07 June, 2015

The secular suffused with the sacred புனிதமற்றவை புனிதமாக்கப்படும் திருவிழா

Jesus the heart of the Eucharist

http://www.cpsainttugdual.catholique.fr/13-Conclusion-de-l-ecole-d
Feast of the Body and Blood of Christ
The word ‘News’ involuntarily connects us to the media - News that are splashed on our dailies and on the TV. Among the 101 news that jostle for our attention, many leave us without making the least impression. Some enter our hearts and create ripples. Some others serve as parables and initiate a process of learning. One such news reached me a few days back. It was published by UCANews (Union of Catholic Asian News). The title of the news captured my attention at first: “Philippine bishops, priests urged to use chapels as classrooms”.

Chapels to be used as class rooms? I am not sure how many of us would readily and willingly agree to this suggestion. Our hesitation, I guess, stems from our dichotomous thinking. Chapel and classroom come from two worlds – one opposite to the other, or, at the least, one ‘different’ from the other. These worlds are labeled as the sacred–secular or the holy–profane!
The Feast of the Most Holy Body and Blood of Christ, which we celebrate today, is a special feast that erases these dichotomies. The secular is suffused with the sacred; the profane transformed into the holy!

Coming back to the UCANews, this suggestion of using chapels as classrooms comes from the social action arm of the Catholic Bishops' Conference of the Philippines. This suggestion comes at the time when 25 million primary and secondary level pupils are returning to school in the Philippines. Due to the various natural disasters that have ripped the Philippines apart, the news claims that nearly 68,000 classrooms have been damaged. ‘As of April 2015, the government was only able to finish building 7,062 classrooms; 16 percent of the 43,183 classrooms that the department planned to build’ says the news.

I am thinking of a similar situation in Nepal where children are deprived of basic health and education due to the inadequate response of the government and other good-willed agencies. The situation of the children in Syria and Iraq also haunts our minds.
In the context of such enormity of suffering faced by children, if our sacred-secular debate takes us to the church to ask Jesus for a solution, we would be given a new lesson in catechism by the scene where Jesus would be teaching these deprived children, seated around Him in His sanctuary! Jesus, who strongly objected to his Father’s house being turned into a den of thieves, would strongly support the idea of turning the chapel into classrooms! He would invite us to share this great dream of merging the sacred and secular for a noble cause!

While thinking of chapels and churches becoming classrooms, especially on the Feast of the Most Holy Body and Blood of Christ, I was reminded of another historical event when the chapel in the outskirts of Hiroshima had become a hospital!
The first atom bomb on August 6, 1945, destroyed Hiroshima. The Jesuit novitiate in a suburb of that city was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain.
In the midst of this broken humanity, the novice master, Fr Pedro Arrupe, S.J. celebrated Mass the very next day of the disaster. “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!”

This Feast is probably THE MOST SIGNIFICANT FEAST to tell us what God’s love is all about. While we are engulfed by love, the best response we can give is to let go… enjoy the experience. If one were to raise questions about love… the how and why of love, then we would almost lose love. Still, human mind is a workshop, constantly churning out questions and we cannot avoid this. Let us try and answer some of the questions that creep into our minds about this Love Feast.
Last week when we reflected on the Feast of the Holy Trinity, we said: If at all we wish to understand the great mystery of the Holy Trinity, then we need to raise the proper questions. Not trying to understand the ‘how’ of the mystery, as St Augustine tried, but more in terms of the ‘why’ of the Triune God.

Today again, it is much better to raise the ‘why’ question than the ‘how’ question. How is Christ present in the two species – bread and wine? Quite a few treatises have been written on this question. Why is Christ present in bread and wine? Here is my simple answer to this question: First, bread and wine are the simple, staple food of the Israelites. Jesus wanted to leave his presence with us in the most ordinary, essentials of our daily life. Second, once food is taken, it gets integrated as our own body and blood. As food is integrated in one’s body, Jesus would like to become integrated with human beings. This answer may not measure up as a ‘treatise’; but it makes some sense to me.

While theologians were debating on how Jesus could be present in bread and wine, Jesus simply was present there, making those ‘secular’ things ‘sacred’. Nothing ‘secular’, nothing ‘worldly’ can block the presence of Jesus in this world. Here is an incident from the life of Bl.Mother Teresa.

Mother Teresa was given a reception by the cruel Communist dictator Enver Hoxha who ruled Albania for 40 years from 1945 to 1985.  He imposed atheism as the official religion in 1967.  The possession of a Bible or cross often meant a ten-year prison term.  Welcoming Mother Teresa in 1985, he stated that he appreciated her world-wide works of charity, and then added, “But I will not permit Christ to return to Albania as long as I am in charge.”  In her reply after thanking the president for the reception Mother said, “Mr. President, you are wrong.  I have brought not only the love of Christ into my native land but also the real presence of Christ in the Holy Eucharist right into your presidential palace.  I am allowed to carry Jesus in a pyx during my visit of this Communist country where public worship is a crime. I keep Jesus in the consecrated host in my pocket. Jesus will surely return to this country very soon.”  Communist rule collapsed in Albania in 1992, and Christians and Muslims reopened their churches and mosques for worship.

I guess it is enough to leave questions of the ‘how’ of this Feast and get back to some of the inspiring incidents related to Christ’s Real Presence in the lives of great souls.

The former archbishop of San Francisco, John Quinn, loves to tell the story of the arrival of Mother Teresa and her Missionaries of Charity to open their house in the city. Poor Archbishop Quinn had gone to great lengths to make sure that their convent was, while hardly opulent, quite comfortable. He recalls how Mother Teresa arrived and immediately ordered the carpets removed, the telephones, except for one, pulled out of the wall, the beds, except for the mattresses taken away, and on and on. Explained Mother Teresa to the baffled archbishop, “All we really need in our convent is the tabernacle”.
Dominic Tang, the courageous Chinese archbishop was imprisoned for twenty-one years for nothing more than his loyalty to Christ and his one, true Church. After five years of solitary confinement in a windowless, damp cell, his jailers came to tell him he could leave it for a few hours, to do whatever he wanted. Five years of solitary confinement and he had a couple of hours to do what he wanted! What would it be? A hot shower? A change of clothes? Certainly a long walk outside? A chance to call or write to family? What would it be? asked the jailer. “I would like to say Mass,” replied Archbishop Tang.
The Vietnamese Jesuit Joseph Nguyen-Cong Doan, who spent nine years in labour camps in Vietnam, relates how he was finally able to say Mass when a fellow priest-prisoner shared some of his own smuggled supplies. “That night, when the other prisoners were asleep, lying on the floor of my cell, I celebrated Mass with tears of joy. My altar was my blanket, my prison cloths my vestments. But I felt myself at the heart of humanity and of the whole of creation.”

Remember Me…
கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா
ஒவ்வொரு நாளும், ஊடகங்கள் வழியே குறைந்தது நாற்பது செய்திகளாவது நம்மை வந்தடைகின்றன. ஒரு சில, நம் விழிகளைத் தொட்டதும், விலகிவிடுகின்றன. வேறு சில, நம் சிந்தனைகளைத் தொட்டு, இக்கட்டானக் கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றிற்கு பதில் தேடுவதற்குள், அடுத்த செய்திகள் நம் சிந்தனையில் இடம் பெறுகின்றன. ஆனால், ஒரு சில செய்திகள், ஓர் உருவகமாக, உவமையாக மாறி, உள்ளத்தின் ஆழத்தில் குடிகொள்கின்றன. வாழ்வின் முக்கியப் பாடங்களை நம்முன் நிறுத்தும் கண்ணாடிகளாக அவை மாறுகின்றன.
அத்தகையதொரு செய்தியை நான்கு நாட்களுக்கு முன் நான் வாசித்தேன். கத்தோலிக்கச் செய்தி நிறுவனங்களில் ஒன்றான UCANewsல் (Union of Catholic Asian News) நான் வாசித்த அச்செய்தியின் தலைப்பு, முதலில் என் கவனத்தை ஈர்த்தது.
"கோவில்களை வகுப்பறைகளாகப் பயன்படுத்த பிலிப்பின்ஸ் ஆயர்களுக்கும், அருள் பணியாளர்களுக்கும் வேண்டுகோள்" (Philippine bishops, priests urged to use chapels as classrooms) இத்தகைய ஒரு தலைப்பைக் கண்டதும், நம்மில் பலர் ஒருவேளை அதிர்ச்சி அடைந்திருக்கலாம். கோவில்களை வகுப்பறைகளாகப் பயன்படுத்துவதா? அது, கோவிலின் புனிதத்தைக் களங்கப்படுத்துமே என்று சொல்லத் தோன்றுகிறது.
இந்தக் கேள்வியும், கலக்கமும் தோன்றுவதற்குக் காரணம், கோவிலும், வகுப்பறையும் இருவேறு உலகங்களைச் சார்ந்தவை என்ற அடிப்படை எண்ணம். கல்விக்கூடங்களைக் கோவில்கள் என்று உருவகப்படுத்திப் பேசுகிறோம். ஆனால், கோவில்களை உண்மையாகவே கல்விக் கூடங்களாக மாற்றுவதற்கு அவ்வளவு எளிதில் நம் மனங்கள் இசைவதில்லை. இறைவனைச் சார்ந்த - இறைவனைச் சாராத இரு உலகங்கள்; புனிதம் - புனிதமற்ற இரு உலகங்கள் என்று நமக்குள் நாமே வகுத்துக்கொண்ட பிரிவுகளால் வரும் போராட்டம் இது. இத்தகையப் பிரிவுகள் செயற்கையானவை என்றும், இறைவனும் இவ்வுலகமும் இரண்டறக் கலக்கமுடியும் என்றும் சொல்லித் தரும் ஒரு திருநாள் - இன்று நாம் கொண்டாடும், இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாள்.
புனிதமான இடங்கள், பொருள்கள், சடங்குகள் என்று நாமாகவே வேலிகளை, சுவர்களை எழுப்பி, அங்கு இறைவன் சார்ந்த பல உண்மைகளைப் பூட்டி, பாதுகாக்க விழையும்போது, அந்த வேலிகளையும் சுவர்களையும் தகர்த்து, இறைவனையும், மனிதரையும் இன்னும் ஆழமாக இணைக்க, இயேசு உருவாக்கிய ஓர் அருள் அடையாளமே, திரு நற்கருணை! அந்த இணைப்பைக் கொண்டாடவே, இன்றையத் திருநாள்!

பிலிப்பின்ஸ் நாட்டில், கோவில்களை வகுப்பறைகளாக மாற்றுங்கள் என்ற பரிந்துரையை வழங்கியது, அந்நாட்டு ஆயர் பேரவையின் சமுதாயப் பணிக்குழு. பிலிப்பின்ஸ் நாட்டை, தொடர்ந்து தாக்கிவரும் மழை, புயல், வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால், நாட்டில் ஏறத்தாழ 68,000 வகுப்பறைகள் அழிந்துவிட்டன என்றும், கடந்த ஓராண்டளவாய் பிலிப்பின்ஸ் அரசு, ஏறத்தாழ 7000 வகுப்பறைகளையே கட்டி முடித்துள்ளன என்றும் இச்செய்தியில் புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன. இச்சூழலில், ஓரளவு உறுதியாக நிற்கும் கோவில்களும், சிற்றாலயங்களும் வகுப்பறைகளாக மாறவேண்டும் என்ற பரிந்துரையை ஆயர் பேரவையின் சமுதாயப் பணிக்குழு முன்வைத்துள்ளது.
பள்ளிகளை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கோவில்களில் வகுப்பறைகள் நடத்தலாமா என்று இயேசுவிடம் கேட்பதற்காக நாம் கோவிலுக்குச் சென்றால், அங்கு, இயேசு, ஏற்கனவே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்துகொண்டிருப்பார், அது நிச்சயம்.
பிலிப்பின்ஸ் நாட்டைப் போலவே, அண்மைய நிலநடுக்கத்தால் பள்ளிகளை இழந்துத் தவிக்கும் நேபாளக் குழந்தைகளுக்கும், கடந்த 3 ஆண்டுகளாய் தொடர்ந்துவரும் உள்நாட்டுப் போர்களால், சிரியாவிலும், ஈராக்கிலும் கல்வியை இழந்துத் தவிக்கும் குழந்தைகளுக்கும் தன் கோவில் கதவுகளைத் திறந்து, இயேசு கட்டாயம் கல்வி புகட்டுவார். அவ்வாறே செய்யுமாறு நம்மையும் அழைப்பார்!
கோவிலை வியாபரத் தலமாக்கக்கூடாது என்பதில் தீவிர ஆர்வம் காட்டும் இயேசு, அதே கோவிலை, வகுப்பறையாக மாற்றுவதிலும் தீவிர ஆர்வம் காட்டுவார். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானில், ஒரு கோவில், மருத்துவமனையாக மாறிய நிகழ்வு மனதில் நிழலாடுகிறது.

இறையடியார் பேத்ரோ அருப்பே அவர்கள், இயேசு சபையின் அகில உலகத் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில், அங்கு அவர், நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தக் கொடுமையின்போது, ஹிரோஷிமாவின் புறநகர் பகுதியில் இருந்த இயேசுசபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அதன் கதவு சன்னல்கள் எல்லாம் உடைந்தாலும், கட்டடம் ஓரளவு உறுதியாய் நின்றது. அந்த இல்லம், ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அவ்வில்லத்தின் கோவிலில் பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில், அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்று அருள்தந்தை பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளை எழுதியுள்ளார்.

அருள்தந்தை அருப்பே, மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்லாமல், வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை, அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாக்கமுரா சான் (Nakamura San) என்ற இளம்பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம்பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே அவர்கள், கண்களில் பெருகியக் கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம், "சாமி, எனக்குத் திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட நாக்கமுரா சான் அவர்கள், சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்கமுடியாத திருநற்கருணைப் பகிர்வு, இரண்டையும் அருள்தந்தை அருப்பே அவர்கள், தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவாக, இயேசுவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

நம்மில் பலர், சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குத்தந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப, இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப்பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். அக்கதைகள் இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், அவை இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறுபெற்றவர்கள்! கதைகள் வழியே நாம் கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள், ஆழமாக, நீண்ட காலத்திற்கு நம்மைப் பாதிக்கும் சக்தி பெற்றவை. கதைகளுக்குள்ள இந்தச் சக்தி, அறிவியல், இறையியல் பாடங்களுக்கு உள்ளனவா என்பது சந்தேகம்தான்.

இயேசுவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா, அன்பைக் கொண்டாடும் ஒரு திருவிழா என்பதை அனைவரும் அறிவோம். அன்பு, இதயத்தைச் சார்ந்த ஓர் அனுபவம். அறிவுசார்ந்த விளக்கம் அல்ல. ஒருவர் நம்மீது அன்பு காட்டும்போது, அந்த அன்பை அனுபவிப்பது, சிறந்த ஒரு பதில். அதற்குப் பதிலாக, அந்த அன்பு எப்படி எழுந்தது, எதற்காக எழுந்தது என்றெல்லாம் கேள்விகள் கேட்கும்போது, அங்கு அன்பு காணாமல் போய்விடும். அன்பைச் சுவைக்க அழைப்பு விடுக்கும் இவ்விழாவின் மையமான மறையுண்மையைக் குறித்தும் பல நூற்றாண்டுகளாக, பல இறையியல் அறிஞர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அவர்கள் எழுப்பிய கேள்வி: எப்படி அப்பத்தின், இரசத்தின் வடிவில் இயேசு பிரசன்னம் ஆகமுடியும் என்ற கேள்வி.
எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேட முயன்ற புனித அகுஸ்தீன் அவர்களின் கதையை, சென்ற வாரம் சிந்தித்தோம். எப்படி என்ற கேள்வியை விட, இறைவன் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்ற இறையியல் விளக்கங்களைக் காட்டிலும், ஏன் நம் இறைமகன் இயேசு, அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.

ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அவை நம் உடலின் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய உணவாக, நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்தக் கொடையை, இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே, இயேசுவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா.

இணைபிரியாமல் நம்முடன் தங்கியிருக்கும் இயேசுவின் இந்த பிரசன்னத்தை உறுதி செய்யும் வகையில் பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ வீர உள்ளங்கள் தங்கள் உயிரையும் இழக்கத் தயாராக இருந்தார்கள். அவருக்காக இத்தனை நூற்றாண்டுகள் உழைக்கவும் முன்வந்தார்கள். இந்தப் பெரும் உள்ளங்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள வாழ்வு அனுபவங்களுடன் நம் சிந்தனைகளை நாம் இன்று நிறைவு செய்வோம்:

வியட்நாமில் சிறைபடுத்தப்பட்டு, கடின உழைப்பு முகாமில் ஒன்பது ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார், இயேசுசபை அருள்பணியாளர், Joseph Nguyen-Cong Doan. அந்த முகாமில், அவரோடு சிறைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குரு, சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த அப்பம் இரசம் இவற்றை, இயேசுசபை குருவுடன் பகிர்ந்து கொண்டார். இரவில், மற்றவர்கள் படுத்துறங்கிய வேளையில், எழுந்து நின்றால், அல்லது, அமர்ந்திருந்தால், சிறைக்காவலர்கள் கண்களில் படக்கூடும் என்ற ஆபத்தால், அருள்பணி Joseph அவர்கள், படுத்தபடியே ஆற்றிய திருப்பலிகளைப் பற்றி பின்னர் மற்றவர்களுக்குச் சொன்னார். தன் நெஞ்சை ஒரு பீடமாகப் பயன்படுத்தி, தன் சிறை உடுப்புக்களை தன் பூசை உடுப்புக்களாக கருதி அவர் ஆனந்த கண்ணீர் போங்க ஆற்றிய அந்தத் திருப்பலிகளைப்பற்றி மற்றவர்களுக்குச் சொன்னார்.

San Francisco உயர்மறைமாவட்டத்தின் பேராயர் John Quinn அவர்கள், தன் மறைமாவட்டத்தில் உழைக்க, அருளாளர் அன்னை தெரேசாவையும் சில சகோதரிகளையும் அழைத்திருந்தார். அருள்சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஒரு வீட்டை தாயரித்திருந்தார். அன்னை தெரேசா அங்கு சென்றபோது, அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். பின்னர், வீட்டின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை எடுக்கச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த திரை சீலைகளை எடுக்கச் சொன்னார். வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து தொலைபேசிகளுக்குப் பதில் ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி அவர் ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம் குறைத்தபின், பேராயரிடம், "ஆயரே, இந்த வீட்டில் எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே" என்று சொன்னாராம். இறைமகன் இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும் என்று வாழ்ந்த அன்னை தெரேசா, உலகில் உருவாக்கிய மாற்றங்களை நாம் அனைவரும் அறிவோம்.

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் புனித Isaac Jogues அவர்களும் ஒருவர். அவர் தொடர்ந்து அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டார். அச்சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு, திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கைகளில் Isaac Jogues உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

ஆல்பேனியா நாட்டில், கம்யூனிசக் கொள்கைகளையும், கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் திணித்து, 40 ஆண்டுகளுக்கும் மேல் (1944-1985) ஆட்சி செய்தவர், Enver Halil Hoxha. ஆல்பேனியாவில் பிறந்து, இந்தியாவில் பணியாற்றி, உலகப் புகழ்பெற்ற அன்னை தெரேசா அவர்களை, தலைவர் Hoxha அவர்கள், 1985ம் ஆண்டு, ஆல்பேனியாவிற்கு வரும்படி அழைத்தார். அன்னையும் அவ்வழைப்பை ஏற்று அங்கு சென்றார்.
அன்னைக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், நாட்டுத் தலைவர்களும், மக்களும் கூடியிருந்த வேளையில், தலைவர் Hoxha அவர்கள், அன்னையின் அற்புதப் பணிகளைப் பாராட்டிப் பேசினார். தன் உரையின் இறுதியில் அவர் அன்னையைப் பார்த்து, "நான் இந்த நாட்டிற்குப் பொறுப்பாக இருக்கும்வரை, கிறிஸ்துவை மீண்டும் இந்த நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன்" என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டு அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் உரையாற்றிய அன்னைத் தெரேசா அவர்கள், "அரசுத் தலைவரே, கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் தற்போது சொன்ன சூளரை தவறானது" என்று தன் உரையைத் துவங்கினார். தொடர்ந்து, அன்னை அங்கு பேசியது: "கிறிஸ்துவின் அன்பை நான் என் தாயகத்திற்குக் கொணர்ந்துள்ளேன். அது மட்டுமல்ல; கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னத்தை நான் உங்கள் அரசு மாளிகைக்குள் இப்போது கொணர்ந்துள்ளேன். இறக்கும் நிலையில் இருப்போர் நடுவில் நான் பணிசெய்ய வேண்டியிருப்பதால், கிறிஸ்துவின் உடலாக மாறியுள்ள திரு நற்கருணையை நான் எப்போதும் ஒரு சிறு குப்பியில் வைத்து என்னுடன் சுமந்து செல்கிறேன். திருஅவை எனக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இன்று, இங்கே, இதோ என் இதயத்தருகே உள்ள ஒரு சிறு பையில் நான் கொணர்ந்துள்ள திருநற்கருணை வழியாக, கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னம் இந்த மாளிகைக்குள், உங்கள் அனுமதியின்றி நுழைந்துவிட்டது" என்று அன்னை தெரேசா அவர்கள் தெளிவாகக் கூறினார்.
1992ம் ஆண்டு, ஆல்பேனியாவில் கம்யூனிச ஆட்சி முடிந்து, மத உரிமையை வழங்கும் குடியரசு மலர்ந்தது.

புனிதம், புனிதமற்றது என்ற பாகுபாடுகளை வகுத்து, நாம் இறைவனை இவ்வுலகிலிருந்து அகற்றி, கோவில்களில் பூட்டிவைத்தாலும் சரி; கடவுள் மறுப்பு போன்ற தவறான கொள்கைகளால், ஆண்டவனுக்கு இவ்வுலகில் இடமில்லை என்று அரசுத் தலைவர்கள் அகந்தைகொண்டு பறைசாற்றினாலும் சரி; ஆண்டவன் மனம் தளரப் போவதில்லை. வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், தன் அன்புப் பிரசன்னத்தை அகிலமெங்கும் நிலைநாட்டும் முயற்சியில் ஆண்டவன் சலிப்படையப் போவதே இல்லை!
தடைகளை வென்று தன்னை நிலைநாட்ட இறைவன் மேற்கொள்ளும் இந்த முயற்சி, யார் வலியவர் என்பதை நிரூபிக்க மேற்கொள்ளப்படும் பலப் பரீட்சை அல்ல! மாறாக, தன்னைத் தேடிவரும் வலுவற்றோரை உறுதிப்படுத்த இறைவன் வழங்கும் கொடையே, அவரது பிரசன்னம் எனும் திருவிருந்து.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று, உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா திருப்பலியாற்றியபோது, தன் மறையுரையில் கூறிய வார்த்தைகள் பொருள் நிறைந்த வார்த்தைகளாக ஒலிக்கின்றன:
திருநற்கருணை, நாம் ஆற்றிய நன்மைகளுக்குத் தரப்படும் ஒரு பரிசு அல்ல, மாறாக, பாவிகளாகிய நமது வலுவின்மையில் ஊக்கமாக, நமது மன்னிப்பாக, நமது உலகப் பயணத்தில் சக்தியளிக்கும் மருந்தாக உள்ளது என்ற கோணத்தில் பார்ப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
"We learn that the Eucharist is not a reward for good, but it is the strength for the weak, for sinners. And forgiveness, is the encouragement that helps us to go, to walk."

கோடான கோடி மக்களின் மனங்களில் இத்தனை நூற்றாண்டுகளாய் வீரத்தை, தியாகத்தை, அனைத்திற்கும் மேலாக, அன்பை வளர்த்துள்ள கிறிஸ்துவின் பிரசன்னம் என்ற மறையுண்மைக்கு முன், தாழ்ந்து, பணிந்து வணங்குவோம். இறைமகன் இயேசு, தன் திருஉடல் திருஇரத்தத்தின் வழியாக விட்டுச் சென்றுள்ள அன்பையும், தியாகத்தையும் வாழ்வாக்க முனைவோம்.



No comments:

Post a Comment