09 June, 2013

Channels of life… to conquer death மனது வைத்தால், மரணத்தை வெல்லமுடியும்


Jesus raises the widow’s son

‘Walking’ especially ‘walking together’ is a favourite theme of Pope Francis. He has talked about it quite a few times. Three days back (June 7, Friday) when the Holy Father was speaking to students from the Jesuit institutions in Italy and Albania, he said: “To walk is an art. It is the art of looking at the horizon, thinking about where I want to go but also enduring the fatigue. And many times, the walk is difficult, it is not easy… There is darkness… even days of failure… one falls… But always think of this: do not be afraid of failure. Do not be afraid of falling. In the art of walking, what is important is not avoiding the fall but not remaining fallen," he said. "Get up quickly, continue on, and go. … But it is also terrible to walk alone, terrible and boring. Walking in community with friends, with those who love us, this helps us and helps us get to the end.”
We have ‘walked’ more than half way in the Year of Faith. The Year of Faith has been good to us on a personal level and as a community of believers as well. We thank God specially for having given us the gift of Pope Francis during this Year of Faith. On November 24th, the Feast of Christ the King, this Year of Faith will come to a close. From this Sunday till the Sunday of the Feast of Christ the King, we shall pass through 25 Sundays. On all these Sundays we shall be listening to the Gospel of Luke. I consider this as a special gift during this Year of Faith, because the Gospel of Luke is a great help to strengthen our faith, since Christ is presented in the most human and simple way in this Gospel. For this reason, this Gospel is called the ‘Gospel of Mercy’. Tradition says that Luke was an artist. With the sensitivity that is typical of artists, Luke has painted Jesus as a tender, human person who went out of the way to help those in pain.
Luke’s gospel has given proper credit also to those who have been neglected by the Jewish community – tax collectors, sinners, sick persons, women (especially, widows) etc. Luke’s special affinity to Our Lady has made him give such a wonderful account of Mary in the infancy narrative. The same respect is carried over when he speaks of women throughout his gospel.

In today’s liturgy we meet two widows who have lost their only sons. The widow of Zarephath fights with Elijah and brings her son back to life. (I Kings 17: 17-24). The widow of Nain also receives her son back alive, thanks to the miracle of Jesus. (Luke: 7/11-17)
The first thing that struck me in the miracle account of Luke is that Jesus performed this miracle un-asked-for. Luke has recorded 17 miracles in his gospel. 11 of them are performed when the sick person or someone on behalf of the sick person makes the request. The rest, 6 of them, are performed without a requisition. Four of these are performed on Sabbath day… just to prove a point to the religious leaders that human beings are more precious than the Sabbath regulation. The fifth one is about the lady with the issue of blood. She, of course, had not made a verbal request, but she came with a request in her heart. Since Jesus had already tuned his heart to hers, the miracle happened. The sixth person to receive the gift of a miracle without asking for it, is the widow of Nain.

Receiving something without asking for it, makes it a memorable gift. I am sure all of us have enjoyed the thrill of receiving such ‘gifts’. I am also sure all of us have enjoyed the thrill of giving such ‘gifts’. There is more joy in giving than in receiving - a clichéd statement perhaps, but one that makes lots of sense to those who have gone through such an experience, especially when giving without a request or a reason.
I cannot help but think of two aberrations when talking of giving and receiving: The first one is about our petty leaders who make such a fuss when they ‘give’… Trumpets blow; lights flash incessantly… sickening, to say the least! The other aberration is the long queues of people trying to receive something from the government. I have read quite a few news items that talk about how some of them got their requests granted, long after they were dead.

Let’s keep aside aberrations and come back to Jesus. When Jesus met the widow of Nain, I can very well presume he must have thought of his Mother, Mary. He would have known what it meant to be a widow in the Jewish set-up. By raising the son back to life, Jesus raised also the mother back to life. Otherwise, who knows… this mother would have as well been contemplating suicide after the burial of her son!

Death is the most painful loss that we can possibly experience. Death of a young person makes this pain unbearable. The death of a young person leaves us with so many questions and very few answers. Yet our faith tells us that death is not the end. It can be turned into a beginning. As Christians we cannot give death the final say… the final victory.
Here is the story of a surgeon who, in his own way, conquered death with goodness:
A doctor entered the hospital in hurry after being called in for an urgent surgery. He answered the call ASAP, changed his clothes and went directly to the surgical suite. He found his patient’s father pacing in the hall outside, waiting for the doctor. On seeing him, the dad yelled, ‘Why did you take all this time to come? Don’t you know that my son’s life is in danger? Don’t you have any sense of responsibility?’
The doctor smiled gently and said, ‘I am sorry. I wasn’t in the hospital and came as fast as I could after receiving the call. And now, I ask you to calm down so that I can do my work.’ Responded the father angrily, ‘Calm down? What if it was your son in that operating room, would you calm down? What if it were your son dying on that operating table?’
The doctor gently replied, ‘I will say what Job said in the Holy Book, From dust we came and to dust we return. Blessed be the name of God. Doctors cannot prolong lives. Please go and pray for your son. We’ll do our best by God’s grace.’ The father murmured, ‘Giving advice when you’re not concerned is so easy.’
The surgery took some hours after which the doctor went out to deliver the news to the father. ‘Thank goodness! Your son is saved!’ And without waiting for the father’s reply, the doctor hurried away running, ‘If you have any questions, ask the nurse.’
‘Why is he so arrogant? He couldn’t even wait to give me more information about my son’s condition,’ complained the father to the nurse minutes after the doctor left. The nurse answered, tears coming down her face, ‘His son died yesterday in a road accident. He was at the burial when we called him for your son’s surgery. And now that he’s saved your son’s life, he left running to finish his own son’s burial.’ (Original source unknown)

Today’s readings can teach us to be channels of life in a world which breeds the culture of death. The readings also bring to focus the challenges faced by single mothers and widows and the efforts we can take to make their lives better!

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் (11ம் தேதி) நாம் துவங்கிய நம்பிக்கை ஆண்டில், பாதிக்கும் மேல் பயணம் செய்துள்ளோம். நமது நம்பிக்கையை வளர்க்கும் பல நிகழ்வுகள் திருஅவையிலும் நம் தனிப்பட்ட வாழ்விலும் நிகழ்ந்துள்ளன. இவற்றிற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இவ்வாண்டு நவம்பர் 24ம் தேதி, கிறிஸ்து அரசர் பெருவிழாவுடன் நம்பிக்கை ஆண்டு நிறைவு பெறும். இந்த ஞாயிறு முதல் நம்பிக்கை ஆண்டின் இறுதி ஞாயிறு முடிய அடுத்த 25 ஞாயிறுகளில் நாம் சிந்திக்கவிருக்கும் நற்செய்தி பகுதிகள் லூக்கா நற்செய்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.
லூக்கா நற்செய்தி, 'கருணையின் நற்செய்தி' என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று நற்செய்திகளை விட, இந்த நற்செய்தியில் இயேசுவின் மனிதத்தன்மை அழகாக வரையப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா ஓர் ஓவியர் என்பது மரபு. ஓவியருக்கே உரிய மென்மையான மனம் கொண்டு அவர் இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மென்மையான நேரங்களை அழகுறத் தீட்டியுள்ளார்.

இயேசுவை மட்டுமல்ல, இன்னும் பலரை அவர் மிக அழகாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார். யூத சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆயக்காரர்கள், பாவிகள், நோயுற்றோர், பெண்கள், சிறப்பாக, கைம்பெண்கள் ஆகியோருக்கு லூக்கா தகுந்த மதிப்பளித்துள்ளார். இயேசு ஆற்றிய புதுமைகளிலும், கூறிய உவமைகளிலும் இவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
இந்த ஞாயிறு வழிபாட்டிற்கென நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் கைம்பெண்களை மையப்படுத்திய இரு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. இவ்விரு கைம்பெண்களும் தங்கள் வாழ்வின் ஒரே நம்பிக்கையாய் இருந்த தங்கள் மகன்களை பறிகொடுத்தபின், மீண்டும் அவர்களை உயிரோடு பெறுகின்றனர்.
அரசர்கள் முதல் நூல் 17ம் பிரிவில் நாம் சந்திக்கும் சாரிபாத்து ஊரைச் சேர்ந்த கைம்பெண், இறைவாக்கினர் எலியாவுடன் போராடி, தன் மகனை மீண்டும் பெறுகிறார். லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் நாம் சந்திக்கும் நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணுக்கோ, இறைமகன் இயேசு தானாகவே முன்வந்து இந்தப் புதுமையை ஆற்றி, அவருக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தருகிறார்.

இந்தப் புதுமையில் முதலில் மனதில் படும் ஒரு சிறப்பு அம்சம் - இயேசு தானாக முன்வந்து இந்தப் புதுமையை ஆற்றுகிறார். லூக்கா நற்செய்தியில், இயேசு நலம் நல்கும் புதுமைகள் 17 காணக் கிடக்கின்றன. அவற்றில் 11 புதுமைகளில் நோயுற்றோர் அல்லது அவர்கள் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்கும்போது இயேசு குணமளிக்கிறார். மீதம் ஆறு புதுமைகள் விண்ணப்பங்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட புதுமைகள். நயீன் கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமை இவற்றில் ஒன்று. ஒரு விதவைத் தாயின் நிலை என்ன என்பதை அன்னை மரியாவின் வழியாக நேரடியாக நன்கு உணர்ந்த இயேசு, இப்புதுமையை எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி ஆற்றுகிறார்.

இயேசுவின் இந்தப் புதுமை, முன்னறிவிப்பு ஏதும் இன்றி நாம் வாழ்வில் பெற்றுள்ள அல்லது செய்துள்ள நல்ல செயல்களைப்பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. உதவிகள் தருவதிலும், பெறுவதிலும் பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும்போது, அல்லது விண்ணப்பிக்கும்போது அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால் அதைவிட மேலான ஒரு நிலையும் நம் வாழ்வில் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
நமது தேவைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்தபோது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ நம் மனதை அறிந்தவர்கள் போல், அவர்களாகவே முன்வந்து நம் தேவைகளைத் தீர்த்து வைக்கும்போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா?
செய்கின்ற உதவிகளைப் படம் பிடித்து, ‘போஸ்டர் ஒட்டி, ‘கட்அவுட் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, இப்படி நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்போது, ஏதோ அந்த இறைவனே இவர்கள் வடிவில் வந்து போனது போல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த நிலைதான் இந்தப் புதுமையிலும். கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நாம் சொல்லும் பழமொழிக்கு உயிரூட்டம் தருகிறது இந்தப் புதுமை.

யூதர் குலத்தில் பொதுவாகவே பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்கள். அதிலும் கைம்பெண்களின் நிலை இன்னும் பரிதாபமானது. இன்றும் நம் நாட்டில் இந்த நிலைதானே. நல்ல காரியம் நடக்கும் வேளையில், அங்கு கைம்பெண்களுக்கு இடமில்லை, அப்படியே அவர்கள் அங்கு வந்தாலும், ஒதுங்கி நிற்கவேண்டும்... போன்ற நியதிகள் இன்னும் நம் பழக்கத்தில் இல்லையா?
இப்படி, யூத சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த நயீன் கைம்பெண்ணுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவரது மகன் மட்டுமே. அவரை, அந்தத் தாய் எவ்வளவு அன்போடு, நம்பிக்கையோடு வளர்த்திருக்க வேண்டும்? தனி ஒரு பெண்ணாய் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது நாம் வாழும் இக்காலத்தில் கண்ணால் காணும் ஓர் எதார்த்தம். இத்தனைச் சவால்களையும், பயங்கரமான சூழல்களையும் சமாளித்து, அந்தக் கைம்பெண் வளர்த்த அந்த நம்பிக்கைக்குரியவர்... இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.

தான் பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான் பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளைச் சாகும் நிலையில் இருக்கும்போது, எத்தனை பெற்றோர் அந்த பிள்ளைக்குப் பதிலாகத் தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நயீன் கைம்பெண்ணும் இப்படி வேண்டியிருப்பார். தன் ஒரே மகனைக் காப்பாற்ற சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அந்தப் பெண் வாழ்வின் விளிம்புக்கு, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ஒரு வேளை மகனது அடக்கத்தை முடித்துவிட்டு, தன் வாழ்வையும் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக அந்த சவ ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த அந்தத் தாயின் நிலையை இயேசு நன்கு உணர்ந்தவராய், அவரைக் கேட்காமலேயே, இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார். மகனை மட்டும் அல்ல, அந்தத் தாய்க்கும் மறு வாழ்வு தருகிறார் இயேசு.

இன்றைய இரு வாசகங்களும் இளையோரின் மரணம்பற்றி குறிப்பிடுகின்றன. பொதுவாகவே, மரணம் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு என்பது நம் அனுபவம். அதிலும் இளவயதில் ஒருவர் இறக்கும்போது, நமது மனம் வேரற்ற மரம்போல் சாய்ந்து விடுகிறது. இந்த வேளைகளில் இறைவனின் அருள் கரம் நம்மைத் தாங்கவேண்டும், மரணத்தையும் தாண்டிய ஒரு நம்பிக்கையை நமக்குத் தரவேண்டும். மரணம் ஒரு முடிவல்ல, இறுதி வெற்றி சாவுக்கு அல்ல என்பதை உணர்த்தும் பல கதைகளைக் கேட்டிருக்கிறோம். மரணம் தன்னை வெற்றி கொள்ளாமல், மரணத்தை ஒருவகையில் வென்ற ஒரு மருத்துவரின் கதை இது...
மருத்துவ மனையொன்றில் இளையவர் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவர் உயிர் பிழைக்க ஒரு முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மிகக் கடினமான அந்த அறுவைச் சிகிச்சையை ஆற்றக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அந்நேரத்தில் அங்கு இல்லை. எனவே, அவருக்கு தொலைபேசியில் அழைப்பு அனுப்பப்பட்டது. மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த அந்த இளையவரின் தந்தை Operation Theatre அருகே நிலைகொள்ளாமல் தவித்தார். அறுவைச் சிகிச்சை ஆற்றக்கூடிய Doctor வரத் தாமதமாகியதைக் கண்டு தந்தைக்குக் கடும் கோபம். அவ்வேளையில், குறிப்பிட்ட அந்த Doctor வந்து சேர்ந்தார். அவரிடம் தந்தை, "டாக்டர், ஏன் இவ்வளவு தாமதம்? உங்களுக்குப் பொறுப்பே இல்லையா?" என்று கத்தினார்.
டாக்டர் மிக அமைதியாக, "நான் வெளியில் இருந்தேன். எனக்கு செய்தி வந்ததும், எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்தேன். தயவுசெய்து நீங்கள் அமைதியாக இருந்தால், நான் உடனே என் பணியை ஆரம்பிக்க முடியும்." என்று சொன்னார்.
இதைக் கேட்ட தந்தைக்கு கோபம் கூடியது. அமைதியாக இருப்பதா? உள்ளே இருப்பது என் மகன். அது உங்கள் மகன் என்றால் இப்படி பேசுவீர்களா?” என்று மீண்டும் கத்தினார். "அது என் மகனாக இருந்தால், 'இறைவன் தந்தார், இறைவன் எடுத்துக்கொண்டார்... இறைவனுக்குப் புகழ்' என்று யோபுவைப் போல வேண்டிக் கொள்வேன். டாக்டர்கள் கடவுள் அல்ல. உயிரை நீடிக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உண்டு, டாக்டர்களுக்கு அல்ல. எனவே, நான் Operationக்குப் போகிறேன். நீங்கள் ஆண்டவனிடம் போய் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, Operation Theatreக்குள் சென்றார் டாக்டர். "அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது எப்போதும் எளிது. தனக்கு வந்தால்தானே தெரியும்" என்று முணுமுணுத்தபடியே தந்தை அகன்றார்.
Operation பல மணி நேரங்கள் நீடித்தது. தந்தைக்கு இருப்பு கொள்ளவில்லை. நம்பிக்கை இழக்கத் துவங்கினார். தாமதமாக வந்த டாக்டர் மீது அவரது கோபம் கூடியது. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், டாக்டர் வெளியே வந்து, "உங்கள் மகன் பிழைத்துக் கொண்டார். உங்களுக்குத் தேவையான மற்ற விவரங்களை நர்ஸ் உங்களுக்குச் சொல்வார்" என்று சொல்லியபடி அவசரமாகக் கிளம்பிச் சென்றார்.
தன் மகனின் உயிரைக் காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி சொல்லவும் தந்தைக்குத் தோன்றவில்லை, மாறாக, தன் மகனின் நிலையைப்பற்றி தெளிவாக விளக்கம் தராமல் டாக்டர் சென்றது, தந்தையின் கோபத்தை இன்னும் கிளறியது.
"என்ன டாக்டர் இவர். மமதை பிடித்தவர். மனிதத் தன்மையே இல்லாதவர். கொஞ்ச நேரம் நின்று என்னிடம் விவரங்களைக் கூறினால் அவர் என்ன குறைந்தா போய்விடுவார்?" என்று அந்தத் தந்தை வாய்க்கு வந்தபடி டாக்டரை திட்டிக் கொண்டிருந்தார் நர்ஸிடம்.
நர்ஸ் கண்களில் கண்ணீர் வடிய பேசினார்: "டாக்டரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார். தன் மகனின் அடக்கச் சடங்கில் பங்கேற்றுக் கொண்டிருந்த டாக்டரை நாங்கள் அழைக்க வேண்டியதாயிற்று. அவரும் மறுப்பு சொல்லாமல் வந்து, உங்கள் மகனைக் காப்பாற்றிவிட்டார். இப்போது தன் மகனை அடக்கம் செய்வதற்காகத்தான் அவர் அவசரமாகச் சென்றார்" என்று கண்ணீருடன் கூறி முடித்தார் நர்ஸ்.

தன் சொந்த மகனை இழந்த நிலையிலும், மற்றொரு உயிரைக் காத்த இந்த டாக்டர், நமக்கெல்லாம் ஒரு பேருண்மையை எடுத்துரைக்கிறார். மரணத்திற்கு நிரந்தரமான வெற்றி கிடையாது. நாம் நினைத்தால், மரணத்தை பல வழிகளில் வெல்லமுடியும். மரணத்தையும் தாண்டி, நல்ல மனங்கள் வாழ்கின்றன என்பதுதான் அந்த உன்னதமான பாடம்.

நயீன் கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு தந்த இயேசு, நாம் வாழும் சமுதாயத்திலும் கைம்பெண்களைப் பேணிக்காக்கும், மதித்து வாழும் மனதை நமக்குத் தர வேண்டுவோம்.
தான் வாழ்ந்த காலத்திலும், தன் மரணத்தின் வழியாகவும் சாவுக்கு இறுதி வெற்றியைத் தராத இறைமகன் இயேசு, மரணத்தைத் தாண்டிய உண்மைகள் பல உள்ளன என்ற தெளிவை நம் அனைவருக்கும் கற்றுத்தருமாறு மன்றாடுவோம்.


03 June, 2013

Worldwide Adoration – History with a meaning வரலாறு படைக்கும் திருநற்கருணை ஆராதனை

Worldwide Adoration

This Sunday we, the Catholics of the world, are making history. Yes, this Sunday is the Feast of the Body and Blood of Christ. This year we are celebrating the Year of Faith, since this is the Golden Jubilee year of the Second Vatican Council (1963-2013). Combining these two reasons, Pope Francis has invited the whole catholic world to gather around the Blessed Sacrament in adoration and prayer – SIMULTANEOUSLY. Yes… Pope Francis will begin this Adoration in St Peter’s Basilica at 5 p.m. this Sunday. This will continue till 6 p.m.
Catholics from all over the world have been invited to join this Adoration at the same time. This would mean 3 a.m. Monday, in New Zealand and 8 a.m., Sunday in Vancouver, Canada. All over the world people are invited to take part in the Adoration in their parish churches or religious houses. In India and Sri Lanka Adorations are planned from 8.30 p.m. to 9.30 p.m. in many churches across these countries.
According to the latest statistics available to us, Catholics around the globe number around 1,214 million. Even if one in ten persons takes part in this Adoration, then we shall have around 121 million people praying at the same time. This indeed is a historical event for the Church. We can safely say that this would be a historical event for the world as well – namely 120 to 1200 million people gathered for a single purpose – namely, prayer!

Gathering people in great numbers is nothing new to the media world. My mind goes back to 20 July 1969, when men landed on the moon. Many millions would have been glued to the radio or transistor to get the running commentary. Sports events like the Olympics and the Soccer World Cup bring people together around the TV. Curiosity and entertainment are the main reasons for these numbers.
There have also been some attempts to gather millions around a particular cause. In the 1980s musicians around the world came together to provide music and collect money for the famine that was ravaging Ethiopia. “Do They Know It’s Christmas?” and “We Are the World” were special music pieces created for the occasion. These concerts drew millions of people live as well as around the TV to donate for the people of Ethiopia. This was in 1985. After 25 years, when a major earthquake devastated Haiti in 2010, another attempt was made – “We Are the World 25 for Haiti”.

Be it a sporting event or a music event – with a cause – the people are merely spectators. This Sunday, Catholics are not invited to be spectators but participants in a prayer. Praying before the Blessed Sacrament can easily become a private, me-and-my-God-alone type of devotion. Hence, Pope Francis has given two intentions for this Adoration – intentions that would transport us from this ‘private’ devotion.
Here are the two intentions proposed by the Pope:
The first is: “For the Church spread throughout the world and united today in the adoration of the Most Holy Eucharist as a sign of unity. May the Lord make her ever more obedient to hearing his Word in order to stand before the world ‘ever more beautiful, without stain or blemish, but holy and blameless.’ That through her faithful announcement, the Word that saves may still resonate as the bearer of mercy and may increase love to give full meaning to pain and suffering, giving back joy and serenity.”
Pope Francis’ second intention is: “For those around the world who still suffer slavery and who are victims of war, human trafficking, drug running, and slave labour. For the children and women who are suffering from every type of violence. May their silent scream for help be heard by a vigilant Church so that, gazing upon the crucified Christ, she may not forget the many brothers and sisters who are left at the mercy of violence. Also, for all those who find themselves in economically precarious situations, above all for the unemployed, the elderly, migrants, the homeless, prisoners, and those who experience marginalization. That the Church’s prayer and its active nearness give them comfort and assistance in hope and strength and courage in defending human dignity.”
(VIS – Vatican Information Service)
It is so meaningful that we are taking the broken world in prayer before the Blessed Sacrament, since the Feast of the Body and Blood of Christ is the Feast to remember a broken God for the sake of healing a broken world.

This Feast is THE MOST SIGNIFICANT FEAST to tell us what God’s love is all about. In any love experience, the best response a person can give is to enjoy the experience with child-like simplicity. If one were to raise questions about love, then we would almost lose love.
All through human history, many theologians and dogmatic experts have raised questions about this Sacrament of Love - the ‘transubstantiation’. How is Christ present in the two species – bread and wine? I feel more at home to raise a different type of question. Instead of raising the question about the ‘how’ of this Mystery, I feel comfortable to raise the question ‘why’. Why is Christ present in bread and wine?
Here is my simple answer to this question: First, bread and wine are the simple, staple food of the Israelites. Jesus wanted to leave his presence with us in the most ordinary, essentials of our daily life. Second, once food is taken, it gets integrated as our own body and blood. Just as food is integrated with one’s body, Jesus would like to become integrated with human beings. This answer may not measure up to a ‘theological treatise’; but it makes sense to me. Theologians may not forgive me for making this Sacrament sound so simple; but, I am sure God will!

Instead of filling our minds with questions and answers about Christ’s real presence, we shall fill our hearts with some of the inspiring incidents related to Christ’s Real Presence in the lives of great souls.
The first atom bomb on August 6, 1945, destroyed Hiroshima. The Jesuit novitiate in a suburb of that city was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain.
In the midst of this broken humanity, the novice master Fr Pedro Arrupe celebrated Mass the very next day of the disaster. “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!”
(Hedwig Lewis S.J., - At Home with God)

Walter Ciszek was the son of Polish immigrants, born in a coal-mining town in Pennsylvania in 1904. He had a rough child hood – and was even a member in a gang. So his family was shocked when he announced that he wanted to become a priest. Young Walter ended up joining the Jesuits, and went to the Soviet Union to serve as a missionary. For a while, he worked as a logger, ministering to people privately, trying to avoid arrest.
But in 1941, he was arrested and charged, falsely, with working as a spy for the Vatican. He spent the next 23 years in prison – sometimes in solitary confinement, sometimes in a gulag, at times doing hard labor. Despite that, he found ways to celebrate mass – often at tremendous risk. Years later, Fr. Ciszek wrote about it.
He described in painstaking detail how the prisoners would observe the Eucharistic fast, often going without breakfast, working all morning on an empty stomach, so they could receive communion. A priest would gather them in an assigned spot – everybody, even the priest, wearing rumpled work clothes. And there he would take a small piece of bread and a few drops of wine and transform them into the body and blood of Christ.
As he wrote: “In these primitive conditions, the Mass brought you closer to God than anyone might conceivably imagine. The realization of what was happening on the board, box, or stone used in the place of an altar penetrated deep into the soul.”
And he explained: “Many a time, as I folded up the handkerchief on which the body of our Lord had lain, and dried the glass or tin cup used as a chalice, the feeling of having performed something tremendously valuable for the people of this Godless country was overpowering. I was occasionally overcome with emotion for a moment as I thought of how God had found a way to follow and to feed these lost and straying sheep in this most desolate land…I would go to any length, suffer any inconvenience, run any risk to make the bread of life available to these men.”
(“Do this in remembrance of me.”)

As we join the worldwide family of Catholics to pray before the broken God, we pray that this world, torn and broken by selfish interests become healed by the selfless sacrifice of Christ who is willing to be broken constantly for this world. Here is a lovely hymn that I remember whenever I think of the Blessed Sacrament.

Take and eat, this is my Body, Broken on crosses too lonely to mention,
Take and drink, this is my Blood, Spilled on your alleys and lost in your hallways…
Remember me, remember me.
Take and eat, this is my gift, myself, Given in love in the face of rejection.
Take and drink, this is my life. Know it’s my pledge now to be with you always.
Remember me, remember me.

I couldn’t be here; remember me; I live all alone; remember me,
I walk on your streets and sleep by your highways,
Remember me, remember me.
I ride on your bus, remember me, I sit in your jails, remember me,
I live in your sick-beds and wait for your footsteps;
Remember me, remember me.
Joe Wise – (Not the complete song). For those of you who would like to listen to the full song, here is the link:


Pope Francis – Corpus Christi Procession

ஜூன் 2, இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை தனித்துவம் மிகுந்ததொரு வரலாறு படைக்கவிருக்கிறது. 'வரலாறு படைத்தல்' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், பிரம்மாண்டமான, பரபரப்பான, ஆர்ப்பாட்டமான, ஆரவாரம் மிகுந்த ஏதோ ஒன்று நிகழ்ப்போவதாக நமது எண்ணங்கள் பல திசைகளில் ஓடியிருக்கும். அவ்வகை எண்ணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் படைக்கவிருக்கும் வரலாற்று நிகழ்வை பணிவோடு, பக்தியோடு அணுகுவோம்.
ஆம், அன்புள்ளங்களே, இந்த ஞாயிறு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா. இந்த ஆண்டு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூடியதன் 50ம் ஆண்டு என்பதால், இதை 'நம்பிக்கை ஆண்டு என்று கொண்டாடிவருகிறோம். இவ்விரு கொண்டாட்டங்களையும் அர்த்தமுள்ள வகையில் இணைக்க, கத்தோலிக்கத் திருஅவை, இந்த வரலாற்று நிகழ்வை  மேற்கொண்டுள்ளது.
இந்த ஞாயிறன்று, உரோம் நகரில் மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருநற்கருணை ஆராதனை ஆரம்பமாகிறது. ஒரு மணிநேரம் நிகழும் இந்த ஆராதனையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார். உரோம் நகரில் மாலை 5 மணியாகும் அதே தருணத்தில், உலகின் பல நாடுகளில், கோடிக்கணக்கான கத்தோலிக்கர்கள், அவரவர் பங்குக் கோவில்களில், துறவு இல்லங்களில் இந்த ஆராதனையை நடத்த அழைக்கப்பட்டுள்ளோம். உலகில் இன்று 121 கோடியே, 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டுள்ளோம். இந்த மாபெரும் கத்தோலிக்கக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்த ஆராதனையில் கலந்துகொள்ள இயலாது என்பது தெரியும். நம்மில் பாதிபேர், அல்லது மூன்றில் ஒரு பகுதியினர், ஏன்? பத்தில் ஒரு பகுதியினர் இந்த ஆராதனையில் ஈடுபட்டாலும், உலகில் 60 அல்லது 40 கோடி மக்கள், அல்லது குறைந்தது, 12 கோடி மக்கள் ஒரே நேரத்தில் திரு நற்கருணையில் வாழும் இறைமகன் முன்னிலையில் செபங்களை எழுப்பவிருக்கிறோம். இது உண்மையிலேயே, திருஅவை வரலாற்றில், ஏன்? உலக வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்படும் ஓர் அற்புத முயற்சி. இந்தக் கண்ணோட்டத்தில்தான் இதை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கொண்டாடுகிறோம்.
வரலாறு படைக்கிறோம் என்ற மமதையான எண்ணங்களுடன் இறைவனின் சந்நிதியில் நாம் கூடினால், நமது ஆராதனை முயற்சி வறட்டுப் பெருமையாக மாறிவிடும். அதற்கு மாறாக, இறையன்பை இவ்வுலக மக்கள் இன்னும் அதிகம் உணரவேண்டும் என்ற ஆவலுடன் இந்த உலகை இறைவனிடம் நாம் ஏந்திச் சென்றால், இந்தப் பெருவிழாவின், இந்த வரலாற்று முயற்சியின் உண்மைப் பொருளை நாம் புரிந்துகொள்வோம்.

பல நாட்டின் மனிதர்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மனித வரலாற்றில் பல முறை நடந்துள்ளன. ஆனால், இந்த முயற்சிகள் பெரும்பாலும் தொடர்பு சாதனங்கள் வழியே நிகழ்ந்து வந்துள்ளன. மனிதர்கள் முதன்முதல் நிலவில் காலடி எடுத்துவைத்தபோது, உலகின் பெரும்பான்மை மக்கள் அந்நிகழ்வை வானொலி வழியே ஆவலாய் கேட்டுக் கொண்டிருந்தனர். உலகில் நிகழும் பல விளையாட்டுக்கள், சிறப்பாக, ஒலிம்பிக் விளையாட்டுக்கள், உலகக் கால்பந்து கோப்பை, உலகக் கிரிக்கெட் கோப்பை என்ற பல விளையாட்டுக்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் பல நாட்டினரை இணைக்கின்றன. இவை அனைத்துமே பொழுதுபோக்கு என்ற அம்சத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி என்று கூறலாம்.
பொழுதுபோக்குடன் சில உயரிய கருத்துக்களுக்காகவும் உலகினர் இணைந்துள்ள நிகழ்வுகள் மனித வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய பட்டினியை ஒழிக்க, இசைக் கலைஞர்கள் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பு பல கோடி மக்களை இணைத்தது. பொழுபோக்கு என்ற கேளிக்கை வட்டத்தைத் தாண்டி, தான், தனது என்ற சுயநல உலகத்தையும் தாண்டி, அடுத்தவரை மையப்படுத்திய நிகழ்ச்சிகள் இவை.

தொடர்பு சாதனங்கள் வழியே மக்களை அடைந்த இந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பு வெறும் பார்வையாளர்கள் என்ற முறையிலேயே அமைந்தது. இந்த ஞாயிறு அகில உலக கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும் ஆராதனையில் நாம் பார்வையாளர்கள் அல்ல, மாறாக, பொருளுள்ள வகையில் பங்கேற்கும் பக்தர்கள். நாம் பங்கேற்கும் உலகளாவிய ஆராதனை, தான், தனது என்ற உலகைத் தாண்டி, அடுத்தவரையும், ஆண்டவனையும் மையப்படுத்தும் முயற்சி. உலகில் இயற்கையும், மனிதர்களும் விளைவிக்கும் இடர்களைப் பற்றிய நடைமுறை உண்மைகளை மனதில் ஏந்தி நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி.
இறைவனின் சந்நிதியில், திருநற்கருணை ஆண்டவருக்கு முன், உலகத் துன்பங்களைப் புறந்தள்ளிவிட்டு, இறைவனோடு மட்டும் நாம் ஒரு மணிநேரம் செலவிடப் போகிறோம் என்ற எண்ணத்தைப் போக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த ஆராதனை நேரத்திற்கு இரு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உலகெங்கும் பரவியுள்ள அனைத்து கத்தோலிக்கர்களும் இணைந்து, காயப்பட்டுக் கிடக்கும் இவ்வுலகை இறைவனுக்கு முன் ஏந்திச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் இந்த ஆராதனைக்கென இரு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் முதல் கருத்து:
"உலகெங்கும் பரவியுள்ள திருஅவை, மிகப் புனிதமான நற்கருணையை வழிபடுவதில் ஒன்றாக இணைந்துள்ளது. இறைவார்த்தைக்கு இன்னும் அதிகமாகக் கீழ்படிவதால், அன்னையாம் திருஅவையை, இன்னும் அழகுள்ள, கறைகளற்ற, புனிதத் தாயாக இவ்வுலகின் கண்களுக்கு இறைவன் காட்டுவாராக. துன்பத்தால் நிறைந்திருக்கும் இவ்வுலகில், இறைவனின் கருணையையும், அன்பையும் ஏந்திச் செல்லும் கருவியாக திருஅவையை இறைவன் மாற்றுவாராக. இவ்வகையில், இவ்வுலகத் துன்பங்களுக்கு உகந்த பதிலாக, அமைதியையும், ஆனந்தத்தையும் தாய் திருஅவை கொணர்வாராக"

திருத்தந்தையின் இரண்டாம் கருத்து:
அடிமைத்தொழில், மனித வர்த்தகம், போதைப் பொருள் வர்த்தகம் ஆகியவற்றாலும், போரினாலும் துன்புறம் மக்களுக்காக...
பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக, குழந்தைகளுக்காக...
விழிப்பாயிருக்கும் திருஅவையின் செவிகளை இவர்களது மௌன அலறல்கள் சென்றடைவதாக. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைக் காணும் திருஅவை, வன்முறைகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் இவர்களை மறவாதிருப்பதாக.
பொருளாதார நெருக்கடி மற்றும், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுவோருக்காக...
வயது முதிர்ந்தோர், வீட்டையும், நாட்டையும் இழந்தோர், சிறையிலிருப்போர் ஆகிய அனைவருக்காக....
நற்கருணை நாதருக்கு முன், தாய் திருஅவை எழுப்பும் இந்த இணைந்த செபம், இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக. மனித மாண்பை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணைபுரிவதாக.
இஞ்ஞாயிறன்று உலகெங்கும் பல கோடி கத்தோலிக்கர்கள் ஒரே நேரத்தில் திருநற்கருணை ஆராதனையில் ஈடுபட்டு, காயப்பட்டிருக்கும் உலகம் குணமடைய செபங்களை எழுப்புவர் என்பது ஓர் உன்னதமான உணர்வைத் தருகிறது.

தான் அடைந்த காயங்களால், இவ்வுலகின் காயங்களை குணமாக்க வந்த இறைமகனின் அன்பை வெளிப்படுத்தும் ஓர் அற்புத விழா இயேசுவின் திருஉடல், திருஇரத்த திருவிழா. கேள்விகள் கேட்காமல் அன்பைச் சுவைக்க அழைப்பு விடுக்கும் இந்த விழாவின் மையமான மறையுண்மையைக் குறித்தும் பல நூற்றாண்டுகளாக, பல இறையியல் அறிஞர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கியமான கேள்வி: எப்படி அப்பத்தின், இரசத்தின் வடிவில் இயேசு பிரசன்னம் ஆகமுடியும் என்ற கேள்வி. இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்ற இறையியல் விளக்கங்களைக் காட்டிலும், ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப, இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலின் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய உணவாக, நாம் தினமும் உண்ணும் உணவாக, நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே, இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா.

இணைபிரியாமல் நம்முடன் தங்கியிருக்கும் இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் என்ற மறைபொருளை உறுதி செய்யும் வகையில் பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ வீர உள்ளங்கள் தங்கள் உயிரையும் இழக்க தயாராக இருந்தார்கள். இந்த வீர உள்ளங்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள வாழ்வு அனுபவங்களுடன் நம் சிந்தனைகளை நாம் இன்று நிறைவு செய்வோம்:

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் புனித Isaac Joguesம் ஒருவர். பழங்குடி மக்களிடையே அவர் தொடர்ந்து அனுபவித்துவந்த சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் இழந்திருந்தார். இந்த நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கைகளில் Isaac Jogues உயர்த்திப் பிடித்தது கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

போலந்து நாட்டில் பிறந்து, அமெரிக்காவுக்குக் குடியேறிய ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் Walter Ciszek. இவரது குழந்தைப் பருவம் மிகக் கடினமானச் சூழலில் கடந்தது. இவர் இளவயதை எட்டியபோது, வன்முறை கும்பல் (Gang) ஒன்றில் இணைந்தார். தான் ஒரு குருவாகப் போவதாக Walter ஒருநாள் கூறியபோது, பெற்றோர் உட்பட அனைவரும் திகைத்தனர். இயேசு சபையில் சேர்ந்த Walter, இரஷ்யாவில் மறைப்பணி செய்யப் புறப்பட்டார்.
1941ம் ஆண்டு, வத்திக்கான் உளவாளி என்ற குற்றத்தின்பேரில் இரஷ்ய அரசு இவரைச் சிறையில் அடைத்தது. 23 ஆண்டுகள் மிகக் கடினமான துன்பங்களை இவர் அனுபவித்தார். துன்பம் நிறைந்த அச்சூழல்களில் அவருக்கு உறுதி தந்தது, அவர் ஆற்றியத் திருப்பலிகள் என்று அவர் பின்னர் குறிப்பிட்டார். அந்நாட்களில் நற்கருணை உட்கொள்வதற்கு முன் வேறு எதையும் உண்ணக்கூடாது என்ற விதிமுறை இருந்ததால், இவர் திருப்பலி ஆற்றும் நாட்களில், இவரும், ஏனைய கைதிகளும் காலையிலிருந்து ஒன்றும் உண்ணாமல் தங்கள் கடினமான பணிகளைச் செய்தனர். பின்னர், அதிகாரிகளுக்குத் தெரியாமல் அச்சிறையில் திருப்பலிகள் நிகழ்ந்தன.
இத்திருப்பலிகளைப் பற்றி Walter பின்னர் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்: "நாங்கள் உடுத்தியிருந்த கைதிகளின் உடை, எங்கள் கைக்குட்டை, எங்களுக்குத் தரப்பட்ட தகரக் குவளை, எங்களுக்குக் கிடைத்த சில ரொட்டித் துண்டுகள், சில துளிகள் இரசம் இவைகளைக் கொண்டு நாங்கள் திருப்பலியாற்றினோம். கடவுள் நம்பிக்கை ஏதுமில்லாத அந்த நாட்டில், நாங்கள் ஆற்றிய இத்திருப்பலிகள் வழியாக, நல்லாயனாம் கிறிஸ்து, வழிதவறிச் சென்ற ஆடுகளாகிய எங்களைத் தேடிவந்து, தன் உடலையும் இரத்தத்தையும் தந்தார். அச்சிறையில், இறைமகனின் உண்மையான பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்தோம். இறைவனை இவ்வுலகில் தொடர்ந்து தங்கவைக்க இன்னும் எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் சந்திக்க நான் தயார்" என்று Walter குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதம், கோடான கோடி மக்களின் மனங்களில் இத்தனை நூறு ஆண்டுகளாய் வீரத்தை, தியாகத்தை, அனைத்திற்கும் மேலாக, அன்பை வளர்த்துள்ள கிறிஸ்துவின் பிரசன்னம் என்ற மறையுண்மைக்கு முன், உலகளாவிய கத்தோலிக்கக் குடும்பத்துடன் இணைந்து, தாழ்ந்து, பணிந்து வணங்குவோம். இறைமகன் இயேசு, தன் திருஉடல் திருஇரத்தத்தின் வழியாக விட்டுச் சென்றுள்ள அன்பையும், தியாகத்தையும் நமது அன்றாட வாழ்வாக்க முனைவோம்.