Tuesday, October 31, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 44


All Saints and All Souls Day 


பாசமுள்ள பார்வையில் - முன்பின் முரணாக வரும் திருநாள்கள்?

நவம்பர் 1, புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2, இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு திருநாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இறந்தோரின் நினைவுக்குப்பின்தானே புனிதரின் நினைவைக் கொண்டாட வேண்டும்? இங்கோ, புனிதரின் நினைவுக்குப்பின் இறந்தோரின் நினைவைக் கொண்டாடுகிறோமே!
பொதுவாக, ஒருவர் இறந்ததும், அவரைப்பற்றிய நல்லவையே அதிகம் பேசப்படும். ஒருவர் இறந்தபின், அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்லவராக, புனிதராக வாழ்ந்திருப்பாரே!
இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, மரியாதைகளை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில், வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே! புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே! தாங்கள் நல்லவர்கள் என்று, வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களாக இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே!
இறந்தோர்மீது காட்டும் பாசத்தை, அவர்கள் வாழும் நாட்களில் காட்டி, அவர்களை புனிதர்களாக வாழவைக்கலாம் என்பதைச் சொல்லித்தரவே, கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறது.


When I thirst…

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 44

துன்பம் ஏன்? மாசற்றவர்கள் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக, யோபு நூல் அமைந்துள்ளது. இக்கேள்விகளுக்குத் தகுந்த விடை தேடுவதற்கு, கல்வாரி என்ற கல்விக்கூடத்தில் சில வாரங்களுக்குமுன் நாம் அடியெடுத்து வைத்தோம். இயேசு, கல்வாரியில், சிலுவையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேளையில் கூறிய அற்புதமான சொற்கள், துன்பம் குறித்த நம் எண்ணங்களை தூய்மையாக்கி வருகின்றன.
இன்றைய விவிலியத் தேடலில் "தாகமாயிருக்கிறது" என்ற இயேசுவின் கூற்று, நம் சிந்தனைகளை வழிநடத்துகிறது. கல்வாரியில், இயேசு அடைந்த தாகத்தை முதலில் சிந்திப்போம். நான்கு நற்செய்திகளும் கூறும் கல்வாரி நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கு, இருமுறை பானங்கள் கொடுக்கப்பட்டதென நாம் புரிந்துகொள்ளலாம். முதல் முறை, தனக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை, இயேசு குடிக்க மறுத்தார். இரண்டாம் முறை, அவரே தன் தாகத்தை எடுத்துச் சொன்னார். பாரமான சிலுவையைச் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து, விழுந்து, எழுந்து வந்த இயேசு, கல்வாரியை அடைந்ததும் அவருக்குப் பானம் ஒன்று கொடுக்கப்பட்டது.
மத்தேயு 27: 33-34
'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.

கசப்பு கலந்த திராட்சை இரசத்தை இயேசு குடிக்க விரும்பவில்லை. காரணம்?... அந்த இரசம், அதிக குடிபோதையைத் தரும். உடல் வலியை மறக்க, அல்லது, மழுங்கடிக்க குடிக்கப்படும் பானம் அது.
இயேசு அடைந்த வேதனையைப் பார்த்து, உரோமைய வீரர்களுக்கே இரக்கம் பிறந்திருக்க வேண்டும். அந்த வலியை அவர் மறக்க உதவும் எண்ணத்துடன், வீரர்கள் அந்த இரசத்தைக் கொடுத்தனர். இயேசு அதை பருக மறுத்தார். தான் ஏற்றுக்கொண்ட துன்பத்தை, இறுதி வரை, முழுமையாக நிறைவேற்றும் தீர்மானத்துடன் இருந்தார், இயேசு. துன்பத்தை, முழுமையாக ஏற்கவிரும்பும் கடவுளைப்பற்றி சிந்திக்க ஓர் அழைப்பு இது.

வேதனையுறும் கடவுள், வலியில் துடிக்கும் கடவுள் என்பவை, நினைத்துப் பார்க்கவே முடியாத எண்ணங்கள். பழைய ஏற்பாட்டில், துன்புறும் ஊழியனைப்பற்றி இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
எசாயா 53: 4-10
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்... அவரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்.
கடவுளின் ஊழியரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார் என்ற சொற்களைக் கேட்கும்போது, இறைவனின் அனுமதியோடு, சாத்தான் யோபுக்கு அளித்த வேதனைகள், நம் நினைவில் நிழலாடுகின்றன.

இறைவாக்கினர் எசாயாவின் சொற்கள், இயேசுவைப்பற்றி கூறும் முன்னறிவிப்பு என்று கூறுகிறோம். கடவுளின் ஊழியன் துன்பப்படலாம், கடவுளே துன்பப்படலாமா? படலாம். துன்பத்தை, எதிர்மறையான கண்ணோட்டத்துடன், ஒரு சாபமாக, குறையாகப் பார்ப்பதால்தான், கடவுளோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க சங்கடப்படுகிறோம். ஆனால், துன்பத்தை, நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்த்தால், அதன் பயனை உணர்ந்தால், துன்புறும் கடவுளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

வலியின்றி குழந்தை பெறுவதற்கு மருத்துவ உலகம் பல வழிகளை பரிந்துரைத்தாலும், வலியோடு குழந்தை பெறுவதை, ஆயிரமாயிரம் அன்னையர் இன்றும் தெரிவு செய்கின்றனர் என்பதை அறிவோம். வலியோடு குழந்தை பெறுவதை தெரிவுசெய்யும் தாயைக் கேட்டால், அந்த துன்பத்திற்கு அர்த்தம் உண்டு என்று சொல்வார்.
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் எதையாவது வெற்றிகரமாக முடிக்கும்போது, அந்த வெற்றிக்குப் பின்புலத்தில் நாம் மேற்கொண்ட துன்பங்கள் அர்த்தமுள்ளவை என்பது புரியும். முயற்சி, துன்பம் இவை ஏதுமின்றி வரும் வெற்றி, இலவசமாகக் கிடைத்த, அல்லது இலாட்டரியில் விழுந்த பரிசுத்தொகை போல இருக்கும். அவ்வாறு நம்மை வந்தடையும் கொடைகளின் உண்மையான மதிப்பை நாம் உணரமுடியாமல் போகலாம்.

பல நேரங்களில், வாழ்வில் எவ்வளவு துன்பப்பட்டாலும், வெற்றிகள் வராது. துன்பம் ஒன்றையே மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும். அந்தத் துன்பங்களைப் புரிந்துகொள்ள, துன்புறும் கடவுள் என்ற எண்ணம் நமக்கு உதவியாக இருக்கும். துன்புறும் கடவுள் ஒருவர் இருப்பதாலேயே, நம் துன்பங்களுக்கு அர்த்தம் தேடிக்கொள்ள முடிகிறது. இல்லையெனில், துன்பத்தில் நொறுங்கி, உருக்குலைந்து, நம்பிக்கை இழந்து அலைந்து கொண்டிருப்போம். நம்மை அந்நிலைக்கு உள்ளாக்கிய உறவுகளை, இறைவனை சபித்தவண்ணம் வாழ்வைக் கழிப்போம்.
இதையே, யோபு நூலின் துவக்கத்தில், யோபின் மனைவி அறிவுரையாக வழங்கினார். தன் உடைமைகளையும், அன்புக் குழந்தைகளையும் இழந்து, உடல் நோயால் துன்புற்று, சாம்பலில் அமர்ந்திருந்த யோபிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்று யோபின் மனைவி கூறினார். "இவை அனைத்திலும் யோபு தன் வாயால் பாவம் செய்யவில்லை" (யோபு 2:10) என்று நாம் வாசிக்கிறோம்.

வலியை மறக்க கொடுக்கப்பட்ட பழ இரசத்தை மறுத்த இயேசுவின் உறுதி, துன்புறும் பல கோடி மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது என்று பெருமைப்படும் அதே நேரம், வலியை மறக்க, உழைக்கும் வர்க்கத்தினர் மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகளை எண்ணி, கவலையும் பட வேண்டியிருக்கிறது...
நாள் முழுவதும் உடலை வருத்தி, கசக்கிப் பிழியும் வேலைகளை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான ஏழைகளில் பலர், மாலையானதும், கையில் அன்றையக் கூலி கிடைத்ததும், தங்கள் உடல் வலிகளை மறக்க, தேடிச்செல்வது, சாராயம். இந்தியாவின் பெருநகரங்களில் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் அந்தப் பணியில் இறங்கும் முன் சாராயம் குடிப்பதையும் பார்த்திருக்கிறோம். தாங்கள் இறங்கிப் பணிசெய்யும் அந்தக் கொடுமையானச் சூழலுக்கு மரத்துப் போகும்படி அவர்கள் அதைக் குடிக்க வேண்டியுள்ளது.

பணிச்சூழல் மரத்துப் போவதற்கும், உடல் வலி தீர்வதற்கும், ஏழைகள் பருகும் சாராயத்தின் விளைவாக அவர்கள் உடல் நலத்தில் ஏற்படும் விபரீதங்கள், குடும்பங்களில் ஏற்படும் வேதனைகள், ஏராளம், ஏராளம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவர்களது சாராயத் தாகம் கண்டனத்திற்குரியதாய் நமக்குத் தோன்றும். கண்டனத்திற்கு பதில், கருணை நிறைந்த புரிந்து கொள்ளுதல் நமக்குத் தேவை.

கண்டனத்திற்குரியவர்கள் இவர்கள் அல்ல. இந்த ஏழைகளின் உடல் வேதனையை மூலதனமாக்கி, இலாபம் ஈட்டும் போதைப்பொருள் வர்த்தகர்களும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகளும், மந்திரிகளும் கண்டனத்திற்குரியவர்கள். அதே போல், இந்த ஏழைகளின் குடும்ப வேதனைகளை மூலதனமாக்கி, வட்டிக்குக் கடன் கொடுத்து, அவர்களை உயிரோடு விழுங்கும் சுறாமீன்களும் கண்டனத்திற்குரியவர்கள்.
அண்மையில், நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், கந்துவட்டிக்காரர்களின் கொடுமைகளைத் தாங்கமுடியாமல், தன் மனைவி, மற்றும் குழந்தைகளுடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குமுன் தீக்குளித்த கொடுமையை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
தன் உடல் வலிகளை மறக்க அளிக்கப்பட்ட மதுவை குடிக்க மறுத்த இயேசு, குடிப் பழக்கத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஏழைகளின் வாழ்விலும் குறுக்கிட்டு, உடல் வேதனைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான மன வலிமையை, வேதனைகளிலிருந்து மீள்வதற்கான நல் வழிகளை, அவர்களுக்குக்  காட்டவேண்டும் என செபிப்போம்.

கல்வாரியில், இரண்டாவது முறையாக, இயேசுவின் தாகம் தீர்க்கப்பட்ட நிகழ்வு, யோவான் நற்செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
யோவான் 19: 28-29
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறைய, புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.
முதல் முறை கொடுக்கப்பட்ட மதுவை மறுத்தார் இயேசு. இம்முறை, தாகமாய் இருக்கிறது என்று விண்ணப்பித்தார். இறை மகனுக்கு உண்டான தாகம், மனித குலம் அனுபவிக்கும் தாகங்களையும், அவற்றை தீர்த்துக்கொள்ள நாம் பயன்படுத்தும் தவறான வழிகளையும் சிந்திக்க ஒரு வாய்ப்பாக உள்ளது.

குளிர்ப் பானங்கள் பற்றி, சில ஆண்டுகளுக்குமுன் வெளியான ஒரு தொலைக்காட்சி விளம்பரம் நினைவுக்கு வருகிறது. முப்பது நொடிகள் காட்டப்படும் இந்த விளம்பரத்தின் ஆரம்பத்தில், ஒருவர், தரையில் முகம் குப்புறப் படுத்து, ஊர்ந்தபடியே ஒரு குளிர்சாதன பெட்டிக்கு அருகில் செல்வார். மிகவும் சிரமப்பட்டு, அந்தக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, தட்டுத்தடுமாறி, குளிர்பானம் நிறைந்த ஒரு பாட்டிலை எடுப்பார். குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுவார். திரை இருட்டாகும். அந்தக் குளிர் பானத்தின் பெயர் திரையில் வரும், அதைத் தொடர்ந்து, Obey your thirst... அதாவது, உன் தாகத்திற்கு கீழ்ப்படி என்ற வார்த்தைகள் வரும்.

தாகங்களை வெல்வதற்கு, அல்லது, அவற்றைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்வதே வாழக்கைக்குத் தேவையான, பயனுள்ள பாடங்கள். வியாபார உலகம், விளம்பர உலகம் கற்றுத்தரும் பாடங்களோ, முற்றிலும் வேறுபட்டவை. தாகத்திற்கு கீழ்ப்படியுங்கள் என்று இந்த உலகம் சொல்லித்தருகிறது.
இந்த உலகம் சொல்லும் தாகம் வெறும் உடல் தாகம் அல்ல. மாறாக, பொருளுக்கு, பதவிக்கு, செல்வத்திற்கு, பெருமைக்கு, அழகுக்கு, ஆசைகளுக்கு என்று, பல வகைகளிலும் நம்மில் எழும் தாகங்களுக்குக் கீழ்ப்படியச் சொல்கிறது இந்த உலகம். இந்தத் தாகங்களைத் தீர்க்கும் முயற்சிகள், கழுத்தறுக்கும் போட்டிகளாக மாறலாம். அந்தக் கழுத்தறுப்பில் சிந்தும் இரத்தத்தைக் குடித்தாகிலும், நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளவேண்டும் என்று பாடங்கள் சொல்லித்தரப்படுகின்றன இந்த உலகத்தில்.
இவ்வகைத் தாகங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றிற்குக் கீழ்ப்படியாமல், எதிர்த்து நிற்கவேண்டிய துணிவை நாம் பெறவேண்டும். அந்தத் துணிவு, இறுதியில், நம்மை சிலுவையில் அறைந்தாலும், அந்தச் சிலுவையிலும் தாகத்தோடு நிற்கக்கூடியத் துணிவை, கல்வாரியில், சிலுவையில், தாகத்தோடு போராடிய வீரத்திருமகன் இயேசு நமக்குத் தரவேண்டும் என்று செபிப்போம்.Saturday, October 28, 2017

Learning love lessons with humility அகந்தை அகற்றி, அன்பு பாடங்கள் பயில...


Life Principles for Living Out the Greatest Commandment

30th Sunday in Ordinary Time

The class teacher complained to the father of her student: “Your son gives me wrong answers in class. I asked him, ‘How much is 2 times 6?’ and he said, ‘Ten’.” The father said: “Sorry, Madam. You should have asked him ‘How much is 2 times 5?’ You asked him a wrong question.”
Though this is a laughing matter, this also sets us thinking. It tells us that we are capable of asking wrong questions.
There are questions and questions – the right ones and the wrong ones; the good ones and the bad ones. Isidor Isaac Rabi, a Nobel Prize winner in Physics, was once asked how he became a scientist. Rabi replied that every day after school his mother would talk to him about his school day. She wasn't so much interested in what he had learned that day, but how he conducted himself in his studies. She always inquired, "Did you ask a good question today?" "Asking good questions," Rabi said, "helped me become a scientist."

There are also different modes of asking questions. Questions that spring from a humble, sincere search for truth will lead one to light. Questions that spring from the apparent all-knowing-arrogance, will lead to darkness. In my teaching career, I have come across quite a few brilliant students who were much better in knowledge and skill than I. A few of them would surprise me with questions during class hours. Occasionally, I could smell a trap in their questions. They knew the answer and still wanted to test whether I knew it all right. Most of the time, I could tackle these situations to the best of my ability. At other times, I had told them that I did not have the answer at hand and would come back with an answer the next day. Such moments left me humbled as well as enlightened!

Last Sunday we witnessed the political game played by the Pharisees and the Herodians against Jesus by posing the question: “Is it lawful to pay taxes to Caesar or not?” Today’s gospel gives us an account of how Jesus met with a lawyer who knew too much and asked a question to find out whether Jesus knew enough. The very opening lines of today’s gospel tell us that the political game of the Pharisees was not finished yet.
Matthew 22: 34-36
Hearing that Jesus had silenced the Sadducees, the Pharisees got together. One of them, an expert in the law, tested him with this question: “Teacher, which is the greatest commandment in the Law?”

In comparison to the expert in the law, Jesus was a simple itinerant preacher. The expert would have surely known that Jesus did not attend any of the law schools. Then why question him on the greatest commandment in the Law? This was the best way to prove, in front of the people, that Jesus was only an upstart and did not have solid foundation in Mosaic Law.
Jesus knew the ploy. Still, it was a profound question and Jesus did not wish to let go of an excellent opportunity. Hence, Jesus gave him a reply. What a reply it was! This reply of Jesus has served as the heartbeat of Christian tradition all these centuries. Jesus combined two famous passages from the Old Testament – namely, Deuteronomy 6:5 and Leviticus 19:18. Here is the reply of Jesus as recorded by Matthew:
Matthew 22: 37-40
Jesus replied: “‘Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind.’ This is the first and greatest commandment. And the second is like it: ‘Love your neighbour as yourself.’ All the Law and the Prophets hang on these two commandments.”

Jesus seems to make two propositions - one for the love of God and another for the love of neighbour. Loving God has to be total… with all your heart and with all your soul and with all your mind. No half measures here! Love of neighbour as you love yourself. Loving oneself is the basic requirement to love another. Jesus seems to imply that those who have no love and respect for themselves will find it hard to love another person.

Love of oneself begins with self-knowledge. “Know yourself” (“gnothi seauton”) was the basic mantra of the Greeks. It was so sacred that they had inscribed it on the portals of their temple. Knowing yourself, loving yourself, loving your neighbour… will lead to the total love of God. These, according to Jesus, were the greatest commandments.
Knowing oneself comes via quiet moments and deep meditations. Loving oneself and one’s neighbour come via face-to-face, personal relationships. Our present day world denies us quiet moments and personal relationships. Our knowledge and relationships are very much dependent on gadgets. We are so glued to these gadgets that we have hardly any time to look at ourselves or others face to face. The more we are surrounded by the gadgets, the less we get really connected with one another. We are virtually prisoners of the gadgets of communication, which lead us more to isolation than relationships.

The world today, especially the commercial world, has become more and more eloquent in defining what love is. We are offered hundreds of ‘love-machines’ that create an illusion that the whole world is a family. This ‘family’ created by the business world is a virtual world. The real world is getting more and more torn and fragmented, leaving millions orphaned, widowed and estranged.
Against the background of this real world, today’s first reading comes as a wake-up call. The words given in this passage are very practical and they emphasise concrete, practical, day to day actions. Moreover, these words are given to us as spoken by God.
Exodus 22: 21-27
Thus says the Lord: “Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt. Do not take advantage of the widow or the fatherless. If you do and they cry out to me, I will certainly hear their cry… If you lend money to one of my people among you who is needy, do not treat it like a business deal; charge no interest. If you take your neighbour’s cloak as a pledge, return it by sunset, because that cloak is the only covering your neighbour has. What else can they sleep in? When they cry out to me, I will hear, for I am compassionate.

Setting aside all eloquence, God seems to talk to us directly today. Love of God and Love of neighbour, based on love of oneself are personal, practical lessons to be learnt with a humble heart. They are not a theoretical, question-and-answer debate, arising out of an arrogant heart. 

The Greatest Commandment

பொதுக்காலம் 30ம் ஞாயிறு

ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவனைப்பற்றி அவனது தந்தையிடம் முறையிட்டார்: "ஐயா! ஒங்க பையன் வகுப்புல சரியாவே பதில்சொல்ல மாட்டேங்கறான். இன்னக்கி அவன்கிட்ட 'கம்பராமாயணத்தை எழுதியது யார்'ன்னு கேட்டேன். அதுக்கு உங்க மகன் 'திருவள்ளுவர்'ன்னு சொல்றான்" என்று ஆசிரியர் முறையிட்டதும், தந்தை அவரிடம், "சார், கோவிச்சுக்கக்கூடாது. நீங்க 'திருக்குறள எழுதுனது யார்'ன்னு கேட்டிருந்தா, என் பையன் 'திருவள்ளுவர்'ன்னு சரியா பதில் சொல்லியிருப்பான். நீங்க கேள்வியைத் தப்பா கேட்டுட்டீங்க" என்று சொன்னார். சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைக்கும் துணுக்கு இது. தப்பான கேள்விகள் கேட்கமுடியுமா என்று சிந்திக்க வைக்கும் இத்துணுக்கு, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கின்றது.

"சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" (மத்தேயு 22:17) என்ற கேள்வி, சென்ற ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்பட்டது. "போதகரே, திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34) என்ற கேள்வி, இந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்படுகிறது. இவை இரண்டும், அறிவை வளர்த்துக்கொள்ள தொடுக்கப்பட்ட கேள்விகள் அல்ல. மாறாக, பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் ஆகியோர் அரசியல் கூட்டணி அமைத்து, இயேசுவுக்கு எதிராக ஆரம்பித்த ஓர் அரசியல் விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பகடைக் காய்களாக இக்கேள்விகள் அமைந்தன.
ஐயங்களை அகற்ற, அறிவை வளர்க்க கேட்கப்படும் கேள்விகள் பயனுள்ளவை. அதற்கு மாறாக, தனக்குத் தெரிந்தது, அடுத்தவருக்குத் தெரியாது என்பதை பறைசாற்ற கேள்விகள் கேட்பது, ஆபத்தில் சிக்கவைக்கும். அச்சூழல்களில் அறிவை வளர்க்கும் கேள்வி-பதில் பரிமாற்றத்தை விட, நீயா, நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான அகந்தை அரங்கேறும்.

இயேசுவின் வாழ்வில் இதுபோன்ற ஒரு சூழல் உருவானதை இன்றைய நற்செய்தியில் மீண்டும் ஒருமுறை பார்க்கிறோம். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம். தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் தருகிறார். என்ன ஒரு பதில் அது! இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில். மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.
மத்தேயு நற்செய்தி 22: 36-40
திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். இயேசு, “‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாகஎன்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றனஎன்று பதிலளித்தார்.

அனைத்து மதங்களும் இறையன்பையும், பிறரன்பையும் வலியுறுத்துகின்றன. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்கிறோம். இயேசு கூறிய இந்த பதில் மொழியில், "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல..." என்ற சொற்றொடர் நம் கவனத்தை ஈர்க்கிறது. இறைவன் மீது காட்டப்படும் அன்புக்கு, இயேசு கூறும் அளவுகோல், முழுமை. முழுமையான இதயம், உள்ளம், மனம் ஆகியவற்றால் இறைவன் மீது அன்புகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். அயலவர் மீது காட்டப்படும் அன்புக்கு, அளவுகோல், ஒருவர் தன் மீது காட்டும் அன்பு. தன் மீது அன்பு கொள்ளவோ, மதிப்பு காட்டவோ இயலாத ஒருவரால், அடுத்தவர் மீதும் அன்பு காட்ட முடியாது என்பது, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்.

நம் மீது நாம் அன்பு கொள்வதற்கு, நம்மைப்பற்றிய ஆழமான புரிதல் மிகவும் அவசியம். "உன்னையே நீ அறிவாய்" (“know thyself”, “gnothi seauton”) என்பது, உண்மை அறிவைப் பெறுவதற்கு, கிரேக்கர்கள் கூறிய தலைசிறந்த வழி. எனவேதான், கோவில் முகப்பில் அந்த வார்த்தைகளைப் பொறித்து வைத்தனர். தன்னறிவு பெற்று, தன்னையே அன்புகூரும் ஒருவருக்கு, அடுத்தவர் மீதும் அன்புகூர்வது எளிதாகும். தன்னையும், அடுத்தவரையும் அன்புகூர்வது, ஆண்டவரை அன்புகூர அழைப்பு விடுக்கும். இதையே, தலைசிறந்த கட்டளை என்று இன்றைய நற்செய்தியில் இயேசு வலியுறுத்தியுள்ளார்.

தன்னறிவு பெறுவதற்கு, அமைதி, ஆழ்நிலை தியானம், ஆகியவை அவசியம். அந்த அமைதியின் சிகரமாக, இறைவனை உணர்ந்து, அவர் மீது அன்பு கொள்வதும் சாத்தியமாகும். ஆனால், அமைதி, தியானம், செபம் ஆகியவற்றை புறந்தள்ளி, இவ்வுலகை சப்தம், சந்தடிகளால் நிறைப்பதே, இன்றைய வர்த்தக உலகின் ஒரே முயற்சியாக உள்ளது. நம்முடன், நம் குடும்பங்களுடன் நாம் தரமான, நிறைவான முறையில் நேரத்தை செலவழிப்பதற்குப் பதில், எப்போதும், நம் கரங்களில் தொடர்பு சாதன கருவிகளைத் திணித்து, அவை உருவாக்கும் சந்தடிகளில் நம்மையே இழப்பதற்கு இவ்வுலகம் நமக்குச் சொல்லித்தருகிறது.

இந்த சப்தங்களால் நிறைந்து, நம்மையே அவற்றில் இழந்து, நம்மைப்பற்றிய சரியான புரிதல் ஏதுமின்றி நாம் வளர்ந்து வருகிறோம். நாம் ஒவ்வொருவரும் உயர்வானவர்கள், தனித்துவம் மிக்கவர்கள் எனவே, அன்புக்கும், மதிப்பிற்கும் உரியவர்கள் என்ற எண்ணங்களையெல்லாம், அழித்துவிட்டு, அனைவரையும் ஒருசில வெளிப்புற அடையாளங்களால், ஆட்டுமந்தைகளைப் போல், தொழில்சாலைகளிலிருந்து வெளியே வரும் ஒரே அளவான பொருள்களைப்போல் மாற்ற முயல்கிறது நமது வர்த்தக உலகம். குறிப்பாக, உலகின் அனைத்து இளையோரிடையே, சுயமாக சிந்திக்கும் திறமைகளை நீக்கி, ஒரே உலகக் குடும்பம் என காட்டும் முயற்சிகள் வர்த்தக உலகால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயன்படுத்தும் கருவிகள், உடுத்தும் உடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் சொல்லாடல்கள் ஆகியவற்றால் நாம் ஒரே குடும்பமாக இணைந்துவிட்டோம் என்று வர்த்தக உலகம் சொல்வது பொய் என்பதை நிரூபிக்க, நமக்குள் வளர்ந்துவரும் பிரிவினை உணர்வுகள் சாட்சிகளாக உள்ளன. நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், பிளவுகளும், பிரிவுகளும் கூடி வருகின்றனவே ஒழிய, குறைவதாகத் தெரியவில்லை. பல்வேறு கருவிகள் மூலம் உறவுகளை வலுப்படுத்துவதாகச் சொல்லும் தொடர்பு சாதன உலகம், அதே வேளையில், உண்மையான, நேருக்கு நேரான உறவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. தொடர்புசாதனக் கருவிகள் புடைசூழ, சுயநலச் சிறைகளுக்குள் நாளுக்கு நாள் இன்னும் வலுவாக நம்மை நாமே பூட்டிக் கொள்வதால், 'அடுத்திருப்பவர்' மீது அன்பு காட்டமுடியாமல், அவர்களை, அன்னியர்களாக, பகைவர்களாக காணும் கண்ணோட்டம் வளர்ந்துவருகிறது என்பது, வேதனை தரும் உண்மை.

அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரையொருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின், கைம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப்பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் நேரடியாகக் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கிறது.
விடுதலைப் பயணம் 22: 20-27
ஆண்டவர் கூறியது:... அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்... உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அன்னியர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரை நாம் உடன்பிறந்தோராகக் காணவேண்டும் என்று இறைவன் விடுக்கும் இந்த எச்சரிக்கையைக் கேட்கும்போது, யூதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் புகழ்பெற்ற ஓர் உவமை நம் நினைவில் நிழலாடுகிறது. இந்த உவமையுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
வயது முதிர்ந்த யூதகுரு ஒருவர் தன் சீடர்களிடம், "உலகில் தேவையான அளவு ஒளி உள்ளதென்று எப்போது சொல்லமுடியும்?" என்று கேட்டார். முதல் சீடர், "ஒரு வேப்பமரத்திற்கும் ஒரு புளிய மரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண முடிந்தால், தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று பதில் சொன்னார். குரு உடனே, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்று சொன்னார். இரண்டாவது சீடர், "ஒரு செம்மறி ஆட்டையும், வெள்ளாட்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால், தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று பதில் சொன்னார். அதற்கும் அந்த குரு, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்ற அதே பதிலைச் சொன்னார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த பதிலையெல்லாம் சொல்லிவிட்டதால், சீடர்கள் அனைவரும் குருவின் பதிலுக்குக் காத்திருந்தனர். அப்போது குரு அவர்களிடம், "மனிதர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்க்கும்வேளையில், எப்போது அங்கு ஒரு சகோதரனையோ, சகோதரியையோ அவர்களால் அடையாளம் காணமுடிகிறதோ, அப்போதுதான் இவ்வுலகில் தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று கூறினார்.

வெறுப்பு என்ற இருளில் மூழ்கிவரும் நம் உலகில், இறையன்பு, பிறரன்பு என்ற கதிரவன் ஒளி வீசவேண்டும் என்று மன்றாடுவோம்.

Tuesday, October 24, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 43


A Mother’s Love

பாசமுள்ள பார்வையில் - "ஓர் அம்மாவின் அன்பு"

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் கவிஞரும், இசையமைப்பாளருமான ஜிம் பிரிக்மன் (Jim Brickman) அவர்கள், "ஓர் அம்மாவின் அன்பு" என்ற பெயரில் உருவாக்கிய பாடலிலிருந்து ஒரு சில வரிகள்:
வாழ்வில் நான் உயர்ந்திட படிக்கற்கள் அமைத்தாய்
வீடு திரும்பி வர பாதையைக் காட்டினாய்
என் இதயத்தினுள் நுழைந்து, அதை ஒழுங்குபடுத்த நேரம் ஒதுக்கினாய்

வாழ்வில் நான் வளர்ந்திட வேர்கள் தந்தாய்
வானில் நான் பறந்திட சிறகுகளும் தந்தாய்
நீ என்னை நம்பியதால், கனவு காண நான் கற்றுக்கொண்டேன்

இவ்வுலகில் வேறெந்த சக்தியும் இதற்கிணையில்லை
வேறெந்த கருவூலமும் இதற்கு நிகரில்லை
அதுதான் ஓர் அம்மாவின் அன்பு.

Mary and John stood by the Cross

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 43

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வருகிறது. இயேசு சபையைச் சேர்ந்த இளம் குருக்களில் ஒருவர், என் நண்பர், மருத்துவமனையில் இருந்தார். வயிற்றில் புற்று நோய் முற்றிய நிலை. அதிக வேதனையில் இருந்தார். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
நானும், இன்னொரு நண்பரும் அவரைப் பார்க்கச் சென்றோம். அந்த வேதனையின் நடுவிலும், எங்களைப் பார்த்ததும் புன்னகைத்தார். நாங்கள் அவரது வலியைப்பற்றி பேசியபோது, "அது கிடக்குது உடுங்க... உங்க அப்பாவுக்கு சுகமில்லன்னு போன வாரம் சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கார்?" என்று கேட்டார். எங்கள் சந்திப்பின் முழு நேரமும் என் முதுகு வலி எப்படி இருக்கிறதென்று, என் நண்பர் தேர்வு எப்படி எழுதினார் என்று... எங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

வெளியே வந்ததும் நானும் நண்பரும் எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். இது எப்படி ஒருவரால் முடியும்? என் தந்தையைப் பற்றி போன வாரம் சொன்னதை, இந்த வேதனையின் மத்தியிலும் அவரால் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
தன் வலியை மறக்க, அதிலிருந்து தன் எண்ணங்களைத் திசைதிருப்ப வேறு பல எண்ணங்களை அவர் மனதில் நிறைக்கிறார் என்று என் நண்பர் விளக்கம் தர முயன்றார். மனமும் உடலும் ஒன்றையொன்று அதிகம் பாதிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மைதானே. உடல் காயப்பட்டால், மனம் சோர்ந்துவிடும், ஆனால் காயப்பட்ட நேரங்களிலும் மனம் நினைத்தால், காயங்களை மறந்து உடலைச் செயல்பட வைத்துவிடலாம்.
நாங்கள் அவரைச் சந்தித்துவிட்டு வந்த, ஒரு வாரத்திற்குப் பின், அவர் இறைவனடி சேர்ந்தார். கடைசி நேரம் வரை மற்றவர்களைப் பற்றியே அதிகம் பேசிவந்தார் என்று அவருடன் இருந்தவர்கள் சொன்னார்கள். இப்படி எண்ணுவதற்கு, பேசுவதற்கு தனிப்பட்ட, உயர்ந்ததோர் உள்ளம் வேண்டும்.

மாசற்றவர் துன்புறுவது ஏன் என்று, யோபு நூல் எழுப்பிய கேள்விக்கு விடைதேடி, கடந்த மூன்று வாரங்களாக, இயேசு, கல்வாரியில், சிலுவையில், வேதனை நிறைந்த தன் மரண படுக்கையில் பேசியவற்றைச் சிந்தித்து வருகிறோம். இயேசு, தன் பணிவாழ்வில் எப்போதும் சொல்லித்தந்த ஓர் ஆழமான உண்மை இறையன்பும், பிறரன்பும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது, பிரிக்க முடியாதது என்ற உண்மை. இந்த மறையுண்மையின் மிகச் சிறந்த பாடங்களை, சிலுவையில், இயேசு, மீண்டும் போதித்தார்.
"தந்தையே, இவர்களை மன்னியும்" என்றும், "இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்றும் இயேசு சொன்ன வார்த்தைகள், பிறரன்பின் ஆணிவேரைக் காட்டும் அற்புத சொற்கள். இன்றைய விவிலியத்தேடலிலும், இயேசு, சிலுவையில், பிறரன்பை உணர்த்தும்வண்ணம் சொன்ன மற்றொரு வாக்கியத்தில், தேடலை மேற்கொள்வோம்.
யோவான் நற்செய்தி 19: 25-27
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன் என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய் என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

இயேசுவின் கூற்றை சிந்திப்பதற்கு முன், இப்போது நாம் கேட்ட இந்த நற்செய்தியில் வாசித்த முதல் வாக்கியத்தை சிந்திக்க உங்களை அழைக்கிறேன். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசுவின் இறுதி சித்ரவதை நேரத்தில், அவரது சிலுவையைச் சுற்றி மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு இயேசுவின் அன்பு சீடர் யோவானும் நின்று கொண்டிருந்தார். மூன்று பெண்கள், ஓர் இளைஞன்.
தன் மகனின் கொடூர வேதனையைப் பார்த்து, உள்ளமெல்லாம் நொறுங்கி, மண்ணில் அழுது புரண்டு வீழ்ந்திருக்க வேண்டும், தேவதாய். ஆனால், அவர் நின்று கொண்டிருந்தார். பெண்களுக்கு, சிறப்பாக, அன்னையருக்கு இருக்கும் மன உறுதியைச் சிந்தித்துப் பார்க்க, இந்தக் காட்சி நம்மைத் தூண்டுகிறது.

உலகப் புகழ் பெற்ற பியெத்தா (Pieta) திரு உருவத்தை படங்களில் பார்த்திருப்போம். 1499ம் ஆண்டு, கலை மேதை மிக்கேலாஞ்சலோ அவர்கள் வடித்த இந்த உருவம், பல கோடி மக்களின் மனங்களில் இடம் பெற்றிருக்கும். 33 வயது நிறைந்த ஆண் மகனை முழுவதுமாக மடியில் சுமப்பதென்பது, எந்த ஒரு பெண்ணாலும் முடியாத காரியம். ஆனால், மரியா அப்படி தாங்கினார் என்று, மிக்கேலாஞ்சலோ அவர்கள் செய்த கற்பனையே மிக அழகானது. மரியாவைப் பற்றி மிக்கேலாஞ்சலோ அவர்கள் வைத்திருந்த உயர்ந்த எண்ணங்களுக்கு அவர் கொடுத்த பியெத்தா வடிவம், பலகோடி மக்களின், சிறப்பாக பெண்களின் மனதில் ஆழமான உறுதியை உருவாக்கியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

விருப்பப்பட்டு, மனமுவந்து, மனதார துன்பங்களை ஏற்கும் உறுதி, பெண்களுக்கு, சிறப்பாக தாய்களுக்கு அதிகம் உண்டு. கருவில் ஓர் உயிர் தோன்றியதும், ஒரு தாயின் உடல் வேதனைகள் பல வழிகளில் ஆரம்பமாகின்றன. குழந்தையைப் பெறும்போது, தாய் படும் உடல் வேதனை, மிகப் பெரிது. வலியின்றி குழந்தையைப் பெறுவதற்கு, இன்றைய மருத்துவ உலகம், பல செயற்கை வழிகளைக் கண்டுபிடித்திருந்தாலும், இன்னும் பலகோடி அன்னையர், வேதனையோடு குழந்தை பெறுவதையே தேர்ந்தெடுக்கின்றனர். இதேபோல், குழந்தை வளரும்போது, நோயுறும் குழந்தையைப் பேணும்போது, என்று பல தருணங்களில், தாய் விருப்பப்பட்டு ஏற்கும் வேதனைகளின் பட்டியல், மிக நீளமானது.

இறைவனின் விருப்பத்திற்கு ஆம் என்று சொல்லி, இயேசுவைக் கருவில் தாங்கியது முதல், பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்தவர், மரியா. தன் பிரச்சனைகள் பெரிதென்று, அவையே தன் உலகமென்று, அவற்றைச் சமாளிக்கவே தன் வாழ் நாள் முழுவதும் போதாதென்று மரியா வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வாழவில்லை. தன் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தி, சிறைபட்டுவிடவில்லை. மற்றவர் பிரச்சனைகளில் பங்கேற்று, விடைதேட முயன்றார். தான் இறைவனின் தாயாகப் போகிறோம் என்பதை அறிந்ததும், கன்னியான தான் கருவுற்றிருப்பது பெரும் ஆபத்து என்ற அச்சத்திலேயே தங்கிவிடவில்லை, இளம்பெண் மரியா. தன் உறவினராகிய எலிசபெத்து, தன் முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்பதை அறிந்து, அவரைத் தேடிச் சென்றார். அதேபோல், கானாவில் நிகழ்ந்த திருமணத்தில் உண்டான பிரச்சனையை, மிக அமைதியான வழியில் தீர்த்து வைத்தார். இப்படி, எங்கெங்கு பிரச்சனைகள் வந்ததோ, அங்கெல்லாம் உறுதியாக நின்று பிரச்சனைகளைத் தீர்த்தவர் மரியா. இன்று கல்வாரியில், தன் மகனுக்கு எவ்வகையிலும் உதவ முடியவில்லை என்றாலும், தன் பிரசன்னத்தால், மகனின் வேதனைகளில் பங்கெடுத்து, அந்த வேதனைகளை ஓரளவாகிலும் குறைக்கும் நோக்கத்துடன், சிலுவையடியில் நின்றார்.

மரியாவுடன் நின்றது வேறு இரு பெண்கள். இயேசுவின் அன்பைப் பெற்ற சீடர். சீடரின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும், அது யோவான் என்பது மரபு வழி நமக்கு வரும் ஒரு தெளிவு. சீடர்களிலேயே மிக இளவயதுள்ளவர், யோவான். மற்ற சீடர்களெல்லாம் ஓடி ஒளிந்துகொண்டபோது, யோவானுக்கு மட்டும் எப்படி இந்த துணிவு வந்தது? இளவயது ஒரு காரணமாக இருக்கலாம். இளங்கன்று பயமறியாது என்று சொல்வதில்லையா? ஆனால், அதை விட, யோவான், இயேசுவின் மீது கொண்டிருந்த ஆழமான அன்பு, அவரை அந்த சிலுவைக்கடியில் வேரூன்றி நிற்க வைத்தது.

இதே யோவானும், அவரது சகோதரர் யாக்கோபும் இயேசுவுக்கு மிக நெருக்கத்தில் இருக்க விரும்பிய காலம் உண்டு. நெருக்கமேன்றால்... ஒருவர், இயேசுவின் வலது புறம், மற்றொருவர், அவரது இடது புறம் என்று, அவ்வளவு நெருக்கம் தேடினர். வெறும் நெருக்கம் மட்டும் அல்ல. நெருக்கத்தோடு, அரியணைகளும் தேடினர். இதனால் பிறர் கோபத்தையும் தூண்டிவிட்டனர். அவர்கள் இந்த அரியணைகளைக் கேட்ட நேரமும், பரிதாபமான நேரம். இயேசு தான் ஏறப்போகும் அரியணையைப்பற்றி, சிலுவையைப்பற்றி, தெளிவாகச் சொன்னதும், யோவானும் யாக்கோபும் இயேசுவிடம் அரியணைகள் கேட்டனர். (மாற்கு 10: 35-45; மத்தேயு 20: 20-28) அந்த நேரத்தில் யோவானுக்கு எதுவும் விளங்கவில்லை. இதோ, இங்கே, இப்போது, அவருக்கு, எல்லாம் தெளிவானது. இயேசு கூறிய அரியணை எது என்று கண்டார், அதில் ஏற தயாராக, அவரும் அங்கு நின்றார்.

'நிற்பது' என்ற தமிழ் சொல்லுக்கும் Stand என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் பல பொருட்கள் உண்டு. stand, withstand, understand என்று ஆங்கிலத்தில் stand என்ற சொல்லுக்கு இன்னும் பல பரிணாமங்கள் உண்டு. கொள்கைப் பிடிப்போடு வாழ்வது, எதிர்ப்புகளைச் சமாளித்து வாழ்வது, புரிந்து கொண்டு செயல்படுவது என்ற பல கோணங்களில், stand என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
தமிழிலும், நிலைத்து நிற்பது, வேரூன்றி நிற்பது, மலைபோல் உயர்ந்து நிற்பது என்ற கோணங்களிலும், நின்று நிதானமாய் செயல்படுவது என்ற கோணத்திலும் 'நிற்பது' என்ற வார்த்தை, நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
இயேசுவின் தாயும், அன்பு சீடரும் அந்தச் சிலுவைக்கடியில் நின்று கொண்டிருந்தனர் என்று சொல்லும்போது, 'நிற்பது' என்ற சொல்லில் புதைந்திருக்கும் அத்தனை அர்த்தங்களையும் கூட்டிச் சேர்த்து நாம் சிந்திக்க வேண்டும்.

தன்னை ஆணிகளால் அந்தச் சிலுவையில் நிற்கவைத்து வேடிக்கைப் பார்க்கும் தீய சக்திகளைக் கண்டும், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் நின்ற, தன் தாயையும், அன்பு சீடரையும் கண்ட இயேசு, மன நிறைவடைந்திருப்பார். தான் சொல்லித்தந்த நம்பிக்கை பாடங்களுக்கு சிறந்த சாட்சிகளாக, தன் தாயும், அன்புக்குரிய சீடரும், சிலுவைக்கடியில் நின்றது, அவருக்கு ஆறுதலைத் தந்திருக்கும். தான் செய்த பணிக்கும், தான் இப்போது அனுபவிக்கும் இந்த கொடிய வேதனைக்கும் அர்த்தம் உண்டு என்பதை, இயேசு, அவ்வேளையில் உணர்ந்திருப்பார். இன்பங்களை விட, தன்னோடு துன்பங்களையே அதிகம் பகிர்ந்துகொண்ட இந்த இரு உள்ளங்களும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நிறைவுடன், அவர்கள் இருவருக்கும், இயேசு பிரியா விடை அளிக்கிறார். "அம்மா, இதோ உம் மகன்... இதோ உம் தாய்."

மகாபாரதத்தில் வரும் கர்ணன் என் நினைவுக்கு வருகிறார். கொடுப்பதொன்றையே வாழ்வின் கொள்கையாய் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் கர்ணன், தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கொடுத்தக் கொடைகள், மிக உன்னதமானவை. பிறப்பிலேயே தன்னைக் காக்க தன் உடலோடு பிறந்த கவசத்தையும், காதணிகளையும், அவற்றை  யாசித்து வந்த ஒரு முனிவருக்கு கர்ணன் வெட்டித் தந்தார். அந்த முனிவர், வஞ்சகமாய் வேடமணிந்து வந்திருக்கும் கண்ணன் என்பது தெரிந்தும், தான் அளிக்கும் கவசமும், காதணியும்தான் தன் உயிரைக் காக்கும் கேடயங்கள் என்பதை உணர்ந்திருந்தும், அவற்றை கர்ணன் வெட்டித் தந்தார் என்று மகாபாரதம் சொல்கிறது.


தன் வாழ்நாள் முழுவதும் மற்றவரை வாழவைக்க பல வழிகளில் தன்னையே தந்த இறைமகன் இயேசு, சிலுவையில் தன் உயிர் பிரியும் அந்த நேரத்தில், தனது கொடைகளின் சிகரமாக தன் தாயையும் உலகிற்களித்தார். 

Friday, October 20, 2017

Politics and Religion அரசியலும் மதமும்

 
Jesus Vs Caesar

29th Sunday in Ordinary Time

“Give back to Caesar what is Caesar’s, and to God what is God’s” is the wise counsel given by Jesus in today’s Gospel. Jesus seems to invite us to reflect on Caesar and God, which brings to focus our thoughts on politics and religion. Unfortunately, in many countries around the globe, religion has mingled with politics in a dangerous and devastating manner – as in the case of the Gaza strip, in the form of ISIS, Boko Haram, Hindutva etc.
Our reflections today, revolve around politics and politicians. I have very minimal respect for politicians. This may be due to the fact that I am yet to meet an honest, noble politician in person. I have heard about them from the media. I am sure there are a few of them; but they must be a rare breed, in danger of extinction. My idea of politics does not allow honest persons to survive there for long. My definition of politics has ‘connivance’ and ‘compromise’ written all over it.

When we say ‘politics’, we do not mean only party politics that dominates government circles in all the countries. We also mean politics that is present in all the other human spheres of activities, including religion. “Those who believe that politics and religion do not mix, understand neither” is one of the quotes attributed to Albert Einstein. A similar quote is also attributed to Mahatma Gandhi which goes like this: “Those who believe religion and politics aren't connected don't understand either.”
Politics and religion have been almost like inseparable twins in human history. They have co-existed as friends and foes. When convictions came to the fore, they were foes; but when compromises were struck, they were friends. In compromises, unfortunately, it was always politics that thrived, whereas religion – true religion – died.

Was Jesus involved in politics? I think so. In so far He had to deal with various powers that were operative in his times, he had to deal with politics. We are given one such incident in the life of Jesus as our gospel today. Here is the gospel passage as given in Matthew:
Matthew 22:15-21
Then the Pharisees went out and laid plans to trap him in his words. They sent their disciples to him along with the Herodians. “Teacher,” they said, “we know that you are a man of integrity and that you teach the way of God in accordance with the truth. You aren’t swayed by others, because you pay no attention to who they are. Tell us then, what is your opinion? Is it right to pay the imperial tax to Caesar or not?”
But Jesus, knowing their evil intent, said, “You hypocrites, why are you trying to trap me? Show me the coin used for paying the tax.” They brought him a denarius, and he asked them, “Whose image is this? And whose inscription?” “Caesar’s,” they replied.
Then he said to them, “So give back to Caesar what is Caesar’s, and to God what is God’s.”

We can see the traits of two types of politics in this passge: the more commonly used ‘dirty politics’ of the Pharisees and the Herodians as well as the rarely found ‘good politics’ as demonstrated by Jesus.

First, the ‘dirty politics’: The opening lines of today’s gospel reveal some of the traits of this more-commonly-found-dirty-politics… The fist one: planning to trap someone in his/her words. As far as my idea of politics goes, this is probably the ONLY work done by most politicians. The very next sentence gives us a clue to another trait of politicians – striking a compromise to defeat a common enemy. It is also clear from these lines how political leaders act… namely, how they would depute emissaries in critical situations. In today’s gospel we see how the Pharisees sent their disciples along with the Herodians. Both Herod and the Pharisees themselves would not burn their fingers. They had had enough encounters with Jesus to have learnt how smart He was. Then, why risk one more time?

The Pharisees and the Herodians were usually sworn enemies. They held very opposing views of the Roman domination and Caesar. For the Pharisees, God was the supreme ruler and anyone who claimed divinity was an abomination. Caesar claimed divinity and hence, for the Pharisees he was an abomination. For the Herodians, Caesar was a saviour of sorts. Following their leader Herod, they were willing to serve Caesar. These two groups belonging to two different enemy camps were willing to compromise their positions to thwart a common enemy – Jesus. For the Herodians, compromises were their ‘daily bread’ since they were proper politicians. But for the Pharisees? Well, for them too… since they were politicians in clerical garb and with clerical titles.

The way they talk to Jesus brings to light another aspect of politicians, namely, how they approach their enemy carrying a garland within which are hidden daggers. If politicians speak out their real thoughts and real intentions, they would be laughed at. Hence, almost by instinct, they lay their snares with sugar-coated words. Thus, the opening lines of today’s gospel give us quite a few thoughts on ‘dirty politics’.

Now, to the ‘good politics’: The second part of today’s gospel gives us hope that politics can still be saved. Here we see the ‘good politics’ as practised by Jesus. Good politics begins by calling a spade a spade. As against the sweet talk of the Pharisees and the Herodians, Jesus confronts them with their insincerity. Such courage has been found in the history of politics, but very rarely.
Coming to the core of today’s gospel, we are given one of the most famous lines spoken by Jesus. These words of Jesus is probably one the most oft-quoted lines: “Render unto Caesar what is Caesar’s and to God what is God’s.” If only these words of Jesus are followed in all spheres of life, namely, give each one what is due to him or her, this world would automatically become heaven.

The whole reflection may have sounded as venting my anger over politicians. But, as one of my fingers is pointed towards them, I need to be aware that three more are pointing towards me. Thus I need to examine myself thrice over to see how many of the traits of ‘dirty-politics’ are present in my life and also to see how much of the ‘good politics’ I can put into practice.
“Render unto Caesar what is Caesar’s and to God what is God’s.” When Jesus told us to give back to Caesar his coins since they bore his image, in the same breath, He reminded us that we are created in the image of God (Genesis 1: 26) and therefore we need to give ourselves back to God. In that sense, Caesar too is to be given back to God!

The Church celebrates Mission Sunday today. Here are a few lines from the message of Pope Francis for this year’s Mission Sunday:
“The Church’s mission impels us to undertake a constant pilgrimage across the various deserts of life, through the different experiences of hunger and thirst for truth and justice…
Mission reminds the Church that she is not an end unto herself, but a humble instrument and mediation of the Kingdom. A self-referential Church, one content with earthly success, is not the Church of Christ, his crucified and glorious Body. That is why we should prefer ‘a Church which is bruised, hurting and dirty because it has been out on the streets, rather than a Church which is unhealthy from being confined and from clinging to its own security’…
Young people are the hope of mission. The person of Jesus Christ and the Good News he proclaimed continue to attract many young people. They seek ways to put themselves with courage and enthusiasm at the service of humanity… The next Ordinary General Assembly of the Synod of Bishops, to be held in 2018 on the theme Young People, the Faith and Vocational Discernment, represents a providential opportunity to involve young people in the shared missionary responsibility that needs their rich imagination and creativity.”

World Mission Sunday

பொதுக்காலம் 29ம் ஞாயிறு

அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கொடுக்கப்பட்டால், இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான், உலகம், சிறிது சிறிதாக, நரகமாக மாறி வருகிறதோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்ற புகழ்பெற்ற வரிகளை, இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியம், கிறிஸ்தவம் என்ற எல்லைகளைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய இப்புகழ் மிக்கக் கூற்றையும், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதையும், இந்த ஞாயிறு சிந்தித்து, பயன் பெறுவோம்.

சீசருக்கும், கடவுளுக்கும், பொதுவாக யாருக்குமே அவரவருக்கு உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து, மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக் கொடுக்க மறுத்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு அவர்களிடம் பல உவமைகளைக் கூறினார். இந்த  உவமைகள் வழியே, இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை, பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம், இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.
மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், எளிய ஒரு நிகழ்ச்சியைப் போல் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும் அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால், பல உண்மைகளை, பல பாடங்களை, நாம் பயில முடியும். முயல்வோம் வாருங்கள்.

கடந்த மூன்று வாரங்களாய் இயேசு கூறிய உவமைகள் மூலம் கசப்பான பல பாடங்கள் பரிசேயர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள், இயேசுவை எப்படியாவது வென்றுவிடும் வெறியில், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தாம் ஏரோதியர்கள்.
பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில், கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் பரிசேயர்கள்.
ஏரோதியர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப்  பணிகள் செய்தனர். கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்துவிட்டனர். காரணம்? இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை, நாம், இந்தியாவிலும், இன்னும் பிற நாடுகளிலும், பார்த்து வருகிறோம். பாம்பும், கீரியும் போல, ஒருவரையொருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, நாம் பல முறை வேதனையில் சிரித்திருக்கிறோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.

அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம். ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக நம் மனசாட்சியை அடமானம் வைத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? இக்கேள்விகளுக்கு உண்மையான விடைகள் தேடினால், நம் வாழ்விலும் அரசியல் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகும்.

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல், நமக்கு அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்:
மத்தேயு நற்செய்தி 22: 18-21
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவைஎன்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்என்று அவர்களிடம் கூறினார்.

வரி செலுத்த பயன்படுத்தப்பட்ட 'தெனாரியம்' என்ற நாணயம், அந்த நாணயத்தைப் பார்த்தபின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள் ஆகியவை, நமது மூன்றாம் சிந்தனை. 'தெனாரியம்' என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம், உரோமையப் பேரரசன் சீசரின் உருவமும், "தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் 'Pontifex Maximus' அதாவது குருக்களுக்கெல்லாம் பெருங்குரு என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர், தன்னை, வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல், மதத்தலைவனாகவும், கடவுளாகவும் காட்டுவதற்கு, அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தார்.

சீசருக்கு வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம், ‘சீசரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள் என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்றார். சீசரையும், கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.

மனித வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு, மதச்சாயங்கள் பூசப்படுவதையும், நாம், அதிக அளவில் கண்டு வருகிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களை மேடைகளில் பறைசாற்றும் அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மதத் தலைவர்களைச் சந்திப்பது, மத வழிபாடுகளில் ஈடுபடுவது என்று தங்கள் நிறத்தை மாற்றுவதைக் காண்கிறோம்.
அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இறைவனின் துணையை, ஆசீரை நாடிச் செல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இறைவனையும், இறைவனின் அடையாளங்கள், திருத்தலங்கள் ஆகியவற்றையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள், ஆண்டவனின் சன்னதியில் பணிவோடு நுழைகின்றனர். பிறகு, அந்த ஆண்டவனைப் பீடங்களில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, தங்களையே பீடங்களில் ஏற்றிக் கொள்கின்றனர். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை.

இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது ஒருபக்கம் என்றால், மதங்களில், மதநிறுவனங்களில் அரசியல் கலந்திருப்பது மறுபக்கம்.  மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், எங்கிருந்தோ வந்த இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல்வாதிகளின் நாடகங்களையும் விஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.
மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல், கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?