03 June, 2012

Celebrating God’s Family கடவுள் குடும்பம் கொண்டாட்டம்




Today we celebrate God’s Family Feast… the Feast of the Most Holy Trinity. From tomorrow we begin the ‘Ordinary Time’ of the Liturgical Cycle. This implies that we have been having a ‘special time’ till now in our liturgical cycle. Yes, right from the start of the Lenten season through the Easter Season we have had a special time. Today’s feast, the Feast of the Most Holy Trinity, is like a crowning event of this special season. This crowning feast does not warm our hearts like, say, the feast of Christmas or Easter. This feast seems more ‘intellectual’. When I think of the Feast of the Most Holy Trinity, I get more of the image of an international conference rather than a festive gathering.

The Holy Trinity is a mystery to be contemplated than a concept to be discussed. Most of us remember a very old and much-repeated story about St. Augustine, one of the intellectual giants of the Church. He was walking by the seashore one day, attempting to conceive of an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, pouring seawater from a shell into a small hole in the sand. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson. Later, Augustine wrote: "You see the Trinity if you see love."… This means that we can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God." (http://www.cbcisite.com)

Many of the deep realities of life and the world are simply gifts to be admired and mysteries to be contemplated than ideas to be dissected and labelled into packages. As children each of us has the capacity to ‘contemplate’. Unfortunately, as we grow older, we are taught other forms of thinking that narrow down our capacity to fly in fantasies and dreams. Here is a story that tells us how children are far superior in their thinking.
An English teacher of a 21-sophomore high school class put a small chalk dot on the blackboard. He then asked the class what it was. A few seconds passed and then someone said, "That is a chalk dot on the blackboard." The rest of the class seemed relieved that the obvious had been stated, and no one else had anything to say. "I'm surprised at you," the teacher told the class. "I did the same exercise yesterday with a group of kindergartners and they thought of 50 different things the chalk mark could be: an owl's eye, a cigar butt, the top of a telephone pole, a star, a pebble, a squashed bug, a rotten egg, a bird's eye, and so on." The older students had learned how to find a right answer, but had lost the ability to look for more than one right answer. (http://www.cbcisite.com)

Some of us, somehow, maintain a streak of the ‘child’ in us all our lives. An incident from the life of Franklin D. Roosevelt (FDR), the well-known president of the U.S., is worth remembering here. FDR and one of his close friends, Bernard Baruch, talked late into the night one evening at the White House. At last, President Roosevelt suggested that they go out into the Rose Garden and look at the stars before going to bed. They went out and looked into the sky for several minutes, peering at a nebula with thousands of stars. Then the President said, "All right, I think we feel small enough now to go in and go to sleep." (http://www.cbcisite.com
When I read this story of FDR, I was imagining that as FDR stood in the garden looking at the stars, he may have mumbled ‘Twinkle, twinkle little star’ within himself. Perhaps what FDR was doing must have seemed ‘childish’ to his friend Bernard. But I feel that this childish streak in FDR kept him sane in spite of being the president of the U.S. Being the President of the U.S. can easily turn an individual into a megalomaniac. FDR must have stayed sane by seeing himself in the proper perspective. The ‘child’ in him helped maintain that sanity.

I guess this is why Jesus spoke of all of us gaining entry into the Kingdom only by becoming children. In his own inimitable style, Jesus introduced the concept of the Holy Trinity to the Jews and to us. When He spoke of God in terms of relationships, many were surprised and many other ‘grown-up, important persons’ were furious. The God of the Israelites was ONLY ONE. Jesus did not change this fundamental idea, but presented this ONE GOD as a THREE-IN-ONE GOD. Basically what Jesus wanted to tell his listeners (and us) was that God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world like that of certain Buddhist monastic traditions where the quest for holiness means withdrawal to the Himalayas away from contact with other people and society. (http://www.munachi.com/a/atrnty.html)

This day calls us to examine our attitude to relationships. As we celebrate the Feast of the Holy Trinity, our attention turns to Milan, Italy, where the Seventh World Meeting of Families is in full swing. As I go to the blog, the Holy Father is in Milan to conclude this international meeting with a Mass on Sunday. Representatives from more than 150 countries have come together to participate in this world meeting which is conducted with the central theme: THE FAMILY: WORK AND CELEBRATION.
Family, Work and Celebration are three aspects of human life which go hand in hand… almost like a ‘trinity’. When one of them suffers the other two automatically suffer. We are sadly aware that for the past few years due to the economic slowdown and the insecurity of jobs, ‘work’ has become a driving force for millions. Due to this, family life has suffered enormous damages.
When talking of families, we are sadly made aware of the present status of the Human Family and the World Family. We feel very uneasy to use these terms, since we are painfully aware that the Human Family is in tatters due to many factors… factions and fanaticism.

We began our reflections with how we can learn from children or learn from the child within each of us. We now turn our attention to children around the world. To build a secure future for our children, we need to build up secure relationships in our families. Children who grow up in such a secure environment, hopefully, will make the dream of the ‘Human Family’ become a reality! May the words of Moses, given in the Second Reading today, stay with us as a blessing: “Therefore you shall keep his statutes and his commandments, which I command you this day, that it may go well with you, and with your children after you, and that you may prolong your days in the land which the LORD your God gives you for ever.” (Deuteronomy 4: 40)


கல்லூரி ஒன்றில் வகுப்பு ஆரம்பமானது. ஆசிரியர் கரும்பலகையில் ஒரு புள்ளியை வரைந்தார். பின்னர் மாணவர்களிடம், "இது என்ன?" என்று கேட்டார். மாணவர்கள் சிரித்தனர். ஒருவர் எழுந்து, "அது ஒரு புள்ளி" என்றார். ஆசிரியர், "அவ்வளவுதானா?" என்று கேட்டதும், மாணவர் கொஞ்சம் சிந்தித்தார். பின்னர், "ஓகே, அது கரும்பலகையில் சாக்பீசால் வைக்கப்பட்ட ஒரு புள்ளி" என்று கூறினார். தான் சரியான, தெளிவான பதிலைச் சொல்லிவிட்டதாக மாணவர் பெருமையுடன் புன்னகைத்தார். ஆசிரியர் மாணவர்களிடம், "இது மிகவும் சரியான, பொருத்தமான பதில். ஆனால், நேற்று இதே கேள்வியை நான் குழந்தைகள் வகுப்பில் கேட்டேன். உடனே அங்கிருந்த குழந்தைகள் 'இது ஒரு சிட்டுக் குருவியின் கண், மழைத்துளி, விண்மீன், இரவில் தூரத்தில் வரும் இரயிலின் முன் விளக்கு' என்று 50க்கும் அதிகமான பதில்களைச் சொன்னார்கள்" என்றார். ஆசிரியர் இவ்வாறு சொன்னதும், கல்லூரி மாணவர்களிடையே அமைதி நிலவியது. ஆசிரியர் வைத்த புள்ளிக்கு மிகச் சரியான, பொருத்தமான பதிலைமட்டுமே தங்களால் தர முடிந்தது. ஆனால், குழந்தைகளோ அந்தப் புள்ளியைத் தாண்டி, பொருளுள்ள பதில்களைத் தந்தனர் என்பதை அந்த மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

குழந்தைகளுடன் பேசியிருக்கிறோம், பழகியிருக்கிறோம். நாமும் குழந்தைகளாய் இருந்திருக்கிறோம். குழந்தைகளின் அறிவுக்கூர்மை, கற்பனைத்திறன், உண்மைகளை அவர்கள் பார்க்கும் கண்ணோட்டம், பல நேரங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, குழந்தைகளைப்போல நமது எண்ணங்களை வளர்க்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இந்த ஞாயிறு, மூவொரு கடவுள் பெருவிழா. இந்த ஞாயிறு, இத்தாலியின் மிலான் நகரில் அகில உலக குடும்ப மாநாடு நிறைவடைகிறது. மூவொரு இறைவனையும், குடும்பங்களையும் சிந்திக்கும் இன்று, குழந்தைகளுக்காக நமது சிறப்பான சிந்தனைகளையும், செபங்களையும் எழுப்புவோம்.

மூவொரு இறைவன் என்றதும், நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நிகழ்ந்த இந்தக் கதையில், இறையியல் அறிஞரான அகுஸ்தின் ஒரு குழந்தையிடம் பாடங்களைக் கற்றார். நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகுஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக்கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் சிறியதொரு சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின் சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அந்தச் சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு அளவுகடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.
அன்று அகுஸ்தின் அக்குழந்தையிடம் கற்றுக் கொண்டது மூவொரு கடவுளைப் பற்றிய உண்மை அல்ல. தன்னைப் பற்றிய உண்மை. குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம் அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. வாழ்க்கை என்ற பள்ளியில் நாம் பணிவுடன் காலடி எடுத்துவைத்தால், நம்மைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு இந்தப் பணிவு இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள் பல ஆழமான உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.

குழந்தைகள் வழியாக நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன. ஆனால், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டியது பெரியவர்களே என்று நாம் தீர்மானித்துவிட்டதால், குழந்தைகளிடமிருந்து வரும் மிக அருமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம். அவ்வப்போது நமக்குள் வாழும் குழந்தை மனங்களுக்குச் செவிசாய்த்தாலே பல அற்புதமானப் பாடங்களைப் பயிலமுடியும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக இருந்த Franklin D. Roosevelt பற்றி சொல்லப்படும் ஒரு கதை இங்கு உதவியாக இருக்கும். Rooseveltம் அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruchம் ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச் செல்வதற்குமுன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள், நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் இருவரும் தோட்டத்தில் நின்று வானத்தில் கண்சிமிட்டிய விண்மீன்களை ஒரு சில நிமிடங்கள் அமைதியாகப் பார்த்தனர். பின்னர் Roosevelt நண்பரிடம், "நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. வாருங்கள் உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.
அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் மூலம் தனது உண்மை நிலையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், Roosevelt செய்தது குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரிகிறது. ஒருவேளை, அந்த விண்மீன்களை அமைதியாகப் பார்த்தபோது, Rooseveltன் மனதில் ‘Twinkle twinkle little star’ என்ற குழந்தைகள் பாடலும் ஒலித்திருக்கலாம். குழந்தையின் மன நிலையோடு Franklin Roosevelt உறங்கச்சென்றது அவர் தனக்குத் தானே சொல்லித்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகள், அடக்கிவிட முடியும் என்ற கனவுகள் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு. நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படியிருக்க, நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதுதானே அந்தப் பாடம்?

உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நல்லதொரு தருணம். மே மாதம் 30ம் தேதி இத்தாலியின் மிலான் நகரில் ஆரம்பமான அகில உலகக் குடும்ப மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடைகிறது. நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குடும்பங்களையும், இவ்வுலகம் என்ற குடும்பத்தையும் சிந்திப்பதற்கு இந்த மாநாடு அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் ஒரு குடும்பம் என்று அவ்வப்போது கூறிவருகிறோம். பரந்து விரிந்த மனித சமுதாயத்தை ஒரு குடும்பம் என்று சொல்வதற்கே இன்று பயமாக உள்ளது. உலகம் என்ற குடும்பத்தில் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் வெறுப்பு, வன்முறை, போர், கலவரம்... இவைகளை நினைத்துப்பார்த்தால் விரக்தியில் உறைந்துபோகிறோம்.
உலகம் என்ற குடும்பம் உறுதியாக அமையவேண்டும் என்றால், நமது ஒவ்வொருவரின் குடும்பங்களும் உறவில் உறுதி பெறவேண்டும். "The Family: Work and Celebration" அதாவது, 'குடும்பம்: வேலையும் கொண்டாட்டமும்' என்ற மையக்கருத்தில் அகில உலகக் குடும்ப மாநாடு நடைபெற்றது. குடும்பம், வேலை, கொண்டாட்டம் என்ற இந்த மூன்று அம்சங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த எண்ணங்கள்... ஏறத்தாழ மூவொரு இறைவனைப்போல. வேலையும் கொண்டாட்டமும் சரியான அளவில் இணையும் குடும்பங்கள், உறவில் வளரும், முழுமையாகும். 'வேலை' என்ற பாரத்தால், எத்தனையோ குடும்பங்கள் சிதைந்து வருவதை நாம் அறிவோம். அதிலும் சிறப்பாக, கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதாரச் சரிவு, வேலையின்மை என்ற பிரச்சனைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவை நம் குடும்பங்களே.

உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, போலியான வெளி கொண்டாட்டங்களில் அதிகம் ஈடுபடுவது என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு கடவுள் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.
நம் ஒவ்வொருவரின் குடும்பங்களிலும் வேலையும், கொண்டாட்டமும் நலமான அளவில் இணைந்து நம் குடும்ப உறவுகளைப் பலப்படுத்தவேண்டும் என்று மன்றாடுவோம். குடும்பங்கள் சரிவர அமைந்தால், குழந்தைகள் சரிவர வளர முடியும். இவ்விதம் வளரும் குழந்தைகள் உருவாக்கும் நாளைய உலகம் நல்லதொரு குடும்பமாக அமைய வாய்ப்புக்கள் உண்டு.
நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது அசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
இணைச்சட்டம் 4: 40
நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.


27 May, 2012

Happy Birthday, Mother the Church தாய் திருச்சபையின் பிறந்த நாள்


Outpouring of the Spirit


Pentecost. The very word spells magic and mystery along with images of tongues of fire as well as ‘gift of tongues’. But, the word simply means the fiftieth (day). Most often in life the greatest and the most profound truths are enveloped in very simple things. This is more true in the life of Christ and the Church than anywhere else. A quick look at the last 50 days will show us that everything around Jesus was simple but steeped in mystery.
In the last 50 days we have had quite a few festivals, celebrations starting from Easter. We celebrated Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. There are a few more celebrations lined up… The Feasts of the Holy Trinity, The Body and Blood of Christ, and the Sacred Heart of Jesus… Whenever we use the word ‘celebrate’ we do have certain notions about it. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

My impish mind thought of a remote possibility… What if the first Easter was given to an ‘event manager’? I leave it to your imagination! According to the present ‘worldly standards’, the first Easter should have taken place in full splendour… with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event, in every sense of the word!
The first Ascension, once again, was a very subdued affair with Jesus spending quiet moments with the disciples on a hillock outside the city before being taken up into heaven. The first Pentecost too was simply the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples gathered in prayer in the ‘upper room’. These events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world.
The definition of ‘celebration’ according to the commercial world is pretty clear… Grand, Glamorous, Great, Gigantic…. I was simply trying my luck with the letter G. There are hundreds of other words to define how these celebrations are defined and delivered by the commercial world. Ask an ‘event manager’! Even if there is nothing to celebrate about, the commercial world would invent reasons to celebrate. The frills are more important than the core in these celebrations. In most of these celebrations ‘what’ is celebrated is less important than ‘how’ it is celebrated. When I think of these commercial celebrations, my impish mind (once again) thinks of the famous line from Macbeth: ‘sound and fury signifying nothing’. Such celebrations are fleeting, leaving no lasting impact on the individual. Perhaps it leaves one empty!

Jesus and his disciples defined ‘celebrations’ in a totally different way. They were more interested in the ‘what’ of the event than the ‘how’ of the event. This ‘what’ left a lasting, life-long impression on the disciples. This ‘what’ has left a deep impression on human history for the past twenty centuries.
It would do us a world of good to reflect on the ‘what’ of the Feast of Pentecost. This feast is also the Birthday of the Church. Any child coming into the world raises lots of expectations in others. The ‘first-things’ done by a child will confirm others in their expectations. The expectations of the new-born Church are revealed in what happened on that day in Jerusalem. (Acts 2: 1-11)
What did the new-born child, the Church do on her Birthday? She unified people coming from many countries and regions. This is typical of many child-births in families. A new-born child tends to bring reconciliation in most families.
Let me stretch the metaphor of the new-born infant a bit more. We don’t need too much of a brain to understand the ‘language’ of a child. In fact we understand the language of an infant with our hearts than with our brains. Something similar happened with the new born Church. When She ‘spoke’ through the disciples everyone understood! The Acts of the Apostles in today’s first reading gives a list of those people who understood the disciples:
 And they were amazed and wondered, saying, "Are not all these who are speaking Galileans? And how is it that we hear, each of us in his own native language? Par'thians and Medes and E'lamites and residents of Mesopota'mia, Judea and Cappado'cia, Pontus and Asia, Phryg'ia and Pamphyl'ia, Egypt and the parts of Libya belonging to Cyre'ne, and visitors from Rome, both Jews and proselytes, Cretans and Arabians, we hear them telling in our own tongues the mighty works of God." (Acts 2: 7-11)

A bunch of Galileans spoke and people from many other nations and regions understood them. The last line of this passage gives us another clue as to how all these ‘different’ people understood what the Galileans spoke… The Galileans spoke about ‘the mighty works of God’. The last line also stresses the ‘hearing’ part of the message more than the speaking part. ‘We hear them telling in our own tongues the mighty works of God.’
To speak of and to hear about the mighty works of God, one does not require intelligent brains but an intuitive heart. The disciples spoke from their heart which was on fire and those who heard them were on fire too since they listened with their hearts. For this to happen, language – a tool invented by human beings – cannot be a block.

So, to come back to the ‘what’ of this Feast… It is the Birthday of the new-born Church. This Birthday brought together many nations, regions and tribes thus making it clear that divisions invented by human intelligence will break down in front of hearts united by the fire of the Spirit!

As a parting thought we can carry the words of St Paul given to us in the second reading today:
But I say, walk by the Spirit, and do not gratify the desires of the flesh…But the fruit of the Spirit is love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness, self-control; against such there is no law. And those who belong to Christ Jesus have crucified the flesh with its passions and desires. If we live by the Spirit, let us also walk by the Spirit.
(Galatians 5: 16, 22-25)
News-Pentecost-Icon


உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள்என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று நாம் கொண்டாடி மகிழ வரிசையாக பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா, கிறிஸ்துவின் திரு இருதயத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, அதிகமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் அமைதியாக நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

இன்றைய உலக வழக்கின்படி விழாக்கள் எப்படி கொண்டாடப்படவேண்டும் என்ற இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதை விட கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்த நாள் கேட்டால்கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்குப் பாடங்களையும் சொல்லித்தந்தனர் இயேசுவும் அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் கருவிகளாக அமையும். உள்ளத்தின் ஆழத்தில் நிறைவைத் தரும் மகிழ்வாக நம்முடன் தங்கும்.
இந்தப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் ஆகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனிகளைத் தந்தவண்ணம் உள்ளன.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் பெருவிழாவை நாம் திருஅவை பிறந்தநாள் என்றும் அழைக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.
திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார் தீ நாக்குகளாய் இறங்கிவந்த அனுபவம் தனியொரு மனிதருக்கு காட்டின் நடுவில், அல்லது மலை உச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில் நெருப்பு நாவுகள் வடிவில் தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு இறை அனுபவம் கிடைக்கும் என்று ஏறத்தாழ எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையில் தனிப்பட்ட இந்த அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும் ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதைத் திருஅவையின் பிறந்தநாள் நமக்குச் சொல்லித் தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. அப்படியே நாம் இணைந்து வருவது வெறும் பொழுதுபோக்கும் செயல் என்ற எண்ணமும் பெருகி வருகின்றது. பொதுவாகவே, நாம் வாழும் இன்றைய உலகம் நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காண முடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. நம்மைச்சுற்றி வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால், அதே வேளையில் இந்தக் கருவிகள் நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது இந்தக் கருவிகளின் தோழமையில் நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா என்ற கேள்விகள் எழுகின்றன. நம்மைச் சுற்றி தொடர்புசாதனக் கருவிகளைப் பெருக்கிக் கொண்டால், நாம் ஒவ்வொருவரும் தனித் தனி கோட்டைகள் கட்டிக்கொண்டு அங்கேயே தங்கி விட முடியும். இக்கோட்டைகளிலிருந்து கருவிகள் மூலம் பிறரைப் பார்க்க முடியும், பேச முடியும். தொடவும் முடியும்.... ஆனால், இவை அனைத்தும் கருவிகளின் துணையுடன் மட்டுமே நிகழும் அனுபவங்கள். கருவிகள் இல்லாமல் தொடர்புகள் இல்லை என்ற அளவு கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்தில் தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது ஒவ்வொருவரும் தனித்து உணரும் கற்பனை அனுபவம் அல்ல; குழுவாக, குடும்பமாக நாம் உணரும் ஓர் அனுபவமே திருஅவை.

திருஅவை என்ற குழந்தை பிறந்ததும், அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் என்ன? திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கும் வரிகள் இவை: "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்." (திருத்தூதர் பணிகள் 2: 4) திருஅவை என்ற குழந்தை பிறந்ததும் பேசத் துவங்கியது; அதுவும், பல்வேறு மொழிகளில் பேசத் துவங்கியது. இக்குழந்தை பிறந்ததும் எருசலேம் நகரில் நிகழ்ந்ததைத் திருத்தூதர் பணிகள் இவ்வாறு சொல்கிறது:

திருத்தூதர் பணிகள் 2: 5-11
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!என்றனர்.

பேசியது கலிலேயர்கள்... அவர்கள் பேசியது... கடவுளின் மாபெரும் செயல்கள். பேசும் மொழி எதுவாக இருந்தாலும், கடவுளைப் பற்றி, அவரது செயல்களைப் பற்றிப் பேசும்போது மொழி என்ற குறுகிய எல்லைகள் கரைந்து விடுகின்றன. மொழி என்பது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல, வெறும் சொல்திறமையால் மட்டும் பேசிவிட முடியாது. அதையும் கடந்து உள்ளங்கள் பேசும்போது மொழி தேவையும் இல்லை என்பதை நாம் அறிவோம்.

தூய ஆவியாரின் வருகையால் பிறந்த திருஅவை, பிறந்ததும் உலகிற்குச் சொல்லித் தந்த அழகான பாடங்களில் ஒன்று... மனித இதயங்கள் இணைந்து வரும்போது, மனிதர்கள் உருவாக்கிய மொழி என்ற எல்லை தேவையில்லை. அதுவும், நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை என்பதையும் தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.
தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால் அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25
தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.


20 May, 2012

Proclaim the Good News… நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்


Ascension - Rembrandt 1636



Farewell is not a permanent parting. I know that in English and Tamil farewell or goodbye is expressed in terms of temporary parting. In effect we say ‘see you later’! I guess this is true in many other languages. Jesus bids farewell to his disciples on the day of the Ascension. Fr Munachi E. Ezeogu begins his reflections on this Feast with a lovely thought:  
The Gospels contain many parables of a master who sets out on a long journey and gives his servants charge of his estate until his return. In the feast of the Ascension of the Lord the parable becomes reality. Jesus departs to his heavenly Father and leaves his disciples in charge of the affairs of his kingdom till his return in glory. Each of the Gospels we have, ends with a scene in which Jesus finally takes leave of his disciples. These farewell scenes focus not on describing the event in detail but on the last words that Jesus leaves with his disciples. In fact, the very fact of a bodily ascension of Jesus into heaven is described only by Luke.

In the Gospels as well in the Acts of the Apostles there are different versions of where and when the Ascension took place. Was it in Jerusalem or in Galilee? Was it forty days later or soon after the Resurrection? These are unanswered questions. The Evangelists and the author of Acts of the Apostles were not interested in the historical details of the event of the Ascension. They were more interested in the message – the Mission – entrusted to the disciples by Jesus. Hence, dear Friends, we shall focus our attention on the farewell message of Jesus.
This message, like many other statements of Jesus, has been interpreted by Christians in very different (I am afraid, contrary) ways. The opening statement of Jesus given in today’s Gospel goes like this: Go into all the world and proclaim the good news to the whole creation. (Mark 16:15)

How are we to ‘proclaim the good news’? Many interpretations have been given to this statement and, accordingly, many methods of this ‘proclamation’ have been adopted. Here is an anecdote shared by Rebecca Pippert, the author of ‘Out of the Salt Shaker: Into the World’: She tells of a time she was sitting in her car at a traffic light with her window rolled down. As the light turned green a car drove by and its occupant threw something into her car hitting her on the cheek. It didn't hurt but she was so startled that she pulled over immediately. When she unrolled the paper, she discovered it was a gospel tract. She says she was the apparent victim of what she refers to as "torpedo evangelism." I'm sure the torpedoer meant well. At least I hope so, but he or she did the wrong thing for the right reason in the wrong way. We can engage people in conversation about their faith and their relationship with God in a non-judgmental manner. We can encourage. We can invite. We can offer counsel. But we leave the hard work, the heart work, up to Jesus and the Holy Spirit. You see, we are not on some sort of spiritual mugging mission.

To correct this aggressive mode of and other false beliefs about how to ‘proclaim the good news’, we need to embrace some basic biblical principles that make it possible for us to lead others to the same personal faith in Christ that we enjoy. They are suggested by Bill Hybels and Mark Mittelberg in their book, Becoming a Contagious Christian... (http://www.redlandbaptist.org/sermons/sermon20011007.php) I have not read this book, but when I browsed the internet for this book, what caught my attention was the cover-page illustration of this book… a row of match sticks with one of them just having caught fire. One can easily imagine what would happen to the other match sticks. Given the fact that any symbol is limited, this illustration gives me some idea as to what would be the effect of a ‘Contagious Christian’ in a group.

Contagious Christians like St Francis of Assisi, Bl Mother Teresa have ‘proclaimed the good news’ without being aggressive with their eloquence. Their life and actions spoke louder than words. They were ‘walking sermons’ all their lives. Here is an anecdote about Dr Albert Schweitzer:
Reporters and city officials gathered at a Chicago railroad station one afternoon in 1953. The person they were meeting was the 1952 Nobel Peace Prize winner. A few minutes after the train came to a stop, a giant of a man – six feet four inches – with bushy hair and a large moustache stepped from the train. Cameras flashed. City officials approached him with hands outstretched. Various people began telling him how honored they were to meet him.
The man politely thanked them and then, looking over their heads, asked if he could be excused for a moment. He quickly walked through the crowd until he reached the side of an elderly black woman who was struggling with two large suitcases. He picked up the bags and with a smile, escorted the woman to a bus. After helping her aboard, he wished her a safe journey. As he returned to the greeting party he apologized, “Sorry to have kept you waiting.”
The man was Dr. Albert Schweitzer, the famous missionary doctor who had spent his life helping the poor in Africa. In response to Schweitzer’s action, one member of the reception committee said with great admiration to the reporter standing next to him, “That’s the first time I ever saw a sermon walking.”
It is more interesting to note that Albert was a famous preacher in his younger days. So, he must have known the difference between ‘proclaiming the good news’ through words and through life. We know that Jesus did not choose his disciples to be eloquent preachers but his true witnesses.

There is an ancient legend about Jesus’ ascension into heaven. He is met by the angel Gabriel who asks him, "Now that your work is finished, what plans have you made to ensure that the truth that you brought to earth will spread throughout the world?"
Jesus answered, "I have called some fishermen and tax-collectors to walk along with me as I did my Father’s will."
"Yes, I know about them," said Gabriel, "but what other plans have you made?"
Jesus replied, "I taught Peter, James and John about the kingdom of God; I taught Thomas about faith; and all of them were with me as I healed and preached to the multitudes."
Gabriel replied. "But you know how unreliable that lot was. Surely you must have other plans to make sure your work was not in vain."
Jesus quietly replied to Gabriel "I have no other plans. I am depending on them!"

Coming back to the farewell message of Jesus given in today’s gospel, we see that Jesus spells out his idea of this proclamation. The mission of proclaiming the good news is accompanied by a list of signs given by Jesus: And these signs will accompany those who believe: by using my name they will cast out demons; they will speak in new tongues; they will pick up snakes in their hands, and if they drink any deadly thing, it will not hurt them; they will lay their hands on the sick, and they will recover. (Mark 16:17-18)
Healing the world, driving away evil from the world and speaking a new language… a language of love are sure signs that the good news is proclaimed. As a result of such a proclamation, even deadly things will turn out to be harmless! These words of Jesus remind us of the prophecy of Isaiah: The infant will play near the hole of the cobra, and the young child put his hand into the viper's nest. (Isaiah 11:8) Chapter 11 of Isaiah talks of a new world where there will be neither harm nor violence. The whole chapter paints a fantasy world… but a world that is possible when the Good News is proclaimed by our lives.


Rebecca Pippert என்பவர் ஒருநாள் தன் காரில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் நான்கு சாலை சந்திப்பு ஒன்றில் சிவப்பு விளக்கு மாறுவதற்கு அவர் காத்திருந்தார். மென்மையாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்ததால், ரெபெக்கா கார் கண்ணாடியை இறக்கிவிட்டிருந்தார். அப்போது அருகில் ஒரு கார் வந்து நின்றது. சாலை விளக்கு சிவப்பிலிருந்து பச்சையாக மாறிய அத்தருணத்தில், அருகில் வந்து நின்ற காரிலிருந்து ரெபெக்காவை நோக்கி ஏதோ ஒரு பொருளை எறிந்துவிட்டு, அந்தக் காரில் இருந்தவர்கள் பறந்து சென்றனர். எறிந்த பொருள் ரெபெக்காவின் முகத்தைத் தாக்கியது, மடியில் விழுந்தது. அதிர்ந்துபோன ரெபெக்கா, காரை நிறுத்திவிட்டு, மடியில் விழுந்த பொருள் என்னவென்று பார்த்தார். நற்செய்தி எண்ணங்கள் அடங்கிய ஒரு சிறு நூல் அது.
மடியில் விழுந்தது நற்செய்தி எண்ணங்கள் என்பது ரெபெக்காவிற்கு மிகிழ்வைத் தந்தது. அந்த நூலை எறிந்தவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் செயல்பட்டிருக்கவேண்டும் என்பதையும் ரெபெக்கா உணர்ந்தார். இருந்தாலும், அந்த நற்செய்தி தன் முகத்தில் அறையும்படி தன்னை வந்து சேரவேண்டுமா என்ற கேள்வியும் அவர் மனதில் எழுந்தது. நற்செய்தியால் மற்றவர்களைத் தாக்கும் இந்த வழியை “Torpedo Evangelism” அதாவது, "தாக்குதல் வழி நற்செய்தி பரப்புதல்" என்று Rebecca Pippert தான் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார். "உப்புக் குப்பியிலிருந்து உலகிற்கு" (Out of the Salt Shaker: Into the World) என்ற அந்நூலில் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் வழிகளைப்பற்றி ரெபெக்கா எழுதியுள்ளார்.

இயேசுவின் விண்ணேற்ற விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். விண்ணேற்றத்திற்கு முன்னதாக தன் சீடர்களை இறுதிமுறையாகச் சந்தித்த இயேசு அவர்களிடம் விட்டுச்சென்ற செய்தியை மாற்கு நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
மாற்கு நற்செய்தி 16: 15-18
அக்காலத்தில், இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்என்று கூறினார்.

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று இயேசு கூறிய வார்த்தைகள் கிறிஸ்தவ வரலாற்றில் பலவழிகளில் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நன்மைகள் விளைந்துள்ளன. பிரச்சனைகளும் எழுந்துள்ளன. அசிசி நகர் புனித பிரான்சிஸ் போல, நற்செய்தியைத் தங்கள் வாழ்வாக மாற்றிய புனிதர்கள் பலர் உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினார்கள். வார்த்தைகள் அதிகமின்றி தங்கள் வாழ்க்கையால் அவர்கள் பறைசாற்றிய நற்செய்தியால் நன்மைகள் விளைந்தன. ரெபெக்கா தன் கார் பயணத்தில் சந்தித்ததைப் போல, சக்தி வாய்ந்த தாக்கும் வழிகள் மூலம் நற்செய்தி பறைசாற்றப்பட்டபோது, பிரச்சனைகளும் எழுந்துள்ளன.

நற்செய்தியை யார் பறைசாற்றுவது? அதை எப்படி பறைசாற்றுவது? என்ற கேள்விகள் கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி எழும் கேள்விகள். பொதுவாக, நற்செய்தியைப்  பறைசாற்றுதல் என்றதும், கோவில்களில், மேடைகளில் முழங்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த மறையுரையாக இதை நாம் நோக்குகிறோம். இந்தக் கோணத்தில், குருக்கள், துறவியர், என்ற ஒரு குறுகிய குழுவுக்கு இந்தப் பணியை ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையை ஆழமாக சிந்திக்கும்போது, நமது எண்ணங்கள் முழுமையான எண்ணங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறிய அதே மூச்சில், அந்தப் பறைசாற்றுதலின் பல்வேறு தாக்கங்களையும் கூறுகின்றார். நற்செய்தியில் நம்பிக்கை கொண்டவர்கள் பேய்களை ஓட்டுவர், உடல்நலமற்றோரைக் குணமாக்குவார், பாம்போ, கொடிய நஞ்சோ அவர்கள் உயிரைப் பறிக்காது என்ற அடையாளங்களை இணைத்துக் கூறுகிறார்.
மேடைகளில், கோவில்களில் முழங்கப்படுவதோடு நற்செய்தியின் பறைசாற்றுதல் நின்று விடுவதில்லை. குணமளிக்கும் பணிகளில், தீய சக்திகளை உலகினின்று விரட்டியடிக்கும் பணிகளில் இந்தப் பறைசாற்றுதலை நாம் உணர முடியும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.

வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், Dr. Albert Schweitzerம் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியொன்று இப்போது என் நினைவை நிறைக்கிறது. இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு உலக அமைதிக்கான நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு இவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்கள், பெரும் தலைவர்கள் என்று பலர் அவர் வரவிருந்த இரயில் நடைமேடையில் காத்திருந்தனர். Albert இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. Albert தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு  சென்றார். அந்த நடைமேடையில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி தவித்துக் கொண்டிருந்த ஒரு வயதான கறுப்பின பெண்மணிக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். பின்னர் அவருக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார் Albert. இதைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.

Albert Schweitzer 25 வயது இளைஞனாக இருந்தபோது மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆனால், தனது 30வது வயதில் அவர் மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு மருத்துவப் பணிகளைப் பல ஆண்டுகள் செய்துவந்தார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற Albert, தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார். Albert போன்ற நற்செய்திப் பணியாளர்களின் பறைசாற்றுதலே இந்த உலகில் நற்செய்தியை இருபது நூற்றாண்டுகளாய் அதிகமாய், ஆழமாய் பரப்பி வந்துள்ளது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப் பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல் அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடையப் பணியைத் தொடரும்படி ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா இவர்களைப் பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கும், அப்படித்தானே?" என்று கேட்டார்.
இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பணியை இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.

இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில் நடமாடி வருகிறது என்றால், இன்றும் அச்செய்தி அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நற்செய்தியைத் தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு போதித்தவர்களோ, அவர்கள் பயன்படுத்திய வழிகளோ அல்ல... நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.
இயேசுவும்  அவர் தந்த நற்செய்தியும் என்ற மையங்களிலிருந்து விலகி, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவர் மேற்கொள்ளும் வழிகள் என்று எப்போதெல்லாம் நமது சிந்தனைகள் தடம் புரண்டனவோ, அப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை கிறிஸ்தவ வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லித்தருகிறது.
வார்த்தைகள் அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், Dr. Albert Schweitzer, அருளாளர் அன்னை தெரேசா என்று பல்லாயிரம் நற்செய்திப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். வாழ்வாக மாறிய இந்த நற்செய்திகள் நமது மத்தியில் உலவும்போது, நஞ்சாகப் பரவிவரும் தீய சக்திகள் நம்மை அழித்துவிட முடியாது என்பதை மனதார நம்புவோம்.