19 March, 2017

From mudslide to messenger of God சகதியிலிருந்து வெளியேறிய சமாரியப்பெண்



Jesus and the Samaritan Woman
3rd Sunday of Lent

Woman swept away by mudslide in Peru, but claws her way to safety… Amazing footage: Woman escapes raging mudslide in Peru … Watch a Woman's Dramatic Escape From Mudslide… were some of the headlines of the news from Peru that captured the attention of world media and the social network last week (March 16 and 17). It was accompanied by an amateur video showing a young lady emerging from the, swirling, fast-moving mudslide to safety.
Evangelina Chamorro Diaz crawled and stumbled through debris as she tried to reach onlookers for help in Punta Hermosa, about 40km outside of the capital Lima. The 32-year-old said she survived by grabbing on to tree branches and trying to build a makeshift bridge to drag herself out of the mud. (Sky News)

Evangelina serves as the starting point of our Sunday reflection today. She is Evangelina (meaning ‘good news’) and she fought against the mudslide that was carrying her to her certain death. Swimming against the tide in water is very difficult. Here, Evangelina was swimming against the tide in swirling mud. She must have had extraordinary physical and mental stamina to do this! From the mudslide emerges ‘good news’! She, thus, reminds us of the Samaritan woman who meets Jesus in today’s Gospel (John 4: 5-42). Being a woman, a Samaritan woman was tough. This lady, living with the sixth man, must have been smeared with mud most of the days. Figuratively speaking, she was surrounded by mudslide all the time. From this mudslide, Jesus saves her and makes her an evangelist! Thus, Evangelina, the Peruvian woman, reminds us of the Samaritan woman.

This Sunday as well as the next two Sundays, the gospel texts will put us in touch with three of the most significant spiritual symbols of our Faith: water, light and life, symbols closely connected with Easter. Today’s gospel revolves around the well in Samaria, with a discourse on water. Next Sunday it will be the curing of the visually handicapped person, with thoughts on light. The third week – the final week before the Holy Week – it will be the miracle of raising Lazarus from the dead and the discourse on life. All the three passages are taken from the Gospel of John, which, as we know well, is not a simple narrative of Jesus’ life but a theological treatise as well.

The conversation between Jesus and the Samaritan woman is one of the longest (if not the longest) conversation recorded in the four gospels. This conversation is a good example of the inward journey taken by a person (Samaritan woman) who, ultimately, makes this journey towards Jesus and God. Quite often we tend to feel that we know enough about self, Jesus and God and thus lose out on newer insights. We forget that we are all pilgrims on this world, constantly called to journey. With a false surety that ‘we know everything’ about self, others and God, we tend to stay put and stagnate! Only when we venture out, we shall encounter surprises about ourselves and about God. ‘The God of Surprises’ is one of the basic, beautiful attributes of God!

Today’s gospel gives us a picture of Jesus who not only surprises us, but, shocks us. He voluntarily initiates a conversation with a Samaritan woman who comes to the well at mid day. The woman’s late visit to the well (women, usually, gathered at the well early in the morning) may suggest that she was an outcast in the village, even among the Samaritans, because of her questionable living situation! Jesus begins this discourse expressing his need for water.

When a Samaritan woman came to draw water, Jesus said to her, “Will you give me a drink?” (John 4: 7) A simple request for water opens up quite many issues and ultimately ends on sublime themes related to God and worship. Here is the first lesson from today’s gospel: that no place is alien to talk about God. We know that in villages, the well, the tea shop and the tree in the village square are good spots for gossips, political opinions and even philosophical thoughts. Jesus shows us that a conversation near a well can also be profoundly divine!

The initial reaction of the Samaritan woman is a grim reminder of how the human family has not progressed in certain areas even after centuries. The Samaritan woman said to him, “You are a Jew and I am a Samaritan woman. How can you ask me for a drink?” (John 4: 9) You-and-I distinction even in the case of a basic need. Thirst knows no caste and religion. Hence, it would be highly impossible for any one to refuse water to the one who is thirsty. But, with water becoming more and more a private property and hence scarce and costly, it is becoming more and more delicate to request water and to share water even in dire situations. Due to its rich business proposition, water has come to be called ‘blue gold’ in our days!

On March 22nd, Wednesday, World Water Day 2017, Pope Francis will inspire a global conversation. His address from the Vatican will help shift how the world values and understands its single most precious resource: water. Immediately following the Papal address, at 10:30 a.m. CET, 400 thought leaders from around the world will convene at WATERSHED. These policy makers and academics, together with students, artists, business leaders and men and women from the most at-risk populations will begin an unprecedented dialogue around the value and values of water. The conference is co-hosted by the Vatican’s Pontifical Council for Culture and the Club of Rome.

Pope Francis has warned that we could be moving toward “a major world war for water.” He did so when addressing participants at the concluding session of an international seminar on “the human right to water,” held at the Vatican’s Pontifical Academy of Sciences on Feb. 23 and 24, 2017.
“I ask if in this piecemeal third world war that we are living through, are we not going toward a great world war for water?”, the pope said, departing from his prepared text. Specialists in the field have already predicted that some of the major armed conflicts in the future could be over the possession of or access to water, but this is the first time that Francis has spoken in these terms. (America Magazine)

The great Indian environmentalist Sunderlal Bahuguna, has expressed similar sentiments when he said: “Nations all across the world are facing a water crisis that is deepening with the passing of each day… This situation demands immediate notice and remedial measures from our governments and policymakers. Otherwise, mankind has to face the wrath of an inevitable third world war on the issue of water.”

The thirst of Jesus and the hesitation of the Samaritan woman still echo in different parts of the world. The great natural gift of God – water – has, unfortunately, been used as a political and caste weapon, dividing people. The conversation between Jesus and the Samaritan woman also highlights another division among people. Not only the gifts of God, but God himself / herself is divided under various pretexts. Jesus is rather emphatic in saying that true God and true worship do not divide the people: “Woman,” Jesus replied, “believe me, a time is coming when you will worship the Father neither on this mountain nor in Jerusalem… Yet a time is coming and has now come when the true worshipers will worship the Father in the Spirit and in truth, for they are the kind of worshipers the Father seeks. God is spirit, and his worshipers must worship in the Spirit and in truth.”  (John 4: 21-24)

I don’t think that any one could make this clearer and easier than Jesus. Curiously, Jesus begins this statement with a request… almost a plea: “Woman, believe me…” It is hard for us to believe that God can be worshipped in such simplicity. But, that is the true worship that ‘the Father seeks’.

Lenten season is a call to conversion. Let us be converted to using God’s gifts (especially water) properly without avarice and monopoly. Let us be converted not to divide God into various human slots, but allow God to be God and try to worship God in Spirit and in Truth.

My closing thoughts go back to Evangelina emerging from the mudslide in Peru. We pray that women all over the world hold on to hope while swimming against the mudslide created by the male-domination!
Woman emerging from mudslide
 தவக்காலம் 3ம் ஞாயிறு

பெரு நாட்டில், சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறிய பெண் (Woman escapes raging mudslide in Peru)... கடந்த வியாழன், வெள்ளி – மார்ச் 16,17 - ஆகிய இரு நாள்கள், ஊடகங்களிலும், சமுதாய வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு செய்தியின் தலைப்பு இது. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தண்ணீரும், சகதியும் இணைந்து வெள்ளமெனப் பாய்ந்து செல்கின்றன. இந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, Evangelina Chamorro Diaz என்ற இளம்பெண், கையில் அகப்பட்ட மரக்கிளை ஒன்றை இறுகப்பற்றி, சகதியிலிருந்து வெளியேறி வந்தார். இழுத்துச் செல்லும் சகதியின் சக்திக்கு, தன்னைக் கையளித்துவிடாமல், எதிர் நீச்சலடித்து, போராடி, கரைசேர்ந்த, 32 வயது நிறைந்த Evangelina அவர்கள், இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமிடுகிறார்.

இவ்விளம்பெண்ணின் பெயர், முதலில், நம் கவனத்தை ஈர்க்கிறது. Evangelina என்ற பெயரின் பொருள், 'நற்செய்தி'. சகதியிலிருந்து மீண்டெழுந்த இவ்விளம்பெண், இன்னும் பல ஆண்டுகள், ஒரு நற்செய்தியாக வாழ்வார் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். சகதியிலிருந்து வெளியேறி, நற்செய்தியாக வாழும் Evangelina அவர்கள், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சமாரியப் பெண்ணை நினைவுக்குக் கொணர்கிறார்.

இயேசுவின் காலத்தில், ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக வாழ்வதென்பது, கடுமையான எதிர் நீச்சல்தான். அதிலும், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண், ஐந்து ஆண்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களால் நசுக்கப்பட்ட, இப்பெண் மீது, கண்டனச் சேறு எப்போதும் வீசப்பட்டிருக்கவேண்டும்.
இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளில், "அப்போது ஏறக்குறைய நண்பகல்" (யோவான் 4:6) என்ற குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண், தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் இந்த சிறு குறிப்பின் வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

எந்த ஊரிலும், பெண்கள், காலையில், சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி கிணற்றிற்குச் சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார். காரணம் என்ன? அவரும், மற்றவர்களோடு காலை நேரத்தில் நீர் எடுக்கச் சென்றிருப்பார். ஆனால், அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர். நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர் எடுப்பதால், கிணற்று நீரே தீட்டுப்பட்டுவிட்டதாக அப்பெண்ணுக்கு உணர்த்தியிருப்பர். ஏனைய பெண்கள் விடுத்த கண்டனக் கணைகளால் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அவர், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல் வேளையைத் தேர்ந்தெடுத்திருப்பார்.
தான் வாழும் சமுதாயம், தன்மீது வாரியிறைத்த சேற்றையும், சகதியையும் கழுவ முடியாமல் வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை, அச்சகதியிலிருந்து மீட்டு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு. இந்த அற்புதத்தை, இன்றைய நற்செய்தியாக நாம் பகிர்ந்துகொள்கிறோம்.

உயிர்ப்புத் திருவிழாவை நோக்கி, நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும், இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி (யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு, பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும், அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி (யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது, மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).

மேலும், தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும், அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையிலும் மாற்றம் நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர் யார் என்பதை அறியாமலேயே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு முன் உயர்த்திப் பேசுகிறார். பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைகிறார். மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும் உன்னத மாற்றம் நிகழ்கிறது.

சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம்... ஒரு கிணற்றடி. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றடி. ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச, இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும் இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதன் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்கிறார். பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில் சந்திக்கின்றனர்.

இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உரையாடல்களிலும், யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல்தான் மிக நீளமானது. இந்த உரையாடலின் முடிவில், ஊரால் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே, இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.

இந்த நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து சிந்திக்க அழைக்கிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று, வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில், சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது, நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப் பற்றியப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல் வழியே, இயேசு, இன்று நமக்கு உணர்த்துகிறார்.

அடுத்ததாக, தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல் தெளிவாக்குகிறது. தண்ணீரைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 22ம் தேதியை, உலகத் தண்ணீர் நாள் என்று சிறப்பிக்கிறது. வருகிற புதனன்று சிறப்பிக்கப்படும் உலக தண்ணீர் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மக்களுக்கு வழங்கும் செய்தி, நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. திருத்தந்தையுடன் இணைந்து, இன்னும் பல உலகத் தலைவர்கள், ஊடகங்கள் வழியே, நேரடியாகப் பேசவிருக்கின்றனர்.

கடந்த மாதம், திருத்தந்தை, தண்ணீரைக் குறித்து, ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றினார். "தண்ணீர் பெறும் மனித உரிமை" என்ற தலைப்பில், பிப்ரவரி 23, 24ம் தேதிகளில், வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் திருத்தந்தை பேசும்போது, தான் தயாரித்திருந்த உரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, தன் உள்ளத்தில் இருந்த ஒரு வேதனையைப் பகிர்ந்துகொண்டார். "சிறு, சிறு துண்டுகளாக, தற்போது உலகில் நிகழ்ந்துவரும் மூன்றாம் உலகப் போரைத் தாண்டி, தண்ணீருக்காக நாம் ஒரு பெரும் உலகப் போரை நோக்கிச் செல்லவில்லையா என்பதை ஆய்வு செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "சுத்தமானத் தண்ணீர் கிடைக்காத காரணத்தால், ஒவ்வொரு நாளும், 1000த்திற்கும் அதிகமான குழந்தைகள் இறக்கின்றனர் என்பதை அறிந்தும், நாம், அக்கறையற்றிருப்பது தவறு" என்று கூறினார்.

இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, நமது பெரும் குற்றம். சாதிக்கொரு கிணறு, குளம் என்று நாம் உருவாக்கிய அவலம் இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.

தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து, மறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர், 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.

இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப் பாதுகாக்கப் பல வழிகளிலும் போராடி வரும் பசுமைப் புரட்சி வீரருமான, 90 வயது நிறைந்த சுந்தர்லால் பகுகுணா அவர்கள் கூறியது இது: "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசை பசியால் உருவாயின. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." தண்ணீரை ஒரு பிரிவினை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும், சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.

இறைவனின் கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும், பல காரணங்களுக்காக, பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு, மலைகளையும், எருசலேம் புனித நகரையும், தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அந்த சமாரியப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்:
யோவான் நற்செய்தி 4 : 21, 23-24
இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்என்றார்.

இறைவனைச் சிறைப்படுத்தும் இலக்கணங்கள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. மனிதர்கள் வகுத்த வரம்புகளைத் தாண்டிய, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில் வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும். அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.
சமுதாயம் உருவாக்கியுள்ள பெண்ணடிமைத்தனம் என்ற சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பெண்கள், இறை நம்பிக்கை என்ற கிளைகளைப் பற்றி, இந்த சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான துணிவைப் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். 
World Water Day - UNICEF


No comments:

Post a Comment