25 March, 2012

Dying to live…இறந்தாலே வாழ்வு




On the First Sunday of Lent we spoke about Lent and the Spring Season. Today, the Fifth Sunday of Lent, we are back to this favourite theme of mine. To add more relevance to this theme of Lent-cum-Spring, Jesus talks of the seed yielding much fruit in today’s Gospel.
Last week we reflected on one of the most famous quotes from the Bible known as the ‘gospel of all the gospels’, namely, “For God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life.” (John 3: 16) Today we have another equally famous quote from John’s gospel, namely, “Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit.” (John 12: 24)
Both these passages from John’s gospel have been used as independent quotes without much reference to the circumstances in which Jesus spoke these words. In fact, the whole of John’s gospel is more of a theological treatise rather than a historical narration. Hence most of the quotes from this gospel can be used in very many contexts. Still, it would be helpful to think of what prompted Jesus to say these words.

The opening lines of today’s gospel give us the context in which Jesus said this famous ‘parable’ of the grain of wheat. Here are the opening lines: Now among those who went up to worship at the feast were some Greeks. So these came to Philip, who was from Beth-sa'ida in Galilee, and said to him, "Sir, we wish to see Jesus." (John 12: 20-21)
In the following verses of today’s gospel passage Jesus speaks about his death. My limited human logic felt that Jesus spoke out of tune in this circumstance. Since the Greeks must have come seeking some spiritual wisdom from Jesus, he could have easily spoken to those foreigners a great parable. After all he was known as a master story teller. Instead, he talks about his death. Why did the Greeks come to see Jesus? Why did Jesus speak in this vein? The answers to these questions are given by Fr Munachi E. Ezeogu, cssp: in his homily. His explanation is quite enlightening and I wish to share this with you: http://www.munachi.com/b/lentb5.htm

The Greek philosopher Socrates is regarded as one of the wisest men of all time. This man… devoted his life to exposing ignorance, hypocrisy and conceit among his fellow Athenians and calling them to a radical re-examination of life. "The unexamined life," he said, "is not worth living." He challenged popular opinions regarding religion and politics as he sought to bring people to a better understanding of virtue, justice, piety and right conduct. He attracted many followers, especially among the youth. But those in power arrested him, tried him and sentenced him to death. He was charged with false teaching regarding the gods of the state, propagating revolutionary ideas and corrupting the youth of Athens. His family and friends wanted to intervene to overturn the sentence but he would not let them. He had the option to go into exile from Athens but he would not take it. Instead he accepted to drink the poison hemlock and die. Subsequent generations of Greeks came to regard Socrates as a martyr for truth. They resolved never again to persecute anyone on account of their beliefs.
By the time of Jesus the Greeks had become among the most broad-minded people in the world. Various religious and philosophical traditions flourished among them and vied for popularity. We see in today's gospel that among the huge crowds that had come to Jerusalem for the Passover feast were some Greeks. It did not take these Greeks long to see that all was not well in Jerusalem. So they came to see Jesus. Why did they come to see Jesus? Although John has somewhat spiritualised the story, thereby giving the impression that they came to seek admission into the "body" of Christ (John 12:32), it is more probable that they came to alert Jesus to the seriousness of the danger surrounding him and to suggest to him to flee with them to Greece, the land of freedom. The response that Jesus gives to their request shows that it has to do with his impending death and that he has chosen to stay and face it rather than seek a way to escape it.
This explanation seems to remove the incongruence that I felt, namely, between the Greeks seeking Jesus and Jesus’ response.

Jesus chooses to stay on and face the consequence. He begins his response with the famous line -
“The hour has come for the Son of man to be glorified.” Thrice in John’s gospel we see the line ‘the hour has not yet come’. The first time it was in the wedding at Cana: When the wine failed, the mother of Jesus said to him, "They have no wine." And Jesus said to her, "O woman, what have you to do with me? My hour has not yet come." (John 2: 3-4) On two more occasions during the public ministry of Jesus the phrase ‘his hour had not yet come.’ is used. (John 7:30; 8:20). Now Jesus declares that His hour has come… The hour for what? The hour to become a life-giving seed by sacrificing life.

The ‘parable’ of the grain of wheat has great depth. Why was the grain of wheat created? I could think of two primary reasons and one secondary reason. The primary reasons are: to serve as food for other living beings or to become a seed in order to multiply its own kind. These are the prime reasons why a grain of wheat has been created. The imagery of the grain being crushed into flour and becoming bread has captured the imagination of very many Saints, especially those who had to face crushing experiences of pain and ultimate death. One among them is St Ignatius of Antioch. There is a very famous saying attributed to this Saint as he was awaiting his death by the hungry beasts of prey. He wrote to the disciples in Rome: "Permit me to imitate my suffering God ... I am God's wheat and I shall be ground by the teeth of beasts, that I may become the pure bread of Christ.” The beauty of this Eucharistic symbolism in these words reflects the deep theology of a mystic. http://www.catholic.org

Becoming food and becoming a seed to produce other grains are the two primary reasons for the existence of a grain of wheat. The secondary reason I could think of was that this grain could be used as a decorative piece. This grain remains alone, without being productive… just a show-piece. This is what we see in the first part of Jesus’ saying: “unless a grain of wheat falls into the earth and dies, it remains alone”. Alone… artificially alone!

While reflecting on how seeds are meant to be productive, I was sadly reminded of how seeds are used in different experiments, experiments where scientists have become ‘Godplayer’. I am thinking of the unscrupulous firms that are ‘interfering’ with nature and creating genetically modified seeds, terminator seeds. I am not an expert in bio-technology. But, what I have read about this here and there makes me shudder at the insane selfish quest of these firms. Here is an excerpt from Wikipedia:
Genetic use restriction technology (GURT), colloquially known as terminator technology or suicide seeds, is the name given to proposed methods for restricting the use of genetically modified plants by causing second generation seeds to be sterile… Because some stakeholders expressed concerns that this technology might lead to dependence for poor smallholder farmers, Monsanto Company, an agricultural products company and the world's biggest seed supplier, pledged not to commercialize the technology in 1999. However, customers who buy seeds from Monsanto Company must sign a Monsanto Technology/Stewardship Agreement. "The agreement specifically states that the grower will not save or sell the seeds from their harvest for further planting, breeding or cultivation". This legal agreement preempts the need for a "terminator gene".

Even a person who is not an expert in bio-tech (like me) can see how firms like Monsanto have tampered with nature for profit – plain, simple and selfish. If Jesus were to say something about these selfish sharks, he would have said something like: “Truly, truly, I say to you, unless selfishness falls into the earth and dies, it will not only remain alone, but multiply on earth to dangerous proportions; but if it dies, it bears much fruit – fruit of selfless service.”

இயற்கையின் சுழற்சியில் உள்ள நான்கு பருவக்காலங்களில் வசந்த காலத்திற்குத் தனியொரு அழகும், அர்த்தமும் உண்டு. பனியில் புதைந்து இறந்துபோனதாய் நாம் நினைக்கும் தாவர உயிர்கள் வசந்தம் வந்ததும் மீண்டும் உயிர் பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித் தரும் நம்பிக்கை பாடம்.  நம்பிக்கை தரும் வசந்த காலத்தில் தவக்காலத்தை நாம் கொண்டாடுகிறோம். தவக்காலம் ஒரு கொண்டாட்டமா? ஆம்... மீண்டும் மீண்டும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை வளர்க்கும் காலம் இது என்பதால், இது ஒரு கொண்டாட்டம்தான்.
தவக்காலம் என்றதும், குற்ற உணர்வுகளில் நம்மையேப் புதைத்துக்கொண்டு, சாம்பலையும், சாக்குத் துணியையும் அணிந்துகொண்டு, சோகமாக வலம் வரும் காலம் என்று எண்ணுவது தவறு. குற்றங்களால், பாவங்களால் நாம் சிறைப்பட்டிருந்தாலும், மனமாற்றம் என்ற திறவுக்கோலைக் கொண்டு, நம்மை நாமே விடுவித்துக்கொள்ளும் காலம் இது என்பதைத் தவக்காலம் முழுவதும் திருஅவை நமக்கு நினைவுபடுத்துகிறது.
தவக்காலத்தின் இறுதி வாரத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஞாயிறு குருத்து ஞாயிறு. அதைத் தொடர்ந்து பாடுகளின் வாரம். தவக்காலத்தின் இந்த இறுதி ஞாயிறன்று வசந்த காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார்.
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் நற்செய்தி 12: 24)
தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக் காலத்தில் இயேசுவின் இந்தக் கூற்று பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது. விதைக்கப்பட்ட இந்த எண்ணங்கள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எண்ணம், நம் வேண்டுதல்.

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்என்று கேட்டுக் கொண்டார்கள். (யோவான் நற்செய்தி 12: 20-21) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
ஆர்வமாக, ஆவலாகத் தன்னைக் காண வந்த கிரேக்கர்களை இயேசு வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறும் வார்த்தைகள் கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன. எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் இயேசுவை ஏன் காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு அருள்தந்தை முனாச்சி என்பவர் (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம் புதிதாக உள்ளது... புதிராகவும் உள்ளது. அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கிரேக்கர்கள் உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை சாகரடீசை அவர்கள் கொன்றது பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்கென, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்கென கொல்வதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள் கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழ முடிந்தது, பேச முடிந்தது. தங்கள் நாட்டு சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள் அண்டை நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கினர். சுதந்திரச் சிந்தனை கொண்ட இந்த கிரேக்கர்களில் ஒரு சிலர் இயேசுவைத் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர்.
எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகி வந்த எதிர்ப்பு, வெறுப்பு ஆகியவை அவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கும். எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச் சொல்லி, சிந்தனை சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு அவரைத் தங்களுடன் வரும்படி அழைத்திருப்பார்கள். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை இன்றைய நற்செய்தியில் பல விதங்களில் கூறுகிறார்.

அவர் சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (12: 23) யோவான் நற்செய்தியில் "நேரம் வரவில்லை" என்ற வார்த்தைகள் மும்முறை சொல்லப்பட்டுள்ளன. கானாவில் நடந்த திருமணத்தின்போது மரியா அவரிடம் 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்று சொன்னதும், இயேசு அவரிடம், அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே (2: 3-4) என்று முதல் முறை சொல்கிறார். மீண்டும் யோவான் நற்செய்தியில் இரு இடங்களில் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. (7: 30) அவரைப் பிடிக்கவில்லை. (8: 20) என்று வாசிக்கிறோம். இவ்வாறு, தன் நேரம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்திருந்த இயேசு, இன்று தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள் காலம் காலமாக பலருடைய உள்ளங்களில் உறுதியை, வீரத்தை விதைத்துள்ள வார்த்தைகள்:
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் நற்செய்தி 12: 24)

மிக எளிதான ஓர் உவமை, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அது உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்க வேண்டும். அல்லது அது விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழக்க வேண்டும். இதற்கு மாறாக, கோதுமை மணியை நாம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். ஆனால், அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பு அல்ல.
கோதுமை மணி மாவாக அறைபட்டு அப்பமாக மாறுவதை புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் அழகாகக் கூறியுள்ளார். தான் சிங்கங்களின் பசி தீர்க்கும் உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அறைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்." (I am God's wheat, ground fine by the lion's teeth to be made purest bread for Christ.)

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் மனதிலும் இன்னும் பல்லாயிரம் புனிதர்கள் மனதிலும் இந்த ஆவலை உருவாக்கிய வார்த்தைகள் இன்று இயேசு நமக்கு கூறியுள்ள இந்த அற்புத வார்த்தைகள்: கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் நற்செய்தி 12: 24)

உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறி தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். தானியங்களின் இயல்பாக விளங்கும் இவ்விரு காரணங்களைச் சிந்திக்கும் இந்த வேளையில், உள்ளத்தில் எழும் நெருடல்கள் பல.
இன்றைய உலகில் உயிர் தொழில்நுட்பம் (Bio-technology) என்ற பெயரில் நாம் விதைகளோடும், பிற உயிரினங்களோடும் மேற்கொண்டுள்ள விபரீதமான விளையாட்டுக்களை இந்நேரத்தில் வேதனையோடு எண்ணிப் பார்க்க வேண்டும். 'இலாபம் திரட்டுதல்' என்ற ஒரே வெறியுடன் விதைகளில் உருவாக்கப்பட்டுள்ள உயிரணு மாற்றங்கள் (Genetically modify seeds) நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. மனசாட்சியை விற்றுவிட்டு, பணம் திரட்டுவது ஒன்றையே வெறியாகக் கொண்டு அலையும் Monsanto போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்படும் விதைகள், விதைகளே அல்ல. இந்த விதைகளை ஒரு முறை விதைத்து, அதிலிருந்து வெளிவரும் தானிய மணிகளை மீண்டும் விதைக்க முடியாது. அந்தத் தானிய மணிகளுக்குள் உயிர்தரும் கரு அழிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் தானியங்களைப் பெறுவதற்கு நாம் இந்த நிறுவனங்கள் விற்கும் விதைகளையேத் தேடிச் செல்ல வேண்டும்.
இயற்கைக்கு முரணாக, விதை என்ற இலக்கணத்தையே மாற்றி, தன் இனத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கும் இயல்பை விதைகளிடமிருந்து, தானியங்களிடமிருந்து பிரித்துவிடும் இந்த சுயநல நிறுவனங்களைக் குழிதோண்டி புதைக்க வேண்டும். இறைவன் கொடுத்த இயற்கையைப் பேணி வளர்க்கும் மனித முயற்சிகள் உயிர் பெற்று எழவேண்டும்... நீங்களும் நானும் இந்த மாற்றத்தைக் கொணர துணிவு பெற வேண்டும் என்று சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.

சுயநல வெறியில் சுகம் கண்டுவரும் நிறுவனங்களையும், அரசுகளையும், அமைப்புக்களையும் குறித்து இறைமகன் இயேசு இன்று நம்மிடம் என்ன சொல்வார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன்... அதன் விளைவு இது:
சுயநலம் மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது பலுகிப் பெருகி உலகைச் சீரழித்துவிடும். அது மடிந்து புதைக்கப்பட்டால், பிறர்நலம் என்ற மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.



18 March, 2012

Love Stories… not ‘printable’ அச்சில் வராத அன்புக் கதைகள்...


For God so Loved the World…


There are news and news… Some feed your brains, others satisfy your curiosity. But, occasionally there are some news-items that tug at your heart, raise questions and also make certain aspects of life clear to you. Recently I read a piece of news in http://www.nytimes.com that did cause these effects in me. Although this news was published on Feb.25, I happened to glance through it only four days back. What began as a glance turned into curiosity and led me towards some serious reflection. As I was reflecting on today’s Gospel, this news item, especially the picture (actually a video clipping) attached to it, was frequently flashing across my mind. If you have a chance, kindly go through this news item titled:
THE VANISHING MIND
Life, With Dementia
By PAM BELLUCK
Published: February 25, 2012
Let me share with you my thoughts on the picture as well as on the news feature. Although this feature was about the problem of Alzheimer’s or Dementia in a prison in California, my attention was turned towards other factors related to this news.

First about the picture: This picture had a background – the high-rise wall like in any other prison. On the top of the wall ran a barbed wire. This barbed wire must have had a high-voltage electric current running through it 24x7. This ‘fortress’ was meant as a protection. Protection for whom and against whom? Any child would answer this question saying that this ‘fortress’ was meant to protect the society from the criminals kept inside the walls. But, when I saw this picture, my mind thought otherwise… I thought that this wall was to protect the ‘inmates’ from the outside world. This reversal occurred to me because of what I saw in the foreground of this picture. In the foreground there were six or seven men. But the focus was on two of them – one black and another white. The black person was about 50 years old and the white person was about 70 or 80. The black person had his hands wrapped around the shoulders of the white person and, possibly, was leading him somewhere. One can see the kindness in the eyes of the black person looking at the older white person.
The black person is Secel Montgomery Sr. In the video clipping, Sacel talks about how he killed his sister-in-law by stabbing her many times since she refused to give him money to buy drugs. Even in the prison his record had not been ‘clean’. Despite that, he has recently been entrusted with an extraordinary responsibility. He and other convicted killers at the California Men’s Colony help care for prisoners with Alzheimer’s disease and other types of dementia, assisting ailing inmates with the most intimate tasks: showering, shaving, applying deodorant, even changing adult diapers, says the feature.
If this experiment meets with even 50% of success, then, I feel that ‘salvation has come to California Men’s Colony’. “It’s a long road to recovery and I’m working on it…” are the closing words spoken by one of the prisoners in the video clipping. Isn’t this salvation? For this salvation to reach its fruition, these ‘inmates’ need to be shielded from the outside world… Now, tell me, whom should the high-rise wall protect?

Secondly, about the news-feature: The moment we think of prison cells, the first thoughts that crowd our minds are – crime, hatred, violence, abuse, punishment. I am of a firm opinion that punishment and imprisonment can only bring about minimal, temporary changes in a person. The real, lasting changes have occurred due to love and kindness. We have heard of so many who have changed their entire life-style due to some kindness shown to them inside these hopeless cells. Is there a place for kindness, compassion, and help in such a place? You bet. I don’t think there is any place in the world so hopeless that can refuse entry to love and kindness. What is happening in California Men’s Colony is only the tip of the iceberg. All over the world, in so many millions of prison cells there is a chance, a place for love. Although this is not discussed in the feature, I can see how these little acts of love shown in these prison cells, bless those who give as well as those who receive.

Usually we are accustomed to seeing prisoners at the receiving end… of love and compassion from those who visit them. Sometimes these external helpers may tend to ‘preach’ to those who are inside. At such moments, I have heard these ‘insiders’ say: “It is easy for you to say these things… If you were in my place, then you would know!” An ‘outsider’ cannot bring significant changes on these ‘insiders’. What is the other alternative?
Real, lasting help can come from someone who is one among them. Imagine that a person, who is blameless, wanting to help the prisoners, gets himself imprisoned; becomes one of the prisoners and then from within begins to change them… This help would be more acceptable than the help given by an ‘outsider’. But, is this possible in real-life? I don’t know. But, it has happened in other situations as in the case of St.Damien Joseph de Veuster of Moloka'i. He had worked for the leprosy (Hansen's disease) patients in Hawaii; was affected by the disease himself and died at the age of 49. His self-identification with the leprosy patients was total and complete. I am sure St.Damien must have got his inspiration for total identification and total immersion from Jesus’ Incarnation.

This total immersion, identification and Incarnation is spoken of in today’s Gospel in one of the most – probably, the most – famous verses in the Bible: God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life. (John 3: 16)
John 3:16 is probably the best loved verse in the Bible and it has been called "everybody's text" and the “gospel of the gospels”… This text is the very essence of the gospel. It tells us that the initiative in all salvation is God’s love for man. As St. Augustine puts it: "God loves each one of us as if there were only one of us to love." http://cbci.in/Sunday-Reflections.aspx

We have heard hundreds, perhaps thousands of love stories. Most of these love stories are just one frame from a full-length movie called life. What is happening in California prison day after day may not be ‘news-worthy’ on a daily basis. Similarly what is happening in our ordinary, day to day life is also a love story which may not get media attention.
As we are meditating on ‘God-so-loved-the-world’, we shall set aside some moments today and in the coming days during this Lenten Season to think of the continuous, but unrecognised love stories we experience in our own families. I know of families where the parent, the life-partner, a sibling is taking care of persons who cannot take care of themselves. This is not just a one-day, one month love-affair…But a year-long affair… for ten, twenty, thirty, forty and more years… Let us salute these silent stalwarts of true love and dedication who will not adorn any history book.

As we are reflecting on love, one cannot but think of the twisted, topsy-turvy definitions and images created around the word ‘love’. This misleading tendency, prevalent in the world, is compared to getting cosy with darkness. We hear Jesus talking about this in the second half of today’s gospel: “The light has come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil. For every one who does evil hates the light, and does not come to the light, lest his deeds should be exposed.” (John 3: 19-20)

There is a funny story to drive home the point how darkness can become so ‘comfortable’ to us that we are willing to stay in the dark: We act like the desert nomad in the story who woke up hungry in the middle of the night. He lit a candle and began eating dates from a bowl beside his bed. He took a bite from one and saw a worm in it; so he threw it out of the tent. He bit into the second date, found another worm, and threw it away also. Reasoning that he wouldn't have any dates left to eat if he continued to look for worms, he blew out the candle and quickly ate the rest of the dates! http://cbci.in/Sunday-Reflections.aspx

Putting out the light of true conscience, we can swallow worm-infested ideas and still feel comfortable…




Dementia Behind Bars



To listen to this Tamil homily in Vatican Radio, click here:


ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவற்றில் ஒரு சில நம் மனதில் பதிகின்றன, நம்மைப் பாதிக்கின்றன. நான்கு நாட்களுக்குமுன் நான் வாசித்த செய்தி ஒன்று என் நினைவில் இப்போதும் அலைமோதுகிறது. ஒரு சில கேள்விகளையும், ஒரு சில தெளிவுகளையும் எனக்குள் உருவாக்கிய செய்தி இது. NY Times என்ற இணையதளத்தில் நான் வாசித்த செய்தி இது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் நடைபெற்றுவரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய செய்தி அது. (The Vanishing Mind - Life, With Dementia, Feb.25,2012) இச்செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த புகைப்படம் என் கவனத்தை முதலில் ஈர்த்தது. அந்தப் புகைப்படத்தில் சிறைகளுக்கே உரிய மிக உயர்ந்த சுவர்கள், அச்சுவர்களின் மேல்மட்டத்தில் முள்கம்பி வலைகள் பின்னணியில் தெரிந்தன. அந்த முள்கம்பி வலைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தப் 'பாதுகாப்புச்' சுவர் பின்னணியில் இருக்க, முன்னணியில் நான் பார்த்தது இதுதான்... ஒரு கறுப்பின மனிதர் மற்றொரு வயதான வெள்ளை இன மனிதரின் தோள்மீது கைபோட்டு, ஆதரவாய் அவரை அழைத்துச் செல்வது போன்ற படம். கறுப்பினத்தவருக்கு 50 வயதிருக்கலாம். வெள்ளை இனத்தவருக்கு 70 அல்லது, 80 வயதிருக்கலாம். அந்தக் கறுப்பின மனிதரின் கண்களில் வெளிப்பட்ட கனிவு, அந்தப் படத்தில் அழகாகப் பதிவாகியிருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடுங்காவல் சிறைக் கூடத்தில் எடுக்கப்பட்ட படம் இது. அங்கு உள்ளவர்கள் அனைவரும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவர் Sacel Montgomery. இவர் ஒரு பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாகச் கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக இந்தச் சிறையில் இருக்கிறார். சிறையிலும் பலமுறை காவல் துறையினரோடும், மற்ற கைதிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டவர். சிறையில் ஒருமுறை இவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அண்மையில், சிறை அதிகாரிகள் இவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். இவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல் நிலையில் உள்ள பலருக்கும் இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள் Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு Sacelக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை, நோயுற்ற இந்த கைதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச் செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்கின்றனர். இந்தப் பணிகளால் சிறைக் கைதிகள் மத்தியில் உருவாகியுள்ள தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் தற்போது வளர்ந்து வரும் மகிழ்வு, அமைதி இவைகளைப் பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியுள்ளது.
சிறைக்கூடங்கள் என்றதுமே, குற்றம், தண்டனை, கசப்பு, வெறுப்பு, கொடுமை, என்ற எண்ணங்களே நம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். இவைகளில் பல முற்சார்பு எண்ணங்கள் (Prejudice). சிறைக்குள்ளும் கனிவு இருக்குமா? நிச்சயம் இருக்கிறது. கனிவு, பாசம், பரிவு, அன்பு என்ற உன்னத உணர்வுகள் நுழைய முடியாத இடங்கள் இருக்கவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். கலிபோர்னியா சிறையில் நடப்பது உலகின் பல சிறைகளில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஆனால், சிறைகளின் செய்திகள் நமக்கு இவைகளைச் சொல்வது அபூர்வம்.

இந்தச் செய்தியைப் படித்ததும், மற்றோர் எண்ணமும் எனக்குள் எழுந்தது. இன்றைய நற்செய்தியுடன் தொடர்புள்ள எண்ணம் அது. குற்றங்களைக் குறைப்பதற்கு, குற்றம் புரிந்தவர்களை மீண்டும் இயல்பு வாழ்வில் இணைப்பதற்கு சட்டங்கள், சிறைகள், தண்டனைகள் சரியான வழி அல்ல. தண்டனைகள் ஒருவரது வாழ்வில் தற்காலிகமான மாற்றங்களை, மேலோட்டமான மாற்றங்களை உருவாக்கலாம். சிறைக்கூடங்களில் உருவாகும் பரிவும், பாசமும் எத்தனையோ கோடி குற்றவாளிகளில் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்களை மீண்டும் மனிதர்களாக்கியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிறைப்பட்டோரின் மீட்பு அவர்களிடமிருந்தே வருவது அவர்கள் வாழ்வை ஆழமாக மாற்றும் வல்லமை பெற்றது.
மீட்பு என்றதும் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலசமயங்களில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம் அவர்களுக்குள்ளிருந்தே வரலாம். அல்லது, வெளியில் இருந்து வரலாம். வெளியிலிருந்து பார்வையாளர்களாக, அல்லது ஆலோசனை வழங்குபவர்களாகச் சென்று ஆயிரமாயிரம் போதனைகளை ஒருவர் சொல்லும்போது, சிறைக்குள் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் எண்ணத்தை நான் இவ்விதம் கேட்டிருக்கிறேன்: "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ஈசிங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும் எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று.
வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லை. சரி. வேறு வழி என்ன? மற்றொரு வழியை நான் கற்பனையில் இப்படிப் பார்க்கிறேன். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிறை வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மத்தியில் ஒரு கைதியாகவே வாழ முன் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இதை நாம் கற்பனையில் பார்க்கலாம். நடைமுறையில், சட்ட ரீதியாக இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இதையொத்த ஓர் உண்மை நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார்.
இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம் இன்று நமது நற்செய்தியில் உள்ளது. தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3: 16)
விவிலியத்தின் வாக்கியங்கள் கோடான கோடி வழிகளில் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக, நான்கு நற்செய்திகளின் ஒவ்வொரு வாக்கியமுமே மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது  என்றால், அது நாம் இப்போது வாசித்த யோவான் 3: 16 என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவது எல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில் ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள் கதைகளாக நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை கதைகளாக வெளிவருவதில்லை.

எனவே, நமக்கு வெளியில் நடக்கும் கதைகளைக் கேட்பதற்குப் பதில், நாம் இந்த நாளில் நேரம் ஒதுக்கி, நமக்குள் நடக்கும்  அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.
நான் பிறந்து வளர்ந்த என் குடும்பத்தில், எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் பல ஆண்டுகளாக நடக்கும் அன்புப் பரிமாற்றங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. பல குடும்பங்களில் உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று எத்தனையோ பேருக்கு  ஒவ்வொரு நாளும் தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று ஒவ்வொருவரும் செய்யும் சேவைகள் அற்புதமானவை. அவைகளைச் சேவைகள் என்று கூட அவர்கள் கருதுவதில்லை... கூறுவதில்லை. இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள் எந்தப் பத்திரிக்கையிலும், புத்தகத்திலும் வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று பல ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புக் கதைகளை ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடவும் முடியாது.
ஒரு நிமிடம், ஒரு மணி நேரம், ஒரு நாள் தகனமாக மாறுவது கடினம்தான். ஆனால், பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தகனப் பலியாக மாறுவது மிக மிகக் கடினமான ஓர் அழைப்பு, ஒரு சவால். நம் குடும்பங்களில், உலகின் பல குடும்பங்களில்  இந்த அன்பு வேள்வியை, ஒவ்வொரு நாளும் நடத்திவரும் ஆயிரமாயிரம், கோடான கோடி அன்பு இதயங்களுக்காக இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல வித்தியாசமான, விபரீதமான இலக்கணங்களைத் தரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இந்த விபரீதப் போக்கை இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது:
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.  (யோவான் 3: 19-20)
இதற்கு நேர் மாறாக,
உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21)
என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஓர் அழைப்பையும் இறைமகன் கிறிஸ்து நமக்கு விடுக்கிறார். அழைப்பை ஏற்போமா? அல்லது இருளில் மறைந்துகொள்வோமா?


11 March, 2012

Meeting a ‘different’ Jesus ‘வித்தியாசமான’ இயேசுவைச் சந்திக்க...

Jesus Driving out the Money-changers
Rembrandt van Rijn (1606-1669)

Caught off-guard! When we see ourselves in a photo ‘caught off-guard’, we either enjoy those pictures or get annoyed with the one who took them. The more famous a person, the more frequent such ‘off-guarded’ moments become news. With paparazzi running around mad to do this all the time, we tend to become tired of such pictures and news. This does not happen so often in the world of drawing and painting. So, when such ‘casual moments’ are captured in drawing and painting, they seem more precious. I received one such artistic piece in my email a few weeks back. It was titled ‘Jesus Laughing’. (Kindly read the footnote on these pictures at the end.) It was quite refreshing to see those pictures… so different from the Jesus’ paintings we have seen so often.
When I was looking at those pictures, I told myself, “How great it would be to have these pictures installed over the main altars in our churches!” Well, as soon as I said this, an instant alarm bell rang, saying, “Oh, such pictures may not be ‘worthy’ of the main altar! They will ‘upset’ people.” We have been accustomed to seeing Jesus from certain ‘proper’ angles so much that other ‘different’ angles look ‘improper’ for a church. Perhaps, we would accommodate these pictures in an exhibition.
Pardon me for having taken such a long time to come to my point today. We have a similar situation in today’s Gospel. We meet a ‘different’ Jesus in today’s Gospel as he appears in the Temple of Jerusalem.

From the First Sunday of Lent we have been meeting Jesus in different situations and in very different places. On the First Sunday we met Him in the desert, hungry, tired and tormented by the Satan. On the Second Sunday we met Him on the mountain, in a moment of glory. Today, the Third Sunday of Lent, we meet Him in the Temple of Jerusalem in a shocking episode of anger and violence. Coming back to our discussion on ‘proper pictures’ to adorn our churches, of the three episodes of these Sundays, I can very well see quite a few churches opting for the Transfiguration of Jesus as the first choice. The hungry, tired Jesus in the desert (without the Satan) would be the second choice. Jesus angry and violent, wielding a whip? Well, this could be in the picture gallery close to the Church, but not inside the church… Even in our houses we prefer framing ‘proper’ pictures to be displayed. The other ‘casual’ pictures would be in our albums for occasional perusal and fun. The Church invites us to see this ‘different’ Jesus at least once in a while.

Another feature of these three Sundays that caught my attention was the three places: the desert, the mountain and the temple. All these are special places where one can meet God. In the desert and the mountain one needs to search for God, while the temple is the place we humans have built to meet God easily. Paradoxically, when the Son of God went to the temple – the famous Jerusalem Temple – He could not meet God. He could also sense that thousands who had come there could not meet God. Naturally, the next logical question was: What was the use of that temple when it had lost its prime purpose of helping people meet God? The Temple had become too filthy like the ‘Augean Stables’ (literally) and needed immediate cleaning. In the gospels we hear Jesus saying that the temple had been turned into a ‘house of trade’ (John) and a ‘den of robbers’(the other three gospels). Jesus took up the cleaning in full earnest.

Jesus’ encounter with the Temple began when He was 12 years old. Even at that time, the Boy Jesus must have seen some anomalies in His Father’s House. Every year as He went to the Temple for His annual obligations, He must have come back with lots of questions… painful questions. This year He wanted to find an answer to His questions… Rather, He decided to become an answer to His questions.
Among all the anomalies, what must have pained Jesus most was the way the poor and the gentiles were treated in the temple. The Passover of the Jews was at hand, and Jesus went up to Jerusalem. These are the opening words of today’s gospel. Every Jew was looking forward to going to Jerusalem at the time of the Passover. Having come from a humble labourer’s family Himself, Jesus knew how hard it was for the poor people to put aside something for the temple each year. They brought to Jerusalem all that they had set aside for God through the year. Going to Jerusalem was considered a peak experience for the Jews (Psalm 122). The happy anticipation of going to ‘God’s House’ was becoming more and more of a nightmare for the poor Jews year after year because of the market that was growing around and inside the temple.

The Passover was a peak season for Jerusalem. (You can see that I have begun speaking in ‘commercial’ terms.) The poor Jews had to face a two-pronged attack from the market forces that have grown around the Temple. The oxen, sheep and pigeons that the poor had brought with them became ‘unacceptable’ by the Priests. They found some little blemish in them. Hence, the poor had to buy these offerings from the temple market at a much higher price. The second attack came in the form of the annual temple tax they had to pay. This tax could not be paid in the Roman coins since they had the image of Caesar on them. Hence, they had to change these coins into the ‘temple coins’. Here again the poor were cheated royally. Thus the Pilgrimage to Jerusalem which was supposed to fill the poor with graces and replenish them for the next year, became a journey that fleeced them and left them exhausted. They must have felt that God was receding from them year after year and that they could never measure up to the temple requirements. They must have also questioned how their God had become the sole monopoly of the Priests and other temple merchants.

There was another group of people who were also raising similar questions. They were the gentiles. The temple market occupied what was known as the Court of the Gentiles – the outer court of the Jerusalem Temple. The Gentiles were permitted only to this outer court and no further. Since this court had become a noisy, unruly market place, the Gentiles could not pay their homage to the God of Israel, whom they were very keen to meet. Many of them must have returned home quite disgusted with what they saw and would have decided never again to go back to Jerusalem.
Jesus identified himself with these two groups who had agonising questions about God who was locked up inside the Temple of Jerusalem by the selfish Priests and merchants. He sought a solution. He began cleansing the Temple. Some commentators would call this act of Jesus a miracle. How did He undertake such a daring act and still not get killed on the spot is a miracle indeed! What made Him do this? The Gospel says: “Zeal for the House of God consumed Him.”

The temple authorities could see this zeal and they had no answer to this. Still, putting up a brave front, they questioned Jesus: “What sign have you to show us for doing this?” Jesus did not answer them directly but threw a challenge at them: “Destroy this temple, and in three days I will raise it up.” A temple that took 46 years to be built can be built in three days? What a childish way of speaking!
Jesus spoke of a different temple – His own Body! The Body of Jesus, which was destroyed on the Cross, was built up again in three days. In this temple there would be no more problems in meeting God; in this temple God cannot be bought; there will be no inner and outer courts in this temple to segregate people… All are welcome to meet God here! 

P.S.1 – An explanation on the email ‘Laughing Jesus’:
In the email there was a claim that these pictures were drawn by an artist who wished to remain anonymous and, hence, had signed each picture with the words ‘Jesus Painter’. But later I learnt that these pictures were drawn by one Jean Keaton. Here are her own words about this collection of ‘Laughing Jesus’ titled ‘As I have Loved You Collection’.
As I have Loved You Collection
"Each print in this series is meant to convey a specific characteristic of the Savior, from a warm and tender nurturer snuggling a new born baby, to the fun and playful friend of a couple of rambunctious boys. Surely when Jesus came to dwell on earth, He enjoyed these types of interactions with people of all ages. I believe Jesus would have no objections to providing people of our day with images that help us relate, connect, and want to be with Him.
- Jean Keaton

P.S.2 – The First Anniversary of Japan tragedy:
Through silence and prayers, people across Japan on Sunday remembered the massive earthquake and tsunami that struck the nation one year ago, killing just over 19,000 people and unleashing the world's worst nuclear crisis in a quarter century.
In the devastated northeastern coastal town of Rikuzentakata, a siren sounded at 2:46 p.m. -- the exact time the magnitude-9.0 quake struck on March 11, 2011 -- and a Buddhist priest in a purple robe rang a huge bell at a damaged temple overlooking a barren area where houses once stood.
The earthquake was the strongest recorded in Japan's history, and set off a tsunami that swelled to more than 65 feet (20 meters) in some spots along the northeastern coast, destroying tens of thousands of homes and wreaking widespread destruction…
The tsunami also knocked out the vital cooling systems at the Fukushima Dai-ichi nuclear power plant, causing meltdowns at three reactors and spewing radiation into the air. Some 100,000 residents who were forced to flee remain in temporary housing or with relatives, and a 12-mile (20-kilometer) area around the plant is still off-limits. The emperor voiced concern about the difficulties of decontaminating radiated land around the plant so that people can live there again.

Will the world leaders, including the Indian leaders, wake up and search for alternate sources of power?

Israel Museum model of Herod's Temple, referred to in John 2:13


To listen to this Tamil homily in Vatican Radio, click here:


சில வாரங்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் ‘Jesus Laughing’ என்ற தலைப்பில் பல படங்கள் வந்து சேர்ந்தன. மிக அழகான படங்கள். அவை அனைத்திலும் இயேசு குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களில் இயேசு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். நான் அதுவரைப் எண்ணிப் பார்த்திராத கோணத்தில் இயேசுவைச் சித்தரித்த படங்கள் அவை.'இந்த ஓவியங்களைக் கோவில்களில் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று எனக்குள் நானே எண்ணிக்கொண்டேன். இதுபோன்ற வித்தியாசமானஓவியங்களைக் கோவிலில் பீடமேற்றினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் உடன் எழுந்தது. இதே கேள்வி இன்று என் மனதில் மீண்டும் எழுந்துள்ளது. காரணம்? இன்று நாம் நற்செய்தியில் சந்திக்கும் வித்தியாசமானஇயேசு.
தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசுவை நாம் பாலை நிலத்தில் சந்தித்தோம். பசியோடு, களைப்போடு இருந்த இயேசு அவர். இரண்டாவது வாரம் இயேசுவை நாம் மலைமீது சந்தித்தோம். உருமாறி, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசு அவர். தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று இயேசுவைக் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்கத் தோன்றும் இந்த இயேசு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.
தவக்காலத்தின் மூன்று ஞாயிறும் நாம் சிந்தித்த காட்சிகளை ஓவியங்களாகப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று ஓவியங்களில், பாலை நிலத்திலும், மலைமீதும் நாம் சந்தித்த இயேசுவைக் கோவில்களில் பீடமேற்ற தயங்கமாட்டோம். ஆனால், எருசலேம் கோவிலில் நாம் இன்று சந்திக்கும் இயேசுவை பீடமேற்ற முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்குகிறோம்.கோவில்களில் நாம் பார்க்கும் இயேசுவின் திரு உருவங்கள் சாந்தம் நிறைந்த உருவங்கள், வெற்றிவாகை சூடிய உருவங்கள், அல்லது சிலுவையில் துன்புறும் உருவங்கள். இவ்வளவு அமைதியாய், சாந்தமாய் நாம் கோவில்களில் காணும் இயேசு, ஒருநாள் கோவிலுக்குச் சென்றபோது, கோபம் கொண்டார். கோவிலைச் சந்தையாக மாற்றியவர்களைச் சாட்டையெடுத்து விரட்டினார். இன்று அவர் நம் கோவில்களுக்கு வந்தால் என்ன நினைப்பார், எப்படி நடந்துகொள்வார் என்பதை சிந்தித்துப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு இன்று தரப்பட்டுள்ளது.இயேசுவின் வாழ்வை ஒரு திரைப்படமாக என் எண்ணங்களில் பார்த்திருக்கிறேன். அத்திரைப்படத்தில் நான் மிகவும் இரசித்து கைதட்டிய ஒரு காட்சி, இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய காட்சி. எந்த ஒரு திரைப்படத்திலும், கதையிலும் வில்லன்களை விரட்டியடிக்கும் நாயகனை கைதட்டி இரசிப்போம் இல்லையா? அதையொத்த ஓர் எண்ணம் இது. கோவிலைத் தூய்மைப்படுத்தும் கதாநாயகன் இயேசுவை இன்று சந்திப்போம், சிந்திப்போம்.

கோவிலுக்குச் சென்றால் நாம் தூய்மை பெறலாம் என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இங்கோ இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் தனியொரு இடம் பிடித்த எருசலேம் கோவில், அந்த உலகப் புகழ்பெற்ற புனிதத் தலத்தில் இயேசு கோபத்துடன் நடந்து கொண்ட காரணம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வது பயனளிக்கும்.இங்கு நான் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்கள் என் சொந்தக் கற்பனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல. ஒரு சில விவிலிய விளக்கங்கள், மறையுரைகள் இவற்றிலிருந்து நான் திரட்டியவை. எருசலேமில் அன்று நடந்ததாக நான் கூறும் விவரங்களுக்கும், இன்று நாம் நடைமுறையில் காணும் பல நிகழ்வுகளுக்கும் நெருங்கிய ஒப்புமை இருந்தால், நாம் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம்."யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்" என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்ல வேண்டும், அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்த வேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. இயேசுவும் ஒரு யூதருக்குரிய கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஏற்கனவே, அவர் 12 வயது சிறுவனாக, முதல்முறை எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அவர் கண்ட ஒரு சில காட்சிகள் அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்கு சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இயேசுவுக்குள் இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம்... ஏழைகளும், புற இனத்தாரும் அடைந்த துன்பங்கள். இயேசுவே ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் பட்ட அவஸ்தைகளை அவரும் அடைந்திருப்பார். இறைவனைக் காண எருசலேம் செல்வோம் என்ற ஆர்வத்தோடு இந்த ஏழைகள் ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து, எருசலேம் கோவிலுக்கு வந்தபோது, அவர்கள் அங்கு சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என  ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் கண்ணும்கருத்துமாய் அவர்கள் வளர்த்து எடுத்து வந்த ஆடு, மாடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது ஒரு குறை கண்டனர் குருக்கள். குறையுள்ள காணிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். எனவே, அந்த ஏழைகள் கோவிலில் அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, மாடு, புறா இவைகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம் ஒரு காணிக்கை வாங்குவதற்கே பற்றாமல் போயிற்று. சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில் கடவுள் அவர்களைப் புறக்கணித்துவிடுவார் என்ற அச்சத்தை, தயங்கித் தவித்துக் கொண்டிருந்த ஏழைகளிடம் குருக்கள் திணித்தனர்.

அடுத்ததாக, கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப் பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம் உரோமைய நாணயம். அந்த நாணயத்தைக் கோவில் காணிக்கையாகச் செலுத்தக் கூடாது, ஏனெனில் அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே காணிக்கை செலுத்தும் அனைவரும் கோவிலுக்கு வெளியே இருந்த நாணயம் மாற்றுமிடங்களில் தாங்கள் சேமித்து வைத்திருந்த உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவிலுக்கு ஏற்ற நாணயங்களை வாங்க வேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். காணிக்கைப் பொருட்களின் வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் என்று அனைத்து வியாபாரங்களிலும், கோவில் குருக்களுக்குப் பங்கு இருந்தது. ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக் காண வந்தால், இங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் உள்ளனவே... அவர்கள் தரிசிக்க வந்த இறைவன், அவர்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும்  உயர, உயர விலகிச் செல்கிறாரே என்ற தவிப்பு அவர்கள் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து, புழுங்கிக் கொண்டிருந்தனர்.

இதே வேதனை, இதே புழுக்கம் யூதர் அல்லாத புற இனத்தவருக்கும் இருந்தது. எருசலேம் கோவிலில் வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச் சுற்றில். இந்த வெளிச்சுற்று புற இனத்தவர் அவை (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. புற இனத்தவர் இந்த வெளிச்சுற்றில் மட்டும் நின்று இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. இந்த வெளிச் சுற்றில் கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த புற இனத்தவர் இறைவனைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். அவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக் கொண்டு திரும்ப வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கலாம். ஏழைகளையும் புற இனத்தவரையும் வாட்டி எடுத்த கேள்விகள், வேதனைகள் இயேசுவையும் வாட்டி எடுத்தன. இந்த வேதனை கோபமாக வடிவெடுத்தது. ஏழை யூதர்களும், புற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, ஒரு சந்தையாக, கள்வரின் குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.

பாஸ்கா விழா காலத்தில் எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வருவர் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள் குறைந்தது பல ஆயிரங்களாக கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய் இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த அந்த மனம் சாதாரண மனம் அல்ல... இறைமகன் இயேசு எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே அவர் கொல்லப்படாமல் தப்பித்தார் என்பதெல்லாம் புதுமைதான். இந்தப் புதுமையை எண்ணிப் பார்க்க நமக்கு திருஅவை இன்று ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

கோபக்கனல் தெறிக்க இயேசு இந்தக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்என்ற சவாலை அவர்கள் முன் வைத்தார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இதைக் குழந்தைத்தனமான சவாலாக நாம் பார்க்கலாம்; அல்லது, கடவுளால் மட்டுமே செய்துமுடிக்கக் கூடிய ஒரு சவாலாகவும் கருதலாம்.
இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது, கடவுளை விலை பேச முடியாது, வெளிச் சுற்று, உள்சுற்று என்ற பாகுபாடுகள் கிடையாது, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புற இனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். இறைவனை எந்தத் தடையும் இல்லாமல் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம். இத்தகைய அழகிய கோவில்கள் நம் சமுதாயத்தில் மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.

04 March, 2012

Mysterious Mountains… மலைகளின் மந்திரங்கள்


Mount Everest

Last Sunday, the First Sunday of Lent, we were given the privilege of seeing a very private experience of Jesus, probably one of the most vulnerable moments of His life… the temptations. Today, the Second Sunday of Lent, we are given the opportunity to see Him in one of His most glorious moments… the transfiguration. Last Sunday the Gospel took us to the desert. This Sunday the Gospel invites us to the mountains. In fact, the First Reading and the Gospel from today’s Liturgy take us to two different mountains to see two very different incidents, almost diametrically opposite to one another. Let’s go to the mountains…

When I was reflecting on the mountains, my mind, naturally, turned to Mount Everest in the Himalayas. This is considered to be the highest peak on earth. It is called the Third Pole of the earth. The Tibetan Plateau is the largest repository of ice on the planet outside the North and South Poles. In other words the Tibetan Plateau is the Earth's Third Pole. http://www.freetibet.org
The North Pole had been reached in 1909; the South Pole in 1911. But Everest had defied all human efforts. Reaching its summit seemed beyond mere mortals. On May 29, 1953, Edmund Hillary from New Zealand and a Sherpa guide, Tenzing Norgay, (Napalese Indian) were the first human beings ever to reach Everest's summit. Here was a mountain - unreachable, tantalizing, fearsome, deadly - that had defeated 15 previous expeditions. Some of the planet's strongest climbers had perished on its slopes. For many, Everest represented the last of the earth's great challenges. After the success of Edmund and Tenzing, more than 3000 men and women have conquered this peak. There have been quite a few world records in achieving this feat, including the one of Apa (born Lhakpa Tenzing Sherpa) who, as of 2010, had climbed this peak 21 times as a guide. Quite a few tragedies as well…
Not only Everest, but many other mountains around the world pose great challenges for human beings. Although mountains pose so many challenges, there are still thousands who keep climbing them year after year. Mountains hold a great magical charm on human beings from time immemorial. We have heard of great sages who had gone to mountain tops seeking ‘enlightenment’. The thrill of reaching ‘the top of the world’, the great silence of the peaks, the pure air and water on mountain tops have been sources of attraction for human beings. The lovely aspects of silence, purity and integration with nature have prompted many religions to ascribe mountains as the abode of gods.

Today’s Liturgy gives us two incidents that took place on mountain tops… different mountain tops and different… very different incidents. We shall spend more time on the incident related to Abraham as narrated in chapter 22 of Genesis.
Last week the opening lines of Mark’s Gospel read this way:
Mark 1: 12-13
The Spirit immediately drove him out into the wilderness. And he was in the wilderness forty days, tempted by Satan; and he was with the wild beasts; and the angels ministered to him.
When these words were presented to us, we wondered why the Spirit would drive Jesus into the wilderness to encounter the Satan? This week we are given another perplexing opening line in Genesis:
Genesis 22: 1-2
After these things, God tested Abraham, and said to him, "Abraham!" And he said, "Here am I." He said, "Take your son, your only son Isaac, whom you love, and go to the land of Mori'ah, and offer him there as a burnt offering upon one of the mountains of which I shall tell you."

God tested Abraham. How many times we have attributed our trials to God saying: “Why does God test me so much?” As a Priest, when people share with me such a question, I don’t have easy answers to offer them. The best answer I have given to such a question was: “God tests only those whom He loves most. He is probably setting them as examples of fighting the good fight with the armour of faith.” We know of many persons who have been tested beyond reasonable limits and how they have been shining examples of trust and faith in God. The Bible has many such examples, starting with Abraham. Right from the moment God took over the life of Abraham, he was put through many trials. The test presented to us in today’s Liturgy was, probably, the greatest of them all – namely, to kill his own son and offer him as a sacrifice to God. 

God chose a mountain top for this painful sacrifice. Abraham must have grown up with the hope that God lived on mountains and a person meeting God on a mountain, would come down filled with God’s gift. Now, when Abraham goes up the mountain, he will not be filled but, rather, he would be deprived of the precious gift God had given him at the ripe old age of 100. This was a reversal which was way beyond Abraham’s reasoning capacity. Still Abraham begins this torturous journey, relying not on his reasoning, but his faith.
The test of Abraham was more poignant in that he had to travel three days with his son Isaac to perform this sacrifice. What would they have spoken? Every time Abraham saw his beloved son, his heart must have bled. Why would God do this? Isn’t it already cruel enough to ask Abraham to sacrifice his son? Then, why make him go through this torture of three days?
At the end of these three days, when they reach the mountain, Abraham makes his son Isaac carry the firewood meant for his own sacrifice. When Isaac poses the innocent question about the lamb, Abraham must have turned aside and mumbled the famous line: “God will provide!”

Some scripture scholars would explain this incident as a fore-shadow of the Sacrifice of Jesus on Calvary. The Passion of Jesus was spread over three days of torture. Like Isaac, Jesus also carried the wood on which he would be sacrificed. The torture that Abraham had to undergo was an indication to what God the Father would undergo during the Passion and Death of His own Son.

Abraham went up the mountain to perform a sacrifice. He met God and returned home filled with blessings. In the Gospel of today we meet the three disciples who went up the mountain and met God. This would strengthen them for later sacrifices in their lives.
Deep experiences of God should take us back to the people. This is what happens in the final part of the Transfiguration event. Peter wanted to prolong the ‘experience’ by erecting tents. God intervened and said, “This is my Son. Listen to him.” An indirect reminder to Peter as well as to us, not to be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

எவரெஸ்ட் சிகரம்




To listen to this Tamil homily in Vatican Radio, click here:



உலகில் வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் உள்ளன என்பதை புவியியலில் படித்திருக்கிறோம். இவ்வுலகின் மூன்றாவது துருவம் என்று ஓரிடம் அழைக்கப்படுகிறது. அதுதான் உலகிலேயே மிக உயர்ந்த இடம் என்று கருதப்படும் எவரெஸ்ட் மலைச் சிகரம். உலகின் வடதுருவத்தை 1909ம் ஆண்டும், தென்துருவத்தை 1911ம் ஆண்டும் மனிதர்கள் சென்றடைந்தனர். ஆனால், மூன்றாவது துருவமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய கூடுதலாக 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த Edmund Hillaryம் நேபாள இந்தியரான Tenzing Norgayம் இந்தச் சாதனையை முதல் முறை செய்தனர்.
இவர்களைத்  தொடர்ந்து, இதுவரை இச்சிகரத்தை 3142 வீரர்கள் எட்டிப்பிடித்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. எவரெஸ்ட் மலைச்சிகரம் மட்டுமல்ல, உலகின் பல்வேறு மலைச்சிகரங்கள் எட்டுவதற்கு மிகக் கடினமானவை என்பதை அறிந்தும், அச்சிகரங்களை அடைய ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் முயன்று வருகிறார்கள். மலைச் சிகரங்கள் இப்படி ஓர் ஆர்வத்தை மக்கள் மனங்களில் தூண்டி வருகின்றன. இந்த முயற்சிகளில் பல வெற்றி அடைவதில்லை, பல மரணங்களில் முடிந்துள்ளன. இருந்தாலும், மலைச் சிகரங்கள் மீது மனித மனங்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு, தணியாத ஓர் ஈர்ப்பு.

மலைச்சிகரங்கள்... உடலிலும் மனதிலும் மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். உலகின் இரைச்சல் இன்றி மலை முகடுகளில் நிலவும் அமைதி, இயற்கையின் அழகிய ஒலி, மலைச் சிகரங்களில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை நம்மில் புத்துணர்வைத் தூண்டும். அமைதி, தூய்மை, புத்துணர்வு என்ற அழகிய அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள் இறைவனின் இருப்பிடங்களாக பல மதங்களில், கலாச்சாரங்களில் கருதப்படுகின்றன.
மலைச்சிகரங்களை அடைந்ததும் பெருமை, பெரும் நிறைவு தோன்றும்... அந்தச் சிகரங்களை அடைய மேற்கொள்ளப்பட்ட வேதனைகள் அந்த நேரத்தில் மறைந்துவிடும். மலைப் பயணங்களில் உள்ள வேதனைகள், மலையுச்சியில் நிகழும் அற்புதங்கள், அந்த அற்புதத்திலேயே தங்கிவிடமுடியாமல், மீண்டும் தரையிறங்கி வந்து நாம் சந்திக்கவேண்டிய சராசரி வாழ்க்கை என்ற பல கோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன இன்றைய ஞாயிறு வாசகங்கள்.
சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில் இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறுநமது சிந்தனைக்கு தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.

"சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை... இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்." என்ற எண்ணங்களைச் சென்ற ஞாயிறு சிந்தனையில் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
சென்ற ஞாயிறு நாம் வாசித்த மாற்கு நற்செய்திப் பகுதியின் துவக்க வரிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்:
மாற்கு 1 : 12
அக்காலத்தில், தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.
சாத்தானின் சோதனைகள் இருந்த பாலை நிலத்திற்கு தூய ஆவியார் இயேசுவை ஏன் அனுப்ப வேண்டும் என்ற கேள்வி மனதில் நெருடுகிறது. இந்த ஞாயிறு, தொடக்கநூல் 22ம் பிரிவில் நாம் வாசிக்கும் முதல் வரிகள் நாம் வாழ்வில் அடிக்கடி கேட்கும் மற்றொரு ஆழமான கேள்வியை நினைவுபடுத்துகிறது:
தொடக்கநூல் 22 : 1-2
அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, “ஆபிரகாம்!என, அவரும் இதோ! அடியேன்என்றார். அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்என்றார்.

தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு, பாலை நிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டார். ஆபிரகாம் வாழ்விலோ கடவுளே அவரைச் சோதித்தார். வாழ்வில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி: "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற வேதனை நிறைந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னுடன் பகிர்ந்துகொள்ளும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில் பல நேரங்களில் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற பதில்களில் எனக்கே ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள் யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்... விசுவாசத்தில் யார் அதிகம் வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை, சவால்களை வெல்வதன் மூலம், மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்." என்ற பதிலே எனக்கும் பிறருக்கும் ஓரளவு தெளிவைத் தந்த பதில்...
வாழ்க்கையோடு போராடும் பலர், அந்தப் போராட்டங்களில் வெற்றி கண்ட பலர் நமக்குப் பாடங்களாக அமைகிறார்கள். விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான மனிதர்களின் வாழ்வில் இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று பலருக்கும் 'சோதனை மேல் சோதனை' கூடிக்கொண்டே சென்றதை நாம் பார்க்கிறோம்.

ஆபிரகாமை இறைவன் சோதித்த நிகழ்வின் மூலம் நாம் பயிலக் கூடிய பாடங்கள் பல உண்டு. இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100. ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
இறைவனின் கட்டளைகள் பலவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றிவந்த ஆபிரகாமுக்கு, கேள்விகள் ஏதும் கேட்காமல், மறுப்பு ஏதும் சொல்லாமல் பணிவதே பழக்கமாகி விட்டது. இறைவன் கொடுத்தார், இறைவன் மீண்டும் கேட்கிறார்என்று ஆபிரகாம் எண்ணியிருக்கக் கூடும். இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை. மலைகள் இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின்  அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற பாரம்பரியத்தில் வளர்ந்தவர் ஆபிரகாம். அந்த மலையில், தான் நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை பறித்துகொள்ளும் வகையில் இறைவன் கொடுத்த கட்டளை ஆபிரகாமுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.

ஒரு நொடியில் தலைவெட்டப்பட்டு உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அந்தச் சித்ரவதையை ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட இந்தப் பலியை வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் ஆபிரகாம் நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார். அந்த மூன்று நாட்களும் அந்தத் தந்தையின் மனம் அடைந்த சித்ரவதையை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
மேலும், அவர்கள் மலையை அடைந்தபின், ஆபிரகாம் சிறுவன் ஈசாக்கின் தோள் மீது விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு மலைமீது ஏறுகிறான். போகும்  வழியில்தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அக்குழந்தையின் கேள்வி ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். உண்மையான பதிலைச் சொல்லமுடியாமல், ஆபிரகாம் ஏதோ ஒரு பதிலைச் சொல்லிச் சமாளித்தார்.

மகனைப் பலிதருவது என்பதே ஆபிரகாமுக்கு இறைவன் தந்த கொடூரக் கட்டளை. அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற முடியாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. விவிலிய விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு பல வழிகளில் கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்ததுபோல், இயேசு சிலுவை சுமந்தார். பாடுகளின்போது இயேசு கேட்ட கேள்விகளுக்குத் தந்தை பதில் ஏதும் தரவில்லை... இப்படி பல ஒப்புமைகள் வழியே இந்த நிகழ்வு கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும் இயேசுவின் பாடுகளின்போது வேதனை அடைந்தார் என்பது விவிலிய விரிவுரையாளர்கள் சொல்லும் ஒரு பதில்.

மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை  அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.
கடவுள் அனுபவம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், நானும் கடவுளும் என்று அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு உருமாறிய இந்த நிகழ்வின் கடைசிப் பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது "நாம் இங்கேயே தங்கி விடலாம்" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்." என்பதே.
அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று இயேசு கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கி விட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
உருமாறிய இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு, இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.