19 February, 2017

Showing the other cheek, sowing peace அடுத்த கன்னம் காட்டுவதே, அமைதிக்கு வழி



Eye for an Eye or Turn the Other Cheek

7th Sunday in Ordinary Time

The giant truck eased into the parking lot of a highway motel. The driver went in and ordered a steak. Before he could eat it, in walked a motorcycle gang, with dirty leather jackets and long, unkempt hair. They took the man's steak, cut it into six pieces, and ate it. The driver said nothing. He simply paid the bill and walked out. One of the gang members said, "That man couldn't talk. He didn't say a word." Another one said, "He couldn't fight, either; he didn't lift a hand." A waiter added, "I would say that he couldn't drive either. On his way out of the parking lot, he ran over six motorcycles crushing all of them." Something in us loves that story. We tend to support what the truck driver had done – namely, ‘teaching a lesson’ to the motorcycle gang. We love stories and film scenes that present the ‘eye for an eye’ theme, in subtle and explicit ways.
‘Eye for an eye’, ‘tooth for a tooth’, ‘tit for tat’ etc. are not Christian ways, says Jesus in today’s Gospel. Some commentators say that the passage we have for this Sunday’s liturgy (Matthew 5: 38-48) is the core of the Sermon on the Mount. Let us try to understand the depth of the challenge proposed by Jesus in this passage. Jesus, not only challenges us, but challenges the Law of Moses.

Moses, taking a cue from the Hammurabi codes, instructed the Israelites to follow tit-for-tat retaliation, rather than to wreak total destruction upon their enemies. That is, instead of mutilating or murdering all the members of the offender’s family or tribe, they should discover the offender and only punish him/her with an equal mutilation or harm. This was the origin of the ‘an eye for an eye’ and ‘a tooth for a tooth’ law. Jesus challenged this law. “You have heard that it was said, ‘Eye for eye, and tooth for tooth.’ But I tell you, do not resist an evil person. If anyone slaps you on the right cheek, turn to them the other cheek also. And if anyone wants to sue you and take your shirt, hand over your coat as well. If anyone forces you to go one mile, go with them two miles. Give to the one who asks you, and do not turn away from the one who wants to borrow from you.” (Matthew 5: 38-42)

In this passage, Jesus makes a specific mention of getting slapped ‘on the right cheek’. Here, Jesus is not speaking only about the physical abuse of slapping, but also the insult one suffers by getting slapped on the right cheek. This is a clear case of adding insult to injury! Most of us are right-handed. So, when a person slaps another with the right hand, the slap lands on the left cheek. Only when the person who slaps, uses the back hand, he or she could slap another on the right cheek. This was usually the treatment given to the Jews by the Romans.

Paul Penley, a Bible schlar, has written an article titled: “Turning the Other Cheek”: Jesus’ Peaceful Plan to Challenge Injustice. Here he reflects on the words of Jesus in the cultural context of the Roman occupied Israel.

In Jesus’ day Roman soldiers strutted arrogantly around Israel. The Jewish land was Roman occupied territory. There was no love lost between the occupying soldiers and the Israelite population. When a soldier decided that he needed a Jew’s goods or services, resistance was futile. The Jewish subject better be quick to fetch water, strong enough to carry a load, and ready to give away his shirt or else. If the subject could not perform the request to the soldier’s liking, then a quick backhand to the face was not far behind. This was the situation Jesus addressed in the Sermon on the Mount.
“If someone slaps you on the right cheek, turn the other cheek toward him.” … Why would Jesus indicate that the first blow will come to the right cheek? Why would he instruct someone to offer the left cheek to an attacking Roman soldier?
The answer is simple. Roman soldiers tended to be right-handed. When they struck an equal with a fist, it came from the right and made contact with the left side of the face. When they struck an inferior person, they swung with the back of their right hand making contact with the right cheek. In a Mediterranean culture that made clear distinctions between classes, Roman soldiers backhanded their subjects to make a point. Jews were second-class.
When Jesus tells fellow Jews to expose the left cheek, he is calling for “peaceful subversion.” He does not want them to retaliate in anger nor to shrink in some false sense of meekness. He wants to force the Roman soldiers to treat them like equals. He wants the Jews to stand up and demand respect. He wants to make each attacker stop and think about how they are mistreating another human being. It is the same motivation behind his command to “go an extra mile” after a soldier forced you to carry water for the first mile (Matt 5:41). It is intended to activate the soldier’s conscience.
Jesus’ command to “turn the other cheek” is ultimately a call to peaceful resistance. It is the mantra of great men inspired by Jesus like Gandhi and Martin Luther King Jr… “Turning the other cheek” is not blanket acceptance of brutality. It is a strategy for motivating others to change. If you meet evil with evil and blow for blow, the cycle of vengeance will never end.
“Peaceful subversion” is one among many of Jesus’ plans for changing the world.

The idea of peaceful resistance, of restoring justice at the cost of one’s own pain, captured the imagination of Gandhi and Martin Luther King Jr. They were inspired by these words of Jesus to lead their non-violent resistance.
Here is a scene from the movie ‘Gandhi’! In this scene, Gandhi is shown walking with a friend Chalie Andrews who is a Presbyterian minister. The two suddenly find their way blocked by young thugs. The Reverend Andrews takes one look at the menacing gangsters and decides to run. Gandhi stops him and asks, "Doesn't the New Testament say if an enemy strikes you on the right cheek, you should offer him the left?" Andrews mumbles something about Jesus speaking metaphorically. Gandhi replies, "I'm not so sure. I suspect he meant you must show courage; be willing to take a blow, several blows, to show you will not strike back nor will you be turned aside."

When I was ‘googling’ with the phrase – ‘turning the other cheek’ – I came across very many life events that inspired me. These events are not simply stories of forgiveness. They are stories where the ‘enemy’ was won over by the ‘disciple’. Here is one of them:

A Short Lesson on Turning the Other Cheek - With Stories That Show How it is Better!
It was 8:30pm and over a hundred men and some women partners were all gathered in a park eating a really lovely meal served up to the poor and homeless in Sydney, Australia. One of my friends had finished his meal and was standing chatting when a big angry man came up and smashed him on the cheek with a punch. Nick, my friend, recovered from the shock and said, "Do you need to do that again?" The thug hit him with another hard punch and he got the same reply from Nick, "Do you need to do that again?" The thug hit Nick, who was a black belt in his own right, four times and four times Nick asked the same question. The heart of the thug was broken through this and he began to weep. He said, "Why won't you ring the police and put me in jail?"
Nick realized that this man was having a real hard time being out in free society after being locked up in the jail routines for too many years. Nick put his arm around him and said, "Do you want to come with me and have a nice brewed coffee and we will have a good chat?"

Such events do happen day after day around us. Only a few get the attention of the media. Unfortunately, our media seems to revel more often in stories of ‘Eye for eye and tooth for tooth’. We are aware of the famous quote: “An eye for an eye will make the whole world blind,” attributed to Gandhi. There is also a Chinese Proverb which says: “Whoever pursues revenge should dig two graves; one for the avenged and one for himself.”

An-eye-for-an-eye formula has made our world more of a graveyard than a nursery where love can be grown. Against such a formula, there are millions of us, ordinary humans, who still sow seeds of love. Here is one of us – Gladys Staines! Gladys Staines is the wife of Graham Staines who was burnt alive along with his two sons Philip and Timothy in Orissa, India (22nd January, 1999). When Dara Singh, who was convicted of these murders, was sentenced to death, Gladys made a plea to the court and to the government to commute the death sentence. She also made a public statement that she had forgiven those who had committed this crime. She believed that only in forgiveness can hope survive. Let us grow in courage and hope to turn the other cheek and go the extra mile to win over persons suffering from hatred!

பொதுக்காலம் 7ம் ஞாயிறு

நெடுவழிப்பாதையின் ஓரமாய் இருந்த உணவகத்துக்கு முன்பாக ஒருவர் தன் லாரியை நிறுத்திவிட்டு, உள்ளே சாப்பிடச் சென்றார். அவர் கேட்ட உணவு, பரிமாறப்பட்டது. அப்போது, ‘மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர், அவரது உணவுத் தட்டைப் பறித்து, அட்டகாசமான வெற்றிச் சிரிப்புடன், தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். எதுவும் பேசாத அந்த லாரி ஓட்டுனர், தன் உணவுக்குரியத் தொகையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், "அவனுக்குப் பேசத்தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு வார்த்தையும் சொல்லாமப் போயிட்டான்" என்று சொல்லி உரக்கச் சிரித்தார். அந்தக் கும்பலைச் சார்ந்த மற்றொருவர், "அவனுக்குச் சண்டைபோடவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். பயந்து ஓடிட்டான்" என்று கூறி, அவரும் பலமாகச் சிரித்தார். அப்போது உணவகத்தில் பரிமாறிக் கொண்டிருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "அவருக்கு லாரி ஒட்டவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீங்க நிறுத்தி வச்சிருந்த மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும், லாரி ஏத்தி, நொறுக்கிட்டுப் போயிட்டார்" என்று சொன்னார்.
இந்தக் கதையைக் கேட்கும்போது, நம் உதட்டோரம் சின்னதாய் ஒரு புன்னகை மலர்வதை உணர்கிறோம். இத்தகையக் காட்சிகள் நம் திரைப்படங்களில் அடிக்கடி வந்து நம் கைத்தட்டலைப் பெற்றுள்ளன. அந்த லாரி ஓட்டுனர், மோட்டார் சைக்கிள் தாதாக்களுக்கு நல்ல பாடம் சொல்லித்தந்தார் என்ற மகிழ்ச்சியே, கைத்தட்டலாக மாறுகிறது. 'பழிக்குப் பழி' என்ற கருத்தை, பலவழிகளில் சொல்லும் கதைகளை, காட்சிகளை நாம் இரசிக்கிறோம்.
'பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய நற்செய்தி வழியே இயேசு, ஆழமாய் சொல்லித்தருகிறார். இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, இறைவன், நம் ஒவ்வொருவருக்கும், திறந்த மனதைத் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

'பழிக்குப் பழி' என்பது, இஸ்ரயேல் மக்களிடமும், அவர்களைச் சுற்றி வாழ்ந்த பல இனத்தவரிடமும் பழக்கத்தில் இருந்த வழிமுறை. எந்த அளவுக்கு, பழிக்குப் பழி வாங்கலாம் என்பதை, பாபிலோனிய அரசன், ஹம்முராபி உருவாக்கியச் சட்டங்கள், தெளிவாக விளக்கின. மோசே வழங்கிய சட்டங்கள், ஹம்முராபியின் சட்டங்களை ஓரளவு எதிரொலித்தன. பழிக்குப் பழி என்ற வெறி, கட்டுக்கடங்காமல் வளர்ந்திருந்த அன்றைய காலக்கட்டத்தில், ஒருவருக்கு மற்றொருவர் இழைத்த தீங்கிற்கு ஈடான தண்டனைகள் வழங்கப்படலாம் என்பதை, மோசேயின் சட்டம் நிலைநாட்டியது. அதுவே, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற மந்திரமாக இஸ்ரயேல் மக்கள் நடுவே நிலவி வந்தது. இந்த மந்திரத்தை மாற்றி எழுத முன்வந்தார் இயேசு. தீங்கு, இழப்பு, ஈடு என்ற எண்ணங்களை முன்னிறுத்தாமல், அன்பை, மன்னிப்பை முன்னிறுத்தும் புதிய சட்டங்களை, இயேசு, தன் மலைப்பொழிவில் வழங்கியுள்ளார்:
மத்தேயு நற்செய்தி 5: 38-48
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

இயேசுவின் இந்தக் கூற்றில், அவர், 'வலக்கன்னம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது, நம் கவனத்தை ஈர்க்கிறது. "உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் காட்டுங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு, மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்பதே, இயேசு வழங்கும் சவால்.
நம்மில் பலர், வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதை அறிவோம். இதை மனதில் வைத்து சிந்தித்தால், நமக்கு முன் இருக்கும் ஒருவரை, வலது கையால் அறைந்தால், அவரது இடது கன்னத்தில்தான் அறை விழும். ஆனால், நமக்கு முன்னிருப்பவரை புறங்கையால் அறையும்போது, அவரது வலது கன்னத்தில் அறை விழும். புறங்கையால் அறைவது என்பது, வெறும் உடல் வேதனையை மட்டுமல்ல, அத்தோடு, அவமானத்தையும் கலந்து வழங்கும் ஓர் அறை.

Paul Penley என்ற விவிலிய ஆய்வாளர், “Turning the Other Cheek”: Jesus’ Peaceful Plan to Challenge Injustice - அதாவது, "'மறுகன்னத்தை திருப்பிக் காட்டுதல்': அநீதிக்கு சவால் விடும் இயேசுவின் அமைதி நிறைந்த திட்டம்" என்ற தலைப்பில் எழுதியள்ள கட்டுரையில், இந்த வரிகளை சிறிது ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.
யூதேயாவை ஆக்கிரமித்திருந்த உரோமை அரசின் படைவீரர்கள், இஸ்ரயேல் மக்களை ஒவ்வொரு நாளும் சீண்டிப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். யூதர்கள் உடுத்தியிருந்த உடைகளையும், உடைமைகளையும், பறித்துச்செல்வது, ஏதாவது ஒரு பொருளை வீரர்கள் சுமக்கவேண்டியச் சூழலில், எதிரே ஒரு யூதர் வந்துவிட்டால், அவர் அந்த சுமையைச் சுமந்து, தன்னுடன் வருவதற்கு கட்டாயப்படுத்துவது என்று, பல அநீதிகள் அரங்கேறின. அந்நேரங்களில், யூதர்கள், உரோமை வீரர்களை எதிர்த்தால், அவர்களிடையே கைகலப்பும் உருவானது.
பொதுவாக, ஒரு கைகலப்பு நிகழும்போது, உரோமை வீரர்கள், தங்களுக்குச் சமமான மற்றொரு உரோமையரை அறைய வேண்டியிருந்தால், வலது கரத்தின் உள்ளங்கையால் அறைவார், எனவே, தாக்கப்பட்ட உரோமையரின் இடது கன்னத்தில் அறை விழும். ஆனால், ஒரு யூதர், தனக்குச் சமமானவர் அல்ல என்பதை நிலைநாட்டும் வகையில், உரோமை வீரர், வலது கரத்தின் புறங்கையால் அவரைத் தாக்குவார், எனவே, அவரது வலக்கன்னத்தில் அறை விழும்.

இந்த அநீதிகள் அனைத்தையும் அனுபவித்திருந்த இயேசு, அநீதிகளை ஒழிப்பதற்கு வழிகளைச் சொல்லித்தருகிறார். உரோமையர்களுக்கு மட்டுமல்ல, தங்களை, தாழ்ந்தவர்கள் என்று கருதி, புறங்கையால் அறைபவர்கள் அனைவருக்கும், யூதர்கள் தங்கள் மறுகன்னத்தைக் காட்டுவதால், சொல்லித்தரக்கூடிய பாடத்தை, வார்த்தைகளில் வடித்தால், இவ்விதம் இருக்கும் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்: "என்னை இரண்டாம் தர மனிதராக எண்ணி, புறங்கையால் அறைந்துவிட்டீர். இதோ, என் மறு கன்னம். முடிந்தால், இங்கு அறையும். அப்படி அறைவதால், என்னை உமக்குச் சமம் என்று நீர் ஏற்கவேண்டியிருக்கும். உம்மால் முடியுமா?" என்று, சவால் விடுக்கும் ஒரு செயல் இது.
அதேபோல், தன் அங்கியைப் பறிப்பவருக்கு மேலாடையையும் சேர்த்து வழங்குவது; ஒரு கல் தொலை, சுமை சுமக்க வற்புறுத்துபவருடன், இரு கல் தொலை நடப்பது என்ற வழிகளைப் பின்பற்றினால், அநீதமாக நடந்துகொள்பவர்கள் நீதியை உணர்வதற்கு அது வழி வகுக்கும் என்பதை, "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற சொற்கள் வழியே இயேசு ஒரு சவாலாக நம்முன் வைக்கிறார்.

மறுகன்னத்தைக் காட்டுவது, மேலாடையையும் சேர்த்துத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள், நாம் புண்ணியத்தில் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல. மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும். அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியில், ஒரு நாளில் வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.

'மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்று இயேசு கூறிய சொற்களை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர், தங்கள் அறவழி, அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டனர் என்பதை, வரலாறு சொல்கிறது.
'காந்தி' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தி அவர்களும், அவரது நண்பரும், கிறிஸ்தவப் போதகருமான சார்லி ஆண்ட்ரூஸ் அவர்களும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்" என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று சொல்வார். இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், 'ஹீரோத்தனமாகத் தெரியலாம், அல்லது, பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்.
"கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே குருடாகிப்போகும் என்று காந்தியடிகள் சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொல்வதுபோல், நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதுபோல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?
துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த துஷ்டன் மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அந்த வாய்ப்பைத் தருவது பற்றித்தான் இயேசு சொல்லித் தருகிறார். நமது மறுகன்னத்தைக் காட்டும்போது, நமது பகைவரிடமும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்கள் ஆற்றும் உன்னதச் செயல்களில் நூற்றில் ஒன்று, அல்லது, ஆயிரத்தில் ஒன்று, என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது ஊடகங்கள் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. கடந்த சில வாரங்களாக, தமிழக மக்களைத் தலைகுனிய வைத்திருக்கும் அரசியல் மோதல்களும், சபதங்களும், 'பழிக்குப் பழி' என்ற மந்திரத்தின் வெளிப்பாடுகள். இதே மந்திரம், அமெரிக்க ஐக்கிய நாடு, வட கொரியா, சிரியா, உட்பட, பல நாடுகளில் பல வழிகளில் வெளிப்படுவது, நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிராக, இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு, அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது, என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys அவர்கள் சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.
மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.


14 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 7

Theodicy on Trial

2004ம் ஆண்டு, தமிழகக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, நம் நினைவுகளில் இன்னும் பதிந்திருக்குமென்று நினைக்கிறேன். கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, வேளாங்கண்ணி திருத்தலத்தில், திருப்பலியை முடித்துவிட்டு கடற்கரைக்குச் சென்ற பல குடும்பங்களை, அந்த சுனாமி கடலோடு அடித்துச்சென்றது. திருத்தலம் சென்றவர்களுக்கு ஏன் இந்தக் கொடூரம்? திருத்தலங்களுக்குச் செல்லும் பலர், சாலை விபத்தால், நெரிசலால், இன்னும் பல காரணங்களால் உயிரிழப்பதைப்பற்றி கேள்விப்படும்போது, நம்மில் பல கேள்விகள் எழுகின்றன. பொதுவாகவே, துன்பங்களின் உச்சியில், கடவுளைத் தேடுவோம். அதுவும் புனிதத் தலங்களில் நடக்கும் விபரீதங்களுக்கு, கடவுள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டுமென பெரிதும் எதிர்பார்ப்போம். நாம் எதிர்பார்த்த பதில்கள் வராத நேரங்களில், நாமே சில விளக்கங்களைத் தருவோம்.

சுனாமி முடிந்து பல மாதங்கள் ஆனபின், என் நண்பர் ஒருவர், வேளாங்கண்ணியில் அன்று நடந்ததைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில், வேளாங்கண்ணியில், பல மொழிகளில் திருப்பலிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கும். ஒரு மொழிக்கானத் திருப்பலி முடிந்தது. அந்த மொழியைச் சேர்ந்தவர்கள், கடற்கரைக்குச் சென்றனர். மற்றொரு மொழிக்கான திருப்பலி ஆரம்பமானது. அந்த நேரத்தில் சுனாமி தாக்கியது. ஒரு மொழி பேசுபவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச்சென்ற இறைவன், ஏன் வேறொரு மொழி பேசுபவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்? என்ற கேள்வியை என் நண்பர் எழுப்பினார். நண்பரின் இந்தக் கூற்றை, இந்தக் கேள்வியைக் கேட்டு, எனக்குள் வருத்தமும், சிறிது எரிச்சலும் எழுந்தன. மொழிவாரியாக, கடவுள், பாகுபாடுகள் பார்க்கிறவரா? கடவுள் மேல் இப்படியெல்லாம் பழிகள் சுமத்த வேண்டுமா? நம் மனித அறிவைக்கொண்டு புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வுகளில், கடவுளைப் புகுத்திவிடுகிறோம்.

நாம் புரிந்துகொள்ள கடினமான உண்மைகளில் ஒன்று, மாசற்றவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள். நல்லவர்களுக்கு வரும் துயரங்களை விளக்க, மதங்களும், கலாச்சாரங்களும், பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. பழம்பெரும் கிரேக்க, உரோமானிய கலாச்சாரங்களில், தேவர்கள், மனிதர்களை பகடைக்காய்களாக, அல்லது, கைப்பாவைகளாக பயன்படுத்துவதே, மனித துன்பங்களுக்குக் காரணமெனக் கூறப்பட்டுள்ளது. "சிறுவர்கள் வைத்து விளையாடும் பூச்சிகளைப்போல், நாம் கடவுளர்களின் கைகளில் இருக்கிறோம்; அவர்கள் தங்கள் விருப்பம்போல் நம்மைக் கொல்கின்றனர்" என்ற வரிகள், ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள 'கிங் லியர்' (King Lear) என்ற நாடகத்தில் இடம்பெற்றுள்ளன.

நாம் சிந்தித்துவரும் யோபு நூலில், நீதிமானாகிய யோபுக்கு வந்த துயரங்களுக்குக் காரணம் தேடிய இந்நூலின் ஆசிரியர், இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போட்டியாக, ஏறத்தாழ ஒரு விளையாட்டாக, அதைச் சித்திரித்துள்ளார். இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழும் இப்போட்டி போலவே, இந்திய மரபில், அரிச்சந்திரன் கதையிலும், போட்டியொன்று இடம்பெறுவதை நாம் அறிவோம். அரிச்சந்திரன் நெறிதவறாதவர் என்று, இந்திரன் சபையில், வசிட்டர் கூறுகிறார். விசுவாமித்திரர் மறுக்கிறார். அரிச்சந்திரனைச் சத்தியம் தவறச் செய்கிறேன் என சபதம் செய்யும் விசுவாமித்திரர், செயலில் இறங்குகிறார்.

"இதோ! யோபுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே"(யோபு 1:12) என்று, இறைவன் அனுமதி தந்ததும், சாத்தான் செயலில் இறங்குகிறான். யோபின் உடைமைகள், பணியாளர்கள், இறுதியில் புதல்வர், புதல்வியர் அனைத்தையும் சாத்தான் அழிக்கிறான். இந்த அழிவுகள், ஒன்றன்பின் ஒன்றாக, நான்கு செய்திகளாக, யோபை வந்தடைகின்றன.
இந்த நான்கு செய்திகளையும் ஆய்வு செய்யும்போது, அவை, மனிதர்களாலும், இயற்கையாலும் மாறி, மாறி வந்துசேர்ந்த அழிவுகள் என்பது தெளிவாகிறது. முதல் அழிவு, செபாயர் இனத்தவரால் உருவானது; இரண்டாவது அழிவு, 'விண்ணிலிருந்து விழுந்த நெருப்பு', அதாவது, மின்னல் வடிவில் வந்து சேர்ந்தது என்பதை உணர்கிறோம். மூன்றாவது அழிவு, கல்தேயரின் தாக்குதலால் வந்தது. இறுதியில், யோபின் புதல்வர், புதல்வியரின் மரணம் பற்றிய செய்தி, பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர் (யோபு 1:19) என்ற வடிவில் யோபை அடைகிறது.

யோபின் புதல்வர், புதல்வியரின் மரணம் குறித்துப் பேசும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், ஒரு மகனை இழப்பது எவ்வளவு பெரும் துன்பம் என்பதை, தான் வாழ்வில் நேரடியாக உணர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவிவந்த நம்பிக்கையின்படி, குழந்தைகள், பெற்றோரின் தொடர்ச்சியாகக் கருதப்பட்டனர். எனவே, பெற்றோரைத் தண்டிக்க விரும்பினால், குழந்தைகளைத் தண்டிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருந்ததென்று கூறும் குஷ்னர் அவர்கள், இதற்கு ஓர் உருவகத்தையும் பயன்படுத்துகிறார். ஒருவரது கரங்கள் செய்த தவறுக்கு தண்டனையாக, அவர் முதுகில் கசையடி விழுவதுபோல், பெற்றோர் செய்த தவறுக்கு, பிள்ளைகள் தண்டிக்கப்படுவது கருதப்பட்டது.

மனிதர்களின் தாக்குதல், இயற்கையின் சீற்றம் என்ற வழிகளில் யோபுவின் வாழ்வில் இழப்புகள் உருவானதுபோல், நாமும், வாழ்வில், அடுத்தவரின் செயல்களால், அல்லது, இயற்கையின் விளைவால் இழப்புக்களை உணர்ந்துள்ளோம்.
இவ்வேளையில், தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக சந்தித்துள்ள இழப்புக்களை நம் மனங்கள் அசைபோடுகின்றன. சென்ற ஆண்டு, வரலாறு காணாத பெருவெள்ளத்தையும், இவ்வாண்டு வார்தா புயலையும் தமிழக மக்கள் சந்தித்தனர். இயற்கையின் இடர்கள் போதாதென்று, மத்திய அரசு கொணர்ந்த பணத் தட்டுப்பாடு, மாநில முதலமைச்சரின் மர்ம மரணம், தங்கள் அறவழிப் போராட்டத்தால் உலகை வியக்கவைத்த தமிழக இளையோர் மீது, காரணம் ஏதுமின்றி, காவல்துறையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான வன்முறை, கடந்த சில நாட்களாக தொடரும் அரசியல் குழப்பம், கச்சா எண்ணெய் கடலில் கலப்பு என்று, தமிழக மக்களை வதைக்கும் துயரங்கள், மனிதர்களால் உருவான கொடுமைகள். இயற்கை இடர்களுக்கு எளிதில் விடைகள் கிடைக்காது என்பதை நாம் அறிவோம். ஆனால், மனிதர்களால் விளைந்துள்ள துயரங்களுக்கும் விடைகள் கிடைக்காமல் தமிழகம் நிலைகுலைந்திருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத அவலம்.

இயற்கை வழியாகவும், மனிதர்கள் வழியாகவும், தன் உடைமைகளையும், உறவுகளையும் இழந்த யோபு, அத்துயரங்கள் நடுவிலும், "பாவம் செய்யவுமில்லை; கடவுள்மீது குற்றஞ்சாட்டவும் இல்லை" (யோபு 1:22) என்று முதல் பிரிவு நிறைவடைகிறது. யோபிடம் காணப்பட்ட இந்த உறுதி, இறைவனை பெருமையடையச் செய்கிறது, சாத்தானையோ, அடுத்த திட்டம் தீட்ட வைக்கிறது.
முதல் பிரிவில் சொல்லப்பட்டதுபோலவே, 2ம் பிரிவின் துவக்கத்திலும், இறைவன், தெய்வப் புதல்வர்களோடு இருந்த வேளையில், சாத்தான் அங்கு வந்து நின்றான். நேர்மையாளரான தன் ஊழியன் யோபைப் பற்றி சாத்தானிடம் பெருமையுடன் பேசினார், இறைவன். அங்கு தொடர்ந்து நிகழ்ந்ததை நாம் 2ம் பிரிவில் இவ்விதம் வாசிக்கிறோம்:

யோபு 2: 3-7
அப்போது ஆண்டவர் சாத்தானிடம், "என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? ... காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார்.
சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், "தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார். உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி" என்றான்.
ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ! அவன் உன் கையிலே! அவன் "உயிரை மட்டும் விட்டுவை" என்றார்.
சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.

"உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை" கொடிய துன்பத்தை அனுபவிக்கும் யோபுவிடம் அவரது மனைவி, இறைவனைப் பழிக்கத் தூண்டுகிறார். அவருக்கு யோபு கூறும் பதில் உன்னத எண்ணங்களை விதைக்கின்றன:
யோபு 2:9-10
அப்போது அவரின் மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள். ஆனால் அவர் அவளிடம், "நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?" என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.

தன் உடமைகள், உறவுகள் அனைத்தையும் இழந்த வேளையில், "ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (யோபு 1: 21) என்ற உன்னத வார்த்தைகளைச் சொன்ன யோபு, தன் உடலில் வேதனையை அனுபவித்த வேளையில், "நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம், ஏன் தீமையைப் பெறக்கூடாது?" (யோபு 2:10) என்ற கேள்வியின் வழியே, துயரங்களை ஏற்றுக்கொள்வதற்கு, உயர்ந்ததோர் கண்ணோட்டத்தை வழங்கியுள்ளார்.
யோபின் மனைவியை எளிதில் அமைதிப்படுத்திய யோபு, அடுத்ததாக, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற தன் மூன்று நண்பர்களைச் சந்திக்கிறார். இச்சந்திப்பில் பரிமாறப்படும் எண்ணங்கள், யோபு நூலின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நம் தேடல் பயணம் இனி தொடரும்.


12 February, 2017

Challenges keep coming… தொடர்ந்து வரும் சவால்கள்...



The Sermon on the Mount

6th Sunday in Ordinary Time

For the third week in succession, we are reflecting on the words of Jesus from the Sermon on the Mount. Last week we considered two imageries used by Jesus – Salt and Light. This week we begin our reflections with the imageries of Fire and Water. These imageries are given in the first reading from the Book of Sirach. The passage given today is very direct and lucid. Here it is:
SIRACH 15: 15-17
If you will, you can keep the commandments, and to act faithfully is a matter of your own choice. He has placed before you fire and water: stretch out your hand for whichever you wish. Before a man are life and death, and whichever he chooses will be given to him.

Fire and water are placed before us and we are asked to stretch out our hand to take whichever we wish to choose. In the same way, life and death are before us and we are asked to choose. It is simple common sense that between fire and water we would stretch out our hands only towards water. Between life and death, we would choose only life. But… wait a moment! Things are not that simple and clear in life. Common sense does not guide all our choices all the time. There are other factors like habits, emotions and situational pressures. We can surely think of moments when we stretched out our hands towards fire. Dancing flames, though dangerous, are attractive. When a child, attracted by dancing flames, moves closer to the fire, we do not allow the child on this dangerous expedition… But, as grown ups, haven’t we undertaken such expeditions? Haven’t we played with fire?

Water and fire are in themselves lovely gifts from God, provided we use them properly. It is here that we, as a human family, have not learnt our lessons – especially the lesson of sharing these lovely gifts. We have ‘played with fire’ over the issue of equitable sharing of water resources. All of us know the anxiety expressed by very many knowledgeable people that ‘the third world war will be fought over water’.
A recent report "Water Cooperation for a Secure World" published (2013) by Strategic Foresight Group concludes that active water cooperation between countries reduces the risk of war. This conclusion is reached after examining trans-boundary water relations in over 200 shared river basins in 148 countries. (Wikipedia – Water conflict)

Sirach also talks of the choice between Life and Death. The famous Jesuit, Walter Burghardt, focused in on the phrase, ‘Before a man are life and death, whichever he chooses shall be given to him.’ He goes on to state that to the ancient Hebrews, life meant far more than the period between conception and death.  Life was what proceeded from loving and obeying God.  And death was not just that which followed the last breath on earth.  To the ancient Hebrews, death was the rejection of the living God. “Seek the Lord and you will live,” the prophet Amos tells the people.  He was not just speaking of eternity.  He was speaking of living life to its fullest right now.  And, conversely, isolate yourself from the love of the Lord, and you will join the living dead. (Homily from Father Joseph Pellegrino)

Hence, for a faithful Hebrew, life was not measured in terms of quantity - the number of years, but in terms of the quality of life, spent in loving and obeying God. Unfortunately, the idea of loving and obeying God was reduced to following the Laws of Moses. Even here, the Israelites tended to follow the ‘letter’ of the Law than the ‘spirit’, since they were misled by the religious leaders. Jesus makes a subtle reference to this when he says in today’s Gospel: “For I tell you, unless your righteousness exceeds that of the scribes and Pharisees, you will never enter the kingdom of heaven.” (Mt. 5: 20)
The contrast between the ‘letter’ and the ‘spirit’ of the Law is the main theme of today’s Gospel passage – Matthew 5: 17-37. Jesus differentiates between the letter and spirit in two formulas… “You have heard that it was said … But I say unto you.” For the Jews who heard Jesus speak this way, this must have sounded too presumptuous. A carpenter’s son from Nazareth trying to be greater than Moses and the Prophets? Unthinkable! Hence, Jesus begins today’s discourse with a clarification:
Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them. For truly I tell you, until heaven and earth disappear, not the smallest letter, not the least stroke of a pen, will by any means disappear from the Law until everything is accomplished. Therefore anyone who sets aside one of the least of these commands and teaches others accordingly will be called least in the kingdom of heaven, but whoever practices and teaches these commands will be called great in the kingdom of heaven. (Matthew 5: 17-19)

Jesus is not setting aside the Law; but sets it up on a higher plane. He challenges his listeners to follow the spirit of the Law and live rather than follow the letter of the law and become living dead. The challenge of Jesus can be understood better if we take one set of the Laws – the laws prescribed for temple offerings. The Mosaic Law prescribed many details about the type of offering to be made for different occasions. For instance, minute details were given as to how old must the sacrificial lamb be and that it should be without blemish etc. (cf. Lev. 22:21)
The Laws dealt mostly with external requirements. They did not speak much on the internal requirements. Jesus brings the latter into focus. He says: “Therefore, if you are offering your gift at the altar and there remember that your brother or sister has something against you, leave your gift there in front of the altar. First go and be reconciled to them; then come and offer your gift.” (Matthew 5: 23-24)

This passage is a favourite one of mine in the Sermon on the Mount. It gives us a very high standard of reconciliation. Imagine the scene painted by Jesus, in these verses: You are at the altar to offer your gift. There you remember… Remember what? Remember that you have something against your brother or sister? NO… Remember that your brother or sister has something against you… This is the benchmark. Even when your brother or sister has something against you and you happen to remember it, then you cannot proceed to offer your gift. Your first duty is reconciliation; only then comes the offering.
I was just wondering what would be Jesus’ response, if I asked him, “What if I had something against my brother or sister?” I can well imagine Jesus responding this way: “Well, if that is the case, forget about bringing any gift to the altar. Your first job is to be reconciled even before approaching the altar.” This is a very great challenge for us. If this challenge of Jesus is taken very seriously, then most of our Sunday Masses will have to come to an end by the time we come to the offertory. Almost all of us, including the priest who celebrates Mass, will have non-reconciled relationships. They need to be mended before offering the gifts. We need to become a better gift internally, before we can offer the external gift at the altar.
Throughout today’s gospel, Jesus offers us quite a few challenges. In fact the whole Sermon on the Mount is very challenging. It makes us wonder whether such a life is possible here on earth. It makes us hunger and thirst after such a life here on earth. Such wonder, such hunger and thirst are steps to the altar of holiness where we can offer ourselves as a worthy Offering.

பொதுக்காலம் 6ம் ஞாயிறு

தொடர்ந்து, மூன்றாவது வாரமாக, மலைப்பொழிவின் வழியே, இயேசு சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறோம். சென்ற வாரம், இயேசு கூறிய உப்பும், விளக்கும் என்ற இரு உருவகங்களைச் சிந்தித்தோம். இந்த வாரம், நமது சிந்தனைகளை, நீரும், நெருப்பும் என்ற, வேறு இரு உருவகங்களுடன் ஆரம்பிப்போம். சீராக்கின் ஞானம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், இவ்வுருவகங்களை தருவதோடு, எளிய வார்த்தைகளில், அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் அறிமுகப் பகுதி இதோ...

சீராக்கின் ஞானம் 15: 15-17
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொருத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி, உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன், வாழ்வும், சாவும், வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

நீரா, நெருப்பா... எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா... எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக, எளிதில், பதில் சொல்லிவிடலாம். நெருப்பை எடுப்பதை விட, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவை விரும்புவதை விட, வாழ்வை விரும்புவதே மேல் என்றும், நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில், அறிவு மட்டுமே நம்மை வழிநடத்துகிறதா? இல்லையே! உறவுகள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று, வேறு பல சக்திகளும் நம்மை வழிநடத்துகின்றனவே. இந்த சக்திகளால் வழிநடத்தப்பட்டு, நாம் நெருப்பைத் தேடிச்சென்ற நேரங்களை, நெருப்பை கைநீட்டி எடுத்த நேரங்களை, நினைத்துப் பார்க்கலாம்.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு, பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகினால் ஈர்க்கப்பட்டு, குழந்தை ஒன்று, நெருப்பை நோக்கி, தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம் பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், நெருப்பையொத்த எத்தனை விபரீத ஆசைகள் நம்மை ஈர்த்துள்ளன? எத்தனை முறை, நாம், அந்த ஈர்ப்பினால், நெருப்புடன் விளையாடி, புண்பட்டிருக்கிறோம்? நம் வாழ்வின் எத்தனைப் பகுதிகளை, அந்த நெருப்பு விளையாட்டில், சாம்பலாக்கியிருக்கிறோம்?
இயற்கையில், நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால், அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து, நன்மையோ, தீமையோ விளையலாம். நெருப்பும், நீரும் நமக்கு முன் இருக்கும்போது, கைநீட்டி எடுத்துக்கொள்ள, நீரே நல்லது, நெருப்போடு விளையாடுவது ஆபத்து என்ற எச்சரிக்கையை, அனைவரும் உணர்கிறோம். இருப்பினும், நெருப்போடு விளையாடும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இளமை வேகத்தில் நெருப்புடன் விளையாடத் துடிக்கும் இளையோரை, இவ்வேளையில் நினைத்துப் பார்ப்போம். அவர்கள், தங்கள் விபரீத விளையாட்டுகளை விட்டு விலகி, நல்வழி வந்து சேர வேண்டும் என மன்றாடுவோம்.

சீராக்கின் ஞானம் எழுப்பும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பவேண்டும் என்று, எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து, இயேசுசபை அருள்பணியாளர் Walter Burghardt என்பவர் கூறும் விளக்கம், இந்தக் கேள்வியை, இன்னும் சிறிது ஆழமாய் ஆய்வுசெய்ய அழைக்கின்றது.

சீராக் கூறும் வாழ்வு, மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற, வெறும் உடல் சார்ந்த செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது அல்ல. சீராக்கைப் பொருத்தவரை, இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், அவர் கூறும் சாவு, நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்களால் சாகமுடியும். இறைவாக்கினர்களைப் பொருத்தவரை, இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சுவிடும் நடைப்பிணங்களே. எனவே, இறைவாக்கினர் சீராக், வாழ்வையும், சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார். இதுவே, அருள்பணி Walter Burghardt அவர்கள் தரும் விளக்கம்.

இறைவனின் வழி வாழ்வது என்பதை, இறை சட்டங்களின்படி, அதாவது, மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர், இஸ்ரயேல் மதத்தலைவர்கள். அத்துடன், மோசே தந்த சட்டங்களையும், தங்கள் வசதிக்கேற்ப அவரகள் வளைத்துக்கொள்ள முயன்றனர். எனவே, சுயநலக் கணக்குகளோடு சட்டங்களைப் பின்பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, வெறும் மூச்சுவிடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை, இயேசு, தன் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதும் தெளிவுப்படுத்தினார்.

"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று, இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார், இயேசு. "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று இயேசு, மீண்டும், மீண்டும், கூறிய இந்த வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏதோ ஒரு சிற்றூரிலிருந்து, வந்த ஒரு தச்சனின் மகன், மோசே தந்த சட்டங்களை மாற்ற முயல்கிறாரே என்று, கேள்விகள் எழுந்திருக்கலாம். கோபம் கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம்.

அதனால், இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில், இயேசு, தன் நிலையைத் தெளிவுபடுத்துகிறார். சட்டங்களை அழிக்க தான் வரவில்லை; அவற்றை நிறைவேற்றவே வந்துள்ளேன் என்று கூறுகிறார். சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார். மோசே கூறிய சட்டங்களை, இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார் இயேசு.
இயேசு கொணர்ந்த இந்த மாற்றத்தை, ஓர் எடுத்துக்காட்டின் உதவிகொண்டு, நாம் உணர முயல்வோம். கோவிலில் காணிக்கை செலுத்துவதுபற்றி மோசே தந்த சட்டங்களை, இயேசு எவ்விதம் மாற்றி சிந்தித்துள்ளார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

மோசே தந்த காணிக்கைச்சட்டங்கள், கோவிலுக்குக் கொண்டுவரப்படும் காணிக்கை போருள்களைப் பற்றியே அதிகம் பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவை, எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை, மோசேயின் சட்டங்கள் வலியுறுத்தின. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறமாக நம் கைகளில் ஏந்திவரும் காணிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். காணிக்கை செலுத்தவந்த நம் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார்.

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, போய், முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில், ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் எழுகிறது.. உறவுகள் சரியில்லாமல் போனதற்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? என்ற கேள்வியும் எழுகிறது. "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... சகோதர, சகோதரிகள் நடுவே உருவாகும் மனத்தாங்கலுக்கு நாம் காரணமாக இல்லாமல், அடுத்தவர் காரணமாக இருந்தாலும், அதை உணர்ந்த உடனேயே, நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்ல வேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று சொல்கிறார்.
சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால், என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் எப்படி இருந்திருக்கும் என்று எளிதில் கற்பனை செய்துகொள்ளலாம். உன் சகோதரர், சகோதரிகள் மீது நீ மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டாம். முதலில் நல்லுறவை உருவாக்க முயற்சி செய். பின்னர், உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கை செலுத்துவதற்கு முன் பிறருடன் நல்லுறவு கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் இந்த ஒரு கூற்றை மட்டும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் விழைந்தால், நமது ஞாயிறுத் திருப்பலியை இப்போதே நிறுத்த வேண்டியிருக்கும். நீங்களும், நானும், ஏதோ ஒரு வகையில் மனத்தாங்கல்களைச் சுமந்து இப்போது வந்திருக்கிறோம். நமது காணிக்கையைச் செலுத்தும் முன், பிறருடன் ஒப்புரவு பெற வேண்டும். சரி, அது இப்போது முடியாத பட்சத்தில், அதற்கடுத்த நிலையையாவது நாம் தேடவேண்டும்... அதாவது, நமது மனத்தாங்கலைத் தீர்க்கும் ஓர் ஆவலை நாம் பெறுவதற்கு, ஒரு நல்லுறவு முயற்சியை நாம் எடுப்பதற்கு, இறைவன் இன்று நமக்கு அருள் தரவேண்டும் என்று செபிப்போம்.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, அடுத்தவர் மீது தொடுக்கப்படும் வழக்குகள், பெண்களை மாண்புடன் நடத்தும் முறை, மணவிலக்கு, பொய்யாணை என்று பல விடயங்களில், மோசே தந்த சட்டங்களைத் தாண்டி, உன்னத வழியைப் பின்பற்றவேண்டும் என்று, இயேசு சவால்களை விடுத்துள்ளார். இன்றைய நற்செய்தி முழுவதும், இயேசு எடுத்துக்காட்டும் பல சட்டங்கள், வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு கூறும் சவால்கள், நமது மனசாட்சியைச் சார்ந்தவை.
தொடர்ந்து மூன்று வாரங்களாய், இயேசு, தன் மலைப்பொழிவின் வழியே, சவால்களை நம்முன் வைத்துள்ளார். இப்படியும் வாழமுடியுமா என்ற பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை எழுப்பும் சவால்கள் இவை. நல்லவற்றை நடைமுறைப்படுத்த நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப் புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிகற்கள். இந்தப் படிகளில் பணிவோடு ஏறிச்செல்லும் பக்குவத்தை இறைவன் வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.