29 December, 2013

Nothing ‘holy’ about the Holy Family திண்டாடி நின்ற திருக்குடும்பம்

Chinese Refugee Family – Martha Sawyers (1902 – 1988)

  • Pope Francis and the little boy who stole the show in the Vatican
  • Little Boy in Yellow Steals The Show As Pope Francis Speaks To Families
  • Little Boy Steals the Show During Pope Speech
  • Adorable Little Boy takes stage with Pope Francis, hugs him, refuses to Leave
These were some of the titles of video clippings that appeared on the YouTube at the end of October. These video clippings have been seen by millions of all over the world. It was about a little boy – given a name ‘Carlos’, in order to protect his anonymity – who wandered on to the stage where Pope Francis was leading an evening prayer service in St Peter’s Square on October 26.
As part of the Year of Faith, the Catholic Church celebrated ‘Family Day’ in the Vatican on October 26 and 27. On Saturday, October 26, when the evening prayer service began, children were sitting around the podium where Pope Francis was seated on his chair. One of those children was Carlos, an orphan boy from Colombia. He went over to Pope Francis and for the next ten minutes or so, he stole the show! The media is still talking about this.

When my friends in India and elsewhere asked me about this incident, I told them that this was just one more of the many incidents which give us a glimpse into the heart of Pope Francis. I told them also that Pope Francis seated on the stage with kids all around him, was like a grandpa conducting an evening family prayer with his grandchildren. Referring to Pope Francis as a grandpa may be surprising (even shocking) to some of you. But I am sure he wouldn’t mind being called that way by one of those kids sitting around him. The tender moments Pope Francis spent with Carlos were the best message of the Family Day celebrated in Vatican. The Italian lady, who has adopted Carlos, said, “When Pope Francis blessed my child, I was sure he was blessing all those children abandoned around the world.” In my opinion, the Feast of the Holy Family was celebrated at St Peter’s Square on October 26.
All of us know that Christmas has a special magic around it. It is surely a time for families to come together. It is quite fitting that the Church has allotted the Sunday after Christmas for the Feast of the Holy Family. I wish to share my reflections along two lines:
  • The ‘history’ behind the feast of the Holy Family.
  • One of the challenges faced by the Holy Family.
The History: The feast of the Holy Family was more of a private devotion popularised by some religious congregations for many centuries. The Church made this feast more ‘official’ in the year 1921. The reason behind such a move, as I see, was the First World War. This war was over in 1918. One of the casualties of this war was the family. The tragic death of dear ones killed on the warfront, orphaned children, destroyed ‘homes’…This list would be endless. We lose more and gain almost nothing from any war. It is a pity that we human beings have refused to learn this simple truth. NOBODY wins NOTHING from NO WAR… (Pardon my English!) Wishing to infuse some hope in the hearts of people devastated by this war, the Church officially integrated the Feast of the Holy Family in the liturgical cycle.
The feast of the Holy Family as we have today is a gift of the Second Vatican Council which took place in the 60s. What was so special about the 60s? Although there was no major political war, people had to face other types of wars. The world was experiencing quite a few changes. One of the major crises was the ‘rebellion’ of the youth. Young people were very disillusioned with the way the world was shaping up. Some of them tried to set things right; many others tried to ‘escape’ reality, since it was too hard to face. Many of them sought peace and love outside families. The Church, in an attempt to restore family as the locus of a healthy Christian life, included the Feast of the Holy Family as part of the Octave of Christmas – the Sunday after Christmas.

In many schools and parishes, during the week leading up to Christmas the Nativity Drama would have been staged, mostly enacted by children. This drama usually begins with the Annunciation scene, where a lovely girl, dressed in white and blue, will be praying. An angel – a cute looking, doll-like child all dressed up in white silk and two wings – will tell Mary that she is to become the mother of Jesus. Mary, without any hesitation, would say ‘yes’. Then she would go to Elizabeth and sing and dance the ‘Magnificat’. Then would follow the manger, the shepherds and the Magi… all lovely scenes. I have enjoyed these shows where adorable little ones tried to remind me of the great mystery of the Incarnation.
But, deep down I also felt uneasy that we had ‘sanitized’ the Christmas story so much. What was the original Christmas like? Lot more stark, horrible, horrifying realties stared Mary, Joseph and Jesus – right in their eyes. It is surely good to depict Christmas in such nice, glorious, holy ways. But we also need to think of the first Christmas in its original colour. Was there any colour at all, I wonder!

The Challenges: I want to reflect on the Holy Family from this ‘colourless’ black-and-white perspective. The original Holy Family was not all the time praying, singing praises to God, sharing pleasantries to one another. They had to face their share of problems. One such problem is given in today’s gospel – the problem of leading the life of a Refugee. This is the problem faced by millions (or billions) of families around the world today. The Gospel of Matthew tells us how Joseph was asked to flee his native land and take refuge in Egypt. Ironically, this was the land where his ancestors suffered years of bondage. Now, Joseph is asked to find his freedom in that land of slavery. The land flowing with milk and honey, promised by God, was turned into a land of death and destruction by Herod, the megalomaniac! He was so addicted to his power that he felt that even a newborn child would be a threat to his throne! History has seen many megalomaniacs whose ruthless suppression has taken a heavy toll of innocent people. 
The Feast of the Holy Family painfully brings to our attention the problem of the Refugees. On July 8, Pope Francis visited Lampedusa, an island in the southern part of Italy. Thousands of refugees have come into Italy via this island. Some of the over-crowded boats have capsized in the sea before reaching Lampedusa. Pope Francis went there to celebrate Mass for the refugees who had perished in the sea. While he was there he spoke about ‘the globalisation of indifference’ that was sweeping over the world today.

It is a pity that this ‘indifference’ is sweeping over families. The victims of this indifference within families are mainly the elderly. The passage from Sirach warns us about how we treat our parents, especially in their advanced years…    
Sirach 3: 3-4, 12-14
Whoever honors his father atones for sins, and whoever glorifies his mother is like one who lays up treasure… O son, help your father in his old age, and do not grieve him as long as he lives; even if he is lacking in understanding, show forbearance; in all your strength do not despise him. For kindness to a father will not be forgotten, and against your sins it will be credited to you.
Instead of treating our parents as a priceless treasure, many of us have very cheap price tags attached to our parents, especially in their old age.
The words of St Paul gives us a no-nonsense message about how to live in a Christian Family.
Colossians 3: 12-14
Put on then, as God's chosen ones, holy and beloved, compassion, kindness, lowliness, meekness, and patience, forbearing one another and, if one has a complaint against another, forgiving each other; as the Lord has forgiven you, so you also must forgive. And above all these put on love, which binds everything together in perfect harmony.
May the Holy Family help us to become more and more human in our day to day life.

இவ்வாண்டு அக்டோபர் 26ம் தேதி மாலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாட்கள், வத்திக்கானில் 'அகில உலகக் குடும்ப நாள்' கொண்டாடப்பட்டது. அக்டோபர் 26 மாலை நடைபெற்ற செப வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சுற்றி, சுற்றி வந்து, அவரைக் கட்டியணைத்து, இறுதியில் அவர் இருக்கையில் ஏறி அமர்ந்த ஒரு சிறுவனைப் பற்றிய வீடியோ, பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த மாலை வழிபாட்டின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமர்ந்திருந்த மேடையைச் சுற்றி பல சிறுவர், சிறுமியர் அமர்ந்திருந்தனர். அச்சிறுவர்களில் ஒருவன் 'கார்லோஸ்' என்றழைக்கப்பட்ட இச்சிறுவன். கொலம்பியா நாட்டில் பிறந்த கார்லோஸ், பெற்றோரை இழந்தவன். உரோம் நகரில் ஓர் இத்தாலியக் குடும்பத்தில் இவன் தற்போது வளர்ந்து வருகிறான். கார்லோஸ், அறிவுத்திறன் வளர்ச்சியில் சிறிது பின்தங்கியவன் என்று சொல்லப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் கார்லோஸ் உடன் செலவிட்ட அந்தக் கனிவான மணித்துளிகள் ஊடகங்களில் இன்னும் பேசப்படுகின்றன.
இந்நிகழ்வைப்பற்றி நான் ஒரு சிலரோடு பேசிக்கொண்டிருந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்த அந்தக் காட்சியை ஓர் உருவகமாகக் குறிப்பிட்டேன். மாலை குடும்பச் செபத்தை குடும்பத்தின் பெரியவர் தன் வீட்டுத் திண்ணையில் நடத்தும்போது, அக்குடும்பத்தின் பேரக் குழந்தைகளும், அந்தத் தெருவில் வாழும் குழந்தைகளும் பெரியவரைச் சுற்றி அமர்ந்து செபித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படி அமைந்தது அந்தக் காட்சி. தாத்தாவைச் சுற்றிப் பேரக் குழந்தைகள் அமர்ந்திருந்தனரென்று நான் சொன்னபோது, ஒரு சிலர் ஆச்சரியம் அடைந்தனர், ஒரு சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர் என்றே சொல்லவேண்டும். திருத்தந்தையை நான் தாத்தா என்று உருவகப்படுத்தியது பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், அது ஓர் உண்மையான, எதார்த்தமான உருவகமாக எனக்குத் தெரிகிறது. அக்குழந்தைகளில் ஒருவர், திருத்தந்தையை, 'தாத்தா' என்று அழைத்திருந்தால் அவர் அதை மகிழ்வுடன் அங்கீகரித்திருப்பார். அப்பேரக் குழந்தைகளில் ஒருவன் - அறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய பேரன், கார்லோஸ் - தாத்தா பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட கவனத்தையும், கனிவையும் பெற்றான். அச்சிறுவனுடைய வளர்ப்புத்தாய் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருத்தந்தையிடமிருந்து என் மகன் பெற்ற அசீர், அவனுக்கு மட்டும் கிடைத்த ஆசீர் அல்ல. ஆதரவு ஏதுமின்றி உலகில் விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் திருத்தந்தையின் ஆசீர் அன்று கிடைத்தது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்" என்று கூறினார். கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடிய உலகக் குடும்ப நாளுக்கு இதைவிடச் சிறந்த ஒரு செய்தியை, ஓர் உண்மையை பறைசாற்றியிருக்க முடியாது. நாம் இன்று, டிசம்பர் 29, ஞாயிறன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருவிழா, அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாள்களில் வத்திக்கானில் ஏற்கனவே கொண்டாடப்பட்டுவிட்டது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் முதல் ஞாயிறு, திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு என்ற பெரும் மறையுண்மையைக் கொண்டாடிய கையோடு, திருக்குடும்பத் திருவிழாவை, திருஅவை  கொண்டாடுவது ஓர் ஆழமான பாடத்தை மனதில் பதிக்கிறது. அதாவது, பல உயர்ந்த உண்மைகளை உலகில் நிலைநிறுத்த அடித்தளமாக அமைவது குடும்பமே என்பதுதான் அந்தப் பாடம். குடும்பங்கள் இல்லையேல் இவ்வுலகில் உண்மைகள் உறங்கிவிடும், உன்னதம் உருபெறாமல் போகும்.

கிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம். குடும்ப உணர்வை வளர்க்கும் கிறிஸ்மஸ் காலம், குடும்பமாகக் கூடி வாழ முடியாத நிலையையும் நமக்கு நினைவுருத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள், திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் முதல் கிறிஸ்மஸைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை. முதல் கிறிஸ்மஸ் நேரத்தில் நடந்த ஒரு சங்கடமான நிகழ்வு இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

இந்த நற்செய்தியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, திருக்குடும்ப திருவிழா திருஅவையில் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலை, காரணம் ஆகிய எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக சில துறவற சபைகளால் பரப்பப்பட்டு வந்தது. 1921ம் ஆண்டு திருஅவை இந்த பக்தி முயற்சியை ஒரு திருநாளாக மாற்றியது. காரணம் என்ன? அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரின் இறுதியில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத்தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் பல இன்னல்களைச் சந்தித்துவந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருவிழாவையும், குடும்பங்களில் பக்தி முயற்சிகளையும் திருஅவை வளர்த்தது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது (1962-65) மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. காரணம் என்ன? இரண்டு உலகப் போர்கள் முடிவடைந்தபின், வேறு பல வழிகளில் மக்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப்போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, பல அடிப்படை நியதிகள் மாறிவந்தன. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே அன்பை, நிம்மதியைத் தேடியபோது, அந்த அன்பையும், நிம்மதியையும் வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை. கிறிஸ்மஸுக்கு அடுத்த ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக 1969ம் ஆண்டு அறிவித்த திருஅவை, அக்குடும்பத்தை நமக்கு எடுத்துக்காட்டாகவும் கொடுத்தது.

திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அக்குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்கமுடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாடமுடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்?... நடக்கக்கூடிய காரியமா? இக்கேள்வி எழுவதற்குக் காரணம்... இவர்களை நாம் தெய்வீகப் பிறவிகளாக மட்டும் பார்க்கும் ஒருதலை பட்சமான கண்ணோட்டம்.
இயேசு, மரியா, யோசேப்பு என்ற இக்குடும்பம் எந்நேரமும் செபம் செய்துகொண்டு, இறைவனைப் புகழ்ந்துகொண்டு, எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதம், அவற்றிற்கு விடைகள் தேடிய விதம் இவை நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுதல் என்பது இன்றைய உலகில பெரும்பாலான குடும்பங்கள் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை. இதே பிரச்சனையைத் திருக்குடும்பம் சந்தித்ததாக இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது.

இதை நற்செய்தி என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. ஏரோது மன்னனைப் போல் அதிகாரத்தில் உள்ள தனி மனிதர்களின் கட்டுக்கடங்காத வேட்கைகள் வெறியாக மாறும்போது, பலகோடி அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்பதை நற்செய்தியும், வரலாறும் நமக்கு மீண்டும், மீண்டும் சொல்கின்றன.
அதேபோல், அரசியல், மதம், மொழி, நிறம், இனம், சாதி என்ற பல காரணங்களால் மோதல்கள் உருவாகும்போது, இப்பிரிவுகளால் பாதிக்கப்படாமல், எளிய வாழ்வு நடத்தும் அப்பாவி மக்கள் தங்கள் பிறந்த மண்ணை விட்டு வெளியேற்றப்படும் அவலம் மனித வரலாற்றில் தொடர்கதையாகி வருகிறது. நாடுவிட்டு நாடு செல்லும் குடும்பங்கள், நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய கொடுமைக்கு உள்ளாக்கப்படும் குடும்பங்கள் அனைத்தையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து, இறைவனிடம் நாம் மனமுருகி வேண்டுவோம்.

நாடுவிட்டு நாடு செல்லும்போது அன்னியர்களாக உணர்வது இயற்கைதான். ஆனால், வீட்டுக்குள், குடும்பத்திற்குள், நான்கு சுவர்களுக்குள் அன்னியரைப் போல் உணரக்கூடிய போக்கு இன்று நம்மிடையே பெருகிவருகிறது என்பதை நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, வயதில் முதிர்ந்த பெற்றோரை தேவையற்றவர்களாக அன்னியரைப் போல் நடத்தும் கொடுமை பல குடும்பங்களில் நிகழ்கிறதே! இந்தப் போக்கினை இன்று எண்ணிப் பார்க்க நமது வாசகங்கள் அழைக்கின்றன. சீராக்கின் ஞானம் கூறும் வார்த்தைகள் ஆசீரளிக்கும் வார்த்தைகளாகவும், எச்சரிக்கை தரும் வார்த்தைகளாகவும் அமைந்துள்ளன.
சீராக்கின் ஞானம் 3: 3-4, 12-14
தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.... குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது.
பெற்றோரை விட பணமே பெரிதென வாழ்வோருக்கு இறைவன் நல்வழி காட்டவேண்டும் என்று மன்றாடுவோம்.

இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள லாம்பதுசா என்ற தீவை நோக்கி, அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிக்கொண்டு வரும் படகுகள் பல கடலில் மூழ்கி உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன. இந்தத் துயரமான விபத்துக்களில் இறந்தோருக்கென திருப்பலியாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஜூலை 8ம் தேதி அங்கு சென்றிருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு சொற்றொடர் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பயன்படுத்திய சொற்றொடர் “Globalisation of indifference”. இன்றைய உலகில், அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மை உலகமயமாக்கப்பட்டு வருகிறது என்று திருத்தந்தை வேதனையுடன் கூறினார்.
உலக மயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை தற்போது குடும்பங்களுக்குள்ளும் பரவியுள்ளது. இதற்கு மாற்றாக, திருத்தூதர் புனித பவுல் அடியார் நம் குடும்பங்களில் விளங்கவேண்டிய நற்பண்புகளை இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார். அவர் கூறும் அறிவுரைகள் அடையமுடியாத இமயங்கள் அல்ல என்பதை முதலில் நாம் நம்பவேண்டும். அந்த இலக்குகளை இறைவன் துணையோடு நமது குடும்பங்களில் நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு அவர் கூறும் அறிவுரைகளுக்கு செவிமடுப்போம்:
கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 12-14
நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.

No comments:

Post a Comment