08 March, 2015

Cleansing the temple of our heart மனக்கோவிலில் மண்டிக்கிடக்கும் குப்பைகள்

Jesus Money Changers Whip
 3rd Sunday of Lent – International Women’s Day
Showers for the homeless are the latest addition to St Peter’s Square. These showers were opened in February, 2015. The reason behind such an effort was to help the homeless people feel a bit more of self-worth. As one of the beneficiaries of these showers said, “Now I can boldly stand among the people”. 
Cleaning oneself is a basic need of human beings. Cleansing oneself is a strong theme of Lent. It is more of the interior cleansing, than the external. The Gospel, given to us this Sunday, talks of Jesus cleansing the Temple of Jerusalem. This event is recorded in all the four Gospels. John places this at the beginning of the public life of Jesus (John 2:13-22), whereas the synoptic Gospels talk about this just before the Passion (Matthew 21:12-17; Mark 11: 15-19; Luke 19: 45-48).
‘Cleansing the temple’ reminds me of a short story (call it a joke!):
In South Africa (when it was suffering from apartheid) a Black was entering a church. A policeman saw him and shouted, "Stop! That church is for the Whites."
The Black man explained: "But I'm only going in to clean the church."
"Well, in that case, okay," answered the man of the law. "But don't let me catch you praying…..”

We are sadly aware that our churches, temples and mosques need cleaning more than ever. We have accumulated way too much rubbish in our places of worship. Hence, the event of Jesus cleansing the Jerusalem Temple can teach us lots of lessons. Jesus, ‘the-meek-and-humble-of-heart’ person is seen erupting like a volcano, wielding a whip. Such a posture does not fit into our picture of Jesus! I remember seeing this picture as a banner for one of the protest marches organised by the Christians demanding justice for a particular cause. But, I cannot imagine any church opting for this Jesus as the main picture or a statue behind the altar.

From the First Sunday of Lent we have been meeting Jesus in different situations and in very different locations. On the First Sunday we met Him in the desert, hungry, tired and tormented by the Satan. On the Second Sunday we met Him on the mountain, in a moment of glory. Today, the Third Sunday of Lent, we meet Him in the Temple of Jerusalem in a ‘shocking’ episode of anger and violence.
Of these three episodes, I can very well see quite a few churches opting for the Transfiguration of Jesus as the first choice picture behind the altar. The hungry, tired Jesus in the desert (without the Satan) would be the second choice. Jesus angry and violent, wielding a whip? Well, this could be in a picture gallery close to the Church, but not inside the church! Today, the Church invites us to see this ‘different’ Jesus at least once in a while, especially during the special season of Lent.

Another feature of these three Sundays that caught my attention was the three locations: the desert, the mountain and the temple. All these are special places where one can meet God. In the desert and the mountain one needs to search for God, while the temple is the place we humans have built to meet God easily. Paradoxically, when the Son of God went to the temple – the famous Jerusalem Temple – He could not meet God. He could also sense that thousands who had come there could not meet God. Naturally, the next logical question was: What was the use of that temple when it had lost its prime purpose of helping people meet God? The Temple had become too filthy like the ‘Augean Stables’ (literally) and needed immediate cleaning. In the gospels we hear Jesus saying that the temple had been turned into a ‘house of trade’ (John) and a ‘den of robbers’(the other three gospels). Jesus took up the cleaning in full earnest.

Jesus’ encounter with the Temple began when He was 12 years old. Even at that time, the Boy Jesus must have seen some anomalies in His Father’s House. Every year as He went to the Temple for His annual obligations, He must have come back with lots of questions… painful questions. This year He wanted to find an answer to His questions… Rather, He decided to become an answer to His questions.
                                                             
Among all the anomalies, what must have pained Jesus most was the way the poor and the gentiles were treated in the temple. The Passover of the Jews was at hand, and Jesus went up to Jerusalem. (John 2:13) These are the opening words of today’s gospel. Every Jew was looking forward to going to Jerusalem at the time of the Passover. Having come from a humble labourer’s family Himself, Jesus knew how hard it was for the poor people to put aside something for the temple each year. They brought to Jerusalem all that they had set aside for God through the year. Going to Jerusalem was considered a peak experience for the Jews (Psalm 122). The happy anticipation of going to ‘God’s House’ was becoming more and more of a nightmare for the poor Jews year after year because of the market that was growing around and inside the temple.
The Passover was a peak season for Jerusalem. (You can see that I have begun speaking in ‘commercial’ terms.) The poor Jews had to face a two-pronged attack from the market forces that have grown around the Temple. The oxen, sheep and pigeons that the poor had brought with them became ‘unacceptable’ by the Priests. They found some little blemish in them. Hence, the poor had to buy these offerings from the temple market at a much higher price. The second attack came in the form of the annual temple tax they had to pay. This tax could not be paid in the Roman coins since they had the image of Caesar on them. Hence, they had to change these coins into the ‘temple coins’. Here again the poor were cheated royally. Thus the Pilgrimage to Jerusalem which was supposed to fill the poor with graces and replenish them for the next year, became a journey that fleeced them and left them exhausted. They must have felt that God was receding from them year after year and that they could never measure up to the temple requirements. They must have also questioned how their God had become the sole monopoly of the Priests and other temple merchants.
There was another group of people who were also raising similar questions. They were the gentiles. The temple market occupied what was known as the Court of the Gentiles – the outer court of the Jerusalem Temple. The Gentiles were permitted only to this outer court and no further. Since this court had become a noisy, unruly market place, the Gentiles could not pay their homage to the God of Israel, whom they were very keen to meet. Many of them must have returned home quite disgusted with what they saw and would have decided never again to go back to Jerusalem.

Jesus identified himself with these two groups who had agonising questions about God who was locked up inside the Temple of Jerusalem by the selfish Priests and merchants. He sought a solution. He began cleansing the Temple! Some commentators would call this act of Jesus a miracle. How did He undertake such a daring act and still not get killed on the spot is a miracle indeed! What made Him do this? The Gospel says: "Zeal for the House of God consumed Him."
The temple authorities could see this zeal and they had no answer to this. Still, putting up a brave front, they questioned Jesus: "What sign have you to show us for doing this?" Jesus did not answer them directly but threw a challenge at them: "Destroy this temple, and in three days I will raise it up." (John 2:18-19) A temple that took 46 years to be built can be built in three days? What a childish way of speaking!
Jesus spoke of a different temple – His own Body! The Body of Jesus, which was destroyed on the Cross, was built up again in three days. In this temple there would be no more problems in meeting God; in this temple God cannot be bought; in this temple there will be no inner and outer courts to segregate people… All are welcome to meet God here!  

Our reflections will not be complete, if we do not talk of cleansing our society. Today, March 8 – the International Women’s Day – we need to reflect on the cleansing needed in our view on women. In connection with this International Day, BBC had broadcast a documentary – ‘India’s Daughter’. This documentary, created by Leslee Udwin, a lady from the United Kingdom, has earned a ban in India and whipped up lot of discussion. This documentary talks of that painful, tragic night in Delhi when a young lady was brutally gang raped in a running bus and later thrown out of the bus. She ultimately succumbed to the brutality unleashed on her.
This case drew unprecedented protests across India and the case was put on fast track to deliver justice. But, now it is more than two years and no verdict is reached yet. The brutality of this event still haunts the Indian conscience.

We know that among the many cultures that give women high honour, India must be ranking very high, since we have enshrined many female deities in our temples. But, in real life, women face the most pathetic treatment from men and women alike! We pray that the whip-wielding Jesus will cleanse our hearts which puts women on pedestals in temples, but tramples them underfoot in real life! ‘Spring cleaning’ is a call to conversion!

International Women’s Day Theme 2015


சுத்தமாக இருப்பதும், சுத்தம் செய்து கொள்வதும் மனிதர்களின் அடிப்படைத் தேவை. மனிதர்கள் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையும் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்வதை நாம் அறிவோம். தன்னையே சுத்தம் செய்து கொள்ளும் இயற்கையை மீண்டும் அசுத்தப்படுத்துவதில் மனிதர்களாகிய நம் பங்கு மிக அதிகம் என்பதையும் வெட்கத்துடன், வேதனையுடன் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.
'சுத்தப்படுத்துதல்' என்பது தவக்காலத்தின் மைய இலக்குகளில் ஒன்று. புறத் தூய்மையைவிட, அகத் தூய்மையை வலியுறுத்தும் காலம், தவக்காலம். இத்தருணத்தில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்யும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. 'இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற இந்நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது (மத். 21:12-17; மாற். 11:15-19; லூக். 19:45-48; யோவா. 2:13-22). 'கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற சொற்றொடர், எனக்கு ஒரு குட்டிக் கதையை நினைவுக்குக் கொணர்கிறது:
தென் ஆப்ரிக்கா, இனவெறியில் மூழ்கியிருந்த காலம் அது. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு கோவிலில் நுழைந்தார். அருகிலிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, அவரிடம் விரைந்து சென்று, "நில்! வெள்ளையினத்தவர் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழையமுடியும். நீ உள்ளே போகக்கூடாது!" என்று சொல்லித் தடுத்தார். கறுப்பின மனிதர் அவரிடம், "ஐயா, நான் இந்தக் கோவிலைச் சுத்தம் செய்யவே போகிறேன்" என்று கூறினார். உடனே, அந்தக் காவல் துறை அதிகாரி, "அப்படியென்றால் உள்ளே போகலாம். ஆனால், அங்கு நீ செபித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தால், பின்னர், உனக்குத் தொல்லைதான்!" என்று எச்சரித்து உள்ளே அனுப்பினார்.
'கோவில்' என்ற பெயரில் நாம் எழுப்பியுள்ள அமைப்புக்களில் தேவையற்ற சங்கடங்களைக் குவித்துவைத்து, கோவிலின் தூய்மையைக் கெடுத்துள்ளோம். எனவே, நமது கோவில்கள் பல வழிகளில் தூய்மையாக்கப்பட வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். இத்தகையதொரு தூய்மையாக்கும் பணியில் அன்று இயேசு ஈடுபட்டார். எருசலேம் கோவிலைத் இயேசு ஏன் தூய்மையாக்கினார் என்பதைப் புரிந்துகொள்வது பயனளிக்கும். எருசலேமில் அன்று நடந்ததாக நாம் சிந்திக்கும் விவரங்களுக்கும், இன்று நாம் நடைமுறையில் காணும் பல விவரங்களுக்கும் நெருங்கிய ஒப்புமைகள் தெரிந்தால், நாம் இன்னும் ஆழமானக் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம்.
"யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்" (யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்லவேண்டும், அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்தவேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. இயேசுவும், யூதருக்குரிய தன் கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஏற்கனவே, அவர் 12 வயது சிறுவனாக, முதல்முறை எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அவர் கண்ட ஒரு சில காட்சிகள் அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்கு சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.
இயேசுவுக்குள் இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம்... எருசலேம் கோவிலில் ஏழைகள் அடைந்த துன்பங்கள். ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் பட்ட துன்பங்களை இயேசுவும் அடைந்திருப்பார். இறைவனைக் காணும் ஆர்வத்தோடு, அந்த ஏழைகள், ஆண்டு முழுவதும், சிறுகச் சிறுகச் சேமித்து, கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவர்கள் சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என  ஆண்டு முழுவதும் தங்கள் வீடுகளில் கண்ணும்கருத்துமாய் அவர்கள் வளர்த்து, எடுத்து வந்த ஆடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது ஒரு குறையைச் சுட்டிக்காட்டி, அவற்றை ஏற்க மறுத்தனர் குருக்கள். எனவே, அந்த ஏழைகள், கோவிலில், அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, புறா இவற்றை வாங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம், ஒரு புறா வாங்குவதற்கே பற்றாமல் போயிற்று. சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில் கடவுளின் சாபத்தைப் பெறக்கூடும் என்ற அச்சத்தை, அந்த ஏழைகள் மீது குருக்கள் திணித்தனர்.
அடுத்ததாக, கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப்பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம் உரோமைய நாணயம். அந்த நாணயத்தைக் கொண்டு கோவில் காணிக்கையைச் செலுத்தக்கூடாது, ஏனெனில், அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே, காணிக்கை செலுத்தும் அனைவரும், கோவிலுக்கு வெளியே இருந்த நாணயம் மாற்றுமிடங்களில், உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவில் நாணயங்களை வாங்கவேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். காணிக்கைப் பொருட்களின் வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் என்று அனைத்து வியாபாரங்களிலும், கோவில் குருக்களுக்குப் பங்கு இருந்தது.
ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக் காண வந்தால், இங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் உள்ளனவே; அவர்கள் தரிசிக்க வந்த இறைவன், அவர்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும் இன்னும் தூரமாய் விலகிச் செல்கிறாரே என்ற தவிப்பு அவர்கள் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து, புழுங்கிக் கொண்டிருந்தனர்.
இதே வேதனை, இதே புழுக்கம் யூதர் அல்லாத புற இனத்தவருக்கும் இருந்தது. எருசலேம் கோவிலில், வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச்சுற்றில். இந்த வெளிச்சுற்று புற இனத்தவர் அவை (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. புற இனத்தவர், வெளிச்சுற்றில் மட்டும் நின்று, இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. அந்த வெளிச்சுற்றில் கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த புற இனத்தவர், இறைவனைக் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்திருக்கவேண்டும். அவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு, அவர்கள் வீடு திரும்பியிருக்கவேண்டும்.
ஏழைகளையும், புற இனத்தவரையும், வாட்டியெடுத்த கேள்விகள், வேதனைகள் இயேசுவையும் வாட்டியெடுத்தன. இந்த வேதனை கோபமாக வடிவெடுத்தது. ஏழை யூதர்களும், புற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, சந்தையாக, கள்வரின் குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.
பாஸ்கா விழா காலத்தில் எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வருவர் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான காணிக்கைகள் கோவிலில் மலைபோல் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய் இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த அந்த மனம் சாதாரண மனம் அல்ல... இறைமகன் இயேசு, எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர், தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமைதான். இந்தப் புதுமையை எண்ணி வியக்கும் அதே நேரம், மனித வரலாற்றில் நிகழ்ந்த பல மாற்றங்களும், புரட்சிகளும் தனி மனிதர்களின் துணிவிலிருந்துதான் துவங்கின என்ற உண்மையையும் நாம் உணர்வதற்கு இன்றைய நற்செய்தி வழி வகுக்கிறது.
கோபக்கனல் தெறிக்க இயேசு இந்தக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் (யோவான் 2: 19) என்ற சவாலை அவர்கள் முன்வைத்தார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசு கூறிய வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்த்தால், அது குழந்தைத்தனமான சவாலாகத் தெரிகிறது.
இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார் (யோவான் 2: 21). முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட அந்தக் கோவிலை, கடவுள், மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். அந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது; கடவுளை விலை பேசமுடியாது; கடவுளைக் காண்பதற்கு காசு ஒரு இடையூறாக இருக்காது; வெளிச் சுற்று, உள்சுற்று, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புறஇனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். எந்தத் தடையும் இல்லாமல் இறைவனைக் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம். இத்தகைய அழகிய கோவில்கள், நம் உள்ளங்களில் தொடங்கி, உலகெங்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
கோவில் தூய்மையைப் பற்றிப் பேசும்போது, நாம் சமுதாயத் தூய்மையைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். சமுதாயத் தூய்மை என்பது பரந்து விரிந்த ஒரு கடலாக, பாலை நிலமாக, உயர்ந்த மலையாகத் தோன்றலாம். எனவே, முயற்சி எனும் பயணத்தின் முதல் அடியைக் கூட எடுத்துவைக்க முடியாமல் நாம் மலைத்துப் போய் நிற்கலாம். இருப்பினும், இன்று சமுதாயத் தூய்மையின் ஓர் அங்கத்தை மட்டும் சிந்திக்க முயல்வோம்.
இந்த ஞாயிறன்று சமுதாயத் தூய்மையைப் பற்றி பேசும்போது, பெண்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களில் உருவாகவேண்டிய தூய்மை, முதலிடம் பெறுகிறது. காரணம் என்ன? மார்ச் 8, இஞ்ஞாயிறன்று நாம் அனைத்துலக மகளிர் நாளைச் சிறப்பிக்கின்றோம்.
இத்தருணத்தையோட்டி, பி.பி.சி (B.B.C) தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த ஓர் ஆவணப்படம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Leslee Udwin என்ற பெண் உருவாக்கிய ஆவணப்படம் இது. "இந்தியாவின் மகள்" (India's Daughter) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் படம், 2012ம் ஆண்டு, டில்லியில், ஓடும் பேருந்தில், ஓர் இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கும், கொடூரமான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் இந்தியக் கலாச்சாரத்தை, இந்திய சமுதாயத்தை, உலகினர் பார்வையில் களங்கப்படுத்துகிறது என்ற காரணம் காட்டி, இந்திய அரசும், அரசியல் தலைவர்களும் இப்படத்தை இந்தியாவில் தடை செய்துள்ளனர். இந்த ஆவணப் படம் தேவையா, இல்லையா என்ற கேள்வியைப் புறந்தள்ளுவோம். ஆனால், இந்தப் படம் மையப்படுத்தியுள்ள அந்த இளம்பெண்ணின் வழக்கு, இந்தியர்களின் மனசாட்சியை கீறியவண்ணம் உள்ளது என்பது உண்மை.
இந்த ஆவணப் படத்தையோ, இந்த வழக்கையோ பற்றி பேச்சு எழுந்தால், "ஏன் பழையக் குப்பையைக் கிளறவேண்டும்?" என்ற கேள்வி ஆங்காங்கே எழுகிறது. குப்பை என்று தெரிந்தும், அதை ஏன் மூடிவைக்க வேண்டும் என்று பதில் கேள்வியை எழுப்பலாம், அல்லவா?
பெண்களை தெய்வங்களாக கோவிலில் வைத்து வழிபடும் உலகக் கலாச்சாரங்களில், இந்தியா நிச்சயம் முதலிடம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகையக் கலாச்சாரத்தில், நம் குடும்பங்களில், நாம் வாழும் பகுதிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குப்பை, மலைபோல் வளர்ந்து வருகிறதே! இந்தக் குப்பையின் நாற்றம், இந்தியச் சமுதாயத்தின் மூச்சை ஒவ்வொருநாளும் இறுக்கி வருகிறதே! குப்பையை, குப்பை என்று ஏற்றுக்கொண்டால்தானே அதை அகற்ற முடியும்?  
எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ய சாட்டையைச் சுழற்றிய இயேசு, இந்திய சமுதாயத்தில் மண்டிக்கிடைக்கும் பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்கொடுமைகள், பெண் சிசுக்கொலை ஆகிய குப்பைகளை அகற்ற, அனைத்துலக மகளிர் நாளன்று தன் சாட்டையை ஏந்தி வரவேண்டும்... நம் மனசாட்சிகளைத் தட்டி எழுப்பவேண்டும் என்று செபிப்போம்.

01 March, 2015

Tragedies leading to Transfiguration உருமாற்றும் துன்பங்கள்

  
The new martyrs of Libya


2nd Sunday of Lent
The video clipping released by ISIS two weeks ago (February 15) shocked the world once again. 21 Coptic Christians from Egypt were brutally murdered by the ISIS on the shores of Libya. While some countries are thinking on the lines of ‘eye-for-an-eye’ strategies, a 60 year old mother, who had lost two of her sons in this tragedy, and her youngest son created waves of hope to say that the world will not become totally blind by ‘eye-for-an-eye’ formula. They also teach all of us how to view personal tragedies with the eyes of faith.
When Bishoy Estafanos Kamel, aged 25, and his younger brother Samuel Estafonas Kamel, aged 23, were killed by ISIS, they died calling out the name of Christ. Their younger brother, Beshir Kamel, aged 21, gave an interview in Sat 7 Arabic, a Christian Satellite TV channel operating in the Middle East. What Beshir said in that interview speaks volumes about this young man and his mother.
Beshir thanks the ISIS for releasing that video since it has had a faith-affirming effect on him and the people of the village: “(My brothers) are a pride to Christianity. I am proud of them and I walk with my head held high. ISIS gave us more than we could have asked from them when they didn’t edit out the part where they declared their faith and called out the name of Jesus Christ. ISIS has helped us strengthen our faith. Yes, believe me. I thank ISIS because they did not cut out the audio when they screamed declaring their faith.”
What Beshir shared about his mother is quite touching. When Beshir asked his mother what her response would be if she came across an IS man on the street, she said, “I will ask God to open his eyes and invite him to our house.”

The massacre carried out by ISIS in cold blood has been interpreted as a witnessing to faith by Beshir and his mother. This tragic event and its interpretation, in a remote way, remind me of Abraham leading his son Isaac to be sacrificed on a mountain.
In many religions, animals are sacrificed at the altar by slitting their throats. If Abraham had gone on with his sacrifice of Isaac, probably he would have treated his son as a sacrificial lamb and slit his throat. The ‘ritual’ of killing that ISIS has adopted, reminds us of these sacrifices. When the people of the village of al-Aour, from where many of the victims have hailed, saw the video of the killing of their kith and kin, they were probably reminded of the Biblical sacrifices.  That is why Beshir, in his interview said, “In fact, in the village, more than feeling sad, they are feeling happy and congratulating one another because so many from the village laid down their lives for Jesus Christ.” 

We know of many persons who have been tested beyond reasonable limits and how they have been shining examples of trust and faith in God. The Bible has many such examples, starting with Abraham. Right from the moment God took over the life of Abraham, he was put through many trials. The test presented to us in today’s first reading (Genesis 22: 1-18 – selected texts) was, probably, the greatest of them all – namely, to kill his own son and offer him as a sacrifice to God. 

God chose a mountain top for this painful sacrifice. Abraham must have grown up with the hope that God lived on mountains and a person meeting God on a mountain, would come down filled with God’s gift. Now, when Abraham goes up the mountain, he will not be filled; but, rather, he would be deprived of the precious gift God had given him at the ripe old age of 100. This was a reversal which was way beyond Abraham’s reasoning capacity. Still Abraham begins this torturous journey, relying not on his reasoning, but his faith.
The test of Abraham was more poignant in that he had to travel three days with his son Isaac to perform this sacrifice. What would they have spoken? Every time Abraham saw his beloved son, his heart must have bled. Why would God do this? Isn’t it already cruel enough to ask Abraham to sacrifice his son? Then, why make him go through this torture of three days?
At the end of these three days, when they reach the mountain, Abraham makes his son Isaac carry the firewood meant for his own sacrifice. When Isaac poses the innocent question about the lamb, Abraham must have turned aside and mumbled the famous line: “God will provide!”

Some scripture scholars would explain this incident as a fore-shadow of the Sacrifice of Jesus on Calvary. The Passion of Jesus was spread over three days of torture. Like Isaac, Jesus also carried the wood on which he would be sacrificed. The torture that Abraham had to undergo was an indication of what God the Father would undergo during the Passion and Death of His own Son.

Abraham went up the mountain to perform a sacrifice. He returned home filled with God-experience and blessings. The Gospel of today (Mark 9: 2-10) talks of the three disciples who went up the mountain and met God. This would strengthen them for later sacrifices in their lives. Sacrifices either precede or follow God-experience. This is clear also in the case of the Coptic Christians of Egypt who feel proud of their sons laying down their lives for Christ.

Deep experiences of God should take us back to the people. This is what happens in the final part of the Transfiguration event. Peter wanted to prolong the ‘experience’ by erecting tents. God intervened and said, “This is my Son. Listen to him.” That was an indirect reminder to Peter as well as to us, not to be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

As we conclude, let us turn our minds back to Beshir, who at the end of his interview was asked to pray and he, without any hesitation, obliged. Responding quickly to a request from the TV programme host, Beshir prayed openly saying: “Dear God, please open their (ISIS) eyes to be saved and to quit their ignorance, and the wrong teachings they were taught.”
Let us pray earnestly for ISIS as well as for many other fundamentalists, who, in the name of God and religion tend to promote more and more hatred in this world. May they be ‘transfigured’ into full human beings!

Abraham sacrificing Isaac - TIZIANO Vecellio

இருவாரங்களுக்கு முன், ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட ஒரு வீடியோ தொகுப்பு, உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது. லிபியா கடற்கரையில் 21 கிறிஸ்தவ இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு கொலையுண்ட காட்சி, அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இக்கொடூரத்தைக் கண்ட உலக அரசுகளில் சில, பழிக்குப் பழி என்ற பாணியில் பேசி, செயலாற்றி வருகின்றனர். ஆனால், இந்தக் கொடூரத்தில் தன் இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது இளைய மகனும் கூறிய வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகின்றன.
ஒருவாரத்திற்கு முன்னர் எகிப்து தொலைக்காட்சியில் Beshir என்ற 21 வயது இளைஞன் வழங்கிய பேட்டியொன்று வெளியானது. Beshirன் இரு அண்ணன்களான, Bishoy Estafanos Kamel என்ற 25 வயது இளையவரும், அவரது தம்பி Samuel Estafanos Kamel என்ற 23 வயது இளையவரும் கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர். இந்த நிகழ்வைக் குறித்தும்ISIS தீவிரவாதிகள் குறித்தும் இளையவர் Beshir பேசுகையில், "என் அண்ணன்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை, இனி தலைநிமிர்ந்து இவ்வுலகிற்குச் சொல்வேன். என் அண்ணன்கள் கொலையுண்டதை வீடியோ படமாக ஊடகங்களில் வெளியிட்ட ISIS குழுவினர், எதிர்பாராத வகையில் ஒரு கொடையை எங்களுக்கு அளித்துள்ளனர்" என்று Beshir கூறியது ஆச்சரியமாக இருந்தது.
இளையவர் Beshir தொடர்ந்து பேசினார்: "அந்த வீடியோவின் ஒலிப்பதிவை மௌனமாக்காமல், ISIS குழுவினர், அப்படியே வெளியிட்டதால், என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் சொன்னது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. ISIS குழுவினர் நினைத்திருந்தால், அந்த ஒலியை மௌனமாக்கிவிட்டு, வெறும் வீடியோவை மட்டும் அனுப்பியிருக்கலாம். ஆனால், ஒலிப்பதிவை மாற்றாமல், அதை அப்படியே அனுப்பியதற்காக அவர்களுக்கு நன்றி" என்று Beshir கூறினார்.
இளையவர் Beshir அந்த நேர்காணலில் தன் தாயைக் குறித்து சொன்னதும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. Bishoy, Samuel என்ற இரு மகன்களையும் பறிகொடுத்த தன் தாயிடம், "அம்மாISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?" என்று Beshir கேட்டபோது, அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை என் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று கூறியதாக, Beshir தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

ISIS தீவிரவாதிகள், 21 இளையோரின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த கொடூரத்தையும், இந்தத் தொலைக்காட்சி நிகழ்வையும் ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணங்கள் உண்டு. பெரும்பாலான மதங்களில் மிருகங்களை இறைவனுக்குப் பலி செலுத்தும்போது, அவற்றின் கழுத்தை அறுத்துக் கொல்வது வழக்கம். இந்த வழக்கத்தை மறைமுகமாக நினைவுறுத்தும் வண்ணம், ISIS தீவிரவாதிகள், மனிதர்களின் கழுத்தை அறுத்துக் கொல்லும் வீடியோக்களை கடந்த சில மாதங்களாக ஊடகங்கள் வழியே வெளியிட்டு வருகின்றனர். வெறுப்புடன் அவர்கள் மேற்கொண்டுவரும் அந்தக் கொடூரத்திலும் நன்மையைக் கண்டு, தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் தாயும், இளையவர் Beshirம், ‘விசுவாசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாமை நம் நினைவுக்குக் கொணர்கின்றனர்.

ஆபிரகாமின் வாழ்வு, அமைதியான வகையில் அமையவில்லை. அவர் மனதில் வேர்விட்டு வளர்ந்திருந்த விசுவாசத்திற்கு சவாலாக பல நிகழ்வுகள் அவர் வாழ்வில் தொடர்ந்தன. அந்தச் சவால்களின் சிகரமாக, அவர் விசுவாசத்தின் ஆணிவேரையே ஆட்டிப்படைக்கும் ஒரு சவால், கடவுளிடமிருந்து வந்ததை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. (தொடக்க நூல் 22: 1-2, 9-13, 15-18)
இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100. ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை. மலைகள், இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற பாரம்பரியத்தில் வளர்ந்தவர் ஆபிரகாம். ஆபிரகாமுக்கு இறைவன் காட்டிய அந்த மலையில், தனக்கு நிறைவைத் தரும் இறைவனைச் சந்திப்பதற்குப் பதில், தன்னிடம் உள்ளதைப் பறித்துச்செல்ல வரும் இறைவனைச் சந்திக்கப் போவது, ஆபிரகாமின் விசுவாசத்திற்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.
ஒரு நொடியில் தலைவெட்டப்பட்டு உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில், அல்லது, மாதக் கணக்கில் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அந்தச் சித்ரவதையை ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட பலியை வீட்டுக்கருகில், ஓரிடத்தில், ஆபிரகாம் நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார்.
அதுமட்டுமல்ல... அவர்கள் மலையடிவாரத்தை அடைந்ததும், சிறுவன் ஈசாக்கின் தோள்மீது ஆபிரகாம் விறகுக் கட்டைகளைச் சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு ஆர்வமாக மலைமீது ஏறுகிறான். போகும் வழியில்,  தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அச்சிறுவனின் கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். உண்மையான பதிலைச் சொல்லமுடியாமல், ஆபிரகாம் "கடவுளே பார்த்துக்கொள்வார்" என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பினார்.
மகனைப் பலிதருவது என்பதே, கொடூரக் கட்டளை. அக்கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற முடியாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது.
ஆன்மீக விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு, பல வழிகளில் கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. ஆபிரகாமும் ஈசாக்கும் மேற்கொண்ட மூன்றுநாள் பயணத்தைப் போல, இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்ததுபோல், இயேசு சிலுவை சுமந்தார். ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் ஆபிரகாம் தவித்தார். பாடுகளின்போது இயேசு கேட்ட கேள்விகளுக்குத் தந்தை பதில் ஏதும் தரவில்லை... இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும் இயேசுவின் பாடுகளின்போது வேதனை அடைந்தார் என்பது ஆன்மீக விரிவுரையாளர்கள் தரும் ஒரு விளக்கம்.

மகனைப் பலிகேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். லிபியா கடற்கரையில் தன் இரு மகன்களை பலிகொடுத்த தாயும், அண்ணன்களை இழந்த இளையவர் Beshirம் அந்த வேதனைத் தீயில் புடமிடப்பட்டு, இறை அனுபவம் பெற்றுள்ளனர் என்பதை Beshir அளித்த பேட்டியில் நாம் உணரலாம். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்கத் தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.
இறை அனுபவம், எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், நானும் கடவுளும் என்று, அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு உருமாறிய நிகழ்வின் கடைசிப் பகுதி நமக்குச் சொல்லித்தருகிறது. "நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு, மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் என்பதே.
அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? ‘இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி, நம் பணியைத் தொடர்வோம் என்று இயேசு கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்களும், கோவில்களும் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறை அனுபவம் பெற்ற அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
ஆபிரகாமுக்கு இறைவன் அளித்த சவாலைப் போல, இன்று உலகில் பலர் தங்கள் நெருங்கிய உறவுகளை பலச் சூழல்களில் பலிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இறைவனை நம்பி தன் மகனைப் பலிதர துணிந்த ஆபிரகாமைப் போல, தன் இரு மகன்களின் கொடூரப் பலியைக் கண்டபின்னரும், அன்பையும், மன்னிப்பையும் சுமந்து வாழும் எகிப்து நாட்டின் தாயைப் போல, தன் அண்ணன்களின் மறைசாட்சிய மரணத்தால் விசுவாசத்தில் உறுதி அடைந்துள்ள இளையவர் Beshirஐப்போல, உலகினர் அனைவரும் நம்பிக்கையையும், மன்னிப்பையும் வளர்க்கும் வழிகளைக் காண இறைவனின் வரங்களை வேண்டுவோம்.
ISIS தீவிரவாதிகளுக்கும், இன்னும், உலகில் வெறுப்பை வளர்க்கும் பல்வேறு குழுவினருக்கும் ஒரு சிறப்புச் செபத்துடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். எகிப்து தொலைக்காட்சி பேட்டியின் இறுதியில், தொகுப்பாளர், இளையவர் Beshirஇடம் ஒரு செபம் சொல்லும்படி கேட்டதும்Beshir எவ்வித தயக்கமும் இன்றி செபித்தார்: "அன்புநிறை இறைவா, ISIS குழுவினரின் கண்களைத் திறந்தருளும். அவர்களுக்குத் தவறான பாடங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்து, தங்கள் அறியாமையிலிருந்து அவர்கள் வெளிவர உதவியருளும்" என்று இளையவர் Beshir கூறிய செபத்தில் நாமும் இணைவோம். மதங்களின் பெயரால், இறைவனின் பெயரால் மக்கள் மனதில் வெறுப்பையும், பழி உணர்வுகளையும் வளர்க்கும் அனைத்து வன்முறையாளர்களும் தங்கள் அறியாமையையும், தவறுகளையும் உணர்ந்து உண்மையை விரைவில் கண்டுணர சிறப்பாகச் செபிப்போம்.


22 February, 2015

‘Spring’ing slowly and steadily மெதுவாக வரும் வசந்த காலம்

Lenten Season

I Sunday of Lent – Temptations of Jesus 

We have begun the Lenten Season a few days back. Etymologically, the word ‘Lent’ has two references in two different languages. In Latin, Lent comes from the word ‘lente’ which means ‘slowly’. The word ‘Lenten’ comes from the Anglo Saxon word ‘Lencten’ which signifies ‘Spring’. (‘Lencten’ or ‘Lengten’ – simply denotes the ‘lengthening’ of the daytime. This implies that winter is getting over…and Spring is at hand). When we combine ‘slowly’ and ‘spring’, we arrive at a comparative imagery between Lent and Spring. As the spring – slowly and steadily – renews the face of the earth, Lent renews us! The opening lines of the Lenten Message of Pope Francis echo these sentiments: Lent is a time of renewal for the whole Church, for each communities and every believer. Above all it is a “time of grace” (2 Cor 6:2).

Usually, when we think of the Season of Lent, the symbols of ash and sackcloth dominate our imagination. For a change, it might be better to think of the Lenten Season in terms of Spring.
In countries that have the four clear seasons, winter is preceded by the fall season. During these two seasons which extend to five or six months, trees and plants are pretty barren, devoid of leaves. A cursory, quick look at plant life during these months would make one easily assume that these plants and trees are ‘as good as dead’.
‘As good as dead’ sounds like a contradiction. What is good about being dead? This is the whole mystery of the Lenten Season and the Paschal Season… Death is a doorway to life. Under the heavy cover of snow, life begins to germinate. Come Spring… life will be in full bloom. Lenten Season (Spring) is an invitation to believe that death is not the last word. Moreover, Spring does not spring a surprise on us by overnight changes. These changes – the life affirming changes – take place ‘lente’ – ‘slowly’!

Every year we begin the Season of Lent with Ash Wednesday. When the ash is applied on our forehead, the priest says: “Repent and believe in the Gospel”. The older formula for this ritual was: “Thou art dust and to dust thou shalt return!” From the position of seeing ash as a sign of destruction, we have moved to a better position of seeing ash as a symbol of change and conversion! From ash new life is expected to spring up! Ash to life is best demonstrated by Phoenix!

The legendary bird Phoenix is a good symbol for Lent since this bird rises anew from what is apparently dead and totally destroyed. Here is what Wikipedia says about this bird: A phoenix is a mythical bird... It has a 500 to 1,000 year life-cycle, near the end of which it builds itself a nest of twigs that then ignites; both nest and bird burn fiercely and are reduced to ashes, from which a new, young phoenix or phoenix egg arises, reborn anew to live again. The new phoenix is destined to live as long as its old self…
Life emerging out of fire and ashes… We are so accustomed to seeing fire as a source of destruction. We forget that fire can be life-infusing as in the case of the Phoenix.

The lovely assurance that death and destruction are not the last words, comes to us in the First Reading. God promises a revival of the earth after the great deluge and also places the lovely symbol of the rainbow. Rainbow has been used as a symbol of hope across the world.
Genesis 9: 8-15
Then God said to Noah and to his sons with him, "Behold, I establish my covenant with you and your descendants after you, and with every living creature that is with you, the birds, the cattle, and every beast of the earth with you, as many as came out of the ark. I establish my covenant with you, that never again shall all flesh be cut off by the waters of a flood, and never again shall there be a flood to destroy the earth." And God said, "This is the sign of the covenant which I make between me and you and every living creature that is with you, for all future generations: I set my bow in the cloud, and it shall be a sign of the covenant between me and the earth. When I bring clouds over the earth and the bow is seen in the clouds, I will remember my covenant which is between me and you and every living creature of all flesh; and the waters shall never again become a flood to destroy all flesh.

Every year, on the First Sunday of Lent, the Church invites us to reflect on temptation. The word ‘temptation’ usually brings in a scary feeling in most of us. It makes us feel uncomfortable. Yet it is an essential part of human life. No one escapes temptation… not even Jesus. Today’s Gospel talks about this. How do we see temptation and the tempter (called variously as… Satan, devil, the evil one, whatever)?
A few years back, I was discussing this topic with a priest friend of mine. The moment he saw the theme ‘temptation’, he broke into an old Tamil film song that talked of the hero being crushed by trials and temptations. (Sothanai mel sothanai podhumadaa saami) Lord, enough of this wave after wave of temptations and trials, the hero cries! One can easily feel the sense of desperation that runs through that song.
For people who believe strongly in fate, temptations are seen as a predestined plan to attack us for no reason at all. Temptations are like flash floods that carry us alive. When we begin to imagine temptations in such a way, we seem to give undue power to them. We know that temptations are powerful. But, are we simply puppets in the hands of the tempter? Assigning so much power to temptations and the evil forces, leaves us with a lot of negativity about life. It also ignores so much of positive capabilities in us.

Our generation suffers from what I would call ‘the negative-syndrome’. Part of this ‘negative syndrome’ comes from our media which revels in highlighting disasters, destruction, scandals and more tragedies. Why do the media indulge in these? Nothing sells like tragedy and disaster. That is why.
We know that the world is a mixed bag of the good and the bad. For every disaster that happens, there are many more blessings that happen too. The earthquake that devastated Haiti, and the earthquake and the tsunami that destroyed parts of Japan ‘made good business’ for the media. There were many distressing facts and figures. There were equally, if not more, uplifting events. The media was more interested in reporting the negatives more than the positives. Since we hear and see such negative news day after day, we tend to give up on the world very quickly. The temptation of believing that there are far too many evil forces around us and that we can do nothing about them is the most dangerous temptation our present generation needs to face!

We can do something about them. The least that we can do is not to entertain them. Here is the story of a young person who entertained temptation that came in the form of a snake… a repetition of the story of Genesis!
Many years ago, Indian braves would go away in solitude to prepare for manhood. One hiked into a beautiful valley, green with trees, bright with flowers. There, as he looked up at the surrounding mountains, he noticed one rugged peak, capped with dazzling snow. “I will test myself against that mountain,” he thought. He put on his buffalo hide shirt, threw his blanket over his shoulders and set off to climb the pinnacle. When he reached the top, he stood on the rim of the world. He could see forever, and his heart swelled with pride. Then he heard a rustle at his feet. Looking down, he saw a snake. Before he could move, the snake spoke.” I am about to die," said the snake. "It is too cold for me up here, and there is no food. Put me under your shirt and take me down to the valley" "No," said the youth. "I know your kind. You are a rattlesnake. If I pick you up, you will bite, and your bite will kill me." "Not so," said the snake. "I will treat you differently. If you do this for me, I will not harm you." The youth resisted awhile, but this was a very persuasive snake. At last the youth tucked it under his shirt and carried it down to the valley. There he laid it down gently. Suddenly the snake coiled, rattled and leaped, biting him on the leg. "But you promised," cried the youth. “You knew what I was when you picked me up,” said the snake as it slithered away. (Guideposts, July, 1988).

May this Lent bring in slow and steady changes in us so that our lives can bring about life-giving spring into the world which seems to be frozen under the winter of death, destruction and despondency!
 
Japanese Phoenix rising from ashes

தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். இந்த வழிபாட்டு காலத்தைப் பற்றிய நமது எண்ணங்களை இந்த ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் தெளிவுபடுத்த முயல்வோம். தமிழில் தவக்காலம் என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.
Lent என்ற வார்த்தை, 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், 'lente' என்பதற்கு, ‘மெதுவாக என்று பொருள். Lenten என்ற வார்த்தை Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு அர்த்தங்களையும் இணைக்கும்போது உருவாகும் மெதுவாக வரும் வசந்தகாலம் என்ற சொற்றொடர், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.
உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். இந்தக் குளிர்காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், முதலில் தங்கள் இலைகளை இழந்து, பின்னர் பொழியும் பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில் தாவரங்களைப் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும் சிறு துளிர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பரந்து கிடக்கும் பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும்.
ஆறு மாதங்களாய் உயிரற்றது போல் காணப்படும் தாவர உலகம், திடீரென, ஓரிரவில், பூத்துக் குலுங்குவது கிடையாது. மெதுவாக, மிக, மிக மெதுவாக, நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காத வகையில் வசந்த காலம் வந்து சேர்கிறது. மெதுவாக, நிதானமாக, ஆறஅமர மாற்றங்களை உருவாக்கும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று சோகமான, துயரமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால், தவக்காலம், மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய தவக்காலச் செய்தியின் துவக்கத்தில் கூறும் வார்த்தைகள், இவ்வெண்ணங்களை எதிரொலிக்கின்றன: "திருஅவை முழுவதும் மறுமலர்ச்சி பெறும் காலம், தவக்காலம். தனி மனிதரும்குழுமங்களும் மறுமலர்ச்சி பெறும் காலம் இது. அனைத்திற்கும் மேலாக, 'இதுவே அருள்நிறை காலம்' (2 கொரி. 6:2)" என்று திருத்தந்தை தன் தவக்காலச் செய்தியைத் துவக்கியுள்ளார். வசந்தம்கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்தபோது, "மனம் திரும்பி நற்செய்தியை நம்புவாயாக" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலைப் பூசும் நேரத்தில் அருள் பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்."

சாம்பலை அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப் பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, புராணப் பறவையான Phoenix ஓர் அழகிய எடுத்துக்காட்டு. Phoenix பறவை, தன் வாழ்வு முடியப்போகிறது என்று உணரும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும்போது, அச்சாம்பலிலிருந்து அடுத்தத் தலைமுறையான பறவை வெளிவரும். புராணங்களில் சொல்லப்பட்டுள்ள இந்தப் பறவை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கிவிட்டு சிந்தித்தால், கற்பனையில் நாம் காணும் இக்காட்சி, ஓர் அடையாளமாக, பாடமாக அமையும்.
நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை! நெருப்பை, அழிக்கும் கருவியாகவே அதிகம் பார்த்து பழகிவிட்ட நமக்கு, அழிவுக்குள் நிகழும் அற்புதங்களை மறந்துபோக வாய்ப்புண்டு. நெருப்பைப்போலவே, நீரும், பெருவெள்ளமாக வரும்போது, அழிவுகளைக் கொணரும் என்பதை நாம் அறிவோம். அத்தகையதோர் அழிவிலிருந்து அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய முதல் வாசகம். நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் தொடக்க நூலில் இவ்வாறு ஒலிக்கின்றன:
தொடக்கநூல் 9: 8-15
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தை, புத்துயிர் தரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று பகிரக்கூடிய மறையுரையைப் பற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்றோ, அல்லது, இதையொத்த வார்த்தைகளையோ பயன்படுத்தியிருப்போம். இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி, ஓர் இயலாத் தன்மையை மனதில் வளர்த்திருப்போம்.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் உறுதியான மனமும் உள்ளது. இதையும் நாம் நம்ப வேண்டும்.

நாம் வாழும் உலகில் நல்ல, ஆக்கப்பூர்வமான செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், ஒரு சாபக்கேடாக, நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்துத் தொடர்புச்சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவற்றையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.

இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் துவக்கினார். இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.


15 February, 2015

Respectable Leprosy Patient மதிப்பு நிறைந்த தொழுநோயாளி

Jesus heals a leprosy patient
  
6th Sunday in Ordinary Time
World Day of the Sick
World Leprosy Day
Pope St John Paul II was diagnosed with Parkinson’s disease in the 90’s. Some sources say that it was 1993. But, a few other sources say that it was already in 1991. Pope John Paul II had been diagnosed with Parkinson's disease as early as 1991, an illness which was only disclosed later, and it is significant that he decided to create a World Day of the Sick only one year after his diagnosis. (Wikipedia)
Let us not bother about the ‘when’ of his illness. We can learn so much from ‘what’ the Holy Father did when he learnt of his illness… lessons as to how we can view sickness and, more especially, how we should treat those who are sick. The whole world witnessed how St John Paul II suffered from his debilitating sickness during the final decade of his life. During this frail phase of his life, he identified himself with the suffering humanity in a very noble way. In the year 1992 he established the World Day of the Sick. He declared February 11, the Feast of our Lady of Lourdes, as a special day to remember the sick people the world over.
It is no surprise that the Feast of our Lady of Lourdes was selected as this special Day, since millions of sick people have flocked to our Lady of Lourdes for more than 150 years. It was in 1862, Pope Pius IX authorized Bishop Bertrand-Sévère Laurence to permit the veneration of the Blessed Virgin Mary in Lourdes. Last Wednesday, on the Feast Day of Our Lady of Lourdes, we also celebrated the 23rd World Day of the Sick. Celebrating World Day of the Sick? Yes… We don’t celebrate sickness, but we can, and, must celebrate the courage and faith of those who are sick.

It sounds a bit strange that we are talking of celebrating the World Day of the Sick on February 14th, when the world celebrates Valentine’s Day. It is a pity that many of the meaningful Days like the Valentine’s Day, Mother’s Day, Father’s Day and Friendship Day … have all been misappropriated or stolen by the commercial, advertising world. The original purpose of these days – namely, the celebration of gratitude for parental care, love and friendship – has been buried under the heap of flowers and gifts! The commercial world won; and we, the people, lost! Fortunately, the commercial world has not set its eyes on the World Day of the Sick. It probably will not, since this day does not offer an opportunity for promoting merchandise.
Similarly there is another day that passed by the commercial world without drawing its attention. That was the World Leprosy Day. World Leprosy Day is observed internationally on January 30 or its nearest Sunday to increase the public awareness of the Leprosy or Hansen's Disease. This day was chosen in commemoration of the death of Gandhi, the leader of India who understood the importance of leprosy. (Wikipedia) This Sunday’s Liturgy invites us to think of the Sick, especially those who are sick with the dreaded disease called Leprosy.

In my Sunday Reflections I usually take Biblical quotes from the Revised Standard Version (RSV). Today I am quoting from the Contemporary English Version (CEV) for reasons I shall explain.
Here are the first three verses of today’s gospel passage from CEV:
Mark 1: 40-42 - Contemporary English Version (CEV)
A man with leprosy came to Jesus and knelt down. He begged, "You have the power to make me well, if only you wanted to." Jesus felt sorry for the man. So he put his hand on him and said, "I want to! Now you are well." At once the man's leprosy disappeared, and he was well.

Why did I choose CEV over RSV? Obviously, because of the opening line. While CEV identifies the sick person as ‘a man with leprosy’, RSV identifies him as ‘a leper’. There is a world of difference between the expressions ‘leper’ and ‘man with leprosy’ or ‘leprosy patient’. The word ‘leper’ talks of what the person is… By saying that someone IS a disease, we tend to see him or her as a lesser human being or, as in the case of leprosy… no human being at all. The term ‘leprosy patient’ talks of what the person has… a human person suffering from a disease. Why make such a big fuss about words?... you may wonder. Well, words form thoughts and we need to be careful about our vocabulary… Out of the fullness of the heart the mouth speaks… True. But, out of what our mouth keeps speaking, the heart can also be filled with right or wrong thoughts.

As human beings, we can truly feel proud about the progress we have made in the diagnosis as well as the treatment of leprosy or Hansen’s disease. We can feel more proud about the way we have brushed up our vocabulary regarding those afflicted with this disease. We have become much more sensitive and therefore more respectful in labelling these persons who are sick with leprosy. Contemporary English has progressed in being more gender-sensitive and more sensitive towards those who are sick. We no longer use terms like chairman, housewife, blind, deaf, handicapped, leper etc. From this perspective, the Gospel today is Good News not only in terms of its content but also in terms of form. We need to search within ourselves and see whether the ‘form’ (namely, the words) we use is only a matter of lip-service or does it also indicate a change in our inner attitude.

Turning our attention to the content of today’s gospel, we admire the courage of the man with leprosy who took the risk of coming before Jesus. The plight of a leprosy patient was very tragic among the Israelites. This is explained in today’s first reading from Leviticus 13: 44-46. When this person had to come into the town, he had to ring a bell and warn the others so that they kept away from him. If by chance someone was touched by the leprosy patient or if someone touched this person, he / she became impure… For such accidental contacts the leprosy patient might have been stoned to death. The mosaic rules were very inhuman. Jesus broke this Mosaic law and touched the leprosy patient, thus making himself impure and even an outcast. Jesus wanted the healing of not only the leprosy patient but also the crowd around Him.
Last week and this week we have been reflecting on the healing miracles of Jesus. Last week we said that the healing of a person begins with one’s personal belief of getting cured. Without this belief, cure is not possible. Similarly, in today’s gospel we see that if a person is given his / her human dignity, then full healing is possible.
Through the intercession of Our Lady of Lourdes let us pray that all of us experience God’s healing hands on each of us. May our Mother guard and protect especially those who suffer not only physical illness, but the pain of social segregation!


பிப்ரவரி 11, கடந்த புதனன்று, புனித லூர்து அன்னையின் திருநாளைக் கொண்டாடினோம். அதே நாளன்று, தாய் திருஅவை, நோயுற்றோர் உலக நாளையும் சிறப்பித்தது. திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், 1992ம் ஆண்டு உருவாக்கிய நாள் - நோயுற்றோர் உலக நாள். பார்கின்சன்ஸ் (Parkinson's) நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த புனித 2ம் ஜான்பால் அவர்கள், உலகெங்கும் பல்வேறு நோய்களால், அதுவும், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோருடன் தன்னையே இணைத்துக் கொள்ளவும், நோயுற்றோர் மீது கத்தோலிக்கர்கள் தனி அக்கறை கொள்ளவும் உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார்.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று இந்த உலகதினம் கொண்டாடப்படுகிறது. லூர்து நகருக்குச் செல்லும் கோடான கோடி நோயாளர்கள் அன்னை மரியாவின் பரிந்துரையால் நலமடைந்துள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை. அதிகாரப்பூர்வமாக 69 புதுமைகளே இத்திருத்தலத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளன என்றாலும், இன்னும் பல்லாயிரம் திருப்பயணிகள், அன்னையின் பரிந்துரையால் மனதாலும், உடலாலும் குணம் அடைந்திருப்பர் என்பதை அனைவரும் அறிவோம். எனவே, இந்தத் திருநாளை நோயுற்றோர் உலக நாளாக புனித 2ம் ஜான்பால் அவர்கள் தேர்ந்ததில் வியப்பு ஏதுமில்லை. கடந்த புதன், பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளை நாம் கொண்டாடியபோது, 23வது உலக நோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம்.
நோயாளருக்கென ஒரு தினமா? என்று நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும், எதிர்மறையான எண்ணங்களே பெருமளவு நம் மனதில் உருவாவதால், நாம் இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். நோய் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான, எண்ணங்களிலிருந்து விடுதலை பெற இந்த ஞாயிறு மீண்டும் ஒருமுறை நமக்கு வாய்ப்பு தரப்படுகிறது. மனித வாழ்வின் மறுக்கமுடியாத உண்மைகளான நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களை அசைபோட, அவற்றிலிருந்து நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில தொடர்ந்து இரண்டாவது வாரமாக, நோயுற்றோரை இயேசு குணமாக்கும் நிகழ்வை இந்த ஞாயிறன்றும் சிந்திக்க வந்திருக்கிறோம்.
நலம் பெறுவதற்கு மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்கான முதல் படி, தான் நலமடைவோம் என்று அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. இதையும் மறுக்க இயலாது. இந்த நம்பிக்கையின் ஊற்றான இறைவனை நாடிவரும்போது, குணமடைவது இன்னும் எளிதாகிறது.

Henry Mitchell என்ற பேராசிரியர் கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர் தேவையற்ற அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் Mitchell அவரிடம் சொன்னார். மருத்துவரோ மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவதையே நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவதென்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார். இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin Franklin) வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.

ஒருவர் நலம் அடைவதற்கு, இறைவனின் அருள், நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில் நம் சிந்தனைகள் அமையவேண்டும்.
நலமடைவோம் என்ற நம்பிக்கை, நோயாளியிடம் வளர்வதற்கு, அவரைச் சுற்றியிருப்போரும் உதவவேண்டும். இந்த நம்பிக்கையை அவர்கள் இழந்தால், அதன் தாக்கம் நோயாளியிடம் வெளிப்படும். குறிப்பாக, 'தீராத நோய்கள்' என்றழைக்கப்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவரும், அவரைச் சுற்றியிருப்போரும், நம்பிக்கையின்றி மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பது கொடுமையான ஒரு சூழல். இன்னும் குறிப்பாக, ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்திலிருந்து விலக்கிவைக்கப் படுவது, கொடுமையின் உச்சம். இத்தைகைய ஒரு கொடுமையைச் சந்திக்கும் 'தொழுநோயாளர்'களைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

உலக நோயாளர் தினத்தை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் கடைபிடித்த மற்றொரு முக்கியமான நாளும் நமக்கு நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி அல்லது அதற்கு நெருக்கமாக வரும் ஞாயிறன்று உலகத் தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 25, ஞாயிறன்று நாம் உலகத் தொழுநோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம். மனித வரலாற்றில் பதிந்துள்ள மிகப் பழமையான நோய், தொழுநோய். அன்று முதல் இன்று வரை, மனிதர்கள் மத்தியில் பயத்தையும், அருவருப்பையும் உருவாக்கிவரும் நோய் இது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த நோய் கண்டவர்கள் அனுபவித்துள்ள, இன்றும் அனுபவித்துவரும் கொடுமைகள் ஏராளம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகின்றன. இன்றைய நற்செய்தியின் முதல் மூன்று இறை சொற்றொடர்களை நாம் கேட்போம்:
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இந்த வார்த்தைகளை நற்செய்தி என்று உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்ச்சியைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நல்ல செய்திதான். அந்த வார்த்தைகளைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இந்த நற்செய்தியில் இயேசுவை அணுகிய தொழுநோயாளரைக் குறிப்பிடும் வார்த்தைகள், மரியாதை கலந்த வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தொழுநோயாளருக்கு மரியாதை தருவதைப்பற்றிப் பேசுவதில் என்ன பெரிய வியப்பு என்று உங்களில் சிலர் கேட்கலாம். நான் விளக்க முயல்கிறேன்.

நாம் இப்போது வாசித்த இப்பகுதி, 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட விவிலியப் பதிப்பில் காணப்படும் வார்த்தைகள். இதற்கு முந்தையப் பதிப்பில் தொழு நோயாளரை குறிப்பிட, அவன், இவன் என்ற மரியாதை குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதையை வழங்குவது நாம் அண்மையில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம்.
30 வருடங்களுக்கு முன் வெளிவந்த விவிலியப் பதிப்பில், தொழுநோயாளர் என்ற வார்த்தைக்குப் பதில், 'குஷ்டரோகி' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக இப்போது ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளைப்  பயன்படுத்துகிறோம். குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது, இந்த நோய் உடையவர்கள் ஏதோ அந்த நோயாகவே மாறிவிட்டதைப் போல எண்ணி, அவர்களை மனிதப் பிறவிகளாகவே நாம் பார்க்கவில்லை. இன்றும் இந்த நிலை தொடர்வது வேதனைக்குரிய ஒரு போக்கு.
குஷ்டரோகி என்பதற்கும், தொழு நோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன.
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயினால் உருவாகும் காயங்களை விட, வார்த்தைகளால் உருவாகும் காயங்கள் மிக ஆழமானவை, ஆறாதவை என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்., உணர்ந்தும் இருக்கிறோம். வார்த்தைகளை மாற்றும்போது எண்ணங்களும் மாறும் என்பது உண்மை. ஒருவரைக் குஷ்டரோகி என்று சொல்வதற்குப் பதில், அவர் ஒரு நோயாளி என்று சொல்லும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். குஷ்டரோகி என்று சொல்லும்போது உருவாகும் அருவருப்பு, தொழுநோயாளி என்று சொல்லும்போது உருவாவதில்லை. அவரைப்பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும். நாம் வார்த்தைகளில் காட்டும் மரியாதை வெறும் வாயளவு மந்திரங்களா அல்லது உள்ளத்தின் உண்மை உணர்வுகளா என்பதையும் நாம் அலசிப் பார்க்கலாம்.

நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர் யூதர்கள். அதிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது.
லேவியர் நூல் 13: 1-2, 44-46
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.
இஸ்ரயேல் மக்கள் தொழு நோயாளிகளை நடத்திய விதம் மிகக் கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வரவேண்டும். இந்த மணிசப்தம் கேட்டதும், எல்லாரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால் கல்லால் எறியப்பட்டு சாகவும் நேரிடும். இதெல்லாம் தெரிந்திருந்தும், இந்தத் தொழுநோயாளி இயேசுவிடம் வருகிறார். அந்த நம்பிக்கையே அவர் குணமடைந்ததற்கு முதல் படி.

இயேசு தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளைக் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் இயேசு தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளியைத் தொடுகிறார். இயேசுவின் இந்தச் செயல் சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளியும் குணமானார். இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும் குணமாகி இருக்கவேண்டும்.
இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் கடந்த இரு வாரங்களாக நற்செய்திகளில் கேட்டுவருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்களுக்கு, குறிப்பாக, தொழுநோயுற்றவர்களுக்கு மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதையைத் தருவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம்.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, (1858, பிப்ரவரி 11ம் தேதி முதல்...) தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர் அன்னை வழியே நாம் அனைவரும், குறிப்பாக, உலகில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சுவோம்.