23 July, 2015

Greed… far beyond Pluto புளுட்டோவையும் தாண்டி... பேராசை

Coptic icon of the miracle of ‘the five loaves and the two fish’
religion.answers.wikia.com 

17th Sunday in Ordinary Time

On July 14, and 15, NASA’s space probe, the ‘New Horizons’ flew close to the farthest planet in the solar system – Pluto. The ‘New Horizons’ began its mission in January, 2006. Travelling at the speed of 50,000 kmph, for the past nine years, it has ‘touched’ Pluto. The distance between the Earth and Pluto is around 6 billion kilometres (depending on the orbitrary positions of the Earth and Pluto). Traversing such an unthinkable distance at such an incredible speed, without colliding with other planets, thousands of satellites, and millions of asteroids… is a scientific wonder, indeed. We the ‘earthlings’ have made attempts to ‘shake hands’ with the most distant relatives of the solar family – Pluto and its moons!
It is significant that on the very same July 14 and 15, when the ‘New Horizons’ made this historic contact with our ‘distant relative’, Iran and some powerful nations arrived at a nuclear deal in Vienna! This news made the human family breathe a sigh of relief, at least for the time being. We are aware that this deal is not a guarantee for a nuclear-free, safe world.

Although the ‘New Horizons’ and the Iran deal happening at the same time was not pre-planned, it gives us an opportunity to put them together and see where we are heading. Our so called progress takes us far beyond unthinkable distances across space in a smooth, serene fashion, while we stumble and fall in our efforts to bridge distances between nations, cultures!
I am reminded of the famous lines from a passage titled – ‘The Paradox of our Times’.
“We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbour. We conquered outer space but not inner space.” This inability to meet the neighbour has resulted in our fear – nay, paranoia – of our neighbour. Humanity suffers from IS – Insecurity Syndrome – which has become a seemingly incurable disease due to outfits like the ISIS!

When we talk of ‘insecurity’, we are not talking only about the insecurity of human beings, but also of the insecurity of our eco system. The root cause of the insecurity faced by us today, is the  UNCONTROLLED GREED! In his recent Encyclical, ‘Laudato Si’, Pope Francis says:
“The current global situation engenders a feeling of instability and uncertainty, which in turn becomes “a seedbed for collective selfishness”.   When people become self-centred and self-enclosed, their greed increases… Obsession with a consumerist lifestyle, above all when few people are capable of maintaining it, can only lead to violence and mutual destruction.” (No.204)
 
We are painfully aware that our sense of insecurity manifests itself in all the fields – physical, social, financial, political, psychological etc…etc. We can easily see that all these are inter-related. The more financial and social insecurity, the greater the violence! There is no strong political will to find a permanent solution to this situation. Any one can easily see that the gap between the haves and the have-nots is becoming a bottomless chasm! I feel, that in the final analysis, this is the main reason for all the insecurity we feel. Instead of bridging this gap, most of the governments spend more and more money on weapons. The best shield that can protect us is SHARING of our resources rather than stocking up wealth and weapons.

Sharing is the main theme in today’s liturgy. The readings from II Kings as well as the Gospel of John talk of the miraculous feeding of people. At the first glance, these readings seem to highlight the miraculous intervention of God. But, on a deeper analysis, we can find that God and Jesus did not produce food out of nothing. There was the element of human contribution.
2 Kings 4:42-44
A man came from Ba'al-shal'ishah, bringing the man of God bread of the first fruits, twenty loaves of barley, and fresh ears of grain in his sack. And Eli'sha said, "Give to the men, that they may eat." But his servant said, "How am I to set this before a hundred men?" So he repeated, "Give them to the men, that they may eat, for thus says the LORD, 'They shall eat and have some left.'" So he set it before them. And they ate, and had some left, according to the word of the LORD.

We see a similar scene in John’s gospel – John 6: 1-15. This passage seems like a sequel to last week’s passage from Mark. The closing lines of last week’s gospel gave us a picture of the compassionate shepherd:
Mark 6:34
As he went ashore he saw a great throng, and he had compassion on them, because they were like sheep without a shepherd; and he began to teach them many things.
This week’s gospel begins with Jesus, the Good Shepherd being concerned about feeding the people. His question of how to feed those people met with more questions. Then came a solution: "There is a lad here who has five barley loaves and two fish". Jesus, as if waiting for this clue, told his disciples to make the people sit down for a meal! All that Jesus required was a little effort from one of them and it came via a child!

Usually this miracle is looked upon as a miracle of multiplication performed by Jesus. But, there is another interpretation to this episode. This interpretation stems from the basic question – how is it that a child carried food to the desert? When a family goes on a journey, children do not think of carrying food. This is the job of the parents. They foresee what would be required by children and get prepared.
For the Jews, this foresight was almost second nature. Having suffered slavery and shortage of food for generations, they were careful to carry food whenever they left their house. So, here was a family which had come to the desert to meet Jesus. The mother of the family had prepared five loaves and two fish for the family to eat. The child was simply carrying the food packet. We can easily presume that many of those who were there around Jesus, carried some food.
As it was getting late, they began to feel pangs of hunger. They were hesitant to open their packets since they knew that what they had was insufficient to feed the crowd.
I can well imagine what happens in a railway compartment, when it is time for meals. Those who have brought food packets would be hesitant to open them. If one of them starts, then the others will follow. Sometimes, something more would happen… namely, if one begins to share the food, then the others would share and there would be a tasty meal from the bits and pieces of food items shared!
A similar situation prevailed in the desert… around Jesus. When Jesus told his disciples about feeding the people, the disciples as well as those sitting close to Jesus must have raised their eyebrows! Hesitations, questions, calculations are typical of adults. Thank God, children are different. Hence, the miracle happened.
The little lad heard Jesus discussing with his disciples about feeding the people. Without a second thought, the lad offered what he had carried from home – five loaves and two fish! Once the crowd saw this, then it was easy for them to open their packets and share…
Five loaves + two fish + Jesus’ blessing = more than 5000 people (men) fed + 12 baskets of left-over food!
Not a simple mathematics, but pure magic! I consider this – namely, that Jesus and the child inspiring the people to share – a much more powerful miracle than Jesus multiplying the loaves all by himself!

The world needs extraordinary miracles of sharing. How do we get rid of the scandal of millions dying of hunger? We can pray for God’s direct intervention; we can hope for efficient actions of governments; we can fight with the haves to share with the have-nots… OR, as the little lad, we can start sharing.

Let me close these reflections with two news items – one that talks of what is wrong with us and another talking of what can be done:
What is wrong with us?…
We Already Grow Enough Food For 10 Billion People -- and Still Can't End Hunger
(Source: Huffington Post - Posted: 05/02/2012; Updated: 12/18/2014)
Hunger is caused by poverty and inequality, not scarcity. For the past two decades, the rate of global food production has increased faster than the rate of global population growth. The world already produces more than 1 ½ times enough food to feed everyone on the planet. That's enough to feed 10 billion people, the population peak we expect by 2050. (The present population is around 7.3 billion) But the people making less than $2 a day -- most of whom are resource-poor farmers cultivating unviably small plots of land -- can't afford to buy this food.
In reality, the bulk of industrially-produced grain crops goes to biofuels and confined animal feedlots rather than food for the 1 billion hungry. The call to double food production by 2050 only applies if we continue to prioritize the growing population of livestock and automobiles over hungry people.
The following are some statistics gathered from the media:
  • Our present world population is around 7.3 billion…
  • The food prepared daily around the world can easily feed around 7.5 billion people…
  • Everyday around 1.4 billion go to bed hungry…
  • Hence, food that can feed around 1.6 billion people is thrown away daily.
  • Every year, around 3 million people die of hunger around the world. Most of these victims of hunger, are children!
What can be done?... Here is the second news item:
Spearheading a revolution with handful of rice (Source: UCAN-India)
July 15, 2012. Every drop makes an ocean. That adage perhaps never held so true as in the case of a Christian community in one of the poorest areas of India. A small community in Mizoram despite having not much to depend on for themselves have been religiously paying their tithes – “a handful rice.”
This community in the northeast not only supports itself financially, but has also managed to send out hundreds of missionaries. Behind their success is a simple practice called "a handful of rice."
Lalua lives in a tiny, remote village in Mizoram. Her family sustains on a meager income of less than $1 a day. Despite abject poverty, simple women like Lalua are spearheading a revolution that's sweeping the world of missions.
"Buhfai tham" is a practice where each Mizo family puts aside a handful of rice every time they cook a meal. Later, they gather it and offer it to the church. The church, in turn, sells the rice and generates income to support its work.

I rest my case.

P.S. As I was finishing my reflections for this Sunday, another news caught my attention:
Huge asteroid with $5 trillion worth of platinum to pass by Earth, published in The Hindu, July 18, 2015.
What struck me as very odd with this news item was the fact that an approaching asteroid - UW-158, was seen primarily as an object of investment (worth $5 trillion) rather than a celestial body. If this news were published, say, 10 or 15 years back, there would be some concern raised about the ‘safety’ of the earth. Discussions on whether the asteroid would collide with the earth etc. would have figured as headline. Now, more than safety concerns, the ‘property value’ of the asteroid has taken precedence. What was more striking in this piece of news is the fact that an asteroid mining company by name, Planetary Resources, is already operational! Our greed seems to go far beyond the earth!  As we have devastated our Mother Earth by our mining, we are ready to destroy other heavenly bodies as well!

Hospitality is Sharing Food Together

பொதுக்காலம் 17ம் ஞாயிறு

ஜூலை 14ம் தேதி, விண்வெளிப் பயணத்தில் மற்றொரு மைல்கல் நாட்டப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், NASA ஏவிய ஒரு விண்கலம், சூரியக் குடும்பத்தின் எல்லையில் சுற்றிவரும் கோளமான புளூட்டோவை நெருங்கி, அங்கிருந்து தெளிவான புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
2006ம் ஆண்டு, சனவரி மாதம், விண்ணில் ஏவப்பட்ட 'புதியத் தொடுவானங்கள்' (New Horizons) என்ற விண்கலம், மணிக்கு, ஏறத்தாழ 50,000 கி.மீ. வேகத்தில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, சூரியக் குடும்பத்தின் தூரத்து உறவினரைத் தொட்டுவிட்டது. பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடையே உள்ள தூரம் ஏறத்தாழ 600 கோடி கி.மீட்டர்கள் என்று கூறப்படுகிறது.
பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடைப்பட்ட தூரத்தில், பல கோளங்கள், பல்லாயிரம் செயற்கைக் கோள்கள், இன்னும் பலகோடி விண்மீன் பாறைகள் ஆகியவை விண்வெளியில் தாறுமாறாக உலவுகின்றன. மணிக்கு 50,000 கி.மீ. வேகத்தில் பயணித்த 'புதியத் தொடுவானங்கள்' என்ற அந்த விண்கலம், இவற்றில் எதனுடனும் மோதாமல், 600 கோடி கி.மீட்டர் தூரத்தைக் கடந்தது, உண்மையிலேயே ஒரு மாபெரும் வெற்றிதான்.

'புதியத் தொடுவானங்கள்' என்ற விண்கலம் புளுட்டோவை நெருங்கிய அதே ஜூலை 14, 15 ஆகிய நாட்களில், வியென்னா நகரில், ஈரான் நாட்டுடன் அணு ஒப்பந்தம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. மனித சமுதாயம் அணு ஆயுதங்களின் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெறும் என்பதை இந்த ஒப்பந்தம் ஓரளவு உறுதி செய்துள்ளது என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளியேறினாலும், இவ்வுலகம் பாதுகாப்பின்றி உள்ளது என்பதை நம் ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் இடித்துரைக்கின்றன.
'புதியத் தொடுவானங்கள்' ஈரான் அணு ஒப்பந்தம் இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, ஓர் ஏக்கம் எழுகிறது. மோதல்களும், பிரச்சனைகளும் இன்றி, விண்வெளியில் பலகோடி மைல்களைக் கடக்கும் வழிகளை கண்டுபிடித்த நாம், பக்கத்து நாடுகளுடன், பக்கத்து ஊர்களுடன் மோதல்கள் இன்றி வாழும் வழிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுகிறது. விண்வெளியை வெல்லும் நாம், நம் மனவெளியை வெல்ல முடியவில்லையே என்ற நெருடல் எழுகிறது.

"நமது காலத்தின் புதிர் / முரண்பாடு" (The Paradox of Our Time) என்ற தலைப்பில், பல ஆண்டுகளுக்கு முன், என்னை வந்து சேர்ந்த ஒரு மின்னஞ்சலில் நான் வாசித்த வரிகள், இந்த நெருடலை வெளிப்படுத்துகின்றன. 1995ம் ஆண்டு எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த குறுங்கட்டுரையில், இடம்பெறும் வார்த்தைகள், இன்று நமக்கு முன் கேள்விகளைத் தொடுக்கின்றன:
பெரும் முயற்சிகள் எடுத்து, விண்வெளியைக் கடந்து, நாம் நிலவைத் தொட்டுவிட்டு வந்துள்ளோம்; ஆனால், தெருவைக் கடந்து, அடுத்தவீட்டுக் காரரைச் சந்திக்க, நாம் தயங்குகிறோம். வெளி மண்டலத்தை வென்றுவிட்டோம், ஆனால், உள்மண்டலத்தை வெல்லவில்லை.
(We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbor. We conquered outer space but not inner space.)

உலகமனைத்தையும், வான்வெளி அனைத்தையும் வென்று, அதே நேரம் ஆன்மாவை இழந்து தவிக்கும் (மத். 16:26; மாற். 8:36; லூக். 9:25) நாம், எந்த நேரத்தில், எவ்விடத்திலிருந்து, எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும் என்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். இன்றைய நமது சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் சிதைக்கும் ஒரு பெரும் பிரச்சனை, பாதுகாப்பின்மை.

பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை வேட்கை. அண்மையக் காலங்களில் பாதுகாப்பு என்று நாம் பேசும்போது, மனித பாதுகாப்பை மட்டும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கிறோம். நாமும், நமது சுற்றுச்சூழலும் பாதுகாப்பின்றி போனதற்கு காரணம் என்ன? நமது சுயநலமும், பேராசையும், இந்த பாதுகாப்பற்ற நிலைக்கு, நம்மைத் தள்ளிவிட்டுள்ளன. இந்த எண்ணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் வெளியிட்ட, "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலில் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.
இன்றைய உலக நிலை, நிலையற்ற, உறுதியற்ற உணர்வை உருவாக்குகிறது. இது, தன்னலம் வளர்வதற்கு விளைநிலமாக மாறுகிறது. மக்கள் தங்களை மையப்படுத்தி, தங்களுக்குள் புதைந்துபோகும்போது, அவர்களது பேராசை பெருகுகிறது.
The current global situation engenders a feeling of instability and uncertainty, which in turn becomes “a seedbed for collective selfishness”. When people become self-centred and self-enclosed, their greed increases. (LAUDATO SI’ – No.204)

சுயநலமும், பேராசையும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். இதனால், இல்லாதவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் பாதாளம் உருவாகிவிட்டது. இந்த வேறுபாடுதான் நமக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்டது. இல்லாதவர்கள் விரக்தியின் எல்லைக்கு விரட்டப்படும்போது, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது, அவர்களுக்கு உள்ள ஒரே வழி, இருப்பவர்களைத் தாக்குவது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகளை, அதனால் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலையை ஆழமாக ஆய்வு செய்தால், இந்த நிலையின் ஆணிவேராக நாம் காண்பது... இருப்பவர் - இல்லாதவர் என்ற இணைக்கமுடியாத இருவேறு உலகங்கள்.
இப்படிப் பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, இருப்பவரின் உலகம், ஆயுதங்களையும், அரசியல் தந்திரங்களையும் நம்பி வாழ்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி... பகிர்வு.
"ஒவ்வொருவரின் தேவையையும் (need) நிறைவு செய்யப் போதுமான அளவு இவ்வுலகில் வளங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொருவரின் பேராசையை (greed) நிறைவு செய்யும் அளவு இல்லை" என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்.  
“Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.” – Gandhi.
இருப்பதை இல்லாதாரோடு பகிர்ந்தால், இந்த உலகம் அதிகப் பாதுக்காப்பில் வளர்ந்து, பல புதுமைகளைக் காணமுடியும் என்பதை நமக்கு இன்றைய வாசங்கள் நினைவுறுத்துகின்றன.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி அரசர்கள் இரண்டாம் நூலிலும், யோவான் நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருந்தாலும், இறைவனை நம்பி உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது.
இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, உலகின் பசியைப் போக்க, இல்லாதவர்களின் குறையைப் போக்க இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இந்த இரு வாசகங்களையும் இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், ஓர் உண்மை தெளிவாகும். இறைவன் இந்த உணவை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. கூட்டத்தில் ஒருவர் கொண்டுவந்து கொடுத்த உணவே இந்தப் புதுமையின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.
அரசர்கள் - இரண்டாம் நூல் 4: 42
பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசாவிடம் கொண்டு வந்தார்.
என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. ஒருவர் மனமுவந்து தந்த அந்த உணவு ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித் தருகிறார். பாலை நிலத்தில் தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்து பரிமாறச் சொல்கிறார் இயேசு. இயேசுவின் அந்த ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன, ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த அற்புதத்தைத் துவக்கிவைத்தது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் ஆசீர்... ஐயாயிரம் பேர் வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது.
இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம் - ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு பாலைநிலத்தில் துவக்கிவைத்தார் என்பது இரண்டாவது கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தில் நம் சிந்தனைகளைத் துவக்கிவைப்பது ஒரு கேள்வி: சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது... பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச் செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், பாலைநிலத்திற்கு இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது பாலைநிலம் என்பதால், குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? இந்தக் கேள்விகளில் பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கி இருந்தனர்.
யார் ஆரம்பிப்பது? இது நடக்கக்கூடிய காரியம்தானா? நமக்கேனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்வது? போன்ற கேள்விகள், பெரியவர்கள் மனதை ஆக்ரமிக்கும். குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இருக்காது. அதனால், அந்தப் புதுமை நிகழ்ந்தது.
மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட அந்தச் சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் அந்தச் சிறுவன் இயேசுவிடம் வந்து, தன்னிடம் உள்ளதையெல்லாம் பெருமையுடன் தந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும் தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத விருந்து.

இரயில் பயணங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். இரயிலில் பயணம் செய்யும்பொழுது, உணவுநேரம் வந்ததும், ஒரு சின்ன தயக்கம் உருவாகும். எல்லாரிடமும் உணவு இருந்தாலும், யார் முதலில் உணவு பொட்டலத்தைப் பிரிப்பது என்ற சின்ன தயக்கம். ஒருவர் ஆரம்பித்ததும், மற்றவர்களும் அரம்பிப்பார்கள். இதில் சில சமயங்களில் இன்னும் என்ன அழகு என்றால், ஒருவர் தன் உணவில் கொஞ்சம் மற்றவரோடு பகிர ஆரம்பித்ததும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வர். அவரவர் கொண்டு வந்திருந்த உணவை விட, இன்னும் அதிக சுவையுள்ள விருந்து அங்கு நடக்கும்.
இதே போன்றதொரு அனுபவம் இயேசுவைச் சுற்றி அன்று நடந்திருக்க வேண்டும். ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வின் மகிழ்விலேயே அங்கிருந்தவர்களுக்கு பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் உண்டதுபோக மீதியை, 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை. இது இரண்டாவது கண்ணோட்டம். தனியொருவராய் இயேசு அப்பங்களைப்  பலுகச் செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச் செய்தார் என்பதை, நான் மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கிறேன்.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்தப் பகிர்வுப் புதுமை அதிகம் தேவைப்படுகிறது. வளங்கள் பலவும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் கோடான கோடி மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள்.
Huffington Post என்ற நாளிதழில், 2014, டிசம்பர் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு: We Already Grow Enough Food For 10 Billion People -- and Still Can't End Hunger - அதாவது, "1000 கோடி மக்களுக்குத் தேவையான உணவை நாம் உற்பத்தி செய்கிறோம் - இருப்பினும், பட்டினியை ஒழிக்க முடியவில்லை"
இந்தக் கட்டுரையின் ஒரு சில வரிகள், மனித சமுதாயத்தின் மீது தீர்ப்பு வழங்கும் வரிகளைப் போல் ஒலிக்கின்றன:
உலகில் நிலவும் பட்டினியின் காரணம், பற்றாக்குறை அல்ல; சமநிலையற்ற ஏற்றத்தாழ்வும், வறுமையுமே இதற்குக் காரணம். உலக மக்கள் தொகையைவிட, உணவு உற்பத்தியின் அளவு உயர்ந்தே உள்ளது. 7.3 பில்லியன், அதாவது, 730 கோடி மக்கள் தொகை கொண்ட இவ்வுலகில், 1000 கோடி மக்களுக்குரிய உணவு உற்பத்தியாகிறது. உணவின் விலை ஒவ்வொருநாளும் கூடிவருவதால், வறியோர் இதை வாங்க முடியாமல் பட்டினியில் வாடுகின்றனர்.

ஊடகங்களில் வெளியான புள்ளிவிவரங்களின்படி,
ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 730 கோடி. உலகில் தினம் தினம் 750 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உற்பத்தியாகிறது. இருந்தாலும், 140 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் 160 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, ஒவ்வொரு நாளும் வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது. இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள்.
இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.
வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை அந்தச் சிறுவனைப் போல் நம்மில் யாரும் ஆரம்பித்து வைக்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன், வெளியான ஒரு செய்தி. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு மாநிலமான மிசோராம், நமக்குப் பகிர்வுப் பாடத்தைச் சொல்லித் தருகிறது. 

"Buhfai tham" அதாவது, "ஒரு கைப்பிடி அரிசி" என்ற ஒரு திட்டம் இங்கு செயல்வடிவம் பெற்றுள்ளது. இங்குள்ள மக்கள், பெரும்பாலும் வசதிகள் குறைந்த மக்கள். இவர்கள் ஒவ்வொரு முறையும் சோறு சமைக்கும்போது, ஒரு கைப்பிடி அரிசியை தனியே எடுத்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் சேர்க்கப்படும் அரிசி, ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கு கோவிலுக்குக் கொண்டு வரப்படும். கோவிலில் சேர்க்கப்படும் அரிசி அப்பகுதியில் வாழும் மிகவும் வறியோர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும். ஒரு சிலர், அரிசியோடு, தங்கள் தோட்டங்களில் வளர்ந்த காய்களையும், பழங்களையும் காணிக்கையாகத் தருவர். இவை அனைத்துமே, ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில் வறியோர் மத்தியில் பகிர்ந்து தரப்படும்.

மிசோராம் மக்கள் சொல்லித்தரும் வழியை நாம் அனைவருமே பின்பற்ற முடியுமே! 
இதைத்தானே இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சிறுவன் நமக்குச் சொல்லித் தருகிறான்? பகிர்வதால், பாசம் வளரும், பாதுகாப்பும் உலகில் பெருகும். பகிர்வுக்குப் பதில், சுயநலக் கோட்டைகள் பிரம்மாண்டமாக எழுந்தால், அந்தக் கோட்டைகளைக் காக்க இன்னும் தீவிரமான பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும். நற்செய்தியில், சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும் பகிர்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.

 கூடுதல் சிந்தனைகள்...

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. இல்லாதோர் அல்லது இல்லாதோர் சார்பாகப் போராட்டங்களை மேற்கொள்பவர்கள் இருப்போரின் உலகை அழிக்க முடியும். அந்த அழிவைத் தடுக்க இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை நம்பி வாழ வேண்டியிருக்கும். உலகெங்கும் ஆயுதங்கள் வாங்க அரசுகள் செலவிடும் தொகையில் நூறில் ஒருபங்கு மக்களின் தேவைகளுக்காகச் செலவிட்டால், ஆயுதங்களே தேவையில்லாமல் போகும் என்பது உண்மையிலும் உண்மை. இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து தங்கள் உலகைக் காப்பதற்குப் பதில், இல்லாதவர்களோடு இந்த உலக வளங்களை பகிர்ந்து கொண்டால், அனைவருமே நலமாக, மகிழ்வாக வாழ முடியுமே!
---------------------------------------------

ஊடகங்களில் வெளியான, வேதனைதரும் மற்றொரு செய்தி இது...

இந்தியா, இந்தோனேசியா, டான்சானியா ஆகிய மூன்று வளரும் நாடுகளில் Charity Tourism Concern என்ற ஓர் அமைப்பைச் சார்ந்தவர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கசப்பான ஓர் உண்மை வெளியானது. வளர்ந்துவரும் நாடுகளில் சுற்றுலா பயணிகளாகச் செல்பவர்கள் உள்ளூரில் வாழும் மக்களைவிட மிக, மிக, மிக அதிக அளவு நல்ல நீரை பயன்படுத்துகின்றனர். வீணாக்குகின்றனர் என்றும் சொல்லலாம். இந்தியாவில், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், உள்ளூர் மக்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் நல்ல நீர் ஒரு லிட்டர் என்றால், வெளிநாட்டுப் பயணிகள் பயன்படுத்தும் அளவு 16 லிட்டர்கள். இவ்விதம் அவர்களுக்குத் தேவையான அதிக அளவு நீரைத் தருவதற்கு நட்சத்திர ஓட்டல்கள் செய்துவரும் முயற்சிகளால், உள்ளூர் மக்களுக்கு நல்ல நீர் கிடைக்காமல், அவர்கள் அசுத்தமான நீரைப் பயன்படுத்தி நோய்க்குள்ளாகின்றனர், முக்கியமாக, குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்ற கசப்பான உண்மைகள் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகின் வளங்கள் செல்வந்தர்களின் ஆடம்பர வாழ்வுக்கென தேவையின்றி அழிந்து வரும் இந்தப் போக்கிற்கு எதிராக இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் பாடம் ஒன்றைப் பயில முயல்வோம். பயன்படுத்தியது போக, மீதியைப் பாதுகாப்பதும் நமது கடமை என்று இயேசு ஆற்றியப் புதுமையின் இறுதிப் பாகத்தில் சொல்லித் தருகிறார். யோவான் நற்செய்தி 6: 12-13
மக்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் என்று இயேசு தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

---------------------------------------------

Huge asteroid with $5 trillion worth of platinum to pass by Earth 
The Hindu, July 18, 2015.

விண்வெளியைப் பற்றிய நம் அறிவியல் தேடல்களிலும் வர்த்தக எண்ணங்கள் கலந்துவிட்டன; அங்கும் நம் பேராசையின் விஷம் பரவி வருகிறது என்பது, நம்மை அவமானமும், அச்சமும் அடைய வைக்கிறது. ஜூலை 18ம் தேதி, ஊடகங்கள் வெளியிட்ட ஒரு செய்தி நமது அச்சத்தை உறுதி செய்கிறது.
ஜூலை 19, கடந்த ஞாயிறன்று, 90 மில்லியன் டன் (அதாவது, 9 கோடி டன்) எடையுள்ள UW - 158 என்ற விண்மீன் பாறை (Asteroid) பூமிக்கு மிக அருகே நம்மைக் கடந்து செல்லும் என்ற செய்தி வெளியானது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இத்தகையச் செய்தி வெளியாகிருந்தால், அத்துடன் சில ஐயங்களும், அச்சங்களும் வெளியாகியிருக்கும். அதாவது, 9 கோடி டன் எடையுள்ள இந்த விண்மீன் பாறை நமது பூமியுடன் மோதினால் என்னாகும் என்ற அச்சங்கள் பேசப்பட்டிருக்கும்.
இம்முறை வெளியான செய்தியிலோ, அத்தகைய அச்சங்கள் வெளியாகவில்லை, மாறாக, நம் பேராசையை, ஏக்கத்தை வளர்க்கும் ஒரு செய்தி வெளியானது. 5.4 ட்ரில்லியன் டாலர்கள் (அதாவது, 540,000 கோடி டாலர்கள்) மதிப்புள்ள பிளாட்டினம், நம்மைக் கடந்து செல்லும் விண்மீன் பாறையில் உள்ளது என்ற கருத்து, தலைப்புச் செய்தியானது.
ஆஹா! இதை முன்னரே சொல்லியிருந்தால், அந்த விண்மீன் பாறையை எப்படியாவது பூமிக்குக் கொணர்ந்து, அங்குள்ள பிளாட்டினத்தை வெட்டி எடுத்திருக்கலாமே என்ற எண்ணம், பல சுரகத் தொழில் நிறுவனங்களுக்கு தோன்றியிருக்கும்... இல்லையா?
விண்மீன் பாறையில் சுரங்கத் தொழிலா என்று வியக்கவேண்டாம். இந்த விண்மீன் பாறையின் பிளாட்டினம் பற்றிய விவரத்தை வெளியிட்டது, Planetary Resources – The Asteroid Mining Company என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் பணி என்ன? விண்மீன் பாறைகளில் சுரங்கத் தொழில் செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள நிறுவனம் இது.
'புதியத் தொடுவானங்கள்' (New Horizons) என்ற விண்கலம், 600 கோடி கி.மீட்டர்கள் தூரம் பயணித்து, புளுட்டோவைத் தொட்டுவிட்டது என்ற செய்தியைக் கேட்டபோது, நம் விண்வெளி ஆய்வுகளை, முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தோம். ஆனால், நம் விண்வெளி ஆய்வுகளிலும் பேராசையை வளர்க்கும் வர்த்தக எண்ணங்கள், கலந்துள்ளது என்பதை அறியும்போது, கவலைப்படுகிறோம்.
நமது பேராசையால், பூமியில் சுரங்கங்களைத் தோண்டி, இயற்கை வளங்களைச் சீரழித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, இந்தப் பூமிக் கோளத்தை ஆபத்துக்கு உள்ளாக்கியது போதாதென்று, விண்வெளியில் உலவி வரும் ஏனையக் கோளங்களையும், விண்மீன் பாறைகளையும், கட்டுப்பாடின்றி நாம் விரிக்கும் பேராசை வலைகளில் சிக்கவைத்து, நமது வானவெளியையும் சீரழித்துவிடுவோமோ என்ற பேரச்சம் நம்மைச் சூழ்கிறது.

No comments:

Post a Comment