25 November, 2012

King without boundaries… எல்லைகளற்ற நாட்டின் அரசர்



‘Behold the Man’ - Giovanni Batista Tiepolo 1747
Let me begin with a confession. The image of Christ the King leaves me uncomfortable. Christ the Shepherd, Christ the Saviour, Christ the Son of David, Christ the crucified, Christ the Lord…. So many other images of Christ as Light, Way, Vine, Living Water… all these do not create problems for me. Christ the King? Hmm… Christ and King seem to be two opposite, irreconcilable poles. Why do I feel so uncomfortable with the title Christ the King? I began thinking… I found some explanation for my discomfort.
My image of a king was the cause of the problem. The moment I think of a king, pomp and power, glory and glamour, arrogance and avarice… these thoughts crowd my mind. Would Christ be a pompous, powerful, arrogant, avaricious king? No way… He would be a King on his own terms, in his own style. Christ does talk about a kingdom. A Kingdom not defined by a territory! Once this is true, then most of the problems of kingship are over. A king who does not have any claims over a territory need not be at war with other kings. This king lays claims only over human hearts. Is such a king possible? Not only possible, but made factual in Christ the King!

So, we are talking of two different worlds, worlds that are poles apart. These two poles are represented by two figures - Pilate and Jesus - given to us in today’s gospel. Here is the gospel passage:
JOHN, 18: 33-37
Pilate entered the praetorium again and called Jesus, and said to him, "Are you the King of the Jews?" Jesus answered, "Do you say this of your own accord, or did others say it to you about me?" Pilate answered, "Am I a Jew? Your own nation and the chief priests have handed you over to me; what have you done?" Jesus answered, "My kingship is not of this world; if my kingship were of this world, my servants would fight, that I might not be handed over to the Jews; but my kingship is not from the world." Pilate said to him, "So you are a king?" Jesus answered, "You say that I am a king. For this I was born, and for this I have come into the world, to bear witness to the truth. Every one who is of the truth hears my voice."

Who is Pilate? Every Sunday and on every great feast day when Christians recite the creed, they use the names of only two human persons in the creed… Virgin Mary and Pontius Pilate. The channel that infused life into Jesus and the channel that drained life out of Him. What a paradox! The person who was responsible for condemning Jesus to death has somehow sneaked into the profession of Christian faith.
Who is this Pilate? He was the representative of the great, mighty Roman emperor – Caesar. He is referred to as the fifth Procurator of Judea; he is best known as the judge at Jesus' trial and the man who authorized his crucifixion. His main task was to procure taxes from the Jews and send them over to Rome. Some would even say he was personally angry with Jesus since he had made two of his tax collectors give up their jobs: the Levi (Matthew) and Zacchaeus. So, probably Pilate had a personal score to settle with Jesus.

We have heard the famous axiom: Power corrupts and absolute power corrupts absolutely. Pilate had tasted power in some ways and he was not willing to give it up. He would go to any length to safeguard his position. Here was a threat to his power and ambition – in the form of a young man named Jesus, the Nazarene. He couldn’t believe his ears when the priests whispered to him that this man was challenging the power of Caesar and Rome. How far can a person be disillusioned, thought Pilate. Little did he realise that it was him who was the most disillusioned.
Sure, Pilate told himself, there was something about this man that challenged him. He could not but be impressed with the Nazarene. There was something magnetic about him. He wanted to know what created this aura around this frail carpenter. He tried to engage him in conversation about his kingdom and kingship. This is what is given in today’s gospel. He could not get any clear answer for his queries. What Jesus told him was way beyond his comprehension, since Pilate could not think of any other way a king or kingdom could exist except the Roman way. Such a poor, narrow view! Jesus tried to tell him that truth would set him free. For Pilate truth was a distant memory. When was the last time he had been truthful?
Even now, Pilate knew in his heart of hearts that the one who was standing in front of him was innocent. But, the moment he heard the ominous warning: "If you release this man, you are not Caesar's friend; every one who makes himself a king sets himself against Caesar." (John 19: 12). That settled the question… He was willing to compromise… Yes, all his life he had done only that… compromises. Compromise and truth cannot be in the same league. They are actually opposite poles. Just like… Pilate and Jesus.
Between Pilate and Jesus who was in power? Who was really in charge? Pilate, who was sitting on the throne so tight that others could easily see that he was ‘nailed’ to the throne; or Jesus who, even to the point of being nailed to the cross would not give up truth… now standing in front of Pilate calm and dignified? Who was the king… the real King? All of us can answer this question intellectually. My prayer is that all of us enthrone this real King in our hearts.

இந்த ஞாயிறு நாம் கொண்டாடுவது கிறிஸ்து அரசர் திருநாள். இந்தத் திருநாளைப் பற்றி நினைக்கும்போது எனக்குள்ளே ஒரு சங்கடம். அதை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்துவைப் பலகோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன், தியானித்திருக்கிறேன். ஆயனான கிறிஸ்து, மீட்பரான கிறிஸ்து, வழியாக, ஒளியாக, வாழ்வாக, உணவாக, வரும் கிறிஸ்து... இவ்விதம் பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது மன நிறைவு கிடைத்திருக்கிறது.
ஆனால் அரசரான கிறிஸ்து அல்லது கிறிஸ்து அரசர் என்ற எண்ணம் மனதில் சங்கடங்களை விதைக்கிறது. கிறிஸ்து, அரசர், இரண்டும் நீரும் நெருப்பும் போல ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பது போன்ற ஒரு சங்கடம். ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது ஓர் உண்மை தெரிந்தது. சங்கடம் கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்த சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம,... இப்போது சொன்ன பல வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தங்கள் கூட தெரியாது, ஆனால் இந்த முழக்கங்களுக்குப் பின் மனத்திரையில் தோன்றும் உருவம் எது? பட்டும், தங்கமும், வைரமும் மின்ன உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்து வரும் ஓர் உண்டு கொழுத்த உருவம்... சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், ஆடம்பரமாக வாழப் பிறந்தவர்...
அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வரும் இந்த கற்பனைக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. அப்புறம் எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படையே இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில் இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர். அந்த அரசுக்குச் சொந்தக்காரர்... அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை. இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். அப்படிச் சேர்ந்து வரும் மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். இந்த அரசில் யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், இந்த அரசில் எல்லாருக்குமே அரியணை, எல்லாருக்குமே மகுடம், எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த அரசர்கள் மத்தியில் இயேசு ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நம் பாதங்களைக் கழுவிக்கொண்டு இருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

ராஜாதி ராஜஎன்று நீட்டி முழக்கிக் கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு... எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இரண்டும் நீரும் நெருப்பும் போல் ஒன்றோடொன்று கொஞ்சமும் பொருந்தாதவை. இந்த இரு வேறு உலகங்களையும், அரசுகளையும், அரசர்களையும் இன்றைய நற்செய்தி நமக்குத் தருகின்றது.
யோவான் நற்செய்தி  18: 33-37
அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்... இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்லஎன்றார். பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர்என்றார்.

இருவேறு உலகங்களின் பிரதிநிதிகள் - பிலாத்துவும், இயேசுவும். இந்த பிலாத்து யார் என்று புரிந்து கொண்டால், இயேசு யார் என்று, அதுவும் இயேசு எந்த வகையில் அரசர் என்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இந்த பிலாத்து யார்?
உரோமையப் பேரரசன் செசாரின் கைபொம்மை இந்த பிலாத்து. இவரது முக்கிய வேலையே, யூதர்களிடம் வரி வசூலித்து உரோமைக்கு அனுப்புவது.. தன் ஆளுகைக்கு உட்பட்ட யூதப் பகுதியில் எந்த விதக் கலகமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது, கலகம் என்று எழுந்தால், எள்ளளவும் தயக்கமில்லாமல், கொடூரமாக அதை அடக்குவது... இந்தப் பதவிக்கு வர பிலாத்து பல பாடுகள்பட வேண்டியிருந்தது. அவரது கணக்குப்படி, அவர் அடையவேண்டிய பதவிகள் இன்னும் பல உள்ளன. இறுதியாக, செசாரின் வலது கையாக மாறவேண்டும், முடிந்தால் செசாராகவே மாறவேண்டும். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவர் பிலாத்து. பதவி ஒன்றே இரவும், பகலும் அவர் சிந்தனையை, மனதை ஆக்ரமித்ததால், வேறு எத்தனையோ உண்மைகளுக்கு அவர் வாழ்வில் இடமில்லாமல் போய்விட்டது. இப்போது, அந்த மற்ற உண்மைகளை நினைத்துப்பார்க்க, அவருடைய மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு சவால் வந்திருக்கிறது. அதுவும் பரிதாபமாக, குற்றவாளியென்று அவர் முன்னால் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தச்சனின் மகன் இயேசுவின் மூலம் வந்திருக்கும் சவால் அது. அந்த நேரத்தில் பிலாத்தின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன்:
என் வாழ்வின் இலட்சியங்கள் எல்லாம், பதவிகள் பெறவேண்டும், கிடைத்தப் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும், இன்னும் உயர் பதவிகளை அடைவதற்கு மேலதிகாரிகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இப்படியே வாழ்ந்து பழகிவிட்ட நான் இன்று குழம்பிப் போயிருக்கிறேன். நாசரேத்தூரில் பிறந்ததாகச் சொல்லப்படும் இயேசு என்ற இந்த இளைஞனை, ஒரு குற்றவாளி என்று என் முன் கொண்டு வந்திருக்கின்றனர். இவர் மீது எக்குற்றமும் இல்லை என்ற உண்மையை என்னால் உணர முடிகிறது. இவரைப் பார்த்ததிலிருந்து, இவரிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலிருந்து என் மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கியுள்ளது. என் மனசாட்சி மட்டுமல்லாமல், என் மனைவியும் என்னைக் குழப்புகிறாள். இந்த இளைஞனை அநியாயமாகக் கொல்லச் சொல்கிறார்கள் மதத்தலைவர்கள். மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களது ஆவேசமான ஓலங்களை எல்லாம் மீறி, என் மனசாட்சியின் குரலுக்கு, என் மனைவியின் சொல்லுக்கு நான் கீழ்ப்படிய நினைத்தேன். ஆனால், என் பதவிக்கு ஆபத்து வரும் போல் தெரிகிறது. இவனை நீர் விடுவித்தால், நீர் செசாரின் நண்பரல்ல... தன்னை அரசனாக்கிக் கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்.என்று இவர்கள் சொன்னது என்னை நிலைகுலையச் செய்துள்ளது. எனக்கு முன் நிற்கும் இந்தப் பரிதாபமான இளைஞன் ஓர் அரசனா? அதுவும் செசாருக்கு எதிராக, போட்டியாக எழக்கூடிய அரசனா? நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.  ஆனால், ஏன் இந்த விபரீத விளையாட்டு? எனக்கு என் பதவிதான் முக்கியம், அதுதான் என் வாழ்க்கை. என் மனசாட்சியோ, என் மனைவியோ முக்கியமல்ல.

இப்படி பதவிக்காக தன் மனசாட்சியையும், சொந்த வாழ்வையும் பணயம் வைக்கும் பரிதாபமான பிலாத்துக்கு முன் நிற்கும் இயேசுவின் மனதிலும் எண்ணங்கள் ஓடியிருக்கும். இதோ, மற்றொரு கற்பனை:
பாவம் இந்த பிலாத்து, இவர்மட்டும் தன் ஆழ் மனதில் உணரும் உண்மைக்குச் செவிசாய்த்தால், இந்த உரோமையப் பதவிகளை விட உயர்வான ஒரு நிலையை நானும், தந்தையும் நிரந்தரமாக இவருக்கு தருவோமே. உண்மையைக் காண மறுக்கும் இவரது உள்ளக்கதவின் முன் நின்று நான் தட்டுகிறேன். தட்டிக்கொண்டே இருப்பேன். இவர் கட்டாயம் ஒருநாள் என் குரலைக் கேட்பார், இதயத்தைத் திறப்பார். அன்று நானும் என் தந்தையும் இவர் உள்ளத்தில் அரியணை கொள்வோம், இவரையும் அரியணையில் ஏற்றுவோம்.

இரு வேறு துருவங்களிலிருந்து வந்த உள்ளக் குரல்களை, குமுறல்களைக் கேட்டோம். இந்த இருவரில் யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காண மறுத்து, தன் பதவியை, அரியணையைக் கெட்டியாகப் பிடித்தவண்ணம் அமர்ந்திருக்கும் ஆளுநர் பிலாத்தா? பதவி என்ன... உயிரே பறிபோனாலும் உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று பதட்டம் ஏதுமின்றி நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசுவா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்?

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, ஒரு சில எண்ணங்கள் மனதில் எழுகின்றன. முதலாம் உலகப்போர் முடிந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி இவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது அரசர்களின், தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், தங்கள் அதிகாரம் இன்னும் பல மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென இவர்கள் நாடுகளிடையே வளர்த்த பகைமையைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் திருஅவைத் தலைவர்களும், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு கிறிஸ்துவை அரசராக அறிவித்தனர். கிறிஸ்துவும் ஓர் அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் மக்கள் கண்டு பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

பதவி, அதிகாரம் என்ற பாரங்களால் உண்மை இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் நசுக்கப்பட்டு கொலையாகிறது. பொய்மைதான் வாழ்வதற்கு ஒரே வழி என்று சொல்லுமளவுக்கு உண்மைகள் ஒவ்வொரு நாளும் புதைக்கப்படுகின்றன. இந்நிலையில் நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் ஓர் உயர்ந்த பாடம் என்ன? உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள் மனிதர்களால் செய்யப்படும் அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர், மனிதர்கள் உருவாக்கும் சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். இப்பாடத்தைப் பயில, கிறிஸ்து அரசருக்கு இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாம் நம்பிக்கையுடன் அணுகி வருவோம்.

18 November, 2012

End of Times… Fate? or Faith? இறுதி நாட்கள்... நம்பிக்கையா? அவநம்பிக்கையா?



When 2012 was born, quite a few rumours were also born. One of them was that on December 21st, 2012, the world would end! I don’t know how many of us are losing sleep over this rumour since December is just round the corner. Will the world end in December, REALLY? I don’t know… I don’t want to know. I am reminded of this rumour since today’s Sunday readings focus on the end of times!
Quite a few religions have spoken of the end of times. The Israelites did talk of this quite often. There are quite a few passages in the Bible that tell us about the how this end would be… It is called Apocalypse, Parousia etc.
None of us have the capacity to predict when the world would end… but we have the capacity to prepare ourselves for such an eventuality. Do we wait till the ‘last minute’ to get ready for this special moment? Or do we prepare ourselves throughout our lives?

The English expression: ‘last minute preparation’ blends quite a few emotions… expectation, excitement, tension, anxiety... After having done enough to prepare for the exams, it still seems not enough unless we turn over some pages at the entrance of the exam hall. After having done enough to prepare for the wedding in the family, having checked the list, still there are last minute frantic calls… I am sure each of us has a list of ‘last minute adventures’.
In the above instances, probably the end result is something desirable. Hence, the excitement and anxiety that accompany them are desirable. We don’t crib about last minute efforts getting doubled or tripled for these exciting events. But, if the event is not something desirable, then tension and anxiety overpower us - the tension that is palpable on hospital corridors, outside ICUs.

Expectation is in the air as we approach the final moments of this year’s liturgical calendar. This is the last Sunday of the Ordinary Time. Next week we celebrate the Feast of Christ the King and then we begin a new liturgical cycle with the first Advent Sunday. The first reading from the book of Daniel and the gospel of Mark talk about the end of times.
End of times… I can recall the occasions I was walking down the roads in Chennai, when someone would suddenly thrust a paper, a pamphlet or a booklet into my hands. Those were the roadside preachers who were preoccupied with ‘saving the world’ from the impending disaster. The Day of the Lord is Near… was their constant theme. This frenzy would reach a feverish pitch when something disturbing happens… The devastating earthquake in Gujarat, Pakistan, the twin tower attack in USA, the tsunami in Asia, the ash clouds that erupted at Eyjafjallajökull in Iceland, the tsunami in Japan… all these events naturally brought us to think about the end. Many explanations were easily available during these disasters… Among them Nostradamus was the most popular name.

In 2009, a Hollywood film was released with an intriguing title - 2012. The film talks of the Mayan doomsday prophecy and has some link to…? Yes, you guessed it right… Nostradamus! The film portrays the end of the world as on December 21, 2012. Roland Emmerich who has directed 2012, has done a hat-trick. Three films on the destruction of the world: Independence Day (1996), The Day After Tomorrow (2004) and now 2012 (2009).
Talking of the end and interpreting it – are they just pastime? For Emmerich or Hollywood it could be pastime… all entertainment. When Hollywood talks of apocalypse, it does so with lots of special effects. This makes the catastrophic, cataclysmic end… glamorous, desirable. There lurks a danger when we see destruction in such monster-budgeted special effects movies. The ‘wow-effect’ created by such movies make us more and more desensitized about real disasters, real destructions. When giant waves sweep over New York’s skyscrapers, it really looks good. But, we know that tsunami which brought giant waves to the shores of Asia and Japan, was not good. Reality calls for a different mindset.

Many of us take lots of efforts to know the future. If at the end of such efforts, the future we hear of is all fairy tale of happiness, it is okay. But, if the future foretold is not so good, then we regret having taken such efforts. The future is a mixed bag of good and bad. The famous line: “For all that has been… thanks. For all that will be… yes.” crosses my mind. This yes to the future can be said from a heart that trusts in itself and in the Lord. May we pray for this trust to grow in us. May we foster such trust in people around us. This is a special call for us during this Year of Faith (2012-2013)!

2012ம் ஆண்டு பிறந்ததும், ஒரு வதந்தியும் கூடவே பிறந்தது. அந்த வதந்தி வெகு வேகமாக எட்டுச் திசையிலும் பறந்தது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் உலகம் முடிவடையும் என்பதுதான் அந்த வதந்தி. டிசம்பர் மாதம் நெருங்கி வருகிறது... உலகம் முடிந்துவிடுமா? தெரியவில்லை. உலகமுடிவைப் பற்றி அவ்வப்போது வதந்திகள் உலவி வந்த வண்ணம் உள்ளன. இந்த வதந்திகளெல்லாம் உண்மையாகி இருந்தால், இந்நேரம் நமது உலகம் கடந்த 20ம்  நூற்றாண்டில் மட்டும் பத்து முறை முடிந்திருக்க வேண்டும்.


உலகம் எப்போது முடியும் என்ற கணிப்பு ஒவ்வொரு தலைமுறையிலும் இருந்துவந்துள்ளது. அதுமட்டுமல்ல... உலகம் முடியும்போது என்னென்ன நடக்கும் என்பதையும் பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் சொல்லி வைத்துள்ளன. இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இவ்வெண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. விவிலியத்தின் பல இடங்களில் உலக முடிவைப்பற்றி எழுதப்பட்டுள்ளது. அந்த எண்ணங்களில் இரு பகுதிகளை இன்றைய ஞாயிறு வழிபாட்டில் நாம் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு...

கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் ஒவ்வோர் ஆண்டையும் ஐந்து வழிபாட்டு காலங்களாகப் பிரித்துள்ளோம். திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம், உயிர்ப்பு காலம், பொதுக்காலம். இந்தப் பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள், அதற்கு அடுத்த ஞாயிறு வரும் திருவருகைக்காலத்துடன், திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். பொதுக் காலத்தின் இறுதியில், இறுதிக்காலத்தைப்பற்றி சிந்திக்க இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.

இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்தக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இறைவாக்கு நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?
ஆங்கிலத்தில் "last minute preparation" – கடைசி நிமிட தயாரிப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு: எல்லாரும் வாழ்க்கையில் அனுபவித்த, அனுபவிக்கும், இனியும் அனுபவிக்க இருக்கும் ஓர் அனுபவம் இது. தேர்வுகளுக்குத் தயார் செய்கிறோம். பல நாட்கள், பல மாதங்கள் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், அந்த தேர்வு எழுதும் அரங்கத்திற்கு முன்பு எத்தனை தயாரிப்புகள்... வீட்டில் வைபவங்களுக்குத் தயாரிக்கிறோம். ஆனாலும் வைபவத்திற்கு முந்திய இரவு, வைபவத்தன்று காலை அரக்க, பரக்க ஓடியாடி வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலைக்கான நேர்காணல் (interview), வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிக்க... என்று கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். மேலே சொன்ன சம்பவங்களிலெல்லாம் ஒரு வித ஆவல், ஆர்வம் இருக்கும். கொஞ்சம் பயம், கலக்கம் இவையும் இருக்கும். பொதுவாக இவற்றில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும்.

நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் இவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? உடல் நலமின்றி, அதுவும் மிகவும் seriousஆக நாமோ, அல்லது நமக்கு நெருங்கியவர்களோ மருத்துவமனையில் இருக்கும்போது, என்னவித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கேட்டதோ, அவை எதிர்காலத்தோடு தொடர்புடையவை...

எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நன்றாக இருக்குமா? இளவயதில் இது போன்ற ஒரு சக்திக்காக நான் ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில் அடுத்த நாள் தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும்னு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப்போகும் வேலை, நமக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை, நமது ஒய்வு கால வாழ்க்கை இவைகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனை பேர் ஏங்குகிறோம்?

எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்? கைரேகையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்... எதிர்காலம் முழுவதும் "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக் கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால்... ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.

எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி: நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது... Simple ஆகச் சொல்லவேண்டுமெனில், நான் எப்போது, எப்படி இறப்பேன்? நாம் எல்லாரும் மற்றவர்கள் மரணத்தைப் பல வழிகளில், வடிவங்களில் பார்த்திருக்கிறோம். நாமும் அதை ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி பேச, எண்ண தயங்குகிறோம். நவம்பர் மாதம் மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க திருஅவை அழைக்கும் ஒரு மாதம். இன்றும் நமது இறுதி காலம்பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு.

2009ம் ஆண்டு, நவம்பர் மாதம், அமேரிக்காவில் ஏறத்தாழ 3000 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 2012. 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்பதை பிரம்மாண்டமாகக் காட்டியத் திரைப்படம். வசூலில் சாதனை படைத்ததாகச் சொல்லப்படும் இந்தப் படத்தில், உலக அழிவு special effects பயன்படுத்தி அழகாகச் சொல்லப்பட்டது. அழிவு... அழகாகக் காட்டப்பட்டது.
இது முதல் முறையல்ல. அழிவைப் பற்றி ஹாலிவுட் திரை உலகத்தில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். 2012 என்ற இந்தத் திரைப்படத்தை இயக்கிய Roland Emmerich 2004ம் ஆண்டிலும் (The Day After) 1996ம் ஆண்டிலும் (Independence Day) இரு பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தந்தார். இரண்டும் உலக அழிவைப் பற்றியது. இரண்டும் வெற்றிப் படங்கள்.

ஞாயிறு சிந்தனையில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறேனே என்று ஒரு சிலர் எரிச்சலடையலாம். ஆனால், இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம். அழிவைப் பார்க்க நமக்குள் ஆசை உள்ளது. இந்த அடிப்படை ஆசையை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக திரைப்படங்கள், அழிவை special effects மூலம் பிரம்மாண்டமாக, ஏன், கவர்ச்சியாகவும் காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள் அழிவைப்பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மைத் தூரப்படுத்தி, அந்நியப்படுத்தி நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
TV, சினிமா, பத்திரிகைகள் வழியே அழிவை அடிக்கடி பார்ப்பதும், அழிவைப் பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. படங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில் பல உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ உணர முடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

இந்த அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் இன்னொரு ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், அது வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் கூறும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத் தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் செய்தி... பெரும்பாலும் அவநம்பிக்கையே.

இன்று நாம் கேட்ட இறைவாக்குகளில் அச்சத்தையும், கவலையையும் உருவாக்கக் கூடிய வார்த்தைகள் ஒலித்தாலும், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளும் ஒலிக்கின்றன.
நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
என்று தானியேல் நூலிலும்,
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
என்று மாற்கு நற்செய்தியிலும் நம்பிக்கை அளிக்கும் இறைவார்த்தைகள் ஒலிக்கின்றன.

இறுதியாக, ஓர் எண்ணம். 'எதிர்' என்ற தமிழ் சொல்லுக்குள் எத்தனை பொருள் இருக்கிறது! எதிர்காலம் என்பதை, எதிர் வரும் காலம், எதிர் பார்க்கும் காலம், நமக்கு எதிராக வரும் காலம், நமக்கு எதிரியாக வரும் காலம், நாம் எதிர்த்து நிற்கவேண்டிய காலம், நாம் எதிர்கொண்டு சென்று வரவேற்கவேண்டிய காலம்... என்று பல பொருள்பட பேசலாம். 'எதிர்' என்ற சொல்லில் ஆனந்தம், ஆர்வம் இருக்கும். ஆபத்தும், ஆதங்கமும் இருக்கும். இந்த உணர்வுகளெல்லாம் நடக்கப்போகும் சம்பவங்களில் இருக்கின்றன என்பதைவிட, இவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தே நம் உணர்வுகளும், செயல்பாடுகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி, சிறப்பாக இறுதிக் காலத்தைப் பற்றி நமது கண்ணோட்டம் என்ன?

எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். ஆங்கிலத்தில் அழகிய பொன்மொழி ஒன்று உண்டு: "For all that has been...thanks! For all that will be...yes!"இதுவரை நடந்தவைகளுக்குநன்றி! இனி நடக்கப் போகின்றவைகளுக்கு ஆகட்டும்!” என்ற கண்ணோட்டம் பதட்டமில்லாத நம்பிக்கையை வளர்க்கும். எதிர்காலம் என்பது, பிரச்சனை என்ற கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும்.

இதை ஓர் உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும்போது, குப்பை மறைந்து விடும்... (வெளியில் மறைந்துவிடாது... நமது பார்வையில் மறைந்துவிடும்.) வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டுமணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம்.
2012 மற்றும் 2013ல் நாம் நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுகிறோம். நல்லவைகளைப் பார்க்க, நல்லவைகளைக் கேட்க, நல்லவைகள் நடக்கும் என்று நம்பி வாழ இந்த நம்பிக்கை ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நாம் எண்ணிப்பார்க்கும் எதிர்காலம், இறுதிக் காலம் ஆகியவற்றில் நமது நம்பிக்கை இன்னும் வளர வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்.

12 November, 2012

Lessons from Widows கைம்பெண்களிடம் கற்றுக்கொள்வோம்...



Widow’s Mite
In quite many countries around the world the status of a widow is quite pathetic. If it is so in our days, then one can imagine what their plight must have been in earlier generations. Among the Israelites, widows were treated with scant respect, indeed, no respect. Although the law of Moses gave clear indications about treating the widow with due concern (Ex. 22:22; Dt 24:17), the practice was very different. The Readings of this Sunday from I Kings and the Gospel of Mark talk of two widows. Both of them give us a clear lesson in giving… giving without counting the cost!

Let’s meet the widow from Zarephath. She and her son live in misery - absolute misery. “I am gathering a few sticks to take home and make a meal for myself and my son, that we may eat it—and die.” These are the painful words uttered by the widow. This is a death sentence. What else can she do? All avenues to life have been closed to her and her son. She was gathering sticks to prepare their last meal… Was she gathering sticks for the funeral pyre? One can say so!
As she and her son are inching towards the portals of death, the Lord intervenes in her life through Elijah. What an intervention! Elijah comes to add more trouble to her life. He asks for water, first. But, as she was going to get it, he drops a bomb… “And bring me, please, a piece of bread.” When I read these lines, I felt like shouting to Elijah, “Oh, Elijah, for God’s sake, be serious! Please don’t make fun of a desperate person like this widow.” To this seemingly ridiculous request of Elijah, the lady comes out with her famous statement of purpose – the purpose to die! And she makes this statement in the name of the living God.  "As surely as the LORD your God lives," she replied, "I don't have any bread—only a handful of flour in a jar and a little oil in a jug. I am gathering a few sticks to take home and make a meal for myself and my son, that we may eat it—and die." (I Kings 17:12)

This seemingly insensitive taunt of Elijah turns into a blessing. But, I am not sure whether the lady understood all that the prophet was saying in terms of the future. Future is for those who have a lot in the present and a lot to look forward to. The widow of Zarephath had nothing at present and therefore no future. She did not probably pay attention to what Elijah was saying. She had already decided to help the prophet. Having faced starvation so many days in her life, she is very sensitive to any one who is famished and the prophet looked like one of them. Even if there is no miracle as the prophet was promising, she had decided to help satisfy his hunger to some extent.

This, my friends, is the heart of the poor. Having gone through hell in their lives, they try their best to create little heavens where there is a chance, whenever there is a chance. The widow’s effort to feed the prophet ahead of her son or her own self is rewarded with a miracle. “So there was food every day for Elijah and for the woman and her family. For the jar of flour was not used up and the jug of oil did not run dry, in keeping with the word of the LORD spoken by Elijah.” (I Kings 17:16) In other words, she lived ever after happily… Perhaps she was feeding hundreds of hungry mouths for the rest of her life!

We turn our attention to the widow mentioned in today’s Gospel (Mark Mark 12:41-44). According to Jesus, “She, out of her poverty, put in everything—all she had to live on.” When we compare the contribution of the poor widow to that of the other rich persons, hers is NOTHING… If, for instance, the rich had put in 1000 Rupees, what the widow had put in was only 50 paise! But, such a comparison dealing only with numbers is wrong… The comparison should actually be in terms of what was left after the contribution. In the case of the rich, they gave ‘something’ to the temple… Something that was peripheral to their life… Their contribution did not even pinch them. That is why the Gospel uses the term ‘they threw in large amounts.’ But, for the widow, after she had ‘put in the copper coins…’ she was left with nothing. She had not only put in what she had (her past and present) but also “put in everything—all she had to live on” (her future). She was left with NOTHING. She had given not from the periphery but from the core of her life. That is what makes her offering invaluable and draws such a great compliment from Jesus.
What is more appealing in this case is that she did not even know that she was doing something so wonderful, spectacular! She did not stay back to bask in the compliments of Jesus. She simply vanished from the scene. Such wonderful, complete gift… an oblation, a burnt offering… nothing left – just pure gift.
“Give till it hurts” are the words attributed to Blessed Mother Teresa. She, in her life, had set a standard for giving. May the good Lord give us a heart to learn from these two widows and from persons like Blessed Mother Teresa… at least the basics of total, unconditional ways of giving.

இரு பெண்களை மையப்படுத்தி இவ்வார ஞாயிறு வாசகங்கள் அமைந்துள்ளன. இவ்விருவரும் கைம்பெண்கள். கைம்பெண், விதவை என்ற வார்த்தைகளைக் கேட்டதும், நம் மனங்களில் தோன்றும் முதல் வார்த்தைகள்... உணர்வுகள்... "ஐயோ பாவம்". இந்தப் பாவப்பட்ட, பரிதாபத்திற்குரிய பெண்கள் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இன்னும் அதிக பரிதாபத்திற்குரிய நிலையில் வாழ்ந்தனர். சமுதாயத்தில் எத்தகுதியும் இல்லாமல் வாழ்ந்த இவர்கள் இறைவனின் கண்களில், இயேசுவின் கண்களில் உயர்ந்தோராய் கருதப்படுகின்றனர். 
அரசர்கள் முதல் நூல் 17ம் பிரிவிலும், மாற்கு நற்செய்தி 12ம் பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள இரு கைம்பெண்களை நாம் சந்திக்க முயல்வோம். அவர்கள் சொல்லித் தரும் வாழ்வுப் பாடங்களைப் பயில முயல்வோம். அரசர்கள் நூலில் இறைவாக்கினர் எலியா சந்தித்த கைம்பெண்ணும், அவரது மகனும் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் போராடும் பல கோடி ஏழைகளின் பிரதிநிதிகள். எலியா சந்தித்த இந்தக் கைம்பெண் ஏற்கனவே தனக்கும், தன் மகனுக்கும் மரணதண்டனை விதித்துவிட்டப் பெண். இறப்பதற்குமுன், தன் மகனுக்குச் சிறிதளவாகிலும் உணவுதந்து, அவன் மகிழ்ந்திருப்பதைக் காணவேண்டும் என்ற ஆவலால் அந்தத் தாய் ரொட்டி சுடுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவர் மனதில் ஓடிய எண்ணங்கள் இப்படி இருந்திருக்குமோ என்று எண்ணிப் பார்க்கிறேன்: "கடவுளே, இன்னைக்கி செய்ற அப்பங்கள் ரெண்டு பேருக்கும் போதாதுன்னு தெரியும். பாவம் என் பையன். அவன் வயிறாரச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு? எனக்கு ஒன்னும் கிடைக்கதேன்னு நினச்சு, அவனும் சரியா சாப்பிடாம பட்டினி கிடக்கிறான். இன்னக்கி ஏதாவது பொய்யைச் சொல்லி அவனைச் சாப்பிட வெச்சிட்டு அப்புறம் ஏதாவது மிச்சம் இருந்தா, நான் சாப்பிட்டுகிறேன். என்பையனை இன்னக்கி நல்லா சாப்பிட வைக்கணும்... அதுக்கு ஏதாவது வழியக் காட்டு சாமி..." இப்படிக் கடவுளோடு பேசிக்கொண்டே சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்த கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள் குறுக்கிடுகிறார்.

எலியா என்ற இறைவாக்கினர் வழியாகக் கடவுள் வருகிறார். சும்மா வரவில்லை. ஒரு பிரச்சனையைக் கொண்டுவருகிறார். அந்தப் பெண்ணின் உணவில் பங்குகேட்டு வருகிறார். கொடூரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவரது வயிற்றில் அடிக்க வருகிறார். முதலில் எதேச்சையாகத் தண்ணீர் மட்டும் கேட்கும் எலியா, அந்தப் பெண் போகும்போது, 'கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்கிறார். ஏதோ அந்தப் பெண் வீட்டில் அப்பங்களைச் சுட்டு அடுக்கி வைத்திருப்பது போலவும், அவைகளில் ஒன்றிரண்டைக் கொண்டு வா என்பது போலவும் உள்ளது எலியாவின் கூற்று. மேலோட்டமாகப் பார்த்தால், எலியா அவரைக் கேலி செய்வது போலத் தோன்றலாம். ஆனால் அது கேலி அல்ல, ஒரு மறைமுக அழைப்பு. கடவுள் ஆற்றக்கூடிய புதுமைகளைக் காண்பதற்கு ஓர் அழைப்பு. அந்த அழைப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை அந்தப் பெண்ணுக்கு. தன் பசி, அதைவிட தன் மகனின் பசி இவையே அவரது மனதை ஆக்ரமித்ததால், தன் இயலாமையை, விரக்தியை இவ்வார்த்தைகளில் கொட்டுகிறார்:
அரசர்கள் முதல் நூல் 17: 12
வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும். விரக்தியின் உச்சத்தில், தனக்குத் தானே எழுதிக்கொண்ட மரணதண்டனை தீர்ப்பு இது. நம்மைச் சுற்றியிருக்கும் பல கோடி ஏழைகள் தங்கள் வாழ்வில் பலமுறை தங்களுக்குத் தாங்களே வழங்கிக்கொள்ளும் மரணதண்டனைகளை இந்த வார்த்தைகள் நமக்கு நினைவுறுத்துகின்றன. விரக்தியில் எழுந்த இவ்வார்த்தைகளுக்குப் பதிலாக, எலியா அவரிடம் இறைவன் ஆற்றக்கூடிய அற்புதங்களைச் சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு அவர் சொன்னதெல்லாம் விளங்கியதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், "அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார்" என்று இன்றைய வாசகம் கூறுகிறது.

அந்தப் பெண் எலியாவை முன்பின் பார்த்தது கிடையாது இருந்தாலும் அவர் சொன்னதுபோல் செய்கிறார். இதனை இருவேறு வகையில் நாம் பொருள் கொள்ளலாம். எலியா சொன்னதுபோல், புதுமை நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அந்த ஏழை கைம்பெண் அப்படி செய்திருக்கலாம். ஆனால், அதைவிட மேலான ஒரு பொருளை நான் எண்ணிப்பார்க்கிறேன். தனது இயலாமையிலும், வறுமையிலும் பசியிலும் இன்னொரு மனிதரின் பசியைப் போக்கவேண்டும் என்ற ஆவலால், அவர் இப்படிச் செய்திருக்கலாம். அந்தப் பெண்ணின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். "இன்னைக்கி என் மகனும், நானும் சாப்பிட்டா, இன்னும் ரெண்டு நாள் உயிரோட இருப்போம். அதுக்கப்புறம் சாகத்தான் வேண்டும். சாகுறதுக்கு முன்னால இன்னொரு மனுஷனுடைய பசியை தீர்த்துட்டு சாகலாமே... பாவம், அந்த மனுஷன்."
ஏழைகளின் மனம் அப்படிப்பட்டது. அவர்களுக்குத்தான் தாழ்வதென்றால், தவிப்பதென்றால், பசிப்பதேன்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். அவர்களுக்குத்தான் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து, பசியைப் போக்கும் புதுமை தெரியும். தங்கள் துன்பகளைவிட, மற்றவர்களின் தேவைகள், துன்பங்கள் இவற்றைத் துடைப்பதையே பெரிதாக எண்ணும் மனம் அவர்களது.

"வெளிச்சம் வெளியே இல்லை" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா எழுதியுள்ள ஒரு கவிதை என் நினைவுக்கு வருகிறது.

சாலையைக்
கடந்து செல்வதற்காகக்
காத்திருந்தார்கள்.
சிக்னல் கண்ணசைத்ததும்
பரபரப்போடு பறந்தார்கள்.

பார்வையில்லாத
வயோதிகர் ஒருவர்
சாலையின் குறுக்கே
தன்னுடைய
ஊன்று கோலையே
கண்களாக்கி
ஊர்ந்து கொண்டிருந்தார்...

அருகிலிருந்தோர்
அவசரமாய்ப் பறக்க...
பார்வையில்லாத அவர்
பாதியில் திகைக்க...
மாறப் போகிறேன் என்றது சிக்னல்;
பாயப் போகிறேன் என்றது பஸ்.

சட்டென்று
வேகமாய் வந்த
இளம் பெண்ணொருத்தி
அவரைக்
கையில் பிடித்து இழுத்தபடி
விரைந்து சாலையைக் கடந்தாள்.
உதவியாய் அவருடன் நடந்தாள்.

தெருவோரம் சென்றவள்
திரும்பியபோதுதான் தெரிந்தது
அவளுக்கு உள்ளதே
அந்த ஒரு கைதான் என்று.

நற்செய்தியில் கூறப்படும் கைம்பெண்ணை இப்போது சந்திப்போம். இயேசு அந்தப் பெண்ணைப்பற்றி கூறும் வார்த்தைகள் ஆழமானவை:
மாற்கு நற்செய்தி 12: 43-44
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

ஒப்புமைப்படுத்திப் பேசுவது பொதுவாக இயேசுவின் பாணி அல்ல. ஆனால், இந்த நிகழ்வில் அப்பெண்ணின் காணிக்கையை மற்ற செல்வந்தர்களின் காணிக்கையோடு ஒப்பிட்டுப் புகழ்கிறார் இயேசு. மேலோட்டமாகப் பார்த்தால்... அதாவது, காணிக்கை பெட்டிக்குள் எவ்வளவு பணம் போடப்பட்டது என்ற மேலோட்டமான ஒரு கணக்குப் பார்வையுடன் பேசினால்... இயேசு சொல்வது மிகைப்படுத்தி சொல்லப்பட்டதுபோல் தெரியும். செல்வந்தர்கள் போட்டது ஒருவேளை 1000 ரூபாய் என்றால், இந்த ஏழை போட்டது... 50 காசுகள்.
ஆனால், அது கணக்கல்ல. எவ்வளவு போட்டார்கள் என்பதைவிட, காணிக்கை செலுத்தியபின் அவர்களிடம் என்ன மீதி இருந்தது என்பதுதான் காணிக்கையின் மதிப்பைக் காட்டும். இதைத் தான், அன்னை தெரசா மற்றொரு வகையில் சொன்னார்: “Give till it hurts” "கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்... கொடுங்கள், உங்கள் உடலை வருத்திக் கொடுங்கள்." என்று.
தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி என் நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் தந்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னதுபோல் செய்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது. தான் ஏமாற்றப்படுவது தெரிந்தும், தன் உயிர் போகும் அளவு தந்த கர்ணனும் உடல் வருத்தித் தந்தவர். இதைதான் இயேசுவும் கூறுகிறார். இந்த ஏழைக் கைம்பெண்... தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

அப்பெண்ணின் காணிக்கையைப் பற்றி இயேசு புகழ்ந்து சொன்ன வார்த்தைகளில் ஆழமும், அர்த்தமும் உள்ளன. இருந்ததைப் போட்டார், வைத்திருந்ததைப் போட்டார் என்று மட்டும் சொல்லாமல், இருந்த அனைத்தையுமே போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டார் என்று அக்காணிக்கையின் முழுமையை அழுத்தமாய், ஆணித்தரமாய் கூறுகிறார் இயேசு.
அதுமட்டுமல்ல... இருந்தது, பிழைப்புக்காக வைத்திருந்தது என்ற வார்த்தைகளில் இறந்த காலம்,   நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் கலந்து ஒலிப்பதையும் காணலாம். சுருங்கச் சொல்லவேண்டுமானால், இந்தக் கைம்பெண் தன்னையும், தன் வாழ்வையும் பற்றி சிறிதும் கணக்கு பார்க்காமல், கடவுள் என்ற எண்ணத்தில் முற்றிலும் தன்னை இழந்தார் என்று இயேசு நமக்குப் புரியவைக்கிறார்.
இந்தக் கைம்பெண் ஏன் இவ்விதம் செய்தார் என்ற கேள்வி எழலாம்... கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று இப்படி செய்தாரா? நிச்சயமாக கிடையாது. அந்தக் கண்ணோட்டம் வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் நீ இவ்வளவு தா என்ற பேரம்... இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் கடவுளுக்கு மகிழ்வாகத் தந்தவர். எனவேதான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டாரா? இல்லை. காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை. கட்டடங்களிலும், கற்களிலும், போஸ்டர்களிலும் பெயர்களைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக நல்லது செய்வது ஏழைகளின் அழகு.

பல ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் வெள்ளம் வந்தபோது நடந்த ஒரு நிகழ்வு என் நினைவில் நிழலாடுகிறது. நான் பயின்ற அந்தக் கல்லூரியில் துப்புரவுத் தொழில் செய்தவரின் வீடு வெள்ளத்தால் நிறைந்துவிட்டது. அந்த வெள்ளத்தில் அவர் அனைத்தையும் இழந்தார். வீட்டில் இருந்தவர்கள் மட்டும் உயிர் தப்பினர். அவர் வளர்த்து வந்த ஓர் ஆட்டுக்குட்டியை அவரால் காப்பற்ற முடிந்தது. அது அவருக்கு பெரும் மகிழ்ச்சி. காரணம் என்ன? அந்த ஆட்டுக்குட்டியை அவர் கடவுளுக்கு நேர்ந்து விட்டிருந்தார். வெள்ளம் வடிந்ததும், நேர்ந்துவிட்டபடி அந்தக்  குட்டியை ஒரு கோவிலுக்குக் கொடுத்தார். தனக்குரியதெல்லாம் இழந்தாலும், கடவுளுக்குரியதை கடவுளுக்கு செலுத்திய திருப்தியுடன் அந்த மகிழ்வை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டது இப்போது எனக்கு நினைவில் இனிக்கிறது. 

கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது எதையும் எதிபார்க்காமல், நம் உடலை, வாழ்வை வருத்தித் தரவேண்டும். அதுவே மேலான காணிக்கை. இதை இன்றைய ஞாயிறு வாசகங்கள் வழியேச் சொல்லித்தந்த இரு கைம்பெண்களுக்காக  இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

04 November, 2012

Love… better than sacrifices அன்பு வாழ்வே... அற்புத யாகம்


Love Thy Neighbor As Thyself


Love God… Love your Neighbour… So, what’s new? Nothing. Should novelty dictate my reflections? This was my concern as I began reflecting on this Sunday’s Gospel. Today’s Gospel (Mark 12: 28-34) begins as a sequel to what happened earlier in the same chapter… namely, the conversation (shall we say, confrontation?) of the Sadducees with Jesus over Resurrection. They had fabricated a fancy story (of seven brothers marrying the same lady) to see how Jesus would resolve polygamy and ‘after-life’.
The smart answer of Jesus impressed a scribe standing close by. He begins today’s discussion with a question: "Which commandment is the first of all?" Won’t a scribe know the answer to this question? Was he also trying to corner Jesus? It does not matter… Jesus takes this opportunity to teach the two basic commandments of Christianity… Love God… Love your Neighbour… Jesus literally proclaims it with the familiar phrase of all Israelites, namely, “Hear, O Israel”. When Israelites hear this phrase, they would know that what follows is of substance and significance.

Jesus had not said anything new in this passage. He was merely quoting from the Old Testament – from Moses. The master stroke of Jesus was… that he placed both these commandments, found in two different books of the Old Testament, close to each other and given both of them top priority. For a cursory glance, today’s gospel passage seems to talk of TWO COMMANDMENTS of love. But on closer scrutiny, one can easily find THREE COMMANDMENTS. Three? Yes, the second commandment says: 'You shall love your neighbour as yourself.' We can see that love of self is a pre-condition for love of neighbour. It is obvious that only those who can love themselves, respect themselves, can love and respect others.

Love of self can easily be misinterpreted as self-love… selfishness. Far from it! One who does not have love and respect for oneself becomes self-loving, selfish and self-centred! The latter is a prison which gets filled up with only one person – I. There is no place for God or neighbour. Unfortunately, the commercial world tries its best to equate love of self with self-love and selfishness. Thus it puts a price tag on even the most sincere love!

Another thought that crossed my mind while reading the second-cum-third commandment, in today’s Gospel, was that this is an easier commandment than the one Jesus gave to his disciples at the Last Supper.  
John 15: 12-13
“This is my commandment, that you love one another as I have loved you. Greater love has no man than this, that a man lay down his life for his friends.”
To love others as Jesus has loved me? Well, that would be my life-long goal, dream etc. But, the commandment given in today’s Gospel: 'You shall love your neighbour as yourself' seems like a much easier target that I can strive and even achieve!

The Scribe was pleased with the answer of Jesus. He repeats the words of Jesus as if to express his full agreement on this… But, then he goes further. He says: “You are right, Teacher; you have truly said that he is one, and there is no other but he; and to love him with all the heart, and with all the understanding, and with all the strength, and to love one's neighbour as oneself, is much more than all whole burnt offerings and sacrifices.” (Mark 12: 32-33)
It is surprising to see a scribe speak in this fashion. Was he emotionally carried away? A scribe giving more emphasis on a life lived in love than burnt sacrifices, is a real welcome change. That is why Jesus gave him the final approval: “You are not far from the kingdom of God.”
What the scribe said is a lovely definition of LOVE. Love is better than all sacrifices, since a life lived in love is a continuous sacrifice. We can recollect so many persons who have lived a sacrificial life with love. Here are two episodes that tugged at my heart recently.

July 3rd evening, (2012) on the banks of the river in Loudi City Sunshuihe Park, when Deng Jinjie’s body was brought ashore, both shores were crowded with hundreds and thousands of city residents who had heard what happened. His two dogs were still waiting anxiously outside of the crowds for their master to take them home, but Deng Jinjie who loved his dogs as much as his own life will never again be able to take care of them.
An hour earlier, in order to save a family of three from drowning, 27-year-old Deng Jinjie had jumped into the river without regard for his personal danger. Unfortunately, he ran out of strength and was swallowed by the rapid river waters. What makes people bitterly disappointed is that, just as Deng Jinjie was in danger and whether he was alive or dead was unknown, not only did the family of three that he rescued not actively try to help, they also didn’t stick around to see what would happen, instead indifferently choosing to leave… A witness says: When the crowd stopped the family of three from leaving, the woman said “none of my damn business” before driving away.
Sanxiang City News

Here is another episode taken from the memoirs of  Bl.Mother Teresa:

One night a man came to our house and told me, “There is a family with eight children. They have not eaten for days,” I took some food and I went. When I finally came to the family, I saw the faces of those little children disfigured by hunger. There was no sorrow or sadness in their faces, just the deep pain of hunger. I gave the rice to the mother. She divided it in two, and went out, carrying half the rice with her. When she came back, I asked her, “Where did you go?” She gave me this simple answer, “To my neighbors-they are hungry also.”
I was not surprised that she gave–because poor people are generous. But I was surprised that she knew they were hungry. As a rule, when we are suffering, we are so focused on ourselves we have no time for others.
–Mother Teresa

Police searching for the body of Deng Jinjie (Top)
Deng Jinjie with his beloved dogs - Netizens

அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கட்டும். இந்நிகழ்வை அன்னை சொன்னது போலவே கேட்போம்:
ஓரிரவு எங்கள் துறவு இல்லத்திற்கு ஒருவர் வந்தார். அவர் என்னிடம், "தாயே, அருகில் ஒரு குடும்பத்தில் எட்டுக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் எல்லாரும் பல நாட்கள் பட்டினியாய் இருக்கிறார்கள்" என்று சொன்னார்.
நான் உடனே அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு அவ்வில்லத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி பரிதாபமாக இருந்தது. அக்குழந்தைகள் பட்டினியால் உடல் மிகவும் மெலிந்து, கண்கள் இருண்டு படுத்துக் கிடந்தார்கள். அந்தத் தாயிடம் நான் கொண்டுசென்ற உணவைக் கொடுத்து, குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னேன். அவர் அதை நன்றியோடு பெற்றுக் கொண்டதும், அதில் பாதிப் பகுதியை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் வந்து குழந்தைகளுக்கு மீதம் இருந்த உணவைப் பரிமாறினார். அப்போது நான் அத்தாயிடம், "எங்கே அவ்வளவு அவசரமாய் பாதி உணவை எடுத்துச் சென்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அந்தத் தாய், "அடுத்த வீட்டுக்குச் சென்றேன். அங்குள்ளவர்களும் பல நாட்கள் பட்டினியாய் இருக்கிறார்கள்" என்று பதில் சொன்னார்.
ஓர் ஏழை மற்றோர் ஏழையுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்னை அன்று ஆச்சரியமடையச் செய்தது மற்றொரு விடயம். பட்டினியால் வாடிக் கொண்டிருந்த அக்குடும்பத்தின் தாய், அதுவும், பட்டினியால் துடித்துக் கொண்டிருந்த தன் குழந்தைகளின் அழுகைக் குரலைத் தினமும் கேட்டுவந்தத் தாய் அடுத்த வீட்டில் உள்ளவர்களும் பட்டினியாய் இருந்தனர் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாரே என்பதுதான் என்னைப் பெரிதும் ஆச்சரியமடையச் செய்தது. பொதுவாக, நாம் துன்பப்படும்போது, நம்மைப்பற்றி மட்டுமே நமது கவனம் அதிகம் இருக்கும். அடுத்தவர்களைப்பற்றி சிந்திக்க நமக்கு மனமோ, நேரமோ, சக்தியோ, இருக்காது. ஆனால், இந்தத் தாயிடம் நான் கண்ட பரிவும், அன்பும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அன்னை தெரேசா பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம், அன்பின் ஆழத்தை, இலக்கணத்தை நமக்குச் சொல்லித் தருகிறது. கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார்.

இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர் இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பது அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. இம்மறைநூல் அறிஞர் உண்மையைத் தேடுகிறார், ஏனைய மதத் தலைவர்களைப் போல், மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன் இவர் கேட்கவில்லை என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம் கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான மூன்று கட்டளைகளைக் கூறுகிறார். இதனை அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.

மூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உருவகமாக தன் மீது கொள்ளும் அன்பைக் கூறியுள்ளார்.
இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை இயேசு ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப் பார்க்கலாம். அதாவது, அடுத்தவர் மீது அன்புகூர்வதற்கு அடிப்படையாக, ஒருவர் தன் மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. அன்பின் அரிச்சுவடி நமக்குள் ஆரம்பமாக வேண்டும். இந்த ஆரம்பப் பாடங்களைச் சரிவரப் பயிலாதவர்கள்... தங்கள் மீது நல்ல மதிப்பையும், அன்பையும் வளர்த்துக் கொள்ளாதவர்கள்... அடுத்தவர் மீது அன்பும், மதிப்பும் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் சரியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

நம்மீது நாம் காட்டும் அக்கறை, அன்பு இவற்றை சுயநலம் என்று தவறாக முத்திரை குத்தவேண்டாம். சுயநலம் என்பது உண்மையிலேயே ஒரு சிறை. சரியான, உண்மையான அன்பைச் சுவைக்காதவர்கள்தான் சுயநலத்தை வளர்த்துக் கொள்வார்கள். தன்னைப்பற்றிய சரியான மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போகும்போது, தன்மீது தனக்கே எழவேண்டிய உண்மையான அன்பு இல்லாமல் போகிறது. அது ஒருவரைச் சுயநலச் சிறைக்குள் தள்ளிவிடுகிறது. இந்தச் சிறைக்குள் 'நான்' என்ற ஒருவர் மட்டுமே வாழ முடியும். அங்கு அடுத்தவருக்கோ, ஆண்டவனுக்கோ இடமிருக்காது.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி... திருப்தி... காரணம் என்ன? இந்தக் கட்டளையை நிறைவேற்ற என்னால் ஓரளவு முடியும் என்ற மகிழ்ச்சி அது. இயேசு தன் சீடரோடு இறுதி இரவுணவு அருந்துகையில் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இக்கட்டளையைவிட அதிகமான சவால் நிறைந்தது.
யோவான் நற்செய்தி 15: 12-13
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.
இயேசு என்மீது அன்பு கொண்டிருப்பதுபோல் நான் பிறர்மீது அன்பு கொள்ளவேண்டும் என்ற கட்டளை நான் கனவில் மட்டுமே காணக்கூடிய ஓர் இலட்சியம். ஆனால், என் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் அடுத்தவருக்கு வழங்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறியிருக்கும் கட்டளை, நான் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒரு சவால்...

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தார் மறைநூல் அறிஞர். இயேசுவின் வார்த்தைகளை முற்றிலும் ஏற்றுக்கொண்ட அவர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று கூறினார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.
மறைநூல் அறிஞர் ஒருவர் இவ்விதம் கூறுவது பெரும் ஆச்சரியம்தான். கோவில் சார்ந்த செயல்களும், அங்கு செலுத்தப்படும் காணிக்கைகளுமே இஸ்ரயேல் மக்களின் தலை சிறந்த கட்டளைகள் என்று நம்பி, அவ்விதமே மக்களையும் நம்ப வைத்தவர்கள் மறைநூல் அறிஞர்கள். அவர்களில் ஒருவர், அன்பு செலுத்துவது எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று சொன்னது இயேசுவையும் வியப்படையச் செய்தது. அவர் மனப்பாடம் செய்த கட்டளைகளைக் கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்று தன் வியப்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்துகிறார்.

அன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புவாழ்வு உண்மையிலேயே ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளை விட நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாக வாழ்வைக் கூறும் பல்லாயிரம் சம்பவங்களை நாம் அறிவோம். அவைகளில் ஒன்று இதோ...

இவ்வாண்டு ஜூலை மாதம் 3ம் தேதி சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு இது. Deng Jinjie என்ற 27 வயது இளைஞர் ஓர் ஆற்றங்கரை ஓரமாக தன் இரு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆற்றில் இளவயது தம்பதியரும், அவர்களின் ஐந்து வயது குழந்தையும் நீந்திக் கொண்டிருந்தனர். அக்குழந்தைக்குப் பாதுகாப்பாக, இடுப்பு வளையம் இருந்தது. திடீரென, அக்குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பெற்றோர் அலறவே, இளைஞர் Deng Jinjie தனக்கு என்ன ஆகும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், அக்குழந்தையைக் காக்க ஆற்றில் குதித்தார். அந்த நேரத்தில், அப்பெற்றோரும் ஆற்றின் ஆழத்திற்கு இறங்கவே, Deng Jinjie அந்த மூவரையும் காக்க வேண்டியதாயிற்று. ஆற்று நீரின் வேகம் கூடிக்கொண்டே இருந்ததால், அவர் அதிக போராட்டத்திற்குப் பின், மூவரையும் கரைக்கு அருகே கொண்டுவந்து சேர்த்தார். அந்த போராட்டத்தில் அவர் தன் சக்தியை இழந்ததால், அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின், அவரது உயிரற்ற உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தின் மிகக் கொடூரமான ஓர் உண்மை என்னவென்றால், Deng Jinjieயால் காப்பாற்றப்பட்ட மூவரும் கரையை அடைந்ததும், தங்களைக் காப்பாற்றியவருக்கு என்ன ஆயிற்று என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கரையில் இருந்த தங்கள் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். நடந்தவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவர் அவர்களை இடைமறித்து, அந்த இளைஞனைப் பற்றி கேட்டபோது, "எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.
அன்பையும், சுயநலத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளை எல்லாம் காப்பாற்றினார். பலமுறை தீக்குள் சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில் அந்தப் புகை மணடலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து தீயில் கருகி இறந்தார்.

Deng Jinjeக்கும், இந்திய இளைஞருக்கும், அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தங்கள் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இந்தத் தியாகச் செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஒரு உந்துதலால் அவர்கள் இத்தியாகச் செயல்களைச் செய்தனர். "தன் நண்பர்களுக்காக உயிரைத் தருவதை விட மேலான அன்பு இல்லை" என்று இயேசு சொன்னதையும் தாண்டி, Deng Jinjie, இந்திய இளைஞர் போன்ற பல தியாக உள்ளங்கள் அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

சுயநலமும், அன்பும் ஒன்றுதான் என்ற எண்ணங்கள் இவ்வுலகில் பெருகிவரும் வேளையில், பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான அன்பின் தெய்வீக இலக்கணத்தை நாம் இன்னும் உணர்ந்து வருகிறோம்.

நம் வாழ்வை இயக்குவது உண்மை அன்பு உணர்வுகளா அல்லது சுயநல உணர்வுகளா?