffer any inconvenience, run any risk to make the bread of life available to these men.”
“Do this in remembrance of me.”

The Vietnamese Jesuit Joseph Nguyen-Cong Doan, who spent nine years in labour camps in Vietnam, relates how he was finally able to say Mass when a fellow priest-prisoner shared some of his own smuggled supplies. “That night, when the other prisoners were asleep, lying on the floor of my cell, I celebrated Mass with tears of joy. My altar was my blanket, my prison cloths my vestments. But I felt myself at the heart of humanity and of the whole of creation.” (Msgr. Timothy M Dolan - Priests of the Third Millennium, 2000).  

Let us set aside questions and theories about the Blessed Sacrament and try to personalise the deep experience of these great souls. Let us celebrate the Loving, Abiding Presence of Christ in our lives!


இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு இவர் நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தக் கொடுமையின்போது, அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசுசபை நவதுறவியர் இல்லம் பெரும் சேதமின்றி தப்பித்தது. அதன் கதவு சன்னல்கள் எல்லாம் உடைந்தாலும் கட்டிடம் ஓரளவு உறுதியாய் நின்றது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்த இல்லத்தின் கோவிலில் பேத்ரோ அருப்பே திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:


"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்று அருள்தந்தை பேத்ரோ அருப்பே தன் நினைவுகளை எழுதியுள்ளார்.

அருள்தந்தை அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்லாமல், வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, Nakamura San என்ற இளம்பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம்பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே, கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம், "சாமி, எனக்குத் திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட Nakamura San சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.
ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத திருநற்கருணை பரிமாற்றம் இரண்டையும் அருள்தந்தை அருப்பே தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா.

நம்மில் பலர் சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குத்தந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப்பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள் இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறுபெற்றவர்கள். கதைகள் வழியே நாம் கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஆழமாக, நீண்ட காலத்திற்கு நம்மைப் பாதிக்கும் சக்தி பெற்றவை. கதைகளுக்குள்ள இந்தச் சக்தி அறிவியல், இறையியல் பாடங்களுக்கு உள்ளனவா என்பது சந்தேகம்தான்.

இயேசுவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா, அன்பைக் கொண்டாடும் ஒரு திருவிழா என்பதை அனைவரும் அறிவோம். அன்பு, இதயத்தைச் சார்ந்த ஓர் அனுபவம். அறிவுசார்ந்த விளக்கம் அல்ல. ஒருவர் நம்மீது அன்பு காட்டும்போது, அந்த அன்பை அனுபவிப்பது சிறந்த ஒரு பதில். அதற்குப் பதிலாக, அந்த அன்பு எப்படி எழுந்தது ஏன் எழுந்தது என்றெல்லாம் கேள்விகள் கேட்கும்போது, அங்கு அன்பு காணாமல் போய்விடும். கேள்விகள் கேட்காமல் அன்பைச் சுவைக்க அழைப்பு விடுக்கும் இந்த விழாவின் மையமான மறையுண்மையைக் குறித்தும் பல நூற்றாண்டுகளாக, பல இறையியல் அறிஞர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அவர்கள் எழுப்பிய கேள்வி: எப்படி அப்பத்தின், இரசத்தின் வடிவில் இயேசு பிரசன்னம் ஆகமுடியும் என்ற கேள்வி. இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்ற இறையியல் விளக்கங்களைக் காட்டிலும், ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அவை நம் உடலின் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய உணவாக, நாம் தினமும் உண்ணும் உணவாக, நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்தக் கொடையை, இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே, இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா.

இணைபிரியாமல் நம்முடன் தங்கியிருக்கும் இயேசுவின் இந்த பிரசன்னத்தை உறுதி செய்யும் வகையில் பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ வீர உள்ளங்கள் தங்கள் உயிரையும் இழக்க தயாராக இருந்தார்கள். அவருக்காக இத்தனை நூற்றாண்டுகள் உழைக்கவும் முன்வந்தார்கள். இந்தப் பெரும் உள்ளங்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள வாழ்வு அனுபவங்களுடன் நம் சிந்தனைகளை நாம் இன்று நிறைவு செய்வோம்:

வியட்நாமில் சிறைபடுத்தப்பட்டு கடின உழைப்பு முகாமில் ஒன்பது ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார் இயேசுசபை குரு Joseph Nguyen-Cong Doan. அந்த முகாமில், அவரோடு சிறைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குரு சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த அப்பம் இரசம் இவைகளை இயேசுசபை குருவுடன் பகிர்ந்து கொண்டார். இரவில் மற்றவர்கள் படுத்து உறங்கும் வேளையில், எழுந்து நின்றால், அல்லது, அமர்ந்திருந்தால், சிறைக்காவலர்கள் கண்களில் படக்கூடும் என்ற ஆபத்தால், Joseph படுத்தபடியே ஆற்றிய திருப்பலிகளைப் பற்றி பின்னர் மற்றவர்களுக்குச் சொன்னார். தன் நெஞ்சை ஒரு பீடமாகப் பயன்படுத்தி, தன் சிறை உடுப்புக்களை தன் பூசை உடுப்புக்களாக கருதி அவர் ஆனந்த கண்ணீர் போங்க ஆற்றிய அந்தத் திருப்பலிகளைப்பற்றி மற்றவர்களுக்குச் சொன்னார்.

San Francisco உயர்மறைமாவட்டத்தின் பேராயர் John Quinn, தன் மறைமாவட்டத்தில் உழைக்க அருளாளர் அன்னை தெரேசாவையும் சில சகோதரிகளையும் அழைத்திருந்தார். அருட்சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஒரு வீட்டை தாயரித்திருந்தார். அன்னை தெரேசா அங்கு வந்தபோது, அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். வீட்டின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை எடுக்கச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த திரை சீலைகளை எடுக்கச் சொன்னார். வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து தொலைபேசிகளுக்குப் பதில் ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி அவர் ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம் குறைத்தபின், பேராயரிடம், "ஆயரே, இந்த வீட்டில் எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே." என்று சொன்னாராம். இறைமகன் இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும் என்று வாழ்ந்த அன்னை தெரேசா, உலகில் உருவாக்கிய மாற்றங்களை நாம் அனைவரும் அறிவோம்.

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் புனித Isaac Joguesம் ஒருவர். இவர் தொடர்ந்து அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார். இந்த நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கைகளில் Isaac Jogues உயர்த்திப் பிடித்தது கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

இப்படி கோடான கோடி மக்களின் மனங்களில் இத்தனை நூறு ஆண்டுகளாய் வீரத்தை, தியாகத்தை, அனைத்திற்கும் மேலாக, அன்பை வளர்த்துள்ள கிறிஸ்துவின் பிரசன்னம் என்ற மறையுண்மைக்கு முன், தாழ்ந்து, பணிந்து வணங்குவோம். இறைமகன்இயேசு, தன் திருஉடல் திருஇரத்தத்தின் வழியாக விட்டுச் சென்றுள்ள அன்பையும், தியாகத்தையும் வாழ்வாக்க முனைவோம்.