30 January, 2012

Authority… Authenticity உள்ளூர உருவாகும் உன்னதம்



This happened ten years ago. I was asked to take up a key position in one of the Jesuit institutions in India. I did not feel comfortable about it. I felt I was not cut out for administrative jobs. Hence, I sought the help of another Jesuit who had held much higher positions than what was asked of me. What he told me cleared my doubts and helped me take up the responsibility.
This is what he told me: “This is not a position you achieved, but an opportunity to serve. The key requirement to take up a responsibility is your credibility. You may lack the intelligence or the administrative capacity to do this job. You may not know how to deal with finance and the government officials. You can always get the help of others in making up this lack. But if you lack credibility, then no one can help you fill that gap.”
His words are still very fresh in my memory. What he shared that day helped me see ‘Authority’ in a very different way. The key requirement to serve in a responsible position is one’s credibility. The other qualities are added advantages. Credibility comes from within. It is an inner force. Intelligence and administrative capacity can be learnt and nurtured from outside. One can get help from others when one lacks the know-how of running an institution. But, when one lacks credibility, the inner force, then he or she cannot run the institution in the right direction. This is the real meaning of ‘Authority’.

Today’s Gospel has a key sentence which set me thinking about this past experience of mine. This is what we read in today’s Gospel: “Jesus taught them as one who had authority and not as the scribes.” (Mark 1: 22) If we can understand the meaning of authority, we can as well understand how this ‘authority’ set Jesus apart from the scribes. We use the word ‘authority’ in two different senses. e.g. This person has authority over this region. This person is an authority on this subject.
The first one is ‘the power or right to give orders, make decisions, and enforce obedience’. The second one is ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’. (Oxford Dictionary) The first one is given from outside; the second, develops from within. Another word that is closely associated with this second type of ‘authority’ is ‘authenticity’… The more authentic a person, the better his or her authority… something similar to the ‘credibility’ that my senior Jesuit spoke to me about.

This ‘authority’ can best be explained by the hush that falls or the spontaneous cheer that erupts in a public meeting when a person of great dignity – say, a Mother Teresa, a Mahatma, a Martin Luther King or a Dalai Lama – walks into the auditorium. This spontaneity is due to the magical authority this person holds over the people.

I am not here to take a class on the etymology of ‘authority’. I am interested in making a common human experience clearer to us. Authority is everywhere, starting from our families to the international arena. We have secular and sacred authority. If the real meaning of authority can be understood, then we can get rid of so many complications in our world today.
The authority enshrined in and exercised by the sacred sphere can create more complications when understood wrongly. The authority to be a prophet, to speak in God’s name comes from God. This is explained in the passage from the Book of Deuteronomy given as our first reading today. The people of Israel are sad that Moses, their famous leader, the one who was able to interpret God’s plans for them till now, was on the verge of death. Moses consoles them with these words: 
Moses said to the people: “And the LORD said to me, ‘I will raise up for them a prophet like you from among their brethren; and I will put my words in his mouth, and he shall speak to them all that I command him. And whoever will not give heed to my words which he shall speak in my name, I myself will require it of him. But the prophet who presumes to speak a word in my name which I have not commanded him to speak, or who speaks in the name of other gods, that same prophet shall die.’” (Deut. 18: 17-20)

The authority of Jesus elicited quite a few responses. The people admired it. The person with evil spirit feared it. We also come across the ‘so-called authorities’ misunderstanding and questioning the authority of Jesus. Although this is not part of today’s Gospel, there are quite a few instances in the Gospels about this reaction.  (Mk. 11: 28; Mt. 21: 23; Lk. 20: 2)
When someone is truly great, the others who consider themselves great due to their position and power will feel threatened. Since the latter can shine only in borrowed feathers and can walk only on the crutches of ‘authority’, they cannot stand the sight of someone who not only can walk on one’s own legs but can as well fly on one’s own feathers.

Let’s begin an examination of conscience… How do we understand authority? How do we exercise authority within our families? Does our authority come from an inner force, namely, moral power born of inner convictions or from external conventions that are threadbare? When someone is truly great, we admire that person irrespective of whether the person holds any power or position. We know that such persons are becoming a rare breed among the world leaders as well as in religious spheres. We pray God to send us true leaders before whom we can truly exclaim: “What is this? A new teaching! With authority he commands even the unclean spirits, and they obey him.” (Mark 1:27)


பத்தாண்டுகளுக்கு முன் நான் பெற்ற ஓர் அனுபவம் இப்போது என் மனதில் நிழலாடுகிறது. இயேசு சபையினர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பை ஏற்கும்படி எனக்கு உத்தரவு வந்தது. அந்தப் பொறுப்பை என்னால் திறம்படச் செய்யமுடியுமா என்ற தயக்கம் எனக்கு. இயேசு சபையில் இன்னும் சில உயர்ந்த பொறுப்புக்களை ஏற்று அனுபவம் பெற்றிருந்த மற்றொரு குருவின் ஆலோசனையைத் தேடினேன். அவர் எனக்குக் கொடுத்த ஒரு சில தெளிவுகள் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு எனக்கு உதவின. அவர் சொன்னவைகளில் ஒரு கருத்து இன்னும் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.
"உங்களுக்குத் தரப்படும் இந்தப் பொறுப்பு, நீங்கள் போராடி வெற்றிபெற்ற ஒரு பதவி அல்ல. இந்த நிறுவனத்திற்கு பணி செய்ய உங்களுக்குக் கிடைத்த ஓர் அழைப்பு இது. எந்த ஒரு முக்கியமான பொறுப்பிலோ, அதிகாரத்திலோ செயல்பட உங்கள் அறிவுத்திறமை, நிர்வாகத்திறமை இவைகளை விட மற்றொரு மிக முக்கியமான பண்பு தேவை. நீங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறீர்களா என்பதே உங்களுக்கு மிகவும் தேவையான பண்பு. அறிவுத்திறமை, நிர்வாகத்திறமை இவைகளில் உங்களுக்கு குறைகள் இருந்தால், இத்திறமைகள் உள்ள மற்றவர்களது உதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதில் குறை ஏற்பட்டால், அந்தக் குறையைத் தீர்க்க மற்றவர்களால் முடியாது." என்று அந்த அனுபவம் மிக்க குரு அன்று சொன்னது என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது.

அதிகாரத்தில் இருப்பவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னது, அதிகாரம் என்ற சொல்லுக்கு ஒரு புதிய இலக்கணத்தைச் சொல்லித் தந்தது. பத்தாண்டுகளுக்கு முன் அதிகாரத்தைப் பற்றி நான் கற்றுக்கொண்ட பாடத்தை இன்று அசைபோடக் காரணம்... இன்றைய ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் என்ற பொறுப்பை ஏற்பவர் எத்தகையவராய் இருக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லித் தருகிறது. மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு கற்பித்தார் என்று இன்றைய மாற்கு நற்செய்தி நமக்குச் சொல்கிறது. அதிகாரம் என்பதைக் குறித்து நமது கண்ணோட்டம் என்ன, நாம் அதிகாரத்தை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்ற எண்ணங்களை எழுப்பவும், இறைபணிகளில் ஈடுபடும் ஒருவர் எத்தகைய அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கவும், இன்று நமக்கு ஒரு வாய்ப்பு. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
மாற்கு நற்செய்தி 1: 21-22
ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
இயேசுவின் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல. அவர்கள் இதுவரை கேட்டிராத ஓர் அதிகாரத்துடன் ஒலித்தது இந்தப் போதனை. இயேசுவுக்கு இந்த அதிகாரம் எங்கிருந்தது வந்தது?

அதிகாரம் என்று நாம் தமிழில் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் இரு வேறுபட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அர்த்தங்களில் ஒலிக்கின்றது. இரண்டாவது வகை அர்த்தம்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்குவதற்குப் பதில், ஒரு கற்பனைக் காட்சியின் மூலம் புரிந்துகொள்ள முயல்வோம். உயர்ந்த பதவியில் இருக்கும் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச் சுற்றி பலர் வருவார்கள். ஒரு பிரம்மாண்டமான இசை ஒலிக்கும். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கைகள் தட்ட வேண்டியிருக்கும். அந்நேரம், அந்தக் கூட்டத்திற்கு மதர் தெரேசா அல்லது காந்தியடிகள் அல்லது மக்களின் மனங்களில் உயர்ந்த இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச் சுற்றி பலர் நடந்து வரவும் தேவையில்லை. அவர் அங்கு நுழைந்ததும், அந்த அரங்கத்தில் உருவாகும் மரியாதை தனிப்பட்ட வகையில் இருக்கும்.  அங்கு இருப்பவர்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம் அந்த மாமனிதர்கள் நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம். இந்த இரண்டாவது வகையில் மற்றொரு அம்சமும் அடங்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான புலமைத்துவம், அந்தப் புலமைத்துவத்தின் அடிப்படையில் அதைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அவர் சுயமாகப் பெறும் அதிகாரம்... இது இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றொரு அம்சம். பல ஆண்டுகள் பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு மின்விளக்கை உருவாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். மின்விளக்கைப் பற்றிப் பேச இவரைவிட யாருக்கு அதிகாரம் இருக்க முடியும்? எடிசன் எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

அதிகாரம் என்ற வார்த்தையைப் பற்றி வகுப்பு எடுப்பதாக நினைக்க வேண்டாம். அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.
போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில் பொதுவாக ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும் என்ற ஆவல் இருக்காது. தங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்ற பயம், ஐயம் இவை எதுவும் இருக்காது. ஒருவர் சுயமாக தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும்.

இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்தவைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே அவர் சொன்னவை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை ஏதோ மனப்பாடம் செய்தவைகளைச் சொல்வதுபோல் மறைநூல் வல்லுனர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் இருந்தன. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் இந்த அதிகாரத்துடன் போதித்தார்.
கடவுளால் அனுப்பப்படும், அவரால் உருவாக்கப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப் பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவைகளைத் தங்களுக்கு விளக்கி, தங்களை இதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர் இறக்கும் தருவாயில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்திருந்தது மோசேயின் சொற்கள்:
இணைச்சட்டம் 18: 15-20
மோசே மக்களிடம் கூறியது ஆண்டவர் என்னைநோக்கி, ‘உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.’”

உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன்.என்று இறைவன் மோசே வழியாக சொன்னது கிறிஸ்துவைக் குறித்து சொல்லப்பட்டது என்பது பல விவிலிய ஆசிரியர்களின் கருத்து. எனவேதான் இவ்விரு வாசகங்களும் இன்று இணைத்துத் தரப்பட்டுள்ளன.
மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர் பதவியில் இருந்து அதிகாரம் செலுத்தவில்லை. பலர் பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் தங்கள் உள்ளத்தில் பதித்த உண்மைகளை பயமின்றி மக்களிடம் உரைத்தனர். இறைவனின் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த அதிகாரம் ஒன்றே அவர்களைத் துணிவுடன் செயல்பட வைத்தது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வந்த இயேசு அதிகாரம் என்ற சொல்லுக்கு இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார்.
குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு இன்றைய வாசகங்கள் சொல்லித் தரும் பாடங்களை நாம் பயில வேண்டும்... நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்து காட்டிய அந்த வழியில் வாழ இறையருளை மன்றாடுவோம்.


23 January, 2012

Good News = Transformation, not Information நற்செய்தி = நற்செயல்கள்


Jesus Wireless Logo


This Sunday we are given two figures to reflect on – Prophet Jonah and Jesus, especially from the point of view of them being sent as messengers. Jonah was sent to the people of Nineveh to give them a news – a news of disaster. “Yet forty days, and Nin'eveh shall be overthrown!”  (Jonah 3: 4). In the Gospel of Mark, we see Jesus coming to Galilee preaching the gospel of God… "The time is fulfilled, and the kingdom of God is at hand; repent, and believe in the gospel." (Mk.1:15)
A cursory glance at these two messages given by Jonah and Jesus do not sound like ‘Good News’. But, a deeper reflection gives us a better understanding of what is ‘Good News’. I would like to echo the thoughts of Pope Benedict XVI on the word ‘good news’ (Evangelion, in Greek) in his book ‘Jesus of Nazareth’:

Both Evangelists designate Jesus’ preaching with the Greek term evangelion — but what does that actually mean?
The term has recently been translated as “good news.”  That sounds attractive, but it falls far short of the order of magnitude of what is actually meant by the word evangelion.  This term figures in the vocabulary of the Roman emperors, who understood themselves as lords, saviors, and redeemers of the world.  The messages issued by the emperor were called in Latin evangelium, regardless of whether or not their content was particularly cheerful and pleasant.  The idea was that what comes from the emperor is a saving message, that it is not just a piece of news, but a change of the world for the better.
When the Evangelists adopt this word, and it thereby becomes the generic name for their writings, what they mean to tell us is this:  What the emperors, who pretend to be gods, illegitimately claim, really occurs here — a message endowed with plenary authority, a message that is not just talk, but reality.  In the vocabulary of contemporary linguistic theory, we would say that the evangelium, the Gospel, is not just informative speech, but performative speech — not just the imparting of information, but action, efficacious power that enters into the world to save and transform.  Mark speaks of the “Gospel of God,” the point being that it is not the emperors who can save the world, but God.  And it is here that God’s word, which is at once word and deed, appears; it is here that what the emperors merely assert, but cannot actually perform, truly takes place.  For here it is the real Lord of the world — the living God — who goes into action.
(As quoted by Daniel B. Clendenin in http://journeywithjesus.net/index.shtml)

Two thoughts expressed by Pope Benedict captured my attention.
1. Good News (evangelion) is meant to bring about change. It need not be ‘good’, meaning pleasant.
2. Good News (evangelion) is meant to make us act. It does not fill us with information, but leads us to transformation.

We live in a world filled with information. It is so filled that there is not much room for personal interpretations and hence, no room for transformation. One of my most favourite books on media is “Amusing Ourselves to Death” written by Neil Postman. This is a scathing criticism on what television had done to the American Society in the 80s. What was written by Postman in 1985 about America is now almost a universal phenomenon.
One of the accusations that Postman levels against TV is that it has kept our human family ‘amused to death’. He says that TV has turned EVERYTHING (be it politics, religion, sports, stock market) into ENTERTAINMENT, including news. We are submerged in an ocean of information which keeps us fully soaked and completely passive. Add to this the other gadgets of communication like the cell phone and ‘i-something’… and our deluge of information has become a destructive tsunami. Here is a passge from Postman’s book:
How often does it occur that information provided you on morning radio or television, or in the morning newspaper, causes you to alter your plans for the day, or to take some action you would not otherwise have taken, or provides insight into some problem you are required to solve? For most of us, news of the weather will sometimes have such consequences; for investors, news of the stock market; perhaps an occasional story about a crime will do it, if by chance the crime occurred near where you live or involved someone you know. But most of our daily news is inert, consisting of information that gives us something to talk about but cannot lead to any meaningful action.
(“Amusing Ourselves to Death” Penguin Books, 1985. p.68)

In contrast, the news brought by Jonah and Jesus resulted in meaningful actions. The news of disaster that Jonah brought to Nineveh was not a pleasant news. But, since it shook the people out of their slumber and made them take corrective actions, it saved them. It turned out to be ‘Good News’. Similarly, when Jesus said, “Repent, and believe in the gospel” simple fisher folk like Simon, Andrew, James and John left everything and followed Jesus… a definitive and powerful transformation! These are typical samples of what news, especially ‘good news’, should be like!

One final thought on how one can ‘proclaim’ the good news without uttering a word as in the case of St Francis of Assisi. To him ‘good news’ need not always be ‘preached’… Here is an anecdote from the life of this beloved saint:
One day Francis of Assisi invited one of the young friars to join him on a trip into town to preach. The young friar was so honoured at receiving such an invitation from St. Francis that he quickly accepted. They paused beneath a tree and Francis stooped to return a young bird to its nest. They went on and stopped in a field crowded with reapers and Francis bent his back to help load the hay onto a cart. From there they went to the town square where Francis lifted a bucket of water from the well for an old woman and carried it home for her. All day long he and St. Francis walked through the streets and byways, alleys and suburbs, and they rubbed shoulders with hundreds of people. Each time they stopped, the young friar was sure that St. Francis would stop and preach. But no words of great truth or wise discourse issued from the saint's mouth. Finally, they went into the church, but Francis only knelt silently to pray. At the end of the day, the two headed back home. Not once had St. Francis addressed a crowd, nor had he talked to anyone about the gospel. The young monk was greatly disappointed, and he said to St. Francis, "I thought we were going into town to preach?" St. Francis responded, "My son, we have preached. We were preaching while we were walking and in everything we did. We were seen by many and our behavior was closely watched. It's of no use to walk anywhere to preach unless we preach everywhere as we walk! Preach the Gospel at all times. Use words only if necessary."

Preaching the good news is not an assignment ‘imposed’ on Priests and religious. It is an invitation ‘extended’ to all of us. How heavenly this world would be when all of us preach everywhere as we walk!

St Francis of Assisi


வார்த்தைகள், வார்த்தைகளால் உருவாக்கப்படும் செய்திகள், அவற்றின் வலிமை இவற்றைப்பற்றி சிந்திக்க இன்று உங்களை அழைக்கிறேன். இந்தச் சிந்தனைகளின் சிகரமாக, இறைவார்த்தையால் உருவாக்கப்படும் நற்செய்தியின் வலிமையை நாம் இன்று ஓரளவு உணர்ந்தால் எவ்வளவோ பயன் பெறலாம்.

நமக்கெல்லாம் பழக்கமான ஓர் அனுபவத்துடன் இன்றைய ஞாயிறு சிந்தனையை நாம் துவக்குவோம். இரவு நேரம். வீட்டில் தொலைகாட்சியில் செய்திகள் காட்டப்படுகின்றன. தலைப்புச் செய்திகளில் ஆரம்பித்து, அரசியல், உலகம், பங்குச்சந்தை, விளையாட்டு, வானிலை அறிக்கை என்று செய்திகள் நம்முன் அடுக்கி வைக்கப்படுகின்றன. பொதுவாக 30 நிமிடங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நாம் குறைந்தது 20 செய்திகளையாவது பார்க்கிறோம். நடுவில் வரும் விளம்பரங்களையும் நாம் அறிவிப்புக்களாக, செய்திகளாக எடுத்துக் கொண்டால், நாம் பார்க்கும் செய்திகள் 40க்கும் மேல் இருக்கும்.
தொலைக்காட்சி மட்டுமில்லாமல், நாம் வாசிக்கும் நாளிதழ்கள், கேட்கும் வானொலி, அல்லது நமது செல்லிடப் பேசியில் வரும் SMS குறுஞ்செய்திகள் என்று நம்மை ஒரு நாளில் வந்தடையும் செய்திகள் குறைந்தது 100 இருக்கும். இந்த நூறு செய்திகளில் எத்தனை செய்திகள் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன? வானிலைச் செய்திகளை நாம் நம்பத் தயாராக இருந்தால், அந்த வானிலை அறிக்கையில் மழை வரும் என்று சொன்னால், அந்தச் செய்தி நம்மைச் செயல்படத் தூண்டும். அதாவது, நாம் வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்வோம். நம்மில் ஒரு சிலர் பங்குச்சந்தை நிலவரங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றால், எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்று அன்றைய செய்தி நமக்கு வழிகாட்டலாம். ஒருவேளை விளம்பரங்களில் வரும்  தள்ளுபடி விற்பனைச்  செய்திகள் நம்மை கொஞ்சம் அதிகமாக செயல்பட வைக்கலாம். இப்படி நம்மை வந்தடையும் 100 செய்திகளில் ஓரிரு செய்திகளே நம்மைச் செயலுக்கு அழைத்துச் செல்கின்றன. மற்றபடி நம்மை வந்தடையும் 90க்கும் அதிகமான செய்திகள் நமது அறிவுப் பசிக்கு உணவுதரும் செய்திகள் தான். அச்செய்திகளைப் பற்றி நாம் நமது நண்பர்களோடு பேசி பொழுதைப் போக்கலாம்.
தகவல் தொடர்புகளில், தகவல் பரிமாற்றங்களில் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நமது உலகில் செய்திகள் பரிமாறப்படும் வேகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. உலகத்தின் பல நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் ஒருசில நிமிடங்களில் நம் வீட்டுக்குக் கொண்டுவரும் அளவு நமது தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. நம்மை ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு தகவல் கடலில் மூழ்கச்செய்யும் இந்தச் செய்திகள் எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே நாம் இன்று எழுப்பும் முக்கிய கேள்வி. இப்படி ஒரு கேள்வியை எழுப்ப நம்மைத் தூண்டுவது இன்றைய ஞாயிறு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி என்று இறைவாக்கினர் யோனாவை ஆண்டவர் அனுப்புகிறார். அவர் சொல்லி அனுப்பும் செய்தி என்ன? இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் (இறைவாக்கினர் யோனா 3: 1-5, 10)
மாற்கு நற்செய்தியின் முதல் வரியில் நாம் வாசிப்பது இது: கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:  (மாற்கு நற்செய்தி 1: 1)
சில வரிகளுக்குப் பின், மீண்டும் முதல் பிரிவு 14ம் திருவசனத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி பகுதி இந்த வரிகளுடன் ஆரம்பமாகிறது.

யோனாவுக்கு இறைவன் தந்த செய்தி, இயேசு பறைசாற்றிக் கொண்டே வந்த கடவுளின் நற்செய்தி இவ்விரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால் இவை நல்ல செய்திகள் போலத் தெரியவில்லை. நினிவே அழியப்போகிறது என்ற செய்தியும், ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளும் நல்ல செய்திகளா? ஆம், இவை நல்ல செய்திகள். நல்ல செய்தியைப் பற்றி, நற்செய்தியைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் செய்திகள்.

நற்செய்தி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் Euangelion என்று கூறப்படுகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய Jesus of Nazareth” என்ற புத்தகத்தில் Euangelion என்ற கிரேக்க வார்த்தைக்கு அவர் தரும் விளக்கம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
Euangelion என்ற வார்த்தையை நாம் 'நற்செய்தி' அதாவது, 'நல்ல செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். இந்த மொழி பெயர்ப்பு நம்மை ஈர்க்கிறது. ஆனால், Euangelion என்ற கிரேக்கச் சொல்லின் ஆழத்தை 'நல்ல செய்தி' என்ற மொழிபெயர்ப்பு புரியவைக்கவில்லை.
இந்த வார்த்தை உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய வார்த்தை. இப்பேரரசர்கள் மக்கள் மீது முழு அதிகாரம் கொண்டவர்களாக, மக்களையும் இந்த உலகையும் காப்பவர்களாக தங்களையே எண்ணி வந்தனர். அவர்கள் தந்த செய்திகள் எல்லாமே Euangelion என்று சொல்லப்பட்டது. அச்செய்திகள் மகிழ்வான, இதமான செய்திகளாக இருந்தனவா என்பது கணக்கில்லை. பேரரசரிடமிருந்து வந்த செய்தி என்பதால் அது பாதுகாக்கும் சக்தி பெற்றதென்று கருதப்பட்டது. அது வெறும் தகவல்களைத் தரும் செய்தி அல்ல. மாறாக, உலகை மாற்றக்கூடிய அதிலும் உலகை உயர்ந்ததொரு நிலைக்கு மாற்றக் கூடிய வலிமை பெற்ற செய்தி என்று கருதப்பட்டது.
உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய Euangelion என்ற கிரேக்கச் சொல்லை நான்கு நற்செய்தியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் எழுதியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாம் நான்கு நற்செய்திகள் என்று குறிப்பிடுகிறோம்.
கடவுளாக, மனிதர்களைக் காப்பவராக தன்னையேத் தவறாக எண்ணி வந்த பேரரசன் பயன்படுத்திய Euangelion என்ற வார்த்தை இயேசுவில் தன் முழுமையானப் பொருளைக் கண்டது.
நாம் இன்று பயன்படுத்தும் ஒரு சில சொற்றொடர்களை Euangelion என்ற வார்த்தையை விளக்க நாம் பயன்படுத்தலாம். தகவல் பரிமாற நாம் பேசுவது informative speech. செயல்படத் தூண்டும் வகையில் நாம் பேசுவது performative speech. நாம் கேட்கும் நற்செய்திகள் நம்மைச் செயல்படத் தூண்டும் செய்திகள் என்று திருத்தந்தை இந்த வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நற்செய்தி என்ற சொல்லில் நல்ல+செய்தி என்ற இரு வார்த்தைகள், இரு அம்சங்கள், இரு உண்மைகள் போதிந்துள்ளதைக் காணலாம். 'நல்ல செய்தி' என்றதும், இதமான, மகிழ்வான செய்தி என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. நாம் சிந்திக்கும் நற்செய்தி பல நேரங்களில் இதமாக, மகிழ்வாக இருக்காது. 'நினிவே அழியப்போகிறது' என்பது எப்படி இதமான, மகிழ்வான செய்தியாக இருக்க முடியும்? ஆனால், நற்செய்தி என்ற சொல்லுக்கு, நன்மை விளைவிக்கும் செய்தி என்று பொருள் கொண்டால், அதன் முழு அர்த்தமும் விளங்கும். இந்த கோணத்தில் பார்த்தால், ‘நினிவே அழியப்போகிறது என்று யோனா குரல் எழுப்பிக் கூறியதும், அந்த நகர மக்கள் விழித்தெழுந்தனர். யோனா வழங்கிய அந்தக் கொடூரமான செய்தி அந்நகரைக் காப்பாற்றியது. எனவே இது நல்ல செய்தியானது. இப்படி சொல்லப்படும் செய்திகள் எனக்கு கத்தியை நினைவுபடுத்துகின்றன.
அறுவைச் சிகிச்சையில், அல்லது சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் கத்திகள் குத்தும், வெட்டும், கிழிக்கும்... ஆனால், இறுதியில் அந்தக் கத்திகள் நன்மைகளைப் படைக்கும். அதுபோன்றது இறைவாக்கு, நற்செய்தி... இந்தப் பொருளில்தான் இறைவார்த்தை இருபுறமும் கூரான வாள் என்று எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

நற்செய்தி அல்லது நல்ல செய்தியில் இரண்டாம் வார்த்தை செய்தி... இங்கு செய்தி என்ற சொல் வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. செயல்களுக்கு அழைத்துச் செல்லும் செய்திகள் இவை. மிக விரைவில் தொடர்புகள் நடைபெறும் இந்தக் காலத்தில் நொடிக்கு நூறு செய்திகள் என்று நமது வாழ்வை செய்திகள் நிரப்புவதால், அவை நம்மைச் செயல் இழக்கச் செய்துள்ளன என்று துவக்கத்தில் சொன்னோம். தேவைக்கு அதிகமாய் ஒரு கடல் போல செய்திகள் நம்மைச் மூழ்கச் செய்கின்றன. இந்தக் கடலில் நாம் ஆழ்ந்து முத்தெடுப்பதும் இல்லை. கடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. இந்தக் கடலில் மிதந்து வருவதிலேயே சுகம் காண்கிறோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... பல நேரங்களில் நாம் வாழ்வில் பகிர்ந்துகொள்ளும் நற்செய்திகள் வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வு நற்செய்தியாக மாற வேண்டும் என்பதை அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.
ஒரு நாள் அசிசி நகர் புனித பிரான்சிஸ் தன்னுடன் ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழையும் நேரத்தில், ஒரு மரத்தின் மேலிருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்திருந்த ஒரு குஞ்சுப் பறவையை மீண்டும் மரமேறி அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். போகும் வழியில் அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் பிரான்சிஸ் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன் அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து சென்றார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் இருந்த அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார் பிரான்சிஸ். ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்த நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ் கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத் தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார்"நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளை விட வலிவானவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோனா வழியாகத் தரப்பட்ட அந்த அழிவுச் செய்தி நினிவே மக்களை மனம் மாற்றியது. அழிவிலிருந்து காத்தது. இன்றைய நற்செய்தியில் "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு பலரை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தது. அவர்களில் அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மீன்பிடித் தொழிலாளிகள் இயேசுவின் அழைப்பைக் கேட்டு, தங்கள் உடைமைகள், உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

நற்செய்தியைப் பறைசாற்றுவது அருள்பணியாளர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டப் பணி என்று நாம் ஒதுங்கிவிடக் கூடாது. நற்செய்தியைப் பறைசாற்ற நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். அதுவும் வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வின் மூலம் நற்செய்தியைப் பறைசாற்றும் கருவிகளாக மாற நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.