17 August, 2014

Moving from ‘I-versus-You’ to ‘We’ 'நானா-நீயா'விலிருந்து, 'நாம்' நோக்கி...

Pope Francis is presented with a T-shirt during his meeting with the youth at the Solmoe Sanctuary, South Korea, Friday, Aug. 15, 2014.

Pope Francis has stepped into Asia for the first time in his life. He must have experienced the Asian style of welcome. In his very first talk given to the President and other government officials of South Korea, he acknowledged the cultural heritage of Asia: “It is a great joy for me to come to Korea, the land of the morning calm, and to experience not only the natural beauty of this country, but above all the beauty of its people and its rich history and culture.” In a few more months, namely, in January 2015, Pope Francis will, once again, taste the rich cultural heritage of Asia when he travels to Sri Lanka and the Philippines.
“Atithi Devo Bhava”, namely, “Consider the guest as god” is a Sanskrit slogan which reflects the welcoming attitude of India and, in general, of the East. Every time we reach a country or a city, we are given ‘Welcome’ messages through signboards and the announcements that come through speakers. When we leave a city, we see the sign: ‘Thank you. Come again.’ I am not a great fan of travelling. I do have my anxieties travelling to new places. Hence, these welcome signboards and messages put me somewhat at ease.
I am yet to see a country or a city that openly says: ‘You are not welcome’ or ‘Don’t come again’. In reality, however, we feel the unwelcoming trends and undercurrents flowing freely all over the world. Every time we wish to visit a county, the visa process makes us feel that we are not welcome in that country. Perhaps this ‘you-are-not-welcome’ message is more clearly given to the so called ‘third world’ people. Of late, the ‘unwelcome’ mood has erupted into violence in quite a few countries.
We are sadly aware of the way Christians and some Moslem sects are driven out of certain towns in Iraq. Syria, Israel, Palestine, Sri Lanka, some African countries are exploding with ‘you-are-not-welcome’ violence. In almost all these cases, religion becomes the dividing factor…not the true religion, but religion as interpreted by some ‘fundamental’ly deranged minds!

The non-welcoming attitude grows when we divide the world into I-versus-You, We-versus-Them etc. Such divisions give way to different types of violence, including terrorist activities, ethnic cleansing, religious clashes, targeted attacks on foreigners, and riots. The riots that erupted in England in August 2011, have filled one more page in human history in blood. In most of these riots, youngsters take up pivotal role. The riots in England is now referred to as the ‘BlackBerry’ riots, since most of the youth who were involved in the riots were organising themselves using BlackBerry technology! Talk about development!
Talking of the ‘BlackBerry’ riots, Ellen Teague, from Columban Justice and Peace, commented: “In the UK we have seen recent cuts to services which assist marginalised youth, such as youth clubs and employment schemes. We have also seen huge rises in student fees which has put a university education out of the reach of low income families. When interviewed, young people causing trouble in our cities have consistently spoken of anxiety for their futures and alienation from political and legal processes.”

Youngsters who have lost hope of the future, have scant regard for the safety of the present as well. Our world, fragmented into hundreds of divisions, creates a sense of fear of ‘the other’ and a loss of hope for a better world. Against such a background, the words from Isaiah we hear in this Sunday’s liturgy, sound like an impossible dream:
Isaiah 56:1, 6-7
This is what the LORD says: “Maintain justice and do what is right, for my salvation is close at hand and my righteousness will soon be revealed. And foreigners who bind themselves to the LORD to minister to him, to love the name of the LORD, and to be his servants, all who keep the Sabbath without desecrating it and who hold fast to my covenant—these I will bring to my holy mountain and give them joy in my house of prayer. Their burnt offerings and sacrifices will be accepted on my altar; for my house will be called a house of prayer for all nations.”
Universal salvation is the key theme of this Sunday’s readings. Justice, righteousness, equality, acceptance…. All that the human spirit craves for deep down is expressed as God’s promises in Isaiah – not only to Israelites but also to foreigners.

Such passages from the Bible, although sound very ideal, out of the world, and impossible, have inspired millions to take them seriously. Mohanlal K. Gandhi was one of them who took the Bible, especially the Gospels very seriously. But, what Gandhi saw in real life, was far from the ideal life expressed in the Gospels. Here is an anecdote from his own life: M. K. Gandhi in his autobiography tells how, during his days in South Africa as a young Indian lawyer, he read the Gospels and saw in the teachings of Jesus the answer to the major problem facing the people of India, the caste system. Seriously considering embracing the Christian faith, Gandhi went to a white-only church one Sunday morning, intending to talk to the minister about the idea. When he entered the church, however, the usher refused to give him a seat and told him to go and worship with his own people. Gandhi left the church and never returned. “If Christians have caste differences also,” he said, “I might as well remain a Hindu.” (Fr. Ernest Munachi Ezeogu)

Ideal life - the life expressed in the Gospels - and real life seem far removed from one another. We are asked to bridge the gap. Jesus tries to emphasise this ‘gap’ in today’s gospel in a very strange way. (I must admit that this is one of the difficult passages for me to understand… especially the rude language used by Jesus with the Canaanite woman.) The woman perseveres in bridging the gap. Thank God the final lines of today’s gospel end well with Jesus praising the Canaanite woman: Then Jesus said to her, “Woman, you have great faith! Your request is granted.” (Matthew 15: 28) When Jesus praises the ‘great faith’ of the Canaanite woman, I hear Jesus chiding the ‘little faith’ of his apostles. How often have we experienced this… namely, when the ‘little faith’ of the regular Christian stands in stark contrast over the ‘great faith’ expressed by the so called non-Christians?

We spoke of the disenchanted, discouraged youth who took active part in the ‘BlackBerry’ riots in England. That is only one side of reality. We also have positive news of the youth who have gathered for the 6th Asian Youth Day in Korea (August 14-18). We can be assured that Jesus would be telling these young men and women through the uplifting words of Pope Francis: “You have great faith! Your requests are granted!”

The Canaanite Woman

"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு கூற்று. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் இந்த எண்ணத்தை பிற மாநிலத்தவரிடம், பிற நாட்டினரிடம் சொல்லி, விளக்கம் தந்து, பெருமைபட்டிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணத்தைப் பெருமையுடன் பறைசாற்ற எனக்குள் தயக்கம் அதிகமாவதை உணர்ந்து வருகிறேன். வந்தாரை, தமிழகம் தேடி தஞ்சம் புகுந்தாரை, ஏன்... தமிழகத்திலேயே வாழும் பல பிரிவினரை தமிழகமோ, அங்கு வாழும் தமிழர்களோ உண்மையில் வாழ வைத்திருக்கிறோமா என்ற கேள்வி என் மனதில் இப்போது அடிக்கடி நெருடுகிறது.
தமிழகத்தில் நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வோர் ஊரின் எல்லையைத் தொடும்போதெல்லாம் நம் மனதை மகிழ்விக்கும் ஒரு வாசகம் சாலையோரம் இருக்கும். உதாரணமாக, சென்னையை நோக்கிச் செல்லும்போது, "சென்னை மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஊரின் முகப்பிலும் இத்தகைய வரவேற்பு நமக்குக் காத்திருக்கும். அதேபோல், அந்த ஊரைவிட்டுச் செல்லும்போது, "நன்றி... மீண்டும் வருக" என்று அந்த ஊர் நம்மை மீண்டும் வரவேற்கும்.
அயல் நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு விமான நிலையத்திலும் வரவேற்பு வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும். விமானம் தரையிறங்கியதும், வரவேற்கும் வார்த்தைகள் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்.
உலகில் எந்த ஒரு நாடோ, நகரமோ "நீங்கள் இங்கே வரக் கூடாது, உங்களுக்கு இங்கே அனுமதியில்லை" என்று பகிரங்கமாக முழங்குவது இல்லை. ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன? நாடு விட்டு நாடு செல்பவர்களை, ஊர்விட்டு ஊர் செல்பவர்களை 'வாருங்கள்' என்று வார்த்தையால் சொல்லிவிட்டு, 'வராதீர்கள்' என்று செயல்களால் காட்டும் போக்கு பெருகிவருகிறது இன்றைய உலகில். மத அடிப்படைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு சில பகுதிகளில் "எங்களைத் தவிர மற்றவருக்கு இங்கு இடமில்லை" என்று துணிந்து அறிக்கையிட்டுவரும் செய்திகளையும் நாம் கேட்டு, கலங்கி நிற்கிறோம்.

நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று உலகில் பாகுபாடுகள், பிரிவுகள் வளர்ந்து வருவதால், சண்டைகள், கலவரங்கள் பெருகி வருகின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீனா, ஈராக், சிரியா, ஒரு சில ஆப்ரிக்க நாடுகள், இலங்கை என்று பல இடங்களில் நாம் அடிக்கடி கேட்கும் வன்முறைச் செய்திகள் மனதை இரணமாக்குகின்றன. குறிப்பாக, ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டுவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித் தனமானச் செயல்கள் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
உலகம் தன்னையே ஒரு முறை சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. இந்த 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது... ஏன் ஒரு பத்து நிமிடங்களாவது உலகம் முழு அமைதியில் சுழல்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி. குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூடு, அரிவாள் வெட்டு, கத்திக்குத்து என்று நமது பூமி காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இக்கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவது, காயப்படுவது, உயிர்பலியாவது யார்? இளையோரே. மூன்றாண்டுகளுக்கு முன்னர், 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 முதல் 11 முடிய இங்கிலாந்தின் பல பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன. இக்கலவரங்கள் 'BlackBerry' கலவரங்கள் என்று அழைக்கப்பட்டன. காரணம், இக்கலவரங்களில் ஈடுபட்ட இளையோரில் பலர், கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 'BlackBerry' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலவரங்களை ஏற்பாடு செய்ததாகச்  சொல்லப்படுகிறது. இங்கிலாந்து கலவரங்களில் ஈடுபட்டிருந்த இளையோரைக் குறித்து Ellen Teague என்ற இளம்பெண் செய்தித்தாள் ஒன்றில் கூறியிருந்த எண்ணம் என் கவனத்தை ஈர்த்தது. "நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கையை இளையோர் இழந்து வருகின்றனர். அதனால், இன்றைய உலகை அழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்று அவர் சொன்னது பெருமளவு பொருளுள்ளதாக எனக்குப் பட்டது.

இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்:
இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்.
நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகள்.

விவிலியத்தில் இதுபோன்று காணக்கிடக்கும் உறுதி மொழிகள் பலருக்கு மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. இன்றும் தருகின்றன. அவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை ஆழமாக வாசித்த பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக் கொடுமைகளில் சிக்கியிருந்த இந்தியாவுக்கு கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார். தன் விருப்பத்தை எடுத்துச் சொல்ல அவர் ஒரு ஞாயிறன்று கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில் ஐரோப்பிய இனத்தவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென உள்ள கோவிலுக்கு அவர் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அன்று அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் கிறிஸ்தவக் கோவில் பக்கம் திரும்பவேயில்லை. கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாகவே இருப்பதே மேல்" என்று அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல; நாம் வாழும் நடைமுறை உலகம் இன்னும் பிளவுபட்டிருக்கிறது என்பதை இந்தியாவில் ஆகஸ்ட் 10ம் தேதி கடைபிடிக்கப்பட்ட 'கறுப்புநாள்' நினைவுபடுத்துகிறது.

பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார். இஸ்ரயேல் சமுதாயத்தில் பெண்களுக்குச் சரியான இடமோ, தகுதியோ வழங்கப்படவில்லை. பெண்கள் பொது இடங்களில் கூட்டத்திற்கு முன் வருவது கூடாது; கூட்டத்தில் பேசக்கூடாது என்று பல விதி முறைகள் இருந்தன. இச்சூழலில், இஸ்ரயேல் இனத்தைச் சாராத, தாழ்த்தப்பட்ட புற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் துணிவுடன் இச்செயலில் ஈடுபட்டிருப்பது நமக்குப் பாடங்கள் தருகின்றன.

தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி, இந்தப் பெண், தன் மகளைக் குணமாக்க, இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்ந்தாரே... அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன.
கடினமானச் சொற்களைக் கொண்டு கானானியப் பெண்ணிடம் பேசிய இயேசு, இறுதியில் அவரது நம்பிக்கையைப் புகழ்ந்தார். "உமது நம்பிக்கை பெரிது" என்று இயேசு புகழும்போது, "நம்பிக்கை குன்றியவர்களே" என்று (மத். 8:26; 14:31; 16:8) அவ்வப்போது இயேசு தம் சீடர்களைக் கடிந்துகொண்ட சொற்களும் நம் மனதில் எதிரொலிக்கின்றன.
கிறிஸ்தவ மறையில் பிறந்து, வளர்ந்து வரும் பலர் நம்பிக்கையில் குன்றியிருப்பதையும், கிறிஸ்துவைப் பற்றி ஓரளவே தெரிந்த வேற்றுமதத்தவர், பேரளவு நம்பிக்கை கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் கானானியப் பெண்ணைப் போல வேற்று மதத்தவர் பலர் நம் கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சவாலாக அமைந்த நேரங்களை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ஒருபுறம் என்றால், கடந்த சில நாட்களாக, (ஆகஸ்ட் 14 முதல் 18 முடிய) தென் கொரியாவில் திருத்தந்தையைச் சந்தித்துவரும் ஆசிய இளையோரை எண்ணி பெருமைப்படுகிறோம். "இளையோரே, உங்கள் நம்பிக்கை பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும் என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று மன்றாடுவோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட முதல் ஆசியத் திருப்பயணத்தின் போது, ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஆசிய இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து ஒரு சில வரிகள்....
"நாம் விதைக்கவிரும்பும் நன்மை, நம்பிக்கை ஆகிய விதைகளை விழுங்கிவிடும் சுயநலம், அநீதி, பகைமை ஆகிய களைகள் அதிகம் வளர்ந்து வருகின்றன. செல்வம், அதிகாரம், இன்பம் என்ற பொய் தெய்வங்களின் வழிபாடு வளர்ந்து வருகிறது. பொருள் வசதிகள் நாளுக்கு நாள் பெருகிவந்தாலும், வெறுமை, தனிமை ஆகிய பாலைவனமும் மனித உள்ளங்களில் படர்ந்து வருகிறது. இந்த உலகில், இளையோராகிய நீங்கள் நம்பிக்கையை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்" என்று திருத்தந்தை ஆசிய இளையோரிடையே ஆகஸ்ட் 15ம் தேதியன்று கூறினார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று நம் சிந்தனைகளை ஆரம்பித்தோம். முடிவிலும் ஓர் அழகிய தமிழ் செய்யுளின் ஒரு சில வரிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். கணியன் பூங்குன்றனார் எழுதிய கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- கணியன் பூங்குன்றனார்

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகள் வெறும் கவிதையாக, பாடலாக நின்றுவிடாமல், நடைமுறை வாழ்வின் இலக்கணமாக மாற முடியும் என்ற நம்பிக்கையுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்
பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


-ஜெய மோகன் 

No comments:

Post a Comment