29 March, 2015

The Crucified Tornado சிலுவையில் அறையுண்ட சூறாவளி

MOMENTS WITH CHRIST - part of Manuel Baldemor’s exhibit.
Palm Sunday - குருத்தோலை ஞாயிறு
“Palm Sunday Tornado 1920” – I could not have asked for a better starting point for my homily today. Tornados, I am told, are a common feature in the U.S., especially in the months of March and April. Here is the excerpt from an article in Wikipedia:
The Palm Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215 injured. Many communities and farmers alike were caught off-guard. Most of the fatalities occurred in Georgia, Indiana, and Ohio, while the other states had lesser amounts.
Here is another excerpt from the same article that mentions the discrimination prevalent in those days. According to Thomas P. Grazulis, head of the Tornado Project, the death toll in the southern states on Palm Sunday 1920, could have easily been much higher, since the deaths of non-whites were omitted as a matter of official state protocol, even when it came to fatalities from natural disasters.
Right through human history discrimination has ruled supreme. Among the Israelites too there were those who did not count. These ‘non-countable’ people created a tornado in Jerusalem when Jesus entered the city. I want to reflect on the tornado that swept over Jerusalem on the very first Palm Sunday. Most of the people in Jerusalem, especially those in power, were caught off-guard by this ‘intruder’ called Jesus, and His people who amounted to nothing in the eyes of the Roman authorities as well as the Jewish big-wigs.
Tornado is also referred to as ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Temple – and began to put things in order. Putting things in order? Well, depends on which perspective one takes. For those in power, things were thrown completely out of order; but for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is, possibly, a wake-up call to begin anew!

With the Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine God – a God who was willing to suffer. He had already defined love as “Greater love has no one than this, that someone lay down his life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for friends, then God’s love can go further… to lay down His life for all, including the ones who were crucifying Him. Such a God would normally be unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and made it very clear that in spite of all the events that took place during this week, one could call this week Holy since these events resulted in the Supreme Sacrifice. Death by crucifixion was the most painful torture the Romans had invented. The cross was the most despised form of punishment reserved for the worst criminals. Jesus on the Cross has made this most derogatory symbol of punishment and death into a symbol of veneration. The crucified Jesus has turned the lives of millions upside down. Here is one example…
William J. Bausch in his book Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections talks of a Bishop who was a great evangelizer.  Here is the rest of the story: He tried to reach out to unbelievers, scoffers, and cynics.  He liked to tell the story of a young man who would stand outside the cathedral and shout derogatory slogans at the people entering to worship.  He would call them fools and other insulting names.  The people tried to ignore him but it was difficult. One day the parish priest went outside to confront the young man, much to the distress of the parishioners.  The young man ranted and raved against everything the priest told him.  Finally, he addressed the young scoffer by saying, “Look, let’s get this over with once and for all.  I’m going to dare you to do something and I bet you can’t do it.”  And of course the young man shot back, “I can do anything you propose, you white-robed wimp!” “Fine,” said the priest.  “All I ask you to do is to come into the sanctuary with me.  I want you to stare at the figure of Christ, and I want you to scream at the very top of your lungs, as loudly as you can. ‘Christ died on the cross for me and I don’t care one bit.’” So the young man went into the sanctuary, and looking at the figure, screamed as loud as he could, “Christ died on the cross for me and I don’t care one bit.”  The priest said, “Very good.  Now, do it again.”  And again the young man screamed, with a little hesitancy, “Christ died on the cross for me and I don’t care one bit.”  “You’re almost done now,” said the priest.  “One more time.” The young man raised his fist, kept looking at the statue, but the words wouldn’t come.  He just could not look at the face of Christ and say it anymore. The real punch line came when, after he told the story, the bishop said, “I was that young man.  That young man, that defiant young man was me.  I thought I didn’t need God but found out that I did.”

Palm Sunday is also celebrated as the World Youth Day. Pope St John Paul II established this day in 1985, the International Year of the Youth, declared by the UN. Prior to this, in the year 1983, Pope John Paul II had declared the Holy Year of Redemption. For this special year, a huge cross was erected in St Peter’s Basilica for the veneration of thousands of pilgrims pouring into Vatican for the Holy Year. At the end of this Holy Year of Redemption, Pope John Paul II invited the youth to come to Rome for the Feast of the Palm Sunday. The Vatican officials were expecting that around 60,000 youth would respond to the invitation of the Holy Father. But, on April 15, 1984, for the Feast of the Palm Sunday, more than 300,000 young men and women poured into St Peter’s Square. Looking out to the crowds who answered his invitation, Pope St John Paul II said, “What a fantastic spectacle is presented on this stage by your gathering here today! Who claimed that today’s youth has lost their sense of values? Is it really true that they cannot be counted on?”
It was at this gathering that the Holy Father entrusted to the youth the Cross that was kept in St Peter’s Basilica for the Holy Year of Redemption. This Cross is now known as the World Youth Day Cross, to be carried throughout the world as a symbol of the love of Christ for humanity. Ever since, for the past 30 years, the Cross has been carried by the youth for all the World Youth Day celebrations celebrated in various countries in South America, North America, Europe, Asia and Australia.

One final thought: When we think of the Cross which has become the symbol of the World Youth Day, our minds naturally turn to the young men who were brutally murdered in Libya. In the video released by ISIS, the victims - Egyptian Coptic Christians abducted in Libya dressed in orange - were lined up near the seashore and forced to kneel on the ground. “People of the cross, followers of the hostile Egyptian church,” a caption read on the five-minute video, entitled “A message signed with blood to the nation of the cross.” We are sadly, yet proudly aware that many of these ‘people of the cross’ died proclaiming the name of the Crucified Saviour.

We pray that the Palm Sunday, celebrated as the World Youth Day, and the Holy Week events inspire every one of us to celebrate this week not as a ritual ceremony but as an integral part of our lives. We pray especially for the youth that they may become tornados that turn the world towards a better future!

The WYD Cross
இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920.
1920ம் ஆண்டு, அமெரிக்காவின் மூன்று பகுதிகளில் குருத்தோலை ஞாயிறன்று வீசிய சூறாவளிக் காற்றினால் ஏறத்தாழ 400 பேர் இறந்தனர்; 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. தவக்காலத்தின் ஆரம்பம் வசந்த காலத்துடன் இணைந்து வருவதை நாம் சிந்தித்ததுபோல், தவக்காலத்தின் இறுதி நாட்களை சூறாவளி நாட்களாக சிந்திப்பதும் பயனளிக்கும். குருத்தோலை ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.

வரலாற்றில் நிகழ்ந்த முதல் குருத்தோலை ஞாயிறன்று, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் அல்ல, கடவுள் வடிவத்தில் வந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; மரங்களை, வீடுகளை அடியோடு சாய்க்கும்; பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், எருசலேமை தலைகீழாகப் புரட்டிப்போட்டன என்பதை உணரலாம்.
இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை விட தானாகவே ஏற்பட்டது என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!
குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருஅவை புனிதவாரம் என்று அழைக்கிறது. புனிதவாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு.

புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம், கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளியை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது; மீட்பைக் கொணர்ந்துள்ளது.

சிலுவையில் அறையுண்ட இயேசு ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களைப் பற்றி William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.
ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள், அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார்.
இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.

ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. 1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை.
துன்பங்களைவிட்டு விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச் செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. கடந்த 30 ஆண்டுகளாக, உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து வந்துள்ள சிலுவை, 2016ம் ஆண்டு, போலந்து நாட்டின் கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக மீண்டும் அமையும்.
2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற 'உலக இளையோர் நாள்' நிகழ்வுகளை, முன்னின்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகள் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையக் கருத்துக்களாக, மலைப்பொழிவில் இயேசு கூறிய 'பேறுபெற்றோர்' வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.
'பேறுபெற்றோர்' என்று இவ்வுலகம் காட்டும் மாய வழிகளில் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் இளையோரின் வேதனைகளை நாம் அறிவோம். "உலக இளையோர் நாளை" சிறப்பிக்கும் இளையோர், ஏழையரின் உள்ளம், தூய உள்ளம், கருணை உள்ளம் என்று இயேசு சொல்லித்தரும் பேறுபெற்ற உள்ளம் கொண்டவர்களாய் வாழும் வரத்தை, இறைவன் அவர்களுக்கு வழங்க மன்றாடுவோம்.

இறுதியாக ஒரு சிந்தனை: இவ்வாண்டு பிப்ரவரி மாதம், ISIS தீவிரவாதிகளால், லிபியா கடற்கரையில் கழுத்து அறுபட்டு கொல்லப்பட்ட 21 கிறிஸ்தவ இளையோர் நம் நினைவை இப்போது நிறைக்கின்றனர். ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட அந்தக் கொடூர வீடியோவில், “People of the cross, followers of the hostile Egyptian church - A message signed with blood to the nation of the cross.” அதாவது, "சிலுவையின் மக்கள், எதிராளிகளான எகிப்து சபையின் தொண்டர்கள் - சிலுவையின் நாட்டிற்கு இரத்தத்தால் கையெழுத்திடப்பட்ட ஒரு செய்தி" என்ற வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சிலுவையின் மக்கள் என்று தீவிரவாதிகளால் முத்திரை குத்தப்பட்ட இந்த இளையோர், தங்கள் கழுத்து அறுபடும் நேரத்தில் இயேசுவின் பெயரைச் சொன்னபடியே இறந்தது, இளையோர் கொண்டிருக்கும் உறுதியை நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. நன்மையை இவ்வுலகில் நிலைநாட்ட, இளையோர் இத்தகைய உறுதியும், துணிவும் கொண்டு செயலாற்றவேண்டும் என்று சிலுவை நாயகன் இயேசுவை மன்றாடுவோம்.

22 March, 2015

Lent-alias-Spring வசந்தமான தவக்காலம்



Awakening the Seed
5th Sunday of Lent
March 20, Friday, was announced as the official beginning of the Spring Season. The weather channels were working over-time to report on the solar eclipse that occurred in most parts of Europe and the snow fall in the east coast of the U.S.A. on March 20. What caught my attention (and, honestly, tickled me to some extent) was the way the media announced the ‘official’ arrival of Spring as well as its duration. Here are two samples:
Spring officially arrives on Friday, March 20, at 6:45 p.m. EDT, but Old Man Winter may have the last laugh in a large part of the Northeast. – reports AccuWeather.com.
Spring 2015 started on Friday, 20th March 2015, 11:46pm and ends Sunday, 21st June 2015, 6:38pm - Location: Northern Hemisphere (Spring 2015 - http://days.to/spring/2015)
It is common sense to talk in precise terms of date and time for an event like the arrival of a train, or, an aircraft; but to use the same language to indicate the arrival of a season, in my opinion, showed our futile attempts to make nature more mechanical.
According to the weather experts spring may have come on March 20. But, we know that the spring season did not spring up at the given hour. It has had a long gestation period under the blanket of snow and slowly (not abruptly) painted the world in multi-coloured leaves and flowers.
Our generation, accustomed to ‘instant’ and ‘ready-made’ products, does not have the patience to see this slow, imperceptible change that took place in nature. Humankind will be a lot better if we learn to live with and learn from the cycles of nature, rather than try to portray them as machines that bring about changes at the touch of a button!

For us, Christians, spring season began along with Lenten Season. On the First Sunday of Lent, we spoke about Lent and the Spring Season. Today, the Fifth Sunday of Lent, we are back to this theme. To add more relevance to this theme of Lent-alias-Spring, in today’s Gospel, Jesus talks of the seed yielding much fruit.
Last week we reflected on one of the most famous quotes from the Bible known as the ‘gospel of all the gospels’, namely, “For God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life.” (John 3: 16) Today we have another equally famous quote from John’s gospel, namely, “Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit.” (John 12: 24)
Both these passages from John’s gospel have been used as independent quotes without much reference to the circumstances in which Jesus spoke these words. In fact, the whole of John’s gospel is considered more of a theological treatise rather than a historical narration. Hence most of the quotes from this gospel can be used in very many contexts. Still, it would be helpful to think of what prompted Jesus to say these words.

The opening lines of today’s gospel give us the context in which Jesus said this famous ‘parable’ of the grain of wheat. Here are the opening lines: Now among those who went up to worship at the feast were some Greeks. So these came to Philip, who was from Beth-sa'ida in Galilee, and said to him, "Sir, we wish to see Jesus." (John 12: 20-21)
In the following verses, Jesus speaks about his death. My limited human logic felt that Jesus spoke out of tune in this circumstance. Since the Greeks must have come seeking some spiritual wisdom from Jesus, he could have easily spoken to those foreigners a great parable. After all, he was known as a master story teller. Instead, he talks about his death. Why did the Greeks come to see Jesus? Why did Jesus speak in this vein? The answers to these questions are given by Fr Munachi E. Ezeogu, in his homily. His explanation is quite enlightening and I wish to share this with you:
The Greek philosopher Socrates is regarded as one of the wisest men of all time. This man… devoted his life to exposing ignorance, hypocrisy and conceit among his fellow Athenians and calling them to a radical re-examination of life…But those in power arrested him, tried him and sentenced him to death…Subsequent generations of Greeks came to regard Socrates as a martyr for truth. They resolved never again to persecute anyone on account of their beliefs.
By the time of Jesus, the Greeks had become among the most broad-minded people in the world. Various religious and philosophical traditions flourished among them and vied for popularity. We see in today's gospel that among the huge crowds that had come to Jerusalem for the Passover feast were some Greeks. It did not take these Greeks long to see that all was not well in Jerusalem. So they came to see Jesus. Why did they come to see Jesus? Although John has somewhat spiritualised the story, thereby giving the impression that they came to seek admission into the "body" of Christ (John 12:32), it is more probable that they came to alert Jesus of the seriousness of the danger surrounding him and to suggest to him to flee with them to Greece, the land of freedom. The response that Jesus gives to their request shows that it has to do with his impending death and that he has chosen to stay and face it rather than seek a way to escape it.
This explanation seems to remove the incongruence that I felt, namely, between the Greeks seeking Jesus and Jesus talking of his death.

Jesus chooses to stay on and face the consequence. He begins his response with the famous line -
“The hour has come for the Son of man to be glorified.” Thrice in John’s gospel we see the line ‘the hour has not yet come’. The first time it was in the wedding at Cana: When the wine failed, the mother of Jesus said to him, "They have no wine." And Jesus said to her, "O woman, what have you to do with me? My hour has not yet come." (John 2: 3-4) On two more occasions during the public ministry of Jesus the phrase ‘his hour had not yet come.’ is used. (John 7:30; 8:20). Now Jesus declares that His hour has come… The hour for what? The hour to become a life-giving seed by sacrificing life.
The ‘parable’ of the grain of wheat has great depth. Why was the grain of wheat created? I could think of two primary reasons and one secondary reason. The primary reasons are: to serve as food for other living beings or to become a seed in order to multiply its own kind. These are the prime reasons why a grain of wheat has been created. The secondary reason I could think of was that this grain could be used as a decorative piece. This grain remains alone, without being productive… just a show-piece. This is what we see in the first part of Jesus’ saying: “unless a grain of wheat falls into the earth and dies, it remains alone”. Alone… artificially alone!

The ‘parable’ of the grain of wheat reminded me of another ‘parable’:
A young man and a woman wanted peace in the world and peace in their heart. But they were very frustrated… the world seemed to be falling apart. They would read the papers and get depressed.  One day they decided to go shopping, and picked a store at random. They walked into the store and were surprised to see Jesus behind the counter. They went up to Jesus and asked: "What do you sell?”  Jesus replied: “Oh, just about anything!  Feel free to walk up and down the aisles, make a list of things you want, and when you come back, I will see what I can do for you.”  Both of them walked up and down the aisles and saw all sorts of things they wanted: peace on earth, no more war, no hunger or poverty, peace in families, no more drugs, clean air, and careful use of resources. They made a list of the things they wanted and handed it over to Jesus. He read through the list, looked at them and smiled.  “No problem,” He said.  Then He bent down behind the counter and picked up a number of small packets.  “What are these?” they asked.  “Seed packets," Jesus replied.  "This is a catalogue store.”  In surprise, they said: “You mean we don’t get the finished product?”  “No," He answered.  "This is a place of dreams. When you choose what you want, I give you the seeds. You plant the seeds and watch them grow. There is one catch, however: you will not receive the benefit of your good work -- others will.”

Both Lent and Spring drive home the theme of ‘change’. Our ‘now’ generation wants to see ‘instantaneous’ changes and becomes impatient with slow changes. We need to learn from Lent and Spring, that significant changes do not happen over-night.
The ‘parable’ of the grain of wheat and the ‘parable’ of the ‘dream shop’ tell us that even though God is the store owner, He does not give us our wishes and dreams as ‘ready-made’ ‘take-home’, ‘finished’ products. He would rather give us the starting points… the seeds! It is up to us to keep these seeds as decorative pieces or plant and nurture them into a fruitful future – a future in which we may not even live to enjoy the fruits! That is exactly the role of the grain of wheat!

Dream Seeds – the Battle for your Heart
"மார்ச் 20, வெள்ளிக்கிழமை, வசந்தக்காலம் அதிகாரப்பூர்வமாக வந்துசேர்கிறது" என்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வானிலை அறிக்கைகள் கூறின. அதிலும், நியூயார்க் நகரிலிருந்து வெளிவந்த ஓர் அறிக்கையில், "மார்ச் 20, வெள்ளிக்கிழமை, மாலை 6:45 மணிக்கு வசந்தம் வருகிறது" (Snow to Blanket NYC on First Day of Spring - Spring officially arrives on Friday, March 20, at 6:45 p.m. EDT - AccuWeather.com) என்று நான் வாசித்தபோது எனக்குள் இலேசாகச் சிரித்துக் கொண்டேன்.
மனிதர்களாகிய நாம், ஒரு நிகழ்வு நடப்பதற்கு, நாளையும், நேரத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், அதே பாணியில் வானிலை மாற்றங்கள் நிகழும் என்று சொல்வது; கால மாற்றங்களுக்கு கால அட்டவணை போடுவது போன்றவை, இயற்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் முயற்சிகளாக நான் கருதுகிறேன்.

வானிலை அறிக்கைகளின் கணக்குப்படி, வசந்தக்காலம், மார்ச் 20, இவ்வெள்ளியன்று வந்திருக்கலாம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு, பிப்ரவரி, 18, திருநீற்றுப் புதனன்று வசந்தக்காலம் துவங்கிவிட்டது. தவக்காலத்திற்கும், வசந்தக்காலத்திற்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடர்பினை, நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று சிந்தித்தோம். தவக்காலத்தின் 5ம் ஞாயிறான இன்று, வசந்தக்காலத்தைப்பற்றி, மீண்டும் ஒருமுறை சிந்திக்க வந்திருக்கிறோம்.
இயற்கையின் சுழற்சியில் உள்ள நான்கு பருவக்காலங்களில், வசந்தக்காலத்திற்குத் தனியொரு அழகும், அர்த்தமும் உண்டு. பனியில் புதைந்து, இறந்துபோனதாய் நாம் நினைக்கும் தாவர உயிர்கள், வசந்தம் வந்ததும், மீண்டும் உயிர் பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித்தரும் நம்பிக்கை பாடம். நம்பிக்கை தரும் வசந்தக்காலத்தில், தவக்காலத்தை நாம் கொண்டாடுவது பொருத்தமாக உள்ளது.
தவக்காலம் ஒரு கொண்டாட்டமா? ஆம்... மீண்டும் மீண்டும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை வளர்க்கும் காலம் இது என்பதால், இது ஒரு கொண்டாட்டம்தான். தவக்காலத்தின் இந்த 5ம் ஞாயிறன்று, வசந்தக்காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார்.
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் நற்செய்தி 12: 24)
தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக்காலத்தில், இயேசுவின் இந்தக் கூற்று, பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது.

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்என்று கேட்டுக் கொண்டார்கள். (யோவான் நற்செய்தி 12: 20-21) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
ஆர்வமாகத் தன்னைத் தேடிவந்த கிரேக்கர்களை வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளை இயேசு சொல்லியிருக்கலாம். அதற்கு நேர்மாறாக, அவர் கூறும் வார்த்தைகள், கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன.
எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவைக் காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு, ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு அருள்தந்தை முனாச்சி என்பவர் (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம் புதிதாக உள்ளது... புதிராகவும் உள்ளது. அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள், கிரேக்கர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை, சாக்ரடீசை, அவர்கள் கொன்றது, பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்கென, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்கென கொல்வதில்லையென்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள், கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழமுடிந்தது, பேசமுடிந்தது. தங்கள் நாட்டு சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள், அண்டை நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கி வந்தனர். சுதந்திரச் சிந்தனை கொண்ட இந்த கிரேக்கர்களில் ஒரு சிலர், இயேசுவைத் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர்.

எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகி வந்த எதிர்ப்பு, வெறுப்பு ஆகியவை, அவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கும். எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி, சிந்தனைச் சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு அவரைத் தங்களுடன் வரும்படி அழைத்திருப்பார்கள். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை, இயேசு, இன்றைய நற்செய்தியில் பல விதங்களில் கூறுகிறார்.
அவர் சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (12: 23) மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள், காலம் காலமாக பலருடைய உள்ளங்களில் உறுதியை, வீரத்தை, தியாகத்தை விதைத்துள்ள வார்த்தைகள்:
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் நற்செய்தி 12: 24)
ஆணி அறைந்ததுபோல் மனதில் ஆழப் பதியும் வார்த்தைகள் இவை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்கவேண்டும். அல்லது அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும். இந்த இரு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும்.

தன்னை இழந்து, மற்றவரை வாழ்விப்பது, கோதுமை மணிகளுக்கு மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களுக்கும், குறிப்பாக, மனிதர்களுக்கும் குறிக்கப்பட்டுள்ள முக்கிய இலக்கு. மண்ணில் விழும் விதைகளாக மாற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சிந்திக்கும்போது, ஓர் உவமை என் நினைவுக்கு வருகிறது.
உலக அமைதி எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்தனர், ஓர் இளைஞனும், இளம் பெண்ணும். ஆனால், இவ்வுலகம் ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறதே என்ற விரக்தியினால் மன அமைதியை இழந்து தவித்தனர்.
இருவரும் ஒருநாள், ஒரு கடைக்குச் சென்றனர். அந்தக் கடை சற்று வித்தியாசமாக இருந்தது. கடையின் உரிமையாளர் இயேசு என்பதை இருவரும் உணர்ந்து, அவரிடம் சென்று, "இங்கு நீங்கள் என்ன விற்கிறீர்கள்?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், "உங்களுக்கு விருப்பமான அனைத்தும் இங்கு உள்ளன. நீங்கள் கடையைச் சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
இளைஞனும், இளம்பெண்ணும் கடை முழுவதும் சுற்றினர். அவர்கள் விரும்பித்தேடிய பல பொருள்கள் அங்கிருந்தன. அமைதியான உலகம், பசியில்லாத பூமி, போரற்ற சமுதாயம், சுத்தமான காற்று, தெளிந்த நீர், அன்பு நிறைந்த குடும்பம் என்று அவர்கள் ஏங்கித்தவித்த அனைத்தும் அந்தக் கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தாங்கள் அதுவரை தேடிய அனைத்தும் தங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்ற ஆவலில், அக்கடையில் இருந்த அனைத்து நலன்களையும் குறித்துக்கொண்டு, இருவரும் இயேசுவிடம் திரும்பிச்சென்றனர்.
அவர்கள் தந்த பட்டியலைக் கண்ட இயேசு, புன்னகையோடு ஒரு சில பொட்டலங்களை அவர்களிடம் தந்தார். "இவை என்ன?" என்று அவர்கள் கேட்டபோது, இயேசு, "இவை அனைத்தும் விதைகள்" என்று சொன்னார். புரியாமல் அவரைப் பார்த்த இருவரிடமும் இயேசு, "இது கனவுகளின் கடை. நீங்கள் குறித்து வந்த கனவுகள் அனைத்திற்கும் தேவையான விதைகள் இந்தப் பொட்டலங்களில் உள்ளன. இவற்றை விதைத்து, வளர்ப்பது உங்கள் பொறுப்பு" என்று இயேசு சொன்னார். தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கனவுகள், 'ரெடிமேட்' நிலையில் கிடைக்காது, அவற்றை நட்டு வளர்ப்பது தங்கள் கடமை என்பதை இருவரும் உணர்ந்தனர்.
அவர்கள் கடையைவிட்டுக் கிளம்பும்போது, இயேசு அவர்களிடம், ", ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கனவுகளை விதைப்பதும், வளர்ப்பதும் மட்டுமே உங்கள் பொறுப்பு. இவற்றின் பலன்களை அடுத்தத் தலைமுறையினரே அனுபவிக்கப் போகின்றனர்" என்று இயேசு சொல்லி அனுப்பினார்.
மிகத் தெளிவான, ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. 'இன்ஸ்டன்ட்' உணவுவகைகள் உட்பட, அனைத்தும் 'ரெடிமேட்' வடிவத்தில் கிடைக்கும் இன்றைய உலகில், நம் கனவுகள் என்ற விதைகளை நட்டு, கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதற்கு ஏராளமான பொறுமை தேவை. அத்தகையப் பொறுமை நமக்கு உள்ளதா என்பதை ஓர் ஆன்மீகச் சோதனையாக மேற்கொள்ளலாம்.
வசந்தம் கொணரும் மாற்றங்கள், பொறுமையாக, மிக, மிக மெதுவாக, கண்ணுக்குத் தெரியாத வண்ணம், பனிப் போர்வைக்குள் நிகழ்ந்ததால், அதன் வெளிப்பாடான தளிர்களையும், மலர்களையும் நாம் வசந்த விழாவாகக் கொண்டாட முடிகிறது. பனிக்குள் நடந்த மாற்றங்களோடு சேர்த்து கணக்கிட்டால், வசந்தம் மெதுவாக, பொறுமையாக, பல நாட்களாக வந்தவண்ணம் உள்ளது என்பதை உணரலாம். அதை மறந்துவிட்டு, அல்லது, அதை மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, அந்தப் பருவமாற்றம் சட்டென்று மார்ச் 20, மாலை, 6:45 மணிக்கு வந்தது என்று சொல்லும்போது, நம் போறுமையின்மையைத் தானே அது காட்டுகிறது!

வசந்தக்காலத்தையும், தவக்காலத்தையும், அவற்றின் உயிர் நாடியான மாற்றத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, நமக்குள்ளும், நம்மைச் சார்ந்திருப்போருக்குள்ளும் உருவாகும் மாற்றங்கள், ஒரே நாளில், ஓரிரவில் தோன்றுவதில்லை; மாற்றங்களைக் காண்பதற்கு பொறுமை மிக அவசியம் என்ற உண்மையை, முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, அன்பான, அமைதியான, உலகம் உருவாகவேண்டும் என்ற கனவு நம் அனைவருக்கும் உண்டு. இந்தக் கனவு, 'ரெடிமேட்' சரக்காக நம்மை வந்தடையாது. கடையின் உரிமையாளர் கடவுளே என்றாலும், அவர் நம் கனவுகளை, கடைசரக்கைப் போல், பரிசுக் காகிதத்தில் சுற்றித் தரமாட்டார். அவர் தருவதெல்லாம் கனவு விதைகள். அந்த விதைகளை நட்டு, வளர்ப்பது நம் கடமை. நாம் நட்டு வளர்த்த விதைகளின் கனிகளை நாம் சுவைக்க முடியவில்லை என்றாலும், கனவுகளை நட்டோம், கண்ணும், கருத்துமாய் வளர்த்தோம் என்ற திருப்தியில் நாம் இவ்வுலகிலிருந்து விடைபெறும் பக்குவத்தை இறைவன் நமக்குத் தர வேண்டும் என்று மன்றாடுவோம்.
பலன்களை எதிர்பார்க்காமல், நல்ல கனவுகளை இவ்வுலகில் நட்டு, வளர்த்தால், நாமும், இயேசு சொன்னதுபோல், மிகுந்த விளைச்சலை அளிக்கும் கோதுமை மணிகளாக வாழ்ந்தவர்கள் என்ற பெருமை பெறுவோம்.

15 March, 2015

Two years of Pope Francis – Change from within திருத்தந்தை பிரான்சிஸ் – மனதிலிருந்து மாற்றங்கள்

To Change the World – Pope Francis on  Twitter
4th Sunday of Lent
2nd Anniversary of the Election of Pope Francis
For the past ten days there have been many news features on Pope Francis. He has been the focus of media attention – mainly catholic media – since, on March 13, Friday, he has completed two years of his leadership service. I would like to label these two years of Pope Francis, not as ‘successful’ years, but ‘meaningful’ years!
My mind goes back to many news-worthy actions and words of the warm, loving, humble, and merciful Pope. More than these, my heart has registered very deep and emotional reactions of those who have been touched by the Pope. My memory goes back to March 28, 2013, just two weeks after the Election of Pope Francis. He was in Casal del Marmo, the juvenile correction facility near Rome. He had gone there to celebrate the Mass of the Last Supper on Holy (Maundy) Thursday. He had washed the feet of 12 juvenile prisoners, including the feet of two young ladies. It was reported that the 12 included Orthodox and Muslim detainees as well.

When the juvenile prisoners of Los Angeles Juvenile Detention Facility heard that the Pope was going to Casal del Marmo, they had sent him letters expressing their appreciation. Here are a few sample mails:

Dear Pope Francis,
Thank you for washing the feet of youth like us in Italy.
We also are young and made mistakes.
Society has given up on us, thank you
that you have not given up on us.

Dear Pope Francis,
I don't know if you have ever been to where I live.
I have grown up in a jungle of gangs and drugs and violence.
I have seen people killed. I have been hurt.
We have been victims of violence.
It is hard to be young and surrounded by darkness.
Pray for me that one day I will be free
and be able to help other youth like you do.

Dear Pope Francis,
I know the same youth feet that you wash are like me.
Drugs have been part of me life for so long.
We all struggle to be sober.
But you inspire me and I promise to be sober
and help others with the cruel addiction of crystal meth.

These mails express not only sentiments of affection and appreciation, but also sentiments of resolve to change… change for the better. That is the core of the Lenten season. I feel happy that the Pope, more than all the structural changes he has initiated in Vatican, is making significant impact on thousands of individuals to change their lives.

We know that any prison, or correction facility can only ‘impose’ changes on prisoners. What the prisoner needs is more of a ‘inspiration’ for change. I feel Pope Francis has given this to those young detainees of Rome and L.A. On April, 2, 2015, he is going to Rebbibia, the prison in Rome housing adults. We pray that these prisoners too may have a change of heart like the young detainees had in 2013.

While reflecting on how Pope Francis has brought about change in thousands of individuals cutting through human made barriers – including the high-rise walls of a prison, my mind recalled another news item published three years back. I read this piece of news in http://www.nytimes.com. What began as a glance turned into curiosity and led me towards some serious reflection. As I was reflecting on today’s Gospel, this news item, especially the picture attached to it, was frequently flashing across my mind. This was the news item: THE VANISHING MIND - Life, With Dementia by PAM BELLUCK, published: February 25, 2012. Let me share with you my thoughts on the picture as well as on the news feature. Although this feature was about the problem of Alzheimer’s or Dementia in a prison in California, my attention was turned towards other factors related to this news.

First, about the picture: This picture had a background – the high-rise wall like in any other prison. On the top of the wall ran a barbed wire. This barbed wire must have had a high-voltage electric current running through it 24x7. This ‘fortress’ was meant as a protection. Protection for whom and against whom? Any child would answer this question saying that this ‘fortress’ was meant to protect the society from the criminals kept inside the walls. But, when I saw this picture, my mind thought otherwise… I thought that this wall was to protect the ‘inmates’ from the outside world. This reversal occurred to me because of what I saw in the foreground of this picture. In the foreground there were six or seven men. But the focus was on two of them – one black and another white. The black person was about 50 years old and the white person was about 70 or 80. The black person had his hands wrapped around the shoulders of the white person and, possibly, was leading him somewhere. One can see the kindness in the eyes of the black person looking at the older white person.
The black person is Secel Montgomery Sr. Sacel talks about how he killed his sister-in-law by stabbing her many times since she refused to give him money to buy drugs. Even in the prison his record had not been ‘clean’. Despite that, he has recently been entrusted with an extraordinary responsibility. He and other convicted killers at the California Men’s Colony help care for prisoners with Alzheimer’s disease and other types of dementia, assisting ailing inmates with the most intimate tasks: showering, shaving, applying deodorant, even changing adult diapers, says the feature.
If this experiment meets with even 50% of success, then, I feel that ‘salvation has come to California Men’s Colony’. “It’s a long road to recovery and I’m working on it…” are the closing words spoken by one of the prisoners. Isn’t this salvation? For this salvation to reach its fruition, these ‘inmates’ need to be shielded from the outside world… Now, tell me, whom should the high-rise wall protect?

Second, about the news-feature: The moment we think of prison cells, the first thoughts that crowd our minds are – crime, hatred, violence, abuse, punishment. I am of a firm opinion that punishment and imprisonment can only bring about minimal, temporary changes in a person. The real, lasting changes have occurred due to love and kindness. We have heard of so many who have changed their entire life-style due to some kindness shown to them inside these hopeless cells. Is there a place for kindness, compassion, and help in such a place? You bet. I don’t think there is any place in the world so hopeless that can refuse entry to love and kindness. What is happening in California Men’s Colony is only the tip of the iceberg. All over the world, in so many millions of prison cells there is a chance, a place for love. Although this is not discussed in the feature, I can see how these little acts of love shown in these prison cells, bless those who give as well as those who receive.

Usually we are accustomed to seeing prisoners at the receiving end… of love and compassion from those who visit them. Sometimes these external helpers may tend to ‘preach’ to those who are inside. At such moments, I have heard these ‘insiders’ say: “It is easy for you to say these things… If you were in my place, then you would know!” An ‘outsider’ cannot bring significant changes on these ‘insiders’. What is the other alternative?
Real, lasting help can come from someone who is one among them. Imagine that a person, who is blameless, wanting to help the prisoners, gets himself imprisoned; becomes one of the prisoners and then, from within, begins to change them… This help would be more acceptable than the help given by an ‘outsider’. But, is this possible in real-life? I don’t know. But, it has happened in other situations as in the case of St.Damien Joseph de Veuster of Moloka'i. He had worked for the leprosy (Hansen's disease) patients in Hawaii; was affected by the disease himself and died at the age of 49. His self-identification with the leprosy patients was total and complete. On the day Damien knew he had contracted leprosy, he said from the altar, “we, the lepers”. I am sure St.Damien must have got his inspiration for total identification and total immersion from Jesus’ Incarnation.

This total immersion, identification and Incarnation is spoken of in today’s Gospel in one of the most – probably, the most – famous verses in the Bible: God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life. (John 3: 16)
John 3:16 is probably the best loved verse in the Bible and it has been called "everybody's text" and the “gospel of the gospels”… This text is the very essence of the gospel. It tells us that the initiative in all salvation is God’s love for man. As St. Augustine puts it: "God loves each one of us as if there were only one of us to love." http://cbci.in/Sunday-Reflections.aspx

We have heard hundreds, perhaps thousands of love stories. Most of these love stories are just one frame from a full-length movie called life. What is happening in California prison day after day may not be ‘news-worthy’ on a daily basis. Similarly what is happening in our ordinary, day to day life is also a love story which may not get media attention.
As we are meditating on ‘God-so-loved-the-world’, we shall set aside some moments today and in the coming days during this Lenten Season to think of the continuous, but unrecognised love stories we experience in our own families. I know of families where the parent, the life-partner, a sibling is taking care of persons who cannot take care of themselves. This is not just a one-day, one month love-affair…But a year-long affair… for ten, twenty, thirty, forty and more years… Let us salute these silent stalwarts of true love and dedication who will not adorn any history book.

Our closing thoughts return to Pope Francis. He has identified himself very much with the suffering, the poor and the people on the periphery. He has brought changes in the lives of thousands of very simple people, both young and old. We pray that God gives Pope Francis good health to continue his mission of bringing the merciful ‘Emmanuel’ closer to the world, which seems to shun the true ‘Light’ (John 3:19).



The Secret to Change

மார்ச் 13, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியில் ஈராண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த ஈராண்டுகளை அவர் 'வெற்றிகரமாக' நிறைவு செய்தார் என்று சொல்வதைவிட, 'பொருளுள்ள வகையில்' நிறைவு செய்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
திருத்தந்தையின் ஈராண்டு தலைமைப்பணியைப் பற்றி பல செய்திதாள்கள் கடந்த பத்து நாட்களாக கட்டுரைகளை வெளியிட்டுவந்துள்ளன. இக்கட்டுரைகளை அலசினால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியைக் குறித்து ஓர் உண்மை மீண்டும், மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதான், மாற்றம்.
தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்தும், மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், மாற்றத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, அவர் வத்திக்கானிலும், திருஅவையிலும், ஏன்... இன்னும் சொல்லப்போனால், உலக அரசுகளிலும், வர்த்தக உலகிலும், உலக அவைகளிலும் 'மாற்ற அலைகளை' உருவாக்கி வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் உருவாக்கிவரும் வெளிப்புற மாற்றங்களை விட, மனிதர்கள் மனதில் அவர் உருவாக்கியுள்ள ஆழமான தாக்கங்களும், அவற்றின் விளைவாக அவர்கள் வாழ்வில் உருவாகியுள்ள மாற்றங்களும் திருத்தந்தையின் ஈராண்டு பணியின் முக்கியத் தாக்கம் என்று சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

பணியேற்ற இரு வாரங்களுக்குப் பின்னர், அதாவது, 2013ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் Casal del Marmo என்ற பெயர் கொண்ட வளர் இளம் கைதிகள் இல்லத்தில், புனித வியாழன் மாலைத் திருப்பலியை நிறைவேற்றினார். அங்கு, இரு பெண் கைதிகள் உட்பட, 12 வளர் இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார். இச்செய்தியை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Los Angeles நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் கேள்வியுற்றனர். அவர்களில் பலர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மடல்களை அனுப்பி வைத்தனர்.
தங்களைப் போன்ற கைதிகளை மனிதர்களாக மதித்தது மட்டுமல்லாமல், அவர்கள் காலடிகளைக் கழுவி, அவர்களுக்குப் பணிவிடை செய்த திருத்தந்தையை எண்ணி, உள்ளம் நெகிழ்ந்து எழுதப்பட்ட மடல்கள் இவை. இளம் கைதிகள் எழுதியுள்ள மடல்களில் சில:

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
என்னைப் போல், இத்தாலியில் சிறையில் இருக்கும் இளையோரின் காலடிகளை நீங்கள் கழுவியதற்காக நன்றி. தவறு செய்த எங்கள் மீது இந்த சமுதாயம் நம்பிக்கை இழந்துவிட்டது. ஆனால், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை. மிக்க நன்றி.
அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
நான் வாழ்ந்த வாழ்வைப் போல நீங்களும் வாழ்ந்தீர்களா என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருளும், வன்முறையும் நிறைந்த ஒரு காட்டில் நான் வளர்ந்தேன். என் கண்முன்னே ஏழுபேர் கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறேன். நானும் பலமுறை காயப்பட்டிருக்கிறேன்.
இளவயதில் இத்தனை வன்முறைகள் நடுவில் வாழ்வது மிகவும் கடினம். ஒருநாள், நானும் இங்கிருந்து விடுதலை பெறுவேன். அப்போது, நீங்கள் செய்வதுபோல், நானும் மற்ற இளையோருக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அதற்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
என்னைப் போன்ற ஓர் இளைஞனின் காலடிகளை நீர் கழுவுகின்றீர். போதைப் பொருளுக்கு அடிமையானவன் நான். தற்போது அதிலிருந்து விடுதலை பெற முயன்று வருகிறேன். நீங்கள் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். இப்பழக்கத்தைக் கைவிடவும், போதைக்கு அடிமையான மற்றவர்களைக் காப்பாற்றவும் நான் முயற்சிகள் எடுப்பேன்.

தான் மாறியதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் மாற்ற முடிவெடுக்கும் வண்ணம் இந்த இளையோர் கூறிய வார்த்தைகள், தவக்காலத்தில் நாம் சிந்தித்து வரும் மனமாற்றத்தின் அழகிய பரிமாணத்தைக் காட்டுகிறது. இத்தகைய மாற்றத்திற்கு வழிவகுத்தது, திருத்தந்தையின் பணிவும், அன்பும் என்று எண்ணி மகிழ்கிறோம். உள்ளார்ந்த அன்பு, உண்மையான மாற்றங்களைக் கொணரும் என்பதை, அருள்பணி அந்தனி டிமெல்லோ அவர்களின் சிறுகதை இவ்வாறு சொல்கிறது:
"நீ மாறவேண்டும், மாறவேண்டும்" என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்த ஓர் இளைஞர், எப்படி மாறுவது என்று தெரியாமல் குழம்பிப்போனார். மற்றவர்கள் எதிர்பாக்கும் மாற்றங்கள் தன்னிடம் உருவாகவில்லையே என்ற ஏக்கத்தில், இன்னும் மோசமாக மாறினார்.
அவர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணும், "நீ மாறவேண்டும்" என்ற பல்லவியை நாள்தோறும் பாடி வந்தது, இளைஞரை மேலும் விரக்தி அடையச் செய்தது. ஒருநாள், அந்த இளம்பெண் இளைஞரிடம் வந்து, "நீ இப்போது இருப்பதுபோலவே எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ மாறவேண்டாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட இளைஞரின் உள்ளத்திலிருந்த இறுக்கங்களும், ஏக்கங்களும் மறைந்தன.
அவர் மாறத் துவங்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஏப்ரல் 2ம் தேதி, உரோம் நகரில் உள்ள Rebbibia சிறையில் உள்ள கைதிகளைச் சந்திக்கிறார். (திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களை, துப்பாக்கியால் சுட்ட Mehmet Ali Ağca அவர்களை, 1983ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் இதே சிறையில் சந்தித்தார்.) பின்னர், சிறையில் இருக்கும் ஆண், பெண் கைதிகளுக்கு புனித வியாழன் திருப்பலியை நிகழ்த்தி, இருபால் கைதிகளில் 12 பேரின் காலடிகளைக் கழுவுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஈராண்டுகளுக்கு முன் வளர் இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவி, அவர்களில் பலருக்கு மாற்றங்களை உருவாக்கியத் திருத்தந்தை, இம்முறை, வயது வந்த கைதிகளின் மனங்களிலும் மாற்றங்களை உருவாக்குவார் என்பதை நம்பலாம்.
சிறையில் இருப்பவர்களிடம் நல்ல மாற்றங்கள் நிகழாது என்ற நமது முற்சார்பு எண்ணங்களை (prejudice), வளர் இளம் கைதிகள் மாற்றியுள்ளனர். அதேபோல், Rebbibia சிறைக் கைதிகளிடமும் மாற்றங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

உரோம், மற்றும் Los Angeles நகர் வளர் இளம் கைதிகளிடம் வெளிப்பட்ட மாற்றங்களையும், Rebbibia கைதிகளிடம் உருவாகும் மாற்றங்களையும் சிந்திக்கும்போது, மற்றொரு சிறையில் உருவான மாற்றங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் நடைபெற்ற மாற்றத்தைப் பற்றி NYTimes என்ற இணையதளத்தில் நான் வாசித்த செய்தி அது.
அச்சிறைக்கூடத்தில் உள்ளவர்கள் அனைவரும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவர் Sacel Montgomery. போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்ட Montgomery அவர்கள், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டபோது, அதைத் தரமறுத்த தன் அண்ணியை பல முறை கத்தியால் குத்தி, கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக அந்தக் கடுங்காவல் சிறையில் இருக்கிறார். சிறையிலும் பலமுறை காவல் துறையினரோடும், மற்ற கைதிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டவர். சிறையில் ஒருமுறை இவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இருந்த அவரிடம், சிறை அதிகாரிகள் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். அவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல் நிலையில் இருந்த பலருக்கும் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதே சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள், Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு Montgomery அவர்களுக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. நோயுற்ற கைதிகளுக்கு, உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச் செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்தனர். அந்தப் பணிகளால் சிறைக் கைதிகள் மத்தியில் உருவான தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் வளர்ந்துவந்த மகிழ்வு, அமைதி இவற்றைப் பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியிருந்தது.

அந்தச் செய்தியைப் படித்ததும், மற்றோர் எண்ணமும் எனக்குள் எழுந்தது. இன்றைய நற்செய்தியுடன் தொடர்புள்ள எண்ணம் அது. குற்றங்களைக் குறைப்பதற்கு, குற்றம் புரிந்தவர்களை மீண்டும் இயல்பு வாழ்வில் இணைப்பதற்கு, சட்டங்கள், சிறைகள், தண்டனைகள் சரியான வழி அல்ல. தண்டனைகள் ஒருவரது வாழ்வில் தற்காலிகமான மாற்றங்களை, மேலோட்டமான மாற்றங்களை உருவாக்கலாம். சிறைக்கூடங்களில் உருவாகும் பரிவும், பாசமும் எத்தனையோ குற்றவாளிகளில் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்களை மீண்டும் மனிதர்களாக்கியிருப்பதை நாம் அறிவோம். அத்தகைய மாற்றம், அவர்கள் வாழ்வை மீட்கும் வல்லமை பெற்றது.

மீட்பு என்றதும் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலசமயங்களில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம் அவர்களுக்குள்ளிருந்தே வரலாம். அல்லது, வெளியில் இருந்து வரலாம். வெளியிலிருந்து, பார்வையாளராக, அல்லது ஆலோசனை வழங்கும் நிபுணராகச் சென்று ஆயிரமாயிரம் போதனைகளை ஒருவர் தரும்போது, சிறைக்குள் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் எண்ணம் இவ்விதம் ஒலிக்கும்: "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ஈசிங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும், எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று.
இதே எண்ணங்களை நாம் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தியுள்ளோம். 'தனக்கு வந்தால்தான் தெரியும், தலைவலியும் காய்ச்சலும்' என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறோம்? இதே முறையீட்டை இறைவனிடமும் நாம் எழுப்பியுள்ளோம். நாம் படும் துன்பங்களை இறைவன் பட்டால்தான் தெரியும் என்று எண்ணியிருக்கிறோம். சொல்லியும் இருக்கிறோம்.
காதல் வேதனையில் சிக்கித் தவிக்கும் ஓர் இளைஞன் பாடுவதாக வந்த ஒரு பழையத் திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது...
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!"

சிறையிலிருப்பவருக்கு, வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லை. சரி. வேறு வழி என்ன? மற்றொரு வழியை நான் கற்பனையில் இப்படிப் பார்க்கிறேன். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிறை வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவராக, கைதியாக வாழ முன்வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இதை நாம் கற்பனையில் பார்க்கலாம். நடைமுறையில், சட்ட ரீதியாக இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இதையொத்த ஓர் உண்மை, நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம் இன்று நமது நற்செய்தியில் உள்ளது. தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3: 16)
விவிலியத்தின் வாக்கியங்கள் கோடான கோடி வழிகளில் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக, நான்கு நற்செய்திகளின் ஒவ்வொரு வாக்கியமுமே மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது  என்றால், அது நாம் இப்போது வாசித்த யோவான் 3: 16 என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவது எல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில் ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச்செயல்கள் கதைகளாக நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை கதைகளாக வெளிவருவதில்லை.
எனவே, நமக்கு வெளியில் நடக்கும் கதைகளைக் கேட்பதற்குப் பதில், நாம் இந்த நாளில் நேரம் ஒதுக்கி, நமக்குள் நடக்கும்  அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.
பல குடும்பங்களில், உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத்துணை, பெற்றோர் என்று எத்தனையோ பேருக்கு, 10,20,30 என்று பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று ஒவ்வொருவரும் செய்யும் பணிகள் அற்புதமானவை. அவற்றை, பணிகள் என்றுகூட அவர்கள் கருதுவதில்லை... கூறுவதில்லை. பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துவரும் இந்த அன்பு வேள்வியில் தங்களையே தகனப்பலியாக்கும் ஆயிரமாயிரம் அன்பு இதயங்களுக்காக இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம். தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3: 16) என்ற "நற்செய்திகளின் நற்செய்தியை" தங்கள் வாழ்வின் வழியே பறைசாற்றும் இந்த அன்பு உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

உலகெங்கும் பரவியுள்ள 122 கோடிக்கும் அதிகமான கத்தோலிக்கர்களின் தலைவர் என்ற பெருமையைவிட, தன் எளிய குணத்தால், மதம், இனம், மொழி என்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல கோடி மக்களின் மனங்களில் இடம்பிடித்து, அவர்கள் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிவருகிறார். இதுதான், இவர் வழியே, இறைவன் இவ்வுலகிற்கு வழங்கியுள்ள அற்புதக் கொடை. இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் பல ஆண்டுகள், தன் தலைமைப் பணி,யை நல்ல உடல் நலத்துடன் தொடர, இறைவனை இறைஞ்சுவோம்.