26 February, 2012

Lenten Season ‘springs’ up வசந்தமான தவக்காலம்



Christ in the Desert
Ivan Kramskoi - 1872


We have begun the Lenten Season a few days back. When I was browsing through the internet, I came across an interesting information that the word ‘Lent’ comes from the Anglo Saxon word ‘Lencten’ (or ‘Lengten’ – which simply signifies the ‘lengthening’ of the daytime. This implies that winter is getting over…and Spring is at hand). The Lenten Season and the Spring Season… seemed like a good combination. Usually, when we think of the Season of Lent, the symbols of ash and sackcloth dominate our imagination. For a change, it might be better to think of the Lenten Season in terms of Spring.
Most of the European countries have experienced a severe winter this year. Winter is preceded by the fall season. Hence, during the past five to six months trees and plants are pretty barren, devoid of leaves. A cursory, quick look at plant life during these months would make one easily assume that these plants and trees are ‘as good as dead’. ‘As good as dead’ sounds like a contradiction. What is good about being dead? This is the whole mystery of the Lenten Season and the Paschal Season… Death is a doorway to life. Under the heavy cover of snow, life begins to germinate. Come Spring… life will be in full bloom. Lenten Season (Spring) is an invitation to believe that death is not the last word.
The legendary bird Phoenix is a good symbol for Lent since this bird rises anew from what is apparently dead and totally destroyed. Here is what Wikipedia says about this bird: A phoenix is a mythical bird... It has a 500 to 1,000 year life-cycle, near the end of which it builds itself a nest of twigs that then ignites; both nest and bird burn fiercely and are reduced to ashes, from which a new, young phoenix or phoenix egg arises, reborn anew to live again. The new phoenix is destined to live as long as its old self…
Life emerging out of fire and ashes… We are so accustomed to seeing fire as a source of destruction. We forget that fire can be life-infusing as in the case of the Phoenix.

The lovely assurance that death and destruction are not the last words comes to us in the First Reading. God promises a revival of the earth after the great deluge and also places the lovely symbol of the rainbow. Rainbow has been used as a symbol of hope across the world.
Genesis 9: 8-15
Then God said to Noah and to his sons with him, "Behold, I establish my covenant with you and your descendants after you, and with every living creature that is with you, the birds, the cattle, and every beast of the earth with you, as many as came out of the ark. I establish my covenant with you, that never again shall all flesh be cut off by the waters of a flood, and never again shall there be a flood to destroy the earth." And God said, "This is the sign of the covenant which I make between me and you and every living creature that is with you, for all future generations: I set my bow in the cloud, and it shall be a sign of the covenant between me and the earth. When I bring clouds over the earth and the bow is seen in the clouds, I will remember my covenant which is between me and you and every living creature of all flesh; and the waters shall never again become a flood to destroy all flesh.

Every year, on the First Sunday of Lent, the Church invites us to reflect on temptation. The word ‘temptation’ usually brings in a sense of fear in most of us. It makes us feel uncomfortable. Yet it is an essential part of human life. No one escapes temptation… not even Jesus. Today’s Gospel talks about this. How do we see temptation and the tempter… call him / her Satan, devil, the evil one, whatever?
A few years back, I was discussing this topic with a priest friend of mine. The moment he saw the theme temptation, he broke into an old Tamil film song that talked of the hero being crushed by trials. (Sothanai mel sothanai podhumadaa saami) Lord, enough of this wave after wave of temptations and trials, he cries! One can easily feel the sense of desperation that runs through that song.
For people who believe strongly in fate, temptations are seen as a predestined plan to attack us for no reason at all. Temptations are like flash floods that carry us alive. When we begin to imagine temptations in such a way, we seem to give undue power to them. We know that temptations are powerful. But, are we simply puppets in the hands of the tempter? To attribute so much power to temptations and the evil forces leave us with a lot of negativity about life. It also ignores so much of positive capabilities in us.

Our generation suffers from what I would call ‘the negative-syndrome’. Part of this ‘negative syndrome’ comes from our media which revels in highlighting disasters, destruction, scandals and more tragedies. Why do the media indulge in these? Nothing sells like tragedy and disaster. That is why.
We know that the world is a mixed bag of the good and the bad. For every disaster that happens, there is always a blessing that happens too. The earthquake that devastated Haiti, and the earthquake and the tsunami that destroyed parts of Japan ‘made good business’ for the media. There were many distressing facts and figures. There were equally, if not more, uplifting events. The media was more interested in reporting the negatives more than the positives. Since we hear and see such negative news day after day, we tend to give up on the world very quickly. This is the most dangerous temptation our present generation faces, namely, the temptation of believing that there are far too many evil forces around us and that we can do nothing about them.

We can do something about them. The least that we can do is not to entertain them. Here is the story of a young person who entertained temptation that came in the form of a snake… a repetition of the story of Genesis!
Many years ago, Indian braves would go away in solitude to prepare for manhood. One hiked into a beautiful valley, green with trees, bright with flowers. There, as he looked up at the surrounding mountains, he noticed one rugged peak, capped with dazzling snow. “I will test myself against that mountain,” he thought. He put on his buffalo hide shirt, threw his blanket over his shoulders and set off to climb the pinnacle. When he reached the top, he stood on the rim of the world. He could see forever, and his heart swelled with pride. Then he heard a rustle at his feet. Looking down, he saw a snake. Before he could move, the snake spoke.” I am about to die," said the snake. "It is too cold for me up here, and there is no food. Put me under your shirt and take me down to the valley" "No," said the youth. "I know your kind. You are a rattlesnake. If I pick you up, you will bite, and your bite will kill me." "Not so," said the snake. "I will treat you differently. If you do this for me, I will not harm you." The youth resisted awhile, but this was a very persuasive snake. At last the youth tucked it under his shirt and carried it down to the valley. There he laid it down gently. Suddenly the snake coiled, rattled and leaped, biting him on the leg. "But you promised," cried the youth. “You knew what I was when you picked me up,” said the snake as it slithered away. (Guideposts, July, 1988).

'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare). Jesus was tempted, but did not fall. The famous ‘Our Father’ has the petition: Lead us not into temptation. The translation of this petition in Tamil is closer to what Shakespeare is talking about. The Lord’s Prayer in Tamil says, “Do not make us fall in temptation.” ‘Being tempted’ happens to all of us; but ‘falling’ is our personal choice. Let us pray that the Lord does not allow us to fall in temptation but gives us enough backbone to stand firm.

To listen to this Tamil homily in Vatican Radio, click here:

தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் நாம் கடைபிடிக்கும் இந்த வழிபாட்டு காலத்தைப் பற்றிய நமது எண்ணங்களை இந்த ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் சிறிது ஆழப்படுத்த முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lenten என்ற வார்த்தை Lencten அல்லது, Lengten என்ற Anglo Saxon வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருள் வசந்தம். (குளிர் காலத்தில் இரவுநேரம் நீண்டு பகல்நேரம் குறைந்திருக்கும். பகல்நேரம் அதிகமாகும்போது, வசந்தம் நெருங்கி வருகிறதென்பதை உணர்த்தும். பகல்நேரம் நீள்கிறது, அதாவது, வசந்தம் வருகிறது என்ற எண்ணத்தை சொல்வதற்கு, Lengten அல்லது Lencten என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.) தவக்காலத்தை ஒரு வசந்த காலமாக எண்ணிப் பார்ப்பது ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.
பொதுவாக, தவக்காலம் என்றதும் சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று சோகமான, துயரமான அடையாளங்கள் மனதை நிரப்பும். ஆனால், தவக்காலம் வசந்தத்தைக் கொண்டுவரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. வசந்தம்கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். மாற்றங்கள் என்றதும், முற்றிலும் அழிந்துபோன ஒன்று மீண்டும் உயிர்பெறுவதும் ஒரு மாற்றம்தானே. இந்தக் கண்ணோட்டத்தில், சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைத் தவக்காலத்தின் ஓர் அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.

தவக்காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் என்ன தொடர்பு? Phoenix பறவை தவக்காலத்திற்கு எப்படி ஓர் அடையாளமாகும்? சிந்திக்க வேண்டிய கேள்விகள். உலகின் பல நாடுகளில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர்காலம். இந்தக் குளிர்காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, இந்த இரு பருவங்களிலும் மரங்கள், செடிகள் எல்லாம் தங்கள் இலைகளை இழந்து பனியில் உறைந்து போயிருக்கும்.  பனியில் உறைந்துபோன தாவர உயிரினங்களைப் பார்க்கும்போது, இனி இவை பிழைக்கப் போவதில்லை என்ற எண்ணம்தான் மேலோங்கும். ஆனால், பனிக்குள் உறைந்து போன உயிர்கள் சிறுதுளிர்களாய், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனி விலகியதும், அந்தத் துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்து வரும். அதுதான் Lenten Season எனப்படும் வசந்த காலம்.
Phoenix பறவையும் அப்படியே. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இந்தப் பறவை, தன் வாழ்வு முடியப்போகிறது என்று உணரும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும் போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளி வரும். புராணங்களில் சொல்லப்படும் ஒரு தகவல் இது. இந்தப் புராணப்பறவை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கி விட்டு சிந்தித்தால், கற்பனையில் நாம் காணும் இக்காட்சி, ஓர் அடையாளமாக, பாடமாக அமையும். நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை. நெருப்பை, அழிக்கும் கருவியாகவே அதிகம் பார்த்து பழகிவிட்ட நமக்கு, அழிவுக்குள் நிகழும் அற்புதங்களை மறந்து போக வாய்ப்புண்டு.

அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் ஓர் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் தொடக்க நூலில் இவ்வாறு ஒலிக்கின்றன:
தொடக்கநூல் 9: 8-15
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தைப் புத்துயிர் தரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் இன்றைய நற்செய்தியின் மூலம் நமக்குத் தரப்படும் நல்ல பாடங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரையைப் பற்றி இன்னொரு குருவோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் ஒரு பழைய  திரைப்பட பாடலைப் பாட ஆரம்பித்தார். "சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி." என்ற பாடல். தீர்க்க முடியாத பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஒரு வீட்டுத் தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
சில திரைப்படப் பாடல்களை நாம் அடிக்கடி கேட்பதால், அந்தப் பாடல்கள் கூறும் சொற்கள் நம் நினைவுகளில் ஆழமாய் பதிந்துவிடும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள், இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். சோகத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட இந்தப் பாடலைப் பாடும் போது, எதுவுமே செய்யமுடியாத ஓர் இயலாத்தன்மை மனதை ஆக்ரமிக்கும். நம்மை மீறிய ஒரு சக்தியில் நாம் மாட்டிக்கொண்டோம், எனவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணங்கள், உணர்வுகள் நம்மில் எழும்.

சோதனைகள் எப்படிப்பட்டவை என்பதை அறிந்திருந்தாலும், அவைகளுக்கு இடம் தரும் நம் போக்கை விளக்கும் ஒரு கதை இது. சிவப்பு இந்தியர் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் சமுதாயத்தில், ஓர் இளைஞன் வயதுக்கு வரும் வேளையில் அவர் சில நாட்கள் காட்டிலும் மலையிலும் தனியே தங்கி, தன்னையே ஒரு சக்திமிகுந்த வீரனாக மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தச் சமுதாயச் சடங்கில் ஈடுபட்டிருந்த ஓர் இளைஞன், ஒரு நாள் பனி படர்ந்திருந்த ஓர் உயர்ந்த மலையுச்சியைச் சென்றடைந்தார். உலகின் உச்சியை அடைந்து விட்டதைப் போன்ற வெற்றிப் பெருமிதத்துடன் அவர் அங்கு நின்றுகொண்டிருந்தபோது, காலடியில் ஏதோ ஊர்ந்ததைப் பார்த்தார். அது ஒரு கட்டுவிரியன் பாம்பு. அந்தப் பாம்பு இளைஞனிடம் பேசியது: "நான் இறக்கப் போகிறேன். நான் இந்தப் பனியில் இருந்தால், ஒன்றும் கிடைக்காது. எனவே, தயவுசெய்து என்னை உன் கம்பளிப் போர்வைக்குள் வைத்து கீழே எடுத்துச் சென்று, அங்கே என்னை விட்டுவிடு. உனக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என்றது. இளைஞன் பாம்பிடம், "உன் குணம் எனக்குத் தெரியும். நான் உன்னைக் கையில் எடுத்தால், நீ என்னைக் கடித்துக் கொன்று விடுவாய்." என்றார். பாம்பு அவரிடம், "கட்டாயம் இல்லை. உன்னிடம் நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன்." என்று கூறியது. இளைஞன் தயங்கியபோதிலும், கட்டுவிரியன் நயமாகப் பேசி, அவரைச் சம்மதிக்க வைத்தது.
இளைஞன் பாம்பை எடுத்து தன் கம்பளிப் போர்வைக்குள் வைத்துக் கொண்டு கீழே இறங்கினார். சமவெளியை அடைந்ததும், பாம்பை எடுத்து தரையில்விட அவர் முயன்றபோது, கட்டுவிரியன் திடீரென இளைஞனைக் கடித்தது. "என்னைக் கடிக்கப் போவதில்லை என்று உறுதி அளித்தாயே" என்று இளைஞன் கதறினார். பாம்பு அவரிடம், "மலை உச்சியில் என்னை நீ கையில் எடுக்கும்போதே, என் குணம் உனக்கு நன்றாகத் தெரிந்திருந்ததே!" என்று சொல்லிவிட்டு அதன் வழி சென்றது.
போதை, மது, பேராசை, பதவிவெறி என்று நம் வாழ்வைச் சற்றி வருபவை நச்சுப் பாம்புகள் என்று தெரிந்தும், அவற்றைத் தூக்கி, கடிபடுகிறோமே!

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.
நாம் வாழும் உலகில் நல்லவைகளும், ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், ஒரு சாபக்கேடாக, நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்துத் தொடர்புச்சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும் போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று சொல்லவைத்து விடுகின்றது.

இப்படி ஓர் இயலாத்தன்மை நமக்கு ஊட்டப்படும் போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை, ஒரு மாயை நம்மில் வளர்கிறது. இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். இயேசு சோதனைகளைச் சந்தித்தது, அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.
'Tis one thing to be tempted, another thing to fall' - William Shakespeare. சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு. ஷேக்ஸ்பியர் எழுதிய வரிகள் இவை. இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளைச் சந்திக்கும்போது, அந்த இறைமகன் சொல்லித்தந்த பாடங்களையும், அவர் சொல்லித்தந்த அந்த அற்புத செபத்தின் வரிகளையும் நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்."




19 February, 2012

Less Burden… More Health குறைவான சுமை... நிறைவான சுகம்


For the fourth week in succession we are reflecting on the healing miracles of Jesus. In this context we have been thinking of health and healing from different perspectives. Not four weeks, but even forty weeks will not be sufficient for us to grasp the meaning of health and healing that is so crucial to human life. Although this is so crucial, still most of us fail to enjoy good health due to so many other factors in our lives. Recently I received an email from my sister, where I saw a very lovely message from Dalai Lama. Here is the message:

Words of wisdom that can help us examine how each of us looks at our life and, especially, our health.

Today’s Gospel tells us of Jesus healing a paralytic person. Two weeks back, the miracle of the healing of the mother in law of Simon was followed by these words: And the whole city was gathered together about the door. (Mark 1: 33)
The opening lines of today’s Gospel are almost an echo of these words: And when he returned to Caper'na-um after some days, it was reported that he was at home. And many were gathered together, so that there was no longer room for them, not even about the door... (Mark 2: 1-2)
Most of those who ‘thronged’ around Jesus were the poor people who sought His teachings and His healing touch. Later in today’s reading we also hear that some of the scribes were sitting there… When Luke narrates this miracle, he mentions that there were the Pharisees and teachers of the law.
While the poor had come to Jesus to hear His message and get healed of their diseases, the Pharisees, scribes and teachers of the law had come to find fault with Him. These contrasting groups, mentioned in the context of healing, bring to mind a situation that has arisen in India in the field of medicines.

Most of us are aware of the free or low-cost medical care given in India. We can feel proud of this fact. Unfortunately, this medical care is being criticised or being blocked by some multi-national pharmaceutical companies who have come to India not to serve but to make profit. These companies remind me of the scribes and Pharisees who had come to Jesus to criticise and condemn His healing ministry and, if possible, block Him from doing good. Here is an extract from the email I have received two days back from a Social Network called the Avaaz.org about Novartis, one of these multi-national pharmaceutical companies:
India is a shining light in the global health community -- as the world’s largest supplier of affordable medicines, it has saved the lives of millions across the developing world who otherwise cannot afford sky-high Western prices for essential drugs. India’s patent law, which prevents big pharmaceuticals from keeping expensive patent deadlocks on life saving medicines, has made this possible. But for years, big pharmas have tried to overturn this vital law in hopes of unlocking a goldmine, at the expense of the world’s sick and poor.
Novartis has hired an army of lawyers to kill the patent law and win monopoly rights over an essential cancer drug. If Novartis wins, the price of the drug would increase 10-fold to a whopping Rs.1,28,000 per month! Even worse, it would clear the way for big companies to patent all sorts of essential drugs, jeopardizing the future of the Indian pharmaceutical industry and the lives of millions who rely on Indian medicines.
An Indian public outcry could force the company drop the lawsuit. And Swiss members are also piling on the pressure, targeting Novartis in its hometown. Let’s overwhelm the mastermind behind this immoral lawsuit by flooding Novartis India president Shahani with hundreds of thousands of messages now. When we hit 100,000 signers, we’ll make sure our action makes headlines across India and Switzerland in time for Novartis’ annual stockholders meeting next week:

Coming back to the miracle in today’s Gospel, we can easily see that the heroes of this miracle are the four friends who carried the paralysed person on the cot… They took all the risks to bring him in front of Jesus – even running the risk of dismantling the roof of the house. Why would these friends do this? Because, they loved their friend. For them, the man lying on the cot was not simply a burden to be carried; but a friend. They would go through hell to bring him to heaven. “Seeing their faith…” Jesus worked the miracle! They came carrying the paralytic. The paralytic went back carrying the cot… probably he and his friends threw away the cot on their way back. Hopefully, no more burdens for the rest of their lives!

A final thought on how we are fond of carrying burdens and imposing burdens on others… An old man was walking along the road in the hot sun, carrying a burden on his head. A truck passed that way. The truck driver took pity on the old man; stopped his vehicle and asked the old man to climb on the back of the truck. As they were going, the driver turned around to see how the old man was faring and to his utter shock, he found the old man standing in the truck, still carrying the load on his head. The driver told the old man to put down the load. The old man replied, “No, sir, already you are doing me a favour by taking me in the truck. Let me not add more burden to your truck with my load. I shall carry it myself.”
Some of us (Many of us?) seem to feel comfortable carrying our burdens for long… Unburdening requires humility. Let us pray that the Good Lord gives us this humility, so that we get healed of the many ‘unnecessary’ burdens.

இவ்வுலகத்தில் உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமாவிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில் நமது சிந்தனைகளை இன்று ஆரம்பித்து வைக்கிறது.
"இவ்வுலகில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனிதர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும் வாழ்வதில்லை.
இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள்." என்று தலாய்லாமா சொன்னார்.
வெகு ஆழமான வார்த்தைகள்... நமது ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பித்து வைக்க சிறந்த வார்த்தைகள்.

நலம் பற்றி நான்காவது வாரம்...  கடந்த மூன்று வாரங்களாக நமது ஞாயிறு நற்செய்தி இயேசுவின் நலமளிக்கும் புதுமைகள் மூன்றை நமக்குச் சொன்னது. இன்றும் மற்றொரு புதுமையைச் சொல்கிறது - முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமை.
இயேசு ஆற்றியப் புதுமைகளை அவருடைய இறை வல்லமை வெளிப்படும் அருங்குறிகள் என்ற கோணத்தில் பார்ப்பது நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு அந்தப் புதுமைகளை ஆற்றிய போது இருந்தச் சூழ்நிலை, அந்தப் புதுமைகளில் பங்கு பெற்றவர்கள் ஆகிய அம்சங்களையும் சிந்திப்பது பயனளிக்கும். இன்று அந்தக் கோணத்தில் நமது சிந்தனைகளை ஆரம்பிப்போம். இரு வாரங்களுக்கு முன் நாம் வாசித்த நற்செய்தியில், இயேசு சீமோனுடைய மாமியாரைக் குணமாக்கியபின், அங்கு நடந்ததை மாற்கு இவ்வாறு கூறினார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. (மாற்கு 1: 32-33)
இந்த வார்த்தைகளின் எதிரொலியாக இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள் ஒலிக்கின்றன.
சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. (மாற்கு 2: 1-2)
மாற்கு கூறும் இவ்விரு நிகழ்வுகளிலும் இயேசுவை நாடி கூட்டமாய் வந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அந்தக் கூட்டத்தில் ஒரு சில மறைநூல் அறிஞர்களும் இருந்தனர் என்று இந்த நற்செய்தியின் பிற்பகுதியில் வாசிக்கிறோம். இந்த மறைநூல் அறிஞர்கள் நலம் பெறுவதற்காகவோ, இயேசுவின் போதனைகளைக் கேட்பதற்காகவோ வரவில்லை. அவர்களது குறிக்கோள்... இயேசுவிடம் குறை காண்பது ஒன்றே. நலம் நாடிவந்த ஏழைகள், குறை தேடிவந்த அறிஞர்கள் என்ற இந்த இருவேறு வகைப்பட்டவர்களை நாம் சிந்திக்கும்போது, இந்தியாவில் தற்போது நிலவும் மருத்துவ உலகத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் பலகோடி ஏழை மக்கள் நாடிச்செல்லும் மருத்துவ உதவிகளைப் பற்றி என் மனம் எண்ணிப்பார்க்கிறது. ஆஸ்த்மா நோயினால் துன்புறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளன்று ஆந்திராவின் ஐதராபாத் நகரில் நடைபெறும் மீன் மருத்துவத்தைத் தேடிச் செல்வதுபற்றி நமக்குத் தெரியும். அதேபோல், எலும்பு முறிவுக்கு தமிழ்நாட்டில் புத்தூர் எனுமிடத்தில் கிடைக்கும் மருத்துவ உதவிகள் பற்றியும் நமக்குத் தெரியும். கை, கால் இழந்தோருக்குச் செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் புகழ்பெற்ற ஜெய்ப்பூர், வேலூரில் புகழ்பெற்ற CMC (Christian Medical College) மருத்துவமனை என்று பல இடங்கள் நம் மனக்கண் முன் விரிகின்றன.
மேலே குறிப்பிட்ட இந்த மருத்துவ உதவிகளுக்கு ஒரு பொதுவான அம்சம் உண்டு. இவை அனைத்துமே இலவசமாக, அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மருத்துவ வசதிகள். அமெரிக்கா, ஐரோப்பா, இன்னும் பல நாடுகளில் மருத்துவத்திற்கு ஆகும் செலவைவிட, ஆசியாவில், குறிப்பாக, இந்தியாவில் ஆகும் செலவு மிக மிகக் குறைவு. இதைக்குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். அதேநேரம், இயேசுவின் குணமளிக்கும் செயல்களைக் குறை கூறுவதற்கென்றே வந்திருந்த மறைநூல் அறிஞர்களைப் போல்செலவு குறைந்த இந்த மருத்துவ உலகின் உதவிகளை குறைகூற, அல்லது இவைகளைத் தடுக்க அண்மையக் காலங்களில் ஆசிய நாடுகளில் படையெடுத்திருக்கும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மருந்துகள் தயாரிப்பதைக் குறித்து, இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாய் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. இம்மாதம் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு  மீண்டும் விவாதிக்கப்பட உள்ளது. Novartis என்ற மருத்துவ நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு நமக்கு வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. இவர்கள் தொடுத்திருக்கும் வழக்கின் சாராம்சம் இதுதான். இந்திய மருத்துவ நிறுவனங்கள் தாயரிக்கும் குறைந்த விலை மருந்துகளை உச்சநீதி மன்றம் தடை செய்ய வேண்டும் என்பதே Novartisன் வாதம்.
வீடு தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூச்சலிடும் இந்த Novartis போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் என்ன?... எரியும் வீட்டிலிருந்து என்னென்ன பறிக்க முடியும் என்பது ஒன்றே.

Novartis Campaign Logo
 http://www.msfaccess.org/

முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமைக்கு மீண்டும் திரும்புவோம். இப்புதுமையில் நம் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஐந்துபேர்.... நான்கு பேர் நடந்து வந்தனர். ஒருவர் படுத்தபடியே வந்தார். இவர்கள்தாம் இன்றைய நிகழ்வின் நாயகர்கள். நடந்து வந்த நான்கு நண்பர்களும் ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தார்கள். பல ஆண்டுகளாய் செயல் இழந்து, படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் நண்பனின் இந்த அவலமான நிலையைக் கண்டு, இதுதான் அவனுக்கு வந்த விதி என்று அவன் வாழ்வையும் தங்கள் நம்பிக்கையையும் மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள் இந்த நண்பர்கள். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டார்கள். தங்கள் நண்பனைக் கொண்டு வந்தார்கள்.
வந்த இடத்தில் மீண்டும் ஒரு தடங்கல். இயேசு இருந்த வீட்டில் பெரும் கூட்டம். அந்த கூட்டத்தில் இருந்த பல ஏழைகள் மத்தியில் பளிச்சென்று பகட்டாகத் தெரிந்தவர்கள் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள். இந்த அறிஞர்களின் சட்டங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்காமல் தங்கள் நண்பனை இயேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கொஞ்ச நேரம் குழம்பினார்கள். திடீரென தோன்றியது அந்த ஒளி, ஒரு புது பாதை தெரிந்தது. இயேசு நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள். இவர்களது நம்பிக்கையை ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.
அவர்கள் செய்தது மிகவும் ஆபத்தான செயல்.  இயேசு போதித்துக்கொண்டிருந்த வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால், கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து உண்டு. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்... கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து ஆபத்து. இப்படி பல வகையிலும் ஆபத்து நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இதைத்தான் வெறி என்று சொன்னேன். அந்த நம்பிக்கை வெறிக்கு நல்லதொரு விடை கிடைத்தது.
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு…” என்று இன்றைய நற்செய்தியின் 5ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுபவை. ஆம்... கட்டிலில் கிடந்த நோயாளரின் நம்பிக்கையை விட அவரைத் தூக்கிவந்தவர்களின் நம்பிக்கை இயேசுவை அதிகம் கவர்ந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இயேசு அவரை குணமாக்கினார்.

பல குணமளிக்கும் நிகழ்வுகளில், குணமிழந்தவருக்கு மட்டும் குணமளிக்காமல், சுற்றி நிற்கும் பலருக்கும் குணமளிக்கிறார் இயேசு. தொழு நோயாளியைத் தொட்டு குணமாக்கினார் என்று சென்ற வாரம் பார்த்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இன்று மீண்டும் இயேசு அதையேச் செய்கிறார். முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக" என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறுகிறார். அதனால் பிரச்சனை எழுகிறது. பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட நான் சில சமயங்களில் எண்ணுவதுண்டு.
ஆழமாக சிந்தித்தால்பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல... மாறாகபிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம்.. முடக்குவாதமுற்றவரது உடலை மட்டும் இயேசு குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி அவருக்கு முழு குணம் அளிக்கவே, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறினார்.
இயேசு அவருடைய பாவத்தை மட்டுமல்ல சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும் மன்னிக்கிறார். முக்கியமாக, முடக்குவாதமுற்றவர் மீது தவறானத் தீர்ப்புகள் அளித்து அவரையும் தங்களையும் இதுவரை கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர், மக்கள் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னிக்கிறார்.

கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும் என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். இங்கோ, கூரையைப் பொத்துக் கொண்டு குறையுள்ள ஒருவர் இறங்கினார். வீட்டுக்குள்ளிருந்து மன்னிப்பும், அருளும் பீறிட்டு எழுந்தது. அப்போது அந்தப் புதுமையும் நிகழ்ந்தது. பல வருடங்களாய் கட்டிலோடு முடங்கிப்போனவர் தட்டுத்தடுமாறி எழுந்தார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் பரவியுது. தன்னை இதுவரைச் சுமந்துவந்த கட்டிலை அவர் சுமந்து வெளியே சென்றார். அவர் உள்ளே வருவதற்கு இடம் தராத அந்தக் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழிவிட, அவர் கம்பீரமாய் வெளியே சென்றார். வீட்டின் கூரைமீது நின்று இந்த அற்புதத்தைக் கண்ட நண்பர்கள் இயேசுவுக்கு அங்கிருந்தபடியே நன்றி சொல்லிவிட்டு அவசரமாய் இறங்கிவந்து நண்பனுடன் மகிழ்வாக நடந்து சென்றனர். வரும்போது அவரைச் சுமந்து வந்த கட்டிலை அவர்கள் எல்லாரும் சேர்ந்து குப்பையில் எறிந்து விட்டு போயிருக்க வேண்டும்.

இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்து விடலாம். சுமைகளைச் சுமந்து, அல்லது, சுமைகளைப் பிறர் மீது சுமத்தி வாழ்ந்து வரும் நாம், நமது சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். அவர் நமது சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.




To listen to this Tamil homily in Vatican Radio, click here:


13 February, 2012

Leprosy Patient… Dignified and Healed மதிப்பும் நலமும் பெற்ற தொழுநோயாளர்


Jesus Healing the Sick

Blessed John Paul II was diagnosed with Parkinson’s disease in the 90’s. Some sources say that it was 1993. But, a few other sources say that it was already in 1991. Pope John Paul II had been diagnosed with Parkinson's disease as early as 1991, an illness which was only disclosed later, and it is significant that he decided to create a World Day of the Sick only one year after his diagnosis.
Let us not bother about the ‘when’ of his illness. We can learn so much from ‘what’ the Holy Father did when he learnt of his illness… lessons of how to view sickness and, more especially, how to treat those who are sick. The whole world witnessed how Blessed John Paul II suffered from his debilitating sickness during the final decade of his life. During this frail phase of his life, he identified himself with the suffering humanity in a very noble way. In the year 1992 he established the World Day of the Sick. He declared February 11, the Feast of our Lady of Lourdes, as a special day to remember the sick people the world over.
It is no surprise that the Feast of our Lady of Lourdes was selected as this special Day, since millions of sick people have flocked to our Lady of Lourdes for the past 150 years. Yes, this year is a special year for the Shrine of Lourdes, since it was in 1862, Pope Pius IX authorized Bishop Bertrand-Sévère Laurence to permit the veneration of the Blessed Virgin Mary in Lourdes. This Saturday, on the 150th official feast day of our Lady of Lourdes, we also celebrated the 20th World Day of the Sick. Celebrating World Day of the Sick? Yes… We don’t celebrate sickness, but we can, and, must celebrate the courage and faith of those who are sick.
This World Day of the Sick also brings to mind another special day that was observed on the last Sunday of January – the World Leprosy Day. World Leprosy Day is observed internationally on January 30 or its nearest Sunday to increase the public awareness of the Leprosy or Hansen's Disease. This day was chosen in commemoration of the death of Gandhi, the leader of India who understood the importance of leprosy. http://en.wikipedia.org/wiki/World_Leprosy_Day

This Sunday’s Liturgy invites us to think of the Sick, especially those who are sick with the dreaded disease called Leprosy. In my Sunday Reflections I usually take Biblical quotes from the Revised Standard Version (RSV). Today I am quoting from the Contemporary English Version (CEV) for reasons I shall explain. Here are the first three verses of today’s gospel passage from CEV:
Mark 1: 40-42 - Contemporary English Version (CEV)
A man with leprosy came to Jesus and knelt down. He begged, "You have the power to make me well, if only you wanted to." Jesus felt sorry for the man. So he put his hand on him and said, "I want to! Now you are well." At once the man's leprosy disappeared, and he was well.
Why did I choose CEV over RSV? Obviously, because of the opening line. While CEV identifies the sick person as ‘a man with leprosy’, RSV identifies him as ‘a leper’. There is a world of difference between the expressions ‘leper’ and ‘man with leprosy’ or ‘leprosy patient’. The word ‘leper’ talks of what the person is… By saying that someone IS a disease, we tend to see him or her as a lesser human being or, as in the case of leprosy… no human being at all. The term ‘leprosy patient’ talks of what the person has… a human person suffering from a disease. Why make such a big fuss about words?... you may wonder. Well, words form thoughts and we need to be careful about our vocabulary… Out of the fullness of the heart the mouth speaks… True. But, out of what our mouth keeps speaking, the heart can also be filled with right or wrong thoughts.

As human beings, we can truly feel proud about the progress we have made in the diagnosis as well as the treatment of leprosy or Hansen’s disease. We can feel more proud about the way we have brushed up our vocabulary regarding those afflicted with this disease. We have become much more sensitive and therefore more respectful in labelling these persons who are sick with leprosy. Contemporary English has progressed in being more gender-sensitive and more sensitive towards those who are sick. We no longer use terms like chairman, housewife, blind, deaf, handicapped, leper etc. From this perspective, the Gospel today is Good News not only in terms of its content but also in terms of form. We need to search within ourselves and see whether the ‘form’ (namely, the words) we use is only a matter of lip-service or does it also indicate a change in our inner attitude.

Turning our attention to the content of today’s gospel, we admire the courage of the man with leprosy who took the risk of coming before Jesus. The plight of a leprosy patient was very tragic among the Israelites. This is explained in today’s first reading from Leviticus 13: 44-46. When this person had to come into the town, he had to ring a bell and warn the others so that they kept away from him. If by chance someone was touched by the leprosy patient or if someone touched this person, he / she became impure… For such accidental contacts the leprosy patient might have been stoned to death. The mosaic rules were very inhuman. Jesus broke this Mosaic law and touched the leprosy patient, thus making himself impure and even an outcast. Jesus wanted the healing of not only the leprosy patient but also the crowd around Him.
For the past three weeks we have been reflecting on the healing miracles of Jesus. Last week we said that the healing of a person begins with one’s personal belief of getting cured. Without this belief, cure is not possible. Similarly, in today’s gospel we see that if a person is given his / her human dignity, then full healing is possible. We shall continue with the healing miracles of Jesus next week too… and, possibly learn some more lessons for our own healing as well as the healing of others.

John Paul II during a visit to Nigeria in 1998 (L'Osservatore Romano)

திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு பார்கின்சன் (Parkinson’s) நோய் இருந்ததென்று 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 14 ஆண்டுகள் இந்த நோயோடு அவர் தன் பணிகளைத் தொடர்ந்தார். இந்த நோயில் அவர் அடியெடுத்து வைத்ததும், உலகில் பல்வேறு நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையே இணைத்துக்கொண்டார். 1992ம் ஆண்டு அவர் உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று இந்த உலகதினம் கொண்டாடப்படுகிறது. லூர்து நகருக்குச் செல்லும் கோடான கோடி நோயாளர்கள் அன்னை மரியாவின் பரிந்துரையால் நலமடைந்துள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை என்பதால், இந்த நாளை அருளாளர் இரண்டாம் ஜான்பால் தேர்ந்தார். இந்தச் சனிக்கிழமை, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளை நாம் கொண்டாடியபோது, 20வது உலக நோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம்.
நோயாளருக்கென ஒரு தினமா? என்று நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும் எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே நம் மனதில் உருவாவதால், நாம் இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம், விரைவில் நாம் கொண்டாடவிருக்கும் காதலர் தினம் என்று பல்வேறு தினங்களை நாம் கொண்டாடுவது எதற்கு? அந்த ஒரு நாளிலாவது அந்தக் கருத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், என்ன பரிதாபம்! இத்தினங்களுக்கே உரிய உயர்ந்த, ஆழமான பல எண்ணங்களிலிருந்து நம்மைத் திசைத்திருப்பும்வண்ணம் அன்னையர், தந்தையர், காதலர், நண்பர்கள் என்ற பல தினங்களை வர்த்தக உலகம் அபகரித்துக் கொண்டுவிட்டது. வர்த்தக உலகம் இத்தினங்களைப் பரிசுப் பொருட்களால் குவித்து, நம் எண்ணங்களையும், கண்ணோட்டத்தையும் குருடாக்கிவிட்டது.
நல்ல வேளை, உலக நோயாளர் தினத்தை வர்த்தக உலகம் இன்னும் அபகரிக்கவில்லை. அபகரிக்கவும் தயங்கும். ஏனெனில், இந்த தினத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாதே! வர்த்தக உலகின் ஆதிக்கம், ஆர்ப்பாட்டம் இவை ஏதும் இல்லாத இந்த நாளை நமக்கு வழங்கி, நமது எண்ணங்களையும், கவனத்தையும் நோயாளர் மீது திருப்பியுள்ளதற்காக நாம் தாய் திருஅவைக்கும், சிறப்பாக, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

உலக நோயாளர் தினத்தை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் கடைபிடித்த மற்றொரு முக்கியமான நாளும் நமக்கு நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி அல்லது அதற்கு நெருக்கமாக வரும் ஞாயிறன்று உலகத் தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 29, ஞாயிறன்று நாம் உலகத் தொழுநோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பைத் தருகின்றன. இன்றைய நற்செய்தியின் முதல் மூன்று இறைவசனங்களை நாம் கேட்போம்:
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இந்த வார்த்தைகளை நற்செய்திஎன்று உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்ச்சியைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நல்ல செய்திதான். அந்த வார்த்தைகளைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இந்த நற்செய்தியில் இயேசுவை அணுகிய தொழுநோயாளரைக் குறிப்பிடும் வார்த்தைகள் மரியாதை கலந்த வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தொழுநோயாளருக்கு மரியாதை தருவதைப்பற்றிப் பேசுவதில் என்ன பெரிய வியப்பு என்று உங்களில் சிலர் கேட்கலாம். நான் விளக்க முயல்கிறேன்.
இந்த ஞாயிறு நற்செய்தியை நான் வாசித்ததும் என் மனம் இருபதாண்டுகளுக்கு முன் சென்றது. அப்போது நாம் பயன்படுத்திய விவிலியத்தில் தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட நமது தமிழ் விவிலியத்தில் இன்றைய நற்செய்தி பகுதி எவ்விதம் எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டு இப்போது நாம் பயன்படுத்தும் விவிலியத்தில் இதே பகுதி எவ்விதம் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இணைத்துப் பார்த்தால் நான் சொல்லும் மரியாதை உங்களுக்குக் கட்டாயம் விளங்கும்.

1986 விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்என்று வேண்டினான். இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி அவனைத் தொட்டு, “விரும்புகிறேன், குணமாகுஎன்றார். உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.
1995 விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இது
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இந்த இரு பகுதிகளில் காணப்படும் வேறுபாடுகளை இந்நேரம் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். பழைய விவிலியப் பதிப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளியை அவர், இவர் என்று குறிப்பிடுகிறோம். தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதையை வழங்குவது நாம் அண்மையில் பின்பற்றும் ஒரு அழகான பழக்கம்.
தொழுநோய், தொழுநோயாளி என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். முன்பு நாம் தொழுநோயாளி என்ற வார்த்தைக்குப் பதில் குஷ்டரோகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக இப்போது ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளைப்  பயன்படுத்துகிறோம். குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது, இந்த நோய் உடையவர்களை மனிதப் பிறவிகளாகவே நாம் பார்க்கவில்லை. இன்றும் இந்த நிலை பல இடங்களில் தொடர்வது வேதனைக்குரிய ஒரு போக்கு.
குஷ்டரோகி என்பதற்கும், தொழு நோயாளி என்பதற்கும் உள்ள வேறுபாடுகள், வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். வார்த்தைகளை மாற்றும்போது எண்ணங்களும் மாறும் என்பது உண்மை. ஒருவரைக் குஷ்டரோகி என்று சொல்வதற்குப் பதில், அவர் ஒரு நோயாளி என்று சொல்லும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். அவரைப் பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும். நாம் வார்த்தைகளில் காட்டும் மரியாதை வெறும் வாயளவு மந்திரங்களா அல்லது உள்ளத்தின் உண்மை உணர்வுகளா என்பதையும் நாம் அலசிப் பார்க்கலாம்.

இஸ்ரயேல் மக்களிடையே தொழுநோயாளிகளைப் பற்றிய எண்ணங்களும் அவர்கள் நடத்தப்பட்ட முறைகளும் மிகக் கொடுமையானவை. விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. கடோஷ்(Kadosh) என்ற எபிரேயச் சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எதெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமானதாக, புனிதமானதாகக் கருதப்பட்டன. இந்த அடிப்படையில், நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர் யூதர்கள். அதிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது.
லேவியர் நூல் 13: 44-46
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வரவேண்டும். இந்த மணிசப்தம் கேட்டதும், எல்லோரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால் கல்லால் எறியப்பட்டு சாகவும் நேரிடும். இதெல்லாம் தெரிந்திருந்தும், இந்தத் தொழுநோயாளி இயேசுவிடம் வருகிறார். இயேசுவும் தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளைக் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் இயேசு தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளியைத் தொடுகிறார். இயேசுவின் இந்தச் செயல் சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளி முழுமையாகக் குணமானார். இயேசுவைச் சுற்றி இருந்தவர்கள் ஓரளவாகிலும் குணமாகி இருக்கவேண்டும்.

ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் உள்ள தொழுநோய் மருத்துவமனை ஒன்றில் ஒரு மாதம் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணி செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் மாலை தொழுநோய் கண்ட குழந்தைகளுடன் விளையாடும் சூழ்நிலை. அந்த நேரத்தில் ஒரு குழந்தை என்னிடம் ஒரு மிட்டாயை நீட்டினாள். வாங்குவதா வேண்டாமா என்ற போராட்டம். தைரியமாக வாங்கினேன். பைக்குள் வைத்துக் கொண்டேன். பின்னர் அறைக்குள் சென்று அதை குப்பைத் தொட்டியில் போடலாம் என்று எண்ணியிருந்தேன். அறைக்குள் சென்றபின், மிட்டாயை உண்பதா அல்லது, அதை குப்பைத் தொட்டியில் போடுவதா என்ற போராட்டம். அந்த போராட்டத்தையும் வென்று, மிட்டாயைச் சாப்பிட்டேன். இது ஒரு சின்னப் போராட்டம்தான். இருந்தாலும் என்னுடைய ஒரு மாத பணி அனுபவத்தில் ஓர் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். இந்த நோய் பற்றிய எண்ணங்களில் சின்னதாக எனக்குக் கிடைத்த ஒரு குணம் என்று சொல்லவேண்டும். தொழுநோய் பற்றி எனக்குள்ளே இருந்த பல பயங்கள் இந்தப் பணியால் மாறும் என்ற நம்பிக்கையுடன் அங்கு சென்றேன். பல மாற்றங்கள் நடந்தது உண்மை. இருந்தாலும், ஆழ்மனதில் இன்னும் சில பயங்கள் நீங்காமல் இருக்கின்றன என்பதும் உண்மை.

மூன்றாவது வாரமாக இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டு வருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதை பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம். இயேசுவின் குணமளிக்கும் புதுமையை அடுத்த வாரமும் நாம் தொடர்ந்து சிந்திப்போம்... மற்றொரு கோணத்திலிருந்து. அதுவரை... தொழு நோய் பற்றியும், நாம் வாழும் இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் AIDS நோய் பற்றியும் நம் எல்லாருக்கும் தெளிவான எண்ணங்கள் உண்டாகவும் இதனால் நாம் அனைவரும் நலம் பெறவும் மன்றாடுவோம்.