11 January, 2024

What do you seek? … for India? என்ன தேடுகிறீர்கள்? ... இந்தியாவுக்கு?

What do you seek?

2nd Sunday in Ordinary Time - Pongal

Starting from January 14, this Sunday, Pongal (the harvest festival) is celebrated in Tamilnadu and in many other countries where Tamil speaking communities live. In recent years, some of the States of the U.S. have designated January 14, Pongal Day, as a special holiday for the state. This recognition must have created a feeling of elation for the thousands of Tamils living around the world.
A similar feeling was experienced a few years back (2017) during Pongal. On Pongal day, the eyes of thousands of people all over the world were turned towards Marina Beach, Chennai. Young men and women, as well as family persons, children and senior citizens in tens of thousands gathered in Marina Beach demanding the re-instatement of ‘Jallikattu’ - the bull-fight, banned a few years back.

Hats off to the young women and men of Tamil Nadu, who had taken up protests in various locations of Tamil Nadu spontaneously. They had not sought the support of political paries or media personalities. They had taken care not to be divided on the basis of caste, religion, political allegiance, fan club etc. They had not resorted to any violent ways but had conducted themselves in an orderly way to demand their right to conduct ‘Jallikattu’. To me, this was truly a people’s movement – especially a youth movement, where no individual stole the limelight. The Central and State governments as well as various MNCs were forced to take note of this event, and also take stock of their dubious, underhand dealings with people.

This ‘dharmic’ protest by the youth gave hope as to what our young generation can do if they unite for a purpose. We can surely remember in recent years, how young men and women all over the world are fighting to save our environment. Unfortunately, after the ‘Jallikattu’ protest, the youth of Tamil Nadu have not shown interest in coming together to protest against other oppressive measures like the NEET exam. In general, the youth in India have not supported the lengthy protests taken up by the farmers in Delhi (2020-2021), or raised their voice against the atrocities carried out in Manipur (2023).
It is painful to see how thousands of young women and men, even after seeing what youth power can do, still waste their time in fan clubs, cricket matches and public rallies organized by political leaders. We pray that the youth may wake up from their slumber and truly become a constructive force in this election year (2024) to bring awareness to the people of India to choose proper leaders and thus bring about social change in Tamil Nadu and all over India.

One of the Tamil poets by name ‘Kaniyan Poongunranar’ has enunciated the broad-minded Tamil culture that welcomes every one as a relative through the poem “Yaathum Oore, Yaavarum Kelir”, which means, “All the towns are our neighbourhood and all the people, our relatives”. We pray that the festival of Pongal, which brings near and dear ones together from far and wide, reminds us strongly that all of us are knit together into a noble human family! We pray that our young men and women do not become a prey to the divisive tactics employed by our selfish political leaders on the basis of caste, creed, language, and political parties in order to gain votes!

Let us now turn our attention to this Sunday’s readings…
The first reading (I Samuel 3:3-10, 19). and the Gospel (John 1: 35-42) talk about how God gets introduced to us in various ways. In the first reading we hear how God gets introduced to Samuel when he was a child. In the Gospel, Andrew and Simon Peter get introduced to Jesus as adults. There are a few lessons – old and new – that we can learn from these two readings.

God meets Samuel in the temple. Samuel has been serving in the temple for quite some time. The opening line of this passage says that Samuel was lying down within the temple of the LORD. (I Sam. 3:3) This indicates that he was all the time in the temple. Still, he had not met God.
I am reminded of the small fish swimming in the ocean. It was swimming here and there as if searching for something. A big fish asked the small fish: “What are you searching for?” The small fish answered: “The ocean”. It is possible to be immersed in the ocean and still not be aware of it.
It is possible for us to be in God’s presence and still not be aware of God as in the case of Samuel. Samuel was a child and, hence, his ignorance need not be made much of. What about us when we take God for granted when our life is smooth-sailing and begin searching for God mainly when things became tough for us?

In the Gospel, we come across two adults getting introduced to Jesus. In the case of Samuel, God gets introduced in the temple; whereas in the Gospel, Jesus gets introduced on the roadside. Both in the Bible, as well as in human history, God gets introduced more often in very ordinary circumstances and places than in the holy of holies. Since God gets introduced in very ordinary situations, many of us tend to miss the importance of it. Even in the case of the two disciples of John, they could have missed Jesus. But, they took extra efforts. They followed Him.
The two disciples… followed Jesus. Jesus turned, and saw them following, and said to them, "What do you seek?" And they said to him, "Rabbi" (which means Teacher), "where are you staying?" He said to them, "Come and see." They came and saw where he was staying; and they stayed with him that day, for it was about the tenth hour. (John 1: 37-39)

It is interesting to note that the very first words spoken by Jesus, in the Gospel of John, are in the form of a pertinent question: "What do you seek?" At the beginning of a New Year, we seek so many things to make our life better. If Jesus were to ask each of us "What do you seek?", what would be our answer. What are we seeking in 2024? 
Two questions ‘What do you seek?’ and ‘Where are you staying?’ as well as an invitation ‘Come and see’ are the main focus of this passage and it gives us two fundamental characteristics of a true disciple, namely, seeking God and staying with God.

I have read this passage from John’s Gospel quite many times and have interpreted it in very many ways. This time, one aspect of this passage struck me for the first time… the idea of Andrew taking efforts to introduce the Lord to his brother Simon. As siblings, we tend to introduce our brothers and sisters to many things and persons in life. But how many of us introduce God to our own brothers and sisters? In how many families God is a topic of our conversations? The family that prays together, not only stays together, but also becomes familiar with God!

Another aspect of this passage is the humility of Andrew. He brings Peter to Jesus and Jesus seems to pay more attention to Peter, calling him ‘the rock’ etc. The meeting between Jesus and Peter began a historical relationship that has survived 20 centuries. This does not seem to have disturbed Andrew one bit. He came from the school of John the Baptist, who often spoke of how ‘Jesus must increase and he must decrease’. In reality, John did just that. After introducing Jesus to his disciples, he disappeared from the scene. Andrew too, after introducing Jesus to Peter, remained incognito! We can surely pray for this wonderful grace of getting our own near and dear ones introduced to God and disappearing, once God takes over.

We pray that the Pongal festival brings more cheer and hope to the farmers in Tamilnadu, especially after the heavy rains and floods. We pray that the youth power in India reaps a bumper harvest of noble deeds, especially during this election year - 2024. We pray that our families become schools where God gets introduced to our near and dear ones.

Pro-Jallikattu Protest - 2017

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - பொங்கல் திருநாள்

தமிழகத்திலும், உலகில், தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும், சனவரி 14, இஞ்ஞாயிறு முதல், பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எல்லா நாடுகளிலும், ஆண்டின் பல்வேறு நாட்களில், அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம், மனித உழைப்பு, இறைவனின் கருணை அனைத்தும் இணைந்து, நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது.

ஏழு ஆண்டுகளுக்குமுன், 2017ம் ஆண்டு, பொங்கல் திருநாளையொட்டி, உலகில், பெரும்பாலானோரின் பார்வை, மெரினா கடற்கரையை நோக்கித் திரும்பியிருந்தது. இலட்சக்கணக்கான இளையோர், மெரினா கடற்கரையிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மேற்கொண்ட போராட்டங்கள், நம் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளன. தமிழகமெங்கும், கண்ணியமான முறையில், நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் விளைவாக, தடைசெய்யப்பட்டிருந்தஜல்லிக்கட்டு விளையாட்டு, மீண்டும், தமிழ்நாட்டில் துவக்கப்பட்டது.

சுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், அரசியல் நாற்றம் அறவே இல்லாமல் நடத்தப்பட்ட அந்த அறப்போராட்டம், நம்மை வியக்கவைத்தது; இளையோர் மீது நம்பிக்கையை விதைத்தது. ஒரு நோக்கத்தை மையப்படுத்தி இளைஞர்கள் ஒன்றிணைந்தால், அவர்களால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால், அந்த போராட்டத்திற்குப்பின், இந்திய மக்கள் சந்தித்த வேறு பல பிரச்சனைகளில் இளையோர் ஈடுபடாமல் போனது, பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. NEET தேர்வினால் பல இளம் உயிர்கள் பலியானபோதும், டெல்லியில், தமிழக விவசாயிகளும், பின்னர், ஏனைய விவசாயிகளும் நீண்ட போராட்டங்கள் நடத்தியபோதும், இன்னும், மணிப்பூர் கலவரங்களின்போதும், இந்தியாவை வதைத்த பிரச்சனைகளை இளையோர் கண்டும் காணாமல் இருந்தது, வேதனை தருகிறது.

இளையோர் இணைந்தால் என்ன செய்யமுடியும் என்பதை, 'ஜல்லிக்கட்டு' போராட்டத்தின் வழியே உணர்ந்த பின்னரும், ஆயிரக்கணக்கான இளையோர், இன்னும் ரசிகர் மன்றங்களிலும், கிரிக்கெட் போட்டிகளிலும், அரசியல் தலைவர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களிலும் நேரத்தை வீணடிப்பது, வேதனை அளிக்கிறது. இந்த தேர்தல் ஆண்டில், இளைஞர்கள், கிரிக்கெட், சினிமா ஆகியவை உருவாக்கியுள்ள கனவுலகிலிருந்து விழித்தெழவேண்டும் என்று மன்றாடுவோம். நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க, இந்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் வழியே, தமிழகத்திலும், இந்தியா முழுவதும், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவும், இளையோர், ஆக்கப்பூர்வமான சக்தியாக மாறவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

இனி, இன்றைய ஞாயிறு வாசகங்களின் மீது ஒரு பார்வை....
நம் ஒவ்வொருவருக்கும், வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில், இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பதை, இன்றைய முதல் வாசகமும் (1 சாமுவேல் 3:3ஆ-10,19), நற்செய்தியும் (யோவான் 1:35-42) நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சிறுவன் சாமுவேலுக்கு இறைவன் அறிமுகமான நிகழ்வை, முதல் வாசகமும், வளர்ந்துவிட்ட நிலையில், அந்திரேயா, மற்றும் பேதுரு இருவருக்கும், இயேசு அறிமுகமாகும் நிகழ்வை, இன்றைய நற்செய்தியும் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த இரு நிகழ்வுகளுமே, சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன.

சிறுவன் சாமுவேலுக்கு, ஆண்டவரின் இல்லத்தில், இறைவன் அறிமுகமாகிறார். ஆண்டவரின் இல்லமே சாமுவேலின் வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும், அந்தப் புனிதமான இடத்தில், அச்சிறுவனால், இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
நம் வாழ்வை ஆய்வு செய்யும்போது, நமக்கு அதிக பழக்கமான இடங்களிலும், சூழல்களிலும் இறைவன் தன்னை அறிமுகப்படுத்திய நேரங்களில், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறோம். குறிப்பாக, நம் துன்ப நேரங்களில், இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம்.

கடற்கரையில் இறைவனும், பக்தனும் இணைந்து நடந்து சென்ற கதை நமக்கு நினைவிருக்கும். கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்த பக்தன், தானும், இறைவனும் வாழ்வில் இணைந்து நடந்ததன் அடையாளமாக இரு சோடி காலடித்தடங்கள் கடற்கரை மணலில் பதிந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு சில வேளைகளில், அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித்தடங்களே இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான், பக்தன். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்பதைக் கண்டுபிடித்தான். உடனே பக்தன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிட்டான். இறைவன், பதில் மொழியாக, "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது, ஒரு சோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு, அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரங்களில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார்.

சிறுவயதில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இறைவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவருடன் அதிகமான நேரத்தைச் செலவு செய்யாமல் போனதால், இத்தவறுகள் நடந்தன. இத்தவறுகளைத் தீர்க்கும் வழிகளை, இன்றைய நற்செய்தி சொல்லித்தருகிறது.
இன்றைய நற்செய்திப் பகுதியில், திருமுழுக்கு யோவான், இயேசுவை, தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். நற்செய்தியிலோ, வழியோரம், இயேசுவின் அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே, மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை, இன்றைய நற்செய்தி நினைவுறுத்துகிறது.

வழியோரம் அறிமுகமான இயேசுவை, வழியோரமாகவே விட்டுவிட்டு, தங்கள் வழியில் செல்லவில்லை, அச்சீடர்கள். அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இந்நிகழ்வை யோவான் நற்செய்தி அழகாக விவரிக்கின்றது:
யோவான் நற்செய்தி 1: 38-39
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள் என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். ,,, அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
இயேசு பேசிய முதல் சொற்களாக, யோவான் நற்செய்தியில் நாம் காண்பது, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற பொருள் செறிந்த கேள்வி. இதைத் தொடர்ந்து, "வந்து பாருங்கள்" என்ற அழைப்பையும் இயேசு விடுக்கிறார்.

ஒவ்வொரு புதிய ஆண்டிலும் நாம் தேடல்களை மேற்கொண்டு வருகிறோம். பொதுவாக, இத்தேடல்கள், நமது வாழ்வை, கூடுதலான நலமும், வசதியும் நிறைந்ததாக மாற்றும் தேடல்களாக அமைகின்றன. நம்மிடம், இன்று, இயேசு, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினால், நமது பதில் என்னவாக இருக்கும் என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது பயனளிக்கும். 2024ம் ஆண்டு, நம் தனிப்பட்ட வாழ்விற்காகவும், இந்திய நாட்டிற்காகவும் நாம் தேடுவது என்ன?

"என்ன தேடுகிறீர்கள்?" "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற இரு கேள்விகளும், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பும், அந்த அழைப்பை ஏற்று, சீடர்கள் இயேசுவுடன் தங்கியதும், இன்றைய நற்செய்தியின் மைய நிகழ்வுகளாக அமைந்துள்ளன. இறைவனை, இயேசுவை, உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க விரும்பும் சீடர்களுக்குத் தேவையான இரு அம்சங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான அம்சங்கள். அடுத்ததாக, தாங்கள் பெற்ற அனுபவத்தை, பிறரும் பெறவேண்டுமென்ற ஆவலில், அவர்களை இறைவனிடம் அழைத்துச் செல்வதும், உண்மையான சீடரின் பண்பு. இதையே, அந்திரேயா செய்தார்.

அந்திரேயா முதலில் இயேசுவைச் சந்திக்கிறார். பின்னர், தான் பெற்ற இன்பம் தன் சகோதரனும் பெறவேண்டும் என்ற அக்கறையுடன், பேதுருவை, இயேசுவிடம் அழைத்து வருகிறார். நம் குடும்பங்களில், உடன்பிறந்தோரும், உறவுகளும், வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக, பலரை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம், இறைவனை, அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது.
இந்த அறிமுகம் நம் குடும்பங்களில் நடைபெறுகிறதா? நாம் வாழும் இன்றைய உலகில், இறைவனை அறிமுகம் செய்துவைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராயவேண்டும். இறைவனை நம் குடும்பங்களில் அறிமுகப்படுத்த, அவருடன் உறவை வளர்க்க, குடும்ப செபங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

அந்திரேயா தன் உடன் பிறந்த பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. பேதுருவைக் கண்டதும் இயேசுவின் முழு கவனமும் அவர்மீது திரும்பியது. அவரை 'கேபா' 'பாறை' உறுதியானவர் என்றெல்லாம் புகழ்கிறார் இயேசு. தான் அழைத்து வந்த சகோதரன் மீது இயேசு தனி கவனம் காட்டியது, அந்திரேயாவுக்கு வருத்தத்தையோ, பொறாமையையோ உருவாக்கவில்லை. காரணம், அவர் திருமுழுக்கு யோவானின் சீடர். அவர் வளரவேண்டும், தான் மறைய வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்த திருமுழுக்கு யோவான், இயேசுவை தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்தார்; மறைந்துபோனார். அவரது சீடராக இருந்த அந்திரேயாவும், அதே மன நிலையில் இருந்தார். தான் மறைந்தாலும் சரி, தன் சகோதரன் பேதுரு வரலாறு படைக்கவேண்டும் என்று எண்ணினார் அந்திரேயா. அவர் எண்ணியபடியே, இயேசுவும், பேதுருவும் படைத்த அந்த வரலாறு, 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது.

உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில், நாம், ஒருவர் ஒருவருக்கு இறைவனை அறிமுகம் செய்வதற்கும், அனைவரும் இணைந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையுடன், மனித குடும்பத்தை உருவாக்குவதற்கும் இறைவன் நமக்கு நல்வழிகாட்ட மன்றாடுவோம்.
புலர்ந்திருக்கும் புதிய ஆண்டு, இளையோருக்கு ஆக்கப்பூர்வமான ஆண்டாக அமைய வேண்டுவோம். குறிப்பாக, இவ்வாண்டு, தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இந்தியாவில், நல்லதொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் மிக முக்கியப் பணி தங்களுக்கு உள்ளது என்பதை இளையோர் உணர்ந்து, அதற்கு ஏற்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.


04 January, 2024

Inclusive Family Feast அனைவரும் இணையும் குடும்ப விழா

 
Following the Star of Bethlehem

The Feast of the Epiphany

Last Sunday, being the final day of 2023, we spoke about the Greek-Roman deity Janus with a face looking backwards at 2023 and a face looking forward at 2024. We also spoke about how to step into the New Year with hope and confidence. As we began 2024, a powerful earthquake hit Japan on New Year's Day killing at least 55 people. Many of us would have felt this to be a bad omen and some ‘experts’ would have started talking about all the dangers lurking around the corner for this year. These ‘doomsday astrologers’ would have based their predictions on how the different stars are aligned against the human family etc.

To counter these ‘doomsday predictions’, the Church keeps presenting to us Biblical figures who teach us lessons of hope. Last Sunday we reflected on Abraham who was invited by the Lord to “Look up at the sky and count the stars” (Gen.15:5). This Sunday, we are invited not only to look up at the sky, but to ‘follow a star’ as did the wise men from the East. Let us begin our reflection on these wise men who were seriously searching for God. We begin with a story from a collection of the lives of saints - the saints of Islam - which concerns a king of Balkh, named Ebrahim ibn Adam and his search for God.
Ebrahim was wealthy according to every earthly measure. At the same time, however, he sincerely and restlessly strove to be wealthy spiritually as well. One night, the king was disturbed from sleep by the noise of someone walking on the roof above his bed. Alarmed, he shouted: 'Who's there?' 'A friend,' came the reply from the roof. 'I've lost my camel.' Perturbed by such stupidity, Ebrahim screamed: 'You fool! Are you looking for a camel on the roof?' 'You fool!' the voice from the roof answered. 'Are you looking for God in silk clothing, and lying on a golden bed?' Those simple words filled the king with such enlightenment, that he arose from his sleep to become a remarkable saint.

Being clothed in silk and lying on a golden bed are not the most apt modes to search for God. Today’s Feast - the Feast of the Epiphany - helps us to learn some basic lessons on how to search for God. Although this Feast is mainly about Jesus revealing himself to the whole world, still, popularly, the main characters of this feast are the so called ‘Magi’. Very little is known about these persons (Kings? Wise men? Astrologers?) from the Bible. Only Matthew’s Gospel (Matthew 2:1-12) talks about these persons. But, their effort in following the star has inspired countless men and women to ‘follow the star’ in their lives.

Let us turn our attention to the phrase – ‘following a star’. Stars are not visible during the day. Hence, following a star is possible only at night. This means that these wise men must have taken up most of their journey at night – not an easy option given their mode of transport etc. It must have been very difficult to gaze upon one little star among the hundreds, on a clear sky. What if the sky was not clear? Then they would have to wait until clouds and mist clear. So, their journey must have taken nights… many nights. Still, they persisted. What a resolve! Resolutions are part and parcel of every New Year! What better way to begin the New Year with the feast of ‘the wise men’ who can be honoured as ‘patrons of resolutions’!

Nowadays, the phrase ‘following a star’ is, unfortunately, misinterpreted as following a star-personality. In India, more unfortunately, we have too many of these stars, especially in the cine field and in cricket. The amount of time and energy wasted by the fans on these ‘stars’ and ‘super-stars’ is shocking, to say the least. By the time these fans learn that ‘following these stars’ lead them nowhere, it is rather too late. If only the typical Indian fan can take a new year resolution to treat cinema and cricket as only entertainments, our country can scale greater heights!

The Gospel of Matthew says that these wise men were from the East. They were probably experts in astrology – namely, the study of stars. Hence, when they saw this new star, they were able to predict the birth of a King. Their study was not confined to the desk and books. It led them further. They decided to follow the star and meet the King.

In India as well in other Asian countries, there are numerous astrologers who claim to predict the future by studying the star in which one is born. In general, most of the political leaders in Asia seem to trust these astrologers and the stars which are connected with their birthday, rather than trust their people. Naturally, people also don’t seem to trust the politicians!

Why blame political leaders, who have only one aim in their life – to stay in power? Most of us abdicate our power to the stars attached to our birth and surrender our future to them. What these stars predict each week, tends to influence our decisions to a large extent. Should we allow stars and planets to influence our lives so much? We set aside time to read ‘stars foretell’ columns in the papers. But, how many of us have the time to look up at the sky and contemplate the beauty of the stars?

For us living in the 21st century, there seems to be no time to look to the heavens to gaze upon stars. We are dazzled and even blinded by too many artificial stars and hence real stars have receded from our view. We hardly look up. Or, possibly, we look up to the skies only when dark clouds gather. We look up to the skies with a question: Will it rain? Similarly, when dark clouds gather in our hearts and minds, we again look up to the skies with the famous, clichéd question: Is there a God up there? Doubts drive us to look up, whether they are doubts about rain or pain.

When the wise men followed the star, doubts were disturbing their hearts too. But, they were driven more by desire than by doubts and, hence, could reach their destination. For our generation, to which patience and persistence seem to have become obsolete words, the wise men have a lot to teach! This alone is reason enough to celebrate!

There is one more reason to celebrate these wise men since they have introduced us to the larger family of God. Last Sunday we celebrated the Feast of the Holy Family. This Sunday we are celebrating God’s extended family. Yes… this is the core message of the Feast of the Epiphany. This Feast tells us one basic truth about God. God is not a private property of any human group. As far as God is concerned, the larger the family, the better… the more, the merrier!

This idea must have shocked quite a few orthodox Jews. They were very sure that the one and only true God was theirs, EXCLUSIVELY. God must have laughed at this idea; but in His/Her parental love, God would have allowed them to hold on to this ‘exclusivism’. God waited for the opportune time to challenge the exclusivism of the Israelites. By inviting the wise men from the East to visit the Divine Babe at Bethlehem, God had broken the myth of exclusivism!

God cannot be the private property of any human group. This message is still very relevant to us, especially in the light of all the divisions created by various individuals and groups who have used God and religion as political weapons of division. We know how 2024, being the year of the General Election in India, will be used by the politicians to divide people in the name of God. The demolition of the Babri Masjid and the construction of the Ram Temple in Ayodhya has made a deep and bitter rift between the Hindus and the Moslems. Now, the consecration of that temple on January 22, will surely be used as a platform to divide the people even more. It is so sad to see how places of worship, where God wishes to embrace the whole human race, have become battlefields tearing the human family to shreds. God is surely not party to any divisive force! Unifying, reconciling… these are God’s ways. The Feast of the Epiphany teaches us to believe in an INCLUSIVE, ALL-EMBRACING GOD. Let us pray on the Feast of the Epiphany that the whole human family may live together as one divine family!

May this New Year 2024, which is a leap year, bring all of us 366 days filled with Blessings. Every year, on the very first day of the year, our liturgy of the Feast of Mary, Mother of God, gives us an opportunity to learn how we can bless others. The first reading of the Feast taken from the Book of Numbers gives us an account of God teaching Moses how he and Aaron and all the priests should bless the people:
The Lord said to Moses, “Say to Aaron and his sons, Thus, you shall bless the people of Israel: you shall say to them: ‘The Lord bless you and keep you: The Lord make his face to shine upon you, and be gracious to you: The Lord lift up his countenance upon you, and give you peace.’ So, shall they put my name upon the people of Israel, and I will bless them.” (Numbers 6:22-27)

Giving blessings is not an exclusive privilege of the priests. Every one of us is called to bless. If we can use the words of blessings that God had taught Moses, on one another, our families and our human family will be filled with blessings. In blessing others, we become blessed ourselves!

May 2024 be filled with blessings from above and from one another, as well as, with brilliant stars that lead all of us – the one INCLUSIVE HUMAN FAMILY – to God!

Three Wise Men

திருக்காட்சிப் பெருவிழா

கடந்த ஞாயிறு, 2023 ஆம் ஆண்டின் இறுதி நாளன்று, பின்னோக்கியும் முன்னோக்கியும் காணக்கூடிய இரு முகங்களைக் கொண்ட கிரேக்க-உரோமைய தெய்வமான ஜானுஸைப்பற்றி குறிப்பிட்டோம். பின்னோக்கிய நம் பார்வையை நிறைக்கும் துயர நிகழ்வுகளிலிருந்து நம் கவனத்தைத் திருப்பி, நம்பிக்கையுடன் புத்தாண்டில் எப்படி அடியெடுத்து வைப்பது என்பது பற்றியும் சிந்தித்தோம். 2024ம் ஆண்டின் புத்தாண்டு நாளன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 55 பேர் இறந்ததை நம்மில் பலர் ஒரு கெட்ட சகுனமாக உணர்ந்திருப்போம். புலந்திருக்கும் புதிய ஆண்டில் இன்னும் என்னென்ன ஆபத்துக்கள் காத்திருக்கின்றனவோ என்று எண்ணியிருப்போம். இந்த நிலநடுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மனித குடும்பத்திற்கு எதிராக வெவ்வேறு கோளங்களும் நட்சத்திரங்களும் அணிவகுத்து உள்ளன என்று கணிக்கும் 'அழிவுகால ஜோதிடர்கள்' தங்கள் கருத்துக்களை வெளியிட்டதையும் பார்த்திருப்போம்.

நம்பிக்கையைக் குலைக்கும் இத்தகைய 'அழிவுகாலக் கணிப்புகளுக்கு' மாற்றாக  , நம்பிக்கையின் பாடங்களை நமக்கு வழங்கக்கூடிய விவிலிய நாயகர்களை திருஅவை நமக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஞாயிறன்று, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார்" (தொ.நூ. 15:5) என்று அழைக்கப்பட்ட ஆபிரகாமை சந்தித்தோம். இந்த ஞாயிறன்று, வானத்திலுள்ள விண்மீன்களை எண்ணிப்பார்க்க மட்டுமல்ல, அந்த விண்மீன்கள் காட்டிய வழியில் பயணம் மேற்கொண்ட கீழ்த்திசை ஞானிகளைச் சந்திக்கிறோம். அவர்களைப் போல நாமும் ஒரு தேடலை மேற்கொள்ள அழைக்கப்படுகிறோம். நம் தேடல் எத்தகையதாய் இருக்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இஸ்லாமியப் புனிதர்களில் ஒருவரைப் பற்றி சொல்லப்படும் கதை உதவியாக இருக்கும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானின் வடபகுதியில், பால்க் (Balkh) நாட்டை ஆட்சி செய்த மன்னர் இப்ராகிம், அளவற்ற செல்வங்களால் சூழப்பட்டிருந்தார். அதேவேளை, அவர், ஆன்மீக உண்மைகளைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் இரவு, பட்டாடை அணிந்து, தங்கக் கட்டிலில் படுத்தவண்ணம், கடவுளை எங்கு, எப்படி காணமுடியும் என்பதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார், மன்னர். அப்போது, அரண்மனையின் கூரையில் யாரோ நடந்து செல்வதுபோல் சப்தம் கேட்டது. அரசர் உடனே, "யாரங்கே?" என்று கத்தினார். "உங்கள் நண்பன்" என்று, கூரையிலிருந்து பதில் வந்தது. "இந்த இரவு நேரத்தில் என் கூரைமீது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று மன்னர் எரிச்சலுடன் கேட்க, "தொலைந்துபோன என் ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று பதில் வந்தது.
மதியற்ற அந்தப் பதிலைக் கேட்டு, மேலும் எரிச்சலடைந்த மன்னர், "முட்டாளே! தொலைந்துபோன ஒட்டகத்தை, என் கூரைமீது தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்று ஏளனமாகக் கேட்டார். உடனே, "முட்டாளே! பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, நீ கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா?" என்ற கேள்வி, கூரையிலிருந்து ஒலித்தது.

பட்டாடை அணிந்து, தங்கக்கட்டிலில் படுத்துக்கொண்டு, இறைவனைத் தேடுவது கடினம். இறைவனைத் தேடிக் கண்டுபிடிக்க, கடினமான, ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த உண்மையை உணர்த்தும் திருநாளை, இன்று நாம் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் முதல் ஞாயிறன்று நாம் கொண்டாடும் திருக்காட்சிப் பெருவிழா, இறைவனைத் தேடிக் கண்டடையும் வழிகளை நமக்குச் சொல்லித்தருகிறது. இத்திருநாளன்று, இறைவன் தன்னை உலகமனைத்திற்கும் வெளிப்படுத்தியதால், இதனை, திருக்காட்சிப் பெருவிழா என அழைக்கிறோம்.

கடந்த ஞாயிறன்று நாம் திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடினோம். இந்த ஞாயிறு, நாம் கடவுளின் கூட்டுக் குடும்பத்தைக் கொண்டாடுகிறோம். திருக்காட்சிப் பெருவிழாவின் மையப் பொருள், கடவுளைப் பற்றிய ஓர் அடிப்படை உண்மையைச் சொல்கிறது. கடவுள் எந்த ஒரு மனிதக் குழுவின் தனிப்பட்ட சொத்து அல்ல. கடவுளைப் பொருத்தவரையில், இந்த உலகமே அவரது குடும்பம் என்பதே அவ்வுண்மை!

இந்தப் பேருண்மை, பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த யூதர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். உண்மையான கடவுள் தங்களுக்கு மட்டுமே என்பதில் பாரம்பரிய யுதர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். குழந்தைத்தனமான அவர்களது எண்ணத்தைக் கண்டு, கடவுள், தந்தைக்குரிய பரிவோடு புன்முறுவல் பூத்திருப்பார். ஆனால், அந்த தவறிலிருந்து அவர்களை வெளிக்கொணரும் முயற்சிகளை அவர் மேற்கொண்டிருப்பார். அதன் ஒரு பகுதியாக, அவர், கீழ்த்திசை ஞானிகளை தன் மகன் பிறந்த வேளையில் அழைத்துவந்தார். அவர்கள் வழியே, தன் குடும்பம் அனைவரையும் உள்ளடக்கியது என்பதை இறைவன் அழுத்தந்திருத்தமாக பறைசாற்றினார்.

கடவுள் எந்த மனித குழுவின் தனிப்பட்ட சொத்தாக இருக்கமுடியாது என்ற இந்த உண்மை, மற்றெல்லா காலங்களையும் விட, இன்று, மனித குடும்பம் முழுவதற்கும், அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்திற்குத் தேவையான ஒரு முக்கிய உண்மை. 2024ம் ஆண்டு, இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள், மக்களைப் பிரிப்பதற்காக, மதத்தையும், கடவுளையும் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதை நாம் அறிவோம். அயோத்தியில், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு, மற்றும் அங்கு எழுப்பப்பட்டுள்ள இராமர் கோவில் ஆகியவை, இந்துக்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே ஏற்படுத்தியுள்ள ஆழமான, கசப்பான பிளவை நாம் அறிவோம். தற்போது, ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் அந்தக் கோவிலின் கும்பாபிஷேகம், மக்களை மேலும் பிளவுபடுத்தும் நிகழ்வாக நிச்சயம் பயன்படுத்தப்படும்.

மனிதக் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைக்க, கடவுள் காத்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள், மனித குடும்பத்தை பிளவுபடுத்தும் போர்க்களங்களாக மாறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. கடவுள் நிச்சயமாக எந்த பிரிவினைவாத சக்திக்கும் துணைபோவதில்லை! ஒன்றிணைத்தல், ஒப்புரவாக்குதல் ஆகியவையே கடவுளின் வழிகள். மக்களைப் பிரிப்பதற்காக இறைவனை கூறுபோடும் அரசியல் தந்திரங்கள், இந்தப் புத்தாண்டில் வேரோடு களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம்.

மூன்று அரசர்கள், அல்லது, மூன்று ஞானிகள் என்று அழைக்கப்படும் நமது விழா நாயகர்கள், கடினமான ஒரு பயணத்தின் இறுதியில், கடவுளைக் கண்டனர். இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் நடந்தனர் என்றும், இறைவனைச் சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறுவழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதை முதலில் சிந்திக்கலாம். விண்மீன்களின் துணையோடு, இறைவனைச் சந்தித்தபின், நாம் பின்பற்றவேண்டிய மாற்று வழிகளைப்பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்களைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகள், "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்பது, இன்றைய நற்செய்தி சொல்லும் மற்றுமொரு விவரம்: இந்த ஞானிகள், ஆசியாவிலிருந்து, ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்றும், கோள்களை, நட்சத்திரங்களை ஆய்வுசெய்த அறிஞர்கள் என்றும், சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

உலகின் பல நாடுகளில், குறிப்பாக, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், கோள்களை, நட்சத்திரங்களை, வைத்து, பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம். கோள்களையும், நட்சத்திரங்களையும், வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்று நம்பி, நம்மையும், நம் குடும்பங்களையும், சில வேளைகளில், நாட்டையும் வழிநடத்தும் பொறுப்பை, நட்சத்திரங்களை வைத்து வியாபாரம் செய்யும் சோதிடர்களிடம் விட்டுவிடுகிறோமா என்ற ஆய்வை, ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்வது நல்லது. கோள்களையும், நட்சத்திரங்களையும் நம்பி வாழ்வதற்குப் பதில், நட்சத்திரங்களை உருவாக்கிய இறைவனையும், அவர் காட்டும் வழிகளையும், நம்பிவாழ்வது, எவ்வளவோ மேல் என்பதை, இத்திருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது.

இந்த மூன்று ஞானிகள், விண்மீன் வழியே வந்த அழைப்பை ஏற்று, இறைவனைத் தேடி, பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. பல இரவுகள், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில், மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து, தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை இரவுகள், எத்தனை எத்தனை இடர்பாடுகள்? அத்தனையின் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், பல்லாயிரம் மைல்கள் பயணம்செய்த அந்த ஞானிகளின் மனஉறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. நம்மில் பலர் வாழ்வது நகரங்கள் என்பதால், அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின் ஒளிவெள்ளம், விண்மீன்களை மூழ்கடித்துவிடுகின்றது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
கருமேகம் சூழும்போது, சந்தேகத்தோடு நிமிர்ந்து வானத்தைப் பார்க்க பழகிவிட்ட நாம், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம். சந்தேகம் என்பது, கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும். சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின்னிருந்து, கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் நமக்குப் புரியாது.

நட்சத்திரங்கள், ‘ஸ்டார்கள் என்ற சொல், மனதில் ஒருசில எண்ணங்களை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில், திரை உலகில் பல 'ஸ்டார்'களை உருவாக்கி, கடவுளுக்கு இணையான ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்கும் பல்லாயிரம் இளையோரை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. இந்த ஸ்டார்களின் செயற்கை ஒளியை, உண்மை ஒளியென்று நம்பி, அதைச்சுற்றி வட்டமிட்டு, தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளும் விட்டில் பூச்சிகளாக வாழும் இரசிகர்களை நினைத்து வேதனையாய் இருக்கிறது. 'ஸ்டார்'களை நம்பி, தங்கள் வாழ்வை அடகுவைக்கும் இரசிகர்கள், குறிப்பாக, இளையோர், தங்கள் மயக்கத்திலிருந்து விழித்தெழவேண்டும் என்று மன்றாடுவோம்.

விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்ட ஞானிகள், அதன்பின்,  தங்கள் கனவின் வழியே கடவுள் தந்த எச்சரிக்கைக்கு செவிமடுத்து, வாழ்க்கைப் பாதையையே மாற்றிக்கொண்டனர். இந்த ஞானிகளைப்போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் இறைவனைச் சந்தித்தபின், தங்களையும், தங்களைச் சுற்றியிருந்த உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். உறுதியான உள்ளத்துடன் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில், நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும், தேவையான இறையருளை வேண்டுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம் – புத்தாண்டு நாளையொட்டி தமிழர்கள் பகிர்ந்துகொள்ளும் ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி, ஆண்டின் ஒவ்வொரு நாளுமே நமக்கு நல்ல நாளாக அமைவதற்கு வழியைச் சொல்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
அடுத்தவர் நலனை முன்னிலைப்படுத்தி, கனிவு, கரிசனை ஆகிய உணர்வுகளால் நம் உள்ளங்களை நிறைத்துக்கொள்ள இறைவனை வேண்டுவோம்.

ஆண்டவர் நமக்கு ஆசி வழங்க, எப்போதும் காத்திருக்கிறார் என்பதை உணர்த்த, ஒவ்வோர் ஆண்டும், சனவரி 1ம் தேதி, மரியா, இறைவனின் தாய் என்ற பெருவிழாவன்று, நாம் சிறப்பிக்கும் திருப்பலியில் ஒலிக்கும் முதல் வாசகம் நமக்கு உதவியாக உள்ளது. ஆண்டின் முதல் நாள் திருப்பலியில் நாம் கேட்ட முதல் வாசகம் ஆசி நிறைந்த சொற்களால் நிறைந்துள்ளன. மோசே, ஆரோன் மற்றும் ஏனைய இறைப் பணியாளர்கள், இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கும்போது அவர்கள் கூறவேண்டிய சொற்கள் என்ன என்பதை இறைவனே சொல்லித்தருகிறார்: ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:22-26)

இறைவன் சொல்லித்தந்துள்ள இந்த ஆசிமொழிகளை, புலர்ந்திருக்கும் இவ்வாண்டில், நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கு கற்றுக்கொள்வோமாக! ஆசிமொழிகளை வழங்கும் நாம் ஆசியால் நிறைவோம் என்பது உறுதி!


28 December, 2023

Nurturing children in positivity… குழந்தைகளில் நேர்மறை எண்ணங்கள்…

Holy Family – behind barbed wire

The Feast of the Holy Family

Today, December 31, is the last day of the Year. It is also the Feast of the Holy Family. We begin our reflections with the final day of 2023.
A few hours more… and December 2023 will make way for January 2024. The month of January is named after Janus, the Roman god with two faces – one looking back and the other looking forward. Every year, our media gets busy ‘looking back’ at the year we have travelled. This retrospective exercise of the media usually leaves us with discouragement. We become tired of the negative stuff highlighted by the media.

To help us overcome this negativity, the readings of this Sunday emphasize the theme of ‘faith’. The exemplary faith, against all odds, shown by Abram – later, Abraham – is highlighted both in the First Reading taken from Genesis (Genesis 15:1-6, 21:1-3) and the Second Reading taken from the Letter to the Hebrews (Hebrews 11:8,11-12.17-19).
The invitation of God to Abram, given at the beginning of the first reading gives us some clues, especially in the context of how we need to say goodbye to 2023. The Lord took Abram outside and said, “Look up at the sky and count the stars – if indeed you can count them.” Then he said to him, “So shall your offspring be.” (Gen.15:5)
The Lord invites us to ‘go outside’ and ‘look up at the sky’, instead of looking at the TV or the newspapers as we say goodbye to 2023. Looking up at the sky helps us sing with full gusto, ‘Te Deum’ praising God for the blessings we have received in the year, 2023. This invitation of God helped Abraham to become the father of all believers. Abram believed the Lord, and he credited it to him as righteousness. (Gen.15:6)

In the second reading, taken from the Letter to the Hebrews, we hear a eulogy of the faith of Abraham. Chapter 11 of Hebrews is a treatise on Faith. It begins with the words: Now faith is confidence in what we hope for and assurance about what we do not see. This is what the ancients were commended for. (Heb.11:1-2) Then it goes on to explain the faith of Abraham. And so, from this one man, and he as good as dead, came descendants as numerous as the stars in the sky and as countless as the sand on the seashore. (Heb.11:12) On this final day of the year 2023, with its overload of catastrophes, both natural and human made, we pray – through the intercession of Abraham – for the grace, to keep our faith and hope alive! Not only that… We pray that we may pass on our positive vibrations of hope to the next generations, especially the children!

Now, we turn our attention to the Feast of the Holy Family. Norman Vincent Peale, a great preacher and the author of many inspiring books, including the famous book, ‘The Power of Positive Thinking’, describes Christmas in these words: "Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful." Although this quote is lovely, we are haunted by questions about the Christmas Season experienced by the Holy Family. Was there anything soft or beautiful about the First Christmas? Was there anything to celebrate for the Holy Family in the context of the killing of the Holy Innocents, or the flight into Egypt?

Similar questions haunt our minds and hearts as we see thousands of families destroyed by the Russian and Israeli armies in Ukraine and Gaza. All the world leaders together seem to have no power to control two mad men – Vladimir Putin and Benjamin Netanyahu. These two leaders remind us that ‘Herods’ still unleash their madness against innocent people, especially children. How many thousands of families have been broken due to the unrestrained hunger for power that these two leaders are suffering from? Such hunger for power created the First World War and that war became the reason for the establishment of the Feast of the Holy Family.

The feast of the Holy Family was more of a private devotion popularised by some religious congregations for many centuries. Pope Pius XI made this feast more ‘official’ in the year 1921. The reason behind such a move, as I see, was the First World War. This war was over in 1918. One of the major casualties of this war was the ‘family’ – the tragic death of dear ones killed on the battlefield, orphaned children, destroyed ‘homes’ etc… Wishing to infuse some hope in the hearts of people devastated by this war, the Church officially integrated the Feast of the Holy Family in the liturgical cycle.

The feast of the Holy Family as we have today is a gift of the Second Vatican Council which took place in the 60s. What was so special about the 60s? Although there was no major political war, people had to face other types of wars. The world was experiencing quite a few changes. One of the major crises was the ‘rebellion’ of the youth. Young people were very disillusioned with the way the world was shaping up. Some of them tried to set things right; many others tried to ‘escape’ reality, since it was too hard to face. Many of them sought peace and love outside families. The Church, in an attempt to restore family as the locus and focus of a healthy Christian life, included the Feast of the Holy Family as part of the Octave of Christmas – the Sunday after Christmas. Thus, the history of this feast tells us that the Church was not a silent spectator to the destruction caused to the basic foundation of human society – namely, family – but made the family the locus of hope!

When we think of the Holy Family, we are also painfully aware that the incidents that happened around this family were not holy in any sense. They were asked to run for their life overnight. The children in Bethlehem were massacred. Still, the Holy Family survived and this family opened its heart to include the whole human family.

We are painfully aware of the violence that keeps destroying the world, over and over again. Due to this tsunami of violence, the problems of refugees and massacre of children continue unabated in the 21st century. In his special ‘Urbi et Orbi’ message delivered on Christmas Day – 25 December 2023, Pope Francis focussed on the ongoing war in the Holy Land. He began the message with these words: The eyes and the hearts of Christians throughout the world turn to Bethlehem; in these days, it is a place of sorrow and silence, yet it was there that the long-awaited message was first proclaimed: “To you is born this day in the city of David a Saviour, who is Christ the Lord” (Lk 2:11). Those words spoken by the angel in the heavens above Bethlehem are also spoken to us.
The Holy Father went on to talk about how children were massacred around Bethlehem when Jesus was born and how the same tragedy continues today. Then he spoke of war as “an aimless voyage, a defeat without victors, an inexcusable folly”. He strongly condemned the ‘merchants of death’ who continue to produce arms and sell them. He concluded the message with a strong appeal to all of us that we should speak against these merchants of death and against governments spending lots of money on army which should have been used for eradicating poverty and hunger.
Those who would like to read the full message of the Pope, kindly click on the link below: https://www.vatican.va/content/francesco/en/messages/urbi/documents/20231225-urbi-et-orbi-natale.html

I wish to close my reflection with the powerful message given by the children of the Ramallah Friends School, Palestine. Three weeks ago, the children of this school have posted a video in YouTube with the title “RFS Song to the World”. Here is the short write-up as an introduction to their song: From Ramallah Friends School to the world, we share our version of the timeless “Little Drummer Boy.” Our hearts come together in prayer for the safety of the children in Gaza. May our shared prayers echo for peace and justice, weaving a tapestry of hope that goes beyond borders, embracing the shared humanity we all hold dear.

The children, I presume, sing in Arabic language. Here is the English translation of the song as it appears on the screen giving us an idea of what the children sing:
Look at the children of Gaza crying
The children of Gaza are dying from war
And the world is standing by, watching
It can see but does not want to hear
It hears but doesn’t speak
Justice in this world is heartless
And it doesn’t speak
After these lines, the children begin to hum, while a child speaks out the following words: When can I dream of a world without fear, where we don’t hear guns or worry about being bombed? I am only a child, born to live, not to die… The last few words are repeated slowly, and the child closes with an emphatic ‘NOT TO DIE’.

The words sung by the children for the second stanza of the “Little Drummer Boy”, touched me deeply. Thank God for whoever wrote those words. While the first stanza spoke about the present hopeless situation in Gaza, the second stanza speaks about the resolve of the children to build up the community of Gaza, come what may! Here are the words of the second stanza:
Gaza is calling, my children
We want love, life and justice
We will create it with our own hands, no matter what happens
We will build our country after destruction
Home after home, we are determined
Gaza is strong, no matter what
WE ARE DETERMINED

The YouTube video ends with a very meaningful and touching photo in which the children of Gaza, standing on the street filled with the broken pieces of their homes, make a tiny human pyramid. The design of the Christmas tree is drawn around this pyramid of children ending with a shining star at the top of the tree. The closing slate of the video shows this message:
May this Christmas bestow upon us the profound gifts of justice peace and unity.
Let the spirit of love guide us towards a future where humanity prevails.
Wishing you a season filled with hope and the enduring warmth of peace.
(Those who would like to see this video in YouTube, kindly click on the following link:

May we share the positivity and the dream of the children of Palestine as we close the year 2023:
“We will build our country after destruction
Home after home, we are determined
Gaza is strong, no matter what
WE ARE DETERMINED”

The positivity of the children of Palestine is a good reason for us to sing ‘Te Deum’ – the glorious song of thanksgiving on the final day of the year!

Ramallah Friends School Christmas Song

திருக்குடும்பத் திருநாள்

இன்னும் சில மணி நேரங்களில், 2023ம் ஆண்டு விடைபெற்றுச் செல்லும்; புதிய ஆண்டு, சனவரி மாதத்துடன் துவங்கும். ஆண்டின் முதல் மாதம், ஜானுஸ்(Janus) என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜ()னவரி என்றழைக்கப்படுகிறது. ஜானுஸ் தெய்வத்திற்கு இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் ஜானுஸ் தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. பின்னோக்கியும், முன்னோக்கியும் பார்ப்பதற்கு, ஊனக்கண்கள் மட்டும் போதாது, நம்பிக்கையுடன் கூடிய ஆன்மக்கண்களும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், முடிவுறும் ஆண்டை, பின்னோக்கிப் பார்ப்பதில், ஊடகங்கள் ஈடுபடுகின்றன. ஊடகங்களின் பின்னோக்கியப் பார்வை, இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றது. 'சே, என்ன உலகம் இது' என்று, நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.
நம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன. பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொ.நூ. 15:6) என்று முதல் வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது.

வயது முதிர்ந்த காரணத்தால், உடலளவிலும், பிள்ளைப்பேறு இல்லையே என்ற ஏக்கத்தால், மனதளவிலும், தளர்ந்திருந்த ஆபிரகாமைக் குறித்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறும் சொற்களும் நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்துகின்றன:
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். (எபிரேயர் 11: 11-12)

இயலாது, முடியாது, நிகழாது, 'சான்ஸே இல்லை”, என்று, பலவாறாக, நம் உள்ளங்களை நிரப்பும் நம்பிக்கையற்ற எண்ணங்கள், ஆபிரகாமின் உள்ளத்திலும் எழுந்திருக்கும். இருப்பினும் அவர், தனது ஆற்றலின் மேல் நம்பிக்கையை வைப்பதற்குப் பதில், 'வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என கருதினார்' (எபி. 11:11) என்பதை, இரண்டாம் வாசகம் தெளிவாக்குகிறது. நம்பிக்கையின் அடித்தளம், நம்மையோ, நமக்கு அளிக்கப்பட்ட வாக்கையோ சார்ந்தது அல்ல, அது, வாக்களித்த ஆண்டவரைச் சார்ந்தது என்பதை, நாம் கற்றுக்கொள்ள, இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன.

நம் நம்பிக்கைக்குத் தேவையான மற்றோர் அடித்தளம், பரந்து, விரிந்த கண்ணோட்டம் என்பதையும், இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. தனக்கு வாரிசு இல்லை என்பதால மனமுடைந்து, நம்பிக்கையிழந்து தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (காண்க. தொ.நூ. 15:5) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. அத்தகையதோர் அழைப்பு, நமக்கும் வழங்கப்படுகிறது, குறிப்பாக, ஆண்டின் இறுதி நாளன்று. கடந்துசெல்லும் ஆண்டைக்குறித்து நம் நம்பிக்கையை வேரறுக்கும்வண்ணம், ஊடகங்கள் சொல்லும் எண்ணங்களால் உள்ளத்தை நிறைப்பதற்குப் பதில், இறைவன் நம்மை வெளியே வரச் சொல்கிறார்; வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறுகிறார்.

ஆண்டின் இறுதி நாளில் இருக்கும் நாம், பரந்து விரிந்த வானத்தின் மீதும், பரந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள் மீதும், நம் பார்வையைப் பதிக்க, இறைவன் நமக்கு சிறப்பான வரமருள செபிப்போம். பரந்து விரிந்த பார்வையையும், அதைப் பேணிக்காக்கும் நம்பிக்கையையும் நம் அடுத்த தலைமுறையினருக்கு, குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்கும் வரத்திற்காகவும் நாம் இன்று செபிப்போம். நல்லவற்றை உள்ளத்தில் பதிக்கும் ஒரு முயற்சியாகத்தான், ஆண்டின் இறுதி நாளன்று, 'இறைவா, உம்மைப் போற்றுகிறோம்' என்ற பொருள்படும்,  'தே தேயும்' (Te Deum) என்ற நன்றிப் பாடலைப் பாடும்படி, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுகிறோம். டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்பத் திருவிழாவில், நமது நம்பிக்கை உணர்வுகளின் நாற்றங்காலாய் விளங்கும் குடும்பத்தை எண்ணிப்பார்க்க திருஅவை நமக்கொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
கிறிஸ்மஸ் காலம் முழுவதுமே, மகிழ்வையும், நம்பிக்கையையும் பகிர்வது ஒரு முக்கிய குறிக்கோள். இருப்பினும், முதல் கிறிஸ்மஸ் காலத்தில், திருக்குடும்பத்தைச் சேர்ந்த மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு மகிழ்விலும், நம்பிக்கையிலும் வாழ வாய்ப்பின்றி தவித்தனர். பச்சிளம் குழந்தைகளின் படுகொலை, எகிப்து நாட்டிற்கு இரவோடிரவாக ஓட வேண்டியச் சூழல் என்று, அக்குடும்பத்தை வேதனைகள் தொடர்ந்தன. அன்பையும், மகிழ்வையும் கொணரவேண்டிய கிறிஸ்மஸ் காலத்தில் ஏன் இந்தக் கொடுமைகள்? என்ற கேள்வி அவர்களை அலைக்கழித்தது.

இன்று, உக்ரைன் மற்றும் புனித பூமியின் காசாப்பகுதியில் இரஷ்ய மற்றும் இஸ்ரேலிய இராணுவங்களால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிக்கப்படுவதைப் பார்க்கும்போது, இதே கேள்வி நம் மனதை நிரப்புகின்றது. விளாடிமிர் புடின் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு மதியற்ற தலைவர்களைத் தடுத்து நிறுத்தும் சக்தியின்றி உலகத் தலைவர்கள் கைகட்டி நிற்பதைக் காண்கிறோம். இயேசு பிறந்தபோது, மதியற்ற மன்னன் ஏரோது மாசற்ற குழந்தைகளை கொன்ற வெறி, இன்று, இவ்விரு தலைவர்கள் வழியே தொடர்கிறது. இவ்விரு தலைவர்களும் கொண்டிருக்கும் அதிகார வெறியால், எத்தனை ஆயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன? தலைவர்கள் ஒரு சிலரின் அதிகார வெறி, முதல் உலகப் போரைத் துவக்கியது என்பதை அறிவோம். அந்தப் போர், திருக்குடும்பத் திருநாள் உருவாக ஒரு காரணமாக அமைந்தது.

பல நூற்றாண்டுகளாக, தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்த திருக்குடும்பத் திருநாளை, 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருஅவையின் திருநாளாக அறிமுகப்படுத்தினார். ஒரு சில ஆண்டுகளில், திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்ட இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், மீண்டும், திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ, போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை, மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, கட்டடங்கள் சிதைந்தது உண்மைதான். ஆனால், அவற்றைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலைகுலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே, நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது, திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருநாளாக, திருஅவை அறிவித்தது.

உலகப் போர்களாலும், உலகப் போக்குகளாலும் அழிவைத் தேடி, இவ்வுலகம் சென்ற வேளையில், இந்த அழிவுகளை, கைகட்டி நின்று வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று, மனம் தளர்ந்து போவதற்குப் பதிலாக, மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது, கத்தோலிக்கத் திருஅவை. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.

இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த நேரத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும், புனிதமாக, பெருமை தருவதாக இல்லையே! பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும், அடுத்த நாடுகளுக்கும், இரவோடிரவாக ஓடும் அகதிகளின் நிலை, இன்றும் தொடரும் துயரம்தானே
பச்சிளம் குழந்தை இயேசுவோடு, மரியாவும், யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோதின் அடியாட்கள் பல நூறு குழந்தைகளைக் கொன்றனர். ஏரோதின் வாரிசுகளாக வரலாற்றில் தோன்றியுள்ள விளாடிமிர் புடின் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற தலைவர்களின் சுயநல வெறிக்கு, குழந்தைகள் பலியாவது இன்றும் தொடரும் அவலம்தானே!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மேல்மாடத்திலிருந்து வழங்கிய 'Urbi et Orbi' எனப்படும், 'ஊருக்கும் உலகுக்கும்' சிறப்புச் செய்தியில், இன்றைய பெத்லகேமைச் சுற்றி நடைபெற்றுவரும் போரைக் குறித்து தன் எண்ணங்களை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தினார்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் கண்களும் இதயங்களும், வேதனையிலும், மௌனத்திலும் மூழ்கியுள்ள பெத்லகேமை நோக்கித் திரும்பியுள்ளன. "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11) என்று, பல்லாயிரம் ஆண்டுகள் மனிதகுலம் காத்திருந்த நம்பிக்கைச் செய்தி அங்குதான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது: பெத்லகேமின் வான்வெளியில் வானதூதர் சொன்ன அந்த வார்த்தைகள், இன்று நமக்குச் சொல்லப்படுகின்றன.
இவ்வாறு தன் செய்தியைத் துவக்கியத் திருத்தந்தை, தொடர்ந்து, இன்றைய உலகில் அதிக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளைப்பற்றி பேசினார். இதைத் தொடர்ந்து, போருக்கு எதிராகவும், மரணக் கருவிகளின் பெருமளவிலான உற்பத்திக்கு எதிராகவும் வெளிப்படையாகவும் வலுவாகவும் பேசினார்.

தன் கிறிஸ்மஸ் செய்தியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். நம்மில் பலர் மௌனம் காப்பதால், ஆயுத உற்பத்தியும், ஆயுத வியாபாரமும் செழித்து வளர்கின்றன என்று கூறிய திருத்தந்தை, பசி மற்றும் வறுமையை ஒழிக்க பயன்படுத்தப்படவேண்டிய மக்களின் வரிப்பணம், போர் ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடப்படுகிறது என்ற உண்மையை நாம் உலகறியப் பேசவேண்டும் என்ற தன் வேண்டுகோளை விடுத்தார். திருத்தந்தை வழங்கிய செய்தியை முழுமையாக வாசிக்க விரும்பவோர், கீழ்கண்ட வலைத்தளத்தில் அதைக் காணலாம்: https://www.vatican.va/content/francesco/en/messages/urbi/documents/20231225-urbi-et-orbi-natale.html

இறுதியாக, பாலஸ்தீனாவைச் சேர்ந்த Ramallah Friends School, என்ற பள்ளியில் பயிலும் குழந்தைகள் வழங்கியுள்ள சக்திவாய்ந்த செய்தியுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்த பள்ளியின் குழந்தைகள் RFS Song to the World” என்ற தலைப்பில் ஒரு வீடியோவை YouTubeல் வெளியிட்டுள்ளனர்.

Little Drummer Boy” என்ற புகழ்பெற்ற கிறிஸ்மஸ் பாடலின் மெட்டைப் பயன்படுத்தி, இப்பள்ளியின் குழந்தைகள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அரபு மொழியில் அக்குழந்தைகள் பாடும்போது, அதன் பொருள் ஆங்கிலத்தில் திரையில் தோன்றியது. அப்பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இதோ:
காஸாவின் குழந்தைகள் அழுவதைப் பாருங்கள்
காஸாவின் குழந்தைகள் போரில் இறக்கின்றனர்
உலகமே இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
அதனால் பார்க்க முடிகிறது, ஆனால் கேட்க விரும்பவில்லை
அது கேட்கிறது, ஆனால் பேச மறுக்கிறது
இந்த உலகில் நீதி இதயமற்று போனது
அது பேச மறுக்கிறது

இந்த வரிகளை அக்குழந்தைகள் பாடியபின், ஒரு குழந்தை பின்வரும் வார்த்தைகளைப் பேசுகிறது: பயம் இல்லாத ஓர் உலகத்தை நான் எப்போது கனவு காணமுடியும்? துப்பாக்கிச் சத்தம் கேட்காமல், குண்டு வீசப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் உலகத்தை நான் எப்போது காண்பது? நான் ஒரு குழந்தை, நான் வாழ்வதற்குப் பிறந்தேன், சாவதற்கு அல்ல...
அந்த இறுதிச் சொற்களை அக்குழந்தை மெதுவாக, அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறது: நான் வாழ்வதற்குப் பிறந்தேன், சாவதற்கு அல்ல.

இதைத் தொடர்ந்து, Little Drummer Boy” பாடலின் இரண்டாவது சரணத்திற்கு குழந்தைகள் பாடிய வார்த்தைகள் என்னை ஆழமாகத் தொட்டன. அந்த வார்த்தைகளை எழுதி, அவற்றைக் குழந்தைகள் வழியே பாடவைத்தவருக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். முதல் சரணம், காஸாவில் தற்போது நிலவும் நம்பிக்கையற்ற சூழலைப்பற்றி பேசுகையில், இரண்டாவது சரணமோ, காஸாவின் சமூகத்தை கட்டியெழுப்ப குழந்தைகள் கொண்டிருக்கும் உறுதியைப் பற்றி பேசுகிறது. இரண்டாவது சரணத்தின் மொழிபெயர்ப்பு இதோ:
காசா அழைக்கிறது, என் குழந்தைகளே
எங்களுக்கு அன்பு, வாழ்க்கை மற்றும் நீதி வேண்டும்
என்ன நடந்தாலும் இவற்றை நாங்கள் எங்கள் கைகளால் உருவாக்குவோம்
அழிவுக்குப் பின் எங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவோம்
ஒவ்வொரு வீடாக கட்டியெழுப்பும் உறுதியுடன் இருக்கிறோம்
எது நடந்தாலும் காசா வலிமையுள்ளது
நாங்களும் தீர்மானத்துடன் இருக்கிறோம்
(இந்த காணொளியை YouTube ல் காணவிழைவோர், கீழ்கண்ட வலைத்தள முகவரியைப் பயன்படுத்தவும்: https://www.youtube.com/watch?v=ZsEbIVJy0Gg&list=RDZsEbIVJy0Gg&start_radio=1)

2023 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இத்தருணத்தில், பாலஸ்தீன குழந்தைகளின் நேர்மறை எண்ணங்களையும், கனவுகளையும் நாம் பகிர்ந்து கொள்வோம்:
“அழிவுக்குப் பின் எங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவோம்
ஒவ்வொரு வீடாக கட்டியெழுப்பும் உறுதியுடன் இருக்கிறோம்
எது நடந்தாலும் காசா வலிமையுள்ளது
நாங்களும் தீர்மானத்துடன் இருக்கிறோம்"

பாலஸ்தீனக் குழந்தைகளின் நேர்மறை உணர்வுகளை நம் இளைய தலைமுறைக்கு, குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்க நாம் முயல்வோம். மலை போல துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற, நம் குழந்தைகள் உள்ளனர் என்ற நம்பிக்கையினால்தான், உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, திருக்குடும்பத் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன. எது நடந்தாலும், குழந்தைகள் இவ்வுலகை கட்டியெழுப்புவர் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி, ஆண்டின் இறுதிநாளான இன்று நாம் ‘Te Deum’ நன்றிப்பாடலை நம்பிக்கையுடன் பாடுவோம்!