26 May, 2013

The Triune God… ‘waiting to be seen’ மூவொரு இறைவனைக் காண...

Holy Trinity

Kids in a kindergarten class were deeply immersed in drawing. Their teacher was walking around to see each child's artwork. As she got to one little girl who was working diligently, she asked what the drawing was.
The girl replied, "I'm drawing God."
The teacher paused and said, "But no one knows what God looks like."
Without missing a beat, or looking up from her drawing the girl replied, "They will in a minute."
If I were the teacher listening to that kid, I would have learnt my catechism anew. The adult in us says that God is ‘un-seeable’ while the child (in us) says that God is ‘waiting to be seen’! Our catechism began with the simplest of prayers – ‘In the name of the Father and of the Son and of the Holy Spirit – Amen’. The mystery behind this simple prayer is very profound – the Mystery of the Holy Trinity. Today we celebrate the Feast of the Most Holy Trinity. To celebrate this Feast, we need to become children again otherwise, this mystery will turn us into mental gymnasts, as it did St. Augustine.  

Most of us remember the story about St. Augustine, who was involved in a mental exercise. He was walking by the seashore one day, attempting to conceive of an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, pouring seawater from a shell into a small hole in the sand. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson. Later, Augustine wrote: "You see the Trinity if you see love." St Augustine learnt to ‘think’ of God with his heart. We can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God."

Many of the deep realities of life and the world are simply gifts to be admired and mysteries to be contemplated by the heart than ideas to be grasped by the mind, dissected and labelled into packages. Albert Einstein, one of the greatest scientists of our times, had dissected almost anything and everything under the sun and gave plausible explanation. It was he who made the famous statement: “The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.”
As children each of us has the capacity to ‘contemplate’. Some of us, somehow, maintain a streak of the ‘child’ in us all our lives. An episode from the life of Franklin D. Roosevelt (FDR), the well-known president of the U.S., is worth remembering here. FDR and one of his close friends, Bernard Baruch, talked late into the night one evening at the White House. At last, President Roosevelt suggested that they go out into the Rose Garden and look at the stars before going to bed. They went out and looked into the sky for several minutes, peering at a nebula with thousands of stars. Then the President said, "All right, I think we feel small enough now to go in and go to sleep."
Perhaps what FDR was doing might have seemed ‘childish’ to his friend Bernard. But I feel that this childlike streak in FDR kept him sane in spite of being the president of the U.S. Being the President of the U.S. can easily turn an individual into a megalomaniac. FDR must have stayed sane by seeing himself in the proper perspective. The ‘child’ in him helped maintain that sanity.

I guess this is why Jesus spoke of all of us gaining entry into the Kingdom only by becoming children. In his own inimitable style, Jesus introduced the concept of the Holy Trinity to the Jews and to us. When He spoke of God in terms of relationships, many were surprised and many other ‘grown-up, important persons’ were furious. The God of the Israelites was ONLY ONE. Jesus did not change this fundamental idea, but presented this ONE GOD as a THREE-IN-ONE GOD. Basically what Jesus wanted to tell his listeners (and us) was that God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world like that of certain Buddhist monastic traditions where the quest for holiness means withdrawal to the Himalayas away from contact with other people and society. (Fr. Ernest Munachi Ezeogu)

The Feast of the Most Holy Trinity, the Feast of God’s Family, calls us to examine our attitude to relationships in general. Due to pressures coming from different directions in our daily life, family relationships become a casualty. May this Feast give us a fresh impetus to rethink our priorities and give due place for God and our family ties.  

மழலையர்பள்ளி (Kindergarten) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல் அக்குழந்தை, "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னார்.
'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது வளர்ந்துவிட்ட ஒருவரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் அற்புத வெளிப்பாடாக இறைவன் என்ற பேரொளியின் ஒரு சிறு பொறியாக இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.

மத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா, அப்பா என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமாவது - மூவொரு இறைவன். குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவன் பெயரால் நம்மை ஆசீர்வதித்தனர். நாம் திருமுழுக்கு பெற்றபோது, மூவொரு இறைவன் பெயரால் நமக்குரிய பெயரை வழங்கினார் பங்குத்தந்தை. பெற்றோர் கோவிலுக்குள் நம்மை சுமந்து சென்றபோதும், தட்டுத் தடுமாறி தளிர் நடைபயின்று நாம் சென்றபோதும் கோவில் வாசலில் இருந்த அர்ச்சிக்கப்பட்ட நீரால் பெற்றோர் நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவனை மீண்டும் மீண்டும் நமக்கு அறிமுகப்படுத்தினர். "தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால், ஆமென்" என்ற இந்த எளிய செபமும், அதனுடன் இணைந்து செல்லும் அடையாளச் செயலும் குழந்தைகளின் முதல் செப முயற்சிகள். மழலையருக்கு இவ்விதம் அறிமுகமாவதை இறைவன் நிச்சயம் மகிழ்வுடன் வரவேற்பார்.
இவ்வகையில் நமக்கு அறிமுகமான மூவொரு இறைவனை மீண்டும் நமக்கு நினைவுறுத்தும் ஓர் அழகிய விழாவை இந்த ஞாயிறு நாம் கொண்டாடுகிறோம். இன்று மூவொரு இறைவன் பெருவிழா. குழந்தைப் பருவம் முதல் மூவொரு இறைவனாக நம்முடன் வாழும் இறைவன், நாம் வயதில் வளர, வளர, ஒரு மறையுண்மையாக மாறுகிறார். இந்த மறையுண்மையைப் புரிந்துகொள்வதில் நாம் அதிகம் ஈடுபாடு கொள்ளும்போது, உண்மை இறைவனை மறந்துவிட்டு, அவரைப்பற்றி நாம் உருவாக்கியுள்ள சிந்தனைகளைக் கொண்டாடும் ஆபத்து நமக்கு ஏற்படுகிறது. பொருளுள்ள வகையில் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட வேண்டுமெனில், நாம் மீண்டும் குழந்தைகளாக மாறவேண்டும்.

மூவொரு இறைவனையும, குழந்தையையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நடந்தது இந்தக் கதை. இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகுஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடைதேடிக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தார். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின் அச்சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றார்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த புனித அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனார்.

அன்று அகுஸ்தின் அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம் புனித அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று புனித அகுஸ்தின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்கமுடியாது." என்றார் அவர்.

குழந்தைகளுக்குரிய பணிவான மனதை வளர்த்துக் கொள்வதால், வாழ்வின் ஆழமான உண்மைகளை உய்த்துணரலாம். இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Franklin Roosevelt பற்றி சொல்லப்படும் ஒரு கதை உதவியாக இருக்கும். Rooseveltம் அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruchம் ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் மூலம் தனது உண்மை நிலையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், Roosevelt செய்தது குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரிகிறது. ஆனால், பரந்து விரிந்த வானத்தை ஓர் ஆழ்நிலை தியானமாய்ப் பார்த்தது, Rooseveltக்கு அவரது நிலையைத் தெளிவாக உணர்த்தியிருக்க வேண்டும். அத்தகைய மனநிலையோடு Franklin Roosevelt உறங்கச்சென்றது அவர் தனக்குத்தானே சொல்லித்தந்த ஓர் அழகியப் பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகளும், அடக்கிவிட முடியும் என்ற கனவுகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவைகளுக்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்துணர்தல் ஆகிய ஆழமானத் திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும். ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் விளக்கமுடியாது.
“The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.” – Albert Einstein
"இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம், பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்." என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டுபிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.

புனித அகுஸ்தின் தன் உள்ளத்தின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் எப்படி என்ற கேள்விக்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் பயின்றிருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு, பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும்.
எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, அதேவேளை, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித்தர இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. அதிலும் சிறப்பாக, இறைவனை தன் தந்தையாக, நம் அனைவருக்கும் தந்தையாக அவர் அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை, கோபத்தில் ஆழ்த்தியது. அதுவரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம். மூவொரு இறைவனை அறிவு வாதங்கள் வழியே அறிந்துகொள்வதற்குப் பதில், ஆழ்ந்த அனுபவங்களின் வழியே புரிந்துகொள்வதற்கு, மீண்டும் குழந்தைகளாக மாறும் வரத்தை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.


19 May, 2013

‘Celebrating’ the Spirit ஆவியானவரைக் கொண்டாடுவோம்



The Spirit of Pentecost

Pentecost. Although this word has assumed very many shades of meaning, it simply means the fiftieth (day). Most often in life, the greatest and the most profound truths are enveloped in simplicity. A quick look at the last 50 days of our liturgical cycle will show us that everything around Jesus was simple but steeped in mystery. In the last 50 days we have had quite a few festivals, celebrations starting from Easter. We celebrated Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. There are a few more celebrations lined up… The Feasts of the Holy Trinity, the Body and Blood of Christ, and the Sacred Heart of Jesus… Every celebration needs to take us back to the ‘source’ – the ‘why’ and ‘what’ of these celebrations. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

What if the first Easter had been given to an ‘events manager’? I leave it to your imagination! According to the ‘logic’ of events managers, the first Easter should have taken place in full splendour… with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event, in every sense of the word!
The first Ascension, once again, was a very subdued affair with Jesus spending quiet moments with the disciples on a hillock outside the city, before being taken up into heaven. The first Pentecost alone had some external manifestations like the ‘rush of wind’ and ‘tongues of fire’ (Acts 2: 1-4). The real core of the Pentecost, namely, the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples, was still a private encounter. The people of Jerusalem only saw the effect of this outpouring. So, from the commercial perspective, these events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world. Commercial celebrations are more about the ‘how’ of the celebration than the ‘why’ and the ‘what’ of it.

Jesus and his disciples defined ‘celebration’ in a totally different way. They were more interested in the ‘why’ and the ‘what’ of the event than the ‘how’ of it. This ‘what’ left a lasting, life-long impression on the disciples.
It would do us a world of good to reflect on the ‘what’ of the Feast of the Pentecost. This Feast is the fulfilment of what Christ promised to his disciples – namely the Holy Spirit. Jesus said that the Holy Spirit would take over! The Spirit really took over the lives of the Apostles. They were not the same after the Pentecost.
This Feast gives us an assurance that the Holy Spirit is here to stay in each of us. Although ‘in him we live and move and have our being’ (Acts 17: 28), we don’t recognise the Spirit – just like the little fish, swimming in the sea, kept searching for the sea.

Here is a small anecdote that reflects on how we, although surrounded and sustained by the Holy Spirit, still fail to recognise the Spirit. More than a century ago, a great sailing ship was stranded off the coast of South America.  Week after week the ship lay there in the still waters with not a hint of a breeze.  The captain was desperate; the crew was dying of thirst.  And then, on the far horizon, a steamship appeared, heading directly toward them.  As it drew near, the captain called out, "We need water!  Give us water!"  The steamship replied, "Lower your buckets where you are."  The captain was furious at this cavalier response but called out again, "Please, give us water."  But the steamer gave the same reply, "Lower your buckets where you are!"  And with that they sailed away!  The captain was beside himself with anger and despair, and he went below.  But a little later, when no one was looking, a yeoman lowered a bucket into the sea and then tasted what he brought up: It was perfectly sweet, fresh water!  For, the ship was just out of sight of the mouth of the Amazon.  And for all those weeks they had been sitting right on top of all the fresh water they needed!  What we are really seeking is already inside us, waiting to be discovered, waiting to be embraced: the Holy Spirit of God who has been living within us from the moment of our Baptism. This is ‘what’ this Feast is all about – to recognise the treasure buried within us! 

The Feast of the Pentecost is also the Birthday of the Church. Any child coming into the world raises lots of expectations in others. The ‘first-things’ done by a child will confirm others in their expectations. The expectations of the new-born Church were revealed in what happened on that day in Jerusalem. (Acts 2: 1-11)
What did the new-born child, the Church, do on her Birthday? She unified people coming from many countries and regions. This is typical of many child-births in families. A new-born child tends to bring reconciliation in most families.
Let me stretch the metaphor of the new-born infant a bit more. We don’t need too much of a brain to understand the ‘language’ of a child. In fact we understand the language of an infant with our hearts than with our brains. Something similar happened with the new born Church. When She ‘spoke’ through the disciples everyone understood! The Acts of the Apostles in today’s first reading gives a list of those people who understood the disciples:
 And they were amazed and wondered, saying, "Are not all these who are speaking Galileans? And how is it that we hear, each of us in his own native language? Par'thians and Medes and E'lamites and residents of Mesopota'mia, Judea and Cappado'cia, Pontus and Asia, Phryg'ia and Pamphyl'ia, Egypt and the parts of Libya belonging to Cyre'ne, and visitors from Rome, both Jews and proselytes, Cretans and Arabians, we hear them telling in our own tongues the mighty works of God." (Acts 2: 7-11)

A bunch of Galileans spoke and people from many other nations and regions understood them. The last line of this passage gives us another clue as to how all these ‘different’ people understood what the Galileans spoke… The Galileans spoke about ‘the mighty works of God’. The last line also stresses the ‘hearing’ part of the message more than the speaking part. ‘We hear them telling in our own tongues the mighty works of God.’
To speak of and to hear about the mighty works of God, one does not require intelligent brains but an intuitive heart. The disciples spoke from their heart which was on fire and those who heard them were on fire too since they listened with their hearts. For this to happen, language – a tool invented by human beings – cannot be a block.

So, to come back to the ‘what’ of this Feast… It is the Birthday of the new-born Church. This Birthday brought together many nations, regions and tribes thus making it clear that divisions invented by human intelligence will break down when hearts are united by the fire of the Spirit!

As a parting thought we can carry the words of St Paul:
But I say, walk by the Spirit, and do not gratify the desires of the flesh…But the fruit of the Spirit is love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness, self-control; against such there is no law. And those who belong to Christ Jesus have crucified the flesh with its passions and desires. If we live by the Spirit, let us also walk by the Spirit.
(Galatians 5: 16, 22-25)

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, பெந்தக்கோஸ்துஎன்று அழைக்கிறோம். பெந்தக்கோஸ்து என்ற சொல்லுக்கு, ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று நாம் கொண்டாடி மகிழ, பல ஞாயிறுகள் தொடர்ந்து வந்தன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, கிறிஸ்துவின் திரு இருதயத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, அமைதியாய் நடந்தன.
எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் அமைதியாக நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கியச் சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவோ, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். விழா என்ற எண்ணத்திற்கு இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை இவ்விழாக்கள் வகுத்துள்ளன.
உலக விழா என்ற இலக்கணத்தில், கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப்பொருத்தே இந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே இவ்விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்தநாள் கேட்டால்கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தந்தனர் இயேசுவும் அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஒருநாள் கேளிக்கைகளாகக் கடந்துபோகாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் கருவிகளாக அமையும். உள்ளத்தின் ஆழத்தில் நிறைவைத் தரும் மகிழ்வாக நம்முடன் தங்கும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். தூய ஆவியாரின் பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் மற்றொரு முக்கிய பாடம் - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. ஒரு கணமும் நம்மைவிட்டு விலகாமல் வாழும் இறை ஆவியாரை உணராமல் நாம் தேடிக்கொண்டிருப்பது, மீன் ஒன்று, கடல் நீரில் நீந்திக்கொண்டே, கடலைத் தேடியதைப் போன்ற ஒரு நிலை.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், அவர்களால் சமாளிக்க முடிந்தது. ஆயினும் அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்கு கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர் தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலக்கும் இடம். சுவையான குடிநீர் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நாம் தாகத்தால் தவிக்க முடியும்.
ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். அதே இடத்தில் உறங்குவார். பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... வாழ்வுப் பயணத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல் தாகத்தில், தேவையில் துடிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
நமக்குள் இருக்கும் நல்லவற்றை நமக்குத் தெளிவுபடுத்தும் அணையாத ஒளியாக, நமக்குள் நல்லவற்றை ஒவ்வொருநாளும் பிறப்பிக்கும் வற்றாத ஊற்றாக நம்முள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன், தூய ஆவியார். இவரது பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இவர் நம்முள் உறையும் இறைவன் என்பதை முழுமையாக நம்பும் வரத்தை ஒவ்வொருவருக்காகவும் வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவையின் பிறந்தநாள். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.
திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார் தீ நாவுகளாய் இறங்கிவந்த அனுபவம் தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில் தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.
பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு இறை அனுபவம் கிடைக்கும் என்று ஏறத்தாழ எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையில் இத்தகைய தனிப்பட்ட அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும் ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, திருஅவையின் பிறந்தநாள் நமக்குச் சொல்லித் தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. பொதுவாகவே, நாம் வாழும் இன்றைய உலகம், நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காணமுடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. நம்மைச்சுற்றி வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால், அதே வேளையில் இக்கருவிகள் நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது இக்கருவிகளின் தோழமையால் நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கருவிகள் இல்லாமல் தொடர்புகள் இல்லை என்ற அளவு, கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது நானும் கடவுளும் என்ற தனிப்பட்ட அனுபவம் அல்ல, குழுவாக, குடும்பமாக நாம் உணரும் ஓர் அனுபவமே திருஅவை.

திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் என்ன? இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கும் வரிகள் இவை: "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்." (திருத்தூதர் பணிகள் 2: 4) திருஅவை என்ற குழந்தை பிறந்ததும் பேசத் துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில் பேசத் துவங்கியது.
தூய ஆவியாரின் வருகையால் பிறந்த திருஅவை, பிறந்ததும் உலகிற்குச் சொல்லித் தந்த அழகானப் பாடங்களில் ஒன்று... மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை என்ற பாடம். அதுவும், நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை என்பதையும் தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.
தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25
தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

12 May, 2013

Mothering care… Smothering flare… அன்னையாகும் அழைப்பு... அனைவருக்கும்


Mother Quotes – Quote by George Herbert


This Sunday, the Feast of the Ascension of Our Lord, Pope Francis is raising 800 plus persons to the altar as Saints of the Catholic Church. This announcement was made by Pope Emeritus, Benedict XVI on February 11th, 2013. But, on the same day he had also announced his decision to step down from his leadership role. Hence, the whole world was caught up with that news and the ‘new saints’ were almost forgotten. Of these new Saints, more than 800 of them are lay persons, martyrs from Italy killed by the Ottoman soldiers for refusing to convert to Islam. (More on the new Saints… at the end!)
This Sunday – the second Sunday of May – is celebrated as Mother’s Day in more than 80 countries around the world. On May 13th, Monday, we celebrate the Feast of Our Lady of Fatima. I would like to confine my reflections mainly to Mother’s Day and add a tail-piece on Our Lady of Fatima.

Mother’s Day… Is it Mothers’ Day - Plural? Or Mother’s Day - Singular? Anna Jarvis, the lady who popularised this day in the U.S., answers this question. Here is an extract from Wikipedia:
In 1912, Anna Jarvis trademarked the phrases "second Sunday in May" and "Mother's Day", and created the Mother's Day International Association. "She was specific about the location of the apostrophe; it was to be a singular possessive, for each family to honour their mother, not a plural possessive commemorating all mothers in the world."
We are not celebrating ‘Mother’ as a concept, but Mother as a concrete person – Mom – in our personal lives. We are thankful to Anna Jarvis for her efforts to popularise this lovely day. Unfortunately, Anna was appalled by the way this day was commercialised in a few years. This day, sadly, has been hijacked by the commercial world very much. We need to redeem this day as well as the concept of ‘mother’ from the clutches of the market people!

Reading through quite a few vignettes on the evolution of this day, I was very impressed with the "Mother's Day Proclamation" by Julia Ward Howe… once again, from the Wikipedia:
The "Mother's Day Proclamation" by Julia Ward Howe was one of the early calls to celebrate Mother's Day in the United States. Written in 1870, Howe's Mother's Day Proclamation was a pacifist reaction to the carnage of the American Civil War and the Franco-Prussian War. The Proclamation was tied to Howe's feminist belief that women had a responsibility to shape their societies at the political level.

Mother's Day Proclamation
Arise, then, women of this day!
Arise, all women who have hearts,
Whether our baptism be of water or of tears!
Say firmly:
"We will not have great questions decided by irrelevant agencies,
Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
Our sons shall not be taken from us to unlearn
All that we have been able to teach them of charity, mercy and patience.
We, the women of one country, will be too tender of those of another country
To allow our sons to be trained to injure theirs."
From the bosom of the devastated Earth a voice goes up with our own.
It says: "Disarm! Disarm! The sword of murder is not the balance of justice."
Blood does not wipe out dishonor, nor violence indicate possession.
As men have often forsaken the plough and the anvil at the summons of war,
Let women now leave all that may be left of home for a great and earnest day of counsel.
Let them meet first, as women, to bewail and commemorate the dead.
Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God…
This poem, as we see, was written in the context of a war. Our world is constantly at war and hence this poem seems to have an everlasting appeal.

Mother’s Day also brings to mind the ‘Mothering Sunday’ that was in vogue in England. This Sunday, the second Sunday in May, has been officially designated as "Mother's Day" since May 9, 1914. But in England as far back as the 1600's there has been a tradition of a "Mothering Sunday." Originally born out of the Catholic celebrations of Mary, the Mother of Christ, the English "Mothering Sunday" allowed poor women who worked and lived as servants in wealthy households a day off to return home and be with their own families. (Leonard Sweet)

The idea of allowing the poor domestic female employees of rich families to return home to their own kids for a day and call it ‘Mothering Sunday’ sounds atrocious. But, the same stories of agony continue today. How many women have to leave their families and children, even leave their country, in order to take care of the kids of rich families? Or, slog in ‘alien soil’ to keep the family from starving? How many mothers are still being ‘used’ as machines both at home and in the work place?
The recent tragedy in Dhaka, Bangladesh is ONCE AGAIN a wake up call for all of us to think… Think of how multi-national companies exploit cheap labour in the so called ‘third world’. Most of these cheap labourers are women. Most of the 1000 plus persons killed in the building collapse in Dhaka on April 24th, are young ladies… young mothers.
The extent of exploitation is clear when one thinks of the ‘economics’ of the garments manufactured in those buildings. It is said that the price of a piece of garment that goes out of those buildings is generally 3 to 4 dollars. But, when they reach the fancy malls, they are sold with a price tag of 30 to 40 dollars. What is more painful is the fact that the women who work in these garment factories are paid only 38 dollars per month… less than the price of one piece of the garments they had made!
Let the death of these young ladies of Bangladesh, sacrificed brutally on the altar of greed, not go in vain. On this Mother’s Day, we salute these ladies as well as millions of other ladies without whose labour this world would come to a stand still!  

One line in the ‘Mother’s Day Proclamation’ caught my special attention:
“Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.”
Imprinting the image of Caesar or God on this world… on each individual? A challenge worth considering. The image of Caesar, symbolising political and financial power, has made the world a battlefield all the time. As against this, Julia’s poem talks of imprinting the image of God which symbolises peace and love.
Mary, the Mother of Christ, constantly imprints God’s image on this world not only during her life time, but also after her return to heaven. Through her apparitions in different places in different decades, her only aim was to imprint the image of God more and more on the world. Especially, during the apparitions of in Fatima, Mary had revealed about the devastations of war and the need to pray for peace.

On this special day – Mother’s Day – we shall celebrate our own Moms. We shall celebrate God the Mother. We also celebrate maternal instincts planted in each of us. Only with motherly care can we impress God on the world. Only with motherly care can we sustain this world in peace!
-------------------------------------------------------------------------------------------
Additional information on the Canonisation on May 12, 2013:
In his first canonisation ceremony, Pope Francis will raise to the altars an estimated 800 Italian laymen martyrs killed by Ottoman soldiers in the 15th century. Many of the martyrs’ skulls adorn the walls of the sanctuary in the cathedral at Otranto, a small port town at the eastern tip of southern Italy, where the massacre took place in 1480. The announcement of the May 12 canonisation was made by Emeritus Pope Benedict XVI on February 11, but the news was overshadowed by the announcement of his resignation on the same day.
When the residents of Otranto refused to surrender to the Muslim army after a weeklong siege of their town, the soldiers were ordered to kill all males over the age of 15. Many were given the option of converting to Islam instead, but Blessed Antonio Primaldo, a tailor, spoke on the prisoners’ behalf. “We believe in Jesus Christ, Son of God, and for Jesus Christ we are ready to die,” he said, according to Blessed John Paul II, who visited Otranto in 1980 for the 500th anniversary of the martyrs’ deaths.
In 1771, the Church recognised the validity of the local veneration of Primaldo and his companions and allowed them to be called Blessed. In 2007, Pope Benedict formally recognised their martyrdom and in 2012 he recognised a miracle attributed to their intercession. Although martyrs do not need a miracle in order to be beatified, a miracle must be recognised before they can be pronounced saints.
The second canonization is of Mother Laura Montoya Upegui from Colombia. Mother Laura (1874-1949) is the founder (1914) of the Congregation of the Missionaries of Mary Immaculate and St. Catherine of Siena. The Order has branches in many countries in Central and South America, the Caribbean, Italy and Angola. Mother Laura is now recognized as the first saint of Colombia after she was beatified in 2004 by Pope John Paul II.
Maria Guadalupe Garcia Zavala (1878-1963) is also raised to the altars on May 12. The Mexican nun is known as Mother Lupita. In 1901 she founded the Congregation of the Servants of Saint Margaret Mary and the Poor. (SSMMP). The Order has some 150 sisters and is active  in Mexico, Peru, Greece, Iceland and Italy in ministry to the poor. Mother Lupita was beatified in 2004 by Pope John Paul II.


Raised-by-a-queen

இன்று அன்னை தினம். உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்கத் திருஅவையில், இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த ஞாயிறன்று, 800க்கும் அதிகமானோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறார். நாளை, மே 13ம் தேதி, திங்களன்று பாத்திமா நகர் புனித அன்னை மரியாவின் திருநாளையும் கொண்டாடவிருக்கிறோம்.
ஒவ்வொரு விழாவும் கொண்டாட்டங்களைக் கொணர்ந்தாலும், கூடவே ஒரு சில கேள்விகளையும் கொணர்கின்றன. இவ்விழாக்களின் வரலாற்றுப் பின்னணிகளுடன், இக்கேள்விகளுக்கு ஓரளவு தெளிவான விடைகளைத் தேடினால், இவ்விழாக்களை இன்னும் பொருளுள்ள வகையில் கொண்டாடமுடியும்.

அன்னை தினத்தில் நம் கேள்விகளை ஆரம்பிக்கிறோம்... இந்த நாளை அன்னை தினம் என்று ஒருமையில் அழைப்பதா? அன்னையர் தினம் என்று பன்மையில் அழைப்பதா? என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் இத்தினத்தை அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்ட Anna Jarvis என்பவர் இக்கேள்விக்குச் சரியான விடை அளிக்கிறார்:
"இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னையைத் தனிப்பட்ட வகையில் சிந்தித்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த நாள். அன்னையர் என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல." என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
Anna Jarvis பாடுபட்டு உருவாக்கிய இந்த நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு அவர் மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்பு வகைகள் என்று அன்னை தினம், வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த வியாபாரப் பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் உரிய மதிப்பை வழங்குவது நம் கடமை!

அம்மாவை, அன்னையை, தாயை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம் 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மைப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்கிறது. இதோ அக்கவிதை:
மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்:
வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.
ஒரு நாட்டின் பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டின் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும்..
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
தாய், அல்லது அன்னை என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை உருவாக்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக் கண்ட Julia Ward Howe எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் களையும் உறுதியைத் தருகின்றன.

அன்னை தினத்திற்குக் கூறப்படும் மற்றொரு பின்னணியும் நம் கவனத்தை ஈர்க்கின்றது. Leonard Sweet என்பவர் தன் மறையுரையில் இந்தப் பின்னணியைப் பற்றிக் கூறுகிறார். இங்கிலாந்தில் 'Mothering Sunday' என்ற பழக்கம் 16ம் நூற்றாண்டிலேயே இருந்தது. மே மாதம் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பது கத்தோலிக்க பரம்பரையில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். அந்த மே மாதத்தின் ஒரு ஞாயிறு மரியன்னையின் நினைவாக 'Mothering Sunday' என்று அழைக்கப்பட்டது.
16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல செல்வந்தர்களின் இல்லங்களில் பெண்கள் இரவும் பகலும் பணி செய்து வந்தனர். அவர்களுக்கு விடுமுறை நாள் என்பதெல்லாம் கிடையாது. தங்கள் இல்லங்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடையாது. எனவே, மே மாதத்தின் ஒரு ஞாயிறன்று இந்தப் பணிப்பெண்கள் தங்கள் குடும்பங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைகளுடன் அந்த நாளைச் செலவிட விடுமுறை வழங்கப்பட்டது. அந்த நாளுக்கு 'Mothering Sunday' அதாவது 'அன்னையாகும் ஞாயிறு' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

16ம் நூற்றாண்டில் நிலவிய இந்தச் சூழல் மனதை உறுத்துகிறது. செல்வந்தர் வீட்டு வேலைகளில் ஆண்டு முழுவதும் துன்பப்படும் பெண்களுக்கு ஒரு ஞாயிறை விடுமுறையாகத் தந்து 'அன்னையாகும் ஞாயிறு' என்று அழைப்பதை அநீதி என்று மனம் சொல்கிறது. ஆயினும், இப்படிப்பட்ட ஓர் எண்ணமாவது இருந்ததே என்று நமக்கே நாம் ஓரளவு சமாதனம் சொல்லிக் கொள்ளலாம். 16ம் நூற்றாண்டில் நிலவிய இதே நிலை இன்றும் தொடர்வதை நாம் அறிவோம். வறுமையின்  காரணமாகக் குடும்பங்களை, குழந்தைகளைப் பிரிந்து வேறு இல்லங்களில், வேற்று நாடுகளில் பணி செய்யும் அன்னையர் பல கோடி பேர் உள்ளனர். அவர்களை இன்று சிறப்பாக எண்ணி நம் செபங்களை எழுப்புவோம். பொருளாதார நிர்ப்பந்தங்களால் தங்கள் தாய்மை நிலைக்குரிய உணர்வுகளைப் புதைத்துவிட்டு பரிதவிக்கும் இவர்களுக்கு விரைவில் ஒரு விடிவு கிடைக்கவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

பல்வேறு கட்டாயங்களால் பணிசெய்யும் பெண்கள் என்று எண்ணிப்பார்க்கும்போது, நமது மனம் பங்களாதேஷில் Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தை எண்ணிப் பார்க்கிறது. ஏப்ரல் 24ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களில் பலர் இளம் அன்னையர். ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக அடிமைகளாக உழைத்தவர்கள் இப்பெண்கள். இந்த விபத்து நிகழ்ந்து 17 நாட்கள் சென்று மே 10ம் தேதி, Reshma என்ற ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். இவரைப் போல் இன்னும் பலர் உயிரோடு மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை அங்கு உருவாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தினால் மனித சமுதாயம் இழந்ததுதான் அதிகம்.
பன்னாட்டு ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்காக பங்களாதேஷ் நாட்டில் உற்பத்தியாகும் ஆடைகள் அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது அதன் விலை 3 அல்லது 4 டாலர்கள். அவை விற்பனையாகும்போது அதன் விலை 30 அல்லது 40 டாலர்கள். ஓர் ஆடையின் விற்பனை விலை கூட இப்பெண்களுக்கு மாத சம்பளமாகக் கிடைப்பதில்லை. அவர்கள் பெறும் சராசரி மாத சம்பளம் (இதை அடிமைகளின் கூலி என்றே சொல்லவேண்டும்) 38 டாலர்கள்.
ஆடைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பேராசைக்கும், இந்நிறுவனங்களை எதிர்த்து நிற்கத் துணியாத அரசுகளின் கோழைத்தனத்திற்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வழிகளில் பலியாகும் பெண்களை இறைவன் சன்னிதிக்குக் கொணர்வோம். தங்கள் உயிர்பலி மூலம் பங்களாதேஷ் பெண்கள் நமக்கு அறிவுறுத்தும், நினைவுறுத்தும் பாடங்களை நாம் ஒவ்வொருவரும் பயில இறைவனின் அறிவொளியைத் தேடுவோம்.

Julia Ward Howe 1870ம் ஆண்டு எழுதிய கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், நாளை கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
உலகின் மேல் அதிகாரமான, ஆணவமான சீசரின் உருவம் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும், வர்த்தக நிறுவனங்களின் பேராசைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை அன்னை மரியா தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும் பல இடங்களில் தோன்றி இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் சிறப்பான செய்திகளைக் கூறினார்.

பல்வேறு போர்களால், போராட்டங்களால் ஒரு சிலரது பேராசைகளால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்குத் தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகில் நீதியும், அதன் அடிப்படையில் அமைதியும் வளர்வதற்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
------------------------------------------------------------------------------------------
புதிய புனிதர்கள்...

Ottoman என்று அழைக்கப்பட்ட துருக்கிய பேரரசால் 1480ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கொல்லப்பட்ட 800க்கும் அதிகமான இத்தாலியர்களை, மே மாதம் 12ம் தேதி, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்துகிறார். இத்தாலியின் தென் கோடியில் அமைந்துள்ள Otranto என்ற ஊரை, Ottomon படையினர் முற்றுகையிட்டனர். இருவாரங்கள் நீடித்த இந்த முற்றுகையின்போது, அவ்வூரில் இருந்த அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தப்பட்டனர். உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஒரு குரு அவர்களுக்கு அறிவுரை கூறியும், அவ்வூர் மக்கள் மதம் மாற மறுத்தனர். எனவே, அவ்வூரில் இருந்த 15 வயதுக்கு மேற்பட்ட 800 ஆண்களை ஊருக்கருகே அமைந்திருந்த ஒரு சிறு குன்றுக்கு கொண்டு சென்றனர், படைவீரர்கள்.
மலையுச்சியில் அவர்களிடம் மதம் மாற இறுதி வாய்ப்பளிப்பதாகக் கூறிய படைவீரர்களிடம், Otranto நகரில் தையல் வேலை செய்துவந்த Antonio Primaldo என்பவர், "நாங்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். அவருக்காக, இறக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று துணிவுடன் சொன்னார். அவர் காட்டிய துணிவு அங்கு நின்ற அனைவரிடமும் பரவியது. எனவே அவர்கள் அனைவரும் துணிவுடன் மரணத்தை எதிர் கொண்டனர்.
அன்று, அந்தக் குன்றின் மீது நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு மரபுவழி கதை உண்டு. அதாவது, அங்கிருந்தோர் அனைவரிலும், Antonio Primaldo அவர்களின் தலையே முதலில் வெட்டப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலத்தில் சாயாமல் நின்றது. வீரர்கள் அவ்வுடலைத் தள்ளியபோதும், அது அசையாமல் நின்றது. அங்கிருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னர், இறுதியில் Antonio அவர்களின் உடல் தரையில் வீழ்ந்ததென்பது மரபுவழிக் கதை. இந்த மறைசாட்சிகள் அனைவரும் மே 12, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.

இவர்களுடன், அருள் சகோதரிகளுக்கென இருவேறு துறவுச் சபைகளை உருவாக்கிய முத்திப்பேறு பெற்றவர்களான Laura di Santa Caterina da Siena அவர்களையும், Maria Guadalupe Garcia Zavala அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்துகிறார்.
இந்தப் புனிதர் நிலை அறிவிப்புக்கள் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், தான் தலைமைப் பதவியைத் துறக்கும் செய்தியையும் அதே நாளில் அவர் வெளியிட்டதால், இந்தப் புனிதர்கள் பற்றிய அறிவிப்புக்கள் அதிகமாய் நம் கவனத்தை ஈர்க்கவில்லை.