14 October, 2018

Radical decisions – Hallmark of Saints துணிவான முடிவுகள் – புனிதர்களின் முத்திரை


Canonization 2018

28th Sunday in Ordinary Time - Canonization

“Holiness … is for everyone! big and small; men and women; it is proposed as a possibility! Indeed, it is proposed as a duty! Holiness, let us say with joy and amazement, is for all!
Dear children, two things are needed for holiness: the grace of God and good will. Do you have these two things? Yes? Then you are holy!”
These words resounded at St Peter’s Square, Vatican, on March 16, 1966, during the Papal Audience. That day, there were hundreds of children gathered at St Peter’s Square for the Papal Audience and hence, the Pope made a special attempt to make things very simple on the topic “The Duty of Holiness”. It was Pope Paul VI.

“It is a great moment when people realize that they are God’s instruments. We live as long as God wants us to live; we are able as long as God enables us.”
These words are from the final public homily given by Archbishop Óscar Romero. This was given on March 23, 1980, the V Sunday of Lent. The next day, March 24, the eve of the Feast of the Annunciation, Archbishop Romero was shot dead while celebrating Mass. Talk about premonition! ‘We live as long as God wants us to live’… Prophetic words, truly!

The Pope who declared that ‘holiness is for everyone’ and the Archbishop who said that ‘it is a great moment when we realize that we are God’s instruments’, are canonized as Saints during the Mass celebrated by Pope Francis on Sunday, October 14.  Along with a Pope, and an Archbishop, two diocesan priests, two nuns and a lay person (a young man of 19 years) are canonized in the same ceremony. Indeed, holiness is for everyone!

On this day of Canonization, our reflections revolve around holiness. No one is a born saint (except Mary and Jesus), but all of us are called to be saints. Pope Paul VI said that holiness requires ‘the grace of God and good will’. The process of holiness is tied up with our willingness to become holy.  As human beings we are the only creatures who are given the will power, a capacity to decide! Our intelligence and will power help us to choose the best.

The 15th World Synod of Bishops with the theme: “Young People, Faith, and Vocational Discernment”, brings into focus the young women and men and their capacity to discern and decide. At this juncture, we are given a Gospel (Mark 10:17-30), that talks of a young man who comes to Jesus to help him decide the course of action he needs to take in order to ‘inherit eternal life’ – in other words, ‘to become holy’. Jesus prescribes the commandments as ‘a starter’. But, when Jesus finds out that the young man was ready for the ‘magis’ (the Jesuit term of ‘greater things’!), He proposed a radical solution – a way of life that would turn the young man’s life on its head! The young man went away sorrowful for he had great possessions. (Mk. 10:22)

We are sure that many Saints had approached Jesus to get his directions as to what they need to do to ‘inherit eternal life’. For all of them Jesus proposed very radical ways, and they were willing to take up the challenge. That is what distinguished them from the rest of us. One of the Saints who chose to follow Jesus more radically was Archbishop Romero!

Óscar Arnulfo Romero Galdámez, born in 1917, was ordained a Priest when he was 25. In 1970, Romero was appointed an auxiliary bishop for the Archdiocese of San Salvador. In 1974, he was appointed Bishop of the Diocese of Santiago de María, a poor, rural region, where he may have come into contact with the harsh realities of El Salvador. On 23 February 1977, Romero was appointed Archbishop of San Salvador. All the three appointments were given by Pope Paul VI.
Romero spent his years up until 1977 as a pious, conservative cleric who, by his silence, may have quietly sided with the rich, the military, and the powerful. When he became the Archbishop of San Salvador, the rich and the powerful were very happy since they knew that they had a ‘safe’ Archbishop who would not rock the boat. On the other hand, the Jesuits at the UCA (The Cenral American University) in San Salvador were crushed. They immediately wrote him off -- all but one, Rutilio Grande, who reached out to Romero in the weeks after his installation and urged him to learn from the poor and speak on their behalf.
Grande himself was a giant for social justice. He organized the rural poor in Aguilares, and paid for it with his life on March 12, 1977. This murder took place hardly two weeks after Romero took up his responsibility as the Archbishop of San Salvador. Standing over Grande's dead body that night, Romero was transformed into one of the world's great champions for the poor and the oppressed. From then on, he stood with the poor, and denounced every act of violence, injustice and war. He became a fiery prophet of justice and peace, "the voice of the voiceless."

The day after Grande's death, Romero preached a sermon that stunned El Salvador. To protest the government's participation in the murders, Romero closed the parish school for three days and cancelled all masses in the country the following week, except for one special mass in the Cathedral. Over one hundred thousand people attended the Cathedral Mass that Sunday and heard Romero's bold call for justice, disarmament and peace. Grande's life and death bore good fruit in the heart and soul of Romero. Suddenly, the nation had a towering figure in its midst.

This ‘transformation’ of Romero sent shock waves to Vatican. But, Romero had a great friend in Paul VI. According to Roberto Morozzo della Rocca, a professor of contemporary history at Roma Tre University and author of a biography of Romero, Pope Paul VI had a deep appreciation and affection for Romero, despite the rumors and gossip that floated around the Vatican corridors.
One of the first meetings between Paul VI and Romero, Morozzo said, occurred shortly after he was named Archbishop of San Salvador. Within days of losing his good friend, Fr Grande, Archbishop Romero travelled to Rome and met the Pope on March 26, 1977. Pope Paul told him fraternally a Latin phrase that said: ‘Courage! You’re the one in charge!’
The two future saints met again in June 1978. During this meeting, according to the Archbishop, Pope Paul said, “I understand your difficult work. It is a work that perhaps may not be understood; you need to have a lot of patience and strength. I know that not everyone thinks like you; it is difficult in the circumstances of your country to find that unanimity of thought. Nevertheless, proceed with courage, with patience, with strength and with hope.”
After returning from Rome, Romero also delivered the pope’s words of encouragement to the people of El Salvador while celebrating Mass July 2, 1978. “‘They are a people,’ the pope told me, ‘who fight for recognition, they look for a more just environment. And you must love the people, you must help them. Be patient, be strong and help them. And tell them the pope loves them, he loves them and is following their difficulties; but to never look for solutions through irrational violence, that they never let themselves be led by the currents of hate’,” Romero said.

Encouraged by the support and blessings from Pope Paul VI, Archbishop Romero continued his life as an apostle of peace and justice in El Salvador. As the arrests, torture, disappearances and murders continued, Romero made two radical decisions which were unprecedented. First, on Easter Monday, 1978, he opened the seminary in downtown San Salvador to welcome any and all displaced victims of violence. Hundreds of homeless, hungry and brutalized people moved into the seminary, transforming the quiet religious retreat into a crowded, noisy shelter, make-shift hospital, and playground.
Next, he halted construction on the new Cathedral in San Salvador. When the war is over, the hungry are fed, and the children are educated, then we can resume building our cathedral, he said. Both historic moves stunned the other bishops, cast judgment on the Salvadoran government, and lifted the peoples' spirits.

When President Jimmy Carter announced, in February 1980, that he was going to increase U.S. military aid to El Salvador by millions of dollars a day, Romero was shocked. He wrote a long public letter to Carter, asking the United States to cancel all military aid. Carter ignored Romero's plea, and sent the aid. (Between 1980 and 1992, the U.S. funded El Salvador government, $6 billion, which helped the government to kill 75,000 poor Salvadorans.)
In the weeks afterwards, the killings increased. So did the death threats against Romero. He made a private retreat, prepared for his death, discovered an even deeper peace, and mounted the pulpit. During his March 23, 1980, Sunday sermon, (which was his last public homily) Romero let loose and issued one of the greatest appeals for peace and disarmament in church history:
I would like to make an appeal in a special way to the men of the army, to the police, to those in the barracks. Brothers, you are part of our own people. You kill your own campesino brothers and sisters. And before an order to kill that a man may give, the law of God must prevail that says: Thou shalt not kill! No soldier is obliged to obey an order against the law of God. No one has to fulfill an immoral law. It is time to recover your consciences and to obey your consciences rather than the orders of sin. The church, defender of the rights of God, of the law of God, of human dignity, the dignity of the person, cannot remain silent before such abomination. We want the government to take seriously that reforms are worth nothing when they come about stained with so much blood. In the name of God, and in the name of this suffering people whose laments rise to heaven each day more tumultuously, I beg you, I ask you, I order you in the name of God: Stop the repression!

The next day, March 24, 1980, Romero presided over a small evening mass in the chapel of the hospital compound where he lived. He read from John's Gospel: "Unless the grain of wheat falls to the earth and dies, it remains only a grain. But if it dies, it bears much fruit "(12:23-26). Then he preached about the need to give our lives for others as Christ did. Just as he concluded, he was shot in the heart by a man standing in the back of the church. He fell behind the altar and collapsed at the foot of a huge crucifix depicting a bloody and bruised Christ. Romero's vestments, and the floor around him, were covered in blood. He gasped for breath and died in minutes.

As we thank God for raising this Apostle of Peace and Justice to sainthood, we also thank God for St Pope Paul VI who stood by St Oscar Romero and helped him in his journey to holiness.

Of the seven Blesseds who are canonized this Sunday, one is Nunzio Sulprizio, a young man of 19 years, who died of bone cancer and various other complications in the year 1836. He was beatified by Pope Paul VI in the year 1963. Now, together with the same Pope, he is canonized. It is very meaningful to canonize this simple, young man during the World Synod of Bishops on the theme of the youth.

The other four Blesseds who are canonized on Sunday:
Blessed Francesco Spinelli, a diocesan priest and Founder of the Institute of the Sister Adorers of the Blessed Sacrament, was born in Milan (Italy) on 14 April 1853 and died at Rivolta d’Adda (Italy) on 6 February 1913.
Blessed Vincenzo Romano, another diocesan priest, was born at Torre del Greco (Italy) on 3 June 1751 and died there on 20 December 1831.
Blessed Maria Caterina Kasper, was the Foundress of the Institute of the Poor Handmaids of Jesus Christ. She was born on 26 May 1820 in Dernbach (Germany) and died there on 2 February 1898.
Blessed Nazaria Ignazia March Mesa (as a religious took the name: Nazaria Ignazia di Santa Teresa di Gesù), Foundress of the Congregation of the Misioneras Cruzadas de la Iglesia Sisters, was born in Madrid (Spain) on 10 January 1889 and died in Buenos Aires (Argentina) on 6 July 1943.
 
May these seven new Saints help us make more radical decisions for Christ and His people!

Canonization at St Peter’s Square

பொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா

"புனிதம் ஒருசிலருக்கு மட்டும்தானா? இல்லை. நாம் ஒவ்வொருவரும் புனிதராக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் தொட்டுவிடக்கூடியக்கூடிய தூரத்தில்தான் புனிதம் உள்ளது. அதற்குத் தேவையானதெல்லாம் இரண்டே அம்சங்கள்: இறைவனின் அருள், மற்றும், நமது நல்ல மனம்"
புனிதத்தைக் குறித்த இந்த எளிமையானச் சொற்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், 1966ம் ஆண்டு, மார்ச் 16ம் தேதி, புதன்கிழமை, ஒலித்தன. அன்று, அவ்வளாகத்தில் நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள சிறுவர், சிறுமியர் பெருமளவில் வந்திருந்தனர். புனிதம் என்றால் என்ன என்பதை, அவர்களுக்குப் புரியும் வகையில், எளிய சொற்களில் அன்று சொன்னவர், திருத்தந்தை 6ம் பவுல்.

"நாம் இறைவனின் கருவிகளேயன்றி வேறெதுவும் இல்லை என்பதைப் புரிந்து, ஏற்றுக்கொள்ளும் அத்தருணம், மிக அழகானது. நாம் எவ்வளவு காலம் வாழவேண்டுமென்று இறைவன் நினைக்கிறாரோ, அவ்வளவு காலம் மட்டுமே நாம் வாழ்கிறோம். நாம் எவ்வளவு செய்யமுடியும் என்று இறைவன் நினைக்கிறாரோ, அவ்வளவு மட்டுமே நம்மால் செய்யமுடியும்" - சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தில் பணியாற்றிய வேளையில் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் கூற்றாக, "அன்பின் வன்முறை" (The Violence of Love) என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள சொற்கள் இவை.

நாம் தொட்டுவிடக்கூடியக்கூடிய தூரத்தில்தான் புனிதம் உள்ளது என்று கூறிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், 'நாம் இறைவனின் கருவிகள் என்பதைப் புரிந்துகொள்வதே மிக அழகானது' என்று கூறிய பேராயர் ரொமேரோ அவர்களும்,  இஞ்ஞாயிறன்று, புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.
ஒரு திருத்தந்தை, ஒரு பேராயர், இரு மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இரு அருள் சகோதரிகள், மற்றும், பொதுநிலையினரான ஓர் இளையவர் என்று, ஏழு அருளாளர்கள், புனிதர்களாக உயர்த்தப்படும் இஞ்ஞாயிறன்று, புனிதத்தைப் பற்றியும், புனிதர்களைப் பற்றியும் சிந்திப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருஅவையால் புனிதர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள், மற்றும், புனிதர் என்று அறிவிக்கப்படாமலேயே மக்களால் புனிதர்கள் என்று கருதப்படுவோர் அனைவரும், தங்கள் வாழ்வுப் பாதையில், முக்கியமான தருணங்களில், உன்னத முடிவுகளை எடுத்ததால், இன்று, முடிவெடுக்கும் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் வழிகாட்டிகளாக மாறியுள்ளனர்.
அனைத்தையும் அறிந்து, தெளிந்து தெரிவு செய்து, முடிவுகள் எடுக்கும் திறமை மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள தனித்துவமான திறமை. இத்திறமையை மையப்படுத்தி, தற்போது உலக ஆயர்கள் மாமன்றம், இளையோர், நம்பிக்கை மற்றும் அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தல் (Young People, the Faith and Vocational Discernment) என்ற மையக்கருத்துடன் நடைபெற்று வருகிறது. முடிவுகள் எடுப்பதை பற்றி கூறும் நற்செய்தியும் இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வில் முக்கியமான முடிவெடுக்கும் நிலையில் இருந்த ஓர் இளையவர், "நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?" (மாற்கு 10:17) என்ற கேள்வியுடன் இயேசுவைத் தேடி வந்த நிகழ்வை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். அவரிடம், இயேசு, கட்டளைகளைக் கடைபிடித்தாலே நிலைவாழ்வை அடையலாம் என்று கூறுகிறார். தான் இளவயதுமுதல் கட்டளைகளைக் கடைபிடித்து வருவதாகக் கூறிய இளையவர், அந்த அடிப்படை நிலையைத் தாண்டி, இன்னும் தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கும்போது, இயேசு அவருடைய வாழ்வைப் புரட்டிப்போடும் வண்ணம் ஓர் ஆலோசனை வழங்குகிறார்:
மாற்கு 10: 21-22
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

புனிதர்கள் அனைவரும், தாங்கள் எடுத்த முக்கியமான முடிவுகளில் இறைவனின் துணையைக் கட்டாயம் நாடியிருப்பர் என்பது உறுதி. அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போடும் வண்ணம் இயேசு சவால்களை முன்வைத்தபோது, அவர்கள் தயங்காமல் அவற்றை ஏற்றதால், இன்று புனிதர்களாக நம்முன் உயர்ந்து நிற்கின்றனர். வாழ்வை முற்றிலும் புரட்டிப்போடும் முடிவுகளை, புனிதர்கள் எடுத்தனர் என்பதற்கு, இஞ்ஞாயிறு, புனிதராக உயர்த்தப்படும் பேராயர் ரொமேரோ அவர்கள், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

1917ம் ஆண்டு பிறந்த ஆஸ்கர் அர்னுல்ஃபோ ரொமேரோ (Óscar Arnulfo Romero) அவர்கள், தன் 25வது வயதில் அருள்பணியாளராகவும், 53வது வயதில் ஆயராகவும் அருள்பொழிவு பெற்றவர். 1970ம் ஆண்டு, அருள்பணி ரொமேரோ அவர்களை ஆயராக நியமனம் செய்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஏழு ஆண்டுகள் சென்று, அவரை, சான் சால்வதோரின் பேராயராகவும் நியமனம் செய்தார்.
1977ம் ஆண்டு, தன் 60வது வயதில், ரொமேரோ அவர்கள், சான் சால்வதோர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றபோது, அந்நகரின் செல்வந்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேராயர் ரொமேரோ அவர்கள், கோவில், சார்ந்த பணிகளை மட்டுமே ஆற்றுவார், சமுதாயப் பிரச்சனைகளில் தலையிடமாட்டார் என்று அவர்கள் எண்ணியதால் மகிழ்ந்தனர். அதே வேளையில், சான் சால்வதோர் நகரில், 'மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழக'த்தை (Central American University) நடத்திவந்த இயேசு சபையினர் மனம் உடைந்துபோயினர். அவர்களைப் பொருத்தவரை, பேராயர் ரொமேரோ அவர்கள், நாட்டில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார் என்று எண்ணியதால், இந்த மனநிலை அவர்களுக்கு உருவானது.

அதே பல்கலைக் கழகத்தில் பணியாற்றி, பின்னர், வறுமைப்பட்ட விவசாயிகள் நடுவில் உழைத்துவந்த இயேசு சபை அருள் பணியாளர், ருத்தீலியோ கிராந்தே கார்சியா (Rutilio Grande García) அவர்கள், பேராயர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய நீதி குறித்து இருவருக்கும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு.
1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ரொமேரோ அவர்கள் பேராயர் பொறுப்பை ஏற்று இரு வாரங்கள் சென்று, மார்ச் 12ம் தேதி, அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்கள் கொல்லப்பட்டார். கொலையுண்டு கிடந்த நண்பர் கிராந்தேயின் சடலத்திற்கு முன், பேராயர் ரொமேரோ அவர்கள், முக்கியமானதொரு முடிவெடுத்தார்.
தன் நண்பர் கிராந்தேயின் அடக்கச் சடங்கில் பேராயர் ஆற்றிய மறையுரை, எல் சால்வதோர் நாட்டின் அதிகார வர்க்கத்தை அதிர்ச்சியடையச் செய்தது. வறியோரும் அந்த மறையுரையைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அது ஆனந்த அதிர்ச்சி. அருள்பணி கிராந்தே அவர்களுக்குப் பதிலாக, தங்கள் சார்பில் போராட, பேராயர் ரொமேரோ அவர்கள் கிடைத்ததை எண்ணி, வறியோர், ஆனந்தம் அடைந்தனர்.

அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்களின் கொலையை, எல் சால்வதோர் அரசு தீர விசாரிக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், தகுந்த விசாரணை முடியும்வரை, அரசு நடத்தும் எந்த விழாவிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தார். அருள்பணி கிராந்தே அவர்களின் அடக்கத் திருப்பலியில், ஒரு இலட்சத்திற்கும் மேலானோர் கலந்துகொண்ட நேரத்தில், பேராயர் ரொமேரோ அவர்கள், நாட்டில் நீதியும், அமைதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்றும், அரசு தன் ஆயுதங்களைக் களையவேண்டும் என்றும், தன் மறையுரையில் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

பேராயர் ரொமேரோ அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள், வத்திக்கானிலும் அதிர்வலைகளை உருவாக்கின. பேராயர் ரொமேரோ அவர்களைக் குறித்து வத்திக்கானில் நிலவிய வதந்திகளை பொருட்படுத்தாது, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பேராயர் மீது தனி மதிப்பு வைத்திருந்தார் என்று, வரலாற்றுப் பேராசியர், ரொபெர்த்தோ மொரோஸோ (Roberto Morozzo della Rocca) அவர்கள் கூறியுள்ளார். அருள்பணி கிராந்தே அவர்கள் கொலை செய்யப்பட்ட சில நாட்களில், அதாவது, 1977ம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள் வத்திக்கானுக்குச் சென்று, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, திருத்தந்தை, அவரிடம், "துணிவு கொள்ளுங்கள்! நீங்கள்தான் முழுப் பொறுப்பில் இருக்கிறீர்கள்!" என்று இலத்தீன் மொழியில் கூறிய ஒரு வாக்கியத்தை, பேராயர் ரொமேரோ அவர்கள், தன் நாள் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.
இதற்குப்பின், அடுத்த ஆண்டே மீண்டும் இவ்விருவரும் இரண்டாம் முறையாகச் சந்தித்தபோது, தன்னை உற்சாகப்படுத்தி, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்களை, பேராயர் ரொமேரோ அவர்கள், மீண்டும் தன் நாள் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்: "நீங்கள் ஆற்றும் பணி மிகக்கடுமையானது என்பது எனக்குத் தெரியும். பலர் உங்கள் செயல்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் போகலாம். எல்லாரும் உங்களைப்போல் சிந்திப்பதும் இல்லை. உங்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழலில், அனைவரும் ஒருமித்த எண்ணம் கொண்டிருப்பது இயலாது. இருப்பினும், நீங்கள் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், துணிவுடனும் முன்னேறிச் செல்லுங்கள்" என்று திருத்தந்தை தன்னிடம் கூறியச் சொற்களை, பேராயர் ரொமேரோ அவர்கள், தன் மறையுரையிலும் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் ஆதரவையும், ஆசீரையும் பெற்றிருந்த, பேராயர் ரொமேரோ அவர்கள், இன்னும் தீவிரமாக தன் நீதிப்பணியில் ஈடுபட்டார்.

எல் சால்வதோர் நாட்டில், தொடர்ந்து நடந்துவந்த கொலைகளையடுத்து, பேராயர் ரொமேரோ அவர்கள், இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். அரசாலும், செல்வந்தராலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுகாப்பு தரும் புகலிடமாக, மறைமாவட்டத்தின் குருமாணவர் இல்லத்தின் கதவுகளைத் திறந்துவைத்தார். நூற்றுக்கணக்கான வறியோர் அங்கே தஞ்சம் அடைந்தனர்.
சான் சால்வதோரில் எழுப்பப்பட்டு வந்த புதிய பேராலயத்தின் பணிகளை உடனடியாக நிறுத்தச் சொன்னார். உள்நாட்டுப் போர் முடியட்டும்; ஏழைகள் வயிறு நிறையட்டும்; குழந்தைகள் நல்ல கல்வி பெறட்டும்... பின்னர், நமது பேராலயத்தைக் கட்டுவோம் என்று பேராயர் ரொமேரோ அவர்கள் தெளிவாகக் கூறினார். அவர் எடுத்த இந்த இரு முடிவுகளும் தலத்திருஅவையின் புரட்சியை இன்னும் ஆழப்படுத்தின.

பேராயர் ரொமேரோ அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களும், அவர் முன்னின்று நடத்திய புரட்சியும், கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் மாற்றமோ, புரட்சியோ அல்ல. ஏழைகள் சார்பில் போராட அவர் முடிவெடுத்தப் பின்னரும், அவர் வறியோரையும், செல்வர்களையும் சமமாக அரவணைக்க முயன்றார். வறியோரும், செல்வர்களும் ஒருவர் மீது ஒருவர் காட்டிவந்த வெறுப்பையும், வன்முறைகளையும், தன் மறையுரைகளில் கண்டனம் செய்தார்; இரு தரப்பினரையும் கடிந்துகொண்டார்.

தனது மறைமாவட்டக் குரு ஒருவரை பேராயர் சந்தித்தபோது, அவர் தன்னுடன் எப்போதும் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார் என்பதை அறிந்து, பேராயர் அதிர்ச்சி அடைந்தார். துப்பாக்கியைச் சுமந்து செல்லும் அவருக்கும், அரசின் 'கொலைப்படை' வீரர்களுக்கும் வேறுபாடு இல்லை என்று பேராயர் கூறினார். அந்த குரு விடைபெற்றுச் செல்லும் வேளையில், பேராயர் அவரிடம், "நீங்கள் இன்னும் செபிக்கிறீர்களா?" என்று கேட்டார். "நிச்சயமாக செபிக்கிறேன்" என்று அவர் பதில் சொன்னதும், "பிறகு, என் இந்தத் துப்பாக்கியைச் சுமந்து திரிகிறீர்கள்?" என்று கேட்டார், பேராயர். பேராயர் ரொமேரோ அவர்களைப் பொருத்தவரை, பெரிய வெள்ளியும், உயிர்ப்பு ஞாயிறும் இறையரசின் பாதைகளே தவிர, பழிக்குப் பழியும், துப்பாக்கியும், இறையரசைக் கொணராது என்பதை தீர்க்கமாக நம்பினார்.

கனடா நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரி, மேரி ஜோ லெட்டி (Mary Jo Leddy) என்ற எழுத்தாளர் கூறியுள்ள ஒரு கருத்து, பேராயர் ரொமேரோ அவர்களுக்கு வெகுவாகப் பொருந்தும் என்பதை உணரலாம். "அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சமுதாயத்தில், உடலால் இறப்பதற்கு முன், தங்களுள் தாங்களே இறந்துவிடும் மனிதர்கள் தேவை. அவர்கள் தங்கள் மரணத்திற்கு முன்னதாகவே உயிர்ப்பை வாழ்பவர்கள். எனவே, அவர்களால், மக்களின் அச்சத்தைக் களையமுடியும்" என்பது அருள் சகோதரி லெட்டி அவர்களின் கருத்து.
பேராயர் ரொமேரோ அவர்களின் உயிரை ஒரு துப்பாக்கி குண்டு பறிப்பதற்கு முன், மரணத்தைப் பற்றிய அச்சம் அவரைவிட்டு நீங்கியிருந்தது; உயிர்ப்பின் நம்பிக்கை அவரை வெகுவாக ஆட்கொண்டிருந்தது. தான் எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்ற எண்ணம், அவருக்கு, துணிவையும், அதேநேரம், இறைவன் பேரில் அளவற்ற நம்பிக்கையையும் தந்தது. 1980ம் ஆண்டு மார்ச் மாதம், பேராயர் ரொமேரோ அவர்கள், ஹோசே கால்தெரோன் (Jose Calderon Salazar) என்பவருக்கு எழுதிய ஒரு மடலில், பின்வரும் வரிகளை எழுதியிருந்தார்:
"அடிக்கடி எனக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஒரு கிறிஸ்தவனான என்னால், உயிர்ப்பு இல்லாத மரணத்தை எண்ணிப்பார்க்க முடியவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், நான் சால்வதோர் மக்களில் மீண்டும் உயிர்பெற்று எழுவேன். இதை நான் தற்பெருமையோடு சொல்லவில்லை; மாறாக, அதிகப் பணிவுடன் சொல்கிறேன்... எல் சால்வதோரின் உயிர்ப்பிற்காக என் இரத்தத்தைக் காணிக்கையாக்குகிறேன்... ஓர் ஆயர் இறப்பார்; ஆனால், மக்களைக் கொண்டு உருவான இறைவனின் திருஅவை என்றும் அழியாது."

1980ம் ஆண்டு, மார்ச் 23ம் தேதி, தவக்காலத்தின் 5ம் ஞாயிறன்று, பேராயர் ரொமேரோ அவர்கள் வழங்கிய மறையுரை, வரலாற்றில் தனியிடம் பிடித்துள்ளது. அதுவே, பேராயர் அவர்கள் பொதுவில் வழங்கிய இறுதி மறையுரை என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று, தான் வழங்கும் மறையுரை, வானொலி வழியே, நாடெங்கும் செல்வதை உணர்ந்த பேராயர் ரொமேரோ அவர்கள், ஆயுதம் தாங்கி, மக்களை வதைத்துவந்த மரணப்படை வீரர்களுக்கு தன் மறையுரையின் இறுதியில், ஒரு சிறப்பான அறிவுரை வழங்கினார்:
சகோதர வீரர்களே, இந்நாட்டு மக்கள் மத்தியில்தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும்படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும், இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற கட்டளைக்கு அடிபணிய வேண்டும். இறை கட்டளையை மீறி, உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்குக் கீழ்படிவதைவிட, உங்கள் மனசாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக்கொண்டு திருஅவை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால், நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அடக்குமுறையை உடனடியாக நிறுத்துங்கள். என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

அந்த மறையுரையை வழங்கியதற்கு அடுத்தநாள், மார்ச் 24ம் தேதி, கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவுக்கு முந்திய நாள், பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது, மரணப்படையைச் சேர்ந்த ஒரு கூலியாள், கோவிலின் பின்புறம் வந்து நின்று, குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து, பலியானார், பேராயர் ரொமேரோ.
இறையரசின் நீதியை நிலைநாட்ட, பேராயர் ரொமேரோ அவர்கள் எடுத்த தீர்க்கமான முடிவு, அவரை மறைசாட்சிய மரணம் வரை அழைத்துச் சென்றது. அதேபோல், இஞ்ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் எடுத்த முக்கியமான முடிவுகள் அவர்களை உன்னத நிலைக்கு உயர்த்தின. இந்த ஏழு புனிதர்களில், ஒருவர், நுன்சியோ சுல்ப்ரீசியோ (Nunzio Sulprizio) என்ற 19 வயது நிறைந்த இளையவர். இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக நடைபெறும் புனிதர் பட்ட விழாவில் 19 வயது இளையவர் புனிதராவது இளையோருக்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என்று நம்புகிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு சந்தித்த இளையவரை அவர் அன்பொழுகப் பார்த்ததுபோல், இளையோரை இயேசு அன்பொழுகக் காணவேண்டும் என்றும், புனிதத்தில் வாழ, இயேசு விடுக்கும் சவால்கள் நிறைந்த அழைப்பை ஏற்கும் துணிவை, இளையோர் பெறவேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

இன்று புனிதர்கள் வரிசையில் இணையும் இந்த 7 புனிதர்களின் பரிந்துரையால், நாம் ஒவ்வொருவரும், இயேசுவுக்கும், அவரது மக்களுக்கும் பணியாற்ற துணிவான முடிவுகள் எடுக்கும் வரத்தை பெறுவோமாக!

No comments:

Post a Comment