Wednesday, August 24, 2016

Shared dinner without rituals சடங்குகளற்ற சமபந்தி


Amatrice – the epicentre of the earthquake

22nd Sunday in Ordinary Time

We begin this Sunday Reflection with a heavy heart. A devastating earthquake of 6.2 magnitude hit central Italy (near Perugia) on August 24, early morning at 3.36 a.m. The death toll keeps rising every hour as more and more bodies are found from among devastated buildings, the last count being more than 120 at 8.30 p.m. on August 24. Pope Francis, instead of the Catechesis he usually shares on Wednesdays, said the following words on August 24: 
“I had prepared the catechesis for today, as for all Wednesdays during this year of mercy, focusing on the closeness of Jesus. However on hearing of the news of the earthquake that has struck central Italy, and which has devastated entire areas and left many wounded, I cannot fail to express my heartfelt sorrow and spiritual closeness to all those present in the zones afflicted.
“I also express my condolences to those who have lost loved ones, and my spiritual support to those who are anxious and afraid. Hearing the mayor of Amatrice say that the town no longer exists, and learning that there are children among the dead, I am deeply saddened… I ask you to join me in praying to the Lord Jesus, Who is always moved by compassion before the reality of human suffering, that He may console the broken hearted, and through the intercession of the Virgin Mary, bring them peace. With Jesus let our hearts be moved with compassion. So we will postpone, then, this week’s catechesis until next Wednesday, and I invite you to pray with me a part of the holy Rosary, the sorrowful mysteries.” He went on to recite the Rosary with the people gathered in St Peter’s Square. We join the Pope and the whole world in raising our prayers to God for the people who have suffered this tragedy.

We turn our attention to this Sunday’s Gospel. Food is a basic necessity of any human being… in fact, of any living organism. Taking food in a group is a human activity as well as that of animals. Poor trees and plants… They have to simply stand rooted in a spot and take their food all alone… from the ground and the sun. Unfortunately, human beings are imitating trees and plants, taking food standing all alone in this fast food age. When talking of food being taken in groups, I cannot but think of how families these days are losing the habit of sitting down and eating together. We are aware of the famous axiom ‘A family that prays together, stays together.’ The present day world would call for a similar axiom that says: A family that dines together shines together… or, something to that effect. Even when a family decides to eat at a prescribed time, most often these times are determined by the programmes on the TV. I know of families and religious communities that sit in front of the TV, eating their supper ‘together’, not even aware of what they are eating, since their eyes and minds are devouring the TV programmes. Such trends are a guarantee that our medical bills will double or triple!

Talking of taking food in groups also calls our attention to formal dinners. The richer the dinner, the more complicated the rituals! As a Priest, I have been invited to many dinners. Whenever I attended formal dinners, I have been all the time on my guard, trying to do things according to rituals. Whenever I returned from such dinners my stomach was half empty and my heart… quite empty. In sharp contrast, I have enjoyed the simple, shared food in poor families without the additional burden of rituals. I returned from these meals, more ‘filled’ in every way!

Is this a Sunday homily or a lesson on how to conduct a dinner or conduct ourselves in a dinner? The Gospel today (Luke 14: 1,7-14) talks of Jesus being invited to a dinner on a Sabbath Day, by a Pharisee who happened to be a ruler! (Pharisee + Ruler + Sabbath … the picture gets more complicated, meaning… ritualistic!) Instead of simply attending the dinner, Jesus begins teaching them some ‘strange’ lessons as to how to conduct a dinner and how to attend a dinner. I call these lessons ‘strange’, because they were not done that way among the Jews.
A Jewish dinner would have quite a few rituals to be followed… the ritual of washing before entering the house, the ritual of wishing one another, rituals before, during and after the meal… This being a Sabbath, there would have been extra rituals, perhaps. Was Jesus familiar with all these rituals? Not having been trained as a Pharisee and not caring for empty rituals all his life, Jesus would not have followed the required rituals minutely. To make things more complicated, the Gospel says that Jesus was being watched! Here are the opening words of today’s Gospel: One Sabbath when he went to dine at the house of a ruler who belonged to the Pharisees, they were watching him. (Luke 14: 1)

Jesus was not a stranger to being watched or gazed at. He has always been surrounded by common people who paid close attention to all he said and all he did. That was the adoring gaze of the poor people and Jesus, perhaps, would have enjoyed that attention. Now, the gaze of the Pharisees would have been more discomforting to Jesus.
I put myself in the place of Jesus. If I am being watched at a dinner, I would like to hide from the gaze of those people. I would be extra careful not to make a mistake. I would like to escape from the dinner scene as quickly as possible. Jesus was quite different. When surrounded by those scrutinising Pharisees, he taught them a few things that were ‘more proper’ than the rituals they had in their minds. He gave a very practical advice to those who were seeking the first place.
Luke 14: 7- 11
Now he told a parable to those who were invited, when he marked how they chose the places of honour, saying to them, "When you are invited by any one to a marriage feast, do not sit down in a place of honour, lest a more eminent man than you be invited by him; and he who invited you both will come and say to you, 'Give place to this man,' and then you will begin with shame to take the lowest place. But when you are invited, go and sit in the lowest place, so that when your host comes he may say to you, 'Friend, go up higher'; then you will be honoured in the presence of all who sit at table with you. For every one who exalts himself will be humbled, and he who humbles himself will be exalted."
Jesus’ lesson in humility can easily be misinterpreted. I imagine myself entering a banquet hall. The words of Jesus ring in my heart… “Go and sit in the lowest place” So, I choose the last place wishing that the host sees me and takes me to the higher place. Dinner begins. The host comes around wishing everyone. As he comes close to me I am waiting to hear him say: “Oh, Father, why are you here? Come up higher…” But… to my great disappointment, nothing like that happens. He comes, greets me and… and… moves on. No invitation to move up. All my efforts at humility are wasted. Surely Jesus did not talk of this type of humility.

Jesus then turned to the host and gave him another lesson. Usually a formal dinner is loaded with calculations. On the part of the host, there are calculations in terms of whom to invite, who takes which seat of honour, how many types of liquor to serve, how many dishes… etc. etc… On the part of the guests, there are calculations as to what to wear for this occasion, what presents to take, how much to eat, whom to meet and whom to avoid… etc. etc… The more the calculations, the more artificial the dinner!
In some other dinners, like the one given by Herod, when liquor overflows, lines of decency and civilization get erased. Some twisted, perverted thinking creeps in… all in the name of enjoying a dinner. The result? The head of John the Baptist on a platter! (Dear Friends, August 29, Monday, we remember the beheading of John the Baptist.) It is a pity that such a noble person like John the Baptist had to be killed for such silly reasons… namely, the promises blurted out by the intoxicated Herod during a dinner! Whenever Jesus attended a ‘big’ dinner, this dinner-tragedy must have haunted him.

In contrast to those artificial dinners, those excesses of dinner parties, Jesus taught them and still teaches us as to how a real dinner should be conducted…
Luke 14: 12-14
Jesus said also to the man who had invited him, "When you give a dinner or a banquet, do not invite your friends or your brothers or your kinsmen or rich neighbours, lest they also invite you in return, and you be repaid. But when you give a feast, invite the poor, the maimed, the lame, the blind, and you will be blessed, because they cannot repay you. You will be repaid at the resurrection of the just."


பொதுக்காலம் - 22ம் ஞாயிறு

இந்த ஞாயிறு சிந்தனைகளை கனமான இதயத்துடன் துவங்குகிறோம். ஆகஸ்ட் 24, புதனன்று, அதிகாலை 3.30 மணியளவில், மத்திய இத்தாலியில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம், 100க்கும் மேற்பட்டோரின் உயிர்களை, குறிப்பாக, குழந்தைகளின் உயிர்களைப் பறித்துச் சென்றுள்ளது. அதே புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் வழக்கமாக பகிர்ந்துகொள்ளும் மறைக்கல்வி உரைக்குப் பதிலாக, நிலநடுக்கத்தைப் பற்றிய தன் உணர்வுகளை இவ்விதம் பகிர்ந்துகொண்டார்:
இரக்கத்தை மையப்படுத்தி, நாம் பகிர்ந்துவரும் மறைக்கல்வி தொடர் உரையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கிறேன். மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இவ்வேளையில், என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளது மற்றும் காயமடைந்துள்ளது குறித்து என் உள்மன வேதனையை இந்நேரத்தில் வெளியிடுகிறேன். வழக்கம்போல் இன்றும் உங்களுடன் பகிர்வதற்காக என் மறைக்கல்வி உரையைத் தயாரித்து வைத்திருந்தேன். ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புக்களைக் கேள்விப்பட்டதும், என் ஆழ்ந்த கவலையையும், ஆன்மீக நெருக்கத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுடன் பகிர்ந்து கொள்வதே முக்கியம் என கருதுகிறேன்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்கள் குறித்த அச்சத்திலும் பதட்டத்திலும் வாழும் மக்களுக்கு என் ஆன்மீக நெருக்கத்தையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். அமாத்திரிச்சே நகர் முற்றிலும் அழிந்துவிட்டது என்பதையும், அங்கு உயிரிழந்துள்ளோரில் பலர் சிறார் என்பதையும் அந்நகர் மேயர் கூறக்கேட்டபோது, மிகவும் வேதனையுற்றேன்.
மக்களின் துன்பங்கள் கண்டு எப்போதும் இரக்கமுள்ளவராக இருக்கும் இயேசுவை நோக்கி, இம்மக்களுக்காகச் செபிக்குமாறு உங்களிடம் கேட்கிறேன். உள்ளம் நொறுங்கியவர்களுக்கு இயேசு ஆறுதல் அளிப்பாராக. அன்னை மரியின் பரிந்துரை வழியாக, அவர்களுக்கு அமைதி கிட்டுவதாக. இப்போது, துக்கத்தின் மறையுண்மைகளை தியானித்து, செபமாலை சொல்வோம்.
இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த மக்களோடு இணைந்து செபமாலை செபித்தார். திருத்தந்தையுடனும், அனைத்துலக மக்களோடும் இணைந்து, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோர் அனைவருக்காகவும் நாம் செபங்களை எழுப்புவோம்.

Invitations to a Meal—Whom Does God Invite?
இன்றைய  ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி நம் சிந்தனைகளைத் துவக்குவோம். அனைத்து உயிரினங்களின் அடிப்படை தேவை உணவு. மனிதர்களுக்கும் இது ஓர் அடிப்படை தேவைதான். எனினும், உண்ணுதல் என்ற செயல், நம் மத்தியில் பசி என்ற அடிப்படை தேவையைத் தீர்க்கும் கடமை மட்டுமல்ல. மாறாக, கூடிவந்து உணவு உண்ணுதல், உறவை வளர்க்கும் ஒரு கருவியாகவும் உள்ளது. மிருகங்களும் கூடிவந்து உண்கின்றன. ஆனால், அவ்விதம் கூடிவருவது அவை அறிந்து செய்யும் செயலா என்ற கேள்வி எழுகிறது. மனிதர்கள் மத்தியில் மட்டுமே, குழுவாக கூடிவந்து உண்பது ஒரு சமூகக் கலையாக வளர்ந்துள்ளது.
பாவம், தாவரங்கள்... அவை ஒவ்வொன்றும் தனித்து வேரூன்றி நின்ற இடத்திலேயே தினமும் உணவு உண்பது இயற்கை வகுத்த நியதி. தனித்துண்ணும் தாவரங்களைப் போல் மனிதர்களும் மாறிவரும் நிலை மனதை நெருடுகிறது. துரிதமாகச் செல்லும் இன்றைய உலகில், காளாண்களைப்போல் வளர்ந்திருக்கும் துரித உணவகங்களில், மனிதர்களாகிய நாம், தாவரங்களைப் போல் நின்றபடியே அவசர அவசரமாக உணவை முடிக்கும் காட்சிகள் பெருகி வருகின்றன.
இரவும் பகலும் உழைக்கவேண்டியச் சூழலில், சேர்ந்து அமர்ந்து பேசி, சிரித்து மகிழ்வது, சேர்ந்து உண்பது போன்ற குடும்ப செயல்பாடுகள் மிக மிக அரிதாகி வருகின்றன. ஒரு சில இல்லங்களில் இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்பது நிகழத்தான் செய்கின்றது. ஆனால், அவர்கள் அப்படி உண்ணும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடியே உண்கின்றனர் என்பது பரிதாபமான உண்மை. தாவரங்களைப் போல் தனித்து நின்று துரிதமாக உணவை உண்பது, தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்து உண்பது, போன்ற பரிதாபப் பழக்கங்களின் பின் விளைவுகளால், மருத்துவர்களை நாம் சந்திக்கும் நேரம் அதிகமாகி வருகிறது.

சேர்ந்துண்பதைப்பற்றி பேசும்போது, நாம் கலந்துகொள்ளும் விருந்துகள் பற்றியும் சிந்திக்கலாம். விருந்தென்று வந்துவிட்டால், விருந்து பரிமாறுவதில், விருந்து உண்பதில் எத்தனையோ வழி முறைகள், விதி முறைகள்... ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பழக்கம், வழி முறை உண்டு. பொதுவாகவே, மிகப்பெரும் செலவில், மிக உயர்ந்த முறையில் நடத்தப்படும் விருந்துகளில், உணவு உண்பதை விட, அங்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகள், சாத்திர சம்பிரதாயங்கள் அதிக அளவில் இருக்கும். அந்த விருந்துகளில் எதை எதை எந்தெந்த நேரங்களில் செய்யவேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு விருந்துக்குச் செல்லவேண்டும், இல்லையேல் அவமானப்பட வேண்டியிருக்கும்.

ஓர் அருள் பணியாளர் என்ற முறையில், பல விருந்துகளில் பங்கேற்றுள்ளேன். சாதாரண, எளிய குடும்பங்களில் எந்தவித சடங்கும் இன்றி விருந்து உண்டு, மன நிறைவோடு வந்திருக்கிறேன். வசதிபடைத்தவரின் விருந்துகளில், எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது, எதை எடுப்பது, எத்தனை முறை எடுப்பது என்று கணக்குப் போடுவதிலேயே விருந்தின் பெரும்பகுதி நேரத்தைக் கழித்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் இந்த விருந்துகளிலிருந்து திரும்பியபோது வயிறும் நிறையவில்லை, மனதும் நிறையவில்லை.
விருந்தைப் பற்றி ஏன் இவ்வளவு விளக்கம்? இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப்பற்றி, அந்த விருந்து நேரத்தில் இயேசு சொல்லித்தந்த பாடங்களைப்பற்றி இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஒய்வு நாள் ஒன்றில், இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்... இன்றைய நற்செய்தி இப்படி ஆரம்பமாகிறது. இது சாதாரண விருந்து அல்ல. ஒரு பரிசோதனை விருந்து. இயேசுவைச் சோதிக்கக் கொடுக்கப்பட்ட ஒரு விருந்து.

யூத விருந்து முறைகளில் பல சடங்குகள் உண்டு. வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தங்களையே சுத்தமாக்கும் சடங்கு. உள்ளே சென்றதும் ஒருவர் ஒருவரை வாழ்த்தும் சடங்கு... விருந்துக்கு முன், விருந்து நேரத்தில், விருந்து முடிந்ததும்... என்று ஒவ்வொரு நேரத்திற்கும் குறிக்கப்பட்டச் சடங்குகள் பல உண்டு. இயேசு இச்சடங்குகளையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சாத்திர சம்பிரதாயங்கள் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை.
இப்படி சுதந்திரமாக வளர்ந்தவரை, மற்றவர்களையும் அவ்வாறே வளர்க்க நினைத்தவரை, பரிசேயர் தலைவர் ஒருவர் விருந்துண்ண அழைத்திருந்தார். நற்செய்தியில் வரும் அடுத்த வரி, அந்த விருந்தின் உள் நோக்கத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்."

சூழ்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது இயேசுவுக்குப் புதிய அனுபவம் இல்லை. அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபோல் நடந்தது. சாதாரண, எளிய மக்கள் இயேசுவை சுற்றி வந்து அவரைக் கூர்ந்து கவனித்தனர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க, அவரது ஒவ்வொரு செயலையும் கண்டு பிரமிக்க, பின்பற்ற மக்கள் எப்போதும் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அந்த எளிய மக்கள் கூர்ந்து கவனித்ததற்கும், இப்போது இந்த பரிசேயர் வீட்டில் இயேசுவைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்ததற்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருந்திருக்கும்.

இப்படி ஒரு சூழலில் நான் இருந்தால் என்ன செய்வேன்? முடிந்தவரை அச்சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதிலேயே என் கவனம் இருக்கும். எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவேன். எவ்வளவு விரைவில் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவில் வெளியேறுவேன்.
இயேசு என்னைப்போன்றவர் இல்லை. அசாத்தியத் துணிச்சல் அவரிடம் இருந்தது. இறைதந்தை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, உண்மை மீது அவருக்கிருந்த பற்று இவற்றின் வெளிப்பாடாக வந்த துணிச்சல் அது. எனவேதான், அந்தப் பரிசேயர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் எழுந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறினார்.

அவரது முதல் கருத்து, விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது கருத்து விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்பதுபோல் தெரியும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையைத் தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச் சொன்னார் இயேசு. இதோ, இயேசு வழங்கிய முதல் பாடம்...
லூக்கா 14: 7-11
விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனை காட்சி ஓடும். நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர் நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்து விடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு நான் அமர்ந்திருக்கிறேன்.
விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத் தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. படபடப்பும் அதிகமாகிறது. வீட்டுத் தலைவர் என்னையும் வந்து வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடம் இருந்து வரவில்லை. என் மனம் உடைந்து போகிறது. கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்தபோது என்னிடம் இருந்த தாழ்ச்சி அர்த்தமில்லாமல் போகிறது. இந்தக் கற்பனைக் காட்சியைச் சிந்திக்கும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்...
இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு, எதிர்பார்ப்போடு கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே இல்லை. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம். உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காண முடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொன்ன பாடம் பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளிய வைத்திருக்கும்.

இயேசுவின் அடுத்த பாடம் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது.
செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் கணக்குகள் நிரம்பி வழியும். யார் யாரை அழைக்கவேண்டும், யார் யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள்... இவ்விதம்... விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும்... என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யார் யாரைச் சந்திப்பது, யார் யாரைக் கண்டும் காணமல் போவது... இவ்விதம் இவர்கள் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.
ஒரு சில விருந்துகளில், மது அதிகமாகி, மதி குறைந்து போகும். பல வேளைகளில் இத்தகைய விருந்துகளில் நிகழும் விபரீதங்களைப் பற்றி கேள்விப்படும்போது, இவர்கள் மனிதப்பிறவிகள்தானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நாளை, ஆகஸ்ட் 29ம் தேதி, திங்களன்று, திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். அவரது தலை வெட்டப்பட்டது, ஒரு விருந்து நேரத்தில். மதுவின் போதையில், ஏரோது மன்னன் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க, அது யோவானின் தலை வெட்டப்படும் அளவுக்கு, அத்துமீறிச் சென்றது. ஒவ்வொரு விருந்துக்கும் சென்றபோதெல்லாம், தன் நெருங்கிய உறவினரான யோவான், ஒரு விருந்து நேரத்தில் கொல்லப்பட்டார் என்ற அந்த வேதனை, இயேசுவின் மனதில் நிழலாடியிருக்கும்.
இப்படிப்பட்ட செயற்கைத்தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற அனைத்து சுவைமிக்க ஆன்ம உணவையும் படைக்கும் இத்தகைய விருந்தைப்பற்றி இயேசு கூறும் வார்த்தைகள், இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

லூக்கா 14: 12-14 
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்என்று கூறினார்.Tuesday, August 23, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 36

The Widow of Nain embraces her son raised from the dead

கருத்தரங்கு ஒன்றில் உரை வழங்கிக்கொண்டிருந்த பேச்சாளர், திடீரென தன் 'பர்ஸை'த் திறந்து, ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்தார். "இந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, அரங்கத்தில் இருந்த பலர் கைதூக்கினர். 'கொஞ்சம் பொறுங்கள்' என்று சொன்ன பேச்சாளர், அந்த 500 ரூபாய் நோட்டைக் கசக்கினார். கசங்கிப்போன நோட்டைக் காட்டி, "இப்போது, இது யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, கரங்கள் மீண்டும் உயர்ந்தன. பேச்சாளர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் மிதித்தார். பின்னர், அதைக் கையில் எடுத்து, "இது யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, அரங்கத்தில் பலரது கரங்கள் உயர்ந்தன.
பேச்சாளர் தொடர்ந்தார்: "நண்பர்களே, இந்த ரூபாய் நோட்டை நான் கசக்கினாலும், மிதித்தாலும் அதன் மதிப்பு குறையவில்லை என்பதை நீங்கள் நம்பியதால், அது வேண்டும் என்று சொன்னீர்கள். ஒரு காகிதத்திற்கு இவ்வளவு மதிப்பு தரும் நீங்கள், உங்களுக்கு நீங்களே மதிப்பு தருகிறீர்களா? அல்லது, மற்ற மனிதர்களுக்கு அந்த மதிப்பு தருகிறீர்களா?" என்று கேட்டபோது, அரங்கம் அமைதியானது.

வாழ்வின் பல சூழல்களில், சுழல்களில் சிக்கித் தவிக்கும்போது, வாழ்வுச் சக்கரம் நம்மைக் கசக்கிப் பிழிவதைப் போல் உணரும்போது, மற்றவர்களால் மிதிபடுகிறோம் என்று உணரும்போது, நம்மைப் பற்றிய மதிப்பும், நம்பிக்கையும் குறைந்து, தாழ்வு மனப்பான்மை அதிகரிப்பதால், மனமுடைந்து போகிறோம். அதேபோல், கசக்கப்பட்டு, மிதிபட்டு வாழும் மற்றவரையும் மதிக்க மறுக்கிறோம்.
இஸ்ரயேல் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்கள், சட்டங்கள், சம்பிரதாயங்கள் போன்ற சுமைகளால் கசக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த நயீன் நகர கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமையில், நம் தேடல் பயணம் தொடர்கிறது. அந்தப் பெண்ணுக்கு உரிய மதிப்பை வழங்கி, அவரது தேவையைத் தீர்க்க முன்வருகிறார், இயேசு.
சமுதாயத்தால் கசக்கப்பட்டு, மிதிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெண்ணின் உண்மையான மதிப்பை உணர்ந்த இயேசு, அந்த மதிப்பை தான் உணர்ந்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் மனதிலும் பதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இப்புதுமையை, வெளிப்படையாக, ஒரு கூட்டத்தின் நடுவே ஆற்றினார் என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, இயேசு ஆற்றிய பல புதுமைகள், விண்ணப்பத்தின் அடிப்படையில் செய்யப்பட்டப் புதுமைகள். நோயுற்றவரோ, அல்லது, அவர் சார்பில் மற்றொருவரோ விண்ணப்பம் செய்வதுண்டு. இந்தப் புதுமையிலோ, இயேசு, எவ்வித விண்ணப்பமும் இன்றி, நயீன் கைம்பெண்ணுக்கு உதவுகிறார்.

இயேசுவின் இந்தப் புதுமை, முன்னறிவிப்பு ஏதுமின்றி வாழ்வில் நாம் பெற்றுள்ள, அல்லது, செய்துள்ள நற்செயல்களைப்பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கிறது. உதவிகள் தருவதிலும், பெறுவதிலும், பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும்போது, அல்லது விண்ணப்பிக்கும்போது, அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால், அதைவிட மேலான ஒரு நிலையும், நம் வாழ்வில் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
நமது தேவைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்தபோது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ நம் மனதை அறிந்தவர்கள் போல், அவர்களாகவே முன்வந்து நம் தேவைகளைத் தீர்த்து வைக்கும்போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா?

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, தானாகவே வந்து குவிந்த உதவிகளை எண்ணி, மகிழ்வும், பெருமையும் அடைந்தோம். அதே நேரம், வெளியூர்கள், வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேர்ந்த உதவிகள் மீது, ஒரு குறிப்பிட்ட தலைவரின் படம் ஒட்டப்பட்டால் மட்டுமே, அந்த உதவிகள் சென்னைக்குள் நுழைய முடியும் என்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல் அடிமைகளின் அத்துமீறிய ஆர்வத்தைக் கண்டு, வெட்கமும், வேதனையும் அடைந்தோம்.
செய்கின்ற உதவிகளைப் படம் பிடித்து, ‘போஸ்டர் ஒட்டி, ‘கட்அவுட் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, நண்பர்களோ, அல்லது, முன்பின் தெரியாதவர்களோ, உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்போது, ஏதோ அந்த இறைவனே, இவர்கள் வடிவில் வந்து போனது போல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த நிலைதான், இந்த நயீன் நகரப் புதுமையிலும் உணரப்பட்டது.

கேட்காமலேயே நம்மை வந்து சேரும் நன்மைகளைப் பற்றி சிந்திக்கும்போது, "இந்த அன்புச் சங்கிலியை உடைக்காதீர்கள்" என்ற தலைப்பில் என்னை வந்து சேர்ந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
Love is a chain of love as nature is a chain of life. – Truman Capote

ஆஞ்செலாவுக்கு 70 வயது. கைம்பெண்ணாகிய அவர், தனியாக வாழ்ந்துவந்தார். கார் ஓட்டத்தெரிந்ததால், தன் தேவைகளை, தானே நிறைவேற்றிக்கொண்டார். ஒருநாள், பக்கத்து ஊரில் வாழ்ந்த தன் தோழியைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் கார் திடீரென நின்றுவிட்டது. அவ்வழியே வந்த கார்களை நிறுத்த கைகளை நீட்டினார், ஆஞ்செலா. அவர் பயணித்த பாதை, கள்வர் பயம் நிறைந்த பாதை என்பதால், ஒருவரும் நிறுத்தவில்லை. பொழுதும் சாயும் நேரம் அது. எனவே, ஆஞ்செலாவுக்கு அச்சம் கூடியது.
அவ்வேளையில், எதிர் புறத்திலிருந்து ஒரு லாரி வந்து நின்றது. அந்த லாரியை ஓட்டிவந்த இராபர்ட், கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னை நெருங்கி வர, வர, ஆஞ்செலாவின் அச்சம் கூடியது. பிரச்சனை என்ன என்பதைக் கேட்டு, தனக்குத் தெரிந்த அளவு காரை சரி செய்தார், இராபர்ட். பின்னர், அவர் ஆஞ்செலாவிடம், "இப்போதைக்கு இந்தக் கார் ஓடும். ஆனால், அருகில் உள்ள ஊரில், இதை நீங்கள் முழுமையாகச் சரி செய்துகொள்வது நல்லது" என்று கூறினார்.
தனக்கு உதவிசெய்ய வந்தவர் மீது தான் கொண்டிருந்த முற்சார்பு எண்ணங்களை நினைத்து வெட்கப்பட்டார், ஆஞ்செலா. பின்னர், தன் பர்ஸிலிருந்து, பணம் எடுத்து, அவரிடம் நீட்டினார். இராபர்ட், அதை வாங்க மறுத்ததோடு, "நீங்கள் அடுத்தமுறை தேவையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு உதவி செய்யுங்கள். அது போதும். இந்த அன்புச் சங்கிலியை உடைக்காதீர்கள்" என்று சொன்னபடி, தன் லாரியை நோக்கிச் சென்றார்.
ஆஞ்செலா, அடுத்த ஊருக்குள் சென்றதும், ஒரு கார் மெக்கானிக் கடையைக் கண்டார். அவரிடம் தன் பிரச்சனையை சொன்னார். காரை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் என்று மெக்கானிக் சொன்னதும், அருகிலிருந்த ஓர் உணவகத்திற்கு, 'காபி' அருந்த சென்றார், ஆஞ்செலா. அந்த உணவகத்தில் நான்சி என்ற ஒரு பெண் மேசைகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். நிறை கர்ப்பிணியான அவர், ஆஞ்செலாவுக்குத் தேவையானவற்றை சிரித்தமுகத்துடன் பரிமாறினார். அவரது உடல்நிலையைப் பற்றி பேச்சு எழுந்தபோது, நான்சி, தனக்கு அடுத்த வாரம் பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு இன்னும் சிறிது பணம் தேவை என்பதால், தான் கூடுதல் நேரம் உழைப்பதாகவும் கூறினார்.
இறுதியில், 'பில்' வந்தபோது, அந்த 'பில்' தொகையுடன் கூடுதலாக ஒரு 500 டாலர்களை ஆஞ்செலா அந்தத் தட்டில் வைத்தார். அந்த பில்லுக்குப் பின்புறம், "நான்சி, இது உன்னுடைய பிரசவத்திற்கு உதவும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒருவர் உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்த உதவியைச் செய்கிறேன். இந்த அன்புச் சங்கிலியை உடைக்கவேண்டாம்" என்று எழுதியிருந்தார், ஆஞ்செலா.
வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற நான்சி, தன் கணவரிடம் நடந்ததைக் கூறினார். தனக்கு உதவி செய்த அந்த வயதான பெண்மணியைப் பற்றி நான்சி பேசப் பேச, லாரி ஓட்டுனரான கணவன் இராபர்ட், மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று ஔவையார் கூறிய எண்ணங்களை, மற்றொரு கோணத்தில் சிந்திக்க, அன்புச் சங்கிலி என்ற எண்ணம் உதவுகிறது. இவ்வுலகம், வெறுப்பில் வெடித்துச் சிதறாமல் கட்டிப்போட்டிருப்பது, அன்புச் சங்கிலி. சங்கிலியில், எந்த வளையம் முக்கியமானது என்ற கேள்வி எழுவதில்லை. ஒவ்வொரு வளையமும், தன் பெயரும் புகழும் மட்டும் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல், ஒன்றிணைந்து செயல்படுவதுதான், சங்கிலியின் இலக்கணம்.

நயீன் நகரக் கைம்பெண், எஞ்சியிருந்த தன் வாழ்நாளெல்லாம் ஆற்றியப் பணிகளை, இப்புதுமையின் இறுதி வரிகள் நமக்குக் கூறுவதாக நினைக்கிறேன். இதோ, அவ்வரிகள்:
லூக்கா 7: 15-17
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

நிகழ்ந்த புதுமையைக் கண்டு, கூட்டம் அடைந்த அச்சமும், வியப்பும், ஒரு சில நாட்கள் நீடித்திருக்கலாம். ஆனால், அன்றுமுதல், அந்தக் கைம்பெண்ணின் வாழ்வு முழுவதும் அந்த வியப்பில் நிறைந்திருக்கவேண்டும். யூதேயா முழுவதும் இயேசுவின் புகழ் பரவ, அந்தக் கைம்பெண் ஒரு முக்கிய கருவியாக செயல்பட்டிருக்கவேண்டும். அதுமட்டுமல்ல, தன்னால் இவ்வுலகிற்கு முதல்முறை உயிரோடு வந்த தன் மகன், இரண்டாம் முறை, இறைவனால் உயிர் பெற்று, தனக்கு ஒரு கொடையாக வந்து சேர்ந்ததால், அந்த மகனையும் நன்றியுள்ள உள்ளத்துடன் வாழத் தூண்டியிருப்பார், அந்தக் கைம்பெண். இறைமகன் இயேசு, தங்களை, ஓர் அன்பு சங்கிலியின் வளையங்களாக உருவாக்கியுள்ளார் என்பதை உணர்ந்த, அந்தக் கைம்பெண்ணும், அவரது மகனும், இந்த அன்புச் சங்கிலியில் இன்னும் பலரை இணைத்திருப்பர் என்பதை நம்பலாம்.

கேட்காமலேயே நம்மை வந்து சேரும் நன்மைகளைப் பற்றி பேசும்போது, ஒரு நெருடலான எண்ணமும் மனதில் தோன்றுகிறது. அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க, நாள் முழுவதும், வெயிலில் நின்று, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, மாதங்கள் பலவாக, சில சமயங்களில், ஆண்டுகள் பலவாகக் காத்திருந்தும், ஒரு பயனும் இல்லாமல், தினம் தினம் அரசின் கதவுகளைத் தட்டி, தட்டி கையும், மனமும் ஓய்ந்துபோகும் ஏழைகளை, குறிப்பாக, ஏழைக் கைம்பண்களை நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்களில் பலருக்கு, அவர்கள் இறந்தபின் உதவிகள் வந்துசேர்ந்ததாக செய்திகளைக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஏழைகளில் ஒருவர், இந்த நயீன் கைம்பெண்.


மகனை இழந்த கைம்பெண், அவரது அடக்கத்திற்குப் பிறகு தனது வாழ்வையும் முடித்துக்கொள்ளலாம் என்ற விரக்தியில் சென்றதை உணர்ந்த இயேசு, மகனுக்கு உயிர் தந்ததோடு, அந்தக் கைம்பெண்ணுக்கும் மறுவாழ்வு தந்தார். கைம்பெண்களின் மறு வாழ்வு பற்றி மதங்களும், பிற சமூக சேவை நிறுவனங்களும் பேசுகின்றன. ஆனால், நடைமுறையில் இன்றும் கைம்பெண்கள் சந்திக்கும் பல போராட்டங்கள் தீரவில்லை. கணவனை இழந்த இவர்கள், சமுதாயத்தில் தங்கள் மதிப்பையும் இழப்பது நியாயமற்ற செயல். நயீன் கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு தந்த இயேசு, நாம் வாழும் சமுதாயத்திலும் கைம்பெண்களைப் பேணி காக்கும், மதித்து வாழும் மனதை நமக்கு தர வேண்டுவோம். மரணத்திலிருந்த சிலரை உயிர்ப்பித்த புதுமைகள் வழியாகவும், தன் உயிர்ப்பின் வழியாகவும், சாவுக்கு இறுதி வெற்றி இல்லை என்பதை உணர்த்தும் இறைமகன் இயேசு, மரணத்தைத் தாண்டிய உண்மைகள் பல உள்ளன என்ற தெளிவை நம் அனைவருக்கும் கற்றுத்தருமாறு மன்றாடுவோம்.


Saturday, August 20, 2016

Winners, all… அனைவருக்கும் பதக்கங்கள்

 Rio Olympics 2016


21st Sunday in Ordinary Time

Living in an international community like mine has many advantages and some disadvantages. Comparing notes is one such disadvantage! Ever since the Summer Olympics began in Rio, two weeks back, I was often asked the embarrassing question: How many medals has India got today? Today? Well, India did get into the medals list after 11 days, thanks to Sakshi Malik and later, thanks to P.V.Sindhu. Earlier, Dipa Karmakar missed a bronze medal by a whisker in gymnastics, and Lalita Babar took part in the finals of 3000 meters steeplechase.
Sakshi, Sindhu, Dipa, and Lalita… all young ladies in their 20s. They have saved India in the International arena. India keeps running the campaign against female infanticide with the words: “Save the Girl Child”. One of my Jesuit friends has said, that this slogan now should read – “Saved by the Girl Child!” As we begin our reflection this Sunday, we salute these young ladies!

XXXI Summer Olympics – Rio 2016 is getting over this Sunday, August 21. One can easily see that Olympics is no more a simple sports event. It is a media event. And, as happens often in the media, it is more interested in feeding us with ‘drama’ than ‘sports’. For this drama to happen, the media wants to write a script. What better script to write, than create a hero and a villain in every event - the fight between good and evil. Such a script constantly brings to focus that Olympics is all about CONFLICT, and COMPETITION.
This is a far cry from the well known Olympic Motto: “The most important thing is not to win but to take part!” This motto was introduced by Pierre de Coubertin, who is considered as the father of the modern Olympic Games.
Of course, the media keeps quoting another motto of the Olympics – namely, “Citius, Altius, Fortius”, which is Latin for “Faster, Higher, Stronger”. This motto, once again, was proposed by Pierre de Coubertin in 1894. Comparative terms in English imply competition. But, on a deeper analysis, one can interpret ‘faster, higher, stronger’ in terms of one’s own self rather than as against someone else. I can be faster than what I was yesterday. But, usually, ‘faster’ is used only in the context of  faster than XY and Z. If only Olympics can make us better persons… (better in the sense… better than what we were yesterday, and not better than so and so), it would have lived up to its ideal!!!

Comparisons between athletes reach its climax at the medals – Gold, Silver and Bronze. Gold is the summit of achievement. What about Silver and Bronze? Those who win these medals are looked upon… not as winner of Silver and Bronze, but losers of Gold. This is a pity! Especially after the invasion of the television into the Olympics arena, winners of Gold are given undue media attention and the winners of Silver and Bronze are ‘accommodated’ as ‘also ran’ entities!

Tony Rossi is a writer for the website: Christopher Closeup. He has written quite a few articles on the sports persons – past and present. On July 31, 2012 he wrote an article on former gymnast Shawn Johnson who won a gold medal and three silver medals in Beijing Olympics 2008. Here are some excerpts from that article titled: Former Olympic Gymnast Shawn Johnson on Being a Winner in God’s Eyes vs. the World’s Eyes
One of the most aggravating aspects of the Olympics to me is when reporters treat silver medallists like losers – as if being the second best athlete in your field in THE ENTIRE WORLD is somehow something to hang your head about. In her engaging and enjoyable new memoir “Winning Balance”(co-written with Nancy Anderson French), former Olympic gymnast Shawn Johnson reveals she had a hard time with that attitude herself. In fact, she was shocked by it.
During the individual all-around competition at the 2008 Olympics in Beijing, China, both Shawn and her friend/teammate, Nastia Liukin, were expected to be in a tight competition for the gold medal. That’s exactly what happened. Their scores were close throughout most of the competition in which they had to compete in four categories: vault, uneven bars, balance beam, and floor exercises. After the balance beam, however, Shawn saw from the scoreboard that it was mathematically impossible for her to beat Nastia.
A little dispirited because there had been such an emphasis on her winning gold, Shawn briefly questioned whether she should just give up. She quickly realized that failure – and that’s exactly what giving up would be: failure – was not an option. Recalling the moment, Shawn writes, “I was still determined to give this performance my entire heart and soul, but my motivation had changed. In some strange way, once I knew the gold was out of reach, I was free to go out there and just be me, the natural competitor who nonetheless had stuck with gymnastics since age three for the pure joy of the sport. I would show the world what I could do while having fun doing it.”
And so she did. Shawn earned the silver medal in the all-around, while Nastia won the gold. For the first time ever, Americans had won the top two spots in this competition. Ever a model of class and dignity, Shawn was genuinely happy for Nastia and also satisfied with her own performance. Until the reporters stepped in.
Instead of asking how great it felt to win silver, they asked Shawn how it felt to lose. The happy young gymnast was surprised and disheartened. With the negative focus of the questions aimed at her, she admits to fighting to hold back tears. In retrospect, however, that experience became a defining moment. Even though she went on to win a total of three silver medals (in Team, Floor, and All Around) and one gold (in Balance Beam), it was the silver in the all-around that taught her the greatest life lesson.
During an interview on Christopher Closeup, Shawn told me, “I honestly was more proud of my silver medals than the gold or any other for that matter. Going into the all-around competition, it was my event. It’s what I worked my entire life for. And there’s something sad about being given a silver, and having the world think that you aren’t worth the attention. It makes you find the pride for the work and success within yourself. To me, that made me the strongest and most proud person I could have been.”

It is ironic that although Shawn Johnson says that she is more proud of her silver medals than the gold, the book ‘Winning Balance’ introduces her as ‘Olympic Gold Medalist’ on the front cover! I guess, we cannot easily get over our craze for gold!!! Winning Gold, Silver and Bronze may be easier than ‘Winning Balance’ in life.

Winning medals becomes less important when the athletes can win the audience over. That happened in Rio, on August 16, when the 5000 meters ladies competition (selection round) was on. Nikki Hamblin, from New Zealand and Abbey D’Agostino, from the U.S. epitomized the Olympic Spirit. 
Olympic spirit: New Zealand and American runners help each other after collision

Here are some excerpts from The Guardian and The Independent:
Nikki Hamblin and Abbey D’Agostino: the sisterhood of sportswomanship still rules
(The Guardian)

While the modern Olympics might have been conceived as a way to bring people together by bringing out the best in humanity, it seems to have largely devolved into an expensive exercise in national hubris.
Every four years there are, however, a few flickers of Olympic spirit that manage to warm even my Olympics-hardened heart. Tuesday’s news of Kiwi and American runners putting a fall before their pride is a case in point. If you missed the story, which has quickly gone viral, a rapid replay: Nikki Hamblin of New Zealand and Abbey D’Agostino of the United States collided on the 5000m track four laps from the finish. D’Agostino twisted her leg and Hamblin pulled her up. The two helped each other to the finish, where they came in last – but first in our hearts, etc. Hamblin told reporters she was grateful for D’Agostino’s helping hand: “That girl is the Olympic spirit right there.”

Rio 2016: Abbey D'Agostino and Nikki Hamblin embody ‘Olympic spirit’ by helping each other finish race
(The Independent)

"That girl is the Olympic spirit right there," Hamblin said after the race. "I've never met her before. Like I never met this girl before. And isn't that just so amazing. Such an amazing woman… I'm never going to forget that moment. When someone asks me what happened in Rio in 20 years' time, that's my story."
The show of sportsmanship has joined a series of iconic moments at this year’s Games, including a display of friendship between  South Korea’s Lee Eun Ju and and North Korean gymnast Hong Un Jong, who took a selfie together as they prepared to compete in the qualification for the artistic women's gymnastics.

‘Winning Balance’, the title of the book by Shawn Johnson poses a challenge to all of us. Winning balance in life makes winners of us all. When this happens, then every competition gives way to ‘complementation’! We can surely complement each other, help each other reach our finish line, our goal, thus proving the Olympic motto: “The most important thing is not to win but to take part!” in LIFE…


P.V.Sindhu wins Silver - Indian women make history in Rio
பொதுக்காலம் - 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஆகஸ்ட் 21, இஞ்ஞாயிறு, பிரேசில் நாட்டு, ரியோ நகரில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைகின்றன. இவ்விளையாட்டுக்கள் துவங்கியதிலிருந்து, பல கோடி இந்தியர்களின் உள்ளங்களில் தீயென சுட்டெரித்த ஒரு கேள்வி... நாம் எப்போது ஒரு பதக்கமாவது பெறுவோம் என்ற கேள்வி. நம் வேதனைக் கேள்விக்கு விடையாக, பதக்கங்கள் பெற்றுள்ளனர், சாக்க்ஷி மாலிக், பி.வி.சிந்து என்ற இரு இளம்பெண்கள். அதற்கு முன்னதாக, தீபா கர்மாக்கர், லலிதா பாபர் என்ற இரு இளம்பெண்கள், பதக்கம் வெல்லவில்லை என்றாலும், தங்கள் மனம்தளரா முயற்சியால், மக்கள் மனங்களை வென்றனர். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்காக, உலக சமுதாயத்திற்கு முன், தலைகுனிந்து, கண்ணீர் வடித்து வடித்து நிற்கும் இந்திய அன்னை, இந்த நான்கு இளம் பெண்களால் தலை நிமிர்ந்து நிற்கிறார். இந்திய நாட்டின் பெருமையை உயர்த்திப்பிடித்த இந்த நான்கு இளம்பெண்களுக்கும் நம் நன்றி கலந்த வணக்கங்கள்!

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், விளையாட்டுத் திறமைகளில் இவ்வளவு பஞ்சமா என்ற வேதனைக் கேள்வி, நம்மை வாட்டி வதைக்கிறது. இதற்கு, பல காரணங்களை நாம் கண்டுபிடிக்கலாம். ஆனால், நம் அனைவருக்கும் தெரிந்த வெட்டவெளிச்சமான உண்மை, இந்தியாவை, தன் அரக்கப்பிடியில் வைத்திருக்கும் ஊழல். அங்கு ஆரம்பித்து, ஆயிரமாயிரம் காரணங்களைக் கண்டுபிடித்து, நம் உள்ளங்களைப் இரணமாக்கிக் கொள்வதற்குப் பதில், ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பக்கம் பொதுவாக நம் கவனத்தைத் திருப்புவோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விளையாட்டுக்களை மையப்படுத்தி, சில வாழ்வுப் பாடங்களைப் பயில முயல்வோம்.

ரியோவில் நிறைவடைவது, ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? இப்படி ஒரு கேள்வியை எழுப்புவது, வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை, இது சிந்திக்கவேண்டிய கேள்வி. ஒலிம்பிக்கைப்பற்றி மட்டுமல்ல, வாழ்வைப் பற்றியும் நாம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை நிர்ணயிக்கும் கேள்வி இது.

ரியோவில் நிறைவடைவது, ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? ஆங்கிலத்தில் நாம் Olympic Games என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். Olympic Competitions என்ற சொற்களைப் பயன்படுத்துவதில்லை. தமிழிலோ, பெரும்பாலான நேரம், நாம் ஒலிம்பிக் போட்டிகள் என்றே குறிப்பிடுகிறோம். வெகு சிலரே, இதை, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று குறிப்பிடுவர். விளையாட்டு, போட்டி என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்த கையோடு, விரைவில், செப்டம்பர் 7ம் தேதி, ரியோவில், மாற்றுத் திறனாளிகளின் பாராலிம்பிக் (Paralympics) விளையாட்டுக்கள் துவங்குகின்றன. உடலிலும், மனதிலும் முழு வளர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படும் மனிதர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது, பெரும்பாலும், பதட்டம், மன அழுத்தம், கோபம், சிலவேளைகளில் வெறி போன்ற உணர்வுகள் தலைதூக்கும். பாராலிம்பிக் விளையாட்டுக்களிலோ, எத்தனையோ முறை, மனதை உயர்த்தும் மென்மையான உணர்வுகள் வெளிப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஒலிம்பிக் விளையாட்டுக்களில், போட்டி என்ற எண்ணம் ஆக்ரமிப்பதால், வெற்றிபெறுவது ஒன்றே வாழ்வின் இலக்கு என்ற தவறான பாடம் வலியுறுத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் விளையாடும்போது, பல நேரங்களில், அவர்கள் பங்கேற்றதையே ஒரு நிறைவாகக் கருதுவதை காணமுடிகிறது. இதுதான், விளையாட்டுக்களுக்கும், போட்டிகளுக்கும் இடையே உள்ள ஒரு பெரும் வேறுபாடு.

19ம் நாற்றாண்டின் இறுதியில், ஒலிம்பிக் விளையாட்டுக்களை மீண்டும் உயிர்பெறச் செய்தவர்களில் ஒருவராகிய Pierre de Coubertin அவர்கள் கூறிய சொற்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போதும் நினைவுகூரப்படுகின்றன. வெற்றிபெறுவதல்ல, பங்கேற்பதே ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முக்கியம். வாழ்விலும், வெற்றிபெறுவது அல்ல, தகுந்த முறையில் போராடுவதே, மிக அவசியம்.(The most important thing in the Olympic Games is not winning but taking part; the essential thing in life is not conquering but fighting well.) இந்த வார்த்தைகளின் உண்மைப் பொருள், ஒலிம்பிக்கைவிட, பாராலிம்பிக் விளையாட்டுக்களில் அதிகம் வெளிப்படுகின்றன என்பதை மறுக்க இயலாது..

போட்டிக்கும், விளையாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள, ரியோ ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு உதவும். Nikki Hamblin என்ற நியூஸிலாந்து பெண்ணும், Abbey D'Agostino என்ற அமெரிக்க பெண்ணும் 5000 மீட்டர் தேர்வுப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஒருவர் மீது ஒருவர் இடித்து, தடுமாறி வீழ்ந்தனர். முதலில் எழுந்து நின்ற Abbey, Nikkiயைக் கைத்தூக்கி எழுப்பினார். "வாருங்கள், நாம் எப்படியும் இந்த பந்தயத்தை முடித்துவிடுவோம்" என்று அவரை உற்சாகப்படுத்தினார்.
முன்பின்  அறிமுகம் இல்லாத ஒருவர், இந்த அசம்பாவிதம் நிகழ யார் காரணம் என்று கோபப்படாமல், தன்னை இவ்வாறு உற்சாகப்படுத்தியது தனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்ததென்று, Nikki அவர்கள் கூறினார். இருவரும் ஓடத்துவங்கி சிறிது தூரத்தில், Abbey மீண்டும் தரையில் விழுந்தார். அவரது முழங்கால் பகுதி மிகுந்த வேதனை தந்தது. அவர் Nikki யிடம், "நீங்கள் ஓடுங்கள்" என்று அனுப்பினார். ஆனால், Nikkiயோ, Abbey மீண்டும் எழுந்து, பந்தயத்தை முடிப்பதற்கு உதவி செய்தார். போட்டி என்ற வெறியில் அவர்கள் ஓடியிருந்தால், இந்த விபத்து நிகழ்ந்ததற்கு, ஒருவர், ஒருவரைக் குற்றம் சாட்டியிருப்பர். ஆனால், அவ்விரு பெண்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, பந்தயத்தை முடித்தனர். முடிவுக் கோட்டைத் தாண்டிய இருவரும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டபோது, விளையாட்டு அரங்கம் கரவொலியால் நிறைந்தது. அவ்விருவரும் அந்தப் பந்தயத்தில் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஆனால், அரங்கத்தில் இருந்த ஆயிரமாயிரம் பார்வையாளர்கள், மற்றும் ஊடகங்கள் வழியே பல கோடி மக்கள் அனைவரின் உள்ளங்களையும் அவர்கள் வென்றனர்.
இதைக்குறித்து பேட்டியளித்த Nikki அவர்கள், "நான் ஒரு பதக்கம் வென்றிருந்தால், அது எவ்வளவு காலம் மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் 20 ஆண்டுகள் சென்றபின், இந்த நிகழ்வை நான் மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது, அது எனக்கு மனநிறைவைத் தரும். அது நிச்சயம்" என்று கூறினார்.
Abbey, Nikki இருவரும் விரும்பினால் இறுதிப் பந்தயத்தில் பங்கேற்கலாம் என்று ஒலிம்பிக் அதிகாரிகள் கூறினர். அவர்கள் இருவரும் கலந்துகொண்டனரா, பதக்கம் வென்றனரா என்பது தெரியவில்லை. ஆனால், இருவரும் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் உண்மை மனநிலையை வாழ்ந்தவர்கள் என்ற பதக்கத்தைப் பெற்றுவிட்டனர். இதையொத்த பல நிகழ்வுகள், பாராலிம்பிக் விளையாட்டுக்களில் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.
மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் நடைபெற்ற ஒரு பந்தயத்தில், ஒரு சிறுவன் தடுமாறி விழுந்தான். பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்த மற்ற ஐந்து சிறுவர்களும் விழுந்து கிடந்த நண்பன் அருகே சென்று, அவனை எழுப்பிவிட்டனர். பின்னர், அனைவரும் கரங்களைக் கோர்த்தபடியே பந்தயத்தின் இறுதிக் கோட்டை அடைந்தனர்.

வாழ்க்கைப் பாதையில் நாம் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், நம்மைத் தடுமாறி விழச் செய்வதற்கு பலர் இருக்கலாம். ஆனால், நாம் கீழே விழுந்துகிடக்கும் வேளையில், நம்மைக் கைதூக்கிவிட்டு, நமது இலக்கை அடைவதற்கு உதவி செய்பவர்கள், உன்னத மனிதப்பிறவிகள்! இவர்கள், வாழ்க்கையை ஒரு போட்டியாகப் பார்க்காமல், அனைவரும் பங்கேற்கும் ஓர் ஆனந்த விளையாட்டாகப் பார்க்கின்றனர் என்பது உறுதி.
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் சிகரமாக பதக்கங்கள் தரப்படுவது உண்மைதான். ஆனால், அவை மட்டுமே அங்கு நிகழ்ந்தால், அது மனிதர்கள் பங்கேற்கும் ஒரு உலக அனுபவமாக இருக்காது. இந்த விளையாட்டுக்களை மேம்படுத்துவது, Abbey, Nikki போன்றோரின் நிகழ்வுகள்.

தங்கம், வெள்ளி என்ற ஒப்புமைகளைப் பெரிதுபடுத்தி, போட்டி என்ற உணர்வை மட்டுமே கொண்டாடும் சூழலில், மறைவானப் பகைமை உணர்வுகள் வெளியாகும். ஊக்க மருந்துகள் என்ற குறுக்கு வழிகளும் திறக்கப்படும். ஆனால், வீரர்கள் ஒருவரை ஒருவருடன் போராடுவதை ஒரு விளையாட்டாகப் பார்க்கும்போது, உண்மையான திறமைகளைப் பாராட்டும் மனம் வெளிப்படும். இதனை, இளம்பெண் பி.வி.சிந்துவின் பெற்றோரிடம் – முன்னாள் வாலிபால் வீர்ர்களான, பி.வி.இரமணா, பி.விஜயா, - நாம் காண்கிறோம். தங்கள் மகள் சிந்து, உலகின் முன்னணி வீரரான காரோலீனா மரீனிடம் போராடித் தோற்றார், வெள்ளியைப் பெற்றார் என்பதை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெற்றோர், தங்கப் பதக்கம் பெற்ற காரோலீனா மிக நன்றாக விளையாடினார், அவர் தங்கம் வெல்வதற்குத் தகுதியுடையவர்தான் என்று மனதாரப் புகழ்ந்தனர். இத்தகைய எண்ணங்கள் வெளிப்படும்போது, நாம் காண்பது உண்மையிலேயே ஒருவரை ஒருவர் மதிக்கும் உயர்ந்ததொரு விளையாட்டு, ஒருவரை ஒருவர் மிதிக்கும் போட்டியல்ல என்பதை உணர்ந்து மனம் குளிர்கிறது.

விளையாடுவதும், போட்டியிடுவதும் இரு வேறு உலகங்கள், பல நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட உலகங்கள் என்பதை, மீண்டும் ஓர் ஒலிம்பிக் நிகழ்வின் மூலம் புரிந்துகொள்ள முயல்வோம். 2008ம் ஆண்டு, பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்ற Shawn Johnson என்ற இளம்பெண் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் இது.
ஜிம்னாஸ்டிக் ஒட்டுமொத்த போட்டியில் (Individual all-around competition) வெள்ளிப் பதக்கம் வென்றவர் இவர். Shawn வெள்ளிப்பதக்கம் வென்றார் என்று நான் சொன்னதும், , வெள்ளியா? தங்கம் இல்லையா? என்ற கேள்வி நம் மனதில் எழுந்திருக்கலாம். ஒலிம்பிக் பற்றி நாம் கேட்கும் கதைகள், பெரும்பாலும், தங்கம் வென்றவர்களின் கதைகளாக இருப்பதால், வெள்ளியும், வெண்கலமும் வென்றவர்களை குறைத்து மதிப்பிடும் போக்கு, அதிகம் உள்ளது. வெள்ளியையும், வெண்கலத்தையும் அவர்கள் வென்றனர் என்று சொல்வதை விட, தங்கத்தை அவர்கள் இழந்தனர் என்ற எண்ணமே அதிகம் பேசப்படும். இதே அனுபவத்தை Shawnம் அடைந்தார்.
Shawnம் அவரது நெருங்கியத் தோழி Nastia Liukinம் சிறுவயது முதல், ஜிம்னாஸ்டிக் சாகசங்களை, இணைந்து பயின்றவர்கள். ஜிம்னாஸ்டிக்கில் நான்கு பிரிவுகளைக் கொண்ட ஒட்டுமொத்த போட்டியில் Shawnதான் தங்கம் வெல்வார் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நான்கு பிரிவுகளில், மூன்று பிரிவுகள் முடிந்ததும், தான் பெற்றிருந்த புள்ளிகளைப் பார்த்தார் Shawn. அவருக்கும், Nastiaவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தது. 4வது பிரிவில் தான் முழுமையாக 10 புள்ளிகள் பெற்றாலும், Nastiaவை வென்று, தங்கம் வெல்லமுடியாது என்பது Shawnக்குத் தெளிவானது. அப்போது அவர் மனதில் போராட்டம் சூழ்ந்தது. தங்கம் வெல்லவேண்டும் என நான் கண்டுவந்த கனவு கைநழுவிப் போகிறதே... நான் தங்கம் வெல்வது நிச்சயம் என்று என் குடும்பத்தினர், குழுவினர், என் நாட்டு மக்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனரே... தங்கம் வெல்லாமல் திரும்பினால், பெரும் அவமானம் அல்லவா? பேசாமல், போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாமா? என்ற எண்ணங்களுடன் Shawn போராடினார்.

போராட்ட மேகங்கள் திரளும்போது, மின்னலைப்போல் நல்லெண்ணங்களும் தோன்றுமல்லவா? அதுபோல்,  Shawn மனதில் ஒளியொன்று தோன்றியது. அந்த ஒளியில் அவர் உணர்ந்த உண்மைகளைத் தன் சுயசரிதையில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: "தங்கம் கைநழுவிச் சென்றுவிட்டது என்பதை நான் உணர்ந்து ஏற்றுக் கொண்டபோது, நான் அதுவரை அனுபவித்திராத ஓர் அமைதி என்னுள் நிறைந்தது. மீதம் உள்ள அந்த ஒரு பிரிவு விளையாட்டில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கலந்துகொள்ளப் போகிறேன். மூன்று வயதுமுதல் நான் விரும்பிச் செய்த ஜிம்னாஸ்டிக் அசைவுகளை, மீண்டும் ஒரு குழந்தையைப்போல், யாருடனும் போட்டி போடாமல், என் மகிழ்வுக்காகச் செய்யப் போகிறேன். இவ்விதம், நான் உள்ளார்ந்த மகிழ்வோடு விளையாடினால், என்னென்ன சாகசங்கள் செய்யமுடியும் என்பதை இவ்வுலகம் பார்க்கட்டும்" என்று, Shawn தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.
அந்த இறுதிப் பிரிவில் அவர் செய்த சாகசங்கள், பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. முடிவில், அவரது தோழி Nastia, தங்கத்தையும், Shawn, வெள்ளியையும் வென்றனர். அமெரிக்க ஒலிம்பிக் வரலாற்றில், பெண்கள் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்களில், தங்கம், வெள்ளி இரண்டையும் வென்றது, இதுவே முதல் முறை.
பதக்கம் அணிவிக்கும் மேடையில் இரு தோழிகளும் மகிழ்வின் உச்சத்தில் நின்றனர். பதக்கம் பெற்றதும் அவர்களைப் பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்தனர். வெள்ளியை வென்றது உங்களுக்கு எவ்வளவு மகிழ்வைத் தந்தது என்று ஒருவரும் Shawnஇடம் கேட்கவில்லை, மாறாக, தங்கத்தை நீங்கள் வெல்லவில்லையே, அது உங்களை எவ்வளவு பாதித்துள்ளது என்ற கேள்வியால் அவரைத் துளைத்தனர். வெள்ளி வென்றதில் அவர் அடைந்த மகிழ்வு, நிருபர்களின் கேள்விகளால் மறைந்தது. இருந்தாலும், அவர் அன்று கற்றுக்கொண்ட பாடம் அவரைப் பெரிதும் புடமிட்டது என்று தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
அந்தப் பாடம் என்ன? மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் என் மகிழ்வை, என் வாழ்வைத் தீர்மானிக்கவிடக் கூடாது. தங்கம் வெல்வது மட்டுமே வெற்றி; வெள்ளி வெல்வது தோல்வி என்பது நிருபர்களின் கருத்து. அது என் கருத்தல்ல. ஆனந்தமாக, ஆத்மார்த்தமாக விளையாடி, வெள்ளியை வெல்வதும் உண்மையிலேயே வெற்றிதான் என்பது என் கருத்து. பலகோடி இளையோர் அடையமுடியாத ஒரு சிகரத்தை, நான் அடைந்தது, நிறைவான ஒரு வெற்றிதான் என்று தனக்குத்தானே அந்நேரத்தில் சொல்லித்தந்த பாடம், தன்னைக் காத்தது என்று, Shawn தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்வுக்குப் பின், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் Shawn மேலும் ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஆனால், அந்த முதல் போட்டியில் அவர் வென்ற வெள்ளியே தான் மிகவும் மதிக்கும் ஒரு வெற்றி என்று அவர் தன் நூலில் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள சுயசரிதையின் தலைப்பு: “Winning Balance”, அதாவது, "சமநிலையை வெல்வது".
தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை வெல்வதற்கு உடலைப் பயிற்றுவிக்கலாம். ஆனால், உள்ளுக்குள் 'சமநிலையை வெல்வதற்கு' மனதை நாம் பயிற்றுவிக்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் இந்த சமநிலையை, இந்த ஆழமான அமைதியை வென்றவர்களுக்கு பந்தயங்களை வெல்வதும் எளிதாகும்.

இத்தகையைச் சமநிலையை வெல்வது, அனைவரும் விரும்பி, தெரிவு செய்யும் எளிதான வழி அல்ல. இது மிகவும் குறுகிய வழி. ஒரு சிலரே இத்தகைய வழியைத் தெரிவு செய்வர். போட்டிகளில் இறுதி இடத்தைப் பிடித்தாலும், நல்லவிதமாக வாழ்வுப் பந்தயத்தில் கலந்துகொண்டோம் என்ற திருப்தியில் வாழ்பவர்கள் இவர்கள். உலகின் கண்களில் இறுதியானோர் போல் தெரிந்தாலும், இவர்கள் முதன்மையான, உன்னதமான இடத்தை இறையரசில் பெறுவர். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் ஒரு வாழ்வுப் பாடமாக நமக்கு வழங்கியுள்ளார்:
லூக்கா நற்செய்தி 13 : 24,29,30
"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.... இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.... ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்."