29 October, 2021

Three Commandments of Love அன்பின் மூன்று கட்டளைகள்


31st Sunday of Ordinary Time

The special Jubilee Year of Mercy, proposed by Pope Francis, was celebrated in 2016. During that special year of mercy, the angel of mercy, Bl. Mother Teresa, was canonized on 4, September, 2016. On the occasion of her canonization, a book titled: “A Call to Mercy - Hearts to Love, Hands to Serve” was published. In this book, St Mother Teresa has shared many inspiring personal anecdotes of love and mercy in her life. One such anecdote, as narrated by Mother Teresa herself, is the starting point of our Sunday reflection:
“I had the most extraordinary experience of love of neighbour with a Hindu family. A gentleman came to our house and said, “Mother Teresa, there is a family who has not eaten for so long. Do something.” So I took some rice and went there immediately. And I saw the children ­ their eyes shining with hunger. I don’t know if you have ever seen hunger, but I have seen it very often. And the mother of the family took the rice I gave her and went out. When she came back I asked her, “Where did you go; what did you do?” And she gave me a very simple answer: “They [a Muslim family] are hungry also.” What struck me most that she knew, and who are they? A Muslim family. And she knew. And I did not bring any more rice that evening because I wanted them ­ Hindus and Muslims ­ to enjoy the joy of sharing. But there were those children radiating joy, sharing their joy and peace with their mother because she had the love to give until it hurts, and you see this is where love begins—­at home in the family.”

It is truly remarkable that a poor lady, without food for quite a few days, and not able to provide food for her starving children, could think of her neighbours who were hungry. This is a remarkable lesson on neighbourly love, a love that is given until it hurts!
We can easily see how the true and noble sentiments of love are highjacked by the commercial world, adulterated with many other ideas, and pumped into hearts that are desperate for love. In such a situation, we are invited to reflect on ‘love of God’ and ‘love of neighbour’ on this Sunday. 

Love God… Love your Neighbour… So, what’s new? Nothing. Should novelty dictate my reflections? Should I present ‘love’ as an attractive commodity, as done by the commercial world? This was my concern as I began reflecting on this Sunday’s Gospel.

Today’s Gospel (Mark 12: 28-34) begins as a sequel to what happened earlier in the same chapter… namely, the conversation (shall we say, confrontation?) of the Sadducees with Jesus over Resurrection. They had fabricated a fancy story (of seven brothers marrying the same lady) to see how Jesus would resolve the questions of polygamy and after-life.

The smart answer given by Jesus to the Sadducees, impressed a scribe standing close by. He begins today’s discussion with a question: "Which commandment is the first of all?" (Mark 12:28). Won’t a scribe know the answer to this question? Was he also trying to corner Jesus? It does not seem so, since Jesus pays a heartfelt compliment to this scribe towards the end of this passage: “You are not far from the kingdom of God.” (Mark 12:34).
Jesus takes this opportunity to teach the two basic commandments of Christianity… Love God… Love your Neighbour… Jesus literally proclaims it with the familiar phrase known to all Israelites, namely, “Hear, O Israel”. It is interesting to note that in the first reading today (Deuteronomy 6: 2-6) this same expression is used by Moses in proclaiming an important point of the Law. When Israelites heard the phrase “Hear, O Israel”, they knew that what followed was of substance and significance.

Jesus had not said anything new in this passage. He was merely quoting from the Old Testament – from Moses. The master stroke of Jesus was… that he placed both these commandments, found in two different books of the Torah, close to each other and given both of them top priority. For a cursory glance, today’s gospel passage seems to talk of TWO COMMANDMENTS of love. But on closer scrutiny, one can easily find THREE COMMANDMENTS.
Three? Yes, the second commandment says: 'You shall love your neighbour as yourself.' We can see that love of self is a pre-condition for love of neighbour. It is obvious that only those who can love themselves, respect themselves, can love and respect others. Only on the solid foundation of loving and respecting oneself, can someone build the towers of ‘loving God’ and ‘loving the neighbour’.

Love of self can easily be misinterpreted as self-love or selfishness. Far from it! One who does not have love and respect for oneself, becomes self-loving, selfish and self-centred! Selfishness is a prison which gets filled up with only one person – I. There is no place for God or neighbour. Unfortunately, the commercial world tries its best to equate the beautiful concept of ‘loving oneself’ to ‘self-love’ and ‘selfishness’!

The Scribe was pleased with the answer of Jesus. He repeats the words of Jesus as if to express his full agreement on this… But, then he goes further. He says: “You are right, Teacher; you have truly said that he is one, and there is no other but he; and to love him with all the heart, and with all the understanding, and with all the strength, and to love one's neighbour as oneself, is much more than all whole burnt offerings and sacrifices.” (Mark 12: 32-33)
It is surprising to see a scribe speak in this fashion. A scribe giving more emphasis on a life lived in love than burnt sacrifices, is a real welcome change. That is why Jesus gave him the final approval: “You are not far from the kingdom of God.”

What the scribe said is a lovely definition of LOVE. Love is better than all sacrifices, since a life lived in love is a continuous sacrifice. We can recollect so many persons who have sacrificed their lives even to the point of death for the sake of their neighbours. Here is an episode that gives us a glimpse of what true love is. This happened in the city of Meerut, India, in April, 2006:
Mohammed Javed, a teenager who single-handedly rescued six children from a devastating fire at Meerut three days ago, succumbed to injuries at the Safdarjang Hospital in Delhi on Thursday.
The 18-year-old was a student of Class 12 at Sarvodaya School in east Delhi and had gone to Meerut, his home, after appearing in the board examination. When the fire broke out, Javed managed to come out safe from a burning tented enclosure but went back to help those trapped inside.
Anida, his mother, said, "Javed saw six kids were stuck in one corner of a tent and so he went back inside the burning enclosure to save them. He tore a part of the synthetic cloth that was used to make the outer cover of the tent to make way for the children." No one knew then that Javed's presence of mind and exemplary act of bravery would save so many lives but claim his own. (Source - The Hindustan Times)

In this selfless act of love, Javed sustained 70% burns and died in the hospital. Javed was in no way related to those he saved. He was not looking to appear in the newspaper as the ‘hero’. All he did was to respond to the call of love.
At this moment, we can surely recall to mind thousands of medical personnel who had sacrificed their lives in order to save people from the ravaging COVID-19 menace. We can be sure that to each of them, Jesus would have said, “You are not far from the kingdom of God” and would have gladly welcomed them into the Kingdom.

Given a choice, these noble souls, would have preferred to bring God’s Kingdom here on earth through their love, than entering the Kingdom all by themselves. Let us close our reflection with a story that talks about bringing the Kingdom here on earth through love:
Once, a village blacksmith had a vision. An angel came to him and said “The time has come for you to take your place in His kingdom.” “I thank God for thinking of me” said the blacksmith, “but as you know, the season of sowing the crops will soon be here. The people of the village will need their ploughs repaired, and their horses shod. I don’t wish to seem ungrateful, but do you think I might put off taking my place in the kingdom until I have finished?” The angel looked at him in a wise and loving way of angels. The blacksmith continued his work, and almost finished when he heard of a neighbor who fell ill in the middle of the planting season. The next time the blacksmith saw the angel he pointed out towards the barren fields, and pleaded with the angel. “Do you think eternity could hold of a little longer? If I don’t finish my job, my friend’s family will suffer.” Again the angel smiled and vanished. The blacksmith’s friend recovered, but another’s barn was burned down and a third was in deep sorrow at the death of his wife. And the fourth… and so on… Whenever the angel appeared, the blacksmith just spread out his hands in a gesture of resignation and compassion and drew the angel’s eyes to where the suffering was. One evening the blacksmith began to think of the angel and how he had put him off for such a long time. He felt very old and tired, and he prayed “Lord, if you would like to send your angel again, I would like to see him now.” He’d no sooner spoken than the angel appeared before him. “If you still want me to take me,” said the blacksmith, “I am now ready to take my place in the kingdom of the Lord.” The angel looked at the blacksmith, and smiled, as he said “Where do you think you have been living all these years?” (Jack McArdle in “And That’s the Gospel Truth”)


பொதுக்காலம் 31ம் ஞாயிறு

கத்தோலிக்கத் திருஅவையில், 2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்பட்டது. அவ்வாண்டு செப்டம்பர் மாதம், அருளாளரான அன்னை தெரேசா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார். அத்தருணத்தையொட்டி, "A Call to Mercy - Hearts to Love, Hands to Serve" "இரக்கத்திற்கு ஓர் அழைப்பு - அன்புகூர இதயங்களும், பணியாற்ற கரங்களும்" என்ற பெயரில் நூலொன்று வெளியானது. இந்நூலில், அன்னை தெரேசா அவர்கள், பரிவையும் அன்பையும் மையப்படுத்தி, வாழ்வில் தான் பெற்ற அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்துள்ளார். அந்த அனுபவங்களில் ஒன்று, நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்க உதவியாக உள்ளது.

அன்பிற்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், அன்பைப் பற்றிய அழகான பாடங்கள் சிலவற்றை, ஏழ்மையில் வாடிய ஒரு பெண், தனக்குக் கற்றுத்தந்ததாகக் கூறியுள்ளார். இந்நிகழ்வை, அன்னை அவர்கள் சொன்னது போலவே கேட்போம்:
மிகச்சிறந்த அன்பு அனுபவத்தை, ஓர் இந்து குடும்பத்தினரிடமிருந்து அடைந்தேன். ஒருநாள், ஒருவர், எங்கள் இல்லத்திற்கு வந்து, "அன்னையே, அருகில் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் பலநாள்கள் ஒன்றும் சாப்பிடாமல் உள்ளனர், அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" என்று கூறினார். நான் உடனே, கொஞ்சம் அரிசியை எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தேன். அக்குழந்தைகளின் கண்களில் பசி பற்றியெரிந்ததைக் கண்டேன். அந்த வீட்டின் தாய், நான் தந்த அரிசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அவர் திரும்பி வந்ததும், அவரிடம், "எங்கே சென்றாய்? என்ன செய்தாய்?" என்று கேட்டேன். அவர் என்னிடம், "அடுத்த வீட்டில் (ஓர் இஸ்லாமியக் குடும்பம்) இருப்பவர்களும் பசியுடன் உள்ளனர்" என்று, எளிமையான ஒரு பதிலைத் தந்தார்.
நான் மீண்டும் என் இல்லத்திற்குச் சென்று கூடுதல் அரிசியைக் கொண்டுவரவில்லை. ஏனெனில், அவ்விரு குடும்பங்களும் - ஒரு இந்துக்குடும்பமும், இஸ்லாமியக் குடும்பமும் - பகிர்வின் மகிழ்வை அடையட்டும் என்று எண்ணினேன். ஒருவர் தன்னை வருத்தி வழங்குவதே உண்மையான பகிர்வு, அன்பு என்பதை, அன்று ஆழமாக உணர்ந்தேன்.
அந்த தாய் உணவைப் பகிர்ந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வறியோர் பலரிடம் அத்தகையப் பகிர்வை நான் பார்த்திருக்கிறேன். என்னை அன்று ஆச்சரியமடையச் செய்தது, மற்றொரு விடயம். பட்டினியால் வாடிக்கொண்டிருந்த அக்குடும்பத்தின் தாய், அதுவும், பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த தன் குழந்தைகளின் அழுகுரலைத் தினமும் கேட்டுவந்தத் தாய், அடுத்த வீட்டில் உள்ளவர்களும் பட்டினியாய் இருந்தனர் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாரே என்பதுதான், என்னை, பெரிதும் ஆச்சரியமடையச்செய்தது. பொதுவாக, நாம் துன்பப்படும்போது, நம்மைப்பற்றி மட்டுமே நமது கவனம் அதிகம் இருக்கும். அடுத்தவர்களைப்பற்றி சிந்திக்க நமக்கு மனமோ, நேரமோ, சக்தியோ, இருக்காது. ஆனால், இந்தத் தாயிடம் நான் கண்ட அன்பு, என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அன்பைப் பற்றிய பாடங்களைச் சொல்லித்தந்த்து.
புனித அன்னை தெரேசா அவர்கள் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம், அன்பின் ஆழத்தை, இலக்கணத்தை நமக்குச் சொல்லித்தருகிறது.

அன்பு என்ற சொல்லுக்கு இவ்வுலகம், குறிப்பாக, வர்த்தக, விளம்பர உலகம் வகுக்கும் இலக்கணம் நமக்கு வேதனையளிக்கிறது. இத்தைகையச் சூழலில், இஞ்ஞாயிறு வழிபாடு, உண்மை அன்பைக் குறித்து சிந்திக்க, நம்மை அழைக்கிறது. கிறிஸ்தவ மறைக்கும், உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர், அன்புதான். இந்த அன்பைப்பற்றி, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை, மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ள முயல்வோம்.

இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர், இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பது, அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. தன்னைச் சிக்கவைப்பதற்காக, மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன், கேள்விகள் கேட்கும் ஏனைய மதத் தலைவர்களைப் போல், இம்மறைநூல் அறிஞர், கேட்காமல், உண்மையைத் தேடுகிறார், என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம், கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். அவற்றை, அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன், இயேசு, மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.

மூன்று கட்டளைகளா? இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார்? என்ற கேள்விகள் எழலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு, இரு அன்புகளை இணைத்து, இயேசு பேசியுள்ளதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்புகொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல், அடுத்தவர் மீது அன்புகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, ஒருவர், தன் மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை, இயேசு, ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப்பார்க்கலாம். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று, இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் உறுதியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு, என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

நம்மீது நாம் காட்டும் அக்கறை, அன்பு ஆகியவற்றை, சுயநலம் என்று, தவறாக முத்திரை குத்த வாய்ப்புண்டு, ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், சுயநலம் என்பது, உண்மையிலேயே ஒரு சிறை என்பதைப் புரிந்துகொள்ளலாம். தன்னைப்பற்றிய சரியான மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போகும்போது, தன்மீது தனக்கே உருவாகவேண்டிய உண்மையான அன்பும் இல்லாமல் போகிறது. அது, ஒருவரை, சுயநலச் சிறைக்குள் தள்ளிவிடுகிறது. இந்தச் சிறைக்குள் 'நான்' என்ற ஒருவர் மட்டுமே வாழமுடியும். அங்கு அடுத்தவருக்கோ, ஆண்டவனுக்கோ இடமிருக்காது.

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த மறைநூல் அறிஞர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும், எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது என்று கூறினார் (மாற்கு 12:33) என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

மறைநூல் அறிஞர் ஒருவர் இவ்விதம் பேசியது, பெரும் ஆச்சரியம்தான். கோவிலை மையப்படுத்திய பலிகளும், காணிக்கைகளுமே இஸ்ரயேல் மக்களின் தலைசிறந்த கட்டளைகள் என்று நம்பி, அவ்விதமே மக்களையும் நம்பவைத்தவர்கள், மதத்தலைவர்களும், மறைநூல் அறிஞர்களும். அவர்களில் ஒருவர், அன்பு செலுத்துவது, எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று சொன்னது, இயேசுவுக்கு மகிழ்வையும் வியப்பையும் வழங்கியிருக்கவேண்டும். மனப்பாடம் செய்த கட்டளைகளை, கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், உண்மையான ஆர்வத்தோடு, மறைநூல் அறிஞர் பேசியதைக் கண்ட இயேசு, அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்ற சொற்கள் வழியே, அவருக்கு, விண்ணரசில் இடமுண்டு என்ற உறுதியை வழங்குகிறார்.

அன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது, அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புநிறைந்த வாழ்வு, உண்மையிலேயே, ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளைவிட, நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாகவாழ்வைக் கூறும் பல்லாயிரம் நிகழ்வுகளை நாம் அறிவோம். அவற்றில் ஒன்று இதோ..
2006ம் ஆண்டு, இந்தியாவின் மீரட் நகரில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில், 6 பள்ளிக்குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த 18 வயது நிறைந்த Mohammed Javed என்ற இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். தீயினால் பற்றியெரிந்த பிளாஸ்டிக் தடுப்புக்களை கிழித்து, அக்குழந்தைகளை வெளியே கொணர்ந்த இளைஞர் Javed அவர்களின் உடல் தீக்காயங்களால் 70 விழுக்காடு சிதைந்து, அடுத்தநாள், மருத்துவமனையில் இறந்தார்.

அந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள், தன் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில், Javed அவர்கள், இந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே உந்துதலால், அவர், இத்தியாகச் செயலைச் செய்தார். இந்த இளைஞரைப் போல், பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில், தங்கள் உயிரை இழந்துள்ளனர். குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல உயிர்களைக் காத்த, இன்னும் காத்துவரும் நலப்பணியாளர்களை, இப்போது நன்றியோடு நினைவுகூர்கிறோம். 'நீங்கள் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்ற உறுதிமொழியுடன், இவர்கள் அனைவரையும், இயேசு, விண்ணரசில், மகிழ்வோடு வரவேற்றிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இத்தகைய தியாக உள்ளங்கள் விண்ணரசில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தங்கள் பணிகளை செய்யவில்லை என்பதை அறிவோம். அயலவருக்கு அன்பு செலுத்துவதன் வழியே விண்ணரசில் இடம் பெறுவதைவிட, விண்ணரசையே இவ்வுலகிற்கு கொணரமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் இவர்கள். பிறரன்பின் வழியே விண்ணரசை இவ்வுலகிற்குக் கொணரமுடியும் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு கதையுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவுசெய்வோம்.
கிராமத்தில் இரும்பு வேலைகள் செய்துவந்த கொல்லர் ஒருவர், மிகுந்த அன்போடும், திறமையோடும் மக்களுக்கு உதவிகள் செய்துவந்தார். ஒருநாள், அவரைச் சந்தித்த வானதூதர், "உங்களுக்காக இறைவன் விண்ணரசில் ஓர் இடம் ஒதுக்கிவைத்துள்ளார். நீங்கள் அங்கு செல்லும் நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.
கொல்லர், வானதூதரிடம், "இறைவன் எனக்காக வழங்கியுள்ள இந்த அழைப்புக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், இன்னும் சில நாள்களில் மழைக்காலம் வருகிறது. அப்போது, மக்கள் வயலை உழுது, விதைகள் விதைக்கவேண்டும். அவர்கள் தங்கள் கலப்பைகளைத் தயார் செய்வதற்கு, இந்தக் கிராமத்தில் என்னை அதிகம் நம்பி உள்ளனர். எனவே, நான் விண்ணரசில் நுழையும் நாளை, தயவுசெய்து, சிறிது காலம் தள்ளிவைக்கமுடியுமா?" என்று கேட்டார். வானதூதர், அவரை அன்புடன் பார்த்து, புன்னகைத்தவாறு விடைபெற்றார்.
கொல்லர் தன் வேலைகளையெல்லாம் முடித்த நேரத்தில், அவரது நண்பர் ஒருவர், நடவு நேரத்தில் நோயுற்றார். அவரது வயலில் மட்டும் நடவு இடம்பெறவில்லை. வானதூதர் மீண்டும் வந்தபோது, கொல்லர் அவரிடம், நாற்றுகள் நடப்படாமல் கிடந்த அந்த நிலத்தைச் சுட்டிக்காட்டி, "விண்ணக வாழ்வு இன்னும் சில நாள்கள் காத்திருக்க முடியுமா? என் நண்பருக்கு நான் உதவி செய்யவில்லையெனில், அவரது குடும்பம் மிகவும் துன்புறும்" என்று கூறினார். வானதூதர், மீண்டும் ஒரு புன்னகையுடன், விடைபெற்றுச் சென்றார்.
கொல்லரின் நண்பர் சுகமானதும், கிராமத்தில் ஒருவரின் வீட்டில் தீப்பிடித்தது, அடுத்தவரின் மனைவி திடீரென மரணமடைந்தார், மற்றொருவர்... மற்றொருவர்... என்று, கிராமத்தில் தேவைகள் தொடர்ந்து எழுந்தன.
ஒவ்வொருமுறையும் வானதூதர் வரும்போது, கொல்லர் யாரோ ஒருவருக்கு உதவிகள் செய்யவேண்டிய சூழல்கள் உருவாயின. ஆண்டுகள் கழிந்தன. கொல்லருக்கு அதிக வயதானது. எனவே, அவர் இறைவனிடம், "இறைவா, இப்போது உமது தூதரை அனுப்பும். அவரைக்காண ஆவலாய் இருக்கிறேன்" என்று வேண்டினார்.
அவர் வேண்டி முடிப்பதற்குள், வானதூதர் அவருக்கு முன் வந்து நின்றார். கொல்லர் அவரிடம், "இப்போது நீர் விரும்பினால், என்னை அழைத்துச்செல்லும். விண்ணரசில் வாழ நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். வானதூதர், அவரை அன்புடன் பார்த்து, "இத்தனை ஆண்டுகள் நீர் எங்கு வாழ்ந்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டார்.

உண்மை அன்பை, கலப்படமான, போலியான ஓர் உணர்ச்சியாகச் சொல்லித்தரும் இவ்வுலகில், புனித அன்னை தெரேசா, அவருக்கு அன்பு பாடங்களைச் சொல்லித்தந்த அந்த ஏழைப்பெண், கண்காட்சித் திடலில் குழந்தைகளை நெருப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தன்னையே தகனமாக்கிய இளையவர் Javed, கோவிட் பெருந்தொற்று காலத்தில் உயிர்பலி தந்த நலப்பணியாளர்கள் என்று... பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான, கலப்படமற்ற அன்பின் இலக்கணத்தை நாம் கற்றுக்கொள்ள இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

 

26 October, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 18 - அரசரின் வெற்றிப் பாடல் 4

The Lord lives – Ps. 18:46

நாம் அடையும் வேதனைகளும், துயரங்களும், கவிதைகளாக, வேறு பல கலைப்படைப்புக்களாக உருவாகின்றன என்பதையும், மன்னர் தாவீது, தன் வாழ்வில் அடைந்த வேதனைகளின் வெளிப்பாடாக, 18வது திருப்பாடலை, கவிதைநயத்துடன் உருவாக்கியுள்ளார் என்பதையும், சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம்.
பொதுவாகவே, வேதனைகள் நம்மை வதைக்கும்போது, கடவுளைப்பற்றிய எண்ணங்கள் எழும். இந்த எண்ணங்கள், பல வேளைகளில், 'கடவுள் எங்கே?' என்ற கேள்வியாகவோ, 'கடவுள் இல்லை' என்ற அறிக்கையாகவோ உருவாக வாய்ப்புண்டு. இருப்பினும், பல வேளைகளில், வேதனைகள், கடவுளின் அருகே நம்மை இன்னும் அதிகமாக அழைத்துச்செல்லக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

1968ம் ஆண்டு. அமெரிக்க ஐக்கிய நாட்டின், கொலொராடோ (Colorado) என்ற நகரில், ஓர் அரங்கம், விளையாட்டு வீரகளால் நிரம்பிவழிந்தது. அரங்கத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரு பெரியத் திரையில் திரைப்படம் ஒன்று ஆரம்பமானது. கழி கொண்டு உயரம் தாண்டும் Pole Vault என்றழைக்கப்படும் போட்டியில், இளைஞர் ஒருவர், உலகச் சாதனை செய்ததை, அந்தத் திரைப்படம் காட்டியது. திரைப்படம் முடிந்ததும், அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் அடங்கியதும், அரங்கம் மீண்டும் இருளில் மூழ்கியது. இம்முறை, மேடையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியின் மீது, ஒளிவட்டம் விழுந்தது. மேடையின் ஓர் ஓரத்திலிருந்து ஒரு விளையாட்டு வீரர், தன் இரு கரங்களில் பெரியதொரு துணி பொம்மை போன்ற ஓர் உருவத்தைச் சுமந்துவந்தார். அந்தப் பொம்மை போன்ற உருவத்தை, மேடையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரவைத்து, சுற்றிலும் தலையணைகளை வைத்து முட்டுக்கொடுத்து, ஒரு புறமாய்ச் சாய்ந்திருந்தத் தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு, மேடையை விட்டு வெளியேறினார்.

ஒரு சில நிமிடங்களுக்கு முன், திரைப்படத்தில், உலகச்சாதனை நிகழ்த்திய Pole Vault உலகச் சாம்பியன் Brian Sternberg என்ற அந்த இளைஞர்தான், இப்போது, கழுத்துக்குக்கீழ் எல்லா உணர்வுகளையும், செயல்களையும் இழந்தவராய், ஒரு துணி பொம்மைபோல் அந்த நாற்காலியில் வைக்கப்பட்டார். ஆழ்ந்த அமைதி அரங்கத்தில் நிலவியது. மிகவும் சன்னமானக் குரலில் Brian அவர்கள், சிரமப்பட்டு பேச ஆரம்பித்தார்.
என்னருமை நண்பர்களே, விளையாட்டு வீரர்களே, ஐந்தாண்டுகளுக்கு முன் வரை உங்களில் ஒருவனாக நான் இருந்தேன். புகழின் உச்சியில் இருந்தேன். இன்று, இதோ இந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு நடந்தது, உங்கள் யாருக்கும், இந்த உலகில் எந்த மனிதருக்கும் நடக்கக்கூடாதென்று தினமும் நான் இறைவனை வேண்டுகிறேன். சராசரி மனிதர்கள் செய்யக்கூடிய செயல்கள் எதையும் செய்யமுடியாமல், நான் தினமும் அனுபவிக்கும் அவமானத்தை, சித்ரவதையை நீங்கள் யாரும் அனுபவிக்கக்கூடாதென வேண்டுகிறேன். எனக்கு நடந்தது, உங்களில் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதே, என் செபம், என் விருப்பம், என் நம்பிக்கை... ஆனால்...Brian அவர்கள், பேசுவதை கொஞ்சம் நிறுத்தினார். அரங்கமே ஆழ்ந்த அமைதியில் அவர் சொல்லப்போவதை இன்னும் உன்னிப்பாகக் கேட்டது. ஆனால், இந்த வழியாகத் தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும் என்று சொல்லி முடித்தார்.
Brian அவர்கள், சொன்ன அனைத்து வார்த்தைகளும், முக்கியமாக, அவர் சொன்ன அந்த இறுதி வார்த்தைகள், அனைவர் மனதிலும் ஆழமாய்ப் பதிந்தன. "இந்த வழியாகத்தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்."

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மாணவனாய் இருந்த Brian Sternberg அவர்கள்,  pole vault போட்டியில், ஈடு இணையற்ற வீரராய் இருந்தார். 1963ம் ஆண்டு மே மாதம், 20 வயது நிரம்பிய Brian அவர்கள், பல்கலை கழக மாணவராய் இருந்தபோதே, pole vaultல் உலகச்சாதனை படைத்தார். அதே ஆண்டு, Moscowவில் நடைபெறவிருந்த உலகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்க, ஜூலை 6ம் தேதி, மற்ற வீரர்களுடன், வாஷிங்டனைவிட்டு, கிளம்ப தயாராக இருந்தார் Brian. ஜூலை 3ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கீழே விழுந்து, தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், கழுத்துக்குக்கீழ், உடலெல்லாம் உணர்விழந்து, அடுத்த 50 ஆண்டுகள், சக்கர நாற்காலியில் வாழ்வைக் கழித்து, 2013ம் ஆண்டு மே, 23ம் தேதி, இறையடி சேர்ந்தார்.
20 வயதில் Brian அவர்கள், pole vaultல் உலகச்சாதனை படைத்தபோது, மிகுந்த கர்வத்துடன், யாருடனும் சமமாகப் பழகாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தான், தனது சாதனைகள் என்று தன்னையே மையப்படுத்தி வாழ்ந்து வந்த Brian அவர்கள், அந்த விபத்திற்குப் பின், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இறைவன் தன் வாழ்வின் மையமானார் என்று பல்லாயிரம் இளையோரிடம் கூறி, அவர்களது வாழ்வின் மையத்திற்கு இறைவனைக் கொண்டு வந்துள்ளார்.

Brian அவர்கள் அடைந்த வேதனைகள், அவரை இறைவனிடம் நெருங்கிவரச் செய்ததைப்போல, மன்னர் தாவீது அடைந்த துன்பங்கள், அவரை, எவ்வாறு இறைவனிடம் இன்னும் நெருங்கிவரச் செய்தன என்பதை, 18வது திருப்பாடல் பறைசாற்றுகிறது. மன்னர் தாவீது, ஆண்டவரை நெருங்கி வந்துள்ளதை உணர்த்த, 18வது திருப்பாடலில், ஆண்டவருடன் நேரடியான உரையாடலை நடத்துகிறார். இப்பாடலின் முதல் வரியில், "என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கிறேன்" என்று ஆண்டவரிடம் நேரடியாகப் பேசும் தாவீது, தொடர்ந்துவரும் வரிகளில், இந்த உரையாடல் வடிவத்தை விட்டுவிட்டு, இறைவனைப்பற்றிய கூற்றுகளை வெளியிடும் ஓர் அறிக்கை வடிவத்தை  பயன்படுத்தியுள்ளார். 2ம் இறைவாக்கியத்திலிருந்து, 24ம் இறைவாக்கியம் முடிய உள்ள 23 இறைவாக்கியங்களில், தனக்கு நேர்ந்த துன்பங்களைப்பற்றியும், அவ்வேளைகளில், ஆண்டவர் தனக்கு என்னென்ன செய்துள்ளார், அவரது இயல்பு எத்தகையது என்பனவற்றையும் ஓர் அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார். மீண்டும், 25ம் இறைவாக்கியத்தில், "ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும், மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்" என்று இறைவனை நோக்கி பேச ஆரம்பிக்கிறார் தாவீது. தொடர்ந்துவரும் 25 இறைவாக்கியங்களில், தாவீது, உரையாடல் வடிவத்தையும், அறிக்கை வடிவத்தையும், மாற்றி, மாற்றி, பயன்படுத்தியுள்ளார்.

அவர் என்று ஆண்டவரைப்பற்றி பேசும் தாவீது,நீர் என்று ஆண்டவரிடம் பேசுவது, அழகான மாற்றம், நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் ஒரு மாற்றம். 'அவர்' என்ற வர்ணனை, ஆண்டவரைப்பற்றிப் பேசுவது. 'நீர்' என்பது, ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, அவரோடு பேசுவது.

மற்றவர்களோடு நாம் கொள்ளும் உறவில், 'நான்-தாங்கள்' (I–Thou) என்ற உயர்ந்த உறவும், 'நான்-அது' (I–It) என்ற தாழ்வான உறவும் வெளிப்படும் என்பதைச் சொன்னவர், Martin Buber என்ற மெய்யியலாளர். இதே அறிஞர், ஆண்டவரைப்பற்றி பேசுவது, ஆண்டவரை அனுபவிப்பது என்ற இரு நிலைகளைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஆண்டவரைப்பற்றி பேசுவதை, அவர், இறையியல் என்றும், ஆண்டவரை அனுபவிப்பதை, மதஉணர்வு என்றும் கூறுகிறார்.

இந்த வேறுபாட்டைக் காட்ட அவர் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு, நமது இயல்பு வாழ்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிக்குச் செல்கிறோம். அந்த உணவகத்தில் இருக்கும் உணவு வகைகளின் பட்டியல், நமது கையில், 'மெனு' (Menu) என்ற வடிவத்தில் தரப்படுகிறது. என்னதான் அழகானப் படங்களுடன், அங்குள்ள உணவு வகைகளை 'மெனு' விவரித்தாலும், அது, ஒருவேளை, நம் கண்ணுக்கு விருந்தாகுமே தவிர, நாவுக்கு விருந்தாகாது, 'மெனு'வை நம்மால் உண்ணமுடியாது. அந்தப் பட்டியலில் உள்ள உணவுவகைகளை உண்ணும்போதுதான் நமது பசி அடங்கும்.
ஒரு சில நட்சத்திர உணவு விடுதிகளில் அந்த 'மெனு'வைப் பார்த்ததும், முக்கியமாக அதில் குறிக்கப்பட்டுள்ள விலைகளைக் கண்டதும், பசியெல்லாம் பயந்து ஒளிந்துகொண்ட அனுபவங்களும் நம்மில் பலருக்கு இருக்கும். 'மெனு'வை வாசிப்பதற்கும் அதிலுள்ள உணவை உண்பதற்கும் உள்ள வேறுபாடு பெரிது. அதேபோல், இறைவனைப்பற்றி பேசுவதற்கும், அவரைப்பற்றிய புத்தகங்களை வாசிப்பதற்கும், இறைவனை வாழ்வில் அனுபவிப்பதற்கும், வேறுபாடுகள் அதிகம் உண்டு.

கடவுளைப்பற்றி 'அவர்', 'இவர்' என்று பேசும்போது அது இறையியல் ஆகிறது.  கடவுளிடம் 'நீர்' என்று மரியாதை கலந்த பாசத்தோடும், வேறு சில சமயங்களில் 'நீ' என்று நெருங்கிய உறவோடும், உரிமையோடும் பேசும்போது, அது செபமாகிறது. இறைவனை உரிமையோடு, ஆழ்ந்த உறவோடு 'நீ' என்று அழைத்து எழுதப்பட்டுள்ள பக்தி இலக்கியங்கள், தமிழ் மொழியில் உண்டு என்பது, நாம் அனைவரும் பெருமை கொள்ளும் ஓர் அம்சம்.

ஆண்டவரோடு நேரடியாக உரையாடும் பகுதிகளைக் கொண்ட ஒரு செபமாகவும், ஆண்டவரின் பண்புகளையும், அவரது உதவிகளையும் தொகுத்துரைக்கும் நன்றி அறிக்கையாகவும் விளங்கும் 18வது திருப்பாடலின் பல வரிகளை மீண்டும், மீண்டும் அசைபோடுவது, பயனுள்ள ஒரு முயற்சியாக அமையும். இம்முயற்சிக்கு உதவியாக, இத்திருப்பாடலின் ஒருசில வரிகளில் பதிவாகியுள்ள அறிக்கைகளையும், செபங்களையும நினைவுகூர்ந்து, 18வது திருப்பாடலில் நாம் மேற்கொண்ட தேடலை நிறைவுசெய்வோம்:
திருப்பாடல் 18: 1-2, 28-30, 46
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.
இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!

 

22 October, 2021

“Let me see again” “நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்”


30th Sunday in Ordinary Time – World Mission Day

Every year, the penultimate Sunday of October is celebrated as the World Mission Day. October 24, this Sunday, we celebrate ‘the 95th World Mission Day’. For this Sunday, we are given the Gospel passage (Mark 10:46-52) in which Jesus gives sight to a person named Bartimaeus. We can think of this coincidence as a God given invitation.

In this Gospel passage, the conversation between Jesus and Bartimaeus is the starting point of our reflection. When Jesus asked, What do you want me to do for you?” Bartimaeus replied, “Rabbi, let me see again.” In some versions, the words of Bartimaeus are simply recorded as, "Master, I want to see." But the request “let me see again” gives us an opportunity to reflect deeper. The phrase ‘see again’ implies that Bartimaeus was born with eye sight and lost it suddenly, or, gradually. Hence, he said, “Rabbi, let me see again.”
From this point of view, we can see Bartimaeus as our representative. Many of us, as children, may have seen the world and people around us with the right perspective, but, as we grew up, we may have lost, or, made to lose this perspective gradually and become blind to many simple, wonderful truths. Today, as we read Jesus ‘restoring’ the sight of Bartimaeus, we pray that Jesus ‘restores’ our original way of seeing the world and people without any ‘intentional blindness’.

Reading the miracle of Jesus restoring the sight of Bartimaeus, on the World Mission Day, gives us an opportunity to ‘get a proper perspective’ about the concepts of ‘Mission’, and ‘Missionaries’. A news item which appeared last week, helps us to reflect on these concepts.
The very title of this news item draws our attention first:
American missionaries reported abducted in Haiti – is the headline in CNA (Catholic News Agency). 
17 American and Canadian missionaries kidnapped by gang – is the headline in CNN

The term ‘missionaries’ normally brings to mind Catholic priests and religious, as well as pastors and preachers of different Christian sects. When we read this news item, we find out that the kidnapped ‘missionaries’ include six women, six men, and five children. Although the media has labelled all the 17 of them as ‘missionaries’, for the sake of convenience in reporting, it helps us to understand that every one of us in the world – children and adults, men and women – is ‘missioned’, namely, ‘sent’ and hence each one of us is a ‘missionary’. This is the first proper ‘perspective’ we need to develop.

The second ‘perspective’ comes from the work these 17 ‘missionaries’ were engaged in. Usually ‘missionary’ work is associated with ‘preaching’ and ‘converting’. The present political situation in India is waging a war against Christian ‘missionaries’, saying that they are converting people. This news item from Haiti gives us a broader perspective on what missionaries do.
Here is a statement from Christian Aid Ministries: “This group of workers has been committed to minister throughout poverty-stricken Haiti… Before the kidnapping, their work throughout Haiti included supporting thousands of needy school children, distributing Bibles and Christian literature, supplying medicines for numerous clinics, teaching Haitian pastors, and providing food for the elderly and vulnerable. In recent months, they were actively involved in coordinating a rebuilding project for those who lost their homes in the August 2021 earthquake. When kidnapped, the group was returning from a visit to an orphanage that receives support from Christian Aid Ministries.”
Although ‘distributing Bibles and Christian literature’ is mentioned in this list of ministries undertaken by this group, the other items in the list talk about the humane services rendered by this group. This gives us a total picture of what ‘missionary work’ entails.

The gang responsible for the kidnapping of these 17 missionaries in Haiti is demanding a $17 million ransom for their safe release. The ‘400 Mawozo’ gang responsible for this kidnapping is the same criminal gang behind the kidnapping of Catholic priests and religious in April, 2021. Those Catholic priests and religious were released after a few weeks. It is not clear whether any ransom was paid for their release. As we begin our reflection on ‘Mission Sunday’, we pray that these 17 American missionaries are also released without any harm.

The Gospel passage given on this ‘Mission Sunday’, points to two directions in which our reflections can proceed. They are: Calling by name” and “Having proper perspective”. These two ideas are inter-linked. Calling by name gives the basic respect due to a person. But, many a time, this basic respect is not given, because of our refusal to have proper perspective – our refusal to see!

All the three synoptic gospels record the event of Jesus curing a blind person as the final miracle before the Passion. It looks as if Jesus was making a final appeal to those around him that they may see better! Only in Mark, the visually challenged person is given an identity – Bartimaeus, the son of Timaeus. Usually, in the gospel miracles of curing, the patients are mentioned by terms like the leprosy patient, the one possessed, the paralytic, the deaf and mute etc. This is the only miracle where the recipient, a visually challenged beggar, is given a proper name. (This reminds us of the only parable where Jesus mentions one of the characters by name – Lazarus, once again, a beggar! – Luke 16:19-31) This gives us an opportunity to reflect on the concept of ‘being called by name’. By calling someone by name, that person who is usually looked upon as a thing, a furniture… blossoms into a PERSON!

All of us are born into this world as a mere number – the 304th child in the hospital, or the fifth child in the family etc. The name given to us changes us from a number to a unique person. Our name is an identity we carry life-long. This identity is precious, provided our names are cherished by people around us. But for many of us, this identity gets twisted, tarnished, broken, shattered… Let us reflect on the concept of ‘calling by name’ from two sides.

First, the bright side: In the medical profession, the person who becomes a doctor, is often called by the title ‘Doctor’ than by the name. The same goes for Teacher, Professor, Police Inspector etc… These professional titles almost replace the names of the individual. Such practices are followed in religious circles too. The titles - Father, Brother, Sister, My Lord, Your Grace, Your Eminence, Your Holiness… I guess the identity of the profession is so respectful that these persons do not mind losing the identity they acquired at birth – the identity of their own names.
Now, the darker side: How do we call those who do the so called ‘menial services’ like sweeping the streets, mending shoes, cleaning vessels in our houses? Are they called by their ‘profession’? Do we consider these works as ‘profession’ at all? Do we call these individuals by their names? Do we take the effort to know the names of these persons? Hardly… For most of us those who are involved in these hard labours simply belong to the group of “Hey, you”.

In every institution that I served or visited, I made it a point to learn the names of those who were doing services like - the sweeper, the gardener, the peon - and called them by name. I have enjoyed the smile my effort brought to their faces. In the midst of an avalanche of ‘hey, you’ greetings, my attempt to call them by name, surely made a difference. There is a special power behind calling someone by name, especially those who serve us in different ways… Let us try it. We won’t regret this effort!

The second idea that we can derive from this gospel is “having a proper perspective”.
Bartimaeus could not see with his physical eyes. But he had a better perspective of Jesus – calling him by the special title: Jesus, son of David. This is an insight that Bartimaeus received even before receiving his bodily sight. He could see with the eyes of the heart… the eyes of faith. The lovely words of Helen Keller are enlightening: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” I am sure Helen Keller knew what she was talking about.

Let me remind you of two stories that talk about the power of seeing with the heart and having proper perspective:
Two men, both seriously ill, occupied the same hospital room. One man was allowed to sit up in his bed for an hour each afternoon to help drain the fluid from his lungs. His bed was next to the room's only window. The other man had to spend all his time flat on his back. The men talked for hours on end. Every afternoon when the man in the bed by the window could sit up, he would pass the time by describing to his roommate all the things he could see outside the window - a park with a lovely lake, ducks swimming and children playing etc. As the man by the window described all this in exquisite detail, the man on the other side of the room would close his eyes and imagine the picturesque scene.

Days passed. One morning, the nurse arrived to bring water for their baths only to find the lifeless body of the man by the window, who had died peacefully in his sleep. She was saddened and called the hospital attendants to take the body away. As soon as it seemed appropriate, the other man asked if he could be moved next to the window. The nurse was happy to make the switch. Slowly, painfully, he propped himself up on one elbow to take his first look at the real world outside. He strained to slowly turn to look out the window beside the bed. It faced a blank wall. He was thoroughly shocked. The nurse asked him why he looked so shocked. He recounted all that had happened in that room with his neighbour. What the nurse told him made him freeze in further shock. The nurse said that the man was blind and could not even see the wall. This visually challenged person could see beyond the wall… just to make life easier for his companion.

Here is another story connected with a window. Husband and wife move into a new house. The next day morning, the lady sipping her coffee, sees through her glass window at the backyard of the next house. She then calls her husband and tells him, “Oh, our neighbour doesn’t know how to wash clothes. See, how dirty they are.” This complaint goes on for three days. On the fourth day, the lady is surprised to see the washed clothes all sparkling clean. She called her husband and said: “Our neighbour must have heard my comments. Today she has done a good job of washing her clothes.” The husband said, “Honey, this morning I cleaned our window panes.”

Getting a proper perspective is a gift from God. Let us ask along with Bartimaeus, “My teacher, let me see again.”

“Rabbi, let me see again.”

பொதுக்காலம் 30ம் ஞாயிறு - உலக மறைபரப்புப்பணி நாள்

ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறை, World Mission Day, அதாவது, உலக மறைபரப்புப்பணி நாள் என்று சிறப்பிக்கிறோம். அக்டோபர் 24, இஞ்ஞாயிறன்று, 95வது உலக மறைப்பரப்புப்பணி நாளை சிறப்பிக்கும் வேளையில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கிய புதுமை, நற்செய்தியாக (மாற்கு 10: 46-52) நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒரு வாய்ப்பாக, ஓர் அழைப்பாக ஏற்று நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இந்த நற்செய்திப் பகுதியில், இயேசுவுக்கும், பார்வையற்ற பர்த்திமேயுவுக்கும் இடையே நிகழும் உரையாடல், நம் சிந்தனைகளைத் துவக்கி வைக்கின்றது. உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்கும் இயேசுவிடம்,  ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்று பதிலளிக்கிறார் பர்த்திமேயு. அவர், இயேசுவிடம், "நான் பார்வை பெறவேண்டும்" என்று சொல்லாமல், "நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்று சொல்வது, சிந்திக்கத் தகுந்த ஒரு விண்ணப்பம். அதாவது, பர்த்திமேயு அவர்கள், பிறவியிலேயே பார்வை இழந்தவர் அல்ல, மாறாக, ஏதோ ஒரு தருணத்தில், அல்லது, சிறிது, சிறிதாக தன் பார்வையை இழந்தவர் என்றும், அதனால், அவர் இயேசுவிடம், "நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்று விண்ணப்பித்தார் என்றும் நாம் ஊகிக்க முடியும்.

இந்தக் கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்தால், பர்த்திமேயு, நம் அனைவரின் பிரதிநிதியாக, இயேசுவின் முன் விண்ணப்பிக்கிறார் என்று எண்ணிப்பார்க்கலாம். நாமும், வாழ்வின் பல உண்மைகளை, குழந்தைப் பருவத்தில், இயல்பான கண்ணோட்டத்தில் கண்டு, பயனடைந்திருப்போம். ஆனால், வளர, வளர, அந்த உண்மைகளைக் காணும் நம் திறன் சிறிது சிறிதாக குறைந்து, அல்லது, குறைக்கப்பட்டு, அந்த உண்மைகளைக் காண்பதில் நாம் பார்வை இழந்திருக்கலாம். இன்று, இந்த திருவழிபாட்டில் (ஞாயிறு சிந்தனை நேரத்தில்) "நாம் மீண்டும் தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும்" என்ற வேண்டுதலை இறைவனிடம் எழுப்புவோம்.

உலக மறைபரப்புப்பணி நாளன்று, இந்த நற்செய்தி நம்மை வந்தடைந்திருப்பதால், மறைபரப்புப்பணி என்றால் என்ன என்பது குறித்தும், மறைபரப்புப்பணியாளர் யார் என்பது குறித்தும், நாம் 'மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மறைபரப்புப்பணியைப் பற்றிய நம் பார்வையைத் தெளிவாக்க, அக்டோபர் 16, சனிக்கிழமை, ஹெயிட்டி நாட்டில் நடந்த ஆள் கடத்தல் நிகழ்வைக் குறித்த ஒரு செய்தி உதவியாக உள்ளது.

"17 அமெரிக்க மறைபரப்புப்பணியாளர்கள் ஹெயிட்டியில் கடத்தப்பட்டனர்" என்று இச்செய்திக்கு வழங்கப்பட்டத் தலைப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. இந்தத் தலைப்பை வாசித்ததும், கடத்தப்பட்ட 17 பேரும், மறைப்பரப்புப்பணியாற்றும் போதகர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.
பொதுவாகவே, 'மறைபரப்புப்பணி' என்றதும், அதை ஆற்றக்கூடியது, அருள்பணியாளர்கள், துறவியர், கிறிஸ்தவ சபைகளின் போதகர்கள் என்ற எண்ணமே மனதில் எழுகிறது. ஆனால், ஹெயிட்டியில் கடத்தப்பட்ட மறைபரப்புப்பணியாளர்களைப் பற்றிய விவரங்களை வாசிக்கும்போது, மறைபரப்புப்பணியை நாம் அனைவரும் ஆற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்ற தெளிவு கிடைக்கிறது.
கடத்திச் செல்லப்பட்டுள்ள 17 பேரில், 6 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள், மற்றும் 5 பேர் குழந்தைகள். கடத்தப்பட்ட அக்குழுவிலிருந்த ஆண், பெண், குழந்தை அனைவரையும் ஒட்டுமொத்தமாக 'மறைபரப்புப்பணியாளர்கள்' என்று செய்திகள் கூறியுள்ளன. வசதியைக் கருதி, ஊடகங்கள் இக்குழுவினருக்கு ஒரே அடையாளத்தை வழங்கியிருந்தாலும், ஆழமாக சிந்தித்தால், கிறிஸ்தவ மறையில், மறைபரப்புப்பணியாளரின் இலக்கணம் இதுதான் என்பதை புரிந்துகொள்ளலாம். உலகில் பிறந்த நாம் ஒவ்வொருவரும், நமக்கே உரிய வழிகளில், மறைபரப்புப்பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பது, நாம் பெறவேண்டிய முதல் பார்வைத் தெளிவு.

அடுத்து, இக்குழுவினர், ஹெயிட்டி நாட்டில் செய்துவந்த பணி என்ன என்பதை இச்செய்தியில் வாசிக்கும்போது, மறைபரப்புப்பணியைப்பற்றி இன்னும் தெளிவான பார்வையை நாம் பெறுகிறோம்.
மறைபரப்புதல் என்றதும், ஆலயங்களிலும், மேடைகளிலும் நின்று பிரசங்கம் செய்து, அதன் பயனாக, மக்களை மனம் மாற்றுவதை நாம் எண்ணிப்பார்க்கக் கூடும். இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், மறைபரப்புப்பணியை, பிரசங்கம் செய்தல், மக்களை மதமாற்றம் செய்தல் என்ற கோணத்திலிருந்து சிந்திப்பதால், பிரச்சனைகள் எழுகின்றன.

ஹெயிட்டி நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட 17 மறைப்பரப்புப்பணியாளர்கள் செய்துவந்தது, பிரசங்கம் வைப்பது, மக்களை மதம் மாற்றுவது போன்ற பணிகள் அல்ல. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஹெயிட்டி நாட்டை நிலைகுலையச் செய்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டித்தருவது, அவர்களது நலவாழ்வைப் பராமரிப்பது, குழைந்தைகளுக்கு கல்வி புகட்டுவது என்ற பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் 16, சனிக்கிழமை, ஹெயிட்டியின் மிக ஏழ்மைப்பட்ட ஒரு பகுதியில், இக்குழுவினர் கட்டியிருந்த ஓர் அனாதை இல்லத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, இவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.

இவர்களைக் கடத்திச் சென்ற 400 Mawozo என்ற குழுவைச் சார்ந்தோர், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், கத்தோலிக்க அருள்பணியாளர்களையும், துறவியரையும் கடத்திச் சென்று, ஒரு சில வாரங்களுக்குப்  பின் விடுதலை செய்தனர். ஹெயிட்டி நாட்டில் கடத்தப்பட்டிருக்கும் 17 மறைபரப்புப்பணியாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி, மீண்டுவரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் ஞாயிறு சிந்தனையைத் தொடர்வோம்.

மறைபரப்புபணியாளரையும், மறைபரப்புப்பணியையும் குறித்து ஓரளவு தெளிவான பார்வை பெற்றுள்ள நாம், தொடர்ந்து, இந்த ஞாயிறன்று நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள, பார்வை பெறும் புதுமையைக் குறித்து சிந்திக்கும்போது, பெயர் சொல்லி அழைப்பது,  தெளிவான பார்வை பெறுவது என்ற இரு உண்மைகளை சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு இயேசு பார்வை தந்த புதுமை, இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மாற்கு மட்டும், பார்வை இழந்த பிச்சைக்காரருக்குப் பெயர், முகவரி எல்லாம் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் இயேசு ஆற்றிய புதுமைகளில், பிச்சைக்காரர் ஒருவருக்கு மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இயேசு கூறிய உவமைகளில் பிச்சையெடுத்துவந்த இலாசருக்கு மட்டுமே பெயர் தரப்பட்டுள்ளது (லூக்கா 16:19-31) கவனத்திற்குரியது.

மனிதராய் பிறக்கும் நம் ஒவ்வொருவருக்கும், பிறந்த  சில நாட்களில் கிடைக்கும் ஒரு முக்கிய அடையாளம், நமக்கு வழங்கப்படும் பெயர். இந்த ஓர் அடையாளத்தை மட்டும் நாம் வாழ்நாளெல்லாம் கொண்டிருக்கிறோம். நம்மை வந்தடையும் பிற அடையாளங்கள், வரும், போகும்... ஆனால், நமது பெயர், நமக்குக் கிடைக்கும் முதல் மரியாதை.  நம்முடன் என்றும் தங்கும் மரியாதை. அவரவருக்குரிய இந்த மரியாதையைத் தருவதில்தான் நமக்குள் எத்தனை வேதனை தரும் வேறுபாடுகள்! வேறு பல தேவையற்ற எண்ணங்களால், நமது மனக்கண்கள் பார்வை இழக்கும்போது, ஒருவருக்கு உரிய அடிப்படை மரியாதையையும் வழங்க நாம் மறுத்துவிடுகிறோம்.

பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள். ஒருவருக்குரிய உண்மையான மதிப்பை வழங்கும்வண்ணம், பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப்போகும் வண்ணம் பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் இருள் சூழ்ந்த பக்கம்.

ஒரு சிலருக்கு, அவர்கள் செய்யும் தொழில், அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில், உயர்வான தொழில் என்று இவ்வுலகம் கூறினால், அந்தத் தொழிலுக்குரிய அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவத் தொழிலில் இருப்பவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது கூடுதலான மரியாதை. இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை, teacher, professor, inspector என்றெல்லாம் அழைக்கும்போது சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும் தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதைவிட மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். இவைபோன்ற அடைமொழிகள், ஒருவரை, தலைநிமிர்ந்து நிற்கவைக்கும். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.

இனி சிந்திக்க இருப்பது, இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவை சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? இவர்கள் சமுதாயத்திற்காக ஆற்றும் மிக முக்கியமான தொழிலுக்கு மதிப்பளிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளாததால், இவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அடைமொழிகளைப் பயன்படுத்தும்போது அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எல்லாருமே, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களுக்கு ஆளானவர்கள். இந்திய சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் மற்றொரு சாபம், சாதி முறைகள். இதன் அடிப்படையில், ஒரு சிலர், அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். பெயர்சொல்லி அழைப்பதன் இருள் சூழ்ந்த பக்கங்கள் இவை... நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.

நான் பணி செய்து வந்த ஓர் அலுவலகத்தில், எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஓர் இளைஞர், என் நினைவுக்கு வருகிறார். மற்ற எல்லாரும், அவரைக் கூப்பிட்ட ஒரே பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு "சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை. என்னை, தனிப்பட்ட விதத்தில் கவனித்துக்கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக, நான் அவரை, பெயர் சொல்லி அழைக்கவில்லை. அவரை "சங்கர்" என்று அழைக்கும்போது, அவர் தோள்களை உயர்த்தி சிரித்தது, எனக்கு முக்கியமாகப் பட்டது.
நான் தங்கியிருந்த துறவு இல்லங்களில் எளிய பணிகள் செய்யும் எல்லாருடைய பெயரையும் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களை, பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்து போய்விடவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை, இரசித்துப் பார்த்திருக்கிறேன். வாழ்வின் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், முக்கியமாக, சந்தர்ப்பச் சூழல்களால் வாய்ப்புக்களும், வசதிகளும் இன்றி எளிய பணிகள் செய்பவரை, பெயர்சொல்லி அழைக்கும்போது, மனதளவில் பல புதுமைகள் நடக்கும். முயன்று பார்ப்போம்.

பார்வை பெறவேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடலளவில் பார்வை பெற விழைந்தார், பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில், அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார். இயேசுவை அகக்கண்களால் "தாவீதின் மகன்" என்று அவர் ஏற்கனவே கண்டிருந்தார். விவிலியத்தில், இந்தப் பட்டத்தை, இயேசுவுக்கு, முதன்முதலில் தந்தது, உடலளவில் கண் பார்வையற்று, ஆனால் உள்ளத்தளவில் தெளிவானப் பார்வை பெற்றிருந்த பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.
கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் இருந்த ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய அழகான சொற்கள்: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” "உலகில் மிக அழகானவற்றை, கண்ணால் காணமுடியாது, தொட்டும் உணரமுடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்."

அகக்கண் கொண்டு பார்க்கும் விந்தையைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. மருத்துவமனை ஒன்றில், இருவர், ஒரே அறையில் தங்கியிருந்தனர். இருவரும் ஏறக்குறைய படுத்த படுக்கையாய் இருந்த நோயாளிகள். இவ்விருவரில், ஒருவருடைய படுக்கை, சன்னலுக்கு அருகில் இருந்தது. அவர் ஒவ்வொரு நாள் மதியமும், மிகவும் சிரமப்பட்டு, தன் படுக்கையில் எழுந்து ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பார். அந்த ஒரு மணி நேரமும், சன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும் பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று, அவர் தரும் வர்ணனை, ஒரு மணி நேரம் நடக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, அந்த ஒரு மணி நேரம், போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த அவர், அந்த ஒரு மணி நேரம், கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக வெளி உலகத்தைப் பார்த்தார்.
இது, பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, சன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை. முந்திய இரவு தூக்கத்திலேயே அமைதியாக அவர் இறந்துபோனார். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, தன் நல்ல நண்பரைப் பிரிந்ததால், ஆழ்ந்த வருத்தம். அத்துடன், அவரது கண்கள் வழியே, அவர் தந்த வர்ணனை வழியே, தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம், இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று இன்னும் அதிக வருத்தம்.
இரு நாட்கள் சென்றபின், அந்த சன்னலருகே இருந்த படுக்கைக்கு, தன்னை மாற்றச்சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார். மதிய நேரம், நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்" என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு, எழுந்து அமர்ந்தார். சன்னல் வழியே வெளிஉலகைப் பார்க்க முயன்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம், ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை.. ஒன்றும் இல்லை. அவருடைய அதிர்ச்சியைப் பார்த்த நர்ஸ், அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர், எப்படி, இந்த படுக்கையில் இருந்தவர், சன்னல் வழியே தான் பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டபின், அந்த நர்ஸ் சொன்ன செய்தி, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை, அந்தப் படுக்கையில் இருந்தவர், அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது, என்று நர்ஸ் சொன்னது, அவரை அதிர்ச்சியில் உறையச்செய்தது. கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும், ஒரு மணி நேரமாகிலும் ஓர் அழகான உலகைப் பார்க்க, கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெறவேண்டும். சரியான பார்வை பெறவேண்டும். சன்னலை மையப்படுத்தி சொல்லப்படும் மற்றொரு கதை இந்த உண்மையை விளக்குகிறது. கணவனும், மனைவியும் ஒரு வீட்டில் புதிதாக குடியேறினர். தினமும் அந்தப் பெண்மணி, காலையில் காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே, அடுத்த வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காய வைப்பதைப் பார்த்து, "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.." என்று கணவனிடம் முறையிட்டார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் வழக்கம் போல் சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு" என்று வியந்து பாராட்டினார்.
கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுல ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம சன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னாராம்.

பார்வை பெறவேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெறவேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், கிறிஸ்தவ மறையின் ஆணிவேரான அன்பை, நம் வாழ்வின் வழியே பறைசாற்றும் மறைபரப்புப்பணியாளர்களாய் வாழவும், இறையருளை இறைஞ்சுவோம்.