23 September, 2018

Learning from ‘little professors’ ‘சின்ன பேராசிரியர்களி’ன் பெரிய பாடங்கள்


Welcoming these children

25th Sunday in Ordinary Time

“She is still a child; she needs to grow up” was the comment made by one politician against another politician in India last week. (Sep.18) The very next day, ‘the child’ retorted saying: “If I had not grown up, then he and his party leader have not grown up as well.” (Sep.19)

On September 11, on the infamous anniversary of U.S. history – the WTC attack, another attack came in the form of a book: “Fear: Trump in the White House”. This was written by Bob Woodward, who has written books on various Presidents of the U.S., from the time of Nixon. Bob claims to have interviewed many top officials of the White House before writing this book. In one of those interviews, Bob claims that the defense secretary, Jim Mattis, during a discussion with President Trump, about the nuclear standoff with North Korea was so exasperated that Mr. Mattis told his colleagues “the president acted like — and had the understanding of — a ‘fifth or sixth grader.’”

These statements by and about politicians, unfortunately, put children in a spot. When ‘adults’ refuse to grow up, we tend to equate them to children, as if, being a child is, in itself, not something great. In my opinion, comparing politicians to children is a grave insult to children!

Christ seems to have different ideas. He actually warns us otherwise: “Truly, I say to you, unless you turn and become like children, you will never enter the kingdom of heaven.” (Mt. 18:3) We agree with what Jesus says, but give our own interpretation on what Jesus meant by asking us to ‘become like children’.  We have invented words like ‘childish’ and ‘child-like’. We like to believe that Jesus was inviting us to become ‘child-like’ and not ‘childish’. This, in my opinion, is a play with words that still looks down on children. But, Jesus seems to tell us to accept children as they are! This Sunday we are invited to reflect on children. Today’s Gospel (Mark 9:30-37) talks of how Jesus placed a child in the midst of the disciples and asked them ‘to receive one such child in his name’.

Children are great gifts that our world is blessed with. Unfortunately, we don’t have the openness to learn from these ‘little professors’. Let us enter the classroom where our ‘little professors’ are on duty.

A Sunday school teacher asked her children, as they were on the way to church service, "And why is it necessary to be quiet in church?" One bright little girl replied: "Because people are sleeping."
‘Out of the mouth of babes’ truth emerges – pure and simple. Beware!

Children can teach us very profound truths, truths that have been stifled in us since we feel we have become ‘grown-ups’! Instead of learning from children, often we tend to ‘teach’ them – sometimes through words, but more often, by how we live.

I learnt one of my lessons about children in a kindergarten school where I had gone to attend the school day celebrations. The LKG angels went on stage to perform a nursery rhyme in which they were singing their daily duties. “I get up from bed, brush my teeth, take a shower…” etc. was the list sung by the children accompanied by actions. When it came to brushing the teeth, all the children were ‘brushing’ their teeth with the index finger of the right hand, while one of them was doing it with the left. When I pointed it out to the Principal sitting next to me, she gave me the ‘lesson’ about children. She said that the kindergarten teacher, teaching a song to the kids, needed to do things in such a way that the children become her mirror images. That is, if the teacher wants the kids to do an action with their right hand, she had to do that action with her left, so that, the children would do it with their right hand. Mirror image!

Whether we like it or not, children are ‘mirror images’ of the adults. Our actions and behaviour are more easily picked up by children than our words. Here is an embarrassing event that happened in a family on a Sunday.
The lady of the house was entertaining some guests who had come unannounced. When she was in their presence, she was all smiles. But, when she went into the kitchen, she was seething with anger and was cursing them. She did not bother about her five year old daughter accompanying her, trying to help her.
It was lunch time. The Dad asked the child to say a prayer before meals. The child said, “But, I don’t know any prayer.” The Dad said, “Don’t worry, dear. Just say what Mom says.” The child closed her eyes and prayed: “God, why do you have to send these guests on a Sunday, to spoil my day? Amen” Beware! Children are ‘listening’ even when we say nothing to them.

More often we are impatient with our kids and force them into the adult world too soon. We have seen many TV programmes where little children perform dances and crack jokes that are beyond their age. Instead of dragging them into our adult world, Jesus wants us to enter their innocent world. Today he tells his disciples to learn from children how to be humble and unassuming.

We need to see why Jesus brought a child in the midst of his disciples. Last Sunday, we saw Jesus posing the two important questions to his disciples: ‘Who do people say that I am?’ and ‘Who do you say that I am?’ Jesus was happy that Peter identified him as the ‘messiah’. It was an appropriate moment for Jesus to tell them about his passion. This first prediction of passion by Jesus shocked the disciples and Peter. Hence, Peter wanted to ‘put some sense’ into Jesus. He received a fitting reply from Jesus – “Get behind me, Satan”.

Today’s Gospel begins with Jesus predicting his passion, the second time. The disciples were scared to respond to him. Soon their minds were preoccupied with other ‘higher’ thoughts like ‘who was the greatest’ among them. Hence, in an attempt to bring them back to the ground, Jesus placed a child in their midst. Here are the closing lines of today’s Gospel:
Mark 9: 35-37
And Jesus sat down and called the twelve; and he said to them, “If any one would be first, he must be last of all and servant of all.” And he took a child, and put him in the midst of them; and taking him in his arms, he said to them, “Whoever receives one such child in my name receives me; and whoever receives me, receives not me but him who sent me.”

As we reflect on ‘accepting children’ and ‘becoming children’, our minds go to children who have been robbed of their childhood. I am thinking especially of child labourers who are being trampled upon by adults in every possible way. I am thinking of children from Syria, who for no fault of theirs, suffer the effects of crimes perpetuated by adults. We bring all these innocent children to the presence of God so that God will ‘take them in His arms’ and remind us once again that in receiving these children, we receive God!

Let me close with a whatsapp clip I received recently, where Kelsey Hines, a 6 year old from Baltimore, U.S.A., speaks about her fear of getting killed due to the unfettered gun violence in her city. Here are her words of sincere appeal:  We don’t want to be killed.
“Why can't you all just let us live? Why can't you just let us grow up? Why can't you all just let us have fun when we want to play for our friends but we can't because you're shooting out here."
Kelsey asked her mother to record the video after she and her grandmother passed the scene of a triple shooting in Baltimore while on their way to church. Kelsey’s mother said since posting the video the family has received hundreds of messages from people, some from as far away as Africa.

One of the sentences spoken by little Kelsey tugs at your heart. “There’s too many killings out here. And we don’t want people killing us. We don’t want to go to heaven yet. We do love the Lord, but when he’s ready for us to come to up to him — we’re ready — but we’re not ready right now.”

This video was posted in April this year and has received more than 4 million views… Can there be a more direct appeal for those ruthless, senseless people who promote gun culture?
A similar appeal can go from children in India, especially female children – “please let us be children, going to school and playing outdoors without fear of rape…”

We also remember the video where a wounded child from Syria who says: “I am going to tell God all that is going on here.” We remember Aylan (Alan) Kurdi, who without saying a word, taught us about the madness of war and refugees, through his dead body, washed ashore (Sep.2, 2015).

May the ‘tiny little professors’ teach us, ‘adults’ how to live as decent human beings!

Becoming the Least

பொதுக்காலம் 25ம் ஞாயிறு

"அவர் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்; வளர வேண்டும்"
"நான் வளராத குழந்தை என்று அவர் சொன்னால், அவருடையக் கட்சித்தலைவரும் வளராத குழந்தை என்றுதான் அர்த்தம்"
அண்மையில் (செப்டம்பர் 18,19 தேதிகளில்) தமிழ் நாளிதழ் ஒன்றில், அரசியல்வாதிகள் இருவர், ஒருவரை ஒருவர் குறைகூறி விடுத்த அறிக்கைகள் இவை.

வல்லரசு என்றும், முதல்தர நாடு என்றும் தன்னையே பறைசாற்றிக்கொள்ளும் ஒரு நாட்டின் அரசுத்தலைவர், தன் அரசின் உயர் அதிகாரிகளுடன் எவ்விதம் செயலாற்றுகிறார் என்பதைப்பற்றி, அண்மையில் (செப்டம்பர் 11), நூலொன்று வெளியானது. அதிர்ச்சிதரும் பல தகவல்களை உள்ளடக்கிய இந்நூலில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர், அரசுத்தலைவரின் செயல்பாடுகள் குறித்து பேசும்போது, "அரசுத்தலைவர், சிந்திப்பதும், செயல்படுவதும், 5ம் வகுப்பு, அல்லது 6ம் வகுப்பு பயிலும் சிறுவனைப்போல் உள்ளது" என்று கூறியுள்ளார்.

தவறுகள் செய்யும் அரசியல் தலைவர்களை குழந்தைகளுக்கு ஒப்புமைப்படுத்திப் பேசுவது, குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி, அவமானம். குழந்தைகளாய் இருப்பது, சிறுவர்களாய் இருப்பது, குறைவு என்றும், வயதில் வளர்ந்தவர்களாய் இருப்பது, நிறைவு என்றும் நாம் கருதுவதால், இத்தகைய கூற்றுகள் சொல்லப்படுகின்றன. குழந்தையாய் இருப்பதை ஒரு குறையென்று ஏளனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, இன்றைய இரண்டாம் வாசகம், ஒரு சாட்டையடியாக விழுகிறது.
யாக்கோபு திருமுகம் 3: 16, 4: 1-3
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்... உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு கூறும் இந்தக் கடினமான சொற்கள், குழந்தைகளிடம் காணப்படும் குறைகள் அல்ல, வயதில் வளர்ந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டிருப்போரிடம் உள்ள குறைகள். குறிப்பாக, 'பொறாமையும் கட்சி மனப்பான்மையும்' கொண்டிருப்போரிடம் உள்ள குறைகள். நம் அரசியல்வாதிகள் அனைவரும், தங்கள் வயதுக்கு ஏற்றவகையில் நடந்துகொள்ளாதபோது, அவர்களை, 'வளர்ந்துவிட்ட குழந்தைகள்' என்று நாம் சுட்டிக்காட்டினால், அது, உண்மையிலேயே, குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் அநீதி. குழந்தைகள் கட்டாயம் இத்தகைய எண்ணங்களுடன் வாழ்வதில்லை.
வளர்ந்துவிட்ட மனிதர்கள், ஒரு சில வேளைகளில், வெறிகொண்டு அலையும்போது அவர்களை மிருகங்களுக்கு ஒப்புமைப்படுத்தியும் பேசிவருகிறோம். இதுவும் தவறு. எந்த ஒரு மிருகமும், மனிதர்களைப்போல் பழிக்குப்பழி, பொறாமை, பொய்மை என்ற தவறுகளை இழைப்பதில்லை. பின் நாம் ஏன் அவர்களை மிருகங்களுக்கு ஒப்புமைப்படுத்திப் பேசவேண்டும்?
வளர்ந்துவிட்டவர்கள் செய்யும் அற்பத்தனமான செயல்களுக்கு குழந்தைகளையும், அவர்கள் மேற்கொள்ளும் வெறித்தனமான செயல்களுக்கு மிருகங்களையும் ஒப்புமைப்படுத்தி பேசுவதை நிறுத்துவதற்கும், குறிப்பாக, குழந்தைகளை தகுந்த மதிப்புடன் நடத்துவதற்கும், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், பாடங்களைச் சொல்லித் தருகின்றன. குழந்தைகளைப்பற்றிய பாடங்களைக் கற்றுக்கொள்வோம், வாருங்கள்!

ஞாயிற்றுக் கிழமை. பங்குக் கோவிலில் மறைக்கல்வி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. மறைக்கல்வி ஆசிரியர், குழந்தைகளிடம், "கோவிலில் திருப்பலி நடக்குபோது நாம் சப்தம் போடக்கூடாது. ஏன்? சொல்லுங்கள்." என்று கேட்டார். ஒரு சிறுவன் எழுந்து, "ஏன்னா, கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்" என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.

குழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப் பேசப்படும். அந்த உலகை நாம் கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்து விடவேண்டும் என்ற அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்வப்போது அந்தப் பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது நம் வாழ்வை மேன்மையாக்கும், மென்மையாக்கும். இதையொத்த ஓர் ஆலோசனையை இயேசு இன்றைய நற்செய்தி வழியே நமக்குச் சொல்கிறார்.
மாற்கு நற்செய்தி 9: 36-37
பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.

அருள்சகோதரிகள் நடத்தும் மழலையர் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம் ஆரம்பமானது. நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்... என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற நடன அசைவுகள், செய்கைகள். பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடியபோது, எல்லா குழந்தைகளும் வலது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த அருள்சகோதரியிடம் அக்குழந்தையைச் சுட்டிக்காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல், என்னை அதிகம் சிந்திக்கவைத்தது.

LKG குழந்தைகளுக்கு செய்கைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை, செய்கைகளை சரியான வழியில் செய்யக் கற்றுக்கொள்ளும் என்ற கருத்தை, அந்த அருள்சகோதரி எனக்குச் சொன்னார்கள்.

அன்பர்களே, சிந்தித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.
விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று வேண்டினாள், மகள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

இன்னொரு நிகழ்வு. ஊடக உலகம், ஒவ்வொருவர் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதையும், குழந்தைகளிடமிருந்து அவர்களது குழந்தைப் பருவத்தை ஊடகம் எவ்விதம் பறித்துவிடுகிறது என்பதையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு இது.
ஒரு வீட்டுத்தலைவி, தன் வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், ஒரு பிரபலமான நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். வீட்டுத்தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இதே மாதிரி ஆடுவா" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம், அங்கு வருகிறாள், LKG படிக்கும் அவருடையக் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது ரைம் சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த ரைமைச் செய்கையோடு செய்து காட்டுகிறாள், சிறுமி. அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த டான்ஸ் ஆடும்மா" என்று சொல்லி தொலைக்காட்சியில் ஆடிக்கொண்டிருக்கும் நடிகையைக் காட்டுகிறார். மகளோ, "சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ரைம் சொல்கிறேன்." என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால், மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "ரைம் எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும் வற்புறுத்துகிறார் தாய். குழந்தைகளை, அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில், நம் உலகத்திற்கு, அதிலும், பளபளப்பாய், செயற்கை பூச்சுக்களுடன் மின்னும் போலியான ஊடக உலகிற்கு, அவர்களை, பலவந்தமாக இழுத்துவரும் முயற்சி இது.

முதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்ற முயல்கிறோம். நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக, 'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்' என்று இயேசு வலியுறுத்துகிறார். இந்தப் பாடத்தை சீடர்கள் மனதில் ஆழப்பதிக்கவே அவர் ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். இயேசு, சீடர்கள் நடுவில், குழந்தையை நிறுத்தியது ஏன் என்ற பின்னணியை அலசிப் பாப்போம்.

சென்ற வாரம், இயேசு, சீடர்களிடம் இரு முக்கியமானக் கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்று இயேசு கேட்ட அந்த இரு கேள்விகள், சீடர்கள் மத்தியில் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.
தன் கேள்விகளுக்கு விடையளித்த பேதுருவை, அதுவும் தன்னை "மெசியா" என்று அடையாளப்படுத்திய பேதுருவை இயேசு புகழ்ந்தார். பேதுரு தந்த "மெசியா" என்ற பட்டத்தில் மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக, அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம்சிலுவை இவற்றைப்பற்றி பேசினார். இயேசு இவ்வாறு பேசியது, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். தன்னைப்பற்றியும், தன் வாழ்வின் இலக்குபற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம், தன் சிலுவையைப் பற்றி, மீண்டும் ஆணித்தரமாக பேசினார், இயேசு. சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம்.
மாற்கு நற்செய்தி 9: 31-32
"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று இயேசு தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

இயேசு, சிலுவையைப்பற்றி பேசியது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர். தங்களில் யார் பெரியவன்? என்பது, அவர்களது சிந்தனைகளை நிறைத்த எண்ணமாயிற்று.
இயேசு, அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போடுகிறோமோ என்ற நெருடல். எனவே, தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள, "வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார்.

பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்லமுடியவில்லை. அவர்களது மௌனம், அவருக்கு எரிச்சலையும், வருத்தத்தையும், ஏன் சலிப்பையும் உண்டாக்கியிருக்க வேண்டும். தன்னையும், தன் கொள்கைகளையும் சீடர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் இயேசுவுக்குள்  இருந்தாலும், சலிப்படையாமல், மீண்டும் அவர்களுக்கு தன் எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார்.
மாற்கு நற்செய்தி 9: 35
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.
இந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். (மத். 18:3) இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது,  குழந்தைப்பருவம் திருடப்பட்ட குழந்தைகளை, வயதில் மட்டும் வளர்ந்துவிட்டவர்கள் உலகில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை, நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வறுமைப்பட்ட பல நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை. மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும் குற்றம்.

துப்பாக்கிக் கலாச்சாரத்தை பீடமேற்றி, தூபம் காட்டிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டில், வயதில் வளர்ந்தவர்களுக்கு, 6 வயது சிறுமி விடுத்துள்ள ஒரு வேண்டுகோள், சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பால்டிமோர் நகரைச் சேர்ந்த, கெல்சி ஹைன்ஸ் (Kelsey Hines) என்ற சிறுமி, கெஞ்சிக் கேட்பது இதுதான்: "தயவுசெய்து, எங்களை, வீட்டுக்கு வெளியே, பயமின்றி, விளையாட விடுங்கள். நாங்கள் வாழ விரும்புகிறோம். நாங்கள் விண்ணகம் செல்ல விரும்பவில்லை. எங்களுக்கு ஆண்டவர்மீது அன்பு உண்டு. ஆனால், அவர் எப்போது எங்களை அவரிடம் வரச் சொல்கிறாரோ, அப்போது நாங்கள் அவரைச் சந்திக்க தயாராக இருப்போம். அதற்குமுன் நீங்கள் எங்களை அங்கு அனுப்பிவிடாதீர்கள். தயவுசெய்து எங்களைக் கொல்லாதீர்கள்."
துப்பாக்கிக் கலாச்சாரம் எப்படி இளம் உயிர்களை, தேவையில்லாமல் பறிக்கின்றது என்ற கொடுமையை, இதைவிட தெளிவாக யாராவது வெளிச்சமிட்டு காட்ட முடியுமா என்று தெரியவில்லை.

பாலின வன்கொடுமைகளுக்கு பலியாகும் இந்தியச் சிறுமிகளும், "வீட்டுக்கு வெளியிலும், பள்ளியிலும், எங்களை பயமின்றி விளையாட விடுங்கள். கடைக்குப் போய் பொருள்கள் வாங்கிவர விடுங்கள்" என்ற வேண்டுகோளை, வயதில் வளர்ந்துவிட்ட இந்திய ஆண்களிடம் விடுக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வழியாக இயேசு சொல்லித் தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்ளும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழவிடுவோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளின் மனப்பக்குவத்துடன் வாழ முயல்வோம்.


No comments:

Post a Comment