30 October, 2020

‘Saints next door’ ‘பக்கத்து வீட்டுப் புனிதர்கள்’

 
Sanits Next Door
The International Nurses Day in India

Feast of All Saints

On April 27, 2014, Divine Mercy Sunday, two great Popes – John XXIII and John Paul II – were canonized. To commemorate this special occasion, Fr Thomas Rosica, a priest of the Congregation of St. Basil, published a book titled: John Paul II – A Saint for Canada. In his “Introduction: Santo Subito!”, Fr Rosica talks about what the ‘canonization’ process in the Catholic Church signifies. He says: “That a person is declared “Blessed” or “Saint” is not a statement about perfection. It does not mean that the person was without imperfection, blindness, deafness or sin…

Beatification and canonization mean that a person lived his or her life with God, relying totally on God’s infinite mercy, going forward with God’s strength and power, believing in the impossible, loving enemies and persecutors, forgiving in the midst of evil and violence, hoping beyond all hope, and leaving the world a better place. 

The Church, down these 20 centuries, have shown the world holy persons from different walks of life and helped us see holiness from various angles. At the same time, there are millions of women and men who may not get the official recognition of the Catholic Church as a Saint, but lead a life that is worthy of a holy person. One such person is Dr Albert Schweitzer.

Here is an anecdote from the life of Dr Schweitzer: Reporters and city officials gathered at a Chicago railroad station one afternoon in 1953. The person they were meeting was the 1952 Nobel Peace Prize winner. A few minutes after the train came to a stop, a giant of a man – six feet four inches – with bushy hair and a large moustache stepped from the train. Cameras flashed. City officials approached him with hands outstretched. Various people began telling him how honored they were to meet him.
The man politely thanked them and then, looking over their heads, asked if he could be excused for a moment. He quickly walked through the crowd until he reached the side of an elderly black woman who was struggling with two large suitcases. He picked up the bags and with a smile, escorted the woman to a bus. After helping her aboard, he wished her a safe journey. As he returned to the greeting party he apologized, “Sorry to have kept you waiting.”
The man was Dr. Albert Schweitzer, the famous missionary doctor who had spent his life helping the poor in Africa. In response to Schweitzer’s action, one member of the reception committee said with great admiration to the reporter standing next to him, “That’s the first time I ever saw a sermon walking.”

It is interesting to note that Albert was a famous preacher in his younger days. So, he must have known the difference between ‘proclaiming the good news’ through words and through life. We have come across many such Saints living around us. 

During this COVID-19 pandemic, thousands of medical personnel, persons involved in essential services, nuns, brothers and priests have helped the sick people with enormous courage and sacrifice. Pope Francis has called them “saints who live next door”. In a recorded interview with journalist Austin Ivereigh, Pope Francis talked about the life under lockdown amid the Covid-19 pandemic: “I’m thinking at this time of the saints who live next door. They are heroes – doctors, volunteers, religious sisters, priests, shop workers – all performing their duty so that society can continue functioning. How many doctors and nurses have died! How many religious sisters have died! All serving … If we become aware of this miracle of the next-door saints, if we can follow their tracks, the miracle will end well, for the good of all.”
Pope Francis reiterated this same thought during his homily on Maundy Thursday, April 9, focusing specially on many Priests who have died in Italy during the pandemic serving the sick persons.

May 12, on the International Nurses Day and the 200th anniversary of the birth of Florence Nightingale, Pope Francis sent a special message to the nurses. “Every day we witness the testimony of courage and sacrifice of health care workers, and nurses in particular, who, with professionalism, self-sacrifice and a sense of responsibility and love for neighbour, assist people affected by the virus, even to the point of putting their own health at risk,” the pope said in his message. “Thank you for your service to humanity,” the pope wrote. Pope Francis also paid tribute to the nurses who contracted the virus and died, assuring their families that “the Lord knows each of them by name.” 

Today, November 1, we are invited to celebrate these ‘Saints next door’ in a special way, especially in this year of the pandemic. To help us celebrate these ‘ordinary, anonymous saints’ we are given the famous ‘Beatitudes’ from the great discourse of Jesus, called the ‘Sermon on the Mount’! Today’s Gospel passage (Matt. 5: 1-12) begins with the words: When Jesus saw the crowds, he went up the mountain, and after he had sat down, his disciples came to him. He began to teach them, saying: “Blessed are the poor in spirit…” Since most of us are familiar with the ‘Beatitudes’, let us turn our attention to the setting of this discourse – namely, the mountain, as well as to the notion of Jesus, as the Giver of Blessings. 

Jesus chose the mountain for his discourse… Mountains hold a great magical charm on human beings from time immemorial. We have heard of great sages who had gone to mountain tops seeking ‘enlightenment’. The great silence of the peaks, the pure air on mountain tops have been sources of attraction for human beings. From the top of a mountain, our view becomes more enlarged. These lovely aspects of silence, purity and broader vision have prompted many religions to ascribe mountains as the dwelling places of gods.  

The second aspect we can dwell on from today’s Gospel is – the notion of Jesus, as the Giver of Blessings. I shall rely heavily on Fr Ron Rolheiser, the Oblate Priest, writer and professor of theology. He has spoken of Jesus as operating out of a ‘Blessed consciousness’. Let me quote extensively from Fr Rolheiser:
There’s a Buddhist parable that runs something like this: One day as the Buddha was sitting under a tree, a young, trim soldier walked by, looked at the Buddha, noticed his weight and his fat, and said: “You look like a pig!” The Buddha looked up calmly at the soldier and said: “And you look like God!” Taken aback by the comment, the soldier asked the Buddha: “Why do you say that I look like God?” The Buddha replied: “Well, we don’t really see what’s outside of ourselves, we see what’s inside of us and project it out. I sit under this tree all day and I think about God, so that when I look out, that’s what I see. And you, you must be thinking about other things!”
There’s an axiom in philosophy that asserts that the way we perceive and judge is deeply influenced and colored by our own interiority… Thomas Aquinas expressed this in a famous axiom: Whatever is received is received according to the mode of its receiver.
If this is true, and it is, then, as the Buddhist parable suggests, how we perceive others speaks volumes about what’s going on inside of us. Among other things, it indicates whether we are operating out of a blessed or a cursed consciousness. Let’s begin with the positive, a blessed consciousness:  We see this in Jesus, in how he perceived and in how he judged. His was a blessed consciousness. (Fr Rolheiser) 

Right from the moment when the Angel Gabriel came to the young lady Mary to talk about Jesus becoming a human, words of blessings were shared: “Hail full of grace…” (Lk. 1:28) was the first blessing that Mary received from the Angel. Later, her cousin Elizabeth heaped more blessings on Mary: “Blessed are you among women and blessed is the fruit of your womb!” (Lk 1: 42) Hence, right from the moment of conception, Jesus was blessed.

As the gospels describe it, at his baptism, the heavens opened and God’s voice was heard to say: “This is my blessed one, in whom I take delight.” And, it seems, for the rest of his life Jesus was always in some way conscious of his Father saying that to him: “You are my blessed one!” As a consequence, he was able to look out at the world and say: “Blessed are you when you are poor, or when you are persecuted, or suffering in any way. You are always blessed, no matter your circumstance in life.” He knew his own blessedness, felt it, and, because of that, could operate out of a blessed consciousness, a consciousness that could look out and see others and the world as blessed.
Sadly, for many of us, the opposite is true: We perceive others and the world not through a blessed consciousness but through a cursed consciousness… If any of us could play back our lives as a video we would see the countless times, especially when we were young, when we were subtly cursed, when we heard or intuited the words: Shut up! Who do you think you are!... You’re full of yourself! 
All of these were times when our energy and enthusiasm were perceived as a threat and we were, in effect, shut down. And the residual result in us is shame, depression, and a cursed consciousness.  Unlike Jesus we don’t see others and the world as blessed. Instead, like the young soldier looking at an overweight Buddha under a tree, our spontaneous judgments are swift and lethal: “You look like a pig!”
Our harsh judgments of others say less about them than they say about us. Our negativity about others and the world speaks mostly of how bruised and wounded, ashamed and depressed, we are – and how little we ourselves have ever heard anyone say to us: “In you I take delight!” (Fr Rolheiser)

In today’s Gospel we hear the 8 Beatitudes proclaimed by Jesus. The final Beatitude, namely, “Blessed are those who are persecuted because of righteousness…” (Mt. 5:10), takes our thoughts to Fr Stan Swamy, and other noble persons who are languishing in prisons in India, as well as, in many other countries in the world. The final Beatitude is given special consideration by Jesus and, hence, He goes on to say: “Blessed are you when people insult you, persecute you and falsely say all kinds of evil against you because of me. Rejoice and be glad, because great is your reward in heaven, for in the same way they persecuted the prophets who were before you.” (Mt. 5:11-12)

May these closing lines of today’s Gospel passage penetrate the prison cells of Fr Stan Swamy and thousands of others “who are persecuted because of righteousness” and fill these noble souls with courage and hope!

Fr Stan and other human-rights activists

புனிதர் அனைவரின் பெருவிழா

2014ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும், திருத்தந்தை 23ம் யோவான் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். அவ்வேளையில், John Paul II - A Saint for Canada, கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் யோவான் பவுல் என்ற நூல் வெளியானது. கனடா நாட்டில் வாழும் Thomas Rosica என்ற அருள்பணியாளர் வெளியிட்ட இந்நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள், இன்று நாம் கொண்டாடும் புனிதர் அனைவரின் பெருவிழாவன்று, புனிதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன:
"ஒருவர் 'முத்திப்பேறு பெற்றவர்' என்றோ 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல அது. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பு அல்ல... முத்திப்பேறு பெற்றவராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர், கடவுளின் கருணையைச் சார்ந்து, கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியோரையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில், அவர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச்சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது."

அருள்பணி Thomas Rosica அவர்கள் கூறியுள்ள இப்பண்புகள் பலவற்றையும், தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தியவர்கள், புனிதர்கள். இவர்களில் சிலரை, கத்தோலிக்கத் திருஅவை, அருளாளர்கள் என்றும், புனிதர்கள் என்றும், உலகிற்குப் பறைசாற்றுகின்றது. ஆனால், அந்த அதிகாரப்பூர்வமான பறைசாற்றலைப் பெறாமல், இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்கள், நம் கண்முன்னே, நற்செய்தியின் சான்றுகளாக, வலம்வருகின்றனர். 

வாழ்க்கையை நற்செய்தியாக மாற்றியப் பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். லூத்தரன் சபையைச் சேர்ந்த ஆல்பர்ட் அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில், தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப்பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில், மருத்துவமனையொன்றை நிறுவி, பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச் செய்துவந்தார்.

இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதற்கு அடுத்த ஆண்டு, அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் சென்றார். இரயிலில் வந்திறங்கிய அவரை வரவேற்க, பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆல்பர்ட் அவர்கள், இரயிலைவிட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்கவேண்டும் என்று வேண்டியபடி, ஆல்பர்ட் அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்தவர்களிடம் திரும்பிவந்தார் ஆல்பர்ட். நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர், மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான், முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.
இளமையில், நற்செய்தியை, மறையுரைகளாய் வழங்கி புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில், நற்செய்தியை, வாழ்வாக்கினார். நடமாடும் மறையுரையாக வாழ்ந்த மருத்துவர் ஆல்பர்ட் அவர்கள், புனிதர் என்ற பட்டத்தைப் பெறாதவர். இவரைப் போல், இன்னும் பலகோடி மனிதர்கள், புனிதர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனினும், உன்னத மனிதர்களாக நம் உள்ளங்களில் குடிகொண்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களாக நம்மை வதைத்துவரும் கொள்ளைநோய் கொடுமையால் துன்புற்ற பலருக்கு, உடலளவிலும், ஆன்மீக அளவிலும் உதவிகள் புரிந்து, அப்பணிகளில் தங்கள் உயிரையே வழங்கிய பல்லாயிரம் நல்ல உள்ளங்களை, இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். இவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பக்கத்து வீட்டுப் புனிதர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். நம்மைச்சுற்றி வாழும் பக்கத்து வீட்டுப் புனிதர்களை'க் கொண்டாட கத்தோலிக்கத் திருஅவை வழங்கியுள்ள அற்புதமான வாய்ப்பு, புனிதர் அனைவரின் பெருவிழா. 

இப்பெருவிழாவன்று, 'பேறுபெற்றோர்' என்ற ஆசீருடன், இயேசு வழங்கிய புனிதத்துவத்தின் பல்வேறு அம்சங்கள், நமது நற்செய்தியாக ஒலிக்கிறது. இப்பகுதியை நாம் அடிக்கடி கேட்டு, சிந்தித்திருக்கிறோம். இன்றைய சிந்தனைக்கு நாம் இரு எண்ணங்களை மட்டும் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். இயேசு மலை மீது அமர்ந்ததையும், அவர் வழங்கிய ஆசி மொழிகளையும் நம் சிந்தனைகளின் மையமாக்குவோம். "இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர்ந்தார்" (மத். 5:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

மலை... உடலிலும், மனதிலும், மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளைச் சூழ்ந்திருக்கும் அமைதி, மலைப்பகுதிகளில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வை உருவாக்கும். மேலும், மலை மீது நிற்கும்போது, நமது பார்வை, பரந்து விரிந்ததாக மாறும். அமைதி, தூய்மை, புத்துணர்வு, பரந்து விரிந்த பார்வை, என்ற உன்னத அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களில் கருதப்படுகின்றன.

மலைமீது அமர்ந்த இயேசு, தன் போதனைகளை, ஆசி மொழிகளுடன் ஆரம்பிக்கிறார். அவர் ஆசீரால் நிறைந்தவர் என்பதால், அவர் இவ்வுலகில் வாழும் அனைவரையும், குறிப்பாக, இவ்வுலகில் துயரங்களைச் சந்திப்போரை, ஆசீர்வதித்து, தன் படிப்பினைகளை வழங்குகிறார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார்.
இந்தக் கூற்றை சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று எப்படி சொன்னீர்?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்து இறைவனையேத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும் இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார். 

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும், நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர்பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர்பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தையும் சபிக்கப்பட்டதாய் காணும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசீர்களை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை, நமக்கு வந்த சாபங்கள் என்று பெரிதுபடுத்துவதால், நம் வாழ்வு, சாபங்களால் நிறைந்துள்ளதைப்போன்ற உணர்வைத் தருகிறது. 

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் அறிவிக்கவந்த தலைமைத் தூதர் கபிரியேல், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். மரியாவைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் மலைப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார். 'பேறுபெற்றோர்' அதாவது, 'ஆசி பெற்றவர்' என்று இயேசு மலை மீது முழங்கிய கூற்றுகள், உலகப் புகழ்பெற்றவை:
மத்தேயு 5 3-10
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; துயருறுவோர் பேறுபெற்றோர்; கனிவுடையோர் பேறுபெற்றோர்; நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்...

'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறிய ஆசி மொழிகள், பல்லாயிரம் உள்ளங்களில் உன்னத எண்ணங்களை விதைத்துள்ளன. அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியை, இம்மலைப்பொழிவில் ஆணித்தரமாக அறிவித்துள்ள இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோரையும் அதிகம் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, அவர்கள் மேற்கொண்ட அகிம்சை வழி போராட்டங்களுக்கு, உந்துசக்தியாக இருந்தது. 

பேறுபெற்றோர் என்று இயேசு கூறிய இந்த வரிசையில், இறுதியாக அவர் கூறியுள்ள நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் என்ற சொற்கள், நம் எண்ணங்களை, மும்பைச் சிறையில் வாடும் அருள்பணி ஸ்டான் சுவாமி, மற்றும் அவருடன் சிறைப்பட்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவர் மீதும் திருப்புகின்றன. பேறுபெற்றோர் வரிசையில் கூறப்பட்டுள்ள எட்டு பேறுகளில், ஏனைய ஏழு பேறுகளைப்பற்றி இயேசு கூடுதலான விளக்கங்கள் தரவில்லை. இறுதியில், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று கூறிய இயேசு, அதன் விளக்கத்தையும் வழங்கியுள்ளார். இந்த விளக்கத்துடன் இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தி நிறைவடைகிறது.
மத்தேயு 5:10-12
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். 

அனைத்துப் புனிதரின் பெருவிழாவான இந்த ஞாயிறன்று, இயேசு கூறிய இச்சொற்கள், சிறையில் வாடும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கும், ஏனைய மனித உரிமை போராளிகளுக்கும் மன உறுதியையும், நிறைவான ஆசீரையும் வழங்க இறைவனை மன்றாடுவோம்.

இறுதியாக, ஓர் எண்ணம்... நவம்பர் 1 புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவுநாள். இவ்விரு நாட்களும், இந்த வரிசையில், ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பொதுவாக, ஒருவர் இறந்தபின்னரே, அவர், புனிதரென அறிவிக்கப்படுவார். எனவே, முதலில் இறந்தோரின் நினைவுநாளையும், அதைத்தொடர்ந்து, புனிதர்களின் திருநாளையும் கொண்டாடுவதுதானே பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமும், இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா? என்ற கேள்விகளும் எழுகின்றன. 

ஒருவர் இறந்ததும், அவரைப் பற்றி நல்லவைகளே அதிகம் பேசப்படும். ஒருவரது குறைகளைக் குறைத்து, மறைத்துவிடும் வல்லமை பெற்றது மரணம். ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே.

இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில், வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், அவ்வாறே சூழ இருப்பவர்களால் போற்றப்படும் மனிதர்கள், புனிதர்கள் என்ற நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.
இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான், கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாளுக்குப்பின், இறந்தோர் அனைவரின் நினைவு நாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து. 

ஒரு தலைவன் அல்லது நாயகன், இவ்வுலகில் பெரும் ஒளியைத் தூண்டுகிறார். இருள் சூழ்ந்த இவ்வுலக வீதிகளில் மக்கள் நடப்பதற்கு அவர் ஒளிப் பந்தங்களை ஏற்றி வைக்கிறார். புனிதரோ, உலகின் இருளான பாதைகளில் தானே ஒளியாக நடந்து செல்கிறார் என்று கூறியவர், பீலிக்ஸ் அட்லர் (Felix Adler).
"The hero is one who kindles a great light in the world, who sets up blazing torches in the dark streets of life for men to see by. The saint is the man who walks through the dark paths of the world, himself a light." (Felix Adler).

இருள் சூழ்ந்த இவ்வுலகைப் பற்றி அடிக்கடி வேதனைப்படுகிறோம். "இருளைப் பழிப்பதைவிட, ஒளியை ஏற்றுவோம்" என்று பல மேதைகள் கூறியுள்ளதைக் கேட்டிருக்கிறோம். இருள் சூழ்ந்த இவ்வுலகில் ஒளியை ஏற்றுவோம்; ஒளியாக வலம்வருவோம்; இறுதியில் நாம் இவ்வுலகைவிட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச்சென்றோம் என்ற திருப்தியுடன் விடைபெற்றுச் செல்வோம். அதுவே புனிதர்களின் அழகு!


27 October, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர் நலமடைதல் 4

  
The dust in your brother’s eye

விதையாகும் கதைகள் : அடுத்தவர் கண்ணில் துரும்பு...

தன் மனைவியின் கேட்கும்திறன் குறைந்துவருவதாகக் கவலைப்பட்ட கணவர், தங்கள் குடும்ப மருத்துவரை தனியே சந்திக்கச் சென்றார். மருத்துவர், அவருக்கு, ஓர் ஆலோசனை தந்தார். "நீங்கள் வீட்டில் இருக்கும்போது, 30 அடி தூரத்திலிருந்து சாதாரணக் குரலில், உங்கள் மனைவியிடம் ஏதாவது கேளுங்கள். அவர் அதற்குப் பதில் சொல்லவில்லையெனில், 20 அடி தூரத்திலிருந்து, மீண்டும் கேளுங்கள். பின்னர், 10 அடி, 5 அடி என்று தூரத்தைக் குறைத்துக்கொண்டு, அதே கேள்வியைக் கேளுங்கள்" என்று மருத்துவர் சொல்லி அனுப்பினார்.

அன்று மாலை, மனைவி சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார். கணவர் ஹாலில் இருந்தபடியே, "கமலா, இன்று இரவு உணவுக்கு என்ன செய்கிறாய்?" என்று சாதாரண குரலில் கேட்டார். மனைவியிடமிருந்து எந்த பதிலும் வராததால், டாக்டர் சொன்னபடி, இன்னும் சிறிது அருகில் சென்று, மீண்டும் இருமுறை அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் பதில் ஏதும் மனைவியிடமிருந்து வராததால், கணவர் வெகுவாகக் கவலை கொண்டார்.

இறுதியாக, சமையலறை வாசலில் நின்று, "கமலா, என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று மீண்டும் கேட்டார். மனைவி திரும்பாமல் சமைத்தபடி இருந்தார். பதில் ஏதும் வரவில்லை. மனைவிக்கு மிக அருகில் சென்று, பின்புறம் நின்று, "இன்று இரவு உணவுக்கு என்ன செய்கிறாய்?" என்று குரலை உயர்த்திக் கேட்டபோது, மனைவி அவரிடம் திரும்பி, "இரவு உணவுக்கு சப்பாத்தி செய்திருக்கிறேன். இதை, நான், உங்களிடம், ஐந்தாவது முறையாகச் சொல்லிவிட்டேன், போதுமா?" என்று சப்தமாகச் சொன்னார்.

நம் குறைகளைவிட, அடுத்தவர் குறைகளைப்பற்றி அதிகம் கவலைப்படும் நம்மை நோக்கி, இயேசு கேட்கும் கேள்வி இது: உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர், அல்லது, சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?” (மத்தேயு 7:3)

“Go and show yourselves to the priests”

லூக்கா நற்செய்தி பத்து தொழுநோயாளர் நலமடைதல் 4

பத்துத் தொழுநோயாளரை இயேசு குணமாக்கும் புதுமை பதிவுசெய்யப்பட்டுள்ள லூக்கா நற்செய்திப் பகுதி (லூக்கா 17:11-19), நமக்குச் சொல்லித்தரக்கூடிய மூன்று பாடங்களில், தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு என்ற முதல் பாடத்தையும், துன்ப நேரத்தில், சமுதாய வேறுபாடுகள் விலகிச்செல்லும் என்ற 2வது பாடத்தையும் சென்ற தேடலில் புரிந்துகொள்ள முயன்றோம்.

யூதர், சமாரியர் என்ற இருவேறு குலங்களில் பிறந்திருந்தாலும், நோயுற்ற காரணத்தால், 'தொழுநோயாளர்' என்ற ஒரே குலத்தில் இணைக்கப்பட்ட பத்து பேர், இயேசுவை நாடிவந்த தருணத்தை, நற்செய்தியாளர் லூக்கா, இவ்வாறு சித்திரித்துளார்:
லூக்கா 17:12-13
இயேசு ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

நற்செய்தியாளர் லூக்கா சித்திரித்துள்ள இக்காட்சியை சிறிது கற்பனை செய்து பார்ப்போம். ஒவ்வொரு ஊருக்கும் இயேசு சென்ற வேளையில், அவரைச்சுற்றி, மக்கள் கூட்டமும் சென்றது. இந்த மக்கள் கூட்டத்தின் அளவை, நற்செய்தியாளர் லூக்கா ஒருமுறை, "ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது" (லூக்கா 12:!) என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சாகும் தறுவாயிலிருந்த தன் மகளைக் குணமாக்கும்படி, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர், இயேசுவிடம் வந்து, வேண்டியபோது, இயேசு அவருடன் புறப்பட்டார். இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது (லூக்கா 8:42ஆ) என்று கூறப்பட்டுள்ளது.

இயேசு எருசலேம் நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்திலும், அவரைச்சுற்றி மக்கள் கூட்டம் நெருக்கிக்கொண்டிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். அவ்வேளையில், அந்தக் கூட்டத்தின் இரைச்சல்கள் நடுவே, இயேசு, அந்த பத்து தொழுநோயாளர் எழுப்பிய விண்ணப்பக் குரலை கேட்டார் என்று நற்செய்தியாளர் லூக்கா சுட்டிக்காட்டுகிறார். கூட்டத்தினர் நடுவிலும், நோயுற்றவர்கள் விடுக்கும் விண்ணப்பக் குரலை இயேசுவால் கேட்க முடிந்தது என்பதற்கு, பார்வையற்ற ஒருவர் இயேசுவிடம் விண்ணப்பித்த நிகழ்வு, மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
லூக்கா 18 35-40
இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

இதையொத்த ஒரு காட்சி, இங்கு நிகழ்வதைக் காண்கிறோம். மக்கள் கூட்டம் புடைச்சூழ, இயேசு ஊருக்குள் வந்தபொழுது, அவரது வருகையைப்பற்றி கேள்விப்பட்ட பத்து தொழுநோயாளர், தாங்கள் ஊருக்குள் செல்லமுடியாது என்பதை உணர்ந்து, இயேசுவை வழியிலேயே சந்தித்து, குரல் எழுப்பி வேண்டுவதைக் காண்கிறோம். அவர்கள் எழுப்பிய குரல், இயேசுவின் கவனத்தை ஈர்க்கிறது. எந்த ஒரு கூட்டத்திலும், எந்த ஓர் இரைச்சலிலும், தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்கும் ஒரு தாயைப்போல, இயேசு, தொழுநோயாளரின் குரலைக் கேட்டார் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

அவர்களின் குரல் கேட்டு நிற்கும் இயேசு, அவர்களிடம் கூறிய சொற்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.
இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. (லூக்கா 17: 14)

இயேசு அவர்கள் இருந்த பக்கம் கரங்களை நீட்டி, ஆசீர்வதித்து, அவர்கள் நோயை குணமாக்கியபின், நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்று சொல்லவில்லை. மாறாக, அவர்களைக் கண்டதும், அவர், இச்சொற்களை, ஒரு கட்டளைபோல் இடுகிறார். "அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று" என்பதை, நற்செய்தியாளர் லூக்கா தெளிவாகக் கூறியுள்ளார்.

தங்கள் நோய் நீங்காத நிலையிலும், இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவர்கள் புறப்பட்டுச் சென்றது, அத்தொழுநோயாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. அந்த நம்பிக்கை, அவர்களைக் குணமாக்கியது.

இதையொத்த நிகழ்வுகள், இயேசு ஆற்றிய பல்வேறு புதுமைகளில் வெளிப்படுகின்றன. இயேசு செய்த முதல் அரும் அடையாளம் என்று, நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ள கானா திருமண விருந்து புதுமையில் நிகழ்ந்ததை, இவ்வாறு வாசிக்கிறோம்:
யோவான் நற்செய்தி, 2: 6-9
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.

பணியாளர்கள் தொட்டிகளில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது திராட்சை இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்தப் புதுமை நடந்தது என்பதை ஆய்வு செய்யும்போது, அழகிய, ஆழமான எண்ணங்கள் தோன்றுகின்றன.

வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில், அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது, அவர் ஆற்றும் ஒரு செயலோ, புதுமைகள் நிகழ காரணமாக அமையும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொன்னதாகவோ, செய்ததாகவோ நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. கானா திருமணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பலவற்றில், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகளை, இயேசு ஆசீர்வதிப்பதைப் போல் இக்காட்சி வரையப்பட்டுள்ளது. ஆனால், நற்செய்தியில் நாம் வாசிப்பது இதுதான். இயேசு, இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். பின்னர், இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள்மீது தன் கரங்களை நீட்டியதாகவோ, தண்ணீரைத் தொட்டதாகவோ, ஆசீர் அளித்ததாகவோ, வேறு எதையும் செய்ததாகவோ, நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

இயேசு கூறிய இவ்விரு வாக்கியங்களுக்குமிடையே, நற்செய்தியாளர் யோவான், பொருள்நிறைந்த, ஓர் அழகிய வாக்கியத்தைப் பதிவுசெய்துள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், பணியாளர்கள், அத்தொட்டிகளை, விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான், அந்த பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொருத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, அதாவது, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போதே அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்துவிட்டது.

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதே என்றக் கவலையில் பணியாளர்கள் குழம்பியிருக்க, அந்தப் பிரச்சனைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு செயலாக, 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேட்டு, பணியாளர்கள், இன்னும் கூடுதலாக, குழப்பமும், எரிச்சலும், அடைந்திருக்கலாம். இந்த எரிச்சலோடு, பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அத்தொட்டிகளை, ஏனோதானோவென்று, அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், நற்செய்தியாளர் யோவான், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்:. அவ்வாறெனில், அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது.

அதேவண்ணம், நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையிலும், நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்று இயேசு கூறியதைக் கேட்டு தொழுநோயாளர்கள் புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் குணமான புதுமை தொடங்கியது. அது, போகும் வழியில் நிறைவடைந்தது. இயேசு ஆற்றிய பல புதுமைகளில், அவரது சொல், அல்லது செயலின் வல்லமை உடனுக்குடன் வெளிப்பட்டது.

இயேசு, தன் பணிவாழ்வைத் துவக்கிய வேளையில், நாசரேத்து தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சொற்களான, ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்கு பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை என்ற சொற்களை வாசித்தபின், "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக்கா 4:21) என்று கூறினார். "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இனி நிறைவேறும்”, என்றோ, “அவ்வாக்கை, இனி நான் நிறைவேற்றுவேன்" என்றோ கூறாமல், அந்த வாக்கு 'இன்று நிறைவேறிற்று' என்று இயேசு கூறியிருப்பதை, நிகழ் பொழுதின் அருள் The Grace of the Present Moment என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

பத்து தொழுநோயாளர் குணமான இப்புதுமை உட்பட, இயேசு ஆற்றிய பல புதுமைகளில் வெளிப்பட்ட நிகழ் பொழுதின் அருள் பற்றி நாம் அடுத்தத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.