14 September, 2023

Forgiveness = Breath of Life மன்னிப்பு = வாழ்வின் மூச்சு


24th Sunday in Ordinary Time

Jordyn Howe, a teenager (14), took his step father’s gun to school one day and while showing the gun to his friends in the school bus, accidentally shot his fellow student Lourdes, aged 13, and killed her. Jordyn faced up to 22 months in prison, and initially, Ady Guzman-De Jesus, the mother of Lourdes, demanded a harsh punishment. But after Ady met with Jordyn and a judge, she came up with a different plea deal, and the court agreed.
Jordyn would spend one year in a juvenile detention centre and would also spend time touring the state of Florida with Ady, talking about the dangers of guns. Ady Guzman-De Jesus’s extraordinary gesture of forgiveness moved everyone in the court as she hugged Jordyn despite her grief over her lost daughter. For Ady, the ruling had helped to bring her peace. She told the reporters waiting outside the court: “I forgive him because I’ve found peace, because I feel like my daughter now is in peace. It won’t bring my daughter back, but at least it will keep her name alive. I believe this is what my daughter would have wanted me to do.”

Today’s Gospel invites us to reflect on one of the sublime abilities human beings possess – the ability to forgive and be forgiven. Both these are two sides of the same coin, as expressed by St Francis of Assisi in his famous prayer for peace: “In pardoning, we are pardoned.” It is appropriate that we are called to reflect on this noble ability after having passed through two special days in the past week, namely, September 11 – the day to remember the 9/11 attack in New York, and September 14 – the Feast of the Exaltation of the Cross. Here is a news item that ties up both these days – September 11 and 14.

It is now 22 years since the ‘9/11 attacks’ took place in New York. This place is now called Ground Zero and there is the 9/11 Memorial and Museum at Ground Zero. This Memorial has many meaningful exhibits, one of them being a cross called the World Trade Center cross, as well as the Ground Zero cross. Here is a newspaper report on this cross:
A cross-shaped steel beam found amid the wreckage in the days following the September 11 terrorist attack has been lowered 70 feet down into the bowels of where the twin towers once stood to become part of the exhibit at the National September 11th Memorial and Museum. The two-ton, 20-foot-high T-beam, which has now become a religious relic,… was a symbol of hope for many working on rescue and recovery there, so much so that the construction worker who discovered it believes he stumbled on to a miracle. 'I saw Calvary in the midst of all the wreckage, the disaster,' Frank Silecchia recalled. 'It was a sign... that God didn't desert us.' (By Daily Mail Reporter, 25th July 2011)

Although the American Atheists have objected to this Cross being part of the Memorial, it is very heartening to see that thousands have drawn inspiration from the Cross. The Cross inspires people in so many ways and teaches us so many lessons. One of the lessons learnt from the Cross and, more particularly, from the Crucified Christ is forgiveness. He preached and practised forgiveness all his life. He ‘breathed’ forgiveness and hence when he was about to stop breathing, he wanted to leave that as his last breath praying: “Father forgive them…”. When we celebrated the Exaltation of the Cross last Thursday, we remembered the great lesson of forgiveness taught by Jesus hanging on the cross.

It would be hard for us to deal with all that Jesus did and said about forgiveness. We shall focus on just two aspects of forgiveness taught by Jesus in today’s Gospel - Matthew 18:21-35. The first aspect comes in the form of a numerical answer given by Jesus to the question posed by Peter - How many times do we forgive someone who makes a mistake? All of us must have faced this question in our lives. Peter had this doubt too. Here are the opening lines from today’s Gospel:
Then Peter came up and said to Jesus, “Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?” Jesus said to him, “I do not say to you seven times, but seventy times seven.” (Matthew 18: 21-22)

It is interesting to note that the opening lines of the gospel passages of last Sunday and this Sunday sound similar. Last Sunday, Jesus began saying, “If your brother sins against you, go and tell him his fault, between you and him alone” (Mt. 18:15), implying that even if my brother is the one who sins, it is my duty to begin the process of reconciliation. Peter must have accepted this challenging proposition; but, there was the next question. Hence this week’s gospel begins with Peter’s question: How often will my brother sin against me, and I forgive him? (Mt. 18:21)

When Jesus replied, “Seventy times seven,” it was not a lesson in mathematics. Forgiveness goes beyond numbers and calculations. When Peter asked Jesus whether forgiving seven times would be sufficient enough, Peter would have imagined that Jesus would appreciate him. Forgiving someone seven times was quite a generous gesture for a Jew, since the number 7 meant fullness. But, Jesus tells him to go beyond. I imagine the conversation between Jesus and Peter in this fashion:
Peter: Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?
Jesus: Peter, your question is pretty surprising to me. Your question - ‘How often should I forgive my brother?’ sounds like, ‘How often should I breathe?’ If you don’t breathe, you die. If you don’t forgive, you die too. The simple formula… forgive always as you would breathe always.
This message was communicated to Peter when Jesus said “not seven times, but seventy times seven.” This is the first lesson that Jesus gives in today’s gospel. Very challenging indeed!

The second lesson is equally challenging. Jesus teaches that we are called to forgive, irrespective of how great or small is the sin. To illustrate this point, Jesus presents the ‘Parable of the Unforgiving Servant’, where one owes a debt of ‘ten thousand talents’ and another, ‘a hundred denarii’. Some of the Bible scholars have converted these amounts in terms of daily wages. Ten thousand talents are equivalent to wages paid for 6,000,000 days, whereas, a hundred denarii are equivalent to wages paid for 100 days.

As we listen to the parable, we come across the scene where, “out of pity for him the lord of that servant released him and forgave him the debt” (Mt. 18:27). What follows this forgiveness, shocks us. But that same servant, as he went out, came upon one of his fellow servants who owed him a hundred denarii; and seizing him by the throat he said, ‘Pay what you owe.’ So his fellow servant fell down and besought him, ‘Have patience with me, and I will pay you.’ He refused and went and put him in prison till he should pay the debt. (Mt. 18:28-30)

If we wish to speak in figurative terms, we can imagine that the debt ‘ten thousand talents’ was an ocean, while ‘hundred denarii’ was only a cup of water. The one who owed the king ten thousand talents was drowning in the ‘ocean of debt’ fighting for every breath. At that moment, the saving hands of the king pulled him out. But, just a few moments later, forgetting the fresh lease of life he and his family had received, this servant tried to choke the life out of his fellow servant, who owed him just a ‘cup of water’.

Getting forgiven and forgiving are like the breath we inhale and exhale. If one of them stops, or, becomes weak, we end up sick. By not practising forgiveness, the first servant made a mockery of the forgiveness he had received. Hence, in the third part of the parable, we see that the king punishes the unforgiving servant severely. Jesus closes this parable as well as today’s gospel with a warning: “So also my heavenly Father will do to every one of you, if you do not forgive your brother from your heart.” (Mt. 18:35) 

These words of Jesus can be interpreted to mean that when we do not forgive our brother from our heart, we resist or reject God’s forgiveness to us. When we do not forgive others, we tend to inflict pain on ourselves and the wound begins to fester. Thoughts of revenge and bottled-up anger are harmful to us.
“Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured” said, Mark Twain. In stark contrast to this, he had defined forgiveness in these beautiful words: Forgiveness is the fragrance that the violet (flower) sheds on the heel that has crushed it.”
There are two more statements that talk of what forgiveness, or unforgiveness can do to us:
"Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace"
“Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die”

The French writer Victor Hugo, in his last novel “Ninety Three”, narrates an event that can be considered as a lovely parable for uncontrolled anger and revenge. During the French Revolution, a ship was sailing at sea negotiating the waves and the wind. While at sea, the sailors realized that a cannon which was not properly secured, rolled out of control and damaged the ship partially. One of the sailors risked his life to secure the cannon and saved their ship. The cannon that was not properly secured could have easily destroyed the ship. Similarly, while we are negotiating the external storms that threaten our life’s journey, our uncontrolled feelings of anger and revenge can destroy us from within.

On October 4, the Feast of St Francis of Assisi, we begin the Synod on Synodality in Vatican. We have been preparing for this Synod from October 2021. May St Francis of Assisi inspire every one of us, and thus the whole Church, to become ‘instruments of peace, reconciliation and forgiveness’:
Lord, make me an instrument of your peace
Where there is hatred, let me sow love
Where there is injury, pardon…
O Divine Master, grant that I may
Not so much seek to be consoled as to console
To be understood, as to understand
To be loved, as to love.
For it is in giving that we receive
And it's in pardoning that we are pardoned
And it's in dying that we are born to Eternal Life - Amen

In pardoning, we are pardoned…

பொதுக்காலம் 24ம் ஞாயிறு

ஜோர்டின் (Jordyn Howe) என்ற 14 வயது இளைஞன், தன் தாயோடும், வளர்ப்புத்தந்தையோடும் வாழ்ந்துவந்தார். தன் வளர்ப்புத்தந்தையிடம் இருந்த துப்பாக்கியை, ஒரு நாள், பள்ளிக்கு எடுத்துச்சென்றார், ஜோர்டின். பள்ளிப் பேருந்தில், தன் நண்பர்கள் குழுவில், ஜோர்டின் அந்தத் துப்பாக்கியை, பெருமையாகக் காட்டிக் கொண்டிருந்தபோது, அதைத் தவறுதலாகச் சுட்டுவிடவே, பேருந்தில் அமர்ந்திருந்த லூர்தெஸ் (Lourdes) என்ற இளம்பெண், குண்டடிப்பட்டு இறந்தார்.
லூர்தெஸின் தாய், ஏடி (Ady Guzman) அவர்கள், செய்தி கேட்டு, நொறுங்கிப் போனார். இளையவர் ஜோர்டின் மீது வழக்கு நடைபெற்றபோது, ஏடி அவர்களும், நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். வளர் இளம் பருவக் கைதிகள் மறு சீரமைப்பு மையத்தில், ஜோர்டின் 22 மாதங்கள் தங்கவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இறந்த இளம்பெண்ணின் தாய் ஏடி அவர்கள், நீதி மன்றத்தில் எழுந்துநின்று, ஜோர்டினுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்கும்படி, நீதிபதியிடம் மன்றாடினார். நீதி மன்றத்தில் இருந்தோர், அதிர்ச்சியடைந்தனர். அந்த அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க, இளைஞன் ஜோர்டினின் தண்டனைக்காலம், ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்கள், ஏடி அவர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர், தான் எடுத்த முடிவைக்கண்டு, தன் மகள் லூர்தெஸ், மிகவும் மகிழ்ந்திருப்பார் என்று கூறினார். அத்துடன், நீதி மன்றத்தில், ஏடி அவர்கள், இளையவர் ஜோர்டினை அணைத்துக் கொண்டது, மன்னிப்பின் அடையாளமாக ஒளிர்ந்தது.
மன்னிப்பு, லூர்தெஸின் தாய் ஏடி அவர்களையும், இளையவர் ஜோர்டினையும் மாறுபட்டதொரு வாழ்வுக்கு, அழைத்துச்செல்லும் வாயிலாக அமைந்தது. ஓராண்டு தண்டனைக்காலம் முடிந்து திரும்பிவந்த இளையவர் ஜோர்டினும், லூர்தெஸின் தாய் ஏடி அவர்களும் இணைந்து, பல பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு உரையாற்றினர். துப்பாக்கிக் கலாச்சாரத்தால் விளையும் துன்பங்களை, தங்கள் சொந்த வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவர்கள் பகிர்ந்துகொண்டது, பலரது மனங்களைத் தொட்டது.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புதப் பண்பான மன்னிப்பைப்பற்றி சிந்திக்க, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், ‘அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும் என்ற வேண்டுதலுடன் ஆரம்பமாகும் அந்த அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.

மன்னிப்பை, தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இயேசு, இன்றைய நற்செய்தியில், மன்னிப்பைப்பற்றி கூறியுள்ள இரு கருத்துக்களை, சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.
முதல் கருத்து, ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது என்ற கேள்வியின் பதிலாகக் கூறப்பட்டுள்ளது. நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்வி, பேதுருவுக்கும் எழுந்தது. அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:21-22)

சென்ற ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியின் துவக்கமும், இந்த வார நற்செய்தியின் துவக்கமும், ஏறத்தாழ, ஒரேவிதமான சொற்களுடன் துவங்குகிறது. "உங்கள் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்" (மத். 18:15) என்று சென்ற வார நற்செய்தியை, இயேசு ஆரம்பித்தார். "என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்" (மத். 18:21) என்ற சொற்களுடன், இந்த வார நற்செய்தியை, பேதுரு துவக்குகிறார்.
தவறுகளை பிறர் செய்தாலும், ஒப்புரவு முயற்சிகளை நாம் துவக்கவேண்டும் என்பதை, இயேசு, சென்ற வாரம், தெளிவாகக் கூறினார். கடினமான அச்சவாலை ஏற்றுக்கொண்ட பேதுருவுக்கு, அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. என் சகோதரர், அல்லது சகோதரி எனக்கெதிராக பாவம் செய்தால், அவர்களை, எத்தனை முறை நான் மன்னிக்கவேண்டும் என்ற கேள்வியைத் தொடுக்கிறார்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டல், பெருக்கல், கணக்குகளை ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. கணக்கற்ற முறையில் மன்னிக்கவேண்டும் என்ற கருத்தை உணர்த்தும் பாடம்.
யூதர்களுக்கு ஏழு என்ற எண், நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரியதொரு சாதனையைப்பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப்பற்றி தான் பேசிவிட்டதாக, அவர் எண்ணியிருக்கலாம். இயேசுவோ, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி, எப்போதும் மன்னிக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை, நாம், வேறு சொற்களில், இவ்வாறு கற்பனைசெய்து பார்க்கலாம். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பதுபோல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால், உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

எத்தனை முறை மன்னிப்பது என்ற கேள்விக்கு, அளவற்ற முறை மன்னிப்பு வழங்கவேண்டும் என்பது, இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தரும் முதல் பாடம். அடுத்து, எத்தனை பெரிய தவறை மன்னிப்பது என்ற கேள்விக்குப் பதில் சொல்வதுபோல், அவர், ஓர் உவமையைக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இந்த உவமை, எல்லைகள் ஏதுமின்றி, மன்னிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தது, இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை, அரசர், மீண்டும் தண்டித்தது, மூன்றாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.

எத்தனை பெரிய தவறாக இருப்பினும் மன்னிக்கவேண்டும் என்ற கருத்தைப் புரிந்துகொள்ள, இந்த உவமையில் இயேசு பயன்படுத்தியுள்ள கடன் தொகைகள் உதவியாக உள்ளன. அரசரிடம் பணியாளர் பட்டக் கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும், உடன் பணியாளர் பட்டக் கடன், 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார். ஒருநாள் கூலி என்ற அளவுகோல் கொண்டு பார்த்தால், 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,00,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 16,440 ஆண்டுகளுக்கு உரிய கூலித்தொகை. இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன் 100 நாள் கூலிக்கு இணையானது.

'பத்தாயிரம் தாலந்து', கடலளவு நீர் என்றால், 'நூறு தெனாரியம்' கையளவு நீர்! கடலளவு கடனில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக்கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, வெளியில் கொணர்ந்து, அப்பணியாளரும், அவரது குடும்பத்தாரும் வாழும்வண்ணம், மன்னிப்பு என்ற உயிர் மூச்சை வழங்கினார். அந்தப் பணியாளரோ, தனக்கு அரசர் வழங்கிய உயிர் மூச்சை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்தும் முயற்சியாக, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது, அதிர்ச்சி அடைகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் சிறுவயது முதல் பல்வேறு சூழல்களில் மன்னிப்பை பெற்று வளர்ந்துள்ளோம். மன்னிப்பினால் பக்குவம் அடையும் நம் உள்ளம், அடுத்தவரையும் மன்னிக்கப் பழகுகிறது. இதற்கு மாறாக, நாம் பெற்றுள்ள மன்னிப்புக்களை மறந்துவிட்டு, அல்லது, மறுத்து, ஒதுக்கிவிட்டு, பகைமையிலும், பழி உணர்விலும், நம் மனம் நிறையும்போது, அது, உலோகக் கிண்ணம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அமிலத்தைப் போல, நம் மனதை அரித்தவண்ணம் உள்ளது.

மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாம், உள்ளிழுத்து, வெளிவிடும் மூச்சுக்காற்றைப் போல, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த செயல்பாடுகள். ஒன்று குறைந்தாலும், நோயுறுவோம். பத்தாயிரம் தாலந்து கடனிலிருந்து மன்னிப்பு பெற்ற பணியாளர், தான் பெற்ற மன்னிப்பை, அடுத்தவருக்குத் தர மறுத்தபோது, அவர் பெற்ற மன்னிப்பும், நோயுற்று, விலை மதிப்பற்று போனது. இதையே, இவ்வுவமையின் இறுதியில் இயேசு இவ்விதம் கூறுகிறார்: உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார். (மத்தேயு 18:35)
இறைவன் நம்மை மன்னிக்கமாட்டார் என்று சொல்வதைவிட, நாம் மற்றவர்களை மன்னிக்க முடியாதபோது, அந்த உணர்வு, நம்மை நாமே மன்னிக்க முடியாதவாறு சிறைப்படுத்தும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

மன்னிப்பு நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில் என் மனதில் ஆழமாய்ப் பதிந்தவை, Mark Twain அவர்கள் சொன்ன அற்புதமான வார்த்தைகள்: Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it” அதாவது, தன்னை மிதித்து, சின்னாபின்னமாக்கிய கால்களில், நீலமலர் தன் நறுமணத்தைப் பதிக்கிறதே, அதுதான் மன்னிப்பு.”
நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் அடையும் நன்மையைவிட, நாம் அடையும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others, not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."
மன்னிக்க மறுப்பதைக் குறித்து சொல்லப்பட்டுள்ள மற்றொரு கூற்றும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது: Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die” அதாவது, "ஒருவரை மன்னிக்க மறுப்பது, நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்."

மன்னிக்க மறுத்து, நாம் வளர்த்துக்கொள்ளும் பழிவாங்கும் எண்ணங்கள், நமக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கூறும் ஒரு உவமை இது. பிரெஞ்சு புரட்சிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளை விவரிக்கும் வண்ணம், பிரெஞ்சு எழுத்தாளரான விக்டர் ஹியூகோ (Victor Hugo) அவர்கள் எழுதிய நெடுங்கதை, தொண்ணூற்று மூன்று (Ninety Three). இந்த நெடுங்கதையில் இடம்பெறும் நிகழ்ச்சி இது:
நடுக்கடலில் சென்ற கப்பலொன்று புயலில் சிக்கியது. காற்றின் வேகத்தால் பல திசைகளிலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்ட வேளையில், திடீரென கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும் ஓசை ஒன்று எழுந்தது. அடித்தளத்தில், சங்கிலியால் பிணைத்து வைக்கப்பப்பட்டிருந்த பீரங்கி வண்டி, கட்டவிழ்த்து, கப்பலின் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தது என்பதை, கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர். அவர்களில் ஒருவர், தன் உயிரைப் பணயம் வைத்து, கீழ்த்தளத்திற்குச் சென்று, பீரங்கி வண்டியை மீண்டும் சங்கிலியால் பிணைத்தார். கப்பலைக் காப்பாற்றினார்.
வெளியில் வீசும் புயலைவிட, கப்பலுக்குள் கட்டவிழ்க்கப்பட்ட பீரங்கி வண்டி, கப்பலுக்கு விளைவிக்கக்கூடிய அழிவு பெரும் ஆபத்தானது என்பதை அந்தப் பணியாளர் உணர்ந்ததால், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த முயற்சியை மேற்கொண்டார். அதைப்போலவே, நம் மனங்களில் கட்டுப்பாடின்றி அலைபாயும் வெறுப்பு உணர்வுகள், வெளி உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைவிட, நமக்கு, பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

இன்றைய உலகில், மனிதக் குடும்பத்தை துன்புறுத்திவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். மன்னிப்பு என்ற மருந்தால், இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும் என்று மன்றாடுவோம்.

அக்டோபர் 4ம் தேதி, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று, வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் துவங்குகிறது. "Synod on synodality", அதாவது, கூட்டொருங்கியக்கம் என்பதை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் இந்த மாமன்றத்திற்கு கடந்த இரு ஆண்டுகளாக திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் நம்மையே தயாரித்து வந்துள்ளோம். 'அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும்' என்ற அழகிய இறைவேண்டுதலை எழுப்பிய புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று துவங்கும் இந்த மாமன்றத்தின் வழியே நாம் ஒவ்வொருவரும் அமைதி, மன்னிப்பு, ஒப்புரவு ஆகியவற்றின் கருவிகளாக இவ்வுலகில் வாழ, அப்புனிதரின் வேண்டுதலோடு இணைந்து செபிப்போம்:
ஆண்டவரே, என்னை அமைதியின் கருவியாய் உருவாக்கும்
வெறுப்பு உள்ள இடத்தில் அன்பையும்,
காயம் உள்ள இடத்தில் மன்னிப்பையும் நான் விதைப்பேனாக.
ஆறுதல் பெறுவதைவிட, ஆறுதல் வழங்கவும்,
பிறர் என்னைப் புரிந்துகொள்வதைவிட, நான் அவர்களைப் புரிந்துகொள்ளவும்
அன்பை பெறுவதைவிட, அன்பு செலுத்தவும் எனக்கு உதவியருளும்.
ஏனெனில், தருவதில் நாங்கள் பெறுகிறோம்
மன்னிப்பதால் மன்னிப்படைகிறோம்
இறப்பதால் முடிவற்ற வாழ்வில் பிறக்கிறோம் - ஆமென்.


07 September, 2023

‘Fragile – Handle with care’ ‘உடையக்கூடியது – கவனமாகக் கையாளவும்’

 
FRAGILE – HANDLE WITH CARE

23rd Sunday in Ordinary Time

‘Fragile – Handle with care’ is a label we see on packages containing glassware, objects made of porcelain and other delicate devices like a computer. When we see that label, we become extra careful in handling those goods. If those goods are antique pieces, we become very, very, very… careful in handling them.
Human relationships are to be handled this way. We know that our relationships within the family and with our close friends are very precious as well as fragile. Hence, we need lot more care in handling these relationships. Very often, we take our family relationships for granted and, hence, suffer from broken pieces. Relationships that have been developed over the years, over generations, need to be handled much more carefully – like handling rare, antique pieces. This Sunday’s liturgy invites us to examine and see how we handle family relationships.  

Today’s Gospel (Matthew 18:15-20) talks of how to handle a relationship that is soured or how to set right the mistake committed in our family circles. The advice given by Jesus in today’s Gospel sound too simple – we can even say ‘simplistic’ - but, very challenging. Here are the opening lines of today’s Gospel:
Jesus said: “If your brother sins against you, go and show him his fault, just between the two of you. If he listens to you, you have won your brother over.
But if he will not listen, take one or two others along, so that 'every matter may be established by the testimony of two or three witnesses.'
If he refuses to listen to them, tell it to the church; and if he refuses to listen even to the church, treat him as you would a pagan or a tax collector.” (Matthew 18: 15-17

The opening words of Jesus are a challenge that shakes us up from our slumber… Jesus begins by saying: “If your brother (or sister) sins against you…” When a problem arises in our family, or among friends, we expect the one who had committed the mistake, to take the first step. But, here, Jesus reverses this logic. Not the one who sins, but the one who is sinned against, needs to take the initiative in setting things right! We are reminded of the famous lines of Jesus in the Sermon on the Mount: Therefore, if you are offering your gift at the altar and there remember that your brother has something against you, leave your gift there in front of the altar. First go and be reconciled to your brother; then come and offer your gift. (Matthew 5: 23-24)
Jesus did not say ‘if you have something against your brother or sister’, but he makes it clear that even ‘if your brother or sister has something against you’, you need to go for a reconciliation before proceeding with your offering… Talk about challenges!

In both these instances, I presume, Jesus was keener on getting the problem resolved rather than spending time on the investigation of who caused the problem and waiting for the ‘culprit’ to take the initiative. Hence, he proposes that we take the initiative. He says this, simply as a matter of the NORMAL COURSE OF ACTION that should be practiced in every family.
If only, in every family, someone takes the initiative to resolve the conflict as soon as it arises, instead of allowing it to fester, so many hurt feelings can be healed… If only this course of action is put into practice, so many psychiatrists, and, even priests, would go out of business – the business of reconciliation! The reconciliation that blossoms from within a family, without the intervention of an outside agency, will have lasting effect.

Jesus proposes three steps for resolving family problems. The first one is the most sensible, adult-to-adult transaction. We need to confront (or, ‘care-front’) the person privately and tell him or her about the mistake… calling a spade a spade! When this does not work, then the second and third steps, namely, the intervention of a third party is proposed by Jesus!
Quite a few scripture scholars say that the very last step proposed in Matthew’s gospel, namely, “treat him as you would a pagan or a tax collector”, may have been a later addition by Matthew, the Evangelist. This line does not reflect the ‘all-inclusive-attitude’ of Jesus. I tend to agree with this view, especially since Jesus, in the opening lines of this passage, proposes the challenging step of the one who is wronged to take the initiative to resolve problems. The whole process is more towards reconciliation and healing rather than sitting in judgement over my brother or sister.

Talking of family problems, one can think of the way TV serials (soap operas) handle these problems. Every episode tries to make family problems more and more complicated. The more complex the problem, the better for the TV channel to get more TRP – ‘Television rating point’. Unfortunately, there is a sizeable audience which tends to agree with what the television serial tells us, namely, that family problems are always complicated. As against this, when Jesus proposes simple, adult-to-adult transactions, we tend to brush his words aside saying that they are too idealistic or impossible! We would rather go to a psychiatrist who may make things more complicated, than go to Jesus.

Talking of how simple things can help foster family ties, I am reminded of the meeting Pope Francis had with the families in October 2013. There were thousands of family people who had gathered in St Peter’s Square as one of the peak events of the Year of Faith. In this meeting, Pope Francis spoke of three magical words that would make any family healthy. Here are the words of Pope Francis: “In order to have a healthy family, three words need to be used. And I want to repeat these three words: please, thank you, sorry. Three essential words! We say please so as not to be forceful in family life: “May I please do this? Would you be happy if I did this?”  We do this with a language that seeks agreement. We say thank you, thank you for love! But be honest with me, how many times do you say thank you to your wife, and you to your husband?  How many days go by without uttering this word, thanks! And the last word: sorry. We all make mistakes and on occasion someone gets offended in the marriage, in the family, and sometimes - I say - plates are smashed, harsh words are spoken but please listen to my advice: don’t ever let the sun set without reconciling. Peace is made each day in the family: “Please forgive me”, and then you start over. Please, thank you, sorry!  … Let us say these words in our families! To forgive one another each day!”

We began this reflection with the warning label: ‘Fragile – handle with care’. Quite often due to careless handling of persons, we may break the glassware called ‘family’ beyond repair. For us living in the 21st century, broken things present an additional problem. Our ‘use-and-throw’ culture tends to dump broken things in the trash. But, there is another side to ‘broken things’.
There is a special quote which is a very short story about an elderly couple who have been married for 65 years. When asked by the journalist, "How did you manage to stay together for 65 years?", the lady replied, "We were born in a time when, if something was broken, we would fix it, not throw it away..."

The same idea is proposed by Sean Buranahiran, a young writer and philosopher from Thailand. He has come up with quite a few short videos containing lessons for life. In one of those videos called “Be Proud of your Scars” Sean talks about broken things in this way: “When a bowl is broken in Japan, it is put back together with the cracks being filled with gold, creating a beautiful lining. (After reading the blog post, one of my friends wrote to me saying, that this Japanese art of mending the broken pottery is called ‘Kintsugi’. Wikipedia says: Kintsugi, also known as kintsukuroi, is the Japanese art of repairing broken pottery by mending the areas of breakage with lacquer dusted or mixed with powdered gold, silver, or platinum. Beautiful! Let us get back to Sean…) This is to emphasize the beauty in what was once broken. They believe that when something has suffered damage and has a history, it makes it more beautiful.
And the same goes for human beings. Everything that you have been through, everything you’re going through, doesn’t make your life uglier although it may seem that way when we’re going through it. It’s up to us to choose to paint our struggles with gold and make it beautiful.
You are not broken beyond repair. You can pick yourself up and learn from what’s happened and become a better person from it because of the struggles you have been through… You can wear your scars proudly as a badge of honour…
Nobody has had a perfect life and nobody ever will. It’s only up to us if we choose to paint our broken pieces gold and make it beautiful…”

Today’s Gospel passage ends with a lovely promise made by Jesus: “For where two or three are gathered in my name, there am I in the midst of them.” (Mt. 18:20). Many of us have experienced this ‘divine presence’ in our families, whenever healing of hurt feelings and reconciliation took place. We need to multiply these ‘I-am-in-your-midst’ moments. These ‘divine efforts’ are possible when the family comes together to pray. We are assured that The family that prays together, stays together.”

Life is fragile…

பொதுக்காலம் 23ம் ஞாயிறு

நாம் ஒரு சிலப் பொருள்களை வாங்கும்போது, அல்லது, அவை நம் இல்லங்களுக்கு வந்து சேரும்போது, ‘Fragile – Handle with care’ அதாவது, உடையக்கூடியது - கவனமாகக் கையாளவும் என்ற எச்சரிக்கை வில்லை பெட்டிக்கு வெளியே ஒட்டப்பட்டிருக்கும். உள்ளே இருப்பது கண்ணாடி அல்லது பீங்கான் பொருள்கள் என்றாலோ, அல்லது, அவை, கணணி போன்ற நுட்பமான இயந்திரங்கள் என்றாலோ, அவற்றை கையாள்வதில் கவனம் தேவை என்று நமக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. நம்மை வந்தடையும் பொருள்கள், அரிதான, பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிகுந்த பொருள்கள் என்றால், நாம் மிக, மிக, மிக அதிக கவனத்துடன் அவற்றை கையாள்வோம்.

மனித உறவுகள் இப்படித்தான் கையாளப்பட வேண்டும். குடும்பத்திற்குள்ளும் நமது நெருங்கிய வட்டங்களிலும் நாம் வளர்த்துள்ள உறவுகள் மிகவும் விலைமதிப்பற்றவை என்பதையும், அவை எளிதில் உடையக்கூடியவை என்பதையும் நாம் அறிவோம். எனவே, இந்த உறவுகளை கையாள்வதில் அதிக கவனம் தேவை. பலவேளைகளில் இந்த உறவுகளை நாம், அக்கறையேதுமின்றி, ஏனோ தானோ என்ற கண்ணோட்டத்துடன் நடத்துவதால், உறவுகள் உடைந்துபோகின்றன. நமது கவனமின்மையால் உடைந்த உறவுகள், வாழ்நாள் முழுவதும் நம்மை பாதிக்கின்றன. பல ஆண்டுகளாக, தலைமுறைகளாக உருவாக்கப்பட்ட உறவுகளை, அரிதான, பழமையும் பாரம்பரியமும் மிக்க பொருள்களைக் கையாளுவது போல, மிகவும் கவனமாக கையாளவேண்டும். இந்த ஞாயிறு வழிபாடு, குடும்ப உறவுகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க நம்மை அழைக்கிறது. குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள் ஆகியவற்றை சீராக்கும் வழிகளை, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது.

நமது தொலைக்காட்சிகளில் வரும் பல மெகாத் தொடர்கள், குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. பிரச்சனைகள், ஒன்றன்பின் ஒன்றாக, சங்கிலி போல நீண்டுகொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக, ஒரு மலைபோல குவிந்துவிடுவதாக காட்டப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு, அந்தக் கதாபாத்திரங்கள் படும் வேதனைகள், நம்மை, கண்ணீரில் மூழ்கச்செய்கின்றன.
எண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... இரசிகர்களின் ஈடுபாடு.இதேப் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு, இத்தொடர்கள், இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. குடும்பங்களில், நிஜமான மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் நம் குடும்பங்களை, மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி, நம்மை, குடும்பப்பிரச்சனைகளுக்கு அழைத்துவந்திருப்பதால், இத்தொடர்களைப்பற்றியும் இங்கு பேசுகிறோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கும் அளவுக்கு, நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை, இஞ்ஞாயிறன்று, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள, முயல்வோம்.

குடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது, என்ன செய்யமுடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை, இயேசு இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 18:15-20) கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது, நம் மனங்களில், இதைப் பின்பற்றும் ஆவல் பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற மறுப்பு எழுகின்றதா? உண்மையாகவே, நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்றும், இதோ, நம்மிடம் இன்றும், சொல்வது இதுதான்:
உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ... உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள். (மத்தேயு 18: 15-17)

இப்போது நாம் கேட்ட இந்த 3 இறைவாக்கியங்களை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெருமளவு தீர்க்கப்படும்.  Interpersonal relationship, அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும், இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து, எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கப்படும் உண்மைகளை, இயேசு, ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளதுபோல் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த முக்கியமானப் பாடங்களை மீண்டும் பயில, இயேசுவின் காலடியில் நாம் அமர்வோம்.

இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை, இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். உங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி சொல்லவில்லை. உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப்போடுகிறார்.

பொதுவாக, நம் குடும்பங்களில், தவறு செய்பவர் யாரோ, அவரே, அந்தத் தவறைச் சரிசெய்யும் முயற்சிகளையும் ஆரம்பிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம். எடுத்துக்காட்டாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது, என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால், கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடிவந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய, நாம் முதல் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், நம் உள்ளங்களில், இயேசுவின் மற்றொரு கூற்று எதிரொலிக்கிறது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத்தேயு 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் உருவாகிறது. சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார்.
அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று, இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன?
நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து, அடம்பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, அவரிடமே அதைப்பற்றி பேசுவதற்குப் பதில், அவரைப்பற்றி வேறுபலரிடம் பேசி, சிக்கல்களை உருவாக்குகிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.

இதைத்தானே, நம் தொலைக்காட்சியின் மெகாத் தொடர்கள் காட்டுகின்றன. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களைப் பொருத்தவரை, பிரச்சனை பெரிதாகவேண்டும், குற்றவாளி ஒழியவேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்படவேண்டும். அப்போதுதான், நாடகம், விறுவிறுப்பாக இருக்கும். நம் குடும்பங்களில், விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும்.

உறவுகளில் வளர, அதுவும், பிரச்சனைகளால் பிளவுபட்டிருக்கும் உறவுகள் குணமாக, இயேசு கூறும் தீர்வுகள் இவைதான்:
·         பிரச்சனை எழுந்ததும், அதைக் களைவதற்கு முதல் முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். பிரச்சனை எழுவதற்கு நாம் காரணம் இல்லை என்றாலும், சமரச முயற்சிகள், சமாதான முயற்சிகள் நம்மிடமிருந்து ஆரம்பமாகவேண்டும்.
·         இரண்டாவது... தவறு செய்தவரைத் தனியே சந்தித்து, மனம்விட்டுப் பேசவேண்டும். பூசி மெழுகாமல், தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டும்.
·         மூன்றாவது... அனுபவத்தில் முதிர்ந்தவர்களின் துணையோடு பிரச்சனையைத் தீர்க்க முயலவேண்டும்.

இந்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போனால், அந்த சகோதரரை, அல்லது சகோதரியை விட்டு நாம் விலகவேண்டும் என்று இயேசு கூறியுள்ளதாக, மத்தேயு நற்செய்தி சொல்கிறது. இந்தப் பகுதி, இயேசு சொன்ன வார்த்தைகளா, அல்லது நற்செய்தியாளர் மத்தேயு, தானாகவே இணைத்துக்கொண்ட வார்த்தைகளா என்பதில், விவிலிய ஆய்வாளர்களிடையே, கருத்து வேறுபாடுகள் உள்ளன.
தவறு, அடுத்தவர் மீது இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கு, முதல் முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும் என்று கூறிய இயேசு, அதே அறிவுரையில், உடன்பிறந்தோரைவிட்டு விலகியிருக்கவேண்டும் என்று கூறியிருப்பாரா என்பது ஐயம்தான். இது, நற்செய்தியாளர் மத்தேயுவின் பிற்சேர்க்கை என்று ஆய்வாளர்கள் சொல்வதை, நானும் ஏற்றுக்கொள்கிறேன்..

உறவுகளிலிருந்து விலகி வாழ்தல், அல்லது, உறவுகளை தூக்கியெறிதல் போன்ற முடிவுகள், இன்றைய காலத்தில் மிக எளிதாக இடம்பெறுகின்றன. ஆனால், இதனை, நமது முந்தைய தலைமுறைகளில் காண்பது அரிது.
65 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்த தம்பதியரிடம், "எப்படி நீங்கள் இருவரும் 65 ஆண்டுகள் சேர்ந்தே இருக்கிறீர்கள்?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர்கள், "நாங்கள் பிறந்து வளர்ந்த நாள்களில், ஏதாவது ஒன்று உடைந்துபோனால், அதை, பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துவோமே தவிர, அதை, தூக்கியெறிய மாட்டோம்" என்று பதில் தந்தனர்.

குடும்ப உறவு, கண்ணாடியால் ஆன ஒரு பொருள் என்றும், அதைத் தவறவிட்டால், சிதறிவிடும் என்றும், இன்றைய சிந்தனைகளின் துவக்கத்தில் குறிப்பிட்டோம். உடைந்துபோனதை தூக்கியெறிவது, இன்று நம்மிடையே பரவியுள்ள கலாச்சாரம். பயன்படுத்தி, தூக்கியெறியும் (Use-and-throw) கலாச்சாரத்தில் சொல்லித்தரப்படும் மந்திரம் இது. இந்தக் கலாச்சாரம், நம் இரத்தத்தில் ஊறிப்போனதால், அதே பாணியை, உடைந்துபோன உறவுகளுக்கும் பயன்படுத்துகிறோம். இதற்கு மாறாகஅந்த உறவுகளை ஒட்டவைப்பதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

உடைந்தவற்றையும் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தை, தாய்லாந்தைச் சேர்ந்த Sean Buranahiran என்ற இளம் எழுத்தாளர், சமூக வலைத்தளத்தில், “Be Proud of your Scars” அதாவது, "உங்கள் தழும்புகளுக்காகப் பெருமைப்படுங்கள்" என்ற தலைப்பில், இவ்வாறு கூறியுள்ளார்:
"ஜப்பானில், கிண்ணமொன்று உடைந்துபோனால், அந்த விரிசல்களை, உருக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு, இணைத்து, அந்தக் கிண்ணத்தை, முன்பு இருந்ததைவிட, கூடுதலான அழகுள்ள கிண்ணமாக மாற்றுவர். உடைந்தது எதுவானாலும், அதற்கு ஒரு வரலாறு உண்டு என்று அவர்கள் நம்புவதால், அதை இன்னும் அழகுள்ளதாக மாற்றுகின்றனர்.
அதுவே, மனிதப்பிறவிகளாகிய நமக்கும் பொருந்தும். நீங்கள் உடைக்கப்படும்போது, அழகற்று போனதுபோல் உணர்ந்தாலும், அது, உண்மையல்ல. நமது உடைபாடுளை, தங்கம் உட்பட, பல்வேறு வண்ணங்களில் தீட்டுவது, நம் கரங்களில் உள்ளது.
சரிசெய்ய முடியாதவண்ணம் நீங்கள் உடைந்துபோகவில்லை. நடந்ததிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, உங்களை இன்னும் மேன்மையுள்ளவராக மாற்றலாம். உங்களுக்கு ஏற்பட்ட தழும்புகளை, பெருமையுடன் அணிந்துகொள்ளலாம்.

உடைபட்ட உறவுகளைச் சீராக்க இயேசு கூறும் உன்னத வழிகளின் சிகரமாக, குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் தங்கும் என்ற உறுதியை, இயேசு, இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஒரு வாக்குறுதியாக வழங்கியிருக்கிறார்:
இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (மத்தேயு 18: 20)

நம் இல்லங்களில், குடும்ப உறவுகளில் உண்டான விரிசல்கள் நீங்கி, ஒப்புரவு முயற்சிகள் மேற்கொள்ள நாம் கூடிவந்த வேளைகளில், அங்கு இறைவனின் பிரசன்னம் இருந்ததை நாம் உணர்ந்துள்ளோம். அந்த உன்னத நேரங்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம். அத்தகைய அழகிய தருணங்கள் நம் குடும்பங்களில் பெருகவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம். The family that prays together, stays together.” அதாவது, "கூடி செபிக்கும் குடும்பம், கூடி வாழும்" என்ற சொற்களை நடைமுறைப்படுத்த இறைவன் நமக்கு உதவி செய்வாராக!