26 October, 2014

Questions and more questions… கேள்விகள்... மேலும் கேள்விகள்

Love God, Love People, Do Something About it

There are questions and questions – the right ones and the wrong ones; the good ones and the bad ones. Isidor Isaac Rabi, a Nobel Prize winner in Physics, and one of the developers of the atomic bomb, was once asked how he became a scientist. Rabi replied that every day after school his mother would talk to him about his school day. She wasn't so much interested in what he had learned that day, but how he conducted himself in his studies. She always inquired, "Did you ask a good question today?" "Asking good questions," Rabi said, "made me become a scientist."

There are also different modes of asking questions. Questions that spring from a humble, sincere search for truth will lead one to light. Questions that spring from the apparent-all-knowing-arrogance will lead to darkness. In my teaching career, I have come across quite a few brilliant students who were much better in knowledge and skill than I. A few of them would surprise me with questions during class hours. Quite a few times I could smell a trap in their questions. They knew the answer and still wanted to test whether I knew it all right. Most of the time, I could tackle these situations to the best of my ability. Such moments left me humbled as well as enlightened!

Today’s gospel gives us an account of how Jesus met with a lawyer who knew too much and asked a question to find out whether Jesus knew enough. The very opening lines of today’s gospel tell us that the political game of the Pharisees (which we saw in the last Sunday’s gospel) was not finished yet.
Matthew 22: 34-36
Hearing that Jesus had silenced the Sadducees, the Pharisees got together. One of them, an expert in the law, tested him with this question: “Teacher, which is the greatest commandment in the Law?”

In comparison to the expert in the law, Jesus was a simple itinerant preacher. The expert would have surely known that Jesus did not attend any of the law schools. Then why question him on the greatest commandment in the Law? This was the best way to prove in front of the people that Jesus was only an upstart and did not have solid foundation in Mosaic Law.
Jesus knew the ploy. Still, it was a profound question and Jesus was not one to let go of an excellent opportunity. Hence, Jesus gave him a reply. What a reply it was! This reply of Jesus has served as the heartbeat of Christian tradition all these centuries. Jesus combined two famous passages from the Old Testament – namely, Deuteronomy 6:5 and Leviticus 19:18. Here is the reply of Jesus as recorded by Matthew:
Matthew 22: 37-40
Jesus replied: “‘Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind.’ This is the first and greatest commandment. And the second is like it: ‘Love your neighbor as yourself.’ All the Law and the Prophets hang on these two commandments.”

This incident is recorded in all the three synoptic gospels, each one with a few differences. It is interesting and instructive to pay attention to these different versions. While Matthew closes the event with the reply of Jesus, Mark goes on to say:
Mark 12: 32-34
“Well said, teacher,” the man replied. “You are right in saying that God is one and there is no other but him. To love him with all your heart, with all your understanding and with all your strength, and to love your neighbour as yourself is more important than all burnt offerings and sacrifices.” When Jesus saw that he had answered wisely, he said to him, “You are not far from the kingdom of God.” And from then on no one dared ask him any more questions.
Jesus and the teacher of the law admired each other in this question-and-answer session, and parted company as friends! True admiration for another comes as a result of having a true sense of admiration of oneself, first. I can surely say that Jesus did have an honest appraisal of himself and hence he could admire others when they were truly admirable, even if they were his ‘adversaries’.

In the gospel of Luke, (10:25-37) we get a very different picture of this incident. Here, Jesus, instead of saying these famous words himself, made the expert in the law say the famous line about the love of God and love of neighbour. Here again, Jesus admired the expert and told him: “You have answered correctly. Do this and you will live.” (10:28) But, the expert wanted to ‘justify himself’… justify his years in the law school, justify his position in front of the people and asked the famous question: “And who is my neighbour?”
Jesus could have easily brushed aside the impertinence of the expert with a condescending smile and gone his way… But, no, Jesus answered this question. And, once again, what an answer! He came out with the world famous parable of the ‘Good Samaritan’. We are thankful to this expert in the law for being the catalyst in bringing to light one of the best parables from Jesus.

What Jesus said at the beginning and at the end of this parable is very relevant for us. At the beginning of this parable, Jesus told the expert: “You have answered correctly. Do this and you will live.” (10:28) The closing conversation after the parable goes like this:
“Which of these three do you think was a neighbour to the man who fell into the hands of robbers?”
The expert in the law replied, “The one who had mercy on him.”
Jesus told him, “Go and do likewise.” (10:36-37)
The emphasis is on ‘doing’. Actions more than thoughts and words… Do this, do likewise! We are sent into the world to live the Gospel… to live the love of God and love of neighbour. The world today has become more and more eloquent in defining what love is. We are offered hundreds of ‘love-machines’ that creates an illusion that the whole world is a family. This ‘family’ created by the business world is a virtual world. The real world is getting more and more torn and fragmented, leaving millions orphaned, widowed and estranged.

Against the background of this real world, today’s first reading comes as a wake-up call. The words given in this passage are very practical and they emphasise concrete, practical, day to day actions. Moreover, these words are given to us as coming from God.
Exodus 22: 21-27
Thus says the Lord: “Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt. Do not take advantage of the widow or the fatherless. If you do and they cry out to me, I will certainly hear their cry. My anger will be aroused, and I will kill you with the sword; your wives will become widows and your children fatherless.
“If you lend money to one of my people among you who is needy, do not treat it like a business deal; charge no interest. If you take your neighbour’s cloak as a pledge, return it by sunset, because that cloak is the only covering your neighbour has. What else can they sleep in? When they cry out to me, I will hear, for I am compassionate.

Setting aside all eloquence, God seems to talk to us directly today. Christ, on his part, encourages us to love God and neighbour in action. If all of us can translate all our thoughts and words into actions – actions of sincere love and support, then we shall live. “Do this and you will live.”


The Greatest Commandment

ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவனைப்பற்றி அவனது தந்தையிடம் முறையிட்டார்: "ஐயா! ஒங்க பையன் வகுப்புல சரியாவே பதில் சொல்ல மாட்டேங்கறான். இன்னக்கி அவன்கிட்ட 'கம்பராமாயணத்தை எழுதியது யார்'ன்னு கேட்டேன். அதுக்கு உங்க மகன் 'திருவள்ளுவர்'ன்னு சொல்றான்" என்று ஆசிரியர் முறையிட்டதும், தந்தை அவரிடம், "சார், கோவிச்சுக்கக் கூடாது. நீங்க 'திருக்குறள எழுதுனது யார்'ன்னு கேட்டிருந்தா, என் பையன் 'திருவள்ளுவர்'ன்னு சரியா பதில் சொல்லியிருப்பான். நீங்க கேள்வியைத் தப்பா கேட்டுட்டீங்க" என்று சொன்னார். எப்போதோ படித்த ஒரு சிரிப்புத் துணுக்கு இது. என்னை சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்த துணுக்கு இது. தப்பான கேள்விகள் கேட்கமுடியுமா என்று என்னைச் சிந்திக்க வைத்த அத்துணுக்கு, இந்த ஞாயிறு சிந்தனைக்கு உதவியாக உள்ளது.
கேள்விகளும், கேள்விகள் கேட்பதும் மனித வாழ்வின் முக்கியமான ஓர் அம்சம். கேள்வி கேட்பதுபற்றி மற்றொரு கதை இதோ... இயற்பியலில் நொபெல் பரிசு பெற்றவரும், அணு குண்டு ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவருமான Isidor Isaac Rabi என்பவரைப் பற்றிய கதை இது. இவர் நொபெல் பரிசு பெற்றதும் அளித்த ஒரு பேட்டியில், தான் அறிவியலில் ஆர்வம் கொண்டதற்கு தன் தாயே முக்கியக் காரணம் என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் Isidor பள்ளியிலிருந்து திரும்பிவந்ததும், அவருடைய தாய் அவரிடம் அன்று பள்ளியில் அவர் என்ன படித்தார், எப்படி நடந்து கொண்டார் என்றெல்லாம் கேட்காமல், “இன்று நீ பள்ளியில் நல்லதொரு கேள்வியைக் கேட்டாயா?” என்று மட்டும் அவரிடம் விசாரிப்பாராம். நல்ல கேள்வியைக் கேட்பதற்கு தன் தாய் ஒவ்வொரு நாளும் தன்னை ஊக்கப்படுத்தியதே, தன்னை அறிவியலில் ஆர்வம் கொள்ளவைத்தது என்று Isidor சொன்னார்.

வாழ்வில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. உண்மையான ஆர்வத்துடன், எளிய மனதுடன் இந்தப் பாடங்களைப் பயில மனம் இருந்தால்... சரியான, நல்ல கேள்விகளை ஒவ்வொரு நாளும் நாம் கேட்டு, பயனடைய முடியும். அல்லது தப்புக் கேள்விகள் கேட்டு, திண்டாடவும் வேண்டியிருக்கும்.
நமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள கேட்கப்படும் கேள்விகள் அறிவியலாளர் Isidorஐப் போல் நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறது என்பதை இடித்துச் சொல்வதற்காக கேள்விகள் கேட்கும்போது, நமது பெருமை கலந்த அறியாமை அங்கு பறைசாற்றப்படும்.
நான் ஆசிரியர் பணியில் இருந்தபோது, என் வகுப்பில் என்னைவிட நல்ல திறமையும் அறிவும் மிக்க மாணவர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் எப்போதாவது என்னைச் சங்கடத்தில் சிக்கவைப்பதற்கு கேள்விகள் கேட்பதுண்டு. பதில்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்னைச் சோதிக்கும் நோக்கத்தில் அவர்கள் கேள்விகள் கேட்கின்றனர் என்பதைச் சில வேளைகளில் அவர்கள் கேட்கும் தொனியிலேயே நான் புரிந்துகொள்வேன். அத்தகையச் சூழல்களைப் பல வழிகளில் நான் சமாளித்திருக்கிறேன். ஆனால், அச்சூழல்களில் அறிவை வளர்க்கும் கேள்வி பதில் பரிமாற்றத்தை விட, நீயா, நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான பெருமை தலைதூக்கியதை உணர்ந்திருக்கிறேன்.

இயேசுவின் வாழ்வில் இதுபோன்ற ஒரு சூழல் உருவானதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்:
மத்தேயு நற்செய்தி 22: 34-36
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச்  இயேசுவைச் - சோதிக்கும் நோக்கத்துடன், போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா என்று, இயேசுவுடன் மதத் தலைவர்கள் சென்ற வாரம் துவக்கிய அரசியல் விளையாட்டு, மற்றொரு வடிவத்தில் தொடர்கிறது. திருச்சட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்த ஓர் அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார். இயேசு தன்னைப்போல் திருச்சட்டங்களைப் படித்தவர் அல்ல என்பது அந்த அறிஞருக்கு நன்கு தெரியும். இயேசுவின் அறியாமையை மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தக் கேள்வியை அறிஞர் கேட்கிறார்.
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் சொல்கிறார். என்ன ஒரு பதில் அது! இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில். மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகள் நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.
மத்தேயு நற்செய்தி 22: 36-40
போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டவரிடம், இயேசு, “‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாகஎன்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றனஎன்று பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று நற்செய்திகளும் ஒரே நிகழ்வை வெவ்வேறு வகையில் கூறியுள்ளன. இந்த வேறுபாடுகளைச் சிந்திப்பது நமக்குப் பயனளிக்கும். மத்தேயு நற்செய்தியில், இயேசு கூறிய இந்த பதிலோடு இச்சம்பவம் முடிவடைகிறது. மாற்கு நற்செய்தியில், இயேசுவின் பதிலால் மகிழ்வடைந்த அறிஞர் இயேசுவைப் புகழ்கிறார். இயேசுவும் அந்த அறிஞரின் அறிவுத் திறனைக் கண்டு, "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" (மாற்கு 12:34) என்று அவரைப் பகழ்வதாக இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது.
இயேசுவும், திருச்சட்ட அறிஞரும் எதிர், எதிர் அணிகளில் இருந்தாலும், ஒருவரையொருவர் புகழ்வது, நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. ஒருவர் தன்னைச் சரியாகப் புரிந்துகொண்டு, தன்னைப் பற்றி உண்மையான மதிப்பும், பெருமையும் கொண்டிருந்தால், அடுத்தவரை, அவர் தன் எதிரியே ஆனாலும், அவரையும் மதிக்கும் பண்பு கொண்டிருப்பார் என்பது மாற்கு நற்செய்தியில் (மாற்கு 12: 28-34) கூறப்பட்டுள்ள இந்நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பாடம்.

லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மாறுபட்ட ஒரு சூழலை நாம் காண்கிறோம். மறைநூல் அறிஞரின் குதர்க்கமான கேள்விகள் தொடர்வதை நாம் காண்கிறோம். இறைவனையும் அடுத்தவரையும் அன்பு செய்வதே அனைத்து சட்டங்களின் அடிப்படை என்ற இந்த அழகான பதிலை, தானே கூறாமல், கேள்வி கேட்ட திருச்சட்ட அறிஞரின் வாயிலிருந்தே இயேசு வரவழைக்கிறார் என்று லூக்கா நற்செய்தி சொல்கிறது. அவர் தந்த நல்ல பதிலைப் புகழ்ந்து இயேசு அவரிடம் சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் (லூக்கா 10: 28) என்று சொல்லி அவரை வழியனுப்புகிறார். ஆனால், திருச்சட்ட அறிஞர் விடுவதாக இல்லை. தனது திறமையை இயேசுவிடம், சூழ இருந்தவர்களிடமும் காட்டும் நோக்கத்துடன், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற மற்றொரு குதர்க்கமான கேள்வியைத் தொடுக்கிறார். அந்தக் கேள்விக்கும் இயேசு பொறுமையாய் பதில் தருகிறார். இயேசு கூறிய இந்தப் பதில், காலத்தால் அழியாத புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையாகத் தரப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இவ்வுவமையின் துவக்கத்திலும் முடிவிலும் இயேசு அந்த அறிஞரிடம் கூறிய ஓர் அறிவுரை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. நல்ல சமாரியர் உவமைக்கு முன்னர், சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் என்றும், உவமைக்குப் பின், நீரும் போய் அப்படியே செய்யும் (லூக்கா 10: 37) என்றும் இயேசு சொல்கிறார்.
திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப் பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்து கொள்வது முக்கியமல்ல அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே முக்கியம் என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இறையன்பைப் பற்றி கோடான கோடி மறை நூல்கள், மறையுரைகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. பிறரன்பைப் பற்றியோ மதங்கள் மட்டுமல்லாமல், மதநம்பிக்கையற்ற நிறுவனங்களும் இன்று பேசி வருகின்றன. இவை அனைத்தும் புத்தகங்களில் பாடங்களாக மட்டும் தங்கி விடாமல், செயல் வடிவம் பெறுவதே இன்றைய உலகில் கிறிஸ்துவின் மறையை, அன்பு மறையைப் பரப்பும் பணியாக இருக்க வேண்டும்.

உலகமெல்லாம் ஒரே குடும்பம் என்ற மாயையை நம் வர்த்தக உலகமும், தொடர்பு சாதனங்களும் உருவாக்கி வருகின்றன. முக்கியமாக உலகின் அனைத்து இளையோரையும் எண்ண ஓட்டங்களாலும், நடை உடை பாவனைகளாலும் ஒரே உலகக் குடும்பம் என காட்டும் முயற்சிகள் வர்த்தக உலகால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் பிளவுகளும், பிரிவுகளும் கூடி வருகின்றனவே ஒழிய, குறைவதாகத் தெரியவில்லை. பல்வேறு கருவிகள் மூலம் தொடர்புகளை வலுப்படுத்தும் வர்த்தக உலகம், தொடர்பு சாதன உலகம் அதே வேளையில், உண்மையான, நேருக்கு நேரான உறவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. தொடர்புசாதனக் கருவிகள் புடைசூழ, சுயநலச் சிறைகளுக்குள் நாளுக்கு நாள் இன்னும் வலுவாக நம்மை நாமே பூட்டிக் கொள்வதால், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் அனைவருமே அன்னியராகத் தெரிகின்றனர்.
அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின், கைம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கிறது.

விடுதலைப் பயணம் 22: 20-27
ஆண்டவர் கூறியது: ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும். அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். தேவையான அருளை வேண்டுவோம்.


19 October, 2014

Give back Caesar to God சீசரும் கடவுளுக்குரியவர்...

Render to Caesar

For the past few months India has witnessed the rise and fall of many politicians. In other countries politics has played havoc – as in the case of the Gaza strip, in the form of ISIS, Boko Haram etc. Our reflections today, revolve around politics and politicians. I have very minimal respect for politicians. This may be due to the fact that I am yet to meet an honest, noble politician in person. I have read about such persons in books. I am sure there are a few of them; but they must be a rare breed. My idea of politics does not allow honest persons to survive there for long. My definition of politics has ‘connivance’ and ‘compromise’ written all over it.
When I say ‘politics’, I do not mean only party politics that dominates government circles in all the countries. I also mean politics that is present in all the other human spheres of activities, including religion. Politics and religion have been almost like inseparable twins in human history. They have co-existed as friends and foes. When convictions came to the fore, they were foes; but when compromises were struck, they were friends. In compromises, it was always politics that thrived, whereas religion – true religion – died.

Was Jesus involved in politics? I think so. In so far He had to deal with various powers that were operative in his times, he had to deal with politics. We are given one such incident in the life of Jesus as our gospel today. Here is the gospel passage as given in Matthew:
Matthew 22:15-21
Then the Pharisees went out and laid plans to trap him in his words. They sent their disciples to him along with the Herodians. “Teacher,” they said, “we know that you are a man of integrity and that you teach the way of God in accordance with the truth. You aren’t swayed by others, because you pay no attention to who they are. Tell us then, what is your opinion? Is it right to pay the imperial tax to Caesar or not?”
But Jesus, knowing their evil intent, said, “You hypocrites, why are you trying to trap me? Show me the coin used for paying the tax.” They brought him a denarius, and he asked them, “Whose image is this? And whose inscription?” “Caesar’s,” they replied.
Then he said to them, “So give back to Caesar what is Caesar’s, and to God what is God’s.”

We can see the traits of two types of politics in this passge: the more commonly used ‘dirty politics’ of the Pharisees and the Herodians as well as the rarely found ‘good politics’ as demonstrated by Jesus.
First, the ‘dirty politics’: The opening lines of today’s gospel reveal some of the traits of this more-commonly-found-dirty-politics… The fist one: planning to trap someone in his/her words. As far as my idea of politics goes, this is probably the ONLY work done by most politicians. The very next sentence gives us a clue to another trait of politicians – striking a compromise to defeat a common enemy. It is also clear from these lines how political leaders act… namely, how they would depute emissaries in critical situations. In today’s gospel we see how the Pharisees sent their disciples along with the Herodians. Both Herod and the Pharisees themselves would not burn their fingers. They had had enough encounters with Jesus to have learnt how smart He was. Then, why risk one more time?
The Pharisees and the Herodians were usually sworn enemies. They held very opposing views of the Roman domination and Caesar. For the Pharisees, God was the supreme ruler and anyone who claimed divinity was an abomination. Caesar claimed divinity and hence, for the Pharisees he was an abomination. For the Herodians, Caesar was a saviour of sorts. Following their leader Herod, they were willing to serve Caesar. These two groups belonging to two different enemy camps were willing to compromise their positions to thwart a common enemy – Jesus. For the Herodians, compromises were their ‘daily bread’ since they were proper politicians. But for the Pharisees? Well, for them too… since they were politicians in clerical garb and with clerical titles.
The way they talk to Jesus brings to light another aspect of politicians, namely, how they approach their enemy carrying a garland within which are hidden daggers. If politicians speak out their real thoughts and real intentions, they would be laughed at. Hence, almost by instinct, they lay their snares with sugar-coated words. Thus, the opening lines of today’s gospel give us quite a few thoughts on ‘dirty politics’.

Now, to the ‘good politics’: The second part of today’s gospel gives us hope that politics can still be saved. Here we see the ‘good politics’ as practised by Jesus. Good politics begins by calling a spade a spade. As against the sweet talk of the Pharisees and the Herodians, Jesus confronts them with their insincerity. Such courage has been found in the history of politics, but very rarely.
Coming to the core of today’s gospel, we are given one of the most famous lines spoken by Jesus. These words of Jesus is probably one the most oft-quoted lines: “Render unto Caesar what is Caesar’s and to God what is God’s.” If only these words of Jesus are followed in all spheres of life, namely, give each one what is due to him or her, this world would automatically become heaven.

The whole reflection may have sounded as venting my anger over politicians. But, as one of my fingers is pointed towards them, I need to be aware that three more are pointing towards me. Thus I need to examine myself thrice over to see how many of the traits of ‘dirty-politics’ are present in my life and also to see how much of the ‘good politics’ I can put into practice.
“Render unto Caesar what is Caesar’s and to God what is God’s.” When Jesus told us to give back to Caesar his coins since they bore his image, in the same breath, He reminded us that we are created in the image of God (Genesis 1: 26) and therefore we need to give ourselves back to God. In that sense, Caesar too is to be given back to God!

This Sunday (October 19) we have two lovely reasons to break forth in celebration:
Reason 1 - Pope Francis will raise Pope Paul VI to the altars as a Blessed. Paul VI was the first Pope to set foot in India. In fact it was Pope Paul VI who broke the 200 year old custom of the Popes not leaving Italy. Pope Paul VI became a ‘pilgrim Pope’. In 1964, Pope Paul VI visited Bombay to take part in the International Eucharistic Congress. On the Golden Jubilee year of his visit to India he is raised to the altars. This calls for a celebration!
Reason 2 - The Extraordinary Synod that took place in Vatican for the past two weeks has come to a close, paving way for the Ordinary Synod that would follow next year. This Synod surely calls for a special celebration since ‘Family’ was the main focus of this Synod. The role of the Family is recognised as the heart beat of the Church.
A tapestry showing late Pope Paul VI hangs on St Peter's basilica during a papal mass for his beatification


அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியம், கிறிஸ்தவம் என்ற எல்லைகளைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. புகழ்மிக்க இக்கூற்றுக்குப் பலவாறாக விளக்கங்கள் சொல்பவரும் உண்டு. இயேசு கூறிய இப்புகழ் மிக்கக் கூற்றையும், அவர் அப்படிச் சொன்ன சம்பவத்தின் பின்னணியையும், இந்த ஞாயிறு சிந்தித்து, பயன் பெறுவோம்.

சீசருக்கும், கடவுளுக்கும், பொதுவாக யாருக்குமே அவரவருக்கு உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து, மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக் கொடுக்க மறுத்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு அவர்களிடம் பல உவமைகளைக் கூறினார். இந்த  உவமைகள் வழியே இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம், இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.
மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், எளிய ஒரு நிகழ்ச்சியைப் போல் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும் அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால், பல உண்மைகளை, பல பாடங்களை நாம் பயில முடியும். முயல்வோம் வாருங்கள்.

கடந்த மூன்று வாரங்களாய் இயேசு கூறிய உவமைகள் மூலம் கசப்பான பல பாடங்கள் பரிசேயர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது வென்றுவிடும் வெறியில், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தாம் ஏரோதியர்கள்.
பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில், கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் பரிசேயர்கள்.
ஏரோதியர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப்  பணிகள் செய்தனர். கொள்கை அளவில் இரு வேறு துருவங்களாக, சென்மப் பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்துவிட்டனர். காரணம்? இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை நாம் இந்தியாவிலும் இன்னும் பிற நாடுகளிலும் பார்த்து வருகிறோம். பாம்பும் கீரியும் போல ஒருவரை ஒருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, நாம் பல முறை வேதனையில் சிரித்திருக்கிறோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.

அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம்.
ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக நம் மனசாட்சியை அடமானம் வைத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? இக்கேள்விகளுக்கு உண்மையான விடைகள் தேடினால், நம் வாழ்விலும் அரசியல் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகும்.

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல், நமக்கு அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்:
மத்தேயு நற்செய்தி 22: 18-21
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவைஎன்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்என்று அவர்களிடம் கூறினார்.

வரி செலுத்த பயன்படுத்தப்பட்ட 'தெனாரியம்' என்ற நாணயம், அந்த நாணயத்தைப் பார்த்தபின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள் ஆகியவை நமது மூன்றாம் சிந்தனை. 'தெனாரியம்' என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம் உரோமையப் பேரரசன் சீசரின் உருவமும், "தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் 'Pontifex Maximus' அதாவது குருக்களுக்கெல்லாம் பெருங்குரு என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர், தன்னை வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல், மதத்தலைவனாகவும், கடவுளாகவும் காட்டுவதற்கு அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தார்.

சீசருக்கு வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம், ‘சீசரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள் என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்றார்.

இயேசு கூறிய இந்த வார்த்தைகள் பல வடிவங்களில் பலச் சூழல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீசரையும், கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.
மனித வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு மதச்சாயங்கள் பூசப்படுவதையும் நாம் இப்போது அதிக அளவில் கண்டு வருகிறோம்.
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களை மேடைகளில் பறைசாற்றும் அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மதத் தலைவர்களைச் சந்திப்பது, மத வழிபாடுகளில் ஈடுபடுவது என்று தங்கள் நிறத்தை மாற்றுவதைக் காண்கிறோம்.
அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இறைவனின் துணையை, ஆசீரை நாடிச் செல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இறைவனையும், இறைவனின் அடையாளங்கள், திருத்தலங்கள் ஆகியவற்றையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள் ஆண்டவனின் சன்னதியில் பணிவோடு நுழைகின்றனர். பிறகு, அந்த ஆண்டவனைப் பீடங்களில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, தங்களையே பீடங்களில் ஏற்றிக் கொள்கின்றனர். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை.

இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது வரலாற்றின் ஒருபக்கம் என்றால், மதங்களில், மதநிறுவனங்களில் அரசியலைக் கலப்பது வரலாற்றின் மறுபக்கம்.  மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், எங்கிருந்தோ வந்த இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல்வாதிகளின் நாடகங்களையும் விஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.
மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல், கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?

இறுதியாக, இஞ்ஞாயிறன்று இரு காரணங்கள் நம்மைக் கொண்டாட அழைக்கின்றன. இந்திய மண்ணில் காலடித் தடம் பதித்த முதல் திருத்தந்தை என்ற புகழுக்குரியவர், திருத்தந்தை 6ம் பால் அவர்கள்.
புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் துவக்கிவைத்த 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை திருத்தந்தை 6ம் பால் அவர்கள் வெற்றிகரமான நிறைவுக்குக் கொணர்ந்தார். 200 ஆண்டுகளுக்கும் மேலாக, வத்திக்கானையும், உரோம் நகரையும் விட்டு வெளியேறாமல் திருத்தந்தையர் வாழந்துவந்த பாரம்பரியத்தை உடைத்து, திருத்தந்தை 6ம் பால் அவர்கள் உலகின் பல நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டார்.
அவர் 1964ம் ஆண்டு, மும்பை மாநகரில் நடைபெற்ற அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு வருகை தந்ததன் பொன்விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறோம். இந்தப் பொன்விழா ஆண்டில், அவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு முத்திப்பேறு பெற்றவராக உயர்த்துகிறார் என்ற மகிழ்வானச் செய்தியை நாம் கொண்டாடுகிறோம்.
கடந்த இரு வாரங்களாக குடும்பங்களை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றம் இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வருகிறது. குடும்பத்தினர், பொது நிலையினர் திருஅவையின் உயிர்நாடிகள் என்பதை உணர்வதற்கு இந்த மாமன்றம் வழியே இறைவன் அளித்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லி, இந்த உண்மையையும் நாம் கொண்டாடுவோம். ஆம்...குடும்பங்களும், பொது நிலையினரும் திருஅவையின் உயிர்நாடிகள்!