31 March, 2020

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 6


Desert oasis - amazing nature desert

விதையாகும் கதைகள் : தனியே விண்ணகம் செல்வதைவிட...

பாலை நிலத்தில் இரு நண்பர்கள் நடந்து சென்றனர். பசியும், தாகமும் அவர்களை வாட்டியெடுத்தன. அவர்கள் பயணம் செய்த வழியெங்கும் பலர், பசியாலும், தாகத்தாலும் களைத்து, மயங்கிக்கிடந்ததைக் கண்டனர். அடுத்த நாள், அவ்விரு நண்பர்களும், சற்று தூரத்தில் ஒரு சுவரைக் கண்டனர். எட்டிப்பார்த்தபோது, சுவருக்கு மறுபக்கம், அழகியதொரு நீரோடையும், அதன் இரு கரைகளில், பழ மரங்களும் இருந்ததைக் கண்டனர்.
அவ்விருவரில் ஒருவர், "ஓ, இதுவன்றோ விண்ணகம்!" என்று கூச்சலிட்டபடி, அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து, நீரோடையை நோக்கி ஓடினார். மற்றொருவர், தான் வந்த வழியே திரும்பி ஓடினார். தான் கண்ட விண்ணகத்திற்கு மற்றவர்களையும் அழைத்துவர, அவர் திரும்பிச் சென்றார்.
தனியே விண்ணகத்தை அடைவதைவிட, மற்றவர்களோடு இணைந்து அடைவது மேலானது.

“I thirst”

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 6

இயேசு சிலுவையில் சொன்ன இறுதி ஏழு வாக்கியங்களில், அவர் கூறிய, "தாகமாயிருக்கிறது" என்ற கூற்றை, இன்றைய விவிலியத்தேடலின் மையமாக்குவோம்.
கல்வாரியில் நிகழ்ந்ததாய் நான்கு நற்செய்திகளும் பதிவு செய்துள்ள கூற்றுகளைச் இணைத்துப்பார்த்தால், இயேசுவுக்கு, கல்வாரியில், பானங்கள், இருமுறை கொடுக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளலாம். முதல்முறை, இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை, அவர் குடிக்க மறுத்தார். இரண்டாம் முறை, அவரே, தன் தாகத்தை எடுத்துச்சொன்னார்.
பாரமானச் சிலுவையைச் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து, விழுந்து, எழுந்து வந்த இயேசு, கல்வாரியை அடைந்ததும், அவருக்கு, பானம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும் ஒரு சில வேறுபாடுகளுடன் கூறப்பட்டுள்ளது:
மத்தேயு 27:33-34
'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.
இந்நிகழ்வைக் கூறும் நற்செய்தியாளர் மாற்கு, இயேசுவுக்கு "வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசம்" கொடுக்கப்பட்டது என்றும், அதை இயேசு குடிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். (காண்க - மாற்கு 15:22-23)

கசப்பு கலந்த, அல்லது, வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தை இயேசு குடிக்க விரும்பவில்லை. காரணம்?... அந்த இரசம், அதிக குடிபோதையைத் தரும்; வழக்கமாய் அந்தப் பானம், உடல் வலியை மறக்கக் குடிக்கப்படும். இயேசு அடைந்த வேதனையைப் பார்த்து உரோமைய வீரர்களுக்கே இரக்கம் பிறந்திருக்க வேண்டும். அவர் வலியைக் குறைக்க, அந்த வலியை அவர் மறக்க உதவும் எண்ணத்துடன், அந்த இரசத்தை வீர்ர்கள் கொடுத்தனர். இயேசு அதை மறுத்தார். தான் ஏற்றுக்கொண்ட துன்பத்தை, இறுதிவரை, முழுமையாக நிறைவேற்றும் எண்ணம் இயேசுவுக்கு.

துன்பத்தை உவந்து ஏற்கும் கடவுளைப்பற்றி சிந்திக்கலாம். வேதனையுறும் கடவுள், வலியில் துடிக்கும் கடவுள்... என்ற சொற்றொடர்களை எண்ணிப்பார்க்கவே தயங்குகிறோம். பழைய ஏற்பாட்டில், கடவுளின் துன்புறும் ஊழியனைப்பற்றி இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது:
எசாயா 53: 4-8
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.... நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.
இறைவாக்கினர் எசாயாவின் இச்சொற்கள் இயேசுவை முன்னறிவித்த சொற்கள் என்று கூறுகிறோம். கடவுளின் ஊழியன் துன்பப்படலாம், கடவுளே துன்பப்படலாமா? படலாம். துன்பத்தை, எதிர்மறையான, குறையுள்ள ஒரு கூறாகப் பார்ப்பதால்தான் கடவுளோடு அதைத் தொடர்புபடுத்தத் தயங்குகிறோம். ஆனால், துன்பத்தை, நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்த்தால், அதன் பயனை உணர்ந்தால், துன்புறும் கடவுளையும் புரிந்து கொள்ளமுடியும்.

வலியின்றி குழந்தை பெறுவதற்கு பல வழிகள் உள்ளபோதும், வலியோடு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயைக் கேட்டால், துன்பத்திற்கு அர்த்தம் உண்டு என்று சொல்வார். ஒவ்வொருவரின் வாழ்விலும், எதையாவது, வெற்றிகரமாக முடிக்கும்போது, அந்தச் சாதனைக்குப் பின்னணியாக இருந்த முயற்சிகள், துன்பங்கள் அர்த்தமுள்ளவை என்பது புரியும். முயற்சியும், துன்பமும் இல்லாமல் வரும் வெற்றி, இலவசமாகக் கிடைத்த, அல்லது இலாட்டரியில் விழுந்த பரிசுத்தொகை போல இருக்கும்.

பல நேரங்களில் வாழ்வில் எவ்வளவு துன்பப்பட்டாலும், வெற்றிகள் வராது. துன்பம் ஒன்றையே மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும். அத்துன்பங்களைப் புரிந்துகொள்ள, துன்புறும் கடவுள் என்ற எண்ணம், நமக்கு உதவியாக இருக்கும். துன்புறும் கடவுள் ஒருவர் இருப்பதாலேயே, நம் துன்பங்களுக்கு நாம் அர்த்தம் தேடிக்கொள்ள முடிகிறது. இல்லையெனில், துன்பத்தில் நொறுங்கி, உருக்குலைந்து, அனைவரும் நம்பிக்கை இழந்து, அலைந்து கொண்டிருப்போம்.
வலியை மறக்க கொடுக்கப்பட்ட திராட்சை இரசத்தை மறுத்த இயேசுவின் உறுதி, துன்புறும் பல கோடி மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது என்று பெருமைப்படுகிறோம். அதே நேரம், வலியை மறக்க, மனித குலம் மேற்கொள்ளும் பல முயற்சிகளை எண்ணி கவலையும் பட வேண்டியிருக்கிறது.

தினமும் மிகக் கடினமான உடல் உழைப்பை மேற்கொள்ளும் பலரை, இந்நேரத்தில் நாம் நினைத்துப்பார்க்கலாம். நாள் முழுவதும் உடலை வருத்தி, கசக்கிப் பிழியும் வேலைகளை மேற்கொள்பவர்கள், கோடிக்கணக்கான ஏழைகள். மாலையானதும், கையில் அன்றையக் கூலி கிடைத்ததும், தங்கள் உடல் வலிகளை மறக்க, அவர்களில் ஒரு சிலர் தேடிச்செல்வது சாராயம். இந்தியாவின் பெருநகரங்களில், சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அந்தப் பணியில் இறங்கும் முன் சாராயம் குடிப்பதையும் பார்த்திருப்பீர்கள். தாங்கள் இறங்கிப் பணி செய்யும் அந்தச் சூழலுக்கு மரத்துப் போகும்படி அவர்கள் சாராயத்தைக் குடிக்க வேண்டியுள்ளது.

பணிச்சூழல் மரத்துப் போனதுபோல் தோன்றினாலும், பணிமுடிந்து உடல் வலி தீர்ந்தது போல் தோன்றினாலும், அவர்கள் பருகும் சாராயத்தின் பின் விளைவாக, அவர்கள் உடல் நலத்தில் ஏற்படும் விபரீதங்கள், குடும்பங்களில் ஏற்படும் வேதனைகள் என்று, பட்டியல் நீண்டுவிடும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்களது இந்த சாராயத் தாகம் கண்டனத்திற்குரியதாய் நமக்குத் தோன்றும். கண்டனத்திற்கு பதில், கருணையுள்ள புரிந்துகொள்ளுதல் நமக்குத் தேவை.

கண்டனத்திற்குரியவர்கள் இவர்கள் அல்ல. இந்த ஏழைகளின் உடல் வேதனையை மூலதனமாக்கி, சாராயம் காய்ச்சும், அதுவும் தவறான வகையில், கீழ்த்தரமான சாராயம் காய்ச்சும் சாராய மன்னர்களும், மந்திரிகளும் கண்டனத்திற்குரியவர்கள். இந்தத் தரக்குறைவான சாராயத்தைக் குடித்து உயிர் இழப்பவர்கள், பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறதேயொழிய, குறைவதாகத் தெரியவில்லை. அதேபோல், இந்த ஏழைகளின் குடும்ப வேதனைகளை மூலதனமாக்கி, வட்டிக்குக் கடன் கொடுத்து இந்த ஏழைகளை உயிரோடு விழுங்கும் சுறாமீன்களும் கண்டனத்திற்குரியவர்கள்.

தன் உடல் வலிகளை மறக்க அளிக்கப்பட்ட மதுவை குடிக்க மறுத்த இயேசு, குடிப் பழக்கத்தின், சாராய தாகத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஏழைகளின் வாழ்விலும் குறுக்கிட்டு உடல் வேதனைகளைச் சமாளிக்கத் தேவையான மன வலிமையையும், அந்த வேதனைகளிலிருந்து மீள்வதற்கான நல் வழிகளையும், அவர்களுக்குக்  காட்டவேண்டும் என செபிப்போம்.

முதல் முறை கொடுக்கப்பட்ட மதுவை மறுத்தார் இயேசு. இம்முறை தாகமாய் இருக்கிறது என்று விண்ணப்பித்தார். அந்நிகழ்வை யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்.
யோவான் 19: 28-29
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே, இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறைய, புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அதை, அவர்கள், அவரது வாயில் வைத்தார்கள்.
இறை மகனுக்கு உண்டான தாகம் மனித குலம் அனுபவிக்கும் தாகங்களை, அவற்றை நாம் தீர்த்துக்கொள்ளும் வழிகளைச் சிந்திக்க ஒரு வாய்ப்பாக உள்ளது.

இயேசு சிலுவையில் கூறிய ஏழு வாக்கியங்களில், 'தாகமாய் இருக்கிறது' என்ற இவ்வாக்கியமே, மிகவும் குறுகியது. அதே வேளை, ஏனைய வாக்கியங்களைவிட, இந்த வாக்கியமே, இயேசுவின் மனித இயல்பை வெளிக்கொணர்ந்த வாக்கியமாக உள்ளது என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
இவ்வுலகின் பெரும் பகுதியை, கடல், நதி, ஏரி, குளம் என்று தண்ணீராலும், உலகைச் சுற்றியுள்ள விண்வெளியை, நீர்த்துளிகளாலும் நிறைத்துள்ள இறைவன், சிலுவையில், தாகத்தால் துடிப்பதைக் காணும்போது, அவர், எவ்வளவு தூரம் நம்மில் ஒருவராகக் கலந்திருந்தார் என்பதை உணர்கிறோம்.

'தாகமாய் இருக்கிறது' என்று கூறிய இயேசுவுக்கு, 'புளித்த திராட்சை இரசம்' வழங்கப்பட்டது. இந்த இரசத்தைக் குறித்து, Clair Sauer என்ற விவிலிய விரிவுரையாளர் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:
இயேசு ஆற்றிய முதல் புதுமை நினைவில் உள்ளதா? கானா திருமண விருந்தில் தண்ணீரிலிருந்து உயர்ந்த தரமான திராட்சை இரசத்தை இயேசு உருவாக்கினார் (காண்க - யோவான் 2:11). தன் பணிவாழ்வின் துவக்கத்தில், சுவைமிகுந்த திராட்சை இரசத்தை வழங்கிய இயேசுவுக்கு, அவரது பணிவாழ்வின் இறுதியில், 'புளித்த திராட்சை இரசம்' வழங்கப்பட்டது.

தாகத்தில் துடிக்கும் இயேசுவைப்பற்றி தியானிக்கும்போது, நமக்கு உருவாகும் தாகங்களையும், அவற்றைத் தணிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் குறித்து சிந்திப்பது பயனளிக்கும். தாகங்களை வெல்வதற்கு, அப்படி வெல்லமுடியாத தாகங்களைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்வதே வாழக்கைக்குத் தேவையான, பயனுள்ள பாடங்கள். வியாபார உலகம், விளம்பர உலகம் கற்றுத்தரும் பாடங்கள் முற்றிலும் வேறுபட்டவை. தாகத்தை வெல்வதற்குப்பதில், எவ்வழியிலாவது, அத்தாகத்தை தணித்துக்கொள்வதற்கு, இவ்வுலகம், பல குறுக்கு வழிகளைச் சொல்லித் தருகிறது.

இந்த உலகம் சொல்லும் தாகம் வெறும் உடல் தாகம் அல்ல. மாறாக, நம்மில் தோன்றும் பலவகைத் தாகங்கள். பொருளுக்கு, பதவிக்கு, செல்வத்திற்கு, பெருமைக்கு, அழகுக்கு, ஆசைகளுக்கு... என்று, பலவகைகளிலும் நம்மில் எழும் தாகங்களுக்குக் கீழ்ப்படியச் சொல்கிறது இந்த உலகம். இந்தத் தாகங்களைத் தீர்க்க போட்டிகள் எழலாம். அந்தப் போட்டிகளில் பல கழுத்தறுக்கும் போட்டிகளாகவும் மாறலாம். அந்தக் கழுத்தறுப்பில் சிந்தும் இரத்தத்தைக் குடித்தும், நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பாடங்கள் சொல்லித்தரப்படுகின்றன, இந்த உலகத்தில்.
இப்படிப்பட்ட தாகங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய துணிவை நாம் பெறவேண்டும். அந்தத் துணிவு, இறுதியில், நம்மைச் சிலுவையில் கொண்டுபோய் நிறுத்தினாலும், அந்தச் சிலுவையிலும், மன உறுதியுடன் நிற்கவேண்டும். அத்தகையத் துணிவை, கல்வாரியில், சிலுவையில், தாகமாய் இருந்த வீரத் திருமகன் இயேசு, நமக்குத் தர வேண்டும் என்று, செபிப்போம்.


28 March, 2020

Pope’s meditation at the special ‘Urbi et Orbi’ திருத்தந்தையின் சிறப்பு ‘Urbi et Orbi’ தியான உரை

Pope Francis giving the special Urbi et Orbi blessing

Pope Francis conducted a special prayer service and Adoration of the Blessed Sacrament in St Peter’s Squre, on Friday, March 27, at 6 p.m. He stood before a deserted St Peter's Square to deliver an extraordinary Urbi et orbi blessing for an end to the corona virus pandemic. Near the entrance to the Basilica two special symbols of veneration were kept - the icon of Mary ‘Salus Populi Romani’, from the Basilica of Saint Mary Major, and the miraculous crucifix from the church of San Marcello. At the beginning of the service, Pope Francis gave a meditation on the calming of the storm from the Gospel of Mark (Mark 4:35-41). Here is the full text of the meditation proposed by Pope Francis:

“When evening had come” (Mk 4:35). The Gospel passage we have just heard begins like this. For weeks now it has been evening. Thick darkness has gathered over our squares, our streets and our cities; it has taken over our lives, filling everything with a deafening silence and a distressing void, that stops everything as it passes by; we feel it in the air, we notice in people’s gestures, their glances give them away. We find ourselves afraid and lost. Like the disciples in the Gospel we were caught off guard by an unexpected, turbulent storm. We have realized that we are on the same boat, all of us fragile and disoriented, but at the same time important and needed, all of us called to row together, each of us in need of comforting the other. On this boat… are all of us. Just like those disciples, who spoke anxiously with one voice, saying “We are perishing” (v. 38), so we too have realized that we cannot go on thinking of ourselves, but only together can we do this.

It is easy to recognize ourselves in this story. What is harder to understand is Jesus’ attitude. While his disciples are quite naturally alarmed and desperate, he stands in the stern, in the part of the boat that sinks first. And what does he do? In spite of the tempest, he sleeps on soundly, trusting in the Father; this is the only time in the Gospels we see Jesus sleeping. When he wakes up, after calming the wind and the waters, he turns to the disciples in a reproaching voice: “Why are you afraid? Have you no faith?” (v. 40).

Let us try to understand. In what does the lack of the disciples’ faith consist, as contrasted with Jesus’ trust? They had not stopped believing in him; in fact, they called on him. But we see how they call on him: “Teacher, do you not care if we perish?” (v. 38). Do you not care: they think that Jesus is not interested in them, does not care about them. One of the things that hurts us and our families most when we hear it said is: “Do you not care about me?” It is a phrase that wounds and unleashes storms in our hearts. It would have shaken Jesus too. Because he, more than anyone, cares about us. Indeed, once they have called on him, he saves his disciples from their discouragement.

The storm exposes our vulnerability and uncovers those false and superfluous certainties around which we have constructed our daily schedules, our projects, our habits and priorities. It shows us how we have allowed to become dull and feeble the very things that nourish, sustain and strengthen our lives and our communities. The tempest lays bare all our prepackaged ideas and forgetfulness of what nourishes our people’s souls; all those attempts that anesthetize us with ways of thinking and acting that supposedly “save” us, but instead prove incapable of putting us in touch with our roots and keeping alive the memory of those who have gone before us. We deprive ourselves of the antibodies we need to confront adversity.

In this storm, the façade of those stereotypes with which we camouflaged our egos, always worrying about our image, has fallen away, uncovering once more that (blessed) common belonging, of which we cannot be deprived: our belonging as brothers and sisters.

“Why are you afraid? Have you no faith?” Lord, your word this evening strikes us and regards us, all of us. In this world, that you love more than we do, we have gone ahead at breakneck speed, feeling powerful and able to do anything. Greedy for profit, we let ourselves get caught up in things, and lured away by haste. We did not stop at your reproach to us, we were not shaken awake by wars or injustice across the world, nor did we listen to the cry of the poor or of our ailing planet. We carried on regardless, thinking we would stay healthy in a world that was sick. Now that we are in a stormy sea, we implore you: “Wake up, Lord!”.

“Why are you afraid? Have you no faith?” Lord, you are calling to us, calling us to faith. Which is not so much believing that you exist, but coming to you and trusting in you. This Lent your call reverberates urgently: “Be converted!”, “Return to me with all your heart” (Joel 2:12). You are calling on us to seize this time of trial as a time of choosing. It is not the time of your judgement, but of our judgement: a time to choose what matters and what passes away, a time to separate what is necessary from what is not. It is a time to get our lives back on track with regard to you, Lord, and to others. We can look to so many exemplary companions for the journey, who, even though fearful, have reacted by giving their lives. This is the force of the Spirit poured out and fashioned in courageous and generous self-denial. It is the life in the Spirit that can redeem, value and demonstrate how our lives are woven together and sustained by ordinary people – often forgotten people – who do not appear in newspaper and magazine headlines nor on the grand catwalks of the latest show, but who without any doubt are in these very days writing the decisive events of our time: doctors, nurses, supermarket employees, cleaners, caregivers, providers of transport, law and order forces, volunteers, priests, religious men and women and so very many others who have understood that no one reaches salvation by themselves. In the face of so much suffering, where the authentic development of our peoples is assessed, we experience the priestly prayer of Jesus: “That they may all be one” (Jn 17:21). How many people every day are exercising patience and offering hope, taking care to sow not panic but a shared responsibility. How many fathers, mothers, grandparents and teachers are showing our children, in small everyday gestures, how to face up to and navigate a crisis by adjusting their routines, lifting their gaze and fostering prayer. How many are praying, offering and interceding for the good of all. Prayer and quiet service: these are our victorious weapons.

“Why are you afraid? Have you no faith”? Faith begins when we realise we are in need of salvation. We are not self-sufficient; by ourselves we flounder: we need the Lord, like ancient navigators needed the stars. Let us invite Jesus into the boats of our lives. Let us hand over our fears to him so that he can conquer them. Like the disciples, we will experience that with him on board there will be no shipwreck. Because this is God’s strength: turning to the good everything that happens to us, even the bad things. He brings serenity into our storms, because with God life never dies.

The Lord asks us and, in the midst of our tempest, invites us to reawaken and put into practice that solidarity and hope capable of giving strength, support and meaning to these hours when everything seems to be floundering. The Lord awakens so as to reawaken and revive our Easter faith. We have an anchor: by his cross we have been saved. We have a rudder: by his cross we have been redeemed. We have a hope: by his cross we have been healed and embraced so that nothing and no one can separate us from his redeeming love. In the midst of isolation when we are suffering from a lack of tenderness and chances to meet up, and we experience the loss of so many things, let us once again listen to the proclamation that saves us: he is risen and is living by our side. The Lord asks us from his cross to rediscover the life that awaits us, to look towards those who look to us, to strengthen, recognize and foster the grace that lives within us. Let us not quench the wavering flame (cf. Is 42:3) that never falters, and let us allow hope to be rekindled.

Embracing his cross means finding the courage to embrace all the hardships of the present time, abandoning for a moment our eagerness for power and possessions in order to make room for the creativity that only the Spirit is capable of inspiring. It means finding the courage to create spaces where everyone can recognize that they are called, and to allow new forms of hospitality, fraternity and solidarity. By his cross we have been saved in order to embrace hope and let it strengthen and sustain all measures and all possible avenues for helping us protect ourselves and others. Embracing the Lord in order to embrace hope: that is the strength of faith, which frees us from fear and gives us hope.

“Why are you afraid? Have you no faith”? Dear brothers and sisters, from this place that tells of Peter’s rock-solid faith, I would like this evening to entrust all of you to the Lord, through the intercession of Mary, Health of the People and Star of the stormy Sea. From this colonnade that embraces Rome and the whole world, may God’s blessing come down upon you as a consoling embrace. Lord, may you bless the world, give health to our bodies and comfort our hearts. You ask us not to be afraid. Yet our faith is weak and we are fearful. But you, Lord, will not leave us at the mercy of the storm. Tell us again: “Do not be afraid” (Mt 28:5). And we, together with Peter, “cast all our anxieties onto you, for you care about us” (cf. 1 Pet 5:7).


Pope Francis at St Peter’s Square

தியான உரையின் தமிழாக்கம்

கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து இவ்வுலகைக் காக்கவேண்டுமென்று, வத்திக்கான், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மார்ச் 27, கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு மாலை வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய தியான உரை:

இப்போது நாம் கேட்ட நற்செய்தி வாசகம், "அன்றொரு நாள் மாலை நேரம்" (மாற்கு 4:35) என்ற சொற்களுடன் ஆரம்பமானது. கடந்த சில வாரங்களாக, மாலை நேரமாகவே இருந்துவருகின்றது. அடர்ந்த இருள், நம் வீதிகளை, சதுக்கங்களை, நகரங்களைச் சூழ்ந்துள்ளது. இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள சீடர்களைப்போல நாம், எதிர்பாராத ஒரு புயலில் சிக்கி, அச்சம் கொண்டுள்ளோம். உலகெங்கும் வாழும் அனைவரும் இணைந்து, வலுவற்றதொரு படகில் பயணம் செய்வதைப்போல உணர்கிறோம்.

இந்நிகழ்வில், நம்மையே நாம் அடையாளம் கண்டுகொள்வது எளிது. ஆனால், இந்நிகழ்வில், இயேசுவின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. சீடர்கள் பயணித்த அந்தப் படகில், முதலில் நீரில் மூழ்கும் ஆபத்து நிறைந்த படகின் பின்புறத்தில் இயேசு இருக்கிறார். அங்கு இயேசு செய்வதென்ன? அந்தப் புயலிலும், அவர், தந்தை மீது கொண்ட நம்பிக்கையால், உறங்கிக் கொண்டிருக்கிறார். இயேசு உறங்கினார் என்பதை, இந்த ஒரே ஒரு முறை மட்டுமே நற்செய்திகள் கூறியுள்ளன. இயேசு விழித்தெழுந்து, காற்றையும், கடலையும் அமைதிப்படுத்தியபின், சீடர்களிடம், "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். (மாற்கு 4:40)

இயேசு கொண்டிருந்த நம்பிக்கையையும், சீடர்களிடம் காணப்பட்ட நம்பிக்கை குறைவையும் புரிந்துகொள்ள முயல்வோம். சீடர்கள், இயேசுவின் மீது நம்பிக்கை இழக்கவில்லை, அதனால்தான் அவர்கள் அவரிடம் உதவி கேட்டு குரல் எழுப்புகின்றனர். ஆனால், அவர்கள் எழுப்பிய குரலில், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" (4:38) என்று கூறுகின்றனர். தங்கள் மீது இயேசுவுக்கு கவலை இல்லை என்று கூறுகின்றனர். "எங்கள் மீது கவலையில்லையா?" என்று நம் குடும்பங்களில் கூறப்படும் சொற்கள், ஒருவரது உள்ளத்தை அதிகம் காயப்படுத்தும், உள்ளத்தில் புயலை உருவாக்கும். தன் சீடர்கள் கூறிய சொற்களைக் கேட்ட இயேசுவின் உள்ளம் காயப்பட்டிருக்கும். ஏனெனில், மற்ற அனைவரையும்விட, இயேசு, நம்மீது மிகுந்த அக்கறை கொண்டவர். சீடர்கள் இவ்வாறு கூறியதும், அவர்களை அவர் காப்பாற்றுகிறார்.

நம் சக்தியற்ற நிலையும், நம் தினசரி வாழ்வு, திட்டங்கள், மற்றும் பழக்க வழக்கங்களில் கடைபிடிக்கும் பொய்யான நம்பிக்கைகளும், புயல் வீசும் வேளையில் வெளியாகின்றன. நம்மை எது உண்மையிலேயே காப்பாற்றும் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், நாம் உருவாக்கிக்கொள்ளும் மனநிலைகள், வெளிச்சத்திற்கு வருகின்றன. நமது ஆன்மாக்களை எது ஊட்டி வளர்க்கும் என்பதை மறந்துவிட்டு, நாமாகவே உருவாக்கிக்கொண்ட முற்சார்பு எண்ணங்களை, இந்தப் புயல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. எதிர்ப்புக் கிருமிகளைச் சமாளிக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள தடுப்புச் சக்திகளை நாம் தொலைத்துவிடுகிறோம்.
தற்போது வீசும் இந்தப் புயலில், தான் என்ற அகந்தையின் வெளித்தோற்றத்தைக் காப்பாற்ற நாம் அணிந்திருந்த கவசங்கள் வீழ்ந்துவிட்டன. நாம் அனைவரும், சகோதரர், சகோதரிகளாக ஒருமைப்பட்டிருக்கவேண்டிய அந்த மேலான பொது உணர்வு, இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

"ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" ஆண்டவரே, உம்முடைய சொல், இந்த மாலை நேரத்தில், எங்கள் அனைவரிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எங்களைக் கண்காணிக்கிறது. எங்களைவிட நீர் அதிகமாக அன்புகூரும் இவ்வுலகில், சக்தி வாய்ந்தவர்களாய், எதையும் செய்யமுடியும் என்ற உணர்வுடன், இலாபத்தின் மீது பேராசை கொண்டு, நாங்கள் கண்மூடித்தனமான வேகத்தில் சென்றோம். நீர் எங்களைக் கடிந்துகொண்டதைப்பற்றி கவலைப்படவில்லை. உலகில் நிலவும் போர்களும், அநீதிகளும் எங்களை விழிப்படையச் செய்யவில்லை. காயப்பட்ட பூமியும், வறியோரும் எழுப்பும் அழுகுரலை நாங்கள் கேட்கவில்லை. இவ்வுலகம் நோயுற்றிருந்த வேளையில், நாங்கள் நலமாக இருப்போம் என்றெண்ணி, எங்கள் போக்கில் சென்றோம். இப்போது, புயல்வீசும் கடலிலிருந்து உம்மை நோக்கி வேண்டுகிறோம்: "ஆண்டவரே, விழித்தெழும்!"

"ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" ஆண்டவரே, எங்களை, நம்பிக்கையை நோக்கி அழைக்கிறீர். நீர் இருக்கிறீரா என்ற கேள்வியை எழுப்பும் நம்பிக்கை குறைவு அல்ல, மாறாக, உம்மை நம்பி, உம்மிடம் வருவதற்கு எங்களைத் தூண்டும் நம்பிக்கையை நோக்கி அழைக்கிறீர். தவக்காலத்தில் நீர் விடுக்கும் அழைப்பு தெளிவாக ஒலிக்கிறது: "மனம் திரும்புங்கள்!", "உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" (யோவேல் 2:12). சோதனை நிறைந்த இந்நேரத்தை, நல்ல தெரிவுகளைச் செய்யும் நேரமாகப் பற்றிக்கொள்ள எங்களை அழைக்கிறீர். இது, நீர் எங்களைத் தீர்ப்பிடும் நேரம் அல்ல, எங்களை நாங்களே தீர்ப்பிடும் நேரம்; எது தேவையானது, எது தேவையற்றது என்பதைத் தீர்மானிக்கும் நேரம். ஆண்டவரே, உம்மையும், அயலவரையும் நோக்கி எங்கள் வாழ்வுப் பயணத்தை மாற்றியமைக்கும் நேரம் இது.
இந்தப் பயணத்தில், மற்றவர்களுக்காகத் தங்களை வழங்கியோரின் எடுத்துக்காட்டை நாங்கள் காணமுடிகிறது. ஆவியானவரின் சக்தி, அவர்களை, தன்னலம் துறந்து பணியாற்ற வைத்துள்ளது. ஆவியானவரின் வாழ்வே மீட்பளிக்கிறது; அந்த வாழ்வே, அயலவருடன், குறிப்பாக, அனைவராலும் மறக்கப்பட்டவர்களுடன் எங்கள் வாழ்வும் பிணைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் தோன்றாத பலருக்காக உழைக்க ஆவியானவரால் தூண்டப்பட்ட பலர், இன்றைய நம் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை எழுதி வருகின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், பல்பொருள் அங்காடிகளில் பணியாற்றுவோர், சுத்தம் செய்வோர், போக்குவரத்துப் பணியாளர்கள், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோர்தன்னார்வத் தொண்டர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், இன்னும் பலர், தாங்களாகவே, தனித்தனியே, மீட்படையப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டவர்கள்.
மனிதரின் உண்மையான முன்னேற்றம் என்ன என்பதை மதிப்பிட, இப்போது உருவாகியுள்ள இந்தத் துன்ப வேளையில், இயேசு (இறுதி இரவுணவில்) கூறிய அருள்பணித்துவ செபத்தை நாம் உணர்கிறோம்: "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோவான் 17:21)
நம்மிடையே எத்தனையோ பேர், அச்சத்தை விதைப்பதற்குப் பதில், நாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய பொறுப்பை, பொறுமையுடன் விதைக்கின்றனர். நெருக்கடி வேளையில் ஒருவரது தினசரி வாழ்வை எப்படி சமாளிப்பது என்பதையும், எப்படி செபிப்பது என்பதையும், தங்கள் சொற்கள் மற்றும் செயல்களின் வழியே, தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் எத்தனையோ அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோர் உள்ளனர். உலகினர் அனைவரின் நலனுக்காக எத்தனையோ பேர் செபித்து வருகின்றனர். செபமும், மௌனமான பணியும், நம்மிடம் உள்ள வெற்றியளிக்கும் கருவிகள்.

"ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" நமக்கு மீட்பு தேவை என்பதை உணரும் அவ்வேளையில், நம்பிக்கை ஆரம்பமாகிறது. நாம் நம்மிலேயே நிறைவானவர்கள் அல்ல, நமக்கு ஆண்டவர் தேவை. பழங்காலத்தில், கடல்பயணிகளுக்கு திசைகாட்ட, விண்மீன்கள் தேவைப்பட்டதைப்போல், நமக்கு ஆண்டவர் தேவை.
நம் வாழ்க்கைப்படகில் இயேசுவை வரவேற்போமாக. நமது அச்சங்களை அவர் வெல்லும்வண்ணம், அவரிடம் அவற்றைக் கையளிப்போமாக. அவர் உடனிருக்கும்போது, படகு கவிழ்ந்துவிடாது என்று சீடர்கள் உணர்ந்ததுபோல், நாமும் உணர்வோமாக. நமக்கு நிகழும் அனைத்தையும், அவை தீமைகளாக இருப்பினும், அவற்றை நன்மைகளாக மாற்றுவது, கடவுளின் சக்தி. புயல்களில் அவர் அமைதியைக் கொணர்கிறார்; ஏனெனில், கடவுளோடு இருக்கும்போது, வாழ்வு ஒருபோதும் சாகாது.

நம்மைச்சுற்றி அனைத்தும் வீழ்வதுபோல் தோன்றும் இவ்வேளையில், ஒருங்கிணைப்பையும், நம்பிக்கையையும், நமக்குள் தட்டியெழுப்ப, ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார். உயிர்ப்பின் நம்பிக்கையை ஆண்டவர் நம்மில் விழித்தெழச் செய்கிறார். மீட்பளிக்கும் அவரது சிலுவை, நமது நங்கூரம்; அதுவே, நம் படகை வழிநடத்தும் சுக்கான். அவரது சிலுவையால் நாம் நலமடைந்துள்ளோம்; மீட்பளிக்கும் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்காது என்பதே நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை.
அவர் உயித்துவிட்டார், நம்முடன் வாழ்கிறார் என்ற அறிக்கையை, தற்போதைய துன்பம், தனிமை, இழப்பு ஆகியவற்றின் நடுவே மீண்டும் கேட்போமாக. வாழ்வை மீண்டும் கண்டுகொள்ள சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார். மங்கி எரியும் திரியை அணைத்துவிடாமல், (காண்க. எசாயா 42:3) நம்பிக்கையை மீண்டும் தூண்டிவிடுவோமாக.

சிலுவையை அணைத்து ஏற்றுக்கொள்வதன் பொருள், இன்றைய துயரங்களை ஏற்றுக்கொள்ளும் துணிவைப் பெறுவதாகும். அதிகாரத்தையும், சொத்துக்களையும் அடைவதற்கு உள்ள ஆவலை விடுத்து, உள்ளத்தைத் தூண்டும் ஆவியானவரைப் பெறுவதாகும். அனைவரையும் வரவேற்று விருந்தோம்புவதற்கு ஏற்ற இடத்தை உருவாக்கும் துணிவைப் பெறுவதாகும். நம்பிக்கையை அணைத்துக்கொள்வதற்காக, ஆண்டவரை அணைத்துக்கொள்கிறோம்: அதுவே, நம் நம்பிக்கையின் சக்தியாகும், அதுவே, நம்மை அச்சத்திலிருந்து விடுவித்து, எதிர்நோக்கை அளிக்கிறது.

"ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பேதுருவின் பாறையை ஒத்த நம்பிக்கையை எடுத்துரைக்கும் இவ்விடத்தில், மக்களின் நலமாகவும், புயல் சூழ்ந்த கடலின் விண்மீனாகவும் விளங்கும் மரியாவின் பரிந்துரை வழியே, உங்கள் அனைவரையும் ஆண்டவரிடம் ஒப்படைக்கிறேன். உரோம் நகரையும், இவ்வுலகையும் அணைப்பதுபோல் அமைந்துள்ள இச்சதுக்கத்திலிருந்து, இறைவனின் ஆறுதல் வழங்கும் ஆசீரும், அரவணைப்பும் உங்கள் மீது இறங்கி வருவதாக.
ஆண்டவரே, இவ்வுலகை ஆசீர்வதியும். எங்கள் உடல்களுக்கு நலமும், உள்ளங்களுக்கு ஆறுதலும் வழங்கும். "அஞ்சாதீர்கள்" என்று நீர் எங்களிடம் சொல்கிறீர். இருப்பினும் எங்கள் நம்பிக்கை, வலுவற்றதாய், அச்சம் நிறைந்ததாய் உள்ளது. ஆனால், ஆண்டவரே, நீர் எம்மை புயலின் தாக்குதலுக்கு விட்டுவிட மாட்டீர். "நீங்கள் அஞ்சாதீர்கள்" (மத். 28:5) என்று எங்களிடம் மீண்டும் சொல்லும்; நாங்களும் பேதுருவுடன் இணைந்து,  "எங்கள் கவலைகளையெல்லாம் உம்மிடம் விட்டுவிடுகிறோம். ஏனென்றால், நீர் எங்கள் மேல் கவலை கொண்டுள்ளீர்" (காண்க. 1 பேதுரு 5:7)

இந்த உரையைத் தொடர்ந்து, புனித பேதுரு பெருங்கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் திருநற்கருணை ஆராதனை நிகழ்ந்தது. இந்த ஆராதனைக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை வைக்கப்பட்டிருந்த கதிர் பேழையைச் சுமந்து, பெருங்கோவில் வாசலில் நின்று, 'ஊருக்கும் உலகுக்கும்' (Urbi et Orbi) என்று பொருள்படும் 'ஊர்பி எத் ஓர்பி' என்ற சிறப்பு ஆசீரை வழங்கினார். பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவன்றும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்றும் வழங்கப்படும் 'ஊர்பி எத் ஓர்பி' ஆசீர், இவ்வாண்டு, கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இவ்வுலகைக் காக்குமாறு, மார்ச் 27, வெள்ளியன்று வழங்கப்பட்டது. இந்த ஆசீரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியவேளை, புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கம் காலியாக இருந்தபோதிலும், இந்த ஆசீர், உரோம் நகரையும், இவ்வுலகையும் சென்றடைந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம்.
மேலும், தொலைக்காட்சி வழியே, இந்த செப வழிபாட்டில் கலந்துகொண்டு, ஆசீரைப் பெற்றவர்கள் அனைவருக்கும் பரிபூரண பலன் உண்டு என்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது.


27 March, 2020

Lessons to cherish LIFE உயிர்களைப் பேணும் பாடங்கள்


Lazarus Is Resurrected

5th Sunday of Lent

As most of us are locked up within our houses, and, as the number of people getting sick or dying due to COVID-19, is making us alarmed every day, we are in need of hearing the reassuring words spoken by the Sovereign Lord in the book of Prophet Ezekiel. Fortunately, these words are given to us in the first reading of today’s liturgy:
This is what the Sovereign LORD says: My people, I am going to open your graves and bring you up from them; I will bring you back to the land of Israel. Then you, my people, will know that I am the LORD, when I open your graves and bring you up from them. I will put my Spirit in you and you will live, declares the LORD. (Ez. 37: 12-14)
Prophet Ezekiel records these words of hope after his famous vision of the valley, in which, dry bones get clothed in flesh and skin and rise up as a mighty army. (Ez. 37: 1-11)

Let us pray that the Lord of all Life opens the grave created by COVID-19 and bring us all back to live in a more humane, more just and more loving world. The theme of this Sunday is LIFE. We begin our reflections with the story of Jeremy, a ‘special child’!

Jeremy was born with a twisted body, a slow mind and a chronic, terminal illness that had been slowly killing him all his young life. Still, his parents had tried to give him as normal a life as possible and had sent him to St. Theresa's elementary school. At the age of 12, Jeremy was only in second grade, seemingly unable to learn.
His teacher, Doris Miller, often became exasperated with him.  He would squirm in his seat, drool and make grunting noises. At other times, he spoke clearly and distinctly, as if a spot of light had penetrated the darkness of his brain. Most of the time, however, Jeremy irritated his teacher.
One day, she called his parents and asked them to put Jeremy in a special school. While the mother was trying to hold back her tears, the father spoke: "Miss Miller," he said, "there is no school of that kind nearby.  It would be a terrible shock for Jeremy if we had to take him out of this school. We know he really likes it here." Doris let Jeremy stay on in the school.

Spring came, and the children talked excitedly about the coming of Easter. Doris told them the story of Jesus, and then to emphasize the idea of new life springing forth, she gave each of the children a large plastic egg. "Now," she said to them "I want you to take this home and bring it back tomorrow with something inside that shows new life.  Do you understand?"
"Yes, Miss Miller!" The children responded enthusiastically - all except for Jeremy.  He just listened intently; his eyes never left her face. He did not even make his usual noises. Had he understood what she had said about Jesus' death and resurrection?  Did he understand the assignment?

The next morning, 19 children came to school, laughing and talking as they placed their eggs in the large wicker basket on Miss Miller's desk. After they completed their math lesson, it was time to open the eggs. In the first egg, Doris found a flower. "Oh yes, a flower is certainly a sign of new life," she said. A small girl in the first row waved her arms. "That's my egg, Miss Miller," she called out.  The next egg contained a plastic butterfly, which looked very real.  Doris held it up.  "We all know that a caterpillar changes and turns into a beautiful butterfly. Yes, that is new life, too" little Judy smiled proudly and said, "Miss Miller, that one is mine"

Then Doris opened the next egg.  She gasped. The egg was empty!  Surely it must be Jeremy 's, she thought, and, of course, he did not understand her instructions. Because she did not want to embarrass him, she quietly set the egg aside and reached for another.
Suddenly Jeremy spoke up. "Miss Miller, aren't you going to talk about my egg?" Flustered, Doris replied, "But Jeremy - your egg is empty!"  He looked into her eyes and said softly, "Yes, but Jesus' tomb was empty too!"  Time stopped.  When she could speak again, Doris asked him, "Do you know why the tomb was empty?"  "Oh yes!" Jeremy exclaimed.  "Jesus was killed and put in there.  Then his Father raised him up!"  The recess bell rang.  While the children excitedly ran out to the school yard, Doris cried. The cold inside her melted completely away.

Three months later Jeremy died.  Those who paid their respects at the mortuary were surprised to see 19 eggs on top of his casket, ….. all of them empty!

From “An Emotional Easter Egg Story” (Abridged)

As we approach Easter, we are given a glimpse into the life after. Jeremy’s lesson is highlighted in today’s Gospel – John 11: 1-45. This Gospel passage talks of one of the most popular miracles of Jesus – the Raising of Lazarus from the dead. Jesus had raised quite many people from the dead; but the case of Lazarus was special. In the other cases (the son of Nain’s widow or the daughter of Jairus) Jesus was present, soon after the person died. In the case of Lazarus, Jesus came to Bethany after four days. Among the Jews, there was a belief that the soul of the buried person lingered on for three days in the grave, and, on the fourth day, it departed forever, and the body began to decay. So, when Jesus arrived at Bethany, it was really too late. Lazarus had begun to decay.

How many times in our lives we have felt that God came too late, or did not come when required! Mary and Martha expressed this to Jesus… “If you had been here, my brother would not have died.” (John 11: 21, 32) We expect God to come in a particular way and in a particular time; but God comes at an unexpected time, and, in the most unexpected way. One of the most beautiful aspects of God is… Surprise… the God of Surprises!

We can pay attention to the words of Jesus spoken in front of the tomb of Lazarus. The first command of Jesus was: “Take away the stone.” (Jn. 11:39) Rolling away the stone was not a big deal for Jesus. A word or, even a thought from him would have accomplished the task. But, Jesus wanted the people around him to do that. God would like us to do what we can, and not expect God’s intervention at every moment in our lives. The faith proclaimed by Martha began the process of this miracle. “Lord,” Martha said to Jesus, “if you had been here, my brother would not have died. But I know that even now God will give you whatever you ask.” (Jn. 11: 21-22)
Jesus wanted to instill such a trust in the people standing around the tomb, who had given up on Lazarus, since it was already the fourth day. Jesus wanted to tell them, “Whether it is four days or four thousand years, God can open the graves and bring out miracles, if only we trust.”

Opening the grave or rolling away the tomb stone is our job and giving life is God’s work. But, there was a problem in rolling the stone away. Martha expressed this problem directly to Jesus: “But, Lord,” said Martha, the sister of the dead man, “by this time there is a bad odour, for he has been there four days.” (Jn. 11: 39) Martha, although a very practical lady, was still living in the past and Jesus invited her to live in the present and in the future. Martha is an example for many of us who wish to live in the past, especially with the past hurts, unpleasant memories… We tend to carry around the dead weight of the past.

I am reminded of a story… a repulsive story, perhaps… but one with a very good lesson. In Virgil, there is an account of an ancient king, who was so unnaturally cruel in his punishments that he used to chain a dead man to a living criminal. It was impossible for the poor wretch to separate himself from his disgusting burden. The carcass was bound fast to his body -- its hands to his hands; its face to his face; the entire dead body to his living body. Then he was put into a dungeon to die suffocated by the foul emissions of the stinking dead body…
(Fr. Anthony Kadavil - http://frtonyshomilies.com) The story is surely very repulsive. But quite many of us live with such repulsive habits… the habit of carrying the past with us… especially past hurts!

The second command of Jesus was: “Lazarus, come out!” (Jn. 11: 43) Lazarus who was buried for four days came out just as he was buried. We can surely learn to believe that many of our dreams buried deep within, can come alive if only we could hear God’s call. We need to be sensitive to hear this call echoing in the tombs we ourselves have built over our dreams and hopes.
In the context of the pandemic, COVID-19, let these words of Jesus ring out once again. May Jesus call out to the world ‘to come out’!

The third command of Jesus was: “Take off the grave clothes and let him go.” (Jn. 11: 44) Even though Lazarus could walk out of the tomb, he still needed the help of others to set him completely free. We need to learn how to untie the knots and chains people are bound with. If we fail to do so, there is every possibility that these persons would not be able to emerge out of their graves.

For the past three months the whole world seems to resemble a vast graveyard with the relentless onslaught of COVID-19. Many scientists and sociologists have tried to find a reason to this pandemic. One clear answer lies in the fact that we human beings have lost respect for all forms of life, be it the planet earth or our fellow human beings. When we tamper with nature beyond limits, we have to pay the price. COVID-19 is a grim reminder to us that we are not the masters, but stewards of creation.

It is ironic that this situation has arisen at the start of the spring season, when we are invited to celebrate life in various forms. Being cut off from our hectic activities, and confined to the four walls of the house can help us see how much we had taken our ordinary life for granted. May this moment of enforced isolation help us see the true value of life.
We may not be able to create life or raise people from the dead; that is left to God. But we can surely do our bit. We can roll the stone away; we can untie the people who have managed to come out of their graves. If in case we are buried in the graveyard of fear and doubt at this dark moment, let us try to hear God’s call and come out of our tombs.

Our final thoughts turn to the medical personnel who have been risking their lives in order to save lives. We also think of many volunteers (especially the youth) who have taken up relief works especially among the poor and the homeless during this time of ‘lock down’. We are also aware of the religious personnel (Priests, Nuns and Brothers) who have been trying to bring God’s touch to thousands of desperate persons. May God give us enough light and courage to join hands with these noble persons to bring hope to our world!

Real Hope for Your Dead Loved Ones

தவக்காலம் 5ம் ஞாயிறு

உலகெங்கும், பெரும்பாலான மக்கள், இல்லங்களிலேயே தங்கியிருக்கவேண்டியச் சூழல் உருவாகியுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், நோயுற்றோர், மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை, ஒவ்வொருநாளும், நம்மை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்றைய வழிபாட்டின் முதல் வாசகத்தில், 'தலைவராகிய ஆண்டவர்' கூறும் சொற்களுடன் நம் சிந்தனைகளைத் துவங்குவோம்:
இறைவாக்கினர் எசேக்கியேல் 37: 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
பாபிலோனிய அடிமைத்தனத்தில், ஒவ்வொரு நாளும், இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, கடவுள், வாழ்வை வழங்குவார் என்ற நம்பிக்கையை, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் நாம் காண்கிறோம். எலும்புக்கூடுகள் பரவிக்கிடந்த ஒரு நிலத்தில், இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள், படிப்படியாக, தசையும், தோலும் பெற்று, உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புத காட்சியை, 37ம் பிரிவில், முதல் 11 திருவசனங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து, இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

வாழ்வு தரும் இறைவன், இன்றைய வழிபாட்டின் மையமாக அமைகிறார். இறைவன் இருக்கும் இடத்தில், கல்லறைகள் காலியாகும், வாழ்வு மலரும் என்ற எண்ணத்தைக் கூறும் ஒரு கதையுடன் நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

குணமாக்க முடியாத ஒரு நோயுடன் பிறந்த ஜெரமியின் (Jeremy) உடலும், மனமும், வளர்ச்சியில் குன்றியிருந்தன. அவனது வாழ்நாட்கள் எண்ணப்பட்டிருந்தன. 12 வயதான ஜெரமி, 6 வயது குழந்தைகளுடன் படித்துவந்தான். வகுப்பு நடக்கும்போது, சில நேரங்களில் கத்துவான். அபூர்வமாக, ஒரு சில நேரங்களில், அவன் மிகத் தெளிவாகப் பேசுவான். உடலின் பல இயற்கைச் செயல்பாடுகளை, அவனால் கட்டுப்படுத்த இயலாததால், வகுப்பில் சங்கடமானச் சூழல்கள் எழுந்தன.
வகுப்பின் ஆசிரியர் டோரிஸ் (Doris) பொறுமை இழந்தார். ஜெரமியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, அவர்கள் மகனை ஒரு சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படி அவர் கூறியபோது, அவர்கள் இருவரும் கண்கலங்கி நின்றனர். அவர்கள் வாழ்ந்த பகுதியில் சிறப்புப் பள்ளிகள் ஏதும் இல்லை என்றும், ஜெரமிக்கு அந்தப் பள்ளி மிகவும் பழகிப் போய்விட்டதால், அவனை அங்கிருந்து வேறு பள்ளிக்கு மாற்றுவது, அவனை மிகவும் பாதிக்கும் என்றும் கூறி, ஆசிரியரிடம் விண்ணப்பித்தனர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்ட ஆசிரியர், அரைகுறை மனதோடு இணங்கினார்.

உயிர்ப்புத் திருநாள் நெருங்கி வந்தது. ஆசிரியர் டோரிஸ் அவர்கள், இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை குழந்தைகளுக்கு விளக்கிக் கூறினார். பின்னர், வகுப்பில் இருந்த 19 குழந்தைகளிடமும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் முட்டையைக் கொடுத்தார். புது வாழ்வைக் குறிக்கும் ஏதாவது ஓர் அடையாளத்தை, அந்த முட்டையில் போட்டு கொண்டுவர வேண்டும் என்று கூறினார். குழந்தைகள் அனைவரும் மகிழ்வுடன் பிளாஸ்டிக் முட்டையைப் பெற்றுக்கொண்டனர். ஜெரமி, பிளாஸ்டிக் முட்டையை வாங்கியபோது ஒன்றும் பேசவில்லை. தான் சொன்னது அவனுக்கு விளங்கியிருக்குமா என்று ஆசிரியர் குழம்பி நின்றார்.

அடுத்தநாள், ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், அவரது மேசைமீது 19 முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் முதல் முட்டையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஒரு சின்னப் பூ வைக்கப்பட்டிருந்தது. புது வாழ்வுக்கு, பூத்திருக்கும் மலர், ஓர் அழகிய அடையாளம் என்று கூறிய ஆசிரியர், அந்த முட்டையைக் கொண்டு வந்த சிறுமியைப் பாராட்டினார்.
அடுத்த முட்டைக்குள் ஒரு பிளாஸ்டிக் வண்ணத்துப் பூச்சி இருந்தது. கூட்டுப் புழுவிலிருந்து வெளியேறும் வண்ணத்துப் பூச்சி, புது வாழ்வுக்கு தகுந்த அடையாளம் என்று ஆசிரியர் அடுத்த சிறுமியைப் பாராட்டினார்.

மூன்றாவது முட்டையை எடுத்த ஆசிரியர், திகைத்து நின்றார். அந்த முட்டையில் எதுவும் இல்லை, காலியாக இருந்தது. அதைக் கொணர்ந்தது ஜெரமியாகத்தான் இருக்கவேண்டும் என்று ஆசிரியர் கணித்தார். தான் சொன்னதை, ஜெரமி புரிந்துகொள்ளாததால், அவனை, தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணி, ஆசிரியர் டோரிஸ், அந்த முட்டையை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்ததை எடுக்கச் சென்றார்.
அப்போது, ஜெரமி கையை உயர்த்தி, "மிஸ், என்னுடைய முட்டையைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!" என்று சொன்னான். "ஜெரமி, உன் முட்டையில் எதுவும் இல்லையே, என்ன சொல்வது?" என்று ஆசிரியர் கேட்டார்.
"மிஸ், இயேசுவின் கல்லறை காலியாகத்தானே இருந்தது" என்று சிறுவன் ஜெரமி சொன்னதும், ஆசிரியர் அதிர்ந்துபோனார். வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஆசிரியர் டோரிஸ், ஜெரமியிடம், "அது எப்படி காலியானது என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். ஜெரமி தொடர்ந்து, "இயேசு கொல்லப்பட்டார். ஆனால், அவரது தந்தை அவரை உயிர்ப்பித்தார். எனவே, கல்லறை காலியானது" என்று தெளிவாகக் கூறினான். ஆசிரியர் டோரிஸின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மூன்று மாதங்கள் சென்று, சிறுவன் ஜெரமி இறைவனடி சேர்ந்தான். அவனை வைத்திருந்த அந்தப் பெட்டிக்கு மேல், 19 பிளாஸ்டிக் முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும், ஒன்றுமில்லாமல் காலியாக இருந்தன.

உயிர்ப்புத் திருநாளை நெருங்கி வந்துள்ளோம். இவ்வேளையில், கல்லறை காலியாகும், நமது வாழ்வு தொடரும் என்பதை, நமக்கு நினைவுறுத்தும் ஒரு நற்செய்தியை, இன்று நாம் கேட்கிறோம். இயேசு, இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை, இன்று, நற்செய்தியாக வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45). இந்நிகழ்ச்சி வழியாக, ஓர் இறையியல் பாடம் நமக்கு வழங்கப்படுகிறது.

இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை, இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுகிறது. இறந்த ஒருவரின் ஆன்மா, அவருடன், கல்லறையில், மூன்று நாள்கள் இருக்கும், மூன்றாம் நாள், அந்த ஆன்மா, உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர், அந்த உடல், அழுகிப்போக, அழிந்துபோக, ஆரம்பிக்கும்... இதுவே, யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து, நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே, அவரது உடல், அழிய ஆரம்பித்திருக்கும். அந்நேரத்தில், இயேசு, அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.

வாழ்வின் இக்கட்டான சூழல்களில், இறைவன் தாமதிப்பதாக, எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம்! எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில், கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில், நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம், தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே, இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.

யோவான் நற்செய்தி 11: 21-22
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்றார். மார்த்தாவின் இந்த நம்பிக்கை அறிக்கை, அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

இயேசு, இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை, ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருஅவை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம், உயிருடன் இருப்போமா என்ற கேள்வி, இவர்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்ட ஒரு கருநாகத்தைப் போல், எப்போதும் இவர்களை நெருக்கிக்கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்ட தங்களையும், தங்கள் திருஅவையையும், இறைவன், உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க, இயேசு, இலாசரை உயிருடன் கொணர்ந்த புதுமை உதவியது.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, எதுவாக இருந்தாலும், கடவுள் கைபட்டால், புதுமைகளாய் உயிர்பெறும். ஆனால், இப்புதுமையை நிகழ்த்த, கடவுள் நம் ஒத்துழைப்பை விரும்புகிறார். இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில், இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை, இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ" என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன்... நினைத்திருந்தாலே போதும், அந்தக் கல், தானாகவே அகன்று போயிருக்கும்! இயேசு, தன் வல்லமையால், கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள், அவரை, இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு, இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது நமக்கு.

இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும், அதுதான் வேறுபாடு. தன் கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்கி, மக்களை வியப்பில் ஆழ்த்துவதற்கு, இயேசு புதுமைகள் செய்யவில்லை. புதுமைகளின் வழியே மக்களின் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கவேண்டும் என்பதே, அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள், நான்காம் நாளில், ஒன்றும் நடக்காது என்ற, அவநம்பிக்கையுடன் அங்கு வந்தவர்கள். இயேசு, அவர்களது அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் ஆண்டுகள் ஆனாலும், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக்கா 1:37) என்பதை, இயேசு, அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையை மூடியிருந்த கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கு, எதிர் காலத்திற்கு அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர், இயேசுவின் குரல்கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும், கடவுளின் குரல் கேட்டால், மீண்டும் உயிர்பெறும். இறைவனின் குரல் கேட்டும், கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை, இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அல்லது, நம்மை நாமே, இவ்விதம் புதைத்துக் கொண்ட நேரங்களை, நினைத்துப் பார்ப்போம்.

புகழ்பெற்ற உரோமையக் கவிஞர் வெர்ஜில் அவர்கள், ஓர் அரசரைப்பற்றிக் கூறும் கதை இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில், இங்கு ஒரு நல்ல பாடம் நமக்காகக் காத்திருக்கிறது. இந்த அரசர், பல பயங்கரமான சித்ரவதைகளைக் கண்டுபிடித்தவர். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரணதண்டனை பெற்ற குற்றவாளியை, ஒரு பிணத்தோடு கட்டிவிடுவார்கள். அதுவும், முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் கட்டி, ஓர் இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி, அந்த பிணத்தோடு, தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். இதற்கு மேல் இத்தண்டனையை விவரிப்பது நல்லதல்ல.
அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இந்தச் சித்ரவதையை, நம்மில் பலர் நமக்கே கொடுத்துக்கொள்கிறோம்.. இறந்த காலம், பழையக் காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம். அல்லது, எத்தனை முறை, இது போல், பிணங்களுடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம். நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்ரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து "வெளியே வாருங்கள்" என்று, இயேசு, இன்றைய நற்செய்தி வழியாக நம்மை அழைக்கிறார்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால், தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை, அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடைப்பிணங்களாக வாழும் பலரை, நாம் பார்த்திருக்கிறோம். அந்நிலையில், நாமும், அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க, இறைவன் நமக்குக் கட்டளையிடுகிறார்.

இவ்வுலகையும், அதில் வாழும் அனைத்து உயிர்களையும், மதித்து, போற்றி, காக்க மனிதர்களாகிய நாம் மறந்துவிட்டோம். நாம் மறந்துபோன பாடங்களை மீண்டும் நமக்குக் கற்றுத்தர, கோவிட்-19 தொற்றுக்கிருமி நம்மிடையியே வலம்வருகிறதோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. கொரோனா கிருமியின் கோரப்பிடியிலிருந்து இறைவன் நம்மை விடுவிக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இக்கிருமியின் தாக்குதலில் சிக்கியிருப்போரை விடுவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப்பணியாளர்களை, இறைவன், நிறைவாக ஆசீர்வதிக்குமாறு மன்றாடுவோம். அவர்களுடன் இணைந்து, நம்மால் முடிந்த அளவு, நலப்பணிகளில் ஈடுபட, இறைவன், நமக்குத் தெளிவையும், துணிவையும் வழங்குவாராக.