14 July, 2022

The art of hospitality விருந்தோம்பல் கலை

Abraham and the guests
 
16th Sunday in Ordinary Time

During the years of my priestly formation and, later, during the years of my ministry as a Priest, I have been showered with love and concern by the people. Just because I was a ‘Brother’ or a ‘Father’, I was treated as a welcome guest… many a time, even as a family member!

I have enjoyed delicious meals offered by both the rich and the poor. The Liturgical Readings of this Sunday (Genesis 18:1-10 and Luke 10:38-42) bring back to my memory some of those meals offered. I know it is not fair to compare those meals. Still, I wish to reflect on them together, just to help us learn some lessons for life.
In some of the more elegant, rich dinners I have been invited to, the conversation – sometimes – tended to revolve around the costly food and drinks served! Thinking of those dinners today, I raise this question: Who or what stole the limelight – the invited guests or the dinner served? On the other hand, I can also think of some of the meals I have shared with the middle-class or poor families. When I returned from those meals, sometimes, I could hardly recollect what I ate there. But, I was feeling a sense of fulfilment, having spent quality time with the family members. I also know how some of them had taken efforts to find out what I like and what food does not agree with me etc. Thus, I was made to feel that I was a very important person to the family.

Dinner served or the Guest being served… what or who takes precedence? This is the question addressed in today’s Gospel. Jesus is the guest in the house of Martha and Mary. To Martha, Jesus was important; but, the dinner to be served to him was also equally, if not, more important. To Mary, Jesus was important… Period! Jesus seems to appreciate the choice made by Mary. He tells Martha: “Mary has chosen the good portion, which shall not be taken from her.” (Luke 10: 42)

Some years back I met a Jesuit priest from the U.S. When I told him that I was from India and from the south, his face lit up. He recollected the welcome he experienced in Tamil Nadu. For many Europeans and Americans, a visit to India leaves them with pleasant memories of our hospitality. As Indians, we feel truly proud of our hospitality. Unfortunately, like many other western ideas and customs, our Asian hospitality has been made into a commercial commodity – hospitality industry. In the past three years, with the entry of the ‘unwelcome guest’ called COVID-19, our hospitality has suffered to a great extent. We have been constantly warned against entertaining guests – known and unknown. In such a situation, we are invited to refresh our original lessons in hospitality via the Liturgical Readings.

‘Atithi Devo Bhava’ in Sanskrit means "Guest is God". Although with the present Hindutva agenda, and with some anti-social elements who are bent on disproving the Indian hallmark of hospitality, the original implication of this famous phrase (Guest is God) remains intact in most parts of India, thanks to the simple minded, rural Indians. For most Indians, the guest deserves attention and respect as does God. The idea of God coming in the form of a guest is the core of today’s first reading from Genesis (18: 1-10).

The episode of Abraham entertaining total strangers is really very strange, but it is also the ideal proposed in the Indian tradition. Abraham goes out of the way to entertain guests as if it was his main purpose in life. Abraham invites the guests in and then begins preparing the dinner. Strange again. I am reminded of similar situations in many houses where, after the arrival of the unannounced guest, the host rises to the occasion and plays the perfect host. I have known middle class or poor families where the guest is provided with the best, while, those at home do not even have decent meals. I have experienced this so often as a priest. What do they gain treating me this way? Raising a question like this about gain and loss in the process of hospitality comes from a commercial mind-set. The answer to this question would be the beaming smiles on their faces. No commerce, no strings… simply a demonstration of deep love for the guest.

In contrast to this show of affection, I am also thinking of instances where someone holds a party just to show off. A wedding that took place in 2004 is, probably, still the costliest wedding on earth. It is rumoured that 78 million dollars were spent on this wedding. This works out to be roughly 4000 million rupees in 2004 (and now, 6,195 million rupees) – enough to feed 400 million poor people. Probably the food that was wasted that day could have easily fed around 100 million. The number of guests invited for the wedding did not exceed 1000. Scandalous, indeed. But the greatest scandal is that the person who conducted this wedding is an Indian!

Let us get back to Abraham. The reason for him to provide food for his guests was quite simple: Let me get you something to eat, so you can be refreshed and then go on your way—now that you have come to your servant." (Gen. 18: 5) The primary purpose of Abraham was simple – eat something, get refreshed so that you may be able to travel better. Nothing in return. Of course, Abraham was blessed with a child. But, that was a later surprise.
Can life be so simple, without expectations, without calculations? Don’t ask me. I don’t have answers to this question. But, I know of people, especially simple, poor people who have treated me like this… without expecting anything from me. So, I guess it is possible.

The ideal of India – ‘Atithi Devo Bhava’ – as practised by Abraham, is expressed in similar yet different ways by Thiruvalluvar, the great Tamil poet, and the author of the Letter to the Hebrews.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
He who treats guests well, and awaits more guests, will become an honoured guest among angels. (Thirukkural 86)
Keep on loving each other as brothers. Do not forget to entertain strangers, for by so doing some people have entertained angels without knowing it.
(Hebrews 13: 1-2)

Either we entertain angels in our homes and receive their blessings; or, we become angels entertaining those who are in great need!

Jesus in the house of Martha and Mary

பொதுக்காலம் - 16ம் ஞாயிறு

அருள்பணியாளராவதற்கு பயிற்சி பெற்றுவந்த ஆண்டுகளிலும், அருள்பணியாளரான பின்னரும் மக்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பும், கனிவும் அளவற்றது. இந்த அன்பின் வெளிப்பாடாக இன்று நான் எண்ணிப்பார்க்க விழைவது... எனக்கு அறிமுகமான, மற்றும், அறிமுகம் இல்லாத இல்லங்களில் எனக்குக் கிடைத்த வரவேற்பும், விருந்தும்.

விருந்தோம்பலைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் (தொடக்க நூல் 18: 1-10; லூக்கா 10: 38-42) வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன.
எனக்குக் கிடைத்த பல்வேறு விருந்து அனுபவங்களையும், இன்றைய வாசகங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, ஒரு சில எண்ணங்கள் மனதில் எழுகின்றன. வசதி நிறைந்த செல்வந்தர்கள், நடுத்தர வருமானம் உள்ளவர்கள், வசதியற்ற வறியோர் என்று, சமுதாயத்தின் பல நிலைகளில் இருந்தவர்களின் இல்லங்களில் விருந்துண்ணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒப்புமைப்படுத்துவது நல்லதல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும், செல்வம் மிகுந்தோர் படைத்த விருந்துகளையும், வறியோர் இல்லங்களில் பகிர்ந்த விருந்துகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, ஒருசில வாழ்க்கைப் பாடங்கள் தெளிவாகின்றன.

தரமான, வகை, வகையான உணவு பரிமாறப்பட்ட விருந்துகளில், அங்கு பரிமாறப்பட்ட விலையுயர்ந்த பானங்களைப் பற்றியும், ஒரு சில உணவு வகைகளுக்கு ஆன செலவுகள் பற்றியும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அத்தகைய விருந்திலிருந்து திரும்பிய பிறகு, எனக்குள் ஒரு கேள்வி எழுந்ததுண்டு. இன்று நான் கலந்துகொண்ட விருந்தில், விருந்தினர் முக்கியத்துவம் பெற்றனரா, அல்லது, விருந்து முக்கியத்துவம் பெற்றதா என்பதுதான் அந்தக் கேள்வி.
வசதிகள் அதிகமில்லாதவர்கள் இல்லங்களில் விருந்துண்டு வந்தபின்னர், அங்கு என்ன சாப்பிட்டேன் என்பதுகூட நினைவில் இருக்காது. ஆனால், அவர்களுடன் செலவழித்த நேரம், மனதிற்கு நிறைவைத் தந்துள்ளது. ஒரு சில இல்லங்களில், நான் அங்கு செல்வதற்கு முன்னரே, எனக்கு என்ன வகையான உணவு பிடிக்கும், அல்லது, ஒத்துப்போகும் என்பதை, நேரடியாகவும், மறைமுகமாகவும் அறிந்துகொள்ளவும், அந்த உணவைத் தயாரிக்கவும் அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை, என்னை நெகிழ வைத்துள்ளது. இவ்வில்லங்களில் விருந்தைவிட, விருந்தினர் முதன்மை பெறுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

விருந்து முக்கியமா, விருந்தினர் முக்கியமா என்ற கேள்விக்கு பதில் தருவதுபோல் அமைந்துள்ளது, இன்றைய நற்செய்தி (லூக்கா 10: 38-42). விருந்தினராக வந்திருந்த இயேசுவுக்கு, வகை, வகையாக உணவு தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தார், மார்த்தா. அவருக்கு இயேசு முக்கியம்தான். ஆயினும், அவருக்குக் கொடுக்கவேண்டிய விருந்து, மார்த்தாவின் எண்ணங்களை அதிகம் நிறைத்திருந்தது. மரியாவுக்கோ, இயேசு மட்டுமே முக்கியமாகிப் போனார். விருந்தா, விருந்தினரா... எது முக்கியம் என்ற கேள்விக்கு இயேசு தரும் பதில்: "மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்; அது அவரிடமிருந்து எடுக்கப்படாது" (லூக்கா 10: 42)

நற்செய்தி சொல்லித்தரும் பாடங்களைப் போலவே, தொடக்க நூலில் நாம் வாசிக்கும் நிகழ்வும் (தொடக்க நூல் 18: 1-10) விருந்தோம்பலைப்பற்றி ஒருசில பாடங்களைச் சொல்லித்தருகின்றது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப்பற்றி பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியாவுக்கு, சிறப்பாக, தமிழகத்திற்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும் ஓர் அனுபவம், நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு. அதுவும் ஐரோப்பியர், அமெரிக்கர் இவர்களுக்கு இது முற்றிலும் புதிதான, ஏன்? சொல்லப்போனால்,... புதிரான அனுபவமாக இருக்கும். மேற்கத்திய, கிழக்கத்திய கலாச்சாரங்களுக்கிடையே அப்படி ஒரு வேறுபாடு.
அண்மைய ஆண்டுகளில், விருந்தோம்பலையும் ஒரு வர்த்தகமாக மாற்றிவிட்ட (hospitality industry) மேற்கத்திய வியாபாரப் போக்கு, நம் நாட்டில், குறிப்பாக, நம் பெரு நகரங்களில் ஊடுருவி இருப்பது வேதனை அளிக்கிறது.

இத்தகையச் சூழலில், இன்றைய வாசகங்கள், குறிப்பாக, ஆபிரகாமின் விருந்தோம்பல் நிகழ்வு, நம் ஆசிய, இந்திய விருந்தோம்பல் பண்புகளை மீண்டும் அசைபோட நம்மை அழைக்கின்றன. கிழக்கத்திய கலாச்சாரத்தின் பிரதிநிதியாக ஆபிரகாம், விருந்தோம்பல் பாடங்களை நமக்கு மீண்டும் சொல்லித் தருகிறார்.

நாம் வாசிக்கும் தொடக்க நூல் பகுதி, "பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில்"... என்று ஆரம்பமாகிறது. வெப்பம் மிகுதியாகும்போது, மனமும், உடலும் சோர்ந்துபோகும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்த நேரத்தில், மூன்று பேர் அவர் முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத மூவர்... வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம். இப்படி, நேரம், காலம் தெரியாமல் வருபவர்களை, விரைவில் அனுப்பிவிடுவதில் நாம் கவனம் செலுத்துவோம். அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு நடந்ததைத் தொடக்க நூல் இவ்விதம் விவரிக்கின்றது:
தொடக்க நூல் 18 : 1-5
பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே... நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்...என்றார்.

ஆபிரகாம் காலத்துக் கதை இது. நம் காலத்து கதை வேறு. ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், அன்று, அங்கு நடந்தது, இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில பாடங்களையாவது சொல்லித்தரும் என்பதை நாம் மறக்கக்கூடாது. மறுக்கக்கூடாது. முதலில்... முன்பின் தெரியாதவர்களை, வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப்பற்றிச் சிந்திக்கலாம்.

பெரு நகரங்களில் வாழ்பவர்களாக நாம் இருந்தால், வீட்டில் அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில் இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல் தெரிந்தால், சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவை, சிறிதளவு திறப்போம். வெளியில் இருப்பவர் வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை அந்தச் சிறு இடைவெளியில் எடுப்போம். ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம் சூழ்நிலையில், அவருக்கு விருந்து படைப்பது என்பது, எட்டாத கனவுதான்! விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறிவருவது, உண்மையிலேயே, நம் தலைமுறை சந்தித்துவரும் பெரும் இழப்புதான். குறிப்பாக, அண்மைய மூன்று ஆண்டுகளாக, அழையாத விருந்தாளியாக உலகை வலம்வரும் கோவிட் பெருந்தொற்று, நம் விருந்தோம்பல் பண்பை வெகுவாக சிதைத்துள்ளது என்பது, மேலும் வேதனையான ஓர் உண்மை.

ஆபிரகாம் கதைக்கு மீண்டும் வருவோம். வழியோடு சென்றவர்களை, வலியச்சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாதபோது இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர் எளிய, அல்லது, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் கண் முன் விரிகிறது.
தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர்களுக்கு நல்ல உணவைப் பரிமாறுபவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் விருந்தினர் வந்துவிட்டால், வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி, ஒரு பழரசமோ, காப்பியோ வாங்கிவந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது, எத்தனை முறை இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்? தங்கள் செல்வத்தைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை வெளிப்படுத்துவதே, இந்த முயற்சி. அருள்பணியாளராக என்னை வரவேற்று, இவ்விதம் அன்பு விருந்தளித்த அனைவரையும் இன்று இறைவன் சந்நிதியில் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

அன்பைப் பறைசாற்றும் இத்தகைய விருந்துகளைப்பற்றிப் பேசும்போது, தன்னிடம் உள்ள செல்வத்தைப் பறைசாற்ற, அதை ஏறக்குறைய ஓர் உலகச் சாதனையாக மாற்ற முயற்சிகளில் ஈடுபடும் பல செல்வந்தர்களின் விருந்துகளையும் இங்கு சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உலகத்திலேயே இதுவரை நடந்த திருமணங்களில் மிக அதிகச் செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை இணையதளத்தில் தேடிப்பார்த்தால், வேதனையான அதிர்ச்சிகள் அங்கு நமக்குக் காத்திருக்கின்றன.

2004ம் ஆண்டு, உலகின் மிகப் பெரும்... மிக, மிக, மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர், தன் மகளுக்கு நடத்திய திருமண விருந்து, உலகச் சாதனையாகப் பேசப்படுகிறது. அந்த விருந்துக்கு ஆன செலவு 78 மில்லியன் டாலர்கள்... அதாவது, அன்றைய நிலவரப்படி, ஏறத்தாழ 400 கோடி ரூபாய். (இன்றைய நிலவரப்படி, ஏறத்தாழ 620 கோடி ரூபாய்.) விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் 1000க்கும் குறைவானவர்கள். 1000 விருந்தினருக்கு ஆனச் செலவைக்கொண்டு, இந்தியாவில் 40 கோடி வறியோர், ஒரு வேளை உணவை வயிறாரச் சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை மட்டும் கொண்டு, கட்டாயம் 10 கோடி ஏழை இந்தியர்களின் பசியைப் போக்கியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும் முடிச்சு போடுகிறேன் என்று குழப்பமா? இந்த விருந்தைக் கொடுத்த செல்வந்தர் ஓர் இந்தியர். இதற்கு மேலும் என்ன சொல்ல?... இந்தியா ஒரு வறுமை நாடு என்று மற்றவர்கள் சொல்லும்போது, அதை ஏற்க மறுப்பவர்களில் நானும் ஒருவன். ஒருசில செல்வந்தர்களால் இந்தியா வறுமையாக்கப்பட்டுள்ள ஒரு நாடு என்பதே உண்மை...

பொறாமையில் பொருமுகிறேனா? இருக்கலாம். ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழ் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிவரும் இன்றைய உலகில், இந்தியாவிலோ, அல்லது உலகின் எந்த ஒரு மூலையிலோ இவ்வகையான அர்த்தமற்ற, ஆடம்பர விருந்துகள் நடப்பது, ஒரு பாவச்செயல் என்பதையும் சொல்லித்தானே ஆகவேண்டும்.  

விருந்துகளைவிட, விருந்தினர்கள் முக்கியத்துவம் பெறும்போது, 'விருந்தோம்பல்' என்ற வார்த்தை இன்னும் பொருளுள்ளதாக, புனிதம் மிக்கதாக மாறும். 'விருந்தோம்பல்' என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம் திருவள்ளுவர் நினைவுக்கு வந்திருப்பார். பத்துக் குறள்களில் விருந்தோம்பலின் மிக உயர்ந்த பண்புகளைத் தெளிவாகக் கூறியுள்ளார், திருவள்ளுவர். ஆபிரகாம் மேற்கொண்ட விருந்தோம்பல் நிகழ்வு, எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனையாய், கனவாய்த் தெரிகிறதோ, அதேபோல், திருவள்ளுவரின் கூற்றுகளும் எட்டமுடியாத உயரத்தில் உள்ள அறிவுரைகளாய்த் தெரியலாம். எட்ட முடியாத தூரத்தில் இருப்பதால் இக்கனவுகளை, புளிப்பு என்று ஒதுக்காமல், வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடித்தால்,... இந்த உலகம் விண்ணகமாவது உறுதி.

விருந்தோம்பலைக் குறித்து வள்ளுவர் கூறிய பத்து குறள்களில் ஒன்று, இன்றைய தொடக்க நூல் நிகழ்வுக்கு நெருங்கிய தொடர்பு உடையதைப்போல் தெரிகிறது. வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்தார் ஆபிரகாம் என்று, தொடக்க நூலில் நாம் வாசித்தோம். நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்பது, வள்ளுவர் கூறிய அழகான கருத்து.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (திருக்குறள் 86)

வானவர் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து புதிய ஏற்பாட்டில் நாம் வாசிப்பது இதுதான்:
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13:1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

உண்மையான விருந்தோம்பலை உயிர்பெறச் செய்யும் மனதை, உலகோர் அனைவருக்கும் இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நாம் விருந்து படைப்போர் மத்தியில், வானத்தூதர்களும் இருக்கலாம். வானத்தூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பு பெறவும், வானத்தூதர்களாக இவ்வுலகில் நாம் மாறவும் வேண்டுமென்று உருக்கமாக மன்றாடுவோம்.

07 July, 2022

“Go and do likewise”! "நீரும் போய் அப்படியே செய்யும்"!

Go and Do Likewise…
  
15th Sunday in Ordinary Time

“All characters and events in this story are purely fictitious… Any resemblance with either dead or living is purely co-incidental” – is the disclaimer used in our novels and stories. This is to avoid the legal traps that the author of the story may have to encounter. This disclaimer will not find a place in the stories Jesus has created – his parables! In fact, Jesus would be more than happy to face any legal battle in order to get to the truth. The disclaimer (or the ‘claimer’) that Jesus would be glad to use for his stories would read like this: “All characters and events in this story are true to life… These events happen all over the world. The characters in these stories are ALL OF US.”
Very specially, in the story we are reflecting this Sunday - the Parable of the Good Samaritan (Luke 10:25-37), Jesus makes all of us part of this story. The invitation that Jesus extends to the lawyer, “Go and do likewise” (Lk. 10:37), is extended to all of us.

Jesus begins this parable reporting a crime that took place in a public space – the road from Jerusalem to Jericho. “A man was going down from Jerusalem to Jericho, and he fell among robbers, who stripped him and beat him, and departed, leaving him half dead” (Luke 10:30) are the dramatic opening words of this parable. Crimes happening in public places in broad daylight have become more and more frequent in our days.
At approximately 3:20 on the morning of March 13, 1964, twenty-eight-year-old Kitty Genovese was returning to her home in a nice middle-class area of Queens, New York…. She parked her car in a nearby parking lot, turned-off the lights and started the walk to her second floor apartment some 35 yards away. She got as far as a streetlight when a man grabbed her. She screamed. Lights went on in the 10-floor apartment building nearby. She yelled, "Oh, my God, he stabbed me! Please help me!" Windows opened in the apartment building and a man’s voice shouted, "Let that girl alone." The attacker looked up, shrugged and walked-off down the street. Ms Genovese struggled to get to her feet. Lights went back off in the apartments. The attacker came back and stabbed her again. She again cried out, "I’m dying! I’m dying!" And again the lights came on and windows opened in many of the nearby apartments. The assailant again left and got into his car and drove away. Ms Genovese staggered to her feet as a city bus drove by. It was now 3:35 a.m. The attacker returned once again. He found her in a doorway at the foot of the stairs and he stabbed her a third time -- this time with a fatal consequence. It was 3:50 when the police received the first call. They responded quickly and within two minutes were at the scene. Ms Genovese was already dead…. [The New York Times, March 27, 1964]
Detectives investigating the murder of Genovese, discovered that no fewer than 38 of her neighbours had witnessed at least one of her killer’s three attacks but had neither come to her aid nor called the police. The one call made to the police came after Genovese was already dead. [‘Long Island Our Story’ by Michael Dorman]

On April 14, 2013, on a busy Jaipur road in India, a young couple was travelling in a scooter with their two kids. A speeding lorry hit the scooter from behind. All the four were thrown off the scooter. The mother and her 8 months old baby were badly hurt. The father, Kanhaiya Lal, and his son escaped with less injuries. Kanhaiya Lal tried to stop all the passing vehicles in order to take his wife and the baby to the hospital. Help arrived after 20 minutes. On the way to the hospital, the mother and the baby died.

The murder of Swathi, a young lady from Chennai, on June 24, 2016, grabbed the attention of the media in India. She was hacked to death at the early hours in a suburban railway station. Swathi’s body was on the platform for nearly 2 hours. The young man called Ram Kumar, who was accused of this crime, committed suicide in prison and the case was closed.

1964 – New York, 2013 – Jaipur, 2016 – Chennai… Different cities, different days. But the common factor is – all these took place in public places and the victims died due to lack of assistance from the people around.

An additional problem in our days is spreading like a virus – namely, capturing these crimes on mobile phones and making them ‘go viral’ on social media. On July 8, 2019, in a town near Thoothukudi, a teacher was hacked to death in a public place by one of his relatives. The passersby were more keen on capturing the ‘action’ in their smart phones than in coming to the rescue of  the victim. Sadly, our generation seems to have become a ‘spectator’ generation!

Let us return to the Parable of the Good Samaritan. In the opening statement, Jesus mentions the ‘robbers’ as the culprits. But, in the rest of the parable, Jesus does not talk about them. He turns our attention to three other characters – the Priest, the Levite and the Samaritan. The first two ignored the dying person. The third one helped him revive.
The position taken by Jesus seems to say that people, journeying through the world, are being stripped, beaten and left half dead. Our primary concern should be to take care of this broken humanity and not spend our time and energy in tracking down culprits. The more we are keen on tracking down culprits, the more they seem to be multiplying, while the victims continue to die on the road side totally neglected.

We shall turn our attention to two questions at the beginning and at the end of this parable. The first question was from the lawyer: “And who is my neighbour?” This question was the catalyst that brought forth the famous Parable of the Good Samaritan. The second question was from Jesus, at the end of this parable: “Which of these three (Priest, Levite, Samaritan), do you think, proved neighbour to the man who fell among the robbers?”
In the question of the lawyer, the reference point was himself: “Who is my neighbour?” Jesus, in the final question, turned this question on its head and asked “To whom are you a neighbour?” Jesus did not stop with the question-and-answer session. He went further and told in clear terms, before and after the parable, that the lawyer needs to go and do something about love of God and love of the neighbour. “You have answered right; do this, and you will live.” (Luke 10:28) “Go and do likewise.” (Luke 10:37)

The day before Martin Luther King, Jr. was assassinated, he delivered his last speech to a crowd of striking sanitation workers in Memphis, Tennessee. In this speech, based on the Parable of the Good Samaritan, Dr King describes the dangerous road from Jerusalem to Jericho which was called the ‘Blood Path’. He differentiates between two types of questions that must have occupied the minds of the Priest, the Levite and the Samaritan. Here are King’s words:
And so the first question that the priest asked, the first question that the Levite asked was, ‘If I stop to help this man, what will happen to me?’

Such a question with a reference to self creates anxiety in us about the consequences of helping another person. Most of us today do not come forward to help out victims of accidents and other forms of violence since we are scared of facing the police and the court. The predominant question is: What will happen to me?

As against this, Dr King speaks of the Samaritan thus: But then the Good Samaritan came by, and he reversed the question: ‘If I do not stop to help this man, what will happen to him?'
It was this ‘other-centeredness’ of the Samaritan that made him the immortal ‘Good Samaritan’, known not only in the Christian circles, but throughout the world. In quite many countries, there are ‘Good Samaritan Laws’. They offer legal protection to people who give reasonable assistance to those who are, or who they believe to be, injured, ill, in peril, or otherwise incapacitated. The protection is intended to reduce bystanders' hesitation to assist, for fear of being sued or prosecuted for unintentional injury or wrongful death… Its purpose is to keep people from being reluctant to help a stranger in need for fear of legal repercussions should they make some mistake in treatment. (Wikipedia)

Jesus describes the committed help rendered by the Samaritan (Lk. 10:33-35). From the details given in these verses, some commentators observe that the Samaritan was a merchant of wine and oil; he was on his way to Jericho to sell them. Since he was carrying a large amount, he had to take a beast along with him.
Granted that he was carrying wine and oil, he could have been an easy target for the robbers. Knowing the danger of the robbers on the road, the Samaritan should have rushed through that section of his journey, faster than the Priest and the Levite. But, he was a different person. He gave more importance to the wounded man than himself and his business interest. From a ‘practical’ point of view, he was a fool to spend so much time in that dangerous road, helping a total stranger.

Henry Lawson, an Australian poet, wrote a poem on the Good Samaritan in which he calls him a fool:
He comes from out the ages dim -- the good Samaritan; …
He'd been a fool, perhaps, and would have prospered had he tried,
But he was one who never could pass by the other side.
An honest man whom men called soft, while laughing in their sleeves--
No doubt in business ways he oft had fallen amongst thieves.

Jesus told the lawyer to follow the example of this ‘foolish’ Samaritan. The same invitation is extended to us too! Let us “Go and do likewise”!

Our closing thoughts turn to our Moslem friends who celebrate Bakrid on July 10. The sacrifice of Abraham is the core event of this festival. It is a festival celebrated as the culmination of the Haj pilgrimage. We share prayerful wishes to our Moslem brothers and sisters!

Go and Do Likewise…

பொதுக்காலம் - 15ம் ஞாயிறு

இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல (“All characters and events in this story are purely fictitious… Any resemblance with either dead or living is purely co-incidental”) என்பது, நம் கதைகளில் முன்னுரையாக நாம் காணும் ஓர் அறிக்கை. கதையை உருவாக்கியவர் மீது யாரும் வழக்கு தொடுத்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வறிக்கை விடப்படுகிறது. இத்தகைய அறிக்கையை, இயேசு, தன் உவமைகளுக்கு முன் கூறியிருக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். தான் கூறிய உவமைகளுக்கு முன்னுரையாக, அவர் அறிக்கை வெளியிட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்கும்: "இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. இவை, ஒவ்வொரு நாளும், உலகின் பல இடங்களில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள். இக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், நாம் அனைவருமே" என்ற அறிக்கையே, இயேசுவின் உவமைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பாக, இந்த ஞாயிறு நமக்கு வழங்கப்பட்டுள்ள 'நல்ல சமாரியர்' உவமையில், (லூக்கா 10:25-37) இந்த அறிவிப்பை, இயேசு, தெளிவாக, நேரடியாகவே கூறியுள்ளார். "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (லூக்கா 10:29) என்று, திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலாக, 'நல்ல சமாரியர்' உவமையைக் கூறிய இயேசு, இறுதியில் அவ்வறிஞரிடம், "நீரும் போய் அப்படியே செய்யும்" (லூக்கா 10:37) என்ற சவாலை முன்வைத்தார். நம் அயலவர், அடுத்திருப்பவர் யார் என்ற கேள்விக்கு, அறிவு சார்ந்த விடைகளைத் தேடி, திருப்தி அடைவதற்குப் பதில், அந்தக் கேள்வி நம்மை செயல்களில் ஈடுபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு, இன்று, நம் ஒவ்வொருவரையும் பார்த்து, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறுகிறார்.

பொது இடம் ஒன்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வுடன், இயேசு தன் உவமையைத் துவக்குகிறார். எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்ற ஒருவர், வழியில், கள்வர்களிடம் சிக்கியதால், அவரது ஆடைகள் களையப்பட்டு, காயப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் என்று, இயேசு தன் உவமையை அறிமுகம் செய்கிறார். இவ்வறிமுக வரிகளில் சித்திரிக்கப்படும் கொடூரம், ஒவ்வொரு நாளும், பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன என்பதை நாம் அறிவோம்.

நியூயார்க் பெருநகரின் புறநகர் பகுதி ஒன்றில் இடம்பெற்ற ஒரு வேதனை நிகழ்வு இது. 28 வயது நிறைந்த இளம்பெண் Kitty Genovese, 1964ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி விடியற்காலை 3.30 மணியளவில், தன் காரை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் அடுக்கு மாடி குடியிருப்பை நோக்கி நடந்தார். அப்போது திடீரென ஒருவர் அவரை இடைமறித்து, கத்தியால் குத்தினார். உடனே, Kitty, "என்னைக் கத்தியால் குத்திவிட்டான். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அலறினார். அவர் அலறலைக் கேட்டு, அந்த 10 மாடிக் கட்டடத்தின் பல வீடுகளில் விளக்குகள் எரிந்தன. ஒருவர் சன்னல் வழியே, "அந்தப் பெண்ணை விட்டுவிடு" என்று கத்தியதும், கத்தியால் குத்தியவர், அவ்விடம் விட்டு அகன்றார். Kitty, இரத்தக் காயங்களுடன் தடுமாறியபடி தன் வீடுநோக்கி நடந்தார். எரிந்த விளக்குகள் அணைந்தன. மீண்டும், அம்மனிதர் திரும்பி வந்து, Kittyஐக் கத்தியால் குத்தினார். மீண்டும் Kitty குரல் எழுப்ப, மீண்டும் விளக்குகள் எரிந்தன. பல வீடுகளில், சன்னல்கள் திறந்தன. கத்தியால் குத்தியவர், தான் வந்திருந்த காரில் ஏறிச்சென்றார். விளக்குகள் அணைந்தன. 15 நிமிடங்கள் சென்று, அதே ஆள், மீண்டும் அவ்விடம் வந்தார். இம்முறை, இளம்பெண் Kitty, அடுக்குமாடிக் கட்டடத்தின் வாசலில் விழுந்துகிடப்பதைக் கண்டார். மீண்டும் அவரைக் கத்தியால் குத்தினார். இளம்பெண் அலறினார். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்த ஒருவர் காவல்துறைக்கு 'போன்' செய்ததால், காவல் துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர். அதற்குள், கத்தியால் குத்தியவர் தப்பித்துவிட்டார். இளம்பெண் Kitty Genovese, இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். இளம்பெண்ணை அந்த மனிதர் கத்தியால் குத்தியதை தங்கள் வீடுகளிலிருந்து 38 பேர் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று, இந்நிகழ்வை துப்பறிந்தவர்கள் கண்டறிந்தனர்.

2013ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி, ஜெய்ப்பூர் நகரின் முக்கிய சாலையொன்றில், ஓர் இளம் தம்பதியர், தங்கள் இரு குழந்தைகளுடன் 'ஸ்கூட்டரி'ல் பயணம் செய்தனர். அவ்வழியே வேகமாக வந்த ஒரு லாரி, 'ஸ்கூட்டர்' மீது மோதி, அந்த நால்வரும் கீழே விழுந்தனர். இளம் தாயும் அவர் கரங்களில் வைத்திருந்த 8 மாதக் குழந்தையும் அதிகம் அடிபட்டனர். இளம் தந்தை கன்னையா லால் அவர்களும், அவரது இரண்டு வயது மகனும், குறைவான காயங்களுடன் தப்பித்தனர். கன்னையா அவர்கள், அந்த முக்கிய சாலையில் பறந்துகொண்டிருந்த அத்தனை வாகனங்களையும் நிறுத்த முயன்று தோற்றுப்போனார். 20 நிமிடங்கள் சென்று 'ஆம்புலன்ஸ்' வந்தது. மருத்துவ மனைக்குப் போகும் வழியில், இளம் தாயும், 8 மாதக் குழந்தையும் இறந்தனர்.

2016ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, சென்னையில், சுவாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். வெட்டப்பட்ட சுவாதியின் உடல், 2 மணி நேரமாக இரயில் நிலையத்திலேயே கிடந்தது. அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட இராம்குமார் என்ற இளையவர், சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி, காவல்துறை, வழக்கை முடித்துவிட்டது.

1964ம் ஆண்டு - நியூ யார்க், 2013ம் ஆண்டு - ஜெய்ப்பூர், 2016ம் ஆண்டு - சென்னை... வெவ்வேறு ஆண்டுகள், வெவ்வேறு நகரங்கள். ஆனால், மூன்று நிகழ்வுகளிலும், பலர் சூழ்ந்திருந்தும், உதவிகள் கிடைக்காமல், இவ்வுயிர்கள் மரணம் அடைந்தன என்ற கொடூரம், ஒரு பொதுவான, வேதனையான உண்மை.

அண்மையக் காலங்களில், ஒரு கூடுதல் கொடூரம் நிகழ்ந்து வருகிறது. 2019ம் ஆண்டு, ஜூலை 8ம் தேதி, தமிழ்நாட்டில், விளாத்திக்குளம் என்ற ஊரில், பள்ளி ஆசிரியர் ஒருவரை, அவரது உறவினர் பொது இடத்தில், வெட்டிக் கொலைசெய்தார். அவ்வழியே சென்றவர்கள், அக்கொலையை, கைப்பேசியில் பதிவுசெய்து வெளியிடுவதில் ஆர்வமாயிருந்தனர். கண்முன் நடக்கும் கொடூரங்களைத் தடுக்கவோ, அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவோ முயற்சி செய்வதைவிட்டு, அக்கொடூரத்தை பதிவுசெய்து, அதை மற்றவர்களோடு பகிரும் போக்கு பெருகியுள்ளது. கொடுமைகளைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளர்கள், பல மடங்காக அதிகரித்திருப்பது, வேதனை தரும் உண்மை.

நல்ல சமாரியர் உவமைக்குத் திரும்புவோம். இக்கொடுமையைச் செய்தது, கள்வர்கள் என்று, இயேசு, உவமையின் துவக்கத்தில் தெளிவாகக் கூறுகிறார். ஆனால், அந்தக் கள்வர்கள் மீது நம் கவனத்தைத் திருப்பாமல், அடிபட்டவரைக் கண்டு விலகிச் சென்றவர்கள், உதவி செய்தவர் ஆகியோரின்மீது நம் கவனத்தைத் திருப்புகிறார், இயேசு.
அவர் இவ்விதம் செய்வது, ஓர் உண்மையை நம் உள்ளங்களில் ஆழப் பதிக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் மனிதர்கள் அடிபட்டு வீழ்வது, அடிக்கடி நிகழும் கொடுமை. அவ்வேளைகளில், அவர்கள், ஏன், எவ்வாறு, யாரால் அடிபட்டனர் என்று கண்டுபிடிப்பதில் நம் சக்தியையும், நேரத்தையும் வீணாக்குவதற்குப் பதில், அடிபட்டு கிடப்பவரை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதில் நம் கவனம் திரும்பவேண்டும் என்பதே, இயேசு இவ்வுவமையில் நமக்குச் சொல்லித்தரும் முதன்மையான பாடம்.

அம்மனிதர் அடிபட்டுக் கிடந்தப் பாதையில், ஒரு குரு, ஒரு லேவியர், மற்றும் ஒரு சமாரியர் சென்றனர். இயேசு, இம்மூவரையும் அறிமுகப்படுத்தும்போது, அவர்கள், அடிபட்டிருந்தவரை எவ்வாறு கண்டனர் என்பதை, முக்கியமான வேறுபாடுகளுடன் கூறுகிறார். (லூக்கா 10 31,32,33)

குரு, போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரும், அங்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்ததாக வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார். அம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம். இதயத்தில் உருவான பரிவு, சமாரியரை, செயலில் ஈடுபட வைத்தது.
பரிவினால் உந்தப்பட்ட சமாரியர், அடிபட்டிருந்தவரின் காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் ஊற்றி, அக்காயங்களை கட்டினார் என்றும், தாம் பயணம் செய்துவந்த விலங்கின் மீது, அவரை ஏற்றி, ஒரு சாவடிக்குக் கூட்டிச்சென்றார் என்றும், இயேசு விவரிக்கிறார். சமாரியர் ஆற்றியச் செயல்களையெல்லாம் இணைத்துப் பார்த்தால், அவரைப் பற்றி ஒரு சில விவரங்கள் தெளிவாகின்றன. வர்த்தக மையமாக விளங்கிய எரிகோவில், திராட்சை மதுவும், எண்ணெயும் விற்பதற்காகச் சென்றவர், அந்தச் சமாரியர். கணிசமான அளவு இவற்றை அவர் எடுத்துச் சென்றதால், ஒரு விலங்கும் உடன் சென்றது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை ஒன்று திரட்டினால், அவ்வழியாக வந்த சமாரியர், வசதி வாய்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கள்வர் பயம் அதிகம் இருந்த அப்பகுதியில், தான், தனது பாதுகாப்பு, தனது பொருட்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு, அச்சமாரியர் முதலிடம் கொடுத்திருந்தால், குருவையும், லேவியரையும் விட, அவர்தான் மிக அவசரமாக அப்பாதையைக் கடந்திருக்கவேண்டும். ஆனால், நடந்தது என்ன? அவர், தன்னையும், தன் வர்த்தகப் பொருட்களையும், விலங்கையும் ஆபத்துக்கு இலக்காக்குகிறார். தன்னை ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை மறந்து, செயலில் இறங்குகிறார். ஏனெனில், அவர் எண்ணங்களையும், மனதையும், சூழ்ந்திருந்ததேல்லாம் பரிவு ஒன்றே.

ஆஸ்திரேலியக் கவிஞர் Henry Lawson என்பவர், நல்ல சமாரியர் உவமையை, ஒரு கவிதையாக வடித்துள்ளார். அக்கவிதையில், சமாரியரை, ஒரு முட்டாள் எனக் கூறுகிறார் அவர்:
அவர் ஒரு முட்டாள்.
அவர் நினைத்திருந்தால், செல்வம் குவித்திருக்கலாம்
ஆனால், தேவையில் உள்ள அடுத்தவரை
கடந்து செல்ல இயலாதவர் அவர்.
அவரைக் கண்ட மற்ற வர்த்தகர்கள்
அவர் மென்மையானவர் என்று கேலி செய்தனர்
வர்த்தக உலகில், இந்த சமாரியர்,
அடிக்கடி கள்வர்களால் காயப்பட்டார்.

முதலுதவிகள் செய்ததும், தன் கடமை முடிந்ததென்று எண்ணாமல், தான் துவங்கிய உதவியை முழுமையாகத் தொடர்ந்தார் சமாரியர். அடிபட்டவரை, தான் பயணம் செய்துவந்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுச் சென்றார்.

அடுத்தவருக்கு உதவி என்பதை பல வழிகளில் செய்யலாம். நமது தேவை போக, அதிகமாக, சேமிப்பில் இருக்கும் செல்வத்திலிருந்து பிறருக்கு உதவிகள் செய்யலாம்.  வழியில் நம்மிடம் கையேந்தும் மனிதர்களுக்கு நாம் அளிக்கும் தர்மம், இவ்வகையைச் சேரும். அல்லது, நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவிகள் செய்யலாம். உங்களுக்கு வலிக்கும்வரை வாரி வழங்குங்கள் Give till it hurts” என்பது, புனித அன்னை தெரேசா அவர்கள் வழங்கிய ஓர் அற்புத அறிவுரை. அதாவது, நமது சுகங்களைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு வழங்குவதில்தான் பொருள் உள்ளது என்பது, அன்னையின் கருத்து.

குரு, லேவியர், சமாரியர் என்ற இம்மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி Martin Luther King Jr. அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிடுகையில், ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?" இந்தக் கேள்வி, அவர்களுக்குள் உருவாக்கிய அச்சம், அவர்களை, அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. பொது இடங்களில் அடிபட்டவர்கள் மீது அக்கறை காட்டினால், நாம், கோர்ட், கேஸ் என்று அலையவேண்டியிருக்கும் என்ற அச்சம்தானே, நம்மை தயங்கச் செய்கிறது.

இதற்கு நேர்மாறாக, அடிபட்டவரைக் கண்டதும், சமாரியர் மனதில் எழுந்த கேள்வி: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?" இந்த வேறுபாடுதான், முதல் இருவருக்கும், இறுதியில் வந்த சமாரியருக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு பாதாளத்தை உருவாக்கியது. அந்தச் சமாரியரைப்போல் நாமும் செய்யவேண்டும் என்பதே, இயேசு சொல்லித்தர விரும்பும் ஒரே பாடம்.

"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்ட திருச்சட்ட அறிஞர், தன் கேள்விகளுக்கு அறிவுசார்ந்த விடைகள் கிடைக்கும், எனவே தன் அறிவுத் திறமையையும் கூட்டத்திற்கு முன் நிரூபிக்கலாம் என்ற எண்ணத்துடன் இயேசுவிடம் கேள்விகளைத் தொடுத்தார். இயேசுவோ, அதனை ஒரு கேள்வி பதில் விவாதமாக மாற்றிவிடாமல், செயலுக்கு இட்டுச்செல்லும் அழைப்பாக மாற்றினார். உவமையின் இறுதியில், 'அயலவர் யார்?' என்ற கேள்விக்கு சரியான பதில் அளித்த திருச்சட்ட அறிஞரைப் பார்த்து, 'சரியாகச் சொன்னீர்' என்று பாராட்டிவிட்டு, இயேசு விலகவில்லை. மாறாக, அவ்வறிஞரைப் பார்த்து, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

இந்த உவமையின் இறுதியில் இயேசு சொன்ன சொற்கள், நமது முகத்தில் தண்ணீர் தெளித்து, தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து, நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் சொற்கள்... "நீரும் போய் அப்படியே செய்யும்."
என்ன செய்ய வேண்டும்? அன்பு செய்ய வேண்டும்.
எப்படிச் செய்ய வேண்டும்? சமாரியர் செய்ததுபோல் செய்யவேண்டும்.
அதாவது,
·         நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், நமது பயணங்களை நிறுத்த வேண்டும்.
·          தேவைகளில் இருப்போரை, நமது பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அல்லது, சுமந்துசெல்ல வேண்டும்.
·         தேவைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்.
"நீரும் போய் அப்படியே செய்யும்." 
நாமும் போய் அப்படியே செய்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம். ஜூலை 10, இஞ்ஞாயிறன்று, நமது இஸ்லாமிய சகோதரர்களும், சகோதரிகளும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மறைகளின் தந்தையாக விளங்கும் ஆபிரகாம் அளித்த பலியை மையப்படுத்தி கொண்டாடப்படும் இத்திருநாளில், இறைவன், நம் இஸ்லாமிய சகோதரர்களையும், சகோதரிகளையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று செபிப்போம்.