19 June, 2011

Why is our God a Triune God? நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்?


Augustine meets a boy on the beach
This painting of St. Augustine is part of the outside murals in the Augustinian monastery of Quito, Ecuador. It was done by Miguel de Santiago in 1656.

We have entered the ‘Ordinary Time’ of the liturgical year. This implies that we have been having a ‘special time’ till now in our liturgical cycle. Yes, right from the start of the Lenten season through the Easter Season we have had a special time. Today’s feast, the Feast of the Most Holy Trinity, is like a crowning event of this special season. This crowning feast does not warm our hearts like, say, the feast of Christmas or Easter. This feast seems more ‘intellectual’. When I think of the Feast of the Most Holy Trinity, I get more of the image of an international conference than a festive gathering.
The Holy Trinity is a mystery to be contemplated than a concept to be discussed. Most of us remember a very old and much-repeated story about St. Augustine, one of the intellectual giants of the Church. He was walking by the seashore one day, attempting to conceive of an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, pouring seawater from a shell into a small hole in the sand. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson. Later, Augustine wrote: "You see the Trinity if you see love." According to him the Father is the lover, the Son is the loved one and the Holy Spirit is the personification of the very act of loving. This means that we can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God." (http://www.cbcisite.com/Sunday%20Homily.htm)
Many of the deep realities of life and the world are there simply as a gift to be admired and a mystery to be contemplated than an idea to be dissected and labelled into packages. An incident from the life of Franklin D. Roosevelt (FDR), the well-known president of the U.S., is worth remembering here. FDR and one of his close friends, Bernard Baruch, talked late into the night one evening at the White House. At last, President Roosevelt suggested that they go out into the Rose Garden and look at the stars before going to bed. They went out and looked into the sky for several minutes, peering at a nebula with thousands of stars. Then the President said, "All right, I think we feel small enough now to go in and go to sleep." The wonder of the power and wisdom of God puts things in perspective for us humans. (http://www.cbcisite.com/Sunday%20Homily.htm) Being the President of the U.S. can easily turn an individual into a megalomaniac. FDR must have stayed sane by seeing himself in the proper perspective.
When we think of the mystery of the Most Holy Trinity, one is easily reminded of the famous quote from the Bible: "Be still, and know that I am God; I will be exalted among the nations, I will be exalted in the earth." (Psalm 46:10) If at all we wish to understand the great mystery of the Holy Trinity, then we need to raise the proper questions. Not trying to understand the ‘how’ of the mystery, as St Augustine tried, but more in terms of the ‘why’ of the Triune God. Why is our God a Triune God? Simply to impress upon us that relationships are very important, rather, they are the most important aspect of human life. The important question for us to ask today is: What does the doctrine of the Blessed Trinity tell us about the kind of God we worship and what does this say about the kind of people we should be?
God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world like that of certain Buddhist monastic traditions where the quest for holiness means withdrawal to the Himalayas away from contact with other people and society. (http://www.munachi.com/a/atrnty.html)
This day calls us to examine our attitude to relationships in general and, in particular, our attitude towards our parents – especially, aged parents. Today, the third Sunday in June is Father’s Day. The Second Sunday in May was the Mother’s Day. Are these days simply a day for flowers and cards? As we celebrate the Feast of the Triune God, as we celebrate Father’s Day, let us pray that our relationships are more and more sincere and self-sacrificing.

வழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்தை நாம் ஆரம்பிக்கிறோம். 'பொதுக்காலம்' என்று சொல்லும்போது, இதுவரை நாம் கடந்து வந்தது ஒரு சிறப்புக்காலம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம். ஆம், நாம் கடந்து வந்தது ஒரு சிறப்புக் காலம்தான். கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இந்த விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம்.

வாழ்வில் கொண்டாட்டங்கள் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக பெரிதான, பிரமிப்பான உண்மைகள் வெளிப்படும்போது, அதுவும், மகிழ்ச்சியைத் தரும் உண்மைகள் வெளிப்படும்போது, நமது பதில் எப்படி இருக்கும்? மகிழ்வில் நாம் மூழ்கும் நேரங்களில், பேச்சிழந்து போவோம். கண்களில் கண்ணீர் பெருகும். அப்படி ஓர் அனுபவத்தை நமக்குத் தருவது அல்லது தரவேண்டியது இன்றைய மூவொரு இறைவன் திருவிழா.
மூவொரு இறைவன் என்றதும், நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நடந்தது இந்தக் கதை. நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகுஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக் கொண்டிருந்தார், கடற்கரையில் நடந்தபடியே. அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின் சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக் கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அந்தச் சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.
ஒரு குழந்தையின் வழியே தனக்கு ஒரு சவுக்கடி கொடுத்து, தன்னைப் பற்றிய ஒரு புதுப்பாடத்தைச் சொல்லித் தந்த அந்த இறைவனைப்பற்றி, "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று புனித அகுஸ்தின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது." என்றார் அவர்.
அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Roosevelt பற்றி சொல்லப்படும் ஒரு கதையும் இங்கு உதவியாக இருக்கும். Rooseveltம் அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruchம் ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச் செல்வதற்கு முன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று தெளிவாகத் தெரிந்த விண்ணையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.
அமெரிக்க அரசுத் தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் மூலம் தனது உண்மை நிலையை அவரால் உணர முடிந்தது. அந்த மன நிலையோடு அவர் உறங்கச் சென்றது அவர் தனக்குத் தானே சொல்லித்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கி விடும் முயற்சிகள், அல்லது ஆண்டவனை நமது அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற கனவுகள் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும்.
கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவைகளுக்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்துணர்தல் ஆகிய ஆழமான திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்து கொண்டதை, அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கி விட முடியும். வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் விளக்க முடியாது.
“The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.”
- Albert Einstein, The World As I See It (1949)
"இந்த உலகில் மிக ஆழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்." என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.
புனித அகுஸ்தின் தன் வாழ்வின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் ‘ஏன்’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் படித்திருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப் பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித் தர நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.
நாம் வாழும் இன்றைய உலகில், நம் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதான பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று இரு காரணங்கள் உள்ளன. உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் இன்று என்பது முதல் காரணம். இன்று தந்தை தினம் என்பது இரண்டாவது காரணம்.
மேமாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினம் என்று கொண்டாடினோம். ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினம் என்று உலகின் பல நாடுகளில் நாம் கொண்டாடுகிறோம். 1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 பேர் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம் தந்தைக்கு ஒரு தினம் என்று இந்த உலகம் கொண்டாடி வருகிறது. இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் ஒரு நாளோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம் மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன ஒரு வியாபாரத் திருநாளாக மாறிவிட்டது என்று சொன்னோம். அதேபோல், தந்தை தினமும் வியாபாரத் திருநாளாக மாறி விட்டது. வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், இன்னும் மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்து போய்விடுகின்றனவா?
இன்று மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உறவுகளின் ஊற்றான இறைவன் நமக்கு உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லித் தர வேண்டும். அதிலும் சிறப்பாக, தாங்கள் வளர்த்துவிட்ட உறவுகள் தங்களை மறந்து போய்விட்டதால், உறவுகள் மீதே சந்தேகங்களை வளர்த்து வாழும் வயது முதிர்ந்த பெற்றோரின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்குச் சொல்லித் தர வேண்டும்.


12 June, 2011

CELEBRATIONS – THE ‘WHAT’ AND THE ‘HOW’ கொண்டாட்டங்கள் – எதற்காக… எப்படி…



The Influence of the Holy Spirit



Unicef - Ad against child labour


Today, the Feast of the Pentecost, is celebrated on the fiftieth day after Easter. The word Pentecost means the fiftieth day. In the last 50 days we have had quite a few festivals, celebrations starting from Easter. We celebrated Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. Whenever we use the word ‘celebrate’ we do have certain notions about it. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

According to human logic, worldly view, the first Easter should have taken place in full splendour… with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event judging by the standards of celebration set by the world. The first Ascension, once again, was a very quiet affair with Jesus spending quiet moments with the disciples on a hillock before being taken up into heaven. The first Pentecost too was simply the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples gathered in prayer. These events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world.
The definition of ‘celebration’ according to the commercial world is pretty clear… Grand, Glamorous, Great, Gigantic…. I was simply trying my luck with the letter G. There are hundreds of other words to define how these celebrations are defined and conducted by the commercial world. Even if there is nothing to celebrate about, the commercial world would invent reasons to celebrate. The frills are more important than the core in these celebrations. In most of these celebrations ‘what’ is celebrated is less important than the ‘how’ of it. I don’t know why I am reminded of the famous Shakespearean line from Macbeth: ‘sound and fury signifying nothing’ when I think of these commercial celebrations. Such celebrations are fleeting, leaving no lasting impact on the individual. Perhaps it leaves one empty!
Jesus and his disciples defined ‘celebrations’ in a totally different way. They were more interested in the ‘what’ of the event than the ‘how’ of the event. This ‘what’ left a lasting, life-long impression on the disciples. This ‘what’ has left a deep impression on human history for the past twenty centuries.

While talking of ‘celebrations’, we need to talk about ‘non-celebrations’ too. While the commercial world invents reasons for ‘celebrations’, we are sadly reminded of the darker side of the world where there are issues that are seemingly impossible to celebrate. Last week we reflected on one such issue – the issue of our Environment. June 5 was the World Environment Day. Today, June 12 is the World Day Against Child Labour. Once again, we are staring at a day that cannot be celebrated right now. I wish we do have a chance to CELEBRATE this day when child labour is totally eradicated from the world.
I would like to reflect on Pentecost and World Day Against Child Labour together. The coming of the Holy Spirit is also called the Birthday of the Church. The new-born Church went through very difficult times soon after its birth. The Church had a difficult childhood. From this perspective, the fact that the Feast of the Pentecost has occurred on June 12 seems like a God-given chance for us to reflect on children who have to face a difficult childhood, children who do not have a childhood or lose their childhood very early in their lives.

All of us have reflected on the universal problem of Child Labour in terms of statistics and real life incidents. The World Day Against Child Labour is an International Labour Organization–sanctioned holiday for the purpose of raising awareness and activism to prevent child labour in both economic and military fields. It is currently held each June 12. The ILO created this observance in 2002 and it has been held annually since then. (Wikipedia)
It is painful to note that the world had taken 20 centuries to take note of a horrible crime committed against children. It is more painful to see that in the past few decades children are forcefully employed in the military. The adult world is already guilty of waging senseless wars. To add insult to injury, we have got children also involved in this senseless adventures of adults.
This day offers us another opportunity to seriously think of this problem and muster up enough courage to eradicate such a crime from the world. We pray that the Holy Spirit who guided the Church through Her childhood may give us the precious gifts of wisdom and courage to guide our children out of their slavery.

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம் கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டாமா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.


உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட 'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதை விட கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரிய வரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே இந்த விழாக்களின் உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இந்த விழாக்களில் முக்கியம். இந்த விழாக்களைப் பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.
கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும் விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர், நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமைய வேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால், கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மகிழ்வாக அமையும். இந்தப் பாடங்களை நமக்குச் சொல்லித் தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் ஆகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனி தந்து கொண்டிருக்கின்றன.


கொண்டாட்டங்களைப் பற்றிச் சிந்திக்கும் வேளையில், கொண்டாட முடியாத சில நாட்களையும் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். கொண்டாட முடியாத ஒரு நாளை நாம் சென்ற ஞாயிறு சிந்தித்தோம். சென்ற வாரம், இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் காட்டிலும், அதே நாள், ஜூன் 5ம் தேதி, உலகச் சுற்றுச்சூழல் நாள் என்ற காரணத்தால், சுற்றுச்சூழலைப் பற்றி நமது சிந்தனைகள் அதிகம் இருந்தன. அந்த நாளை நாம் கொண்டாட முடியாத அளவு சுற்றுச்சூழலுக்கு நாம் ஆபத்தை விளைவித்துள்ளோம் என்பதைச் சிந்தித்தோம். இந்த ஞாயிறன்றும் இரு தருணங்கள், இரு காரணங்கள் இணைந்து வந்து, நமது கவனத்தை ஈர்க்கின்றன. இவ்விரு காரணங்களில் ஒன்றை நாம் கொண்டாட முடிகிறது; மற்றொன்றைக் கொண்டாட முடியாமல் நம் மனம் சங்கடப்படுகின்றது. இன்று தூய ஆவியாரின் பெரு விழா. இதை நாம் கொண்டாட முடியும். இன்று ஜூன் 12 - குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாள் (World Day Against Child Labour). இந்த நாளைக் கொண்டாட மனம் சங்கடப்படுகிறது. இவ்விரு நாட்களும் இணைந்து வந்திருப்பதை இறைவன் நமக்குத் தந்துள்ள அருள் நிறைந்த ஒரு தருணமாகக் காணலாம்.
தூய ஆவியாரின் வருகையை, திருச்சபையின் பிறந்த நாளென்றும் கொண்டாடுகிறோம். பெந்தகோஸ்து நாளன்று புதிதாய்ப் பிறந்தத் திருச்சபை, தன் குழந்தைப் பருவத்தில் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, திருச்சபை என்ற குழந்தையின் பிறந்தநாள், குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாளான ஜூன் 12ம் தேதியன்று வந்திருப்பது குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, அதுவும் போராட்டங்களால் சூழப்பட்டக் குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, நமக்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்பு தானே! இவ்விரண்டையும் இணைத்து நாம் சில சிந்தனைகளை எழுப்ப முயல்வோம், பாடங்களைப் பயில முயல்வோம்.


ILO என்றழைக்கப்படும் அகில உலகத் தொழில் நிறுவனம் (International Labour Organisation) 2002ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியை குழந்தைத் தொழிலை ஒழிக்கும் நாளாக அறிவித்தது. குழந்தைத் தொழில் என்ற அவலத்தை ஒழிக்க வேண்டும் என்பதை மனித குலம் புரிந்து கொள்ள, இத்தனை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்டதே என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இந்த நாளை உண்டாக்கிய பிறகும் இந்த அவலம் இன்னும் இந்த உலகிலிருந்து மறையவில்லையே என்று நாம் வேதனைப் பட வேண்டும்.
மனித வரலாற்றில் குழந்தைகள் எப்போதும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். குடிசைத் தொழில் அல்லது குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் இது குழந்தைகள் மேல் சுமத்தப்பட்டத் தொழில் அல்ல. அவரவர் குடும்பத் தொழிலைக் கற்பதே ஒரு கல்வி என்றுகூட சமாதானங்கள் சொல்லப்பட்டன.
தொழில் புரட்சி வந்தபின், அந்தப் புரட்சிக்கு மூலதனமான இயந்திரங்கள் மனிதர்களை விட முக்கியத்துவம் பெற்றன. அந்த இயந்திரங்களுக்குச் சேவை செய்வதற்கு பெரியவர், சிறியவர் என்று எல்லாரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலைகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
சிறுவர்கள் ஆலைகளில், தொழிற்சாலைகளில் ஆபத்தானச் சூழல்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சிறுவர்களில் பலர் அந்த இராட்சத இயந்திரங்களுடன் மேற்கொண்ட போரில், உடல் உறுப்புக்களை இழந்தனர், பல வேளைகளில் உயிரையும் இழந்தனர்.
சிறுமிகள் பெரும் செல்வந்தர்கள் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இரவும் பகலும் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயம் இச்சிறுமிகளுக்கு. இவர்களில் பலர் இச்செல்வந்தர்களின் உடல் பசியை வெறும் உணவால் மட்டுமல்ல தங்கள் உடலாலும் தீர்க்க வேண்டிய கொடுமைகள் இந்த மாளிகைகளில் நிகழ்ந்தன.
நான் இங்கே பட்டியலிட்ட இந்த நிகழ்வுகள் எங்கோ எப்போதோ நடந்து முடிந்து விட்ட கதை, வரலாறு என்று எண்ண வேண்டாம். இன்றும் தொடர்கின்றன குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இந்தக் கொடுமைகள். இதைவிடக் கொடுமை கடந்த 50 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது. குழந்தைகளும், சிறுவர்களும் இராணுவங்களில், போர் சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.


குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி, இராணுவங்களில் பயன்படுத்தப்படும் சிறுவர், சிறுமிகளைப் பற்றி புள்ளிவிவரங்கள், கவிதைகள், கதைகள் என்று பல ஆயிரம் முறை கேட்டிருக்கிறோம். இன்று அவற்றை மீண்டும் நமது நினைவுக்குக் கொண்டு வருவோம். குழந்தைத் தொழிலாளர்களை வெறும் எண்ணிக்கையாய் பார்க்காமல், வருங்காலத்தின் நம்பிக்கையாய்ப் பார்க்க நமது மனதில் தூய ஆவியார் தனது உள்ளொளியைத் தர வேண்டும் என்று செபிப்போம்.
தூய ஆவியாரின் திருநாளை, திருச்சபையின் பிறந்த நாளை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முடியும். அதேபோல், குழந்தைத் தொழிலை ஒழிக்கும் நாளையும் ஒரு திருநாளாக நாம் கொண்டாட முடியும். எப்போது? உலகில் குழந்தைத் தொழிலாளிகள், சிறார் படைவீரர்கள் என்று யாரும் இல்லாதபோது, ஜூன் 12ம் தேதியையும் நாம் நெஞ்சுயர்த்தி ஒரு திருநாளாகக் கொண்டாட முடியும். அதுவரை இக்குற்ற உணர்வுகளால் பாரமான மனதோடு தலை குனிந்தே நாம் வாழ வேண்டும்.
திருச்சபை என்ற குழந்தை, பிறந்த நாள் முதல் சந்தித்த பிரச்சனைகளில் எல்லாம் தூய அவியாரின் துணை இருந்ததால், அவர் தந்த ஞானம், அறிவு, திடம், வலிமை என்ற பல அன்புக் கொடைகளும் இந்தக் குழந்தையை இதுநாள் வரை வழிநடத்தி வந்துள்ளன.
அதேபோல், உலகெங்கும் துன்புறும் குழந்தைத் தொழிலாளிகளை அவர்கள் சிக்குண்டிருக்கும் அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கும் வழிகளைச் சிந்திக்க தூய ஆவியார் நல்லோளியை நமக்குத் தர வேண்டும் என மன்றாடுவோம். இந்தச் சமுதாயக் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான மன உறுதியையும் தூய ஆவியார் நம் ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் என்று மன்றாடுவோம்.



 

06 June, 2011

If you don't know how to fix it, please stop breaking it! உடைந்து போன இயற்கையை மேலும் உடைக்காமல் விடுங்கள்!


Bolivia – Nature to Have Same Rights as Humans

http://soulgineering.com/2011/05/28/nature-same-rights-as-humans/

Severn Cullis-Suzuki
http://soulgineering.com/tag/severn-suzuki/

Making connections between world events and the Word of God is one of the preoccupations of any priest before the Sunday Liturgy. This Sunday is the Feast of the Ascension of Our Lord. This Sunday, June 5th, is the World Environment Day (WED). I wanted to see a connection between these two significant days. The First Reading from the Acts of the Apostles, especially the message given by the ‘men-dressed-in-white’, came to my aid instantly.
They were looking intently up into the sky as he (Jesus) was going, when suddenly two men dressed in white stood beside them. “Men of Galilee,” they said, “why do you stand here looking into the sky? This same Jesus, who has been taken from you into heaven, will come back in the same way you have seen him go into heaven.” (Acts 1: 10-11)

The question ‘Why do you stand here looking into the sky?’ brought a smile to me. This was a perfect question to connect the Ascension with the World Environment Day… Here is how it goes! I am trying to say what those two men, perhaps, intended to say: “Okay, folks, Christ has gone to Heaven. Let’s not keep staring into the sky… Let’s turn our gaze on earth. We have more things to accomplish here on earth.”
Here is a brief intro from the Wikipedia on World Environment Day (WED): It is a day that stimulates awareness of the environment and enhances political attention and public action. It is on 5 June. It was the day that the first United Nations Conference on the Human Environment began in Stockholm… World Environment Day is hosted every year by a different city with a different theme and is commemorated with an international exposition in the week of 5 June.

Here is a brief list of some of the themes and the cities.
2000 The Environment Millennium - Time to Act - Adelaide, Australia
2009 Your Planet Needs You - UNite to Combat Climate Change - Mexico City, Mexico
2010 Many Species. One Planet. One Future - Kigali, Rwanda
This year (2011) WED will be celebrated in New Delhi, India with the theme: Forests: Nature at your Service. My interest in this day all the more increased due to the call made by NCCI.
Churches in India are being encouraged to observe June 5 as ‘Green Sunday’ in commemoration of the World Environment Day. The National Council of Churches in India (NCCI) is urging churches to conduct special prayers, sermons and intercessions on World Environment Day which falls on Sunday. (Cathnews India) I thought I would do my bit in promoting this Sunday as Green Sunday by concentrating my reflections on WED alone.
Although WED was established in 1972, (Next year we shall be completing 40 long years of WED!) we have not made much progress in learning how to protect our environment. 20 years back a 13 year old girl tried to teach the world some lessons. The Earth Summit 1992 held in Rio, Brasil was swept away by Severn Cullis-Suzuki, a 13 year old girl from Canada. The six minutes talk that she gave in the summit is still doing enough rounds on the internet. Here is the full text of Severn Suzuki’s talk. The full text is available on: http://ssjothiratnam.com/?p=747

Hello, I'm Severn Suzuki speaking for E.C.O. - The Environmental Children's Organisation. We are a group of twelve and thirteen-year-olds from Canada trying to make a difference: Vanessa Suttie, Morgan Geisler, Michelle Quigg and me. We raised all the money ourselves to come five thousand miles to tell you adults you must change your ways. Coming here today, I have no hidden agenda. I am fighting for my future.
Losing my future is not like losing an election or a few points on the stock market. I am here to speak for all generations to come. I am here to speak on behalf of the starving children around the world whose cries go unheard. I am here to speak for the countless animals dying across this planet because they have nowhere left to go. We cannot afford to be not heard.
I am afraid to go out in the sun now because of the holes in the ozone. I am afraid to breathe the air because I don't know what chemicals are in it. I used to go fishing in Vancouver with my dad until just a few years ago we found the fish full of cancers. And now we hear about animals and plants going extinct every day -- vanishing forever. In my life, I have dreamt of seeing the great herds of wild animals, jungles and rainforests full of birds and butterflies, but now I wonder if they will even exist for my children to see.
Did you have to worry about these little things when you were my age?
All this is happening before our eyes and yet we act as if we have all the time we want and all the solutions. I'm only a child and I don't have all the solutions, but I want you to realise, neither do you!
• You don't know how to fix the holes in our ozone layer.
• You don't know how to bring salmon back up a dead stream.
• You don't know how to bring back an animal now extinct.
• And you can't bring back forests that once grew where there is now desert.
If you don't know how to fix it, please stop breaking it!


Here, you may be delegates of your governments, business people, organisers, reporters or politicians - but really you are mothers and fathers, brothers and sister, aunts and uncles - and all of you are somebody's child.
I'm only a child yet I know we are all part of a family, five billion strong, in fact, 30 million species strong and we all share the same air, water and soil -- borders and governments will never change that. I'm only a child yet I know we are all in this together and should act as one single world towards one single goal. In my anger, I am not blind, and in my fear, I am not afraid to tell the world how I feel.
In my country, we make so much waste, we buy and throw away, buy and throw away, and yet northern countries will not share with the needy. Even when we have more than enough, we are afraid to lose some of our wealth, afraid to share. In Canada, we live the privileged life, with plenty of food, water and shelter -- we have watches, bicycles, computers and television sets.
Two days ago here in Brazil, we were shocked when we spent some time with some children living on the streets. And this is what one child told us: "I wish I was rich and if I were, I would give all the street children food, clothes, medicine, shelter and love and affection." If a child on the street who has nothing, is willing to share, why are we who have everything still so greedy? I can't stop thinking that these children are my age, that it makes a tremendous difference where you are born, that I could be one of those children living in the Favellas of Rio; I could be a child starving in Somalia; a victim of war in the Middle East or a beggar in India.
I'm only a child yet I know if all the money spent on war was spent on ending poverty and finding environmental answers, what a wonderful place this earth would be!


At school, even in kindergarten, you teach us to behave in the world. You teach us:
• not to fight with others,
• to work things out,
• to respect others,
• to clean up our mess,
• not to hurt other creatures
• to share - not be greedy.
Then why do you go out and do the things you tell us not to do?


Do not forget why you're attending these conferences, who you're doing this for -- we are your own children. You are deciding what kind of world we will grow up in.
Parents should be able to comfort their children by saying "everything's going to be alright", "we're doing the best we can" and "it's not the end of the world".
But I don't think you can say that to us anymore. Are we even on your list of priorities? My father always says "You are what you do, not what you say."
Well, what you do makes me cry at night. You grown ups say you love us. I challenge you, please make your actions reflect your words. Thank you for listening.

One of the most powerful lines from this speech was: “If you don't know how to fix it, please stop breaking it!” If only we could listen to our future generations and stop breaking the universe, the environment and the human family… If we cannot leave a wholesome universe for our next generation, let us at least leave a broken world instead of a completely devastated one for them!
Warning bells do ring now and then about this impending devastation… the last one being from Fukushima, Japan. But, I think most of us live in a dreamy world. May the words of the men in white shake us out of our slumber – ‘Why do you stand here looking into the sky?’ May the assurance of Jesus given to us in today’s Gospel help us as we take up the enormous duty of saving our Planet Earth! “I am with you always, to the very end of the age”. (Matthew 28: 20)


இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா. இன்று ஜூன் 5ம் தேதி - உலகச் சுற்றுச்சூழல் நாள். விண்ணேற்றத் திருநாளையும், உலகச் சுற்றுச்சூழல் நாளையும் இணைத்து சிந்திக்க இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் இறைத்தூதர்கள் சீடர்களுக்குச் சொன்ன வரிகள் உதவியாக உள்ளன.

திருத்தூதர் பணிகள் 1: 9-11
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.


"ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?" என்று இறைத்தூதர்கள் கேட்ட கேள்வியைக் கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துப் பார்க்கலாம். "வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்பதில் அர்த்தமில்லை. இந்தப் பூமியைப் பாருங்கள். இங்கு நீங்கள் ஆற்றவேண்டிய பல பணிகள் உள்ளன. அவற்றைத் தொடருங்கள்." என்று இறைத்தூதர்கள் சீடர்களிடம் மறைமுகமாய் உணர்த்தினர். இந்த வார்த்தைகள் நமது பார்வையையும், நமது கவனத்தையும் இந்த உலகை நோக்கித் திருப்புகின்றன. இன்றைய ஞாயிறு சிந்தனையில் நாம் இம்மண்ணை நோக்கி, இவ்வுலகை நோக்கி நம் சிந்தனைகளைத் திருப்புவோம்.
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நமது சுற்றுச்சூழலை எதோ ஒரு வகையில் நாம் பயன்படுத்தி வருகிறோம். நம்மை வாழவைக்கும் இந்தப் பூமியை, நமது சுற்றுச்சூழலை நாம் வாழவைக்கிறோமா? இல்லையே. நமது பேராசையால் நமது பூமியையும், நாம் வாழும் சூழலையும் காயப்படுத்தி வருகிறோம்.
ஸ்வீடன் அரசின் முயற்சியால், ஐ.நா. பொதுஅவை உலகச் சுற்றுச்சூழல் கருத்தரங்கு ஒன்றை 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி துவக்கியது. இதற்குப் பின், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகச் சுற்றுச்சூழல் நாளைப் பற்றி நாம் கொண்டாட அதிகம் காரணங்கள் இல்லை. ஆனால், இந்த நாளைப் பற்றி பாடங்கள் பயில ஆயிரம் காரணங்கள் உள்ளன. 1972ம் ஆண்டு ஆரம்பமான இந்த முயற்சி, வரும் ஆண்டு 2012ல் 40 ஆண்டுகளை நிறைவு செய்யும். இந்த நாற்பது ஆண்டுகளில் மனித குலம் சுற்றுச்சூழலைப் போற்றிக்காப்பது பற்றி அதிகம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தப் பாடங்களை 13 வயது நிரம்பிய ஒரு சிறுமி மனித குலத்திற்குச் சொல்லித் தந்தாள்.
ஸ்வீடன் நாட்டு கருத்தரங்கு முடிந்து, 20 ஆண்டுகளுக்குப் பின் 1992ல் Brasil நாட்டில் பூமிக்கோளத்தின் உச்சி மாநாடு (Earth Summit 1992) ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள 172 நாடுகளிலிருந்து பல உயர்மட்டத் தலைவர்கள் வந்திருந்தனர். பல நாட்டுத்தலைவர்கள், பல உலக நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரையும் Severn Cullis-Suzuki என்ற கனடா நாட்டுச் சிறுமி அதிர்ச்சியில், அமைதியில் ஆழ்த்தினாள்.
இச்சிறுமி அந்த உச்சி மாநாட்டில் 6 நிமிடங்களே உரையாற்றினாள். ஆனால், அவள் சொன்னவை உலகில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. The Little Girl Who Shocked World Leaders Into Silence 'உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி', அல்லது, 'இந்த உலகைச் சில நிமிடங்கள் அசையாது நிறுத்திய சிறுமி' என்ற தலைப்புகளில் இணையதளத்தில் இந்தச் சிறுமியின் உரை இன்றும் காணக் கிடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் நேரம் ஒதுக்கி, இவ்வுரையைக் கேளுங்கள். இதோ Severn Suzukiயின் உரையில் இருந்து ஒரு சிலப் பகுதிகள்:


“நானும் என் நண்பர்கள் மூவரும் எங்கள் சொந்த முயற்சியில் 5000 மைல்கள் கடந்து வந்திருக்கிறோம் உங்களைச் சந்திப்பதற்கு. நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.
வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. இவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாளும் நான் கேட்டு வருகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது.”

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.
இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.
காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.
உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”


Severn Suzuki பேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர் குற்ற உணர்வோடு அந்தச் சிறுமியை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உண்மைகளைப் பேசினாள் அச்சிறுமி.
“நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம். பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர். தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.
நான் சிறுமிதான். ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க முடியும், நமது இயற்கையை காக்க முடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே; ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?
குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:
மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;
மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;
நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;
மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;
எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது...
என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு, நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”


இறுதியாக, அச்சிறுமி அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தாள்.
“நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு நல்லவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எந்த வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.
பயந்து கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று சொல்லி குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள். இது நான் உங்கள் முன் வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவி மடுத்ததற்கு நன்றி.”


அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள் அந்தச் சிறுமி. இது நடந்து இப்போது ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. Severn Suzuki அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள் இன்றும் நமக்கு எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது. மனிதச் சமுதாயம் இன்னும் இயற்கைக்கு இழைத்து வரும் அழிவுகளை நிறுத்தாததால், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நமக்கு மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. கேட்கச் செவி உள்ளவர்கள்தாமே நாம்... இந்த எச்சரிக்கையைச் சரியாகக் கேட்டிருக்கிறோமா?
இவ்வாண்டு 2011, ஜூன் 5ம் தேதி இந்தியத் தலைநகரம் புது டில்லி உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மையக் கருத்து: 'காடுகள்: உங்களுக்குப் பணி செய்யும் இயற்கை'. நமக்குப் பணிகள் செய்யும் இயற்கையை நாம் பணிவுடன் அணுகினால், மதிப்புடன் பாதுகாத்தால் நமது அடுத்தத் தலைமுறையினருக்கு நல்லதொரு உலகை நம்மால் விட்டுச் செல்ல முடியும். இந்த ஆண்டு இந்தியாவின் தலைநகரில் உலகச் சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து ஜூன் 5, இந்த ஞாயிறை பசுமை ஞாயிறு என்று கொண்டாட அழைப்பு விடுத்துள்ளன.
"ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?" என்று இறைத்தூதர்கள் கேட்ட கேள்வியை மீண்டும் நினைவுக்குக் கொணர்வோம். வானத்தையேப் பார்த்துக் கொண்டிராமல், நமது சுய நலம் என்ற சிறு கனவுலகிலேயே அடைபட்டுக் கிடக்காமல், இந்த உலகை, சுற்றுச்சூழலைக் காக்க முயற்சிகள் மேற்கொள்வோம். விண்ணேற்றம் அடைந்த பின்னும், 'இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்' என்று இன்றைய நற்செய்தியில் நமக்கு வாக்களித்துள்ள இறைமகன் இயேசு, நம்மை இந்த நற்பணியில் வழிநடத்த வேண்டுவோம்.